10/30/2009

கிழக்கில் தொடர்ந்து மூன்று நாட்களாக மழை:வரட்சி நிலையில் மாற்றம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட கால வரட்சிக்குப் பின்னர் கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து மழை பெய்துவருகிறது.இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 45.2 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதானிப்பு நிலைய பொறுப்பதிகாரி எஸ்.சூரியகுமார் தெரிவித்தார்.

புதியகாத்தான்குடி,நாவற்குடா,பூம்புகார்,சொறிக்கல்முனை,வெல்லாவெளி,குருக்கள்மடல் உட்பட பல பகுதிகளில் வீதிகளிலும், விளையாட்டு மைதானங்கள், பள்ளமான பகுதிகளிலும் நீர் தேங்கியுள்ளதாக பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த 6 மாதங்களாக இம்மாவட்டத்தில் வரட்சி நிலவியமையால் றூகம் குளம் உட்பட பல பயிர் செய் நிலங்கள் நீரற்று வரண்டு காணப்பட்டன. இதனால் வேளாண்மை பாதிக்கப்பட்டிருந்தது.அத்துடன் கிணறுகள் வற்றியமையால் குடிநீருக்குத் தட்டுப்பாடு நிலவியிருந்தது.

எதிர்வரும் சில நாட்களுக்கு இம்மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்யுமென மாவட்ட வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
»»  (மேலும்)

வடக்கிலிருந்து வெளியெற்றப்பட்டு முஸ்லிம்களின் 19 வருட பூர்த்தி
வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இன்றுடன்(2009.10.30) பத்தொன்பது வருடங்கள் ப+ர்த்தியாகின்றன.ஆயிரத்து தொல்லாயிரத்து தொன்னூராம் ஆண்டு இம்மக்கள் வடமாகாணத்தில்,மன்னார்,முல்லைத்தீவு,கிளிநொச்சி,யாழ்ப்பாணம்,வவுனியா ஆகிய மாவட்டங்களிலிருந்து வெளியேறி தற்போது புத்தளம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வசித்துவருகின்றனர். இந்த நிலையில் தமது வெளியேற்றம் குறித்தும்.

இத்தினத்தை நினைவு கூறும் வகையில் முஸ்லிம்; சமாதான பேரவையின் புத்தளம்; கிளை ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாடு புத்தளம் முஸ்லிம் சமாதான செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம் பெற்றது.

சமாதான செயலகத்தின் பிராந்திய பணிப்பாளர் எஸ்.என்.எல்.எம்.சுஹைர் தலைமையில் இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டில்,பதினொரு தீர்மானங்கள் அடங்கிய கோறிக்கை ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது.

அவை வருமாறு :

1) இரண்டு மணித்தியால அவகாசத்தில் முஸ்லிம்கள் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை தொடர்பாக விசாரித்து.ஆராய்ந்து,தேவையான பரிந்துரைகளுடன்,அறிக்கை சமர்பிக்க ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று உடனடியாக நியமிக்கப்பட வேண்டும்.

2) பலவந்த வெளியேற்றத்தினால் படுமோசமாக பாதிக்கப்பட்டு.இன்னமும் அகதிவாழ்வு நடத்திவரும்,வடக்கு முஸ்லிம்களுக்கு உரிய நஷ்டயீடுகள் துரித கதியில் வழங்கப்பட வேண்டும்.

3) மீள்குடியேற்ற நிகழ்வில் முஸ்லிம்களின் விவகாரம்,தெரிவிக்கப்பட்டு அது அவர்களுக்கு பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும்.

4) மீள்குடியேற்றத்தின் போது ஆயிரத்து தொல்லாயிரத்து தொன்னூராம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு,முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

5) பலவந்தமாக வெளியேற்றப்படடுள்ள முஸ்லிம்களின்,வடக்கிலுள்ள பூர்வீக சொத்துக்களுக்கு ,PRESCRIPTION ORDINANCE எக்காரணம்; கொண்டும் பிரயோகிக்கப்படக் கூடாது.

6) பலவந்தமாக வெளியேற்றப்படடுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான வடக்கிலுள்ள காணிகள் அவர்களுக்கே மீண்டும்; கையளிக்கப்பட வேண்டும்.

7) 1990 ல் முஸ்லிம்கள் புலவந்தமாக வெளியேற்றப்பட்ட போது இருந்த குடும்பங்களின் எண்ணிக்கை கடந்த 19 ஆண்டுகளில் வெகுவாக அதிகரித்தள்ளது.எனவே அதிகரித்துள்ள குடும்பங்களுக்கு மீள்குடியேற்றத்தின் போது புதிதாக காணிகள்; வழங்கப்பட வேண்டும்.

8) பலவந்தமாக வெளியேற்றப்படடுள்ள முஸ்லிம்களுக்கு 1990 ஆம்; ஆண்டு முதல் கொடுக்கப்பட்டுவரும்,நிவாரணத் தொகை ஆரம்பம் முதல் அதே தொகையாகவே இருந்துவருகின்றது.சுமார் 19 வருடகாலப் பகுதியில்,ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு,வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை கவனத்திற் கொண்டு தற்போதைய நிலாரயத்; தொகை அதிகரிக்கப்பட வேண்டும்.

9) அரச நியமனங்கள்,வளப்பகிர்வுகளின் போது பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு உரிய பங்குகள் சரியாக,நிரப்பமாக வழங்கப்பட வேண்டும்.

10) யுத்த காலத்தில் கடத்தப்பட்டு இதுவரைக்கும் தகவல் இல்லாத முஸ்லிம்களின்,குடும்பங்களுக்கு துரிதமாக நட:டுயீடு வழங்கப்படுவதுடன்,மரண அத்தாட்சி பத்திரங்கள் வழங்கப்பட வேண்டும்.

11) பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் சுமார் இரு தசாப்தங்களாக புத்தளம்; பிரதேசத்தில் வாழ்ந்து வரகின்றனர்.இதன்; நிமித்தம் புத்தளம் பிரதேச ப+ர்வீக மக்களுக்கு ஏற்பட்டுள்ள காணிப் பங்கீடு,கல்வி,அரச நியமனங்கள்,தொழில்வாய்ப்பு சுகாதாரம்,பல்கலைக்கழ அனுமதி உட்பட எல்லா வகைகளிலுமான,இழப்புகளும அவசரமாக உரிய முறையில் ஈடுசெய்யப்பட வேண்டும். இக்கோரிக்கைகள் ஜனாதிபதி,பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது
»»  (மேலும்)

ஜனாதிபதி நாளை திருப்பதி பயணம் : ஆந்திராவில் வரலாறு காணாத பாதுகாப்பு

ஜனாதிபதி ராஜபக்ஷ திருப்பதி கோவிலுக்கு நாளை செல்லத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி அவர் சிறப்பு விமானம் மூலம் கொழும்பிலிருந்து ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு நாளை காலை 11.00 மணிக்கு வருகிறார். பின்னர் அவர் வாகனம் ஒன்றில் திருப்பதி மலைக்குச் செல்வார் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து அவர் மதியம் 1.30 மணிக்கு திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்கிறார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. ராஜபக்ஷவின் வருகைக்கு இங்குள்ள தமிழர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் அவருக்கு வரலாறு காணாத பலத்த பாதுகாப்பு அளிக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.

ரேணிகுண்டா விமான நிலையத்தில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ராஜபக்ஷ செல்லும் வழி நெடுகிலும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்படுகிறது


»»  (மேலும்)

கிழக்கு முதல்வர் அக்கரைப்பற்று பெரிய தம்பிரான் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில்; ஈடுபட்டார்தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று அக்கரைப்பற்றுப் பிரதேசத்திற்குச் சென்று அப்பிரதேச மக்களோடு கலந்துரையாடினார். இதன்; முதற் கட்டமாக அக்கரைப்பற்று பெரியதம்பிரான் ஆலயத்திற்குச் சென்று வமிபாட்டில் ஈடுபட்டதோடு, அவ்வாலயத்தின் தேவைகள் மற்றும் அப்பிரதேச மக்களின் தேவைகள் குறிது;தும் ஆலயத்தின் தர்மகர்த்தாக்களிடம் கேட்டறிந்து கொண்டார். அம்பாறை மாவட்டத்தில் கிழக்கு முதல்வரின் அலுவலகம் அமைப்பது தொடர்பில் அண்மையில் பலவேறு பிரச்சினைகள் எழுந்தன. அவைகள் அனைத்தும் தற்போது இடைநிறுத்தப்பட்டிருக்கின்ற இவ் வேளையில், அபிவிருத்திப் பணிகள் குறித்து பல்வேறுபிரதேசங்களைச் சாந்த மக்களும் தமது கோரிக்கைகளை முதல்வர் எடுத்துக் கூறி வருகின்றார்கள். இது தொடர்பில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அமைப்பாளர் வி.சத்தியசீலன் அவர்களின் தேவைகள் குறித்து முதல்வர்க்கு விளக்கி அவரின் ஊடாக பல தேவைகள் நிறைவேற்றப்பட்டும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

»»  (மேலும்)

அம்பாறை மாவட்ட பெண்களின் வாழ்வாதரத்தினை உயர்த்துவதற்காக சுயதொழில் முயற்சி

கிழக்கு மாகாணத்தில் உள்ள பெண்களில் பெரும்பாலானவர்கள் தங்களது குடும்பங்களுக்கு தலைமைப் பொறுப்பை வகிப்பவர்கள் ஆக இருக்கின்றார்கள். ஆனால் இவர்களுக்கான தொழில் வாய்ப்பானது எதுவுமே கிடையாது. எனவேதான் கிழக்கு மாகாண முதலமைச்சர் தனது அமைச்சின் கீழ் வருகின்ற கிராமிய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக குறித்த பெண்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பயிற்சிகளும் வழங்கி அதற்கான தொழில் உபகரயங்களும் வழங்கப்பட்டு வருகின்றன். அதன் ஓர் கட்டமாக இன்று அம்பாறை மாவட்டத்தின் குறிப்பிட்ட பிரதேசங்களிலுள்ள சுமார் நாற்பது பெண்களுக்கு தையல் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்ளுக்கான தையல் இயந்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டன. மேற்படி நிகழ்வானது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் வி. சுத்தியசீலன் தலைமையில் முதலமைச்சரின் அம்பாறை மாவட்ட உப அலுவலகத்தில் இடம் பெற்றது. இதில் பயிற்சினை முடித்த பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கி வைத்து உரையாற்றிய முதல்வர் சந்திரகாந்தன் தனது உரையில், எமது கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற பெண்களிலே அதிகமானவர்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்தவர்களே அதிகமானோர் இருக்கின்றார்கள். இவர்களின் வாழ்வாதாரங்களை உயர்த்துவதற்கான ஓர் வழியாக கிராமிய அபிவிருத்தியின் ஊடாக அவர்களுக்கான சுயதொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு எமது அமைச்சின் ஊhடாக பல மேம்பாட்டுத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது நடைமுறைப் படுத்தப்ட்டு வருகின்றது. அதன் ஓர் கட்டம் தான் தையல் பயிற்சி அளித்து அவர்களுக்கான தையல் உபகரணங்களும் வழங்கும் நிகழவாகும். இதன் ஊடாக அவர்களது தங்களது வருமானங்களை தாங்களே ஈட்டிக் கொள்ளக் கூடிய ஓர் சந்தர்ப்பத்தினை உருவாக்கி கொடுத்திருக்கின்றோம். எனவே அதனைப் பெறுகின்ற ஒவ்வொருவரும் தங்களது வருமானங்களை தாமே ஈட்டி எமது சமூகத்தில் உயர்நத ஓர் இடத்தினை வகிப்பதோடு, கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தியிலும் பங்குதாரர்களாக மாற வேண்டு; எனக் கேட்டு;க் கொண்டார்.
»»  (மேலும்)

கெவிளியா மடு மீள்குடியேற்றம் தொடர்பான உயர்மடடக் கலந்துரையாடல்
கெவிளியா மடு சிங்கள, தமிழ் மக்கள் அங்கிருந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக இடம் பெயர்ந்திருந்தார்கள். இது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி ஏ.வாசுகி தலைமையில் புலுக்குணாவ பாலர் பாடசாலையில் இன்று இடம் பெற்றது. இதில் கடந்த காலத்தில் இடம் பெயர்நத தமிழ் சிங்கள் மக்களை மீண்டும் அப் பிரதேசங்களில் மீளக் குடியமர்த்துவது தொடர்பாகவும், அவர்களின் ஜீபனோபயமான விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொடர்பாகவும் விரிவாக ஆரயப்பட்டது. அதாவது இப் பிரதேசங்களில் அக் காலத்தில் சுமார் 350 குடும்பங்கள் தமிழ் மக்கள் வாழ்ந்ததாக மக்கள் தெரிவித்தார்கள். அவர்கள் தற்போது இவ்விடங்களில் மீண்டும் குடியமபத்துவது தொடர்பாக ஆராயப்பட்டதோடு அதற்கான 10பேர் அடங்கிய குழு ஒன்றும் நியமிக்கப்பட்டிருக்கின்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கிழக்கு முதல்வரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தனது உரையில் குறிப்பபிடுகையில், கடந்த காலங்களில் ஏற்பட்ட அசாதாரண சூழல் தற்போது இல்லை. நாங்கள் அனைவரும் இனமத பேதங்களை மறந்து ஒருத்தருக்கொருவவர் அன்பு காட்டி வாழ வேண்டும். அத்தோடு தனிநபர்களுக்கிடையே ஏற்படுகின்ற பிரச்சினைகளை தனித் தனிநபர்களே தீர்த்துக்கொள்ள வேண்டும். மாறாக அதனை ஓர் இனப்பிரச்சினையாக மாற்றக் கூடாது. தற்போது எமது நாட்டிலே பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்படடிருக்கின்றது. எனவே நாங்கள் எங்களது சொந்த இடங்களிலே இருந்து கொண்டு எமக்கே உரித்தான தொழில்களைச் செய்து கொண்டு எமது மாகாணத்தின் வளர்சியில் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இங்கு குடியேற்றப்படுகின்ற மக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு அப் பிரதேசத்தில் நியமிக்கப் பட்டிருக்கின்ற குழுப்பிரதிநிதிகள் பொறுப்பாக இருந்து செயற்படுவார்கள். அத் தோடு இங்குள்ள பண்ணையாளர்களுக்கான மேய்ச்சல் தரையினை ஒதுக்குவது தொடர்பாக பேசப்பட்டது. இந் நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர், அம்பாறை மாவட்ட அரச அதிபர், கிழக்கு மாகாண முதலமைச்சரின்; மீள் குடியேற்ற இணைப்பதிகாரி, முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர், கிராம சேiவை உத்தியோகஸ்த்தர்கள் அப் பிரதேச மக்கள் கலந்து கொண்டார்கள்.

»»  (மேலும்)

ஜீ.எஸ்.பி+ சலுகையை மேற்கத்திய நாடுகள்வளர்முக நாடுகளைத் தங்கள் காலடிக் குள் வைத்திருப்பதற்காகவே பயன்படுத்துகின்றன

இன்று அரசியல் அரங்கில் பிரதான பேசுபொருளாக இருப்பது ஜீ.எஸ்.பி+ சலுகை. இச் சலுகை நிறுத்தப் பட்டால் நாடு மீள முடியாத நெருக்கடிக்குள் தள்ளப் படும் என்ற வகையில் எதிரணியினர் பிரசாரம் செய்கின் றனர்.

ஜீ.எஸ்.பி+ சலுகை நிறுத்தப்பட மாட்டாது என்றும் அது நிறுத்தப்பட்டாலும் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற் படாத வகையில் பார்த்துக் கொள்ள முடியும் என்றும் அரசாங்கம் கூறுகின்றது.

ஜீ.எஸ்.பி+ சலுகை தொடர்பான வாதவிவாதங்கள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகின்றன. எதிரணித் தலை வர்கள் மக்களை அச்சுறுத்தும் வகையில் மடுவை மலை யாக்கித் தெரிவிக்கும் கருத்துகள் ஆரோக்கியமானவைய ல்ல. இச் சலுகை ஒரு வரப்பிரசாதம்.

இது இல்லாவிட் டால் எல்லாமே முடிந்துவிட்டது என்றாகாது. அதற்கேற்ற விதத்தில் திட்டமிட்டுப் பொருளாதாரத்தை முன்னெடுத் துச் செல்வது சிரமமான காரியமல்ல.

கடந்த காலங்களிலும் இவ்வாறான நிலைமைகள் தோன்றின. சரியான திட்டமிடலின் அடிப்படையில் செயற்பட்டு அன் றைய அரசாங்கங்கள் நாட்டை முன்னெடுத்துச் சென்றன. கல்ரெக்ஸ், ஷெல் போன்ற வெளிநாட்டுக் கம்பனிகள் பெட்ரோலிய வர்த்தகத்தில் ஏகபோகம் வகித்த நிலையை மாற்றி, பெட்ரோலிய விநியோகத்தை அரசுடைமை ஆக் கிய போது வெளிநாட்டுக் கடனுதவி நிறுத்தப்பட்டது.

அத னால் நாடு மூழ்கிவிடவில்லை. அன்றைய அரசாங்கம் சரியான திட்டமிடலுடன் செயற்பட்டதால் அப்பாதிப்பைத் தவிர்த்து முன்னேற முடிந்தது. வெளிநாட்டவர்களின் பெரு ந்தோட்டங்களைத் தேசவுடைமை ஆக்கிய காலத்திலும் இவ்வாறான நிலைமை ஏற்பட்டது.

இலங்கைத் தேயி லையை ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்ய முடி யாது என்றும் அதனால் நாட்டின் பொருளாதாரம் மோச மாகப் பாதிக்கப்படும் என்றும் அன்றைய எதிரணியினர் பிரசாரம் செய்தார்கள். ஆனால் நாடு மூழ்கிவிடவில்லை பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படவில்லை.

ஜீ.எஸ்.பி+ சலுகையை மேற்கத்திய நாடுகள் இலங்கைக்கு எதிரான ஆயுதமாகவே பயன்படுத்துகின்றன. இலங்கை யில் மனித உரிமைகள் மீறப்படுவதால் இச் சலுகையை நிறுத்த வேண்டும் என்று அந்நாடுகள் கூறுவதொன்றும் புதுமையானதல்ல. வளர்முக நாடுகளைத் தங்கள் காலடிக் குள் வைத்திருப்பதற்காக மனித உரிமை பற்றிப் பேசுவது மேற்கத்திய நாடுகளுக்கு வழக்கமாகிவிட்டது.

தங்களு டன் ஒத்துப்போகும் நாடுகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை இவை கண்டுகொள்வதில்லை. தங்கள் தாளத்துக்கு ஆடாத நாடுகளில் மனித உரிமை மீற ல்களைக் ‘கண்டுபிடிக்கின்றன’.

ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் வடக்கிலும் கிழக்கிலும் பீப்பாக் குண்டுகளைப் போட்டுப் பெருந்தொகையானோரைக் கொன்று குவித்த போது இந்த மேற்கு நாடுகளுக்கு மனித உரிமை மீறல்கள் தென்படவில்லை. அந்த அர சாங்கத்துக்கு இந்நாடுகள் கோடி கோடியாக நிதியுதவி வழங்கின.

மேற்கத்திய நாடுகளைப் போலவே இலங்கையின் எதிரணிக் கட்சிகளும் ஜீ.எஸ்.பி+ சலுகையை அரசாங்கத்துக்கு எதி ரான அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துகின்றன. இந்தப் பிரசாரத்தில் இக் கட்சிகள் மக்கள் மத்தியில் அச்ச உண ர்வு தோன்றும் விதத்தில் செயற்படுவது கண்டனத்துக்குரி யது.

