7/30/2009

இந்திய உதவியுடன் கிழக்கு மாகாணத்தில் முதலாவது ‘ரயில்பஸ்’ சேவை இன்று ஆரம்பம்

மட்டக்களப்புக்கும் திருகோணமலைக்கும் இடையில் இன்று புதிய ரயில் - பஸ் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கின் உதயம் கருத்திட்டத்தின்கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்புதிய சேவை மூலம் மட்டக்களப்புக்கும் திருகோணமலைக்கும் இடையிலான பிரயாண நேரம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் - பஸ் சேவையை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ இன்று ஆரம்பித்து வைத்தார். இது தொடர்பில் இன்று நடைபெற்ற வைபவத்தில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஆலோக் பிரசாத், போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும உட்பட முக்கிய அரசாங்க அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
4 ரயில் - பஸ் சேவைகளை விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன்
இன்று முற்பகல் மட்டக்களப்பு நகரில் ஹலங்காபுத்திரஹ வங்கிக் கிளையை திறந்து வைக்கவிருக்கும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ அதன் பின்னர் மாவட்ட செயலகத்தில் ஹகிழக்கின் உதயம்ஹ குழுக் கூட்டத்திற்கும் தலைமை தாங்கவிருக்கின்றார்.
நேற்று மாலை மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்குச் சென்றிருந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் சில மீற்றர் தூரம் குறித்த ரயில் பஸ்ஸில் பயணம் செய்து அதனைப் பார்வையிட்டார். வெலிக்கந்தை வரையிலான இச் சேவையை பொலன்னறுவை வரை நீடிப்பது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
இரண்டு பஸ்களை இணைத்து ரயில்வே திணைக்களம் தயாரித்துள்ள இந்த ரயில்பஸ்ஹஸில் 80 பேர் அமர்ந்து பயணம் செய்யக் கூடிய வகையில் ஆசனங்கள் உள்ளன. நின்று கொண்டும் 100 முதல் 110 பேர் வரை பயணம் செய்யக் கூடியதாக இருக்கும் என மட்டக்களப்பு ரயில் நிலைய அதிபர் அருணாசலம் சிவனேசராஜா தெரிவித்தார்.

»»  (மேலும்)

7/29/2009

சு.கவின் 19வது தேசிய மாநாட்டில் தீர்வு யோசனையை வெளியிட தி;ட்டம்

செப்டெம்பர் 1 இல் நடத்த ஏற்பாடு
ஜனாதிபதி மஹிந்த தலைமை
6000 பிரதிநிதிகள் பங்கேற்பர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 19வது தேசிய மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அரசியல் தீர்வு யோசனை அடங்கலாக நாட்டின் எதிர்காலம் தொடர்பான பல முக்கிய திட்டங்கள் வெளியிடப்படும் என சுதந்திரக் கட்சி செயலாளரும் அமைச்சருமான மைத்ரிபால சிரிசேன தெரிவித்தார்.
மகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,
இந்த மாநாட்டில் நாடுபூராவும் இருந்து சுமார் 6 ஆயிரம் பிரதிநிதிகள் பங்குபற்ற உள்ளனர்.
நாட்டின் எதிர்காலம் தொடர்பான பல முக்கிய திட்டங்கள் இந்த மாநாட்டில் வெளியிட்டு வைக்கப்படும். இந்த திட்டங்கள் இந்த வருட இறுதியிலும் அடுத்த வருட முதற்பகுதியிலும் மக்களின் நலனுக்காக முன்னெடுக்கப்படும்.

பயங்கரவாதத்திற்கு முடிவு கண்டுள்ள நிலையில் அடுத்ததாக நாட்டை துரித அபிவிருத்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் புதிய நாடொன்றை கட்டியெழுப்பும் முக்கிய திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டங்களினூடாக நாட்டில் புரட்சிகரமான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.
நாட்டின் அபிவிருத்திக்கென பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 2010 வரவு செலவுத் திட்டத்தினூடாக மேலும் பல புரட்சிகரமான திட்டங்களை முன்னெடுக்கவும் அபிவிருத்தி இலக்குகளை அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. பலம்வாய்ந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும் வரவு செலவுத் திட்டத்தினூடாக முக்கிய திட்டங்கள் முன்வைக்கப்படும்.


»»  (மேலும்)

யாழ். நலன்புரி நிலையம்215 முதியவர்கள் நேற்று உறவினரிடம் ஒப்படைப்புயாழ். குடாநாட்டில் உள்ள நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர் களில் 60 வயதுக்கு மேற்பட்ட 215 முதியவர்கள் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டனர்.
இதேவேளை, இந்த நலன்புரி நிலையங்களுக்குள் குடும்ப உறவினர்களை பிரிந்து வாழும் 245 நபர்களை ஒன்று சேர்க்கும் நடவடிக்கைகளும் நேற்று ஆரம்பித்து வைக்கப் பட்டன. சமூகசேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முய ற்சிகளினாலேயே இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அமைச்சரின் யாழ். பணிமனையோடு தொடர்புகொண்டு நலன்புரி நிலையங் களில் உள்ள தமது முதிய உறவினர்களை அழைத்துச் சென்றதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, நலன்புரி நிலையங்களுக் குள் உறவினர்களை பிரிந்து வாழ்பவர் களை ஒன்று சேர்க்கும் நடவடிக்கைகளை யும் நேற்று முதல் ஆரம்பித்துள்ளனர்.
வெவ்வேறு நலன்புரி நிலையங்களில் பிரிந்து வாழும் 245 பேரை ஒன்று சேர்க் கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நலன்புரி நிலையங்களில் பிரி ந்து வாழும் குடும்பங்கள் தொடர்பில் மேலதிக விபரங்கள் சேகரிக்கப்பட்டு வரு கின்றன.
சரியான தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் எஞ்சியிருப்பவர்களையும் அவர் களது குடும்பங்களுடன் ஒன்று சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமை ச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.»»  (மேலும்)

அ’புரம் விமானப்படை தளம் மீதான தாக்குதல் சூத்திரதாரி மன்னாரில் கைது

அநுராதபுரம் விமானப் படை தளத்தின் மீது புலிகள் நடத்திய தாக்குதல்களுக்கு திட்டம் தீட்டிய பிரதான சூத்திரதாரியை மத்திய மாகாண புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
மீட்டெடுக்கப்பட்ட மக்களுக்கு மத்தியில் மறைந்திருந்த நிலையிலேயே மன்னாரில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
26 வயதுடைய இராமலிங்கம் தபரூபன் என்பவரே கைது செய்யப்பட்டவராவார். இவர் காங்கேசன்துறை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர். மத்திய மாகாண புலனாய்வு பிரிவினர் அண்மையில் கைதுசெய்த புலிச் சந்தேக நபர் ஒருவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இந்த பிரதான சூத்திரதாரியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புலிகளின் ராதா படைப் பிரிவில் பயிற்சிபெற்ற இவர், அந்தப் படைப் பிரிவின் புலனாய்வுத் துறை முக்கியஸ் தராவார்.
2002ம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்ட இவர் ஆயுதம் ஏந்தி சுடுதல், குண்டுத் தாக்குதல் நடத்துதல், கடல் வழி தாக்குதல், காட்டுப் பிரதேச நடவடிக்கை போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர்.
விமானப் படைத்தளம் மீதான தற்கொலை தாக்குதல்களை தற்கொலைதாரிகள் 2007ம் ஆண்டு ஜனவரி 22ம் திகதி அதிகாலை 3.20 மணியளவில் மேற் கொண்டனர். இதுதவிர விமான தாக்குதல் களும் நடத்தப்பட்டதென புலனாய்வுப் பிரிவினரிடம் இவர் வாக்குமூலம் வழ ங்கியுள்ளார்.
இந்த சூத்திரதாரி வழங்கியுள்ள வாக்கு மூலத்தில் மேலும் கூறியுள்ளதாவது :-
பிரபாகரனின் கோரிக்கையின் பேரில் 25 தற்கொலை குண்டுதாரிகள் இந்த தாக்கு தல்களை மேற்கொண்டனர். விமானப் படைத் தளத்திற்குள் நுழைவது தொடர்பாக பல நாட்கள் வேவு பார்த்தோம்.
சிலாவத்துறை, மல்வத்து ஓயா - நுவரவெவ, சாலியபுர மற்றும் கண்டிய கிராமங்களில் மாடு மேய்ப்பவர்கள் போன்ற வேடத்தில் தான் வேவுபார்த்த தாகவும் மேற்படி புலி உறுப்பினர் குறிப் பிட்டுள்ளார்.
நுவரவெவவுக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் வேவுபார்த்துக் கொண்டிருந்த போது மாடு ஒன்றைத் தேடிவந்த அப்பு ஹாமி என்பவர் தங்களை நேரில் கண்டு கொண்டதை அடுத்து அவரைச் சுட்டுக் கொலை செய்ததோடு அவரின் கழுத்தை வெட்டி துண்டாக்கி மரப் பொந்து ஒன்றில் மறைத்து வைத்ததாகவும் குறிப் பிட்டுள்ளார்.
2007ம் ஆண்டு ஜனவரி 21ம் திகதி பல குழுக்களாக பிரிந்து சுமார் இரு மணி நேரத்திற்குள் விமான நிலையத்தை நெருங் கியதாகவும் தாக்குதல் நடத்துவதற்கு ஜனவரி 22ம் திகதி வருமாறு தன்னிட மிருந்த அதிநவீன தொலைத் தொடர்பு கருவி ஊடாக புலிகளின் விமானப் பிரிவி னருக்குத் தகவல் வழங்கியதாகவும் குறிப் பிட்டுள்ளார். விசுவமடுவிலிருந்து வந்த புலிகளின் விமானம் ஆகாய மார்க்கமாக விமான தளத்தின் மீது தாக்குதல் நடத்துகையில் மறைந்திருந்த தற்கொலை தாரிகள் தரை மார்க்கமாக தளத்துக்குள் நுழைந்து தாக்குதல்களை நடத்தினர்.
தாக்குதல் நடத்தப்படுவதை வீடியோ படம் பிடிக்கும் பொறுப்பே புலி தலைமைத்துவத்தால் தனக்கு வழங்கப்பட்டிருந்த பிரதான பொறுப்பாகும் என்றும் குறிப்பிட்டார்.


»»  (மேலும்)

7/28/2009

தமிழ்க் கட்சிகளின் ஐக்கியமும் தேசிய இனப் பிரச்சினையும்

நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர் தல்கள் முடிவுற்றதும் இனப் பிரச் சினைக்கான அரசியல் தீர்வு தொட ர்பாக ஏனைய தமிழ்க் கட்சிகளு டன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சு வார்த்தை நடத்தும் என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப் பைப் பொறுத்த வரையில் காலங்கடந்த ஞானோதய மெனினும் இது ஒரு உற்சாக மூட்டும் ஆரம்பம்.

தேசிய இனப் பிரச்சினையின் தீர்வு இல ங்கையர் அனைவருக்கும் முக்கியமானது. சகல துறைகளிலும் இலங்கையின் முன் னேற்றத்துக்கு இத்தீர்வு அத்தியாவசியமா னது. தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் சகல கட்சிகளும் இவ்விடயத்தில் கவனம் செலு த்தக் கடமைப்பட்டுள்ளன.
அதாவது தமி ழ்க் கட்சிகள் மாத்திரமன்றித் தேசிய மட் டத்தில் செயற்படும் கட்சிகளும் இவ்விட யத்தில் கரிசனைகொள்ள வேண்டியவையே. தமிழ்க் கட்சிகளுக்கிடையிலான ஐக்கியம் வேறொரு பரிமாணத்தில் முக்கியத்துவம் பெறுகின்றது.
இனப் பிரச்சினையின் தீர்வு தொடர்பாக ஒவ்வொரு தமிழ்க் கட்சியும் வெவ்வேறு கோரிக்கைகளை முன்வைக்காமல் கூடிப் பேசி ஒரே கோரிக்கையை முன்வைப்பது பிரச்சினையின் தீர்வை இலகுவாக்கும். கட ந்த காலத்தில் இரண்டு சந்தர்ப்பங்களில் இனப் பிரச்சினையை மையமாகக்கொண்டு தமிழ்க் கட்சிகளுக்கிடையிலான ஐக்கியம் ஏற்படுத்தப்பட்டது. ஒன்று தமிழர் விடு தலைக் கூட்டணி. மற்றது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு. இரண்டிலிருந்தும் மக்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.
தமிழர் விடுதலைக் கூட்டணி யதார்த்தத் துக்கு முரணானதும் நடைமுறைச் சாத்தி யமற்றதுமான தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்ததால் அதனால் எதையும் சாதி க்க முடியவில்லை.
நடைமுறைச் சாத்திய மற்ற கோரிக்கையை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் மாவட்ட சபைத் திட்ட த்தை ஏற்றுக்கொண்டது. பின்னர் பொது சன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் அதி காரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்துக்குக் கடை சிக் கட்டம் வரை ஆதரவளித்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தனிநாட்டுத் தீர்மானம் தென்னிலங்கையில் பேரினவாத சக்திகளைப் பலப்படுத்தியதைத் தவிர வேறெ ந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் தனிநாட்டுப் பாதையிலேயே செல்லத் தொட ங்கியது. மற்றைய தமிழ்க் கட்சிகளை எதி ரிகளாகவே கருதியது. தனிநாட்டைத் தவிர வேறெந்தத் தீர்வு பற்றியும் பேச அது விரும்பவில்லை. இச்செயற்பாட்டின் விளை வாக ஏராளம் தமிழ் மக்கள் உயிரிழந்த தோடு லட்சக் கணக்கானோர் அகதி முகா ம்களில் தஞ்சமடையும் நிலை ஏற்பட்டது.
மற்றைய தமிழ்க் கட்சிகளுடன் பேச்சுவா ர்த்தை நடத்துவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வருகின்ற இச்சந்தர்ப்ப த்தில் கடந்த காலத்தின் கசப்பான நிகழ்வு களை நினைவூட்டுவது மீண்டும் அத்தவறு நேராமலிருப்பதற்கு உதவும்.
தமிழ்க் கட்சிகள் ஒன்று சேர்ந்து தயாரி க்கும் தீர்வுக் கோரிக்கை நடைமுறைச் சாத் தியமானதும் தமிழ் மக்களுக்குப் பாதி ப்பை ஏற்படுத்தாததுமாக இருக்க வேண் டியது அவசியம். அதேநேரம், தமிழ்க் கட்சி களால் மாத்திரம் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாதென்பதால், அரசாங்கத்துட னும் சாதகமான தேசியக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியதன் அவ சியத்தையும் தமிழ்க் கட்சிகள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இனப் பிரச்சினையின் தீர்வுக்காகத் தமி ழ்த் தலைமைகள் அறுபது வருடங்களாக மேற்கொண்ட முயற்சிகள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவவில்லை. பிரச்சினை சிக்கலாகுவதற்கே அவை உதவின. இந்த வரலாறு தொடராமலிருப்பதை உறுதிப்ப டுத்தும் பொறுப்பு தமிழ்க் கட்சிகளைச் சார் ந்தது.

thinakaran.

