4/23/2020

பிள்ளையானின் கண்டிப்பான ஒழுக்கக்கோவை.. நீக்கப்பட்ட மண்முனை வடக்கு அமைப்பாளர்தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மண்முனை வடக்கு பிரதேச அமைப்பாளர் பொறுப்பிலிருந்து சி.சிவராஜ்(சுமன்) தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த 12.04.2020ம் திகதி வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குரிய பேரூந்தில் 28 மதுபானப் போத்தல்கள் கொண்டுவந்த குற்றச்சாட்டின் பேரில் நால்வர் கைதுசெய்யப்பட்டதாகவும் இதில் 04வது நபராக குற்றஞ்சாட்டப்பட்டதாக மண்முனை வடக்கு பிரதேச அமைப்பாளர் சிவராஜ் (சுமன்)கைது செய்யப்பட்டமை அறியப்பட்டதற்கிணங்க இவருக்கெதிராக ஒழுக்காற்று விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதற்காக கட்சியின் பிரதித்தலைவர் க.யோகவேள் தலைமையில் ஒமுக்காற்றுக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அக்குழுவின் விசாரணைகள் வெளியிடப்படும் வரை பிரதேச அமைப்பாளர் மற்றும் கட்சியின் அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
»»  (மேலும்)

4/10/2020

வெருகல் படுகொலை 16வது ஆண்டு நினைவு தினம்

வெருகல் படுகொலையின் 16வது ஆண்டு நினைவு தினம் அமைதியாக வீடுகளில் இருந்து அனுஷ்டிக்கப்படுகிறது

2004ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை  புலிகளின் அனைத்துவித துறைசார் கட்டமைப்புகளிலிருந்தும் கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்பட்டமையால் போரின் முதுகெலும்பாக இருந்த கிழக்கு போராளிகளுக்குள் அதிருப்திகள் தலை தூக்கின. 

இதன்காரணமாக கிழக்கு மாகாணத்தின் அனைத்துவிதமான முகாம்களிலுமிருந்த  சுமார் 6000 கிழக்கு போராளிகள் அவ்வமைப்பில்  இருந்து பிரிந்து நின்றனர். 

அவர்களது அதிருப்திகளையோ கருத்துக்களையோ செவிமடுக்க மறுத்த தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை துரோகிகள் என பிரகடனம் செய்து அவர்கள் மீது யுத்தம் தொடுக்க உத்தரவிட்டார்.

அவ்வேளையில் அரச படைகளுடன் தமிழீழ விடுதலை புலிகள் யுத்த நிறுத்தம் செய்து பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றுக்கொண்டிருந்தமையால்  அந்த பேச்சுகளுக்கு மத்தியஸ்தம் வகித்த நோர்வே தலைமையிலான யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுக்கள் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் கடமையில் ஈடுபட்டிருந்தன. 

அதன்காரணமாக படைகளை நகர்த்துவதோ,  ஆயுதங்களை இடம்மாற்றுவதோ, எடுத்து செல்வதோ அரச-புலிகள்      இருதரப்பினருக்கும் தடை செய்யப்பட்ட ஒன்றாகவிருந்தது. 

ஆனால் அந்த சமாதான காலத்தில்  யுத்தநிறுத்த மீறல்களை செய்து  வன்னியிலிருந்து வடக்கு புலிகள் ஓமந்தை சோதனை சாவடிகளை தாண்டி வெருகலாற்றங்கரையில் தரையிறக்கப்பட்டனர். 

*இது எப்படி சாத்தியம்?

*பலநூறு புலிகளை ஓமந்தையை தாண்டி ஐந்து பஸ்கள் நிறைய 
 ஆயுதங்களுடன்    150கிலோ மீற்றர்கள் பயணித்து வெருகல் வரை 
 செல்ல  அனுமதி வழங்கியவர்கள் யார்? 

*அந்த பேரம்பேசலில் அன்றைய ஜனாதிபதி 
 சந்திரிகாவுடன்   புலிகளுக்காக தமிழ் செல்வனின் ரகசிய 
 செய்திகளுடன்  பேரம்பேசலில் ஈடுபட்ட தமிழ் தலைவர் யார்?  


*வெருகல் தாக்குதல் இடம்பெறுவதற்கு முதல் நாளே ஏன்
 நோர்வே  தலைமையிலான  சமாதான செயலகம் கிழக்கு 
 மாகாணத்திலுள்ள அலுவலகங்களை தற்காலிகமாக மூடிவிட்டு சென்றனர்? 

*இது  சமாதானம் பேச  வந்த மேற்கத்தேய  
  மத்தியஸ்தர்களின்  படுகொலைக்கு உடந்தைனான 
 செயற்பாடு  இல்லையா?

*இதனை சர்வதேசத்தின் எந்தமனிதாபிமான  தார்மீக செயலில் 
  அடக்க  முடியும்?

எனவேதான் நோர்வே-இலங்கையரசு  ஆதரவுடனேயே புலிகள் வெருகல் படுகொலையை நிகழ்த்தினர் என்பது புலனாகின்றதல்லவா? 

சகோதர யுத்தத்தை ஊக்குவித்து புலிகளின் பலத்தை சரிபாதியாக குறைப்பதில் அவர்கள் போட்ட  கணக்கு வென்றது.

இதனால் சுமார் 210 கிழக்கு புலிகள் கொன்றொழிக்கப்பட்டனர். சரணடைந்த பெண் போராளிகள் வன்னிப்புலிகளால் மானபங்கப்படுத்தப்பட்டு சீரழிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். அவர்களது உடலங்களை அடக்கம் செய்யக்கூடாதென்று வன்னிபுலிகள் கட்டளையிட்டு  அக்கிராம மக்களை துரத்தியடித்தனர். இதன்காரணமாக அப்போராளிகளின் உடல்கள்  நாய்களும் நரிகளும் தின்ற மிச்சங்களாக    வெயிலில் வெம்பி வெடித்து காய்ந்து கருகி கிடந்தன. நாலைந்து நாட்களின் பின்னர் திரும்பிவந்த ஊரவர்கள்  இராணுவத்திடம் உதவி கோரி அவ்வுடலங்களை ஆங்காங்கே பத்தும் பதினைந்தும் இருபதுமாக புதைத்தனர்.  

*ஆனால் யுத்தத்தில் நடந்த மனிதஉரிமை மீறலுக்காக 
 குரல்கொடுக்கின்ற  ஜெனிவா கோமாளிகள் ஒருபோதும்  
 இந்த வெருகல்  படுகொலை குறித்து வாய்திறப்பதேயில்லை ஏன்?

*அந்த கிழக்கு போராளிகள் தமிழர்கள் இல்லையா? 

*யார் இவர்களுக்காக இதுவரை நீதி கோரியிருக்கின்றனர்?