ஜீ.எஸ்.பி+ சலுகையைப் பற்றி மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இச் சலுகையை நிறுத்துவதால் இலங்கை க்கு மாத்திரம் பாதிப்பு என்றில்லை. ஐரோப்பிய வர்த்தக நிறுவனங்களுக்கும் பாதிப்பு உண்டு. எனவே இவ்விடய த்தில் ஐரோப்பிய நாடுகள் அவசரப்பட்டு முடிவெடுக்கப் போவதில்லை.

மேலும், இச் சலுகை நிறுத்தப்படுமாயின் அதனால் நாட்டின் பொருளாதாரத்துக்கோ மக்களுக்கோ பாதிப்பு ஏற்படாதிருப்பதற்கான சகல முன்னேற்பாடுக ளும் செய்யப்பட்டிருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் கூறு வது நம்பிக்கையூட்டுகின்றது.
»»  (மேலும்)

யாழ். பாடசாலைகளுக்கு 33 தகவல் தொழில் நுட்ப ஆய்வு கூட வசதிகள்

யாழ். மாவட்டத்திலுள்ள 33 பாடசாலைகளுக்கு தகவல் தொழில்நுட்ப ஆய்வு கூடங்கள் பெற்றுக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் முதற் கட்டமாக கணனிகள் வழங்கும் நிகழ்வு யாழ். நகரில் நடைபெற்றது.

தகவல் தொழில் நுட்ப ஆண்டை முன்னிட்டு நாடு முழுவதும் 1000 தகவல் தொழில் நுட்ப ஆய்வு கூடங்கள் 1000 பாடசாலைகளில் அமைக்கப்படவுள்ளன.

இத் திட்டத்தின் கீழ் வட மாகாணத்திற்கு 41 பாடசாலைகளில் 41 ஆய்வு கூடங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன. யாழ். மாவட்டத்தில் 33 பாடசாலைகளிலும், ஏனையவை வவுனியா, மன்னார் மாவட்டங்களிலும் அமைக்கப்படவுள்ளன.
»»  (மேலும்)

10/29/2009

சமுகத்தின் நிலை உயரவேண்டுமானால் அடிப்படையில் கல்வியில் மாற்றம் ஏற்பட வேண்டும்.
சமுகத்தின் நிலை உயரவேண்டுமானால் அடிப்படையில் கல்வியில் மாற்றம் ஏற்பட வேண்டும். கல்வி அறிவு மேம்படும் போது ஜனநாயகத் தன்மையும் நம்பிக்கையும் மேலோங்கும். கிராமப்புறங்கள் தொடர்ந்து கிராமப்புறங்களாகவே மாறிக்கொண்டிருப்பதற்கும் இதுவே காரணம் என கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் பூ. பிரசாந்தன் குறிப்பிட்டார்.இவர் மேலும் குறிப்பிடுகையில் அரச அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் சமூகத்தினையும் தங்களையும் பிரித்துப் பார்க்காமல் தாங்களும் சமுகம் என்ற நிலைக்குள் வரவேண்டும் தங்களது பிள்ளைகளை கிராமப்புற உள்ளுர் பாடசாலைகளில் கல்வி கற்க அனுமதிக்கவேண்டும் உள்ளுர் வைத்திய சாலைகள் தபாலகங்கள் பொதுச் சந்தைகள், கடைகள், காரியாலயங்களை பாவிக்கத் தொடங்குவார்களாக இருந்தால் கிராமப்புற மக்களின் தேவையினை உணர்ந்து கொள்ளமுடியும் அபிவிருத்தியின் நிலைப்பாடும் புரியும் எனவும் குறிப்பிட்டார். சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு விஸ்வ கலா கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் 25.10.2009 அன்று அரையம்பதி நந்தகோபன் கலாசார மண்டபத்தில் நடாத்தப்பட்ட நிகழ்வின்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அநேகமான ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை தாங்கள் கல்வி கற்பிக்கும் பாடசாலையில் அனுமதிக்காமல் நகர்ப்புற பாடசாலைகளில் அனுமதிக்காக காத்துக்கிடப்பது நல்ல உதாரணம். இவர்கள் தங்கள் மீது நம்பிக்கை வைக்காத தன்மையினை இது எடுத்துக்காட்டுகின்றது. இதுபோல் ஊர் தலைவர்களும் தாங்கள் சார்ந்தவர்களை நகர்புறம் நோக்கி இடம் நகர்த்தும் நிலை மாற வேண்டும் இல்லையேல் என்றும் ஏற்றத்தாழ்வான சமூகத்தினை மாற்ற முடியாமல் சென்றுவிடும். ஆசிரியர் இடமாற்றங்களில் கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் மாணவர்களின் கல்வியில் கவனம் கொண்டு செயற்படுவது போன்று அனைத்து ஆசிரியர்களும், தலைவர்களும் செயற்பட வேண்டும் எனவும் கேட்டக்கொண்டார்.

Categories: செய்திகள்

Tags:

-->

»»  (மேலும்)

அம்பாறையில் உள்ள ஓர் தமிழ் மகாவித்தியாலயம் இடித்து நாசம் செய்யப்பட்டமைக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பூரண எதிர்ப்பு
அண்மையில் அம்பாறையில் உள்ள தமிழ் மகா வித்தியாலயம் இடித்து நாசம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக த.ம.வி.பு கட்சியின் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை உறுப்பினர் புஸ்ப்பராசா இன்று நடைபெற்ற மாகாண சபை அமர்வில் தமது வாதத்தினை முன்வைத்தார். அவர் முன்வைத்த வாதத்தில் குறிப்பிடப்படதாவது.
கிழக்கு மாகாணத்திலே அம்பாறை மாவட்டத்தில்ட நடந்த இச்சம்பவமானது இன நல்லுறவை சீர்குலைக்கும் ஓர் சதி முயற்சியாகும். காரணம் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு ஜனநாயகம் தலைதூக்கியிரக்கின்ற இச்சூழலில் தமிழ் பாடசாலை ஒன்று இராணுவ நடவடிக்கைக்காக இடித்து தரைமட்டமாக்கப்படுவது உண்மையிலேயே வேதனையளிக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்திலே சிங்கள மகா வித்தியாலயம் இரக்கின்றது. அதேபோல் கல்முனை மற்றும் அக்கரைப்பற்றில் தமிழ் மகா வித்தியாலயம் இருக்கின்றது இவற்றிற்கெல்லாம் எந்தவொரு பிரச்சினையும் ஏற்படவில்லை ஆனால் மாறாக திட்டமிட்டு இவ் அம்பாறை தமிழ் மகா வித்தியாலயத்தை மாத்திரம் இவ்வாறு இடித்து தகர்ப்பது நியாயமற்ற ஒன்றாகும் எனவே இதுபோன்ற செயற்பாடுகளை இனிமேலும் செய்யாது, இதற்கு கல்வி அமைச்சும் அனுமதிக்கக்கூடாது அத்தொடு மொழி ரீதியான முரண்பாட்டிற்கு இடமளிக்கக்கூடாது எனவே மேற்குறித்த அம்பாறை தமிழ் மகா வித்தியாலயத்தினை கல்முனை கல்வி வலயத்திற்கு மாற்றித்தர வேண்டும். இனி வருகின்ற காலங்களிலாவது இன நல்லுறவை பாதிக்கின்ற செயல்களுக்கு கல்வி அமைச்சு மாத்திரமன்றி எந்த ஓர் அமைச்சும் இடமளிக்கக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.

Categories: செய்திகள்

Tags:

-->
»»  (மேலும்)

முஸ்லிம் நாடுகளில் நிலவும் வன்முறைகள் வெளிநாட்டு முகவர்களால் திட்டமிடப்படுகின்றன


ஈரான் ஆன்மிகத் தலைவர் ஆயதுல்லா அலி கொமய்னிமுஸ்லிம் நாடுகளில் இடம்பெறும் வன்முறைகள், தாக்குதல்களை வெளிநாட்டு முகவர்கள் மறைமுகமாகத் திட்டமிட்டு நடத்துவதாக ஈரான் ஆன்மிகத் தலைவர் ஆயதுல்லா அலி கொமய்னி தெரிவித்தார்.
ஈரானிலிருந்து இம்முறை புனித ஹஜ்ஜிக்குச் செல்வோருக்கென ஏற்பாடு செய்யப்பட்ட விசேட வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆயதுல்லா அலி கொமய்னி இதைக் கூறினார்.
பாகிஸ்தான், ஈராக், ஆப்கானிஸ்தானில் இடம்பெறும் மோதல்களால் முஸ்லிம் சகோதரர்கள் பலியாகின்றனர். ஷியா சுன்னி முஸ்லிம் பிளவுகளை ஆழமாக்கி எமது எதிரிகள் முஸ்லிம் சமூகத்தைக் கூறுபோடுகின்றனர்.
அண்மையில் ஈரானில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலும் வெளிநாட்டு முகவர்களின் கைவரிசையென்றும் ஆயதுல்லா அலி கொமய்னி சுட்டிக்காட்டினார்.
புனித ஹஜ் கடமைக்காக மக்கா செல்வோர் எமது எதிரிகளுக்கு நமது ஒற்றுமையைக் காட்டவேண்டும். முஸ்லிம் உலகுக்கெதிராகப் புரியப்படும் சதித் திட்டங்களை முறியடிக்கும் உள்ளுணர்வும் ஒற்றுமையும் ஹஜ் கடமைகளில் வெளிவரவேண்டுமென்றும் ஆயதுல்லா அலி கொமய்னி குறிப்பிட்டார்.
»»  (மேலும்)

திருமலையில் மெய்வல்லுநர் போட்டிகள்

ஆசிரியர்களுக்கு இடையிலான மெய் வல்லுநர் போட்டி நவம்பர் 7 ஆம், 8 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது. கல்வி அமைச்சு விளையாட்டு பிரிவு இதனை ஏற்பாடு செய்துள்ளது.
திருகோணமலை மெக்கெய்சர் மைதானத்தில் நடைபெறும் போட்களில் 1250 ஆசிரியர்கள் பங்கு கொள்கின்றனர். 25 வயது முதல் 60 வயது வரையானோர் 7 குழுக்களாக இப்போட்டி களில் கலந்து கொள்ள உள்ளனர்.
கிழக்கு மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகள் இப் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களும், கல்விக் கல்லூரி, பயிற்சி கலாசாலைகள் என்பனவற்றில் பயிற்சி பெறும் ஆசிரி யர்களும் இதில் பங்கேற்கின்றனர். (அ)


»»  (மேலும்)

ஏ - 9 ஊடாக அம்பியூலன்ஸ் சேவை நேற்று ஆரம்பம்அமைச்சர் டக்ளஸ் தொடக்கி வைத்தார்

ஏ -9 தரை வழியினூடாக நோயா ளிகளை சிகிச்சைக்காகக் கொழும்பு க்கு கொண்டு செல்லும் நடவடி க்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அம்பியூலன்ஸ் மூலம் கொண்டு செல்லும் இந்த நடவடிக்கையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று ஆரம்பித்து வைத்தார்.
ஏ- 9 தரைப்பாதை ஊடாக வரைய றைக்கு உட்பட்ட நிலையில் தற்போது பயணிகள் போக்குவரத்து உட்பட ஏனைய சில போக்குவரத்து நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
ஆயினும் தற்போது அம்பியூலன்ஸ் வண்டிகள் மூலம் நோயாளர்களை யாழ் குடாநாட்டிலிருந்து பிற மாவ ட்டங்களுக்கு மேலதிக சிகிச்சை க்காக அனுப்பி வைக்கும் நடவடிக் கையும் அமைச்சர் டக்ளஸ் தேவான ந்தாவினது பெரு முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சென் ஜோன்ஸ் சேவைக்குரிய அம்பியூலன்ஸ் வண்டி மூலம் நேற்று இ. சீவரத்தினம் எனும் நோயாளர் மேலதிக சிகிச் சைக்காக கொழும்பு பொது மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார்.»»  (மேலும்)

நாட்டில் 8 மாவட்டங்களில் கடும் வரட்சி; இரண்டு இலட்சம் குடும்பங்கள் பாதிப்பு

நாட்டின் எட்டு மாவட்டங்களில் நிலவிவரும் வரட்சி காரணமாக சுமார் 2 இலட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு ள்ளன. இவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கென 20 மில்லியன் ரூபா அவசரமாக வழங்கப்பட்டுள்ளதோடு உலர் உணவுப் பொருட்கள், குடிநீர் என்பனவும் வழங்கப்பட்டு வருவதாக அனர்த்த நிவாரண சேவைகள் நிலையப் பணிப்பாளர் சரத் பெரேரா தெரிவித்தார்.
வரட்சி காரணமாக மொனராகலை மற்றும் அம்பாறை மாவட்டங்களே கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு பொலன்னறுவை, அம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, புத்தளம், மாத்தளை, குருணாகல் மாவட்டங்களும் ஓரளவு பாதிக்கப்பட்டுள்ள தாக இடர்முகாமைத்துவ நிலையம் கூறியது.

மொனராகலை மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 28 ஆயிரத்து 290 குடும்பங்களைச் சேர்ந்த 5,77,341 பேர் வரட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதோடு அம்பாறை மாவட்டத்தில் 29,792 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 11,352 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குடிநீர் இன்றியும் ஏனைய தேவைகளுக்கு நீர் வசதியின்றியும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மொனராகலை மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு 24 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இது தவிர ஆயிரம் லீட்டர் கனவளவுடைய 50 நீர்த்தாங்கிகளும் வழங்கப்பட்டுள்ளதோடு 12 ஆயிரம் குடும்பங்களுக்கு இரு வாரங்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.
நீர்ப்பாசனக் கிணறுகளை புனரமைப் பதற்காக 11 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்தது.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்திற்கு ஆயிரம் கனலீட்டர் கொண்ட 81 நீர்த்தாங்கிகள் வழங்கப்பட்டுள்ளன. உலக உணவுத் திட்டத்தினூடாக கிணறுகளை புனரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிணறுகளை புனரமைக்க 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை மாவட்டத்திற்கு நிவாரணம் வழங்குவதற்காக 13 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. வரட்சியினால் பல பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து வரட்சி நீடிக்குமானால் 3 மாதங்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படுமென அனர்த்த நிவாரண நிலையம் கூறியது.
மழை எதிர்பார்ப்பு
இதேவேளை வரட்சியினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்வரும் ஓரிரு தினங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென எதிர்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் கூறியது.
நீண்ட நாட்களின் பின்னர் நேற்று முன்தினம் (27) மொனராகலையில் 9.5 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
ஒக்டோபர் இறுதியில் ஆரம்பமாகும் மழை நவம்பர் இறுதிவரை பெய்யும் எனவும் இதன் மூலம் வரட்சி நிலை தணியுமெனவும் எதிர்பார்க்கப்ப டுகிறது.»»  (மேலும்)

10/28/2009

நாடாளுமன்ற - ஜனாதிபதி தேர்தல்கள் ஒரே தினத்தில் : அரசு அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்தத் தீர்மானிக்கப்படுள்ளது.இது தொடர்பில் எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கொள்கைப் பிரகடனத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
»»  (மேலும்)

யாழ். மாநகரம் இரண்டு ஆண்டுகளில் முழுமையாக அபிவிருத்தியாழ்ப்பாண மாநகரத்தை அடுத்த இரண்டு ஆண்டுகளில் முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களை வகுத்துச் செயற்படுத்துவதாக யாழ்.
மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தினகரனுக்குத் தெரிவித்தார். தமது அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு எதிர்க் கட்சிகளின் உறுப்பினர்களது ஆதரவினையையும் பெற்றுக் கொள்வதாகவும் அவர் கூறினார்.
வடக்கின் வசந்தம் அபிவிருத்தி செயற்றி ட்டங்களுக்குப் பற்றாக்குறையாக வுள்ள ஆளணி வளத்தைப் பூர்த்தி செயற்வதற்கு முதற்கட்டமாக நடவடிக்கை எடுத்துள்ளதோடு நகர சுத்திகரிப்புப் பணிகளை மேற்கொள்ள வென ஆறு வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டு ள்ளன. அதேநேரம் மாநகர சபையில் அடுத்த இரண்டு நாட்களுக்குள்
100 ஊழியர்களுக்கு நியமனம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பகுதி, வேலைப் பகுதி, சுகாதாரப் பகுதியென 100 பேரும் கடமையில் அமர்த்தப்படுவார்கள். ஆளணிப் பற்றாக்குறை தொடர்பாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறியுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகத் தெரிவித்த யாழ்.
முதல்வர் கலாசார பிரிவு, தீயணைப்புப் படைப் பிரிவு ஆகியவற்றை உருவாக்கி மேலும் 150 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் மாநகர சபைக் கட்டடத்தை பழைய இடத்திலேயே (சுப்பரமணியம் பூங்காவில்) மீள நிர்மாணிப்பதற்கு 100 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறிய யாழ். முதல்வர் திருமதி யோகேஸ்வரி, இந்நிதியைத் திரட்டுவதற்காகப் புலம்பெயர் தமிழர்களின் பூரண ஆதரவை எதிர் பார்ப்பதாகவும் கூறினார்.
தவிரவும் திறந்த வெளியரங்கை அமைப்பதற்காக 50 பில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒதுக்கீடு செய்து தருவதாக உறுதியளித்துள்ளா ரென்றும் அவர் தெரிவித்தார்.
நல்லூர், முத்திரைச் சந்தியில் பொழுது போக்குப் பூங்காவொன்றை அமை க்கவுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார்.


»»  (மேலும்)

முதலாவது ஹஜ் குழு இன்று பயணம்; இலங்கையர் 5800 பேருக்கு அனுமதி


புனித ஹஜ் கடமையை நிறை வேற்றச் செல்லும் முதலாவது இலங்கை ஹஜ் யாத்திரிகர் குழு இன்று மக்காவுக்கு பயணமாகிறது.
முதலாவது ஹஜ் குழுவில் சுமார் 50 பேர் செல்லவுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக் களம் தெரிவித்தது.
இம்முறை இலங்கையில் இருந்து 5800 யாத்திரிகர்கள் புனித ஹஜ் கட மையை நிறைவேற்றுவதற்காக செல்ல உள்ளனர்.
ஹஜ் யாத்திரிகர்களை உத்தியோ கபூர்வமாக வழியனுப்பிவைக்கும் வைபவம் நவம்பர் முதலாம் திகதி காலை 10.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைபெறும்.
அன்றைய தினம் 210 யாத்திரிகர்கள் மக்கா செல்ல உள்ளனர்.


»»  (மேலும்)

10/27/2009

கிழக்கு மக்களின் இன்றைய அரசியல் தலைமைக்கு தகுதிவாய்ந்தவர் யார்? முரளீதரனா? சந்திரகாந்தனா? --மண்டுரிலிருந்து ஆதவன்

இன்று கிழக்கு மாகாணத்திஇன்று கிழக்கு மாகாணத்திலே ஓர் அரசியல் யுத்தமும் அதிகாரப் போட்டியும் நடந்து கொண்டிருக்கிறது இதில் பிரதான பாத்திரங்களாக செயற்படுபவர்கள் அமைச்சர் முரளீதரனும், முதலமைச்சர் சந்திரகாந்னுமே. இதில் யார் நாயகன் யார் வில்லன் என்பது எம்மக்களில் பெரும்பாலானோருக்கு தெரியும். ஒரு சினிமாப் படத்தை எடுத்து கொண்டால்கூட நடிகன் எனபவர் நல்ல குண இயல்புகளைக் கொண்டவராகவும் சமூகப் பற்றறாளராகவும் மற்றும் சினிமா பார்க்கின்ற அனைவருக்கும் பிடித்தவராகவும் இருப்பார். முற்றாக வில்லன் எனபவர் மக்களை கவரமுடியாத செயல்களில் ஈடுபடுபவராகவும் (கடத்தல், கற்பழிப்பு, கொலை, மிரட்டல், கொள்ளை, அதிகாரத் துஸ்ப்பிரயோகம், விதண்டாவாதம், மக்களை மதியாமை போன்ற செயல்களில் வல்லவனாகவும் இருப்பார்.

