1/31/2010

யார் யாரோவெல்லாம் எம்மில் சவாரி செய்ய ..எஸ். எம்.எம். பஷீர்


சுமார் ஒன்றரை மதத்திற்கு முன்பாக நான் எழுதிய "ஹீரோ டு ஜீரோ" (From Hero to Zero) என்ற கட்டுரையில் குறிப்பிட்ட மேற்குலக சக்திகளின் பின்னணிகள் பற்றிய அனுமானங்கள் பல என்று ஆதாரங்களாகி வருகின்றன. அட்ந்தப் பின்னணியில் இன்னுமொரு புதிய செய்தி இலண்டனில் இருந்து வெளிவரும் டெய்லிகிராப் (The Daily Telegraph) எனும் பத்திரிக்கை செய்தியுமாகும்.

அதாவது முன்னாள் பிரித்தானிய மரபுவாதக் கட்சியின் அதன் இன்றைய தலைவரான டேவிட் கமரூன் (David Cameron) பாரிய லண்டன் நகர மேயராகவிருக்கும் போரிஸ் ஜோன்சனின் (Boris Johnson) ஆகியோருக்கு ஆலோசகராகவிருந்த ஜேம்ஸ் மக்ராத்(James McGrath) என்பவர் ஜெனரல் பொன்சேகாவுக்கு அவரது தோல்வியின் பின்னரான ஹோட்டல் பத்திரிகை பேட்டி, அதனை தொடர்ந்த மகிந்தவுக்கு எதிரான அறிக்கைகளுக்கு பின்னனியிலிருந்தார்.

அப்பத்திரிக்கை மேலும் குறிப்பிடுகையில் ஜெனரல் பொன்சேகா இத்தேர்தலில் வெற்றியடைந்திருந்தால் அதன் புகழ் இவருக்கே சாரும், ஏனெனில் இவர் ஒரு மாதமாக பொன்சேகாவின் பிரச்சார செயற்பாட்டின் உபாய வகுப்பாளராக இலங்கையில் செயற்பட்டிருந்தார் என்ற செய்தியும் வெளியாகி உள்ளது. அது மாத்திரமல் மேற்குலகின் இரட்டை வேட , நயவஞ்சகத்தனமான செயற்பாட்டினை இவர் பொன்சேகாவின் மீது போர் குற்றம் சாட்டப்பட்டு உள்ளபோதும் தான் அவரை ஆதரிப்பதில் தனது மனச்சாட்சி உறுத்தவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இவர் தனது ஆலோசகர் பதவியிலிருந்து 2008 ம் ஆண்டு கரிபியன் மக்களுக்கு எதிராக இனவாத கருத்துக்களை கூறி அதனால் ஆலோசகர் பதவியிலிருந்து விலகநேரிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று அமெரிக்க அவுஸ்திரேலியா என்று அனுதாபங்களை பெற்றுக்கொண்டு உலகை இலங்கை மீது தலையிடக் கோரும் இந்த ஜெனரல் மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டயினும் மேற்குலக நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கு சபதமேடுத்துள்ளார்.

இந்த நிலையில் மேற்குலக எதிர்ப்புவாதிகளான ஜே. வீ. பீ என்ன செய்யப்போகிறது, இவர் எக்கட்சியில் போட்டியிடப்போகிறார், என்ற கேள்விகளுக்கு அப்பால் மீண்டும் தொடங்கும் மிடுக்கென இலங்கையை பின்னி எடுக்கப்போகிறோம் என்று மேற்குலக ஏகாதிபத்தியங்கள் இன்னமும் உரமாக மூலோபாயங்களை மாற்றி செயற்படப்போகிரார்கள். அந்த வலையில் ஜே வீ.பீஉம இணைந்து கொள்ளலாம். ஆனால் ஏகாதிபத்திய முகவர்களான ஹக்கீம் , மனோ கணேசன், சம்பந்தன் தமது "கூட்டுப்படை தளபதி" ரணிலுடன் என்ன செய்வார்கள் எனபது தெரிந்ததுதான்.

»»  (மேலும்)

'லங்கா' பத்திரிகை குற்றவியல் தடுப்பு பிரிவினரால் சீல் வைப்பு

ஜேவிபியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான 'லங்கா" செய்தித்தாளின் நுகேகொட பிரதேசத்தில் உள்ள காரியாலயம் நேற்று குற்றவியல் தடுப்பு பிரிவினரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த சீல் வைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ஐ. எம் .கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் இந்த காரியாலயம் சீல் வைக்கப்பட்டுள்ளதாக தமக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இது தொடர்பான வழக்கு விசாரணைகளின் பொருட்டு எதிர்வரும் புதன்கிழமை கங்கொடவில நீதிமன்றுக்கு வருகை தருமாறு தமக்கு இரகசிய பொலிஸார் பணித்துள்ளதாக அந்த பத்திரிகையின் ஆசிரியர் பிரியந்த லியனகே தெரிவித்துள்ளார்.


»»  (மேலும்)

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான ஜே.வி.பி.யின் கோரிக்கை ஐ.தே.க.வினால் நிராகரிப்பு- நாடாளுமன்றத் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி அன்னப்பட்சி சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் ஜே.வி.பி. முன்வைத்த கோரிக்கையை ஐக்கிய தேசியக் கட்சி முற்றாக நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அங்கத்தவரும் முன்னாள் அமைச்சருமான ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி பதவிக்கு ஒருவரே தெரிவு செய்யப்படுவார் என்பதற்கமையவே நாம் ஜெனரல் சரத் பொன்சேகாவை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்தினோம். ஆனால் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி அன்னப்பட்சி சின்னத்தில் போட்டியிடுமாறு எம்மைக் கோருவது வேடிக்கையானதொரு விடயம்.
»»  (மேலும்)

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் மேனன் கொழும்பு வருகை

மேனன்


இந்தியாவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பொறுப்பேற்றுள்ள சிவ்சங்கர் மேனன் விரைவில் கொழும்பு வரவுள்ளதாக புதுடில்லி அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த நாராயணன் அண்மையில் மேற்குவங்க மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து, புதிய ஆலோசகராக சிவ்சங்கர் மேனன் நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையே ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று மீண்டும் ராஜபக்ஷ பொறுப்பேற்றுள்ள நிலையில், சிவ்சங்கர் மேனனின் கொழும்பு வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

அவரது கொழும்பு பயணத்தின்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுவதுடன், நலன்புரி மையங்களில் உள்ள தமிழர்களை மீள்குடி யேற்றுவது, அவர்களுக்கான புனர்வாழ்வுக் கான நடவடிக்கைகளை வேகப்படுத்துவது குறித்தும் மேனன் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.

