Election 2018

9/16/2018

திலீபனின் ஆன்மா அழுகின்றது


திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் முதல் நாள் நிகழ்வுஇ இன்று (15) ஆம்பிக்கப்பட்ட நிலையில் நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் 


Résultat de recherche d'images pour "திலீபனின்"

பருத்தித்துறை வீதி - நல்லூர் பகுதியில் அமைந்துள்ள திலீபன் நினைவுத் தூபியில்இ மேற்படி நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இதில்இ யாழ். மாநகர சபை பிரதி மேஜர் ஈசன்இ தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்இ செயலாளர் எஸ். கஜேந்திரன்இ ஜனநாயகப் போரளிகள் கட்சிப் பிரதிநிதிகள்இ வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போதுஇ திலீபனின் உருவப்படத்துக்கு மலர்மலை அணிவித்துஇ மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம்இ ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்க முற்பட்டவேளையில்இ நிகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாடல் ஒலிக்கவிடப்பட்டது.
இதன்போதுஇ பாடலை நிறுத்துமாறு சி.வி.கே சிவஞானம் கோரினார்.
இதற்குஇ பாடல் ஒலிபரப்பியவர்கள்இ “நிகழ்வு முடிவடைந்து விட்டது என அறிவித்த பின் கருத்துத் தெரிவிக்க வேண்டிய தேவை இல்லை. இங்கு அரசியல் தேவையற்றது என்பதே இங்கு முதன்மை” எனக் கூறிஇ பாடலை நிறுத்த மறுத்தனர்.
இதனால் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முன்னாள் பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் எஸ். கஜேந்திரனுக்கும் இடையில் கருத்து மோதல்கள் இடம்பெற்றன.
இதனிடையில் அவைத்தலைவர்இ ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்து முடித்துவிட்டார்.
ஆரம்பித்த கருத்து மோதல்களின் போது திலீபனின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் வகையிலான தூசன வார்த்தைப் பிரயோகங்களும் இடம்பெற்றன.
நிகழ்வின் ஆரம்பத்தில் இருந்தே நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தொடர்பில் முரண்பட்ட பார்வை இருந்தது. பிரதான சுடர் இரண்டு வைக்கப்பட்டிருந்தன. நிகழ்வு ஆரம்பிக்கும் ஒரு நிமிடம் முன்னதாக ஒரு சுடர் அங்கிருந்து அகற்றப்பட்டிருந்​தமை குறிப்பிடத்தக்கது.


»»  (மேலும்)

9/12/2018

இந்தியாவில் ஒருபாலின உறவுக்கு தடை நீக்கம்:

கொழும்பு மருதானையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் முத்தமிட்டுக் கொண்டதாக குற்றம் சுமத்தி, இரண்டு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்களுக்கு எதிரான வழக்கு 2016ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட்டிருந்தால், ஒருபாலுறவு என்பதை தண்டனைச் சட்டப் பிரிவில் இருந்து அகற்றிக் கொள்ளும் போராட்டம் வலுப்பெற்றிருக்கும் என ஒருபாலுறவு சமூகத்திற்காக குரல் கொடுத்துவரும் சமூக ஆர்வலர் மனோஜ் தெரிவித்தார்.எல்.ஜி.பி.டி கொண்டாட்டம்
இந்தியாவில் ஒருபாலுறவை தண்டனைக்குரிய சட்டப் பிரிவில் இருந்து அகற்றி இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, இலங்கையிலுள்ள ஒரு பாலுறவு சமூகத்திற்கும் நம்பிக்கையைத் தந்துள்ளது. ஆனால், இந்தியாவைப் போன்று இலங்கையிலும் தண்டனைச் சட்டப் பிரிவில் இருந்து ஒருபாலுறவு விவகாரத்தை நீக்கிக் கொள்ள இன்னும் உறுதியோடு போராட வேண்டியிருப்பதாக பி.பி.சி. தமிழிடம் பேசிய மனோஜ் தெரிவித்தார்.
இந்திய தண்டனைச் சட்டத்தின் 377 ஆவது பிரிவில் ஒருபாலுறவு உள்ளடக்கப்பட்டிருந்தது. இதேபோல இலங்கையில் 365-365A பிரிவுகளில் ஒருபாலுறவு குற்றமெனக் கருதப்படுகிறது.
இந்தியாவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டமும், அதற்குக் கிடைத்த வெற்றியும் இலங்கையில் எந்த வகையிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் இங்குள்ள ஒருபாலுறவு சமூகத்தின் எதிர்காலம் குறித்தும் ஆராய்ந்தோம்.
இந்தியாவில் ஒருபாலுறவு குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கும், இந்தியாவிற்கும், இலங்கையின் நிதி, ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர டுவிட்டரில் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.
»»  (மேலும்)

