12/30/2009

தேர்தலில் போட்டியிட்டால் கட்டுப்பணம் கூட கிடைக்காது ஜெனரல் பொன்சேகா


2008 ஜனவரி 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பத்திரிகையொன்றுக்கு வழங்கிய பேட்டியில் சரத் பொன்சேகாவிடம் கேட்கப்பட்ட கேள்வியையும் அதற்கு அவர் வழங்கிய பதிலையும் இங்கே தருகிறோம்.

கேள்வி:- நீங்கள் நாட்டின் ஜனரஞ்சகமான இராணுவத் தளபதியொருவர். இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அரசியலில் இறங்கும் எண்ணம் எதுவும் உள்ளதா? பொன்சேகாவின் பதில்:- அப்படி எதுவும் இல்லை.

அரசியல் செய்ய எனக்குத் தெரியாது. நான் சிறந்த ஒழுக்கத்தைப் பேணும் பயிற்சியைப் பெற்ற இராணுவ அதிகாரி. எனது பணிகள் அரசியலுக்கு பொருத்தமாக இல்லை. நான் தேர்தலில் நின்றால் கட்டுப்பணம் கூட கிடைக்காது.

இதன்மூலம் நாட்டில் மோசமாக தோல்வியடை யும் அரசியல்வாதியாவேன்.
»»  (மேலும்)

ஐ. நா. தொழிற்பாட்டு குழுவின் இணைத்தலைவராக பாலித கொஹொன


தேசிய நியாயாதிக்கத்திற்கு அப்பாற்பட்ட கடல் சார்ந்த உயிரியல் வேறுபாடுகளின் பாதுகாப்பு மற்றும் தொடர்ச்சியான பாவிப்பு என்பது சம்பந்தப்பட்ட விடயங்களை ஆய்வதற்கான ஐ.நா. தொழில்பாட்டு குழுவின் இணைத் தலைவராக நியூயோர்க்கில் ஐ.நா.விற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாகிய தூதுவர் பாலித கொஹொன ஐ.நா. பொதுச் சபையின் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மற்றைய இணைத் தலைவர் நெதர்லாந்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சட்டமதியுரைஞரான கலாநிதி லைஸ்டெத் லிஜின்சாட் ஆவார்.

இவர் நியமனமானது 2010 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஐ.நா. தொழிற்பாட்டு குழுவினது மூன்றாவது கூட்டத்திற்காகவாகும். தேசிய நியாயாதிக்கத் திற்கு அப்பாற்பட்ட கடல் சார்ந்த உயிரியல் வேறுபாடுகளின் பாதுகாப்பு மற்றும் தொடர்ச்சியான பாவிப்பு என்பது சம்பந்தப்பட்ட விடயங்களை ஆய்வதற்கான ஐ.நா. தொழில்பாட்டு குழுவானது கடல்கள் மற்றும் கடல்சார் சட்டம் என்பதான ஐ.நா.வின் தீர்மானத்தைத் தொடர்ந்து ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் தாபிக்கப்பட்டது.

இத்தொழிற்பாட்டுக் குழுவானது உலகளாவிய ரீதியில் கடல் சார்ந்த உயிரியல் வேறுபாடுகளின் பாதுகாப்பு மற்றும் தொடர்ச்சியான பாவிப்பு என்பது சம்பந்தப்பட்ட விடயங்களை ஆய்வு செய்து அதன் சிபார்சுகளை ஐ.நா. பொதுச் சபைக்குச் சமர்ப்பிப்பதற்கு ஆணைப்படுத்தப்பட்டுள்ளது.
»»  (மேலும்)

வடக்கில் கைவிடப்பட்ட ஒரு இலட்சத்து 28 ஆயிரம் ஏக்கரில் மீண்டும் பயிரிட நடவடிக்கை


வட மாகாணத்தில் மோதல் காரணமாக கைவிடப்பட்டுள்ள ஒரு இலட்சத்து 27 ஆயிரம் ஏக்கர் மேட்டு நிலத்தில் மீண்டும் பயிரிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்ரசிறி தெரிவித்தார். தற்பொழுது 33,980 ஏக்கரில் பயிரிடப்பட்டு வருவதோடு பெரும்போகத்தின் போது 10,592 ஏக்கரில் பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

மேட்டு நிலங்களில் மீண்டும் பயிர்ச் செய்கைகளை ஆரம்பிப்பதற்காக இதுவரை 24,500 கிலோ கிராம் விதைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

வீட்டில் மரக்கறி பயிரிடுவதற்காக 4,200 பக்கட் விதைகளும் வழங்கப்பட்டுள்ளன. தற்போது மன்னார் மாவட்டத்தில் 1,639 ஏக்கரிலும் வவுனியா மாவட்டத்தில் 21,382 ஏக்கரிலும் யாழ். மாவட்ட த்தில் 10,963 ஏக்கரில் பயிரிடப்பட்டு வருவதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

பெரும்போகத்தின் போது மன்னார் மாவட்டத்தில் 631 ஏக்கரி லும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 750 ஏக்கரிலும் வவுனியா மாவட் டத்தில் 5,645 ஏக்கரிலும் யாழ். குடா வில் 3,456 ஏக்கரிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் 110 ஏக்கரிலும் மேட்டு நிலப்பயிர்ச் செய்கை மேற் கொள்ளப்பட உள்ளன.»»  (மேலும்)

12/29/2009

அன்பு சிறுவர் இல்லத்திற்கு முதல்வர் விஜயம்.img_1067-copyத.ம.வி.பு கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் திருமலையில் அiமைந்துள்ள சிறுவர் இல்லமான அன்பு இல்லத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்கு உள்ள சிறுவர்களுடன் அன்பாக உரையாடுவதையும், அச்சிறுவர்கள் முதல்வரின் வருகையை கழிப்பாக கொண்டாடுவதையும் படங்களில் காணலாம்.

அவ் இல்லத்தில் உள்ள ஓர் சிறுமி தன் ஒளிமயமான எதிர்காலத்தை தன் பிஞ்சு கரங்களால் முதல்வருக்கு காண்பிப்பதையும் படத்தில் காணலாம்.

img_1101

»»  (மேலும்)

மக்களின் குறைகளை கண்டறிய முதல்வர் தலைமையிலான குழு நேரடி விஜயம்

கடந்த சில மாதங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக இடம்பெயர்ந்து வாழகின்ற மக்களையும், கடந்த யுத்த காலங்களில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களின் குறைகளையும் கண்டறிய கிழக்கு மாகாண முதலமைச்சரும் த.ம.வி.பு கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான உயர்மட்ட குழு நேற்று வவுனதீ பிரதேச செயலாளர் எல்லைக்குட்பட்ட பின்தங்கிய கிராமங்களுக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். அப்பிரதேசத்தை சேர்ந்த அனைத்து மக்களையும் நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து, பாதிப்பபுக்களையும் பார்வையிட்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்காலத்தில் ஏற்படுத்தவிருக்கும் விசேட அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்து முதலமைச்சர் தலைமையிலான குழுவினருடனும் ஆலோசனை ஒன்றும் நட்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவ்விஜயத்தின்போது முதல்வருடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எட்வின் சில்வா கிருஸ்ணாணந்தராஜா, பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் வவுனதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம், உதவித் தவிசாளர் ஜெயராசி ஆகியோர் உடன் சென்றமை குறிப்பிடத்தக்கது.

img_0816

img_0831

img_0798
»»  (மேலும்)

தள்ளாடும் வயதில் தடுமாறும் கூட்டமைப்பு

எம்.ஆர்.ஸ்ராலின்

எக்காரணத்திற்காக எக்காரியம் நடைபெறுகின்றதோ அக்காரணம் இல்லாமல் அக்காரியம் இல்லையென்பது முன்னோர் வாக்கு. புலிகளினால் புலிகளுக்காக உருவாக்கப்பட்ட கூட்டமைப்பின் ஒற்றுமை வேசம் கலைந்துவிட்டது. அதன்படி கூட்டமைப்பின் ஆயுட்காலம் நெருங்கிக்கொண்டிருக்கின்றது. புலிகள் தமது ஏக பிரதிநிதித்துவத்தை காப்பாற்றிக்கொள்ளவும், மக்கள் மீது நிகழ்த்திவந்த அனைத்து அட்டூழியங்களுக்கும் அரசியல் நியாயம் கற்பிக்கவுமே இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினர். அதன்படி பல்வேறு கட்சிகளில் இருந்தும் பல்வேறுபட்ட அரசியல் பின்னணிகளில் இருந்தும் பிரபாகரனின் காலடியில் சரணாகதி அடைந்த அரசியல் முதுகெலும்பற்றவர்களது இணைவிலேயே இந்தக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. தூள்கடத்தல் மன்னர்களும் சொந்தக்கட்;சிக்குள் ஏற்பட்ட சொத்துப்பிரச்சனையில் வகிறிக்கொண்டு வெளியேறியவர்கள் சிலரும் தமது சுயபாதுகாப்புக்கருதி இந்தக் கூட்டமைப்பில் இணைந்துகொண்டது வரலாறு. எப்படியோ புலிகள் தமது கள்ளவாக்கு பலத்தின்மூலம் இவர்களில் 22 பேரை எம்.பி.களாக்கி விட்டனர். அதனூடாக அவர்களது ராஜதந்திர அந்தஸ்துக்களை புலிகள் தமது பணம் சேர்க்கும் கீழ்த்தரமான நோக்கங்களுக்காகவுமே பயன்படுத்தினர். வெளிநாட்டுத் தமிழரிடம் கப்பம் வாங்கும் பிரச்சார செயற்பாடுகளில் பங்குபற்றுதலே இந்தக் கூட்டமைப்பு எம்.பி.களின் கடந்தகால செயற்பாடுகளின் முக்கியமானதொன்றாய் இருந்துவந்துள்ளது. புலிகளது நிகழ்சிநிரலின்படி உருவாக்கப்பட்ட இவர்கள் புலிகளினாலேயே கட்டி மேய்க்கப்பட்டனர். அதற்கப்பால் இந்த 22 பேரிடமும் ஒருமித்த அரசியல் கொள்கைகளோ கோட்பாடுகளோ எந்தவித மண்ணாங்கட்டியும் இருக்கவில்லை. எனவேதான் மு.பி. காலத்தில் இருந்து இவர்கள் தடம்புரளத் தொடங்கியுள்ளனர். புலிகளது அழிவுடன் இந்த கூட்டமைப்பினரின் போலி ஒற்றுமையும் கலையத் தொடங்கியுள்ளது. தமிழ் மக்களுக்கு வழிகாட்ட முனைபவர்கள் தமக்குரிய வழிகாட்டியின்றி தத்தளிக்கும் அவலம் தொடர்கிறது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமக்கென்று ஒரு நிலைப்பாட்டை எடுக்க இவர்களால் முடியவில்லை. தனித்துப் போட்டியிடுவது என்ற தமது முடிவினை கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாத நிலையில் சிவாஜிலிங்கம் அந்த கூட்டை விட்டு பிய்த்துக்கொண்டு வெளியேறிவிட்டார். அவரை ஆதரிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லும் கூட்டமைப்பினர் அப்படியானால் யாரை ஆதரிப்பது என்ற தமிழ் மக்களின் கேள்விக்கு பதிலிறுக்க முடியாத நிலையில் உள்ளனர். 50 வருட அரசியல் அனுபவம் கொண்ட சம்பந்தர் கூட இருதலைக்கொள்ளி எறும்பாக நெளிகின்றார். அவரது தமிழரசுக்கட்சி மற்றும் கூட்டணி பாரம்பரியம் அவரை ஏகாதிபத்திய விசுவாசம் கொண்ட சரத்பொன்சேகா பக்கம் இழுத்தாலும் "தமிழ் மக்களைக் கொன்றொழித்த இலங்கை இராணுவம்" என்று தங்களால் குற்றம் சாட்டப்படும் படையினரை வழிநடத்திய இராணுவத் தளபதிக்கு வாக்களியுங்கள் என்று கேட்க அவர்களுக்கு வக்கில்லை. ஜனாதிபதி ராஜபக்சவை ஆதரிப்பதைவிட வேறு வழியில்லை என்று கட்சிக்குள் முணுமுணுக்கும் சகபாடிகளிடம் சம்பந்தரின் சுட்டெரிக்கும் பார்வை விழுவதாகக் கேள்வி. இந்த நிலையில் கூட்டணி எம்.பி. கள் சிலர் ராஜபக்சவை ஆதரிப்பதாகவும் அதற்கு கைமாறாக எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமது பாராளுமன்ற ஆசனங்களை உறுதிப்படுத்திக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும் கிழக்குமாகாண முக்கிய அரசியல்வாதி ஒருவரிடம் நடையாய் நடப்பதாய்க் கேள்வி. பொங்குதமிழ் மக்கள் படையென்று தினாவெட்டுப் பேசிய சிலருக்கு முள்ளிவாய்க்காலுக்கு பின் நாவடங்கி விட்டது. இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 23 வேட்பாளர்களிலும் யார் யாரை ஆதரிப்பது என்பதை ஏறக்குறைய எல்லாக்கட்சிகளும் முடிவெடுத்து அறிவித்து விட்ட நிலையில் பிரச்சார வேலைகளும் தொடங்கிவிட்டன. ஆனால் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று தம்மை பீற்றிக்கொள்ளும் இந்தக் கூட்மைப்பினருக்குள் ஆயிரம் குத்துவெட்டுக்களும், இழுபறிகளும் இன்றுவரை தொடர்கிறது. இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு வழிகாட்டவும், தலைமையேற்கவும் இவர்களுக்கு என்ன தகுதி உண்டு என்ற கேள்வியை வடக்கு, கிழக்கு மக்கள் முன் பலமாக எழுந்துநிற்கிறது.


