5/31/2009

வடக்கின் வசந்தம்மீள்குடியேற்றம், உட்கட்டமைப்பு, அபிவிருத்திதமிழ்மொழியில் கருமமாற்றும் அதிகாரிகளை இணைக்க முடிவு

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம், உட் கட்டமைப்பு வசதிகளை முன்னெடுப்பதற்கு ஏது வாக தமிழ் மொழியில் கருமமாற்றக்கூடிய தமிழ் உத்தியோகத்தர்களை உடனடியாக சேர்த்துக் கொள்வதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
தமிழ், சிங்கள, ஆங்கில மொழியில் கரும மாற்றக் கூடிய தேர்ச்சி இவர்களுக்கு இருத் தல் அவசியம் விரைவில் இதற்கான விண் ணப்பங்கள் கோரப்படவுள்ளன.
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜ பக்ஷ தலைமையில் இடம் பெற்ற கூட் டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வடக்கு, கிழக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றங் களுக்கான இணைப்பாளர் சந்திரா பெர்னா ண்டோ தெரிவித்தார்.
புத்திஜீவிகள், தமிழ் தொழில்வாண்மையாளர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ். பி. திவாரட்ண, அமைச்சர் மிலிந்த மொரகொட, இராம கிருஷ்ணமிஷன் சுவாமி சர்வரூபானந்தா, அகில இலங்கை இந்து மாமன்ற பொதுச் செயலாளர் கே. நீலகண்டன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
குறிப்பாக வடக்கில் கல்வி கற்ற, சேவை செய்த, தொழில்வாண்மையாளர்கள் இந்த கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாக இருந்தது. இவ்வாறான ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து தங்க ளது ஆலோசனைகளையும் கேட்டமைக்காக தொழில்வாண்மையாளர்கள் பசில் ராஜபக்ஷ எம்.பியை பாராட்டியதுடன் எந்நேரமும் ஒத்துழை ப்பை வழங்க ஆயத்தமாக இருப்பதா கவும் கூறினார்.
சுமார் 3ண மணி நேரம் நடைபெற்ற இக்கூட் டத்தில் மருத்துவ துறை சார்ந்த டாக்டர்கள், விவசாய த்துறை நீர்ப்பாசனத்துறை சார்ந்த நிபுணர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
வடக்கின் கல்வி அபிவிருத்தி, விவசாய அபிவிரத்தி, நீர் பாசன திட்டங்கள், உட்பட உட்கட்டமைப்பு வசதிகளை ஆரம்பித்தல் குறித்தும் நீண்ட நேரம் இக்கூட்டத்தில் ஆரா யப்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் தொழில்வாண்மை யாளர்களுக்கு ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கமளித்தார்.
வடக்கை மீளக் கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்றுவோம். நாட்டைக் கட்டியெழு ப்புவதற்கான நேரம் கைகூடியுள்ளது என்றும் ஜனாதிபதி யின் செயலாளர் லலித் வீரதுங்க கூறினார்.
அரச திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு தமது தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக மக்கள் செல்லும் போது மொழிப் பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இது மிகவும் பாரிய பிரச்சினையாக இருக்கிறது என புத்திஜீவிகள், தொழிவாண்மையாளர்கள் சுட்டிக்காட்டினர்.
இதனையடுத்தே பசில் ராஜபக்ஷ தமிழ், ஆங்கில, சிங்கள மொழிகளில் தேர்ச்சிபெற்ற ஓய்வுபெற்ற தமிழ் உத்தியோகத்தர்களை சேர்த்துக் கொள்வது என முடிவு செய்துள்ளார்.
விரைவில் இதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள் ளன. சேர்த்துக் கொள்ளப்படவுள்ளவர்களின் தகைமைகள் வயது தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றன.


»»  (மேலும்)

கிழக்கு மாகாண மாணவர்களின் விவசாய கண்காட்சி பூர்த்தி

<திருகோணமலையில் ஏற்பாடு செய்யப்ப ட்டிருந்து கிழக்கு மாகாணப் பாடசாலை மாணவர்களின் இருநாள் விவசாயக் கண் காட்சி நேற்று (30) மாலை நிறைவடைந்தது.
இறுதிநாள் நிகழ்வில் கல்வி பிரதிய மைச்சர் மு.சச்சிதானந்தன் பிரதம அதிதி யாகக் கலந்து கொண்டார்.
நேற்று முன்தினம் (29) திருகோண மலை, உவர்மலை விவேகானந்தா கல்லூரி யில் ஆரம்பமான இந்த விவசாயக் கண் காட்சியில் கிழக்கு மாகாணத்தில் 16 கல்வி வலயங்களைச் சேர்ந்த 50 பாடசாலை களின் மாணவர்கள் பங்கேற்றனர். 186 மாண வர்கள் தமது திறமைகளை வெளிப்படுத் தியிருந்தனர். சுமார் ஆயிரத்திற்கும் அதிக மான மாணவர்கள் கண்காட்சியைக் கண்டு களிக்கக் கூடியதாக இருந்தது.span id="f ullpost">
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை விளக்கும் முகமாக இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஜனாதிபதியின் மஹிந்த சிந்னை வேலைத் திட்டத்தின் கீழ் “நாம் பயிரிடுவோம், நாட்டைக் கட்டியெழுப்புவோம்” என்ற தொனிப்பொருளில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இறுதிநாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதியமைச்சர் சச்சிதானந்தன்,
“யுத்தம் முடிவுற்றிருக்கும் நிலையில், அடு த்த கட்டமாக அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க வேண்டும். நாட்டில் உள்ள 3.9 மில்லியன் மாணவர்களும் பங்களிப்புச் செய்ய வேண்டும்” என்றார்.
இந்த விவசாயக் கண்காட்சியை கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தண்டாயுத பாணி பொறுப்பேற்று ஏற்பாடு செய்திருந் தார்.

»»  (மேலும்)

5/30/2009

Help the Wanni IDP's in Pulmoddai


Dear Brothers and Sisters,
.
We kindly request all of you to help the IDP’s who are displaced from Vanni as our RECDO has already started the following activities to alleviate the sufferings of the IDP’s who have sheltered in Pulmoddai and the surrounding villages.
Cooked food supply (Part of the IDP’s)
Drinking Water supply
NFI Distribution
We, RECDO also intend to distribute food packages, hygiene packages and medicine. And Child Friendly activities and Water sanitation also RECDO will continue to provide these basic necessities and calls upon our generous donors and supporters to help provide for the IDP’s
Thanks
Account No – 0004049743
Bank - Bank of Ceylon (BOC)
Branch – Kantale
Account Name - Rural Economic and Community Development Organization
J.Mohamed Azhar
Head of the Mission
RECDO- Rural Economic and Community Development Organization.
204c, Peraru-01,
Kantale.
Sri Lanka.
+94777073441
+94718161660
+94265670475
recdo_kantale@yahoo.com
azharrecdo_kantale@yahoo.com
azharknt@gmail.com

Note: Recommended by S.M.M.Bazeer, Attorney-at-Law, who is well aware of our assistance to the Mutur Refugees through Muslim Aid (UK) during the time when Mutur people became refugees as a result of the clashes between the LTTE and the GOSL in 2006.
»»  (மேலும்)

இறைவன் என்று ஒருவன் இருப்பானாக இருந்தால் அவன் எம்மையும் மன்னிப்பானாக. -குவர்னிகா -


வன்னிப் பெருநிலப்பரப்புக் குறுகி முள்ளிவாய்க்காலாகியதும், முள்ளிவாய்க்காலுக்குள் மக்கள் கடந்த ஆறுமாதகாலமாய் கோரக்கொலையுண்டதும் அங்கவீனர்களாகியதும் நாம் கண்டு கொண்டவை. கடந்த இறுதி யுத்தத்தில் மக்கள் இராணுவத்திடம் தஞ்சம் கேட்ட கொடூரம் நமது மக்கள் இன்றுவரை அனுபவித்திராதவை. தஞ்சமடைந்தவர்கள் சண்டையில் பலியாகிய விடுதலைப்புலிகள் போக எஞ்சியவர்களை இராணுவமும் புலிகளும் கொன்றொழித்துவிட்டன. இன்றுவரை இப்படியொரு யுத்தப் பிரதேசத்தைப் பார்க்கவில்லை என்று பான்கிமூன் சொல்லுமளவுக்கு புதுமாத்தளன் மாறிவிட்டிருக்கிறது. சுடுகாடு, இரத்தக்களரி, மனிதப்படுகொலை என்ற சொற்பதங்களின் அர்த்தம் அங்கே நமக்குப் போதுமானதாக இல்லை. வளம் கொண்ட வாழ்வியலில் இருந்து மிகப்பெரிய தொலைதூரத்திற்கு துரத்தப்பட்டிருக்கிறார்கள் நமது வன்னி மக்கள்.
விடுதலைப்புலிகளது அழிவு அவர்கள் சகோதரப்படுகொலை செய்த்தொடங்கியபோதே ஆரம்பமாகியது என்று சொன்னாலும் அவர்களால் இனித் தாக்குப்பிடிக்கமுடியாது போய் அழிந்து போவார்கள் என்பது அத்தனை வன்னிமக்களும் புலிகளால் புதுமாத்தளனுக்குள் சாய்க்கப்பட்ட போதே தெரிந்து விட்டது. வன்னிக்குள் வரும் இராணுவத்திற்கு இங்குதான் புதைகுழி என்று வீரவசனம் பேசிக்கொண்டு தமக்குத் தாமே புதை குழியைத் தோண்டினார்கள் புலிகள்.
விடுதலைப்புலிகளது தலைவர் உட்பட அனைத்துத் தளபதிகளும் இராணுவத்தால் கொன்றொழிக்கப்பட்டாயிற்று. தலைவர் தப்பிவிட்டார். தலைவர் நலமாக இருக்கிறார் என்று கனவு கண்டுகொண்டு இருக்கிறது புலம்பெயர் தமிழினம். விடுதலைப்புலிகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியாமல் அழித்து விட்டிருக்கிறது இலங்கை இராணுவம். கடைசிக் கிழமைகளில் விடுதலைப்புலிகள் அச்சாணி உடைந்த வண்டியாகிவிட்டிருந்ததார்கள். யாரிடம் எந்த வகையில் கெஞ்சமுடியுமோ கெஞ்சிக்கொண்டிருந்தார்கள். தமது போராளிகளுக்கு சரணடைவது எனபதை வரலாற்றில் மறுத்த புலிகளின் தலைமை தாம் சரணடைவதற்கு வெள்ளைக்கொடியுடன் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தது.
உலக அரசியலை,உலக அரசியல் மாற்றத்தை எள்ளளவும் விளங்கிக்கொள்ளத அளவுக்கு அவர்களது புத்தி மந்தமாகி இருந்தது. எப்போதும் இராணுவ நோக்கிலே சிந்திக்கத் தெரிந்தவர்கள் இறுதியில் அந்தச் சிந்தனையையும் மறந்து போனார்கள். வன்னிபெருநிலப்பரப்பெங்கும் பரவியிருந்தவர்கள் இராணுவத்திற்கு வசதியாக புதுமாத்தளனுக்குள் முடங்கிப்போனார்கள்.
நீங்கள் இறுதியல் சரணடைவதுதான் நோக்கம் எனில் புதுமாத்தளனுக்குள் போனபின் ஏன் பிள்ளை பிடித்தீர்கள்? பிஞ்சுக்குரல் அறாத பெண்பிள்ளைகளை உங்களுக்காக ஏன் பலியாக்கினீர்கள்? கடந்த ஆறுமாமாக தப்பியோடுபவர்களை ஏன் சுட்டுத்தள்ளினீர்கள்? இவ்வளவு கேவலமான முறையில் நீங்கள் சரணடைவதுதான் முடிவென்றால் மடுமாதாவைத் தூக்கியபோது வேண்டாம் மாங்குளத்தை கைவிடும்போது வேண்டாம் ஆகக்குறைந்தது கிளிநொச்சியில் வைத்தாவது செய்திருக்க வேண்டாமா? சரி தீபனுடன் உங்கள் 500 போராளிகள் மரணித்த போதாவது செய்திருக்கலாமே. உங்கள் இடுப்பு வேட்டி உருவும் நிலையில் உங்கள் பெற்றோரையும் மனிசிமாரையும் இராணுவத்திடம் அனுப்பிவிட்டு ஏன்டா பாவிகளா அத்தனை மக்களையும் கொன்றீர்கள்? நயவஞ்சகத்தனமான உங்கள் செயலை புலம்பெயர் பன்னாடைகள் தியாகம் என்கிறார்கள். இறுதியில் 3000இ ராணுவத்தை அழித்து 200கரும்புலிகளுடன் நந்திக் கடலுக்குள்ளால் தலைவர் தப்பிவிட்டார் என்று வீரவசனம் பேசும் புலம் பெயர் புண்ணியவான்கள் யாருக்கும் நந்திக்கடல் எது என்று தெரியாது. அதைத்தாண்டி இந்துமகாசமுத்திரம் ஒன்று இருப்பது இந்தமடையர்களுக்கு இன்னுந்தான் தெரியவில்லை. நந்திக்கடலை ஊடறுத்த தலைவர் எங்கு போனார் என்றும் சொல்லமுடியாதுள்ளார்கள். தலைவரது அடுத்த மாவீரர் உரையில் எல்லாம் சொல்லுவார் என்று நினைக்கிறார்கள்.
காசியில் எடுத்த புகைப்படத்தை பொலநறுவைக் கொலையாக்கிய புலிகளின் வெளிநாட்டுப் பிரமுகர்கள் அடுத்த மாவீரர் உரையை அசத்தப்போவது யாரு கூட்டத்திலிருந்து கோவைக் குணாவையோ வடிவேலு கணேசையோ கூட்டிவந்து மிமிக்கிரி உரைநிகழ்த்துவதற்கு என்ன பஞ்சம் வந்து விடப்போகிறது. இவ்வளவு கால அழிவிலும் தலைவர் நவம்பர் மாதம்தானே உரைநிகழ்த்தியவர். இனியும் அப்படி நிகழ்த்துவதில் தமிழ் மக்களுக்கு ஒன்று குறைந்து விடப் போவதில்லை. ஆனால் இந்தப் புலுடாத்தனத்தில் பாதிக்கப்பட்ட மக்களிடம் வெகுவிரைவில் அடிவாங்கிச் சாவார்கள் இவர்கள். இவையெல்லாப் புலடாக்களையும்; மீறி நம்மிடம் மிகப்பெரிய உண்மை ஒன்று இருக்கிறது. அதுதான் யுத்தத்தால் அழிவைப்பெற்றுக்கொண்ட மக்கள் நம்முன் இருக்கிறார்கள் என்பது. அவர்கள் குறித்த கவனமே நமக்கு முன்னிருக்கும் மிகப்பெரிய வேலை.
புதுமாத்தளனிலிருந்து தஞ்சமடைந்த மக்கள் அனைவரும் வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் மறைமுகமாக கிளிநெச்சியிலும் வைக்கப்பட்டிருக்கிறார்கள். நலன்புரிமுகாம் என்று சொல்லப்படும் அத்தனை முகாம்களுக்குள்ளும் மக்கள் நலனற்று வாழ்கிறார்கள். மிக அடிப்படைத் தேவைகள் கூட இல்லாத வாழ்வு அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு இலட்சம் மக்களுக்கு மேல் வாழும் இந்த முகாம்களில் அரசின் அக்கறை இன்னும் முழுமையாகத் திரும்பவில்லை. அரசு யுத்த வெற்றியிலும் யுத்தத்தின் பின்னாலுள்ள புடுங்குப்பாடுகளிலுமே அதிக கவனம் செலுத்துகிறது.
இந்த முகாம்களில் அங்கவீனர்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், கர்பிணித் தாய்மார்கள,; வயோதிபர்கள் என்று கவனிக்கப்படாமல் நாளை மரணித்துப் போகுமளவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். போதிய உணவு இல்லாது இருக்கிறது. யுத்தப்பிரதேசத்தில் போரில் அகப்பட்டு மாதக்கணக்கில் உணவின்றி இருந்தவர்கள் அவர்கள். தற்போது இலங்கை அரசால் நலன்புரி முகாம் என்ற பெயரில் முட்கம்பிகளுக்குள்ளே அடைக்கப்பட்டு உணவுப்பற்றாக்குறையோடு விடப்பட்டுள்ளார்கள். முட்கம்பிக்கு வெளியில் இருப்பவர்களை நோக்கி பசிக்கரம் நீட்டப்படுகிறது. முகாமிலிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகள் அங்கிருப்பவர்களிடம் உணவுக்கு கெஞ்சுகிறார்கள்.
இதையெல்லாம்வி;ட கால் கைகளை இழந்திருக்கும் மக்களது மனோநிலை மிகவும் பயங்கரமானது. வைத்தியசாலை எங்கும் அங்கவீர்கள் பரவிக்கிடக்கிறார்கள். இரண்டுகைகளையும் இரண்டுகால்களையும் இழந்த தாய்க்கு இரண்டுகுழந்தை பிறந்திருக்கும் கொடுமை அங்கு இடம்பெற்றிருக்கிறது. தன்னைக் கொன்று விடும்படி கதறும் குரல் மனித சமூகததையே உலுக்குகிறது? வவுனியா வைத்தியசாலை மனநோயாளிகளால் நிறைந்து கொண்டிருக்கிறது.
போதிய உணவும் ஊட்டச்சத்துமற்று எதிர்காலத்தைத் தொலைத்திருக்கும் மக்களின்பக்கம் நமது கவனத்தைத் திருப்பவேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம் நாம்.
இந்த இடைத்தங்கல் முகாமிற்குள் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் பலர் வந்திருக்கிறார்கள் என்கிறது இலங்கை அரசு. இந்த முக்கிய உறுப்பினர்களின் நல்வாழ்விற்கு தங்கள் பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோரும் வந்திருக்கிறார்கள். பெற்றோரிடமிருந்து பிள்ளைகளைப் பறித்துக் கொடுத்த தரகர்களும் வந்திருக்கிறார்கள். என்னசெய்வது தமிழ்க் கலாசார கணக்குவழக்குப்படி முற்பகல் செயின் பிற்பகல் விளையும். அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும். நமது பெரியாரின் போர்வாள் எம.ஆh. ராதா சொன்னது போல் இறைவன் என்று ஒருவன் இருப்பானாக இருந்தால் அவன் எம்மையும் பன்னிப்பானாக.


»»  (மேலும்)

கிழக்கு மாகாண பாடசாலை அணிகளுக்கிடையிலானகிரிக்கெட் போட்டியில் ஏறாவூர் அலிகார் வெற்றி

கிழக்கு மாகாண பாடசாலை அணிகளுக்கிடையிலான மாகாண மட்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை அணி சம்பியன் பட்டத்தை வென்றது.
காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிச் சுற்றுப் போட்டியில் களு தாவளை மத்திய மகா வித்தியாலய அணியை அலிகார் தேசிய பாடசாலை அணி எதிர்த்தாடியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய அலிகார் தேசிய பாட சாலை அணி 15 ஓவர்கள் முடிவில் 07 விக்கற்றுக்களை இழந்து 81 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய களுதாவளை மத்திய மகா வித்தியாலய அணி 15 ஓவர்களில் சகல விக்கற்றுக்களையும் இழந்து 75 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.
இதன் பிரகாரம் 06 ஓட்டங்களால் வெற்றிபெற்று அலிகார் தேசிய பாடசாலை அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.
இதேவேளை ஏற்கனவே நடைபெற்று முடிவடைந்த 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான எல்லே போட்டியிலும் அலிகார் தேசிய பாடசாலை கிழக்கு மாகாண சம்பிய னாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களை கெளரவி ப்பதற்கான விசேட வைபவமொன்று ஏற்பாடு செய்யப்பட்டதாக பாட சாலை அதிபர் யூ. எச். முகம்மத் தெரிவித்தார்.


