9/29/2009

ஜேர்மன் தேர்தலில் ஏஞ்சலா மேர்கல் வெற்றி


ஜேர்மனில் நடைபெற்ற பாரா ளுமன்றத் தேர்தலில் அதிபர் ஏஞ் சலா மேர்கலின் கட்சி அதிக ஆசனங் களைக் கைப்பற்றியது. 622 பாராளு மன்ற ஆசனங்களில் ஏஞ்சலா மேற்கலின் கிறிஸ்தவக் கட்சி 332 ஆசனங்களை வென்றுள்ளது.
55 வயதுடைய ஏஞ்சலா மேர்கல் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார். ஏனைய கட்சிகளுடன் கூட்டரசாங்கம் அமைப்பதற்கான முயற்சிகளில் அவரின் கிஸ்தவக் கட்சி முக்கியஸ்தர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஏஞ்சலா மேர்கலின் கட்சி 48 வீதமான ஆசனங்களை வென்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.
ஆப்கானிஸ்தானிலுள்ள ஜேர்மன் படைகள் எதிர்கொள்ளும் சங்கடமான சூழல்களால் அதிபர் ஏஞ்சலா மேர்கலின் அரசாங்கம் கடும் விமர்சனங்களுக்குள்ளான போதும் தேர்தலில் எதிர்பார்த்ததைவிட கூடுதலான ஆசனங்களை வென்று ள்ளது.
தேர்தலின் மொத்த முடிவுகள் வெளியான பின்னர் ஏனைய கட்சிகளுடன் கூட்டுச் சேர்வது பற்றி இறுதி முடிவு எடுக்கப் படவுள்ளது.
ஏற்கனவே அரசாங்கத்தில் அங்கம் வகித்த கட்சிகளுடனே மீண்டும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.»»  (மேலும்)

அம்பாறையில் நடந்தது என்ன? அலசுகிறது நவமணி.


அம்பாறை மாவட்டத்தில் வளர்ந்து வரும் தமிழ் முஸ்லிம் உறவைச் சீர்குலைப்பதற்காக இனக்கலவரமொன்றைத் தூண்டி விடுவதற்கான மறைமுகமான சதியொன்று இடம்பெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போராளிகளாக இருந்து ஜனநாயக நீரோட்டத்துக்கு வந்துள்ள தேசிய அரசியல் கட்சி ஒன்றில் அங்கம் வகிக்கும் ஒரு குழுவினரின் கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான சம்பவங்களே இச்சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்பும் வகையில் செயற்பட்டு வருவதனை விரும்பாத சக்திகள் அவரை அம்பாறை மாவட்டத்துக்கு வரக்கூடாதென்றும் அவரது கட்சி அலுவலகங்கள் திறக்கப்படக்கூடாது எனவும் கூறி மாவட்டத்தில் பேரணி ஹர்த்தால்களை நடத்தி மாவட்டத்தில் குழப்ப நிலையை உருவாக்கி வருகின்றனர். அம்பாறை மாவட்டத்தைச் சாராதவர்கள் தலைமைத்துவம் வழங்கி நடத்தும் இந்தச் செயற்பாடுகளில் முக்கியமாக கல்முனை நகரின் ஹிஜ்ரா வீதியை பாரதி வீதி என மாற்றியுள்ளதோடு பெரிய நீலாவணையில் போடப்பட்டிருந்த கல்முனை வரவேற்கின்றது என்ற விளம்பரப் பலகையும் இவர்களால் சில தினங்களுக்கு முன் உடைத்தெறியப்பட்டுள்ளது. (கருணா அவர்கள் முன் நின்று இதனை அகற்றினார்-மீன்மகள்) ஹிஜ்ரா வீதி பாரதி வீதி என மாற்றப்பட்டது தொடர்பான கல்முனை மேயர் எம்.எச்.எம். ஹரிஸிடம் நவமணி வினவியபோது இது தொடர்பாக மாநகர சபையில் எத்தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் இது தொடர்பாக பொலிசில் தான் முறைப்பாடு செய்திருப்பதாகவும் கூறினார்.
பெரிய நீலாவணையில் போடப்பட்டிருந்த வரவேற்பு பலகை உடைக்கப்பட்டது தொடர்பாகவும் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளதாக மேயர் ஹரிஸ் தெரிவித்தார்.கல்முனை மாநகர சபை ஒருபோதும் தமிழ் மக்களுக்கு பாரபட்சம் காட்டிச் செயற்பட்டதில்லை எனச் சுட்டிக் காட்டிய அவர் கல்முனையில் வாழும் 30சதவீதமான தமிழர்களுக்கு அவர்களது விகிதாசாரத்திற்கேற்ப நிதி மற்றும் வளங்கள் ஒதுக்கப்பட்டு வருவதாகவும் இதற்கு மாநகர சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் உறுப்பினர்கள் சாட்சி பகர்வர் என்றும் கூறினார். இரு சமூகங்களும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டிய நிலையில் பிரிவினையை உருவாக்க முயற்சிப்பது ஏன் என்று புரியாததாகவுள்ளதாகவும் அவர் கூறினார். இக்குழுவின் இம் மாவட்டத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளை பலவந்தமாக மூடச்செய்வதுடன் எழுச்சிக் கூட்டமென்ற பெயரில் முஸ்லிம்களுக்கெதிரான நச்சு விதைகளை விதைத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவித்து வருகின்றன.
அவ்வாறான மிக முக்கிய கூட்டமொன்று கடந்த 17ம் திகதி நாவிதன் வெளி பிரதேசத்தில் உள்ள விவேகானந்தா மகாவித்தியாலயத்தில் நடத்தப்பட்டதாகவும் இதில் அரச உயர் அதிகாரிகள் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டு உரையாற்ற வைக்கப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
30 வருடகால யுத்தத்தின் பின்னர் கிழக்கு உதயம் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் பிரதான வீதிகள் கார்பட் இடப்பட்டு வீதி அமைப்பு முற்றாக மாற்றியமைக்கப்படுகிறது. இந்நிலையில் இக் கூட்டம் நடாத்திய ஹர்தால் காரணமாக வீதிகளில் டயர் போட்டு எரிக்கப்பட்டமையால் வீதிகள் யாவும் சேதமாக்கப்பட்டுள்ளன.மக்களின் விருப்பத்திற்கு மாறாகவே அவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபடுகின்றனர் என அறிய முடிகிறது. அதன் காரணமாக வீதியால் செல்லும் முஸ்லிம் மக்கள் அச்சத்துடன் செல்லவேண்டியுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்று வரும் இவ் வன்முறைகள் தொடர்பாக தமிழ் புத்தி ஜீவிகள் கருத்து தெரிவிக்கையில் முப்பது வருடமாக இடம்பெற்ற வன்முறைகள், இனமுறண்பாடுகள், சந்தேகப்பார்வைகள் என்பவற்றில் இருந்து மக்கள் விடுபட்டு சந்தோசமாக இருந்து வருகையில் அரசியல் இலாபத்திற்காகவும் அதிகார மோகத்திற்காகவும் இனங்களை பிரித்துவைக்கும் நாடகமொன்று அரங்கேற்றப்படுகிறது.குpழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் மிகவும் நல்லவர். ஆவரிடம் இன ரீதியான சிந்தனை இல்லை அவ்வாறான ஒருவர் கிழக்கில் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இணைந்து மாகாண சபைக்கான அதிகாரங்களை பெற்றுக் கொள்ள போராடுகின்றார். ஆனால், அவரது முனனைய சகபாடிகள் அவரை குறை கண்டு தூசிக்கின்றனர். இதில் என்ன நியாயம் இருக்கின்றது.»»  (மேலும்)

கிழக்கு உள்ளூர் அலுவலர்களின் ஆற்றலைக் கட்டியெழுப்ப ஐக்கிய அமெரிக்கா உதவி

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி (USAID), கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளூர் அலுவலர்களின் ஆற்றலைப் பலப்படுத்தும் பொருட்டு, இரண்டு பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு அனுசரணை வழங்கியது.
சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸியின் ஆதரவுடன் நடத்தப்பட்ட, இரண்டு வதிவிட செயலமர்வுகள், கிழக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்களுள் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவற்றைச் சென்றடைந்தன.
உள்ளூர்ச் செயற் திட்டங்களை மேலும் சிறப்பாகத் திட்டமிடுவதற்கும், அவற்றுக்கான வரவு செலவுத் திட்டங்களைத் தயாரிப்பதற்கும், முன்னுரிமைகளை முடிவு செய்வதற்கும் வேண்டிய திறமைகளை இச்செயலமர்வுகள் அலுவலர்களுக்கு வழங்கின.
சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸியின் பணிப்பாளர் ரெபேக்கா கோன்,
“கிழக்கு மாகாணத்தில், சிக்கலான அபிவிருத்தி நடவடிக்கைகளை முகாமைத்துவம் செய்வது சம்பந்தப்பட்ட அறைகூவல்களைச் சந்திப்பதற்கு, உள்ளூர் தலைவர்கள் தயாராக இருக்க வேண்டியது அவசியம்.
சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி வழங்கிய உதவி, தெரிவு செய்யப்பட்ட 100 அலுவலர்களுக்கும் 36 பிரதேசச் சபை அலுவலர்களுக்கும் ஒரு நகர சபை சேர்ந்தவருக்கும் வழங்கப்பட்டமை பற்றி நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம்.
இவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியின் மூலம் உள்ளூர் சமுதாயங்களுக்கு மேம்பட்ட சேவைகள் வழங்கப்படுமென்றும் வரையறைக்குட்பட்ட வளங்களை மேலும் சிறப்பாக முகாமைத்துவம் செய்வதன் பயனாக சிறந்த அபிவிருத்திப் பெறுபேறுகள் இடம்பெறும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.
கிழக்கு மாகாண உள்ளூராட்சிச் சபைகளின் ஆணையாளர் எம். உதயகுமாரும், உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சின் மேலதிகச் செயலாளர் டி. பி. ஹெட்டியாரச்சியும் இச்செயலமர்வுகளில் பங்குபற்றினர்.
நாமல் ஓயா பிரதேச சபையின் செயலாளர் எம். ரணபாகு,
“தமிழ் - சிங்களம் பேசும் உள்ளூர் அரசாங்க அலுவலர்கள் பலர், இப்பயிற்சிகளில் செயலார்வத்துடன் பங்குபற்றி, நிலவும் பிரச்சினைகள் பற்றியும் அவற்றின் சிக்கல் தன்மைகள் பற்றியும் சிந்தித்தனர் என்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
இச்செயலமர்வு மூலமாக நாம் பெற்ற அறிவையும் அனுபவத்தையும், தற்பொழுது பிரதேச சபைகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தலாம். அனைத்துச் செயலமர்வும் பயன்மிக்கவையாக அமைந்திருந்தன” என்றார்.
சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸியினூடாக, அமெரிக்க மக்கள், ஏறத்தாழ 50 வருடங்களாக, உலகம் முழுவதிலுமுள்ள, அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் அபிவிருத்திக்கான உதவிகளையும் மனிதாபிமான உதவிகளையும் வழங்கி வந்துள்ளார்கள்.
இலங்கை வாழ் மக்கள் அனைவரினதும் நன்மைக்காக, 1946 ஆம் ஆண்டு முதல், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி, இலங்கை, ஏறத்தாழ இரண்டு பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளது

»»  (மேலும்)

9/28/2009

இலங்கை அகதிகள் நிரந்தரமாகத் தங்க உதவி: மத்திய அரசுக்கு கருணாநிதி வேண்டுகோள்


காஞ்சிபுரம், செப்.26: தமிழகத்தில் இலங்கைத் தமிழ் அகதிகள் சுதந்திரமாகவும், நிரந்தரமாகவும் தங்குவதற்கும், வாழ்வாதாரத்துக்குமான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து தர வேண்டும் என தமிழக முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் திமுக முப்பெரும் விழா நிகழ்ச்சியில் இதுகுறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விழாவில நிறைவேற்றப்பட்ட 8 தீர்மானங்கள்: இலங்கைத் தமிழ் அகதிகள் சுதந்திரமாக தங்குவதற்கு வழி செய்ய வேண்டும். தற்போது தமிழகத்தில் 115 முகாம்களில் மொத்தம் 73 ஆயிரத்து 572 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகத் தங்கியுள்ளனர். மேலும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்காமல் வெளியே தங்கியுள்ளனர். அவர்கள் நிரந்தரமாகத் தங்குவதற்கும், வாழ்வாதாரத்துக்குமான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து தர வேண்டும். இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் விரைவில் இலங்கையில் அவர்களது வீடுகளுக்கு திரும்புவதுதான் தாற்காலிக முகாம்களில் அவர்கள் அனுபவித்து வரும் துயரங்களைக் களையும் ஒரே தீர்வாகும் என்று இலங்கை உணர்த்திடும் வகையில் மத்திய அரசு தேவையான அழுத்தத்தைக் கொடுத்திட வேண்டும். இலங்கைக் கடற்படையினர் நடத்தும் அத்துமீறல்கள், தாக்குதல்கள், வன்முறைகளால் தமிழக மீனவர்கள் துன்பத்துக்கு ஆளாவதற்கு நிரந்தரமாக முடிவு ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கச்சத்தீவை மீட்க...: கச்சத்தீவுக்கு தமிழக மீனவர்கள் தடை ஏதுமின்றி செல்வதற்கும் அதையொட்டிய இடங்களில் இழந்த உரிமையை மீட்டு எடுப்பதற்கும் கச்சத்தீவினை இந்தியாவுக்கே திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசு உரிய சட்ட நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும். தமிழ்மொழியை ஆட்சி மொழிகளில் ஒன்றாக்க வேண்டும். இந்தி பேசாத மாநில மக்களின் உரிமைகள் நிரந்தரமாக காப்பாற்றப்பட அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆட்சி மொழிகள் அனைத்தும் மத்திய ஆட்சி மொழியாக ஆக்கப்படவேண்டும். இந்தியாவில் அனைத்து மாநில மொழிகளையும் மத்திய ஆட்சி மொழிகளாக ஆக்குவதில் தாமதம் ஏற்படுமேயானல் முதல் கட்டமாக திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழியும், கலை இலக்கியப் பண்பாடும், வளமும் நிறைந்த செம்மொழியுமான தமிழ்மொழியை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். மாநிலத்தில் சுயாட்சியும், மத்திய கூட்டாட்சியும் ஆக்கப்பூர்வமாக உருவாகி கூட்டாட்சி அமைப்பு வலுப்பெற இந்திய அரசு அமைப்பு சட்டத்தில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும். இந்திய நாடாளுமன்றத்திலும், மாநில சட்டப் பேரவைகளிலும் மகளிருக்கு 33 சதவீத தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் சட்டத் திருத்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். சேது சமுத்திரத் திட்டத்தில் நிலுவையில் உள்ள எஞ்சிய பணிகளை நிறைவேற்ற வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

»»  (மேலும்)

மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம் – எஸ்.எம்.எம் பஷீர் (பாகம் 10)