»»  (மேலும்)

அலி சாஹீரும் (மௌலானா) அரசியல் பச்சோந்தித்தனம்!!! (பாகம் 1)

எஸ்.எம்.எம் பஷீர்


மௌலானா புலிகளின் புலிகளின் மட்டக்களப்பு பொறுப்பாளர் ரமேஷ் வேண்டிக்கொண்டபடிதான் கருணாவை கொழம்புக்கு கொண்டுவந்ததவர்; அவராக கருனாவை கொண்டுவர தீர்மானிக்கவில்லை . மொத்தத்தில் புலிகளின் கட்டளைப்படியே இவர் அதனை செய்தார். கருணாவை கொழும்புக்கு கடத்திவந்த அலி சாகிர் மௌலானா அமெரிக்காவில் இலங்கை அரசுக்கு எதிராகவும் புலிகளுக்கு எதிராகவும் தனக்கு சர்வதேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகலிடம் தருமாறு விண்ணப்பித்தது, அந்த விண்ணப்பம் தீர்மானிக்கப்பட முன்னர் ராஜரீயகடவுச்சீட்டு பெறும் பதவி ஒன்றினை ( வெகுமதி ) பெற மறுபுறம் கருணா பிறிதொரு பெயரில் ராஜரீய கடவுச்சீட்டினால் பிரித்தானியாவுக்குள் நுழைந்தமைக்காக தண்டனை பெற்றார். இதனை பற்றி நான் டிசம்பர் மாதம் 2007 மாண்டு ஆங்கிலத்தில் ( Diplomacy of Reward and Retribution) என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அக்கட்டுரையின் தலைப்பாக " வெகுமதியும் தண்டனையும் வழங்கும் ராஜதந்திரம்" என்பதாகும். கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையில் ஏற்பட்ட அசாத்திய அரசியல் மாற்றங்கள், தகிடுதித்தங்கள் மீண்டும் இன்றைய நிகழ்வுகளுடன் இக்கட்டுரையை எழுத என்னைத்தூண்டின. இக்கட்டுரை நாயகர்கள் இருவரும் இன்று ஸ்ரீ லங்காவில் இருக்கிறார்கள் அதில் ஒருவர் பிரித்தானியாவிலிருந்து தனது சொந்தப் பெயரில் இலங்கை ஆவணம் பெற்று இலங்கை திரும்பி தேசிய நல்லிணக்க அமைச்சராக இருக்கிறார்; மற்றையவர் தனது பதவி காரணமாக புதிய ராஜரீய கடவுச்சீட்டு பெற்று இப்போது இலங்கை திரும்பியுள்ளார், அன்று காணப்பட்ட ஊடக கருத்துரைகளின் பிரதிபலிப்பாகவே ஒருவருக்கு வெகுமதி மற்றவருக்கு தண்டனை என்று தலைப்பிட நினைத்தேன், ஆனால் இன்று இருவருமே வெகுமதி ( Reward ) பெற்றிருக்கிறார்கள். அலி சாகிர் மௌலானா ஸ்ரீ லங்காவுக்கு செல்வதற்கு முன்னரே நான் இதற்கு முன்னர் முன்னர் எழுதிய "ஹீரோ டு சீரோ" (From Hero To Zero ) கட்டுரையில் இவர் பற்றி பின்னர் எழுதுவேன் என்று குறிப்பிட்டிருந்தேன், இக்கட்டுரை இன்றைய இன்றைய அரசியல் மாற்றங்களையும் தொட்டுசெல்கிறது.

சாகிர் மௌலானாவின் அகதி விண்ணப்பம் தீர்மானிக்கப்படா நிலையில் அமெரிக்க இலங்கை தூதுவராலயத்தில் " மினிஸ்டர்" எனப்படும் ராஜ தூதர் ஆக பொருளியல் பகுதியில் (Economic) நியமிக்கப்பட்ட காலகட்டத்தில் இலங்கை விட்டு ராஜரீய கடவுச்சீட்டில் ( Diplomatic passport ) பிரித்தானியாவுக்குள் நுழைந்த கருணா மீது பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுத்தனர்; அதன் விளைவாய் கருணா சிறிது காலம் தடுப்பு முகாமில் (Detention Camp ) வைக்கப்பட்டார். இருவருமே இன்று இலங்கையின் குடிவரவு குடியல்வுசசட்டத்தின் கீழ் ராஜரீய கடவுச்சீட்டுக்கு உரித்துடயவர்களாக இருக்கிறார்கள்.

மௌலானா அமெரிக்க இலங்கை தூதுவராலயத்தில் மினிஸ்டர் எனும் பதவியில் அவரது அகதி விண்ணப்பம் அமெரிக்க அரசால் தீர்மானிக்கப்படாமல் இருக்கின்றபோது நியமிக்கப்பட்ட போது இலங்கையின் பிரபல ஆங்கிலத்தினசரிகள் இது குறித்து கேள்வி எழுப்பின. செப்டம்பர் மாதம் ௨௦௦7 ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் அறுபத்தி இரண்டாவது அமர்வுகளுக்காக அங்கு சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் குழுவில் சென்றிருந்த ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ. எச். எம் அஸ்வர் அவர்களின் சிபாரிசின் காரணமாகத்தான் சாகிர் மௌலானாவுக்கு அப்பதவி வழங்கப்பட்டதாக எனது செய்தி மூலங்கள் தெரிவித்தன. இவரது நியமனம் குறித்து தி நேசன் ( The Nation ) எனும் கொழும்பு பத்திரிகை தனது தலைப்புச்செய்தியில் "அமெரிக்க அரசும் இலங்கை அரசும் ராஜரீய அமளியில்" (Diplomatic row) என்று மௌலானாவின் நியமனம் குறித்து கேள்வி எழுப்பியபோது. இலங்கையின் வெளிநாட்டு அமைச்சு அப்பத்திரிகை அறிக்கையில் தகவல்கள் அடிப்படை அற்றவை என்றும இலங்கையின் குடிவரவு குடியகல்வு திணைக்களம் இருபத்தி எட்டு டிசம்பர் மாதம் ௨௦௦7ம் ஆண்டு அலி சாஹீருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ராஜரீய கடவுசீடுக்களை வழங்கி விட்டதாக அறிக்கையிட்டனர் ஆனால் தி நேசன் பத்திரிகையின் அமெரிக்க செய்தியாளர் தனது செய்தி உண்மையானது என்று தனது நிலைப்பாட்டிலிருந்து மாறவில்லை. ஆனால் இவரது நியமனம் இவருக்கு இலங்கை ராஜரீய கடவுச்சீட்டு வழங்கப்பட முன்னரும் , அவரது நியமனம் முறையாக அமெரிக்க அரசுக்கு அறிவிக்கப்பட்டு அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அமெரிக்க ராஜாங்க அமைச்சு தனிப்பட்ட அடையாள அட்டைகளை வழங்கமுன்னரும் ராஜரீய அமளி நடைபெற்றது என்று கூறப்பட்டது, அதுவே அன்றைய செய்தியாகவும் இருந்தது. மேலும் இது பற்றி சண்டே டைம்ஸ் பத்திரிகையின் ராஜரீய செய்தி ஆசிரியர் ( Diplomatic Editor ) கருணாவின் கொழும்பு வெளியேற்றத்தை நிகழ உதவிபுரிந்த அலி சாகிர் மௌலானாவை வாசிங்டன் தீ சீ யில் (Washington D C ) உள்ள இலங்கை தூதராலயத்தில் மூன்றாவது உயர்நிலை ராஜரீய பதவியில் நியமித்து வெகுமதி வழங்கி யிருக்கிறது. இதுவரை எப்போதும் நடக்காத ஒன்றை, ஒருவேளை இதுவே முதல் தடவையாக இருப்பதால் இது கின்னஸ் சாதனையை (Guinness Record ) இலங்கை அரசு செய்திருப்பதாக எழுதி இருந்தார். இன்னொருபுறம் இவர் வாசிங்டனில் உள்ள இலங்கை தூதுவராலயத்தில் மினிஸ்டர் ஆக நியமனம் பெற்றபோது இவரது நியமனம் குறித்து அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ரொனால்ட் ரீகனின் சட்டத்தரணி ப்ரூஸ் பைன் ( Bruce Fein ) அமெரிக்காவின் மௌலானா எப். பி.(F.B.I ) எனும் தேசிய உளவுத்துறைக்கு இவருக்கு வழங்கப்பட்ட நியமனம் முறைகேடானது என்று புகார் ஒன்றினை ஏப்ரல் மாதம் மூன்றாம் திகதி ௨௦௦7ல் சமர்ப்பித்திருந்தார். இவரது முறைப்பாட்டில் மௌலானாமீது பல அமெரிக்க தேசிய குடியியல் குற்றவியல் சட்டங்களுக்கு முரணான விதத்தில் அவர் முந்திய பிந்திய விஜயத்தின்போதும் நடந்திருந்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்

இலங்கைக்கு 1987 லில் அமெரிக்காவிலிருந்து "திரும்பி வந்தபின்னர்" மட்டக்களப்பு தேர்தல் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் பரீத் மீராலேப்பை மரணமடைந்த இடத்துக்கு எம்.பி ஒருவரை நியமிக்க ஐக்கிய தேசிய கட்சி விண்ணப்பம் கோரியபோது பலர் விண்ணப்பித்திருந்தனர் ( தபால் மூல விண்ணப்பம்) அதில் இவரும் ஒருவர், ஐக்கிய தேசியக்கட்சியின் அன்றைய செயலாளர் ஹர்ஷா அபெவர்தனா கட்சியின் ஸ்ரீ கொத்தா நேர்முகப்பரீட்சையின் பின்னர் ரிஸ்வி சின்னலெப்பை என்பருக்கு எம்.பி பதவியினை வழங்கினார். இந்த காலகட்டத்தில் நாங்கள் பரஸ்பரம் சந்திக்க நேரிட்டது. அரசியலில் எப்படியாவது நுழைந்துவிடும் தீவிர நோக்கம் அவரிடம் காணப்பட்டது. இவரது இந்த முயற்சி தோல்வியுற்றதும் அவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் சேர்ந்து 1989 ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார், ஆனால் அவரால் சுமார் இரண்டாயிரம் வாக்குகளை மட்டுமே பெறமுடிந்தது , அதற்கான காரணம் அன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அலையின் முன்னாள் அவரால் நீந்த முடியவில்லை. மௌலானா மக்களால் நிராகரிக்கப்பட்டார், திரும்பவும் கொழும்பில் தங்கி வாழத்தொட ங்கினார்; இந்நிலையில் எவ்வாறு அவர் மீண்டும் அரசியலுக்குள் நுழைந்தார்;, எவ்வாறு ரணில் விக்க்ரமசிங்ஹா முஸ்லிகளுக்கு "சத்திய பாதையை" காட்டுவதாக சென்ற பொதுத்தேர்தலில் பிரச்சாரம் செய்தார்; ஏன் அமெரிக்காவிலிருந்து முதலில் வெளியேறினார் என்பதெல்லாம் அரசியலில் தனிமனிதன் என்ற வகையில் அல்லாமல் இன்று சர்வதேச செய்தியாகிவிட்ட விடயமாகும் -தொடரும்.
»»  (மேலும்)

12/27/2009

ஜனாதிபதி தேர்தலுக்கான த.ம.வி.பு கட்சியின் உத்தியோக பூர்வ முதலாவது கூட்டமும் பிரச்சார அலுவலகமும் இன்று திறந்து வைப்பு.

img_0755

நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பாக போட்டியிடகின்ற ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஆதரித்து அவருக்கு ஆதரவு தேடும் த.ம.வி.பு கட்சியின் பிரச்சாரக்கூட்டம் இன்று வாழைச்சேனை புதுக்குடியிருப்பு கலைவாணி கலா மன்ற மைதானத்தில் இடம்பெற்றது. த.ம.வி.பு கட்சியின் உத்தியோக பூர்வ முதலாவது இக்கூட்டத்தில் பெரும் திரளான த.ம.வி.பு கடசியின் ஆதரவாளர்கள் பிரசன்னமாகியிருந்தார்கள். இந்நிகழ்வானது த.ம.வி.பு கட்சியின் முக்கிய ஊறுப்பினர்கள் ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி தேர்தலுக்கான ஐ.ம.சு கூட்டமைப்பின் கல்குடா தொகுதி முகவராக நியமிக்கப்பட்டிருக்கும் த.ம.வி.பு கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மிகப்பிரமாண்டமான முறையில் இக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது இப்பிரச்சார கூட்டத்திற்கு த.ம.வி.பு கடசியின் உயர்மட்ட குழுவில் பெரும்பாலானோர் பிரசன்னமாகியிருந்தார்கள். இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த த.ம.வி.பு கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள், நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளரான மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஏன் த.ம.வி.பு கட்சி ஆதரிக்கின்றது என்பது தொடர்பாக விளக்கமான உரை ஒன்றினையும் நிகழ்த்தியிருந்தார். அவர் தமது உரையில் குறிப்பிட்டதாவது, நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களது வாக்குகளே மிகப்பிரதான செல்வாக்கு செலுத்தும் அதன் அடிப்படையில் கிழக்கு மகாண தமிழ் மக்கள் யாரை ஆதரிப்பது என்ற குழப்பத்தில் உள்ளார்கள் எமது த.ம.வி.பு கடசியானது நன்கு ஆராய்ந்து ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்துள்ளது. அதாவது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களே எமது நாட்டுக்கு சிறந்த தலைவர் எனவும் தமிழ் மக்களாகிய எமது அபிலாசைகளை நிறைவேற்றக்கூடியவருமாக அடையாளம் கண்டிருக்கின்றது. அதனடிப்படையிலேயே இன்று எமது கட்சியானது மக்களாகிய உங்களிடம் ஜனாதிபதி வேட்பாளராகிய மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதரவு தேடி முன்வந்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் இன்று ஓர் சாதாரண சூழல் நிலவுகின்றது என்றால் அதற்கு காரணம் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே, எனவே இனிவருகின்ற காலங்களில் எமது நாட்டிலும், எமது கிழக்கு மாகாணத்தில் நிலையான ஒரு அபிவிருத்தியும் சமாதானமும் நிறைந்து நிற்பதற்கு எமது நாட்டிற்கு சிறந்த ஒரு தலைவர் தேவைப்படகின்றார், அத்தலைவரை தீர்மானிக்கின்ற சக்தி இன்று எமது மக்களின் கைகளிலேயே தங்கியிருக்கின்றது. எனவே இக்கல்குடா தொகுயினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அனைத்து வாக்காள பெருமக்களும் அதிகூடிய வாக்கினை எமது ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு அளிப்பதன் ஊடாக மட்டக்களப்பு மாவட்டம் மாத்திரம் அல்லாது கிழக்கு மாகாணம் உள்ளடங்கலாக எமது நாட்டிலே அதிக பெரும்பான்மை வாக்குகளை அளித்து மகிந்த ராஜபக்ஷ அவர்களையே மீண்டும் ஜனாதிபதியாக்கவேண்டும் எனவும் கெட்டுக்கொண்டார் இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, த.ம.வி.பு கடசியின் பொதுச் செயலாளர் எட்வின் சில்வா கைலேஸ்வரராஜா, த.ம.வி.பு கட்யின் உறுப்பினர் ஜனகன், மற்றும் த.ம.வி.பு கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜெயகிஷன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
img_0749

img_0764

img_0752

img_0755
»»  (மேலும்)