*ஆனால் இந்த அகோரமான வெருகல் படுகொலையை 
 நடத்தியவர்களுக்கு  காலம் தீர்ப்பளித்தது.
ஆம் வெருகல் படுகொலையை நிகழ்த்திய அன்றே வெள்ளாம் முள்ளிவாய்க்காலின் இறுதி நாள் தீர்மானிக்கப்பட்டுவிட்டது.


எழுகதிரோன் 
»»  (மேலும்)

3/25/2020

ஆயிரமாயிரம் குழந்தைப் போராளிகளின் மனசாட்சியாக சந்திரகாந்தன் செய்யப்பட்டார்


கிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டபோது யுத்தம் முழுமையாக முடிந்திருக்க வில்லை.கிழக்கு மாகாணத்தில் மட்டுமே அப்போதுதான் யுத்தம் ஓய்ந்திருந்தது.எனவே சுமார் முப்பது வருட யுத்த வடுக்களுடன் கல்வித்துறை சீரழிந்து கிடந்தது.  கிராமப்புற பாடசாலைகளில் பல ஒற்றை ஆசிரியர்களுடனேயே இயங்கிக்கொண்டிருந்தன. குறிப்பாக வெருகல், பட்டிபளை,வாகரை, வெல்லாவெளி,வவுணதீவு,திருக்கோவில் போன்ற பிரதேச பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை தலைவிரித்தாடியது. அதிலும் கணித விஞ்ஞான ஆங்கில ஆசிரியர்கள் மிகவும் அரிதாகவே இருந்தனர். யுத்தகால இடப்பெயர்வுகள் காரணமாக வாகரை,கதிரவெளி புணானை,கரடியனாறு போன்ற எல்லைகிராமங்களில் காணப்பட்ட பல  பாடசாலைகள்ஆசிரியர் பற்றாக்குறை என்பதற்கு அப்பால் போதிய மாணவர்களின் வரவு இன்றி இன்றோ நாளையோ மூடப்படும் நிலையில் இருந்தன.

அதேவேளை பல நகர்புற பாடசாலைகளில் தேவைக்கும் மேலதிக ஆசிரியர்கள் காணப்பட்டனர்.யுத்தகால வன்முறை சூழலையும் சோதனை சாவடிகள்,தடுப்புகள்,கைதுகள் போன்றவைற்றையும் காரணமாக கொண்டு பல ஆசிரியர்கள் தத்தமது பிரதேசங்களை அண்டிய பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுக்கொண்டு சென்றிருந்தனர். இதற்கு பல அமைச்சர்களின் சிபார்சுகள் வாய்ப்பளித்திருந்தன. குறிப்பாக கல்முனை,மட்டக்களப்பு -மத்தி போன்ற கல்வி வலையங்களின் பாடசாலைகளில் தேவையற்ற நிலையில் பல ஆசிரியர்கள் மேலதிகமாக காணப்பட்டனர்.

இந்த நிலையில் மாற்றம்கொண்டுவர வேண்டியதன் அவசியம் முதலமைச்சரால் உணரப்பட்டது. கிழக்குமக்களின் கல்வியை வளர்த்தெடுப்பதே எமதுமக்களின் அடிமைத்தனங்களை அழித்தொழிக்க சரியான வழி என்பதில் முதல்வர்  திடமான நம்பிக்கை கொண்டிருந்தார்.  கிடைத்த சந்தர்ப்பங்களை முழுமையாக பயன்படுத்த உறுதி பூண்டார்.

பதின்மூன்றாவது சட்டத்திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பட்டியல் நீளமாக இருப்பினும் அவற்றில் உண்மையிலேயே தடையின்றி கையகப்படுத்தக்கூடிய அதிகாரங்கள் மிக சிலவாகவே இருந்தன. மாகாண சபைகள் சுதந்திரமாக செயல்படுவதை விரும்பாத   மத்திய அரசு, ஆளுனர் போன்றோரின் இரும்பு பிடிகள் மலையாக எழுந்து நின்றன. மறுபுறம் பல்வேறு கட்சிகளை சேர்ந்த தமிழ் ,முஸ்லிம்,சிங்கள இனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் சக அமைச்சர்கள் போன்ற பலதரப்பட்ட சிக்கல்களுடே காரியங்களை சாதிக்க வேண்டிய மாபெரும் பொறுப்பினை   வரலாறு எவ்வித முன்னனுபவங்களும் இன்றிய  சந்திரகாந்தனின் மீது சுமத்தியது.

பல்கலைகழகம், பயிற்சி கல்லூரிகள் மற்றும் பட்டபடிப்பு நிறுவனங்கள் தவிர்ந்த  ஏனைய கல்விசார் நிறுவனங்கள் அனைத்தும் மாகாண சபைக்குரிய அதிகாரங்களின்கீழ் வருபவை இதன் அடிப்படையில் ஆரம்ப பாடசாலைகள் தொடக்கம் கனிஸ்ட,உயர்தர வகுப்புக்களை கொண்ட கல்லூரிகள் வரை மாகாண கல்வியமைச்சின் ஆளுகைக்கு கீழ் வருபவையாகும். இந்த விடயத்தில் மாகாண சபைகள்  தத்தமது  மாகாண கல்வித்துறையில் பாரிய தாக்கம் செலுத்த முடியும் என்பதை அவர் அடையாளம் கண்டுகொண்டார். இதன் காரணமாக கிடைக்காத காணி, போலிஸ் அதிகாரங்களுக்காக ஒப்பாரிவைத்து மத்திய அரசுடன் முரண்படுவதையோ வாய் வீரம் பேசி  காலத்தை வீணடிப்பதையோ அவர் விரும்பவில்லை. எனவே  மாகாண சபைக்குரிய கல்வியதிகாரத்தை முடிந்தவரை பயன்படுத்தி பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார்.

முதலமைச்சராக சந்திரகாந்தன் இருந்தாலும் ஏழு   ஆசனங்களை கொண்ட அவரது கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் கூட்டணி அமைத்தே கிழக்குமாகாண சபையின் ஆட்சியை தலைமை ஏற்று இருந்தது. இதன் காரணமாக மாகாண சபையின் கல்வியமைச்சு அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த சிறி லங்கா சுதந்திர கட்சி உறுப்பினரான விமலவீர திசநாயக்க என்பவருக்கே வழங்கப்பட்டடிருந்தது.

எனினும் விமலவீர அவர்களுடன் முதலமைச்சர்  ஏற்படுத்திக்கொண்ட புரிந்துணர்வின் காரணமாக தமிழ் பிரதேசங்களின் கல்வி பிரச்சனைகளை கையாளும் பொறுப்பினை முழுமையாகவே முதலமைச்சரிடம் கல்வியமைச்சர் பொறுப்பளித்தார். இந்த வாய்ப்பினை சந்திரகாந்தன் திறம்பட பயன்படுத்திக்கொண்டார்.

முதற்கட்டமாக மாவட்ட பாடசாலைகளிடையே உள்ள ஆசிரிய வளங்களை சமனாக பங்கிடுவது என்கின்ற வேலைத்திட்டம் நடைமுறை படுத்தப்பட்டது.

