1/21/2021

வல்வட்டித்துறை நகராட்சியின் சாதியபாகுபாட்டுக்கு எதிராக பொது நலவழக்கு

வல்வட்டித்துறை நகரசபைக்குட்பட்ட ஊரணி கிராமத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய பிரேத எரிப்பு கொட்டகையானது சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது.ஏற்கனவே ஒரு பிரேத எரிப்பு கொட்டகை உள்ளநிலையில் இன்னுமொரு கொட்டகை உருவாக்கப்பட்டதன்  பின்னணி குறித்து எழுகின்ற சந்தேகங்கள் இதற்க்கு காரணமாகும்.அதாவது இப்பிரதேசத்தில் வாழும் வெள்ளாள சமூகத்தை சேர்த்தவர்கள் ஏனைய சாதியினரின் சடலங்கள் எரியூட்டப்படும் இடத்தை தவிர்த்து தமது சாதியினருக்கென தனியாக இதனை உருவாக்கியுள்ளனர் என்கின்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. 

 இந்த குற்றச்சாட்டுக்கள் உண்மையானால் இந்த நவீன உலகிலும் இத்தகைய சாதிய மனோபாவத்துடன் நாம் இயங்குகின்றோமா? என்கின்ற பலமான கேள்விகளை நம் எழுப்பவேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் இலங்கையின் சமூக நீதி சட்டங்களுக்கு எதிரானது மட்டுமல்ல மனிதகுலத்தில் விழுமியங்களுக்கும் எதிரானதாகும். எனவே இவற்றை தீர விசாரித்து 'தமிழராய் உணர்வோம்' 'தமிழராய் திரள்வோம்'  என்று நாளும் பொழுதும்  ஒப்பாரிவைப்பவர்கள் முதலில் வல்வட்டித்துறை நகராட்சிக்கு எதிராக பொது நலவழக்கு ஒன்றை முதலில் பதிவு செய்வைத்து நல்லது..
 
»»  (மேலும்)

புதிய அதிபர் மற்றம் நம்பிக்கைத்தருகின்றது-வீரமணிஅமெரிக்காவின் 46 ஆவது குடியரசுத் தலைவராக 78 வயது நிரம்பிய ஜோபைடன் அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று, நேற்று  பதவியேற்றார். அவருடன் ஜனநாயகக் கட்சி சார்பில் குடியரசுத் துணைத் தலைவராக தமிழ்நாட்டுத் தொடர்புள்ள - கருப்பின மக்களுக்கான போராளி முற்போக்கு சிந்தனையுள்ள சட்ட நிபுணர் திருமதி கமலா ஹாரிஸ் அவர்களும் துணை தலைவராக  பதவியேற்றார்!
இது குறித்து இந்தியாவின் திராவிடர் கழகம் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் 
புதிய நம்பிக்கையை உலக நாடுகளுக்கும் ஏற்படுத்தும் வண்ணம் புதிய ஆட்சி மலர்ந்துள்ளதாக நம்பிக்கை வெளியிடட்டுள்ளது.

தலைவர் வீரமணி விடுத்துள்ள அச்செய்தியில் டிரம்பின் பல ஆணைகளை ரத்து செய்து, கரோனா தொற்றுத் தடுப்புக்கு முன்னுரிமை கொடுத்து முதல் கையெழுத்திட்டு, பாரீஸ் பருவ நிலை கால ஒப்பந்தம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட 15 ஆணைகளில் கையெழுத்திட்டார் என்பது ஒரு புதிய நம்பிக்கையை உலக நாடுகளுக்கும் ஏற்படுத்துவதாகும். இந்தியாவுடன் நட்புறவு செழிக்கட்டும்!
பதவியேற்கும் அதிபருக்கும், துணை அதிபருக்கும், அவருடைய குழுவினருக்கும் நமது கனிந்த வாழ்த்துகள்! என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

»»  (மேலும்)