வடக்கு முஸ்லிம்கள் மே மாதம் முழுமையாக மீள்குடியேற்றம்வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட சகல முஸ்லிம்களும் மே மாதமளவில் சொந்த இடங்களில் முற்றாக மீள்குடியேற்றப்படுவ ரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இதற்கு வசதியாக புத்தளத்தி லிருந்து மன்னார் செல்லும் பாதை அடுத்த மாதம் திறந்து வைக்கப்படுமெனவும் ஜனாதிபதி கூறினார். அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் வடமாகாண மாநாடு நேற்று புத்தளம் ஆலங்குடாவில் நடைபெற்றது. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் சுமார் ஐம்பதினாயிரம் பேர் கலந்து கொண்டனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இங்கு தமிழில் உரையாற்றிய ஜனாதிபதி:- முஸ்லிம் மக்களை பணயக் கைதிகளாக வைக்க நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். முஸ்லிம்களை நாம் முழுமையாகப் பொறுப்பேற்கிறோம். முஸ்லிம்கள் எனது சகோதரர்கள். என்னை முழுமையாக நம்புங்கள். முஸ்லிம்கள் தொடர்பாக என்மீது பல்வேறு அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் எதிர்க் கட்சிகளால் சுமத்தப்பட்டன. ஐந்து வேளைத் தொழுகையை நான் நிறுத்தி விடுவேனெனக் கூறினார்கள். இப்போது உண்மை நிலையை நீங்கள் புரிந்திருப்பீர்கள். அவ்வாறான பொய்களெல்லாம் எதிர்க் கட்சிகளினாலும் அதன் தலைவர்களினாலும் பரப்பப்பட்டவை. அவர்களை நம்பாதீர்கள். அவர்கள் உங்களை ஏமாற்றப்பார்க்கிறார்கள்.< நான் கடந்த தேர்தலில் கூறியவைகளை முழுமையாக நிறைவேற்றி இருக்கிறேன். நீங்கள் கடந்த 19 வருடங்களாக இந்தப் பகுதிகளில் அகதிகளாக வாழ்கின்aர்கள். நீங்கள் பட்ட கஷ்டங்களை நான் நன்கறி வேன். அவற்றை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன். முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் புலிகளோடு ஒப்ப ந்தம் செய்தார். அதன் பின்பு, வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விருப்பத்துடன் தான் வெளி யேறினரென்று ஹக்கீமும் அவரது சகபாடி களும் கூறினர். அதன்பின்பு உங்களைப் பற்றி அவர்கள் எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை. இப்படிப்பட்டவர்கள்தான் இப்போது உங்கள் மத்தியில் பேச வருகிறார்கள். இவர்களை நீங்கள் அடையாளம் காண வேண்டும். < ப்படியானவர்கள்தான் இரு இனங்க ளையும் பிளவுபடுத்த முயன்றனர். அது பலிக்கவில்லை. முஸ்லிம்களின் நிம்மதியைக் கெடுத்து அகதிகளாக்கியவர்களை நீங்கள் ஒருபோதும் நம்பவேண்டாம். வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட உங் களது கஷ்டங்களை நான் நன்கறிவேன். அதனால்தான் ஐக்கிய நாடுகள் வரை சென்று பேசினேன். அதேநேரம், மஹிந்த சிந்தனையிலும் வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் குறிப் பிட்டிருக்கிறோம். ஆகவே, தேர்தல் காலங்களில் வந்து பொய் கூறுபவர்களை நம்பாதீர்கள். பொய்களுக்கு என்றுமே அடிபணிந்து விடாதீர்கள். என்றுமே நான் உங்கள் நண்பன். இந்த நட்பு என்றும் தொடரும். என்னை முழுமையாக நம்புங்கள் என்றார் ஜனாதிபதி. அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பற்றிக் குறிப்பிட்ட ஜனாதிபதி, வடக்கு முஸ்லிம் மக்களுக்காக அயராது பாடுபடும் ஒரு செயல்வீரன் ரிஷாட். அவரது பணிக்கு என்றும் உறுதுணையாக இருப்பேன். மார் 3 இலட்சம் தமிழ் மக்களை மிக கண்ணியமாக நடாத்தி அம்மக்களின் தேவைகள் அனைத்தையும் பூரணமாக நிறைவேற்றிக் கொடுத்தவர் அமைச்சர் ரிஷாட். இதனால் எனக்கும் எனது அரசுக்கும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்லபிப்பிராயம் ஏற்படுவதற்கு வழியேற்படுத்திக் கொடுத்தார். அவருக்கு இச்சந்தர்ப்பத்தில் அவரது மக்களின் முன்னிலையிலேயே நன்றி தெரிவிக்கிறேன். மிக இளவயதில் அமைச்சராக உயர்ந்து இன்று வடமாகாண முஸ்லிம்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றுள்ளார். எனது அரசாங்கத்தில் இவர் அமைச்சராக இருப்பது ஒரு சிறப்பான விடயமாகும் என்றும் கூறினார். சந்திரசேன, சம்பிக்க ரணவக்க பிரதியமைச்சர்களான கே.ஏ.பாயிஸ், நிஜாமுதீன், மாகாண அமைச்சர் எம். எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, ஆளுனர் அலவி, எஸ்.பி.திஸாநாயக்க, ஜனாதிபதி ஆலோசகர் அஸ்வர் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

»»  (மேலும்)

வவுனியாவில் 32 சிறுவர் போராளிகள் விடுதலை


வவுனியாவில் சிறுவர் போராளிகளில் 32 பேர் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவதற்காக விடுவிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இந்தத் தகவலை, சிறுவர் புனர்வாழ்வுக்கான ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தயா ரட்நாயக்கா தெரிவித்திருக்கின்றார். வவுனியா பூந்தோட்டம் பகுதியில் செயற்பட்டு வருகின்ற சிறுவர் போராளிகளுக்கான புனர்வாழ்வு நிலையத்தில் இவர்களுக்குப் புனர்வாழ்வுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் புனர்வாழ்வு நிலையத்தை ஒரு தடுப்பு முகாமாகத் தாங்கள் கருதவில்லை என்றும், அது ஒரு பாடசாலையாகவே இயங்கி வருகின்றது என்றும் விடுதலை பெற்றுள்ள சிறுவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

கல்வி கற்பதற்கும், தொழில் பயிற்சி பெறுவதற்கும் அவரவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு இங்கு வாய்ப்புக்கள் அளிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றார்கள்.

இந்தச் சிறுவர்களின் விடுதலை குறித்து கருத்து வெளியிட்ட அவர்களின் புனர்வாழ்வுக்குப் பொறுப்பான ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தயா ரட்நாயக்க அவர்கள், எஞ்சியுள்ள சிறுவர்களும் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.
»»  (மேலும்)

சிவாஜிலிங்கம் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டடார்


இந்தியாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் திருச்சி விமான நிலையத்திலிருந்து திருப்பியனுப்பப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று காலை நாடு திரும்பினார் .

கடந்த ஒரு வார காலம் லண்டனில் தங்கியிருந்த அவர் டுபாய் ஊடாக இந்தியாவிற்கான பயணத்தை நேற்று மேற்கொண்டிருந்த போதிலும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு இந்திய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் டுபாய்க்கு திருப்பியனுப்பப்பட்டார்.

டுபாயிலிருந்து இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கொழும்பு வந்தடைந்துள்ளார்.

திருச்சியில் இலங்கை தமிழர்களுக்கான ஆதரவு மகாநாடொன்று நடை பெறவிருப்பதாகவும் ,அதில் கலந்து கொள்வதற்காகவே அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்ததாகவும் தெரியவருகின்றது.
»»  (மேலும்)

12/26/2009

மீசைவைத்த சிங்களவன் அடங்காத் தமிழன் முடங்கிப்போன முஸ்லிம் எஸ்.எம்.எம்.பஷீர் (பாகம் 15)

வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கெதிரான -தனித்தமிழ் கோஷத்தை - முன்வைத்து நடத்தப்பட்ட தேர்தலுக்கு எதிராக கிழக்கு தமிழர்களும் முஸ்லிம்களும் வாக்களித்தனர் என்பதை நான் சென்ற கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தேன். அதில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலில் முஸ்லிம் தேசத்தை பற்றிய "கிழக்கிஸ்தான்" கோரிக்கை எவ்வித முகாந்திரமுமின்றி வெறும் கவர்ச்சி கோசமாக முவைக்கப்பட்டதை தமிழர்களோ முஸ்லிம்களோ கண்டு கொள்ளவில்லை. அதற்கான நிர்பந்தங்கள் எதுவும் அன்று காணப்படவுமில்லை. மாறாக பதியுதீன் மஹ்மூத் அவர்களும் ராஜன் செல்வநாயகமும் சிறீலங்கா சுதந்திரகக்ட்சியில் ஒரே தேர்தல் தொகுதியில் தங்களது சமூகங்களை தனித்தனியாக முன்வைத்து தேசிய அரசியலை முன்னெடுத்தபோதும் தமிழ் மக்களும் ஏறாவூர் முஸ்லிகளும் அதிகளவில் அன்று ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட மறைந்த டாக்ட்ர். பரீத் மீராலெப்பைக்கு வாக்களித்தனர். இந்த தேர்தலில் அதிக வன்முறைகள் இடம்பெற்றன என்பதுடன் காத்தான்குடியில் சத்தார் என்பர் கொடூரமாக வாளினால் வெட்டப்பட்டார்.

முஸ்லிம்களுக்கிடையில் இடம்பெற்ற மிக துரதிஷ்டமான அரசியல் வன்முறைகள் ஏறாவூரிலும் காத்தான்குடியிலும் இடம்பெற்றன.பதுயுதீன் மஹ்மூத் அவர்கள் "கிழக்கிஸ்தான்" கோஷத்துடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. மாறாக இந்த மந்திர கோஷம் எந்தவித தாக்கத்தையும் ஏற்பபடுத்தவில்லை என்பதுடன் எதை முன்வைத்தவருக்கோ அல்லது வாக்காளர்களுக்கோ அதன் தாற்பரியம் புரிந்திருக்கவில்லை என்பதுடன் தமிழ் சிங்கள சமூகங்கள் இதனை கண்டுகொள்ளவில்லை. அன்றைய அரசியல் பிரச்சார மேடைகளில் முஸ்லிம்கள் பற்றிய சர்வதேசிய பலம், பாரம்பரியம் அவர்களது உணவு உடை பற்றியெல்லாம் பதியுதீன் அவர்கள் பெருமிதம் கொள்ளச்செய்யும் வகையில் கருத்துக்களை முன்வைத்தார்.

இவை முஸ்லிம்களின் வாக்குகளை அவரது நாடளாவிய கல்விச்சேவையின் பின்னணியில் பெற்ற சமூக பலப்படுத்தலின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முக்கியத்துவம் பெற்றது. அதற்கமைய முதற்தடவையாக மட்டக்களப்பு தொகுதியில் களமிறங்கிய பதியுதீன் அவர்கள் (21.275)வாக்குகளைப் பெற்றமை ஒரு சாதனை என்பதே பொருத்தமானதாகும். அன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவிய அரசில் சு10ழலில் முக்கிய இரு சம்பவங்களை அன்று நிலவிய இன ஐக்கியத்திற்காக சுட்டிக்காட்டப்பட வேண்டும். மட்டக்களப்பு காளியன்காடு சாஹிராக் கல்லூரி கட்டட நிர்மாணத்துக்காக அன்று மட்டக்களப்பு ராஜன் செல்வநாயகம் எம்.பி நிதி உதவி வழங்கியமையும் மட்டக்களப்பு அரசடிப்பிள்ளயார் கோவில் வீதியில் முஸ்லிம் கனிஷ்ட பாடசாலை கட்டப்பட நிதிஉதவி வழங்கிய ராஜதுரை எம்.பி யும் அன்று செய்த உதவிகள் அம்மக்களால் மறக்கப்படமுடியாதவை.

ஆனால் துரதிஷ்டமுகமாக தமிழரின் ஆயுதப்போரட்டம் தொடங்கி முஸ்லிம்மக்களை வடக்கு கிழக்கிலிருந்து வெளியேற்றும் யாழ் மையவாத தமிழ்; இனவாத அரசியல் ஆயுதப்போராட்டம் முஸ்லிம்களை இன்று சாஹிராக்கல்லூரியை மட்டுமல்ல அரசடிப்பிள்ளயார் கோயில் வீதி பாடசாலையும் இழந்த நிலையை தோற்றுவித்திருக்கிறது. கலாநிதி பதியுதீன் அவர்கள் தன்னை என்றும் ஒரு இலங்கையனாக அடையாளப்படுத்தலில் அவ்வாறு வீரியத்துடன் செயல்படுவதில் என்றுமே உறுதியாகவிருந்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் அன்று நிலவிய அரசியல் சமூக பொருளாதார சு10ழ்நிலைழ்நிலை நிலவுடமை சமூக ஆதிக்க வர்க்கங்கள் என்பனவற்றின் செல்வாக்குகள் மிக ஆழமாக பார்க்கப்படவேண்டும்.

பாகிஸ்தான்" என்ற தனித் தேசத்துக்கான கோரிக்கை எவ்வாறு கருக்கொண்டது என்பதை பின்னோக்கிப் பார்த்தால் இங்கு சுவாரஸ்யமாக இருக்கும் 1930 ல் சேர். அல்லாமா இக்பால் ( Sir. Allama Iqbal ) இந்தியாவின் முஸ்லிம்களை அதிகமாகக்கொண்ட எல்லைப்புற மாகாணங்களை உள்ளடக்கி தனி முஸ்லிம் தேசம் (பாகிஸ்தான் ) பற்றி முதன் முதலில் கருத்தியலை முன்வைத்தார். பின்னர் 1933 ல் சௌத்ரி ரஹ்மத் அலி (Chaudhry Rahmat Ali ) ) எனும் கேம்பிரிட்ஜ் பல்கலைகழக (University of Cambridge) முஸ்லிம் மாணவர்குழுத்தலைவர் இந்திய முஸ்லிகளின் உள்ளார்ந்த முரண்பாடுகளுக்கும் பிரச்சினைகளுக்கும் ஒத்துக்கொள்ளக்கூடிய தீர்வு பாகிஸ்தான் எனும் தந்தையர் நாடு உருவாவதாகும் என்ற பிரேரணையை முன்வைத்தார்.இந்த பாகிஸ்தான் கோரிக்கை உயிர்ப்பு பெற்றபோது ஈ வே. ரா ( ராமசாமி நாயக்கர்) தமிழ் நாட்டில் இதற்கு ஆதரவளித்தார். ஆனால் சுவாரசியமாக பாகிஸ்தான் உருவாக முன்னரே மரணித்துவிட்ட அல்லாமா இக்பால் இஸ்லாமிய மத அடிப்படையிலான தேசிய வாதம் கடந்த இஸ்லாமிய சர்வதேசிய கருத்தினையும் கொண்டிருந்தார். இவ்வாறான கருத்துக்கள் அவர் பல முஸ்லிம் நாடுகளுக்கு விஜயம் செய்த பின்னரான கருத்தாகவும் இருக்கல்லாம். எனவேதான் இவர் தனது பார்சிய கவிதையொன்றில்

"ஹார்ஹே முல்க் மில்கே மாஸ்

கே முழ்கி ஹுதாயெ மாஸ்:

" ஒவ்வொரு நாடும் எனது நாடே அந்த நாடும் இறைவனின் நாடே" குறிப்பிட்டிருந்தார்.

1940ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இடம்பெற்ற நீதிக்கட்சியின் சார்பில் திராவிடநாடு கோரிக்கையை ஈ .வே.ரா பெரியார் முவைத்தார் . இது "திராவிடஸ்தான்" என்று அழைக்கப்பட்டாலும் இது அடையப்படமுடியாத வெறும் கோரிக்கையாக காலாவதியாகிப்போனது. ஆனால் இந்த "கிழக்கிஸ்தான்" கோரிக்கை வெறும் வெத்துக் கோஷமாக அந்த பொதுத்தேர்தலுடன் மறந்தும் போய்விட்டது. தேசிய அரசியலில் தமது பங்களிப்பை செய்து பயன் பெறுகின்ற முஸ்லிம் அரசியல் சமூகம் அன்று காணப்பட்டது. தமிழரின் தேசிய அரசியலுக்கெதிரான சு10ழலில் தமிழ் அரசுக்கட்சியிலிருந்து வெளியேறிய முஸ்லிம் அரசியல் வாதிகள் தமிழ் தேசிய வாதிகளின் கட்சியான தமிழரசுக்கட்சியினரால் "தொப்பி புரட்டிகள்" என்று இனவாத ரீதியில் பரிகசிக்கபட்ட காலகட்டத்தில்தான் தமிழர் கூட்டணியிலும் அஷ்ரப்பும் அவரது சகாக்களும் இணைந்து (1977ல்) தமிழ் ஈழக்கோரிக்கைக்கு குரல் கொடுத்தனர்.