»»  (மேலும்)

5/29/2009

20 மில்லியன் ரூபா செலவில் பாடசாலை கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.


கல்குடா கல்வி வலயாத்தின் வாகரைப்பிரதேச பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்காக பல கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவை இரண்டு வகையாக பிரிக்கப்பட்டு பௌதீகவள விருத்தி, கல்விநல விருத்தி என்ற தொனிப்பொருளில் நீண்ட கால வேலைத்திட்டங்களாக நடைபெறுகின்றது. கல்குடா வலயக் கல்விப் பணிமனையின் கோரிக்கைக்கு அமைவாக பௌதீகவள விருத்தியின் ஓர் அம்சமாக கண்டலடி பாடசாலையில் GTZ நிறுவனத்தின் நிதியுதவியுடன் 20 மில்லியன் ரூபா செலவிலான புதிய பாடசாலைக் கட்டிடத் தொகுதியும், கல்வி அமைச்சின் கீழான நிதியுதவியின் கீழ் நூலகமும் இன்று திறந்து வைக்கப்பட்டது.
புhடசாலை அதிபர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச்செயலாளர் பூ.பிரசாந்தன் GTZ நிறுவனத்தின் பிரதம பொறியியலாளர் அன்ரியா, கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி .சுபா சக்கரவர்த்தி, கோட்டக்கல்விப் பணிப்பாளர் குணலிங்கம், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் பூ.பிரசாந்தன் கருத்துத் தெரிவிக்கையில், ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகள் மேல் சித்தரவதையுடன் செயற்படுவதன் மூலமும், சமூக,கல்வி விழுமியங்களை புகட்டுவதன் மூலமே கல்வி நிலையில் அபிவிருத்தி காண முடியும். கல்குடா வலயக் கல்விப்பணிப்பாளர் குறிப்பிடுவதற்கு அமைவாக வலயக் கல்விப்பணிப்பாளர், கோட்டக் கல்விப் பணிப்பாளர், அதிபர், ஆசிரியர்கள் சிறப்பாக செயற்படுகின்ற வேளையிலும், பெற்றோர்கள் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளில் அக்கறை செலுத்துவது குறைவாகவே காணப்படுகின்றது. சுமூகத்தில் காணப்படுகின்ற அனைத்துப் பிரச்சனைகளுக்கும், மாணவர்களின் கல்வி நிலை வீழ்சிசிக்கும் இதுவே முக்கிய காரணமாக அமைகின்றது. வாகரைப் பிரதேசத்தில் கல்வி கற்பிக்கும் 222 ஆசிரியர்களில் 23 ஆசிரியர்கள் மாத்திரமே வாகரைப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். ஏனையவர்கள் பிற பிரதேசங்களை சேர்ந்தவர்கள் இதுவும் கல்வி வீழ்ச்சிக்கு காரணியாக அமைவதாக குறிப்பிட்டார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் கிழக்கு மாகாணத்தின் கல்வி நிலையின் வலுவாக்கத்திற்காக கிழக்கு மாகாண முதலமைச்சரும், மாகாண சபையும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பாடசாலை விளையாட்டு மைதான புனரமைப்பு விளையாட்டு பயிற்சிகள் மாணவ சுற்றுலாக்கள் தலைமைத்துவ பயிற்சிகள் கல்வி திட்டங்கள் ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் பாடசாலைகளுக்கான கணணி வழங்கல் போன்ற செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இதே போன்று படுவான்கரைப் பகுதிகளுக்கும் புதிய கல்வி வலையம் ஒன்று உருவாக்கப்படுமிடத்து இப்பகுதி மாணவர்களின் கல்வி நிலையினையும் விருத்தி செய்ய முடியும் என அப்பகுதி மக்களால் தொடர்ந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இது பரிசீலனை செய்யப்பட்டு எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

»»  (மேலும்)

எத்தனையோ குழந்தைகளின் பெற்றோரை கொன்று குவித்த பிரபாகரன் தன் பெற்றோரை மட்டும் பாதுகாப்பாக அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அனுப்பியுள்ளார்.


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையும் தாயும் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள ஓர் இடைத்தங்கல் முகாமில் இருப்பதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
இது பற்றி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார அவர்கள், பிரபாகரனின் பெற்றோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்காக அமைக்கப்பட்ட முகாமில் இருப்பது புதன்கிழமை மாலைதான் தங்களின் கவனத்துக்கு வந்ததாகக் கூறினார்
பிரபாகரனின் பெற்றோர்கள் காயங்கள் ஏதும் இன்றி நலமாக இருப்பதாகக் கூறிய அவர், படையினர் அவர்களை விசாரணைக்கு உட்படுத்தவில்லை என்றும் குறிப்பிட்டார்.
புதுமாத்தளன் மற்றும் வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் படையினர் நடத்திய மீட்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து அவர்கள் இங்கே வந்திருக்கலாம் என்று தாம் கருதுவதாகவும், ஆனால் அவர்கள் எப்போது வந்தார்கள் என்பது குறித்து தமக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்


»»  (மேலும்)

கிழக்கு மாகாண அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நெல் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கைகிழக்கு மாகாண அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நெல் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவ டிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேற்படித் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தி லுள்ள சபை கமநல சேவைப்பிரிவுகளிலும் நீண்ட காலமாக கவனிக்கப்படாதிருந்த 1800 சிறிய குளங் கள் இவ்வருட இறுதிக்குள் புனரமைப்புச் செய் யப்பட்டு அடுத்த வருட சிறுபோக நெற் செய்கையின் போது நீர்ப்பாசன வசதிகள் வழங்கப் படுவதோடு மேட்டு நிலப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுபவர்களுக்கும் நீர்ப்பாசன வசதிகள் வழங் கப்படவுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதே நேரம் கிழக்கு மாகாணத்திலுள்ள பெரிய நீர்ப்பாசனத் திட்டத்திலுள்ள குறைபாடு களை நிவர்த்தி செய்து வாய்க்காலை புனரமைக்க ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியும் கிடைத்துள்ளது. இதன் மூலம் லகுகலைக்குளம் அபிவிருத்தி செய்யப்பட்டு வாய்க்காலும் புனர மைக்கப்படவுள்ளன.
இதே போன்று பன்னல்கம நீர்த்தேக்கமும் புனரமைக்கப்படவிருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைப் பகுதியிலுள்ள குளங்கள் திருத்தம் செய்யும் வேலைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நீர்ப்பாசன வசதிகள் அபிவிருத்தி செய்யப்படும் போது விவசாய நடவடிக்கைகளும் விஸ்தரிப்ப தற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. மல்வத்தை, கரடியனாறு விவசாயப்பண்ணைகள் அபிவிருத்தி செய்யப்பட்டு விதை நெல் உற்பத்தியும் அடுத்த பெரும் போகத்திலிருந்து அதிகரிக்கப்படவிருக்கிறது.
இது தவிர மூன்று மாவட்டங்களிலும் விதை நெல் சுத்திகரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங் கக் கூடிய ஏற்பாடுகளும், நெல் சந்தைப்படுத்தும் சபை கிழக்கில் பல முக்கிய இடங்களில் பாரிய களஞ்சியங்களை அமைக்கும் வேலைகளையும் மேற்கொண்டு வருகிறதென்பதும் இங்கு குறிப் பிடத்தக்கது.

»»  (மேலும்)

இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்குவதற்குமட்டு. மாவட்ட பாடசாலைகளில் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு


வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கவென மட்டக்க ளப்பு மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் நிவாரணப் பொருட் கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மட்டக்களப்பு, மட்டக்களப்பு மத்தி, பட்டிருப்பு, கல்குடா ஆகிய நான்கு கல்வி வலயங்களிலுமுள்ள பாட சாலைகளிலேயே நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன.
மாணவர்கள் நிவாரணப் பொருட்களை பாடசாலை அதிபரிடம் கைய ளிக்க அதிபர் அப்பொருட்களை கோட்டக்கல்விப் பணிப்பாளரிடம் வழங்கி னார். கோட்டக் கல்விப் பணிப்பாளர் வலயக் கல்விப் பணிப்பாளரிடம் வழங்கும் நடவடிக்கை தற்போது இடம்பெற்றுவருகின்றது.
சேகரிக்கப்படும் பொருட்களை வலயக் கல்விப் பணிப்பாளர் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினூடாக இடம்பெயர்ந்த மக்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளார்.
பிஸ்கட், பால்மா வகைகள், உடுப்பு போன்ற பொருட்கள் சேகரிக் கப்படுகின்றன.
காத்தான்குடிக் கல்விக் கோட்டத்திலுள்ள பாடசாலைகளிலும் இந் நிவாரணப் பொருட்கள் சேரிக்கப்பட்டு வருகின்றன.


»»  (மேலும்)

5/28/2009

இளைஞர்கள் சமூகப்பற்றுடன் செயற்படவேண்டும். – பூ. பிரசாந்தன்.


சமூகத்தின் பிடிப்பற்ற தன்மையும் தூரநோக்கற்ற குறுகிய இலாப சிந்தையும் பலரிலும் மேலோங்கிக் காணப்படுவதனாலேயே இளைஞர் சமூகம் இன்றும் உதவிகளை எதிர்பார்த்து நிற்கவேண்டிய சூழ் நிலையில் உள்ளது.
எந்த வேளையிலும் பிறருக்கும் தாம் சார்ந்த சமூகத்திற்கும் இன மத மொழி பேதமின்றி சேவை வழங்க முன்வரும் வேளையில் நல்லதொரு எதிர்காலம் தானாக வந்தடைவதற்கு வழி கிடைக்கும். சோம்பேறித் தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அனைத்து இளைஞர்களும் முன்வரவேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளரும் இளைஞர் அபிவிருத்தி சம்மேளனத்தின் தலைவருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு இலங்கை நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய இளைஞர் கொடி நிதி சேகரிப்பு நிகழ்வை 2009.05.25ம் திகதி மட்டக்களப்பு முதலமைச்சர் அலுவலகத்தில் ஆரம்பித்து வைத்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இலங்கையிலுள்ள சுமார் 5000 இளைஞர் கழகத்தின் பிரதிநிதிகளும் சமூகசிந்தையுடன் செயற்பட்டால் மாத்திரம் போதாது அனைத்து இளைஞர்களும் நாட்டின் நன்மை கருதி விளையாட்டுத் துறையுடன் நிறுத்திக் கொள்ளாமல் கலை கலாச்சார பொருளாதார அபிவிருத்திகளுக்காகவும் முன்னின்று உழகை;கவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட பணிப்பாளர் திரு.வு.ஈஸ்வரராஜா, மண்முனைப்பற்று இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் திருமதி. நிஷாந்தி அருள்மொழி மற்றும் பிரதேச, மாவட்ட இளைஞர் கழக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.»»  (மேலும்)

மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன முஸ்லிம் –எஸ்.எம்.எம் பஷீர் (பாகம் -5)


புலிகளின் அரசியல் முலாம்பூசப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தியல்களை உள்வாங்கிக்கொண்டு ஹக்கீமின் தலைமையிலான பிளவுபட்ட சிறீPலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது அரசியலை வடகிழக்கில் தக்கவைக்கமுடியும் என்ற அடிப்படையில்தான் செயற்பட்டு வந்திருக்கின்றது. அத்தகைய அரசியல் கருத்தியல் மாற்றங்கள், செயற்பாடுகள் குறிப்பாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரான அஷரப் அவர்களின் மறைவிற்குப் பின்பே அதிலும் குறிப்பாக சேகுதாவுத் பஸீர், ரவூப் ஹக்கீம் ஆகியோரின் தலைமைத்துவங்கள் உறுதியானபின்பே இந்நிலை கூர்மையடைந்தது.

நோர்வேயின் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தான காலகட்டத்தில் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நோர்வேயின் அனுசரணையாளர்களால் அணுகப்பட்டனர். அந்நிலையில் ஹக்கீம் எவ்வாறு செயற்பட்டார் என்பது குறித்த செய்திகள் கொழும்பிலுள்ள கிழக்கைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணி ஒருவர் ஹக்கீமுடன் நடத்திய விவாதங்கள் குறித்தும் என்னிடம் விபரித்தார். அவ்வாறான சம்பவங்கள் நோர்வேயின் வலைக்குள் முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு வீழ்த்தப்பட்டது என்பது பின்னர் தெளிவாக விளங்கியது. அதன்பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட முஸ்லிம் சமாதான செயலகம் மேலும் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியலமைப்பு சட்ட ஆலோசகரான எம்..எச்.எம் சல்மான் போன்றோரை வேர்கோப் பவுண்டேசன் எனும் இன்னுமொரு வெளிநாட்டு சமாதானச் செயற்பாட்டு நிறுவனம் மூலமாக (Berghof Foundation) சுவிஸ்லாந்திற்கு அழைத்து முஸ்லிம்களுக்கான அரசியல் பிரச்சினைகளை ஆராய்வதனூடாக மொத்த தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளையும் அடிப்படையாகக் கொண்டு வடகிழக்கு பிரச்சினைக்கு ஒரு இணக்கப்பாட்டினூடாக தீர்வுகாணும் முயற்சியின் அடிப்படையில் புலம்பெயர் புலி உறுப்பினர்ளும்; கலந்துகொள்ளும் நிகழ்சியினூடாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முஸ்லிம் சமாதானச் செயலகம் நோர்வேயின் நிதி உதவியுடன் அரசியல் நிலைப்பாட்டில் எதிரெதிராக செயற்படுகின்ற சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய ஐக்கிய முன்னணி என்பனவற்றின் பிரதிநிதிகளை மட்டும் உள்ளடக்கியதாகவும் மறுபுறம் ஏனைய முஸ்லிம் அரசியல் கட்சிகளை உள்ளடக்காததாகவும் "புரிந்துணர்வின்” அடிப்படையில் செயற்பட்டு வந்திருக்கிறார்கள். இவர்களுடைய செயற்பாடு குறுகிய அரசியல் நலன்களையும் மறுபுறம் வடக்கு முஸ்லிம்ளிpன் அக்கறைகளை உள்ளடக்காததாகவும் செயற்பட்டது என்ற குற்றச்சாட்டின்மூலம் வடமாகாணத்திற்கான தனியான சமாதானச் செயலகம் ஒன்றினை நிறுவும் நிலைக்கு வடமாகாண முஸ்லிம்கள் சார்பாக செயற்படும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் வடபகுதி உறுப்பினரான அமைச்சர் றிச்சாட் பதியுதீன் வடமாகாண முஸ்லிம்களுக்கென தனியான சமாதானச் செயலகம் ஒன்றினை நிறுவி செயற்படவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். முஸ்லிம் சமாதானச் செயலகம் வடமாகாண முஸ்லிம்களுக்கென தனியாக உருவாக்கப்பட்டமைக்கான பிரதான காரணம் என்னவெனில் தொடர்ந்தேர்ச்சியாக வடமாகாண முஸ்லிம்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளாலும், அரசாங்கத்தினாலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் 2007 ம் ஆண்டில் வடமாகாண புத்தளம் வாழ் அகதிகளுக்கென வீடமைப்புத் திட்டமொன்றினை அமைக்கும் திட்டத்தினை அமைச்சர் றிசாட் பதியுதீன் ஐ.எம்..எப் (I.M.F) என்னும் நிறுவனத்தின் உதவியுடன் அமைக்க முன்வந்த போது அதற்கு புத்தளப் பிரதேச அரசியல்வாதிகளும், அப்பிரதேச மக்களும் தடையாக அமைந்தனர். இதனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வீடமைப்பு நிர்மாணப்பணிகளை உடனடியாக நிறுத்தியதுடன் அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எழுத்துமூல சம்மதத்தினைப் பெற்றுவருமாறும் அப்போதுதான் நிர்மாணப் பணிகளை தொடரமுடியுமென்றும் ஆலோசனை வழங்கினார். எனினும் அக்கால கட்டத்தில் மஹிந்த அரசில் அமைச்சராக இருந்த ஹக்கீம் புத்தளம் வாக்குகளை தமது கட்சி இழந்தவிடுமென்பதால் அந்த ஆவணத்தில் அவர் கையொப்பமிடவில்லை. இதனைத் தொடர்ந்தே முஸ்லிம் சமாதானச் செயலகம் வடக்கு முஸ்லிம் சமாதானச் செயலகம் என்ற பிளவிற்கு உட்பட்டது. வடகிழக்கு இணைப்பு, பாரம்பரிய பிரதேசக் கோட்பாடுகள் என்பவற்றில் வெளிப்படையான எதிர்ப்பினைக்காட்டிவந்த அமைச்சர் அதாவுல்லா தேசிய முஸ்லிம் காங்கிரஸ் என்னும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி இருப்பினும் அவர் உள்வாங்கப்படவில்லை. முஸ்லிம் காங்கிரஸ் செயலகத்திலுள்ள எம்.எச்.எம் சல்மானைச் சந்தித்தபொழுது வடகிழக்கு பராம்பரியம் குறித்த கருத்தியல்களையும் ஒரு தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்போல அவர் வலியுறுத்திக் கூறியதையும் இதற்கு எதிரான கருத்தியலை கொண்டிருப்பதாக எதிர்பார்க்கப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணியின் பிரதிநிதியான சட்டத்தரணி அவுல்கலாம் என்பவர் தமது அடிப்படை நலன்களைக்கருதி தாம் சார்ந்திருக்கின்ற கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிக்க முனையவில்லை.