1/15/2021

சமூக அநீதி குறித்த நிபுணர் குழு


விசேட செய்தி

கிழக்கு மாகாண ஆளுனர் தலைமையில் 
கிழக்கு மாகாணத்தின் சமூக அநீதி குறித்த நிபுணர் குழு வருகை தர உள்ளதனால் பொது மக்கள் தங்களது சமூக அநீதி தொடர்பான பிரச்சனைகளை அடுத்த திங்கட்கிழமை 18.01.2021 மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலும், 19.01.2021 அம்பாறைப் பிரதேச செயலகத்திலும் அந்த நாட்களில் குழுவிடம் சமர்ப்பிக்க முடியும் என ஆளுனர் செயலகத்தினால் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
»»  (மேலும்)

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய முடியாது - மத்திய அரசு


 டெல்லியில் போராடி வரும் விவசாய அமைப்பு பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய 9-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேவேளையில் திருத்தங்கள் கொண்டு வரத் தயார், ஆனால் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துவிட்டது.


இதனையடுத்து, விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏற்கனவே 8 கட்ட பேச்சுவார்த்தையில் முக்கியமான பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படவில்லை. இந்த நிலையில் இன்று 9-ம் கட்ட பேச்சுவார்த்தை மத்திய அரசுக்கும் - விவசாயிகள் சங்கங்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை சுமார் 5 மணி நேரம் நீடித்தது. இறுதியில் மத்திய அரசு நடத்திய 9-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது

3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் 51 நாட்களாக போராடி வருகின்றனர். மேலும், 10-ம் கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 19-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
»»  (மேலும்)

பொங்கலன்று ஏறாவூரில் புடவைக் கடைகளுக்கு சீல்


கொரோனா வைரஸ் தடுப்புச் செயலணியால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களை அனுசரிக்காமல், புடவைக் கடைகளுக்குள் வியாபாரம் மேற்கொண்டமைக்காக 6 புடவைக் கடைகளுக்கு, ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவினர் சீல் வைத்துள்ளனர்.

கொரோனா தவிர்ப்பு செயலணிக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களின்படி, கட்ந்த திங்கட்கிழமை (11) முதல் இன்று (14) வரை பலசரக்குக் கடைகள், புத்தக நிலையங்கள், எரிபொருள் நிரப்பு நிலையம், மருந்தகங்கள், சிகையலங்கார நிலையங்கள், அத்தியவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகள் அனைத்தும் மூடப்படுதல் வேண்டும்  என்று கேட்கப்பட்டிருந்தாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

இந்த அறிவித்தலை மீறி, சில புடவைக் கடைகளுக்கு உள்ளே தைப்பொங்கல் உடுதுணிகள் வியாபாரம் இடம்பெற்றாலேயே தாம் இவ்வாறு கடைகளுக்குச் சீல் வைத்ததாக பொதுச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

அரசாங்க இலச்சினையுடன் கடைகளில் ஒட்டப்பட்டுள்ள அந்த அறிவித்தலில் தனிமைப்படுத்தப்பட்ட வர்த்தக நிலையம் கண்காணிக்கப்படுகின்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இங்கு வெளியாட்கள் எவரும் உட்செல்ல வேண்டாம். குறிப்பிடப்பட்ட 12.01.2021 தொடக்கம் 25.01.2021 வரை இக்காலப் பகுதியினுள் வழங்கப்பட்ட அறிவுரைகளை மீறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவீர்கள் என்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஏறாவூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 
»»  (மேலும்)

1/13/2021

ஜோசேப் பரராஜசிங்கம் கொலைவழக்கு--நாளை இறுதி தீர்ப்பு
மட்டக்களப்பு மாவட்ட  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசேப் பரராஜசிங்கம் அவர்களின் கொலை தொடர்பாக பிள்ளையான்  என்றழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு கடந்த ஐந்து வருடகாலம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். 