மேலதிக ஆசிரியர்களை கொண்ட பாடசாலைகளில் இருந்து  பின்தங்கிய பிரதேசங்களுக்கு முடிந்தவரை தேவையான ஆசிரியர்கள் இடமாற்றப்பட்டனர்.போக்குவரத்து தடைகளையும்,அலைச்சல்களையும் காரணமாக காட்டி பல ஆசிரியர்கள் இந்த தொலைதூர இடமாற்றங்களை ரத்து செய்ய கோரினர். ஆனால் இடமாற்றங்களை எவ்வித காரணங்களை முன்னிட்டும் ரத்து செய்வதில்லை என்பதில் முதலமைச்சர் உறுதியை கடைப்பிடித்தார்.(அப்போ நீங்கள் அங்கே வாகரைக்கும் திகிலிவட்டைக்கும்  போய் படிப்பிக்காவிடில் அந்த பிள்ளைகளுக்கு படிப்பிப்பது யார்? என்னும் கேள்வியை இடமாற்றத்தை ரத்து செய்ய கோரிவந்த ஆசிரியர்கள் ஒவ்வொருவரிடமும் அவர் கேட்டார்).கை லஞ்சம் பெற்றுக்கொண்டு ஆசிரியர்களை அவரவர் விரும்பிய இடங்களில் கற்பிக்க அனுமதித்து மாணவர்களுக்கு துரோகம் செய்துவந்த அரசியல் கலாசாரத்துக்கு முதலமைச்சர் சந்திரகாந்தன் முற்றுப்புள்ளி வைத்தார்.

 அதேவேளை தூர இடத்து ஆசிரியர்களின் சிரமங்களை புரிந்து கொண்டு வசதிகருதி முடிந்தவரை அதிகாலையிலிருந்து விசேட பஸ் சேவைகளை நடத்துவதற்கு உடனுக்குடன் நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதிகளவான ஆசிரியர்களை கொண்ட பட்டிருப்பு தொகுதியின் மையமான களுவாஞ்சிக்குடியிலிருந்து வாழைச்சேனை,வாகரை, கதிரவெளி பிரதேசங்கள் வரை விசேட பஸ் சேவைகள் சீரமைக்கப்பட்டன. ஆங்கிலஆசிரியர்களின் பற்றாக்குறையை தீர்க்க இந்தியாவிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் ஆங்கில ஆசிரியர்களை கொண்டுவரும் முயற்சி எடுக்கப்பட்டபோதும் பல நடைமுறை சிக்கல்கள் காரணமாக அம்முயற்சி கைகூடவில்லை.

யுத்தகாலத்தில் அழிக்கப்பட்டு  கைவிடப்பட்டநிலையிலும் அழிவின் விளிம்பிலும்   பல எல்லை கிராமங்கள் கிடந்தன. அவற்றையிட்டு
தமிழரின் பூர்வீக பூமி பறிபோகின்றது.என்று அவர் பத்திரிகைகளுக்கு அறிக்கை விட்டுக்கொண்டிருக்கவில்லை.  யுத்தத்தின் பின்னர் இடம்பெற்ற மீள்குடியேற்ற திட்டங்கள் ஒருபுறமிருக்க சுயமாக மக்களை மீள குடியமர செய்ய தடையாயிருந்த ஒருசில கட்டுமான வசதிகளை செய்து கொடுப்பதனூடாக அப்பிரதேச பாடசாலைகளை மீள இயங்க செய்ய முடியும் என மதிப்பிடப்பட்டது.குறிப்பாக தென்னமரவாடி தொடங்கி புனானை,கரடியனாறு, பாலையடிவட்டை , வளத்தாப்பிட்டி  வரையான  இடங்களில் கைவிடப்பட்டபோக்குவரத்துக்கள், கோவில்கள் கடைகள்,சந்தைகள் என்பன மீள அமைக்கப்பட வேண்டிய நிலையில் இருந்தன.இதற்காக தனது ஆளுகைக்குட்பட்ட அனைத்து வளங்களையும் சந்திரகாந்தன் பயன்படுத்த தீர்மானித்தார். குறிப்பாக புனானை பிரதான வீதியோரத்தில் ஒரு    கடைத்தொகுதிகூட  கட்டப்பட்டு வேலையற்றோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. வாழைச்சேனை பிரதேச சபையின் ஊடாக  உருவாக்கப்பட்டது. மட்டக்களப்பின் எட்டு பிரதேச சபைகளும் தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் ஆட்சியில் இருந்தன  என்பதால் அந்த வாய்ப்புக்களை தனது மக்கள் நலம் சார்ந்த பணிகளுக்கு சரியாக பயன்படுத்தினார்முதலமைச்சர். இன்றுவரை இயங்குகின்றஇத்திட்டத்தின் பலனாக புணானை மீண்டும் புதுபொலிவு பெறஅடிகோலிடப்பட்டது .போக்குவரத்து சபையுடன் தொடர்பு கொண்டு தொலை தூர குக்கிராமங்களில் இருந்து புணானை பாடசாலைக்கு வரும் மாணவர்களில் வரவை உறுதிப்படுத்த வாழைச்சேனை போக்கு வரத்து சபை டிப்போவில் இருந்து விசேட சேவை ஒன்று உடனடியாக ஆரம்பிக்கப்பட்டது.

அதேபோல முப்பது வருடங்களுக்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் எல்லை கிராமங்களான  தென்னமரவாடிக்கான பஸ் சேவை,பாலையடிவட்டை சந்தை கட்டிடம் வளத்தாப்பிட்டி கோவில் புனரமைப்பு என்று அனைத்தும் சீரழிந்து கிடந்த கல்வித்துறையின் மீள் நிர்மாணம் நோக்கியே திட்டமிடப்பட்டன. இதுபோன்று பல்வேறு பிரதேசங்களில் கல்வித்துறை புனரமைக்கப்பட்டது.இரண்டாம் கட்டமாக பாடசாலைகளை தரமுயர்த்துவதன் ஊடாக அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் மேலதிக வளங்களையும் மத்திய அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளுவது என்பது திட்டமிடப்பட்ட ஒரு வேலைத்திட்டமாக உருவாக்கப்பட்டது.

பல ஆரம்ப பாடசாலைகள் கனிஸ்ட பாடசாலைகளாகவும் பல கனிஸ்ட பாடசாலைகள் உயர்தர பாடசாலைகளாகவும் தரமுயர்த்தப்பட்டன. இதனூடாக படுவான்கரை போன்ற பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் முதல்கட்டமாக க.பொ.த.சா/தரம் மற்றும் உயர்தரம்கொண்ட  வகுப்புக்கள் ஆரம்பிக்க ஏதுவாயின. கிழக்கு மாகாணமெங்கும் ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலைகள் முதலமைச்சர் சந்திரகாந்தனால் தரமுயர்த்தப்பட்டன. இவற்றில் அதிகமானவை மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவையாகும். உதாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பன்னிரண்டு பிரதேச அலகுகளில் ஒன்றான வெல்லாவெளி பிரதேசத்தில் மட்டும் தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளின் விபரம் இக்கட்டுரையின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் கீழே தரப்படுகின்றது..