1988 சித்திரையில் கிட்டு –பதியுதீன் சென்னைச் சந்திப்பின் குழவினரின் பின்னரும் முன்னருமான நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கன. அவற்றில் குறிப்பாக 1987 இறுதிப்பகுதியும், 1988 ன் முற்பகுதியும் புலிகளின் நடவடிக்கைகள் முஸ்லிம்களின் இருத்தலை கேள்விக்கு உட்படுத்தின. 1987 நவம்பரில் ஓட்டமாவடியிலும் 30 மார்கழி 1987ல் காத்தான்குடியிலும் முறையே 9 ம் 30 மாக 39 இளைஞர்கள் ஊhகாவல்படையினர் எனக்கூறப்பட்ட இளைஞர்களை ஜிஹாத் உறுப்பினர்கள் எனக்கூறி புலிகள் தாங்கள்செய்த படுகொலைகளையும் அவர்கள்மீது சுமத்தி அவர்களை சுட்டுக் கொன்றனர். காத்தான்குடியில் (4) அப்பாவித் தமிழர்களையும் தங்களது முஸ்லிம் புலி உறுப்பினர்களை கொன்றதாகவும் குற்றஞசாட்டியது தவிர தாங்களே 1987 செப்டம்பர் 3 ந் திகதி சுட்டுக்கொன்ற மூதூரின் உதவி அரச அதிபர் ஹபீப் முகமட் அவர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தனிததனியான நிர்வாகத்தின்கீழேயே செயற்படவேண்டுமென்னும் கருத்தினை முன்வைத்த மூதூர் பா.உ வான ஏ.எல் அப்துல் மஜீத் அவர்களையும் 1987 நவம்பர் 13 ந் திகதி புலிகள சுட்டுக்கொன்றனர்.
இந்தத் தாக்குதலின்பின்னர் இதுதொடர்பில் புலிகள் பத்திரிகை அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தனர். அந்த அறிக்கையில் மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி அவர்களின் கொலையை நியாயப்படுத்தியதுடன் மேலும் அந்த அறிக்கையில் புளொட்(Pடுழுவுநு) ரொலோ (வுநுடுழு) , ஈ.பி.ஆர்.எல்.எப் (நுPசுடுகு) ஆகிய இயக்கங்களையும் காட்டுமிராண்டித்தனமான செயல்களில் தமிழ்பேசும் முஸ்லிம, மக்களுடன் ஈடுபடுவதாகவும் துரொகத்தனமான செயல்களில் ஈடுபட்டு தங்களது சுயதேவைகளைப் ப+ர்த்திசெய்யமக்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்துவதாகவும் எனவே தாங்கள் அவ்வியக்கங்களை தடைசெய்வதாகவும் குறிப்பிட்டிருந்தனர். மேலும் அந்த அறிக்கையில் அதிகமாக முஸ்லிம் இளைஞர்கள் தங்களுடன் சேர்ந்து இயங்குவதாகவும் அவர்களின் வேண்டுகோளிலும், வற்புறுத்தலிலும். தீவிர பங்கேற்பிலுமே இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இவர்கள் முஸ்லிம் மக்களின் வெறுப்பினையும், அதிருப்தியினையும் சம்பாதித்தவர்கள் என்றும் ஆடுகள் நனையும்போது ஒநாய்கள் அழுகின்ற கதைபோல் அறிக்கை விட்டனர்.
கிழக்கில் பரவலாக முஸ்லிம்கள்மீது பல தாக்குதல்கள் நடாத்தப்பட்டபோதும் சமூக ஈடுபாடுகொண்ட முஸ்லிம் நபர்கள் வேட்டையாடப்பட்டபோதும் வடமாகாணத்திலும், யாழ்பாணத்தில் பிறந்த இரண்டாவது அரச அதிபரான மன்னார் மாவட்ட அரச அதிபரான எம்.எம் மக்பூல் ஜனவரி மாதம் 1988 ம் ஆண்டு புலிகளின் விசாரணைக்குப் பின்னர் சிவில் நிர்வாகத்தினை அவர் நடாத்துவதனை வன்மையாக கண்டித்து அதிலும் குறிப்பாக இந்தியாவிலிருந்து திரும்பிய அகதிகளை அவர் மீள்குடியேற்றம் செய்வதனை நிறுத்துமாறு எச்சரித்து விடப்பட்ட சில நாட்களின் பின்னா புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். சென்னை சென்ற முஸ்லிம் குழுவினர் இவையெல்லாம் குறித்து வாய் திறக்கவில்லை. மாறாக கல்முனையில் கொல்லப்பட்ட 17 பேரும் புலிகளால் கொல்லப்படவில்லை என்று மட்டும் சான்றுதல் வழங்கினர். திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்ற முக்கிய இரு பிரமுகர்களின் படுகொலைபற்றி இவர்கள் வாய்திறக்கவில்லை. இந்த சென்னை விஜயத்திற்கு முன்னர் திரு பதியுதீன் அவர்கள் ஐலண்ட்; பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறான சந்தாப்பத்தில் இலங்கை –இந்திய ஒப்பந்தத்தினை; முஸ்லிம்மக்கள் இயல்பாகவே நிராகரிப்பார்கள் என்றும் ஆனால் அவர்கள் கிழக்கிலே வாழத்தான் வேண்டுமென்ற கிழக்கிலுள்ள முஸ்லிம்கள் சிலவருடங்களாக நெருக்கடியான காலகட்டத்தில் வாழ்வதாகவும் குறிப்பிட்டிருந்தாh.
வடகிழக்கு இணைந்த இலங்கை –இந்திய ஒப்பந்தத்தின் பின்னணியில் எவ்வாறான அரசியல் அபிலாசைகளை அடைந்துகொள்வதே முஸ்லிம்களின் கேள்வியாகுமெனவும் குறிப்பிட்டிருந்தார். சென்னை சென்ற குழுவினரின் அரசியல் அடையாளமாக விளங்கிய முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியும், புலியும் எவ்வாறான நிலைப்பாட்டில் இருந்தார்கள் என்பதுபற்றி பிரபல பத்திரிகையாளரான தராகி எனப்படும் சிவராம் எழுதுகையில் ஐPமுகு னாலும் ஈ.பி.ஆர்.எல்.எப்பினாலும் கிழக்கில் தமிழ் பிரதேசங்களில் அதிகபட்ச கட்டுப்பாடுகள் ஏற்பட்டதனால் தங்களுடைய (புலிகள்) இருத்தலுக்கு பாரிய அளவில் முஸ்லிம்கள்மீது தங்கியிருக்கவேண்டிய நிலையை ஏற்பட்டது. இந்தச் சூழ்நிலையில்தான் ஒரு செயற்பாட்டு உறவினை புலிகள் மு.ஐ.முயினருடன் ஏற்படுத்தினார்கள். புலிகளைப் பொறுத்தவரை இந்திய அனுசரணை கட்சியாகவே சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸினை கருதியதுடன் முஸ்லிம்களுக்காக (இஸ்லாமியத் தமிழர்கள); எனத் தாங்கள் குறிப்பிடும் வடகிழக்கில் வாழும் முஸ்லிம்களுக்கென தனித்தொரு ஸ்தாபனத்தினை கட்டியெழுப்பும் செயற்பாடாகவே மு.ஐ.வி.முன்னணியினரை மு.காங்கிரஸினருக்கு மாற்றாக புலிகள் திட்டமிட்டிருக்கலாமென தோன்றுகின்றது என்று குறிப்பிட்டிருந்தார்.
ஐ.பி.கே வெளியேற்றம் குறித்த கோரிக்கை முஸ்லிம் மக்களுடாகவும் வெளிப்படவேண்டுமென்பதில் புலிகள் அக்கiறாக இருந்தனர். 13 ந் திகதி ஜனவரி 1988ல் பிரபாகரன் இந்திய சமாதானப்படை தங்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவேண்டுமெனவும் சமாதானப் பேச்சுவாhத்தை தொடரவேண்டுமெனவும் இந்திய அரசுக்கு நேரடியாக வேண்டுகோள் விடுத்திருந்தார். இவ்வாறான வேண்டுதலையே த.வி.கூட்டணியின் செயலதிபரான அமிர்தலிங்கம் அவர்களும் இந்திய அரசுக்கு விடுத்தார். இந்தக் கால கட்டத்தில்தான் புலிகளுக்கும் இந்தியாவிற்குமிடையிலான உறவுகள் அதிதீவிரமான நெருக்கடிக்குள்ளானது. 1037 ஐPமுகு படையினர் புலிகளால் கொல்லப்பட்டதாக புலிகளினால் உரிமை கோரப்பட்டது. இவ்விழப்புக்கள் குறித்து அன்றைய ஜனாதிபதியான ஜெயவர்தனா அவர்கள் வடகிழக்கில் பயங்கரவாதம் அழித்தொழிக்கப்படுவதில் உள்ள நெருக்:கடியான சூழ்நிலையில் ஐ.பி.கே தொடர்ந்து ஈடுபட்டு வருவதனை பாராட்டியும், இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திட்டதன் பின்னர் தமிழ்,சிங்கள, முஸ்லிம் படையினர் ஒருவரும் சாகவில்லை எனவும் அவர்களின் இடத்தினை இந்தியப் படையினர் எடுத்துவிட்டாhகள் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதில் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் 1987 இறுதிப்பகுதியிலும், 1988 ஆரம்பகால பகுதியிலும் இந்தியாவில் வீட்டுக்காவலில் தடுத்து வைக்கப்பட்ட சூழ்நிலையில் வாழ்ந்த கிட்டு மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் மரணச்சடங்கில் கலந்து கொள்வதற்கும் மறுக்கப்பட்டிருந்hர்.; 1988 சித்திரை முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியினருடனான பேச்சுவாhத்தையின்போது வெளிப்படையாக செயற்படக்கூடியதாக இருந்ததுடன் 1988 பிற்பகுதியில் இந்திய தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் சிறையிலிடப்பட்டார். அக்கால கட்டத்தில் இந்தியப் பிரதமர் திரு ராஜீவ் காந்தி அவர்களுக்கு சென்னை மத்திய சிறைச்சாலையிலிருந்து இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தம்மை விடுதலை செய்யுமாறும் சில வேண்டுகோள்களை முன்வைத்து கடிதம் வரைந்திருந்தார்.—
தொடரும்

»»  (மேலும்)

கிழக்கில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு கிழக்கில் வீடமைப்புத் திட்டம் : வீ. அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர்

கிழக்கில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு வீடமைப்புத் திட்டமொன்று அமைக்கப்படவுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஏ.ஐ. விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மஹிந்த சிந்தனையின் கீழ் இந்த வீடமைப்புத் திட்டம் அமைக்கப்படவுள்ளது. கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இந்த திட்டத்திற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்திற்கு முதல் கட்டமாக மூன்று கோடியே 80 லட்சம் ரூபா செலவு செய்யப்படவுள்ளது.
நாடு முழுவதும் ஐயாயிரம் குடும்பங்கள் வறுமைக் கோட்டின் கீழ் குடியிருப்பு வசதிகள் இல்லாதுள்ளனர். இவர்களுக்குக் குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்

»»  (மேலும்)

அமெரிக்கா உட்பட சில நாடுகள் இலங்கையை போர்க் குற்ற நாடாக பிரகடனப்படுத்த முயற்சி - விமல் வீரவன்ச எம்.பி. குற்றச்சாட்டு

சர்வதேச மட்டத்தில் இலங்கையை ஒரு போர்க் குற்ற நாடாக பிரகடனப்படுத்தி விட வேண்டும் என்பதில் புலிகளுக்கு ஆதரவான அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
புலிகள் அழிக்கப்பட்டு விட்டனர் என்ற வேதனையிலே இவ்வாறு இந்த நாடுகள் செயற்படுகின்றன என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச குற்றம் சாட்டினார்.
விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுள்ள போதிலும் அந்த அமைப்பின் நோக்கங்களை நிறைவேற்றத் துடிக்கும் சர்வதேச சக்திகளின் சதித் திட்டங்களை முறியடிப்பதற்கு அனைவரும் அணி திரள வேண்டும். அத்துடன் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றுக்கு எமது கட்சி தயாராகி வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
கட்சித் தலைமையகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே விமல் வீரவங்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்

»»  (மேலும்)

கல்லடிக் கரையில் திரண்டு ஒரு இலட்சம் மக்கள் குதுகலிப்பு.எவ்வித பாதுகாப்புக் கெடுபிடிகளும் இல்லாது மட்டக்களப்பில் கல்லடிக் கரையில் நேற்று (26-09-2009) திரண்ட ஒரு இலட்சம் மக்கள் கிழக்கின் முழக்கம் களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்டு தமது இராப்பொழுதைக்கழித்து குதுகலித்தனர்;. கடந்த சுமார் 30 வருடங்களின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் இவ்வாறானதோர் நிகழ்வு இடம்பெற்றிருப்பது சிறப்பம்சமாகும். கிழக்கு மாகாணம் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து விடுபட்டு மக்கள் மனங்களில் புதிய சிந்தனையில் தோற்றம் பெறுகின்ற இந்நேரத்தில் இன ஐக்கியங்களுடன் கூடிய நல்லுறவு களியாட்ட கலை நிகழ்ச்சிகளை நடடாத்தி மக்களின் மகிழ்ச்சிப் பெருக்கை ஏற்படுத்துவதும் கடந்த கால கசப்பான உணர்வுகளை மறக்க வைப்பதுமே இந் நிகழ்ச்சியின் நோக்கங்களாகும்.
அதனடிப்படையில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட சிங்கள் முஸ்லிம் மக்கள் மட்டக்களப்பு வாழ் மக்களுடன் ஒன்றித்து நீணட காலத்தின் பின்னர் அளவலாவும் வாய்ப்புகளும் கிடைத்தன. யுத்த பீதியிலும் மரன ஓலத்திலும் இறுகிக்கிடந்த மனித மனங்கள் இந்நிகழ்வின் ஊடாக விடுதலை அடைந்து மகிழ்ச்சியில் திளைத்தனர்.
காலையில் ஆரம்பித்த நீச்சலோட்டத்துடன் கலந்த மரதன் ஓட்டம் மட்டக்களப்பு நகர் காந்தி சிலையடியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு கல்லடி கடற்கரையில் நிறைவடைந்தது. மட்டக்களப்பு வாவியைக் கடந்து நீச்சல் அடித்து ஓடிச்சென்ற மரதன் ஓட்டம் பார்ப்போர் மனதை கொள்ளைகொண்டது. கல்லடிக் கடலோரத்தில் இடம்பெற்ற படகுச் சவாரி ஒரு புறமும் கடற்கரையில் இடம்பெற்ற உதைபந்தாட்டப்போட்டி இன்னொரு புறமுமாக பகல்வேளையில் நிகழ்வுகள் களைகட்டியது. மாலை பொழுதிலிருந்து ஆரம்பித்து கலை நிகழ்ச்சிகளும் வானவேடிக்கைகளும் இரவு ஒரு மணிவரை நீடித்தது. இசைக்கச்சேரி நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆண் பெண் குழந்தைகள் என்ற எவ்வித வேறுபாடுகளும் இன்றி ஆடிப்பாடி மகிழ்ந்தனர். பாதுகாப்பு சோதனைகள் ஏதுமின்றி அங்கு வந்திருந்த ஒரு இலட்சம் மக்களுடன் கிழக்கு மாகாண முதலமைச்சரும் மற்றைய அரசியல் முக்கியஸ்த்தர்களும் அளவளாவி மக்களோடு மக்களாக இருந்து நிகழ்ச்சிகளை கண்டு கழித்தனர். இறுதியில் போட்டிகளில் கலந்து கொண்டு முதல் நிலை வகித்த வீரர்களுக்கு இருபத்தையாயிரம் ரூபாய் ரொக்கமும் இந்தியா சென்று வருவதற்கான விமானச் சீட்டுக்களும் பரிசளிக்கப்பட்டன. பெண் வீராங்கனைகளின் வரிசையில் பரிசு பெற்ற அனைவரும் மட்- ஜீவயோதி இல்ல மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் மனதில் கடந்த கால கசப்புணர்வுகளை மறக்கச் செய்து மகிழ்ச்சிகளை விதைத்து புதிய உலகை நோக்கி எமது மக்களை அழைத்துச் செல்ல கிழக்கில் முழங்கிய இந்;த நிகழ்வை ஏற்பாடு செய்த சிறி ரிவி நிறுவனத்தினரும் கிழக்கு மாகாண சபையும் ஏற்பாடு செய்திருந்தனர்.
»»  (மேலும்)

9/26/2009

தாய்நாட்டுக்கு துரோகமிழைத்தால் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன்