அதிகமான பார்வையாளர்களுக்கு பிடிக்காத ஓர் மனிதனாகவே அவர் சித்தரிக்கப்படுவார். எனவே கிழக்குவாழ் மக்கள் அனைவரும் ஒரு கணம் இக்கேள்விக்கான பதிலை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். அதாவது கிழக்கிற்கு கதாநாயகன் சந்திரகாந்தனா? அல்லது முரளீதரனா? ஏனபதனை.

கிழக்கு மாகாணத்திலே இதுவரை காலமும் இருந்த அரசியல் தலைவர்களின் கதை என்ன ஆனது என்பது அனைவருக்கும் தெரியும் . ஆனால் இன்று கிழக்கு மாகாணம் என்றவுடனே நினைவில் வருபவர்கள் இருவர்தான். ஒருவர் முதலமைச்சர் சந்திரகாந்தன் அடுத்தவர் அமைச்சர் முரளீதரன். முதலமைச்சரானவரும் த.ம.வி.பு கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்( பிள்ளையான்), தேசிய நல்லிணக்க அமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா) இவர்கள் இருவரினது; பின்னணியினை நாம் பார்க்க தேவையில்லை காரணம் இருவருமே முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள். ஆனால் பிள்ளையானை விட கருணா எல்.ரி.ரி.ஈ ல் உயர்ந்த இடத்தில் இருந்த ஒருவர். ஆனால் நாம் இவ்விடத்தில் பார்க்க வேண்டியது யார் பெரியவர், யார் சிறியவர் என்பதல்ல. இவர்களது அமைச்சர் பதவிக்கான குறிப்பாக கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்காக இவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் எனபதே!

முதலில் அமைச்சர் முரளீதரனின் நிதி ஒதுக்கீட்டினை பார்ப்போம். கிழக்கு மாகாணத்தில் எந்த ஓர் அமைச்சராக இருந்தாலும் சரி அரசாக இருந்தாலும் சரி, அரச சாரபற்ற நிறுவனங்களாக இருந்தாலும் சரி, பொது தன்னார்வ தொண்டு நிறுவனங்களாக இருந்தாலும் சரி முதலாவதாக தமது நிதி ஒதுக்கீடுகள், அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஒரு மாவட்ட அரச அதிபரூடாக குறித்த சில துறைகளுக்கும் அதாவது பிரதேசங்கள மற்றும் குறித்த துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் நிதிகள் ஒதுக்கீடு செய்யப்படும். அடுத்து ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி மற்றும் வேலைத்திட்ட விபரங்கள் மாதாந்தம் நடைபெறுகின்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் எனவே மக்கள் எவரும் குழம்பத் தேவையில்லை கிழக்கு மாகாணத்திலே தற்போது உள்ள மக்களில் எறக்குறைய 27 வீதமானவர்கள் அரச துறையில் தொழில் புரிகின்றீர்கள். எனவே உங்களுக்கு நன்றாக விளங்கும் யார்? யார்? ஏவ்வளவு நிதிகளை ஒதுக்கீடு செய்வதன் மூலம் வேலைத்திட்டம் நடைபெறுகின்றது என்பது. எனவே மக்களாகிய நீங்கள் ஒரு மாவட்ட அபிவிருத்தி கூட்டத்திலும் (டி.சி.எஸ. மீற்றிங்) கலந்து கொண்டு இந்த விபரங்களைப் பெறலாம் ஆனால் நான் அறிந்த மட்டில் இதுவரைக்கும் ஒரு ரூபாய் கூட பொது அபிவிருத்தி வேலைகளுக்காக அமைச்சர் முரளிதரனின் ( கருணாவின்) நிதி ஒதுக்கீட்டில் ஒதுக்கப்படவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை.

ஆனால் கருணா அவர்கள் சொல்வதெல்லாம் என்ன எனபது அனைத்து பொது மக்களுக்கும் மற்றும் அதிகாரிகளுக்கும் நன்றாகவே தெரியும். அதாவது தன்னால் எந்தவொரு அபிவிருத்தி வேலைக்கும் நிதி ஒதுக்க முடியாது எனவே தான் மக்களிடம் சென்று ஏதாவது பேசவேண்டும் என்பதற்காக வலுக்கட்டாயமாக அதிகாரிகளை தொலைபேசி ஊடாக அழைத்து தமது அமைப்பாளர்கள் எனக் கூறிக்கொண்டு திரியும் எந்த நாகரீகமும் தெரியாத ஒரு சிலரிடம் கிராம சேவை உத்தியோகத்தர்கள் பாடசாலை அதிபர்கள் மற்றும் பொது நலன் சார் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற் தொண்டு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் ஆகியோர்மூலமாக அவர்கள் ஊடாக சில நிகழ்வுகளை ஏற்பாடு செய்து மக்களிடம் போய் பொய்யான வாக்குறுதிகளை வழங்குதல். இது அப்பிரதேச மக்கள் அனைவருக்கும் தெரிந்ததே ஆனால் என்ன செய்வது அச்சுறுத்தல் அதனால்தான் மக்கள் பயப்படுகின்றார்கள்.

கிழக்கில் இதுவரைக்கும் எத்தனை பொது நிகழ்வுகளில் கருணா பங்கேற்றிருப்பார், ஆனால் எந்த ஓர் நிகழ்வாவது அவரது பிரத்தியேக நிதியிலோ அல்லது அமைச்சின் நிதியிலோ ஏற்பாடு செய்யப்பட்டதா என்பதனை மக்கள் நன்றாகச் சிந்தியுங்கள். இவர் எத்தனையோ இடங்களில் பல வாக்குறுதிகளை வழங்கி இருக்கின்றார் எதையாவது நிறைவேற்றி இருக்கின்றாறா? அடுத்தது இவர் N.G.O க்கள் கட்டி முடித்த எத்தனை பொது கட்டிடங்களைத் திறந்திருக்கின்றார்? எனபது அனைவருக்கும் தெரியும் சில இடங்களில் திறந்த கட்டிடம் மீண்டும் திறந்த வரலாறு உண்டு. எனவே ஏற்கனவே மக்களை தேசியம் , போராட்டம்தான் முடிவு என ஏமாற்றினீர்கள் ஆனால் இன்று அபிவிருத்தி என்ற போர்வையில் எமது மாகாண மக்களை திசை திருப்பப்பார்க்கின்றீர்கள் இது அனைத்து மக்களுக்கும் தெரியும் இதனை ஒரு நிமிடமாவது சுய நினைவோடு இருந்து கருணா அவர்கள் சிந்தித்தால் எமது மாகாணத்தில் உயிர் நீத்த இளைஞர் யுவதிகளுக்காவது ஓரளவு நிம்மதி கிடைத்திருக்கும் என்பது எனது கருத்து.

அடுத்தது முதலமைச்சர் பிள்ளையான் என்ன செய்திருக்கின்றார் என்பதை நாம் சற்று உற்று நோக்குவோம். கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் அதிகளவும் அம்பாறையில் இவ்வாண்டில் ஓரளவு அபிவிருத்தியும் நடைபெறுகின்றது என்பதனை யாரும் மறுப்பதற்கில்லை. அவரது முதலமைச்சர் பதவியின் கீழ் பல்வேறு அமைச்சுக்கள் வருகின்றன அதிலும் குறிப்பாக ஒரு சில அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீட்டினை பார்ப்போம் உள்ளுராட்சி அமைச்சு கிராமிய அபிவிருத்தி அமைச்சு, சுற்றுலாத்துறை அமைச்சு, என்ற மூன்றுமே மிகவும் பிரதானமானவை இவ் அமைச்சுக்கள் சார்ந்த அபிவிருத்திப் பணிகளைச் சற்றுப்பார்ப்போம்.

ஊள்ளுராட்சி அமைச்சு என்கின்ற போது ஒரு பிரதேச சபைகளுள் குறிப்பிடப்பட்ட வீதிகள் மற்றும் பாலங்கள், நுலகங்கள், பொதுக்கட்டிடங்கள், பஸ்த்தரிப்பு நிலையங்கள் பாடசாலைகளுக்கான மதில்வேலிகள் மற்றும் கலாசார மண்டபங்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம். இதே போல் கிராமிய அபிவிருத்தியினை எடுத்துக்கொண்டால் கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற அனைத்து மக்களுக்குமான பொருளாதார அபிவிருத்தி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அவர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக தொழில் பயிற்சிகள் புதிதாக தொழிற்சாலைகள் நெறிகள் மற்றும் தொழில்பயிற்சி உபகரணங்கள் எனப்பல அபிவிருத்திகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அடுத்து உல்லாசத்துறை சம்பந்தமாக நோக்கினோமாயின் கிழக்கையே ஓர் உல்லாச புரியாக மாற்றுவதற்கான பல்வேறு உல்லாசத்துறை சார்ந்த இடங்களை இனங்கண்டு அபிவிருத்தி செய்து வருகின்றார் குறிப்பாக அம்பாறையில் அறுகம்பை, தீருகோணமலையில் நிலாவெளி, மட்டக்களப்பில் பாசிக்குடா கல்லடி என துரித வளர்ச்சியினை ஏற்படுத்தும் முகமாக கடலோரப்பாதைகள் என பல அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன. இவைகள் எல்லாம் அவற்றில் ஒரு சில துறைகளே.

அதே போல் தனது பிரத்தியேக நிதியில் பாடசாலைகளுக்கான பாடசாலை உபகரணங்கள் (பாண்டு வாத்திய கருவிகள் ஏனைய சில வசதிகள் சுற்றுமதில்கள் நீர்த்தாங்கிகள் என பல பணிகள் அதேபோல் பொதுவான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் என்ன என்ன என்பதனை தனித்தனியே குறிப்பிட்டால் பிள்ளையானை சார்ந்தவர் என என்னை எண்ணிவிடுவார்கள் ஆகவேதான் முதலமைச்சர் பிள்ளையான் செய்த ஒரு தனிப்பட்ட வேலைத்திட்டங்களும் என்னிடம் இருக்கின்றது. நான் முழுவதையும் பிரசுரிக்கவில்லை தினசரிப்பத்திரிக்கையில் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும்.

எனவே இவர்களது சேவையினை வைத்துப்பார்க்கும்போது யார் உண்மையில் சேவை மனப்பாங்கோடு செயற்படுகின்றார் என்பதனை நீங்களே தீர்மானியுங்கள். இதனை மாத்திரம் வைத்துக்கொண்டு இவர்கள் ஒருவர் சிறந்த தலைவர் என நாம் முடிவு எடுக்க முடியாது? இவர்களில் அரசியல் ஞானம் யாருக்கு உள்ளது என்பதனையும் நாம் கருத்திற்கொள்ளவேண்டும் ஏனென்றால் அபிவிருத்தி என்பதனை யார் வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் எமது மக்களுக்கான அரசியல் எதிர்காலம் என்ற ஓர் தேவபை;பாடு இருக்கின்றது அல்லவா? இதனை யார் சரியாக செய்கின்றார் என்பதனையும் பார்ப்போம்.

கிழக்கு மாகாண மக்களை பொறுத்தவரை காலம் காலமாக ஒரு கொள்கைக்காகவே வாக்களித்த வரலாறே இருக்கின்றது. ஆனால் இன்றைய நிலை அவ்வாறல்ல கிழக்கில் ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது என்கின்றார்கள். ஆனால் அது எந்தளவுக்கு உண்மை என்பதனை மக்கள் நன்கறிந்தவர்கள். இன்று அமைச்சர் கருணா அவர்கள் சிறிலங்கா சுதந்திர கட்சி. பிள்ளையான் த.ம.வி.புலிகள் கட்சி ஆனால் மக்கள் கட்சியைப் பார்ப்பார்களா? அல்லது இவர்களின் சேவையினைப் பார்பார்களா? உண்மையில் அரசியல் என்று பார்ப்போமானால் நம்பிக்கைதான் முதலிடம் பெறுகின்றது அந்தவகையில் கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு யார் நம்பிக்கைக்குரியவராக இருக்கின்றாரோ அவரையே மக்கள் ஆதரிப்பர்.—-மண்டுரிலிருந்து ஆதவன்

லே ஓர் அரசியல் யுத்தமும் அதிகாரப் போட்டியும் நடந்து கொண்டிருக்கிறது இதில் பிரதான பாத்திரங்களாக செயற்படுபவர்கள் அமைச்சர் முரளீதரனும், முதலமைச்சர் சந்திரகாந்னுமே. இதில் யார் நாயகன் யார் வில்லன் என்பது எம்மக்களில் பெரும்பாலானோருக்கு தெரியும். ஒரு சினிமாப் படத்தை எடுத்து கொண்டால்கூட நடிகன் எனபவர் நல்ல குண இயல்புகளைக் கொண்டவராகவும் சமூகப் பற்றறாளராகவும் மற்றும் சினிமா பார்க்கின்ற அனைவருக்கும் பிடித்தவராகவும் இருப்பார். முற்றாக வில்லன் எனபவர் மக்களை கவரமுடியாத செயல்களில் ஈடுபடுபவராகவும் (கடத்தல், கற்பழிப்பு, கொலை, மிரட்டல், கொள்ளை, அதிகாரத் துஸ்ப்பிரயோகம், விதண்டாவாதம், மக்களை மதியாமை போன்ற செயல்களில் வல்லவனாகவும் இருப்பார்.
அதிகமான பார்வையாளர்களுக்கு பிடிக்காத ஓர் மனிதனாகவே அவர் சித்தரிக்கப்படுவார். எனவே கிழக்குவாழ் மக்கள் அனைவரும் ஒரு கணம் இக்கேள்விக்கான பதிலை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். அதாவது கிழக்கிற்கு கதாநாயகன் சந்திரகாந்தனா? அல்லது முரளீதரனா? ஏனபதனை.
கிழக்கு மாகாணத்திலே இதுவரை காலமும் இருந்த அரசியல் தலைவர்களின் கதை என்ன ஆனது என்பது அனைவருக்கும் தெரியும் . ஆனால் இன்று கிழக்கு மாகாணம் என்றவுடனே நினைவில் வருபவர்கள் இருவர்தான். ஒருவர் முதலமைச்சர் சந்திரகாந்தன் அடுத்தவர் அமைச்சர் முரளீதரன். முதலமைச்சரானவரும் த.ம.வி.பு கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்( பிள்ளையான்), தேசிய நல்லிணக்க அமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா) இவர்கள் இருவரினது; பின்னணியினை நாம் பார்க்க தேவையில்லை காரணம் இருவருமே முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள். ஆனால் பிள்ளையானை விட கருணா எல்.ரி.ரி.ஈ ல் உயர்ந்த இடத்தில் இருந்த ஒருவர். ஆனால் நாம் இவ்விடத்தில் பார்க்க வேண்டியது யார் பெரியவர், யார் சிறியவர் என்பதல்ல. இவர்களது அமைச்சர் பதவிக்கான குறிப்பாக கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்காக இவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் எனபதே!
முதலில் அமைச்சர் முரளீதரனின் நிதி ஒதுக்கீட்டினை பார்ப்போம். கிழக்கு மாகாணத்தில் எந்த ஓர் அமைச்சராக இருந்தாலும் சரி அரசாக இருந்தாலும் சரி, அரச சாரபற்ற நிறுவனங்களாக இருந்தாலும் சரி, பொது தன்னார்வ தொண்டு நிறுவனங்களாக இருந்தாலும் சரி முதலாவதாக தமது நிதி ஒதுக்கீடுகள், அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஒரு மாவட்ட அரச அதிபரூடாக குறித்த சில துறைகளுக்கும் அதாவது பிரதேசங்கள மற்றும் குறித்த துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் நிதிகள் ஒதுக்கீடு செய்யப்படும். அடுத்து ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி மற்றும் வேலைத்திட்ட விபரங்கள் மாதாந்தம் நடைபெறுகின்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் எனவே மக்கள் எவரும் குழம்பத் தேவையில்லை கிழக்கு மாகாணத்திலே தற்போது உள்ள மக்களில் எறக்குறைய 27 வீதமானவர்கள் அரச துறையில் தொழில் புரிகின்றீர்கள். எனவே உங்களுக்கு நன்றாக விளங்கும் யார்? யார்? ஏவ்வளவு நிதிகளை ஒதுக்கீடு செய்வதன் மூலம் வேலைத்திட்டம் நடைபெறுகின்றது என்பது. எனவே மக்களாகிய நீங்கள் ஒரு மாவட்ட அபிவிருத்தி கூட்டத்திலும் (டி.சி.எஸ. மீற்றிங்) கலந்து கொண்டு இந்த விபரங்களைப் பெறலாம் ஆனால் நான் அறிந்த மட்டில் இதுவரைக்கும் ஒரு ரூபாய் கூட பொது அபிவிருத்தி வேலைகளுக்காக அமைச்சர் முரளிதரனின் ( கருணாவின்) நிதி ஒதுக்கீட்டில் ஒதுக்கப்படவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை.
ஆனால் கருணா அவர்கள் சொல்வதெல்லாம் என்ன எனபது அனைத்து பொது மக்களுக்கும் மற்றும் அதிகாரிகளுக்கும் நன்றாகவே தெரியும். அதாவது தன்னால் எந்தவொரு அபிவிருத்தி வேலைக்கும் நிதி ஒதுக்க முடியாது எனவே தான் மக்களிடம் சென்று ஏதாவது பேசவேண்டும் என்பதற்காக வலுக்கட்டாயமாக அதிகாரிகளை தொலைபேசி ஊடாக அழைத்து தமது அமைப்பாளர்கள் எனக் கூறிக்கொண்டு திரியும் எந்த நாகரீகமும் தெரியாத ஒரு சிலரிடம் கிராம சேவை உத்தியோகத்தர்கள் பாடசாலை அதிபர்கள் மற்றும் பொது நலன் சார் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற் தொண்டு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் ஆகியோர்மூலமாக அவர்கள் ஊடாக சில நிகழ்வுகளை ஏற்பாடு செய்து மக்களிடம் போய் பொய்யான வாக்குறுதிகளை வழங்குதல். இது அப்பிரதேச மக்கள் அனைவருக்கும் தெரிந்ததே ஆனால் என்ன செய்வது அச்சுறுத்தல் அதனால்தான் மக்கள் பயப்படுகின்றார்கள்.
கிழக்கில் இதுவரைக்கும் எத்தனை பொது நிகழ்வுகளில் கருணா பங்கேற்றிருப்பார், ஆனால் எந்த ஓர் நிகழ்வாவது அவரது பிரத்தியேக நிதியிலோ அல்லது அமைச்சின் நிதியிலோ ஏற்பாடு செய்யப்பட்டதா என்பதனை மக்கள் நன்றாகச் சிந்தியுங்கள். இவர் எத்தனையோ இடங்களில் பல வாக்குறுதிகளை வழங்கி இருக்கின்றார் எதையாவது நிறைவேற்றி இருக்கின்றாறா? அடுத்தது இவர் N.G.O க்கள் கட்டி முடித்த எத்தனை பொது கட்டிடங்களைத் திறந்திருக்கின்றார்? எனபது அனைவருக்கும் தெரியும் சில இடங்களில் திறந்த கட்டிடம் மீண்டும் திறந்த வரலாறு உண்டு. எனவே ஏற்கனவே மக்களை தேசியம் , போராட்டம்தான் முடிவு என ஏமாற்றினீர்கள் ஆனால் இன்று அபிவிருத்தி என்ற போர்வையில் எமது மாகாண மக்களை திசை திருப்பப்பார்க்கின்றீர்கள் இது அனைத்து மக்களுக்கும் தெரியும் இதனை ஒரு நிமிடமாவது சுய நினைவோடு இருந்து கருணா அவர்கள் சிந்தித்தால் எமது மாகாணத்தில் உயிர் நீத்த இளைஞர் யுவதிகளுக்காவது ஓரளவு நிம்மதி கிடைத்திருக்கும் என்பது எனது கருத்து.
அடுத்தது முதலமைச்சர் பிள்ளையான் என்ன செய்திருக்கின்றார் என்பதை நாம் சற்று உற்று நோக்குவோம். கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் அதிகளவும் அம்பாறையில் இவ்வாண்டில் ஓரளவு அபிவிருத்தியும் நடைபெறுகின்றது என்பதனை யாரும் மறுப்பதற்கில்லை. அவரது முதலமைச்சர் பதவியின் கீழ் பல்வேறு அமைச்சுக்கள் வருகின்றன அதிலும் குறிப்பாக ஒரு சில அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீட்டினை பார்ப்போம் உள்ளுராட்சி அமைச்சு கிராமிய அபிவிருத்தி அமைச்சு, சுற்றுலாத்துறை அமைச்சு, என்ற மூன்றுமே மிகவும் பிரதானமானவை இவ் அமைச்சுக்கள் சார்ந்த அபிவிருத்திப் பணிகளைச் சற்றுப்பார்ப்போம்.
ஊள்ளுராட்சி அமைச்சு என்கின்ற போது ஒரு பிரதேச சபைகளுள் குறிப்பிடப்பட்ட வீதிகள் மற்றும் பாலங்கள், நுலகங்கள், பொதுக்கட்டிடங்கள், பஸ்த்தரிப்பு நிலையங்கள் பாடசாலைகளுக்கான மதில்வேலிகள் மற்றும் கலாசார மண்டபங்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம். இதே போல் கிராமிய அபிவிருத்தியினை எடுத்துக்கொண்டால் கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற அனைத்து மக்களுக்குமான பொருளாதார அபிவிருத்தி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அவர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக தொழில் பயிற்சிகள் புதிதாக தொழிற்சாலைகள் நெறிகள் மற்றும் தொழில்பயிற்சி உபகரணங்கள் எனப்பல அபிவிருத்திகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அடுத்து உல்லாசத்துறை சம்பந்தமாக நோக்கினோமாயின் கிழக்கையே ஓர் உல்லாச புரியாக மாற்றுவதற்கான பல்வேறு உல்லாசத்துறை சார்ந்த இடங்களை இனங்கண்டு அபிவிருத்தி செய்து வருகின்றார் குறிப்பாக அம்பாறையில் அறுகம்பை, தீருகோணமலையில் நிலாவெளி, மட்டக்களப்பில் பாசிக்குடா கல்லடி என துரித வளர்ச்சியினை ஏற்படுத்தும் முகமாக கடலோரப்பாதைகள் என பல அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன. இவைகள் எல்லாம் அவற்றில் ஒரு சில துறைகளே.
அதே போல் தனது பிரத்தியேக நிதியில் பாடசாலைகளுக்கான பாடசாலை உபகரணங்கள் (பாண்டு வாத்திய கருவிகள் ஏனைய சில வசதிகள் சுற்றுமதில்கள் நீர்த்தாங்கிகள் என பல பணிகள் அதேபோல் பொதுவான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் என்ன என்ன என்பதனை தனித்தனியே குறிப்பிட்டால் பிள்ளையானை சார்ந்தவர் என என்னை எண்ணிவிடுவார்கள் ஆகவேதான் முதலமைச்சர் பிள்ளையான் செய்த ஒரு தனிப்பட்ட வேலைத்திட்டங்களும் என்னிடம் இருக்கின்றது. நான் முழுவதையும் பிரசுரிக்கவில்லை தினசரிப்பத்திரிக்கையில் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும்.
எனவே இவர்களது சேவையினை வைத்துப்பார்க்கும்போது யார் உண்மையில் சேவை மனப்பாங்கோடு செயற்படுகின்றார் என்பதனை நீங்களே தீர்மானியுங்கள். இதனை மாத்திரம் வைத்துக்கொண்டு இவர்கள் ஒருவர் சிறந்த தலைவர் என நாம் முடிவு எடுக்க முடியாது? இவர்களில் அரசியல் ஞானம் யாருக்கு உள்ளது என்பதனையும் நாம் கருத்திற்கொள்ளவேண்டும் ஏனென்றால் அபிவிருத்தி என்பதனை யார் வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் எமது மக்களுக்கான அரசியல் எதிர்காலம் என்ற ஓர் தேவபை;பாடு இருக்கின்றது அல்லவா? இதனை யார் சரியாக செய்கின்றார் என்பதனையும் பார்ப்போம்.
கிழக்கு மாகாண மக்களை பொறுத்தவரை காலம் காலமாக ஒரு கொள்கைக்காகவே வாக்களித்த வரலாறே இருக்கின்றது. ஆனால் இன்றைய நிலை அவ்வாறல்ல கிழக்கில் ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது என்கின்றார்கள். ஆனால் அது எந்தளவுக்கு உண்மை என்பதனை மக்கள் நன்கறிந்தவர்கள். இன்று அமைச்சர் கருணா அவர்கள் சிறிலங்கா சுதந்திர கட்சி. பிள்ளையான் த.ம.வி.புலிகள் கட்சி ஆனால் மக்கள் கட்சியைப் பார்ப்பார்களா? அல்லது இவர்களின் சேவையினைப் பார்பார்களா? உண்மையில் அரசியல் என்று பார்ப்போமானால் நம்பிக்கைதான் முதலிடம் பெறுகின்றது அந்தவகையில் கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு யார் நம்பிக்கைக்குரியவராக இருக்கின்றாரோ அவரையே மக்கள் ஆதரிப்பர்.—-மண்டுரிலிருந்து ஆதவன்

