12/13/2022

மீண்டும் ஒரு தாழமுக்கம்நாளைய தினம் (13.12.2022) தென் சீன கடற் பிராந்தியத்தில் இருந்து ஒரு காற்று சுழற்சியானது அந்தமான் கடல் பிராந்தியத்திற்கு வர இருக்கின்றது.

இது பின்னர் மறுநாள் (14.12.2022) தாழ்வு நிலையாக சற்று வலுவடைந்து, 
எதிர்வரும் 15ஆம் திகதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் தீவிரமடைந்து, 
அதனை அடுத்து வரும் நாளான 16ஆம் திகதி நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக  (Well Marked Low Pressure Area) மேலும் வலுவடைந்து,
மேற்கு நோக்கி நகர்ந்து எதிர்வரும் 17ஆம் திகதி இலங்கைக்கு அண்மையாக வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் காரணத்தினால் எதிர்வரும் 17ஆம் திகதி முதல் கிழக்கு மாகாணம் மற்றும் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் சில சந்தர்ப்பங்களில் 15ஆம், 16ஆம் திகதிகளிலும் மழைக்கு சிறிதளமான வாய்ப்பு உண்டு.

இந்த தாழமுக்கமானது வட இலங்கையை ஊடறுத்து அல்லது 
தமிழ்நாட்டிற்கும் வட இலங்கைக்கும் ஊடாக செல்லக்கூடிய இரு சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன 


0 commentaires :

Post a Comment