ஆனால் தமிழர் கூட்டணியினரின் குறுந்தேசிய அரசியல் வஞ்சகத்தனத்தை கிழக்கு தமிழ் அரசியல் வாதிகள் தெளிவாக அன்று புரிந்துகொண்டனர். அதனால் அவர்களும் யாழ் மையவாத அரசியல தலைமத்துவங்களால் "துரோகிகள் " என்று பின்னர் அழைக்கப்பட்டனர். இந்த கூட்டணியினரின் "தமிழ் பேசும் மக்கள்" எனும் பொதுமை படுத்தும் தந்திர அரசியல் அணுகுமுறையை அனுபரீதியாக அஸ்ரப பட்டறிவு மூலம் புரிந்து கொண்டார். பின்னர் ஆயுதப்போராட்டமாக தமிழர் வடக்கு கிழக்கு தமிழர்கள் ஒன்றினைந்து ( அரசியல் ரீதியில் தமிழர் கூட்டணி ஒன்றினைந்தது போல்) போராட்டம் நடத்தி பின்னரும் கிழக்கு தமிழர்கள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்து பிளவுபட்டனர்.

இப்பிளவு கருணா எனும் முரளீதரன் பிள்ளையான் எனும் சந்திரகாந்தன் போன்ற முக்கிய புலிகளின் உறுப்பினர்களால் ஏட்படுத்தப்பட்டுள்ளது. இந்த அனுபங்கள் ஊடாக வரலாறு வேறுவிதமாக திரும்பி நிகழ்ந்துள்ளது என்றாலும் பொருத்தமாகும். மீண்டும் தமிழ் பேசும் மக்கள் என்ற இனிப்பு கலந்த குளிசையை தமிழர் கூட்டணியின் இன்றைய புதிய முகமான தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது திம்புஎன்னும் பழைய கள்ளை புதிய மொந்தையில் அடைத்துக்கொண்டு முஸ்லிகளின் கிழக்கு அரசியலை தளமாகக் கொண்டு இயங்கும் முஸ்லிம் காங்கிரசை அனைத்துக்கொண்டு அல்லது பரஸ்பரம் இருபகுதியினரும் இணைந்துகொண்டு அரசியல் செய்வதென்பது எவ்வாறு அஸ்ரப் தமிழீழக்கோரிக்கைக்கு கூட்டணி அமைத்த அதே தவறாக எதிர்கால அரசியலில் பார்க்கப்படும்.

இன்றுவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனதும் அவரது சகபாடிகளினதும் சகுனி அரசியல் குறித்து முஸ்லிம்கள் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும். ஏனெனில் பிரபாகரன் கொல்லபபட்டபின்னர் அடுத்த இரு மாதத்துள் சம்பந்தன் பங்குகொண்டு உரையாற்றிய வவுனியா உள்ளூரரட்சி மன்றத்தேர்தலின்போது "தமிழர் ஆயுதம்போரட்டம் வட கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகத்தில் சுயநிர்ணய உரிமையை அடைந்து கொள்வதற்கான அரசியல் போராட்டத்தின் ஒரு பகுதியே. ஆனால் தமிழ் மக்களின் ஆரசியல் போராட்டம் தமிழ் மக்களின் சட்ட பூர்வமான அரசியல் அபிலாசைகள் அடையப்படும் வரை முன்னேடுக்கப்படும் " ( Tamil militancy was a part of the political struggle of the Tamil people to achieve the right to self- determination in the traditional homeland of the Tamil people in the northeast. ..But the political struggle of the Tamil people would go on till the legitimate political aspirations of the Tamil people are achieved” ) என்று குறிப்பிட்டு இருந்தார். இவர் தான் சமாதான காலத்தின் போது மூதூரில் அங்கு இடம்பெற்ற சிறு சிறு இன முரண்பாட்டு சம்பவங்களுக்கு ஒசாமா படை காரணம் என்று புலிகளின் இணையத்தளம் கற்பிதம் பண்ணி சர்வதேச ரீதில் முஸ்லிகளுக்கு அபகீர்த்தி ஏற்படுத்த முற்பட்டபோது அதற்கு இலங்கையின் "தமிழ் பேசும் மக்களின்" அரசியல் பேசும் சம்பந்தன் ஒத்து ஊதியவர் என்பதை முஸ்லிம் காங்கிரஸார் மறக்கலாம்.

ஆனால் முஸ்லிம் மக்கள் மறக்க மாட்டார்கள். இந்த தமிழ் இனவாத அரசியலுல் முஸ்லிம் மக்களை மீண்டும் இழுக்கும் முயற்சிக்கு துணை போகும் முஸ்லிம் அரசியலை மக்கள் அடையாளம் காண வேண்டும்.


»»  (மேலும்)

இயேசுக் கிறிஸ்து பேசிய மொழிசிரியாவில் இருக்கின்ற மூன்று கிராமங்களில் உள்ள குடும்பங்களால் மாத்திரமே இந்த மொழி தற்போது பேசப்படுகின்றது.அறமைக் - இயேசுக் கிறிஸ்து பேசிய மொழியிது. சிரியாவில் உள்ள கிறிஸ்தவ சமூகத்திரின் மத்தியில் மாத்திரம் பேசப்படுகின்ற இந்த மொழி அண்மைக்காலத்தில் எழுச்சி பெற்றதாக உணரப்படுகின்றது.

சிரியாவில் இருக்கின்ற மூன்று கிராமங்களில் உள்ள குடும்பங்களால் மாத்திரமே இந்த மொழி தற்போது பேசப்படுகின்றது. அதில் ஒரு கிராமம் மலோவ்லா.

இந்த அறமைக் மொழியைப் அழியவிடாமல் காப்பாற்றி பிறந்தது முதலே இந்த மொழியைக் கற்று அதில் பேசிவருகின்ற சுமார் பதினையாயிரம் பேரில் ஒருவர் ஜோர்ஜ் றிஷ்கலா. இந்த மொழியை அதன் எழுத்து வடிவத்தில் கற்பிப்பதை அவர் ஊக்குவிக்கிறார்.

ஆண்டவரே தனது மக்களுக்கான போதனைகளை அறமைக் மொழியில்தான் நிகழ்த்தியுள்ளார் என்றும் தான் சிலுவையில் அறையப் பட்ட போது இறுதியாக அவர் பேசியதும் இந்த மொழியில்தான் என்றும் றிஷ்கலா கூறுகிறார்.

அறமைக் மொழியை எழுதப், படிக்கக் கற்பிப்பதற்காக ரிஷ்கலா மூன்று வருடங்களுக்கு முன்னதாக ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தார்.அவரால் நடத்தப்படும் ஒவ்வொரு வகுப்பிலும் சுமார் 100 மாணவர்கள் கற்கிறார்கள்.

சிரியாவில் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் பல நூற்றாண்டுகளாக அருகருகே வாழ்ந்துவருகிறார்கள். ஒருவர் மற்றவரது மத நிகழ்வுகளை கொண்டாடுவதும் வழக்கம்.

அந்த வகையில் விவிலிய காலத்து மொழியான அறமைக்கின் புத்துயிர்ப்பும் இந்த நாட்டின் வரலாற்றுச் செழுமையில் மேலும் ஒரு படிமமாக அமையும்.

»»  (மேலும்)

சுனாமி இலங்கையை தாக்கி இன்றுடன் ஐந்தாண்டு பூர்த்தி


சுனாமி பேரலை இலங்கையைத் தாக்கி இன்றோடு ஐந்தாண்டுகள் நிறைவடைகின்றன.

இந்தப் பேரலைகள் இலங்கை யின் 11 கரையோர மாவட்டங்களில் வாழ்ந்த சுமார் 39 ஆயிரம் பேர்க ளின் உயிர்களைக் காவு கொண்ட துடன், கோடிக் கணக்கான ரூபாய் பெறும தியான சொத்துக்களையும் அழித்தன.

இந்தப் பேரழிவை வருடா வருடம் நினைவு கூரும் வகையில் இத்தினத்தை தேசியப் பாதுகாப்பு தினமாக அரசாங்கம் பிரகடனப் படுத்தியுள்ளது.

அந்த வகையில் இவ்வருட தேசிய பாதுகாப்பு தினத்தின் பிரதான வைபவம் குருநாகல் நகரில் பிரதமர்

ரத்னசிறி விக்கிரமநாயக்கா தலைமையில் நடைபெறுகின்றது. இதேவேளை சுனாமி அனர்த்தம் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டம் உட்பட சுனாமி பேரலை அனர்த்தத்திற்கு முகம் கொடுத்த சகல மாவட்டங்களிலும் இன்று மத வழிபாடுகளும், ஆராதனைகளும் விசேட துஆ பிரார்த்தனைகளும் நடை பெறுகின்றன. அன்னதானங்களும் வழங் கப்பட ஏற்பாடாகியுள்ளன.

இதேநேரம் சுனாமி பேரலை அனர்த்தம் உட்பட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 9.25 மணி முதல் காலை 9.27 வரையும் மெளனமாக இருக்குமாறு அரசாங்கம் நாட்டு மக்களைக் கேட்டுள்ளது.

கல்லடி நாவலடியில் நiசுனாமி பேரலை தாக்கியதில் உலகு முழுவதும் உயிர் நீத்தவர்களுக்காக செலுத்தப்பட இருக்கும் அஞ்சலி நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து அஞ்சலி செலுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணசபையில் நேற்று நினைவஞ்சலி செலுத்தபடப்டது.

கிழக்கு மாகாண சபையில் கடந்த வியாளன்(நேற்று) அன்று மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது, பிரதம செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் செயலக செயலாளர்கள், ஊழியர்கள் மற்றும் ஏனைய அமைச்சுக்கான சேயலாளர்கள் ஊழியர்களும் கலந்து இத்தினத்தை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினர்.»»  (மேலும்)

அச்சகம் மீண்டும் த.ம.வி.பு கட்சிக்கே. மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு.

கடந்த ஒரு வருட காலமாக த.ம.வி.பு கட்சிக்கு சொந்தமான மட்டக்களப்பு கோவிந்தன் வீதியில் அமைந்துள்ள அச்சகம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் தேசிய நல்லிணக்க அமைச்சர் கருணா அவர்களால் தொடரப்பட்ட மேற்படி வழக்கானது இன்று(24.12.2009) தீர்ப்புக்காக எடுக்கப்பட்டது. இத்தீர்ப்பின் பிரகாரம், குறித்த அச்சகமானது த.ம.வி.பு கட்சிக்கே சொந்தமானது என மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அமைச்சர் கருணா அவர்களால் தொடரப்பட்ட வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழலை பத்திரிகையினை வெளியிட்டு வந்த அக்குறித்த அச்சகமானது தமக்கே சொந்தமானது எனவும், தானே அனைத்து உடமைக்கும் சொந்தக்காரர் எனவும் குறிப்பிட்டு மேற்படி வழக்கினை தொடர்;திருந்தமை குறிப்பிடத்தக்கது, ஆனால் கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்ற வாதப் பிரதிவாதங்களின் அடிப்படையில் இன்று இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. இத்தீர்ப்பின் பிரகாரம் நேற்றிலிருந்து அச்சகமும், அதில் உள்ள அனைத்து சொத்துக்களும் த.ம.வி.பு கட்சிக்கே உரித்தானது என தீர்ப்பளிக்கப்பட்டது. அத்தோடு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் அச்சகத்தை உத்தியோகபூர்வமான திறந்து வைத்து தமது அச்சக வேலைகளை ஆரம்பித்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை பட்டாசுகள் கொழுத்தி மக்கள் வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.
img_0519

img_0528

img_0534

img_0547
»»  (மேலும்)

