7/13/2020

என்றும் எமது மதிப்புக்குரிய அரச உத்தியோகஸ்தர்களே

என்றும் எமது மதிப்புக்குரிய அரச உத்தியோகஸ்தர்களே உங்களனைவரோடும் சற்று உரையாட விரும்புகின்றேன் . இந்த உரையாடல் ஊடாக எதிர்வரும்  பாராளுமன்ற பொதுத் தேர்தல் (ஆண்டு-2020) தொடர்பான  சில அவதானங்களை தங்களனைவரதும் மேலான கவனத்துக்கு கொண்டு வருவதே எனது நோக்கமாகும். Sivanesathurai Chandrakanthan - Posts | Facebook

கிழக்கு மாகாணத்தின் துறைசார் நிர்வாக கட்டமைப்புக்கள் அனைத்திலும் தமிழர்களின் வகிபாகம் தொடர்ச்சியாக நலிவடைந்து செல்வதனை நான்  உங்களுக்கு விலாவரியாக விளக்கவேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணுகின்றேன். கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக நான் இருந்த காலத்தில் நெஞ்சை நிமிர்த்தி நின்ற கிழக்குத் தமிழன் இன்று தலை குனிந்து நிற்பதன் காரணம் யாது என்பதை  நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

அரசின் நிதி ஒதுக்கீடுகள், வேலைவாய்ப்புக்கள், பதவியுயர்வுகள், இடமாற்றங்கள் என அனைத்திலும் தமிழினம் வஞ்சிக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக ஒரு காலத்தில் நாடு கேட்டு போராடிய எமது இனம் இன்று வீதி விளக்குகளுக்காய் பிரதேசபைகளிடம் கையேந்தி நிற்கின்றது.

இதனை ஈழத்தமிழனின் இழிநிலை என்பதா? ஆண்ட பரம்பரையின் அவமானமென்பதா? இதற்கு காரணம் என்ன? இதற்கு காரணம் யார்? இதுவரைகால எமது அரசியல் பாதையின் தவறுகள்தானே அதற்கு காரணம். எனவேதான் இனி நாம் புதியபாதைகளை கண்டடைய வேண்டும்.

பெரும் தலைவர்களான  இராஜதுரை, தேவநாயகம் போன்றோருக்கு பின்னர் அதாவது 1989ம் ஆண்டு தேர்தலுக்கு பின்னரான சுமார் முப்பத்தியொரு ஆண்டுகளில் அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரு அமைச்சரேனும் கிழக்கு தமிழர்களாகிய எமக்கு கிடைக்கவில்லை. இலங்கையிலுள்ள எந்தவொரு மாகாணத்துக்கும் இப்படியொரு பரிதாபம் நிகழ்ந்திருக்க முடியாது.

இதுபோன்றதொரு இருண்ட காலம் இனிமேலும் தொடர நாம் இடமளிக்க போகின்றோமா? முப்பது வருட கால யுத்தம், யுத்ததுக்கு பின்னரான பத்து ஆண்டுகள் என்று நாற்பது வருடங்களில் ஒரு தலைமுறை மாற்றம் நிகழ்ந்துவிட்டது. எமது புதிய சந்ததிகளின் தேவைகளும் எதிர்பார்புக்களும் மாற்றம் பெற்றுவிட்டன. நவீன தொழிநுட்ப உலகில் போட்டிபோட்டு முன்னேறவேண்டிய காலம் இது. அதற்கிணங்க சர்வதேச தரமிக்க நவீன கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்களை எமது இளைஞர் யுவதிகளுக்கு வழங்கவேண்டிய கடப்பாடு எமக்குண்டு.