இச்சமாதானச் செயலகத்தின் உள்ளக நிதி தொடர்பான செயற்பாடுகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள் முன்வைத்தபோது அவைபற்றி நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை. அஷரப்பின் இறுதி ஹெலிபயணத்தின்போது அவர் சிறீலங்கா.மு.கா என்னும் இனரீதியான அரசியல்கட்சி அவசியமில்லை என அறிவித்து சிறீ. மு.காவிற்கு பிரியாவிடை கூறினார். அவர் புதிதாக ஸ்தாபித்த தேசிய ஐக்கிய முன்னணிமூலம் தனது பதிய அரசியல் பயணத்தினை தொடரும் நிலைப்பாட்டிலும் அதனூடாக 2012 ல் ஒரு முஸ்லிம் இலங்கையின் பிரதமராக வரமுடியுமெனவும் நம்பினார். அஷரப்பினை படுகொலைசெய்த பின்பும் அதனை பகிரங்கமாக கூறமுடியாத சிறீலங்காமுஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் என்னிடம் தனிப்பட்டவகையில் நான் அவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது இது “நாலுகால்களின”; வேலைதான் என அவர் குறிப்பிட்டார். அவரது அரசியல் ஆலோசகரான சேகு தாவூத் பஸீர் தமது தலைவரை சந்திரிகா அரசுதான் படுகொரலை செய்ததென பகிரங்கமாக அரசியல் மேடைகளில் பேசியுள்ளார். இம்மரணம் குறித்து ஆணைக்குழு ஒன்று நியமிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதாக கூறியபோதும் இதுவரை அதுவிடயம் தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளையும் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினரோ அல்லது அஷரப்பின் பாரியாரோ மேற்கொள்ளவில்லை மறுபுறம் அஷரப் அவர்களைக் கொன்றது புலிகள் தான் என்று வெளிப்படையாக அதாவுல்லா குறிப்பிட்டு வந்துள்ளார். பிரபாகரனை சந்திக்கச்சென்ற விடயத்தில் சேகு தாவூத் பஸீரின் பின்புலச் செயற்பாடுகள் பற்றியும் தான் அதற்கு எதிராக கருத்து முன்வைத்ததையும் பல எதிர்கருத்துக்களில் ஒன்றாக தலைவரைக் கொன்றவர்களை தாம் சந்திக்கமுடியாது என்னும் கருத்தினையும் அவர் முன்வைத்ததாக அறிய முடிகின்றது. ஆனால் ஹக்:கீம் பிரபாகரன் வடகிழக்கு முழவதையும் பெற்றுவிடுவார் தமக்கு ஒன்றும் கிடைக்காது என்னும் அடிப்படையில் ஒப்பந்தம் ஒன்றினை புலிகளுடன் மேற்கொள்வதற்காக முனைந்தார். இதில் நோர்வேயின் பின்னணிகூட இருந்தது என்பதனை மறப்பதற்கில்லை. ஆனாலும் இந்த ஒப்பந்தம் குறித்து நடைமுறை குறித்த சந்தேகம் எழுப்பப்பட்டபோது பிரபாகரனின் ஆணை வடகிழக்கில் எங்கும் செல்லுமென்று குறிப்பிட்டிருந்தார் ரவூப் ஹக்கீம். அவரது ஆணை எவ்வாறு சென்றது என்பது முஸ்லிம்கள்மீது அவரது ஆணை எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்பது யாவரும் அறிந்ததே.! ஆனால் சிறி.ல.மு.காங்கிரஸின் தலைவரை புலிகள், தமிழ் தேசிய சக்திகள் இலகுவாக கையாளமுடியுமென்பதனை அறிந்து அரசியல்ரீதியாக தமது காய்களை நகர்த்தினர்.
இச்செயற்பாடு நோர்வேயின் அனுசரணையுடன் இலகுவாக்கப்பட்டது. அதற்கான பின்புலக்காரணம் புலிளைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் புலிகளது அவர்களது தயவில்தான்; வாழவேண்டுமென்னும் நிலைப்பாட்டினை அவா கொண்டிருந்தார். ஏனெனில் அவர் என்னிடமே 1990 களின் பிற்பகுதியில் ஹக்கீம் புலிகள் நினைத்தால் கிழக்கிலிருந்து முழு முஸ்லிம்களையும் வடக்கிலிருந்து வெளியேற்றியதுபோல் வெளியேற்றலாம் எனக் குறிப்பிட்டார். தமிழ் தேசியவாதக் கருத்தாக்கிரமிப்புக்கள,; செல்வாக்குகளுக்கு உட்படுத்தப்பட்ட ஹக்கீம் 1989 தேர்தலுக்குப் பின்னர் அஷரப் அவர்கள் கைவிட்ட சிங்களப் பேரினவாதக் கருத்தியலுக்கு மீண்டும் உயிர்கொடுத்தர். பேரினவாத சிங்கள எதிர்ப்புக் கருத்தியல்களிலும், தமிழ் தேசியவாதிய சக்திகளுடன் நெருக்கமாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். தெற்கிலே உள்ள மூன்றில் இரண்டுபங்கு முஸ்லிம்களின் அரசியல், அபிலாசைகளை பொருட்படுத்தாது தனது கிழக்கு அரசியல் தளத்தினை மட்டும் சிறீ.மு.கா ஊடாக உறுதி செய்யும் செயற்பாட்டில் தீர்க்கமாக செயற்பட்டு வந்துள்ளார். அதுகுறித்து அவரது கருத்து வெளிப்பாடுகளில் ”சிங்களப் பேரினவாதத்திற்கு அடிமையாகி தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தினை காட்டிக்கொடுக்கவோ, மளினப்படுத்தவோ மு.கா முயலாது” என்றும் தமிழ் தெசியக் கூட்டமைப்புடன் அரசியல் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளையும் பல தடவை மேற்கொண்டுள்ளார். இன்னிலைப்பாட்டிற்கு எதிரான முஸ்லிம் அரசியல் சக்திகளை சமாதான முயற்சிகளுக்கு எதிரான சக்திகளாக அடையாளங்காட்டி வந்திருக்கின்றார். 2004 ம் ஆண்டு பெப்ருவரியில் மு.கா.வின் ஊடக அறிக்கை ஒன்றில் தமிழ் பேசும் மக்களின் தாயகத்தை இரண்டாகக் கூறுபோட கோரும் அதாவுல்லா அணியினர் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைக்கு விரோதமான ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு துணைபோன நு.ஆ கட்சியினர் என்பவருக்கு எதிராக தாம் போட்டியிடுவதாக சிறீ.ல.மு காங்கிரஸ் தலைவா குறிப்பிட்டிருந்தாh. முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிளவுபட்டவர்களையும் துரோகிகளாக தண்டிக்கப்படவேண்டியவாகளாக புலிகளுக்கு நிகரான அரசியல் கருத்தியல்களையும், சொற்பதங்களையும் பிரயோகித்து வந்துள்ளார். புலிகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், சர்வதேச அனுசரணையாளர்களான நோர்வேயும், ஏனைய சமாதான தொண்டர் நிறுவனங்களும் வடகிழக்கு இணைந்த பாரம்பரிய பிரதேச அரசியல் அபிலாசைகளுக்கு ஹக்கீம் கைப்பொம்மையாக செயற்பட்டு வந்திருக்கிறார். ( தொடரும் )


»»  (மேலும்)

அன்பு யுத்தம் ஆரம்பிக்கட்டும் -புரட்சிதாசன் அகமட்-


சுமார் முற்பது ஆண்டுகள் புரையோடிப்போயிருந்த அகோர இனவெறியுத்தம் கடந்த பதினேழாம் திகதி மே மாதம் முடிவுக்கு வந்துவிட்டது. ஆம் இத்தினம் உலகத்தில் கின்னஸ் புத்தகத்தில் நினைவாக பொறிக்கப்படவேண்டிய பொன்நாளாகும்.
ஒன்றுக்குமே அடங்காமல் எதற்குமே தலையசைக்காமல் ஒரு தீர்வுக்குமே சம்மதிக்காமல் தனது முரட்டுச் சுபாவத்தினையும் ஒத்துக் கொள்ளாத தன்மையினையும் அரங்கேற்றி இலட்சக்கணக்கான உயிர்களை காவு கொண்டது மட்டுமல்லாமல் விலை மதிக்க முடியாத பெறுமதிகொண்ட சொத்துக்களும் உடமைகளும் அழிக்கப்படுவதற்கும் பிரதான காரணியாகவிருந்த அந்த முரட்டுப் புலி செத்துவிட்டது. அத்துடன் அதன் இளையதுகளும் செத்துமடிந்துவிட்டது
இனி இதனுடைய கொட்டமும் அடங்கிவிட்டது அடக்கப்பட்டும் விட்டது. என்றும் எப்போதும் அடாவடித்தனமும் அடக்குமுறையும் நிலைத்ததில்லை என்பதற்கு ஒரு மிகச் சிறந்த உதாரணமாக இந்த வெற்றியை நாம்கொள்ள முடியும். தற்போது ஒரு சுமூகமான நிலை எமது நாட்டில் தோன்றியுள்ளதை நாம் அறிவோம்.
நான்கு சுவர்களுக்குள் அடைக்கப்பட்ட ஒரு சிறைக் கைதியின் வாழ்கையினை அனுபவித்த வடபுல மக்கள் இன்று சின்னஞ் சிறிய கூடாரங்களிலும் மரநிழல்களிலும் வாழவேண்டிய நிர்க்கதி ஏற்பட்டுள்ளது. இவ் வாழ்க்கை முறை முன்னையதை விடவும் கஸ்டமாக இருந்தாலும் நிம்மதியாக இருக்கிறது என்று தங்களுக்குள் முனு முனுத்துக் கொள்கின்றனர். இதற்குக் காரணம் அடக்கு முறையின் கீழும் குறுகிய வட்டத்திற்குள்ளும் வாழ்ந்த இந்த மக்கள் இன்று நிம்மதிப்பெருமூச்சு விட்டு வாழ்கின்றனர்.
கொடூர இரத்த வெறிபிடித்த அரக்கர்கள்(புலிகள்) நிர்வாகத்தில் கைகட்டி வாய்பொத்தி தலையசைத்து தலை குனிந்து அடிமைகளாய் வாழ்ந்த இந்த தமிழ் சமூதாயம் இன்று பூரண சுதந்திரத்துடன் ஓரளவு நிம்மதி மூச்சுடன் அடக்குமுறை அதிகார வெறியிலிருந்து அகன்று அகதி முகாம்களிலும் நலன்புரி நிலையங்களிலும் வாழ்கின்றனர்.
புலிகளின் கொடூர யுத்தத்தில் அன்பு சாகடிக்கப்பட்டு தலைக் கனமும் முரட்டுத் தனமும் அடாவடித் தனமும் உயிர்பெற்றிருந்தது. ஆனால் இது பதினேழாம் திகதியுடன் முற்றாகத் துடைத்தெறியப்பட்டு மீண்டும் ஒரு புதிய உலகம் உருவாக்க அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.
ஒன்றுமே புரியாத அறியாத தெரியாத முட்டாள்கள் செய்த யுத்தத்தினால் முழு இலங்கை வாழும் எல்லா இன மக்களும் பெரும் பாதிப்புக்குள்ளாக்கப் பட்டனர்.
எல்லோரும் சிங்கபூர் நாட்டிலுள்ள வசதிகள் வாய்ப்புக்களை விடவும் அதிக வசதிவாய்புக்கள் எமக்கு கிட்டும் என்று கங்கணம் கட்டியிருந்த இலங்கைத் திருநாடு கொடூர யுத்தவெறியர்களின் ஆதிக்கத்தால் குட்டிச் சுவராகிவிட்டது. மட்டுமல்லாமல் சுக்குநூறாகியும் விட்டது. சர்வதேசத்திற்கு தலைக்கு இரண்டு இலட்சம் கடனாளியாக வாழ்கின்ற நிலையினை ஏற்படுத்திவிட்டு விட்டில் பூச்சியாக மடிந்த இந்தக் கொடிய மிருகங்கள் செய்த காட்டுமிராண்டித்தன நடவடிக்கைகளால் இன்று உயிருடன் வாழ்கின்ற அனைவரும் ஒரு மாபெரும் சுமையினை தலையில் சுமந்து கொண்டு வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
அடக்கு முறைக்காக ஏற்படுத்தப்பட்ட யுத்தம் முடிவுக்கு கொண்டு வருவதற்காக செய்த செலவுகளும் தியாகங்களும் தற்போது வாழ்கின்ற மக்களின் முன்னேற்றத்திற்கும் அபிவிருத்திற்கும் ஒரு பெரிய தடைகல்லாகவே இருக்கிறது என்பது யாவரும் அறிந்த உண்மையாகும்.
மனிதநேயம் விட்டுக் கொடுப்பு புரிந்துணர்வு ஒற்றுமை உடன்பாடு ஏற்றுக் கொள்ளும் தன்மை போன்ற விடயங்கள் புறக்கணிக்கப்பட்டதால் ஏற்பட்ட விரிசல்களால் உருவாக்கப்பட்ட இந்த யுத்தம் இன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பெரும் துன்பத்தையும் துயரத்தையும் இன்னல்களையும் தொடர்ந்து அனுபவித்துக் கொண்டே இருக்கின்றனர்.
ஒரு சமூதாயம் நிம்மதியுடனும் சுதந்திரத்துடன் தன்னாதிக்கத்துடனும் தனித்துவத்துடனும் வாழ்வதற்கு பல தியாகங்களைச் செய்தே ஆகவேண்டும் அந்தவகையில் இங்கு இடம்பெற்றவைகளெல்லாம் விளலுக்கு இறைத்த நீராகி விட்டது.
தற்போது கொடூர அரக்கர்களின் முரட்டு யுத்தம் முற்றுப்பெற்றிற்று ஆனால் இப்போது இங்கு அன்பு யுத்தம் அவசியமாயிற்று. ஒரு சமூதாயம் தோல்வியிலும் துன்பத்திலும் வாழ்கின்ற போது அவர்களை இழிவுபடுத்தாமல் இம்சைகுட்படுத்தாமல் அவர்கள் மீது கருணையும் அன்பு மழைகளையும் பொழிதல் வேண்டும். இதுவே மானிடர்களின் மாண்புமிகு பண்பாகும். மாறாக வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுதல் நன்றன்று.
நாம் எல்லோரும் இலங்கையர்கள் ஒருதாய் பெற்ற சகோதரசகோதரிகள் போல் வாழ்வதற்கான திடசங்கப்பம் பூண வேண்டும் இதற்கென நாங்கள் அனைவரும் உண்மையான அன்பு எனும் அந்த ஆயுதத்தை பிரயோகிக்கவேண்டும் அதற்கு இனிமேல் வேலை கொடுக்க வேண்டும்
மாறாக பழைமைவாய்ந்த குரோதம் வஞ்சகம் வைராக்கியம் போட்டி பொறாமை கபடம் ஏற்றத்தாழ்வு இன வேறுபாடு ஐக்கியமின்மை போன்றவைகளுக்கு சீ சொல்லி வழியனுப்பிவிட்டு புரிந்துணர்வு உண்மை அன்பு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை ஒற்றுமை உதவிபுரியும் பெருந்தன்மை ஐக்கியம் உடன்பாடு பேன்றவைகளை உள்வாங்க வேண்டும் அப்போதுதான் எமது இளைய சமூகத்தினராவது ஒற்றுமையுடன் வாழ்வார்கள் என்பது கண்கூடு.
மான்ப்புமிகு ஜனாதிபதியவர்கள் ஒரு சிறந்த தலைவராக மிளிரவேண்டுமாயின் அவரது மேலான சிந்தனைகள் உயிர்வாழ வேண்டுமாயின் இந்த அன்பு யுத்த்திற்கு அவரே தானே தளபதியாக இருந்து செயற்பட வேண்டும்.
இந்த யுத்த்திற்கு பணம் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை உண்மை அன்பையும் ஒற்றுமையையும்தான் மூலதனமாக செலவுகள் செய்ய வேண்டும். எனவே தற்போது இக் கொடூர யுத்தத்தால் சிக்குண்டு உருக்குலைந்து போன ஊனமுற்ற உள்ளங்களை உண்மை அன்பு யுத்தம் செய்து அவர்களை குணப்படுத்துவதோடு அவர்களின் உள்ளங்களையும் கொள்ளை கொள்ள வேண்டும்.
அவர்களுக்கு எல்லா விதங்களிலும் உதவிபுரிந்து சிங்களவர் தமிழர் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்கள் எனும் பேதமின்றி எல்லோரும் ஒருதாய் பெற்ற பிள்ளைகள் போல் ஒற்றுமையுடன் செயற்பட ஒத்தாசையும் உதவியும் புரியவேண்டும்.
இனிமேல் தமிழர்கள் என்றால் அவர்கள் புலிகள் எனும் கோதாவில் அனுக முற்படக் கூடாது. மாறாக அவர்கள் அனைவரையும் அன்பு எனும் அந்த விலைமதிக்க முடியாத அம்பால் ஏய்தி ஒற்றுமைப்படுத்த எல்லோரும் அயராது உழைக்க வேண்டும்.
இனிமேல் இராணுவம் என்றால் கொடுரமானவர்கள் பொலிசார் என்றால் அச்சம் கொடுப்பவர்கள் என்ற எண்ணம் எவருக்கும் வரவே கூடாது. அத்துடன் இவர்கள் எல்லோருடனும் மிகவும் நற்பாகவும் அன்பாகவும் பழகி அவர்களுக்கு மிகவும் ஆறுதல்களையும் உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்க முற்படவேண்டும் இனிவரும் காலங்களில் எந்த சந்தர்ப்பத்திலும் சமூகங்களுக்கிடையில் விரிசல்கள் ஏற்பட வழிவகை செய்ய முற்படக்கூடாது. இதற்கென்று ஒரு மாபெரும் வேலைத்திட்டத்தினை மாண்புமிகு ஜனாதிபதியவர்கள் வகுக்கவேண்டும்.
மேலும் ஊழழற்றதும் சிறப்பானதும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசொன்றைத் தாங்கள் நிறுவி எமது திருநாட்டில் வாழ்கின்ற அனைத்து சமுகங்களும் சிறப்பாக பயன்பெறும் வகையில் திறன்பட ஆட்சிபுரியும் நன்நாள் வெகுதூரத்தில் இல்லை என்றே கூறலாம்.
இழந்துபோன சொத்துக்கள் உயிர்கள் எல்லாம் மீளவும் உயிர்ப்பித்துக் கிடைக்கும் வகையில் எமது அனைவரதும் நடவடிக்கைகள் இடம்பெறவேண்டும் இதற்காக நாம் அனைவரும் அன்பு மழையில் நனைய ஆயத்தமாகுவோம்.
எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது 1978 ஏப்ரல் பதினெட்டாம் திகதி நல்லூர் வீதி இருபதைந்தாம் இலக்திலுள்ள எனது பொருளியல் ஆசான் திரு. தனராஜா அவர்களின் வீட்டுக் சென்றேன் அப்போது நான் உயர்தரம் முதலாம் பிரிவில் கல்விகற்றுக் கொண்டிருந்தேன்.
அவ்வேளை எங்களின் பாடசாலைக்கு ஒரு மாத விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. அவ்விடுமுறையை எனது ஆசானுடன் சந்தோசமாக யாழ்பானத்தில் கழித்தேன். அன்று நான் அடைந்த இன்பம் என்னால் ஒருநாளும் இலகுவில் மறந்துவிட முடியாது.
மேலும் அவர்கள் நான் ஒரு முஸ்லீம் என்று என்னை எவ்வகையிலும் வேற்றுமைப் படுத்தவில்லை. அக்கால கட்டத்தில் நல்லூர் கோயிலில் பிரமாண்டமான திருவிழா ஒன்று ஆரம்பமாகியிருந்தது. நானும் சந்தனப் பொட்டுவைத்து வேட்டி கட்டி வெறும் உடலுடனும் வெறும் காலுடனும் அந்தக் கோயிலுக்குச் சென்று திருவிழாவிலும் பங்கெடுத்தேன்.
அது எவ்வளவு சந்தோசத்தையும் உவகையையும் எனக்குத் தந்தது என்பதை தற்போது மீட்டுப் பார்க்கிறேன். எனவே நாம் யுத்த்த்தில் வெற்றி பெற்றுவிட்டோம் இனி எவர் எப்படிப்போனாலும் எமக்குப் பரவாயில்லை என யாரும் பாராமுகத்துடன் இருந்துவிடக் கூடாது.
இப்போதுதான் உண்மையான புனித அன்பு யுத்தம் செய்ய எல்லோரும் கடமைப்பட்டுள்ளோம். எம்மால் முடிந்த அளவிற்கு இந்த யுத்த்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து சமூகத்தினருக்கும் இயலுமான உதவிகளையும் ஒத்தாசைகளையும் தொடர்ந்து வழங்க முனைவோமாக.
அத்துடன் யுத்தத்தில் வெற்றிகொண்ட வீரர்களின் ஆயுதங்களுக்கு பூரண ஓய்வு வழங்கி அவர்களின் அன்புக்கரங்களுக்கு ஆதரவு வழங்க முயற்சிப்போமாக.
இனிமேல் யாரையும் யாரும் வெறுப்புடனும் பிரிவுடனும் கபடத்துடனும் சந்தேகத்துடனும் பார்க்காமல். எல்லோரும் ஒரு தாய்பெற்ற பிள்ளைகள் என்ற உயரிய சிந்தனையில் ஒற்றுமையுடன் வாழ அன்பு யுத்தம்செய்யப் புறப்படுவோம் வாருங்கள் வடபுலத்திற்கு.