மறவன் புலவு வைத்த திரி நல்லூரில் தீயாக

நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் சைவசமய மரபினைப் பேணும் முகமாகவும், பசு வதையினைத் தடுக்கும் முகமாகவும் சபைக்குட்பட்ட பகுதிகளில் மாட்டிறைச்சிக் கடைகள் தடை செய்யப்பட வேண்டும் மற்றும் சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்குகின்ற இறைச்சிக்கடைகள் குத்தகைக்கு விடுவதை நிறுத்த வேண்டும் எனும் வகையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் குமாரசாமி மதுசூதன் கொண்டு வந்த பிரேரணை சபையிலுள்ள அனைத்து உறுப்பினர்களாலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுத் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 

நல்லூர் பிரதேச சபையின் ஆறாவது அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை(11) நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தா. தியாகமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற போதே மேற்கண்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.Résultat de recherche d'images pour "மறவன் புலவு"
»»  (மேலும்)

9/11/2018

கழுதாவளையில் நடந்தேறிய எட்டாவது கண்ணகி விழா

வருடம் தோறும் நடை பெறும் கண்ணகி கலாசார விழாவும்
கழுதாவளையில் நடந்தேறிய எட்டாவது கண்ணகி விழாவும்L’image contient peut-être : 1 personne, plein air
----------------------------------------------------------------------------------
யாழ்ப்பாணக் கலாசாரத்தைக் கந்தப்புராணக் கலாசாரம் என அழைக்க வைத்தார் ஆறுமுக நாவலர். 
மட்டக்களப்புக் கலாசாரத்தை மஹாபாரதக் கலாசாரம் என அழைப்பது பொருந்தும் என்பார் சுவாமி விபுலானந்த அடிகளார்.
இரு பிரம்மசாரிகளும் ஈழத்தமிழ்ப்பண்பாட்டின்
இரு குறியீடுகளாகக் கருதப்படுபவர்கள். 
எந்த ஒரு பிரதேசத்தையும் ஒற்றை பண்பாட்டுச் சொல்லாடலுக்குள் அடக்கி விட முடியாது என்பது இன்றைய கொள்கை.
பிரதானமான ஒன்றைவிட வேறு சில கலாசாரங்களும் ஒரு பிரதேசத்தில் காணப்படும்.
இந்தப் பன்மைத் தன்மையினை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மட்டக்களப்பில் மஹாபாரதம் இங்குள்ள அனைத்து மக்களையும் இணைக்கின்ற ஓர் இதிகாசமாக இருந்து வந்துள்ளது. இருந்து வருகிறது.
இங்கு வாழும் சகல சமூக மக்களிடையேயும் சகல கிராமிய மக்களிடையேயும் மஹாபாரதம் தழுவிய வடமோடி தென் மோடிக் கூத்துக்கள் ஆடப்பட்டுள்ளன,
இறந்தோர் வீடுகளில் 31 நாட்கள் வைகுந்த வனவாசம் ( தருமர் தம்பிமாருடனும் மனைவியுடனும் சென்ற இறுதிப்பயணம்)
படிக்கப்படுகிறது.