“எனக்கெதிரான அவதூறுகளை நான் பொறுத்துக் கொள்ள முடியும். எனினும் நாட்டுக்கு எதிராகச் செய ற்படும் எவருக்கெதிராகவும் உரிய நடவடிக்கை எடுப்ப தில் நான் பின்நிற்கப்போவதில்லை” என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பிறந்த நாட்டுக்குத் துரோகம் செய்வதற்கான உரிமை எவருக்கும் கிடையாதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்ட மகளிர் அமைப்புகள் கலந்துகொண்ட நிகழ்வொன்று நேற்று மெத முலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை யில் நடைபெற்றது.
அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, சமல் ராஜபக்ஷ, ஜீ. எல். பீரிஸ், சுமேதா ஜீ ஜயசேன, பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அலுத்கமகே உட்பட அமைச்சர்கள், மகளிர் அமைப்புகளின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட இந்நிகழ் வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மூன்றரை இலட்சம் வாக்குகளை வழங்கி என்னை ஜனாதிபதியாக்கியதில் பெரும் பங்களிப்பு தென் மாகாண மக்களுடையது. ஏனைய பகுதிகளில் எமக்குக் கிடைத்த வாக்குகளோடு ஒப்பிடும் போது நீங்கள் வழங்கிய ஆதரவு பெருமைப்படக்கூடியது. முப்பது வருடகால இந்த நாட்டின் சாபமாயமைந்த பயங்கரவாதத்தை ஒழித்து துண்டாடப்பட்டிருந்த நாட்டை ஒன்றிணைக்கவே மக்கள் எனக்கு ஆணை வழங்கினர்.
அம்பாந்தோட்டை, மாத்தறை என நான் என்றும் பிரித்துப் பார்த்ததில்லை. இரண்டும் எனக்கு ஒரு மாவட் டத்தைப்போன்றது. என்னைப் பெற்ற எனது தாய் மாத் தறையிலிருந்து வந்தவரே. இந்த நாட்டை மீட்க தமது உயிரைப் பணயம் வைத்த படைவீரர்கள் மட்டுமன்றி அவர்களது பெற்றோரும், உறவுகளும் எமது கெளரவத்திற் குரியவர்களே.
நாம் இந்த நாட்டை எளிதாக மீட்டெடுக்கவில்லை. உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் இருந்து பல்வேறு தடைகளும் அழுத்தங்களும் வந்தன. பலர் எமது காலை வாரமுயன்றனர். இத்தகைய தடைகளுக்கு மத்தியிலேயே நாம் இந்த நாட்டை மீட்க முடிந்தது.
இதற்கான நடவடிக்கையில் எமது படையினர் 26,000 பேர் பலியாகினர். மேலும் 5,000 ற்கு மேற்பட்டோர் உடல் ஊனமுற்றனர். அத்தகைய படையினருக்கு எதிராக குற்றஞ் சுமத்தி அவர்களை சர்வதேச இராணுவ நீதிமன் றத்திற்குக் கொண்டு செல்வதற்கு நம்மவர்களே முயற்சிக் கின்றனர்.
சர்வதேச இராணுவ நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப் பிக்க சாட்சியங்களைச் சேகரிக்கும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உலகில் மிகக் கொடூரமான பயங்கரவாத இயக்கத்தை இல்லாதொழித்த எம் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர்.
ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இடம்பெற்றவைகளைப் பற்றி கவனத்திற்கொள்ளவோ விசாரணைக்குழு அமைக்கவோ முன்வரவில்லை. கொடூர பயங்கரவாதத்தை ஒழித்த எம்மீது குற்றஞ்சுமத்த வருகின்றனர்.
மக்களின் வாக்குகளைப் பெற்றுப் பாராளுமன்றம் சென்றவர்களே இன்று நாட்டை மீட்ட படையினருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் செல்ல தலைப்பட்டுள்ளனர்.
சுனாமி முதல் எனக்கெதிராக அவதூறுகளை எதிர்க்கட்சி மேற்கொண்டது.
அதனை நான் பொருட்படுத்தவில்லை. எனினும் தாய்நாட்டுக்கு எதிராக துரோகமிழைத்தால் அதற்குப் பதிலடி கொடுக்க நான் தயங்கமாட்டேன்.
நாட்டில் தற்போது பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
கொழும்புக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த அபிவிருத்தி இன்று கிராமிய ரீதியில் சகல பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அரச சேவையில் தற்போது 12 இலட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கான சம்பளம், மக்களுக்கான நிவாரணம், விவசாயிகளுக்கான மானியம், அத்தியாவசியப்பொருட்களுக்கான வரிச் சலுகைகள் என மக்கள் நலனைக் கருத்திற்கொண்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
அம்பாந்தோட்டை, மாத்தறை மாவட்டங்களைப் பொறுத்தவரை முழுமையான அபிவிருத்திக்குள்ளாக்கப்பட்டு வருகின்றன. வீதிகள் அனைத்தும் புனரமைக்கப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் 10ம் திகதி நடைபெறும் தேர்தலின் மூலம் அரசாங்கத்தின் செயற்திட்டங்கள் திருப்திகரமானது என்பதை உலகிற்கு காட்ட முடியும் எனவும் ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்தார்.

»»  (மேலும்)

கலாபூசணம் காத்தான்குடி பாத்திமாவின் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா.


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் கலாபூசணம் பட்டம் பெற்ற முதற் பெண்மணியான பாத்திமாவின் “நா இடற வாய் தவறி” எனும் கவிதை தொகுப்பின் வெளியீட்டு விழா இன்று பி.ப 05.00 மணியளவில் காத்தான்குடி ஹிஸ்புல்லா கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இக்கவிதை தொகுப்பின் பிரதிகளை கிழக்கு மாகாண இன நல்லுறவு பணியகத்தின் பணிப்பாளர் எம்.ஆர்.ஸ்ராலின் அவர்களுக்கும் முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் பூ.பிரசாந்தன் அவர்களுக்கும் அக்கவிதை தொகுப்பின் பிரதிகளை வழங்கி வைத்தார்.
»»  (மேலும்)

மன்னாரில் நீரோடையிலிருந்து மனித எலும்புக் கூடுகள் மீட்புமன்னாரில் இரண்டு மனித எலும்புக்கூடுகள் நேற்று (25) கண்டெடுக்கப்பட்டதாகப் பொலிஸ் ஊடகப் பரிவின் பேச்சாளர் தினகரனுக்குத் தெரிவித்தார்.
புளியங்குளம் விடத்தல்தீவு வீதியில் நீரோடை ஒன்றை சுத்திகரித்துக் கொண்டிருந்த ஊழியர்களே இந்த மனித எலும்புக் கூடுகளைக் கண்டெடுத்துள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை ‘பெகோ’ இயந்திரத்தைக் கொண்டு நீரோடையைச் சுத்திகரிக்கும் பணியில் ஈடு பட்டிருந்தவர்களே எலும்புக்கூடுகளை மீட்டதாகவும் அவை பழுதடைந்து உக்கிய நிலையில் காணப்பட்ட தாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
எலும்புக் கூடுகளுடன் புலிகள் இயக்க உறுப்பினர்கள் பயன்படுத் இரண்டு, வெடி மருந்துகள், ஆயுதங்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன. இதிலிருந்து இந்த எலும்புக்கூடுகள் புலிகள் இயக்க உறுப்பினர்களுடையதாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுவதாகப் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.


»»  (மேலும்)

அக்கரைப்பற்று முகாமில் உள்ள மக்களை சந்தித்து உரையாடினார் கிழக்கு முதல்வர்.


வவுனியா இடைத்தங்கல் முகாமில் இருந்த அம்பாறை மாவட்ட மக்கள் தற்போது அக்கரைப்பற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்; சந்தித்து அவர்களை சொந்த இடங்களுக்கு குடியமர்த்துவது தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார். இதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ். புஸ்ப்பராசா, அம்பாறை மாவட்டத்தின் முதலமைச்சர் உப அலுவலகத்தின் பணிப்பாளர் எஸ்.சத்தியசீலன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
»»  (மேலும்)

கல்லடியில் ‘கிழக்கின் முழக்கம் 2009′ கலைவிழா நாளை ஆரம்பம்

வடக்கு, தெற்கு நட்புக்குக் கலை, விளையாட்டு என்பவற்றின் மூலம் கைகோர்க்கும் ஓர் அற்புத நிகழ்வாக ‘கிழக்கின் முழக்கம் 2009′ கலைவிழா மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் நாளை கோலாகலமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
காலை 8.00 மணி முதல் நடுநிசி வரை நடைபெறும் இந்தக் கலைவிழாவுக்கு கிழக்கு மாகாணசபை அனுசரணை வழங்குகிறது. இந்த நற்பணிக்கான ஊடக அனுசரணை வழங்குகின்றது ஸ்ரீ டி.வி. நிறுவனம். இந்நிறுவனம் உலகம் முழுவதும் சுமார் 152 நாடுகளில் தனது நிகழ்ச்சித் திட்டங்களை ஒளிபரப்பி வருகின்றது.
இந்நிறுவன பணிப்பாளர் துஷார குரேராவும் தமது அர்ப்பணிப்புடனான பங்களிப்பை எமக்கு வழங்குகின்றார்.
அன்றைய தினம் நீச்சல் ஓட்டப்போட்டிகள், உதைபந்தாட்டம் மற்றும் தோணி ஓட்டம் உட்பட பல்வேறு விளையட்டுப் போட்டிகள் இடம்பெறவுள்ளன. அலங்கார காட்சிகள், கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் மெஜிக் காட்சிகள் என்பனவும் விழாவில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
போட்டிகளில் வெற்றி பெறுவோருக்குக் கேடயங்கள், பரிசில்கள், சான்றிதழ்கள் என்பன வழங்கப்படும். இறுதியில் வாண வேடிக்கை, இசைக்கச்சேரி என்பன இடம்பெறும்.

»»  (மேலும்)

9/23/2009

கிழக்கு மக்களின் இயல்பு வாழ்வை சீர்குலைக்க நினைக்கும் எவருக்கும் இடமளிக்க முடியாது.- வாகரை மகா விமத்தியாலய திறப்பு விழாவில் முதலமைச்சர்.


கிழக்கு மாகாணம் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு கிழக்கு மாகாணத்திற்கென தனியான ஒரு மாகாண அரசு தனது 15 மாத சேவையினை பூர்த்தி செய்து பயணித்துக் கொண்டிருக்கின்றது. இம்மாகாண சபை உருவாக்கப்பட்டதன் பின்னர் கிழக்கு மாகாணத்தில் எந்தவொரு அசம்பாவிதங்களோ, ஜனநாயக சீர்கேடுகளோ, மற்றும் இயல்பு வாழ்வை சீர்குலைக்கும் செயல்களோ இடம்பெறவில்லை, ஆனால் அண்மையில் அம்பாறை மாவட்டத்தில் அதிலும் அக்கரைப்பற்று பிரதேசத்திலே தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் கடையடைப்புக்கள், பொது அலுவலகங்கள் இயங்காமை மற்றும் இயல்பு வாழ்வு தடைப்பட்ட ஒரு சில சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றது. இதனை புரிந்தவர்கள்; யாராக இருந்தாலும் அவர்களுக்கு நாம் இடமளிக்க கூடாதென கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று வாகரை மகா வித்தியாலயத்தினை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், எமது நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் மகிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இவ்வேளையில், கிழக்கில் பூரணமான ஒரு ஜனநாயக சூழல் தென்படுகின்றது. இதனை பயங்கரவாதிகளின் பாணியில் ஒரு சில விசமிகள் சீர்குலைக்க முன்வருகின்றார்கள். அபிவிருத்திக்காக வேண்டிநிற்கின்ற எமது கிழக்கு மாகாண மக்கள் சார்பிலும், இம்மாகாண முதலமைச்சர் என்ற வகையிலும் இது போன்ற செயற்பாடுகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்ககூடாதென கேட்டுக் கொண்டார்.ஜனாதிபதியின் உயரிய சிந்தனையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தியினை வேண்டி நிற்கின்ற எமது மக்கள் மத்தியில், இவ்வாறான ஒரு சில செயற்பாடுகள் எமது மாகாண மக்களிடையே சில குழப்பங்களை தோற்றுவிக்கின்றன. பயங்கரவாதம் கிழக்கில் இருந்து அடியோடு ஒழிக்கப்பட்ட பின்னர் அச் சிந்தனையிலிருந்து மக்களை மீட்டெடுத்து, அபிவிருத்தியையும் ஜனநாயகத்தையும் அமைதியையும் வேண்டி நிற்கின்ற ஓர் மாகாணமாக எமது கிழக்கு மாகாணம் பயணித்து கொண்டிருக்கின்றது. ஒரு சிலரது சுயநல அரசியலுக்காக அதனை குழப்ப முயற்சிக்கும் செயலானது எமது மாகாண மக்களுக்கு மட்டுமன்றி எமது மாகாணத்தை அபிவிருத்தி பாதையில் இட்டு செல்ல நினைக்கும் அதிமேதகு ஜனாதிபதியின் சிந்தனைக்கும் செயற்பாட்டிற்கும் பங்கம் ஏற்படுத்துவதாகும். எனவே பயங்கரவாதிகளின்; பாணியில் செயற்பட்டு அம்பாறை மாவட்ட இயல்பு நிலையினை குழப்புவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.


»»  (மேலும்)

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கிராமிய மட்டத்திலான குழுக்களை அமைக்கும் வேலைத்திட்டம் இன்று வாழைச்சேனையில்.

த.ம.வி.பு கட்சியானது தனது கொள்கைகள் எதிர்காலத் திட்டங்கள் எதிர்நோக்கி இருக்கின்ற சவால்கள் என்பவற்றை மக்களுக்கு தெளிவு படுத்துகின்ற வகையில் கட்சியின் கொள்கைகளையும் கட்சியினையும் மக்கள் மயப்படுத்தும் திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுக்கொண்டு வருகின்றது. அதன் முதற்கட்டமாக வாகரை, வவுனதீவு போன்ற இடங்களிலும் இன்று வாழைச்சேனையிலும் பிரதேச சபை தவிசாளர் உதய ஜீவதாஸ் தலைமையில் பேத்தாழை குகநேசன் கலாச்சார மண்டபத்தில் வைத்து கிராமிய மட்டத்திலான கட்சி அங்கத்தவர்களுக்கு உறுப்புரிமை வழங்கப்பட்டது.இன்று கோரளைப்பறங்று வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்;குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளிலிருந்து கிராமிய மட்டத்திற்கான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அங்கத்துவர்களுக்கான உறுப்புரிமை கட்சித் தலைவரும் மாண்புமிகு முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் வழங்கப்பட்டது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கட்சித் தலைவரும் மாண்புமிகு முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கட்சியின் கொள்கைகள் பற்றி குறிப்பிடுகையில், உரிமை, தனித்துவம்,கொள்கை என்பன எமது கட்சியின் கொள்கைகளாகும் அதேபோல் சமூக ரீதியான பிராந்திய அரசியல், குறிப்பாக தமிழர்கள் சார்ந்த பிரச்சினைகளை முன்னுரிமைப்படுத்துவதற்குரிய ஒரு கட்;சியாகவே இன்று எமது த.ம.வி.பு.கட்சி விளங்குகின்றது. நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தில் ஓர் அரசியல் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது எமது த.ம.வி.பு கட்சியாகும். கிழக்கில் இதுவரைக்கும் அரசியல் தலைமைத்துவத்தில் இஸ்த்திரமற்ற நிலையே காணப்பட்டு வந்திருக்கின்றது. இனிவரும் காலங்களில் கட்ந்த கால அரசியல் நிலைப்பாடுகளை மாற்று வழியில் சிந்திப்பவர்களாகவும் கிழக்கு மாகாணத்திற்கென தனித்துவமான ஓர் அரசியல் தலைமைத்துவம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதிலும் நாம் அனைவருமே அக்கறையோடு செயற்பட வேண்டும் .
கிழக்கு மாகாணத்தவர்களின் தனித்துவங்களையும் அடையாளங்களையும் அபிலாசைகளையும் பேண வேண்டும் என்ற அடிப்படையில் நாம் எமது கட்சி கொள்கைகளை வடிவமைத்துக்கொண்டு எதிர்காலத்தில் கிழக்கின் அரசியல் தலைமைத்துவத்திற்கு வித்திட்டவர்களாக இன்று உறுப்புரிமை பெற்றிருக்கின்ற ஒவ்வொரு உறுப்பினர்களும், கிழக்கினை தனித்துவமான அரசியல் தலைமைத்துவம் ஒன்றினை உருவாக்க வேண்டும் என்பதில் அக்கறையோடு அயராது எமது கட்சியோடு இணைந்து எமது மாகாணம் வழம்பெற வைப்பவர்களாக மாறவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந் நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உயர்மட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

»»  (மேலும்)

வாகரை மகா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத் தொகுதியை ஜனாதிபதி இன்று வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார்


ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் ரூபா 300 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட வாகரை மகா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத் தொகுதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று வைபவ ரீதியாகத் திறந்து வைத்தார்.
இந் நிகழ்வில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் பேர்னாட் சவேஜ் ,கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ,மத்திய அமைச்சர்களான பேராசிரியர் ஜி;.எல்.பீரிஸ் ,சுசில் பிரேமஜயந்த ,சுசந்த புஞ்சிநிலமே ,எம்.எஸ்.அமீர் அலி ,விநாயகமூர்த்தி முரளீதரன் ,நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச மற்றும் பசில் ராஜபக்ச உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
சுனாமியினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை மகா வித்தியாலயத்தின் கட்டிடத் தொகுதி சேதமடைந்த நிலையில் இதனைப் புனரமைப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் உதவ முன்வந்திருந்தது.
தரம் 1 முதல் 13 வரையிலான இப் பாடசாலையில் கல்வி பயிலும் 700 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் இதனால் பயன் பெறுவார்கள் .முழுமையான வசதிகளுடைய நூலகம் ,விஞ்ஞான ஆயு;வு கூடம் ,கணனி ,தொழிற் பயிற்சி மற்றும் தொழில் நுட்ப பயிற்சிக் கூடங்களுடன் மொழி வள நிலையம் ,விளையாட்டு வசதிகளையுமு; இத் திட்டத்தின் கீழ் பாடசாலை கொண்டிருக்கும்
இதே வேளை ஜனாதிபதியின் வருகையை ஒட்டி வாகரைப் பிரதேசத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தது


»»  (மேலும்)

9/21/2009

கல்குடா இந்து ஆலய புனரமைப்புக்கு அமைச்சர் எம். எஸ். எஸ். அமீர் அலி நிதியுதவி.