»»  (மேலும்)

கலாசார பன்மைத்துவத்தின் ஊடாக சமாதானம்


இன்றைய உலகில் சமாதானத்தின் பயணம் பல்வேறு பரிமானங்களைக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமாதானம் மக்களின் கலாசார விழுமியங்களினூடாக சமாதானத்தை ஏற்படுத்துவதில் கல்விசார்பான அமைப்புக்கள் முன்னின்று உழைத்து வருகின்றன.
கடந்த காலங்களில் எல்லோர் மனங்களிலும் நீறுபூத்த நெருப்பாக காட்சி தந்து கொண்டிருந்த சமாதானத்தின் தேவையை நன்குணர்ந்ததன் வெளிப்பாடுதான் 'கலாசார பன்மைத்துவம் ஊடாக சமாதானம்' எனும் தொனிப்பொருளினை முன்னிறுத்தி ஒற்றுமை மிக்கதான சமாதானத்தினை அனைவரும் பெறத்தக்க வகையில் அமைந்த செயலமர்வு அக்கரைப்பற்று கல்வி வலயத் தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் போற்றத்தக்கதான ஓர் அம்சமாகும்.
அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் 100 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் அமைந் துள்ளன. அவற்றில் மூவினங்களுக்குமான பாடசாலைகளில் சைவ, இஸ்லாமிய, பெளத்த, கிறிஸ்தவ சமயரீதியிலான மாண வர்களும் கல்வி கற்று வருகின்றனர்.
இவ் வாறு பல் சமயம் சார்ந்த மாணவர்களை கொண்டு இவ்வலயத்தில் அவர்களுக்குரித்தான கலை கலாசாரங்களை ஒரே இடத்தில் கொண்டு வந்து செயல்வடிவம் கொடுத்து அதனை அனைவரும் கண்டுகளிக்கச் செய்து அதனூடாக சமாதான சகவாழ்வை ஏற்படுத்தியவர் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம். ஹாசீம்,
இப்பிரதேசத்தினது பாடசாலைச் சமூகத்தின் ஒத்துழைப்புடன் அக்கரைப்பற்று அஸ்ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் மே மாதம் 15, 16, 17 ஆம் திகதிகளில் கலாசார பன்மைத்துவம் ஊடாக சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்குடன் வதிவிடச் செயலமர்வாக நடைபெற்றது.
இந்நிகழ்வுகளின் தலைவராக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் யு. எல். எம். ஹாசீம் அவர்களும் பிரதம அதிதியாக கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரான எஸ். தண்டாயுதபாணி அவர்களும், கெளரவ அதிதிகளாக யூ. எல். ஏ. அkஸ் அவர்களும், மற்றும் கிழக்கு மாகாணத்தின் கெளரவ கல்வி அமைச்சரின் ஆலோசகரான எஸ். திவகலாலா அவர்களும், மிஹிZ / கிரிஷிஸி அமைப்பினது தொழில்நுட்ப ஆலோசகரான எம். பவளகாந்தன் அவர்களும் இந் நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்தனர்.
உண்மையில் இந்நிகழ்வு இன்றைய சூழலில் மிகவும் ஆரோக்கியமானதாக காணப்பட்டது எனலாம். ஏனெனில் அக்க ரைப்பற்று கல்வி வலயத்தினுள் காணப்படும் இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ, பெளத்த மாணவர்களுக்கிடையே சமாதான வாழ்வு பற்றிய நல்லெண்ணத்தை ஏற்படுத்துவதற்காக வும், அவர்களது கலாசார பண்பாட்டுக் கோலங்களை ஏனைய மாணவர்களுக்கு எடுத்துக்காட்டுவதற்காகவும், அவைகளை ஏனையவர்கள் புரிந்து கொண்டு நல்லி ணக்கத்துடனான நற்புறவை ஏற்படுத்துவதற்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வின் மூலமாக எதிர்கால சமூகத் தலைவர்களான மாணவர்களிடையே சமாதானம் ஏற்படுத்துவதனை ஒரே நோக்காகக் கொண்டு அக்கரைப்பற்று கல்வி வலயத்துடன் மிஹிZ / கிரிஷிஸி அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் இவ்வலயத்தின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் சமாதா னத்தினை விரும்புகின்ற பெரியார்கள், சமயப் பெரியார்கள் உட்பட பெரும் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
இச்செயற்பட்டறையின் சிறப்பம்சமாக மாணவர்களினால் ஆக்கப்பட்ட கலை நிகழ்வுகள் பல மேடை ஏற்றப்பட்டு சமாதான சகவாழ்வினை கூறும் அம்சங்கள் இதனூ¡க பறைச்சாற்றப்பட்டமை மிகவும் சாந்தமான நிலையினை தோற்றுவித்திருந்தமை பாராட்டப்பட வேண்டிய அம்சமாய் அமைந்திருந்தது.
இவ்வாறு சுமார் 300க்கும் அதிகமான மாணவர்கள் தங்களது திறமைகளை இக் கலாசார பன்மைத்துவத்தின் ஊடான சமாதான நிகழ்வுகளினை வெளிக்காட்டினர். இச்செயலமர்வுக்கான அனுசரணையினை மிஹிZ / கிரிஷிஸி அமைப்பு வழங்கியிருந்தது.
இவை போன்ற செயற்பாடுகளை செயற்படுத்துவதற்காக கடந்த காலத்தில் அமைதி சமாதானம் போன்றவற்றில் அக்கறை கொண்டதன் நிமித்தம் பாடசாலைகளில் சமாதானத்தை வலியுறுத்தும் வகையிலமைந்த சமாதான செயற்றிட்டங்களை முன்னெடுக்கும் நோக்கில் கல்வி வலயங்கள் தோறும் கல்வியின் ஊடாக சமாதானத்தினை அடைந்து கொள்ளும் நோக்குடன் அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கான சமாதான கல்வியதிகாரியான எஸ். செய்னுத்தீன் அவர்களது முயற்சியின் பலனாக இவ்வலயத்திலுள்ள பாடசாலைகளில் சமாதானம் பற்றிய பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களையும், கருத்தரங்குகளையும், செயலமர்வுகளையும் திட்டமிட்டு நடத்தி வருகின்றமை சிறப்பானதாக கருதப்படுகின்றது.
அரசின் பல்வேறு சமாதான நிகழ்ச்சித்திட்டங்களுக்கு அமைவாக கடந்த அரசாங்க காலத்தில் நியமனம் செய்யப்பட்ட இச்சமாதான கல்வியதிகாரிகளின் கடப்பாட்டுடன் பாடசாலைகளில் சமாதானக் கழகங்கள் அமைக்கப்பட்டு பாடங்களினூடாக மாணவர்களுக்கிடையில் சமாதானத்திற்கான பண்புசார் விருத்திகளை ஏற்புடை செய்யும் நோக்குடன் இணைப்பாடவிதான செயற்பாடுகளுடன் இணைந்ததாக பயிற்றுவித்து எதிர்கால நற்பிரஜையை தோற்றுவிக்க இச்சமாதான கல்வி பயன்படுகின்றது.
மூவின மக்கள் செறிந்து வாழும் இப்பிரதேசம் கடந்த காலங்களில் ஒற்றுமையின் சின்னமாக பல்வேறு தரப்பினராலும் போற்றப்பட்டதன் விளைவு பாடசாலை மாணவர்களின் பன்மைத்துவ கலாசாரத்தினை ஒன்றிணைத்து அனைவரையும் சமாதானத்தின் பால் இணையவைப்பதன் மூலமாக ஒன்றுமை கொண்ட எதிர்கால நற்றிறமையுள்ள சமாதான சகவாழ்வினை விளைவிப்பதில் இவ்வதிவிடச் செயலமர்வு பாராட்டும் படியாக அமைந்திருந்தது.
பாடசாலை மாணவர்களிடமிருந்து சமாதானத்தின் பயணத்தை ஆரம்பிப்பது மிகவும் இலகுவானதாகும். பாடசாலைக் கலைத்திட்டத்தின் பல்வேறு வடிவங்களின் ஒன்றுதான் இணைப்பாடக் கலைத்திட்ட செயற்பாடுகளாகும். அதனை சரியாக இனங்கண்டு மாணவர்களுக்குரிய முறையில் செயல் வடிவத்தை வடிவமைத்து வழங்குகின்ற போது அதனை இலகுவாகவே பெற்றுக்கொள்ள முடியும் என்பதனை பல் கலாசார மக்கள் வாழும் இப்பிரதேசத்தில் இச்செயலமர்வு நடைபெற்றமை மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது எனலாம்.
அனைவரும் சமமான கல்வியினை பெறத்தக்க வகையில் இன்றைய கல்வியானது அதனை அடைந்து கொள்வதிலுள்ள தடைகளை உடைத்தெறிந்து எல்லோரும் கல்வியை பெறுவதன் ஊடாக சமாதானத்தின் பாதை ஆரம்பமாகிறது. எல்லோரும் மனிதர்கள்.
மனிதத்துவம் நிறைந்த அம்சங்களை வெளிக்காட்டுகின்ற போது அங்கே சிறந்த நற்பிரஜையை தோற்றுவிக்க முடியும் என்பது கல்வியின் தத்துவமாகும். அதனை நிலை நிறுத்துவதில் இவ்வாறான நிகழ்வுகள் மாணவர்கள் மத்தியில் சமத்துவ சகவாழ்வினை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமில்லை எனும் கருத்தினை வலியுறுத்தும் வகையில் வருகை தந்திருந்த அதிதிகளின் உரைகளிலிருந்து அறியக்கூடியதாய், இருந்தது. மேலும் தன்னுடைய கலாசாரத்தை மற்றவரும், மற்றவரின் கலாசாரத்தை நாமும் புரிந்து கொண்டு வாழ்வோமானால் உலகம் சமாதான பூமியாக தோற்றமளிக்கும் என்பதை இம்மாணவர்களின் கலாசார நிகழ்வுகள் சுட்டிக்காட்டி நின்றமை கண்கூடு.


»»  (மேலும்)

ஐ.நா.மனித உரிமை பேரவையில்இலங்கைக்கு அமோக வெற்றி
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை கொண்டு வந்த தீர்மானம் 29 வாக்குகளால் அமோக வெற்றியை பெற்றது.
இலங்கைக்கு ஆதரவாக 29 நாடுகளும், எதிராக 12 நாடுகளும் வாக்களித்தன. 47 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மூன்று அமர்வுகள் நேற்று நடைபெற்றன. மூன்றாவது அமர்வின் இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது ஆறு நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
இந்தியா, பாகிஸ்தான், கியூபா உட்பட 29 இலங்கையின் நட்பு நாடுகள் ஆதரவாக வாக்களித்து இலங்கைக்கு அமோக வெற்றியை ஈட்டித்தந்தன. “இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதில் சர்வதேச சமூகம் உறுதுணையாக இருக்கிறதென்பதனை இந்த வெற்றி உறுதிப்படுத்தியிருக்கிறது” என அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனிவாவிலிருந்து கூறினார்.
“ஐக்கிய நாடுகள் பேரவையில் இலங்கைக்கு கிடைத்துள்ள வெற்றி மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்கும் ஜனாதிபதியின் நடவடிக்கைக்கும் கிடைத்த சர்வதேச அங்கீகாரம்” எனவும் அமைச்சர் சமரசிங்க மேலும் தெரிவித்தார். “மனித உரிமைகள் பாதுகாப்பும் இலங்கையின் முன்னேற்றத்திற்கு உதவுதலும்” என்ற தொனிப்பொருளில் இலங்கை அரசு மனித உரிமைகள் பேரவைக்கு சமர்ப்பித்திருந்த தீர்மானம் மூன்றாவது அமர்வின் போது கலந்துரையாடப்பட்டது.
அதன் பின்னர் அதனை சற்று விரிவுபடுத்தி சமர்ப்பித்ததாகவும் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க கூறினார். இலங்கை சமர்ப்பித்திருந்த தீர்மானத்துக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் ஜேர்மனி 9 திருத்தங்களை கொண்டு வந்தது. எனினும் இலங்கையின் நட்பு நாடான கியூபா திருத்தங்களை ஏற்றுக் கொள்வதை விரும்பாததுடன் எதிர்த்தது.
இதனையடுத்து 17 பந்திகளைக் கொண்ட இலங்கையின் தீர்மானம் 29 பந்திகள் கொண்டதாக விரிவுபடுத்தப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. தீர்மானத்திற்கு ஆதரவாக 29 நாடுகளும், எதிராக 12 நாடுகளும் வாக்களித்தன. ஐரோப்பிய யூனியன், மெக்சிகோ, ஜப்பான், சிலி உட்பட 12 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன.
நேற்று நடைபெற்ற பேரவையின் அமர்வுகளின் போது சில நாடுகள் இலங்கையுடன் குரோத மனப்பான்மையுடன் நடந்து கொண்டதாகவும் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சில தீர்மானங்களை கொண்டுவர முற்பட்டதாகவும் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க கூறினார்.
இவ்வாறான செயற்பாடுகளுக்கும் மத்தியில் மத்திய கிழக்கிலுள்ள எமது நட்பு நாடுகளும், ஏனைய நட்பு நாடுகளும் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தமை எமக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும் என்றும் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க கூறினார்.
இலங்கை விவகாரம் தொடர்பாக ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் விசேட அமர்வு நேற்று ஜெனீவாவில் நடைபெற்றது.
47 உறுப்பு நாடுகளைக் கொண்ட இந்த அமைப்பில் 17 உறுப்பு நாடுகள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்த விசேட அமர்வு கூட்டப்பட்டிருந்தது.
தீர்மானத்தை முன்வைத்து அமைச்சர் சமரசிங்க கூறியதாவது:-
இலங்கையில் 30 வருடங்களாக நீடித்திருந்த பயங்கரவாத செயற்பாடுகள் முடிவுக்கு வந்திருக்கும் சந்தர்ப்பத்திலேயே ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கையில் கூடுதல் கவனம் செலுத்துகிறது. மோதல் முடிவுக்கு வந்ததன் பின்னர் மோதல் இடம்பெற்ற வலயங்களில் அனுமதி வழங்கப்படாதது குறித்து இப்போது ஆராய்வது தேவையற்றதொன்று. எம்மிடம் சரணடைந்துள்ள சுமார் 9 ஆயிரம் எல். ரீ. ரீ. ஈ. உறுப்பினர்களுக்கும் இனங்காணப்பட்டுள்ள எல். ரீ. ரீ. ஈ. உறுப்பினர்களுக்கும் புனர்வாழ்வு அளிக்கப்படும் என்றும் அமைச்சர் சமரசிங்க தெரிவித்தார்.
அரசாங்கம் அனைத்து சிவிலியன்களையும் கவனத்தில் கொள்கிறது.
மோதல் இடம்பெற்ற பகுதிகளில் தற்போது பிராந்திய மட்டத்தில் கண்ணிவெடிகளை அகற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தாம் அனைவருக்கும் அறிவித்துள்ளோம். இருந்தும் சிவிலியன்கள் உடனடியாக தமது வீடுகளுக்கு திரும்ப வேண்டுமென்று விரும்பினால் அது அவர்களின் விருப்பமாகும்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்படும் தீர்மானம் அமுல்படுத்தக் கூடியது. இந்த தீர்மானத்துக்கு அனைவரது ஆதரவும் கிடைக்குமென நம்புகிறோம்.
இலங்கை 30 வருடங்களாக மோதல்களுக்கு முகம்கொடுத்து வரும் ஒரு அரசு. இந்த நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் சிவிலியன்களும் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்காக அனைத்து சர்வதேச சமூகங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அமைச்சர் தனது உரையில் கேட்டுக் கொண்டார்.
எல். ரீ. ரீ. ஈ. வசமிருந்த 2 இலட்சத்து 50 ஆயிரம் சிவிலியன்களை எமது படையினர் விடுவித்ததுடன் அரசாங்கமே அவர்களை பாதுகாத்து வருகின்றது. இலங்கை 50 சர்வதேச அமைப்புக்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. சர்வதேச நாடுகளுக்கும் அனுமதிகளை தொடர்ந்து வழங்க இலங்கை விரும்புகிறது எனவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள பொதுமக்களை மீளக்குடியமர்த்துவதே அரசாங்கத்தின் தற்போதைய ஒரே குறிக்கோளாகும். அதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது எமது கடமையாகும். மீளக்குடியமர்வது பொதுமக்களின் தனிப்பட்ட விருப்பமாகும்.»»  (மேலும்)

5/27/2009

இலங்கைக்கு எதிரான ஏகாதிபத்திய அணிவகுப்பில் இஸ்ரேலிய சியோனிஸவாதிகளும் இணைந்து கொண்டுள்ளனர்!