எனவேதான் இத்தேர்தலின் ஊடாக அதிகார பீடங்களின் கிழக்கு தமிழர்களின் இருப்பினை உறுதிசெய்ய நாம் களமிறங்கியுள்ளோம்.
எமது மாவட்டதினையும் மக்களையும் பல வழிகளிலும் வழிநடத்திச் செல்கின்ற கல்வியாளர்களாக நீங்கள் இருக்கின்றீர்கள். அந்தவகையில் எதிர்வரும் பாரளுமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து நீங்களனைவரும் தீவிர கவனம் கொள்ளவேண்டும். கட்சி பேதங்களை தாண்டி கிழக்கின் விடிவுக்காக சிறந்த முடிவொன்றினை தாங்களனைவரும் ஒருமித்து எடுக்கவேண்டுமென்று தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

அந்த முடிவானது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் தலைமையில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களை  ஆதரிப்பதாக  மட்டுமே இருக்கும் என்று நான் திடமாக நம்புகின்றேன். எனவே கிழக்கின் சின்னமான படகு சின்னத்துக்கு உங்களனைவரதும் வாக்குகளையும்  வாரி வழங்குங்கள் என உங்களனைவரிடமும்  இருகரம் கூப்பி நிற்கின்றேன்.

தங்களனைவரதும் பூரண ஆதரவுடன் படகுசின்னத்துக்கு நேரே இடப்படுகின்ற ஒவ்வொரு வாக்குகளும் பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டுமல்ல அதிகாரமிக்க அமைச்சர்களை உருவாக்குவதற்குமான பெறுமதிமிக்க வாக்குகளாகும் என்பதனை ஒவ்வொருவர் மனதிலும் நிறுத்துங்கள் என தயவுடன் கேட்டு கொள்ளுகின்றேன் .

 நன்றியுடன் என்றும் உங்கள் 
 பிள்ளையான் (சிவ-சந்திரகாந்தன்) 

-தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி
»»  (மேலும்)

7/11/2020

சிங்கப்பூர் தேர்தல்: லீ சியன் லூங்கின் மக்கள் செயல் கட்சி மீண்டும் வெற்றி

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சிங்கப்பூரில் நாடாளுமன்றத் தேர்தல் அதிக சிக்கல்கள், சர்ச்சைகள் இன்றி நடந்து முடிந்துள்ளது . மொத்தம் 26.5 லட்சம் வாக்காளர்கள் இத்தேர்தல் மூலம் 93 எம்பிக்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

கடந்த 1965ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்று தனி நாடாக மலர்ந்த பிறகு சிங்கப்பூரர்கள் எதிர்கொண்ட 14ஆவது நாடளுமன்ற பொதுத் தேர்தல் இது. சிங்கப்பூரின் சிற்பி என்று குறிப்பிடப்படும் அந்நாட்டின் முதல் பிரதமர் லீ குவான் யூ தலைமையில் அமைந்த மக்கள் செயல் கட்சியின் ஆட்சிதான் கடந்த 55 ஆண்டுகளாக சிங்கப்பூரில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இம்முறையும் அக்கட்சியே வென்று ஆட்சி அமைக்கிறது.

»»  (மேலும்)

7/09/2020

2021 ஒரு நாளைக்கு 2.87 லட்சம் பேருக்கு கொரோனா

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டறியப்படாத பட்சத்தில் இந்தியாவில் இதே நிலை நீடித்தால் வரும் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியிலிருந்து ஒரு நாளைக்கு 2.87 லட்சம் பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி எனும் பிரபல பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது


.How to invest in India | The best indices for India ETFs | justETF


சுமார் 475 கோடி மக்கள் வாழும் 84 நாடுகளின் நம்பத்தகுந்த தரவை அடிப்படையாக கொண்டு கொரோனா வைரஸ் பரவலின் தொற்றுநோயியல் மாதிரியை அந்த பல்கலைக்கழகத்தின் ஸ்லோன் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்டின் ஆராய்ச்சியாளர்களான ஹஷீர் ரஹ்மந்தாத், டி.ஒய் லிம் மற்றும் ஜான் ஸ்டெர்மன் ஆகியோர் உருவாக்கியுள்ளனர்.

இந்த நிலையில், இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில், கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பு மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படாத பட்சத்தில், உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில் வரும் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தினமும் 2.87 லட்சம் பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், பத்து நாடுகள் கொண்ட இந்த பட்டியலில் அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, இரான், இந்தோனீசியா, பிரிட்டன், நைஜீரியா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"எங்களது ஆய்வில் கொரோனா தடுப்பு மருந்து, சிகிச்சை முறைகள் உள்ளிட்டவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. எனினும், தீவிரமான பரிசோதனை, நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை விரைந்து கண்டறிதல் உள்ளிட்டவை எதிர்காலத்தில் இந்த நோய்த்தொற்று பாதிப்பை குறைக்க உதவலாம்" என்று இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

