8/07/2020

மட்டக்களப்பு மாவட்டம் தேர்தல் முடிவுகள்

மட்டக்களப்பு மாவட்டம்  தேர்தல் முடிவுகள் 


 
பெயர் சதவீதம் % வாக்குகள்
இலங்கை தமிழரசு கட்சி
26.66%
79460
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
22.71%
67692
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
11.55%
34428
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன
11.22%
33424
»»  (மேலும்)

வெற்றி செய்தியை தொடர்ந்து நாளை விசேட கூட்டம்

தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் வெற்றி செய்தியை தொடர்ந்து நாளை விசேட கூட்டம் Complicit in Crime: State Collusion in Abductions and Child ...
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் விசேட கூட்டம் நாளை (07.08.2020)காலை 9.00 மணியளவில் கட்சியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது
கட்சியின் தலைவர் பணிக்குழு, செயற்குழு, பொதுச் சபை ,மற்றும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் பிரதேச அமைப்பாளர்கள் ஆதரவாளர்கள் தொண்டர்கள் என அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றாம்
»»  (மேலும்)

8/06/2020

இலங்கையின் நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பு முடிவடைந்தது - வன்முறைகள் அற்ற தேர்தலாக பதிவு

இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்றத் தேர்தலின் வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. இலங்கை தேர்தல்

இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த வாக்களிப்பு நடவடிக்கைகள் நடைபெற்றிருந்தன.

நாடு முழுவதும் 12 ஆயிரத்து 985 வாக்களிப்பு நிலையங்களில் இன்றைய தினம் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன.

இலங்கையின் 22 தேர்தல் மாவட்டங்களில் 20 அரசியல் கட்சிகள் மற்றும் 34 சுயாதீன குழுக்கள் இந்த முறை தேர்தலில் போட்டியிடுகின்றன.

இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலுக்காக 7452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

2019ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம், ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

196 மக்கள் பிரதிநிதிகள் இந்த தேர்தலின் ஊடாக தெரிவு செய்யப்படவுள்ளதுடன், எஞ்சிய 29 வேட்பாளர்கள் தேசிய பட்டியலில் ஊடாக தெரிவாகவுள்ளனர்.

»»  (மேலும்)

லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிப்பு:

 

லெபனான் மீட்பு பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை பெய்ரூட் துறைமுகம் அருகே நடந்த வெடிப்பில் காணாமல் போன நூற்றுக்கணக்கான மக்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.ஹெலிகாப்டரை கொண்டு தீ அணைக்கப்படுகிறது

இந்த வெடிப்பில் குறைந்தது 100 பேர் பலியாகி உள்ளனர்; 4 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர்.

அந்த வெடிப்பின் பெய்ரூட் நகரமே குலுங்கியது. காளான் கொடை வடிவத்தில் புகை மேலே எழுந்தது.

கிடங்கில் உரிய பாதுகாப்பு இல்லாமல் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டின் காரணமாகவே இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறுகிறார் அந்நாட்டு அதிபர் மைக்கேல் ஆன்.

விவசாயத்தில் உரம் தயாரிக்கவும், வெடி மருந்து தயாரிக்கவுமே அமோனியம் நைட்ரேட் பயன்படுகிறது.

»»  (மேலும்)

8/05/2020

கிழக்கு மாகாணத்துக்கான தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடம்,

கிழக்கு மாகாணத்துக்கான தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடம், மட்டக்களப்பு,திராய்மடு பிரதேசத்தில் இன்று (01) திறந்து வைக்கப்பட்டது.
கம நல அபிவிருத்தித் திணைக்கள ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.எம்.பி.வீரசேகர அதிதியாகக் கலந்துகொண்டு ஆய்வூகூடத்தைத் திறந்து வைத்தார்.
இத்திட்டத்துக்காக கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் சுமார் 3.5 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கப்பட்டு  திராய்மடு பிரதேசத்தில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் இப்புதிய ஆய்வுகூடம் அமைக்கப்பட்டுள்ளது.
இவ் ஆய்வு கூடம் இப்பிராந்திய விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையுமென கமநல அபிவிருத்தித் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் கே. ஜெகநாத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படும் நிர்மாணங்களின் மூலப்பொருள்களான கல் மண் சீமெந்து கொங்ரீட் போன்றவற்றின் தரம் விவசாய நிலம் உட்பட ஏனைய நிலங்களின் மணலினையும் ஆய்வு செய்து அறிக்கையிடும் நிர்மாண தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடமாக இந்த ஆய்வுகூடம் அமைகின்றது.
»»  (மேலும்)

