10/12/2021

தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: திமுக, அதிமுக வெற்றி நிலவரம்

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் முன்னிலை நிலவரங்கள் தற்போது வெளியாகிவருகின்றன. Tamil Nadu District Map - Infoandopinion

இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான இடங்களில் திமுக 23 இடங்களிலும், அதிமுக 3 இடங்களிலும் வென்றுள்ளன. காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தலா ஓரிடத்தில் வென்றுள்ளன.

மாவட்ட ஊராட்சி வார்டுகளில் மூன்றை திமுக கைப்பற்றியுள்ளது.

தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளுக்கு அக்டோபர் ஆறு மற்றும் ஒன்பது ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

0 commentaires :

Post a Comment