»»  (மேலும்)

7/04/2020

அதிசயத்துக்கு மேல் அதிசயம் கீழடியில் கிடைக்கும் தமிழர் வரலாறு

கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாநில தொல்லியல் துறை நடத்திவரும் ஆறாம் கட்ட அகழாய்வில் இதுவரை நான்கு எடைக் கற்கள் கிடைத்துள்ளன. கீழடி பகுதி தொழிற்கூடமாக இருந்திருக்கலாம் என்ற கருத்திற்கு இவை வலுச் சேர்ப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

கீழடியிலும் அதனை ஒட்டியுள்ள அகரம், கொந்தகை, மணலூர் பகுதிகளிலும் மாநில தொல்லியல் துறை தற்போது அகழாய்வுகளை நடத்திவருகிறது. இது கீழடி பகுதியில் நடந்துவரும் ஆறாவது கட்ட அகழாய்வாகும்.

இதில் கொந்தகை பகுதி ஈமக் குழிகள் அமைந்த பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அகரம் பகுதி மக்கள் வாழ்ந்த பகுதியாக அடையாளம் காணப்பட்டிருக்கிறது.

கீழடியில் நடந்துவந்த அகழாய்வில் ஜூன் 20ஆம் தேதியன்று 1.53 மீட்டர் ஆழத்தில் ஒரு எடை கல் கண்டெடுக்கப்பட்டது. இந்த எடைக் கல் கறுப்பு நிறத்தில் உருளை வடிவில் இருந்தது. இதன் அடிப்பாகம் தட்டையாக இருந்தது. ஏதன் மேல் பகுதி பளபளப்பாக்கப்பட்டிருந்தது. Tamil Nadu State Department of Archaeology keezhadi archaeological site

ஜூன் 25ஆம் தேதியன்று 1.22 மீட்டர் ஆழத்தில் ஒரு எடைக் கல் கண்டெடுக்கப்பட்டது.இதுவும் கறுப்பு நிறத்தில் பளபளப்பாக்கப்பட்டு, உருளை வடிவில் இருந்தது. 

ஆகவே இதுவரை 8, 18, 150, 300 கிராம் எடையுடைய நான்கு எடைகற்கள் கிடைத்துள்ளன. ஆழத்தில் உலை ஒன்று இருந்த தடயமும் கிடைத்துள்ளது.

தற்போது கண்டறியப்பட்டுள்ள உலை அமைப்பு, இக்குழிகளில் கிடைத்துள்ள இரும்புத் துண்டுகள், இரும்பு ஆணிகள், கண்ணாடி உருக்கிய பின்னர் வெளியேறும் கசடுகள் ஆகியவை இப்பகுதி தொழில் கூடமாக செயல்பட்டிருக்கலாம் என்பதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றன.

எடைக் கற்கள் மூலம் இப்பகுதியில் வணிகமும் நடைபெற்றிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

"இந்த எடை கற்களின் அளவு 8 கிராமிலிருந்து 300 கிராம் வரைதான் என்பதால், உலோகப் பொருட்களை எடைபோட இவை பயன்படுத்தப்பட்டிருக்கலாம்" என்கிறார் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டிருக்கும் மாநில தொல்லியல் துறையின் இணை இயக்குனர் சிவானந்தம்.

»»  (மேலும்)

சந்திர கிரகணம்: ஜூலை 5ஆம் தேதி எங்கு, எப்போது, எப்படி தெரியும்?

கடந்த ஒரு மாதத்துக்குள் மூன்றாவது கிரகணத்தை இந்த உலகம் காண உள்ளது. கடந்த ஜூன் 5-ம் தேதி சந்திர கிரகணம் நிகழ்ந்த நிலையில், ஜூன் 21ஆம் தேதி சூரிய கிரகணம் நடந்தது. இந்தநிலையில், மேலும் ஒரு சந்திர கிரகணம் நாளை நிகழவுள்ளது.சந்திர கிரகணம்

2020-ம் ஆண்டில் நிகழ உள்ள மூன்றாவது சந்திர கிரகணம் இது. ஜனவரி 10-ம் தேதி முதல் சந்திர கிரகணமும், ஜூன் 5-ம் தேதி இரண்டாவது சந்திர கிரகணமும் நிகழ்ந்துள்ளன.