நாளை நண்பகல் முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகும்

பொதுத் தேர்தலில் முதலாவது பெறுபேற்றை நாளை(06) பிற்பகல் 2.30 மணியளவில் வெளியிட முடியும் என எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
முழுமையான தேர்தல் பெறுபேறுகளை 07ஆம் திகதிக்குள் வெளியிட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.Should I Visit Sri Lanka Now | Our Stories

இதேவேளைஇ தபால் மூல வாக்களிப்பின் தொகுதி மட்டத்திலான முதலாவது உத்தியோகபூர்வ பெறுபேற்றை நாளை நண்பகல் 12.00 மணிக்கு பின்னர் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.»»  (மேலும்)

8/04/2020

கிழக்கின் மாவீரர்களை கெளரவித்த பிள்ளையானின் நெஞ்சுரம்

முதலமைச்சராக பிள்ளையான் இருந்தபோது உருவாக்கிய மூன்று கலாசார மண்டபங்கள் எமது மக்களின் மங்களகரமான நிகழ்வுகளுக்கு  முக்கியமான பங்களிப்பை செய்து வருகின்றன. வாழைச்சேனையில் குகனேசன் கலாசார மண்டபம், கிரானில் ரெஜி கலாசார மண்டபமும்,ஆரயம்பதியில் நந்தகோபன் கலாசார மண்டபமும் ஆக மூன்று கிழக்கின் மாவீரர்களின் பெயரில்  இந்த மண்டபங்களை கட்டினார் பிள்ளாயான் அவர்கள்.

»»  (மேலும்)

தென்னிலங்கை பேரினவாத கட்சிகளையும் தேறாத யாழ்ப்பாண கட்சிகளையும் நிராகரிப்போம் -- கிழக்கிலங்கை உயர்கல்வி மாணவர் ஒன்றியம்

தமிழ் கட்சிகளை பொறுத்தவரையில் இருபது ,முப்பது ஆயிரம் வாக்குகள்   பத்தாயிரமாகவும் ஐயாயிரமாகவும் நாலாயிரமாகவும் மற்றும் சில்லறைகளாகவும் தென்னிலங்கை தேசிய  பேரினவாத கட்சிகளுக்கும் தேறாத யாழ்ப்பாண கட்சிகளுக்கும் வழங்கப்பட்டு  வீணடிக்கப்படும். LIVE BLOG : Parliament today

 அவை போக எஞ்சியுள்ள  ஒன்றரை லட்ஷம்  வாக்குகளே பெறுமதி மிக்கதாக மாறும். இத்தொகையானது  சம அளவில் வெற்றிவாய்ப்பை தட்டிச்செல்லக்கூடிய முன்னணியிலுள்ள இரு கட்சிகளுக்கும் கிடைக்கும். அதாவது இம்முறை தமிழ் தேசிய கூட்டமைப்பு 60,000-80,000 வாக்குகளையும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் 60,000- 80,000 வாக்குகளையும் பெற்றுக்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

கடந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்தவாக்குகள் 88,557 ஆகும். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் எடுத்த வாக்குகள் 42,407 ஆகும். இதனடிப்படையில் தற்போதைய நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்கொள்ளும் பாரிய சரிவையும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கண்டுவரும் வளர்ச்சியையும் கவனத்தில் கொள்ளும்போது இவ்விரு கட்சிகளும் ஒரு சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முதலாம் இரண்டாம் இடங்களை பெறுமென பரவலாக நம்பப்படுகின்றது. 
.
»»  (மேலும்)

8/01/2020

பெண்களுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் முன்வைப்பு

இம்முறை நாடாளுமன்றத்துக்குச் செல்லும் பெண்களுக்குஇ பெண்களின் உரிமைகள் தேவைகளை மய்யப்படுத்திய  விஞ்ஞாபனத்தை தமது அமைப்புத் தயாரித்துக் கையளித்து வருவதாக  கிழக்கு மாகாண பெண்கள் வலையமைப்பின் அனர்த்த முகாமைத்துவப் பெண்கள் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கியுள்ள பெண் வேட்பாளர்களிடம் கையளித்துள்ள அந்த விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது  “தேர்தல் வாக்காளர்களில் அரைப்பங்கிற்கும் அதிகமாக உள்ள பெண்களாகிய நாம் உங்களுக்குக் கூறுவது பெண்களதும் ஓரங்கட்டப்பட்ட மக்களதும் உரிமைகளை உறுதிப்படுத்த முதன்மைப்படுததப்பட்ட அக்கறை தேவையாகவுள்ளது.