2005ஆம் ஆண்டு மகிந்தவின் ஆட்சிகாலத்தில் இப்படுகொலை நிகழ்த்தப்பட்டவேளையில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு வடக்கு/கிழக்கு என்று இரண்டாக பிளவு பட்டு பரஸ்பர சகோதரப்படுகொலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. இக்காலத்தில் மட்டும் கிழக்குமாகாணத்தில் பலநூறு கொலைகள்  நடந்தன.

இச்சந்தர்ப்பத்தில்தான் மானிப்பாயை சேர்ந்தவரும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினருமாகவிருந்த ஜோசேப் பரராஜசிங்கம் இனம்தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார். அவரைப்போன்று சகபாராளுமன்றஉறுப்பினர் கிங்ஸிலி இராசநாயகமும்,சக வேட்பாளரான இராஜன் சத்தியமூர்த்தியும் அதே சமகாலப்பகுதியில் கொல்லப்பட்டனர். 

இதில் ஜோசேப் பரராசசிங்கம் கொல்லப்பட்டபோது 'மாமனிதர்' என்று அவருக்கு வடக்கு புலிகள் புகழாரம் சூட்டினர். அதேவேளை அவரை கிழக்கு புலிகளே கொன்றார்கள் என்றும் குற்றம் சாட்டினர். ஆனால்  ராஜன் சத்திய மூர்த்தியும் கிங்ஸிலி ராஜநாயகமும் கொல்லப்படவேண்டியவர்கள் துரோகிகள் என்று பிரச்சாரம் செய்து அக்கொலைகளுக்கு உரிமைகோரினர் பிரபாகரன் தலைமையிலான வடக்கு புலிகள்.

இந்நிலையில்தான் அவ்வேளைகளில் கிழக்கு புலிகளின் அணியில்  முக்கிய தளபதிகளில் ஒருவராக இருந்த பிள்ளையானின் தலைமையில்தான்  ஜோசேப் பரராஜசிங்கத்தின் கொலை நடாத்தப்பட்டதாக  புலிகளது ஊடகங்கள் செய்திகளை பரப்பின. சர்வதேச தமிழர்களிடையே வியாபித்திருந்த ஆயிரக்கணக்கான புலிகளது பினாமி இணையத்தளங்கள் நூற்றுக்கணக்கான பத்திரிகைகள் மற்றும் வானொலிகள் தொலைக்காட்சிகள்  போன்றவை  ஊடாக இச்செய்தி  மீண்டும் மீண்டும் பரப்பப்பட்டது.

பத்து வருடங்களுக்கு மேலாக ஒரு செய்தியானது   பல்லாயிரம் தடவைகளில் மீள மீள மக்கள் மனதின் பதியப்பட்டதனுடாக   'ஜோசேப் பரராசசிங்கத்தை பிள்ளையானே கொன்றார்.' என்கின்ற பரப்புரை தமிழர்களின் பொது மன உளவியலில் ஆழமாக பதியப்பட்டது.. 

மறுபுறம் பிள்ளையான் புலிகளிலிருந்து பிரிந்த கிழக்கு புலிகளை அடிப்படையாக வைத்து தமிழ் மக்கள் விடுதலை புலிகள் என்கின்ற புதிய கட்சியை  தொடங்கி அதனுடாக 2008ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தலூடாக  கிழக்குமாகாண முதலமைச்சராக தெரிவானார். 2014ஆம் ஆண்டுவரை அவர் ஆட்சியிலிருந்தார். அதனுடாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு சவாலான ஒரு அரசியல் தலைமையாக வளர்ந்துநின்றார்.

இந்நிலையில்தான் 2015ஆம் ஆண்டு இலங்கையில் மகிந்த பதவியிழந்து மைத்திரி தலைமையிலான புதிய ஆட்சி  'நல்லாட்சி' உருவானது. கடந்தகால யுத்தக்குற்றங்கள் எல்லாம் விசாரிக்கப்பட்டு நீதி வழங்கப்படும் என்று மக்களுக்கு வாக்குறுதி வழங்கிய   புதிய ஆட்சியை உருவாக்குவதில் உறுதுணை வகித்த தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் பின்புலத்தில் ஜோசேப் பரராஜசிங்கம் கொலைவழக்கு தொடுக்கப்பட்டது.