»»  (மேலும்)

கிழக்கு மாகாண முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனம் விபத்துக்குள்ளாகியது.
திருகோணமலையில் இருந்து கொழும்பிற்கு சென்றுகொண்டிருந்த வாகனம் (குண்டு துளைக்காத) கொக்கரெல்ல எனும் இடத்தில் விபத்துக்குள்ளாகி வாகனத்தின் சாரதி உட்பட மூவர் ஸ்த்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்கள் மேற்படி விபத்துக்குள்ளான குண்டு துளைக்காத வாகனம் திருத்த வேலைகளின் நிமித்தம் கொழும்பிற்கு சென்று கொண்டிருந்த வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது
. வாகனத்தை செலுத்திய சாரதியான இராணுவ வீரர் A.K.K.V அத்தன ஹொட(வயது 28) உட்பட மூவர் பலியானதோடு ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

Categories: செய்திகள்

Tags:

-->
»»  (மேலும்)

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு மாறிய தவிசாளர் பதவியை இழந்தார்


மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் சீனித்தம்பி பாக்கியராஜா மட்டக்களப்பு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினராக இருந்து உள்ளுராட்சி சபைத்; தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டி தவிசாளராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார். இவர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு மாறியிருந்தார். இது தொடர்பில் கட்சியின் தலைவர் பணிமனைக்கு எதுவித முன்னறிவித்தலுமின்றி சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. கட்சியின் உயர் மட்டக் குழுவினால் இது தொடர்பில் குறித்த தவிசாளரிடமிருந்து விளக்கம் பல முறை கோரப்பட்டது. அதற்கு அவர் எதுவிதமான பதிலும் அளிக்கவில்லை. பின்னர் இது தொடர்பில் தவிசாளரினால் மட்டக்களப்பு நீதி மன்றில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு அண்மையில்(24.09.2009) விவாதத்திற்கு எடுக்கப்பட்டு அதற்கான தீர்ப்பும் அளிக்கப்பட்டது. அதாவது குறித்த வழக்காளி(தவிசாளர்) தமிழ் மக்கள் கட்சியின் உறுப்புரிமையினை இழந்ததோடு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைத் தவிசாளர் பதவியையும் இழந்தார் என அத்தீர்ப்பு அமைந்திருந்தது. அதன் பின்னர் தவிசாளர் சீனித்தம்பி பாக்கியராஜா அத் தீர்ப்பினை ஆட்சேபித்து மேன் முறையீடு செய்திருந்தார். அம் மேன்முறையீடு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்காக எடுக்கப்பட்டது. இதில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிக்கும், வழக்காளி தரப்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிக்கும் இடையில் நீண்ட நேரம் வாதப்பிரதி வாதங்கள் இடம் பெற்றது. புpன்னர் இது தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டது. அதாவது தவிசாளர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார் தனக்கு தேர்தல் ஆணையாளரினூடாக மீண்டும் தவிசாளர் பதவி வழங்க வேண்டும் என.. இதனை நீதி மன்றம் நிராகரித்ததோடு, பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உயர்மட்டக் குழுவினர்க்கு தண்டப்பணமும் (அவர்களது பெறுமதியான நேரத்தை வீணடித்தமைக்காக) செலுத்த வேண்டும் என அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.. பிரதிவாதிகளாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கட்சியின் செயலாளர் எட்வின் சில்வா கைலேஸ்வரராஜா உட்பட கட்சியின் தலைவர் பணிமனை முக்கிய உறுப்பினர்களும் பிரசன்னமாயிருந்தார்கள்
»»  (மேலும்)

காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் 27வது வருட நிறைவு கிரிக்கெட் போட்டி
காரைதீவு விளையாட்டுக் கழகத் தின் 27வது வருட பூர்த்தியை முன் னிட்டு காரைதீவு விளையாட்டுக் கழகம் நடாத்தும் அமரர் ஆறுமுக வடிவேல் ஞாபகார்த்த கிண்ண 20 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக் கெட் சுற்றுப்போட்டி காரைதீவு கனகரெத்தினம் வி¨யாட்டு மைதானத்தில் தற்போது நடை பெற்றுவருகின்றது.
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 16 விளையாட்டுக் கழகங்கள் பங்கு பற்றும் இச் சுற்றுப் போட்டியின் ‘டீ’ குழுவிற்கான போட்டியொ ன்றில் சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து சாய்ந்தமருது ஸஹிரியன் விளை யாட்டுக் கழகம் கடந்த ஞாயிற் றுக்கிழமை மோதியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய சாய்ந் தமருது பிரேவ் லீடர்ஸ் விளை யாட்டுக் கழகம் 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 88 ஒட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது ஸஹிரியன் விளை யாட்டுக் கழகம் 9.1 ஓவரில் 2 விக் கெட்டுக்கள் இழப்பிற்கு 90 ஓட்டங் களைப் பெற்று 8 விக்கெட் டுகளினால் வெற்றியீட்டியது
»»  (மேலும்)

எல். ரி. ரி.ஈ. யினரால் மேற்கொள்ளப்பட்ட பொழுதிலும் ‘இனந்தெரியாத நபர்களால் கடத்தல் இனந்தெரியாதவர்களால் கொலை’ என்றவாறே பத்திரிகைகள் செய்திவெளியிட்டன.


நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் ஏ. எல். எம். அதாஉல்லா பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை

கெளரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்களே! பல அமைச்சுகளுக்கான குறைநிரப்புத் தொகைளுக்கான பிரேரணைகள் பற்றிய இன்றைய விவாதத்திலே கலந்து கொண்டு உரையாற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சின் குறைநிரப்புத் தொகையும் இங்கு நிறைவேற்றப்படவிருக்கின்றது. அம்பாந்தோட்டை, அனுராதபுரம், பொலன்னறுவை, மூதூர், மட்டக்களப்பு ஆகிய இடங்களிலே வாழ்கின்ற பல்லின மக்களுக்கும் குடிநீரை வழங்குவதற்கான வேலைகள் திளிகி இன் கருத்திட்டங்களூடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த வேலைகளை இவ்வருடமே பூர்த்தி செய்யும் வகையில் நாங்கள் இங்கு இந்தக் குறைநிரப்புத் தொகைக்கான பிரேரணையைச் சமர்ப்பித்திருக்கின்றோம். இன்று இங்கு பேசிய சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குறைநிரப்புத் தொகைள் பற்றியும் மற்றும் அபிவிருத்தி வேலைகளைப் பற்றியும் பிழையான கண்ணோட்டத்துடன் பேசினார்கள். இன்று மழை குறைவாகவும் பிந்தியும் பெய்த காரணத்தினால்தான் கிராமம் மற்றும் நகரங்களில் வாழ்கின்ற மக்கள் தண்ணீர் இல்லாமல் வீதிக்கு வந்திருக்கின்றார்கள். அது மட்டுமல்ல, வழக்கமாக மழை பெய்கின்ற இடங்களில் கூட மழை பெய்யாததனால் இன்று மக்கள் தண்ணீர் இல்லாமல் அல்லற்படுகின்றார்கள். இந்தச் சூழ்நிலையிலே நாடு முழுவதிலும் பரிசுத்தமான குடிநீரை வழங்குவதற்கான திட்டங்களை அமுல்படுத்துவதற் கக உண்மையிலே எமது அமைச்சும் நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபையும் பெரும் திட்டங்களைத் தீட்டி வருகின்றன. அந்த அடிப்படையில் எதிர்காலத்திலே நாடு முழுவதிலும் குடிநீரை வழங்குவதற்கான வேலைகளை நாங்கள் செய்து கோண்டு வருகின்றோம். ஆனால், இதற்காகக் கடன்களைப் பெறக்கூடாது என்றோ, குறைநிரப்புத் தொகைகளை நிறைவேற்றகக் கூடாது என்றோ குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சொல்வார்களே யானால், எப்படி இந்த நாட்டில் குடிநீரை வழங்க முடியும் மற்றும் அபிவிருத்திகளைச் செய்ய முடியும்? என்று நான் கேட்க விரும்புகின்றேன். உண்மையில் குறித்த குறைநிரப்புத் தொகைக்கு அங்கீகாரமளிப்பதன் மூலம்தான் தேவையான இடங்களுக்குச் சுத்தமான குடிநீரை வழங்க முடியும்.
அடுத்து, மேலும் ஒரு முக்கியமான விடயம் பற்றி நான் இங்கு பேச விழைகின்றேன். கடந்த 8ந் திகதி இந்தப் பாராளுமன்றத்திலே உரையாற்றிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் என்னோடு தொடர்பாக சில விஷயங்களைத் திரித்துப் பிழையான முறையிலே கூறியிருக்கின்றார்கள். முஸ்லிம் மக்கள் நோன்பு காலத்திலே நோன்பு துறப்பதற்கான அழைப்புக்களை ஏற்று வெவ்வேறு இடங்களிலே நோன்பு துறக்கப் போவது வழக்கம். அது ஒரு புனிதமான விஷயம் என்பது உங்களுக்கும் தெரியும். அந்த வைபவங்களிலே நாங்கள் ஒரு பொழுதும் அரசியல் செய்வதில்லை. ஏனெனில் நாங்கள் எல்லோரும் எப்பொழுதுமே அதனை ஒரு புனிதமான விடயமாகவே கருதுகின்றோம். அந்த வகையில் 2008ம் ஆண்டு அக்கரைப்பற்றிலே நடந்த ஒரு நோன்பு துறத்தல் நிகழ்வுக்கு தனிநபர் ஒருவர் அனுப்பிய அழைப்பை ஏற்று அந்தப் பகுதி மக்கள் சிலர் அங்கு போய் இருந்தார்கள். நோன்பு துறப்பதற்குச் சற்று நேரம் முன்னதாக, அதாவது ஆறு மணியளவில், அங்கே ரவூப் ஹக்கீம் அவர்களும் வந்து சேர்ந்த போதுதான் மக்களுக்கு விளங்கியது. குறித்த நோன்பு துறக்கும் வைபவத்தை அரசியலாக மாற்றப் போகின்றார்கள் என்பது. அதனால் அவர்கள் மிகவும் வேதனைக்கு மத்தியிலேயே அங்கு நோன்பு துறந்தார்கள். அந்த நிகழ்வுக்குப் பிறகு 2008 செப்டம்பர் 28ந் திகதிய ‘தினக்குரல்’ பத்திரிகையிலே ‘அதாவுல்லாவின் கோட்டையும் ஹக்கீமின் படையெடுப்பும்’ என்ற தலைப்பிலே ஓர் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. அந்த அறிக்கை, ‘றவூப் ஹக்கீம் அதாவுல்லாவின் கோட்டையை உடைத்து, அவரின் மூக்கைத் தொட்டுவிட்டார்’ என்ற அடிப்படையில் ஓர் அரசியல் செய்தியாக அமைந்திருந்தது. பத்திரிகையில் எழுதுவது என்பது மிகவும் சிறந்ததொரு தொழிலாகும்.
ஆனால் யதார்த்தவாதிகளாகவும் சிறந்த அடிபடைவாதிகளாகவும் நிதானமானவர்களாகவும் இருக்கின்ற பத்திரிகையாளர்களே இன்று இந்த நாட்டுக்குத் தேவைப்படுகின்றார்கள்.
அன்று அங்கு நோன்பு துறந்த கெளரவமான நிகழ்வை, குறித்த அந்தப் பதிரிகையாளன் அரசியலாக மாற்றி, ஹக்கீம் அவர்கள் அங்குள்ள ஓர் அரசியல்வாதியின் மூக்கைத் தொட்டதாகவும் அந்த அரசியல்வாதியின் கோட்டைக்குள் நுழைந்ததாகவும் எழுதியிருந்ததனால்தான் ரவூப் ஹக்கீம் அவர்கள் இந்த முறை நோன்பு துறப்பதற்கு அங்கு வரக்கூடாது என்று அந்த ஊர் மக்கள் வரிந்து கட்டிக் கொண்டு நின்று எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அவரை அங்கு நோன்பு துறக்க விடாமல் தடுத்தார்கள்.
இது ஒருபுறமிருக்க, இந்த வருடம் செப்டம்பர் மாதம் 16ம் திகதி, அதே தினம் தேசிய காங்கிரஸ் கட்சியினரான நாங்கள் எமது தலைவர் அஷ்ரஃப் அவர்களை நினைவு கூர்ந்து நாடளாவிய ரீதியில் பல இடங்களில் கத்தமுல் குர்ஆன் ஓதல் நிகழ்வுகளை நடத்தினோம். அதன்படி, கல்முனையிலே நாங்கள் ஆயிரக்கணக்கான மக்களுடன் ஓன்றுகூடி ‘கத்தமுல் குர்ஆன்’ ஓதி அவருக்காகப் பிரார்த்தித்து, அன்னாரை நினைவுகூர்ந்தோம். நாம் தலைவர் அஷ்ரஃப் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்த அந்த வைபவத்தை ஓர் அரசியல் கேலிக்கூத்தாக மாற்றுவதற்காக ரவூப் ஹக்கீம் அவர்கள் அக்கரைப்பற்றுக்கு வந்ததனால் தலைவர் அஷ்ரஃப் அவர்களை நினைகூரக்கூட அவருக்கு முடியாமற் போய்விட்டது.
அது மாத்திரமல்ல, அக்கரைப்பற்றில் நோன்பு துறக்கும் நிகழ்வை நடத்துவதற்கு அப்பிரதேச மக்கள் அவருக்கு இடமளிக்காததால், அங்கு நோன்பு துறக்க முடியாமற் போன சம்பவத்தை வைத்துக் கொண்டு நோன்பு நிறைவுற்று பெருநாளும் முடிவடைந்த பின்னர், எனக்குச் சேறு பூசுகின்ற நடவடிக்கையாக ஒரு பத்திரிகையிலே மெளலவி ஒருவரின் பெயரைத் தொடர்புபடுத்தி நான் ஆட்கடத்தல் செய்கின்றவன் என்ற அடிப்படையிலான செய்தியொன்று வெளியிடப்பட்டது. அந்த நேரத்திலும் சில பத்திரிகைகளும் பத்திரிகை எழுத்தாளர்களும் எப்படிப்பட்ட பிழைகளை விட்டிருக்கின்றார்கள் என்பதை நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்.
கடந்த காலங்களில் வடக்கு கிழக்கு உட்பட இந்த நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் பல்வேறு ஆயுதக் குழுக்கள் செயற்பட்டு, எத்தனையோ பேரைக் கடத்தியும், கொள்ளையடித்தும், கொலை செய்தும் எத்தனையோ எனவா? எல். ரி. ரி.ஈ யினர் அல்லது பயங்கரவாதிகள் ஒரு பள்ளிவாசலுக்குள் புகுந்து ஒருவரைக் கடத்திய செய்தியை இந்தப் பத்திரிகைகள் எழுதியிருந்தனவா? அல்லது பயங்கரவாதிகள் பள்ளிவாசலுக்குள் நுழைந்து கப்பம் அறவிட்ட அல்லது பயங்கரவாதிகள் பிக்குமார்களைக் கொன்ற செய்திகளைக் குறிப்பிட்டிருக்கின்றனவா? உண்மையிலேயே எல். ரி. ரி.ஈ. யினரால் கடத்துதல், கப்பம் வாங்குதல், கொலை செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பொழுதிலும் ‘இனந்தெரியாத நபர்களால் கடத்தல் அல்லது இனந்தெரியாதவர்களால் கொலை’ என்றவாறே இந்தப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. இதனை நாங்கள் பத்திரிகா தர்மமாகவே கருதியிருக்கிறோம். தமிழ் பத்திரிகைகளிலே ‘தினகரன்’, ‘வீரகேசரி’ ஆகிய பத்திரிகைகள் உண்மையிலேயே இப்பொழுதும் நிதானமாகவே செயற்பட்டு வருகின்றன. அந்தப் பத்திரிகைகளை நாங்கள் பாராட்ட வேண்டும். ஆனால் சில பத்திரிகைகள் உண்மையான செய்திகளை வெளியிடாமல் பயங்கரவாதிகள் என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக இனந்தெரியாதவர்கள் என்று குறிப்பிட்டு உண்மைக்குப் புறம்பான செய்திகளையே வெளியிடுகின்றன.
பிரபாகரன் உயிருடன் இருந்த காலத்திலேயே நான்தான் கருணாவுக்கும் முகாம் அமைத்துக் கொடுத்து ஆயுதப் பயிற்சிகளை வழங்குவதற்கு வித்திட்டுக் கொடுத்ததாகவும் என்னைக் கருணாவுடன் தொடர்புபடுத்தி என்னுடைய பெயரைக் குறிப்பிட்டும் சில பத்திரிகைகள் அன்று செய்திகளை வெளியிட்டன. அது உண்மையா? அப்படி நடந்ததா? இவை யாவும் பத்திரிகா தர்மத்தை மீறிய விடயங்கள்! நான் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புப்பட்டவன் என்று குறிப்பிடுகின்ற இந்தப் பத்திரிகைகள், கடந்த காலங்களில் உண்மையிலேயே பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட கடத்தல் சம்பவங்களைப் பற்றிப் பிரசுரிக்கவில்லை என்பதைக் குறிப்பிட விரும்புகின்றேன். பல தடவைகள் மக்கள் ஆதரவுடன் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட, சரியாகவும் உண்மையாகவும் பேசுகின்ற, நடைபெறுகின்ற விடயங்கள் அத்தனையும் சரியாகச் சொல்கின்ற வாய்மைமிக்க அரசியல்வாதி ஒருவரைப் பற்றி இவ்வாறு கடத்தினார் அல்லது கடந்த முயற்சித்தார் என்று பத்திரிகைகளில் எழுதுவதாகவிருந்தால், அவர்கள் அந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக முடியுமானவரை தகவலைப் பெற்று உண்மையைத் தெரிந்து கொண்ட பின்னர்தானே எழுதியிருக்க வேண்டும்! நான் இவர்களின் தவறைப் பொருட்படுத்தாது அந்தப் பத்திரிகை அறிக்கைக்கு விளக்கம் அளித்திருந்தேன்.
»»  (மேலும்)