1.40ம் கொலனி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ( 09ஆம் ஆண்டிலிருந்து  க.பொ.த.சா/தரம் வரை தரமுயர்த்தப்பட்டது)
2.சின்னவத்தை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ( 09ஆம் ஆண்டிலிருந்து  க.பொ.த.சா/தரம் வரை தரமுயர்த்தப்பட்டது)
3.கணேசபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ( 09ஆம் ஆண்டிலிருந்து  க.பொ.த.சா/தரம் வரை தரமுயர்த்தப்பட்டது)
4.சங்கர் புரம் விக்னேஸ்வரா வித்தியாலயம் (க.பொ.த.சா/தரத்திலிருந்து க.பொ.த.உயர் /தரமாக தரமுயர்த்தப்பட்டது)
5.பாலையடிவட்டை நவகிரி வித்தியாலயம் (5 ஆம்   ஆண்டிலிருந்து - 9ஆம்  ஆண்டுவரை தரமுயர்த்தப்பட்டது)
6.பாலமுனை  அரசினர் தமிழ் கலவன்  பாடசாலை  (5 ஆம்   ஆண்டிலிருந்து - 9ஆம்  ஆண்டுவரை தரமுயர்த்தப்பட்டது)
7.ஆனைகட்டிய வெளி மலைமகள் வித்தியாலயம்(7 ஆம்   ஆண்டிலிருந்து - 9ஆம்  ஆண்டுவரை தரமுயர்த்தப்பட்டது)
8.13ஆம் கொலனி விக்கினேஸ்வரா வித்தியாலயம்   (க.பொ.த.சா/தரத்திலிருந்து க.பொ.த.உயர் /தரமாக தரமுயர்த்தப்பட்டது)
9.திக்கோடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ( 09ஆம் ஆண்டிலிருந்து  க.பொ.த.சா/தரம் வரை தரமுயர்த்தப்பட்டது).

இத்தகைய பாடசாலைகளுக்கு மத்திய அமைச்சுகளில் இருந்து போதிய வளங்களை பெற்று விநியோகிப்பதில் முதலமைச்சர் காட்டிய ஈடுபாடு குறிப்பிடத்தக்கது. அத்தோடு இந்திய தூதரகம் ஊடாக இந்திய அரசாங்கத்துக்கு முதலமைச்சர் விடுத்த வேண்டுகோளின் பயனாக ஆயிரம் கம்பியூட்டர்களையும் பத்து பஸ் வண்டிகளையும் பெற்று கொள்ள முடிந்தது.கிழக்குமாகாணத்தில் உள்ள பெரும்பாலான பாடசாலைகளுக்கும் கல்வி வலையங்களுக்கும் அவை பகிர்ந்தளிக்கப்பட்டன.பல்லாயிரம் மாணவர்கள் முதன்முதலாக கம்பியூட்டர் பயிற்சிகளை மேற்கொள்ள முதலமைச்சரின் அவ்வரிய பணி கால்கோலிட்டது.  போக்குவரத்து வசதிகள் இன்றி காணப்பட்ட தூர இடங்களில் இருந்து பாடசாலைக்கு செல்லும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்குடன் ஆயிரக்கணக்கான துவிசக்கரவண்டிகள் இலவசமாக கொடுக்கபட்டன.


மூன்றாம் கட்டமாக புதிய பாடசாலைகளையும் புதிய கல்வி வலையங்களையும் உருவாக்குதல் ஊடாக மாகாணத்தின் கல்வித்தரத்தை உறுதிப்படுத்தல்

யுத்தகாலங்களில்  குழந்தைகளுக்கான முன்பள்ளிகள் மத நிறுவனங்களாலும் அரசுசார்பற்ற அமைப்புகளினாலுமே நிர்வகிக்கப்பட்ட வந்தன.அவற்றினை சட்டரீதியாக மாகாண சபைகளுக்கு உட்பட்ட முறையில் மாற்றியமைப்பதும் நெறிப்படுத்துவதும் அவசியமாயிருந்தது. இதனடிப்படையில் பாலர்பாடசாலை நியதி சட்டம் உருவாக்கப்பட்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முன்பள்ளிகளையும் மாகாண கல்வியமைச்சின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதில் வெற்றி காணப்பட்டது.இச்சட்டமானது கல்வி சார்ந்து 13வது சட்டத்திருத்தத்தின் ஊடாக  மாகாண சபைகளுக்கு வழங்கப்படுள்ள அதிகாரங்களை கையகப்படுத்தும் முயற்சிக்கு கிடைத்த ஒரு வெற்றியாகும்.

அதேபோன்று சுமார் முப்பது வருட காலமாக எதிர்காலம் பற்றிய எவ்வித திட்டமிடலும் முன்னேற்றமும் இன்றி இயங்கி கொண்டிருந்த கல்வி வலையங்கள் சம்பந்தமாக புதிய அலகுகள் அவசியமாயிருந்தன.குறிப்பாக படுவான்கரை போன்ற பிற்படுத்தப்பட்ட பிரதேசங்களும் நகரை அண்டிய வளர்ச்சியடைந்த பிரதேசங்களும் இணைந்து காணப்பட்ட கல்வி வலையங்களில் மாற்றம் அவசியமாயிருந்தது.அதாவது பிற்படுத்தப்பட்ட பிரதேச பாடசாலைகளின் தராதரங்களை பிரித்தறிந்து  அதற்கேற்ற திட்டமிடலை மேற்கொள்ள முடியாத நிலைஇருந்தது. எனவே அவசியமான இரண்டு புதிய கல்வி வலையங்கள் உருவாக்கப்பட்டன.

.மட்டக்களப்பு கல்வி வலயத்தில் இருந்து  27 பாடசாலைகளும் , பட்டிருப்பு கல்வி வலயத்தில் இருந்து  18 பாடசாலைகளும் , மட்டக்களப்பு மத்தி வலயத்தில் இருந்து  11 பாடசாலைகளையும் கல்குடா கல்வி வலயத்தில் இருந்து   7 பாடசாலைகளையும் இணைத்து 63 பாடசாலைகள் உள்ளடக்கிய வகையில் புதிய கல்வி வலையமான  "வவுணதீவு வலையம்" உருவாக்கப்பட்டது..அதேபோன்று அக்கரைப்பற்று கல்வி வலையத்திலிருந்து பிரித்து திருக்கோவில் பிரதேசத்தை கருத்தில் கொண்டு புதியதொரு கல்வி வலையமும் உருவாக்கப்பட்டது.. இப்புதிய வலயங்களினை உருவாக்கியமை  பிற்படுத்தப்பட்ட   பிரதேசங்களின் கல்வி வரலாற்றில் பெரும் வரபிரசாதமாகும்.