»»  (மேலும்)

பேருவளை பதற்றம் தணிவு;

பேருவளை, மஹகொடை பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தற்பொழுது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
பேருவளை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் தற்பொழுது பூரண அமைதி நிலவுவதாகவும் அந்தப் பிரதேசத்திற்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் இணைந்து தொடர்ந்தும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மஹகொடை மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை 131 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, களுத்துறை மேலதிக நீதவான் சாந்தினி டயஸ் முன்னிலையில் நேற்று 103 பேர் சந்தேகத்தின் பேரில் ஆஜர் செய்யப்பட்டனர். இவர்களை எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த 103 பேரும் சட்டத்தரணி பி.மானமடு மூலமாக பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர். நீதிமன்றத்தில் இடம் பெறவுள்ள அடையாள அணிவகுப்புக்கு இவர்களை உட் படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார். ஏற்கனவே சந்தே கத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 28 சந்தேக நபர்களும் ஆகஸ்ட் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட் டுள்ளனர். இவர்களது உடைகளை அரச பகுப்பாய்வு பிரிவு க்கு அனுப்பி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தர விட்டுள்ளார்

»»  (மேலும்)

கனகராயன்குளம் பொலிஸ் நிலையத் திறப்பு விழா

புளியங்குளம் ஏ-9 பிரதான வீதியின் கனகராயன்குளம் பிரதேசத்தில் நிறுவப்பட்டுள்ள பொலிஸ் நிலையம் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் ஆகியன எதிர்வரும் முதலாம் திகதி சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சகல வசதிகளையும் கொண்ட இந்த பொலிஸ் நிலையம் நவீன மயப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச் சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குண சேகர தெரிவித்தார்.
எதிர்வரும் சனிக்கிழமை காலை 10.45 மணிக்கு அங்குரார்ப்பணம் செய்யப் படவுள்ள இந்த வைபவ த்தில் பொலிஸ் மாஅதிபர் ஜயந்த விக்ரமரத்ன மற்றும் அரசியல் முக்கிஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள் ளதாக அவர் மேலும் தெரி வித்தார்.
»»  (மேலும்)

வவுனியா நகர சபைத் தேர்தல் மு.கா வேட்பாளர்கள் நால்வர் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸில் நேற்று இணைவு

வவுனியா நகரசபைத் தேர்தலில் போட்டியிடும் மு. கா வேட்பாளர்களான நால்வர் நேற்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்காக உழைக்கப்போவதாக பகிரங்கமாக அறிவித்தனர்
.ஏ. முஸாதிர், எஸ். எம். அபுல்கலாம், இல்முதீன் தஸ்மீம், எஸ். அஜ்மயின் ஆகிய வேட்பாளர்களே இணைந்து கொண்டவர்களாகும்.வவுனியா பட்டானிச்சூரில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போதே இந்நால்வரும் இணைந்துகொண்டனர். அமைச்சர்களான றிஷாட் பதியுதீன், அமீர்அலி, பிரதியமைச்சர் ஹுசைன் பைலா ஆகியோர் முன்னிலையிலேயே இவர்கள் இணைந்துகொண்டனர்

»»  (மேலும்)

குறித்த பிரதேச மக்களுக்கான உரிய சேவையினை அம்மக்களின் விருப்பத்தோடு மேற்கொள்வதே உள்ளுராட்சி சபைகளின் முக்கிய நோக்கமாகும்- கிழக்கு முதல்வர்


உள்ளுராட்சி வாரத்தின் நிறைவினை கொண்டாடும் மூலமாக இன்று திருமலை நகராட்சி மண்டபத்தில் நகராட்சி மன்றத் தலைவர் கௌரி முகுந்தன் தலைமையில் இடம்பெற்ற உள்ளுராட்சி வாரம் நிறைவு நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரைநிகழ்த்தியபோது கிழக்கு மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் அடிமட்டத்தில் உள்ள ஜனநாயக அரசியல் நிறுவனம்தான் உள்ளுராட்சி சபையாகும். அதாவது ஒரு நாட்டு மக்களால் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுகின்ற மிகச்சிறிய அரசாங்கமாகும்.மத்திய அரசின் செயற்பாடுகளுடன் மக்கள் நேரடியாக தொடர்புகளை ஏற்படுத்த முடியாது ஆனால் உள்ளுராட்சி அரசின் செயற்பாடுகளில் நேரடியாக தொடர்பினை ஏற்படுத்தலாம். அத்தோடு குறித்த பிரதேசத்தின் சமூகத்தில் வாழ்கின்ற பிரஜைகளுக்கான கல்வி, அரசியல், பொருளாதார செயற்பாடுகளை விருத்தி செய்தல் போன்ற உயரிய நோக்கங்களை கொண்டு செயற்படுகின்றது.ஒவ்வொரு குறித்த பிரதேசங்களினது மக்களே பிரதிநிதிகளை தெரிவு செய்து அவர்களை ஆட்சியில் இருத்தி இருக்கின்றார்கள். நீங்கள் உங்களது பிரதேசங்களில் அபிவிருத்தி தொடர்பான செயற்பாடுகள் குறித்து இலகுவாக தொடர்பு கொண்டு அறியமுடியும் அப்போது அவர்கள் அனைவருமே பொறுப்புடன் செயற்படுவார்கள். கிராமங்கள் மட்டத்தில் இருந்து அனைத்து அபிவிருத்தி செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்ற போதுதான் அபிவிருத்தி என்பது முழுமை பெறுகின்றது எனவே கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் திருமலை நகர சபையானது மிகப் பெறுமதி மிக்க சேவையினை மக்களுக்கு ஆற்றி வருவதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன் எனவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் நகராட்சி மன்றத்தினால் நடாத்தப்பட்ட விளையாட்டு மற்றும் கல்வி துறை சார்ந்த போட்டிகளில் பங்கு பற்றிய மாணவ மணவிகளுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது. அத்தோடு பிரதேசங்களை முதன்மைப்படுத்தி செயற்பட்ட முக்கிய பிரமுகர்களும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்படனர். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனரின் செயலாளர் அமிர்தலிங்கம், உள்ளுராட்சி ஆணையாளர் குகநாதன் மற்றும் நகரசபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


»»  (மேலும்)

7/27/2009

கூட்டணி தலைமை மறுப்பு!

தமிழர் விடுதலை கூட்டணி என்றும் தனது தனித்துவத்தை விட்டு விலகி செல்லவில்லை. வவுனியாவில் தமிழர் விடுதலைக்கூட்டணி (TULF), ஈழமக்கள் ஜனநாயக கட்சியை (EPDP) ஆதரிப்பதாக வெளிவந்த செய்தி எமக்கு ஆச்சரியத்தை தருகிறது. எமது கட்சி வவுனியாவில் அண்மையில் ஒரு கிளை அலுவலகத்தை திறந்து வைத்துள்ளதே தவிர நிர்வாக கட்டமைப்பு எதனையும் ஏற்படுத்தவில்லை.இவ்வாறு தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி நேற்றையதினம் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். வவுனியா நகரசபை தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி(TULF) வெற்றிலை சின்னத்தில் போட்டியிடும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியை (EPDP) ஆதரிக்கும் என்று நேற்றையதினம் பத்திரிகைகளில் வெளியான செய்தி குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தமிழர் விடுதலை கூட்டணி(TULF) வவுனியாவில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியை(EPDP) ஆதரிப்பதாக வந்த செய்தி எமக்கு ஆச்சரியத்தை தருகின்றது. எமது கட்சி வவுனியாவில் அண்மையில் ஒரு கிளை அலுவலகத்தை திறந்துள்ளதே தவிர நிர்வாக கட்டமைப்பு எதனையும் ஏற்படுத்தவில்லை.
வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் எமது கிளைகள் பல ஆண்டுகளாகவே இயக்கவில்லை என்பதே யாவரும் அறிந்த உண்மை. இவ்வாறன விஷமப் பிரச்சாரங்கள் தேர்தல் காலங்களில் வருவது வழமைதான். இதனை பொது மக்கள் எவரும் நம்பவேண்டாம் எனவும் தமிழர் விடுதலை கூட்டணி என்றும் தனது தனித்துவத்தை விட்டு விலகி செல்வதில்லை என்பதையும் தெரியப்படுத்தி கொள்கின்றேன் என தமிழர் விடுதலை கூட்டணி (TULF) தலைவர் வீ.ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்


»»  (மேலும்)

வெல்லுற குதிரை எங்கட குதிரை - த.வி.கூ.


தமிழர் விடுதலைக் கூட்டணியின் வன்னி மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிராந்தியக் கிளைகள் ஒன்று கூடி எதிர்வரும் வவுனியா நகரசபைத் தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரிப்பதென ஏகமனதாக முடிவு செய்துள்ளனர். தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் இணைந்து இன்று மாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் வவுனியாவில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் வவுனியா நகர சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் ஈ.பி.டி.பியின் ஆறு வேட்பாளர்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரிப்பதென முடிவு செய்துள்ளதாக அதன் நிர்வாகச் செயலாளர் ஐp.வி.சகாதேவன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் இருந்து அம்மக்களை விடுவிக்கும் தூர நோக்குடனும் நிகழ்கால அபிவிருத்தித் திட்டங்களை கருத்தில் கொண்டும் அரசுடன் இணக்கப்பாட்டுடன் பேச்சுவார்தைகளை மேற்கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் இந்த நகரசபைத் தேர்தலில் ஐக்கிய சுதந்திர கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடும் ஈ.பி.டி.பி.யை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிர்வாகச் செயலாளர் சகாதேவன் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அரசுக்கெதிரான வெறுப்புணர்வை மேலும் தூண்டிவிட்டு அவர்களை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்று அழிவு அரசியலை மேற்கொள்ளாது மக்களுக்கு வளமூட்டும் எதிர்காலத் திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் பொருட்டே ஈ.பி.டி.பி.க்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். நடைமுறைச் சாத்தியமான வழிமுறைகளில் ஈ.பி.டி.பியின் எதிர்கால அரசியல் முன்னெடுப்புகளிற்கு வழியேற்படுத்தும் பொருட்டும், நிவாரண முகாம்களிலுள்ள மக்களின் துயர் துடைப்புப் பணிகளை மேலும் முன்னெடுப்பதற்காகவும்; வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் ஈ.பி.டி.பியின் ஆறு வேட்பாளர்களுக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவு வழங்குவதாகவும் அதன் நிர்வாகச் செயலாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை வவுனியா நகர சபையை இலங்கையிலேயே அழகான மாநகர சபையாக மாற்றி அழகுபடுத்தித் தரும் பொறுப்பினை நிறைவேற்றித் தருமாறு ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் ஆறு வேட்பாளர்களையும் கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிர்வாகச் செயலாளர் சகாதேவன் ஈ.பி.டி.பி வேட்பாளர்களின் வெற்றிக்காக அயராது உழைக்குமாறும் தமிழர் விடுதலைக் கூட்டணியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.


»»  (மேலும்)

7/26/2009

த.ம.வி.புலிகள் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினர்; அமரர் குகனேசனின் 5ம் ஆண்டு நினைவு நாள்


த.ம.வி.புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினரும் த.ம.வி.புலிகள் அரசியல் கட்சியின் உருவாக்கத்தின் ஆரம்ப கர்த்தாவுமான அமரர் குகனேசன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினர்களான ஜெயகீசன்(ஜெயந்தன்) தலைமையில் அவரின் சொந்த ஊரான வாழைச்சேனை கண்ணகிபுரத்தில் இன்று இடம் பெற்றது. அமரர் குகநேசனின் தாயார் திருமதி கதிர்காமத்தம்பி புவனேஸ்வரி மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.இந்நினைவு தினத்தினை முன்னிட்டு மாபெரும் விளையாட்டுப் போட்டி நடாத்தப்பட்டு அதில் வெற்றியீட்டிய அணிகளுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. அத்தோடு இன்று விநாயகபுரத்தில் அமைந்துள்ள பேச்சி அம்மன் ஆலயத்தில் வைத்து அன்னதானமும் வழங்கப்பட்டது. இன்றைய நிகழ்விற்கு த.ம.வி.புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர், எமது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆரம்பகால உறுப்பினர் அமரர் குகநேசனின் உயிர் தியாகத்தின்; ஊடாகவே கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கான தனித்துவமான ஓர் அரசியல் இருப்பிடம் அமையப்பெற்றிருக்கின்றது, அதுதான் இன்று தனித்துவத்தோடும் சலுகைகளுக்காக உரிமைகளை விட்டுக்கொடுக்காமலும் பேரம் பேசும் ஒரு மாபெரும் தனிச் சக்தியாக பரினமித்துக்கொண்டிருக்கின்றது. எத்தனையோ மனிதர்கள் இவ்வுலகத்திலே இறக்கின்றார்கள். அவர்களில் ஒரு சிலர்தான் வரலாற்றில் தடம்பதிக்கிறார்கள். அந்த வகையிலேதான் கிழக்கு மாகாணத்தின் தமிழ் மக்களுக்கான தனியான ஒரு தமிழ் கட்சி உதயமாவதற்கு ஆரம்ப கருத்தாவாகவும் முன்னோடியாகவும் இருந்து செயற்பட்ட ஒருவராவார். இவரது மரணத்தினை ஒரு கணம் நினைவு கூர்ந்து பார்க்கின்ற போது எம்மினமே எம்மவனை அழித்த வரலாற்றின் ஓர் நாளாகும். காலங்கள் கடந்து சென்றாலும் கண்ணியமிக்க அச்சகோதரனின் இழப்பிற்கு கிடைத்திருக்கும் ஒரு ஈடாக இன்றைய தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை குறிப்பிடலாம். அமரர் குகனேசனுடன் உயிர் நீத்த கஷ்ரோ, கேசவன், ரூபன், ஆரப்பரன், தம்மிக்க, விக்கி, கமலகாந்தன் ஆகிய எம் சகோதர உறவுகளையும் அவர்களின் தியாகங்களையும் இந்நேரத்தில் நாம் நினைவு கூர கடமைப்பட்டிருக்கின்றோம்.


»»  (மேலும்)

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கான கதைப்புத்தகங்கள் “ரூம் ரூ ரீட்” நிறுவனத்தினால் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தனிடம் கையளிப்பு


அமெரிக்க நாட்டினை தலைமையமாக கொண்டு இயங்கும் “ரூம் ரூ ரீட”; நிறுவனமானது ஒன்பது நாடுகளில் தமது பணியினை மேற்கொண்டு வருகின்றது. இதில் இலங்கையும் மிக முக்கியமான ஓர் நாடாகும். கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற ஐனூற்று இருபத்தொன்பது பாடசாலைகளுக்கான கதைப்புத்தகங்கள் “ரூம் ரூ ரீட்” நிறுவனத்தின் பணிப்பாளர் ஜோன் வூட் தலைமையில் இலங்கைப் பிரதமரின் வாசஸ்தலத்தில் வைத்து கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க கையளித்தார். இந்நிகழ்வில் “ரூம் ரூ ரீட்” நிறுவனத்தின் ஆசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் டேர்வின் ஜிங்டரின், “ரூம் ரூ ரீட்” நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் விலன் ரி டிமல் ஆகியோர் கலந்து கொண்டார்கள். கிழக்கு மாகாண பாடசாலைகளில் இருந்து அதிபர்களும் கலந்து கொண்டார்கள். இவ் நிகழ்வுகள் அனைத்தையும் ஒருங்கமைத்து நெறிப்படுத்தியவர் “ரூம் ரூ ரீட”; நிறுவனத்தின் தொழிற்பாட்டுப்பணிப்பாளர் ரியாஸ் முஹமட் என்பதும் குறிப்பிடத்தக்கது.


»»  (மேலும்)

மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன முஸ்லிம் - (பாகம் -8) எஸ்.எம்.எம் பஷீர்