ஆனால் அதே கட்சியை சேர்ந்தவர்களாயிருந்து அதே காலப்பகுதியில் கொல்லப்பட்ட கிங்ஸிலி இராஜநாயகம், இராஜன் சத்தியமூர்த்தி போன்றவர்களுக்கு யாருமே நீதி கோர முன்வரவில்லை.இலங்கை அரசாங்கத்தின்   சட்டமா அதிபர் திணைக்களமே பிள்ளையானுக்கெதிரான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது. அதனடிப்படையில் 2005ஆம் ஆண்டு பிள்ளையான் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக கைது செய்யப்பட்ட மற்றுமொரு சந்தேகநபரான  பிரதீப் மாஸ்டர் என்பவர் குற்ற புலனாய்வு துறையினருக்கு வழங்கியதாக சொல்லப்பட்ட  வாக்குமூலம் ஒன்றையே   அடிப்படையாக கொண்டே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ்  பிள்ளையான் கைது செய்யப்பட்டிருந்தார். 


அதேவேளை  சந்தேக நபர்கள் நீதி மன்றத்தில் ஆஜர் ஆக்கப்பட்ட  போது தனது பெயரில் குற்றப்புலனாய்வு தரப்பினர் சமர்ப்பித்த வாக்குமூலமானது தனது சொந்த விருப்பத்தின் பெயரில் வழங்கப்பட்டிருக்கவில்லை என்று பிரதீப் மாஸ்டர்  அந்த வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் மறுதலித்திருந்தார். இலங்கை புலனாய்வு துறையினரின் இத்தகைய நடவடிக்கைகள் ஒன்றும்  புதிய விடயமல்ல. கடந்த காலங்களில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த  பல்லாயிரம் இளைஞர்களுக்கும் நடந்ததுதான். எனவே பிரதீப் மாஸ்டரின் வாக்குமூலத்தை குறித்தவழக்கில் ஆதாரமாக கொள்ளலாமா இல்லையா என்பதையிட்டு கடந்த ஒருவருடமாக வாதப்பிரதிவாதங்கள் நடந்தன. இறுதியில் அந்தவாக்குமூலமானது கொழும்பு மேன் முறையீட்டு  நீதிமன்றத்தால் கடந்த மாதம் நிராகரிக்கப்பட்டது.   அதனடிப்படையில் பிள்ளையானுக்கு மட்டக்களப்பு நீதி மன்றம் கடந்தமாதம் பிணை வழங்கியுள்ளது. அந்த வேளையில் இந்த வழக்கில் பிள்ளையானுக்கு பிணை வழங்கப்படக்கூடாது என்று சுமந்திரன் தாமாகவே முன்வந்து வாதாடியமை பிள்ளையானின் கைதானது தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் அரசியல் பழிவாங்கலே  என்கின்ற குற்றச்சாட்டை  மேலும் உறுதி செய்தது.

 ஜோசேப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் அடிப்படை  ஆதாரமாக  கொள்ளப்பட்ட பிரதீப் மாஸ்டர் என்கின்ற சந்தேகநபர் வழங்கிய வாக்கு மூலம் ஒன்றை தவிர வேறு தடயங்களையோ ஆதாரங்களையோ,மனித சாட்சியங்களையோ குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால்  கடந்த ஐந்து  ஆண்டுகால அவகாசத்தில்  நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கமுடியவில்லை.  இந்நிலையில் நேற்று மட்டக்களப்பு  நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் இவ்வழக்கை தொடர்ந்து கொண்டு நடத்துவதற்கு எவ்வித ஆதாரங்களும் தம்மிடம் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த நல்லாட்சி கால அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட  சட்டமா அதிபரும் குறித்த சட்டமா அதிபர் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்ட அரச தரப்பு சட்டத்தரணியுமே  இவ்வழக்கை தொடர்ந்து நடாத்த தம்மிடம் வேறெந்த ஆதாரங்களும் இல்லை என்று கைவிரித்துள்ளனர்.