ஞாயிறு அன்று நிகழப்போகும் கிரகணம், `புறநிழல் சந்திர கிரகணமாகும்` (Penumbral lunar eclipse). இந்த கிரகணத்தின்போது, சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒரே கோட்டில் இருப்பதில்லை.

கிரகணம் உச்சம் அடையும் நேரத்தில், பூமியின் பெனம்ரா (புறநிழல்) மட்டுமே சந்திரனின் மீது விழும். புறநிழல் என்பது பூமியின் நிழலின் வெளிப்பகுதியாகும்.

இதே போன்ற 'புறநிழல் நிலவு மறைப்பு' எனப்படும் சந்திர கிரகணம்தான் கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதியும், ஜூன் 5-ம் தேதியும் நிகழ்ந்தது.

இந்த சந்திர கிரகணம் ஞாயிறு (ஜூலை 5) காலை 8.37க்கு துவங்கி 11.22 மணிக்கு முடிவடையும். அதிக நிலவு மறைப்பு நிகழ்வது 9.59 மணிக்கு நடக்கும். மொத்தமாக கிட்டதட்ட 2 மணி நேரம் 43 நிமிடம் 22 நொடிகளுக்கு இந்த கிரகணம் நிகழும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்திய நேரப்படி காலை நேரத்தில் இந்த கிரகணம் நிகழ்வுள்ளதால் இதை இந்தியாவில் காண முடியாது. ஆனால், இதை வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளில் காணலாம்.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் இயக்குநர் சவுந்தரராஜன் பெருமாள், சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை நேர்க்கோட்டில் வரும்போது, சூரிய ஒளியை நிலவின் மீது படாமல், பூமி மறைப்பதே சந்திர கிரகணம் ஆகும். நாளை நிகழப்போகும் கிரகணம், முழுமையான கிரகணம் அல்ல. இது ஒரு புறநிழல் சந்திர கிரகணமாகும். என்கிறார்.

மேலும் அவர், குறிப்பிட்ட நாடுகளில் சந்திரன், பௌர்ணமி நிலவு போலவே காட்சி அளிக்கும். நிலவின் வண்ணத்தில் ஏற்படும் மாற்றத்தை மக்களால் காண முடியாது,என்கிறார் அவர்.

»»  (மேலும்)

தேர்தல் காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்  வேட்பாளர் திரு.ஜெயவாணிதாசன் அவர்களின் தேர்தல்  காரியாலயம் இன்று கல்லடியில் ஆதரவாளர்கள்  புடை சூழ கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது. தலைவர் சிவ சந்திரகாந்தன் அவர்களின் சிந்தனையான
"மாற்றத்தை நோக்கிய மட்டக்களப்பு "எனும் வாசத்திற்கு செயல் வடிவம் கொடுக்க மட்டக்களப்பு மக்கள் மனதில் என்று படகுச்சின்னம் வெற்றியின் சின்னம்.
»»  (மேலும்)

7/03/2020

எனது புகைப்படங்களைப் பயன்படுத்தக்கூடாதென உத்தரவிட்டுள்ளேன்.

பிரச்சாரத்தில் எனது படங்களை பயன்படுத்தவோ, நியமனங்கள் தருவதாக கூறவோ, அரச பணியாளர்களைப் பாவிக்கவோ வேண்டாம்:
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரச்சார நடவடிக்கைகளுக்காக எனது புகைப்படங்களைப் பயன்படுத்தக்கூடாதென நான் உத்தரவிட்டுள்ளேன்.
அதுபோன்று பாதுகாப்பு சேவைகள், அரச சேவைகள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்கள் எவரும் தேர்தல் அரசியல் பணிகளில் ஈடுபடக் கூடாதென்றும் நான் குறிப்பிட்டுள்ளேன்.
இந்த முறை பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது பிரச்சார நடவடிக்கைகளில் எனது புகைப்படங்களைப் பயன்படுத்துவதாகவும், இராணுவம் மற்றும் அரச அதிகாரிகளைச் சம்பந்தப்படுத்திக் கொள்வதாகவும், பல்வேறு நியமனங்களை மற்றும் வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் குறிப்பிடுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
எனவே, இந்த விடயம் தொடர்பாக - எனது செயலாளர் பீ. பி. ஜயசுந்தர அவர்கள் - அனைத்து ஆளுநர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள், மற்றும் அரச கூட்டுத்தாபனங்கள், சபைகள், நியதிச்சட்ட நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஏனைய துறைப் பிரதானிகளுக்கு நேற்று அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்திற்கு எனது புகைப்படத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், நியமனங்களைத் தருவதாக வாக்குறுதிகளைக் கொடுக்க வேண்டாம் என்றும், அரச ஊழியர்கள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாமென்றும் - கடுமையாக அறிவுறுத்துமாறு நான் செயலாளருக்கு பணிப்புரை விடுத்திருந்தேன்.
அதற்கு அமைய - அனைத்து அரச ஊழியர்களும் எனது இந்த அறிவுறுத்தலைப் பின்பற்றுமாறும், எனது செயலாளர், ஆளுநர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட நிறுவனப் பிரதானிகளுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது கடிதத்தின் பிரதி தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