மட்டக்களப்பு மாவட்ட இந்து மததலங்களின் புனர மைப்பு மற்றும் கட்டிட நிர் மாணப் பணிகளுக்காக அனர் த்த நிவாரண சேவைகள் அமை ச்சர் எம். எஸ். எஸ். அமீர் அலி நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டுள்ளார். இதன்படி, கல்குடாத் தொகுதி சந்திவெளிக் கிராமத்திலமைந்துள்ள சித்தி விநாயகர் ஆலயத்தின் புனரமைப்புப் பணிகளுக்காக ரூபா 5 இலட்சத்துக்கான காசோலையை ஆலய அறங்காவலர் குழுத் தலைவர் எஸ். நவத்திடம் நேற்று 20 ஆம் திகதி அமைச்சர் அமீர் அலி கையளித்தார்.
இவ்வைபவம் ஆலய முன்றலில் பெருமளவிலான தமிழ் மக்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் எம். எஸ். எஸ். அமீர் அலி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ். ஜவாஹிர் சாலி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
»»  (மேலும்)

அமைச்சர் கருணா சென்ற வாகனம் விபத்துக்குள்ளானாது.


தேசிய நல்லிணக்க அமைச்சர் சென்ற குண்டு துளைக்காத வாகனம் விபத்துக்குள்ளானதில் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். இன்று சுமார் 4.30மணியளவில் கொழும்பில் தனியார் பஸ் வண்டி ஒன்றுடன் மோதுண்டு பலத்த சேதங்களுக்குள்ளானது அமைச்சர் கருணாவின் வாகனம். இதில் பயணம் செய்த அமைச்சர் கருணாவின் மெய்ப்பாதுகாவலர் மற்றும் சாரதி ஆகியோர் பலத்த காயங்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றார்கள். மிகவும் வேகமாகச் சென்று கொணடிருந்த அமைச்சரின் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பஸ்சுடன் மொதுண்டதாக அறியமுடிகிறது
»»  (மேலும்)

37 இலட்சம் ரூபா பெறுமதியில் சித்தாண்டி இந்து பொது மயாணத்திற்கு சுற்று மதில்.
கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் வடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் மேற்படி சுற்றுமதில் அமைக்கப்பட இருக்கிறது. இன்று சித்தாண்டி சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் மேற்படி நிகழ்வு இடம் பெற்றது. ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர் எஸ். சுகுமார் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான கௌரவ எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, சிறப்பு அதிதியாக ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின தேசிய பொருளாளருமான கௌரவ எஸ்.ஜீவரங்கன், கௌரவ அதிதிகளாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் எட்வின் சில்வா கைலேஸ்வரராஜா, கௌரவ முதலமைச்சரின் ஊடகச் செயலாளரும் தமிழ் மக்கள் விடுதலைப் பிலகள் கட்சியின் ஒருங்கிணைந்த நிறுவனங்களின் பணிப்பாளருமான ஆ. தேவராஜா, மற்றம் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் அ. தம்பிராஜா,ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

»»  (மேலும்)

9/20/2009

வவுனியா தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அகதிகளில் 5.000 பேர் இன்று விடுவிப்பு


இன்று 1.000 குடும்பங்களைச் சேர்ந்த 5.000 தமிழ் மக்கள் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். வவுனியா பிரதேசத்தில் அமைந்துள்ள 28 கிராமங்களில் இவர்கள் குடியேற்றப்படுவதற்காக பஸ்களில் ஏற்றி அனுப்பப்படுகின்றனர்.
»»  (மேலும்)

கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் நோம்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி.

இன்று ஈத்துல் பித்ர் நோம்புப்பெருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் என் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வதில் மிக மகிழ்ச்சி அடைகின்றேன். இப்பண்டிகையானது வெறும் சடங்காகவோ கேளிக்கையாகவோ அல்லாமல் பல தத்துவங்களையும் மனிதனின் சுபிற்சமான எழுச்சிக்கான வழிகாட்டுதல்களாக இருப்பதையும் நான் அவதானிக்கின்றேன்.
முப்பது நாட்கள் ஆகாரமின்றி ஆசையைக்கட்டுப்படுத்தி ஆன்மாவை ஒருநிலைப்படுத்தி நோன்பிருக்கும் முஸ்லிம் சகோதரர்கள், இதன் மூலம் ஒரு மிகப்பெரும் யதார்த்தமான தத்துவத்தை எடுத்து இயம்புகின்றனர்.
அது யாதெனின் மனதை ஒருமைப்படுத்தி இறைவனுக்கு மட்டும் கட்டுப்படுவதாகும் இதன்மூலம் பிறரை மதித்தல், பிறருக்கான உரிமைகளை வழங்குதல் மற்றவர்களுடன் சகோதரத்துவத்துடனும், புரிந்துணர்வுடன் பழகுவதால் பல நன்மைகள் கிட்டுகின்றன. இவ்வாறான இத்தத்துவங்களும். குணாதிசயங்களுமே இன்று எல்லோருக்கும் தேவைப்படுகின்றது. மதங்கள் அனைத்துமே மனிதனின் மனங்களை ஒருநிலைப்டுத்தி நல்வாழ்வுக்காக வழிகாட்டுகின்றன. ஆனால் துரதிஸ்ட்ட வசமாக எல்லா மதங்களிலும் மத விழுமியங்களை துறந்து தமது சுயபோகங்களுக்கும் அளவுகடந்த ஆசைகளுக்கும் மற்றவர்களை துன்பப்படுத்தி, காயப்படுத்தி வாழ்பவர்கள் உள்ளனர்.
எமது நாட்டை பொறுத்தளவில் பல்லின பல கலாச்சார பரம்பரை கொண்டவர்களே வாழ்கின்றனர். இச்சூழலில் நாம் எமது மதவிழுமியங்களையும் சகோதர மதங்கள் கூறும் நல்லொழுக்கங்களை கடைப்பிடிப்போமாக இருந்தால், பிரச்சினைகள் என்பது எம்மை எள்ளளவும் நெருங்காது அண்மையில் நடந்து முடிந்த யுத்தத்தின் காரணமாக சுமார் 03 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தமது உடமைகளை உறவுகளை இழந்து நிற்கதியான நிலையில் அகதி முகாம்களில் அல்லல் பட்டு கொண்டு இருக்கின்றனர் இம்மக்களின் வாழ்வில், நிம்மதியும் மகிழ்ச்சியும் விரவில் கிடைக்கப்பெற இந்நன்நாளில் அனைவரும் உறுதி பூணுவதுடன் எமது நாட்டின் இனப்பிரச்சினைக்கு அடிகோலாய் திகழும் தமிழ் பேசும் மக்களுக்கான நியாயமான அரசியல் உரிமைகளுடன் அதிகாரங்களும் கிடைக்கப்பெற வழிகள் பிறக்கட்டும் என்றும் பிரார்த்திக்கின்றேன்.

»»  (மேலும்)

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு தனியான நிர்வாகம் அமைக்கப்பட்டதன் பின்னர் கிழக்கில் நெல் உற்பத்தி அதிகரிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதான சூழலை அடுத்து கிழக்கு மாகாணத்தின் நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது. கிழக்கின் நெல் உற்பத்தி 37.4 வீதத்தால்
அதிகரித்துள்ளதாக சனத்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவிக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்திலேயே கூடுதலான நெல் உற்பத்தி கிட்டியுள்ளதாக அந்தத் தகவல்களில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்குப் புறம்பாக குருணாகல், பொலன்னறுவை, அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் நெல் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
»»  (மேலும்)

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை நிலைமை சிறப்பானது' ஜனாதிபதியை சந்தித்த ஐ.நா. பிரதிநிதி பெஸ்கோ தெரிவிப்பு

இலங்கையின் தற்போதைய நிலவரத்தை உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறப்பானதாக உள்ளதென ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் லின் பெஸ்கோ தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் நிவாரணக் கிராமங்களின் நில வரம், வவுனியா மற்றும் வடக்கில் ஏனைய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும், கண்ணிவெடி, மிதிவெடி அகற்றல், மீள்குடி யேற்றம் ஆகியவற்றை நேரில் அவதானித்ததன் பின்னர் அலரி மாளிகையில் ஜனாதிபதியை அவர் நேற்று சந்தித்தார்.
இதன்போது கண்ணிவெடி, மிதிவெடி அகற்றுவதில் நவீன இயந்திரங்களை பயன்படுத்தி மேற்கொண்டுவரும் துரித நடவடிக்கைகளை பாராட்டிய அவர், இது தொடர்பில் மேலும் உதவிகளை வழங்குவதற்கு ஐ.நா. தயாராகவுள்ளதென்றும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஒரே நாளில் சுமார் 2 இலட்சத்து 50,000 பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்ததுடன் அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் வழங்குவதுடன் அவர்களின் சுகாதார நிலையை பேணுவதோடு மீளக் குடியேற்றப் படுவதுடன் முக்கியத்துவ த்தையும், அவசியத்தையும் புரிந்து கொண்டு அரசாங்கம் அவற்றுக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு ள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மீள்குடியேற்றம் தொடர்பாக சர்வதேச சமூகம் கரிசனை காட்டுவதாக ஐ. நா. பிரதி செயலர் குறிப்பிட்டதற்கு பதிலளித்த ஜனாதிபதி, கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றப்படும் நடவடிக்கைகள் நிறைவடைந்ததும் மீளக்குடியமர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
உதாரணமாக குரேஷியா யுத்தத்தின் 16 வருட நிறைவுக்கு பின்னரும் இன்னமும் கண்ணி வெடிகள் மிதி வெடிகள் அகற்றப்பட்டு வருவதாகவும் ஆனால், இல ங்கை அவ்வாறான நீண்ட காலத்தை எடுக்காது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியதுடன் இடம்பெயர்ந்தவர்களுள் 70 வீதத்துக்கும் அதிகமானோரை அரசாங்கத்தின் 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் மீளக்குடியமர்த்திவிட முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
நிவாரணக் கிராமங்களிலிருந்து வெளியே சென்று நெருங்கிய உறவினர்களுடன் சேர்ந்து வாழ விரும்புபவர்கள் தொடர்பாக விண்ணப்பங்கள் கோரியிருந்தோம். இதன்படி, சுமார் 2000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் இதுவரை கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றை பரிசீலித்து குறித்த நபர்களை உறவினர் களிடம் பொறுப்பளிக்கவும், நலன்புரி நிலை யங்களிலிருந்து வெளியே சென்று தொழில் புரிவதற்கு ஏதுவாக பகல்நேர அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.கடந்த காலம் போல் அல்லாது தற்போது இராணுவத்தின் செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதை ஐ. நா. சபை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும், ஊடகவியலாளர் ஒருவருக்கு 20 வருட சிறைத் தண்டனை வழ ங்குவது நீதிமன்றத்துக்கு உட்பட்ட பொறுப்பேயன்றி அரசாங்கத்தின் நடவடிக்கை அல்ல என்பதையும் பிரதிவாதி வழக்கில் தனக்குரிய தண்டனையை குறைத்துக்கொள்வதற்கு மனுவொன்றை தாக்கல் செய்யாத ஒரு குறையாகவே கருதுகிறேன் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.இச்சந்திப்பின் போது அமைச்சர்கள் ரோஹித்த போகொல்லாகம, மிலிந்த மொரகொட, பேரியல் அஷ்ரஃப், மஹிந்த சமரசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி, ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

»»  (மேலும்)

வடமாகாண விளையாட்டுப் போட்டிகள் யாழ்ப்பாணத்தில் கோலாகல ஆரம்பம். வவுனியா நிவாரணக் கிராமங்களிலிருந்தும் மாணவர்கள் பங்கேற்பு


வட மாகாண விளையாட்டுப் போட்டிகள் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று வெகு கோலாகலமாக ஆரம்பமாகியது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாணவர்களும் போட்டிகளில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யும் வகையில் வவுனியா நிவாரணக் கிராமங்களிலிருந்தும் மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். அரச அதிபர் கே. கணேஸ், வடமாகாண பிரதம செயலர் இளங்கோ உட்பட பிரமுகர்கள் துரையப்பா விளையாட்டரங்கு நுழைவாயிலிருந்து மலர்மாலை அணிவித்து மேள தாளங்களுடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
தேசியக் கொடியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், மாகாண கொடியை ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறியும் ஏற்றி வைத்தனர். இதனைத் தொடர்ந்து அனைவரும் வெள்ளைப் புறாக்களை பறக்கவிட்டனர். இதனைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின. முதலாவதாக 1500 மீற்றர் ஓட்டப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னர் ஒலிம்பிக் தீபத்தை வவுனியா, யாழ். மாணவர்கள் ஏந்திச் சென்றமை குறிப்பிடத் தக்கது.
வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ். மாவட்டங்களை உள்ளடக்கியதாக நடைபெறும் இவ்விளையாட்டுப் போட்டிகள், நாளை ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

»»  (மேலும்)

இடம்பெயர்ந்த மக்களுக்கு குடிநீர் வசதிகளை ஏற்படுத்த ஜப்பான் முன்வருகை


அமைச்சர் அதாவுல்லாவிடம் ஜப்பான் தூதுவர் நிதி, உடன்பாட்டு பத்திரம் கையளிப்பு
இடம்பெயர்ந்த மக்களுக்காக idps குடிநீர் மற்றும் நலன்புரி வசதிகளுக்கான நிதி உதவி பெற்றுக் கொடுப்பதற்கு ஜப்பான் அரசாங்கம் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளது. ஜப்பானின் தூதுவர் குனியோ தகாசி நேற்று தேசிய காங்கிரஸ் தலைவரும், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ஏ. எல். எம். அதாவுல்லாவிடம் உடன்பாட்டுப் பத்திரத்தை (Note Verbal) கையளித்தார்.
நலன்புரி நிலையங்களுக்கு மிகவும் அவசரமாகவும் தேவையானதுமான குடிநீர் மற்றும் நலன்புரி நிலைமைகளை விருத்தி செய்வதற்காக அமைச்சர் அல்ஹாஜ் ஏ. எல். எம். அதாவுல்லாவின் அறிவுறுத்தலின் பேரில் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினூடாக ஜப்பான் தூதுரகத்திற்கு மேற்கொள்ளப்பட்ட வேண்டு கோளுக்கிணங்க இச்செயற்திட்டம் நிறைவேற்ற ப்பட்டது.
சர்வதேச ஜப்பான் ஒத்துழைப்பு முகவரான்மை (நியிவிதி) நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு ஜப்பானிய நிபுணத்துவர்களை வழங்குவதற்கு முக்கியமான பங்கினை எடுத்துள்ளது. ஜப்பான் அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கான உணவு மானிய உதவியின் கீழ் 2றிஞி நிதியிலிருந்து ரூபா 263.3 மில்லியனை ஒதுக்குகிறது.