மேனனின் வருகையை அடுத்து, இலங்கையிலிருந்து முக்கிய அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று புதுடில்லி சென்று அடுத்தக்கட்ட ஆலோசனைகளில் ஈடுபடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
»»  (மேலும்)

அமெரிக்க நிறுவனங்கள் மீது தடை - சீனா


ஏவுகணைகள்
ஏவுகணைகள்

அமெரிக்க நிறுவனங்கள் மீது தடை - சீனா

தாய்வானுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் மீது தடை விதிக்க போவதாக சீனா கூறியுள்ளது. தாய்வானுக்கு ஆறு பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளதை தொடர்ந்து சீனா இதனை தெரிவித்துள்ளது.

பீஜீங்கில் இருக்கும் அமெரிக்க தூதரை வரவழைத்து இந்த முடிவால் முக்கியமான பல விஷயங்களில் பாதிப்பு ஏற்படும் என்று சீனா கூறியுள்ளது. அத்தோடு இராணுவ விஜயங்களை நிறுத்துவதாகவும் சீனா கூறியுள்ளது. இந்த இராணுவ விஜயங்களால் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பயன் இருப்பதாக அமெரிக்கர்கள் கருதுகிறார்கள்.

இறுதியாக தாய்வானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் தடை விதிக்கப் போவதாகவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இந்த தடைகளால் அந்நிறுவனங்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பது தெளிவாக தெரியவில்லை.

தாய்வான் பிரிந்து சென்ற மாகாணம் என்று கருதும் சீனா, அமெரிக்கா பிடிவாதமாக தவறான முடிவை எடுத்துள்ளது என்றும் கூறியுள்ளது.»»  (மேலும்)

1/30/2010

ரிஆர்ரி தமிழலையின் இவ்வார (30.01.2010) உறவுப்பாலம்

ரிஆர்ரி தமிழலையின் இவ்வார (30.01.2010) உறவுப்பாலம் நிகழ்ச்சியில் ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணியின் செயலாளரும் கிழக்கு மாகாண சபையின் இனநல்லுறவுப் பணிப்பாளருமான எம்.ஆர்.ஸ்ராலின் அவர்கள் கலந்து கொள்கின்றார். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம் 00 33 1 48 35 32 00


»»  (மேலும்)

அன்பின் சமூக உணர்வுள்ள தமிழ் பேசும் வாக்காளப் பெருமக்களே! உங்களுடன் சில நிமிடங்கள்


நடைபெற்று முடிந்த 6வது ஜனாதிபதித் தேர்தலில் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஆதரித்து, அவர் ஜனாதிபதியாக முடிசூட வேண்டும் என்ற தூயசிந்தையுடன் அயராது பாடுபட்டு, வாக்களித்த தங்கள் அனைவருக்கும் எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பாகவும், எனது சார்பாகவும் மனம் நிறைந்த நன்றிகளைக் கூறிக்கொள்வதில் பெருமிதம் அடைகின்றேன். காலத்தின் தேவையுணர்ந்து தாங்கள் செயற்பட்டமையினையிட்டு பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். கிழக்கு மாகணத்திற்;கான தெளிவான ஓர் பலமான அரசியல் கட்சியாக : t.m.v.P கட்சி மிளிர்கின்றது. அதன் கொள்கை மற்றும் அக்கட்சி எடுக்கின்ற முடிவு என்பதனை எமது கிழக்கு சார்ந்த தமிழ் சமூகம் ஏற்றுக் கொள்கின்ற சமூகமாக இருக்கவேண்டும். அப்போதுதான் எமது கிழக்கு மாகாணத்தின் எதிர்காலம் எங்கள் கைகளிலே இருக்கும். மாறாக தேர்தல் காலங்களில் தங்களின் சுயலாபம் கருதி பெருந்தொகைப் பணத்தினை பெற்று எமது மக்களை திசை திருப்ப முனைந்தவர்கள் பலர் எமது சமூகத்திற்கு துரோகமிழைத்திருக்கிறார்கள்.இதன் மூலம் எமது சமூகத்தின் நலன் சார்ந்த அபிவிருத்திகள், உரிமைகள் போன்றவை மேலும் பல வருடங்கள் பின் செல்வதற்கு இவர்கள் வழி வகுத்திருக்கின்றார்கள். இவர்கள் இலாபம் அடைந்தது மட்டும்தான் எச்சம். வெறுமனே தாமும் தமது குடும்பத்தினரும் இலாபம் அடைந்ததே தவிர, சமூகத்தினை தோல்வியடையச் செய்திருக்கிறார்கள். இவர்களால் சமூகத்திக்கு எதுவித நன்மையும் இல்லை. எனவே இவர்களையும் எதிர்வருகின்ற தேர்தலில் மக்கள் இனங்காண வேண்டும்.
தமிழ் மக்கள் காலம் காலமாக விட்டு வருகின்ற தவறினை பெரும்பாலானவர்கள் விட்டுள்ளது மனவேதனை தருவதாகவே உள்ளது. தேர்தல் கால கட்டங்களில் விடப்படும் பொய்யான பிரச்சாரங்களையும்,ஏமாற்றுக் கதைகளையும் நம்பி நம்பி 30 வருடங்களுக்கு மேல் உயிர், உடமை, எதிர்காலம் எல்லாவற்றையும் தொலைத்த நிலையில் 6வது ஜனாதிபதித் தேர்தலிலும் பெரும்பாலான தமிழ் மக்கள் மீண்டும் தவறினை விட்டிருப்பது வேதனைக்குரியதே. தவறுக்கு மேல் தவறு விட்டு தொடர்ந்தும் அழுகின்ற, வேதனைப்படுகின்ற சமூகமாக நாம் மாறக்கூடாது. தங்களின் குறைநிறைகள்.ஒற்றுமை, உரிமை, தனித்துவம் என செயற்படுவது மட்டுமல்லாது, எதிர்கால அபிவிருத்தி குறித்தும் தூரநோக்குடன் சிந்திக்க வேண்டும். விழிப்படையாத சமூகமாக தொடர்ந்து இருப்பதற்கு நாம் ஒருபோதும் தயாராக இருக்கக்கூடாது. நாளாந்தம் சுயதேவைகளை அடுக்கிக் கொண்டு செல்லும் எம் மக்கள், அபிவிருத்திக்கான பாதைகளை தங்களின் சார்பாக நாம் முன்னெடுபதற்கு வழிவகுத்துக் கொடுக்க வேண்டியது தங்களின் கரங்களிலேயே தங்கியுள்ளது. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்பது போல் எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியல் தலைமைத்துவங்கள் சோரம் போன ஒன்றல்ல. என்றும் சோரம் போகப்போவதுமல்ல, என்பதனை உணர்ந்து, எமது கரங்களைப் பலப்படுத்துவதற்கு நீங்கள் தயாராக உள்ள போதும் சில சுயநலம் கருதும் முறையற்ற அரசியல் தலைமைத்துவங்களை நம்பி கடந்த காலத் தவறுகளை மீண்டும் மீண்டும் ஏற்படுத்தாமல் எதிர்வருகின்ற காலங்களிலும் ஒருமித்த குரலாய் ஓசை எழுப்புவதன் மூலம் புத்துயிர் பெறுவோம். நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும். எதிர்வரும் காலங்களில் நாம் எதிர்கொள்கின்ற அனைத்து சவால்களுக்கும் ஒருமித்த சிந்தனையுடன் செயற்பட்டு கட்சியினையும் எமது கிழக்கு மாகாணத்தினையும் ஒளி பெறச் செய்ய அனைவரும் ஒன்றிணைவோம்! நன்றி என்றும் அன்புடன் உங்களில் ஒருவன் சி.சந்திரகாந்தன்
தலைவர்-த.ம.வி.பு.கட்சி முதலமைச்சர்-கிழக்கு மாகாணம்
ஒற்றுமை உரிமை தனித்துவம்