சாருமணி
வன்னியில் புலிகளை அழிக்கும் இறுதி நடவடிக்கைகளில் இலங்கைப் படையினர் ஈடுபட்டிருந்த இறுதி நாட்களில், ஏகாதிபத்திய மேற்கு நாடுகளும், அவர்களது ஊடகங்களும், சில ஐ.நா அதிகாரிகளும், மனித உரிமை அமைப்புகள் என்பனவும் நடந்துகொண்ட முறையிலிருந்து, அவர்கள் புலிகளின் தலைமையைப் பாதுகாக்க முற்பட்டமை மிகத்தெளிவாகத் தெரிகின்றது. புலிகள் தோற்கடிக்கப்பட்டு, யுத்தம் முடிவுற்ற பின்னரும் கூட, ஏதாவது ஒரு வகையில் இலங்கை அரசை பழிவாங்கும் எண்ணத்துடன் இந்த ஏகாதிபத்திய சக்திகள் செயல்பட்டு வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இலங்கை அரசு உலகின் மிக மோசமான ஒரு பயங்கரவாத இயக்கத்தைத் தோற்கடித்ததையிட்டு மகிழ்ச்சியடைவதற்குப் பதிலாக, இந்த சக்திகள் இலங்கை அரசை நோக்கி விரல்களை நீட்டுவதன் காரணம் என்ன? இந்தக் கேள்விக்கான பதில் அரசியல் தெரிந்தவர்களுக்கு மிகச்சுலபமானது. இலங்கை அரசையும், விடுதலைப்புலிகளையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், முன்னையது ஏகாதிபத்தியத்துக்கு எதிரானது என்பதையும், பின்னையது ஏகாதிபத்தியத்துக்கு விசுவாசமானது என்பதையும் ஒருவர் விளங்கிக் கொள்வது அப்படியொன்றும் சிரமமானது அல்ல. முன்னைய காலங்களில் மேற்குலகுக்கு எதிராக இருந்த (சோவியத்துடன் சேர்ந்து) இந்தியாவைச் சுற்றி வளைப்பதற்கு, ஏகாதிபத்தியம் பாகிஸ்தானை தீனி போட்டு வளர்த்ததுடன், இலங்கையையும் கைக்குள் போடும் பாணியில் நடந்து வந்தது. ஆனால் இந்தியாவில் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டு, சோவியத்தும் தகர்ந்து, இந்தியாவில் பாரதீய ஜனதா ஆட்சியும், சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சி அரசுகளும் வந்த பின்னர், இந்திய – மேற்குலக தேன்நிலவு ஆரம்பமானது. அதன்பின்னர் பாகிஸ்தானும், இலங்கையும் பாவித்த கறிவேப்பிலைகளாக மேற்கத்தைய ஏகாதிபத்தியத்தால் தூக்கிவீசப்பட்டன. இலங்கை அரசின் ஆதரவு தேவை என்று கருதப்பட்ட காலத்தில், மேற்குலகம் புலிகளைத் தடைசெய்து, இலங்கை அரசைத் திருப்திப்படுத்தியது. ஆனாலும் அப்பொழுது கூட, வலதுசாரி பாசிச இயக்கமான புலிகளுடன் ஏகாதிபத்தியம் கள்ள உறவுகளைப் பேணியதுடன், நோர்வே ஊடாக பல்வேறு உதவிகளையும் அளித்து வந்தது. இந்த ‘பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டும்’ ஏகாதிபத்திய விளையாட்டு, மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததும் முடிவுக்கு வந்தது. மகிந்த அரசு புலிகளை ஒழித்துக்கட்டியே தீருவது என்று தீர்மானித்து நடவடிக்கையில் இறங்கியதும், எகாதிபத்தியமும் தனது சுயரூபத்தை வெளியே கொண்டு வந்தது. இலங்கைக்கு எதிராக பொருளாதார முற்றுகை, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு, ஊடக சுதந்திர மீறல் கண்டனம் என அஸ்திரங்களை ஏவியது. ஆனால் அவையெல்லாம் இலங்கை அரசுக்கு ஆசிய நாடுகள் மற்றும் ரஷ்யா, ஈரான், லிபியா போன்ற நாடுகள் வழங்கிய ஆதரவால் தோற்றுப்போயின. மேற்குலகுக்கு எதிரான நாடுகள் ஓரணியில் நின்று இலங்கையை ஆதரித்ததால் கோபமடைந்த ஏகாதிபத்தியம், இப்பொழுது இலங்கைக்கு எதிரான ஒரு வெறிநிலைக்கு சென்றுள்ளதை அவதானிக்க முடிகிறது. ஏகாதிபத்தியத்தின் வெறிக்கோஷ்டியில் இப்பொழுது சியோனிஸ இஸ்ரேலும் இணைந்து கொண்டுள்ளது. அண்மையில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமைப் பதவிக்கு இலங்கை தெரிவாவதிற்கு இஸ்ரேல் தனது எதிர்;ப்பைத் தெரிவித்ததின் மூலம் அதை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையில் மனித உரிமைகள் மோசமான நிலையில் இருப்பதால் தான், இலங்கை தலைமைப்பதவிக்கு தெரிவாவதை தான் எதிர்ப்பதாக அது காரணம் வேறு கூறியுள்ளது. இதைக்கேட்கும் போது, விழுந்து விழுந்து சிரிக்கத்தான் தோன்றுகிறது. ஏனெனில் 1947ல் இஸ்ரேல், அமெரிக்க – பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளால் வலிந்து உருவாக்கப்பட்ட நாளிலிருந்து, அது பாலஸ்தீன மற்றும் மத்திய கிழக்கு ஆசியா, வடஆபிரிக்கா அரபு மக்களுக்கு எதிராக மேற்கொண்டுவரும் மனித உரிமை மீறல்கள், ஹிட்லர் யூதர்களுக்கு எதிராக மேற்கொண்ட அட்டூழியங்களை தூக்கியடித்துவிடும் அளவுக்கு மோசமானவையாகும். அப்படியான ஒரு நாடு இலங்கையைப் பார்த்து மனித உரிமை மீறல் குறித்து கூக்குரலிடுவது வேடிக்கையே. உண்மையென்னவென்றால் இஸ்ரேலிய சியோனிஸவாதிகளின் ஏகாதிபத்திய அணிசேர்க்கையும், இலங்கைத் தமிழ் பிற்போக்கு சக்திகளுடனான தொப்புள் கொடி உறவுமே இஸ்ரேலின் இந்த நிலைப்பாட்டுக்கு காரணமாகும். நீண்ட காலத்துக்கு முன்பே இனவாத, பிற்போக்குவாத தமிழரசுக்கட்சியின் தலைவர்கள், இலங்கைத் தமிழர்களின் விடுதலைக்கு இஸ்ரேலின் உருவாக்கத்தை முன்னுதாரணமாக சுட்டிக்காட்டுவது ஒரு வழமையாக இருந்து வந்துள்ளது. உலகம் முழுவதும், இஸ்ரேல் செய்துவரும் தொடர்ச்சியான மனித உரிமை மீறல்களை வன்மையாகக் கண்டித்து வந்தபோதும், தமிழ் தலைமைகள் ஒருபோதும் கண்டித்தது கிடையாது. தமிழ் மக்களின் விடுதலைக்கு போராடுவதாக தம்பட்டம் அடித்துவந்த இந்த தமிழ் தலைமைகள், பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு ஒரு சிறு ஆதரவு கூட தெரிவிக்காதது, அவர்களது ‘விடுதலை’ என்பது என்ன வகையானது என்பதைப் புரிந்து கொள்ள உதவும். பின்னர் தமிழ் பிற்போக்கு சக்திகளின் தலைக்கிடாயாக விடுதலைப்புலிகள் உருவான போது, அந்த இயக்கம் முதல் செய்த வேலை, இஸ்ரேல் உருவாக்கம் சம்பந்தமான மிகப்பெரிய வரலாற்று நூலை தமிழில் மொழிபெயர்த்து, அச்சிட்டு தமது இயக்கத்தினருக்கு பாட நூலாக நடைமுறைப்படுத்தியது தான். அதுமட்டுமின்றி தமிழ் இளைஞர்களின் ஆயுதப்போராட்டம் உருவான 80களில், ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் தலைமையிலான ஐ.தே.க கொடிய இனவெறி அரசாங்கம் பதவியில் இருந்தது. அந்த நேரத்தில் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற இயக்கங்கள் பாலஸ்தீன விடுதலை இயக்கத்திடம் ஆயுதப்பயிற்சி எடுத்தபோது, புலிகள் இஸ்ரேலிய ‘மொசாட்’ உளவு அமைப்பிடம் ஆயுதப்பயிற்சி எடுத்தனர்! அதுவும் மொசாட் ஒரு பக்கத்தில் இலங்கை ஆயுதப்படைகளுக்கும், அதன் அருகிலேயே புலிகளுக்கும் ஆயுதப்பயிற்சி வழங்கியது தான் சுவாரசியமானதும், உண்மையை புட்டு வைத்த நிகழ்வுமாகும். இஸ்ரேலின், இலங்கை அரசுக்கு எதிரான தற்போதைய நிலைப்பாட்டுக்கு வேறு சில காரணங்களும் உண்டு. இலங்கையில் ஆட்சியிலிருந்த எல்லா சிறீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கங்களுமே பாலஸ்தீன மக்களுக்கு எதிரான, இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை வன்மையாக கண்டித்து வந்துள்ளன. இஸ்ரேலுடன் ராஜதந்திர உறவுகளையும் அவை வைக்கவில்லை. ஜே.ஆரின் ஐ.தே.க கட்சி ஆட்சிக் காலத்திலேயே இஸ்ரேல் கொழும்பில் தனது தூதரகத்தை திறக்க முடிந்தது. அதுமட்டுமில்லாமல், இன்றைய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கை – பாலஸ்தீன நட்புறவு இயக்கத்தின் தலைவராக இருந்து வருகின்றார். இவையெல்லாம் இஸ்ரேலுக்கும் அதன் எஜமானர்களுக்கும் கசப்பான விடயங்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஏகாதிபத்திய நாடுகளும், அவர்களது ஊடக, மனித உரிமை, பொருளாதார பரிவாரங்களும், இலங்கைக்கு எதிராக என்னதான் சன்னதம் ஆடினாலும், இலங்கை மக்கள் உலகளாவிய தமது நட்பு சக்திகளின் உதவியுடன், அவற்றையெல்லாம் முறியடிப்பார்கள் என்பது நிச்சயம்.“போரிடுவது, தோல்வியடைவது, மீண்டும் போரிடுவது, மீண்டும் தோல்வியடைவது, இதுதான் பிற்போக்குவாதிகள் தமது அழிவுவரை பின்பற்றும் நடைமுறையாகும்” என சீன மக்களின் மாபெரும் தலைவர் மாஓசேதுங் ஒருமுறை கூறியது, இலங்கை சம்பந்தமாக ஏகாதிபத்தியவாதிகள் இன்று மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கும் மிகப் பொருத்தமானது என்பதை, இந்த இடத்தில் சுட்டிக்காட்டுவது சாலவும் பொருத்தமானதாகும். பின்னிணைப்பு : உலக சுகாதார ஸ்தாபனத்தின் 62வது பொதுச்சபை கூட்டத்தொடரின் போது, அதன் நடப்பு ஆண்டுத் தலைவராக, இலங்கையின் சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தேர்வு செய்யப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இஸ்ரேல் தீர்மானமொன்றைக் கொண்டு வந்திருந்தது தெரிந்ததே. 192 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட உலக சுகாதார ஸ்தாபனத்தில், இஸ்ரேலின் தீர்மானத்தை ஒரு நாடு கூட ஆதரிக்காதலால், அது படுதோல்வி அடைந்தது. இலங்கை அமைச்சர் சில்வா அதன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். மனித உரிமை மீறலில் உலகின் முன்னணியில் இருக்கும் இஸ்ரேல், இப்பொழுதாவது உலகில் தனது செல்வாக்கின் ‘மகிமை’ புரிந்துகொண்டால் சரி!
thanks.thenee
»»  (மேலும்)

நேபாள அரசுக் கெதிராக மீண்டும்கிளர்ந்தெழத் தயாராக வேண்டியுள்ளதுமாவோயிஸ்ட் தலைவர்
நேபாளத்தில் மற்றொரு புரட்சிக்குத் தயாராகுமாறு மாவோ யிஸ்ட் இயக்கத் தலைவரும் முன்னாள் பிரதமருமான பிரச ண்டா அறிவித்துள்ளார். நேபாளின் மன்னராட்சிக்கு எதிராகப் போராடிய மாவோயிஸ்டுகள் கடந்த 2006ம் ஆண்டு அரசியல் நீரோட்டத்தில் இணைந்து தேர்தலில் போட்டி யிட்டனர்.
தலைவர் பிரசண்டா பிரதமரானார். மாவோயி ஸ்ட் போராளிகளை இராணுவத்தில் இணைக்கும்படி இரா ணுவத் தளபதிக்கு பிரதமர் பிரசண்டா உத்தரவிட்டார் இதை ஏற்க மறுத்த இராணுவத் தளபதியை பிரதமர் பிரசண்டா பதவி நீக்கம் செய்தார். இதனால் ஜனாதிபதி ஆத்திர மடைந்து பிரதமர் பிரசண்டாவை பதவி நீக்கம் செய்தார். தற்போது புதிய பிரதமரும் பதவியேற்றுள்ளார்.
இந்நிலை யில் விரக்தியடைந்துள்ள மாவோயிஸ்ட் தலைவர் பிரச ண்டா மற்றொரு புரட்சிக்குத் தயாராகும்படி போராளிக ளைக் கேட்டுள்ளார். ஆயுதங்கள் அமைதிபெறவில்லை போராட்டத்தை வேறு வடிவத்தில் முன்னெடுக்க வேண்டி யுள்ளதென்றும் பிரசண்டா அறிவித்துள்ளார். இதனால் நேபாளத்தில் மீண்டும் குழப்பும் தோன்றுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்ட மாவோ யிஸ்டுகள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப் பார்களா அல்லது ஜனநாயக அரசியல் போராட்டத்தைத் தொடர்வார்களா என்பது பற்றிக் கூறமுடியாதுள்ளதா கவும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.»»  (மேலும்)

தமிழ் - சிங்கள உறவை கட்டியெழுப்புவதுஅடுத்த கட்ட பணியாக இருக்க வேண்டும்அடுத்த கட்ட பணியாக இருக்க வேண்டும்
யுத்தத்திற்கு முடிவு கட்டப்பட்டிருக்கும் நிலையில், அடுத்த கட்டமாக, தமிழ் - சிங்கள உறவைக் கட்டியெழுப்பும் பணிகளை முன்னெடுக்க வேண்டுமென்று, வன்னிக் களமுனையில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சி சேவையைச் சேர்ந்த சமன் குமார ராமவிக்ரம தெரிவித்தார்.
ரூபவாஹினியின்யுத்தமுனை செய்தியாளர்சமன்குமார ராமவிக்ரம
இந்தப் பணியை இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் உடனடியாகவே ஆரம்பிக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
வன்னியில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான இராணுவ நடவடிக்கையின் போது கடந்த ஒன்றரை வருட காலமாக, களமு னையில் நின்று ரூபவாஹி னிக்காக செய்தி சேகரித்த சமன்குமார ராம விக்ரமவு க்கும், அமல் சமந்தவுக்கும் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் வளவில் திறந்த வெளிக் கலையகத்தில் நடைபெற்ற இந்தப் பாராட்டு விழாவில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்ட உயரதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்ட உயரதிகாரிகள், ஊழியர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். நிகழ்வில், துணிச்சல் மிக்க இரண்டு செய்தியாளர்களுக்கும் விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
நேரடியாக ஒளிபரப்பாகிய இந்தப் பாராட்டு விழா நிகழ்வில் கருத்துத் தெரிவித்த இரண்டு செய்தியாளர்களும், களமுனையில் தாம் பெற்ற அனுபவங்களை வெளிப்படுத்தினர்.
“ஒரு நாள் முன்னேறிச் செல்லும் படையினருடன் சென்றபோது, புதுக்குடியிருப்பில் வைத்து தீவிர மோதல் நடந்தது. நான் செய்வதறியாது, என்னவானாலும் நடக்கட்டும் என்று கண்களை மூடிக் கொண்டேன். எந்தக் கஷ்டமானாலும், நாட்டு மக்களுக்கு போர்ச் செய்திகளைத் திரட்டி உடனுக்குடன் ஒளிபரப்ப வாய்ப்பு கிடைத்தமையைப் பெருமையாகக் கருதுகிறேன். இறுதி வரை, களத்தில் நின்று வெற்றி வாகை சூடியதன் பங்காளியாக ரூபவாஹினியும் இணைந்து கொண்டுள்ளதில் மகிழ்ச்சி. இனி, நாம் தமிழ் - சிங்கள உறவைக் கட்டியெழுப்ப வேண்டும். எமது அடுத்த கட்ட போராட்டம் அதுவாகத்தான் இருக்க வேண்டும்” என்றார் ராமவிக்ரம. (வி)

»»  (மேலும்)

கிழக்கு மாகாணத்தில் ஊடுருவிய புலிகள்இராணுவத்திடம் சரணடைய விருப்பம்

கிழக்கு மாகாணத்தில் ஊடுருவியிருக்கும் புலிகள் இயக்க உறுப்பினர்கள் இராணுவத்திடம் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) அறிவித்துள்ளார்.
புலிகளில் பலர்தன்னோடு பேசியதாககூறுகிறார் - அமைச்சர் முரளிதரன்
புலிகள் அமைப்பைச் சேர்ந்த பலர் தன்னைத் தொடர்புகொண்டு இராணுவத்திடம் சரணடைய ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும், அதுபற்றி அரச தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
புலிகள் சரணடையும் பட்சத்தில் அவர்களுக்குப் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கி அவர்களைச் சமுதாயத்தில் ஓர் அங்கமாக உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனவே இதுபற்றி இலங்கை அரசுடன் பேசி வருகிறேன். அவர்களை சமுதாயத்தில் ஒரு அங்கமாக சேர்க்க விரும்புகிறேன். அவர்கள் என்னை நம்புகிறார்கள். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதுகெலும்பாக இருந்தேன் என்பது அவர்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.