திரௌபதி அம்மன் கோவில்கள் பல இடங்களில் உள்ளன.
அங்கு வருடம் தோறும் பாரத அம்மானை படிக்கப்படுகிறது.
இங்குள்ள பலருக்கு மஹாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்களின் பெயர் உள்ளன
இவ்வகையில் அடிகளாரின் கூற்று ஒரு வகையிற் பொருத்தமுடைத்தே
இதனுடன் மட்டக்களப்பில் ஆழமாக வேரோடியுள்ள உள்ள இன்னொரு பண்பாட்டு அம்சம்தான் கண்ணகை அம்மன் வழிபாடும் அதனை ஒட்டிய பண்பாடும்.
இவ்வண்ணம் இன்னும் பல பண்பாட்டு அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது கிழக்கு மாகாணமும் மட்டக்களப்புப் பிரதேசமும்
வைகாசிமாதம் மட்ட்க்களப்பில் கண்ணகைக்கு உரிய மாதமாகும்
.திருக்கோவில்,
பட்டிப்பளை,
கழுவான்சிக்குடி
செட்டிபாளையம் புதுக்குடியிருப்பு,
மட்டக்களப்பு,
வந்தாறுமூலை
கன்னன் குடா
என தெற்கிலிருந்து
வடக்குவரை நீண்டுகிடக்கும் கண்ணகியம்மன் கோவில்கள் இம்மாதத்தில் உயிர்ப்பு பெறும்.
வழக்குரை காதை படித்தல்
,குளுர்த்திப்பாடல் பாடல்
கலியாணக்கால் நடுதல்
முதலான பல்வகைசடங்குகளைக் கொண்டதாகவும்
சில பிரதேசங்களில் வேறுவகையான சடங்கு அம்சங்கள் கொண்டதாகவும் இவை அமைந்திருக்கும்
மேற்குறிப்பிட்ட ஊரில் உள்ள கோவில்களை விட இன்னும் பல சிறு கண்ணைகை அம்மன் கோவில்களும் இங்கு உள்ளன
கண்ணகி வழ்க்குரை
,கண்ணகி குளுர்த்திப்பாடல் என்பன
மட்ட்களப்பில் பயில் நிலையிலுள்ள,கண்ணகி இலக்கியங்களாகும்
கண்ணகை அம்மன் சிங்கள மக்கள் மத்தியில் பத்தினித் தெய்யோ என அழைக்கபடுகிறாள்
கோராவளி கண்ணகி கோவில் விழாவில் மிராவோடையில் வதியும் இஸ்லாமியருக்கும் இடம் உண்டு
இவ்வண்ணம் கண்ணகி விழாக்கள் மூவின மக்களையும் இணைப்பது இங்கு ஓர் முக்கிய அம்சம்
இக்கண்ணகி விழாக்கொண்டாட 2011 இல் ஓர் பொதுக்குழு அமைக்கப்பட்டது.
இதனுடன் பலரும் இணைந்து இக்கண்ணகிவிழாவை வருடம் தோறும் மட்டக்களப்பில் நிகழ்த்தி வருகின்றனர்
இதுவரை இவ்விழா
மட்டக்களப்பு,
.புதுக்குடியிருப்பு
வந்தாறுமூலை
,தம்பிலுவில்,
கன்னன்குடா,
கிரான்,
கழுதாவளை
ஆகிய கிராமங்களில் நடந்தேறியுள்ளது
கிராமங்களை நோக்கி கண்ணகி விழா நகர்ந்த கதை இது
ஒவ்வொரு வருடமும் இதனை நடத்தும் பொறுப்பை ஒவ்வொரு கிராமமும் ஏற்றுக்கொண்டது
2011 இல் ஆரம்பமான இம்முயற்சி இந்த ஆண்டு எட்டு வருடங்களைப் பூர்த்தி செய்துள்ளது
இவ்விழா
ஜனரஞ்சகதன் தனமை கொண்டதாகவும்
காத்திரத்தனமைகொண்டதாகவும் வடிவமைக்கப்படுகின்றது.
கண்ணகி பற்றிய ஆய்வின் கீழ்
சிலப்பதிகாரம்
கோவலன் கதை
சிலம்பு கூறல்
கண்னகி வழக்குரை
கண்ணகி வழிபாடோடு இணைந்த ஏனைய பெண் தெய்வ வழிபாடுகள் சம்பந்தமான ஆய்வுரைகளும்