அடுத்ததாக கல்வி வளர்ச்சி என்பது பாடசாலை கல்வியை  மட்டும் அடிப்படையாக கொண்டிருக்க கூடாது என்னும்நோக்கில் வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் முகமாக பல நூல் நிலையங்களை ஆரம்பிக்கும் திட்டத்தினை முதலமைச்சர் உருவாக்கினார். மட்டக்களப்பு நகரின் மத்தியில் இலங்கையிலேயே மிக பெரியதான ஒரு நூல் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது அதன் நிர்மாண(222 milion) வேலைகள் பூர்த்தியாக முன்னர் (ஒரு வருடத்துக்கு முன்னதாகவே) கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதன் காரணமாக இந்த பிரமாண்டமான நூலக பணிகள்  பூர்த்தியாக முடியவில்லை. ஆனாலும் அரசியல் காழ்ப்புணர்வுகளை கடந்த  தேசப்பற்றுமிக்க ஒரு அரசியல் வாதியின்றி   இன்றுவரை இந்த நூலகத்தின் இறுதிக்கட்ட பணிகள்  காத்துக்கிடக்கின்றன.

   அடுத்து பேத்தாளை பொது நூலகம் மட்டக்களப்பில் உள்ள நூலகங்கள் அனைத்தையும் விட பெரியதாக அமைக்கப்பட்டது. கிழக்கு பல்கலைகழக மாணவர்களின் நன்மை கருதி அமைக்கப்பட்ட நூலகத்தில்  18 ஆயிரத்துக்கு மேற்பட்ட புத்தகங்கள், 03 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட பௌதிக வளம்  என்பன காணப்படுகின்றன.இணையதள வசதிகளுடன் காணப்படும் இந்த நூலகம் மாணவர்களின் அறிவு வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  2014 ம் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சும் களனி பல்கலைகழக நூலக மற்றும் தகவல் விஞ்ஞான பிரிவும் இணைந்து நடாத்திய தரப்படுத்தலில் அகில இலங்கை ரீதியில் பிரதேச சபைகளுக்கான நூலகங்களின் இந்த பேத்தாழை   பொது நூலகம்  ஆண்டு நாடளாவிய ரீதியில்   முதலாவது சுவர்ண புரவர  விருதுதை  பெற்று கொண்டது.  


2008ஆம் ஆண்டு தொடக்கம் 20012 ஆம் ஆண்டு வரையான சந்திரகாந்தனின் ஆட்சிக்காலத்தில் கிழக்கு மாகாணசபையால் நடைமுறைப்படுத்தப்பட்ட மேற்படி கல்வித்துறை சார்ந்த அபிவிருத்திகளின் பலனை கிழக்கு மாகாண மாணவர் சமுதாயம் தற்போது முதல் அனுபவிக்க தொடங்கியுள்ளன.கடந்த ஆண்டு இடம்பெற்ற க.பொ.த. சாதாரண தர/உயர்தர பரீட்சைகளில் பல பாடசாலைகள் வரலாற்றில் முதல் தடவையாக உயர்தரத்துக்கும்,பல்கலைகழகத்துக்கும் நுழையும் வண்ணம் தமது மாணவர்களை வெற்றியீட்ட செய்துள்ளன.அவற்றில் பல பிற்படுத்தப்பட்ட எல்லைகிராமங்க பாடசாலைகள் என்பது மாபெரும் சாதனையாகும்.

சுமார் அறுபது வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மண்ணுக்கு   நல்லையா மாஸ்டர் என்னும் அரசியல் பெருமகன் ஆற்றிய கல்விப்பணிக்கு பின்னர் மட்டக்களப்பின் கல்வித்துறையை மேம்படுத்தியவர்கள் அரசியல்வாதிகளின் வரிசையில்   சந்திரகாந்தனின் பெயரை தவிர்த்து யாதொரு வரலாறும்எழுதப்படமுடியாது.

இத்தகையதொரு  கல்வி வளர்ச்சியை நோக்கி கிழக்கு மாகாணத்தை வழிநடத்துவதற்கும் உத்வேகம் கொண்டு செயல்படுவதற்கும்  முதலமைச்சர் சந்திரகாந்தன் மாபெரும் அரசியல் மேதையாக  காலடி எடுத்து வைத்தவரல்ல. ஆனால் தன்னைப்போன்றே இளமையில் கல்வியை தொலைத்துநின்ற ஆயிரமாயிரம் குழந்தைபோராளிகளின் மனசாட்சியாக அவர் செயல்பட்டார் என்பதை காரணமாகும்.

மீன்பாடும் தேனாடான் »»  (மேலும்)

3/04/2020

மண் மாபியாக்களுக்கு ஆப்பு

தென்னிலங்கை மண் கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் பிள்ளையானில் தலையீட்டினால் உடன் நிறுத்தம்
ஏறாவூர் பற்று பிரதேசத்தில் மண் ஏற்றுமதிக்காக வழங்கப் பட்ட அனுமதிப்பத்திரத்தை அடுத்து எழுந்த எதிர்ப்புணர்வுகளையும் மக்களின் கோரிக்கைகளையும் ஏற்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவ.சந்திரகாந்தன்(பிள்ளையான்) உடனடியாக செயற்பட்டு கட்சிச் செயலாளர் பூ.பிரசாந்தனுக்கு கட்டளையிட்டு,அவரின் பணிப்புரைக்கிணங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவுடன் தொடர்பு கொண்டு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மண் ஏற்றுவதற்காக வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரம் இரத்து செய்யப்பட்டதுடன் அதற்கான கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
»»  (மேலும்)