»»  (மேலும்)

7/01/2020

வெளியானது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தேர்தல் விஞ்ஞாபனம்.

Aucune description disponible.

"மீண்டும் மலரும் புதுயுகம்" என்னும் தலைப்பில்  தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று புதனன்று மட்டக்களப்பில் வெளியிடப்பட்டுள்ளது.  முதலில் கட்சியின்  தலைமை காரியாலயத்திலும் பின்னர்  ஒவ்வொரு வேட்பாளர்கள் தலைமையிலும்  தத்தமது பிரதேசங்களை மையமாக கொண்டு  மாவட்டமெங்கும் பரபரப்பாக இவ்வெளியீடுகள் இடம்பெற்றுள்ளன. அபிவிருத்தியின் மன்னனான பிள்ளையான் எதிர்வரும் காலங்களில் தரப்போகும் அபிவிருத்திகளையிட்டு அறியும் ஆர்வத்துடன் மக்கள் இவ்விஞ்ஞாபனத்தை ஆர்வமுடன் படித்துவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
»»  (மேலும்)

6/25/2020

மனம் திறக்கும் வைத்தியகலாநிதி அசோகன் ஜூலியன்

மாற்றத்தை நோக்கிய பயணம்.....
என்னை பற்றி..  மனம் திறக்கும் வைத்தியகலாநிதி அசோகன் ஜூலியன்
நான்  அசோகன் ஜீலியன் பாலசிங்கம், நாவற்குடாவை பூர்வீகமாகக் கொண்ட மட்டக்களப்பு மீன்பிடி திணைக்களத்தின் முன்னாள் மாவட்ட அதிகாரி அமரர் சி. பாலசிங்கம், காலஞ் சென்ற முன்னாள் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் ஆங்கில ஆசிரியை திருமதி ஜெயராணி பாலசிங்கம்  அவர்களின்  புதல்வராவேன்.
புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவனாகிய நான் யாழ் பல்கலைக்கழத்தில் மருத்துவ பட்டப்படிப்பை நிறைவு செய்து தொழில்ரீதியாக மருத்துவராக 30 வருடங்கள்  சேவையாற்றியுள்ளேன்.
எனது குடும்பம்
எனது  மனைவி விசேட வைத்திய நிபுணர்.
எனக்கு  இரு புதல்வர்கள். இருவரும் மருத்துவ பீட மாணவர்கள்..
ஏன் அரசியலில்
பாராளுமன்ற உறுப்பினர் என்ற பட்டத்தை எனது பெயருக்கு பின்னால் போடுவதற்காகவோ அல்லது பாராளுமன்ற கதிரையை சூடாக்குவதற்காகவோ அல்லது காந்தி பூங்காவின் முன் ஆர்ப்பாட்டம் செய்வதற்காகவோ, அல்லது பாடசாலை பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக செல்வதற்காகவோ,அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதங்களை அனுபவிப்பதற்காகவோ அல்லது நான்
தேர்தலில் போட்டியிடவில்லை.
30 வருடங்களுக்கு முன் எனது பெயருக்கு பின் பட்டத்தை சுமந்தவன். நடுத்தர ஆசிரிய குடும்பத்தில் பிறந்த நான் இலவச கல்வியால் பட்டத்தையும் வரப்பிரசாதங்களையும் அனுபவித்தவன்.
மட்டக்களப்பின் நிலமை
எமது மாவட்டத்திலேயே 35 வயதை தாண்டியும் இளைஞர் யுவதிகள்  தொழில் வாய்ப்பற்று வீட்டில் இருக்கின்றார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்திலேயே சிறுவர்கள் தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக பாடசாலை படிப்பை துறந்து வீதியிலே வியாபாரம் செய்யும் துர்ப்பாக்கிய நிலைமை காணப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டமே வறுமையில் முதலிடத்தில் காணப்படுகின்றது