அழுத்தங்களுக்கு முகம் கொடுக்கும் ஆற்றல் இலங்கைக்கு உண்டுரஷ்ய- வெளிவிவகார அமைச்சர்


சர்வதேச அழுத்தங்களுக்கோ அல்லது குற்றச்சாட்டுகளுக்கோ முகம் கொடுக்கும் ஆற்றல் இலங்கைக்கு உள்ளது என்று ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி வி லெவ்ரோ நேற்றுத் தெரிவித்தார்.
இலங்கையின் நீதித்துறை மிகவும் ஒழுங்கான முறையில் செயல்பட்டு வருகின்றது என்றும் இதனை பயன்படுத்தி எந்தவொரு பிரச்சி னைகளுக்கும் முகம் கொடுக்க முடியும் என்று தெரிவித்த அவர், இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டை பாதுகாக் கும் விடயத்தில் ரஷ்யா இலங் கைக்கு எப்போதும் ஆதரவு வழங்கி வந்துள்ளது என்றும் தெரிவித்தார். குறுகிய கால விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் தலை மையிலான அந்நாட்டின் உயர்மட்டக் குழுவினர் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பின் பின்னர் கூட்டாக நடைபெற்ற செய்தி யாளர் மாநாட்டின் போது ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரஷ்ய அமைச்சர் மேலும் உரையாற் றுகையில், பயங்கரவாதத்தை ஒழித்து நாட் டில் சுமுகமான நிலையை ஏற்படுத்தும் வகையிலேயே ரஷ்யா இலங்கைக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி வந்தது.
தேசிய ரீதியான ஒருமைப்பாடு, நல் லிணக்கம் போன்ற நடைமுறை சாத்திய மான முடிவுகளை ரஷ்யா இந்த ஒத்து ழைப்புக்களின் மூலம் எதிர்பார்க்கின்றது.
இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்து ழைப்புக்களை வழங்க ரஷ்யா தயாராக உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவுகள் மிகவும் வலுவடைந்து காணப்படுகின்றது.
பொருளாதாரம், முதலீடு, வர்த்தகம், சுற்றுலாத்துறை மேம்பாடு, சட்டவிரோத ஆட்கடத்தல், போதைப்பொருள் கடத்தல் என்பன தொடர்பாக விரிவாக ஆரா யப்பட்டன.
கண்ணிவெடிகளை அகற்றும் விடயத்தில் ரஷ்யா ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றது.
இந்த ஒத்துழைப்புக்களை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதுடன் மிதிவெடிகளை அகற்றும் விடயத்தில் அனுபவம் வாய்ந்த குழுவொன்றையும் அனுப்பவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் 52 வருடங்களாக ராஜதந்திர உறவுகள் காணப்படுகின்ற போதிலும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்தது இதுவே முதற் தடவையாகும்

»»  (மேலும்)

அமெ. இராஜாங்க திணைக்களம் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக ஆராய சுயாதீன குழுஐக்கிய அமெரிக்க இராஜாங்க திணைக்களம், அதன் காங்கிரஸ¤க்கு சமர்ப்பித்திருக்கும் அறிக்கை தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி விரைவில் அறிவிக்கவுள்ளார். இராஜாங்க திணைக்களத்தின் அறிக்கை தொடர்பாக ஆராயவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் ஒரு வார காலப் பகுதிக்குள் சுயாதீனக் குழுவொன்றை நியமிக்கவிருப்பதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்றுத் தெரிவித்தார். காங்கிரஸ¤க்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அறிக்கையில், இலங்கையில் மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட இவ்வருடத்தின் ஜனவரி முதல் ஜூன் வரையான காலப் பகுதிக்குள் இடம் பெற்ற சம்பவங்களில் எந்தவொரு இடத்திலும் போர் விதிகளை மீறியமைக்கான ஆதாரபூர்வமான சாட்சிகள் இல்லையெனவும் அவை சட்ட ரீதியாக நிரூபிக்கப்பட வில்லையெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு இந்த அறிக்கை சாதகமாக அமைந்த போதிலும் இதனை பகடைக்காயாக உபயோகித்து சில அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புக்களும் அரசியல் இலாபம் தேட முனைத்துள்ளன.
இவ்வாறான அமைப்புக்களுக்கும் கட்சிகளுக்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையிலேயே ஜனாதிபதியினால் மேற்படி அறிக்கை தொடர்பாக ஆராயவென சுயாதீனக் குழு நியமிக்கப்படவுள்ளது. இக்குழு பக்கச் சார்பற்ற முறையில் அதனை ஆராய்ந்து ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கும்.
குழு முன்வைக்கும் அறிக்கையின் பிரகாரம் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு ஜனாதிபதியி னால் விரைவில் அறிவிக்கப்படும்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இம் மாநாட்டில் அமைச்சருடன் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க, ஜெனீவாவின் முன்னாள் உயர்ஸ்தானிகரும் புதுடில்லியின் புதிய உயர்ஸ்தானிகராக பதவியேற்க விருப்பவருமான பிரசாத் காரியவசம் உள்ளிட்ட ஐவர் கலந்து கொண்டனர்.
அறிக்கையின் முன்பக்க அட்டையில் “காங்கிரஸ¤க்கு சம்பவங்கள் தொடர்பான அறிக்கை” என்று தான் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் எந்தவொரு இடத்திலும் போர் குற்றங்கள் தொடர்பாக விபரிக்கப்படவில்லை.
இதன் மூன்றாம் பக்கத்தில் இலங்கையில் போர் குற்றங்கள் இடம்பெற்றதற்கான எந்த சாட்சியங்களும் இல்லையென தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் உயர்ஸ்தானிகராலயம் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள் வெளியிட்ட தவறான கருத்துக்களை அடிப்படையாக வைத்தே காங்கிரஸ் இலங்கையில் போர்க் குற்றம் இடம் பெற்றிருப்பதாக விவாதத்தினை முன்னெடுத்திருக்க வேண்டுமெனவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறினார்.
சர்வதேச யுத்த நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்த வேண்டுமென்பதற்காக திட்டமிட்டு செய்யப்பட்ட சதியின் விளைவாகவே காங்கிரஸ¤க்கு இலங்கை அரசாங்கம் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
இலங்கை மீது மட்டுமன்றி ஈராக், ஜோர்டான், பாகிஸ்தான், மெக்சிக்கோ உள்ளிட்ட பல நாடுகள் குறித்தும் காங்கிரஸ், இராஜாங்க திணைக்களத்திடம் அறிக்கை கோரியுள்ளதெனவும் அமைச்சர் சமரசிங்க கூறினார்.»»  (மேலும்)

10/26/2009

இலங்கை அரசு மீது தடை விதிப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும் - ஆஸ்திரேலிய பசுமை கட்சி

இலங்கை தமிழர்கள் நடத்தப்படும் விதம் குறித்து கவலைகள் இருக்கும் நேரத்தில் இலங்கை மீது தடைகள் விதிப்பது குறித்து ஆஸ்திரேலிய அரசாங்கம் ஆலோசனை செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலிய பசுமை கட்சியின் தலைவர் கூறியுள்ளார்.
தமிழ் மக்கள் இலங்கையை விட்டு வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோருவதை தடுக்க வேண்டுமானால் மேலதிகமான நடவடிக்கை தேவையாக இருப்பதாக பசுமை கட்சியின் தலைவர் பாப் பிரவுன் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தை இந்த ஆண்டின் முற்பகுதியில் இலங்கை அரசு முடிவுக்கு கொண்டு வந்தது. இதன் பின்னர் தஞ்சம் கோரும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் 75க்கும் மேற்பட்ட தஞ்சம் கோரும் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற கப்பலை ஆஸ்திரேலிய கடற்படை மீட்டு இருந்தது.


»»  (மேலும்)

மீள்குடியேற்றத்திற்கு மேலதிகமான மக்களை அனுப்ப நடவடிக்கை - அரச அதிகாரிகள்

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேசத்திற்கு இரண்டாம் தொகுதியாக ஆயிரம் பேர் மீள்குடியேற்றத்திற்காக அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
கடந்த வியாழக்கிழமை முதல் தொகுதியாக துணுக்காய் பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட 297 குடும்பங்களில் 75 வீதமானவர்கள் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த பாடசாலைகளில் இருந்து தமது வீடுகள் காணிகளுக்குச் சென்று விட்டதாக முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களின் அரசாங்க அதிபர் எமில்டா சுகுமார் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
வவுனியா மனிக்பாம் முகாம்களில் தங்கியுள்ள யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இன்னும் பத்து நாட்களுக்குள் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.
இதுபற்றிய மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
திருகோணமலைக்கு அனுப்பட்டவர்களில் புலி உறுப்பினர்கள் கைது - இலங்கை இராணுவம்
இராணுவத்தினர்
வவுனியா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டு திருகோணமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களில் பலர் இராணுவத்தினரால் கைது செய்யப்படுவதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து இலங்கை இராணுவத்தின் பதில் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கவிடம் வினவப்பட்ட போது, அதனை உறுதிப்படுத்தும் முகமாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் திருகோணமலைக்கு கொண்டு வந்ததன் பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் அங்கு வைத்தும் அடையாளம் காணப்படுகின்றார்கள் என்றும் அவ்வாறு அடையாளம் காணப்பட்டதன் பின்னர் அவர்களை கைது செய்து வவுனியாவிலுள்ள புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பி வைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
»»  (மேலும்)

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அரசியல் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பிரசாந்தனைகொலை செய்ய முயன்ற ஆயுததாரிகள் பொலிஸாரால் கைது.


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அரசியல் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் என்பவரை கொலை செய்வதற்கான அவரது சொந்த ஊரான ஆரயம்பதியில் அவரது வீட்டிற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் மூன்று நாட்களாக மறைந்து இருந்த ஆயுததரிகளை பொலிஸார் பிஸ்ரல் ரக துப்பாக்கிகளுடன் கைது செய்துள்ளார்கள். அப்பிரதேச மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆரையம்பதிப் பிரதேசத்தினை சுற்றி வளைத்த காத்தான் குடிப் பொலிஸார் குறித்த துப்பாக்கி தாரிகளை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். தற்போது கிழக்கு மாகாணத்திலே ஆயுதங்கள் ஆனைத்துதம் கையளிக்கப்பட்டு பயங்கரவாதிகளும் முற்றாக ஓழிக்கப்பட்டிருக்கின்ற வேளையில் இத் துப்பாக்கி தாரிகள் எங்கிருந்து வந்தவர்கள்? இவர்கள்தான் தற்போது இடம் பெறுகின்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களோடு தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்திருக்கிறது.

இக்குறித்த ஆயுத தாரிகள் அனைவரும் கருணா அமைப்பைச் சேர்ந்த பாதாள உலக கோஸ்டியினர் என அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றார்கள். இதில் ஒருவர் காளி என அப்பிரதேச மக்கள் அடையாளப் படுத்தி இருக்கனிறார்கள். இவர் பல கொள்ளைச் சம்பவங்கயோடு நேரடியாக தொடர்புகளை வைத்திருதவராவா.; அத்தோடு வீரா என அழைக்கப்படும் கருணாவின் முக்கியஸ்த்தரின் கைக்கூலியும் இவரே. மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்.
மேற் குறிப்பிட்ட துப்பாக்கி தாரிகளால் இலக்கு வைக்கப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கிய உறுப்பிரான பூ. பிரசாந்தன் அவர்கள் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்திலே அதிகமான மக்களின் ஆதரவினைப் பெற்று வருகின்ற ஓர் முக்கிய நபராவார். அத்தோடு சமூக நல்லிணக்கத்தைப் பேணுவதிலும் அதீத அக்கறை கொண்டு செயற்படும் ஓர்; நபர் ஆவார். இவர் ஆரையம்பதியில் வசிப்பதனால் முஸ்லிம் சகோதரர்களுடன் ஏற்படுகின்ற தகராறுகளை மிகவும் கவனமாக கையாண்டு தீர்வுகளை வழங்கி பிரச்சினைகள் ஏற்படாத வண்ணம் சீர் செய்யக் கூடியவர். அத்தோடு கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே போட்டியிட்டு தமிழ் மக்கள் வீடுதலைப்புலிகள் கட்சிசார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 4வது அதி கூடிய வாக்குளைப் பெற்றவர். என்பதும் குறிப்பிட்த்தக்கது. மேலும் இவர் பாராளுமன்ற தேர்தலில் குதித்து விடுவாரோ என்ற அச்சம் காரணமாக இச் செயலைச் செய்ய இவர்கள் முனைந்திருக்கலாம் என அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றார்கள். எது எப்படியோ உண்மை வெளிவரும்
»»  (மேலும்)

அரும்புகளுக்கு அன்பு கொடுக்கும் விருட்சங்கள் முதியோர்கள் - கிழக்கு முதல்வர்
இன்று கோரளைப்பற்று பிரதேச செயலகமும் கோறளைப்பற்று முதியோர் சம்மேளனமும் இணைந்து நடாத்திய சர்வதேச சிரேஸ்ட பிரஜைகள் வாரம் பேத்தாழை குகநேசன் கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்து கொண்டார். கலந்து கொண்டு உஎரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில,; முதியோர்களின் அனுபவங்கள் எமது எதிர்கால சந்ததியினர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக அமையும். இன்றைய சூழ்நிலையில் அதிகமான முதியோர்கள் இல்லங்களிலே சேர்க்கப்படுகின்றார்கள். உண்மையாக அவர்களுக்குரிய இடம் சரிவர எமது சமூகத்தினால் அவர்களுக்கு வழங்கப்படுகின்றதா? ஏன்றால் விடை கேள்விக்குறியேதான். எனவே எதரிவருகின்ற காலங்களில் எமது முதியோர்களின் அனுபவங்களைக் கொண்டு நாம் எமது வாழக்கையினை சீராக அமைத்துக்கொள்ள முடியும். அத்தோடு சமூகத்திலே மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்து அவர்களை நாம் மதிக்க வேண்டும். இன்று சமூகத்திலே இருக்கின்ற ஒவ்வொரு முதியோர்களினதும் வாழ்கையினை எடுத்துக் கொண்டால் ஏதாவது ஓர் திறமை இருக்கும் அதனை எமது இளம் சமூகம் பெற்று பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் கலந்து கொண்ட முதியோர்களுக்கு அன்பளிப்புப் பொருட்களை வழங்கி முதல்வர் சந்ததிரகாந்தன் அவர்களை கௌரவித்தார். இந்நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபைத்தவிசாளர் உதயஜீவதாஸ், பிரதேச சபை உறுப்பினர் நவம், மற்றும் சமூக சேவைகள் திணைக்கள அதிகாரிகள், பிரதேச சபை உத்தயோகஸ்த்தர்கள், பொது நல அமைப்பின பிரதிநிதிகள் முதியோர்கள் எனப் பலர் கலந்து கொண்டார்கள்.
»»  (மேலும்)

கொழும்பை விடவும் யாழ்ப்பாணத்தில் குறைந்த விலையில் பொருட்கள்

யாழ்ப்பாணத்தின் அனைத்து கடைகளிலும் பால்மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் சகலதும் மிகக்குறைந்த விலையிலேயே வழங்கப்படுகின்றன.
குறிப்பாக சகல பால்மா பக்கற்றுக்களும் நிர்ணயிக்கப்பட்ட விலையிலும் 10 ரூபா குறைந்தே விற்கப்படுவதனை காணக்கூ டியதாகவுள்ளது.
அரிசி, சீனி, மா உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் கொழும்பில் விற்கப்படும் அதே விலையிலோ அல்லது அதைவிட குறைவான விலையிலோ யாழ்ப்பாணத்தின் அனைத்துக் கடைகளிலும் பெற்றுக் கொள்ள கூடியதாகவுள்ளது.
யாழ். சந்தையில் உற்சாகமான வியாபாரம் நடைபெற்று வருவதுடன் பொருள் கொள்வனவில் மக்கள் கூடுதல் ஆர்வம் காட்டி வருவதையும் காணக் கூடிதாகவுள்ளது.
அரச மற்றும் தனியார் வங்கிக் கிளைகள் இங்கே ஏராளமாக திறக்கப்பட்டுள்ளன. பொருள் கொள்வனவில் மக்கள் காட்டும் ஆர்வம் குறித்தும் வியாபார முன்னெடுப்புக்கள் தொடர்பாகவும் வியாபாரிகள் பூரண திருப்தியை தெரிவிக்கின்றனர்.