»»  (மேலும்)

பாராளுமன்ற தேர்தல்: 2/3 பெரும்பான்மையை பெற்று அரசியல் அமைப்பை மாற்றுவதில் அரசு உறுதி

பாராளுமன்றத் தேர்தல் மூலம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை யைப் பெற்று அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வருவதென்பதில் அரசாங்கம் உறுதியாகவுள்ளதென ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பில் எதிர்க்கட்சியினரின் ஒத்துழைப்பினை அரசாங்கம் கோரியுள்ளது. அவர் களின் ஒத்துழைப்பு கிடைக்குமென்ற நம்பிக்கையுள்ளது. அதற்கென ஓரிருவாரங்கள் அவகாசம் வழங்கு வோமெனவும் குறிப்பிட்ட அமை ச்சர் எதிர்க்கட்சியினரின் ஆதரவு கிடைக்காது போனாலும் பொதுத் தேர்தல் மூலம் மக்கள் ஆதரவினைப் பெறுவோம் எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:-

ஜனாதிபதித் தேர்தலில் ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாட்டு மக்களின் அமோக ஆதரவு கிடைத்துள்ளதையடுத்து அரசியல மைப்பில் திருத்தமொன்றை ஏற் படுத்தி சகல மக்களுக்கும் ஏற்றதான நல்லாட்சி யொன்றை ஏற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பெப்ரவரி மாதம் பாராளுமன்றத்தைக் கலைப்பதுடனும் மார்ச்சில் தேர்தலை அறிவிக்கவும் அரசாங்கம் உத்தேசித்துள்ளது. பொதுத் தேர்தலில் மக்களின் பூரண ஆதரவு கிடைப்பது உறுதி.
»»  (மேலும்)

1/29/2010

பாராளுமன்றத்தைக் கலைக்க ஏற்பாடு: ஓரிரு தினங்களில் அறிவிப்பு வெளியாகும்

பாராளுமன்றம் வெகு விரைவில் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான அறிவித்தல் இன்னும் ஓரிரு வாரங்களில் விடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கு கிடைக்கப்பெற்ற 60 வீத வாக்குகளை தக்கவைத்துக்கொண்டு எதிர்க் கட்சிக்கு வழங்கப்பட்ட 40 வீத வாக்குகளையும் வெற்றிகொள்ளும் முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பொதுத் தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுப்பதற்கு தேவையான நடவடிக் கைகளை உடனடியாக ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றதை அடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த விஷேட செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை நடைபெற்றது.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம் ஜயந்த், அமைச்சர்களான கலாநிதி சரத் அமுனுகம, பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், ரிஷாத் பதியுதீன், சம்பிக ரணவக்க, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச ஆகியோர் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் அமைச்சர் மைத்திரிபால மேலும் கூறுகையில்:-

தற்போதைய பாராளுமன்றத்தின் காலம் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் முடிவடையவுள்ளது. இந்நிலையில் அரசியலமைப்பின் பிரகாரம் பொதுத் தேர்தல் ஒன்றுக்கான அறிவிப்பு வெகு விரைவில் விடுக்கப்படும்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகள் இன்னும் ஓரிரு தினங்களில் நடைபெறவுள்ளது.

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் தகவல்களை திரட்டி பெயர்ப்பட்டியலை தயாரிக்கும் நடவடிக்கைகள் நேற்று (இன்று) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற வகையில் இதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளேன் என்றார்.

மக்கள் எதிர்பார்க்கும் வளமான எதிர்காலம் நிச்சயம் உருவாக்கப்படும். மஹிந்த சிந்தனையில் கூறப்பட்டமை நிறைவேற்றப்படும். உலகிலேயே வளமான நாடாக மாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் எம்மீது நம்பிக்கை வைத்துள்ள மக்கள் 60 வீத வாக்குகளையும் எதிர்க்கட்சி வேட்பாளருக்கு 40 வீத வாக்குகளையும் வழங்கியுள்ளனர்.

எஞ்சிய 40 வீதத்தை பெற முடியாமல் போன காரணங்கள் ஆராயப்பட்டு அந்த குறைகளை நிவர்த்தி செய்துகொண்டு ஜனநாயக முறையிலான அரசியலின் மூலம் எஞ்சிய 40 வீத வாக்குகளையும் எமது வெற்றிக்காக பெற்றுக்கொள்ள முயற்சிப்போம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த நாட்டை முன்னேற்ற எதிர்க்கட்சியின் 40 வீத வாக்காளர்களும் எம்முடன் கைக்கோர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.