அறிஞர்களின் சிறப்புச் சொற்பொழிவுகளும்
ஒருபுறம் நடைபெற மறுபுறம்
ஜனரஞ்கமான நிகழ்வுகளும் இடம் பெறும்
இம்முறை தமிழ் நாட்டிலிருந்து பேராசிரியர் தி.சு நடராஜன் சிறப்புச் சொற்பொழிவாற்ற அழைக்கப்பட்டிருந்தார்
ஆண்டுதோறும் முதல் நாள் விழாவில் நடைபெறும் பண்பாட்டுப்பவனி
பாடசாலை மாணவ்ர்களையும் கிராமிய மன்றங்களையும் பொது மக்களையும் அரவணைக்கிறது
விதம் விதமாக அழகான அலங்கார ஊர்திகளோடு சிறுவர்களும் இணைகின்றனர்
கடந்த ஏழு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இவ்விழாவின்செயற்பாட்டுக்குழு செய்த முக்கிய இரண்டு பணிகள் குறிப்பிடத்தக்கன
ஒன்று கண்ணகி வழக்குரை காவியத்தை மறு பதிப்புச் செய்தமை
மற்றொன்று 1940 களில் சதாசிவ ஐயரால் தொகுக்கப்பட்டு பதிப்பிக்கப்பட்ட
மட்டக்களப்பு வசந்தன் பாடல்களையும்
செட்டிபாளையத்திலும் கழுதாவளையிலும் தேற்றததீவிலும் வழக்கிலிருந்து அச்சு வாகனமேறிய சில வசந்தன் பாட்ல்களையும் இணைத்து
மீள்பதிப்பு செய்தமை
இம்முறை விழாவில்தான்
மட்டக்களப்பு வசந்தன் பாடல்கள் நூல் வெளியிடப்பட்டது
வருடம் தோறும் ஆய்வரங்கு இரண்டாம் நாள் நடைபெறும்
இளம் ஆய்வாளர் ஊக்குவிக்கப்படுவர்
இம்முறை ஆய்வரங்கப்பொருள்
கிழக்கிலங்கைப்பண்பாட்டில் பெண் தெய்வங்கள் என்பதாகும்
இந்த எட்டு ஆய்வரங்குகளையும் தலைமைதாங்கி வழிப்படுத்தி தொகுப்புரை செய்யும் பாரிய கடமையை கண்ணகி கலை இலக்கியக் கூடத்தினர் அன்புரிமையோடு என்மீது சுமத்தியுள்ளனர்
அது ஓர் பெரும் சுமைதான்
சுவை தரும் சுமை
இம்முறையும் அது நடை பெற்றது
அந்த அன்புக்கு நான் வருடம்தோறும் கட்டுப்படுகிறேன்
வருடம் தோறும் மட்டக்களப்பின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்களைச் சந்திக்கிறேன்
அவர்கள் அளிக்கும் விருந்துண்டு மகிழ்கிறேன்
அவர்களோடு கலந்துறவாடும் அரிய சந்தர்ப்பம் வாய்க்கிறது
அவர்கள் உளக் கிடக்கைகளை மேலும் அறிகின்றேன்
அவர்கள் துன்ப துயரங்களையும் இன்ப நிகழ்வுகளயும் அறிகிறேன்
நானும் எனது மாணவர்களுடன் ஆற்ற்கைககள் செய்ய்யக் கண்ணகி விழாக்குழுவினர் சந்தர்ப்பம் தருகிறார்கள்
எனது ஆற்றுகை நிகழ்வுகளை மக்கள் காண்கிறார்கள்
அவை பற்றி அபிப்பிராயகளைக் கூறுகிறார்கள்
அது எனக்கு மிகப்பிரயோசனமாக உள்ளது
இவ்வகையில் நாம் எமது அரங்க ஆய்வு கூடத்தால் தயாரித்த
மக்கள் இசை
,காண்டவதகனம்,
தமிழிசை யாத்திரை
என்பன இக் கண்ணகி கலை இலக்கிய விழாக்களில் மேடை கண்டுள்ளன
இம்முறை அரங்க ஆய்வு கூடத்தின் தமிழ் இசை யாத்திரை ஆற்றுகையைக் கிராம மக்கள் கண்டு களித்தனர்
*மௌனகுரு நன்றி முகநூல் 
»»  (மேலும்)