12/25/2009

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா? (சாகரன்

1970 களில் தமிழ் மிதவாக கட்சிகளின் பாராளுமன்றத் தேர்தல் தோல்வியும், அதனைத் தொடர்ந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தோற்றமும், வட்டுக்கோட்டைத் தீர்மானமும் இதன் அடிப்படையில் அமைந்த 1977 தேர்தல் வெற்றியும் தொடர்ந்த ஐக்கிய தேசியக் கட்சியுடனான நட்பும், மாவட்டசபை ஏற்பும் ஆயுதம் எந்திய இயங்கங்களின் ‘புதிய’ தலைமையை நோக்கி தமிழ் பேசும் மக்களின் தலைமையை இடம் பெயர வைத்தது என்பது இலங்கை தமிழ் பேசும் மக்களின் வரலாறு. இன்றும் 35 வருடங்களுக்கு பின்பு இதே மாதிரியான ஒரு நிலமையை நோக்கி தமிழ் பேசும் மக்களின் தலைமை சக்தி நகர்வதற்குரிய வாய்ப்புக்கள், முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன. புலிகள் ஏனைய சகல விடுதலை இயக்கங்களையும், வெகு ஜன அமைப்புக்களையும் தமழ் பிரதேசங்களில் செயற்படவிடாமல் முடக்கியும் தமிழர் விடுதலைக் கூட்டணியை ‘இல்லாமல்’ செய்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கி தான் மட்டும் ஏகபோகமா இருந்து எல்லாமுமாகி நின்று, இன்று ஏதும் இல்லாமல் போய்விட்ட நிலையில் மீண்டும் ஒரு புதிய அரசியல் தலைமை சுழற்சிக்குள் தமிழ் பேசும் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்;. இனி ஏற்படப்போகும் ‘புதிய தலைமை’ கடந்த கால வரலாற்றை உள்வாங்கி தன்னை கட்டமைத்து சரியான முற்போக்கான வெற்றித் தலைமையாக உருவெடுக்குமா? என்பதே எம்முன் எழுந்திருக்கும் இன்றைய பிரதான அரசியல் கேள்வி ஆகும். 1970 ஆண்டு இலங்கையில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழரசு கட்சி, தமிழ் காங்கிரஸ் தலைவர்கள் பலரின் தோல்விகள் அவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. குறிப்பாக அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், இராசமாணிக்கம், தங்கத்துரை போன்றோரின் தோல்விகள் அவர்களை நிலைகுலைய வைத்தது. தமது எதிர்கால பாராளுமன்ற பதவிகள் பற்றி சிந்திக்க வைத்தது. இவர்களின் சிந்தனையெல்லாம் தமிழ் மக்களைப்பற்றியல்ல. தமிழ் மக்களின் எதிர்காலத்தைப் பற்றியும் அல்ல. மாறாக தமது தேர்தல் தோல்விகளைப் பற்றியே. மீண்டும் தமது நாற்காலிகளை பிடிக்க என்ன செய்யலாம்? என்பதைப்பற்றி. தமிழ் மிதவாத பிற்போக்கு தலைமைமைகள் ஐக்கிய தேசிய கட்சியின் நண்பனாக இருந்து தமிழ் மக்களுக்கு துரோகம் செய்து வந்ததற்கு மக்கள் நல்ல பாடம் புகட்டிவிட்டார்களோ என்று அவர்களை பயம் அடையச் செய்தது. இவ் 1970 தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த சிறீமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான இடதுசாரி ஐக்கிய முன்னணி அரசாங்கம் அறிவித்த பல்கலைக்கழக அனுமதிக்கான ‘தரப்படுத்தல்’ என்ற விடயத்தை இறுகப் பிடித்தனர் தமிழ் மிதவாத பிற்போக்கு தலைமைகள். யாழ்பாண மத்தியதர வர்க்க மக்களின் பெரும் மூலதனச் செயற்பாடு தம் பிள்ளைகளை பல்கலைக்கழகம் வரை அனுப்பி வாழ்கையில் வெற்றி? அடையச் செய்தல் ஆகும். இச்செயற்பாடு அரசு செயற்படுத்திய தரப்படுத்தலால்; அதிகம் பாதிப்படைந்தது. இதில் பெருவாரியாக பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் மாணவர்கள் யாழ்பாணத்து மாணவர்களே. இதேபோல் கொழும்பு மாவட்ட (சிங்களம் பேசும்) மாணவர்களும் பாதிக்கப்படனர். பிரதேசரீதியான தரப்படுத்தலில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய (கல்வியில்) பின்தங்கியிருந்த தமிழ் மாவட்ட மாணவர்கள் பலன் அடைந்தனர் என்பது உண்மை நிலையை தமது சுயநலத்திற்காக வசதியாக மறைத்தே வைத்திருந்தனர் தமிழ் மிதவாத பிற்போக்கு தலைமைகள். ஆனால் இன விகிதாசார தரப்படுத்தலினால் தமிழ் பேசும் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர் என்பது மறுப்பதற்கில்லை என்பது இங்கு கவனிக்கப்படதக்கது. இதே வேளை இடதுசாரி ஐக்கிய முன்னணி அரசினால் அறிமுகப்படுத்திய சுதேசிய உற்பத்தியை ஊக்குவித்தல் என்ற பொருளாதாரக் கொள்கையினால் யாழ்பாணத்து விவசாயிகளின் பொருளாதாரம் மட்டும் அல்ல முழு இலங்கையும் உணவு உற்பத்தியில் தன்னிறவை நோக்கி எகிறிப் பாய்ந்ததை தமிழ் பேசும் மக்களின் தலைமைகள் முன்னிறுத்தவில்லை மாறாக பாணுக்கும், வெளிநாட்டு துணி வகைகளுக்கும், அரிசியிற்கும் சங்கக் கடையில் வரிசையில் மக்கள் நின்றதை முன்னிலைப்படுத்தினர் இவர்கள். கூடவே கள்ளக்கடத்தல் மூலம் இந்திய சரக்குகளை(வெளிநாட்டு) இலங்கைக்கு கடத்தி வருவதை இவர்கள் மறைமுகமாக ஆதரித்தனர். தமிழ் மக்களின் மிதவாதக் கட்சிகளிலும் யாழ்ப்பாண மேட்டுக்குடியினரின் மேலாதிக்கமே மேலோங்கி நின்றது என்பது உண்மையே. எனவே யாழ் மேட்டுக் குடியினரின் அபிலாஷைகளை பிரதிபலிக்கும் தமிழ் மிதவாத கட்சிகளான தமிழரசுக்கட்சி, தமிழ் காங்கிரஸ் என்பன தரப்படுத்தல் என்பதனை தமது கரங்களில் தூக்கிப்படித்து தமிழ் இளைஞர்களுக்கு உணர்சியூட்டல் என்ற விடயத்தை மிகவும் இலாவகமாக செய்தன. இதற்கு இலங்கையை ஆண்டுவந்த பேரினவாத அரசுகளின் செயற்பாடுகளும் உறுதுணையாக இருந்தன. ஐதேக ஆட்சியாளர்களால் தமது ஆட்சிக்காலங்களில் நடத்திவரப்பட்ட தமிழ் பேசும் மக்களுக்கெதிரான இனக்கலவரங்களும் தமிழ் இனவாதத்தை தூக்கிப்பிடிக்க நிறையவே உதவி செய்தன. பேரினவாத தலைமைகளுக்கும் தமது பாராளுமன்ற நாற்காலிகளை இறுக்கப்பற்றிகொள்ள இனவாதமே இலகுவான ஆயுதமாக இருந்தது. சிங்களம் பேசும் உழைக்கும் வர்க்கத்தையும், தமிழ் பேசும் உழைக்கும் வர்க்கத்தையும் இணையவிடாமல் தடுபதில் அவர்கள் வெற்றிகாண்பதற்கு தமது பேரிவாத சிந்தனையை சிறுபான்மை இனத்தின் மீது ஏவுவதில் பின் நிற்கவில்லை. தமிழ் பிரதேசங்களை பிரித்தாளும் கொள்கையில் ஆரம்பித்து திட்மிட்ட குடியேற்றம், இனக்கலவரம் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள் டிஎஸ் செனநாயக்காவில் ஆரம்பித்து இன்றுவரை தமது தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை அவ்வப்போது அரகேற்றி வந்தனர், வருகின்றனர்;. அண்மையில் ஐக்கிய தேசியக்கட்சியின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவின் தமிழ், முஸ்லீம் மக்கள் இலங்கைக்கு வந்த ‘விருந்தாளிகள்’ என்று குறிப்பிட்டதும் இதன் தொடர்சியாகத்தான் பார்க்க முடியும். ஆனாலும் தமிழ் தேசிக் கூட்டமைப்பு வரையிலான தமிழ் மிதவாத தலைமைகள் இதே ஐக்கிய தேசியக் கட்சியுடன்தான் நட்பு பூண்டுவந்தன, வருகின்றன என்பது துர்அதிஷ்டவசமானது, துரோகத்தனமானது, அயோக்கித்தனமானது. தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் வென்றெடுக்கப்படாமல் போனதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணியாகும். 1970 இல் ஏற்பட்ட பாராளுமன்ற தேர்தல் தோல்வியில் இருந்து உதித்ததுதான் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற புதிய மிதவாத தலைமை. இதன் தொடர்சியாக உருவாக்கப்பட்ட வட்டுக் கோட்டைத் தீர்மானம் எல்லாம். தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்னைகளுக்கான தீர்வு என்ற அடித்தளத்தில் இருந்து இது தோற்றிவிக்கப்பட்டதாக காட்டிக் கொள்ளவதற்காக முன்வைக்கப்பட் கோஷம் ‘தனிநாடு(தமிழ் ஈழம்)’, ‘ஆண்டபரம்பரை ஆள நினைப்பதில் தவறு ஒன்றும் இல்லையே’, ‘தமிழனுக்கு ஒரு நாடு இல்லை என்பதினால் தனிநாடு (தமிழ் ஈழம்) கேட்கின்றோம்’ என்பதெல்லாம் வெறும் உணர்சியூட்ட பாவிக்கப்பட்ட கோஷங்களே! பிற்போக்கான கோஷங்களே! பிழையான தத்துவார்த்த கோஷங்கள் இவை. மிழ் பேசும் மக்கள் இலங்கையில் இரண்டாம்தரப் பிரஜைகளாக உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் இருந்து வருகின்றனர் என்பதும் உண்மையே. இனக்கலவரங்கள் மூலம் தமிழ் பேசும் மக்கள் பாரதூரமான பாதிக்கப்பட்டு வந்தனர் என்பதும் உண்மையே. பிரிட்டிஷ் அரசு இலங்கைக்கு ‘சுதந்திரம்?’ வழங்கிவிட்டு செல்லும் போது தமிழ் பேசும், சிங்களம் பேசும் தொழிலாள வர்க்கங்களை தொடர்ந்து ஐக்கிப்படவிடாமல் இருபதற்குரிய பிரித்தாளும் தந்திரத்தை பாவித்து முரண்பாடுகளை திட்டமிட்டு ஏற்படுத்திவிட்டு சென்றதும் உண்மையே. இலங்கையில் இருக்கும் இடதுசாரிகள் பேரினவாதத்திற்கு எதிராக ஐக்கியப்பட்டு அதேவேளை சிறுபான்மை தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சனையை சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அணுகத் தவறியமையினால் சிங்கள, தமிழ் பேசும் உழைக்கும் வர்க்கங்களை ஐக்கியப்படுத்தி இலங்கையில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் சம, சகவாழ்வை உறுதிப்படுத்தும் போராட்டங்களுக்கு தலைமை கொடுக்க முடியாமல் பலவீனப்பட்டு போயினர். அன்றைய காலகட்டத்தில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு பிரச்சனை இல்லையா? நிறையவே இருந்தன. ஒரு சிறுபான்மை தேசிய இனத்திற்கு மறுக்கப்பட்ட அரசியல் உரிமை என்ற பிரதான பிரச்சனை இருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் வட்டுக் கோட்டைத் தீர்மானமும், அதனைத் தொடர்ந்த 1977 ஆண்டு பொதுத் தேர்தலில் முன்வைக்கப்பட்ட தனிநாட்டிற்கான அங்கீகாரம் கோரல் என்ற கோஷமும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் உருவானவை அல்ல. இவை வெறும் பாராளுமன்ற நாற்காலிகளைப் பிடித்து பதவிகளைப் தக்கவைத்துக் கொள்ளல் என்ற சுயநலத்தின் அடிப்படையில் மட்டும் உருவானவவை. அவர்களின் விருப்பின்படி 1977ம் ஆண்டு தேர்தலில் வடக்க கிழக்கு தமிழ் பேசும் மக்களின்; அமோக ஆதரவுத்தளத்தின் மத்தியில் தமிழர் விடுதலைக் கூட்டணி வெற்றியீட்டியது. இதனைத் தொடர்ந்து வழமைபோல் ஐதேக யுடன் தனது நட்புப்பாலத்தை விரிவாக்கி தனிநாட்டுக் கோரிக்கையை கிடப்பில் போட்டுவிட்டு மாவட்டசபையை தமக்கு வாக்களித்த மக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்காமல் ஏற்றதுதான் தமிழர் விதலைக் கூட்டணி செய்ய அரசியல் காட்டிக்கொடுப்பு, துரோகத்தனம். 1977 ம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் பெறும் வாக்குக்கள் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்கள் பிரிந்து செல்வதற்கான அங்கீகாரத்தை தமிழ் மக்களிடம் கோரி இதனை சர்வ தேசத்திற்கு எடுத்துக்காட்டும் ஒரு தேர்தலாக கருதிய யாழ் பல்கலைகழக மாணவர்கள் இரு கிழமை தமது விரிவுரைகளை தவிர்த்து வடக்கு கிழக்கு எங்கும் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்து இவ் வெற்றிக்கு உழைத்தனர். தேர்தலில் வெற்றியீட்டிய தமிழர் விடுதலைக் கூட்டணியினர் ஜேஆர் அரசுடன் ‘இணங்கி’ மாவட்டசபையை ஏற்றவுடன் அதனைக் கண்டித்து யாழ்பல்கலைக்கழக மாணவர்கள் அமிர்தலிங்கத்தின் கொடும்பாவியை எரித்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணியினர் ஆத்திரம் அடைந்தனர். பல்கலைக்கழக மாணவர்களின் நியாயமான எதிர்ப்பு போராட்டததை சீர்தூக்கிப் பார்க்கத் தவறினர். மாணவர்களுக்கு எதிராகவும் செயற்பட விளைந்தனர். அன்றைய காலகட்டத்தில் மிகவும் மோசமான இனவாதியான சிறில் மத்தியூ பாராளுமன்றத்திலும் ஏனைய இடங்களிலும் பேசும் போது கூறுவான் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் குதிரை ஓடி பல்கலைக்கழகம் வந்தவர்கள் என்று. அதனை சிலகாலம் கழித்து யாழ்பல்கலைக் கழக முன்வீதியில் மேடையமைத்து தமிழர் விடுதலைக் கூட்டணியினர் யாழ் பல்கலைக் கழக மாணவர்களை நோக்கி ‘உங்கே படிப்பவர்கள் குதிரை ஓடி பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டனர்’ என்று மேடையில் போட்டு பேசி சிறில் மத்தியூவின் கூற்றிற்கு அங்கீகாரம் வழங்கி தமது ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டனர். அவ் மேடையில் இன்றைய மாவை சேனாதிராஜாவும் உட்கார்ந்து இதனை ஆமோதித்து பேசினார் என்பதுதான் வரலாறு. யோகேஸ்வரன், சிவசிதம்பரம் போன்றவர்களும் அதில் பிரசன்னம் ஆகியிருந்தனர். 