»»  (மேலும்)

கல்முனை பிரதேசத்தில் புடவை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 82 இந்திய வியாபாரிகளின் கடவுச் சீட்டுக்கள் அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டைச் சேர்ந்த இவ்வியாபாரிகள் சுற்றுலா விசா பெற்று நாட்டில் பரவலாக வியாபாரத்தில் ஈடுபடுவதாகக் கிடைத்த தகவல்களையடுத்து கொழும்பிலிருந்து கல்முனை பிரதேசத்திற்குச் சென்றிருந்த குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் விசேட குழுவொன்று இவர்களுடைய கடவுச் சீட்டுக்களைப் பறிமுதல் செய்து தடுத்து வைத்துள்ளது.
குறிப்பிட்ட வியாபாரிகளை குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்குச் சமூகமளிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்கியிருந்த வீடுகள் மற்றும் விடுதிகளை முற்றுகையிட்ட திணைக்கள அதிகாரிகள் கடவுச் சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
கடந்த 4 - 5 வருடங்களாக கிழக்கு மாகாணத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மேற்படி வியாபாரிகள் தெருத் தெருவாகச் சென்று வீடுகளிலும் மற்றும் தொழில் நிறுவனங்களிலும் புடவைகளை விற்று வருகின்றனர்.
இவர்கள் மீது தற்போது பொலிஸ் மற்றும் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளின் பார்வை திரும்பியுள்ள நிலையிலேயே இவர்களுக்கு எதிரான நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
இவர்களது வியாபாரம் காரணமாக உள்ளூர் வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்ததாகப் பரவலாக புகார்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
கடந்த மாதம் மட்டக்களப்பு நகர பிரதேசத்தில் 9 இந்திய வியாபாரிகளைப் பொலிஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் குற்றப் பணம் செலுத்தி எச்சரிக்கையுடன் விடுதலை செய்யப்பட்டதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் வெளியேறி விட்டனர்
அதேவேளை, கிழக்கு மாகாணத்தின் ஏனைய சில பிரதேசங்களில் இன்னமும் பலர் இந்திய வியாபாரிகளின் நடமாட்டம் இருப்பதால் அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்ப்டவுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்கள உதவிக் கட்டுப்பாட்டாளர் வில்லியம் தெய்வேந்திரா தெரிவித்தார்

»»  (மேலும்)

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவனத்தின் மாணவர்கள் நேற்று நண்பகல் முதல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவனத்தின் மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் சில கோரிக்கைகளை முன் வைத்து நேற்று நண்பகல் முதல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களுக்கு விளையாட்டு மைதான வசதி ,போக்குவரத்து வசதி ,ஆண்களுக்கான விடுதி வசதி ஆகியன ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் மாதாந்த உபகாரக் கொடுப்பனவு உரிய நேரத்தில் வழங்கப்பட வேண்டும் மற்றும் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடுவதில் காணப்படும் தாமதங்கள் தவிர்க்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளும் மாணவர்களினால் முன் வைக்கப்பட்டுள்ளன.
இன்று நண்பகலுடன் விரிவுரைகளைப் பகிஷ்கரித்துள்ள மாணவர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய வாசக அட்டைகளை ஏந்தியவாறு நிறுவனத்திற்கு முன்பாக கூடி நின்று இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
தமது கோரிக்கைகள் மற்றும் போராட்டம் தொடர்பாக 3 நாட்களுக்கு முன்னதாக நிறுவனத்தின் நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளதாகவும் ,
இது தொடர்பான உத்தரவாதம் கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகத்திடமிருந்து கிடைக்கும் வரை தமது போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் தெரிவித்தனர்»»  (மேலும்)

9/18/2009

ஐ.நா.விசேட பிரதிநிதி பெஸ்கோ வவுனியா, யாழ்., மன்னார் விஜயம்'

இலங்கையில் இடம்பெயர்ந்து ள்ளவர்களை விரைவில் மீள குடியமர்த்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை பூரண உதவிகளை வழங்குமென ஐ. நா. செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியாக இலங்கை வந்திருக்கும் ஐ. நா. அரசியல் விவகாரங்களுக்கான திணைக்களத்தின் தலைவர் லின் பெஸ்கோ நேற்றுத் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் இரவு, இலங்கை வந்த லின் பெஸ்கோ நேற்றுக் காலை யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களை நேரில் சென்று பார்வையிட்டதுடன் வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடியகற்றும் வேலைத் திட்டங்களையும் கண்டறிந்தார்.
வடக்குக்கான தனது சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பிய பெஸ்கோ நேற்று மாலை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல் லாகமவை அமைச்சில் சந்தித்து இருதரப்பு பேச்சு நடத்தினார்.
நீண்ட நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பையடுத்து செய்தியாளர்கள் மத்தியில் லின் பெஸ்கோ உரையாற்றினார்.இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு நிவாரணக்கிராமங்களை நேரில் சென்று பார்வையிட்டதன் மூலம் மோதல்களுக்குப் பின்னர் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத் திட்டங்கள் குறித்து தெளிவாக விளங்கிக்கொள்ளக் கூடியதாக இருக்கிறதென லின் பெஸ்கோ சுட்டிக்காட்டினார்.யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய நிவாரணக் கிராமங்களில் தங்கியிருப்போரை நேரில் சந்தித்துப் பேசக் கூடிய வாய்ப்பு எனக்கு கிட்டியது. அவர்கள் எங்கிருந்து வந்துள்ளார்கள். தற்போது என்ன செய்கிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கும் உதவிகள் அம்மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் அபிலாஷைகளையும் என்னால் நன்கு புரிந்துகொள்ள முடிந்தது. நிவாரணக் கிராமங்களில் பணிபுரியும் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் ஐ.நா. உதவி அதிகாரிகளையும் சந்தித்து பேச்சு நடத்தியதன் மூலம் இலங்கை அரசாங்கம் இடம் பெயர்ந்துள்ளவர்களுக்காக முன்னெடுத்துவரும் உதவிகளையும் வசதிகளையும் நன்கு அறிந்துகொண்டேன் எனவும் லின் பெஸ்கோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.உலகின் பல நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் செய்துள்ளேன். நான் பார்த்தவற்றிலேயே மெனிக் பாம் நிவாரணக் கிராமம் மிகவும் விசாலமானது. நிவாரணக் கிராமத்தில் வாழ்பவர்களுக்கு எத்தனை வசதிகளை செய்துகொடுத்தாலும் தமது சொந்த வீடுகளில் வாழ்வது போன்ற உணர்வு இருக்காது. இவர்கள் கூடுமான விரைவில் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படவேண்டும். அதற்கேற்ற வகையில் கண்ணிவெடியகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்படவேண்டுமெனவும் நிவாரணக் கிராமங்களிலிருந்து இம்மக்களை கூடிய விரைவில் வெளியேற்ற ஐ.நா. பூரண ஒத்துழைப்பை வழங்குமெனவும் பெஸ்கோ கூறினார்.அமைச்சர் போகொல்லாகம கருத்து தெரிவிக்கையில்:-மோதல்களையடுத்து நாட்டில் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்நிலையில், ஐ. நா. செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியாக லின் பெஸ்கோ இலங்கை வந்திருப்பது எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது.எமது இருதரப்பு சந்திப்பின்போது இடம்பெயர்ந்த மக்களுக்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் உதவிகள், வசதிகள் மற்றும் வடக்கில் அபிவிருத்திப் பணிகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதாகவும் தெரிவித்தார்.இதேவேளை லின் பெஸ்கோ இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசியல் முக்கியஸ்தர்கள் மற்றும் தமிழ் அமைப்புக்களின் உறுப்பினர்கள் ஆகியோரை நேரில் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.


»»  (மேலும்)

மட்டக்களப்பில் சர்வ மதத் தலைவர்களின் 3 நாள் பயிற்சிப் பட்டறை நேற்று ஆரம்பம்
சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு சர்வோதய ஒன்று கூடல் மண்டபத்தில் சர்வ மதத் தலைவர்களும் பிரமுகர்களும் கலந்து கொள்ளும் 3 நாள் பயிற்சிப் பட்டறை ஒன்று தற்போது நடைபெற்று வருகின்றது.
நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ஜயந்த செனவிரத்ன தலைமையில் நேற்று மாலை இப்பயிற்சிப் பட்டறை வைபவ ரீதியாக சர்வ மத தலைவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு - திருகோணமலை ஆயர் பேரருட்திரு கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, இராமகிருஷ்ண மிஷன் முதல்வர் சுவாமி அஜ்ராத்மானந்தாஜி, மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரோ, மௌலவி ஐ.எம்.இலியாஸ் ஆகியோர் மங்கள தீபம் ஏற்றி இதனை ஆரம்பித்து வைத்தனர்.
குறிப்பாக இப்பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்வதற்காக தெற்கிலிருந்து 50இற்கும் மேற்பட்ட பௌத்த பிக்குமார்களும் வருகை தந்திருந்தனர்.
நேற்று மாலை ஆரம்பமான இப்பயிற்சிப் பட்டறை நாளை மாலையுடன் நிறைவு பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
»»  (மேலும்)

அமைச்சர் முரளிதரனின் கருத்து கிழக்கு மக்களை அவமானப்படுத்துவதாக அமைந்துள்ளது. மாகாண அமைச்சர்- எம்.எல..ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்.


கிழக்கு மாகாண சபையில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் கல்விமான்களாகவும், முன்னால் எம்பிக்களாகவும், சமூக போராளிகளாகவுமே உள்ளனர். இவ்வாறான நிலையில் கிழக்கு மாகாண சபையில் தகுதியற்றவர்களும் அறிவற்றவர்களும் இருப்பதாக முரளிதரன் அமைச்சர் கருத்துத் தெரிவித்துள்ளமை கிழக்கு மாகாண மக்கள் அனைவரையும் அவமானப்படுத்துவதாக அமைந்துள்ளது எனவும், இது கவலையளிக்கிறது எனவும், இத்தகய நிலைப்பாட்டினை அவர் உடனடியாக கைவிடவேண்டும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். முரளிதரனின் கருத்தானது கிழக்கு மாகாண சபைக்கு வாக்களித்த பல இலட்சம் மக்களை அவமானப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
தகுதியற்றவர்களும் அறிவற்றவர்களும் இருப்பதனாலேயே கிழக்கு மாகாண சபை முறையாக செயற்பட முடியாதுள்ளது என்று மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் முரளிதரனின் கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் மாகாணசபை அமைச்சரவைப் பேச்சாளர் மேலும் கருத்து தெரிவிக்கையில் போராட்டத்தில் ஈடுபட்டு அரசியலுக்கு வந்ததாகக்கூறும் அமைச்சர் முரளிதரன் இன்னும் உண்மை நிலை புரியாது பேசுவது ஆச்சரியத்துக்குரியதாகும். கிழக்கு மாகாண ஆளுநருக்கும் அமைச்சர்களுக்குமிடையில் பிரச்சனைகள்; இருக்கின்றது. இது குறித்து மத்தியில் அமைச்சராக இருக்கும் நல்லிணக்க அமைச்சர் முரளிதரன் எங்களுடன் பேசியிருக்கலாம். ஆளுநருடன் பிரச்சினைகள் இருப்பதனாலேயே நாம் தொடர்ச்சியான முறைப்பாடுகளை தெரிவித்து வருகின்றோம். இந்நிலையில் ஆளுநர் சிறப்பாக இயங்குவதாகவும் உறுப்பினர்கள் அறிவற்றவர்களாக இருப்பதாகவும் அமைச்சர் கூறுவது கிழக்கு மாகாண மக்களை அவமானப்படுத்துவதாக இருப்பதாகவும் கவலையளிப்பதாகவும் தெரிவித்தார். நாட்டில் உள்ள ஏழு மாகாண சபைகளை விட கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்களே மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இரவு பகலாக பாடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சர் முரளிதரனின் கருத்து வேதனையளிக்கின்றது. கிழக்கு மாகாண மக்களை அவமானப்படுத்தியுள்ளது.


»»  (மேலும்)

ஜனாதிபதியின் செயலை உதாசீனம் செய்யும் அமைச்சர் வி.முரளிதரன் கிழக்கு மாகாண சபையை அவமதிக்கும் கருத்துக்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும் - பிரதீப் மாஸ்ரர்அண்மையில் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் வி. முரளிதரன் அவர்கள் கிழக்கு மாகாண சபை, அதன் செயற்பாடுகள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் தொடர்பாக வெளியிட்டுள்ள கருத்தானது, ஜனாதிபதியின் செயலை உதாசீனம் செய்வதாக அமைந்துள்ளது என கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் த.ம.வி.பு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான எ.சி. கிருஸ்ணானந்தராஜா (பிரதீப் மாஸ்ரர்) தெருவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில் கிழக்கு மாகாண சபையானது எமது திருநாட்டின்
ஜனாதிபதி அவர்களின் உயரிய சிந்தனையின் அடிப்படையிலே உருவாக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள், உறுப்பினர்கள், அமைச்சர்கள் யாவரும் ஜனாதிபதியின் பிரதம செயலகத்தினாலேயே தெரிவு செய்யப்பட்டார்கள்.
அத்தோடு கிழக்கு மாகாண சபையிலே தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களுமே முன்னாள் பாரளுமன்ற அமைச்சர்கள், உறுப்பினர்கள், புத்திஜீவிகள், சமூகப் பற்றாளர்கள், மக்கள் விடுதலைப் போராளிகளுமாவர்.
அத்தோடு ஜனாதிபதியால் தெரிவு செய்யப்பட்ட கிழக்கு மாகாண அமைச்சரவை வாரியமானது, மக்களின் அமோக ஆதரவுடன் ஜனநாயக அடிப்படையில் மக்களால் வாக்களித்து தெரிவு செய்யப்பட்ட கௌரவத்திற்கு உரியவர்களாவர்.
இவர்களை அவமானப்படுத்துவது கௌரவ உறுப்பினர்களின் அடிப்படை மனித உரிமையினையும், சிறப்புரிமையினையும் மீறும் செயலாகும். எனவே கிழக்கு மாகாணத்தில் பிறந்து கிழக்கு மக்களின் வீரன் என தன்னைக் கூறிக் கொள்ளும் அமைச்சர் தமிழ் மக்களின் விடுதலை வேட்கையைத் தணிக்கும் முகமாக உருவாக்கப்பட்ட மாகாண சபையைக் கொச்சைப்படுத்தும் கருத்துக்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எ.சி.கிருஸ்ணானந்தராஜா அவர்கள் பகிரங்கமாகக் கேட்டக் கொள்கின்றார்.
»»  (மேலும்)

9/17/2009

தோட். தொழிலாளர் சம்பள அதிகரிப்பு கூட்டு ஒப்பந்தம் நேற்று கைச்சாத்து
* 405 ரூபா சம்பள அதிகரிப்பு
* 6 மாத சம்பள நிலுவையை 3 கட்டங்களாக வழங்க முடிவு
* மருத்துவ சிகிச்சையில் சலுகை
* ஞாயிறு, போயா தினங்கள் விடுமுறை தினங்களாக கருதப்படும்