»»  (மேலும்)

அரச சார்பற்ற நிறுவனங்களின் நிபுணர்கள் புலிகளுக்கு உதவினர்


அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த மனிதாபிமான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடையும் தறுவாயில் சிவிலியன்களை காரணம் காட்டி குறிப்பிட்ட சில மேற்கு நாடுகள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கடைபிடிக்குமாறு எம்மை தொடர்ந்தும் வற்புறுத்தி வந்தமை பிரபாகரனையும் அவரது முக்கிய சகாக்களையும் காப்பாற்றுவதற்காகவே என இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

பிரபாவை காப்பாற்றவே
மேற்குலகம்
யுத்த நிறுத்தம் கோரின
இலங்கை, இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நீடித்து வரும் பயங்கரவாத பிரச்சினைகள் என்றும் முடிவுக்கு வரக்கூடாதென்ற நீண்டகால நோக்கிலேயே சில நாடுகளில் இவ்வாறான அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.
சுயாதீன தொலைக்காட்சி சேவையில் கடந்த திங்கட்கிழமை (25) துலாவ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜெனரல் பொன்சேகா வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். கிளிநொச்சியில் செயற்பட்டு வந்த குறிப்பிட்ட சில அரசசார்பற்ற நிறுவனங்கள் சிவிலியன்களுக்காக ஒரு குளியலறையைக் கூட கட்டிக்கொடுக்கவில்லை. மாறாக எல்.ரி.ரி.ஈ யினருக்கு பணமும் இராணுவ ஆலோசனைகளையுமே வழங்கி வந்துள்ளனர்.
புலிகளால் பயன்படுத்தப்பட்ட சில படகுகள், யுத்தக் கப்பல்கள் அவற்றுக்கான இயந்திரங்கள் என்பன தொண்டர் நிறுவனங்களின் நிபுணத்துவம் பெற்றவர்களால் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.
இயந்திரங்களின் இறக்குமதிக்கும் இவர்கள் உதவியுள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.
ஊடக சுதந்திரம் கோரி லிப்டன் சுற்றவட்டத்தில் அடிக்கடி ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வந்த குறித்த சில பாதுகாப்புத் தொடர்பான ஆராய்ச்சியாளர்களும் திறமை வாய்ந்த ஊடகவியலாளர்களும் புலிகளுக்குச் சார்பானவர்களென்ற உண்மை எல்.ரி.ரி.ஈ. இயக்கம் முழுவதுமாக அழிக்கப்பட்டதன் பின்னரே தெரியவந்துள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக புலிகள் இவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரக்கணக்கான ரூபாய்களை வழங்கியுள்ளனர் எனவும் ஜெனரல் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.
இத்தகையவர்களே படை வீரர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலான கட்டுரைகளை எழுதி வந்தனர். எல்.ரி.ரி.ஈ இயக்கம் அழிக்கப்பட்டதும் புலிகளால் மேற்கொள்ளப்பட்டு வந்த நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் படைவீரர்களுக்கு கிடைத்ததும் தான் தாமதம் மேற்படி செயல்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகள் நாட்டை விட்டே ஓடிவிட்டனர். நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டுமாயின் இத்தகைய குற்றவாளிகள் தேசத்துரோகிகளாக கணிக்கப்பட்டு அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட வேண்டுனெவும் அவர் தெரிவித்தார்.
வெளிநாடுகளிலிருந்து புலிகள் இயக்கத்துக்கு ஆயுதங்கள் கடத்தியவரும் தற்போது அந்த இயக்கத்தின் தலைவராக முயலுபவருமான கே. பியை இன்டர்போல் தேடிவருகின்றது. இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தியின் கொலையுடன் இவருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
இலங்கை இராணுவம் 10 ஆயிரம் பேரைக் கொண்டிருக்கையிலேயே பிரபாகரன் இந்தியாவின் ஒத்துழைப்புடன் எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தை கட்டியெழுப்பினார்.
இப்போது எமது இராணுவத்தில் 2 இலட்சம் பேர் உள்ளனர். கூடிய விரைவில் இந்த எண்ணிக்கை 3 இலட்சம் ஆகப்போகிறது. இந்நிலையில் இலங்கையில் மீண்டும் ஒரு எல்.ரி.ரி.ஈ இயக்கத்தை கே. பி. யினால் கட்டியெழுப்புவது எவ்வகையிலும் சாத்தியமாகாது என்றும் இராணுவத் தளபதி கூறினார்.
எல்.ரி.ரி.ஈ இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டு விட்டனர். எமது உள்நாட்டில் வகுக்கப்பட்ட வியூகங்களைக் கொண்டே படையினர் இந்த வெற்றியை நிலைநாட்டினார். இந்நிலையில் கே. பி. இலங்கையிலோ அல்லது வெளிநாடுகளிலோ எல். ரீ.ரீ.ஈ. இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்ப திட்டம் தீட்டினால் அதனை தோற்கடிப்பதும் எமக்கு பெரிய வேலையாகாதென்பதை நினைவுபடுத்திக் கூறவிரும்புவதாக ஜெனரல் பொன்சேகா தெரிவித்தார்.
மோதல்களின்போது 195 இராணுவ அதிகாரிகளும் 5 ஆயிரத்து 224 படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர். 5 ஆயிரம் படை வீரர்கள் ஊனமுற்றுள்ளனர் எனத் தெரிவித்த இராணுவத் தளபதி, படைவீரர்களால் 22 ஆயிரம் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் 9 ஆயிரம் புலிகள் சரணடைந்திருப்பதாகவும் முதற்கட்டத்தின்போது ஒரு இலட்சத்து 15 ஆயிரம் சிவிலியன்களும் இரண்டாம் கட்டத்தில் 80 ஆயிரம் சிவிலியன்களும் மீட்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.»»  (மேலும்)

மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டிருந்த வைத்தியர்களை விடுதலை செய்யவும்

25.05.2009மேன்மை தங்கிய மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை ஜனாதிபதி,அலரி மாளிகை,கொழும்பு.
அன்புடையீர்,
.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பிரதேச சுகாதார சேவைகளின் பணிப்பாளர்களாக கடமையாற்றிய வைத்திய கலாநிதிகள் ரி. சத்தியமூர்த்தி, ரி. வரதராஜன், முல்லைத்தீவு வைத்திய அத்தியட்சகர் கலாநிதி வி. சண்முகராஜா ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது சம்பந்தமாக தலையிட அனுமதிக்கவும். வன்னிப் பகுதி வைத்தியர்கள் தப்பி வர இம் மூவர் மட்டும் அங்கே தங்கியிருந்து இராணுவம் முன்னேற முன்னேற வைத்தியசாலையையும் நகர்த்திக் கொண்டு இரவு பகலாக நோயாளிகளுக்கும், காயமடைந்தோருக்கும் வைத்திய சேவையினை மேற்கொண்டிருந்தனர். தனி ஒருவரால் சமாளிக்க முடியாத பெரும் எண்ணிக்கையினரை இவர்கள் மூவரும் கவனி;த்து வந்தனர். பல நாட்கள் தேநீர் மட்டும் அருந்தி உயிருக்காக போராடிக் கொண்டிருந்த சிசு ஒன்றிற்கு வைத்தியம் செய்த ஒரு வைத்தியர், தனக்கு போதித்த ஒரு சிங்கள பேராசிரியரிடம் ஆலோசனை பெற்று அக் குழந்தையை காப்பாற்றியுள்ளார். இரவு பகலாக மோசமான காலநிலையையும், தம்மைச் சுற்றி பாய்ந்து கொண்டிருந்த துப்பாக்கிக் குண்டுகளையும் பொருட்படுத்தாது பணி புரிந்தார்கள்.
தொடர்ந்து செல் தாக்குதல் காரணமாக அரச நிர்வாகம் முடங்கிய நிலையி;ல் உணவுக் கப்பலுக்கு துணைபோவதையும் காயமுற்றோரை மீட்டுச் செல்வதையும் இதே காரணத்துக்காக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மறுத்திருந்த வேளை, வேறு வழியின்றி இவர்களும் தமது சேவையிலிருந்து ஒதுங்கிக் கொண்டனர். இவர்களின் சேவையாலேயே இடம் பெயர்ந்தோரில் பெரும் பகுதியினர் உயிர் வாழ்கின்றனர். பல்வேறு பிரச்சினைகளை இவர்கள் எதிர்நோக்கிய போதும் இனி மக்களுக்கு சேவை செய்யும் நிலை இல்லை என்பதை உணர்ந்த பின்பே தமது சேவையை நிறுத்திக் கொண்டனர். அவ்வேளை அவர்களுக்கு தோன்றிய ஒரேயொரு வழி, ஏனைய இடம்பெயர்ந்தவர்கள் போல தாமும் முள்ளிவாய்க்காலை விட்டு வெளியேறி நலன்புரி முகாம்களுக்கு வந்து சேர்வதே. அவர்கள் குற்றவாளிகளாக தப்பியோடவில்லை. ஆனால் பாதுகாப்புக்கருதி முகாமுக்கு வந்தவேளை முகாமில் வைத்து இருவரும், காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்றாவது வைத்தியரும் அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களின் விடயத்தில் பின்வரும் உண்மைகள் கவனத்திற்கு கொள்ளப்பட வேண்டியவையாகும்.
1. இவர்கள் அரச ஊழியர்களாக வன்னிப் பகுதியில் நீண்டகாலம் சேவை செய்தவர்கள்.
2. அரச ஊழியரோ தனியார்துறை ஊழியரோ விடுதலைப் புலிகளின் கட்டளையை மீறிச் செயற்பட முடியாத நிலையில் அவர்களின் கட்டளைக்கமையவே, ஊடகங்களுக்கு அறிக்கை விடும் விடயங்கள் உட்பட, சகல விடயங்களிலும் செயற்பட நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தனர்.
3. இவ் வைத்தியர்கள் விடுதலைப் புலிகளின் கட்டளைக்கமைய செயற்பட்டமைக்கு தண்டிக்கப்பட்டால் அப் பகுதியிலே சேவை செய்த அரச ஊழியர் ஒருவர் தன்னும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது.
4. கடமை உணர்வுடன் அவர்கள் கடைசி நிமிடம் வரை கடமையாற்றியதால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன.
5. விசேடமாக மிக இக்கட்டான வேளையில் காயமுற்றோருக்கு பணியாற்றி அரசினுடைய பெயரையும் காப்பாற்றியமையால் அவர்கள் பராட்டுப் பத்திரம் வழங்கி கௌரவிக்கப்பட வேண்டியவர்களாவர். சுகாதாரத் திணைக்களம் இவர்களுடைய சேவையை பாராட்ட கடமைப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அவர்களே! இவர்கள் மீது எதுவித குற்றமும் இல்லையென இவர்களை விடுவிப்பீர்கள் என நம்புகிறேன். இன்றுவரை நான் அறிந்த வரையில் வன்னிப் பகுதியில் சேவை செய்த ஒரு ஊழியர் தன்னும் அரச கட்டுப்பாட்டுப்பாட்டு கோவையை மீறி செயற்பட்டமைக்கு தண்டிக்கப்பட்டதாக நான் அறியவில்லை.
எத்தகைய தண்டனை கொடுக்கப்பட்டாலும் அது சரித்திரத்தில் பெரும் தவறாகவே கணிக்கப்படும்.
நன்றி,

வீ. ஆனந்தசங்கரிதலைவர்- த.வி.கூ


»»  (மேலும்)

5/26/2009

குடுமிபிடிச் சண்டை ஆரம்பம்

கிழக்கான் ஆதம்-
சீமை அழியுதுண்ணு நான்சிந்தையிலும் எண்ணலியே!,சீமை அழியலியே-என்சிறப்பழிஞ்ச மாயமென்ன?மருத அழியுதுண்ணு நான்மனசிலேயும் எண்ணலியே!மருத அழியலியே-என்மதிப்பழிஞ்ச மாயமென்ன? (நாட்டார் பாடல்)
இந்த மாதம் பதினேழாம் திகதி புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் மற்றும் அவரது சகாக்களான அரசியல் பொறுப்பாளர் பா. நடேசன், சூசை, புலித்தேவன், இளந்திரயன் உற்பட சகல முதல்மட்ட மற்றும் இரண்டாம் மட்டத் தலைவர்களும் இலங்கையின் இராணுவத்தினரால் கொல்லப்பட்டு புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் காணாமல்போயிருக்க பிரபாகரனின் மகன் சால்ஸ் அன்டனியும் கொல்லப்பட்டிருந்தார்.இதில் பிரபாகரன் கொல்லப்பட்டதை இதுவரை காலமும் புலிகளின் சர்வதேசப் பேச்சாளர் கே.பி எனப்படும் கே.பத்மநாதன் மறுத்திருந்தாலும் அவர் நேற்றைய தினம் வெளியிட்ட அறிக்கையூடாகவும் பி.பி.சிக்கு வழங்கிய பேட்டியூடாகவும் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக அறிவித்திருந்தார்.இந்த அறிவித்தலைத்தான் அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். காரணம் அது வெளியானவுடன் புலிகளுக்காக சர்வதேசத்தில் செயற்பட்டவர்கள் பலரின் சுத்துமாத்துக்கள் வெளியில் வரும் என்பதற்காக. அதற்கமையவே தற்போது புலிகளின் சர்வதேசப் பேச்சாளர் வெளியிட்ட அறிக்கையை இந்தியாவிலிருந்து கொண்டு இலங்கைத் தமிழர்கள் புலம்பெயர்தேசங்களில் கஸ்டப்பட்டு உழைக்கும் பணத்தில் விதவிதமாக ஆண்டனுபவிக்கும் வை.கோ என்கிற வை.கோபாலசாமியும் பழநெடுமாறனும் நம்பவேண்டாம்! என அறிவித்ததன் மூலம் புலிகள் இயக்கத்திற்காக செயற்பட்டவர்களுக்குள் குத்துவெட்டுக்கள் ஆரம்பமாகியுள்ளது-.வை.கோ மற்றும் பழநெடுமாறனின் அறிக்கைகளுக்கும் கே.பி மீதான சாடல்களுக்கும் பச்சைக் கொடி காட்டியவர்களாக புலம்பெயர் தேசங்களிலும் புலிகளின் பணக்கலக்சன்களுக்கு பொறுப்பாக இருந்தவர்களும் களத்தில் நிற்கப் போகின்றார்கள்.காரணம் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற செய்தியாவது உயிருடன் இருந்தால்தான் இவர்களின் டாம்பீகமான வாழ்கை உயிருடன் இருக்கும் இல்லாவிட்டால் பழைய தொழிலுக்கு இவர்கள் அணைவரும் திரும்பவேண்டிய துர்ப்பாக்கிய நிலையேற்படும்.திரு.வை.கோ மற்றும் ஐயா பழநெடுமாறன் இருவரின் மேற்பார்வையிலும் இந்தியாவில் பல புலிகளின் வியாபார நிறுவனங்கள் உண்டு. அவைகள் உழைக்கும் இலாபத்தில் ஒரு சல்லிக் காசும் நிச்சயம் எந்த இலங்கைத் தமிழனுக்கும் சென்றடையப் போவதில்லை. அல்லது அதில் கிடைக்கும் இலாபத்தில் ஒரு சிறு பகுதியையேனும் மண்டபம் முகாமில் கஸ்டப்படும் இலங்கை அகதிகளுக்கோ அல்லது இலங்கையில் குற்றுயிர்களாகவும் நடைப்பிணங்களாகவும் அங்கவீனர்களாவும் விதவைகளாகவும் மிஞ்சிய எச்சங்களுக்கு நிச்சயம் வழங்கப்போவதில்லை.புலம்பெயர்ந்த தமிழர்கள் பனியில் உறைந்து உழைத்த காசை அவர்களின் எந்த இரத்த உறவுகளோ அல்லது அவர்களின் சொந்த தமிழினமோ சாப்பிடாமல் அனாதைகளாக அகதிகளாவிருக்க சாப்பாட்டிற்காக கையேந்திய வண்ணமிருக்க எவனோ ஒருவன் பல கோடிகளையும் மில்லியன்களையும் திண்டு ஏப்பம் விடுகிறான்.அது மட்டுமல்லாது அவர்களின் இன்றைய தேவை புலிகளின் தலைவர் உயிருடன் இருப்பதாக கூறுவதன் மூலம் இறந்த புலிகளின் தலைவருக்கு அதன் ஆதரவாளர்களால் வழங்கப்படுகின்ற இறுதி மரியாதை வழங்கப்படாவிடினும் பரவாயில்லை தங்களிடம் புலிகள் அமைப்பால் நிருவகிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள சொத்துக்களையும் அதன் கணக்குவழக்குகளையும் யாரும் கேட்டுவிடாமல் பாதுகாப்பதற்காகவேயாகும். எனவே இவைகளின் இந்த எண்ணத்தின்மீது மண்ணை அள்ளித்தூவும் வண்ணம் புலிகளின் சர்வதேசப் பேச்சாளரின் அறிக்கையும் பேட்டியும் அமைந்துள்ளதால் அதனை எதிர்த்து தங்களின் பிணம் தின்னும் புத்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இவர்களுக்கு இலங்கைத் தமிழ் மக்களோ அல்லது அவர்களின் உரிமைகளோ பற்றியெந்தக் கவலையும் இல்லை அவர்களின் கவலையெல்லாம் அந்த பணப்பெட்டியின் மீதுதான்.எனவே தற்போது சூட்டோடு சூடாக பிரபாகரன் கொல்லப்பட்ட உண்மை புலிகளினால் வெளியிடப்படுவதை இவர்கள் விரும்பவில்லை. எனவே இவர்கள் இந்தச் செய்தியைச் சொன்ன கே.பியையே துரோகி என்று கூறுவதன் மூலம் இவர்கள் ஒரு உண்மையை உலகிற்குச் சொல்கிறார்கள் அது பிரபாகரன் உயிருடன் இல்லை என்ற செய்தியாகும். பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் நிச்சயம் புலிகளின் சர்வதேச அமைப்பில் இவ்வாறான அதிகாரப் போட்டிகளும் உள்வீட்டுக் குத்துவெட்டுக்களும் நிச்சயம் நிகழமாட்டாது.இந்த முற்பது வருடகால போராட்ட காலத்தில் சுளைசுளையாகத் தின்ட தீனிப்பண்டாரம்கள் உண்மையில் புலிகளின் அமைப்புமீது அக்கரை கொண்டவர்களாகயிருந்திருந்தால் ஏன் புலிகளின் தலைவரை வேண்டாம்! இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்ட முதல்நிலைத் தளபதிகள் சால்ஸ் அன்டனி அரசியல்துரைப் பொறுப்பாளர் நடேசன், புலித்தேவன் சூசை, பானு போன்றோர்களின் உடலங்களையாவது மரியாதையாக எங்களிடம் ஒப்படையுங்கள் இல்லையென்றால் தமிழ் மக்களிடம் ஒப்படையுங்கள் அல்லது மரியாதையாகவாவது தகணம் செய்யுங்கள் என்று கேட்டு ஒரு போராட்டத்தையோ வேண்டாம் ஒரு அறிக்கையையாவது ஏன் விட முடியவில்லை? காரணம் தங்களையும் தங்களின் சொத்துக்களையும் பாதுகாக்க அவர்கள் நினைக்கிறார்கள்.சரி அவர்கள்தான் விட வில்லை! அவர்களின் புண்ணியத்தில் பாராளுமன்றக் கதிரைகளை அலங்கரிக்கும் இருபத்தி இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் விட்டார்களா? அல்லது புலிகளின் புலம்பெயர் தேசத்து பொறுப்பாளர்கள் விட்டார்களா? இல்லை அப்பாடா கதை முடிந்தது பணமெல்லாம் இனி நமக்குத்தான் வேறு ஒரு நாட்டுக்குச் சென்று சந்தோசமாக வாழ்வோம் என தற்போது பெட்டி கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.இலங்கையில் புலிகளால் அனைத்தையும் இழந்துவிட்டு அகதிமுகாம்களில் அனாதைகளாகவும், அங்கவீனர்களாகவும், விதவைகளாகவும் வாழும் எம் மக்களின் நிலையன்ன? அவர்களுக்கு இந்தப் பணம்கள் எவ்வாறு உதவப்போகின்றன அவற்றை யார் வெற்றுக்கொடுக்கப்போகின்றார்கள்.கேட்டால் “நாங்களும் அதைதான் செய்ய முயற்சிக்கிறோம் சிங்கள அரசு அனுமதிக்கவில்லை” என்று நொண்டிச் சாட்டுச் சொல்லிவிட்டு எஸ்கேப்பாக போகிறார்கள். அதற்கான திட்டங்கள் ரெடியாகியுள்ளதாகவும் தற்போது பல பிரிவுகளாக இவர்கள் பிரிந்து நின்று செயற்படுவதாகவும் நம்பத்தகுந்த தகவல்கள் கூறுகின்றன. தற்போது புலம்பெயர் தேசங்களில் அனுஸ்டிக்கப்படுகின்ற துக்கதினங்கள் முடிவுற்றதும் இது தொடர்பான குத்துவெட்டுக்கள் பையப்பைய ஆரம்பமாகும்.தனித் தமிழீழம் என்ற மாயையை காட்டி இயக்கத்தின் பணத்தில் வயிருவளர்த்த டிவிக்காரர்களும் ரெடியோகாரர்களும் மற்றும் புதினம், சங்கதி, தமிழ்நெற், விம்பங்கள், ஸ்கைத் தமிழ் நியூஸ் உட்பட அனைத்தும் இனி மூடுவிழாக்காணப் போகின்றன.தற்போது இதுவரை புலிகளின் உண்மையான ஆதரவாளர்களாகவிருந்த சாதாரணமக்களின் கவனமும் மற்றும் புலிகளின் வசூல்மன்னர்கள் அரசியல் ராஜதந்திரிகளின் கவனமும் தேனி, நெருப்பு, விழிப்பு, அதிரடி, தாயகம்,இலங்கைநெற், மகாவலி, உண்மைகள், டெலோ நியூஸ் என போராட்ட காலத்தில் புலிகளின் துப்பாக்கிகளுக்கு பயப்படாமல் உண்மைகளை புட்டுப் புட்டுவைத்த இணையங்களின் மீது திரும்பியிருக்கின்றது. சாதாரணமக்கள் இவர்கள் சொல்வதுதான் சரியோ! எனச் சிந்திக்கும் நோக்கிலும் சர்வதேச புலிகள் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் எங்கே எங்களை மோப்பம் பிடித்து மக்களிடம் தங்களின் சுத்து மாத்துக்களை காட்டிக் கொடுத்துவிடுவார்களோ எனப் படிக்கின்றனர்.இந்த நிலையினால் புலிகளின் ஊடகங்கள் இனி அநாதரவாக நிற்கப்போகின்றன. எனவே அங்கேயும் அவர்களின் வயிற்றில் அடிவிழவுள்ளதால் உழைத்துப் சாப்பிடுவது என்ற வேண்டாதவேலைக்கு தலைவரின் மறைவு இவர்களைக் கொண்டு சென்றுள்ளது.எனவே எப்படியாவது கட்டியிழுத்து தலைவரின் உயிரை சில காலங்களுக்குப் பாதுகாத்தால் நாங்களாவது இன்னும் சில நாட்களுக்கு உழைக்காமல் சாப்பிடலாம் என நினைக்கும் புலம்பெயர் புலியுறவுகள் தங்களுக்குள் தாங்கள் அடித்துக் கொண்டு தங்களின் கற்னைக் கதைகளை முன்னெடுத்து துரோகிப் பட்டங்களை தங்களுக்குள் வழங்கி எப்படியாவது புலம்பெயர்மக்களின் ஆதரவுகிடைத்தால் வயிற்றைக் காப்பாற்றலாம் என முயற்சிக்கப் போகிறார்கள்.இதனால் அவர்களுக்குள் நடந்த குத்துக்கரணங்கள் விரைவில் அவர்களின் வாயால் வெளிவரப் போகின்றன. தற்போதே அது அரம்பித்துவிட்டது தமிழ்நெட் அரசியல் போராட்ட எனக் கூற, சர் வதேசப் பேச்சாளர் அமைதியான போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும் எனக் கூற, வை.கோ மற்றும் பழநெடுமாறன் தலைவர் உயிருடன் இருக்கின்றார் என்று கூற புலிகளின் ஆதரவாளர்கள் மென்டல்களாக வீதிகளில் அலைகிறார்கள்.இனி கருணா துரோகி, டக்ளஸ் துரோகி, அனந்தசங்கரி ஐயா துரோகி, தேனி துரோகி என்ற சொற்பதங்கள் மறைந்து கே.பி துரோகி, பழ.நெடுமாறன் துரோகி, வை.கோ துரோகி என அவர்களின் உண்மை முகங்கள் வெளிச்சத்துக்கு அவர்களாலேயே கொண்டுவரப்படவுள்ளது.கொத்துக்குண்டுகள் வெடிப்பது போல துரோகிப்பட்டமும் அவர்களுக்குள் பல்கிப்பெருகி வெடிக்கப் போகின்றன. தமிழர்களை எவரெவர் எப்படியெல்லாம் ஏமாற்றினார்கள் என்பதை அவர்களே அவர்களின் கைகளால் புனைப்பெயர்களில் தேனியிலும் சூத்திரத்திலும் இலங்கைநெட்டிலும் விழிப்பிலும் எழுதப்போகின்றார்கள் கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள் கூத்தை.எனவே புலிகளின் அடுத்த போராட்டம் ஜனாநாயக வழியிலான போராட்டமாகவோ! அல்லது அரசியல் போராட்டமாகவோ! அல்லது அமைதி வழியிலான உரிமைப் போராட்டமாகவோ அமையப்போவதில்லை. அவர்களின் போராட்டம் நிச்சயம் இயக்கத்துக்குள் குத்துவெட்டும் துரோகிப் பட்டமுமாகவே அமையப்போகிறது. காரணம் ஜனநாயக வழியில் போராட பிரபாகனோ அல்லது அவர்களின் தலைவர்ளோ இவர்களுக்கு கற்றுக் கொடுக்க வில்லை. அது புலிகளின் அமைப்புக்குத் தெரிந்திருந்தால் நிச்சயம் அவர்கள் தங்களின் போராட்டத்தை ஜனநாயமானதாக நடத்தி வெற்றிபெற்றிருப்பர்.அரசியல் போராட்டம் என்பது இவர்களுக்கு இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கப் போகின்றது அரசியல் போராட்டம் செய்வதானால் இலங்கையில் வடக்கிலோ கிழக்கிலோ அல்லது எங்கோ ஒரு மூலையில் இவர்கள் அரசியல் ரீதியாக மக்கள்முன் நின்று வெற்றிபெற வேண்டும்.இவர்கள் அரசியல் களத்தில் புலிகளின் பெயரைச் சொல்லிக் குதித்தால் ஏற்கனவே பிள்ளையைப் பிடித்து பலிகொடுத்தவர்கள் மீண்டும் களத்துக்கு வருகிறார்கள் என அம்மா அந்த கொல்லைப்புறத்தில் உள்ளதை எடுப்பாள். விதவை எனது கணவனை களப்பழி கொடுத்தவர்கள் புலம்பெயர் தேசத்தில் சொகுசாய் வாழ்ந்துவிட்டு இப்போது மீண்டும் என் பிள்ளையை பழியாக்க வருகிறார்கள் எனக்கொதிப்பாள். இப்படி இவர்கள் இலங்கையில் எந்த இடத்திலும் அரசியல் நடத்த முடியாமல் போகும்.அமைதியான போராட்டமெனக் கிளம்பினால் அப்படியானால் ஏன் எங்கள் பிள்ளைகளை சகோதரர்களை மாவீரராக்கினீர்கள் என்று மாவீரர் குடும்பங்கள் கொந்தளிக்கும். அங்கவீனர்களான தாய்களும் தங்கைகளும் தந்தைகளும் குழந்தைகளும் கல்லையெடுத்து வீசும்.எனவே இவர்கள் செய்யப்போகும் ஒரே வேலை புலம்பெயர் தேசங்களின் கொள்கையற்ற குழுக்களாக பிரிந்து தங்களுக்குள் அவரவர் செய்தவற்றை வெளிவிட்டு புலிகளின் உண்மைமுகம் இலங்கையில் வெளிப்பட்டதுபோல இந்த கலக்சன் காரர்களின் உண்மையான முகத்தை மக்களுக்கு தோலுரித்துக் காட்டப்போவதாகும்.எனவே இனி துரோகிப்பட்டம் வானில் பறக்கப்போகிறது எங்கள் தலைவரென எல்லோரும் பிரபாகரனின் படத்தை மாட்டி அதை பணமாக மாற்ற முயற்சிக்கப் போகிறார்கள் புலம்பெயர் தேசத்தில் தூக்கத்திலிருந்து கொண்டு புலிகள் செய்த அக்கிரமங்களை ஆதரித்த ஆதரவாளர்களும் தூக்கத்திலிருந்து விழித்து நிஜவுலகைக் கண்டு வியக்கப் போகிறார்கள் இவர்கள் அநாதரவாக நிற்கும் தமிழ் சமூகத்தில் இணைந்து கொண்டு தங்களின் பங்களிப்பை தமிழ் மக்களின் விடிவுக்காச் செய்வார்களா என்பதுதான் இன்றைய எங்களின் கேள்வி. பங்களிப்பு என்பது மீண்டும் ஒரு அந்தயிந்த போராட்டம் என்று சொல்லி இன்னும் முற்பது வருடத்தின் பின் இன்னும் எழுபதுனாயிரம் மக்கள் இறந்தபின் ஞானம் பிறப்பதாகயில்லாமல், நிதானமான ஜனநாயக நீரோட்டத்துடன் அமைந்திருக்க வேண்டும் இல்லாவிட்டால் இவர்கள் ஒதுங்கிக் கொள்வார்களானால் அவற்றைச் சரியாகச் செய்ய சில சமூகப் பைத்தியங்கள் காத்திருக்கின்றன.இனிப் “விடுதலைப் புலிகள்” “விடுதலைப் போர்” என்ற சொற்கள் நிச்சயமாக பத்திரிகை வானொலி இணையத்தளங்கள் தொலைக்காட்சி புத்தகங்களைத் தவிர வேறு எங்கும் உயிர் வாழப் போவதில்லை என்பது திண்ணம். ஒருவேளை காசியானந்தனின் கவிதைகளில் உயிர் வாழலாம். “ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது”ஆக்கம்கிழக்கான் ஆதம்.