1974 பகுதிகளில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தோற்றமும் அதன் செயற்பாடும் எவ்வாறு இருக்கும் என்பதை உணர்ந்திருந்த முற்போக்கு சிந்தனையுடைய இளைஞர்கள் (சிறப்பாக தமிழ் மாணவர் பேரவை, டொக்கர் தர்மலிங்கத்தின் தலைமையிலான தமிழ் ஈழ விடுதலை இயக்கம்(வுநுடுழு அல்ல)) தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான பிரச்சனைக்கு ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் தீர்வு காணமுடியாது என்பதனை உணர்ந்து உழைக்கும் மக்களின் தலைமையில் ஈழவிடுலைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான தயாரிப்புக்களில் ஈடுபட்டு வந்தனர். இவ் பிரதான கொள்கையின் அடிப்படையின்; முதற்கட்டமாக விடுதலை அமைப்பு ஒன்றை அமைப்பு ரீதியாக கட்டுதல், தொடர்ந்து அவ் அமைப்பிற்கான வேiலைத் திட்டங்களை வரைதல் போராளிகளை அணிதிரட்டி அரசியல் மயப்படுத்தல். அரசியல்மயப்படுத்திய இவ் மக்கள் போராளிகள் மக்களை மத்தியில் வேலை செய்து மக்களை அரசியல் மயப்படுத்தல், அதன் தொடர்சியாக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தல் என்ற படிமுறையூடாக பயணிக்க தொடங்கினர். தேசிய விடுதலைப் போராட்டத்தில் மத்தியதர வர்க்கமும் மாணவர்களும், இளைஞர்களும் போராட்ட சக்திகள். பெண்விடுதலையையும் இணைத்தே தேசிய விடுதலைப் போராட்டம் பயணிக்க வேண்டும் என்பதிலும் சரியான சிந்தனைச் செயற்பாட்டில் இருந்தனர். ஏன் இதில் தமிழ் தேசிய முதலாளிகளும் அரவணைத்துச் செல்லப்பட வேண்டிய சக்திகள் என்பதில் தெளிவாக இருந்தனர். ஆனால் தலைமை சக்தி பாட்டாளி மக்கள் தான் என்பதை தமது கொள்கையாக ஏற்று செயற்பட்டனர். மேலும் சிங்கள மக்கள் மத்தியில் உள்ள முற்போக்கு சக்திகளுடனும் நல்லுறவை பேணி அவர்களையும் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான ஆதரவு சக்கிகளாக மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டனர். எமது விடுதலைப் போராட்டமானது தேசிய விடுதலைப் போராட்டத்துடன் நின்று விடப் போவது இல்லை. மாறாக முழு இலங்கை;குமான ஒரு சமூகப்; புரட்சி என்ற பரிணாமத்திற்கு அடுத்த கட்டமாக நகர்த்தி செல்லப்பட வேண்டும் என்ற தொலை நோக்கு பார்வையில் செயல்பட்டனர் இச் செயற்பாடுகளைக் கண்ட தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தமது ‘ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள நினைபதில் தவறு இல்லையே’ என்ற கோட்பாட்டை தூக்கிப்பிடிக்க கண்டுபிடித்த அமைப்புத்தான் தமிழீழ விடுதலைப் புலிகளும், அவர்களை ஒத்தவர்களும். புலியிஷத்தை வளர்த்துவிட்ட பெருமை தமிழ் பிற்போக்கு தலைமை தமிழர் விடுதலைக் கூட்டணியையே சாரும். தமிழர் விடுதலைக் கூட்டணியின் மெதுவான போக்கு, தோல்விகளில் இருந்து ‘திமிறிப்பாய’ ஆரம்பித்ததே ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலைப்புலிகளும், இதனை ஒத்த ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலை அமைப்புக்களும். ஆனால் மிகவும் பரிதாபமான விடயம் என்னவென்றால் தமிழர் விடுதலைக் கூட்டணியால் வளர்த்துவிடப்பட்ட மிருகம்(புலி) தனக்கு நரபலியாக அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் உட்பட பலரையும், விருந்துண்ண வந்து வேட்டு வைத்து கொலை செய்தது மனித நாகரிகம் வெட்கித் தலைகுனியும் காட்டு மிராண்டித்தன நிகழ்வு ஆகும். ஆயுத அமைப்பாக, சுத்த இராணுவக் கண்ணோட்டத்தில் தம்மை வளர்த்துக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் ஏனைய மாற்று அமைப்புக்களை முற்று முழுதாக ஆயுத ரீதியில் முடக்கி அவர்களை தமிழ் பிரதேசங்களில் செயற்பட அனுமதியாமல் செய்தல் என்பதை தனது பிரதான வேலைத்திட்டமாக ஆரம்ப முதலே கொண்டிருந்தனர். ஆரம்பத்தில் இதற்கான செயற்பாடுகளை இங்கொன்றும், அங்கொன்றுமாக தற்செயலாக, தவறுதலாக என்று கூறிகொண்டு செய்து வந்தனர். புலிகள் தமது அமைப்பு ரீதியான பிரகடனப்படுத்திய ‘மாற்று இயக்கங்களை தடை செய்தல்’ என்;ற செயற்பாட்டை 1986 நடுப்பகுதியில் ஆரம்பித்து இறுதிப்பகுதிகுள் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியுடன் ‘முடித்து’க் கொண்டனர். புலிகளின் இவ் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடியவில்லை எவராலும். மக்கள் துப்பாக்கிச் சனியனால் மௌனமாக்கப்பட்டனர். இது மே 18, 2009 வரை தொடர்ந்தது. புலிகளால் முடக்கப்படும் அளவிற்கு மாற்ற இயங்கங்கள் பலவீனமாக இருந்தன என்பது அவ் அவ் அமைப்புகள் ரீதியான பிரச்னையும் கூட. தமிழ் பேசும் சமூகத்தில் இருந்து உருவான விடுதலை அமைப்புக்கள் அவ் சமூகத்தின் வர்க்க குணாம்ச பிரதி பலிப்புக்களை தமக்குள் கொண்டிருக்கும் என்பது வி;ஞ்ஞான பூர்வமானது. இதன் அடிப்படையில் பார்த்தால் புலிகளின் இருப்பும், இல்லாமல் போதலும் தமிழ் பேசும் சமூகத்தின் வர்க்க(முரண்பாடு) குணாம்சத்தின் வெளிபாடே ஆகும். கூடவே ஏனைய மாற்று இயங்கங்களை புலிகள் பலவீனப்படுத்தி முடக்கியதும் இந்த குணாம்சத்தில் வெளிப்பாடே. இந்த விளைவு ஏற்கமுடியாத, ஜீரணிக்க முடியாத விடயமாக இருந்தாலும் இவ் உண்மையை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். புலிகளால் முடக்கப்படும் அளவிற்கு பலவீனமா இருந்தது மாற்று அமைப்புகளின் பலவீனங்களின் அடிப்டையிலும்தான். இதன் தொடர்சியாக மாற்று அமைப்புக்களால் ‘வீச்சாக’ எழுந்து வரமுடியாமல் போனதும் மாற்று அமைப்புக்களில் நிலவிய கொள்கை, வேலைத்திட்டம். அமைப்பு போன்றவற்றின் பலவீனமான நிலமையும் காரணம் ஆகும். மீண்டும் இன்று ஏறக்குறைய 35 வருடங்களின் பின்பு புலிகளின் தோல்வியில் இருந்து புதிய தமிழ் பேசும் மக்களின் தலைமைகள் உருவாக்கத்திற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து அரசியல் வேலைத்திட்டங்களை இலங்கையில் முன்னெடுத்தல் என்ற ஆரோக்கியமான நிகழ்வுகள் நடைபெற்றக் கூடிய சாத்தியமான நிலமைகள் ஏற்பட்டு வருகின்றன. இது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் முன்னெடுக்கப்படுகின்றன. ஏற்கனவே ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு இன்று ‘கட்டெறும்பு’ நிலையில் உள்ள அமைப்புக்களும், இவ் அமைப்புக்களில் வேலை செய்து பல்வேறு காரணங்களால் ஒதுங்கி, ஒதுக்கப்பட்டு, தலைமறைவாகி போன்ற பல்வேறு நிலைமையில் இருந்த பலர் தற்போது ஏற்பட்டுள்ள ஜனநாய நிலமைகளை பாவித்து அமைப்புக்களை கட்ட, புனரமைக்க முயல்கின்றன. இதே வேளை 1970 பிற்பகுதியில் வுருடுகு செய்தது போல் தம் இருப்பை தக்க வைத்துக் கொள்ள புலிகளின் வாரிசுகளும் முயன்றுவருகின்றன. அது தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ‘நாடு கடந்த அரசு’ போன்ற வடிவங்களில் நடைபெறுகின்றன புதிய அமைப்பை கட்டி தலைமை கொடுத்தல் என்ற வகையில்; தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கூடிப் பேசுதல் ஒருபுறம், சூரிச் மகாநாடு மறுபுறம், ‘நாடு கடந்த அரசு’ மறுபுறம், னுவுNயு இன்னொரு புறம், நுPனுP இன்னொருபுறம் என்று புறப்பட்டுள்ள வேளையில் 35 வருடங்களுக்கு முன்பு தமிழர் விடுலைக் கூட்டணியின் தவறுகளில் இருந்து உருவான விடுதலை அமைப்புக்கள் தோற்றுப் போன? நிலைமைகள் ஏன்?, எப்படி? ஏற்பட்டன என்பவற்றை கருத்தில் கொண்டு இன்று ஆரம்பித்திருக்கும் புதிய தலைமையை உருவாக்குதல் என்ற அரசியல் வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பவர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் இப்படியான முயற்சிகளில் ஈடுபடும் போது குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் தரப்பில் இதுவரைகாலமும் பிரதான சக்தியாக காட்சிப்படுத்தப்பட்ட புலிகளும், அவர்களின் வழித் தோன்றல்களும் படு பிற்போக்கான ‘ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள நினைப்பது தவறு ஒன்றும் இல்லையே’ என்ற இத்துப் போன பிரிவினைவாத கோஷத்தின் அடிப்டையில் குழப்பல்கள், வெருட்டல்களை செய்ய முயல்வார். ஏன் ஊடுருவல்களையும் செய்வர். இதில் எச்சரிகையாக இருத்தல் வேண்டும். இலங்கை அரசை பொறுத்தவரையிலும் எங்களை ‘பிரிவினைவாதிகள்’ என்ற பட்டம் கொடுத்து ‘பயங்கரவாதிகளாக’ சித்தரித்து எங்களை இல்லாமல் செய்ய முற்படுவர். இதற்கு சர்வ தேச நாடுகளில் உள்ள பிற்போக்கு அரசுகளும், சக்திகளும் இதற்கான ஆதரவு வேலைகளில் முழுமூச்சுடன் ஈடுபடுவர் இவ்வாறான அக புற சூழல்களை கருத்தில் கொண்ட செயற்பட வேண்டியது அவசியம். இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் போராட்டத்தை தீர்மானிக்கும் பிரதான சக்தி இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்கள்தான். போராட்டமும் அங்கிருந்துதான் முன்னெடுக்கப்பட வேண்டும். தலைமை சக்தியும் அங்கேதான் உருவாக்கப்பட வேண்டும். வெளிநாடுகளில் வாழும் புலம் பெயர் தமிழ் பேசும் மக்கள் இவ் அரசியல் போராட்டத்திற்கு உந்து சக்தியாகவும், ஆதரவு சக்தியாகவும் இருக்கலாமே ஒளிய, மாறாக எல்லாமுமாக இருக்க முடியாது. கருத்துக்களை பயமின்றி விவாதிக்க, பரிமாற்றம் செய்ய ஏற்பட்டிருக்கும் ‘புதிய’ நிலைமைகளை நாம் எமக்கு சாதகமாக பாவிக்க வேண்டும். தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமை அரசியல் போராட்டம் பற்றிய பார்வைகள் பலதரப்பட்டவர்களிடம் வேறு வேறாக இருந்தாலும் விவாதித்தல், கருத்துக்களைப் பரிமாறல், விமர்சித்தல், சுயவிமர்சனம் செய்தல் போன்ற ஆரோக்கியமான நடைமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். இது ஒரு ஆரோக்கியமான அரசியல் அமைப்பை அமைக்க, அரசியல் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வழிவகுக்கும். நாடு கடந்த அரசு’ என்ற உருத்திரகுமாரன் போன்றோரின் சித்து விளையாட்டுக்கள் அவர்களுக்கு சோற்றுக்கு மேல், கார், பங்களா, இன்னபிற சொத்துக்களை புதிதாக உருவாக்கவும் ஏற்கவே புலம் பெயர் தமிழ் மக்களிடம் போராட்டம் என்ற பெயரில் வசூலித்த பணத்தில் வாங்கிய சொத்து, பத்துக்களையும் தமக்காக நிர்வகிக்க மட்டுமே உதவும். மாறாக சோற்றக்கே அலையும் இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு உதவப் போவதுதில்லை. இதனை புறம் தள்ளிவிட்டு முன்னோக்கி நகரவேண்டிய காலகட்டம் இது. மே 18 ஒரு முடிவல்ல. அது தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டம் தோற்றுப் போன நாளும் அல்ல. மாறாக தமிழ் பேசும் மக்களின் போராட்டம் புது திசைவழியில் பயணிக்க கதவுகள் அகல திறக்கப்பட்ட நாள். தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டம் முடிந்தும் போகவில்லை. இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. அரசியல் உரிமைகள் பிச்சை போல் கெஞ்சி கேட்டு பெறுவதல்ல. யாசித்தும் பெறுவதல்ல. மாறாக உரிமையுடன் போராடிப் பெறுவது. பேசிப்பெறுவது மாறாக ஏசிப் பெறுவதுமல்ல. இது இணக்கப்பாட்டுடான அணுகு முறையாக இருந்தால் எல்லோருக்கும் நலம். நாம் விரும்புவதும் இதுவே. நிறைவேற்றவது முக்கியமாக இருதரப்பைச் சார்ந்த விடயம். ஒருவர் வழங்க மற்றவர் பெறுவது மட்டும் அல்ல. இருவரும் இணைந்தே தீர்மானிக்க வேண்டும். இதுவே நிரந்தர சமாதானத்தை உறுதிப்படுத்தும். இனிவரும் காலங்களில் தமிழ் பேசும் மக்களின் போராட்டத்தின் தலைமை சக்தியானது தமிழ் பேசும் மக்களின் ஆதரவுத்தளத்துடன் மட்டும் நிற்காது சிங்களம் பேசும் மக்கள் மத்தியில் உள்ள முற்போக்கு சக்திகளுடன் ஒரு ஆழமான ஆதரவுத்தளத்தையும் ஒத்துழைப்புக்களையும் உள்வாங்கி சர்வதேச சமூகத்தின் முன் எங்கள் போராட்டத்தின் நியாயாதிக்க தன்மையையும் அதற்கான ஆதரவு தளத்தையும் விரிவுபடுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கு நிறைய வேலைகள் செய்யப்படவேண்டும். நாம் பிரிவினைவாதிகள் அல்ல. பயங்கரவாதிகள் அல்ல. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை வேண்டி நிற்கும் போராளிகள், மனிதர்கள், தேசிய இனம் என்பதை நிலைநிறுத்த வேண்டும். பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சனைகளை பேசித்தீர்ப்பதில் நாம் எப்போதும் உண்மையாகவும், முதன்மையாகவும், செயற்படுவோம் என்பதை நம்ப வைக்க வேண்டும். இலங்கையில் உள்ள சகல மக்களும் சம உரிமையுடன் வாழும் சக வாழ்வையே நாம் வேண்டி நிற்கின்றோம். இதற்காகவே போராடுகின்றோம் என்பதை சர்வ தேச சமூகத்திற்கு எடுத்தியம்ப வேண்டும். கொள்கையில்; விட்டுக்கொடுப்பு, காட்டிக்கொடுப்பில்லாத உழைக்கும் மக்களின் தலைமையை நாம் உறுதிப்படுத்த வேண்டும். சந்தர்பவாத அரசியல் நிலைப்பாட்டை உடைய சக்திகளை தலைமை பொறுப்புக்களில் இருத்து தவிர்க்க வேண்டும். நாம் தோற்றுப் போகவில்லை. எமது பிரச்சனைகள் இதுவரை தீர்க்கப்படவும் இல்லை. இதற்கான முன்னெடுப்புக்களையும் இதுவரை எம்மால் காணவும் முடியவில்லை. மாறாக போராட்டம் புதிய, மாற்றான திசைவழியில் பயணிப்பதற்கான கதவு மட்டும் திறக்கப்பட்டுள்ளது. எமது பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும். தெருவிற்கு தெரு, மூலை முடுக்கெல்லாம் 24 மணிநேரமும் சந்தேகக் கண்களுடனும், துப்பாக்கிகளுடனும் மனிதர்களை கண்காணிக்கும் தேசத்தில் எந்த ஒரு மனிதனும் சுதந்திரமாக சுவாசிக் முடியாது. வாழ முடியாது. துப்பாக்கித் தமிழ் மனிதரை மட்டும் புலிகளாக பார்த்த நிலமை மாறி ‘துப்பாக்கி இல்லாத’ சகல தமிழ் பேசும் மக்களையும் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் அன்றாட நிகழ்வுகளே மே 18 பிறகு தமிழ் பேசும் மக்கள் வாழும் இடமெல்லாம் உள்ளது. உரிமைகள் மறுக்கப்படும் எந்த மனிதனும் நீண்டகாலத்திற்கு மௌனமாக இருக்கமாட்டான். இன்று இல்லாவிடினும் பிறிதொருநாள் போராடத்தான் புறப்படுவான். இது வரலாறு எமக்கு கற்றுத்தந்த பாடம் மட்டுமல்ல மானிடத்தின் இயல்பும், உரிமையும் கூட. மே 18 ல் தோற்றவர்கள் புலிகள் மட்டுமே. மாறாக மக்கள் அல்ல. மக்களின் போராட்டமும் அல்ல. மாறாக போராட்டம் மாற்றுத் திசை வழியில் பயணிக்க ஆரம்பிக்க ‘பிள்ளையார் சுழி’ போடப்பட்டு விட்டதுதான் நிஜம். மே 18. 2009 இற்கு முன்பு, டிசம்பர் 1986 உடன் ஏனைய விடுதலை அமைப்புக்களும், மக்களும் புலிகளால் முடக்கப்பட்டு விட்டனர், மௌனமாக்கப்பட்டனர் என்பதுதான் கசப்பான உண்மை. இடையே ஏற்பட்ட வடக்கு கிழக்கு மகாணசபை காலத்தில் மக்களும், விடுதலை அமைப்புக்களும் குறுகியகாலம், குறுகிய பிரதேசத்திலாவது தம்மை சிறிதளவேனும் தமது ஜனநாயக செயற்பாட்டில் ஈடுபட்டு தம்மை ஆசுவாசப்படுத்திக் கொண்டனர் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. மே 18 இற்கு பிறகு ஏனைய மாற்று முன்னாள் விடுதலை அமைப்புக்கள் வெற்றியடைந்தனவா? வெற்றியடைப் போகின்றனவா? என்பதை சற்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். (சாகரன்) (மார்கழி 23, 2009)
»»  (மேலும்)