தோட்டத் தொழிலாளர்களுக்கு அதி கரிக்கப்பட்ட 405 ரூபாவை வழங்கு வதற்கான கூட்டு ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டது. தொழிற்சங்க பிரதிநிதிகளும், முதலாளிமார் சம்மேளன பிரதிநிதிகளும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
2009 ஏப்ரல் முதலாம் திகதி முதல் சம்பள அதிகரிப்பு அமுலுக்கு வரும் விதத்தில் இவ்வொ ப்பந்தம் நேற்று ராஜகிரியவிலுள்ள முதலாளிமார் சம்மே ளன அலுவலகத்தில் கைச்சாத்தானது.
அமைச்சர் ஆறுமுகன் தொண் டமான், லங்கா தேசிய தோட் டத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் கே. வேலாயுதம், தொழிற்சங்க கூட்டமைப்பு செயலாளர் எஸ். இராமநாதன் ஆகியோர் முத லாளிமார் சம்மேளன பிரதி நிதிகளுடன் ஒப்பந்தத்தில் கைச் சாத்திட்டனர்.
அதிகரிக்கப்பட்ட சம்பளத்திற்கான நிலுவைத் தொகையை மூன்றுகட்டங்களாக வழங்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
எதிர்வரும் அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் முற்பணத்துடன் 50 வீத சம்பள நிலுவையை வழங்கவும் டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் முற்பணத்துடன் 25 வீத சம்பள நிலுவையையும் ஜனவரி மாதம் தைப் பொங்கலை முன்னிட்டு வழங்கப்படும் பண்டிகை முற்பணத்துடன் எஞ்சிய 25 வீதத்தை வழங்குவது என்றும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் 75 வீத வருகைக்கு ஞாயிற்றுக்கிழமை, போயா தினம் மற்றும் விடுமுறை தினங்களும் இதுவரை காலம் உள்வாங்கப்பட்டிருந்தது. இனிமேல் ஞாயிறு, போயா தினம், விடுமுறை தினங்கள் நீக்கப்பட்டுள்ளன.
தொழிலாளி ஒருவர் சுகயீனம் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் 75 வீத வருகை இல்லாத இடத்து அவர் தொழிலுக்கு வந்தவராகவே கருதப்படுவார்.
சம்பள அதிகரிப்புடன் தோட்டத் தொழிலாளி ஒருவரின் அடிப்படைச் சம்பளம் 285 ரூபாவாகவும், 75 வீத வருகைக்கான கொடுப்பனவு 90 ரூபாவாகவும், உற்பத்தி ஊக்குவிப்பு கொடுப்பனவு 30 ரூபாவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட தொகையைவிட கூடுதலான கொழுந்து அல்லது இறப்பர் பால் சேகரிப்பவர்களுக்கு முறையே 12 ரூபா 15 ரூபாவை வழங்குவது என்றும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் 2009 மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்தது. இதன்படி தற்போது செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் 2009 ஏப்ரல் முதலாம் திகதி முதல் 2011 மார்ச் 31ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், லங்கா தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி என்பன செய்து கொண்ட சம்பள அதிகரிப்பு ஒப்பந்தத்துக்கு எதிராக மலையகத்தில் ஆங்காங்கே சில இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றனவே என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர் ஆர்.
யோகராஜனிடம் கேட்டபோது 90 வீதமான தோட்டத் தொழிலாளர்கள் இதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். 40 வீத சம்பள அதிகரிப்பு ஒன்று இன்று கிடைத்திருக்கிறது. சில தொழிற் சங்கங்கள் இதனை வைத்துக்கொண்டு அரசியல் நடத்த முயற்சி செய்கின்றன என்று கூறினார்.
வாங்கும் சக்தி எங்களுக்கு இருப்பது போன்று கொடுக்கும் சக்தி முதலாளிமாருக்கு இருக்கிறதா என்பது பற்றியும் நாம் பார்க்க வேண்டும். அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தையும் ஆராய்ந்த பின்னரே ஒரு முடிவுக்கு வந்தோம் என்றும் இ. தொ.கா உப தலைவர்களில் ஒருவரான ஆர். யோகராஜன் தெரிவித்தார்.
கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள இ. தொ. காவின் ‘செளமிய பவன்’ கட்டடத்தில் செய்தியாளர் மாநாடு ஒன்று நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசும்போதே ஆர். யோகராஜன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

»»  (மேலும்)

விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்ய மூன்று மாவட்டத்திற்குமான விளையாட்டு பயிற்றுனர், விளையாட்டு உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
கிழக்கு மாகாண விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் மூன்று மாவட்டத்திற்குமான மாவட்ட விளையாட்டு பயிற்றுனர், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் போன்ற பதவிக்கான நியமனக் கடிதத்தினை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நேற்று (15.09.2009) வழங்கிவைத்தார்.இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண விவசாய, கால்நடை அமைச்சர் துரையப்பா நவரெட்ணராஜா, கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், விளையாட்டுத்துறை பணிப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
»»  (மேலும்)

இன்றும் தோட்டப் பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன…

தமக்கு வழங்கப்படுவதாகக் கூறப்பட்ட 405 ரூபா சம்பள உயர்வை எதிர்த்தும், 500 ரூபாவே வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் சுமார் 1500 தோட்டதொழிலாளர்கள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொகவந்தலாவை, கொட்டகலை, மஸ்கெலியா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மலையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த முதலாந் திகதி முதல் ஒத்துழையாமைப் போராட்டம் நடைபெற்று வந்தது. தோட்டத் தொழிலாளர்களுக்கு 405 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படுவதாகக் கூறப்பட்டதும் ஒரு சாரார் அதனை ஏற்றுக் கொண்டனர். எனினும் பலர் இதனை எதிர்த்துத் தாம் கோரிய 500 ரூபா சம்பள உயர்வே வேண்டும் எனக் கோரி தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
»»  (மேலும்)

9/13/2009

சம்பூர் அனல் மின் நிலையம் : அடுத்த வாரம் ஒப்பந்தம் கைச்சாத்து

திருகோணமலை, சம்பூர் பகுதியில் அமைக்கப்பட உள்ள நிலக்கரி அனல் மின் உற்பத்தி நிலையம் தொடர்பான உடன்படிக்கை அடுத்த வாரம் கைச்சாத்திடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் தேசிய நிலக்கரி மின் உற்பத்திக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியன இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளன.
சம்பூரில் அமைக்கப்படும் நிலக்கரி மின் நிலையம், இலங்கையில் அமைக்கப்படும் இரண்டாவது நிலக்கரி அனல் மின் நிலையமாகும். இந்த மின் நிலையத்தில் ஆயிரம் மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யத் திட்டமிட்டிருப்பதாகவும்

»»  (மேலும்)

வவுனியா இடைத்தங்கல் முகாமிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்த ஒரு தொகுதி மக்களை கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் சென்று பார்வையிட்டார்


நேற்று(11.09.09) வவுனியா இடைத் தங்கல் முகாமிலிருந்த வடக்குக் கிழக்கைச் சேர்ந்த சுமார் 10000பேர் தங்களது சொந்த இடங்களக்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். இதில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தோர்கள் மட்டக்களப்பு சிங்கள மகாவித்தியாலயத்திலும், மட் குருக்கள்மடம் கலைவாணி வித்தியாலயத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்குரிய பதிவுகளை மேற்கொண்டு உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இவ்வாறு மடடக்களப்பு சிங்கள மகாவித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள ஒரு தொகுதி மக்களை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன நேரில் சென்று பார்வையிட்டு, அவர்களது தேவைகளையும் கேட்டறிந்து கொண்டார். இம் மக்களை வருவேற்கும் நிகழ்வு மட்டக்களப்ப மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம் பெற்றது. இதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன், அமைச்சர் முரளிதரன், மேயர் சிவகீர்த்தா ,மாகாண சபை உறுப்பினர் இரா துரைரெட்ணம், கிழக்கு மாகாண முதலமைச்சரின் மீழ் குடியேற்ற இணைப்பதிகாரி அ. செல்வேந்திரன், பிரதேச செயலாளர்கள், கிராம சேவை உத்தியோகஸ்த்தர்கள் இராணுவ உயர் அதிகாரிகள், கிழக்குப் பராந்தியப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் எடிசன் குணதிலக்க ஆகிகோர்கலந்து கொண்டார்கள்.இந் நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியிவல் உரையாற்றிய முதல்வர் சந்திரகாந்தன், பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் சிக்கண்டு உங்களது சொந்த இடங்களுக்கு வந்திருப்பதனையிட்டு அனைவரும் மகிழ்ச்சியடைவேண்டும். நீங்கள் அனைவரும் எதுவித பிரச்சினைகளுமின்றி உங்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கபர்பட உள்ளீர்கள். அதன் பின்னர் கடந்த கால கசப்பான எண்ணங்களையே எண்ணி உங்களது வாழ் நாட்களை வீணடிக்காது, சொந்த வருமானங்களை ஈட்டக் கூடிய தொழில்களைத் தேர்ந்தெடுத்து ,உங்களது தனிநபர் வருமானங்களைக் கூட்டிக் கொள்ள வேண்டும். இன்று கிழக்கில் நல்ல ஜனநாயக சூழல் ஏற்படுத்தப்படடிருக்கின்றது.எனவே யாரும் யாருக்கும் பயப்படத் தேவையில்லை. ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் உரிய பிரதேச பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை மேற்கொண்டு தீர்வினைப் பெறலாம்.. உங்களுக்கரிய ஏனைய சில வசதிகளை மேற் கொள்வதற்காக எமது அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உரி நடவடிக்கைகளை மேற் கொள்ளும் அதற்குரிய அதிகாரிகளும் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள் எனவும் குறிப்பிட்hர். 123 குடும்பங்களைச் சேர்ந்த 367 பேர் இங்கு தங்க வைக்கப்பட்டிருக்பகின்றார்கள்.


»»  (மேலும்)

ஒத்துழையாமை போராட்டம் உக்கிரம்: தோட்டங்களில் பணிகள் ஸ்தம்பிதம்
முதலாளிமார் சம்மேளனத்துடனான ஏழாவது சுற்றுப் பேச்சும் தோல்வியில் முடிவடைந்ததையடுத்து தோட்டத் தொழிலாளர்களின் ஒத்துழையாமைப் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
பதினொரு தினங்களாக முன்னெடுக்கப்படும் இப்போரா ட்டம் நேற்று முதல் மாற்று வடிவம் பெற ஆரம்பி த்துள்ளதாக தொழிற் சங்கங்கள் தெரிவித்தன. இதனால் தோட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது.
கறுப்புப் பட்டி அணிந்து தொழிலாளர்கள் தங்களது பணிகளில் ஈடுபட்டதோடு ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட் டனர்.
இதேவேளை, தங்களது 500 ரூபா சம்பள அதிகரிப்புப் போராட்டம் வெற்றி பெறவேண்டுமெனக் கோரி இந்து ஆலயங்களில் பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டதாக தோட்டங்களிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்தன.
இதற்கிடையில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள தொழிற்சங்கங்கள் நேற்று மாலை தங்களுக்குள் சந்தித்துப் பேசின.
கொழும்பில் நடந்த இந்த பேச்சுவார்த்தையின்போது, முதலாளிமார் சம்மேளனம் தங்களது நிலைப்பாட்டில் விடாப்பிடியக இருப்பதனால், அவர்களுடனான பேச்சைத் தவிர்த்து போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க முடிவு செய்துள்ளதாக இ. தொ. கா. தலைவரும் பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் கூறினார்.
இந்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் மிகவும் நிதா னத்துடன் ஒத்துழைத்து வருகிறார்களெனவும் அவர் சுட்டிக் காட்டினார்.
தினமொன்றுக்கு 370 ரூபா சம்பளம் வழங்கவே முதலா ளிமார் சம்மேளனம் முன்வந்துள்ளது. இதனை முற்றாக நிராகரித்த தொழிற்சங்கங்கள் 500 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கும் வரை போராட்டம் தொடருமென அறிவித்துள் ளன.
என்றாலும், ஐக்கிய தேசியக் கட்சியும் சில தொழிற் சங்கங்களும் தோட்டங்களில் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்குவதற்கு முயற்சி செய்கின்றன என்றும் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் கூறினார்.
இதேவேளை, மலையகத்தில் சகல தேயிலைத் தோட் டங்களிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இரத்தினபுரி மாவட்டம்
இரத்தினபுரி மாவட்டம் முழுவதிலும் கறுப்புப் பட்டி யணிந்து ஒத்துழையாமை போராட்டம் நேற்று சனிக் கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டது.
பலாங்கொடை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ். விஜயகுமாரனின் ஏற்பாட்டில் நடைபெறும் இப்போரா ட்டம் சமய வழிபாடு மற்றும் கறுப்புப் பட்டியணிதல் ஆகிய இரு வழிகளில் கவனயீர்ப்புப் போராட்டங்களாக நடைபெற்று வருகின்றன.
பூஜைவழிபாடுகள் பலாங்கொடைத் தோட்டப் பகுதிகளில் கடந்த வாரம் முதல் முன்னெடுக்கப்பட்டு ள்ளதுடன் கறுப்புப் பட்டியணிந்து மெதுவாக வேலை செய்யும் போராட்டம் நேற்று சன்னிக்கிழமை பலாங் கொடை பெட்டிகலைத் தோட்டத்தின் சகல பிரிவுகளிலும் ஆரம்பிக்கப்பட்டன.
பதுளை மாவட்டம்
பதுளை மாவட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்கள் கறுப் புப் பட்டி அணிந்தும், மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தி லும் வேலைநிறுத்தத்திலும் ஈடுபடுவதுடன் 500 ரூபா சம்பள உயர்வுக் கோரிக்கை வெற்றிபெற வேண்டுமென்று ஆலயங்களில் பூஜை வழிபாடுகளை நடத்தவும் திட்டமி ட்டுள்ளனர். இவ்வகையிலான மாற்று வடிவிலான போராட்டங்களை நாளை முதல் முன்னெடுக்கவுள்ளதாக தொழிலாளர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தோட்ட திருவாகங்களினால் தொழிலாளர் களுக்கு வேலை வழங்காததோர் நிலையினையும் ஏற்படு த்த தோட்ட நிருவாகங்கள் முடிவெடுத்துள்ளன. இது போன்ற நிலை தொடரும் பட்சத்தில், தோட்ட நிருவா கிகளின் வசஸ்தலங்களுக்கான மின்சாரம் மற்றும் நீரை துண்டிப்பதுடன், தோட்டப் பாதைகளை கற்களைக் கொண்டு மறித்து விடவும் தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
அவ்வாறான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று கொட்ட கலை ஸ்டோனிகிளிப் மற்றும் டிரைட்டன் தோட்ட தொழிலாளர்களால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சம்பள உயர்வு தொடர்பான பல்வேறு கோஷங்களை எழுப்பிய வண்ணம் தமது வேலைகளை பகிஷ்கரித்து விட்டு கைகளில் கறுப்புக் கொடிகளை ஏந்திய படி தத் தமது தோட்டக் காரியாலயங்களை நோக்கி ஊர்வலமாக சென்று தமது அடையாள எதிர்ப்பினை தெரிவித்தனர்.
»»  (மேலும்)