»»  (மேலும்)

கிழக்கு மாகாணத்தில் அரச சேவையில்பணிபுரியும் ஊழியர்களின் வருடாந்த சம்பளஅதிகரிப்பை உடன் வழங்குமாறு பணிப்புரை

கிழக்கு மாகாண அரச சேவையில் பணி புரியும் உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த சம்பள அதிகரிப்புக்களை உரிய காலப் பகுதிக்குள் தாமதமின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண பிரதம செயலாளர் வே. பொ. பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
உத்தியோகத்தர்களின் சம்பள உயர்ச்சி திகதிக்கு ஏற்ப காலதாமதமின்றி சம்பள அதிகரிப்பு படிவங்களை அனுப்பி வைக்க வேண்டும் எனவும் மாகாணத்தின் அனைத்து திணைக்களத் தலைவர்களையும் அவர் கேட்டுள்ளார்.
அரச சேவையில் பணி புரியும் உத்தியோகத்தர்களுக்கு அவர்களது செயலாற்றுகை வினைத்திறமைக்கு அமைவாக வருடாந்தம் சம்பள அதிகரிப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
எனினும் சில திணைக்களங்களில் இந்த விடயம் தொடர்பில் தாமதங்கள் நிலவி வருவதால் நிருவாக ரீதியாக பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


»»  (மேலும்)

யாழ். மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைக்கு ஆகஸ்டில் தேர்தல்


வடக்கில் யாழ். மாநகரசபை மற்றும் வவுனியா நகர சபைகளுக்கான உள்ளூராட்சிச் சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கிணங்க, எதிர்வரும் ஜூன் 4ம் திகதி இத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடர்பான அறிவித்தல் வெளியிடப்படவுள்ள துடன், இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
இத் தேர்தல் ஆகஸ்ட் 17ஆம் திகதிக்குள் நடைபெறுமெனவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:- எதிர்வரும் 4ம் திகதி வேட்பு மனுத்தாக்கலுக்கான அறிவித்தல் வெளியிடப்படுவதையடுத்து ஜூன் 17ம் திகதியிலிருந்து ஜூன் 24ம் திகதி மதியம் 12 மணி வரை வேட்பு மனுத்தாக்கல் இடம்பெறவுள்ளது.
அதன் அடுத்த கட்டமாக ஆகஸ்ட் 4ம் திகதிக்கும் 17ம் திகதிக்கும் இடைப்பட்ட திகதியொன்றில் மேற்படி இரு உள்ளூராட்சிச்சபைகளிலும் தேர்தல் நடாத்துவது தொடர்பான தீர்மானத்தை தேர்தல் ஆணையாளர் அறிவிப்பார்.
வடக்கில் இறுதியாக முழு மாகாணத்தையும் உள்ளடக்கிய தேர்தல் கடந்த 1998ம் ஆண்டு இடம்பெற்றது. இதற்கமைய பயங்கரவாதத்திடமிருந்து விடுவிக்கப்பட்டு பதினொரு வருடங்களுக்குப் பின்னரே தற்போது வடக்கில் தேர்தல் நடத்தப்படுகிறது.
வட மாகாணத்தில் ஒரு மாநகரசபை, 05 நகர சபைகள், 28 பிரதேச சபைகளுமாக 34 உள்ளூராட்சிச் சபைகள் உள்ளன. 2006ம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கான தேர்தலில் ஈ.பி. டி. பி. கட்சி போட்டியின்றித் தெரிவானது.
வடக்கின் தற்போதைய நிலைமை காரணமாக ஏனைய 33 உள்ளூராட்சிச் சபைகளுக்குமான தேர்தலை நடத்த முடியாமற் போனது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இத் தேர்தலானது வடக்கு மக்கள் தாம் இழந்த ஜனநாயகத்தை மீள உரிமையாக்கிக் கொள்ள வழிவகுக்கும் அதேவேளை, தமது பிரதேசத்தை தாமே நிர்வகிக்கும் உரிமையையும் அம்மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கும்.
வடக்கில் புதிய அபிவிருத்திக்கான அத்தியாயத்தை ஆரம்பித்து வைக்கும் இத் தேர்தல் சர்வதேசத்திற்கு ஜனநாயகம் தொடர்பான மகத்தான செய்தியையும் தெரிவிக்கும் என்பது உறுதியெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (


»»  (மேலும்)

5/25/2009

நேபாள புதிய பிரதமராக மாதவ் குமார் தெரிவு

நேபாள புதிய பிரதமராக மாதவ் குமார் தெரிவு
நேபாள நாட்டுப் புதிய பிரதமராக மாதவகுமார் நேபாள் போட்டியின்றி தேர்ந் தெடுக்கப்பட்டார்.
நேபாள நாட்டில் மன்னர் ஆட்சி கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் ஒழிக்கப் பட்டு மக்கள் ஆட்சி நடந்து வருகிறது. பிரதமராக பிர சந்தா இருந்து வந்தார். இரா ணுவ தலைமை தளபதி ஜெனரல் ருக்மாங்கட் கொத்வாலை மாற்ற பிரசந்தா நடவடிக்கை எடுத்தார்.
இதற்கு ஜனாதிபதி ராம்பரன் யாதவ் எதிர்ப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பிரதமர் பதவியை கடந்த 4ம் திகதி பிரசந்தா இராஜினாமாச் செய்துவிட்டார்.
மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் மாதவ குமார் நேபாளை வேட்பாளராக நிறுத்த நேபாள கம்யூனிஸ்ட் தலைமையிலான 22 கட்சி கூட்டணி முடிவு செய் தது. பிரதமர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணிக்கு முடிந்தது.
இதைத் தொடர்ந்ந்து நேபாள கம்யூ னிஸ்ட் கூட்டணி சார்பில் பிர தமர் வேட்பாளராக மாதவ குமார் நோபாளின் பெயரை நேபாள காங்கிரஸ் கட்சித் தலைவர் கிரிஜா பிரசாத் கொய்ராலா முன் மொழிந்தார். அதை கூட்டணி கட்சிகளின் சார்பில் ஜலநாத கனால் வழி மெழிந்தார். வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
இதனால் நேபாள நாட்டின் புதிய பிரத மராக மாதவ குமார் நேபாள் போட்டி யின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற சபாநாயகர் சுபாஷ் நெம்வாங் அறிவித்தார்.»»  (மேலும்)

இராணுவத்தின் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

யுத்தத்தில் 3000 இராணுவ வீரர் பலி; 25,000 வீரர் காயம்; 22,000 புலிகள் பலி


இராணுவ முகாம்களிலிருந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் வெளியில் சென்ற படைவீரர்கள் தொடர்ந்தும் வாவி ஓரங்களிலும், வயல் நிலங்களிலுமே உள்ளனர். இவர்கள் இன்னும் முகாம்களுக்குத் திரும்பவில்லை என்று இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் 3000 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டும், 6000 இராணுவ வீரர்கள் நிரந்தர அங்கவீனமுற்றும், மேலும் 25000 படைவீரர்கள் காயமடைந்துமுள்ளனர்.

எமது படைவீரர்கள் இவ்வாறான அர்ப்பணிப்புக்களை செய்ததினாலேயே பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க முடிந்தது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தேசிய தொலைக்காட்சிக்கு நேற்று இராணுவத் தளபதி வழங்கிய பேட்டியில் மேலும் தகவல் தருகையில்; நான் இரட்சனிய சேனை க்கும் கூட பொறுத்தமில்லாத வன் என்று சிலர் கூறியிருந்தனர். அவர்களது மனோநிலைமை எங்களுக்குத் தெரியும்.

பயங்கரவாதத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு வகையான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஆயுதம் ஏந்திய 10,000 புலிப்பயங்கரவாதிகளுடன் மாத்திரம் எமது படைவீரர்கள் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. அதற்கு அதிகமானவர்களுடனும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் கொல்லப்பட்டவர்களில் 95 வீதமானவர்கள் இராணுவத்தினர் என்று தெரிவித்த தளபதி, 22 ஆயிரம் புலிப் பயங்கரவாதிகளை இராணுவத் தினராலேயே கொல்ல முடிந்தது.

யுத்தத்தை முன்னெடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள், புலிகள் ஒரு சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பிற்குள் முடக்கப்பட்ட பின்னர் யுத்தத்திற்கு ஒத்துழைக்க முன் வந்தனர்.

புலிகளின் இயக்கத்திலிருந்து கருணா அம்மான் விலகியதால்தான் யுத்தத்தை வெற்றிபெற முடிந்ததென பலரது அபிப்பிராயம் உள்ளது. அவர் விலகியதால் ஏற்பட்ட நன்மையை அன்று அரசு பயன்படுத்தவில்லை. கிழக்கை மீட்டெடுக்கும் நடவடிக்கை கடந்த இரண்டு வருடங்களுக்க முன்னர் முன்னெடுக்கப்பட்டது. 2 ஆயிரம் புலிகள் அந்த சமயம் கொல்லப்பட்டனர். புலிப் பயங்கரவாதிகளுடன் செய்து கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம் பயங்கரவாதிகள் ஆயுதங்கள், கப்பல்கள், தொடர்பாடல் கருவிகள், யுத்த தாங்கிகள், கவச வாகனங்கள் பெற முடிந்தது.

அவ்வாறு ஆயுதங்கள் கிடைக்கப்பெற்றதனால்தான் அதன் பிரதிபலனாக 5 ஆயிரம் படைவீரர்கள் உயிரிழக்க நேர்ந்தது.

80 ஆயிரம் இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைந்து கொண்டனர். இதனால் தான் யுத்தத்தை வெற்றிகொள்ள முடிந்தது.

எதிர் காலத்திலும் இராணுவத்திற்கு ஆட்சேர்க்கவுள்ளோம். ஐந்து, பத்து வருடங்களில் ஓய்வு பெறும்முறையை கொண்டுவருவோம் என்றும் தெரிவித்தார்.

எனவே, எதிர்காலத்தில் இராணுவத்தில் இணைந்து ஒத்துழைப்பு வழங்குமாறும் இராணுவத் தளபதி வேண்டுகோள் விடுத்தார்.

இதேவேளை வடக்கில் மீட்டெடுக்கப்பட்ட பிரதேசத்தின் பாதுகாப்புக்கென ஐந்து வருட பாதுகாப்புத் திட்டம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது.

இராணுவத் தளபதி கிளிநொச்சி விஜயத்தின் போது இதற்கான கருத்துக்களை முன்வைத்திருந்ததாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேவைக்கேற்ப முகாம்கள் அமைக்கப்படவுள்ளது எனவும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
»»  (மேலும்)

5/24/2009

கேடி கே பி தமிழ் மக்களுக்கு தலைமை ஏற்கும் கேவலம்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடந்த 17 ஆம் தேதி இராணுவத்துடன் நடைபெற்ற நேரடி மோதல்களில் கொல்லப்பட்டுவிட்டதை, அந்த அமைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் செல்வராசா பதமநாதன் தமிழோசையிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
தொடர்ந்தும் ஜனநாயக வழியில் தாங்கள் போராடப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.