எனவே இவ்வழக்கின்   இறுதி தீர்ப்பானது நாளை புதன்கிழமை வழங்கப்படவுள்ளது. 


மீன்பாடும் தேனாடான் 


»»  (மேலும்)

1/12/2021

திகிலிவெட்டை பாலத்தினை நிர்மாணித்தல்


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படியான திகிலிவெட்டை பாலத்தினை நிர்மாணித்தல் தொடர்பான இரண்டாம் கட்ட ஆய்வுக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினல் இன்று   இடம்பெற்றது. எதிர் வருகின்ற ஏப்ரல் மாதத்திற்கு முன்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் அதனடிப்படையில் 
இப்பாலம் தொடர்பான அனைத்து திட்ட அறிக்கைகளையும் தயார் செய்து அதற்கான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ளும்படியும்  மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளருக்கு மட்டக்கக்களப்பு  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவருமான சி.சந்திரகாந்தனால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. 
இக்கூட்டத்தில் நீர்ப்பாசன பணிப்பாளர் அத்துடன் காணிப் பயன்பாட்டு குழுவினுடைய பணிப்பாளர் உட்பட பிரதேச செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.  »»  (மேலும்)

1/07/2021

கஜேந்திரர்களின் தெருச்சண்டை அரசியல்

முன்னணி, ‘கஜேந்திரர்கள் அணி எதிர் மணிவண்ணன் அணி’  என்கிற செங்குத்துப் பிளவை இன்று சந்தித்து நிற்கின்றது. யாழ். மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபைகளில் மணி ஆதரவு அணி, கஜேந்திரர்களின் நிலைப்பாடுகளுக்கு எதிராக நின்று பெற்றிருக்கின்ற வெற்றி அதற்கான அண்மைய சான்று. 


முன்னணியின் ஆதரவாளர்கள் இன்றைக்கு இரண்டு அணிகளாக பிரிந்து நின்று சமூக ஊடகங்களில் ஒருவரை ஒருவர் துயிலுரிந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த காலத்தில் என்னென்ன தகிடுதித்தங்களைச் செய்தோம், யாரின் மீது எவ்வாறான அவதூறுகளையெல்லாம் திட்டமிட்டு உருவாக்கி பரப்பினோம், யாரை எதற்காக அச்சுறுத்தினோம் என்பது தொடங்கி அனைத்து தரம் தாழ்ந்த வேலைகள் பற்றியும் எந்தவித சங்கோஜமும் இன்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். 

முன்னணியின் தலைமைத்துவம் இவ்வாறான தரம் தாழ்ந்த வேலைகளை எந்தவித அறமும் இன்றி கடந்த காலங்களில் அனுமதித்தது. மாற்றுக் கட்சிகள், அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள், கருத்துருவாக்கிகள் என்று எந்தவித பாகுபாடுமின்றி ‘துரோகிகள்’ அடையாளம் தொடங்கி அவதூறுகள் வரையில் வகை தொகையின்றி போலி பேஸ்புக் கணக்குகளில் பரப்பினார்கள். அரசியல் விமர்சனத்துக்கும் அவதூறுக்கும் இடையிலான வித்தியாசம் தெரியாத நிலையொன்றை, முன்னணியை நோக்கி திரண்ட இளைஞர்களிடம் போதித்தார்கள். கஜேந்திரர்கள், மணி தொடங்கி அதற்கான பொறுப்புக்களை முன்னணியின் அனைத்து சிரேஷ்ட உறுப்பினர்களும், ஆலோசகர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 