இருபாலின ஒழுங்கமைப்பாக இன்றைய உலகலாவிய சமூகம் கட்டப்படுகிறது

யூத-கிறித்துவ-இஸ்லாமிய மூலக்கதைகளில் உள்ள ஆதாம்-ஏவால் என்கிற தொன்ம அடிப்படையில், ஆண் பெண் என்கிற இருபாலின ஒழுங்கமைப்பாக இன்றைய உலகலாவிய சமூகம் கட்டப்படுகிறது. அதாவது இருமை எதிர்வாக இது கட்டப்பட்டு உள்ளது. இது ஒருவகையான மத விதிமுறைகளின் ஆழ்தள கட்டமைப்பு. உலகின் அனைத்து உடல்களையும் இந்த இரு பாலினத்திற்குள் அடக்க முனைவதால், இந்த எதிர்வை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூக அமைப்பே வரலாற்றுரீதியானது, அங்கீகரிக்கப்பட்டது, இயல்பானது, இயற்கையானது என்ற நிலை உருவாகியுள்ளது. பண்டைய காலங்களில் தன்பால்-புணர்ச்சியாளர்கள் ஒரு பாலினவகையாக அல்லது தனிப்பாலுமையாக இருந்தனர். அவர்களை இன்றைய எதிர்பால்-வேட்கை கொண்ட ஆண்-பெண்-இருமை-எதிர்வு-சமூக அமைப்பிற்குள் ஆணாகவும், பெண்ணாகவும் வகைப்படுத்தி, தன்பால்-புணர்ச்சியை குற்றமாக மாற்றியது நவீன சமூகம். மாற்றுப்பாலியளார்களையும், தனியானதொரு பாலுமை கொண்டவர்களாக இல்லாமல், இருமை-பாலினத்திற்குள் அடக்கவே முனைகிறது.
17-ஆம் நூற்றாண்டிற்கு பிறகான கிறத்துவ-விக்டோரியன் அறமதிப்பீடுகள் வழியாக, பாலியல் சொல்லாடல்கள் கட்டப்படுவதையும், பாலியல் ஒழுங்கமைக்கப்படுவதையும் விவரிக்கிறார் பூக்கோ தனது பாலியல் வரலாறு என்கிற நூலில். 200 ஆண்டுகளுக்கு முன்பாக ”கே” எனப்படும் தன்பால் புணர்ச்சியாளர்கள் என்கிற வகைத்திணையே இல்லை, இரண்டு ஆண்களுக்கு இடையிலான பாலுணர்வை ”சோடமி” என்ற சொல்லால்தான் குறித்தனர். அதன்பின் மருத்துவம் மற்றும் உளவியல் சொல்லாடல்கள் வழியாக கட்டப்பட்டதே ”ஹோமோசெக்சுவாலிட்டி” எனப்படும் தன்பால் புணர்ச்சி என்ற சொல். பிறகு அது சிறிது சிறிதாக குற்ற உணர்வாக கட்டமைக்கப்பட்டு, எதிர்பாலின வேட்கை மட்டுமே இயல்பானதாக வடிவமைக்கபட்டது என்கிறார் பூக்கோ.
மாற்றுப்பாலுணர்வாளர்கள் இந்த இரு-பாலின-அமைப்பிற்குள் விடுதலை வேண்டுபவர்களாகவும், மாறியப்பாலினத்தினர் இந்த இரு-பாலின-அமைப்பிலிருந்து விடுதலை வேண்டுபவர்களாகவும் உள்ளனர். உடல்கள் பாலுமை கொண்டவையாக மாற பாலினமாக்கல் என்பது அவசியப்படுகிறது. பாலின அரசியலை ஆராய்ந்த ஜீதித் படலர் பாலினம் என்பது சொல்லாடல்களான மொழி, இயக்கம், மொழியற்ற பரிமாற்றம், நடத்தை, நிறுவன அமைப்புகள், வழக்கப்படுத்தப்பட்ட செயல்பாடுகள் போன்றவற்றால் கட்டப்பட்டது என்கிறார். பாலுமை என்பது உடலுக்கு கொடுக்கப்பட்டு அதனால் பாலினம் செயற்கையாக உட்செலுத்தப்பட்டு கட்டப்படுவதல்ல மாறாக பொருளியல் ரீதியாக உடல்கள் ஆளப்படுவதற்கான ஒரு கலாச்சார விதி என்று பட்லர் கருதுகிறார். இதனை அவர் தனது நூல்களில் விரிவாக விளக்கிச் செல்கிறார். L’image contient peut-être : 1 personne
பாலினம் என்கிற அறிதல் சட்டகத்தின் கட்டமைப்பினால் கண்டடையப்படும் உடல்சார்ந்த பாலுமையால்தான், பாலியல் சார்ந்த உடல்கள் (sexed bodies) இருப்படைகின்றன. பாலுமையை அறிவதற்கே பாலினம் என்கிற அடிப்படையான அறிதல் தேவைப்படுகிறது. அதாவது ஆண் பெண் என்கிற பாலினம் கட்டமைக்கப்பட்டு, அதை வைத்து பிறக்கும் உடலை ஆண் பெண் என்கிற பாலுமை கொண்ட உடலாக அடையாளப்படுத்தப்படுகிறது. பாலுமைக்கு முன்பாகவே பாலினம் என்பது உருவாகியுள்ளது. பாலுமையை அடையாளப்படுத்துவது பாலினம்தான். அதாவது பாலினம் என்கிற Gender தான் பாலுமை என்கிற Sex ஐ தீர்மாணிக்கிறது. ஒரு குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோ பிறப்பதில்லை. பிறந்தபின் பெண்ணாகவும் ஆணாகவும் சமூகத்தால் பாலினமாக்கப்படுகிறது. அதன் வளர்ப்பில் அப்பாலினம் உணர்வுகளாக, உடலாக வடிவமைகிறது. ஆண் பெண் குறிகளான லிங்கமோ, யோனியோ ஆண் பெண்ணை தீர்மாணிப்பதில்லை. ஆண் பெண் என்கிற கலாச்சாரக் கட்டமைப்பே குறிகளை தீர்மாணிப்பதாக உள்ளது.
- "மோலார் அடையாளங்களும், மூலக்கூறுகளின் உருவாகுதலும் - பாலின அடிமைகள் பற்றிய கதையாடல்" என்ற எனது கட்டுரையிலிருந்து சில பத்திகள். கட்டுரை வலசை இரண்டாவது இதழில் (2012) வெளிவந்தது.