மட்டக்களப்பு மாவட்டத்திலேயே நீர், மலசலகூடம், தரமான வீடுகள் என அடிப்படை வசதிகளற்று  ஓலை குடிசைகளில் மக்கள் வாழும் அவலமான நிலைமை காணப்படுகிறது.
பெண்களை தலைமையாக கொண்ட  போராளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளினது
வாழ்க்கை போராட்டத்துக்கு ஒரு  நிரந்தரமான தீர்வு காணப்படாமல் அவலமான நிலைமையில் வாழும் நிலைமை காணப்படுவதுடன் ஒவ்வொரு தேர்தல்களிலும் பேசும் விடயமாக காணப்படுகின்றது.
இனத்தின் மேல் கொண்ட உணர்வுகளால் வலியை சுமந்து தமது கல்வி மற்றும் வாழ்க்கையை  தொலைத்து நிற்கும்  ஆயிரக்கணக்கான சகல போராட்ட இயக்கங்களை சேர்ந்த  ஆயிரக்கணக்கான எமது உறவுகள்  நிர்க்கதியற்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இவர்களின் ஜீவனோபாய போராட்டத்துக்கு
முன்னுரிமை கொடுத்து  அவர்களை வாழ்க்கையில்  மீளக்கட்டியெழுப்ப வேண்டியது எமது தலையாய கடமையாகும்.
என்னால் முடியும்
நான்  மட்டக்களப்புக்கு சொந்தமானவன்.
மட்டகளப்பு, நான் பிறந்த மண்; என்னை வாழவைத்த மண். எனது தமிழ் உறவுகள்  தொடர்ந்தும் ஏமாற்றப்படக்கூடாது. எனது தமிழ் சமூகம்
மாற்றானிடம் கையேந்தும் துர்ப்பாக்கிய நிலைமைக்கு தள்ளப்பட கூடாது. 
அவர்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும். மாற்று  சமூகத்துக்கு நிகராக எமது தமிழ் சமூகமும் வாழவேண்டும்.
அதனை என்னால் செய்யமுடியும். அதற்கான  தகுதியும் ஆளுமையும் என்னிடம் உண்டு.
எனவே எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுங்கள் என்னால் மாற்றத்தை நிச்சயமாக ஏற்படுத்த முடியும்.
எனவே உங்கள்
முதலாவது வாக்கை  சரித்திரநாயகன்   முன்னால் முதலமைச்சர் கெளரவ சிவநேசதுரை சந்திரகாந்தனின் அவர்களின்  படகு சின்னத்துக்கு புள்ளடி X இட்டு
இலக்கம் 8  X க்கு அளிக்க வேண்டியது  ஒவ்வொருவரினதும் தார்மீக கடமையாகும்.
என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு ஏற்பட்டால்.......
உங்கள் இரண்டாவது விருப்பு வாக்கை எனது இலக்கம்  4 X க்கும் வழங்குங்கள்.
நான் உங்களை மாற்று சமூகத்துக்கு சமனாக மாற்றானிடம் கையேந்தாமல் நிரந்தர வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பி உங்களை வாழ வைப்பேன் என உறுதியளிக்கின்றேன்.
பசிக்கிறது என்று சோறு கேட்பவனுக்கு சாப்பாட்டு பார்சல் கொடுத்து முகநுலில் படம் போடுவது தேச அக்கறையுள்ள ஒருவனுக்கு அழகு அல்ல.
விதை நெல் கொடுத்து ஆயுட்காலம் முழுவதும் கையேந்தாமல் அவன் உண்ண, உணவுக்கு வழி செய்பவனே உண்மையான மக்கள் தொண்டன், மக்கள் சேவகனாவான்.
உங்கள் அன்பின்
டாக்டர் அசோகன் ஜுலியன் பாலசிங்கம்  MBBS
தொடரும்......
»»  (மேலும்)