சரத் பொன்சேக்கா தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக கூறி வருகிறார். அவருக்கு நாங்கள் ஒன்றும் செய்யப்போவதில்லை, இதற்கான தேவையில்லை.

எமது கூட்டங்களில் பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டனர். ஆனால் குறைவான வாக்குகளே கிடைத்துள்ளது. இது நீதியான தேர்தல் இல்லை என்று சரத் பொன்சேகா தெரிவித்தார். இதன் மூலம் அரசியல் தெரியாதவர் என்பதை தெளிவாக காண்பிக்கின்றது என்றார்.

மக்கள் விடுதலை முன்னணி இம்முறை தவறான முடிவுகளை எடுத்துள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
»»  (மேலும்)

வன்முறைகளற்ற தேர்தல் முடிவு திருப்தி அளிக்கிறது


ஐ. நா. செயலாளர் நாயகம்

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் வன்முறைகள் அற்ற நிலையில் நடந்து முடிந்திருப்பது திருப்தி அளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூறியுள்ளார். அத்துடன் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளை அனைத்து கட்சிகளும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் முடிவுகள் தொடர்பான அக்கறைகள் இருப்பின் அவற்றை சமாதானமான முறையில் முன்னெடுத்துச் செல்லுமாறும் அவர் கூறியுள்ளார்.

நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே செயலாளர் நாயகம் இவ்வாறு குறிப்பிட்டார். தேர்தல் பிரசாரத்தின் போது வன்முறைகள் அதிகரித்திருந்த தையிட்டு நான் கவலையடைந்தேன். எனினும் தேர்தல் தினத்தன்று ஒரு சில வன்முறை சம்பவங் களைத் தவிர அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்தது நிவாரணம் அளிக்கிறது என்று செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.»»  (மேலும்)

புதியதொரு தமிழ்த் தலைமை தவிர்க்க முடியாத தேவை


தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெற்ற அமோக வெற்றி அவரது வேலைத் திட்ட த்துக்கு மக்கள் அளித்த அங்கீகாரமாகும்.

பய ங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் வெற்றிகரமாக முடிவு க்கு வந்ததைத் தொடர்ந்து அபிவிருத்தியும் சமாதான மும் என்ற கோஷத்தின் அடிப்படையிலான வேலைத் திட்டத்தை ஜனாதிபதி முன்னெடுத்து வருகின்றார். மக்களின் ஏகோபித்த ஆதரவு இந்த வேலைத் திட்டத்துக்கு இப்போது கிடைத்திருக்கின்றது.

தேர்தல் முடிவின் பின்னணியில் தமிழ் பேசும் மக்கள் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிரு க்கின்றது. இனப் பிரச்சினை தீர்வின்றித் தொடர்கின் றது. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் நீண்டகாலம் அபி விருத்தியில் பின்தங்கியிருந்ததற்கு இனப் பிரச்சினை தீர்வின்றியிருப்பது பிரதான காரணம்.

ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்ஷவின் அமோக வெற்றி இனப்பிரச்சி னையின் தீர்வுக்குச் சாதகமான சூழ்நிலையைத் தோற்று வித்திருப்பதைக் கவனத்தில் எடுத்துச் சரியான முடிவு க்குத் தமிழ் பேசும் மக்கள் வரவேண்டும்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளென உரிமை கோரும் தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தல் தொடர் பாக எடுத்த பிழையான முடிவினால் தமிழ் மக்கள் தவ றாக வழிநடத்தப்பட்டுள்ளனர். இனப் பிரச்சினையின் தீர்வுக்குத் தடையாகச் செயற்பட்ட வரலாற்றைக் கொண்டுள்ள கட்சிகளுடனேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலில் கூட்டுச் சேர்ந்தது.

இது வொன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல, தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றை நிதானமாக ஆராய்ந்து பார் த்தால், ஒவ்வொரு கட்டத்திலும் இனப் பிரச்சினை யின் தீர்வு தடைப்பட்டதற்குத் தமிழ்த் தலைவர்க ளின் பிழையான முடிவுகளே பிரதான காரணம் என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

இந்த நிலையில் தமிழ் பேசும் மக்கள் இதுவரை கால மும் தங்களைத் தவறாக வழிநடத்திய தலைமையை நிராகரித்துப் புதிய வழியில் சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

கூட்டமைப்புத் தலைவர்க ளின் தவறான வழிநடத்தல்களால் இனப் பிரச்சினை யின் தீர்வு தடைப்பட்டது மாத்திரமன்றி, தமிழ் மக் கள் தாங்க முடியாத இழப்புகளுக்கும் அழிவுகளு க்கும் உள்ளாகினார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைவதால் ஜனாதிபதி விரைவில் பாராளுமன் றத்தைக் கலைத்துப் பொதுத் தேர்தலுக்கு உத்தரவிடு வார். பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன் னணிக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைப்பது உறுதியாகிவிட்டது.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் இதை வெளிப்படுத்துகின்றன. இது இனப்பிரச்சினை யின் தீர்வுக்குச் சாதகமான ஒரு நிலை. இச்சாதக சூழ்நிலையைச் சரியாகப் பயன்படுத்துவதிலேயே தமிழ் பேசும் மக்களின் எதிர்காலம் தங்கியுள்ளது.

ஜனாதி பதியின் தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் நல்லுறவைப் பேணிச் சமகால யதார்த்தத்துக்கு அமை வான தீர்வொன்றை நடைமுறைக்குக் கொண்டு வரு வதற்கும் அதை அடிப்படையாகக் கொண்டு இறுதித் தீர்வை நோக்கிய நகர்வை முன்னெடுப்பதற்கும் பொரு த்தமான ஒரு தலைமை இன்று தமிழ் மக்களுக்குத் தேவைப்படுகின்றது.

இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பொறுத்த வரையில் பழைய தலைமை தோற்றுப் போய்விட்டது. மக்கள் மத்தியிலிருந்து புதிய தலைமை உருவாக வேண்டும். இது தவிர்க்க முடியாத தேவை.