இன்றைக்கு முன்னணியின் இரு அணி ஆதரவாளர்களும் மிகுந்த மன உளைச்சலோடு இருக்கிறார்கள். அது, ஒருவரை ஒருவர் துயிலுரிந்து கண்ட களைப்பினால் வருவது. முன்னணியின் இளைஞர்களை நோக்கி, கடந்த காலங்களில் அரசியல் அறமொன்றை பேணுங்கள் என்று பலரும் சொல்லி வந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம், கும்பல் மனநிலையில் செயற்பட்டு தங்களின் செயற்பாடுகளை நியாயப்படுத்தி வந்திருக்கிறார்கள். இரு அணிகளாக பிரிந்து விட்ட போதிலும், கடந்த காலத்தில் எவ்வாறான பழக்கத்தை அரசியலாக நம்பி பழகிக் கொண்டார்களோ, அதிலிருந்து அவர்களினால் மீள முடியவில்லை. 

அரசியல் என்பது அவதூறுகளினால் ஆனது என்ற நிலைப்பாட்டினை முன்னணி எந்தவித சங்கடமும் இன்றி விதைத்தது. தம்முடைய கருத்துக்களை, நிலைப்பாட்டினை ஆதரிக்கும் வரையில்தான், அவர்கள் குறித்து பேச மாட்டோம். கொஞ்சமாக மாற்றுக் கருத்தினையோ, நிலைப்பாட்டினையோ வெளிப்படுத்தினாலே, அவர்களை நோக்கி அவதூறு எனும் கொடுங்கரங்களை நீட்டுவோம் என்பதுதான் முன்னணியின் ஒற்றை நிலைப்பாடு. 

முன்னணிக்குள் கற்றவர்கள், புத்திஜீவிகள் என்ற பெயரில் இருக்கின்ற பலரும் இவ்வாறான நிலைப்பாடுகளை பெருமளவு ஊக்குவித்தார்கள். சொந்தப் பெயர்களில் அறம் போதித்துக் கொண்டு போலிக் கணக்குகளில் அசிங்கங்களை அரங்கேற்றினார்கள். (இன்னமும் அப்படியே இருக்கிறார்கள்.)  அதுவும் முன்னணியின் இளைஞர்களை ஏவல் நாய்களாகவே செயற்பட வைத்தார்கள். இன்றைக்கு அவர்கள் வளர்த்து விட்ட அவதூறு அரசியல் அவர்களை பழிவாங்கிக் கொண்டிருக்கின்றது. பொது வெளியில் பல்லிளிக்க வைக்கின்றது. 

எந்தக் கட்சியாக, அமைப்பாக, தரப்பாக இருந்தாலும் அரசியலை குறைந்தபட்ச அறத்தோடாவது முன்னெடுக்க முனையுங்கள். அதுதான் அரசியல் மீதான நம்பிக்கையை விதைக்கும். இல்லையென்றால், இவ்வாறான அசிங்கங்களைத்தான் அரங்கேற்றும். 

(முன்னணியின் அவதூறு அரசியலுக்கு எந்த வகையிலும் சளைத்ததல்ல இன்றைய தமிழரசுக் கட்சியின் அரசியல். அது பற்றி நிறையத் தடவைகள் சுட்டிக்காட்டியிருக்கிறேன். தேவைப்படுபவர்கள், கடந்த காலப் பத்திகளை வாசியுங்கள்.)

 நன்றி *முகநூல் புருஷோத்தமன் தங்கமயில்
»»  (மேலும்)

1/06/2021

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இருதயவியல் உபகரணங்கள் கிடைத்தன


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இருதயவியல் பிரிவின் ஆய்வகத்திற்கு (Cardiology Unit - Cardiac Catheterization Laboratory) வழங்கப்படவிருந்த வைத்திய இயந்திர உபகரணங்கள் வேறு மாவட்டத்திற்கு வழங்கப்படவுள்ளதாக அறிந்த பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அதிரடி நடவடிக்கையால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று காலையில் ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது
»»  (மேலும்)