வீதிகளிலிருந்த பெரும்பாலான வீதித் தடைகள் அகற்றப்பட்டிருப்பதனால் இரவு 11 மணி வரை கடைகள் திறந்து வைக்கப்பட்டிருப்பதுடன் சனநடமாட்டமும் அதிகமாக உள்ளது. இம்முறை தீபாவளிக்கு வியாபாரம் களைகட்டியிருந்ததாகக் கூறி வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். யாழ் வியாபாரிகள் சங்கத்தினரின் தீர்மானத்தின்படி அனைத்து பால்மா பக்கற்றுக்களும் 10 ரூபா விலைக் குறைத்தே இங்கு விற்கப்பட்டு வருகின்றன.

»»  (மேலும்)

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கை வருகை


ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி வி லெவ்ரோ இன்று (26) திங்கட்கிழமை இலங்கை வருகிறார்.
குறுகிய கால விஜயம் மேற்கொண்டு இலங்கை வரும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். மேலும் இரு நாடுகளுக்குமிடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவுடன் இரு தரப்பு சந்திப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

இலங்கை, ரஷ்யா ஆகிய நாடுகளிடையே சட்டவிரோத ஆட்கடத்தல் போதைவஸ்து துஷ்பிரயோகம் ஆகியவற்றை தடுக்கும் பொருட்டு அமைச்சர்களான போகொல்லாகம, லெவ்ரோ ஆகியோரிடையே ஒப்ப ந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
இதேவேளை இயற்கை அனர்த் தத்திலிருந்து பாதுகாத்தல், அவ் வாறான சூழ்நிலையின்போது அதனை ஆற்றுப்படுத் தல் என்பன தொடர்பாக இரு நாடுகளுக்கு மிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமெனவும் அமைச்சின் அதிகாரியொருவர் தெரி வித்தார்

»»  (மேலும்)

10/25/2009

ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானம் வரவேற்கத்தக்கது -வாசுதேவ நாணயக்கார13ஆவது திருத்தச் சட்டத்தினை விரைவில் நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளமை வரவேற்கத்தக்கதாகும் என்று ஜனாதிபதியின் ஆலோசகரும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.அதிகார பரவலாக்கல்இ அரசியல் தீர்வு தொடர்பான நிலைப்பாட்டை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெளியிட்டு தமிழ்இ முஸ்லிம் மக்களின் நன்மதிப்பைப் பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இவ்விடயம் தொடர்பாக வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது;
ஐரோப்பிய ஒன்றிய நிபந்தனையால் அரசாங்கத்திற்குள் அங்கம் வகிக்கும் சிங்கள பௌத்த இனவாதக் கட்சிகளிடையே விவாதம் உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால்இ ஜனாதிபதி இந்த இனவாத சக்திகளுக்கு அஞ்சாது 13ஆவது திருத்தத்தை முன்னெடுத்து அதிகாரத்தை பரவலாக்குவது தொடர்பிலும் தமிழ் மக்களுக்கு வழங்கப் போகும் அரசியல் தீர்வு தொடர்பாகவும் தெளிவான நிலைப்பாட்டை வெளியிட வேண்டும். புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும். இதன் மூலம் தமிழ்இ முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெறுவதோடு சர்வதேச ஒத்துழைப்பையும் பெற முடியும்.
ஜனாதிபதி இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுத்தால் அரசாங்கத்திற்குள் உள்ள சிங்கள பௌத்த இனவாதக் கட்சிகளான ஹெல உறுமயஇ விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி நாட்டில் சிங்கள ஆதிக்கத்தை ஏற்படுத்த முனையும் சக்திகளுடன் இணைந்து கொள்ளும். ஜனநாயக சக்திகளும் சிறுபான்மை இனத்தவரும் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவார்கள். எனவே நிச்சயம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் இந்நாட்டின் தலைவராவார். இவ்வாறானதொரு சூழ்நிலை நாட்டில் உருவாகும் போது ஐ.தே.கட்சி அரசியலில் அநாதையாகி விடும்.
மீளக் குடியேற்றம் தமிழ் மக்களை மீளக் குடியேற்றுவதில் ஜனாதிபதி அதிக அக்கறை காட்டி வருகிறார். ஆனால்இ இதற்கு பாதுகாப்புத் தரப்பினர் முட்டுக்கட்டை போடுகின்றனர்.
ஆனால்இ இன்று ஜனாதிபதி இம் முட்டுக்கட்டைகளை பொருட்படுத்தாது கிளிநொச்சியிலும் மீள் குடியேற்றத்தை ஆரம்பித்துள்ளார். எனவே நாட்டில் சிங்கள ஆதிக்கத்தை ஏற்படுத்த முயல்பவர்களின் முயற்சிகள் தகர்த்தெறியப்பட்டு தமிழ்இ முஸ்லிம் மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதி நிச்சயம் வெற்றி பெறுவார்
»»  (மேலும்)

மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம –எஸ்.எம்.எம்.பஷீர் (பாகம் 14
நான் முன்னர் குறிப்பிட்டதுபோல் வட்டுக்கோட்டை தீர்மானம் தமிழ் மக்களின் ஆணையைப் பெறும் முயற்சியில் கிழக்கில் முதல் முஸ்லிம் கட்சியான முஸ்லிம் ஐக்கிய முன்னணி தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் கூட்டுச்சேர்ந்து போட்டியிட்ட னர். வட்டுக்கோட்டை தீர்மானத்தை உள்வாங்கி அதற்கான பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்ட சம்சுதீன்- அஸ்ரபின் “முஸ்லிம் ஐக்கிய முன்னணி”யின் முக்கிய பிரச்சாரகரான அஸ்ரப் ஒருபுறம்; தமிழர் கூட்டணியின் மூதூர் சட்டத்தரணி மஹரூப் மறுபுறம் என தனிநாட்டுப் பிரச்சாரங்கள் அன்றைய அரசியலில் முன்னேடுக்கப்பட்டன. எல்லோராலும் அறியப்பட்ட அஸ்ரபின் " அண்ணன் அமிர்தலிங்கம் தமிழ் ஈழம் அடையாவிட்டால் தம்பி நான் தமிழ் ஈழம் அடைவேன்" என்ற முழக்கமும் முஸ்லிம்கள் மத்தியில் செல்வாக்குப்பெறவில்லை அதனால் வட்டுக்கோட்டை தீர்மானத்தை மட்டுமல்ல அதற்கு ஒத்தூதிய முஸ்லிம் தலைமைகளையும் கிழக்கு முஸ்லிம்கள் நிர்த்தாட்சண்யமாக நிராகரித்தனர். இந்தக்கால கட்டத்தில்தான் முக்கியமாக முதன்முதலாக கிழக்கில் வேறு ஒரு அரசியலும் அரங்கேறியது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 1977 பொதுத் தேர்தலின் போது முன்னாள் கல்வி அமைச்சரான மறைந்த கலாநிதி பதியுதீன் மஹ்மூது அவர்களின் தேர்தல் மேடைகளை அலங்கரித்த அன்றய பிரபல அரசியல் பேச்சாளரான காத்தன்குடியை சேர்ந்த ரசூல் ஆசிரியர் கிழக்கிலே ஒரு புதிய அரசியல் கோசத்தை காரணகாரியமின்றி எதுகை மோனையாய் முஸ்லிம்களை கவருவதற்காக முன்வைத்தார். அதுதான் " அடைந்தால் கிழக்கிஸ்தான் அடையாவிட்டால் கபுரிஸ்தான்" அதாவது முஸ்லிம்களுக்கு என ஒரு தேசமாக "கிழக்கிஸ்தான்" அடையப்பட வேண்டும்; அவ்வாறு அடையாவிட்டால் அடக்கஸ்தலத்தை அடையவேண்டும். ( மரணம் அடையவேண்டும்). இதே காலகட்டத்தில் தான் அஸ்ரப் அவர்களின் தமிழ் ஈழ தனினாட்டுக் கோசமும் அம்பாறை மாவட்டத்தில் (திகாமடுள்ள மாவட்டத்தில்) எதிர் எதிராக ஒலித்தது. மெதுவாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் அஸ்ரப்பை ஓரங்கட்டும் தொடர் செயற்பாபாடுகள் காரணமாக அஸ்ரப் தமது கூட்டணியை முறித்துக்கொண்டதுடன்இ கிழக்கில் முஸ்லிம்களின் முதல் முஸ்லிம் அரசியல் கட்சியாக பரிணமித்த முஸ்லிம் ஐக்கிய முன்னணி விலாசம் இழ்ந்து போனது. மெதுமெதுவாக கிழக்கின் தமிழ் தலைமைகளும் தமிழர் விடுதலை கூட்டனியிலேருந்து வெளியேறினர். கூட்டணியினரின் யாழ் மேலாதிக்க கெடுபிடிகள் தாங்காமல்தான் மட்டுநகரின் முடிசூடா மன்னன் என அழைக்கப்பட்ட சொல்லின் செல்வன் சி. ராஜதுரை அவர்களும் பொத்துவில் பாராளுமன்ற உறுப்பினரான கனகரெத்தினம் அவர்களும் (1977) தேர்தலின் பின்னர் ஐ.தே.கட்சியில் இணையவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார்கள். இக்கால கட்டத்தில் யாழ் மேலாதிக்க இ தமிழர் கூட்டணியின் தேசியவாத அரசியலை எதிர்த்து நின்ற இன்னுமொரு முக்கிய அரசியல்வாதிதான் ராஜன் செல்வநாயகம் ( இவரின் பூர்வீகம்ராஜதுரையை போலவே யாழ்ப்பாணம்தான்இ ராஜதுரையின் தந்தை சுருட்டுச் சுத்தும் தொழில் புரிபராக மட்டக்களப்புக்கு வந்தவர்;பின்னயவரின் தந்தை வியாபாரியாக வந்தவர்) எனினும் தங்களின் இளமைக்காலத்தை கிழக்கிலே கழித்ததால் தங்களை கிழக்கை சேர்ந்தவர்கலாகவே நினைத்து செயற்பட்டவர்கள். கிழக்கு மக்களாலும் கிழக்கு பிரதிநிதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்கள். இளமையில்இ ராஜதுரை பகுத்தறிவு (திராவிட கழக) அமைப்பில் மட்டக்களப்பில் அங்கத்துவம் வகித்து தீவிரமாக செயற்பட்டவர்; பிற்காலத்தில் சாய் பாபாவின் பக்தனாகவும் இந்து கலாச்சார அமைச்சராகவும் பதவி வகிக்த்தவர் . ராஜன் செல்வநாயகம் அன்று நிர்வாகத்தில் உயர் பதவி வகித்த யாழ் அரச அதிகாரிகளின் கெடுபிடிகளுக்கு எதிராகஇ மட்டக்களப்பில் மக்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு முகங் கொடுத்து யாழ் எதிர்ப்புவாதிய அடையாளம் காணப்பட்டவர். விளிம்புநிலை மக்களின் விருப்பத்திற்குறியவ்ராக விளங்கியவர். மறுபுறத்தில் ராஜதுரையும் சாமான்ய மக்களின் மதிப்பை பெற்றவர். தனக்கு தெரிந்தவர்களை என்ருமே இலகுவாக அடையாளம் கண்டு பழகுபவர். இவர்கள் இருவரின் தனிப்பட்ட மற்றும் அரசியல் செயற்பாடு குறித்த விமர்சனங்களை இங்கு நான் வைக்கவில்லை; அது எனது கட்டுரையின் நோக்கமுமல்ல. அன்று வட்டுக்கோட்டை தீர்மானத்தின் எதிப்பினை மட்டக்களப்பில் ராஜன் செல்வநாயகமும்; கல்குடாவில் முன்னாள் அமைச்சர் தேவனாயகமும் மாறுபட்ட தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளாக முன்னெடுத்தவர்கள். (குறிப்பு: இக்கட்டுரைத தொடரினை தொடர்வதற்கு எனக்கு தொலைபேசிஇ எ-மெயில் நேரடிச்சந்திப்பின் மூலமும் ஊக்கமளிக்கும் வாசகர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். இக்கட்டுரையிநை ஆங்கிலத்தில் எழுதுமாறும் முக்கியமான எனது பத்திரிகையாளரான நண்பரின் வேண்டுகோளும் என்னை இக்கட்டுரையிநை தொடர தூண்டுதலாக அமைந்தது..இங்கு ஆங்கிலத்தில் நான் முன்னரே எழுதிய கட்டுரைகளிலுள்ள பல சம்பவங்களை -விடயங்கள்- தமிழில் மீண்டும் எழுதப்படவேண்டி நேரிட்டுள்ளது. ஆகவே சொன்னதை மீண்டும் சொல்லலாக அவை (தமிழில் மட்டுமே வாசிக்கும் அல்லது வாசிக்கக்கூடியவர்களுக்கு) அமையாது என்று நம்புகிறேன்.) ....தொடரும்.......
»»  (மேலும்)

கிழக்கு பல்கலைக் கழகத்தினால் மேற்கொள்ப்படுகின்ற ஆய்வுகள் தொடர்பாக முதலமைச்சர் கூடிய கவனம்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர், பீடாதிபதிகள் மற்றும் துறைத் தலைவர்களுடன் விரிவான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொணடார். கிழக்குப் பல்கலைக் கழகம் எதிர் கொள்கின்ற சவால்கள் மற்றம் மற்றும் பிரச்சினைகளைத் தடுப்பதற்கான எதிர்காலத்திட்டங்கள் என்பன தொடர்பாகவும் பல்கலைக் கழகத்தின் உடனடித் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் விரிவாக ஆரயப்பட்டது. அத்தோடு கிழக்கு பல்கலைக் கழகமானது கிழக்கு மாகாணத்தின் மிகவும் பெரிய ஓர் சொத்தாகும். இதனைப் பாதுகாக்க வேண்டி பாரிய பொறுப்பு கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற அரசியல் வாதியான தனது கடமையாகும் எனவும் குறிப்பிட்டார். அத்தோடு கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப் படுகின்ற ஆய்வுகள் தொடர்பாக ஆராயப்பட்டது. மேலும் கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற வளங்கள் இனங்காணப்பட்டு அது தொடர்பான பல ஆய்வுகள் உடனடியாக ஆரம்பிக்கப்படவேண்டும் என்றும் அதற்கான நிதியினை வழங்குவதற்கான நடவடிக்கையினை தாம் மேற்கொள்வதாகவும் கிழக்குமாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் விசேடமாக கலாச்சாரத்தினைப் பிரதிபலிக்கின்ற சான்றுகள் தொடர்பான தொல்பொருள் ஆய்வுகள், கிழக்கு மாகாணத்திற்கான உண்மையான எல்லை நிர்ணயம், மாகாணத்தின் ஆரம்ப காலம் முதல் தற்போது வரையான குடிசனப்பரம்பல் மற்றும் வளர்ச்சி வீதம், கிழக்கு மாகாணத்தின் வெகுவாகப் பாதிக்கபட்ட ஓர் நோயாகக் கருதப்படுகின்ற புற்று நோய்க்கான காரணங்கள் தொடர்பான ஆய்வுகள் அத்தோடு விவசாயம் ,மீன்பிடி, உல்லாசம், சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பாகவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஆறு மாதங்களுக்குள் அறிக்கை சமர்பிக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

»»  (மேலும்)

முதலமைச்சர் சந்திரகாந்தனின் கிளிவெட்டி மக்களுடனான கலந்துரையாடல்


கிழக்குமாகாண முதலமைச்சர் திரு சந்திரகாந்தன் அவர்கள் நேற்றைய தினம் (23.10.09) கிளிவெட்டிவாழ் மக்களுடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டார். கிளிவெட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் மாலை 4.00 மணிக்கு ஆரம்பமான கருத்தரங்கு மாலை 6.00 மணிவரை இடம்பெற்றது. இக்கருத்தரங்கில் முதலமைச்சருடன் திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அமைப்பாளர் யூடி தேவதாசன், த.ம.வி.புலிகளின் ஊடகப்பேச்சாளர் அசாத் மெளலானா, மற்றும் மட்டுநகர் மாவட்ட அமைப்பாளர் பிரசாந் ஆகியோர் இன்றைய அரசியல் நிலைதொடர்பான கருத்துக்களை மக்களுடன் பரிமாறினர். இவர்களுடன் கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இக்கருத்தரங்கில் கிளிவெட்டி வாழ் மக்களின் இன்றைய அத்தியாவசிய தேவைகள்பற்றி அம்மக்கள் பலரால் எடுத்துரைக்கப்பட்டது. முக்கியமாக கிளிவெட்டி வைத்தியசாலையில் வைத்தியர்கள் பற்றாக்குறை மற்றும் குடிநீர் தட்டுப்பாடுபோன்ற பல குறைபாடுகளை மக்கள் சுட்டிக்காட்டினர். அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் வைத்தியசாலையின் குறைபாட்டினை விரைவில் தீர்த்து வைப்பதாகவும், குடிநீர் பிரச்சினையினை அடுத்தவருட நடுப்பகுதியில் தீர்த்துவைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
மேற்படி கருத்தரங்கு நிறைவு பெற்றதும் கிளிவெட்டி கிராமத்திற்கு அண்மையிலுள்ள குமாரபுரத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள சம்பூர், கடற்கரைச்சேனை ஆகிய கிராமங்களில் எற்கனவே வாழ்ந்து இன்று அகதிகளாக தஞ்சமடைந்துள்ள மக்களையும் சந்தித்து கலந்துரையாடல்களை முதலமைச்சர் மேற்கொண்டார்


»»  (மேலும்)

10/24/2009

சட்டவிரோத குடியேற்றம் திருமலையில் இல்லை’

திருகோணமலை மாவட்டத்தில் எந்தவிதமான சட்ட விரோத குடியே ற்றமும் மேற்கொள்ளப்படவில்லை யென தேச நிர்மாண அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே நேற்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சட்ட விரோதமாக எவரும் குடி யேறியிருந்தால் அவர்கள் அப்புற ப்படுத்தப்படுவார்கள் என்று தெரி வித்த அமைச்சர், காணிகள் இல் லாதவர்களாக இருந்தால் நாட்டின் சட்டத்தின்படி அவர்களின் பிரச் சினை அணுகப்படும் என்றும் கூறி னார்.
திருகோணமலை மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் நேற்று சபையில் முன்வைத்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகை யிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். திரு கோணமலை மாவட்டத்தில் சட்ட விரோத குடியேற்றங்கள் இடம் பெறுவதாகவும் இதனைத் தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் சம்பந்தன் எம்.பி. தமது பிரேரணையில் குறிப் பிட்டிருந்தார்.
அவரின் கூற்றை முற்றாக நிராகரித்த அமைச்சர் புஞ்சிநிலமே, “சம்பந்தன் எம்.பி. முற்றிலும் உண்மைக்குப் புறம்பாக விடயங்களைத் திரிபுபடுத்துகிறார்.
அவர் திருகோணமலைக்கே செல்வ தில்லை. யாரோ செல்வதைக் கேட்டுக் கொண்டு வந்து சபையைத் தவறாக வழிநடத்துகிறார். வாக்காளர் பட்டியலில் உள்ள குடியி ருப்பாளர்களுக்கே முன்னுரிமை அளித்துச் செயற்படுத்தப்படுகிறது.
சட்ட விரோதமாக எவரும் குடிய மர்தப்படமாட்டார்கள்.
இடம் பெயர்ந்தவர்களின் காணிகளை எவருக்காவது சட்டவிரோதமாகப் பெற்றுக்கொடுத்திருந்தால், சட்டத்தின்படி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து உரியவர்களுக்குக் காணி பெற்றுக்கொடுக் கப்படும்” என்றும் அமைச்சர் புஞ்சிநிலமே தெரிவித்தார்.