»»  (மேலும்)

1/28/2010

19 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஜனாதிபதி அமோக வெற்றிஇலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆறாவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்காக நடைபெற்ற தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமோக வெற்றியீட்டியுள்ளார். சுமார் 20 இலட்சம் மேலதிக வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவாகியிருக்கிறார். இதன் மூலம் நாட்டில் அபிவிருத்தியை முன்னெடுப்பதற்காக மக்கள் அவருக்கு ஆணை வழங்கியுள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 22 மாவட்டங்களுக்குள் 17 மாவட்டங்களில் 60 இலட்சத்து 15 ஆயிரத்து 934 வாக்குகளைப் பெற்று 57.88 வீதத்தில் வெற்றியீட்டியிருக் கின்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜே.வி.பி., ஐ.தே.க. கூட்டணியின் வேட்பாளரான சரத் பொன்சேகா 41 இலட்சத்து 73 ஆயிரத்து 185 வாக்குகளைப் பெற்று 40.15 விகிதத்தைப் பெற்றுள்ளார். ஐந்து மாவட்டங்களில் மாத்திரமே பொன்சேகா வெற்றி பெற்றிருக்கிறார். வடக்கு, கிழக்கில் இவருக்குக் கூடுதல் வாக்குக் கிடைத்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உட்பட 22 பேர் போட்டியிட்டனர். இலங்கை தேர்தல் வரலாற்றில் இவ்வளவுபேர் போட்டியிட்டது இதுவே முதற்தடவையாகும். நாட்டின் சனத்தொகையில் ஒரு கோடியே 40 இலட்சத்து 88 ஆயிரத்து 50 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். நாடு முழுவதும் 11098 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப் பதிவு நடைபெற்றது. நாடு முழுவதும் பெரும் பரபரப்புக்கு மத்தியில் மக்கள் வாக்களித்ததைக் காணக்கூடியதாக இருந்தது. வாக்கெடுப்பு நிறைவின் பின்னர் மாலையில் பதற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படலாமென்று எதிர்பார்க்கப்பட்டபோதிலும், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த தையடுத்து எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை. ஆங்காங்கே சிறு சிறு சம்பவங்கள் இடம்பெற்றபோதிலும் பாரிய வன்முறைகள் எதுவும் ஏற்படவில்லை. முதலாவதாகத் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் இரவு 10.30 மணியிலிருந்து வெளியிடப்பட்டன. முதன்முதலில் இரத்தினபுரி மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பு முடிவு வெளியானது. ஜே.வி.பி., ஐ.தே.க. கூட்டணிக் கட்சியின் வேட்பாளராகத் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் பூரண ஆதரவைப் பெற்றிருந்தும் முன்னாள் இராணுவத் தளபதி படுதோல்வியைத் தழுவினார். ஜே.வி.பி.யினதும், ஐ.தே.க.வினதும் கோட்டைகளாக விளங்கிய பல முக்கிய பிரதேசங்களிலும் ஜனாதிபதி மஹிந்த அமோக வெற்றியீட்டினார். ஜே.வி. பி.யின் கோட்டையான திஸ்ஸமஹராம, ஐ.தே.க.வின் கோட்டையான மீரிகம ஆகிய பிரதேசங்களையும் அவர்களின் கூட்டணி கோட்டை விட்டுவிட்டது. தெவிநுவர தொகுதியில் 19, 209 மேலதிக வாக்குகளைப் பெற்றும், பலப்பிட்டிய, அம்பலாங்கொடை, மொனறாகலை, கலவான, புளத்சிங்கள, கெகிராவ, அநுராதபுரம், மேற்கு, மத்துகம, மூதூர், தெனியாய, எகலியகொட உள்ளிட்ட தொகுதிகளிலும் ஜனாதிபதி கூடுதல் மேலதிக வாக்குகளால் வெற்றியீட்டியதுடன், திஸ்ஸமஹராமவில் 34055 மேலதிக வாக்குகளால் வெற்றியீட்டியுள்ளார். மேலும் அகலவத்தையில் 23600 மேலதிக வாக்குகளாலும், கம்புறுபிட்டியவில் 45649 மேலதிக வாக்குகளாலும், கரந்தெனியவில் 24000 மேலதிக வாக்குகளாலும் வெற்றிபெற்றதுடன், சில இடங்களில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளால் வெற்றியீட்டினார். அதேநேரம் 527 போன்று மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வத்தளை தொகுதியில் ஜனாதிபதி வெற்றியீட்டினார். குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை போன்ற பகுதிகளிலும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா - நுவரெலியா தொகுதியிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெறவில்லை எனினும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மங்கள சமரவீர, சஜித் பிரேமதாச, ரவி கருணாநாயக்க ஆகியோரின் தொகுதிகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெரும்பாலான தொகுதிகளில் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டினார். கண்டி தொகுதியில் 54.16 வீதமும், கொழும்பில் 52.93 வீதமும், களுத்துறையில் 63.06 வீதமும், குருநாகலையில் 63.08 வீதமும், அம்பாந்தோட்டையில் 67 வீதமும், இரத் தினபுரியில் 64 வீதமும், பொலன்னறுவையில் 65 வீதமும், மாத்தறை தொகுதியில் 60 வீதமும் பெற்று பெருவெற்றியீட்டினார்.

»»  (மேலும்)

1/27/2010

ராஜபக்ஷ வெற்றி: இலங்கை தேர்தல் ஆணையம் அறிவிப்புஇலங்கை ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய அதிபர் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றுள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


»»  (மேலும்)

ஜனாதிபதி தேர்தல் அமைதி சூழலில் நடந்தது: பெப்ரல்

ஜனாதிபதி தேர்தல் சமாதானமான அமைதிமிக்க சூழலில் நடந்து முடிந்ததாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு (PAFFREL) அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

மேற்படி அமைப்பை சேர்ந்த கண்காணிப்பாளர்களுக்கு 71 முறைப்பாடுகள் கிடைத்ததாகவும் இவற்றில் 35 முறைப்பாடுகளே உறுதிப்படுத்தப்பட்டதா கவும் அதில் நான்கு முறைப்பாடுகள் மட்டுமே பாரதூரமானதாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் கூறிப்ப ட்டுள்ளது.
»»  (மேலும்)

வெளியாகி கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகள்!
Electorate District Won by