நான் உங்கள் பிள்ளையான் பேசுகிறேன்,


 captionநான் உங்கள் பிள்ளையான் பேசுகிறேன்,
என் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, உழைக்கும்  மக்களே, உத்தியோகஸ்த்தர்களே,  மாணவர்களே! உங்கள் அனைவரோடும் ஒரு  சில நிமிடங்கள் உரையாட  விரும்புகின்றேன்.
எமது அரசியல் வரலாறு என்பது சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக மேட்டுக்குடி தலைமைகளினால் பிழையாக வழிநடத்தப்பட்டு வந்துள்ளது. அதன் காரணமாக நாம் நமது சொந்த  மூளைகளை தொலைத்து நிற்கின்றோம்.
எமது நாட்டில் நடைபெறுகின்ற ஒவ்வொரு ஆட்சி அதிகார மாற்றங்களிலும் எமது மக்களின் குரல்கள் பலவீனப்பட்டு போயுள்ளன. தனி நாட்டுக்காக போராடிய ஓர் இனம் இன்று கிழக்கில் தனது இருப்பிற்காக போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் வந்து நிற்கின்றது. எம்மைச் சூழ   எழுந்து நிற்கின்ற அதிகார வர்க்கங்களை எப்படி நாம் எதிர்கொள்ளப் போகின்றோம்?
மட்டக்களப்பான் மதியிழந்து மட்டுமன்றி மானம் இழந்தும் நின்றான் என்று எமது எதிர்கால சந்ததிகள்  எம்மை  தூற்றவேண்டுமா? இல்லையா? என்பதை நிச்சயிக்கப் போகின்ற தருணமாக எதிர்வருகின்ற பாராளுமன்றத் தேர்தல் அமையப் போகின்றது. இதனை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டிய கடமைப்பாடு மண்ணின் மைந்தன் ஆகிய எனக்குண்டு.
எமது கட்சியானது காட்டிலும், கடலிலும், நெருப்பிலும் கூட புடம் போட்டுப்பட்டு நிமிர்ந்து நிற்கும் கட்சியென்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். பலவிதமான இன்னல்களையும் உயிரிழப்புகளையும், தியாகங்களையும் தாண்டி வந்த புலிகள் நாங்கள். ஆனால் எமது வளர்ச்சியையும் தனித்துவத்தையும் சிதறடித்து, சீர்குலைக்க நாலாபுறங்களிலும் இருந்தும் சதித்திட்டங்கள் தீட்டப்படுகின்றன. அத்தகைய சதிகளில் ஒன்றே இந்த பிள்ளையான் மீதான அரசியல் பழிவாங்கலாகும். இன்றும் கூட கிழக்கின் தனித்துவத்தைக் கட்சியை அழித்தொழிக்க  பலமுனைகளிலிருந்தும் போலித் தமிழ் தேசியவாதிகள் களமிறங்குகின்றனர். ஆனாலும் நாம் அனைத்து எதிர்ப்புக்களையும் தாண்டி கிழக்கின் தனித்துவம், கிழக்கின் தலைமை என்று எமது மக்களாகிய உங்கள் அனைவரினதும் உரிமை குரல்களையும் உயர்த்தி பிடித்து நிற்கின்றோம்.
  எதிர்வரும் தேர்தலில் எமது மக்களாகிய உங்கள் அனைவரினதும் விருப்பங்களுக்கும் வேண்டுகோளிற்க்கும் மதிப்பளித்து எமது தனித்துவ அடையாளமாகிய படகு சின்னத்தில் களமிறங்கும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவினை எடுத்துள்ளோம்.
  எனவே எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை தொடக்கமாக வைத்து கிழக்கு தமிழர்கள் அனைவரும் கட்சி பேதங்களை மறந்து வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும். அந்த ஒற்றுமை ஊடாக படகு சின்னத்துக்கு வரலாறு காணாத வெற்றியை ஈட்டித்தர வேண்டும் என்று தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

என்றும் உங்கள் பிள்ளையான்.
»»  (மேலும்)