கூட்டமைப்பைக் கலைக்கவேண்டும்புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல்
நேர்கண்டவர் பி. வீரசிங்கம்
கேள்வி: தற்போதைய அரசியல் நிலைமைகள் எப்படியிருக்கின்றன?
பதில்: அரசியல் நிலைமை பற்றி கூறுவதானால் ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் இவை இரண்டும் முடியும் வரையிலும் அரசியல் ரீதியான எந்தவொரு முன்னெடுப்பையும் அரசாங்கம் நிச்சயமாக எடுக்கப்போவதில்லை என்றே நான் நம்புகின்றேன்.
அதனை முன்னெடுப்பதற்கான பலம் அரசிடம் இல்லை. பாராளுமன்றத்தைப் பொறுத்தவரையில் ஜே. வி. பி, ஹெல உறுமய, விமல் வீரவன்ச மூன்று பகுதியினரும் ஒரு நிலைப்பாட்டை எடுக்கின்றனர்.
இவ்வாறு எடுக்கும்போது அரசியல் ரீதியான ஒரு தீர்வோ அல்லது பாராளுமன்றத்தில் அரசியல் அமைப்பை மாற்றுவதற்கான முயற்சியோ சாத்தியமில்லை. ஆகவே, அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் அரசின் பக்கம் பாராளுமன்ற உறுப்பினர்களாக யார் வரப்போகின்றார்கள் கடும் போக்காளர்கள் மக்களால் ஒதுக்கப்படுவார்களா என்பவற்றைப் பொறுத்துத்தான் ஒரு அரசியல் தீர்வை நாம் பார்க்க முடியும்.
சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வந்தாலும் இப்போது அவை படிப்படியாகக் குறைந்து வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. மேற்குலக நாடுகள் கூட தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வைக் காட்டிலும் இப்போது மனித உரிமைகள் பற்றிப் பேச ஆரம்பித்திருக்கின்றன.
யுத்த காலத்தில் நடைபெற்ற விடயங்களில் அக்கறை காட்டுவதன் மூலம் இங்கு மீண்டும் இனங்களுக்கிடையே ஒற்றுமையற்ற நிலைமையை உருவாக்குவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்த முனைகிறார்கள்.
யுத்த காலத்தில் எமது உறுப்பினர்கள் பலர் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறான சம்பவங்களை நாம் ஆதாரபூர்வமாக இலங்கை கண்காணிப்பு பணியகத்திற்கும் சர்வதேசத்திற்கும் எடுத்துக் கூறிய போதும் அவர்கள் அதுபற்றி எவ்வித அக்கறையும் எடுக்கவில்லை. அன்று முதல் இன்றுவரை அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் பக்கசார்பானதாக இருந்து வருவதை நாம் பார்க்கிறோம்.
முதலில் இனங்களுக்கிடையே சுமுகமான உறவுகளை ஏற்படுத்த வேண்டும். நீண்ட காலமாக யுத்தத்தினால் மூவினங்களுக்கிடையேயும் ஒரு அவநம்பிக்கை வளர்ந்திருப்பதும் அரசியல் தீர்வைக் கொண்டு வர முடியாமைக்கான ஒரு முக்கிய காரணமாகும். ஆகவே இனங்களுக்கிடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முற்பட வேண்டும்.
தமிழ் மக்கள் மத்தியில் கூட கடந்த காலங்களில் பல கசப்பான சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அவற்றை மறக்க முடியாவிட்டாலும் கூட ஒருவரையொருவர் மன்னித்து ஓன்றுபட்ட நிலையை உருவாக்கி சரியானதொரு தீர்வை நோக்கி முன்னேற வேண்டும்.
கேள்வி: தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடந்த வாரம் ஜனாதிபதியைச் சந்தித்தது. இச் சந்திப்பு தமிழ் மக்களிடையே ஒரு நம்பிக்கையைத் தோற்றுவிக்குமா?
பதில்: எம்மைப் பொறுத்தவரையில் த. தே. கூட்டமைப்பு கடந்த காலத்தில் புலிகளால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பாகும். புலிகளாலேயே 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் வெல்லக்கூடியதாக இருந்தது. புலிகள் எதைக் கூறினார்களோ அதனையே த. தே. கூட்டமைப்பும் செய்து வந்திருக்கிறது.
இன்று புலிகள் இராணுவ ரீதியில் முற்றாக அழிக்கப்பட்ட பின்னர் கூட்டமைப்பினர் சுயமாக சிந்தித்து ஒரு முடிவை எடுக்கக்கூடிய நிலையில் இருக்கின்றனர். யார் விரும்புகிறார்களோ இல்லையோ மஹிந்த ராஜபக்ஷ தான் இந்நாட்டின் ஜனாதிபதி.
எமது பகுதிகளில் வாழும் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் (நான் இங்கு அரசியல் தீர்வுப் பிரச்சினையைக் கூறவில்லை) மிக அதிகளவில் இருப்பதால், யுத்தத்தினால் அழிக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்ட மக்கள் அகதி முகாம்களில் வாழும் இந்நிலைக்கு ஜனாதிபதியுடன் பேசாமல் ஒரு தீர்வு காண முடியாது.
ஆகவே இவர்கள் கடந்த காலங்களில் வாய்ப்புகள் வழங்கப்பட்ட போதெல்லாம் ஜனாதிபதியைச் சந்திக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டை கொண்டிருந்தனர். அவ்வாறு இறுமாப்போடு இருந்ததால் மக்களுக்குச் செய்யக்கூடிய பல அடிப்படையான விடயங்களைக்கூட செய்ய முடியாமல் போனது. அவ்வாறு தட்டிக்கழித்ததால் அது அவர்களுக்கு வசதியாக இருந்திருக்கிறது.
ஆகவே இன்று இவர்கள் இப்படியானதொரு நிலைப்பாட்டை எடுத்திருப்பதை மக்களும் நிச்சயம் வரவேற்பார்கள். மக்களைக் பொறுத்தவரையில் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு ஒரு அரசியல் தீர்வைக் காண வேண்டும் என்பது ஒருபுறமிருக்க ஒவ்வொரு தனிமனிதனும் தனது அன்றாடப் பிரச்சினைகள் தீர வேண்டும் என்பதில் அக்கறையாக இருப்பர்.
அகதி முகாம்களில் மூன்று இலட்சம் மக்கள் இருக்கும் இவ்வேளையில் அரசியல் பிரச்சினைகளை விட அவர்கள் தமது சொந்த இடங்களுக்குச் சென்று அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழக்கூடிய வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்பதே முக்கிய பிரச்சினையாகும்.
இதையே நாமும் இன்று முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவ்வாறான சூழ்நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியை சந்தித்தது உண்மையில் வரவேற்கக்கூடிய விடயமாகும். இதுவொரு ஆரம்பமாக இருக்கலாம். இச்சந்திப்பினால் உடனடியாக எந்தவொரு பிரச்சினையும் தீர்க்கப்படாது போனாலும் இது நல்லதொரு ஆரம்பம். த. தே. கூட்டமைப்பை பொறுத்தவரையில் சரியோ பிழையோ இன்று வடக்கு, கிழக்கில் மிகப்பெரிய பலம் பொருந்திய 22 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக இருக்கின்றது.
ஆகவே அவர்களுக்கு ஒரு கடமை இருக்கிறது. வெறுமனே நாங்கள் ஜனாதிபதியைச் சந்திக்க மாட்டோம், தமிழ் மக்களின் தன்மானத்தைக் காப்போம் எனக்கூறிக்கொண்டு மாத்திரம் இருக்காது அந்த மக்களின் அன்றாட பிரச்சினைகளைத் தீர்க்க முன்வர வேண்டும். அதற்கானதொரு நல்ல ஆரம்பமாகவே நான் இதனைப் பார்க்கிறேன்.
கேள்வி: தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் எப்படி இருக்குமென நீங்கள் கருதுகிaர்கள்?
பதில்: அதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனெனில் கடந்த 5 வருட காலமாக புலிகளே ஏக பிரதிநிதிகள் என்ற கொள்கையைக் கொண்டிருந்தனர். யுத்தம் நடைபெற்றபோது கூட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றி உலகமே கவலைப்பட்டுக் கொண்டிருக்கையில், அவர்கள் மக்களைக் காப்பாற்றுவதை விட புலிகளைக் காப்பாற்றுவதில்தான் அதிக கவனம் செலுத்தினர்.
ஆயிரக்கணக்கான சிறுவர்களை புலிகள் தமது படையில் பலவந்தமாக சேர்த்தபோது உலகமே அதைப்பற்றி பேசியது. அப்போதும் த. தே. கூட்டமைப்பு அதனை நியாயப்படுத்திப் பேசியது. பாராளுமன்றத்திற்குள்ளேயும் வெளியிலும் அச்சிறுவர்கள் தாங்களாகவே சென்று சேர்ந்துகொள்வதாக கூறினர்.
ஒரு விடயத்தில் நாம் அனைவரும் தெளிவுடன் இருப்போமானால் அனைத்து பிரச்சினைகளும் ஒரு முடிவுக்கு வரும். அதாவது மே 18 இற்கு முந்திய காலம், மே 18 இற்கு பிந்திய காலம் அல்லது பிரபாகரனுக்கு முன்பு, பிரபாகரனுக்கு பின்பு என தமிழ் மக்களின் பிரச்சினைகளை வகுக்க வேண்டும்.
மே 18 இற்கு முன் நடந்தது நடந்தவையாகவே இருக்கட்டும். மே 18 இற்குப் பின் நடப்பவை நல்லவையாகவே இருக்கட்டும். நாம் அனைவருமே ஒரு கருத்தொருமையுடன் சிந்தித்து செயற்படுவோமேயானால் நிச்சயம் தமிழ் மக்களுக்கு ஏதோ எங்களால் முடிந்த சேவையை ஆற்ற முடியுமென்று நான் நம்புகிறேன்.
கேள்வி : தமிழ்த் தரப்புகள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறதே?
பதில்: தமிழ் மக்களின் நலன் விரும்பிகள் மத்தியில் இவ்வாறானதொரு எதிர்பார்ப்பும், எண்ணமும் இருக்கின்றது. எம்மைப் பொறுத்தவரையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்பது புலிகளால் உருவாக்கப்பட்ட, தெற்கில் சந்தேகத்துடன் பார்க்கப்படும் ஒரு அமைப்பாகும்.
தமிழ்த் தேசியவாத சாயம் பூசப்பட்ட அமைப்பாகவே பெரும்பான்மை இன மத்தியில் பேசப்படுகிறது. ஆகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் ஏனைய அமைப்புகள் சேரவேண்டும் என்பது முக்கியமல்ல. த. தே. கூட்டமைப்பு என்ற பெயரெல்லாம் கைவிடப்பட்டு அனைத்து கட்சிகளும் தனித்தனியாகவும், ஒன்றாகவும் கூடிப்பேசி ஒரு அமைப்பை கொண்டு வருவதுதான் தமிழ் மக்களுக்கு நன்மை தருவதாக அமையும். த. தே. கூட்டமைப்பில் ஏனைய கட்சிகள் சேர்வதால் தெற்கில் மேலும் சந்தேகமும் அவநம்பிக்கையும் வளர இடமுண்டு.
பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக அதனை மேலும் சிக்கலாக்கிக் குழப்பிவிட இது காரணமாக அமைந்துவிடும்.
கேள்வி: உங்களைப் போன்றோர் இவ்வாறான விடயங்களை முன்வந்து செய்ய முடியாதா?
பதில்: நாங்கள் அதனைச் செய்யத் தயாராகவும், ஆர்வமாகவும் இருக்கிறோம். ஆனால் இதனை தனியொரு தரப்பினரால் முன்னெடுக்க முடியாது. தனிநபராகவோ அல்லது தனிக் குழுவின் செயற்பாடாகவோ இருக்கக் கூடாது. ஏகப் பிரதிநிதித்துவக் கதைகளை விட்டுவிட்டு தமிழ்த் தரப்புக்களிடையே கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்துவதே இப்போதைய தேவையாக இருக்கிறது. தமிழ் மக்களை மேலும் கூறு போடாது இருப்பதன் மூலமே பிரச்சினையைத் தீர்க்க முடியும்.
கேள்வி: 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை, நடைமுறைப்படுத்துவது பற்றிய உங்கள் கருத்தென்ன?
பதில்: நிச்சயமாக இது தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்து அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உதவாது. ஜே. ஆர். ஜயவர்த்தன ஆட்சிக் காலத்தில் ஒரு இலட்சத்திற்கு மேலான இந்திய அமைதிப் படையின் வருகை, இந்தியாவின் அழுத்தம் என்பன இருந்தும் கூட எம்மால் 13ஆவது திருத்தத்தையும் அதன் மூலம் கிடைத்த மாகாண சபையையுமே எம்மால் பெற முடிந்தது.
இன்று தமிழ் மக்களின் அரசியல் நிலமை மிகவும் பலவீனமான நிலையிலேயே இருக்கின்றது.
விடுதலைப் புலிகள் ஏனைய அனைவரையும் பலவீனப்படுத்திய பின் அவர்களே தம்மை ஏகப் பிரதிநிதிகள் எனக் கூறிச்செயற்பட்டனர். இன்று அவர்களும் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் அரசியல் ரீதியில் மிகவும் பலவீனமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் இத்தருணத்தில் 13ஆவது திருத்தத்திற்குக் கூடுதலாக எதையும் நாம் பெற்றுவிட முடியாது.
அது மாத்திரமல்ல. இந்திய அரசாங்கம் கூட அன்று 13ஆவது திருத்தத்தை விடக் கூடுதலாக அதிகாரங்கள் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் இருந்த போதிலும் இன்று 13 + என்ற எல்லையில் நின்று கொண்டிருக்கின்றனர். ஆகவே 13ஆம் திருத்தத்திற்கு இன்னும் சில முக்கிய அம்சங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஏனெனில் கிழக்கு மாகாணத்தில் சுயமாக எதையும் செய்ய முடியவில்லையென அதன் முதலமைச்சர் கூறுகிறார். 13ஆவது திருத்தத்தை ஒரு நல்ல ஆரம்பமாக எடுத்துக்கொண்டு அதிலிருந்து படிப்படியாக தேவையான அம்சங்களை அதிகாரங்களை இணைத்துக்கொள்ள வேண்டும். 13ஆவது திருத்தம் ஒரு முடிவாக அல்லாமல் ஆரம்பமாகவே அமைய வேண்டும்.
கேள்வி: வடக்கு கிழக்கு இணைப்பு பற்றிய உங்கள் கருத்தென்ன?
பதில்: வடக்கு கிழக்கு தமிழர் தாயகம். அது இணைந்ததாகவே இருக்கவேண்டும் என்பதே எனது கருத்தாகும்.
கேள்வி: இனப்பிரச்சினைக்கான தீர்வில் இடதுசாரிக் கட்சிகளின் நிலைப்பாடு எப்படியிருக்கின்றது?
பதில்: ஜே. வி. பியை இடதுசாரிக் கட்சியெனக் கூற முடியாது. ஏனெனில் அவர்கள் அடிப்படையில் இனவாதக் கருத்துக்களையே முதன்மைப்படுத்துகின்றனர். ஏனைய இடதுசாரிக் கட்சிகள் இனப்பிரச்சினையின் தீர்வு தொடர்பாக ஆக்கபூர்வமான கருத்துகளைக் கொண்டுள்ளன.
ஆனால் துரதிஷ்டவசமாக அவர்களின் பலம் போதுமானதாக இல்லை. இடதுசாரிக் கட்சிகளுடன் நெருங்கிய தொடர்புகள் இன்னும் இருக்கின்றன.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து செயற்பட்டோம். எதிர்வரும் காலங்களிலும் இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்தே செயற்படுவோம்.
கேள்வி: இனப்பிரச்சினையின் தீர்வு தொடர்பாக ஆராயும் சர்வகட்சி மாநாடு தொடர்பில் உங்களது கருத்தென்ன?
பதில்: பேராசிரியர் திஸ்ஸ விதாரண இவ்விடயத்தில் மிகவும் ஆர்வத்துடன் செயற்பட்ட போதிலும் அதில் ஐ. தே. க., த. தே. கூட்டமைப்பு ஆகிய பிரதான கட்சிகள் பங்குபற்றவில்லை.
இதனால் ஒரு தீர்வைக்காண முடியுமா என்பது சந்தேகம்தான். உண்மையாக ஒரு தீர்வைக்காண வேண்டுமானால் எதிர்க்கட்சியான ஐ. தே. க. மற்றும் த. தே. கூட்டமைப்பு ஆகியன இதில் பங்குபற்றியே ஆகவேண்டும்.
கேள்வி: கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுக்க திட்டமிட்டுள்Zர்கள்?
பதில்: எதிர்கால நடவடிக்கைகள் பற்றி எதிர்வுகூற முடியாவிட்டாலும் கூட இன்று இடம்பெயர்ந்து மிகவும் இக்கட்டானதும் துரதிஷ்டமானதுமான நிலையில் வாழ்ந்து வரும் எமது மக்களுக்குத் தொடர்ந்தும் பிச்சை கொடுத்துக் கொண்டிராமல் அவர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த வேண்டும்.
சொந்த இடத்தில் சுதந்திரமானதும், நிம்மதியானதுமான வாழ்க்கையினை அவர்கள் பெறுவதற்கு வெறுமனே அரசாங்கத்தை குறைகூறாமல், புலம்பெயர் மக்கள், சக்திகள் உட்பட சகல வளங்களையும் பயன்படுத்தி எமது மக்களை மிக விரைவில் நல்வாழ்வுக்கு இட்டுச்செல்ல வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