»»  (மேலும்)

விடுதலைப் புலிகள் இல்லாத இலங்கை
மூன்று தசாப்த காலமாக நாட்டில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புக்களையும், பெறுமதியிடமுடியாத அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும் இழந்து இழப்பதற்கு இனி எதுவும் இல்லை என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு காரணமாக இரு ந்த புலிகள் இயக்கம் வேரோடு பிடுங்கப்பட்டி ருக்கிறது. இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை கள் என்ன? போரினால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களிலும் நிவார ணக் கிராமங்களிலும் தங்கி யிருக்கும் மக்களுக்கான உதவிகள், அவர்களை மீளக்குடியமர்த்துவது, மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர் பாக தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் இங்கு தொகுத்து தரப்படுகிறது.

தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமானவீ. ஆனந்த சங்கரி,
இதுபற்றி உடனடியாக எதுவும் கூற முடியாது. ஜனாதிபதி தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்திருக்கிறார். சகல இனமக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நியாயமான தீர்வை பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்திருக்கிறார். அரசாங்கம் உடனடியாக நிரந்தரத் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டும். இதற்கு சகல தரப்புக்களினதும் ஒத்துழைப்பும் அவசியமாகும் ஜனாதிபதியும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
பார் நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களிலும், நிவாரணக் கிராமங்களிலும் தங்கியிருக்கும் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 75,000 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்தி அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுக்க வேண்டும். அவ்வாறு மக்கள் மீளக்குடியமர்த்தப்படும் போது அவர்கள் தங்கள் வாழ்க்கையை சீரமைத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்றார் வீ. ஆனந்தசங்கரி.
தமிழ் கட்சிகள் மத்தியில்உடன்பாடுகள் ஏற்படலாம்
பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு ஸ்ரீதரன்
தற்போதைய புதிய சூழ்நிலையில் ஜனநாயக அரசியல் கட்சிகள் தமிழ் மக்கள் மத்தியில் சுதந்திரமாக வேலை செய்தவற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 15,20 வருடங்களாக இத்தகையதொரு சூழ்நிலை இருக்கவில்லை. மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் வெவ்வேறு ஜனநாயக அரசியல் கட்சித் தலைவர்கள் உறுப்பினர்கள் இக்காலப் பகுதியில் தொடர்ச்சியாக கொல்லப்பட்டு வந்திருக்கிறார்கள்.
மக்கள் மத்தியில் வாய்திறக்க முடியாத பயபீதி நிறைந்த சூழ்நிலையொன்று ஏற்படுத்தப்பட்டிருந்தது. இப்போது கலந்துரையாடுவதற்கும், கூட்டம் கூடுவதற்குமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சமூக பிரக்ஞை உள்ளவர்கள் மக்கள் மத்தியில் வேலை செய்வதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. புதிய தலைமுறையைச் சார்ந்தவர்களும் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
எனவே ஜனநாயகத்தை கட்டியெழுப்புவது வெவ்வேறு கருத்து நிலைகளுடன் வாழ்வதற்கான உரிமையை நிர்மாணம் செய்வது என்பன இங்கு முக்கியமான பணிகளாகும்.
ஒரு சமூகம் வளர்ச்சியடைவதற்கு முன்னோக்கிச் செல்வதற்கு அடிப்படையாக இருப்பது ஜனநாயகம், மனித உரிமை என்பனவாகும். இவற்றை பேனுவதனூடாகவே சமூக பொருளாதார அபிவிருத்தியை மேற்கொள்ள முடியும்.
இதைவிட ஆயுத வன்முறை கலாசாரம் முற்றுமுழுதாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
வன்முறை சாராத அகிம்சை இயக்கம் எமது சமூகத்தில் கட்டியெழுப்பப்பட வேண்டும். 60 ஆண்டுகளுக்கு மேலாக நிலவும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விதமாக உள்ளூரில் தமது விவகாரங்களை தாமே பார்த்துக் கொள்கிறோம் என்று மக்கள் மனப்பூர்வமாக கருதுமளவிற்கு ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு கட்டமைப்பொன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.
அத்தோடு பிரமாண்டமான அளவில் சமூக பொருளாதார அபிவிருத்தி பணிகள் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். இவையே எமது அடுத்தகட்ட பணிகளாக இருக்க முடியும்.
நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்கள் சிலவேளை சிறியவொரு நாட்டின் சனத்தொகைக்கு அல்லது ஒரு பெரு நகரத்தின் சனத்தொகைக்கு சமனான தொகையினராக இருக்கின்றனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக அவர்கள் மனிதர்கள் அனுபவிக்கக் கூடாத துன்பங்களையெல்லாம் அனுபவித்து இழப்புக்களை சந்தித்து உறவுகளை இழந்து நிர்க்கதியாக இந்த முகாம்களுக்கு வந் திருக்கிறார்கள். அவர்களின் உடற்காயங்களும், மனக்காயங்களும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை.
இவர்கள் நலன்புரி நிலையங்களிலேயே நடமாடும் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே தொழில் வசதி எதுவுமின்றி வாழ்ந்துவிட முடியாது.
அவர்கள் முகாம் வாழ்க்கையில் பல்வேறு சிரமங்களை அசெளகரியங்களை எதிர்நோக்குகிறார்கள். பலபற்றாற்க்குறைகள் அவர்களுக்கு இருக்கின்றன. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அவர்கள் தமது சொந்த ஊர்களுக்கு திரும்ப வேண்டும். கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு பாதுகாப்பான சூழ்நிலையில் அவர்கள் மீளக்குடியேற வேண்டும். கண்ணிவெடிகள் அகற்றும் வேலைகள் இந்திய தொண்டு நிறுவனத்தின். உதவியுடன் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மூன்று மாதங்களில் இருந்து ஆறு மாதங்களில் மக்கள் மீள குடியேற்றப்படுவார்கள் என்று ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
அத்தகையவொரு சூழ்நிலையில் மக்கள் சொந்தக் காலில் நிற்பதற்கும் தமது தொழில்களை கவனிப்பதற்கும் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் தமது வீடுகளையும், நிலங்களையும் புனரமைப்பு செய்வதற்கு வாய்ப்பு ஏற்படும்.
கெடுபிடிகள் இல்லாத சூழ்நிலையொன்று அவர்களுக்குக் கிட்டும் என நம்புவோம்.
ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்கள் தமது விவகாரங்களை தாமே கவனித்துக் கொள்வதற்கான அரசியல் அதிகாரக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். ஏற்கனவே பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவிற்கு எமது ஆலோசனைகளை முன் வைத்துள்ளோம்.
தவிர 13வது திருத்தச் சட்டத்தின் கீழான அதிகாரங்களை முழுமையாக அமுல்படுத்துவதற்கான செயலணிகள் ஆலோசனை குழுக்களிலும் பங்கு பெறுகிறோம்.
தவிர இலங்கை பல்லினங்களின் தேசமாக மாற்றியமைக்கப்பட வேண்டும். மிளிர வேண்டும் என்று இடையறாது முயற்சி செய்கிறோம்.
இனிமேலும் இனப்பிரச்சினை தீர்வை தாமதித்துச் செல்வதற்கு எத்தகைய காரணமும் இல்லை. மிகத் துரிதமாக ஓர் அரசியல் தீர்வினூடாகவே மக்களின் மனங்களில் 60 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள காயங்களை ஆற்ற முடியும் என நம்புகிறோம். உண்மையான இதயசுத்தியுடனான அதிகாரப் பகிர்வே அம்மக்களின் அவ நம்பிக்கைகளையும் விரக்தியையும் போக்கும்.
ஏற்கனவே கிழக்கு மாகாணத்திற்கு 13வது திருத்தச் சட்டமூலத்தின் கீழான அதிகாரங்கள் முழுமையாக பகிர்ந்தளிக்கப்படவில்லை என்ற மனக்குறை இருக்கிறது.
எமது நிலைப்பாடு தெளிவானது. 13 வது திருத்தச் சட்ட மூலத்தை முழுமையாக அமுல்படுத்துவதிலிருந்து அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவின் அர்த்த புஷ்டியான யோசனைகள் வரை நாம் முன்னேற வேண்டியிருக்கிறது.
துரதிஷ்டவசமாக த.தே.கூ. புலிகளின் முகவர் அரசியல் கதம்ப கூட்டாகவே இதுவரை செயற்பட்டு வந்திருக்கிறது. இனிமேல் அவர்களின் பிடி இங்கு இல்லாததால் இவர்களுக்குள் அபிப்பிராய மாறுபாடுகள் பிளவுகள் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு. குறிப்பிடத்தகுந்தவொரு குழுவினர் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு செயற்பாடுகளுக்கு பங்களிக்க முன்வரலாம்.
ஜனநாயக வழிக்குத் திரும்பிய கட்சிகள், மாற்று அரசியல் கொள்கை கொண்ட தமிழ் கட்சிகளிடையே ஒரு மித்த கருத்துக்கள் இல்லாத நிலையில் மக்கள் நலனை கருத்திற் கொண்டு எதிர்காலத்தில் நீங்கள் முன்னெடுக்கவுள்ள அரசியல் நடவடிக்கைகள் என்ன?
மக்கள் தற்போது சந்தித்திருக்கும் மனிதப் பேரவலம் அதிகாரப் பகிர்ந்தளிப்புத் தொடர்பில் பல்வேறு தமிழ் கட்சிகளுக்குமிடையே ஒரு உடன்பாடு அல்லது ஒருமித்த கருத்து நிலவுவதற்கான குறைந்தபட்ச சாத்தியங்கள் தற்போது இருக்கின்றன. எல்லா விடயங்களிலும் ஒருமித்த கருத்து என்பது யதார்த்தமானதல்ல.
தமிழ் கட்சியினரும், சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இடதுசாரி அரசியல் கட்சிகளும் மனித பேரவலத்தைச் சந்தித்த மக்களின் துயர்துடைப்பு பணிகளிலும் மறுசீரமைப்பு பணிகளிலும், அதிகாரப் பகிர்விற்கான கட்டமைப்பை உருவாக்குவதிலான கருத்தாடல்களிலும் ஒன்றாக பணி புரியமுடியும். தெற்கின் பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த ஜனநாயக சக்திகளும் கல்விமான்களும் கூட இதில் இணைத்துக் கொள்ளப்பட முடியும்.
அரசுடன் பேசி மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் விதமான செயற்திட்டங்களை முன்னெடுக்க முடியும்.
குறிப்பாக இந்தியாவும், சர்வதேசமும் மனித பேரவலம் தொடர்பிலும் அதிகாரப்பகிர்வு தொடர்பிலும் முன்னெப்போதையும் விட அதிகூடிய கரிசனையை கொண்டிருக்கிறார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
“நொந்து நொறுங்கியிருக்கும் மக்களிடம் எமது சகோதரத்துவத்தை வெளிப்படுத்த வேண்டும்<

மக்கள் விடுதலை முன்னணி எம்.பி. சந்திரசேகரன்விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்றும் அவர்களை ஆயுதமுனையில் தோல்வி அடையச் செய்ய வேண்டும் என்றும் ஆரம்ப முதலே ஜே. வி. பி. உறுதியாகக் கூறி வந்திருக்கிறது. இந்த அரசு இதைச் செய்திருக்கிறது. முப்பது வருடங்களாக ஆயுத கலாசாரத்தை இலங்கையில் வளர்த்து வந்திருக்கும் விடுதலைப் புலிகள் முற்ற முழுதாக அழிக்கப்பட்டிருக்கிறார்கள். விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பாக இருந்தது என்பதற்கு இராணுவம் கைப்பற்றியிருக்கும் ஆயுதத்தொகையே சான்று பகரும். இது ஒரு முடிவுக்கு வந்திருப்பதால் இந்த யுத்தமும், பயங்கரவாதமும் அடுத்த தலைமுறைக்கும் நீட்டிச் செல்லப்படுவது தவிர்க்கப்பட்டிருக்கிறது.
புலிகளால் முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் போராட்டத்தை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று பிரிவினைவாத அணி. இரண்டாவது பயங்கரவாத அணி. இப்போது பயங்கரவாத அணி ஒழிக்கப்பட்டுள்ளது. பிரிவினைவாதம் அரசியல் ரீதியாகக் களையப்படவேண்டும்.
விடுதலைப் புலிகள் அழித்தொழிக்கப்பட்டதும் நாடெங்கும் ஒரு பேரெழுச்சி ஏற்பட்டது. மக்கள் உவகையுடன் ஆர்ப்பரித்தெழுந்தனர். வீதிகளில் வெடி கொளுத்தி, பால்சோறு படைத்து மகிழ்ந்தனர். இது மிக இயல்பானது. என்றாலும் கூட நாம் ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொண்டிருந்தோம். ஊடக சந்திப்பு ஒன்றில் இது தொடர்பாகக் கூறியுமிருந்தோம். இது சிங்கள மக்கள் அடைந்த வெற்றியாகவோ, இனவாத சிந்தனையை வளர்க்க உதவுவதாகவோ அமைந்துவிடக்கூடாது என்றும் இலங்கை வாழ் சிறுபான்மையினர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்றும் கூறி இருந்தோம். சிங்கள- தமிழ் மக்கள் மத்தியில் தேசிய உணர்வைக் கட்டி எழுப்புவதற்கான சந்தர்ப்பமாகவும் கொள்ளப்படவேண்டும் என்பது எமது நிலைப்பாடு. ஏனெனில் இனிமேலும் தமிழ்- சிங்கள மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய பிரச்சினைகளை நீடித்துச் செல்ல அனுமதிக்கக்கூடாது. பயங்கரவாதத்தின் முடிவில் இனங்களுக்கு மத்தியில் பேதங்கள் களையப்பட்டு தேசிய சிந்தனை கட்டி எழுப்பப்பட வேண்டியது மிக முக்கியமானது. இனவாத, மதவாத, பிரதேசவாத சிந்தனைகளுக்கு மாற்றாக இன ஐக்கிய சிந்தனை முன்வைக்கப்படுவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.
இதே சமயம் புலிகளின் கலாசாரம் மட்டும் தெரிந்த, சிங்கள மொழி அறியாத, தென் பகுதி மக்கள் அறிந்திராத அதே சமயம் யுத்தத்தில் சிக்கி வாடிவதங்கி இன்று அகதி முகாம்களில் நொந்து நொறுங்கிப் போயிருக்கும் நம் நாட்டுப் பிரஜைகளான தமிழர்களிடம் உண்மையான சகோதரத்துவத்தை வெளிப்படுத்த வேண்டும். வெளிக்காயங்கள் மாறலாம். உற்காயங்கள் சுலபமாக மாறாது என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும். அவர்களுக்கு ஏற்பட்டிருப்பது பொருள், உயிர் இழப்பு மட்டுமல்ல. அம்மக்களின் வீரம், கலாசாரம், துணிச்சல், கல்வி பாரம்பரிய பெருமைகள் என்பனவும் சிதைக்கப்பட்டுள்ளன. இவையும் இச்சந்தர்ப்பத்தில் புரிந்துகொள்ளப்படவேண்டும்.
கடந்த அறுபது வருடங்களாக ஏற்பட்டிருக்கும் இடைவெளி நிரப்பப்பட்டாக வேண்டும். அரசியல் தலைமை, அரசியல் உறுதிப்பாடு என்பன கட்டி எழுப்பப்பட வேண்டிய அவசியம் உள்ளது. மீண்டும் அழிவுப் பாதையை இவர்கள் தெரிவு செய்யாமல் இருக்கும் வகையில் மாற்று வழிகள் கைகொள்ளப்படவேண்டியதன் அவசியமும் உள்ளது.
இப்போது உடனடியாக செய்யப்பட வேண்டிய வேலைகள் உள்ளன. அவர்கள் வெகு சீக்கிரமாக தத்தமது இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும். பின்னர் அப்பிரதேசங்கள் துரித அபிவிருத்திக்குள்ளாக்கப்பட வேண்டும். ஜனநாயக வழிமுறைகள் அங்கெல்லாம் நிலை நிறுத்தப்பட வேண்டும். அப்போது தான் அம்மக்கள் சுதந்திரமாகவும், சுயமாகவும் சிந்தித்து முடிவெடுக்கக்கூடியவர்களாகவும் தமது அரசியல் அபிலாஷகளை வெளிப்படுத்துக்கூடியவர்களாகவும் தம்மை நிலை நிறுத்திக்கொள்வார்கள்.»»  (மேலும்)

ஐ.நா. செயலர் நிவாரண கிராமம் விஜயம்: யுத்த பிரதேசத்தையும் நேரில் பார்வையிட்டார்மீள்குடியேற்ற செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதி


வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கும், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசுக்கு பூரண ஒத்துழைப்பையும் உதவிகளையும் வழங்கும் என ஐ.நா. செயலாளர் நாயகம் பாங்கீ மூன் தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரணக் கிராமங்களில் அந்த மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் தொடர்பாகவும் இலங்கை அரசுக்கு பாராட்டுக்களையும் ஐ.நா. செயலாளர் நாயகம் பாங்கீ மூன் தெரிவித்தார்.
இலங்கை வந்துள்ள ஐ.நா. செயலாளர் நாயகம் பாங்கீ மூன் விசேட ஹெலிகொப்டர் மூலம் நேற்று வவுனியாவுக்கு விஜயம் செய்தார். இடம்பெயர்ந்துள்ள மக்களை தங்க வைத்துள்ள நிவாரணக் கிராமங்களுக்கும் சென்று பார்வையிட்டார். அவருடன் ஐ.நா. மனித உரிமைக்கான பிரதிச் செயலாளர் நாயகம் கலாநிதி ஜோன் ஹோம்ஸ், வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, ஐ.நா. செயலக தலைமை அதிகாரி விஜே நம்பியாருடனும் நிவாரணக் கிராமங்களுக்குச் சென்றார். அங்குள்ள மக்களுடனும் அவர் உரையாடினார்.
நிவாரணக் கிராமங்களில் மக்களை சுதந்திரமாக வசதியுடன் தங்க வைத்திருப்பது குறித்து செயலாளர் நாயகம் தனது திருப்தியை வெளியிட்டார். மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் ஆகியோருடன் சென்று நிவாரணக் கிராமங்களை ஐ. நா. செயலாளர் நாயகம் பாங்கீ மூன் பார்வையிட்டார்.
நிவாரணக் கிராமங்களிலிருந்து விமானப்படை ஹெலிகொப்டர் மூலம் புறப்பட்ட ஐ.நா. செயலாளர் நாயகம் பாங்கீ மூன் இறுதியாக மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட முல்லைத்தீவு, புதுமாத்தளன், முள்ளி வாய்க்கால், வெள்ளைமுள்ளி வாய்க்கால் பகுதிகளை பார்வையிட்டார்.
ஹெலிக்கொப்டரில் தாழப் பறந்தவாறு பாதுகாப்பு வலயப் பகுதி என பிரகடனப்படுத்தியிருந்த பகுதிகளையும் பாங்கீமூன் பார்வையிட்டார்.
அங்கிருந்து நேரடியாக கண்டிக்கு வந்த ஐ. நா. செயலாளர் நாயகம் நேற்று மாலை கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்து பேச்சு நடத்தினார்.


»»  (மேலும்)