நன்றி முகநூல் 
»»  (மேலும்)

சிங்கப்பூரின் குப்பைத்தொட்டியா இலங்கை?

இலங்கையரசானது அண்மையில் சிங்கப்பூருடன் செய்து கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தமொன்றில் சிங்கப்பூரின் கழிவுகளை இலங்கையில் கொட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை  தெரியவந்துள்ளது.Résultat de recherche d'images pour "hopital poubel"


இவ்வாண்டு ஜனவரி மாதம் 23 ஆம் திகதி இருநாடுகளுக்கிடையில் கைச்சாத்தான இவ்வொப்பந்தத்தில் பெயரில் 3500 பொருட்களுக்கான இறக்குமதி வரிச்சலுகை அமுலுக்கு வந்துள்ளது. இதனடிப்படையில்  கிராமிய சிறுகைத்தொழில், விவசாயம்,மீன்பிடி போன்றவற்றை  நம்பி வாழும் ஏழை மக்கள் தமது ஜீவனோபாயத்தை  இழக்கவேண்டிய நிலைக்கு  விரைவில் தள்ளப்படவுள்ளனர்.

அதுமட்டுமன்றி பல்வேறுவிதமான குப்பைகளும் இவ்வரி விலக்கு பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அதனடிப்படையில்   சிங்கப்பூரின் பல்வேறு விதமான கழிவுப்பொருட்களும் இலங்கையை நோக்கி வந்து குவியப்போகின்றன. நகர சுத்தி கழிவுகள்,இரசாயன கழிவுகள்,வைத்தியசாலைகழிவுகள்,மனித பிணங்கள்,மற்றும் அணுஆலைகளின் கழிவுகள்,என பல்வேறு விதமான கழிவுகளை கொட்டும் இடமாக இலங்கையை சிங்கப்பூர் பயன்படுத்தவுள்ளது.