முஸ்லிம் அரசியல் நடப்புகள். எந்த வழியால் நுழைந்து எந்த வழியால் வெளியேற ...? எஸ் எம்.எம்.பஷீர்

1989 பொதுத்தேர்தல் கூட்டங்களில் “சிங்கள பேரினவாதம்” “ தமிழ் பேரினவாதம்” ஆகியவற்றிற்கெதிராக முஸ்லிம் காங்கிரசின் அரசியல் பிரச்சாரங்கள் முஸ்லிம் காங்கிரசின் மேடைகளில் அதிகளவில் முடுக்கிவிடப்பட்டன. இலங்கயின் பிரதான கட்சிகளில் அங்கத்துவம் வகித்த முஸ்லிம் அமைச்சர்கள் உறுப்பினர்களின் குற்றங்கள் மேடைகளில் சிலாகித்துபேசப்பட்டன ; முஸ்லிம் காங்கிரசின் அரசியல் யாப்பு குர்ஆன் ஹதீஸ் என்பவற்றின் அடிப்படையில் தான் செயற்படும் என்று பாமர முஸ்லிம் மக்களினை மதத்தினூடாக உள்வாங்கும் தமது அரசியல் பிரவேசத்துக்கு சுருதி சேர்க்கும் செயற்பாடாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது பிரச்சாரங்களை முன்னெடுத்தது. முஸ்லிம் மத நம்பிக்கையின் அடிப்படைக்கு சில முஸ்லிம் அமைச்சர்கள் எதிராக செயற்படுகிறார்கள் என்ற முஸ்லிம் காங்கிரசின் பிரச்சாரத்தில் முன்னால் வணிக வியாபார துறை அமைச்சர் ஏ .ஆர்.எம். மன்சூர் ஒருதடவை 1980களில் தலதா மாளிகைக்கு சென்று அங்கு மல் பூஜா எனப்படும் மலர் தட்டினை காவிச் சென்றார் என்ற குற்றச்சாட்டை வைத்து இவ்வாறு பேரின வாதிகளுக்கு அவர்களது சமயச்சடங்குகளில் கூட கலந்து தனித்துவம் இழந்து, முஸ்லிம் அரசியல் வாதிகள் அவர்களது மத நம்பிக்கையினை கைவிட்டு செயற்படுவதாகவும்- தட்டு தூக்குவதாகவும் பரிகாசம் செய்தனர் , இவ்வாறான மதத்தினை அடிப்படையாகக்கொண்ட பிரச்சாரங்கள் இலகுவில் ஏற்கனவே செல்வாக்குப்பெற்றிருந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது எதிர்ப்புணர்வையும் ஏற்படுத்தியது. ஒருதடவை ஏ .ஆர். எம். மன்சூர் அவர்கள் அஷ்ரப் நாடாளுமன்றத்தில் அரபு மொழி பிரார்த்தனையுடன் தனது உரைகளை ஆரம்பிப்பதுபோல் தங்களுக்கும் முடியும் ஆனால் அவை எல்லாம் தந்திர வேலை என்று என்னிடம் குற்றம் சாட்டினார். ஆனால் சுமார் பத்து வருடங்களின் பின்னர் ( ஜூலை 1997 ) முஸ்லிம் காங்கிரஸ் பரிகசித்த, குறைகண்ட அதே சம்பவம் அஷ்ரபினால் செய்யப்பட்டது என்ற குற்றச்சாட்டு அஸ்ரப் அமைச்சராக இருந்தபோது முவைக்கப்பட்டது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் ரூபவாகினி பின்னிரவு தமிழ் நிகழ்வொன்றில் தான் தவறு விட்டதை ஏற்றுக் கொண்டார், ஆயினும் தான் மலர்கள் எதனையும் சிலைகளுக்கு முன்பாக கொண்டு செல்லவில்லை - வைக்கவில்லை- என்று குறிப்பிட்டார். சட்டத்தில் துளை ( Loophole) கண்டு வாதாடுவதுபோல் அஸ்ரப் மலர் பூஜாவுக்கு தான் தட்டு தூக்கியது பற்றி கூறாமல் தான் சிலைக்கு முன்பாக கொண்டு செல்லவில்லை என்று குறிப்பிட்டார் ஜம்மியத்துல் உலமா சபை (மத அறிஞர்களின் சபை) சார்பாக மௌலவி ரியால் அவர்கள் இஸ்லாத்துக்கு முரண்பட்ட சமயச் செயலில் பங்கு கொண்டமைக்காக பச்சாதபம் கொள்ளக் கோரி . கடிதம் எழுதி இருந்தார். இக்கடிதத்தில் அவர்கள் திகவாபிய பிரதேச புனருத்தாருண சம்பிரதாய நிகழ்வுகளில் மல் பூஜா எனப்படும் மலர் பூஜை செய்யும் -மலர் தட்டினை காவிச்செல்லுதல்- என்ற குற்றச்சாட்டுடன் அந்நிகழ்வு நடைபெற்ற தினமான வெள்ளிக்கிழமை கட்டாய ஜஉம்மா தொழுகையிலும் கலந்து கொள்ளவில்லை என்பதையும் முக்கிய தவறாக குறிப்பிட்டிருந்தார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காகிரசின் மஜ்லிஷுள் சூரா எனும் ஆலோசனை குழுவின் இரண்டு பிரதிநிதிகளில் ஒருவர் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பிரதிநிதிகளில் ஒருவராக இருப்பதனை கட்சியின் யாப்பு விதந்துரைக்கிறது அதன். அடிப்படையில் அதிகாரத்திலுள்ள கட்சியின் அமைச்சரினை உலமா உடனடியாக கேள்விக்குட்படுத்தவில்லை , மாறாக அழுத்தங்களின் காரணமாக அவர்கள் செயற்பட்டர்கள் என்ற குற்றச்சாட்டு அன்று அவர்கள் மீதும் சுமத்தப்பட்டது. ஆனால் மறுபுறம் அன்று கலந்துகொண்டவர்களுக்காக தனியாக பிறிதொரு ஜஉம்மா தொழுகையை தென் கிழக்கு பல்கலைக்கழக அரபு இஸ்லாமிய கற்கை துறையின் தலைவர் டாக்டர் எம். கே. காலிதீன் நடத்தியதாகவும் கூறப்பட்டது. அஸ்ரப் தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி ஒரு புதிய ஷ்ரியா கவுன்சிலை அமைக்க முற்பட்டார், ஆயினும் அது நடைமுறையில் செயற்படமுடியவில்லை ..இவ்வாறு செய்வது ஒரு பௌத்த நாட்டில் தவிர்க்கமுடியாதது என்று நியாயம் வேறு இப்போது கற்பிக்கும் சிலரைக் காணமுடிகிறது. இவர்கள் யாரும் மன்சூரும் முஹம்மதுவும் செய்தபோது மட்டும் மத நம்பிக்கைக்கு எதிரானதாக இதனை கண்டனர் இப்போது இதை கண்டுகொள்ளகூடாது என்பது முஸ்லிம் கட்சிக்காரர்களின் புது அனுமுறைபோலும். அவ்வாறான விமர்சனம் மீண்டும் சுமார் ஒரு தசாப்தத்தின் பின்னர் இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மீதும் அவரின் அண்மிய தலதா மாளிகை விஜயத்தின் பின்னர் எழுந்திருக்கிறது. அஸ்ரப்பும் ஹக்கீமும் .மத சமூக அரசியல் விழிப்புணர்வு இயக்கம் என்று சொல்லப்படும் ஜமா அத தே இஸ்லாமிய ஸ்தாபனத்துடன் ஆரம்பத்தில் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டவர்கள் என்பதும் இங்கு குறிபிடத்தக்கது. நிகழவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் குதிப்பதற்காக ஐ.தே.கவுடன் கூட்டு ஏற்படுத்தியவுடன் சம்பிரதாய பூர்வமாக தமது கூட்டினை அன்குர்ரர்ப்பணம் செய்யும் நிகழ்வாக ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹா கண்டியிலுள்ள .தலதா மாளிகைக்கு விஜயம் செய்து அங்குள்ள பௌத்த பிரதம மதகுருவின் ஆசீர்வாதம் பெற்றபோது ஹக்கீமும் அவருடன் சென்று அதே விதமான ஆசீர்வாததினை பெற்றுக்கொண்டார் . ..இது சிறு சலசலப்பைத்தான் ஏற்படுத்தி இருக்கிறது கொழும்பு ஜாவத்த ஜும்மா பள்ளிவாசலில் தமது கட்சித் தீர்மானங்கள் கிழக்கு மாகாண சபை தேர்தலின்போது அஸ்ரப் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் வெளிப்படுத்தி பிரச்சாரங்களை முன்னெடுத்தமை அங்கு அவர்கள் அஸ்ரப் அடக்கம் செயப்பட்ட இடத்திற்காக -முக்கியத்துவமளித்து- தமது தேர்தல் பணிகளை முடிக்கி விட்டிருந்தால் அவை நிச்சயமாக இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைகளுக்கு முற்றிலும் எதிரானதாகும். இன்று இலங்கையில் பல முஸ்லிம் அரசியல் கட்சிகள் பல்வேறு இடங்களில் பல்வேறுபட்ட அரசியல் நிர்வாக கட்டமைப்புக்களில் தங்களது பிரதிநிதித்துவத்தை நிலைநாட்டி அங்கத்துவம் வகிக்கும் சூழலில் அவர்களில் எவரும் பேருவல சம்பவங்கள் குறித்து மௌனமாகவிருந்து தமது செல்வாக்குகளை இழந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். ஆனால் முஸ்லிம் காங்கிரசின் ஆரம்பத்திற்கு முன்னர் ஒரு சில முஸ்லிம் அரசியல் வாதிகள் அமைச்சர்கள் இவ்வாறான பிற மத சடங்குகளில் சில இறுக்கமான இஸ்லாமிய வரம்புகளை மீறி பங்குபற்றி இருக்கிறார்கள் ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கையான " கலிமா " வை தனது கட்சி கொடிகளில் பொறித்து இஸ்லாமிய மதக்கட்சியாக முஸ்லிம் மக்களுக்குள் அடையாளப்படுத்தி முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிப்பது கூட ஒரு மதக்கடமை போல் காட்டி வந்திருக்கிறார்கள். முதன் முதலில் 1987 மாகாணசபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிக்காவிட்டால் அவர்கள் மறுமையில் பதில் சொல்லவேண்டிவரும் என்றவாறான எச்சரிக்கைகளை சேகு இஸ்ஸதீன் போன்ற முஸ்லிம் காங்கிரஸ் ஜாம்பவான்கள் விட்டிருக்கிறார்கள் என்பதை இன்னமும் மக்கள் ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் விட சென்ற கிழக்கு மாகான சபை தேர்தலின்போது ஓட்டமாவடியில் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டங்கள் நடைபெறுவதில் பல தடைகளை அங்குள்ள அமைச்சர் அமீர் அலி போட்டதால் அவற்றை தாண்டி நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் கூட்டத்தில் தனது உயிருக்கு ஆபத்து உண்டென்றும் அவ்வாறு அங்கு மரணிக்க நேர்ந்தால் ஹக்கீம் தான் கட்சின் தொப்பியுடனும் சால்வையுடனும் மரணித்தால் அது தனது பாக்கியமாகும் என்ற தொனிப்பட சூளுரைத்தார். இதுவெல்லாம் முஸ்லிம் அடிப்படை நம்பிக்கை களுக்கு முரணான கருத்துக்களாகும் என்பதை யாருமே சுட்டிக்காட்டதவரை முஸ்லிம் மக்கள் இம் முட்டாள்தனமான கருத்துரைகளை கேட்டு " அல்லாஹு அக்பர்" " சிந்தா பாத்" என்று மட்டும் தாராளமாக சத்தமிடப்போகிறார்கள்

»»  (மேலும்)

கிழக்கு மாகாண முதலமைச்சரின் நத்தார் (கிறிஸ்மஸ்) பண்டிகை வாழ்த்துச் செய்தி


கிழக்கு மாகாண முதலமைச்சரின் நத்தார் (கிறிஸ்மஸ்) பண்டிகை வாழ்த்துச் செய்தி

copy-of-copy-of-img_8960நத்தார் பண்டிகையினை கொண்டாடும் அனைத்து சகோதரர்களுக்கும் எனது வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதில் பேருவகை அடைகின்றேன்.
மானிடம் சிறக்க, மானிடம் பெருமைப்பட மனிதர்களின் பாவங்களைப் போக்கி அவர்களின் அன்பையும், சகோதரத்துவத்தினையும் பெருக்கெடுத்திடச் செய்ய இயேசுபிரான் அவதரித்த இத்தினமானது மனித குல வரலாற்றின் திருப்பத்தின் உச்சக்கட்டமாகும்.
மாட்டுத் தொழுவத்தில் ஏழ்மையின் வடிவில் பெத்தலகேம் நகரில் அவதரித்த யேசுபிரானின் தியாகங்கள், போதனைகள்untitled11 எல்லாம் மானிடம் சிறப்பதற்கான வழிகளை காட்டி நிற்கின்றது. இருந்தபோதும் அத்தியாகங்களும் போதனைகளும் சிலரால் உரிய முறையில் பின்பற்றப்படாமையினால் மனிதர்களுக்குள் யுத்தமும், நம்பிக்கையீனங்களும், அடக்குமுறைகளும் எங்கும் பரவி நிற்கின்றன.
கடந்த காலங்களை விட ஒப்பீட்டளவில் ஒரு அமைதியான சூழ்நிலையில் இந் நத்தார் பண்டிகையை கொண்டாடும் வாய்ப்பு எம் நாட்டு மக்களுக்கு கிடைத்துள்ளது. கொழுந்து விட்டெரிந்த கொடிய யுத்தம் இன மத மொழி பேதமின்றி அனைத்து மக்களையும் அவலத்திற்கும், அழிவிற்கும் உள்ளாக்கியதடன், நாட்டின் நிரந்தர அமைதி, சகோதரத்துவம், இஸ்த்திரத் தன்மைக்கும் பாரிய சவாலாக அமைந்தது. யுத்தம் முடிந்து விட்ட இந்நாளில் அனைத்து மக்களது உரிமைகளையும் மதித்து பிறரின் உரிமையில் தலையிடாமல் சகோதரத்துவத்துடனும் பரஸ்பர நம்பிக்கையுடனும் வாழக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு இந் நத்தார் பண்டிகை ஓர் களமாக அமையட்டும்.»»  (மேலும்)

திருநங்கையர் தனிப் பாலினமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்கிறது பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்


திருநங்கையர் தனிப் பாலினமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்கிறது பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்

பாகிஸ்தான் திருநங்கையர்
பாகிஸ்தானில் திருநங்கையர் தங்களை தனியொரு பாலினமாக அடையாளப் படுத்திக்கொள்ள இடமளிக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டின் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருநங்கையருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கின்ற பாகிஸ்தானின் தலைமை நீதிபதி, அதில் அவர்கள் தங்களை தனிப் பாலினமாக அடையாளப்படுத்தி விபரித்துக்கொள்ளலாம் என்றும், ஆண் அல்லது பெண் என்றுதான் அவர்களை குறிக்க வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது என்றும் கூறியிருக்கின்றார்.