“அந்தவகையில் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையில் 61 சதவீதமான மக்கள் கடனாளிகளாகவே உள்ளார்கள். மொத்த தொழிற்றுறையில் 58 சதவீதமான் மக்கள் முறைசாரா துறையிலேயே உள்ளார்கள்.  கொரோனாவால் ஏற்பட்ட நெருக்கடியின் விளைவாக 30 சதவீதமான குடும்பங்கள் தாங்கள் உட்கொள்ளும் உணவின் அளவைக் குறைத்துள்ளனர்.

“பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுக்கொண்டுள்ளன. இவ்வாண்டு ஜனவரி தொடக்கம் ஜுன் வரையான காலப்பகுதியில் மட்டக்களப்பில் உள்ள ஒரு பெண்கள் அமைப்புக்கு மாத்திரம் பெண்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள் 96 அறிக்கையிடப்பட்டுள்ளன. இதில் 87 சம்பவங்கள் வீட்டு வன்முறைகளாகும்.
 

“மேற்படி பின்னணியிலே நாம் அரசியல் அரசமைப்பு  சட்ட நடைமுறை உட்பட குடும்பம் கல்வி சுகாதாரம் ஆகிய அனைத்துத் தளங்களிலும் பெண்கள் உரிமைகளை அனுபவிப்பதையும் அவர்களின் சமத்துவத்தையும உறுதிசெய்தல் வேண்டும“ என்பதை வலியுத்துகின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

»»  (மேலும்)

எம்.எஸ். செல்லசாமி காலமானார்.

 இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளரும்  முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எஸ். செல்லசாமி 95ஆவது வயதில் இன்று (1) கொழும்பில்  காலமானார்.
»»  (மேலும்)

இன்று முதல் தொடங்கியது அந்த பொற்காலம்- கிண்ணையடி துறைக்கு 'பாதை' போக்குவரத்து

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட கிண்ணையடித்துறைக்கு இதுவரை பாதையொன்று இல்லாமல் அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர். இரு தோணிகளை ஒருமித்து கட்டியே இதுவரைகாலமும் அந்த துறையூடாக மக்கள் பயணித்து வந்தனர். இன்று முதல் கிண்ணையடித்துறைக்கு 'பாதை'போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இத்தொடக்கவிழாவுக்காக ஒலிபெருக்கிகள் பூட்டி விழாக்கோலம் பூண்டு காணப்படுகின்றது கிண்ணையடி துறை.

முருக்கன்தீவு பிரம்படித்தீவு,சாராவெளி போன்ற பிரதேச விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் பெரும் வரப்பிரசாதமாக இந்த பாதை போக்குவரத்து இருக்குமெனவும்  சிறையிலிருக்கும் முன்னாள் முதல்வர் சந்திரகாந்தனின் பொற்காலம் மீண்டும் தொடங்கிவிட்டதெனவும் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர்.
»»  (மேலும்)

அதனால்தான் பிள்ளையானை ஆதரிக்க வேண்டும்

யுத்தம் அப்போதுதான் முடிந்திருந்தது.  முப்பது வருட காலமாக எதிர்காலம் பற்றிய எவ்வித திட்டமிடலும் முன்னேற்றமும் இன்றி இயங்கி கொண்டிருந்த கல்வி வலையங்கள் சம்பந்தமாக புதிய அலகுகள் அவசியமாயிருந்தன. குறிப்பாக படுவான்கரை போன்ற பிற்படுத்தப்பட்ட பிரதேசங்களும் நகரை அண்டிய வளர்ச்சியடைந்த பிரதேசங்களும் இணைந்து காணப்பட்ட கல்வி வலையங்களில் மாற்றம் அவசியமாயிருந்தது. அதாவது பிற்படுத்தப்பட்ட பிரதேச பாடசாலைகளின் தராதரங்களை பிரித்தறிந்து  அதற்கேற்ற திட்டமிடலை மேற்கொள்ள முடியாத நிலைஇருந்தது. எனவே அவசியமான இரண்டு புதிய கல்வி வலையங்கள் உருவாக்கப்பட்டன.மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் ...