Kalawana Ratnapura Mahinda Rajapaksha

Rattota Matale Mahinda Rajapaksha

Badulla Badulla Mahinda Rajapaksha

Moneragala Moneragala Mahinda Rajapaksha

Ambalangoda Galle Mahinda Rajapaksha


Pelmadulla Ratnapura Mahinda Rajapaksha

Kalutara Kalutara Mahinda Rajapaksha

Jaffna Jaffna Sarath Fonseka

Dehiwala Colombo Sarath Fonseka
Sammanturai 27,003 55.95% 19,991 41.42%
7,012
55.95%
41.42%
Bulathsinhala Kalutara Mahinda Rajapaksha

Pelmadulla Ratnapura Mahinda Rajapaksha
Bulathsinhala Kalutara Mahinda Rajapaksha

Kayts Jaffna Mahinda Rajapaksha
Mutur Trincomalee Sarath Fonseka
»»  (மேலும்)

1/26/2010

யாழில் உண்மையான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் துண்டுப்பிரசுரம் விநியோகம்


யாழ்க் குடா நாடு உட்பட பல பகுதிகளில் "உண்மையான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு" என்ற பெயரில் இன்று துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதித் தேர்தலில் கொலைசெய்தவரும் கொலை செய்யத் தூண்டியவரும் போட்டியிடுவதாகவும் தேர்தலைப் புறக்கணித்துவிட்டு விடுதலைப் போராட்டத்துக்கு பங்களிப்பு வழங்குமாறும் அந்த துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


»»  (மேலும்)

நாடுமுழுவதிலும் 70 வீதம் வாக்குப் பதிவு: பவ்ரல் அமைப்பு


நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் 70 வீதமானோர் வாக்களித்துள்ளதாக பவ்ரல் அமைப்பின் அதிகரியொருவர் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் 20 வீதத்திற்கும் குறைவான வாக்குப் பதிவுகளும் கிளிநொச்சி மாவட்டத்தில் 10 வீதத்திற்கும் குறைவான வாக்குப் பதிவுகளும் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, யாழ் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் குண்டுச் சத்தங்களும் துப்பாக்கி வேட்டுச்சத்தங்களும் கேட்டதால் மக்கள் அச்சத்தில் வாக்களிக்கவில்லை என யாழ்.தேர்தல் அத்தியட்சகர் அலுவலக அதிகாரியொருவர் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.


»»  (மேலும்)

யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை 13 இடங்களில் கைக்குண்டுத் தாக்குதல்


யாழ்ப்பாணம் நல்லூரை அண்டிய பகுதிகளிலும், மானிப்பாய், கோண்டாவில் உட்பட்ட 13 இடங்களில் இன்று அதிகாலை 2.00 மணிமுதல் 4.00 மணி வரையிலான இடைவெளியில் கைக்குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

தாக்குதல்களில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. மேற்படி சம்பவம் தொடர்பில் மனோ கணேசன் எம்.பி தெரிவிக்கையில்,

"30 வருட கால யுத்தத்தின் பின்னர் சுதந்திரமான முறையில் வாக்களிக்க முற்பட்ட யாழ். மக்களின் வாக்களிப்பு உரிமைகளைத் தடுக்கும் முகமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறான மிலேச்சத்தனமான செயற்பாடுகளுக்கு யாழ். மக்கள் துணை போகக் கூடாது" எனத் தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து பஸ் சேவைக்குச் சொந்தமான பஸ்கள் பலவும் சேதத்திற்குள்ளாக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, யாழ்ப்பாணத்தில் மக்கள் குழுவினராகச் சென்று வாக்களிப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.»»  (மேலும்)

கிழக்கு மாகாண முதலமைச்சர் தனது சொந்த ஊரான வாழைச்சேனை பேத்தாழையில் தனது வாக்கினை இடுவதை படங்களில் காணலாம்.

IMG_7004.JPG
IMG_7008.JPG
IMG_7010.JPG
IMG_7011.JPG»»  (மேலும்)

செந்நாரை

ஆலமரம் அரசமரம்

ஆள ஒற்றைத் தேசம் வரும்.

நாலு மரம் நட்டுவைச்சா

நாளை ஒரு தோப்பு வரும்.

கோலமிட முற்றம் வரும்

கொண்ட சுற்றம் வாழ வரும்.

வாழை வைத்த தோப்புக்குள்ளே

வம்சமெல்லாம் உச்சம் வரும்.

சிகிரியாவின் சித்திரங்கள்

செந்தமிழில் பேச வரும்.

சீனன்குடா அலையசைந்தால்

சிங்களத்தின் ஓசை வரும்.

மட்டுநகர் வாவிக்குள்ளே

மீன்களுக்குப் பாட்டு வரும்.

மகாவலியில் நீர் நிறைந்தால்

திருமலையைக் கேட்டு வரும்.

கறை மறந்து பிறை நிலவு

யாழ் நரம்பை மீட்ட வரும்

கண்டியிலே மாளிகையில்

நாகதீபம் ஏற்ற வரும்.

நிரம்பாத குளம் நிரம்பி

நீண்ட நாள் இடர் உடையும்.

வரம்பெல்லாம் உருக்கிவிட்டு

வன்னியிலே பொன் விளையும்.

நமது நாடு இலங்கை.

நாம் தமிழ் பேசும் மனிதர்கள்.

புதிய அறிவியல் ஆய்வுகள்

எமது உரிமை.

இசை எமது ஆயுதம்.

யுத்தம் மட்டுமே எதிரி.


-வம்சிகன்.-


»»  (மேலும்)

ஜனாதிபதித் தேர்தல் இன்று


இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 8வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஆறாவது ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகிறது. சுமார் 30 வருடங்களுக்கு பின்னர் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடைபெறும் தேர்தல் இதுவாகும்.

இதற்கமைய, வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள 11 ஆயிரத்து 98 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 7.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை வாக்களிப்பு நடைபெறவுள்ளது.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவற்றில் 17 கட்சிகளின் சார்பில் 17 பேரும், சுயேச்சை வேட்பாளர்கள் ஐவரும் அடங்குவர்.

சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல் ஒன்றை நடத்தி முடிப்பதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நெருக்கடிகளை தவிர்க்கும் வகையில் நேர காலத்துடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேர்தலில் ஒரு கோடியே 40 இலட்சத்து 88 ஆயிரத்து 500 பேர் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

இதேவேளை, அமைதியானதும், வன்முறையற்றதுமான தேர்தல் ஒன்றை நடத்தி முடிப்பதற்குத் தேவையான சகல பாதுகாப்பு ஏற்பாடுகளை திட்டமிட்ட அடிப்படையில் பொலிஸ் திணைக்களம் மேற்கொண்டுள்ளதென பொலிஸ் மாஅதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் தேர்தல் பாதுகாப்பு கடமையில் 68,800 பொலிஸாரும் அவர்களுக்கு உதவியாக முப்படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கு மேலதிகமாக பொலிஸாரும், முப்படையினரும் உள்ளடக்கப்பட்ட 2523 நடமாடும் சேவைகள் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் பொலிஸ் அதிகாரி ஒருவர், இரண்டு பொலிஸார், முப்படை வீரர்கள் இருவர் என்றடிப்படையில் ஐவர் இந்தக் குழுவில் அடங்குவர்.

பொலிஸாரும், முப்படையினரும் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கு மற்றும் தென் பகுதிகளில் இனங்காணப்பட்ட பிரதேசங்களில் பொலிஸாரும் முப்படையினரும் கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தெரிவத்தாட்சி உத்தியோகத்தர் காரியாலயத்திற்கான பாதுகாப்பு, வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லுதல், வாக்கெண்ணும் நிலையங்களைப் பாதுகாத்தல், தேர்தலுக்குப் பிந்திய பாதுகாப்பு ஒழுங்கு போன்ற நடவடிக்கைகளுக்காக இவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்தல் கடமைகளில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குகள் எண்ணும் நிலையங்கள்

வாக்களிக்கும் நடவடிக்கைகள் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி 4 மணிக்கு முடிவடைவதை அடுத்து வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புகளுடன் எடுத்துச் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இம்முறை, நாடு முழுவதும் வாக்குகளை எண்ணுவதற்கென 888 நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் சாதாரண வாக்குகளை எண்ணுவதற்கென 737 நிலையங்களும், தபால் மூல வாக்குகளை எண்ணுவதற்கென 139 நிலையங்களும், இடம்பெயர்ந்தவர்களின் வாக்குகளை எண்ணுவதற்கென 12 நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் முடிவுகள்

வாக்குப்பெட்டிகள் வாக்குகள் எண்ணும் நிலையங்களைச் சென்றடைந்தவுடன் இன்று இரவு 7 மணியளவில் வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

நள்ளிரவுக்குப் பின்னர் முதலாவது தேர்தல் முடிவை வெளியிட முடியும் என்று தேர்தல் திணைக்கள உயர் அதிகாரி தெரிவித்தார்.

இதேவேளை, அவசரத் தேவைகளுக்கு ஹெலிகொப்டர்களை பயன்படுத்துவதற்கும் தேர்தல் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வேட்பாளர்கள்

இந்த ஜனாதிபதித் தேர்தலில் 17 கட்சிகளின் சார்பில் 17 பேரும் சுயேச்சை வேட்பாளர்கள் ஐவருமாக 22 பேர் போட்டியிடுகிறார்கள். எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராக போட்டியிடும் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் -ஸிஷி(யிt போட்டியாக இந்தத் தேர்தல் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

பதவியிலிருக்கும் ஜனாதிபதி ஒருவருடன் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் போட்டிக்கு களமிறங்கியிருப்பது இதுவே இலங்கையில் முதல் தடவையாகும். அதேநேரம், ஜனாதிபதி பதவியில் இருப்பவர் பதவிக் காலம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகள் முன்னதாக தேர்தல் நடைபெறுவதும் இதுவே முதல் தடவையாகும்.

அடையாளத்தை உறுதிப்படுத்தல், வாக்களித்தல்

மக்கள் வாக்களிப்பதற்கு ஆளடை யாளத்தை நிரூபிப்பதற்காக தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல்கள் ஆணையாளரால் அங்கீகரி க்கப்பட்ட ஏதாவதொரு ஆளடையாள அட்டையைக் காண்பித்து வாக்களிக்க முடியும். வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள் ஆளடையாளத்தை நிரூபித்து வாக்களிக்க முடியும் என்றும் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் மூன்று வேட்பாளர்களுக்கு வாக்களிக்க முடியும். ஒரு வேட்பாளருக்கு வாக்கை அளிப்பதாயின் வாக்காளரின் பெயருக்கும் சின்னத்திற்கும் எதிரே புள்ளடியிடலாம். மூன்று வேட்பாளருக்கும் அளிப்பதாயின் முதலாமவருக்கு ‘1’ என்றும் இரண் டாமவருக்கு ‘2’ என்றும் மூன்றாமவருக்கு ‘3’ என்றும் அடையாளமிடலாம்.

முதலாவது வேட்பாளரைத் தெரிவு செய்யாமல் இரண்டாம் மூன்றாம் விருப்பு வாக்கு அளிக்கப்பட்டிருக்குமாயின் அந்த வாக்கு செல்லுபடியற்றதாகும்.

மீறினால் துப்பாக்கிச் சூடு

தேர்தலின் போது எந்தவொரு தனிநபரோ குழுக்களோ சட்டத்தைப் புறக்கணித்து வன்முறைகளைத் தூண்டும் நடவடிக்கைக ளில் ஈடுபட்டால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளும் நிலை ஏற்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வன்முறைகளைத் தூண்டும் நடவடி க்கைகளில் எவராவது ஈடுபட்டால் முதலில் பொலிஸார் எச்சரிக்கை அறிவு றுத்தல்களை விடுப்பார்கள். வாக்களிப்பு நிலையத்தில் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல் மற்றும் வன்முறைகளைத் தூண்ட எவராவது முயற்சித்தால் பொலிஸார் முதலில் எச்சரிக்கை விடுப்பார்கள்.

எச்சரிக்கைக்கு மதிப்பளிக்காவிடின் சுடுமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காமினி நவரட்ன தெரிவித்தார்.

கண்காணிப்பு பணிகள்

இம்முறை தேர்தலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு ள்ளனர்.