ஏ.சி.எஸ் ஹமீத் அவர்கள் புலிகளைச் சந்தித்தபொழுது பிரபாகரனுடைய மிக முக்கிய நிபந்தனை வடகிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு 6 வது திருத்தச்சட்டம் நீக்கப்படவேண்டும். மேலும் எம்மக்கள் மத்தியில் புரிந்துணர்வான சூழல் ஏற்படட்டும் ஜனாதிபதி பிரேமதாசாவைச் சந்திக்கலாம் என்று பிரபாகரன் கூறினார். (தகவல் அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை ---அற்புதன்) அதேவேளை 09.05.1990 ம் ஆண்டு புலிகளின் அரசியல் கட்சியான விடுதலைப் பலிகளின் மக்கள் மன்னணி விடுத்த அறிக்கையில் மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் இலங்கைக் குடி மக்களே! அவர்கள் அனைவருக்கும் குடியரிமை உடனே வழங்கப்பட வேண்டும். மலையக மக்களை திருப்பி அனுப்புவதற்கு செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் அந்த மக்களை கலந்தாலோசிக்காமல் செய்யப்பட்டவை. ராஜீவ் --ஜே.ஆர் ஒப்பந்தம் இன்று செத்துவிட்டதைப் போலவே அந்தப் பழைய ஒப்பந்தங்களும் செல்லுபடியற்றவையாகும் என்று குறிப்பிட்டிருந்தனர். இந்தப் பின்னணியில் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியினதும், புலிகளினதும் ஒப்பந்த சரத்துக்களும் புலிகளின் நிர்த்தாட்சண்யமற்ற செயற்பாடுகளும் நோக்கப்படவேண்டும். இலங்கை--இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் புலிகளின் மக்கள் முன்னணியின் தலைவரான மாத்தையா என அழைக்கப்பட்ட மகேந்திரராஜா திருகோணமலையில் இடம்பெற்று ஒரு கூட்டத்தில் முஸ்லிம்களை அச்சுறுத்தும் அவர்களின் தனித்துவ அரசியலுக்கு எதிரான கருத்துக்களை பகிரங்கமாக முன்வைத்திருந்தார். மலையக மக்களின் குடியுரிமை குறித்தும் அவர்கள் திருப்பியனுப்பக்கூடாது (இந்தியாவிற்கு) என்று மே மாதம் 1990 ல் அறிக்கைவிட்ட புலிகள்தான் ஆகஸ்ட் மாதம் கிழக்கில் முஸ்லிம் மக்கள்மீதான படுகொலையையும் அக்டோபர் மாதம் வடமாகாண வெளியேற்றத்தினையும். தமிழ் மக்களுடன் பூர்வீகமாக வாழ்ந்த முஸ்லிம் மக்கள்மீது மேற்கொண்டனர்.
புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்திய ஏ.சி.எஸ் ஹமீத் அவர்கள் புலிகளின் நன்மதிப்பை பெற்றிருந்தமைக்கு முக்கிய காரணம் அவரது ராஜதந்திர அணுகுமுறைதான் என்றும் புலிகள் பின்னா குறிப்பிட்டனர். இவரது புலிகளுடனான கிழக்கு மாகாண சந்திப்பு குறிதது இக்கட்டுரையின் தொடர்ச்சியில் பின்னர் குறிப்பிட்டுக் காட்டவேண்டிய தேவையும் உள்ளது. இக்கால கட்டத்தில முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி புலிகளுடன் ஒப்பந்தம ஒன்றினைச் செய்வதற்கு இந்திய --இலங்கை ஒப்பந்தத்திற்குப் பின்னர் செயற்பட்ட சம்பவங்கள் முஸ்லிம் அரசியல் குறிப்பாக வட, கிழக்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஆனால் இதன் பின்னணியிலுள்ள நோக்கங்கள், செயற்பாடுகள் ஒருபுறம் சமூகப் பாதுகாப்பையும் இன சௌகன்யத்தையும் எற்படுத்துவதற்காக செய்யப்பட்டாலும் மறுபுறத்தில் புலிகளின் தந்திரோபாய நலன்களுக்கு முஸ்லிம்களின் தலைமைததுவங்கள் எவ்வாறு பலியானார்கள்; என்ற கேள்வியும் எழுகின்றது. இந்திய---இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிரான குறிப்பாக ஜனாப் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸின் எழுச்சிக்கு எதிரான அரசியல் எதிர்ப்பு நிலைப்பாடுகளை கட்டமைத்து தமிழ் தேசிய பாரம்பரிய கோட்பாட்டினை முன்னெடுக்கும் செயற்பாடுகளை புலிகள் மேற்கொண்டனர்.
முஸ்லிம்களுக்கான தனித்துவ கட்சி ஒன்றினை கட்டியெழுப்பவதற்கான முயற்சியில் குறிப்பாக கிழக்கினை அடிப்படையாகக்கொண்டு கொழும்பிலே பினனர் முஸ்லிம் காங்கிரஸில் பிரபல்யமான பலரை உள்வாங்கிய தொடாச்சியான கலந்துரையாடல்களை; மேற்கொண்டிருந்த பின்னணியையும் எம்.ஐ.எம் முகைதீன கொண்டவர். அவா பின்னர் உருவாக்கிய அரசியல் கட்சியான முஸ்லிம்.ஐக்கிய. ஐக்கிய விடுதலை முன்னணியின் சார்பில் எனக்கும் இன்னும் பலருக்கும் அனுப்பிய கடிதம் ஒனறில் குறிப்பிடுகையில்
“ எமது தீவிர செயற்பாடுகளின் விளைவாக தமிழீழ விடுதலைப் புலிகள் நேரடிப் பேச்சுவாhத்தைகளை நடாத்துவதற்கான அழைப்பினையும் எமக்கு விடுத்தனர். இதனை ஏற்று நாங்கள் இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தினையும் நடந்த பேச்சுவார்த்தைகளின் பெறுபேறுகளையும் நீங்கள் அறிவீர்கள். இக்கட்டத்தில் நாங்கள் மிகப் பெருமையுடனும் மகிழ்ச்சியடனும் கூறிக்கொள்ள விரும்புவது எங்களது பேச்சுவார்த்தையின் பின்னர் இன்றுவரை தமிழீழ விடுதலைப்புலிகளால் ஒரு சிறிய அளவிலான தாக்குதலும் எற்படவில்லை என்பதைத்தான். தங்களது கட்சி மகாநாட்டிற்கு முன்னோடியாக அனுப்பப்பட்ட இக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டிருந்தது
வடக்கிலும், கிழக்கிலும் வாழும் முஸ்லிம்களாகிய எமக்கு தற்போதைய சூழ்நிலையில் எற்படக்கூடிய ஆபத்துக்களிலிருந்து எம்மைப் பாதுகாத்து, நிரந்தரமான அமைதிக்கும், உரிமைகளுக்கும், பாதுகாப்பிற்கும், முன்னேற்றத்திற்கும் உத்தரவாதம் அளிக்கக்கூடிய யதார்த்தபூர்வமானதும், துரதிருஸ்டி வாய்ந்ததுமான ஒரு கொள்கைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டிய கடமைப்பாடு எங்களுக்கு இருந்தது. இதுபற்றிய ஒரு அக்கறையும், கவலையும் எங்களைப்போலவே இச்சமூதாயத்தின் புத்திஜீவிகளில் ஒருவரான உங்களுக்கும் இருந்தது. எமது சமூதாயத்தில் ஏற்கனவே ஒரு அரசியல்கட்சி (இங்கு முஸ்லிம் காங்கிரஸினரையே குறிப்பிடப்பட்டுள்ளது.) தன்னை நிலைப்படுத்திக் கொண்டுள்ளதை முழுமையாக தெரிந்திருந்தும் இன்னொரு கொள்கையினை முன்வைக்கும்போது இது முஸ்லிம்களை பிளவுபடுத்தும் முயற்சி என்ற அங்கலாய்ப்பினை பரவலாக ஏற்படுத்தும் என்பதனை பூரணமாக அறிந்திருந்தும் நாம் எமது சமூதாயத்தை குறிப்பாக வடக்கிலும், கிழக்கிலும் வாழும் முஸ்லிம்களை சரியான பாதையில் வழிநடாத்திச் செல்லவேண்டியது எமது கட்டாயக் கடமையென உணர்ந்தோம். இதன் விளைவாகவே முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி உருவாகியது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கிழக்கு மாகாணத்திலும் பொதுவாக இலங்கையிலும் பெரிதும் மதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் முதன்முதலில் தேர்தல் களத்தில் இறங்கிய டாக்டர் பதியுதீன் மஹ்மூத் அவர்களை தமது புலிகளுடனான பேச்சுவார்த்தைக் குழுவின் தலைமைத்துவத்திற்காக மு.ஐ.வி.முன்னணியினர் அணுகினர். இவர்களின் உள்நோக்கம் புலிகளின அங்கீகாரத்துடன், அஷரப் அவர்களின் அரசியல் எழுச்சியினை தடுத்து தங்களைப் பதிலீடு செய்வதுமாகும். இவ்வொப்பந்தம் புலிகள் --முஸ்லிம் ஒப்பந்தம் என்றும் கூறப்பட்டாலும் கிழக்கில் அஷரப்பின் எதிரணியினரால் முஸ்லிம்களின் மதிப்பைப் பெற்றிருந்த அக்காலகட்டத்தில ;அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ஜனாப் பதியுதீன் அவர்களின் முகவரி அவர்களுக்கு கைகொடுத்ததாயினும இவ்வொப்பந்த அறிக்கையில் எம்.ஐ.எம் முகைதீனும், கிருஸ்னகுமாரும் (கிட்டு) ஒப்பமிட்டார்கள். எனவே இது உண்மையில் முகைதீன் --கிட்டு ஒப்பந்தமெனச் சொல்வதும் பொருத்தமாயிருக்கலாம். ஓப்பந்தத்திலுள்ள முக்கிய விடயங்கள் பாதுகாப்புக் குறித்த அச்சம்கொண்ட முஸ்லிம்களின் பகைப்புலத்தில் அதன் உள்ளடக்கம் முக்கியம் வாய்ந்ததாகவே கருதப்பட்டது. புலிகள் அஷரப்பின் எதிரணியினரின் அரசியலையும் முஸ்லிம்களின் பலவீனத்தையும் பயன்படுத்திக்கொண்டனர்.
இவ்வொப்பந்தத்தின்மூலம் புலிகளின் அடிப்படை இலக்கான தமிழர் பாரம்பரிய தாயகக்கோட்பாடான இலக்கினை ஆதரிபப்தென்றும் இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்கள் தமிழ் மொழி பேசுபவர்களாயினும் அவர்கள் தமிழ் தேசியத்திற்கு உட்படும் தனித்துவமான ஒரு இனக்குழு என இது அடிப்படையில் தனித்தேசிய அடையாளத்தினை முஸ்லிம்களால் அவ்வப்போது முன்வைக்கப்படும் சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையினை மறுப்பதாக அமைந்திருந்தது. ( They (Muslims ) are a distinct ethnic group falling within the totality of Tamil nationality ) இக்குழுவினர் இலங்கை திரும்பியதும் முதன்; முதல் எம்.ஐ.எம் முகைதீன் இந்தியப பிரதமரை யுத்த நிறுத்தம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்ததுடன் வடகிழக்கு மாகாணங்கள் இணைந்திருக்கும் பிரகடனத்தினை வெளியிடுமாறும் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனாவிற்கு வேண்டுகோள் விடுத்தார்.
தொடரும்.........
»»  (மேலும்)

தலைவர் தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன் உட்பட 53 வீரமறவர்களின் 26வது ஆண்டு நினைவு அஞ்சலி.


ஈழத்தமிழின வரலாற்றில் கோரத்தாண்டவம் ஆடி (1983), இருண்ட பக்கங்களை எழுதி நிற்கும் இருபத்தியாறவது இருண்ட ஜூலை (1989)
சுதந்திரம் அடைந்த இலங்கைத்தீவில், சுதந்திரக் காற்றைக்கூட சுவாசிக்க முடியாமல், பெரும்பான்மைவாதம் வேரூன்றி, சிறுபான்மை மக்களின் உரிமைகள் படிப்படியாக பறிக்கப்பட்டு,தமிழினம் ஓரங்கப்பட்டதோடு, ஈழத்தமிழினத்தின் இருப்பையே இல்லாதொழிக்க மாறி மாறி வந்த இலங்கை அரசுகள் எடுத்த முயற்சிகள் ஏராளம் ஏராளம். ஈழத்துக்காந்தி தந்தை செல்வா போன்ற உன்னதமான அரசியல் தலைவர்களால் ஈழத்தமிழினத்தின் இருப்பைக் காக்க தொடுக்கப்பட்ட சாத்வீகப் போராட்டங்கள் அனைத்தும் சாகடிக்கப்பட்டபோது அகிம்சை முறைப்போராட்டங்கள் அனைத்தையும் அதிகாரவர்க்கம் ஆயதம் கொண்டு அழித்தொழித்தபோது,
இல்லாது ஒழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஈழத்தமிழினத்தின் இருப்பைக் காப்பாற்ற இறுதி முயற்சியாய் கையிலே ஆயதம் ஏந்த வேண்டிய கட்டாய நிலைக்கு தமிழினம் தள்ளப்பட்டபோது. தலைமை ஏற்றவர்தான் தங்கத்துரை என்ற தங்கண்ணா. நடராஜா தங்கவேல் என்று அழைக்கப்படும் தங்கத்துரை என்ற தங்கண்ணா தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைலவர் மட்டுமல்ல. அவர் ஒரு தத்துவ ஞானியும் கூட. அமைதியும், அன்பும், அடக்கமும், கொண்டகொள்கையிலே உறுதியும் அணிகலன்களாக அமையப் பெற்ற இந்த இலட்சியமறவன், வாதத்திறமையும், சிறந்த பேச்சாற்றலும் கொண்டவர். “நாம் வன்முறை மீது காதல் கொண்ட மனநோயாளிகள் அல்லர்.“ என்று நீதிமன்ற விசாரணையின்போது இவர் உதிர்த்த வார்த்தைகள் சரித்திரத்தில் சாகா வரம் பெற்றவை.
தளபதி குட்டிமணி: செல்வராஜா யோகச்சந்திரன் என்ற குட்டிமணி, தலைவர் தங்கண்ணா கூறும் தத்துவங்களையெல்லாம் களத்திலே காரியமாக்கிக் காட்டிய கட்டளைத்தளபதி. கயமைத்தனங்களை கட்டவிழ்த்து விட்ட சிங்கள இராணுவத்தினருக்கு சிம்மசொப்பனமாய் திகழ்ந்தவன். களத்திலே இவன் இறங்கிவிட்டால், இவன் கைகளில் வீரம் விளையாடும். புடைத்து நிற்கும் இவன் தோள்களிலே வெற்றிகள் புன்னகை பூக்கும். இவன் வெறுங்கையோடு வீதியில் வந்தபோது, ஆயதங்களோடு நேருக்கு நேர் வந்த ஆயதப்படைகள் ஆயதங்களைப் போட்டுவிட்டு, அலறியடித்து ஓடிய சம்பவங்கள் பல உண்டு.
இவன் தன் தலைவன் காட்டிய நெறி தவறியதில்லை. வைத்த குறியும் தப்பியதில்லை. சிங்கள நீதிமன்றம் மரணதண்டனை விதித்தபோதும் இவன் நீதிமன்றத்தில் “என்னைத் தூக்கிலிட்ட பின் என் கண்களை கண்ணில்லாத ஒரு தமிழனுக்கு கொடுங்கள். அதன் மூலம் மலரப்போகும் தமிழ்ஈழத்தை நான் பார்க்கவேண்டும்.“ என்றான். இதன் காரணத்தாலேயே சிறைச்சாலையில் வைத்தே சிங்கள வெறியரின் முழமையான இரையாகி, உயிரோடிருக்கும் போதே இவன் கண்கள் தோண்டப்பட்டு வீரஉரை நிகழ்த்திய இவன் நாவும் அறுக்கப்பட்டது. ஏ! அஞ்சா நெஞ்சமே! உன் மறுபெயர் தான் குட்டிமணியோ?
முன்னணிப் போராளிகள்:
ஜெகன் என்கின்ற ஜெகநாதன் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைய மகன், தளபதி குட்டிமணியை விட்டு இணைபிரியாத் தோழன். இயந்திரத்துப்பாக்கியும் கையுமாக இந்த இளம்சிங்கம் கண்ட களங்கள் பல. வயதிலே சின்னவன்; வேட்டுக்களை குறி வைப்பதில் மன்னவன். இராணுவத்தின் பிடியிலிருந்து பல தடவை தப்பியவன். அழகிய புன்முறுவலும், அடங்காத புரட்சியுணர்வும் கொண்டவன்.
சிவசுப்பிரமணியம் என்கின்ற தேவன் தலைவர் தங்கண்ணாவின் மெய்ப்பாதுகாவலர். பட்டத்து யானை போன்று நெடிய, கம்பீரமான தோற்றம் ஜெகனைப் போலவே இராணுவத்தின் பிடியிலிருந்து பலமுறை தப்பி சாகசம் புரிந்தவர். பொலிசாரின் துப்பாக்கிக் குண்டுகள் வயிற்றைக் கிழித்தபோதும், சாரத்தைக் கிழித்து, வயிற்றில்க் கட்டிக் கொண்டே கடலை நீந்தித் தாண்டித் தப்பிய மனோதைரியம் கொண்டவர்.
இப்படி தொடர்ந்தது இளைஞர்படை. தொகை தொகையாய் தலைவர் பின்னால், சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் துடித்து நின்ற மறத்தமிழ் வீரர்களின் மரணத்துக்கு அஞ்சாநிலை கண்டு, அகிலமே முதல் முறையாய் அண்ணாந்து பார்த்தது. அடக்கி ஆண்டவர்களோ அச்சத்தால் மிரண்டனர். தலைகுனிந்த நம்மினமோ தலை நிமிர்ந்து நின்றது. அடலேறுகளின் ஆக்கிரோசத்தில் அகமகிழ்ந்த அன்னை தமிழும் அரியணையில் ஏற ஆயத்தமானாள். தமிழினத்தின் விடிவுக்காய் தமிழர்படை தொடர்ந்த வேளை துரோகக்கரம் ஒன்று பின்னால் தொடர்ந்ததை யார் அறிவார். பதவி வெறியால் பாவி அவன் சதியாய் பாதியிலே (1981) கைதானார்கள் எங்கள் பைந்தமிழ் வீரர்கள்.
காட்டிக் கொடுத்தவர்களே கடைசிவரை நீங்கள் சிறை மீண்டுவிடக்கூடாது என்பதற்காக காங்கேசன்துறை சீமேந்துக் கூட்டுத்தாபனத்தின் சிங்கள ஊழியரோடு பேரம் பேசி சிறையில் வைத்தே உங்களை தீர்த்துக்கட்ட முயற்சி எடுத்தார்கள். கைதான உங்களைக் காக்கவென்று புறப்பட்டோம். ஆத்திரமுற்றிருந்த அதிகாரவர்க்கம் கோர்த்தது கை இந்தக் கோடாலிக்காம்புகளோடு. சாய்த்தது சிறையில் வைத்தே எங்கள் சரித்திர நாயகர்களை. “இலட்சியத்தை கை விடுங்கள். இன்னொரு நாட்டில் இல்லறத்தோடு இனிதே வாழ வசதிகளோடு வாய்ப்புக்கள் தரப்படும். நீங்கள் மகிழ்ச்சியாக வாழலாம்.“ என்று பேரம் பேசியது ஜெயவர்த்தனா அரசு. அன்று மாத்திரம் நீங்கள் ஆம் என்று சொல்லியிருந்தால், இன்றும் இருந்திருப்பீர்கள் இன்னொரு நாட்டில் வளமாக. ஈழத்தமிழினத்திற்காக நீங்கள் ஏற்றுக்கொண்ட துன்பங்கள் எண்ணில் அடங்காதவை; கல்நெஞ்சையும் கரைக்கக் கூடியவை.
உங்கள் உயிரிலும் மேலான இலட்சியத்தைக் கை விட மறுத்ததினால், பூட்டிய சிறையினில் மாட்டிய விலங்கோடு தீட்டிய ஆயுதத்தினால் காடையரின் துணையோடு உங்கள் கண்கள் தோண்டப்பட்டு, கால்களில் போட்டு மிதிக்கப்பட்டன. கழுத்து அறுக்கப்பட்டு, உடல்கள் சிதைக்கப்பட்டன. உங்கள் உயிர்கள் பிரியும் முன்பே அங்கங்கள் அறுக்கப்பட்டன. இப்படி ஒவ்வொரு போராளிகளின் உறுப்புக்களும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு புத்தருக்கு காணிக்கையாக்கப்பட்டன. தென்னிலங்கை வீதிகளில் தமிழர்களின் அவலக்குரல்கள், தெருவெங்கும் தமிழர் பிணங்கள். தமிழரின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. கட்டிடங்கள் தீயிடப்பட்டன. இப்படி மனிதநாகரிகம் வெட்கித் தலைகுனிந்த நிலைமையில் நடத்தப்ட்ட கோழைத்தனமான தாக்குதலில் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் துடித்துநின்ற இளைஞர்கள் பின்தொடர ஆயதப்போராட்டத்தை ஆரம்பித்து வைத்த தமிழ்ஈழத் தேசபிதா திரு. தங்கத்துரை, தளபதி குட்டிமணி உட்பட புதுயுகத்தின் அத்தியாயங்களை எழுதத் துடித்துநின்ற தோழர்கள் ஜெகன், தேவன், நடேசுதாஸ், சிவபாதம், குமார், ஸ்ரீகுமார், மரியாம்பிள்ளை, குமரகுலசிங்கம் போன்ற முன்னணிப்போராளிகள் உட்பட ஐம்பத்திமூன்று உயிர்கள் வெலிக்கடைச்சிறையில் வெட்டிக் குதறப்பட, நலிவுற்ற நம்மினமோ இன்று நடுத்தெருவில், மரணித்துவிட்ட எங்கள் விடியல்களே! எங்கள் இனத்தின் இன்றைய இன்னல்கள் தீர்க்க இன்னும் ஒருமுறை எழுந்துவர மாட்டிரோ? உங்கள் அனைவருக்கும் எமது ஆத்மாந்தமான கண்ணீர் அஞ்சலிகள் காணிக்கையாகட்டும்.