»»  (மேலும்)

­இலங்கை - வியட்நாமிடையே ஐந்து ஒப்பந்தங்கள்
இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தும் நோக்கில் இருநாடுகளுக்குமிடையில் ஐந்து உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வியட்நாம் ஜனாதிபதி நுயேன் மின் ட்ரயட் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையையடுத்து மேற்படி ஐந்து உடன்படிக்கைகளும் கைச்சாத்தாகியுள்ளன.
இருநாடுகளுக்குமிடையிலான முதலீடு, கலாசார ஒத்துழைப்பு, விவசாய அபிவிருத்தி, கடற்றொழிலுக்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பு குற்றத்தடுப்பு மற்றும் தேடுதல் தொடர்பான சட்ட ரீதியான நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு, ஆகிய ஐந்து உடன்படிக்கைகள் நேற்றுக் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இருநாடுகளுக்குமிடையிலான முதலீட்டுத் துறைகளை ஊக்குவித்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான உடன்படிக்கையில் இலங்கையின் சார்பில் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவும் வியட்நாமின் சார்பில் அந்நாட்டின் முதலீடு மற்றும் திட்டமிடல் அமைச்சர் வோ ஹொங்புக் கும் கைச்சாத்திட்டுள்ளனர்.
இருநாடுகளுக்குமிடையிலான கலாசார ஒத்துழைப்பு உடன்படிக்கையில் கலாசார அமைச்சரின் சார்பில் வெளிநாட்டமைச்சர் ரோஹித போகொல்லாகமவும் அந்நாட்டின் கலாசார, விளையாட்டுத்துறை மற்றும் கலாசார அமைச்சரான நுயேன் டன் தையும் கைச்சாத்திட்டுள்ளனர்.
விவசாயத்துறையை ஊக்குவிக்கும், முன்னேற்றும் வகையில் 2010-2011ம் ஆண்டுக்கான விவசாயத்துறை அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் விவசாய அபிவிருத்தி அமைச்சரின் சார்பில் வெளி நாட்டமைச்சர் ரோஹித போகொல்லாகமவும் வியட்நாம் விவசாய, கிராமிய அபிவிருத்தி பிரதி அமைச்சருமான வூ வான் டம்மும் கைச்சாத்திட்டுள்ளனர்.
அதேபோன்று வியட்நாம் அரசாங்கம் இலங்கையின் கடற்றொழில் துறைக்கு 2010 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் தொழில் நுட்ப ஒத்துழைப்பினை வழங்குவதற்கான ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இவ் உடன்படிக்கையில் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவும் அந்நாட்டின் விவசாய, கிராமிய அபிவிருத்தி அமை ச்சின் அதிகாரிகளும் கைச்சாத்திட்டுள் ளனர்.
அதேவேளை, மற்றுமொரு முக்கிய உடன்படிக்கையான குற்றத்தடுப்பு மற்றும் சுற்றி வளைப்பு தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகைகள் சம்பந்தமான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் காமினி செனரத்தும் வியட்நாம் அரசின் சார்பில் அந்நாட்டின் மக்கள் பாதுகாப்பு அமைச்சின் நிரந்தர பிரதிநிதி ருயேன் கான் ஜோன் ஆகியோரும் கைச்சாத்திட்டுள்ளனர்.
இவ் உடன்படிக்கைகள் இரு நாட்டுத் தலைவர்களினதும் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டுள்ளன
»»  (மேலும்)

10/23/2009

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த எஞ்சிய குடும்பங்களை அடையாளம் கண்டு அழைத்து வருவதற்காக மாவட்ட குழுவொன்று இன்று வவுனியா சென்றுள்ளது.

வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்தும் தங்கியிருப்பதாக கருதப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த எஞ்சிய குடும்பங்களை அடையாளம் கண்டு அழைத்து வருவதற்காக மாவட்ட புனர்வாழ்வு திட்ட உதவிப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஷரீப் மற்றும் 10 கிராம சேவை அலுவலகர்கள் உள்ளடக்கிய குழுவொன்று இன்று வவுனியா சென்றுள்ளது.
வவுனியா இடைத்தங்கல் முகாம்களிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 847 குடும்பங்கள் 2349 பேர் நேற்று வரை 4 தொகுதிகளில் மீள் குடியேற்றத்திற்காக மட்டக்களப்புக்கு அழைத்து வரப்பட்டு சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று அழைத்து வரப்பட்ட 298 குடும்பங்களைச் சேர்ந்த 787 பேர் இறுதி தொகுதியினராகக் கருதப்பட்டாலும் இம்மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 34 குடும்பங்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்தே குறிப்பிட்ட அதிகாரிகள் குழு அவர்களை அடையாளம் கண்டு அழைத்து வர சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.
நேற்று அழைத்து வரப்பட்ட குடும்பங்களில் 3 பெண்கள் உட்பட 6 பேர் தவிர்ந்த ஏனையோர் அவர்களது இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட 6 பேரையும் வவுனியாவுக்கு அனுப்பி வைப்பது குறித்து பாதுகாப்பு தரப்பு ஆராய்ந்து வருவதாக தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.

Categories: செய்திகள்

Tags:

-->
»»  (மேலும்)

புலிகளின் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இரண்டு மீட்பு

புலிகள் தமது பயங்கரவாத செயற்பாடுகளுக்காக பயன்படுத்திய விமான எதிர்ப்பு ஏவுகணைகளான இரண்டு சேம் மிசைல்களை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைப்பற்றியிருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
இராணுவத்தின் 8வது செயலணியின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைவே புதுக்குடியிருப்பு இரணைப்பாளை எனும் இடத்திலிருந்து நேற்று இரண்டு விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் மீட்கப்பட்டுள்ளன.
புலிகள் தம்மிடமிருந்த அதிசக்தி வாய்ந்த ஏவுகணைகளைக் கொண்டு கடந்த காலங்களில் விமாப் படையினரின் விமானங்களை இலக்கு வைத்து பல்வேறு பயங்கரவாதச் செயற்பாடுகளை நடத்தியமையையும் பிரிகேடியர் நாணயக்கார சுட்டிக்காட்டினார்.
இதேவேளை அப்பகுதியிலிருந்து எம்.பி.எம்.ஜி உள்ளடக்கப்பட்ட ஒரு பீப்பாயும் 240 லீற்றர் மண்ணெண்ணெய் கொண்ட 10 பீப்பாய்களும், பல்வேறு வகையான மோட்டார் குண்டுகளும் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இராணுவத்தின் 8வது செயலணியின் படைத் தளபதியான ரவிப்பிரிய லியனகே தலைமையிலான புலனாய்வுப் பிரிவினரே நேற்று இவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
»»  (மேலும்)

வியட்நாம் சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்தவுக்கு மகத்தான வரவேற்புஜனாதிபதி மஹிந்தவுக்கு மகத்தான வரவேற்பு
வியட்நாம் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்ய இணக்கம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் அழைப்பை ஏற்றுக் கொண்ட வியட்நாம் ஜனாதிபதி நுயன் மின் ட்ரயட், இலங்கைக்கு விஜயம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற் கொண்டு வியட்நாம் சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்டு ஜனாதிபதியை இலங்கை நேரப்படி நேற்று மாலை சந்தித்து இருதரப்பு பேச்சு நடத்தினார். இதன்போதே இந்த அழைப்பு முன் வைக்கப்பட்டது.

இச்சந்திப்பின்போது இரு அரசாங் கங்களுக்குமிடையில் முக்கிய பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. குற்றச்செயல்களை தடுத்தல், இரு நாடுகளினதும் பிராந்தியங்களினதும் பாதுகாப்பை பலப்படுதல் தொடர்பான ஒப்பந்தங்களில் இருநாடுகளும் கைச்சாத்திட்டன.
இரு தரப்பு சந்திப்பின்போது ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ, தென் கிழக்காசிய நாடுகளில் வியட்நாம் பொருளாதாரத்துறையில் பெரும் வளர்ச்சியடைந்து வருவதாக அந் நாட்டு ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினார்.
இரு நாடுகளினதும் இருதரப்பு வர்த்தகத்தை வலுப்படுத்தும் வகை யில் விசாயம் மற்றும் மீன்பிடித்துறை குறித்தும் இச்சந்திப்பின்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும் யுத்தம் முடிவடைந்ததுடன் நாட்டில் வர்த்தகம் மற்றும் முதலீடுகளுக்கான சந்தர்ப்பம் அதிகரித்திருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பயங்கரவாதத்தை தோற்கடித்தமை க்காக இலங்கை ஜனாதிபதியை வியட்நாம் ஜனாதிபதி பாராட்டியதுடன் இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பாகவும் கூடிய கவ னம் செலுத்தியுள்ளார்.»»  (மேலும்)

10/22/2009

ஆப்கன் மறுதேர்தலில் மக்கள் பங்கு கொள்ள வேண்டும் - ஐநா சிறப்புத் தூதர் அழைப்பு


ஆப்கானில் விரைவில் நடக்கவுள்ள மறு தேர்தல் மிகவும் நேர்த்தியானதாக இருக்கும் என்று கூற முடியாது என்றாலும் மக்கள் இதில் பங்கு கொள்ள வேண்டும் என்று ஆப்கானுக்கான ஐநாவின் சிறப்புத் தூதர் காய் எடி கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆப்கான் நாடு மோதல்கள் நிறைந்த ஒரு நாடு என்பதை மறக்கலாகது என்றும் அவர் கூறியுள்ளார்.
நவம்பர் 7 ஆம் தேதி மறு தேர்தல் நடக்கவுள்ள நிலையில்.ஊழல் புகருக்குள்ளாகியுள்ள சுமார் 200 தேர்தல் அதிகாரிகளை மாற்றும் பணி ஏற்கனவே துவங்கியுள்ளதாக ஐ நா கூறியுள்ளது.

மீண்டும் அங்கே தேர்தல் முறைகேடுகள் நடைபெறும் என்பதற்கான அச்சங்கள் வெளியிடப்படும் சூழலில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
சர்வதேச அழுத்தங்களைத் தொடர்ந்து ஆப்கன் அதிபர் ஹமித் கர்சாய் தனது முக்கிய போட்டியாளர் அப்துல்லா அப்துல்லாவை மறு தேர்தலில் சந்திக்க செவ்வாய் கிழமையன்று ஒத்துக் கொண்டார்.


»»  (மேலும்)

அமைச்சர் முரளிதரனின் ஆரையம்பதி அலுவலகம் மீது ஊர் மக்கள கல் வீச்சு

நேற்று (20.10.2009) இரவு 7.30 மணியளவில் ஆரையம்பதியில் அமைந்துள்ளslfp

அலுவலகம் மீது மக்கள் கல்வீசி தமது எதிர்ப்பபை தெரிவித்துள்ளார்கள். அண்மையில் ஆரையம்பதியில் திறக்கப்பட்ட
அலுவலகத்திற்கு பூரண எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு மக்கள் தமது கருத்துக்களைத் தெரிவித்து வந்திருந்தனர். எந்த ஒரு உதவியும் செய்யாமல் பயனற்று இருக்கின்ற இவ்வலுவலகம் எமக்கு தேவையில்லை என மக்கள் கடும் விசனம் தெரிவித்து வந்த வேளையில் நேற்று இரவு ஆத்திரமடைந்த பொது மக்கள் கற்களால் வீசி அவ் வலுவலகத்தை அகற்றும்படி செய்திருக்கிறார்கள். இப்பிரச்சனை காத்தான்குடி பொலிசாருக்கு எட்டியதை அடுத்து இஸ்த்தலத்திற்கு விரைந்த பொலிசார் மேலதிக விசாரணைகளைமேற்கொண்டு வருகின்றனர். மேற்படி அலுவலகமானது ஆரையம்பதி பிரதான வீதியில் ஒருவரது வீட்டில் அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.»»  (மேலும்)

தமிழகக் குழுவின் மூலம் சர்வதேசத்துக்கு நல்லதொரு செய்தி சென்றடைந்துள்ளது ஊடகத்துறை அமைச்சர்.


தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு வந்து சென்றதன் பின்னர் இலங்கை தொடர்பாக நல்லதொரு செய்தி சர்வளதசத்தைச் சென்றடைந்துள்ளது என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு வந்து சென்றதன் பின்னர் இலங்கை தொடர்பாக நல்லதொரு செய்தி சர்வளதசத்தைச் சென்றடைந்துள்ளது என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இத னைக் கூறினார்
.அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியவை வருமாறுஇலங்கை அரசு கடந்த காலங்களில் வடக்கிலுள்ள இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களை நடத்தி சென்றவிதம் மற்றும் அங்குள்ள வசதிகள் தொடர்பில் தமிழக நாடாளு மன்ற உறுப்பினர்கள் தமது திருப்தியை தெரிவித்துள்ளனர்.அவர்கள் திருப்தி கொண்டதன் அடிப் படையிலேயே அகதி முகாம்களிலுள்ள மக் களின் அபிவிருத்திக்காக 500 கோடி ரூபாவை
(இந்திய மதிப்பில்) வழங்க முன்வந்துள்ளனர்.அத்துடன் மடுவிலிருந்து தலைமன்னார் வரையான ரயில் பாதையை புனரமைக்க அவர்கள் உதவவுள்ளனர்

»»  (மேலும்)

மண்முனை மேற்கு வவுணதீவில் ஏழு நூலகங்கள்


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவுப் பிரதேசத்தில் ஏழு நூலகங்கள் திறந்து வைக்கப்பட்டன.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் கிழக்கு மாகாண சபையினால் நிர்மாணிக்கப்பட்ட இந்நூலகங்களை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கே. தங்கேஸ்வரி, மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ். சத்தியானந்தி, வவுணதீவுப் பிரதேச சபையின் தவிசாளர் கே. சுப்ரமணியம் ஆகியோர் திறந்து வைத்தனர்.
வவுணதீவுப் பிரதேசத்திலுள்ள கன்னங்குடா, ஈச்சன்தீவு, நாவற்காடு, விளாவெட்டுவான், நரிப்புள்தோட்டம், மகிழவெட்டுவான், வவுணதீவு ஆகிய ஏழு இடங்களில் இப்புதிய நூலகங்கள் திறந்து வைக்கப்பட்டன.
இப்புதிய நூலகம் ஒவ்வொன்றும் 16 இலட்சம் ரூபா செலவில் இரண்டு மாடிக்கட்டிடமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

»»  (மேலும்)

மேலும் ஒரு தொகுதி மக்கள் மட்டக்களப்பு வருகை

வவுனியா நிவாரணக் கிராமங்களிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் ஒரு தொகுதியினர் நேற்று அதிகாலை மட்டக்களப்பு அழைத்துவரப்பட்டனர்.
298 குடும்பங்களைச் சேர்ந்த 785 பேர் அழைத்து வரப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
மட்டக்களப்புக்கு அழைத்து வரப்பட்ட இவர்கள் மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டனர்.
»»  (மேலும்)

10/21/2009

வடக்கைச் சேர்ந்த 500 பேர் பொலிஸ் சேவையில் இணைப்பு : பொலிஸ் மா அதிபர்

யாழ். குடாநாட்டைச் சேர்ந்த 500 பேர், பொலிஸ் சேவையில் கடமையாற்றுவதற்கென தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன தெரிவித்ததாக அரச இணணயத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. வழக்குகளை நெறிப்படுத்துதல் தொடர்பாக பயிற்சிகளை முடித்துக் கொண்ட 41 பொலிஸ் அதிகாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் நேற்று கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில்."யாழ். குடா நாட்டைச் சேர்ந்தவர்களை பொலிஸில் இணைத்துக் கொள்வதற்கான தேர்வு நடத்தப்பட்டமை இதுவே முதற் தடவையாகும்.கிழக்கை போன்று வடக்கிலுள்ள மக்களும் தமது சொந்த மொழியைப் பயன்படுத்தி பொலிஸாரிடமிருந்து சேவைகளை உரிய முறையில் பெற்றுக் கொள்ள இது வழிவகுக்கும்.வடக்கிற்கென 12 பொலிஸ் நிலையங்கள் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 8 பொலிஸ் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.கல்லடியில் தமிழ் மொழி பயிற்சிக்கென பொலிஸ் பயிற்சிக் கல்லூரி உருவாக்கப்பட்டுள்ளது போன்று வடக்கிலும் பயிற்சிக் கல்லூரி ஒன்று அமைக்கப்படும்" என்றார்.இந்த நிகழ்வில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இலங்கக்கோன், பிரதிப் பொலிஸ் மா அதிபர்களான அசோக விஜேதிலக்க, லக்கி பீரிஸ், அநுர சேனநாயக்க, பிரசன்ன நாணயக்கார ஆகியோர் உட்பட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்
»»  (மேலும்)

இன்றைய அடையாள அரசியலும் பெண்களின் பாத்திரமும். சுவிஸ் இல் நடந்த 28வது பெண்கள் சந்திப்பில் பெண்ணியவாதியான தில்லை அவர்களால் வாசிக்கப்பட்ட கட்டுரை.