»»  (மேலும்)

9/09/2018

மக்களின் பணத்தில் 8 மில்லியனுக்கு ஆடம்பர வாகனம் தேவையில்லை. ரி.எம்.வி.பி. மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் காந்தராஜா

மட்டக்களப்பு மாநகரசபையில் பொதுமக்களின் தேவை கருதியே செலவுகளை மேற்கொள்ள வேண்டும். அநாவசியமான ஆடம்பர செலவுகளுக்கு மக்களின் பணங்களை வீண்விரயம் செய்வதை ஏற்க முடியாது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபைக்கான உறுப்பினர் கே. காந்தராஜா தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாநகர சபைக்கு சொகுசு வாகனமொன்றை கொள்வணவு செய்வது தொடர்பான விடயம் குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை 09.09.2018 ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டார்.


இந்த விவகாரம் குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், மட்டக்கப்பு மாநகரசபையின் 9வது  அமர்வு கடந்த 06.09.2018 அன்று நடைபெற்றபோது மாநகர முதல்வரினால் சொகுசு வாகனமொன்றைக் கொள்வனவு செய்வது தொடர்பாக கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு தான் தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் மட்டக்களப்பு மாநகர உட்பட எந்தவொரு உள்ளுராட்சி மன்றங்களும் பொதுமக்களின் வரிப்பணத்திலேயே இயங்குகின்றன.
அவ்வாறிருக்கும்போது பொதுமக்களின் வரிப்பணத்தை அநாவசியச் செலவுகள் செய்வதற்கு அனுமதிக்க முடியாது.
பொதுமக்களின் வரிப்பணத்தைக் கொண்டு சொகுசு வாகனம் வாங்கி அதில் பயணம் செய்து சொகுசு அனுபவிப்பதை விட பொதுமக்களி;ன் அந்த வரிப் பணத்தைக் கொண்டு மீளவும் பொதுமக்களின் தேவைகளையே பூர்த்தி செய்தால் சிறப்பாக இருக்கும்.
அதுதான் சரியானதும் கூட.
பொதுமக்களுக்கு நிறைவேற்றிக் கொடுக்க வேண்டிய  பல அத்தியாவசிய சேவைகள் கிடப்பில் இருக்கும்போது  இவ்வாறு சிந்திப்பது அநியாயமானது.
உதாரணமாக மட்டக்களப்பு மாநகர சபையில் கழிவகற்ற தேவையான போதியளவு வாகனங்கள் இன்மை காணப்படுகின்றது.
இதனால் பல கிராமங்களில் குறித்த நாட்களுக்குள் குப்பைகளையும், கழிவுகளையும் அகற்ற முடியாமல்  உள்ளதால் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
எனவே சொகுசு வாகனம் வாங்குவதற்காக சுமார் எட்டு மில்லியன் ரூபா அளவில் பணம் செவவு செய்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
எமது மாநகர சபையின் முதல்வர், மற்றும் ஆணையாளர்கள் பயணம் செய்வதற்கு என இரண்டு வாகனங்கள் உள்ளபோது இன்னுமொரு வாகனம் வாங்கவேண்டிய அவசியம் இல்லவே இல்லை.

பொதுமக்களின் வரிப்பணத்தில் கழிவகற்றலுக்காக பயன்படுத்தக்கூடிய நவீனரக வாகனங்களை கொள்வனவு செய்வதன் மூலம் மட்டக்களப்பு  மாநகர மக்களின் பல தேவைகளை இலகுவாக பூர்த்திசெய்ய முடியும்.

எனவே ரூபா எட்டு மில்லியன் அளவில் செலவு செய்து வாங்கும் வாகனக் கொள்வனவுத் திட்டத்தை தான் முற்றாக எதிர்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேற்படி வாகனத்திற்கு இறக்குமதி  வரிச் செலவு மாத்திமே மாநகரசபை செலுத்தவுள்ளதாகவும் வாகனம் வௌிநாட்டு நிறுவனம் ஒன்று வழங்கவுள்ளதாகவும் மாநகரசபை தகவல்கள் தெரிவித்துள்ளன.
»»  (மேலும்)