புலம்பெயர்ந்து வாழும்
தமிழ் ஈழ விடுதலை இயக்க உறுப்பினர்கள்

TELO


»»  (மேலும்)

அம்பாறையில் 13 வயது மாணவியை பாலியலுக்குட்படுத்தி கொலை, சந்தேக நபரும் பொதுமக்களால் அடித்துக்கொலை.


அம்பாறை மத்தியமுகாம் 4ம் கொலனிப் பகுதியில் பாடசாலை மாணவி மதுனுஸ்கா இனந்தெரியாதோரால் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு
கொலைசெய்யப்பட்டுள்ளார்.அம்பாறை மத்தியமுகாம் 4ம் கொலணி வாணி வித்தியாலய 7ம் வகுப்பு மாணவி மோகன் மதுனுஸ்கா (வயது 12)கடந்த 22ம் திகதி புதன்கிழமை அன்று குரூரமான முறையில் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார்.
அவர் சம்பவதினம் முட்டை விற்பதற்காக அருகிலுள்ள சிங்களக் கிராமமான 3ம் கொலனிக்குச் சென்றுவிட்டு, வரும் வழியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.மாலை ஆறு மணியாகியும் அவர் திரும்பி வராததால் சந்தேககம் கொண்ட பெற்றோர் அவரைத் தேடத் தொடங்கினர்.
இதேவேளை மத்திய முகாம் எல்லைக்கிராமத்திலுள்ள பாமடி பின் அணைக்கட்டுப் பகுதியில் ஆடைகளில்லாத நிலையில் முகம் உள்ளிட்ட உடம்பு பூராகக் கீறல் காயங்களுடனும் வயிற்றிலும் கழுத்திலும் கத்திக் குத்துக் காயங்களுடனும் குடல் வெளியே தெரிந்த நிலையில் சடலமொன்று காணப்படுவதாகத் தகவல் கிடைத்தை தொடர்ந்து, பெற்றோரும் மத்திய முகாம் பொலிஸாரும் அயலவர்களும் சென்று பார்த்தபோது சடலத்தின் மேல் பறாங்கல் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. குறித்த மாணவியின் சடலமே அது என்பதை அவர்கள் உறுதிப்படுத்திக் கொண்டனர்.
இதனையடுத்து மத்தியமுகாம் 3ஆம் 4ஆம் கொலனிகளில் பதற்றம் நிலவி வருகிறது. பாடசாலை மாணவர்களின் வரவிலும் வீழ்ச்சி கண்டுள்ளது.
தற்போது அப்பகுதி எங்கும் காவற்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மோப்ப நாய் சகிதம் அவர்கள் தேடுதல் மேற்கொண்டு வருவதோடு பலரை விசாரணைக்குட்படுத்தியும் வருகின்றனர்.
இப்பாலியல் கொலையுடன் சம்பந்தப்பட்ட குற்றவாளி பாவா என அழைக்கப்படும் கனகரெத்தினம் ஸ்ரீஸ்கந்தராஜா (வயது 29)என்பவர் நேற்று மாலை 5.00 மணியளவில் பொதுமக்களால் அடித்து நையப்புடைக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். பெண் வேடம் தரித்து முக்காட்டுடன் வயலில் கதிர் பொறுக்கிக் கொண்டிருந்த வேளை அவரை இனங்கண்ட தமிழ் சிங்கள பொது மக்கள் ஆத்திரம் தீர அடித்துள்ளனர்.அதன்போது இவா’ இறந்துள்ளார். சடலத்தை பொலிசார் எடுத்துச் சென்றனர்.

»»  (மேலும்)

காணிப்பிரச்சினையை தீர்ப்பது உள்ளுராட்சி பிரச்சினையில் அரைவாசியை தீர்ப்பதற்கு சமம்.காணியோடு சம்மந்தப்பட்ட பிரச்சினைகளை தீர்ப்பது உள்ளுராட்சி பிரச்சினையில் அரைவாசிப்பிரச்சினையை தீர்ப்பதற்கு சமமாகுமென கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் யு.எல்.எம்.என். முபீன் தெரிவ்த்தார்.
கிழக்கு மாகாண சபையின் அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது அங்கு காணி தொடர்பான பிரேரணையொன்றில் உரை நிகழ்த்தும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய முபீன், கிழக்கு மாகாணம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசம்.யுத்தம் நடைபெற்ற சகல நாடுகளிலும் காணியோடு தொடர்புடைய பிரச்சினைகள் அதிகமாக இருக்கின்றன எனவும், கிழக்கு மாகாண சபைக்கு அதிகாரங்கள் இல்லையென்று சொல்வதை விட அந்த அதிகாரங்களைப் பெற்றுக்கொள்வதற்காக அல்லது இந்த சமூகத்தின் கிழக்கு மாகாணத்திலிருக்கின்ற அடிப்படை காணிப் பிரச்சினைகளை தீர்த்து வைத்தால் கிழக்கு மாகாணத்திலிருக்கின்ற ஐம்பது வீதமான பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியும் எனக்குறிப்பிட்டார்.
»»  (மேலும்)

7/24/2009

அரசியல்வாதிகள் எல்லாம் இப்படி இருந்துவிட்டால் ,,,!- எஸ். எம். எம் .பஷீர்


“இந்த உலகத்தில் அநீதி தலையெடுக்கிற போதெல்லாம் கோபமும் வெறுப்பும் கொண்டு நீ குமுறி நடுங்குவாயானால் நாம் இருவரும் தோழர்கள். அதுதான் முக்கியமான விஷயம்.” எர்னஸ்டோ சேகுவாரா
முன்னாள் மொரட்டுவ நாடாளுமன்ற உறப்பினர் மெர்ரில் பெர்னாண்டோ (Merryl Fernando) அண்மையில் காலமானார்; அவரது மறைவினை தொடர்ந்து மொரட்டுவ பல்கலைகழகத்தின் முன்னால் துணை வேந்தர் க. பிரான்சிஸ் த சில்வா (G.T. Francis De Silva) அவர்கள் நினைவு கூர்ந்த சம்பவங்கள் ஒரு அரசியல்வாதி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாகும். இப்போதெல்லாம் நாம் காண்கின்ற அரசியல்வாதிகளில் : சில இடதுசாரி அரசியல் வாதிகள் அபூர்வமாக ஏனைய அரசியல் கட்சிகளின் சில அரசியல்வாதிகள் தவிர பொதுவாக மக்களின் வாக்குகளால் திருடுவதற்கும் சுயமேம்பாட்டுக்கும் வழங்கப்படும் உரிமம் ( LICENSE) பெற்றவர்கள் போல் தான் இன்றைய அரசியல்வாதிகள் செயற்படுகின்றர்கள். என். எம். பெரேரா அமைச்சராக இருந்தபோது ஒருதடவை நாடாளுமன்றத்திலிருந்து நேரடியாக வந்து கியூவில் நின்று கொழும்பு ஆர்மி கிரவ்ண்டில் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதற்காக நுழைவுசீட்டு பெற்றுக்கொண்டு சாதாரணமாக ஒரு பொதுமகனாக அரங்கிலிருந்து பார்த்தார் என்பது அவரது வாழ்வில் பல சம்பவங்களில் ஓன்று.மெர்ரில் . பெர்னாண்டோ 1956 ஆண்டில் லங்க சமசமாஜ பார்ட்டி உறுப்பினராக மொரட்டுவா தொகுதியில் அய்க்கிய தேசிய கட்சியின் ஜாம்பவானான ருச்கின் பெர்னாண்டோவை தோற்கடித்து நாடாளுமன்றம் சென்றார். இலங்கை பல்கலைக்கழக கல்வியையும் 1953 ஹர்த்தால் நடந்தபோது தனது அரசியல் சமுக மேம்பாட்டுக்காக சாதாரணமாக பேருந்துக்காக வரிசையில் காத்துநின்று தனது போகுமிடம் செல்வதை இவரது வாழ்வில் சாதாரணமாக காணப்பட்டது என்று துணை வேந்தர் பிரான்சிஸ் குறிப்பிடுகிறார்.
ஒருதடவை இவர் தனது தொகுதில் உள்ள வைத்தியசாலைக்கு சுகவீனம் காரனமாக சென்று வைத்தியரை காண்பதற்கு காத்திருந்தபோது, வைத்தியரிடம் ஊழியர்கள் சொன்னபோதும் அதனை ஒரு சிறநத உதாரணமாக குறிப்பட்ட வைத்தியர் மெர்ரில் பெர்னாண்டோ தன்னிடம் வந்தபோது எதிர்காலத்தில் வைத்திய உதவிக்காக வருவதேன்றால் தனது விடுதிக்கு (Quarters) வருமாறு கேட்டுக்கொண்டார். 1960 தேர்தலில் ரஸ்கின் பெர்னாண்டோவிடம் (Ruskin Fernando) தனது தொகுதியை இழந்த மெர்ரில் மீன்றும் ஜூலையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்றார். 1965 ஆண்டு மறைந்த எட்மொந்து சமரக்கொடி ( Edmond Samrakody -LSSP) உடன் சேர்ந்து அரசுக்கெதிரான நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு வாக்களித்து தமது கட்சியில் இருந்து வெளியேறி இருவரும் நாடாளுமன்ற அங்கத்துவத்தை இழந்தனர்.இவர் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறியதும் மஹரகம ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஆங்கில விரிவுரையாளராக பணியாற்றினார். அன்றைய கட்டுபொத்தை வளாகத்திலும் ( University of Morattuwa) பணிக்குழு (staff officer) ஆகவும் பணியாற்றி உள்ளார். தனது நா. உறுப்பினர் பதவியை இழந்தும் ஆசிரியர் பதவியை இழந்தும் பொருளாதார கஷ்டங்களுக்கும் உள்ளானபோதும் கொள்கையில உறுதியாகவிருந்தார். தனது பொருளாதரக் கஷ்டத்தினால் , வேலை தேடும் நோக்குடன் கணக்கியல் துறையில் இடைத்தரநிலை (Intermediate) கணக்கியல் தரத்தில் சித்தி எய்தி வித்தியோதய பல்கலைகழகத்தில் சிரேஷ்ட உதவி நிதி பொறுப்பாளராக (Bursar) ஆக பணியாற்றியும் இவர் ஒரு முன்னாள் எம்.பி .என்றோ அல்லது முன்னாள் மொரட்டுவா நகரசபை தவிசாளர் என்றோ பல்கலைகழக அதிகாரம் இவருக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பதுடன் இவரும் சாதாரண ஊழியரகவே தன்னை அடையாளப்படுத்தி செயற்பட்டார்..
இவர் மொரட்டுவை பல்கலைகழகத்தில் கணக்கியல் பகுதியில் பணியற்றியபோது இவரிடம் பேராசிரியர் பிரான்சிஸ் தே சில்வா ஏன் நீங்கள் மீதமுள்ள கணக்கியல் பகுதிகளை முடித்து முழு தகுதிபெற்ற கணக்காளர் ஆக கூடாது என்று கேட்டபோது; அது (கணக்காளர்-accountant ) என்பது முதலாளித்துவ தொழில் என்று குறிபிட்டபோது: ஏன் அப்படியானால் படித்தீர்கள் எனக் கேட்க: தனக்கு தொழில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக படித்ததாக கூறினார். சிறிது . இடைவெளியின் பின்னர் முதலாளித்துவ ஐக்கிய தேசிய கட்சியின் (UNP) தேர்தல் எழுச்சிகளினை முன்னுணர்ந்து தேர்தலில் தமது புதிய கட்சியை ஆரம்பித்து தோல்வி அடைவோம் என்று அறிந்தபோதும் தனது பல்கலைகழக பதவியை துறந்து போட்டி இட்டார்,.
தனது பல்கலைகழக பதவியில் விடுமுறை பெற்று போட்டியிட அனுமதி இருந்தும் அது தனது கொள்கைக்கு மாறானது என்று மறுத்து பதவியை ராஜினாமா செய்துவிட்டு போட்டி இட்டார். மேலும் இவர் தொழிலாளர்களுக்கு ஆங்கிலம் படிப்பதற்காக இவரது மணித்தியால கட்டணத்தை கேட்டபோது; ஒரு மணித்தியால வேதனமாக ரூபாய் 25 போதும் என்று கூறினார் ஆனாலும் மெர்ரில் பெர்னாண்டோ கேட்கும் தொகை அவரைபோன்ற ஆங்கில ஆசிரியருக்கு கொடுக்ககூடிய பொருத்தமான ஊதியம் அல்ல என்றும் அதனை சொல்வது வெட்கிக்கக்கூடியது என்றும் தான் ரூபாய் 50 வழங்குமாறு கேட்டுக்கொண்டதாக ஆங்கில ஆசிரியரை வேலைகமர்த்த தேடியவர் குறிப்பட்டார். ஆனால் நியமனம் வழங்கும் சபை அவரது தகுதியை உணர்ந்து ரூபாய் 100 வழங்குவதற்கு அனுமதித்தனர். ஒருதடவை தனக்கு பின்னால் வரிசையில் வைத்தியரை பர்ர்க்க காத்திருந்தவர் முன்னால் பிரதமர் தஹநயக என்று அறிந்துகொண்டு முன்னால் இருந்தவர்கள் தாதிகள் என பலர் அவரை முன்செல்ல தூண்டியும் அத்னை மறுத்து காத்திருந்தார் அவர் என்ற செய்தியை என்னிடம் சொன்னவர் அவருக்கு முன்னால் காத்திருந்த ஒருவர் .
ஆங்கிலம் .இரண்டாவது விருப்பு மொழியாக ( English as a second language ) கலைமாணி பட்டதாரி மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பிற்கு மூன்று வருட கல்வியின் பின்னர் அனுகூலமானது என்ற அவரது கருத்து மொழி தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பின்னர் உணரப்பட்டது..
இப்படியான உதாரண அரசியல்வாதிகள் சிலர் இல்லாமலும் இல்லை. இன்றைய அரசில் அமைச்சராக இருக்கும் திஸ்ஸ விதாரணவும் தனது சொந்த வாழ்வில் எளிமையானவர் மிகவும் சாதார பட்டோபகரமான வாழ்க்கை நடத்தாதவர். பழகுவதறகு இனியவர். பொது, அரச வாகனம் ஏனைய சொத்துக்களை தனது சொந்த வாழ்க்கைக்கு பயன்படுத்தாத இன்னுமொருவராக குறிப்பிடக்கூடியவர். முன்னால் அமைச்சரும் இன்றைய ஜனாதிபதியின் ஆலோசகர் ஜனப் எம்.அஸ்வர் ஆகும். முன்னால் கல்வி அமைச்சர் பதயுடீன் மஹ்மூத் அவர்களும் ஒரு ஊழலற்ற மனிதராகவே வாழ்ந்தார். முன்னால் மட்டக்களப்பு எம் . பி நல்லையாவும் ஒரு எளிய மனிதராகவே வாழ்ந்து வாடகை வீட்டிலே காலமானார்.. இன்றைய பல அரசியல்வாதிகளின் பட்டோபக வாழ்ககை பற்றி எழுதுவது அவசியமற்றது ஏனெனில் அவர்கள்தான் அதிகமானவர்கள் (majority) என்பதால்..