அறிமுகம்
இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள பாரிய அரசியல் மாற்றத்தினைத் தொடர்ந்து பல்வேறு சமூகப் பிரிவினர் குறித்த விடயங்கள் அரசியல் அரங்கில் ஓங்கி ஒலித்துவரும் இந்த சூழலில் நம் பெண்களின் நலன்கள் குறித்த விடயங்களும் இன்று கூர்மையாக கவனிப்புக்குள்ளாக வேண்டியுள்ளது.
இலங்கைப் பெண்கள் குறித்து சிந்திக்கின்ற போது நமது பெண்கள் எவ்வாறு விசேடத்துக்குரியவர்கள் என்பதை மீண்டும் உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
ஐரோப்பாவில் கூட பலநாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைப்பதற்கு முன்பே 1931 இலங்கை பெண்களுக்கான வாக்குரிமை கிடைத்து விட்டது. பெண்ணை அரசியல் தலைமைக்கு கொண்டுவந்த முதலாவது நாடு நம் நாடு இலங்கையில் ஆண்களைவிட பெண்களே கல்வியறிவு வீதத்தில் கூடியவர்களாகவும் உள்ளனர். இலங்கையின் பிரதான வருவாயைத் தீர்மானிக்கின்ற மூன்று பெருந்துறைகளான பெருந்தோட்டத்துறை சுதந்திர வர்த்தக வலயம் உள்ளிட்ட ஆடை உற்பத்தித்துறை வெளிநாட்டுப் பணித்துறை போன்றவற்றில் பெண்களே பெரும் தொழிற்படையினராக உள்ளனர்.
இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு பெண்களின் நிலை இலங்கையில் ஆரோக்கியமாக உள்ளதென பொதுவிலக்காகக் காட்டி விதண்டாவாதம் பண்ணுவோர் சமூகத்தில் ஒரு தளத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இலங்கையிலும், இலங்கைக்கு வெளியிலும் பெண்களுக்காக இயங்கிக் கொண்டிருப்பவர்கள் இன்னொரு தளத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எழுதியும், பேசியும், செயற்பட்டும் கொண்டுதான் இருக்கின்றார்கள்.
ஆனால் அவர்களாலும் நாளாந்தம் பலநூறு அடக்குமுறைகளைச் சந்திக்கும் இந்தப் பெண்களின் நிலைமைகளை விபரிக்கவோ, காட்சியாகக் காட்டவோ முடியாத நிலையே இன்றுவரையுள்ளது.
இதற்கான காரணங்கள் என்ன என நான் அவ்வப்போது புரிந்து வைத்திருந்த விடயங்களை ஆராயும் போது நான் வாழ்ந்த பிரதேசத்தினுள்ளும் நான் அனுபவித்த அடக்குமுறைகளுக்குள்ளும், நான் சந்தித்த நபர்களுக்குள்ளும், அதற்கு வெளியிலும் இருக்கக் கூடிய விடயங்களையிட்டே உங்களுடன் உரையாட விரும்புகிறேன்.
இலங்கையில் ஆரம்பகாலங்களில் பொதுவாக நான் புரிந்து வைத்திருந்த இடதுசாரியம் மற்றும் பெண்ணியம் என்பது மேட்டுக்குடியைச் சேர்ந்த உயர்வர்க்க, சரளமாக ஆங்கிலம் பேசக்கூடிய உயர்கல்வி கற்ற பெண்களின் பெண்ணியத்தைத்தான் பெண்ணியம் என்றும் நினைத்துக் கொண்டேன்.
89, 90 களின் பிற்பகுதிகளில் இவ்வாறான பெண்களின் மிக மிக அதிகமான செயற்பாடுகளையும் எழுத்துக்களையும் அறிந்திருந்தேன்.
அதனைத் தொடர்ந்து எனக்கு கிடைத்த ஒரு சில சந்தர்ப்பங்களில் நான் அவ்வாறான சில பெண்களோடு நேரடியாகப் பெற்ற அனுபவங்களும் சமூகத்தில் ஒரு பெண்ணாக அடைந்த சொந்த அனுபவங்களோடும் தொடர்ச்சியாகப் பெண்களுக்காக இயங்குதல் என்ற தூரநோக்கத்தை புரிந்து கொள்ளவும் அதற்கான தேடல்கைளை விரிவு படுத்தவும் தொடங்கினேன்.
அதன் பெறுபேறாக பெண்களுடனான வேலைத்திட்டத்தில் நேரடியாக எனக்கு கிடைத்திருந்த அனுபவங்களுடாக ஒன்றை மட்டும் நான் மிகக் கறாராகப் புரிந்து கொண்டேன்
இல்லை.
இல்லவே இல்லை.
இன்றைய சூழலில் சிலர் தெரிந்திருந்த போதும் பலர் கண்டுகொள்ளாதஇ இன்னுமொரு சமூகத்தால் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்ட என்னைப் போன்ற பெண்களிடம் உள்ள பெண்ணியம் வேறுஇ எனது சமூகப் பெண்களுக்கான பிரச்சனை வேறு என்பதைப் புரிந்து கொண்டேன்.
இதன் தொடர்ச்சியாகவே இலங்கைக்குள்ளும் இலங்கைக்கு வெளியிலுமுள்ள பெண்ணியங்களின் வித்தியாசங்களைப் புரிந்து கொள்ள முயல்கிறேன். எனது சமூகத்துப் பெண்களின் பிரச்சனைகளை இனம் காண்பதற்கூடாகவே எனக்கான பெண்ணியத்தை நான் அடையாளப்படுத்த விரும்புகிறேன்.
அவ்வாறெனில் நான் புரிந்து கொண்டிருந்த பெண்ணியம் இவ்வளவு காலமும் பெண்களுக்காக இயங்கவில்லையா?
அந்தப் பெண்களுக்காகக் கதைத்தோம், இந்தா இவர்களுக்காக இதைக் கதைத்திருக்கிறோம், இவர்களுக்காக இதைச் செய்திருக்கிறோம்
என விதிவிலக்காக உள்ள விடயங்களை எல்லாம் பொத்தம் பொதுவாக கொண்டுவந்து சேர்த்து, இந்தா இருக்கிறது இவர்களுக்காக நாங்கள் இவ்வளவு செய்திருக்கிறோம் என தங்கள் நலன்சார் நியாயங்களைப் படார் எனச் சபைகளில் தூக்கிப் போட்டு விடுகிறோம்.
நாங்கள் பெண்களாக ஒன்றுபடும் பொழுது நமது எதிரியிடம் வேண்டுமானால் இவற்றிலிருந்து தப்பிப்பதற்கான வாதங்களை முன்வைத்துவிட்டு கடந்துவிடலாம். அது நமக்கு வசதியாகவும் இருக்கும்.
நாங்கள் யார் யாரால் ஒடுக்கப்படுகிறோம் எந்த வர்க்கத்தினரால் அடக்கப்படுகிறோம் எந்தெந்த சக்தியினரால் ஓரம் கட்டப்படுகின்றோம்
போன்றவற்றை தெளிவாகத் தெரிந்த பெண்களிடமே இவ்வாறு சொல்வதுதான் வேடிக்கையானது இந்த சுயவிமர்சனத்தை நாம் ஏனையோரிடம் பகிரத்தேவையில்லை… குறைந்தது இவ்வாறான பெண் செயற்பாட்டாளர்கள் கூடும் இடங்களிலாவது நாம் விவாதித்து சரியான திசைவழியைக் கண்டடைய வேண்டிய தருணம் இது.
சரி…, பெண்கள் விடயத்தில் பிரதான பேசுபொருளை ஊடறுத்து உப விடயங்களிலும் கவனக்குவிப்பை செய்யவேண்டிய பொறுப்புடையவர்கள் நாம் அல்லவா? அந்த பொறுப்பு எவ்வளவு தூரம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது? அதற்கு தடையாக இருந்த நலன்கள் என்ன? பின்புல சித்தாந்தங்கள் என்ன? எதிராக இருந்த சக்திகள் யார்? அவர்கள் கண்ட வெற்றிகள் தான் என்ன?
சமூக மாற்றத்தை நிகழ்த்தும் போக்கில் பேரரசியலிலிருந்து இந்த நுண் விடயங்கள் அரசியல் நீக்கம் செய்யப்பட்டது ஒன்றும் தற்செயலாக நிகழவில்லை. அதற்குப் பின்னால் பொறுப்பற்ற நலன்கள் நிச்சயமாக இருந்தேவந்திருக்கிறது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தனித்தும் ஐக்கியப்பட்டும்
கடந்தகாலங்களில் நாங்கள் பெண்களுடைய பிரச்சனைகளுக்காகத் தனித்தும் பேரரசியலில் ஐக்கியப்பட்டும் செயற்பட்டபோது
சமூகத்திலுள்ள அனைத்து நுண் விடயங்களிலும் அக்கறை செலுத்தினோமா? அவற்றை குறைந்த பட்சமேனும் புரிந்து கொண்டோமா?
அவ்வாறு இருந்திருப்போமானால் எங்கள் மேலான தற்கொலையை நாங்களே நிகழ்த்த வேண்டி இருந்திருக்காது.
இலங்கையில் யுத்தத்தால் முதலாவது பாதிக்கப்பட்டவளும்
பெண் இரண்டாவது பாதிக்கப்பட்டவளும் பெண்
மூன்றாவதாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பவளும் பெண்
என்று சொல்லிக்கொண்டிருக்கும் நாங்கள்
1.அந்தப் பெண்களின் பிரேத்தியேக நலன்களிலும் அடக்கு முறைகளிலும் சவால்களிலும் எவ்வாறு பங்களித்தோம்?
2.இந்தப் பெண்களின் எந்த நிலைமைகளுக்கு ஆதரவாக இருந்தோம்?
3.சமூகத்தின் எந்த சக்திகளின் கருத்துக்களுக்குச் சாதகமாக இருந்திருக்கிறோம்? இருந்துவருகிறோம்?
4.ஒடுக்கப்படும் சமூக சக்திகளின் தங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தாமே போராடமுற்படுகையிலெல்லாம் அதற்கான அனுமதி மறுத்து „அதனை நாங்கள் பேசுகிறோம்…. நாங்கள் மட்டும்தான் பேசுவோம்…“ என்று கையிலெடுத்தவர்கள் குறைந்த பட்சம் பாதிக்கப்பட்டவர்கள் என்ன பேச விரும்புகிறார்கள் என்றாவது கேட்டார்களா?
இவ்வாறான கேள்விகளை உருவாக்கும் போதுதான்
யார் தவறவிட்டார்கள்? எதைத் தவறவிட்டார்கள்?, எதற்காகத் தவறவிட்டார்கள்? என்ற பதில்களையும் பெற முடியும்.
உதாரணங்களுக்காக நான் சந்தித்தவைகளும் அனுபவித்தவைகளும் அறிந்தவைகளும் சில
பிரதேச ரீதியாக தான் எதிர்கொள்ளும் அடக்குமுறைகளையும் அங்குள்ள பெண்களுக்குள்ள பிரத்தியேகப் பிரச்சனைகளையும் உதாரணத்திற்கு அம்பாறை அல்லது மட்டக்களப்புப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் கதைத்தால் அதனை ஒரே அடியில் பிரிவினைவாதம் கதைக்கிறாள் கிழக்குத்தேசியம் கதைக்கிறாள் என்கிறோம் .அந்தப் பெண்களுக்குப் பிரிவினைவாதம் தெரிந்திருந்தால் தங்களது கணவர்கள் செய்யும் அத்தனை கொடுமைகளையும் கொடூரங்களையும் தாங்கிக் கொண்டு வீடுகளில் இருந்திருப்பார்களா?
தான் வாழும் சமூகத்தால் தலித் என்கிற ஒரு காரணத்திற்காக ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பெண் தனக்கு எதிரான ஒடுக்குமுறையை கதைத்தால் அதையும் ஒரே அடியில் எதிர்த்து எதற்காக இந்த இடத்தில் இதைக் கதைக்கிறாள்? சாதியம் கதைக்க வந்திட்டாள் என்கிறோம் அந்தப் பெண் என்ன உயர்சாதியமா கதைத்தாள்? இல்லையே தனக்கான சமூக நீதியை மட்டுமல்லவா அவள் கோரினாள்.
காலங்காலமாக சொந்த வாழ்வாதாரப் சிக்கல்களை மலையகப் பெண்கள் முன்வைக்கும் போது இன்றுள்ள நிலையில் எரியும் பிரச்சனை இவர்களுடையதா? என்று அந்தப் பெண்களின் குரலையும் உணர்வையும் ஓரே அடியில் மடக்குகிறோம்.
அவளுடைய சமூகத்துக்கு நிகழ்ந்த கொடுமைகளையும் இழப்புக்களையும் துரோகங்களையும் முஸ்லிம் பெண்கள் விபரிக்கும் போது முஸ்லிம் தேசியம் கதைக்க கிளம்பிட்டாள் மதஅடிப்படை வாதி என்கிறோம்.
இவ்வாறான நுண் பிரச்சனைகள் எல்லாவற்றையும் தெரிந்தும் புரிந்தும் கொண்ட ஒரு பெண் தனக்கான பிரத்தியேகப் பிரச்சனைகளைத் தள்ளி வைத்துவிட்டு பிரதான நீரோட்டத்திலுள்ள விடயங்களைக் கதைக்கும் போது அவளையும் ஒரே அடியில் புறக்கணித்தும், சந்தேகித்தும் அவள் மீது இலகுவாக முத்திரை குத்தி உலகம் புராவுமுள்ள நண்பர்களுக்கு அறிவித்தும், உறவுகளாலும் அவளைக் கைவிடுகிறோம்.
சமூகத்திலே இருக்கக்கூடிய அனைத்து அடக்கு முறைகளுக்காவும் குரல் கொடுக்கப் போகிறோம்.
என்று சொல்லிக் கொண்டு மேலெழுந்தவர்களால் எப்படி இவைகள் எல்லாவற்றையும் இவ்வாறு பார்க்க முடிந்தது?
தனித்து பெண்களின் பிரச்சனைகளை பேசும் அதேவேளை ஏனைய விடயங்களில் ஐக்கியப்பட்டும் செயற்பட வேண்டிய பொறுப்பு நம்முடையது… இதில்… தமக்காகவும் கதைத்துக்கொண்டு மற்றவர்களுக்காகவும் குரல் கொடுக்க எங்கு தவறினார்கள்?
இவ்வாறாக கடந்த காலங்களில் என்னுடைய சமூகத்துக்குள்ளும் நுண் தளங்களுக்குள்ளும் பல்வேறுவகையான முரண்பாடுகளைச் சந்திக்க நேர்ந்த போதுதான் அதனை ஆராயும் பக்குவமும் வித்தியாசங்களைக் கண்டுகொள்ளும் பக்குவமும் மேற்கிளம்பியது.
ஆகவே இன்றைய அடையாள அரசியலின் பிரத்தியேகங்களை அடையாளங் காண்பதிலும், பிரக்ஞைகொள்வதிலும் எங்கு தவறிழைத்திருக்கிறோம் என்பதை சுயவிசாரணை செய்யவேண்டியிருக்கிறது.
ஆணாதிக்க கட்டமைப்பு அதன் சித்தாந்தம், அதன் புனைவு அதன் அத்தனை ஆதிக்க கட்டுமானங்களையும் தகர்த்தெறிவதற்கான போராட்டத்தை மேற்கொள்ளும் அதேவேளை ஆணாதிக்கத்திற்கு அடுத்ததாக பெண்கள் எதிர்கொள்ளும் ஏனைய பிரச்சினைகளுக்காகவும் சமகாலத்தில் நிற்கவேண்டிய தேவை உள்ளதையே இங்கு அதிகம் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
பெண், பெண்ணானதாலேயே பிரச்சினை என்றால், ஒடுக்கப்படும் வர்க்கத்தை சேர்ந்த பெண்ணானதாலேயே வேறு பிரச்சினையை எதிர்கொள்கிறாள், தலித்தாக பிறந்ததாலேயே தலித் பெண் பாதிக்கப்படுகிறாள், ஆதிக்க சமயமொன்றில் பிறக்காததற்காகவே அவள் இன்ன சமயமென்பதற்காகவே பாரபட்சத்திற்குள்ளாகிறாள், இன்ன பிரதேசத்தில் பிறந்ததற்காகவே பிரதேசவாத வேறுபாடுகளுக்கு பலியாகிறாள். இன்ன இனத்தவளானதாலேயே அவள் சீரழிக்கப்படுகிறாள்.
ஆணும் பெண்ணும் பொதுவாக எதிர்நோக்கும் பிரச்சினை என கூறி இதனை நிராகரித்துவிடாதீர்கள். பெண் இந்த அடையாளங்களால் மேலும் விசேடமாக ஆண்களை விட பாதிக்கப்படுகிறாள் என்பதையே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இலங்கை அரசியலின் பிரதான நீரோட்டத்தில் பேரரசியலாக ஆக்கப்பட்ட பிரச்சனைகளின் போது கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்ட நுண் பிரச்சனைகளும் அவைசார்ந்த நுண் அரசியலும் நம்முடைய கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும். அந்த வகையில் வர்க்கப்பிரச்சனை, தேசியப்பிரச்சனை, சாதியப் பிரச்சனை, சமயப்பிரச்சனை ஆகியவற்றுக்குத் தனித்த வடிவமும், தனித்த பண்புகளும், தனித்த பாத்திரமும் உண்டு இதை யாரும் மறுக்க முடியாது.
எனவே வர்க்கம், சாதி, பிரதேச, மற்றும் தேசிய எல்லைகளோடு பேரரசியலில் ஜக்கியப்பட்டவர்கள், தனித்து பெண்களுக்காக குரல் கொடுத்தவர்கள் தமது ஆதிக்க மனோபாவத்தால் அடக்கப்பட்ட சாதாரண பெண்கள் எதிர்கொள்ளும் அவர்களுடைய பிரத்தியேகப் பிரச்சனைகளை கடந்த முப்பது ஆண்டுகளாக ஏன் கண்டுகொள்ளாதிருந்தனர்?
பேரரசியல் எவ்வாறு தனது ஆதிக்க நலன்களுக்காக அப்பெண்களையும் அவர்களுடைய தனித்துவங்களையும் அடக்கி ஒடுக்கியதோ அதிலிருந்து இம்மியளவும் வித்தியாசங்கள் இன்றி, இதர ஒடுக்கப்பட்ட சக்திகளும் அப்பெண்களின் குரல்களை அடக்கித்தான் வந்துள்ளது.
இவ்வாறான ஒற்றைச் சிந்தனையும் அடக்குமுறையுமே எமது ஒட்டுமொத்த புரட்சிகரமாற்றத்துக்கான அரசியல் சீரழியக் காரணமாக இருந்தது.
ஒடுக்கப்பட்ட சமூகப்பிரிவினர்களுக்காக இயங்குவதாக அறியப்பட்ட பல சக்திகள் அவரவர் நிலையில் பரஸ்பரம் ஏனைய அடக்குமுறைகளுக்கும் எதிராக கைகோர்த்து நிற்பதில் தவறிழைத்தே வந்திருக்கிறார்கள்.
ஆகவே ஆரம்ப காலங்களில் நாம் தவறவிட்ட விடயங்களையும் அனைத்துப் பெண்களினது பிரத்தியேகங்களையும் அவர்களுடைய தனித்துவங்களையும் அடையாளம் கண்டு அவற்றையும் சேர்த்துக்கொண்டு செல்லக்கூடிய உரையாடல்களையும் வேலைத் திட்டங்களையும் முன்னெடுப்பதே இன்று ஆரோக்கியமானதாகும்.
திறந்த பெண்ணிய உரையாடல்களுக்கும் சமூகத்தில் பெண்கள் இன்று எதிர்கொள்ளும் விசேட பிரச்சனைகளுக்கும் இந்தக் காலகட்டத்தைப் பெண்ணியச்
செயற்பாட்டளர்கள் தமது கைகளில் எடுக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.
நிறைவாக
ஆரம்பகாலங்களில் தமது சிந்தனைகளாலும் தீவிரமான பெண்ணியச் செயற்பாட்டாலும், பெண்ணிய எழுத்துக்களாலும் இலங்கைக்குள்ளும் அதற்கு வெளியிலும் நன்கு அறியப்பட்ட, பெண்ணிய செயற்பாட்டாளர்கள், இன்றுள்ள புதிய கருத்தியல் போக்குகளுடன் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களைச் சேர்த்துக் கொண்டும் புதியவர்களை இணைத்துக் கொண்டும் செயலாற்றவேண்டிய காலமிது. நாம் பெண்களின் கூட்டிணைவிற்கான மனோநிலைகளை ஊக்குவிப்பவர்களாகவும், வளர்ப்பவர்களாகவும் செயற்படுபவர்கள் என்பதை உறுதிசெய்துகொள்வோம்.
நாம் நமக்குள் தனித்தும், ஏனைய போராட்டங்களில் ஐக்கியப்பட்டும் முன்னேறுவோம் விடுதலை நோக்கி….


»»  (மேலும்)