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் இருந்து  27 பாடசாலைகளும் , பட்டிருப்பு கல்வி வலயத்தில் இருந்து  18 பாடசாலைகளும் , மட்டக்களப்பு மத்தி வலயத்தில் இருந்து  11 பாடசாலைகளையும் கல்குடா கல்வி வலயத்தில் இருந்து   7 பாடசாலைகளையும் இணைத்து 63 பாடசாலைகள் உள்ளடக்கிய வகையில் புதிய கல்வி வலையமான  "வவுணதீவு கல்வி வலையம்" உருவாக்கப்பட்டது..அதேபோன்று அக்கரைப்பற்று கல்வி வலையத்திலிருந்து பிரித்து திருக்கோவில் பிரதேசத்தை கருத்தில் கொண்டு புதியதொரு கல்வி வலையமும் உருவாக்கப்பட்டது.. இப்புதிய வலயங்களினை உருவாக்கியமை  பிற்படுத்தப்பட்ட   பிரதேசங்களின் கல்வி வரலாற்றில் பெரும் வரபிரசாதமாகும்.  

கிழக்கு மாகாணமெங்கும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலைகள் தரம் உயர்த்தப்பட்டதுடன் மேலும் பல பாடசாலைகள் விஞ்ஞானகூட தொழினுட்ப வசதிகள் சார்ந்து அபிவிருத்தி செய்யப்பட்டன. அத்துடன் தொழினுட்ப அறிவை மாணவர்களிடையே விருத்தி செய்யும் நோக்குடன் 1260 கணணிகளும்,218 பிரின்டர்களும் வழங்கப்பட்டன.  
»»  (மேலும்)

7/30/2020

வெளியானது மற்றுமோர் கருத்து கணிப்பு -- பலத்த போட்டி - மட்டக்களப்பில்

மட்டக்களப்பின் தேர்தல் களநிலை சம்பந்தமாக கிழக்கிலங்கை உயர் கல்வி மாணவர் ஒன்றியம் சார்பில் ஒரு கையேடு வெளியாகியுள்ளது. 

இக்கையேட்டில் தமிழர் வாக்களிப்பு  வீதம் குறைந்து செல்வதன் காரணமாக தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டுவருவதாகவும் அதன் காரணமாக தமிழர்களின் அரசியல் அதிகாரம் கேள்விக்குட்படுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதனால் வாக்களிப்பு வீதத்தை அதிகரிக்குமாறும் அரசியல் அதிகாரம் சம்பந்தமாக விழிப்புறுமாறும் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர் இம்மாணவர் ஒன்றியத்தினர். 

அத்தோடு எதிர்வரும் தேர்தலில் அளிக்கப்படப்போகும் வாக்களிப்பு நிலைமை குறித்த கருத்துக்கணிப்பு பார்வையொன்றையும் வெளியிட்டுள்ளனர். அதில்  தமிழ் தேசிய கூட்டமைப்பு-தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி  என்பவற்றுக்கிடையே பலத்த போட்டி நிலவுவதாகவும் இவ்விரு கட்சிகளும் தலா 72000 வாக்குகளை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே இவ்விரு கட்சிகளையும் தவிர  தென்னிலங்கை தேசிய கட்சிகளுக்கும் தேறாத யாழ்ப்பாண கட்சிகளுக்கும் வாக்களிப்பது வீணானதாகும் எனவும் எச்சரித்துள்ளனர் கிழக்கிலங்கை உயர் கல்வி மாணவர் ஒன்றியத்தினர்.

இவ்விடயங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக மாவட்டம்  எங்கும்  மக்கள் கூடும் இடங்களில் கிழக்கிலங்கை உயர் கல்வி மாணவர் ஒன்றிய உறுப்பினர்கள்   'வீதி நாடகங்களை'  அரங்கேற்றி வருகின்றனர். 
»»  (மேலும்)

7/29/2020

பிள்ளையான் களுதாவளைக்கு செய்த சேவைகள்

அன்று முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் களுதாவளைக்கு செய்த சேவைகளில்  நாம் நன்றியுடன் நினைவு கூர வேண்டியவை 

1.விச்சுக்காலை விவசாயிகளுக்கான மின்சார இணைப்பு கொடுத்ததன் ஊடாக களுதாவளையின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணை வழங்கியமை.

