7/24/2021

மட்டுநகர் முதல்வரின் அநாகரீகம்- ஆணையாளர் குற்றச்சாட்டு

அரசியல் அநாகரிகங்கள் - 1 Thiyagarajah Saravanabavan (@thiyagarajahsa3) | Twitter
கடந்த 20.07.2021 அன்று மாநகர சபையில் இடம்பெற்ற சம்பவமொன்றின் பிரதிபலனாக என் இதயத்தில் அடிக்கப்பட்ட ஆணிகளைக் கழற்றி
உங்கள் சிந்தனைகளுக்குள் ஆழமாக புதைத்து வைக்க முயலுகின்றேன்.
இது என் வலிகளை உங்களுக்குள் இடமாற்றும் முயற்சியல்ல …
என் காயங்களை ஆற்ற……
உங்களுக்குள் என்னை இடமாற்றும் முயற்சி.
நான் என்றும் என் கதிரைக்கு முக்கியம் தந்ததில்லை.
கடமைக்கு மட்டுமே முக்கியம் தருகின்றேன்,
அதனால் எந்தக் கதிரையைக் கண்டும் நான் பயந்ததில்லை.
சுயகௌரவத்தை இழந்ததுமில்லை.
20.07.2021 அன்று பிற்பகல் ஒருமணி இருக்கும்…
அது நடந்தது.
எனது பிரதி ஆணையாளர் திரு. சிவராசா முன்னிலையில் , அலுவலக உதவியாளர் முன்னிலையில் எனது சுயமரியாதை சோரம் போனது.
“ பு * * மகனே “ - என என்னைப்பார்த்து சீறியது வேறு யாருமல்ல..
மட்டக்களப்பு வாழ் மக்கள் தமது நகரின் பிதாவாக மதிக்கக் கூடிய தகுதி பெற்ற அந்த முதல்வரேதான்.
நான் கடமை ஏற்று 6 மாதங்கள் கடந்துள்ளன,
நேரம் தவறி அலுவலகம் சென்றதில்லை…
விடுமுறை எடுத்ததில்லை….
சனி, ஞாயிறு , பொது விடுமுறை தினங்கள் கூட கடமையை மறந்ததில்லை.
ஆனாலும் அந்தக் கேவலமான வார்த்தை, கொதிநீராக என்மீது வீசப்பட்டது.
எதற்காக … ? ?
இன்னொரு அதிகாரியின் சுயமரியாதை பறிபோவதைக் கண்டு இரங்கியதற்காக …. . . .
ஒரு பெண் என்றும் பாராமல் , அவரது அறைக்குள் அத்துமீறி நுழைந்து …..
அந்த அதிகாரியை அழவைத்து கேவலப்படுத்தியதை தடுக்க முயன்றதற்காக…
அருவருக்கத்தக்க அந்த வார்த்தை முதல்வரது வாயிலிருந்து ….. தவறு உள்ளத்திலிருந்து என் மீது வீசப்பட்டது.
அவர் அந்த கேவலமான வார்த்தையை அழுத்தமாக … என் முகத்தைப் பார்த்துக் கூறினார்….
கல்வி அறிவற்ற ஒரு பாமரன் கூறத் தயங்கும் அருவருக்கத் தக்க வார்த்தை அது …
நகரபிதா உள்ளத்திலிருந்து ஈட்டியாகப் பாய்கிறது.
ஒரு மனிதனின் அரசியல் பலம்
இன்னொரு மனிதனின் சுயமரியாதையை
சுரண்டிச் சுரண்டி ரணமாக்குவதற்காகவா வழங்கப்பட்டது ?
ஒரு சபையினை வழிநடத்தும் தகுதியுடைய….
மட்டக்களப்பு நகரின் வழிகாட்டியாக..
ஒருவரின் உள்ளத்திலிருந்து…
“ பு …….. மகனே “
என்ற வார்த்தை …
அதுவும் அலுவலகத்தில்…
பலர் முன்னிலையில் !
வாழ்க சனநாயகம்.
மாற்று இனத்தவரிடம் சுயமரியாதையை இழக்கக் கூடாதென “ சுய மரியாதை இயக்கங்கள்“  
உருவாகின. இன்று அவர்களிடமிருந்து நமது சுயமரியாதையைக் காப்பாற்ற யாரிம் செல்வது ? நன்றி *முகநூல் மாநகர ஆணையாளர் திரு.தயாபரன்

0 commentaires :

Post a Comment