»»  (மேலும்)

யாழ். தீவு பகுதியில் 6 இந்திய மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கின

இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றபோது காணாமற்போனதாக கூறப்படும் இந்திய மீனவர்கள் அறுவரின் சடலங்கள் இலங்கையின் வடக்கு கடலில் கரையொதுங்கியிருப்பதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டி. கே. பி. தஸநாயக்க தெரிவித்தார்.
நெடுந்தீவு மற்றும் ஊர்கா வற்றுறை பகுதிகளில் கடந்த 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையில் கரையொங்கிய ஆறு இந்திய மீனவர்களின் சடலங்களை கடற்படையினர் மீட்டிருப்பதாகவும் கடற்படைப் பேச்சாளர் கூறினார். இந்திய மீனவர்கள் ஏழு பேரைக் கொண்ட படகு கடலில் கடந்த வாரம் கவிழ்ந்துள்ளது.
இதனையடுத்து இம் மீனவர்கள் பற்றிய தகவல்கள் தெரியவரின் அறிவிக்குமாறு இந்திய பொலிஸார் எமக்கு அறிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து நாம் வடக்கு கடலில் கூடுதல் அவதானத்துடன் இருந்தோம். இதன்போதே கரையொதுங்கிய ஆறு சடலங்க ளும் மீட்கப்பட்ட தாகவும் கடற்படைப் பேச்சாளர் கூறினார்.
இந்திய மீனவர்கள் அறுவரின் சடலங்களும் யாழ்ப்பாண வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக இந்தியப் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட கடற்படை பேச்சாளர், சடலங்கள் குறித்த மேலதிக விடயங்களை இந்திய உயர் ஸ்தானிகராலயம் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.


»»  (மேலும்)

சர்வதேச நாணய நிதியம் அரசின் மீது முழு நம்பிக்கை
மஹிந்த சிந்தனை கொள்கைகளுக்கு முரணான எந்த ஒரு நிபந்தனையையும் சர்வதேச நாணய நிதியம் முன்வைக்க வில்லை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வரும் பொருளாதார கொள்கை தொடர்பான நம்பிக்கையின் அடிப்படையிலே சர்வதேச நாணய நிதியம் நாம் கோரியதைவிட கூடுதலான நிதியை கடனாக வழங்க முன்வந்துள்ளது என ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.
இலங்கை வரலாற்றில் எமக்குக் கிடைத்த மிகப் பெரிய கடனுதவி இது எனவும், இந்தக் கடனுதவி இலங்கைக்கு கிடைத்திருப்பது யுத்த வெற்றிக்கு இரண்டாம் பட்சமாக கருத முடியாத வெற்றியாகும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அமைச்சரவை முடிவுகள் அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது;
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.5 பில்லியன் டொலர் கடனுதவியாக வழங்க தீர்மானித்துள்ளது.
இலங்கைக்கு இந்தக் கடனுதவி கிடைக்காது எனவும் பாரிய நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும் எதிர்க் கட்சிகள் தெரிவித்து வந்த குற்றச்சாட்டுகள் யாவும் இன்று பொய்யாகியுள்ளன.
இலங்கைக்கு வழங்கப்பட உள்ள கடனுதவி குறித்து இன்று (24) நடைபெற உள்ள சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர் சபைக்கூட்டத்தில் உத்தியோகபூர்வ முடிவு எடுக்கப்பட உள்ளது. 30 வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து பொருளாதாரத்தை மேம்படுத் தவும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கை கள் குறித்து சர்வதேச நாணய நிதியத்துக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதனாலேயே இந்தக் கடனுதவியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
1.9 பில்லியன் அமெரிக்க டொலர்களே நாம் கடனாகக் கோரினோம். ஆனால் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியம் முன் வந்துள்ளது. இலங்கைக்குரிய கோட்டாவில் 400 மடங்கு தொகை எமக்கு கடனாகக் கிடைக்க உள்ளது.
இந்தக் கடன் தொகை சமமான எட்டுத் தவணைகளாக வழங்கப்பட உள்ளதோடு, முதலாவது தவணை இன்று ஆரம்பமாக உள்ளதோடு கடைசித் தவணை 2011 மார்ச் 15ஆம் திகதி கிடைக்க உள்ளது. ஒரு தவணை யில் 312 மில்லியன் டொலர் கிடைக்க உள்ளது. எமது அரசாங்கம் முன்னெடுத்து வரும் ஆக்கபூர்வமான திட்டங்கள் குறித்த நம்பிக்கையின் காரணமாகவே நாம் கேட்ட தொகையை விட கூடுதலாக தருவதற்கு சர்வதேச நாணய நிதியம் முன்வந்துள்ளது.
நாட்டின் பொருளாதார நிலை முன்னேற்றம் கண்டு வருகிறது. கடந்த வருடம் ஜூன் மாதத்தில் 28 வீதமாக இருந்த பணவீக்கம் தற்பொழுது 2 வீதமாகக் குறைந்துள்ளது. இந்த வருடத்தின் முதல் காலாண்டில் 1.5 வீதமாக பொருளாதார வளர்ச்சி வீதம் குறைந் திருந்தது. ஆனால் தேயிலை, இறப்பர், கறுவா மற்றும் ஏற்றுமதிப் பொருட்களால் கிடைக்கும் வெளிநாட்டுச் செலாவணி அதிகரித்து வருவதோடு வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர் அனுப்பும் அந்நியச் செலாவணியும் மூன்று வீதத்தினால் அதிகரித் துள்ளது.
இலங்கையின் வெளிநாட்டு வளம் 1.2 பில்லியன் டொலரில் இருந்து 1.7 பில்லியனாக உயர்ந்துள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கையில் கூடுதலாக முதலீடு செய்யத் தொடங்கியுள்ளதாலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச சமூகத்தின் மத்தியில் இலங்கை குறித்த நம்பிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள நிபந்தனைகள் எதுவும் இலங்கைக்குப் பாதகமாக இல்லை. இலங்கைக்குச் சாதகமான கொள்கையையே சர்வதேச நாணய நிதியம் கொண்டுள்ளது. முரணான எந்த நிபந்தனையும் முன்வைக்கப்படவில்லை.
வரவு செலவுத் திட்ட துண்டு விழும் தொகையை 6.5 வீதத்திற்கு மேற்படாதவாறு பேணுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் துண்டு விழும் தொகை 7வீதம் வரை அதிகரித்தாலும் எதுவித பிரச் சினையும் கிடையாது என சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் கடனினூடாக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும். இந்த கடனுதவி மூலமாக வட்டி வீதத்தை குறைக்கவும் வெளி நாட்டு செலாவணி வீதத்தை நிலையாக தக்கவைக்கவும் முடியும்.
சர்வதேச நாணய நிதிய கடன் காரணமாக இந்த வருட முடிவுக்குள் இலங்கை யின் பொருளாதார வளர்ச்சி வீதம் 5 ஆக உயரும். இந்த கடனுதவி காரணமாக இலங்கை யுடன் கொடுக்கல் வாங்கல் செய்யும் நாடு களுக்கு எமது நாடு குறித்து பூரண நம்பி க்கை ஏற்படும்.
அரசாங்கம் முன்னெடுத்துவரும் கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் மகநெகும, கமநெகும, வறி யோரை ஊக்குவிக்கும் திட்டங்களுக்கு சர்வதேச நாணய நிதியம் எதுவித நிபந்தனையும் விதிக்க வில்லை. நாட்டின் பொருளாதார நிலைமை மோச மாக இருந்தால் சர்வதேச நாணய நிதியம் கடனுதவி வழங்க முன்வந்திருக்காது. இலங்கை குறித்து திருப்தி ஏற்பட்டதாலேயே இந்த நிதி கிடைக்க உள்ளது என்றார்.

»»  (மேலும்)

பெண்களின் அரசியல் பிரவேசத்திற்கு எப்போதுமே எமது கட்சி ஆதரவளிக்கும்.

த.ம.வி.பு கட்சியின் திருமலை மாவட்ட அமைப்பாளர் திருமதி ஜுடி தேவதாசன்.ஆண்கள் மாத்திரமே அரசியலுக்கு தகுதியானவர்கள் என்கின்ற பெரும்பாலான மக்களின் கருத்துக்களுக்கு எமது த.ம.வி.பு கட்சி சரியான ஓர் சமத்துவ வாத அரசியல் சிந்தனையினை கொண்டிருக்கிறது. என்பதற்கு சிறந்த உதாரணமாக பெண்களின் அரசியல் பிரவேசத்திற்கு எப்போதும் எமது கட்சி ஆதரவளிக்கும் என திருமதி ஜுடி தேவதாசன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கௌரவ முதலமைச்சர் கிழக்கு மாகாணத்தில் ஆட்சி பொறுப்பேற்றதனால் கிழக்கு மாகாணத்திற்கு ஒரு விடிவுகாலம் ஆரம்பித்துள்ளதை மக்கள் தொடர்பு அதிகாரி என்ற வகையில் மக்களின் மனங்களில் இருந்து அறியக்கூடியதாக உள்ளது எனவும், பெண்கள் உரிமைகள் தொடர்பாக பேசுகின்ற பல்வேறு அமைப்புக்கள் மற்றும் தொண்டர் நிறுவனங்களில் சேவை ஆற்றிய நான் அரசியல் ரீதியான ஓர் பின்புலத்தின் ஊடாகா பெணகளுக்கான உரிமைகளை பெறுவதற்கு முயற்சிக்க முடியும் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார். மேலும் குறிப்பிடுகையில் முக்கியமாக பெண்களினதும்; சிறுவர்களினதும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் பொருட்டே எமது மாவட்ட அமைப்பாளர்கள் இயங்கி வருகிறார்கள். குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் கிழ்மட்ட நிலையில் இருக்கின்ற பெண்கள் அனைவரினதும் வாழ்வாதாரம், கல்வி, தொழில் முயற்சி,அரசியல் பிரவேசம் என்பவற்றை மேம்படுத்துவதற்காக எமது கட்சி அற்பணிப்புடனும் சேவை மனப்பான்மையுடனும் செயற்படுகின்றது. இதனூடாக எமது பெண் சமுதாயத்திற்கான ஓர் அரசியல், சமூக அபிவிருத்தி மாற்றத்தினை ஏற்படுத்த முடியும் என தான் நம்புவதாகவும் தெரிவித்தார்
»»  (மேலும்)

மன்னார்-திருகோணமலை நேரடி பஸ் சேவை இன்றுமுதல் ஆரம்பம்


மன்னாரிலிருந்து திருகோணமலைக்கான நேரடி பஸ் சேவை இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வைபவ ரீதியாக இன்று காலை 6.30 மணிக்கு இச்சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.நிக்கொலாஸ்பிள்ளை பஸ்சேவையை ஆரம்பித்து வைத்தார்.மன்னார் அரச போக்குவரத்துச் சபை பஸ் ஒன்றே இச்சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வுக்கு மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த விக்ரமசிங்கஇ கொமாண்டர் மேஜர் பீரிஸ்இ மன்னார் போக்குவரத்துச் சபை முகாமையாளர் அஸ்வர் ஆகியோர் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆரம்ப நிகழ்வினை மன்னார் அரச போக்குவரத்து நெடுஞ்சாலையின் முகாமையாளர் அஸ்வர் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டது.மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் நேற்று முதல் (22.07.2009) வாகன பாஸ் நடைமுறை இரத்துச்செய்யப்பட்டுளதாக நேற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் எடிசன் குணதிலக தெரிவித்தார்.மட்டக்களப்பு நகரில் உள்ள வர்த்தகர்களை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் வைத்து நேற்று சந்தித்த போது மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தல் இருந்து கொழும்பு போன்ற இடங்களுக்கு செல்லும் வாகனங்கள் பாஸ் எடுத்து செல்லும் நடைமுறை கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இருந்து வந்தது. இன்று முதல் இப்பாஸ் நடைமுறை இரத்துச் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.இனிமேல் எந்த வாகனங்களும் பாஸ் எடுக்கத்தேவiயில்லை. நாட்டில் பயங்கரவாதம் அழிக்கப்பட்டு புதிய சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இந்த வாகன பாஸ் நடைமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியினதும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினதும் அறிவுறுத்தலுக்கும், ஆலோசனைக்கு ஏற்பவுமே இந்த நடைமுறை அமுல்படுத்தப்படுகின்றது எனத் தெரிவித்தார்.
»»  (மேலும்)

முதலமைச்சர் தலைமையில் விசேட குழு நியமனம்கிழக்கு மாகாணத்தில் வேலை வாய்ப்பற்றிருக்கும் பட்டதாரிகளது கோரிக்கை தொடர்பாக ஆராய்வதற்கென கிழக்கு மாகாண முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் அடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது.
நேற்று இடம்பெற்ற மாகாண சபை மாதாந்த அமர்வின்போது இக்குழு நியமிக்கப்பட்டது.சபையின் தவிசாளர் ஏ.எம்.எம். பாயிஸ் இது குறித்து உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சரவைக் குழு எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் இக்குழுவில் அடங்கியுள்ளனர்.கிழக்கு மாகாணத்தில் தற்போது வேலைவாய்ப்பற்ற நிலையில் உள்ள சுமார் 1400 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கோரி மட்டக்களப்பில் கடந்த 22 நாட்களாக பட்டதாரிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்களை கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் குழு உடனடியாக சந்திக்க உள்ளது.
மாகாண சபை அமர்வில் இது குறித்து கடுமையான விவாதம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


»»  (மேலும்)

7/23/2009

பொது நலம் சார்ந்த சிந்தனையாளர்களாக மக்கள் மாறுகின்ற போது அதிகாரிகள் அனைவருமே விழிப்படைவார்கள். சத்தியசீலன். -


அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்திற்கு அண்மையில் தமிழ் மக்கள் விடதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களை மாவட்ட அமைப்பாளர் வி. சத்தியசீலன் அவர்கள் அழைத்து திருக்கோவில் பிரதேச மக்களின் அபிவிருத்தி குறைபாடுகள் தொடர்பாக எடுத்துக் கூறப்பட்டது.
திருக்கோவில் பிரதேச மக்கள் மத்தியில் உரையாற்றிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் வி. சத்தியசீலன், மக்கள் அனைவருமே பொது விடயங்களை தனி ஒவ்வொருவரது பிரச்சினையாகப் பார்க்க வேண்டும் இவ்வாறாக அனைவருமே செயற்பட்டால் எமது பிரதேசத்தின் அபிவிருத்தி செயல்பாடுகள் வெகு விரைவாக முன்னெடுக்கப்படும் மேலும் ஊழல்கள், துஷ்பிரயோகங்கள் இல்லாது செயற்படலாம். எனவே எதிர்காலத்தில் அனைத்து மக்களும் பொது நலம் சார்ந்த சிந்தனையாளர்களாக மாறுகின்ற போது அதிகாரிகள் அனைவருமே விழிப்படைவார்கள் எனக் கேட்டுக்கொண்டார்


»»  (மேலும்)

கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற காணிகள் வெளியாருக்கு பகிர்ந்தளிக்கப்படும்போது மாகாணசபையின் ஒப்புதல் பெறவேண்டும்

மாகாண சபையின் அங்கிகாரமின்றி வெளியாருக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கிழக்கு மாகாண சபையில் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் இடம்பெற்றது.அரசியல் அமைப்பின் 13ம் திருத்தத்தின் பிரகாரம் காணி நிர்வாகம் மாகாண சபைகளுக்குரியதாகும் ஆனால் இத்திருத்தம் முழுமையாக இன்னமும் அமுல்படுத்தப்படாத நிலையில் மாகாண நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் மத்திய அரசு தனியாருக்கு காணிகளை பகிர்ந்தளிப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கடும் ஆட்சேவணையை வெளியிட்டிருக்கிறார்.
கந்தளாய் பிரதேசத்தில் உள்ள அரச காடுகள் மாகாண சபையின் அங்கிகாரமின்றி வெளியாருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருவதாகவும் இதனைத் தடுத்து நிறுத்தவேண்டும் எனவும் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை மீதான விவாதத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் உள்ள அரசு நிலம், மாகாண சபையின் அங்கிகாரம் பெறாமல் தனியார் கம்பனிகளுக்கு மத்திய அரசாங்கத்தரினால் பகிர்ந்து வழங்கப்படுவது குறித்து எதிர்காலத்தில காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.முதலமைச்சர் தொடர்ந்து கூறியதாவது. கிழக்கு மாகாணத்தில் காணிகள் தனியார் கம்பனிக்கு வழங்கப்படுவது மாகாணத்தில் வாழும் சகல இன மக்களையும் புண்படுத்துவதாக அமைகிறது. ஆதிகார சக்தி இதில் தலையீடு செய்கிறது கிழக்கு மாகாணத்தில் காணிப்பிரச்சினை முக்கியமானதொன்றாகும். ஏனைய மாகணங்களிலும் பார்க்க கிழக்கு மாகாணத்தில்தான் காணிப்பங்கீடு முக்கியமாதொன்றாக கருதப்படுகின்து மற்றும் கிழக்கு மாகாணத்தின் அனைத்து இன மக்களின் மனங்களை புண்படுத்துவதாக அமைகின்றது