1/28/2020

கண் விழிக்கப்பண்ணி இரு கண்கள் மூடிக்கொன்டன மல்லிகை சி, குமாரின் மறைவு

மலையகம் தனித்துவமான ஒரு பண்பாட்டுப் பிரதேசம்.அங்கு வாழும் தமிழ் மக்கள் தமக்கான பண்பாடும் வரலாறும் கொண்டவர்கள்.அம்மக்களின் உழைப்பு இலங்கைபொருளாதாரத்தை தாங்கி நிற்கும் முக்கிய தூண்களுள் ஒன்று
இருந்தும் அவர்கள் பலரின் வாழ்க்கைத் தரம்
இன்றும் கீழ் நிலையில்தான்
இந்த மக்களின் துன்பதுரங்களையும்,பெருமூச்சையும் அவர் தம் நற்குணங்களையும் பண்பாட்டையும் வரலாற்றையும் உலக அரங்கில் கொணர்ந்தவர் பலர்
நடேச ஐயர்,அவர் மனைவி,
சி,வி வேலுப்பிள்ளை,
கணேஸ். என ஆரம்பித்து
சிவலிங்கம்,செந்தூரன்,
தெளிவத்தை ஜோசெப். சோமு,
மாத்தளைக் கார்த்திகேசு, குறிஞ்சி நாடன்
அந்தனி ஜீவா வடிவேலன்,
ஜோதிகுமார்.பிரபாகரன்
பேரா சந்திரசேகரன், வாமதேவன்
எனச்சென்று
இன்று தீவிரமாகசெயற்படும் இளைஞர் வரை அது வியாபிக்கும்
மலையகத்தின் விழிப்பு இக்கால இலங்கை வரலாற்றில்
ஓர் முக்கிய அம்சம்
உலகை வெல்லச்சென்ற நெப்போலியன் அனைத்து நாடுகளையும் வென்றபடி சீனாவின் எல்லைக்கு வந்தானாம்.
அமைதியாக இருந்த சீன எல்லையில் நின்று பரந்து கிடந்த சீன நிலத்தைப்பார்த்தானாம்
பின்னர் இவ்வாறு சொன்னானாம்
" உறங்கும் அரக்கனை எழுப்பி விட வேண்டாம் அதை உறங்க விடுங்கள்"
சீனாவின் உறக்கத்தைச் சிதைக்காது வந்த வழியே படைகளையும் கூட்டிகொண்டு திரும்பிச் சென்றானாம்
சிறு வயதில் படித்தது இது
மாஓ தலைமையில் நெப்போலியன் சொன்ன அந்த அரக்கன் இன்று விழித்தெழுந்து இலங்கை நாட்டின் மிக முக்கிய சக்தியாகி விட்டான்
மலையகத்தை நினைக்கையில் எனக்கு எப்போதும் அன்று அந்த நெப்போலியனின் கூறிய கூற்றே ஞாபகத்திற்கு வரும்
அந்த தூங்கும் அரக்கனை பண்பாட்டுத் தளத்தில் எழுப்பிவிட முயற்சித்தோரே மேலே நான் குறிபிட்டோர்
இவர்களுள் மிகப்பலருடன் எனக்கு நெருக்கமான நேரடி உறவுகள் உண்டு
அவர்களுள் ஒருவரே மல்லிகை சி,குமார்
இளம் வயதிலிருந்தே அவரை நான் நன்கு அறிவேன் உற்சாகமும் துடி துடிப்பும் மிகுந்தவர்
அவர் இழப்பு எனக்கும் கவலை தருகிறது,
அவருக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள்
தூங்கிக் கிடந்த மலையகம் மெல்லக் கண் விழித்திருப்பதை அணமைக்கால நிகழ்வுகள் காட்டுகின்றன
கண் விழிக்கப் பண்ணிய ஒருவர் இன்று
கண் மூடி விட்டார்
நன்றி முகநூல்
மௌனகுரு
»»  (மேலும்)

1/06/2020

தலித் பெண் பதவி ஏற்பு மேடை " தீ வைத்து எரிப்பு" ...

தலித் பெண் பதவி ஏற்பு மேடை " தீ வைத்து எரிப்பு" ...
மதுரை சக்கிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற
திருமதி.நாகலட்சுமி காசிராஜன் அவர்கள்
இன்று 6-1-2020 பதவி ஏற்க அமைக்கப்பட்ட விழா மேடையை...
தலித் பெண் பதவிஏற்பை பொருத்துக்கொள்ள முடியாத
ஆதிக்க சாதி கயவர்கள்
" தீ வைத்து " எரித்துவிட்டனர்.  L’image contient peut-être : plein air
»»  (மேலும்)

நாட்டில் உடனடியாக அமுலுக்கு வரும் சட்டங்கள்.

 Résultat de recherche d'images pour "sri lanka president"
1. குடி போதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்பட்டால் 10 வருட கடூழிய சிறை.
2. முச்சக்கர வண்டிகள் இறக்குமதி செய்வது முற்றாக இன்று முதல் தடை.
3.பாடசாலை அனுமதியின் போது நேரடியாகவோ மறைமுகமாகவோ லஞ்சம் கோரப்பட்டால் 48 மணித்தியாலத்திற்குள் பணி நீக்கம் செய்யப்படுவர்.
4. பகிடிவதை செய்து சிக்கினால் 8 வருடம் பரீட்சை எழுத தடை விதிக்கப்படும்.
5. பாராளுமன்ற உறுப்பினர் 80% மேல் அமர்வுகளில் சமூகமளித்திருத்தல் வேண்டும் தவறினால் 5 வருடங்களுக்கு எந்த வித வாக்கெடுப்பிற்கும் விண்ணப்பிக்க முடியாது.
6. அரச ஊழியர்கள் சேவை துஸ்பிரயோகம் செய்தால் 48 மணி நேரத்திற்குள் பணி நீக்கம் செய்யப்படுவர்.
7. ஜனாதிபதி தேர்தலில் ஒருவர் போட்டியிட்டு 1% வீதத்திற்கு குறைவான வாக்குகளை பெறுவாரேயானால் 1கோடி ரூபாய் அரசாங்கத்திற்கு தண்டப்பணமாக செழுத்த வேண்டும்.
8. அரசியல்வாதிகளின் சிபாரிசின் மூலம் வருபவர்களுக்கு வாழ் நாள் முழுதும் அரச சேவையில் இணையத்தடை.
9. வைத்தியரின் சிபாரிசு இல்லாமல் மருந்து வழங்கும் மருந்தகங்களில் அனுமதிப்பத்திரம் 48 மணித்தியாலத்திற்குள் ரத்து செய்யப்படும்.
10. சொத்துக்களை வாங்கி 5 வருடங்களுக்கு முன் விற்பனை செய்யப்பட்டால் விற்கப்படும் தொகையில் 50% வரியாக செலுத்தப்பட வேண்டும்.
11. மோட்டார் வாகன பொலிசார் இரகசிய பொலிசாரால் கண்காணிக்கப்படுவர்.சிக்கினால் 48 மணி நேரத்திற்குள் பணி நீக்கம்.
12. தனியார் வைத்தியசாலைகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்படும்.
இவை அனைத்தையும் மக்களோடு மக்களாக இருக்கும் 2500 இரகசிய பொலிசார் அவதானிப்பர்.
»»  (மேலும்)

1/03/2020

வடக்கு ஆதிக்க கூட்டமைப்பு கிழக்கை ஓரங்கட்டி அரசியல் செய்ய முயற்சிக்கிறது

கூட்டமைப்பின் இரு வேடம்...
கிழக்கு ஆளுநரை புறக்கணிப்பது வடக்கு ஆளுநரை வரவேற்பதும்L’image contient peut-être : une personne ou plus et personnes debout
_____________________________________________
கிழக்கு ஆளுநர் அண்மையில் புதிதாக பதவியேற்றார் கிழக்குமாகாண அன்றைய தினம் அரசியலுக்கு அப்பால் எல்லோரும் மரியாதை நிமித்தம் கலந்து கொண்டார்கள் ஆனால் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என சொல்லும் கூட்டமைப்பு அதன் தலைவர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை .
அது போக கிழக்கின் மட்டக்களப்பு மாவட்டத்திட்கு வந்த போதும் எவரும் வரவேற்க வரவில்லை இருப்பினும் அரச ஆளுநரை புறக்கணிப்பது கூட்டமைப்பின் கொள்கையாக இருக்க கூடும் என நினைக்க தோன்றியது
ஆனால் வடக்கின் ஆளுனரை வரவேற்பதில் முண்டி அடித்துக்கொண்டு முன்வரிசையில் இருந்து வரவேற்றனர் இதில் இருந்து என்ன புரிகின்றது வடக்கு ஆதிக்க கூட்டமைப்பு கிழக்கை ஓரங்கட்டி அரசியல் , அபிவிருத்தி அனாதைகளாக்கி அதிலே அரசியல் செய்ய முயற்சிக்கிறது
எனவே கிழக்கு தமிழ் மக்கள் நாங்கள் இப்போதும் சுதாகரித்து கொள்ளவில்லை என்றால் கடவுளும் எம்மை காப்பாற்ற முடியாமல் போய்விடும்.