பாகிஸ்தானில் ஹிஜ்ராக்கள் என்று அழைக்கப்படும் திருநங்கைகள் பெரும்பாலும் பிறப்பில் ஆண்கள். ஆனால் மருத்துவ மற்றும் சமூக காரணங்களுக்காக இளம் வயதில் ஆணுறுப்பை அகற்றும் சிகிச்சையை செய்து கொண்டவர்கள் இவர்கள்.

இந்திய துணைக்கண்டத்தில் ஒப்பீட்டளவில் இவர்களது எண்ணிக்கை அதிகம். முகலாய சாம்ராஜ்ய காலத்தின் கேளிக்கை வழங்குபவர்களின் கலாச்சார வழித்தோன்றல்களாக இவர்கள் பார்க்கப்படுகிறார்கள்.

பாகிஸ்தானில் உள்ள இவர்களது சமூகத்தில் லட்சக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். அங்கு பொதுவாக வறியவர்களாக, கவனிக்கப்படாமல், கைவிடப்பட்டவர்களாக மற்றும் பாரபட்சத்துக்கு உட்படுத்தப்படுபவர்களாக இவர்கள் இருக்கிறார்கள்.

ஹிஜ்ராக்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புக்களை அதிகரிக்க மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் துன்புறுத்தப்படுவதை தடுக்க பொலிஸார் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் ஆலோசனை கூறியிருக்கிறது.»»  (மேலும்)

சுனாமி: நாளை 5 ஆண்டுகள் பூர்த்தி: வடக்கு, கிழக்கில் நிகழ்வுகள் 9.25-9.27 வரை மெளன அஞ்சலி

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு நாளையுடன் 5 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன. இதனையிட்டு மட்டக்களப்பு, அம்பாறை, யாழ். மாவட்டங்களில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நாளைய தினம் தேசிய பாதுகாப்பு தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சுனாமியில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் வகையில் நாளைய தினம் காலை 9.25 மணியிலிருந்து 9.27 வரைக்கும் மெளனாஞ்சலி செலுத்துமாறு அரசாங்கம் கேட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் சமய நிகழ்வுகளும், நினைவுப் பேருரைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பிரதேச செயலக மட்டத்திலும், கிராம மட்டத்திலும் இவ்வாறான நிகழ்வுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் காரணமாக நாட்டில் ஆகக் கூடுதலான உயிர், உடைமை இழப்புக்களை அம்பாறை மாவட்டமே சந்தித்தது. அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுகள் கூடுதலான அழிவுகளை சந்தித்தது.

இம்மாவட்டத்தில் முப்பதுக்கு மேற்பட்ட பாடசாலைகள் அழிடிக்கப்பட்டதுடன் 28,000க்கு மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டும், சேதமாக்கப்பட்டும், 3800 பேரில் உயிர்களும் காவு கொள்ளப்பட்டன.

பொத்துவில், திருக்கோவில், அக்கரைப் பற்று, பாலமுனை, ஒலுவில், அட்டாளைச் சேனை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, பாண்டிருப்பு, மருதமுனை ஆகிய பிரதேசங்களில் கோயில்கள், பள் ளிவாசல்கள், தேவாலயங்கள், விகாரைகள் என்பனவற்றில் சுனாமி அனர்த்தத்தினால் இறந்தவர்களுக்காக நல்லாசி வேண்டி மதவழிபாடுகள், பள்ளிவாசல்களில் விசேட துஆப் பிரார்த்தனைகள் என்பன இடம்பெறவுள்ளதோடு நினைவுச் சொற்பொழிவுகளும் இடம்பெறவுள்ளன.

சுனாமி அனர்த்தத்தினால் இறந்தவர்களின் நினைவாக பாண்டிருப்பில் நிர்மாணிக்கப்பட் டுள்ள நினைவுத் தூபியில் மலரஞ்சலி செலு த்தப்படவுள்ளதுடன், இதனை முன்னிட்டு அன்னதான நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

வவுனியாவில்

வவுனியாவில் பூந்தோட்டத்திலும், வெளிவட்டவீதி, சிந்தாமணி விநாயகர் ஆலயத்திலும் நடைபெறும் ஆத்மசாந்தி பிரார்த்தனையில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறி வித்துள்ளனர்.

பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய பரிபாலன சபை நிர்வாகத்தினரால் சிறுவர் பூங்கா மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நினைவு தூபி முன்பாக 26ம் திகதி சனிக்கிழமை நாளை காலை 9.30 மணிக்கு நடை பெறும்.


»»  (மேலும்)

முஸ்லிம்களின் வாக்குகள் ஜனாதிபதி மஹிந்தவுக்கே


முஸ்லிம் மக்களின் வாக்குகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுக்கே கிடைக்கும் அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற் பட்டு வருகிறோமென அமைச்சர்கள் பெளஸி, பேரியல் அஷ்ரப் ஆகியோர் தெரிவித்தனர்.

சிறு சிறு கட்சிகள் மற்றும் சுயாதீனமான வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தமது பெறு மதியான வாக்குகளை குப்பைத் தொட்டிக்குள் போடுவதற்கு விரும்பமாட்டார்கள் எனவும் அமைச்சர் பேரியல் அஷ்ரப் தெரிவித்தார்.

இதனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்காக வாக்குகளில் பாதிப்புகள் ஏற்படுமா என வினவிய போதே அமைச்சர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

கொழும்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை அஸாத் சாலியும் எம்மோடு இணைந்துள்ளார். எவ்வித சந்தேகமுமின்றி 70 வீத வாக்குகளால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெறுவது உறுதியெனவும் தெரிவித்தார்

»»  (மேலும்)

12/21/2009

நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு: அரசியல் பதற்றம்நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் மூன்று நாள் பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதையடுத்து அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக கட்சித் தலைவர்கள் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி ருக்மாங்கத் கத்வாலை மீண்டும் கொண்டுவருவதற்கு மாவோயிஸ்டுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முந்தைய பிரசண்டா ஆட்சியின் போது பதவி நீக்கம் செய்யப்பட்டவர். அவரை மீண்டும் கொண்டுவருவதற்கு அதிபர் ராம் பரண் யாதவ் ஒப்புதல் அளித்துள்ளதுடன் நாடாளுமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களாட்சியில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக நேபாள அதிபர் செயல்படுவதால் அதை எதிர்த்து ஞாயிற்றுக்கிழமை முதல் மூன்று நாள் தேசிய அளவிலான பொது வேலைநிறுத்தத்துக்கு மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா அழைப்பு விடுத்துள்ளார். அரசியல் கட்சித் தலைவர்களிடையே தீவிர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது நேபாள காங்கிரஸ் தலைவர் கிரிஜா பிரசாத் கொய்ராலாவை சனிக்கிழமை காலை அவரது இல்லத்தில் ஆளும் கூட்டணிக் கட்சித் தலைவர் ஜலநாத் கனல் உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்துப் பேசினர். இதைத் தொடர்ந்து மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டாவை ஜலநாத் கனல் சந்தித்து வேலைநிறுத்தத்தை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தினார். இதர கட்சித் தலைவர்களுடனும் கொய்ராலா மாலையில் ஆலோசனை நடத்தினார். முன்னதாக கொய்ராலா பிரசண்டா இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. நோபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமுகத் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவு குறித்து இறுதி செய்யப்பட்டு விடும் என்று பிரசண்டாவிடம் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

»»  (மேலும்)

அலிஸாஹிர் மெளலானா நேற்று நாடுதிரும்பினார் ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பு

நாடுதிரும்பிய ஐ.தே.க.வின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மெளலானா நேற்று நண்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து உரையாடினார்.

அலிஸாஹிர் மெளலானா நேற்றுக் காலை 8.55 மணியளவில் கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

விமான நிலையத்தில் வைத்து அலிஸாஹிர் மெளலானாவை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், ஆளுநர் அலவி மெளலானா உட்பட மட்டு. மாவட்டத்திலுள்ள அவரது ஆதரவாள ர்களும் ஒன்று சேர்ந்து வரவேற்றனர்.

இதன்பின் அலரிமாளிகை சென்ற அலிஸாஹிர் மெளலானா ஜனாதிபதியை சந்தித்தார். ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க அலிஸாஹிர் மெளலானா தீர்மானித்து ள்ளார்.
»»  (மேலும்)

மலையக மக்களின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்த தற்போதைய அரசு முன்வந்துள்ளது மலையக மக்கள் முன்னணி கூட்டத்தில் அமைச்சர் சந்திரசேகரன் தெரிவிப்பு;

மலையக மக்களின் எதிர்கால அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தவும், அவர்களது சமூக மேம்பாட்டை உத்தரவாதப்படுத்தவும் பல அடிப்படை கோரிக்கைகளை பிரதான அரசியல் கட்சிகளிடம் முன்வைத்ததையடுத்து இக் கோரிக்கைகளை தற்போதைய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அதனை குறிப்பிட்ட காலவரையறைக்குள் நடைமுறைப்படுத்தவும் இணங்கியிருப்பதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ. சந்திரசேகரன் நேற்று (20) ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கட்சியின் கூட்டத்தில் பேசும்போது கூறினார். பசில் எம்.பியும் பங்குகொண்ட இக் கூட்டத்தில் அவர் தொடர்ந்து பேசியபோது மேலும் கூறியதாவது, மலையக மக்களின் எதிர்கால அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தவும் மலையக மக்களின் சமூக மேம்பாட்டை உத்தரவாதப்படுத்தவும் பல அடிப்படை கோரிக்கைகளை பிரதான அரசியல் கட்சிகளுக்கு முன்வைத்தோம். ஜனாதிபதி வேட்பாளர்களைப் பற்றி பல்வேறு விதமான விமர்சனங்களும் அர்த்தமுள்ள அரசியல் பார்வையும் தமிழ் மக்களுக்கு இருந்தாலும் மலையக மக்களின் தேவைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் ஆட்சி பொறுப்பில் இருப்பவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமே நாம் எதையும் சாதிக்க முடியும். எவர் ஆட்சி அமைத்தாலும் அவர்கள் மூலமே மலையக மக்களின் அபிலாஷை களை நிறைவேற்ற முடியும் என்பதே யதார்த்த நிலையாகும். இந்த நிலைப் பாட்டை அடித்தளமாகக் கொண்டுதான் மலையக மக்கள் முன்னணி ஜனாதிபதி தேர்தலை கவனிக்கின்றது. எமது கோரிக் கைகளை தற்போதைய அரசு ஏற்றுக் கொண்டுள்ளதோடு குறிப்பிட்ட காலை வரையறைக்குள் அதனை நடைமுறைப்படுத்தவும் இணங்கியிருக்கின்றது. தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளை மாற்றி சொந்தக் காணியில் தனித்தனி வீடுகளில் வாழ்கின்ற மாற்றத்தை ஏற்படுத்தி லயன் முறை வாழ்க்கையிலிருந்து நமது மக்களை மீட்டெடுக்க வேண்டும். மலையக இளம் சந்ததியினர் மத்தியில் பூதாகரமாக உருவாகி வரும் வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்தியாக வேண்டும். மலையக சமூகத்தை பொருளாதார ரீதியில் மேம்படுத்த தொழில் முயற்சிகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் பின்தங்கிய சமூகமாக இருக்கின்ற நமது சமூகத்தை தரமுயர்ந்த சமூகமாக மாற்றுவதற்கு சகல வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதிகார பரவலாக்களில் மலையக மக்களும் இணைந்துகொள்ளும் விதத்தில் புதிய பிரதேச செயலகங்களும் போதிய உள்ளூராட்சி சபைகளும் ஏற்படுத்தப்படுவதோடு நமது மக்கள் சனத் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் பாராளுமன்றம் தொடங்கி சகல ஆட்சி சபைகளிலும் எமது பிரதிநிதித்துவம் உத்தரவாதப்படுத்தப்படல் வேண்டும். அவசரகால தடைச் சட்டத்தின் கீழும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முடிந்தும் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அப்பாவி தமிழ் இளைஞர்கள் விடுதலை செய்யப்படவேண்டும். அந்த சட்டத்தின் 23ம் விதியை நீக்குவதன் மூலம் தற்போது இன்னல்களுக்கு உள்ளாகி வரும் தமிழர்களுக்கு சுதந்திர வாழ்வுரிமையை ஏற்படுத்தியாக வேண்டும் புதிய தொழில் நியமனங்களிலும் பதவி, தரம் உயர்த்தப்படுதலும் பின் தங்கிய சமூகம் என்ற ரீதியில் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களுக்கு விசேட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்த வேண்டும். மலையக மக்களுக்காக நுவரெலியா மாவட்டத்தில் தனியான தமிழ் பல்கலைக் கழகம் ஒன்று அமைக்கப்படல் வேண்டும். இத்தகைய கோரிக்கைகளில் நாம் வெற்றி பெற்றால்தான் ஏனைய சமூகங்களுக்கு நிகரான எமது சமூகத்தையும் உறுமாற்ற முடியும். இந்த தெளிவோடும் உறுதியோடும் ஜனாதிபதி தேர்தலில் அரசோடு இணக்கப்பாட்டுக்கு வந்திருக்கின்றோம். <


»»  (மேலும்)