»»  (மேலும்)

7/20/2009

யாழ், வவுனியா, ஊவா தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகம் நாளை
யாழ்ப்பாணம், வவுனியா உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மற்றும் ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகம் நாளை (21ம் திகதி) முதல் ஆரம்பமா கிறது.
அனைத்து வாக்காளர்களுக்குமான வாக்காளர் அட்டைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் விநியோக நடவ¨க்கைகளுக்காக இவை நாளை (21) தபால் நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அந்தந்த மாவட்டங்களின் உதவித் தேர்தல் ஆணையாளர்கள் கூறினர்.
தேர்தல்களுக்கான அனைத்து நடவடிக்கைகளும் அமைதி யாகவும் மும்முரமாகவும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். யாழ். மாநகரசபை தேர்தலில் 70 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவிருப்பதாக யாழ்.
உதவித் தேர்தல் ஆணையாளர் பொன்னுத்துறை குகநாதன் தெரிவித்தார். தேர்தல் நடைபெறும் காலப்பகுதியில் அதற்கான கடமைகளை முன்னெடுப்பதற்கென 1200 அரச அதிகாரிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் விரைவில் வழங்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை யாழ்ப்பாணத்திலிருந்து வெவ்வேறு சூழ்நிலைகள் காரணமாக இடம்பெயர்ந்து புத்தளம், கம்பஹா, கொழும்பு, அநுராதபுரம் மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் தங்கியிருக்கும் 6004 பேருக்கும் நாளை முதல் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
இவர்களுக்காக தேர்தல் திணைக்களம் 16 வாக்குச்சாவடிகளை பிரத்தியேகமாக அழைத்துள்ளது என சுட்டிக்காட்டிய யாழ். உதவித் தேர்தல் ஆணையாளர், நாட்டின் நிலைமை சமுகமடைந்திருப்பதால் இடம்பெயர்ந்துள்ளோர் எதிர்காலங்களில் தமது வாக்காளர் பதிவை மாற்றியமைக்க வேண்டும் அல்லது வாக்களிக்க யாழ்ப்பாணத்துக்கு நேரடியாக வருகை தர வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
அத்துடன் யாழ். மாநகரசபை தேர்தல் கடமையில் ஈடுபடவிருக்கும் எழுதுவிளைஞர்களுக்கு நாளையும் (21) கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட தலைமை தாங்கும் அதிகாரிகளுக்கு எதிர்வரும் 23 ஆம் 24 ஆம் திகதிகளிலும் விசேட பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்படவுள்ளன.
வவுனியாவில் இம்முறை 18 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுவதுடன் தேர்தல் கடமைகளில் ஈடுபடுவதற்காக 500 அரசாங்க அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டிருப்பதாக வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எ. எஸ். கருணாநிதி கூறினார்.
பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். வாக்குப்பெட்டி தயாரிப்பு மற்றும் வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான காகிதாதிகள் என்பவற்றை தயார்படுத்துவதில் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தேர்தல் கடமையில் ஈடுபடும் பல்வேறு தரப்பினருக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் கனிஷ்ட தலைமை தாங்கும் அதிகாரிகளுக்கு எதிர்வரும் வாரங்களில் பயிற்சிகள் நடத்தப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

»»  (மேலும்)

முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று காங்கேயன் ஓடை முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்ற 30 வருட புஹாரி சரீஃப் பாராயணம் ஓதும் நிகழ்வில்காங்கேயன் ஓடை முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் எ.எல.எம்.ரிபாய் மௌலவி தலைமையில் நடைபெற்ற புஹாரி சரீஃப் பாராயணம் ஓதும் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மாகாண சுகாதார அமைச்சர் எம்.எல்.எ.எம் ஹிஷ்புல்லா, ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் உருத்திரா, போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் சிறிதரன், மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம், மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் வி.சத்தியசீலன், கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் பூ.பிரசாந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்புஹாரி சரீஃப் பாராயணம் ஓதும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு முதல்வர் நாட்டில் சாந்தியும் சமாதானமும் ஏற்படுத்தப்படவேண்டும் இதற்கு இனங்களுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் மதப்பாகுபாடின்மை, சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வு என்பவை சீராக அமைவதன் ஊடாகவே எமது நாட்டின் சகல பாகங்களிலும் சாந்தியும் சமாதானமும் ஏற்பட வாய்ப்பு அமையும். இதுபோன்ற மத நிகழ்வுகளில் இனமத பேதமின்றி அனைவருமே பங்கு கொள்கின்ற வேளையில் அனைவருமே ஒருமித்த சிந்தனை உடையவர்களாக எமது நாட்டிற்கான அபிவிருத்தியையும் சமாதானத்தையும் வேண்டி நிற்பவர்களாக மாறிவிடலாம். பல நெடுங் காலமாக தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் ஏற்படுத்தப்பட்ட குரோதங்கள் மறக்கப்பட்டு இனங்களுக்கிடையிலான நல்லுறவு ஏற்படுத்துவதற்கு இலங்கையில் வாழ்கின்ற அனைத்தின மக்களும் ஒருமித்த கருத்துக்களோடு ஒரே குடையின் கீழ் ஒன்று திரளவேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இதில் மாகாண அமைச்சர் எம்.எல்.எ.எம் ஹிஷ்புல்லா சமூகங்களுக்கடையிலான ஒற்றுமை பற்றியும் புஹாரி சரீஃப் பாராயணம் ஓதும் நிகழ்வு பற்றியும் சிறப்புரை ஆற்றினார்.

»»  (மேலும்)

7/19/2009

பொதுமக்களுக்காக வழங்கப்பட்ட A/C வண்டிகளை காட்டில் மறைத்து வைத்தாரா கருணா?
கிழக்கு மாகாண பொதுமக்களுக்களின் பொது தேவை கருதி, அரச சார்பற்ற நிறுவனமொன்று நன்கொடையாக வழங்கிய இரண்டு அதி நவீன குளிரூட்டி வாகனங்களை (A/C Vehicles) அமைச்சர் முரளிதரன், காட்டில் மறைத்து வைத்து நெருங்கிய ஒருவருக்கு அன்பளிப்பு செய்யவிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அண்மையில் சேவா லங்கா எனும் அரசார்பற்ற நிறுவனம், கிழக்கு மீன்பிடிதொழிலாளர்களில் தொழில் அபிவிருத்திக்காக இவ் இரு அதிநவீன குளுரூட்டி வாகனங்களை அமைச்சர் முரளிதரன் ஊடாக வழங்க முற்பட்டது.எனினும், அவற்றை பெற்றுக்கொண்டு, மட்டக்களப்பை அண்டிய காட்டுப்பிரதேசம் ஒன்றில் தனது நெருங்கிய சகாக்களின் உதவியுடன் மறைத்து வைத்திருந்த முரளிதரன், அவரது பிரத்தியேக செயலாளராக செயற்பட்டு வரும் சாந்தினி எனும் பெரும்பான்மையின பெண்ணது சகோதரனுக்கு அன்பளிப்பு செய்யவிருந்ததாகவும், தற்போது செய்திகள் கசிந்துள்ளன.அவ்வண்டிகள் இரண்டும் கண்டுபிடிக்கப்பட்டு கிழக்கு மாகாண சபையிடம் தற்சமயம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

»»  (மேலும்)

எமது கிழக்கு மாகாண சமூகங்களின் ஒற்றுமையின் ஊடாக கிழக்கிற்கான அரசியல் பலத்தை ஏற்படுத்த வேண்டும். – கிழக்கு முதல்வர்.கிழக்கு மாகாணத்தில் வாழுகின்ற தமிழ் பேசுகின்ற மக்களான தமிழர்கள் மற்றும் முஸ்லிகள் ஒற்றுமையாக வாழ்வதன் ஊடாகவே எதிர் காலத்தில் கிழக்கிற்கான ஓர் நிலையான அரசியல் ஸ்த்தரத்தினை ஏற்படுத்த முடியும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று அக்கரைப்பற்று அஸ் சிராஜ் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காடசியில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த முதல்வர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் எமது மூதாதையர்கள் எவ்வாறு தமிழ் முஸ்லிம் உறவுகளைப் பேணி வந்தார்களோ அவ்வாறே நாம் எமது உறவுகளைப் பேண வேண்டும் அதற்கான சரியான தருணமாக இக் காலகட்டத்தை நான் பார்க்கின்றேன். எமது கிழக்கு மாகாணத்தில் தற்போது பல அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை வரவேற்கத்தக்கது. அத்தோடு நிலையானதும் நீண்ட காலத்திற்கு எமது சமூகத்திற்கான அபிவிருத்தி என்று பார்க்கின்ற போது அதனை நாம் இன்னும் எட்டவில்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது என்றார். காரணம் எமது தமிழ் பேசும் சமூகம் அதிலும் குறிப்பாக தமிழ் சமூகம் அரசியலில் மிகவும் பின் தங்கியே காணப்படுகின்றது. குறிப்பாக கிழக்கு வாழ் தமிழ் மக்களில் அதிகமானவர்கள் அரசியல் சிந்தனைகளில் நாட்டம் குறைந்தவர்களாகவே காணப்படுகின்றார்கள். இதற்கான காரணம் காலம்காலமாக இம்மக்கள் அரசியல் வாதிகளால் ஏமாற்றப்பட்ட வரலாறுகளும் உண்டு. எது எவ்வாறு இருந்த போதிலும் நாம் இனிவருகின்ற காலங்களில் ஒற்றுமையாகவும் இன நல்லுறவோடும் வாழ்வதன் மூலமே எமக்கான அரசியல் தனித்துவத்தினைப் பேன முடியும் எனக் குறிப்பிட்டார்.
2009ம் ஆண்டிற்கான உள்@ராட்சி வாரத்தினை முன்னிட்டு அக்கரைப் பற்று பிரதேசசபை நூலகங்களுக்கடையிலான புத்தகக் கண்காட்சியின் முதல் நாள் நிகழ்வு அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் தவாம் தலைமையில் இடம்பெற்றது. இதில் அம்பாறை மாவட்டத்தின் பிரதேச சபை நூலகங்களில் திருக்கோவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நாவிதன்வெளி, ஆலயடிவேம்பு, காரைதீவு போன்ற பிரதேச சபைகள் பற்குபற்றின. இதில் பிரதம அதிதகளாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி. சந்திரகாந்தன், தேசிய காங்கிரஸின் தலைவரும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சர் ஏ.எல்.எம் அதாவுல்லா, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் கிராமிய மின்சாரம் வீடமைப்பு அமைச்சர் எம். எஸ் உதுமாலெவ்வே,தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் வி. சுத்தியசீலன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும் முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான பூ.பிரசாந்தன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
»»  (மேலும்)

மட்டு திருமலைக்கான ரயில் பஸ் சேவை 29ம் திகதி முதல் ஆரம்பம்.


கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் வேண்டுதலுக்கமைய இந்திய அரசின் நேரடி உதவியுடன் மட்டு திருகோணமலைக்கான ரயில் பஸ் சேவைக்கான ரயில் பஸ்கள் 5 வழங்கப்படுகின்றன. இதற்கான பொருத்து வேலைகள் தற்போது இடம் பெற்றுக்கொண்டிருக்கின்ற இவ்வேளையில் இதன் முதற்கட்டமாக எதிர்வருகின்ற 29.07.2009 அன்று பி.ப.03.00 மணிக்கு மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து திருமலைக்கான முதலாவது ரயில் பஸ் சேவை அங்குரார்ப்பன நிகழ்வு இடம் பெற இருக்கின்றது இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோத் பிரசாத் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளார்கள் என கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகச் செயலாளர் ஆ.தேவராஜா தெரிவித்தார்.

மேலதிக தகவல்களுக்கு:- ஆ.தேவராஜா,
0772961815
»»  (மேலும்)

உள்ளுராட்சி மன்றங்களை எதிர்காலத்தில் ஒன்றிணைப்பது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல்.

மேற்படி கலந்துரையாடலானது கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் டீ.P. பாலசிங்கம் தலைமையில் ஹோட்டல் கிரின் ஓசியானிக் திருமலையில் பி.ப 06.30 மணியளவில் இடம்பெற்றது இதில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், உலக வங்கி, ஏசியன் பவுண்டேசன், ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றின் பிரதிநிதிகளும் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன், எதிர்காலத்தில் உள்ளுராட்சி மன்றங்களை வலுப்படுத்துவதற்காக ஓர் அங்கிகாரத்தினை மேற்படி அமைப்புக்கள் வழங்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
»»  (மேலும்)

7/17/2009

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் பீற்றர் ஹெய்ஸ் கிழக்கு மாகாணத்திற்கு இருநாள் விஜயம்
இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் டாக்டர் பீற்றர் ஹெய்ஸ் நேற்று புதன்கிழமை மாலை இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு திருகோணமலை வந்தார். திருமலை வந்த அவர் முதலில் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் செயலகத்திற்கு வந்து முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனைச் சந்தித்தார். முதலமைச்சர் பிரிட்டிஷ் தூதுவரை வரவேற்றார். பின்னர் முதலமைச்சர் அலுவலகத்தில் பிரிட்டிஷ் தூதர் முதலமைச்சருடன் கலந்துரையாடினார். சந்திப்பில் முதலமைச்சருடன் அவரின் சிரேஷ்ட ஆலோசகர் டாக்டர் விக்னேஸ்வரன், முதலமைச்சரின் செயலாளர் ஆஸாத் மௌலானாவும் கலந்து கொண்டனர்.
சுமார் 45 நிமிடங்கள்வரை நீடித்த பேச்சுகளின் பின்னர் முதலமைச்சர் சந்திரகாந்தனும் பிரிட்டிஷ் தூதுவர் டாக்டர் பீற்றர் ஹெய்ஸும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். பிரிட்டிஷ் தூதருடனான பேச்சுகள் பெறுமதியாகவும் கனதியாகவும் அமைந்தன. பிரிட்டிஷ் தூதுவர் முன்னரும் மூன்றுதடவைகள் திருகோணமலைக்கு வந்துள்ளார். கிழக்கு மாகாண அபிவிருத்தி குறித்து பிரிட்டன் கொண்டுள்ள அக்கறையை பிரிட்டிஷ் தூதுவர் தமது சந்திப்பின் போது வெளிப்படுத்தினார். எதிர்காலத்தில் பிரிட்டன் வழங்கவிருக்கும் உதவிகள் பற்றியும் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது என்று முதலமைச்சர் சந்திரகாந்தன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திருகோணமலைக்கு நான்காவது தடவையாக இன்றுவந்துள்ளேன். கிழக்கு மாகாணம் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி முதலமைச்சருடனான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது. மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திக்கான வாய்ப்புப்பற்றியும் பேசப்பட்டது. பொருளாதாரம், விவசாயம், பண்ணை அபிவிருத்தி ஆகியன தொடர்பான அபிவிருத்திகள் குறித்து அறிந்து கொண்டேன் என்று பிரிட்டிஷ் தூதுவர் டாக்டர் பீற்றர் ஹெய்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்திலே திருகோணமலை அழகான இயற்கை வளம் பொருந்திய பிரதேசம். பிரிட்டிஷ் பிரஜைகள் இலங்கைக்கு உல்லாசப்பயணம் மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளன. இது உல்லாசப் பயணத்துறையின் அபிவிருத்திக்கு உதவும். பிரிட்டிஷ் பிரஜைகள் பெரும் எண்ணிக்கையில் இங்கு வந்து செலவு செய்யும் வாய்ப்பு இதனால் ஏற்படும் என்றும் பிரிட்டிஷ் தூதுவர் கூறினார்.
முதலமைச்சருடனான சந்திப்பின் பின்னர் பிரிட்டிஷ் தூதுவர் உப்புவெளியிலுள்ள இரண்டாம் உலக மகாயுத்தத்தில் உயிரிழந்த பிரிட்டிஷ் படையினர் அடக்கம் செய்யப்பட்ட மயானத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். திருமலை விஜயத்தின்போது திருமலை மாவட்ட வர்த்தக சமூகத்தின் பிரதிநிதிகள் மற்றும் திருகோணமலை அரசாங்க அதிபர் ஆகியோரையும் பிரிட்டிஷ் தூதர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

»»  (மேலும்)

எகிப்து செல்ல முயற்சி:

எகிப்து செல்வதற்காக தயாராகியிருந்த புலி பயங்கர வாதிகள் இருவரும் அவர்க ளுடன் இருந்த இன்னு மொருவரும் விசேட பொலிஸ் குழுவினரால் நேற்று (16)
கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் எகிப்து நோக்கிப் பயணிப்பதற்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் கடவுச்சீட்டு ஆகியவற்றுடனேயே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களுள் இருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்தும் மற்றையவர் கொழும்பில் வைத்தும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அணிசேரா நாடுகளின் 15வது உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக எகிப்து சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏதேனும் வழிகளில் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கிலேயே இவ்விருவரும் எகிப்து செல்ல ஏற்பாடு செய்திருக்க வேண்டுமெனவும் பொலிஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
கைது செய்யப்பட்டிருக்கும் மூவரும் வெள்ளவத்தை மற்றும் கொட்டாஞ்சேனை பகுதியில் தற்காலிகமாக தங்கியிருப்பவர்களென்றும் இவர்கள் யாழ்ப்பாணம், சாவகச்சேரி மற்றும் பலாலி ஆகிய இடங்களை பிறப்பிடமாகக் கொண்டவர்களென்றும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்கயின் பணிப்புரையின் பேரில் மேல் மாகாண பாதுகாப்பு நடவடிக்கைப் பிரிவு இவர்களை கைது செய்துள்ளது.»»  (மேலும்)