*நன்றி முகநூல் நிர்மல் தனபால் 
»»  (மேலும்)

12/31/2019

நம் கல்வி நிறுவனங்கள் ரோபோக்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளா?தேடலற்று
தேங்கிப் போதல்Photo de profil de Balasingam Sugumar, L’image contient peut-être : 1 personne, sourit, texte
ஒரு அறிவார்ந்த அதி உயர் தளத்தில் பணியாற்றுவோர் தேடலும் தீவிர வாசிப்பும் புதியனவற்றை உள் வாங்கலும் அதிலிருந்து கண்டு பிடிப்புகளுடன் பயணிப்பதும் இந்த பண்பாட்டை தாங்களும் தாங்கள் சார்ந்த நிறுவன மயப் பட்ட சூழலில் கற்பித்தலும் கற்றலும் என ஒரு சுழர்ச்சி முறையான அறிவுத் தேடலே ஒரு ஆரோக்கியமான அறிவார்ந்த அறிவு ஜீவிகளை உருவாக்க முடியும்.
நம் சூழலில் இது நம்மை சுற்றி எப்படி நடை பெறுகிறது என நாம் விரிவாக பேச வேண்டியவர்களாகிறோம்.
மட்டக்களப்பு நகரமும் நகரத்து சூழலும் உயர் கல்வி நிறுவனங்களினால் நிறைந்திருக்கிறது என்றே சொல்லலாம்.
1.கிழக்குப் பல்கலைக்கழகம் வந்தாறுமூலை வளாகம்
2.கிழக்குப் பல்கலைக்கழகம் மருத்துவ பீட மட்டக்களப்பு வளாகம்
3.கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனம்.கல்லடி
4.கல்வியற் கல்லூரி தாளங்குடா
5.திறந்த பல்கலைக்கழக வளாகம் மட்டக்களப்பு நகரம்
6.அரசினர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை மட்டக்களப்பு நகர்
7.அரச தொழில் நுட்பக் கல்லூரி நாவற்குடா
தமிழர் பிரதேசங்களில் இத்தனை கல்வி நிறுவனங்கள் ஒரு நகரத்தை சூழ அமைந்திருப்பது பெரும் வரப்பிரதாசமே.
இத்தனை இருந்தும் இந்த நிறுவனங்களும் அது சார்ந்த பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் இயக்குனர்கள் அவற்றில் பயிலும் கல்விச் சமூகத்தினர் என எல்லோரும் தம்மை சூழ நடக்க்கும் விடயங்களில் காட்டும் ஈடுபாடும் பங்களிப்பும் கேள்விக் குறியாகவே காணப் படுகிறது
அரசியல் சமூக கலை இலக்கிய நிகழ்வுகள் பலரால் முன்னெடுக்கப் படுகின்ற போது மீண்டும் மீண்டும் ஒரே முகங்களே எல்லாவற்றிலும் அக்கறையுடன் செயல்படும் காட்சிகளை காண்கிறோம்.
அறிவார்ந்த சமூகம் என்பது தேங்கிப் போகும் குட்ட்டையல்ல குட்டையில் நீர் வற்ற வற்ற அது நாற்றமெடுத்து எதுக்கும் உதவாமல் போய் விடும் .வெறும் குட்டையாக இல்லாமல் பிரவாகம் எடுத்து ஓடும் வற்றாத நதியாக அறிவுத் தேடல் அமைய வேண்டும்.
வாசிப்பில்லாத கல்வி என்பது கண்டுபிடிப்புகள் அற்ற இயந்திரத் தன்மையான ரோபோக்களாகவே உருவாக முடியும் .
நம் கல்வி நிறுவனங்கள் ரோபோக்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளா? 
நன்றி முகநூல் *பாலசுகுமார் 
»»  (மேலும்)

12/22/2019

மட்டக்களப்பில் தொடரும் மருத்துவ படுகொலைகள்,யார்தான் முற்றுப்புள்ளி வைப்பது..?