2.தமிழ் தேசிய கூட்டமைப்பு செல்வராசா எம்பியின் சதியை முறியடித்து களுதாவளை மகாவித்தியாலயத்தை ஆயிரம் பாடசாலை திட்டத்தில் உள்வாங்கியமை.

3.களுதாவளை கிராமத்தின் அநேகமான உள்வீதிகளை கொங்கிரிட் வீதிகளாக அபிவிருத்தி செய்தமை.

4.மஹிந்தோதய திட்டத்தின் கீழ் களுதாவளை மகாவித்தியாலயத்தில்  விஞ்ஞான ஆய்வு கூடத்தை நிறுவியமை.

5.களுதாவளை பிள்ளையார் ஆலய கலாசார மண்டப கட்டிட நிதியில் ஒரு பகுதியை வழங்கி பூர்த்தி செய்ய உதவியமை.

6.மற்றும் ஸ்ரீ முருகன் ஆலயம், முத்துமாரியம்மன் ஆலயம், E D S கல்வி நிறுவனம் போன்றவற்றின் வளர்ச்சிக்கு பங்களித்தமை.

7.மீனவர் சங்கங்கள்,R D S அமைப்புக்கள்,பெண்கள் அமைப்புக்கள்,சன சமூக நிலையங்கள்  போன்றவற்றுக்கு செய்த பலவித உதவிகள்.

8.நீண்ட காலமாக நிலுவையிலிருந்த விவசாயிகளின்  இலங்கை வங்கி கடன்களை ரத்து செய்து ஏழை விவசாயிகளை கடன் தொல்லையிலிருந்து மீட்டெடுத்தமை.

9,களுதாவளை மகா  வித்தியாலயத்துக்கு சிறந்த அதிபர் ஒருவர் இல்லாத நீண்டகால குறையை தீர்த்துவைத்தமை
»»  (மேலும்)

7/28/2020

மட்டக்களப்பில் பிள்ளையான் அபார வெற்றி பெறுவார் வெளியாகியது கி.ப.மா ஒ. கருத்து கணிப்பு

கிழக்கு பல்கலைக்கழகங்கள் பழைய மாணவர் ஒன்றியம் என்னும் அமைப்பானது எதிர்வரும் தேர்தல் குறித்த கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தை அடிப்படையாக கொண்டு 'பாராளுமன்ற தேர்தலில் தமிழர் பிரதிநிதித்துவம்' என்னும் பொருட்பட இக்கையேடு தொகுக்கப்பட்டுள்ளது. Eastern University of Sri Lanka - Free-Apply.com

 இக்கையேட்டில் இன்றைய விகிதாசார பிரதிநிதித்துவம், உறுப்பினர்கள் தேர்வாகும் முறைமைகள், பெண் பிரதிநிதித்துவங்கள், மற்றும் வாக்களிப்பு விகிதங்கள், போன்றவை பற்றிய விளக்கங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை இணக்க அரசியல், இனப்பிரச்சினைக்கான தீர்வு, சர்வதேச ஆதரவு, போன்ற அரசியல் கருத்தாக்கங்கள் குறித்த மக்களின் பார்வைகளும்  இவற்றின்பால் மக்கள் கொண்டுள்ள விருப்பு வெறுப்புக்கள் போன்றவை இத்தேர்தலில் செலுத்தப்போகும் தாக்கங்கள் பற்றிய கருத்துக்களும் பதிவாகியுள்ளன. 

அதேவேளை குறித்த கட்சிகள்  சார்ந்து  எத்தனை சத வீதமான மக்கள் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர் என்பது பற்றிய கருத்துக்கணிப்புக்களும் இக்கையேட்டில் பதிவாகியுள்ளது. 

அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை ஆதரிப்பதற்கு 51 வீதமானவர்கள் விருப்பம் கொண்டுள்ளதாகவும் ஆனால் தமிழ் தேசியகூட்டமைப்பை ஆதரிக்க 32வீதமானவர்கள் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றும் 
இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டிடப்பட்டுள்ளது.

இக்கையேட்டின் தயாரிப்பில் பேராசிரியர், மற்றும் விரிவுரையாளர்களான   தணிகைசீலன், சிவகுமாரன், செந்தில் நாதன், சிந்துயா, கிசாந்தி, திவ்யா மிகிரங்கணி, மற்றும் சீவரத்தினம் போன்றோர் பங்கெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)