மீள்கட்டுமான செயற்பாட்டில் எட்டு மாதங்களுக்குள் துரித முன்னேற்றம்

வடபகுதி மீள்கட்டுமானப் பணிகளுக்காக, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்திருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திடம் தெரிவித்துள்ளார்.
இந்தப் பணிகளுக்கு ஒத்துழைப்பதற்காக சகல கட்சிகளையும் கொண்ட சர்வகட்சி மாநாடொன்றைக் கூட்டியிருப்பதாகவும் ஜனாதிபதி விளக்கியுள்ளார். எகிப்தின் ஷான் அல் ஷேய்க் நகரில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் மாநாட்டில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ.நா.
செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் நடந்த இருதரப்புப் பேச்சுவார்த்தையின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யங்கரவாதிகளிடமிருந்து மக்களை மீட்டு எட்டு மாதங்களே கடந்துள்ளதாகக் கூறிய ஜனாதிபதி, அவர்களின் நலன்களை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் உயரிய மட்டத்தில் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்த மக்களுக்கு மிகக் குறுகிய காலத்திற்குள் புனர்வாழ்வளித்து அவர்களை மீளக்குடியமர்த்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரணக் கிராமங்களின் தற்போதைய நிலவரம் குறித்துக் கேட்டறிந்த ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ முன், புலிகளுடனான இறுதிக்கட்ட மோதலின் போது தாம் இலங்கை வருவதற்கும், நலன்புரித் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதற்கும் வாய்ப்பளித்தமைக்காக இலங்கை அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்தார்.
இதேபோல் மக்களை உரிய முறையில் மீளக்குடியமர்த்துவதற்கு முன்னதாக, கண்ணி வெடிகளை அகற்றுதல் மற்றும் உட்கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பான செயற்பாடுகளுக்கு அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார்.
இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகைள நிவர்த்திப்பதற்கு இதுவரை ஐ.நா. வழங்கி ஒத்துழைப்புகளுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்திலும் நெருக்கடியான காலகட்டங்களில் தொடர்ந்து ஐ.நா. சபை இலங்கைக்கு உதவுமென எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளியுறவுச் செயலாளர் பாலித கொஹன, ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் சஜித் வாஸ் குணவர்தன ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.


»»  (மேலும்)

7/16/2009

இடம்பெயர்ந்த மக்களை உடனடியாக மீளக் குடியமர்த்தி அவர்களது வாழ்வாதாரத்துக்கு வழி ஏற்படுத்துவதே எமது நோக்கம்
அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த உரை


“வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை உடனடியாக அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியேற்றி அவர் களது வாழ்வாதாரத்துக்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பதே எமது நோக்கமாகும்” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார். அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
அணிசேரா நாடுகளின் 15வது உச்சி மாநாடு நேற்று எகிப்து, சார்ம் எல்ஷேக் நகரத்திலுள்ள மெரிரைம் மண் டபத்தில் நேற்று ஆரம்பமாகியது.
118 நாடுகள் அங்கம் வகிக்கும் இந்த அமைப்பின் தலைவர்கள் நேற்றைய மாநாட்டில் கலந்துகொண்டனர்.
இங்கு, இலங்கை நேரப்படி இரவு 8 மணியளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றினார்.
னது உரையில் அவர் மேலும் கூறியதாவது :-
உலகில் கொடூரமான பயங்கரவாத அமைப்பொன்றை வேருடன் பிடுங்கி எறிவதற்கு எமது நாட்டால் முடிந்துள் ளது என்பதை முதலில் கூறிக்கொள்வதையிட்டு நான் பெருமையடைகிறேன். அது எவ்வகையிலும் விடுதலை அமைப்பு ஒன்று அல்ல.
வன்முறைகளை அடிப்படையாகக் கொண்ட தேச விரோதம் உக்கிரமடைந்த பிரிவினைவாத குழுவாகும். எனினும், இவ்வாறான பிரிவினைவாத பயங்கரவாத அமைப்பை சில நாடுகள் பிரசாரம் பண்ணுவதற்கு முனைந்திருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
அவ்வாறு செய்வதற்கு அவர்களால் முடிந்துள்ளமைக்கு காரணம் அசாதாரணமான அரசியல் நிலைமைதான் என்பது தெளிவாகிறது.
ஏனெனில் அந்த நாடுகளுக்கு பயங்கரவாதம் சவாலாக இல்லையென்பதையே தெளிவாகக் காட்டுகிது.
பயங்கரவாதம் எம்மை அச்சமடையச் செய்வதுடன் பல வீனப்படுத்திவிடும். அதற்கு முகம் கொடுத்த சந்தர்ப்பங்க ளில் எமக்கு நிரந்தரமாக ஒத்துழைப்பு வழங்கிய அணி சேரா நாடுகளுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
எவ்வாறான பயங்கரவாதமாக இருந்தாலும் இலங்கை அதனை எதிர்ப்பு தெரிவித்த நாடாகும். எமது நாட்டின் பயங்கரவாதத்தை அடியுடன் தோல்வியுறச் செய்யக் கிடைத்தமை மகிழ்ச்சிகுரிய விடயமாகும்.
எமது நாட்டு மக்கள் கடந்த 27 வருடங்களாக மரண பயத்துடன் வாழ்ந்தார்கள். இறுதியாக பயங்கரவாதத்திலி ருந்து விடுபட்ட பின் இன்று எமது நாடு முழுமையாக நிம்மதியடைந்துள்ளது. இலங்கையிலுள்ள அனைத்து மக்க ளும் எதிர்காலம் தொடர்பில் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.
எங்களுக்கு உதவிகள் தேவைப்பட்ட இக்கட்டான நிலை மைகளின் போது எங்களுடன் இணைந்து சினேகபூர்வ மாக செயற்பட்டவர்கள் எதிர்காலத்திலும் அவ்வாறு செய் வார்களென்றும் இலங்கை மக்களின் நலன் மற்றும் அபி விருத்திக்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்தும் உதவுவார்களென்பது எமது பாரிய நம்பிக் கையாகும்.
இடம்பெயர்ந்துள்ளவர்களை உடனடியாக அவர்களது வீடுகளில் மீளக்குடியேற்றி அவர்களது வாழ்வாதாரத்துக்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பதே எமது நோக்கமாகும். இடம் பெயர்ந்தவர்களது தேவைகள் மிகவும் முக்கியமானதாகும். அவர்களின் நலனுக்காக எங்களுக்கு உதவிய சர்வதேச பிரஜைகளுக்கு இந்த தருணத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவ்வாறு ஐக்கிய நாடுகள் அமைப்புக்கும் விசேடமாக இலங்கைக்கு சமுகமளித்த ஐக்கிய நாட்டுப் பிரஜைகளுக்காகவும் எமக்கு உதவிய அதன் செயலாளர் நாய கத்துக்கும் எனது விசேட நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
எமது நாட்டு மக்கள் ஏனைய மக்களுக்கு உதவுவதற்கு பழக்கப்பட்டவர்கள். அதனாலேயே இக்கட்டான நிலைமை களின் போது எமது நாட்டின் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்தவர்களுக்காக உதவ முன்வந்தனர். இடம்பெயர்ந்த மக்களுக்கு கூடிய விரைவில் அவர்களின் வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு எனது அரசாங்கம் மேற்கொண்டுள்ள சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வேலைத் திட்டத்துக்கு அவர்களது பங்களிப்பினை பெற்றுக்கொள்வதற்கும் எங்களது அரசுக்கு முடியுமென நான் நம்புகின்றேன்.
வேறு விடயங்களுள் பாதிக்கப்பட்ட நாடுகள் தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்காக தேவையான குறுகியகால கடனை திருப்பிச் செலுத்துவதை தற்காலிகமாக இடை நிறுத்துவதை கவனத்திற்கொள்ளுமாறு நான் மிகவும் பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
பல்வேறு நாடுகளைக் கொண்ட சிறிய அமைப்பாக சார்க் அமைப்பு விளங்குகின்றது. இந்த சார்க் அமைப்பு க்கு நிரந்தர செயலகம் ஒன்று உள்ளது. துரதிஷ்டவசமாக அணிசேரா அமைப்புக்கு 50 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் நிரந்தரமான செயலகமொன்றை ஸ்தாபித்துக் கொள்வதற்கு முடியாமல் போயுள்ளது.
எமது அமைப்புக்காக செயலகமொன்றை ஸ்தாபிப்பதற்கு அணிசேரா அமைப்பின் தலைவர்களாகிய நாங்கள் ஒன்றி ணைந்து செயற்படுவோமென்று நான் ஆலோசனை வழங் குகிறேன்.
தாங்கள் இந்த சந்தர்ப்பத்திலே பயங்கரவாதத்திற்கு எப் பொழுதும் தலைதூக்க முடியாத படி சமூகத்தில் சமாதா னம் மற்றும் பாதுகாப்புக்காக ஒற்றுமையாக செயற்படுவ தற்கும் எமது இனங்களின் ஒருமைப்பாடு மற்றும் அபிவி ருத்தி பொருளாதாரக் கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு பொறுப்புடன் செயற்பட ஒன்றுபடுவோம் எனவும் ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்துள்ளார்.»»  (மேலும்)

7/15/2009

எல்லைக்கிராமங்கள் மட்டக்களப்பு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன


அம்பாறை மாவட்டத்துடன் கடந்த பதினெட்டு வருடங்களாக இணைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்கிராமங்கள் நிர்வாக ரீதியாக மீண்டும் மட்டக்களப்பு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு செங்கலடி- பதுளை வீதியிலுள்ள கெமுனுபுர,மங்களாகம போன்ற கிராமங்கள் ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிலும் கெவிலியாமடு, புலுகன்னாவை போன்ற கிராமங்கள் பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவிலும் சேர்க்கப்பட்டு மீண்டும் மட்டக்களப்பு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பிரதேசங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது எல்லைக் கிராமங்களிலுள்ள மக்கள் தமது சிவில் நிர்வாக அலுவல்களின் நிமித்தம் அங்கு செல்ல முடியாத நிலையில் இருந்ததாகவும். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலுள்ள அதிகாரிகள் தமது சுய பாதுகாப்பு உட்பட பல்வேறு காரணங்களினால் அங்கு செல்ல முடியாத நிலை காணப்பட்டதாகவும். இதன் காரணமாகவே சிங்களக் குடும்பங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட எல்லைக் கிராம மக்கள் தற்காலிகமாக அம்பாறை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்தனர். இக்கிராம மக்கள் மீண்டும் மட்டக்களப்பு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருப்பது தொடர்பாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர சகல திணைக்களத் தலைவர்களுக்கும் அறிவித்துள்ளார்.

Categories: செய்திகள்

Tags:

-->

»»  (மேலும்)

கிழக்கு மாகாண விளையாட்டு விழா: மட்டு மாவட்டம் முதலாமிடம்

35 வது தேசிய விளை யாட்டு விழாவிற்கு வீர வீராங்கனைகளை தெரிவு செய்து அவர்களை போட்டி க்காக ஆயத்தப்படுத்தும் பொருட்டு நடத்தப்பட்ட இவ் ஆண்டுக்கான கிழக்கு மாகாண விளையாட்டு விழா கடந்த 10, 11, 12 ஆம் திகதி களில் அம்பாறை பொது விளையாட்டு மைதானத் தில் இடம் பெற்றது.
கிழக்கு மாகாண சுகா தார விளையாட்டுத்துறை அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தலை மையில் ஆரம்பமான இவ் விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) கோலா கலமாக இடம் பெற்றது. இதன் போது மூவின சமூக இளைஞர், யுவதிகளால் ஒற்றுமையை வலியுறுத்தும் கலை கலாசார நிகழ்வுகள் இடம் பெற்றன.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரம கலந்து கொண்டதுடன் விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண அமைச்சர்கள் விமல வீர திஸாநாயக்க, எம். எஸ். உதுமாலெப்பை, ரீ. நவரட்ணராஜா, ஜனாதிப தியின் இணைப்பாளரும் மாகாண சபை உறுப்பி னருமான பிரியந்த பத்தி ரண, மாகாண சபை உறுப் பினர் கே. எம். அப்துல் றஸாக் மற்றும் திணைக் களத் தலைவர்கள், அரச உயரதிகாரிகள் மற்றும் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இவ் விளையாட்டு விழா வில் மாவட்ட வீரர்கள் பெற்ற புள்ளிகளின் அடிப் படையில் மட்டக்களப்பு மாவட்டம் முதலாமிடத் தினை பெற்று இவ் ஆண்டு க்கான சம்பியனாகவும், இரண்டாமிடத்தினை திரு கோணமலை மாவட்ட மும், மூன்றாமிடத்தை அம் பாறை மாவட்டமும் பெற் றுக் கொண்டன.
மெய்வல்லுநர் போட்டிகளில் சம்பியனாக அம்பாறை மாவட்டமும் தெரிவாகின. இவ் விழாவில் குழுநிலைப் போட்டிகள், தனி நபர் போட்டிகள் மற்றும் மெய் வல்லுநர் போட்டி நிகழ்ச்சி ஆகியவற்றில் திறமை காட்டிய ஒவ்வொருவரும் கிண்ணம் வழங்கி கெள ரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண ஆளுநர் அட்மிரல் மொஹான் விஜய விக்ரம தனதுரையின் போது, பயங் கரவாதம் ஒழிக்கப்பட்டு சுதந்திரமான சூழ்நிலையில் கிழக்கு மாகாண மட்ட போட்டி நிகழ்ச்சிகளை சந் தோஷமாக நடத்த முடி ந்ததையிட்டு பெருமை கொள் கின்றேன்.
இம் முறை அம்பாறை மாவட்டத்தில் இடம் பெற்ற இவ் விளையாட்டு விழாவின் போது துடிப் புள்ள இளைஞர், யுவதிகள் மத்தியில் ஒற்றுமையும் திற மையும் ஒருங்கே காணப் பட்டன.
இவ் விளையாட்டு நிகழ் வின் போது மூவின சமூக வீர வீராங்கனைகள் ஒற்று மையுடன் நடந்து கொண் டதனை பார்க்கும் போது விளையாட்டின் மூலம் ஒற் றுமை வலியுறுத்தப்படு வதை அவதானிக்க முடி கிறது.
35 வது தேசிய விளை யாட்டு விழாவில் கிழக்கு மாகாண வீரர்கள் தமது திறமைகளை வெளிக் காட்டி வெற்றி பெற வேண்டுமென கேட்டுக் கொண்டார்.