பிரவசத்திற்காக 20/12/2019 அன்று மாலை பிரவச வலி ஏற்பட்டதை அடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் அன்று இரவு ஊசி போடப்பட்டது அதன் பின் வலி அதிகம் ஏற்பட்டதை உணர்ந்த அந்த பெண் அங்கு இருந்த தாதியிடம் சென்று கூறியுள்ளார் தனக்கு பிள்ளைய பிறப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் கூறியுள்ளார் ஒரு பிள்ளையின் தாய் என்பதால் அவருக்கு அனுபம் எனவே தாய் தாதியிடம் கூற அந்த தாதி தானும் பெண் என்பதை மறந்தாளோ தெரியவில்லை உனக்கு இப்பதானே ஊசி போட்டிருக்கு நாள் இருக்கு நேரம் இருக்கு பேசாம இரு என்று ஏனோ தானென்று அலட்சியமாக கூறியுள்ளார்.L’image contient peut-être : une personne ou plus, personnes qui dorment, bébé et gros plan
அந்த சமயம் அனைவரும் உறக்கத்தில் இருந்ததாகவும் அந்த பெண் கூறினார் பின்பு வலி மீண்டும் அதிகரிக்க அந்த பெண்ணால் எழும்ப கூட முடியாத நிலையில் பக்கத்தில் இருந்த மற்றுமெரு பிரசவத்துக்காக வந்திருந்த பெண் தாதியிடம் சென்று கூற அதன் பின்புதான் பிரசவ அறைக்கு கொண்டு செல்லபட்டிருக்கிறார் அங்கும் சில மணித்தியாலங்கள் போராட்டத்தின் மத்தியில் நள்ளிரவு 1:35 am ஆண் குழந்தை பிறந்துள்ளது அக்குழந்தை அழுததாகவும் சிறுநீர் கழித்ததாகவும் அத் தாய் கூறினார் பின் அக்குழந்தைக்கு சுவாசிப்பதில் கடினமாக உள்ளதாகவும் 1மணித்தியலம் கண்ணாடி பெட்டியில் வைத்தால் சரியாகிவிடும் என்று கூறிவிட்டு குழந்தையை எடுத்து சென்றுள்ளனர்...
பிள்ளையை எதிர் பார்த்து கொண்டிருந்த தாய் 2மணித்தியாலங்கள் கழித்தும் பிள்ளையை காட்டவும் இல்லை பிள்ளை இறந்து விட்டதாக கூறி இருக்கிறார்கள் பிள்ளையின் நிறை 2kg 315g இறந்ததுக்கான காரணம் வினவிய போது பல தரபட்ட காரணங்கள் தெரிவிக்கப்பட்டது ஒருவரால் தெரிவிக்கப்பட்டதை கேட்க எமக்கே ஆச்சரியமாய் இருந்தது நுரையீரல் இல்லயாம் என்று அப்படியானால்....
அந்த குழந்தை 8மாதத்தில் பிறந்தது எப்படி இவ்வளவு தேக ஆரோக்கியமாக பிறந்திருக்கும் Doctor சரவணன் ஐயா நீங்கள் தானே 18ம் திகதி அந்த பெண் சாதுவான வலி ஏற்பட உங்களிடம்தான் வந்து scan பன்ன நீங்கதானே பிள்ளை ஆரோக்கியமாக உள்ளதாகவும் ஓரிரு தினங்களில் சுகபிரவசமாகிவிடும் 20ம் திகதி வைத்தியசாலைக்கு வருமாறு விடுதி இலக்கம் எழுதி குடுத்திருந்தீர்கள் அப்படியிருக்கையில் உங்களுக்கு அந்த குறை தெரியவில்லையா..??
அப் பச்சிளங் குழந்தையின் தகப்பனிடம் கூறிய காரணங்களும் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று அவர் கூறினார் என்ன செய்வது வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பமாச்சே ஏமாற்றத்தான் செய்வார்கள் எத்தனை குழந்தைகள் இவ் வைத்தியசாலையில் இறந்து இருக்கிறார்கள் யாருக்குத்தான் நியாயம் கிடைத்திருக்கு கடைசியில் இவர்களுக்கும் ஏமாற்றம்தான் இதற்கு தீர்வுதான் என்ன
மட்டக்களப்பு மக்களாகிய நாம் என்னதான் செய்யப்போகிறோம் வரும் சந்ததிகளின் நிலமைதான் என்ன இப்படி அடிக்கடி குழந்தை இறப்பு வீதம் அதிகரிக்குமாயின் எப்படி இந்த வைத்தியசாலையை நாடுவார்கள் இவர்களது அசமந்தப்போக்காள் இன்னும் எத்தனை குழந்தைகள் பழியாகுமோ நம்ம இனத்தின் அவலநிலைக்கு யார்தான் முற்றுப்புள்ளி வைப்பது...!
தம்பி முனைக்காடான் குபேந்திரன் அவர்களது பதிவின் பிரதி. 
»»  (மேலும்)

மையமா மதில் மேல் பூனையா?

குடியுரிமை திருத்தச் சட்டத்தில் வலதுசாரிகளுக்கு ஆதரவாகவோ, இடதுசாரிகளுக்கு ஆதரவாகவோ இல்லாமல் மையத்தில் நின்று இந்த சட்டம் குறித்து முடிவுசெய்யவேண்டும் என்பதால், இந்த சட்டத்தை எதிர்த்து திமுக நடத்தவுள்ள போராட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கலந்துகொள்ளவில்லை என மக்கள் நீதி மய்ய உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். 
Résultat de recherche d'images pour "kamal hassan"
சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை நேரில் சந்தித்த மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன், தானும் போராட்டத்தில் கலந்துகொள்வதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், திமுக எதிர்ப்பு பேரணி ஒன்றை நடத்த அனைத்து கட்சியினருக்கும் அழைப்புவிடுத்தது.
இதில் கமலின் மக்கள் நீதி மய்யமும் அடக்கம். இந்த பேரணியில் கமல் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திமுகவின் அழைப்புக்கு நன்றி தெரிவித்துவிட்டு, அந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளப்போவதில்லை என மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
பெயர் குறிப்பிட விரும்பாத மக்கள் நீதி மய்ய நிர்வாகி ஒருவர் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் கட்சியின் முடிவு வலதுசாரிக்கு ஆதரவானதாகவோ, இடதுசாரிக்கு ஆதரவானதாகவோ இல்லை என்பதால் பேரணியில் பங்கேற்கவில்லை என பிபிசிதமிழிடம் தெரிவித்தார்.
»»  (மேலும்)

12/20/2019

மார்ச் மாதம் 3ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்படும்

மார்ச் மாதம் 3ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ஏப்ரல் மாத இறுதியில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 Résultat de recherche d'images pour "யோகேஸ்வரன்"
நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னரே, 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை சமர்பிக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
»»  (மேலும்)

சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல் 'ஒரு நாடகம்' அம்பலமானது

கொழும்பில் கடத்தப்பட்டு அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸர்லாந்து பெண் ஊழியர்கள் விவகாரம் தொடர்பிலும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி இதன்போது விடயங்களை தெளிவூட்டியிருந்தார். Résultat de recherche d'images pour "சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல்"
குறித்த பெண்ணினால் முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களும் போலியானவை என தொழில்நுட்ப சாட்சியங்களின் ஊடாக சுவிஸர்லாந்து தூதுவருக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், குறித்த பெண் சுவிஸர்லாந்து தூதரகத்தில் பணியாற்றுகின்றமையினால், அந்த பெண் தொடர்பில் சுவிஸர்லாந்து தூதரகம் முன்னிலையாகின்றமை எந்தவிதத்திலும் தவறு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 
»»  (மேலும்)

மலையக கல்வி வரலாற்றில் இப்படி ஒரு முதல் சாதனை


மத்திய மாகாணம், கண்டி மாவட்டம், தெல்தோட்டை, லிட்டில் வெளி (கடதாசி தோட்டம்) ஆசிரியர் கருப்பையா பிரபாகரன் PhD. (கலாநிதி) பட்டம் பெறுகின்றார்.L’image contient peut-être : 1 personne
எதிர்வரும் சனிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு நிகழ்வின்போதே மேற்படி பட்டத்தை பெறவுள்ளார். இவர் ஒரு தோட்ட தொழிலாளியின் பிள்ளை என்பதும் குறிப்பிடத்தக்கது
மலையக கல்விவரலாற்றில் ஒரு ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கும் ஒருவர் கலாநிதிப் பட்டம் பெறும் முதல் சந்தர்ப்பம் இதுவே.
இந்த சாதனை ஒட்டுமொத்த மலையக கல்வி சமூகத்திற்கும் பெருமை சேர்க்கும் ஓர் விடையமாகும் அத்துடன் மலையக கல்வி வரலாற்றில் பொன் ஏடுகளால் பொறிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

நன்றி முகநூல் * முத்தையா நித்தியானந்தன் 
»»  (மேலும்)