»»  (மேலும்)

9/12/2009

கிருஸ்ண ஜெயந்தி தினவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது-முதல்வர் பங்கேற்புகிருஸ்ண ஜெயந்தி தின விழா இன்று தாழங்குடா சரீரம் அமைப்பின் தலைவர் லோகேஸ்வரன் தலைமையில் தாழங்குடா விஸ்ணு ஆலயத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது. இவ் ஜெயந்தி தின விழாவில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டார். வேள்வி பூஜைகள்,பாற்குட பவனி,சங்காபிN~கம், விசேட பூஜைகள் இடம் பெற்றன. இவ் ஜெயந்தி தின வழாவிற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தார்கள். இங்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இங்கு வந்திருந்த பக்தர்களுடன் அன்பாக முதல்வர் சந்திரகாந்தன் உரையாடுவதைப் படத்தில் காணலாம்

»»  (மேலும்)

நோர்வே நாட்டின் நிதி உதவியுடன் சரீரம் ஸ்ரீலங்கா தேசிய மன்றத்தினால் அமைக்கப்பட்ட 45வீடுகள் கையளிப்பு
சுனாமியினால் பாதிக்கப்பட்டு அனாதரவாக இருந்த குறிப்பிட்ட ஒரு சில மக்களுக்காக சரீரம் ஸ்ரீலங்கா தேசிய மன்றத்தினால் 45வீடுகள் சுமார் எட்டு இலட்சம் ரூபாய் செலவில் நிர்மானிக்கப்பட்டு இன்று அவ் வீடுகள் கையளிக்கும் நிகழ்வு இடம் பெற்றது. இவ் வீடுகளை நோர்வேக்கான உயர்ஸ்த்தானிகர் ரொரே கற்றீம் வழங்கி வைத்தார்.
இந் நிகழ்விற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், அமைச்சர் முரளிதரன், மேயர் சிவகீதா ஆகியோர் கலந்து கொண்டு வீடுகளைக் கையளித்து வைத்தார்கள்.

»»  (மேலும்)

வவுனியா நிவாரண கிராமம்10 ஆயிரம் பேர் நேற்று சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பு

வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியிருந்த சுமார் 10,000 பேர் நேற்று சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே நேற்று சொந்த இடங்களில் மீளக்குடியேறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
வட மாகாண மீள் குடியேற்றம், அபிவிருத்தி என்பவற் றுக்கான விசேட ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ எம்.பியின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது 86 பஸ் வண்டிகளில் 10,000 பேரும் அனுப்பிவைக்கப்பட்டனர்.
கதிர்காமர், இராமநாதன், அருணாசலம், வலயம் 5, வலயம் 4 போன்ற நிவாரணக் கிராமங்களிலிருந்து மீள் குடியேற்றத்திற்காக அனுப்புவதற்கு தெரிவு செய்யப்பட்ட அனைவரும் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தி லிருந்து பஸ் வண்டிகள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்.
யாழ். நகருக்குச் செல்லும் பஸ் வண்டிகளில் 6838 பேரும், திருகோணமலைக்குச் செல்லும் பஸ் வண்டிகளில் 2170 பேரும், அம்பாறைக்கு 274 பேரும், மட்டக்களப்புக்கு 638 பேரும் அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதேவேளை யாழ். பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகிய நிலையில் நிவாரணக் கிராமங்களில் இது வரை காலமும் தங்கியிருந்த 74 பேரும் நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர். இதன்படி 9994 பேர் நேற்று அனுப்பிவைக்கப்பட்டனர்.
விசேட ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ, மீன்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, கிழக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் மொஹான் விஜேவிக்கிரம, அமைச்சர் சரத் குமார குணரட்ன, அமைச்சர் எஸ். எம். சந்திரசேன, மட்டு மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
மீன்குடியேற்றத்திற்காக செல்லும் மக்களுக்கென உலர் உணவு வகைகள், சமையல் பாத்திரங்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டன.
நேற்றுக் காலை 10.30க்கு ஆரம்பமான நிகழ்வின்போது பசில் ராஜபக்ஷ உட்பட அமைச்சர்கள் மங்கள விளக் கேற்றி மீள்குடியேற்ற வைபவத்தை ஆரம்பித்துவைத்தனர்.
விடுவிக்கப்பட்டவர்களை குறித்த மாவட்டங்களின் அரச அதிபரின் பிரதிநிதிகள், திட்டப்பணிப்பாளர்கள், கிராம சேவையாளர்கள் வவுனியாவில் வைத்து பொறுப் பேற்றனர்.
நிவாரண கிராமங்களில் தங்கியுள்ள மக்களை விடுவி க்கும் இரண்டாவது வைபவம் இதுவாகும் என அதி காரிகள் தெரிவித்தனர். (ள)


»»  (மேலும்)

தயா மாஸ்டர், ஜார்ஜ் மாஸ்டருக்கு பிணை


விடுதலைப் புலிகள் இயக்க ஊடகப் ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் மற்றும் மொழிபெயர்ப்பாளரான ஜோர்ஜ் ஆகிய இருவரையும் நிபந்தனையுடன் கூடிய பிணையில் செல்ல கொழும்பு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
கடந்த மே மாதம் இராணுவத்தினரிடம் சரணடைந்த இவர்கள் இருவரும் இதுவரை கொழும்பு இரகசிய பொலிஸ் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
தலா 25 லட்ச ரூபா தனிநபர் பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

இந்த இருவருக்கும் நீதிமன்றம் வெளிநாடு செல்வதற்கு தடைவிதித்ததுடன், அவர்களின் கடவுச்சீட்டுக்களை நீதிமன்றத்திடம் ஒப்படைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்

»»  (மேலும்)

பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் தாலிபான் தலைவர்கள் கைதுபாகிஸ்தானில் பிரச்சினைக்குரிய ஸ்வாட் பள்ளத்தாக்கில் கைதாகியுள்ள 5 மூத்த தலிபான் தலைவர்களை தாம் விசாரித்து வருவதாக பாகிஸ்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமக்கு புதிதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தாம் ஏற்கனவே செயற்படத்தொடங்கி விட்டதாக அவர்கள் கூறுகிறார்கள்.
ஸ்வாட் பள்ளத்தாக்கை கடுமையாக தாக்கி, கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்து அதனை மீட்டதை அடுத்து, நான்கு மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் பெரிய அளவில் இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
அதன் பின்னர் உயர்மட்ட தலைவர்கள் கைதாவது இதுவே முதல் முறை.
தற்போது கைதுசெய்யப்பட்டவர்களில் தாலிபான்களின் முக்கிய பேச்சாளரான முஸ்லிம் கானும் அடங்குகிறார்.
இன்னமும் தலைமறைவாக இருக்கும் உள்ளூர் தாலிபான் தலைவரான மௌலானா ஃபஸ்லுல்லா அவர்களின் சார்பில் இவர் அடிக்கடி பேசிவந்திருந்தார்.

»»  (மேலும்)

தைவான் முன்னாள் பிரதமருக்கு ஆயுள் தண்டனை


தைவானின் முன்னாள் பிரதமர் ஷென் ஷுய் பியன் அவர்களுக்கு ஊழல் குற்றச்சாட்டின்பேரில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
அவர் பதவியில் இருந்தபோது மோசடி செய்தது, கருப்பு பணத்திற்கு பொய் கணக்கு காட்டியது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது மற்றும் ஊழல் செய்து பலமில்லியன் டாலர்கள் அளவில் பணம் சேர்தது ஆகிய குற்றங்கள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தன.
அவருடன் கூட அவரது மனைவியும் அவர் பதவியில் இருந்தபோது ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு அவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கு விசாரணை தொடர்பில் தைவானில் பொதுமக்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
சீனாவோடு தைவான் நெருக்கமான உறவுகளை கொண்டிருக்க வேண்டும் என்று கூறும் தற்போதைய தைவானின் ஆளும் தரப்பினர், சீனாவின் பிடியிலி ருந்து விலகி சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று கூறிவரும் சென் அவர்களை அவரது அரசியல் கருத்துக்களுக்காக பழிதீர்க்கும் நோக்கத்துடன் தண்டித்திருப்பதாக, சென்னின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.»»  (மேலும்)

9/11/2009

மன்னாரில் முஸ்லிம்களுக்கு பேரீச்சம்பழம் விநியோகம்


மன்னாரில் மீள் குடியேறியுள்ள ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடும்பங்களுக்கு நேற்று நோன்பு கால பேரீச்சம்பழம் வழங்கப்பட்டது. வருடாந்தம் புனித ரம்ழான் மாதத்தில் இலங்கைளில் வாழும் முஸ்லிம்களுக்கு வழங்கவென அரபு நாடுகளில் இருந்து பேரீச்சம்பழம் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் மன்னாரிலுள்ள முஸ்லிம் குடும்பங்களுக்கும் பேரீச்சம்பழம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது

»»  (மேலும்)

கல்குடாவில் பஸ் தரிப்பு நிலையத்துக்கான அடிக்கல் முதல்வரால் நாட்டி வைப்பு


கல்குடாவில் பல நெடுங்காலமாக இருந்து வந்த பஸ்தரிப்பு நிலையத்தின் தேவையினை கிழக்கு மாகாண முதலமைச்சரின் கவனத்திற்கு அப்பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியதை அடுத்து தனது பிரத்தியேக நிதி ஒதுக்கீட்டில் இருந்து 3.25 மில்லியன் ரூபாவினை இப் பஸ்தரிப்பு நிலையத்திற்கு ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது, இப்பஸ்தரிப்பு நிலையத்திற்கான அடிக்கல்லினை இன்று முதல்வர் நாட்டி வைத்தமை குறிப்பிடத்தக்கது


»»  (மேலும்)

மடகஸ்கார் புதிய அரசாங்கத்தை தென்னாபிரிக்க ஒன்றியம் நிராகரித்ததுமடகஸ்காரில் அமைக்கப் பட்டுள்ள புதிய அரசாங்க த்தை தென்னாபிரிக்க நாடு கள் ஒன்றியம் நிராகரித்து ள்ளதுடன் அந்நாட்டின் எதி ர்க்கட்சியும், இது ஒரு தலைப்பட்சமான முடிவென அறிவித்துள்ளது. கொங்கோ வில் நடைபெற்ற தென்னா பிரிக்க நாடுகளின் மாநாட் டில் மடகஸ்கார் விவகாரம் ஆராயப்பட்டபோது அங்கு அமைக்கப்பட்ட புதிய அர சாங்கத்தை மாநாடு நிரா கரித்தது.
ஜனாதிபதியாக ரஜோலி னாவும் பிரதமராக ரொயி ண்டியோவும் அறிவிக்கப்ப ட்டதுடன் 31 பேர் அமைச் சர்களாகவும் நியமிக்கப் பட்டு புதிய அரசாங்கம் அமை க்கப்பட்டது. பிரதமர் ரொயி ண்டியோ இந்த அரசாங்க த்தை அறிவித்தார்.
இந்த அறிவிப்பு தென்னாபிரிக்க அபிவிருத்திக் குழுவின் தீர்மானத்துக்கெதிரானதென மாநாடு கூறியது மடகஸ் காரில் சென்ற மார்ச் மாதம் அரசியல் சதி நடந்தது. முன்னாள் ஜனாதிபதி ரவோ ல்மானா பதவி கவிழ்க்கப் பட்டார். ராஜோலினா இப் புரட்சியை முன்னின்று செய்தார்.
இப்புரட்சியை முடிவுக்குக் கொண்டுவர தென்னாபிரிக்க நாடுகளின் அனுசரணையுடன் மொஸா ம்பிக் மத்தியஸ்தம் வகித் தது. ஜனாதிபதி, உபஜனா திபதி, பிரதமர் ஆகிய மூன்று முக்கிய பதவிகளும் இரண்டு கட்சிகளிடையே பகிரப்பட வேண்டுமென இங்கு முடிவெடுக்கப்பட் டது.
தற்போது அமைக்கப்பட் டுள்ள அரசாங்கம் ரஜோ லினாவின் ஆதரவாளர்களு க்கே முக்கிய பதவிகளை வழங்கியுள்ளது. இதனால் மொஸாம்பிக் தீர்மானத்தை மீறும் வகையில் இந்த முடிவு உள்ளதால் தென்னா பிரிக்க நாடுகள் ஒன்றியம் மடகஸ்கார் அரசாங்கத்தை நிராகரித்தது.»»  (மேலும்)

9/10/2009

இடைத்தங்கல் முகாம்களில் இருந்து மேலும் 10,000 பேர் வெள்ளிக்கிழமை விடுவிப்பு

இலங்கையின் வடக்கே இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும மக்களில் மேலும் 10,000 பேர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்படுவார்கள் என்று இலங்கையின் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
இது குறித்த அறிவித்தல்கள் அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

விடுவிக்கப்படும் இந்த மக்கள் முதலில் ஒரு இடத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னர் அவர்களின் இருப்பிடங்களுக்கு செல்லும் வரை மாவட்ட அரசாங்க பொறுப்பில் அவர்கள் இருப்பார்கள் என்றும், ஆறு மாத காலம் வரை அவர்களுக்கு தேவையான உலர் உணவுகள் அரசால் வழங்கப்படும் என்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கூறுகிறார்
மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கான தொழில் வாய்ப்புகளையும் அரசு ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
அவர் வெளியிட்ட கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
»»  (மேலும்)

துருக்கியில் பாரிய வெள்ள அனர்த்தம் 18 பேர் பலி; பலரை காணவில்லைதுருக்கியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக 18 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளனர். தலைநகர் இஸ்தான்புல்லில் மட்டும் 12 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்தான்புல்லிலுள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு அண்மையிலுள்ள வீதிகள் பலவும் நீரில் மூழ்கியுள்ளன.
மேலும் வெள்ளத்தில் கார்கள் பல அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் அக் கார்களின் சாரதிகள் வெளியேற முடியாத நிலையில் கார்களுக்குள் சிறைப்பட்டிருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
»»  (மேலும்)

தலிபான்களால் கடத்தப்பட்ட பிரிட்டிஷ் செய்தியாளர் மீட்பு

ஆப்கானிஸ்தானில் நேட்டோ சிறப்புப் படையினர் நடத்திய ஒரு பிரமிப்பூட்டும் வகையில் ஹெலிகாப்டர் மூலமான மீட்பு நடவடிக்கையில், தலிபான்களால் கடத்தப்பட்டிருந்த ஒரு பிரிட்டிஷ் செய்தியாளர் மீட்கப்பட்டார்.
ஆனால், இந்த நடவடிக்கையில் இடம்பெற்ற துப்பாக்கி மோதலில், இவரது சகாவான ஆப்கானியர் ஒருவரும், பிரிட்டிஷ் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டனர்.
இதில் வேறு இரு ஆப்கானிய பொதுமக்களும் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நியூயோர்க் டைம்ஸ் செய்தியாளரான ஸ்டீபன் ஃபரலும், சுல்தான் முனாடியும் பிடித்து வைக்கப்பட்டிருந்த தலிபான்களின் வளாகம் ஒன்றினுள் நேட்டோ படையினர் தரையிறங்கினார்கள்.
படையினர் மேலும் கவனமாக இருந்திருந்தால், செய்தியாளர் முனாடி காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்று ஆப்கான் செய்தியாளர் அமைப்பு ஒன்று கூறியுள்ளது
»»  (மேலும்)