»»  (மேலும்)

அணிசேரா உச்சி மாநாடு இன்று ஆரம்பம்;அணிசேரா நாடுகளின் உச்சிமாநாடு இன்று எகிப்தில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று எகிப்துக்குப் பயணமானதுடன் இன்று மாநாட்டில் சிறப்புரையொன்றையும் நிகழ்த்தவுள்ளார்.
நேற்றுக்காலை 9.30 மணியளவில் ஸ்ரீலங்கா விமான சேவைக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் எகிப்தின் கைரோ விமான நிலையத்தைச் சென்றடைந்த ஜனாதிபதிக்கு அங்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார செயலாளர் பாலித கொஹன்னே, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோரும் எகிப்துக்கான விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளதுடன் அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று விசேட உரை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.
118 நாடுகள் பங்கேற்கும் அணிசேரா நாடுகளின் 15 வது உச்சிமாநாடு 11ம் திகதி முதல் 15ம் திகதி வரை எகிப்தின் ஷாம் அல்ஷேக் நகரில் நடை பெறுகிறது. 12ம் திகதி இடம்பெற்ற வெளிவிவகார அமைச் சர்களுக்கான அமர்வில் இலங்கையின் சார்பில் வெளிவிவ கார அமைச்சர் ரோஹித போகொல்லாகம கலந்து கொண்டார்.
இன்று நடைபெறும் அணிசேரா நாடுகளின் அரச தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.
“அபிவிருத்திக்கான சமாதானமும் சர்வதேச ஒருமைப்பாடும்” என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில் எதிர்வரும் மூன்று வருட காலங்களுக்குள் அங்கத்துவ நாடுகள் எதிர்பார்க்கும் நோக்கங்கள் சம்பந்தமாகவும் அந்த இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்படவுள்ளன.
அத்துடன் 2006ம் ஆண்டு கியூபாவின் ஹவானா நகரில் இடம்பெற்ற அணிசேரா நாடுகளின் 14 வது உச்சிமாநாட்டில் மேற்கொண்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளன. நேற்று முன்தினம் இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சர்களுக்கான மாநாட்டில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம வளர்ந்து வரும் மனித சமூகத்திற்குள் பயங்கரவாதத்திற்கு இடமில்லை என தெரிவித்துள்ளார்.
லங்கையில் பயங்கரவாதத்தை ஒழிக்க மேற்கொண்ட முயற்சிகள் குறித்து விளக்கிய அவர், இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையில் முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அறிமுகப்படுத்திய மாற்றங்கள் இலங்கை பெற்றுக்கொண்டுள்ள பாரிய வெற்றிகளுக்குக் காரணமாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
1955ம் ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய - ஆபிரிக்க மாநாட்டின் போது அணிசேரா நாடுகளின் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இவ்வமைப்பில் 118 நாடுகள் அங்கம் வகிப்பதுடன் 17 கண்காணிப்பு நாடுகளும் இடம்பெறுகின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகளில் மூன்றில் இரண்டு நாடுகள் அணிசேரா நாடுகள் அமைப்பில் இடம்பெறுகின்றன. உலக சனத்தொகையில் ஐம்பது வீதத்தினர் இதில் உள்வாங்கப்படுகின்றனர்.
இதில் பெரும்பாலானவை அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

»»  (மேலும்)

7/14/2009

சுனாமியால் இடம்பெயர்ந்த 470 கடற்றொழிலாளர்களுக்குஒரு வருடத்துக்குள் 23 கோடி ரூபா செலவில் வீடுகள்

சுனாமி அனர்த்தத்தால் இடம்பெயர்ந்த மீனவர் குடும்பங்களுக்குத் தேவையான வீடமைப்பு வசதிகளைச் செய்து கொடுக்க தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களைப் போலவே அம்பாறை மாவட்ட கல்முனை பிரதேச செயலாளர் பிரிவிலும் நடைமுறைப்படுத்தி வரும் வீடமைப்புத் திட்டங்கள் வெற்றிகரமான பெறுபேறுகளைக் காட்டியுள்ளன.
விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் ‘இபாட்’ நிறுவனத்தின் உதவியுடன் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சின் வழிகாட்டுதலுடன் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை இந்த வீடமைப்பு அபிவிருத்தி வேலைத் திட்டத்தை நடைமுறைக்கிட்டுள்ளது.

சுனாமியால் இடம்பெயர்ந்துள்ள 470 குடும்பங்களுக்கு இத்திட்டத்தால் தேவையான சகல வீடுகளையும் நிர்மாணித்து ஒரு வருடத்திற்குள் பூர்த்தி செய்ய தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இந்த சகல வீடுகளையும் நிர்மாணிக்க செலவு செய்துள்ள மொத்த தொகை 23 கோடி ரூபாவாகும்.
(230 மில்லியன் ரூபா). இத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் 210 அலகுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், இதற்குச் செலவு செய்துள்ள தொகை 105 மில்லியன் ரூபாவாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் 160 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக செலவு செய்யப்பட்டுள்ள தொகை 80 மில்லியன் ரூபாவாகும். அம்பாறை மாவட்டத்தில் கல்முனைப் பிரதேசத்தில் 70 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக செலவு செய்த தொகை 35 மில்லியன்களாகும். களுத்துறை மாவட்டத்தில் 30 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக செலவிடப்பட்ட தொகை 15 மில்லியன் ரூபாவாகும்.
சுனாமி அனர்த்தத்தால் இடம்பெயர்ந்துள்ள இந்த ஒவ்வொரு மீனவ குடும்பத்திற்கும் ‘இபாட்’ நிறுவனம் 05 இலட்சம் ரூபா தொகையை கடற்றொழில் நீரியல் வள அமைச்சினூடாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கியுள்ளது.
இந்த ஒவ்வொரு வீட்டுக்கும் தேவையான நீர், மின்சாரம், உள்ளக வீதி உட்பட சகல உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுக்க தேவையான நிதியையும் ‘இபாட்’ நிறுவனம் பெற்றுக் கொடுத்துள்ளதாக கடற்றொழில் நீரியல் வள அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மீனவர் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் களுத்துறை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிஹானிமுள்ள வீடமைப்புத் திட்டம் 30 புதிய வீடுகளைக் கொண்டுள்ளதுடன், இந்த வீடுகளின் நிர்மாணம் வீட்டுக்குரியவர்களின் பூரண ஒத்துழைப்புடன் 100 நாட்களில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
இந்த வீடமைப்புத் திட்டத்திற்குத் தேவையான உள்ளக வீதிகள், நீர், மின்சாரம் போன்ற வசதிகளைச் செய்து கொடுக்கத் தேவையான நடவடிக்கைகள் கடற்றொழில் நீரியல்வள அமைச்சின் பங்களிப்புடன் களுத்துறை மாவட்டச் செயலாளரால் இத்தினங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பிஹானிமுள்ள மீனவர் வீடமைப்புத் திட்டம் இன்னும் ஒரு சில தினங்களில் கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா, வீடமைப்பு பொது வசதிகள் அமைச்சர் திருமதி பேரியல் அஷ்ரஃப், தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன ஆகியோரின் பங்குபற்றலுடன் பிரதமர் ரத்னசிரி விக்ரமநாயக்காவால் திறந்து வைக்கப்படவுள்ளதாக களுத்துறை மாவட்ட செயலாளர் ஹப்புஆரச்சி குறிப்பிட்டார்.
இந்த வீடமைப்புத் திட்டத்தை நிர்மாணித்த வெற்றிகரமான அனுபவத்தைக் காரணமாகக் கொண்டு ‘இபாட்’ அமைப்பால் கடற்றொழில் நீரியல்வள அமைச்சின் பங்களிப்புடன் பிரதேச மட்டத்தில் பல புதிய வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்த தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு முடிவுசெய்துள்ளது.
அதன்படி திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை, கல்முனைப் பகுதிகளில் மேலும் 200 வீடுகளை நிர்மாணிக்க இன்னும் ஒரு சில வாரங்களில் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அதற்காக 100 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

»»  (மேலும்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் முதலாவது இறங்குதுறை களுவன்கேணியில் அமைக்கப்பட இருக்கிறது


கிழக்கு முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அபிவிருத்தியூடான மக்கள் பணியின் ஓர் முக்கிய கட்டமாக களுவன்கேணியில் இறங்குதுறை ஒன்று அமைக்கப்படவுள்ளது. இபார்ட் நிறுவனத்தின் நிதியுதவியுடனும் யுனொப்ஸ் நிறுவனத்தின் அனுசரனையோடும் மேற்படி இறங்குதுறை அமைக்கப்படவுள்ளது. இதற்குரிய அமைவிடம் மற்றும் நிர்மானிக்கப்படும் வியூகங்கள் குறித்து ஆராயும் நோக்கில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன், ஏறாவூர் பற்று பிரதேச சரைத் தவிசாளர் ஜீவரங்கன் மற்றும் யுனொப்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள், பொறியில் நிபுனர்; குழாம் என்பன நேரில் சென்று பார்வையிட்டதோடு , வெகு விரைவில் ஆரம்பகட்ட வேலைகள் ஆரம்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நவீன வசதிகளுடன் கூடிய இவ் இறங்குதுறை ஓரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் தரித்து நிற்கக் கூடிய வகையில் அமையப் பெற இருப்பது விசேட அம்சமாகும். இதனோடு இணைந்த வகையில் எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் ஜஸ் தொழிற்சாலை என்பனவும் நிறுவப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது


»»  (மேலும்)

கரையோரப் பாதை அமைக்கும் வேலைத்திட்டங்களை நேரில் சென்று பார்வையிட்டார் கிழக்கு முதல்வர்


பாலமீன்மடு முதல் பாசிக்குடா வரையான கரையோரப் பாதை அமைக்கும் வேலைத்திட்டம் தற்போது வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவ் வேலைத்திட்டமானது எந்தளவு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்பதனை நேரில் சென்று கிழக்கு முதல்வர் சி. சந்திரகாந்தன் அவர்கள் பார்வையிட்டார். இப் பாதையினது முக்கியத்துவத்தினை உணர்ந்து இதற்குரிய ஒப்பந்தக் காரர்களை அழைத்த முதல்வர் வெகு விரைவில் இவ் வேலை திட்டங்களை முடித்துத் தரவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.இப் பாதை அமைக்கப்பட்ட பின்னர் பஸ் போக்குவரத்து மேற்கொள்வது தொடர்பாகவும் பேசப்பட்டுக் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இப் பிரதேசத்தை அண்டிய மீனவர் மக்கள் தாங்கள் பிடிக்கின்ற மீன்களை நியாய விலையில் சந்தைப் படுத்துவதற்கான ஓர் நல்ல வாய்ப்பாக அமையும். அத்தோடு வியாபாரிகள் நேரடியாக வந்து மீன்களைக் கொள்வனவு செய்து போவதற்கும் மிவும் இலகுவாக அமையும். இதனால் மட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள் பெரும் நன்மை அடைவார்கள்.

»»  (மேலும்)

வெல்லாவெளி பிரதேசத்திற்கு விஜயம் செய்த முதல்வர்


போரதீவுப்பற்று பிரதேச சபை தவிசாளர் திரு.சிறி அவர்களின் வேண்டுதலுக்கு அமைய வெல்லாவெளி பிரதேசத்திற்கு விஜயம் செய்த முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் அப்பிரதேசத்தின் புத்தி ஜீவிகள்,பொது நல அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் வெல்லாவெளி பிரதேசத்தின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் அரசியல் கட்சி உறுப்பினர்கள் ஆகியோருடன் சிறிய கலந்துரையாடல் ஒன்றினை நடத்திய முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தேவையினை விளக்கியதோடு அப்பிரதேசத்தின் அபிவிருத்தி பணிகள் தொடர்பாகவும் அப்பிரதேசத்திற்கான உடனடித்தேவைகள் குறித்தும் கேட்டறிந்ததுடன், அப்பரதேசத்தின் வரட்சி நிலையினை போக்கச் செய்கின்ற அடிப்படையில் குடிநீர் பிரச்சினைகள் மற்றும் விவசாய செய்கைகளுக்கான நீர் பிரச்சினைகளைதீர்ப்பது தொடர்பாகவும் கலந்துரையாடினார். அத்துடன் இப்பிரதேசத்தில் முக்கியமான ஆறுகளில் ஒன்றான கம்பி ஆற்றுக்கான பாலம் ஒன்றினை அமைப்பது தொடர்பாகவும், அப்பாலம் அமைக்கப்பட வேண்டிய இடத்தினையும் நேரில் சென்று பார்வையிட்டார். இவ்விஜயத்தின்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கொள்கை பரப்புச் செயலாளர் பூ.பிரசாந்தன்,தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் ஊடகப்பேச்சாளர் ஆஷாத் மௌலானா மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர


»»  (மேலும்)

7/12/2009

racism by Jaffna principal

recruited a Muslim art teacher appointed Saraswathi Tamil School in Badulla. Princiapal asked him to remove his beard and not allowed to go for Jumma prayer.Muslim teacher has shown the circular about Muslims special leave for Jumma prayer. But Principal is sending the Muslim students for Jumma prayer from the same school but not this teaher. As this is new recruit the Muslim teacher doesn't aruge much and now got transferred to another tamil national school in Passara. Now this Badulla resident has to travel one hour every day from Badulla to Passara due to this Jaffna origin Principals racial activity.
This is first school before not allowed a Muslim teacher was not allowed to wear Fardah. Now they start with Muslims beard. I donot know what is principal do if minister Keheliya Rambukwela or Douglas Devananda visit this school because they too have beard. Even Indian Prime Minister Manmohan Singh having beard.
I would like to bring this to Muslim association to investigate this and take necessary actiotions.

naasar
»»  (மேலும்)

சலுகைகளுக்காக உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியாது. –கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன்


கடந்த பல காலங்களாக யுத்தத்தினாலும் பயங்கரவாதத்தினாலும் பாதிக்கப்பட்டு இருந்த எமது மக்கள் இன்றுதான் தலை நிமிர்ந்து நடக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். இம் மக்கள் பூரண சுதந்திரத்துடன் வாழ்வதற்கு எமது நாட்டின் ஜனாதிபதி அவர்கள் நல்லதொரு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தித்தந்திருக்கின்றார். இதனை நாம் அதாவது மக்களாக இருந்தாலும் சரி அரசியல் வாதிகளாக இருந்தாலும் சரி அதனைச் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது சரியான தருணத்தில் பிழையான முடிவினை எடுக்கக் கூடாது. அதே போல் சலுகைகளுக்காக எமது உரிமைகளையும் விட்டுக் கொடுக்க முடியாது. என நேற்று (11.07.09)பேத்தாழையில் குகநேசன் கலாசார பண்டபத்தினைத் திறந்து வைத்து உரையாற்றும் போது கிழக்கு முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது மிகவும் தெளிவான ஓர் சிந்தனையோடும் ஆக்கபூர்வமான சேயற்பாடுகளோடும் அமைந்த வகையிலே சென்று கொண்டிருக்கின்றது. சிலர் பல்வேறு புரளிகளைக் ஏற்படுத்தி விட்டு புதினம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். நாம் குழம்பத் தேவையில்லை காலத்தின் தேவை கருதி வேலை செய்வோமாக இருந்தால் நாம் நிச்சயமாக வெற்றி பெறலாம் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவத்த முதல்வர் இன்று திறந்து வைக்கப் பட்டிருக்கின்ற இக்கலாசார மண்டபத்திற்கு குகநேசன் கலாசரா மண்டபம் எனப் பெயரிடப் பட்டிருக்கின்றது. மறைந்த இந்தக் குகநேசன்தான் இப்போது பெரிதாக வளர்ந்திருக்கின்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அரசியல் கட்சியினை வளர்த்தவர்களில் மிக மிக முக்கியமானவராவார். எனவேதான் அவரின் நினைவாக இப் பெயர் சூட்டப்பட்டிருக்கின்றது.
மக்களாகிய நீங்கள் அனைவரும் ஒற்றுமையோடும் தெளிவான ஒருமித்த அரசியல் சிந்தனைகளோடும் இருக்கின்ற போதும் யாரும் ஏமாற்றமுடியாது. காலங்காலமாக எமது மக்களைத் தூண்டிவிட்டுச் சென்றவர்களில் ஒருசிலர் இன்று வேடிக்கையாக தங்களது பேச்சுக்களை மாற்றிக் கொண்டு அரசியல் நடாத்த முற்படுகின்றார்கள். இவர்களை நீங்கள் இனம் கண்டு சரியான உங்களின் பதிலை வழங்க வேண்டும் எனக்கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வி;ற்குகிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அரசியல் கட்சியின் கிழக்கு மாகாண அமைப்பாளருமான பிரதீப் மாஸ்டர், நெகோட் திட்டப் பணிப்பாளர், உள்ளுராட்சி ஆணையாளர் மா. தயாபரன், உதவி உளளுராட்சி ஆணையாளர் து. சத்தியானந்தி, தமிழ் மக்கள் விடுதபை; புலிகள் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பெரும் திரளான மக்குளும் கலந்து கொண்டார்கள். கலாசார நிகழ்வுகளைப் பிரதிபலிக்கின்ற வகையிலான கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருந்தது.


»»  (மேலும்)

பேத்தாழை பொது நூலகத்திற்கான அடிக்கல் கிழக்கு முதலமைச்சர் சந்திரகாந்தனால் நடப்பட்டது.

பலநெடுங்காலமாக வாழைச்சேனைப் பிரதேசத்தில் பொதுநூலகம் ஒன்று இல்லாது இருந்தது. இதனை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்த பேத்தாழை மக்களின் வேண்டுதலுக்கமைய 350.000ரூபா பெறுமதியான நூலகம் ஒன்றிற்கான அடிக்கல் நேற்று (11.07.09) பேத்தாழையில் நாட்டப்பட்டது. கிழக்கு மாகாண முதலமைச்சர் சி; சந்திரகாந்தன் தனது பொது அபிவிருத்தித் திட்டத்தின் ஓர் அங்கமாக அனைத்து மக்களும் பயன் பெறக் கூடியதும் எதிர்காலத்தின் தேவை கருதியும் மேற்படி நூலகமானது இப் பிரதேசத்தில் அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இப் பிரதேசத்தில் கல்வி கற்கின்ற பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் எனப் பலர் தங்களது ஓய்வு நேரங்களை வீணடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் பொன்னான நேரத்தினை வாசிப்பிற்காக ஒதுக்குவதன் மூலம் பூரண அறிவைப் பெறலாம். அத்தோடு சமூகத்திற்கு தேவையான பல விடயங்களையும் கற்றுக்கொள்ளலாம்.
எமது மட்டக்களப்பு மாவட்டம் கல்லியில் மிகவும் பின்தங்கிக் காணப்படுகின்றது. அதற்கு முக்கிய காரணமாக வாசிப்பின்மையும் ஓர் காரணமாக அமையலாம். எனவே எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகன் ஏற்படாத வண்ணம் இந்நூலகம் பயன் தரும். இந் நிகழ்வில் உள்ளூராட்சி ஆணையாளர் மா.தயாபரன், உதவி உள்ளூராட்சி ஆணையாளர் து. சத்தியானந்தி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டார்கள்.


»»  (மேலும்)