பொதுநலவாய மற்றும் தெற்காசிய பிராந்திய நாடுகளிலிருந்து இலங்கை வந்திருக்கும் 85க்கு மேற்பட்ட வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதற்காக சுமார் ஆயிரம் வாகனங்களும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

முறைகேடு நடந்தால் வாக்கெடுப்பு ரத்து

வாக்களிப்பு நிலையங்கள் அமையப் பெற்றுள்ள இடத்திலிருந்து ஐநூறு மீற்றர் தூரம் வாக்கெடுப்பு நிலையத்திற்குச் சொந்தமான பிரதேசமாகக் கருதப்படும். இந்தப் பிரதேசங்களிலோ அல்லது தேர்தல் சட்டங்களை மீறும் வகையிலோ எங்கேனும் எவரேனும் செயற்பட்டால் குறித்த வாக்கெடுப்பு நிலையத்தின் வாக்கெடுப்பு இரத்துச் செய்யப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

இன்றைய தினம் குறித்த பிரதேசத்திற்குள் கூட்டம் கூட்டுவது, ஒருவருக்கு ஆதரவாக பிரசுரங்கள் விநியோகிப்பது, அழுத்தம் கொடுப்பது சட்ட விரோதமாகும் என்று தெரிவித்த பொலிஸார் பிடியாணை இன்றி இவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டனர்.


»»  (மேலும்)

மீண்டும் தவறுவிடும் சந்திரகா விஜய குமாரரணதுங்க (பண்டாரநாயக்கா) (சாகரன்


இதுவரையும் இலங்கை அரசுகள் முன்வைத்த அரசியல் தீர்வுத்திட்டங்கள் எல்லாவற்றையும் விட சிறந்த தீர்வுத்திட்டத்தை முன்வைத்து ஒரு முன்மாதிரியாகவும், நம்பிக்கைக்குரிய அரசுத் தலைவராக திகழ்ந்தீர்கள். அன்று இவ் தீர்வுத்திட்டதை பாராளுமன்றத்தில் எரித்து சாம்பல் ஆக்கியது ஜதேக. இதற்கு எல்லா வகையிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒத்தாசையாக இருந்தது. புலிகளின் வேண்டுதலுக்கு ஏற்ப செயற்பட்டே சம்மந்தன் கோஷ்டி அவ்வாறு செய்தது. தமிழ் பேசும் மக்களுக்கு கிடைக்கவிருந்த நல்ல தீர்வுத்திட்டத்தை இல்லாமல் செய்தது மட்டும் அல்லாமல் இவ் தீர்வுத்திட்டத்தை வரைந்த நீலன் திருச் செல்வத்தையும், கேதீஸ்வரனையும் புலிகள் கொன்றொழித்த வரலாற்றை கொண்டது உங்கள் ஆட்சிக்காலம். இதற்கு உங்கள் அமைச்சரையில் இருந்த உங்கள் தாய்மாமன் அனுருத்த ரத்தவத்த உங்களுடனேயே இருந்து உங்களுக்கே குழி பறித்தார் என்பதுவும் யாவரும் அறிந்ததே. இவை எல்லாவற்றையும் மீறி தைரியமாக தீர்வுத்திட்டததை அமுல்படுத்தும் செயல் முறைகளை உங்களால் செய்யமுடியாமல் போனது. இது நீங்கள் ஒரு ‘இரும்பு மனுஷி’ என்பதை நிலைநிறுத்த முடியாமல் போய்விட்டது.

அன்றைய கால கட்டத்தில் புலிகளின் மேலாதிக்கம், இராணுவத்தின் மேலாதிக்கம் என மாறி மாறி கைமாறி நின்றது யாழ்பாணக்குடாநாடு. நீங்கள் ஆட்சிக்கு வந்தபோது புலிகளின் ஆதிக்த்தில் இருந்த யாழ்பாணத்தை புலிகளின் பிடியில் இருந்து விடுவித்து உங்கள் திறமையையும், தைரியத்தையும் நிலைநாட்டின்னீர்கள.; யாழ்பாணத்து தமிழ் பேசும் மக்களும், சிங்களம் பேசும் மக்களும் மகிழ்ந்து பூரித்துப் போனார்கள். யாழ்பாணத்தை இலங்கை அரசு முதல் முறை கைப்பற்றியபோது புலிகளால் பலாத்காரமாக வன்னிக்கு அடித்து நடையாக மந்தைகள் போல் மழையில் சாய்த்துச் செல்லப்பட்டனர். வன்னியில் புலிகளால் அகதிகள் ஆக்கப்பட்ட யாழ்பாணக் குடாநாட்டு மக்கள் புலிகளின் ‘விருந்தோம்பலை’ நன்றே அனுபவித்தனர்.

அதனால்தான் மீண்டும் உங்கள் ஆட்சிக்காலத்தில் யாழ் குடாநாடு இலங்கை அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டபோது அவர்களை புலிகளால் சாய்த்துச் செல்ல முடியவில்லை. எதுவாகினும் நாம் யாழ்பாணத்தில் தங்கிவிடுகின்றோம் என்ற அவர்களின் முடிவை புலிகளால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இதில் புலிகள் மீதான வெறுப்பு என்பதுடன் உங்கள் மீதான நம்பிக்கையும் காரணம். நீங்களும் அவ் நம்பிக்கையை வீணடிக்காமல் இராணுவத்திற்குள் சிவில் நிர்வாகப் பிரிவை அமைத்து இராணுவத்திற்கு பதிலாக ‘இராணுவ’ சிவல் நிர்வாகிகள் மூலம் ‘அப்பக் கடை’ போட்டு அரசுக் கட்டுப்பாட்டு தமிழ் பகுதியில் ஆட்சி செய்து மக்களிடம் நல் மதிப்பை பெற்றீர்கள்.

1983 ம் ஆண்டு இனக்கலவரம் உட்பட தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான கலவரங்களுக்காக அரசுத் தலைவர் என்ற முறையில் தமிழ் பேசும் மக்களிடம் வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கோரி நின்றீர்கள். உங்கள் செயற்பாட்டின் மூலம் எங்கள் கண்களில் கண்ணீரை அன்று வரைவழைத்தீர்கள். சிங்களப்பகுதி எல்லாம் ‘வெண்மை’ அமைப்பின் மூலம் தமிழ், சிங்களம் பேசும் மக்களிடையே நல்லெண்ணத்தையும், நம்பிக்கையும் பரஸ்பரம் ஏற்பட ஆவன செய்தீர்கள். இவற்றை நாம் நம்பிக்கையுடன் பார்த்து ஆதரித்து நின்றோம். இதுவரைக்கும் எல்லாம் சரியாகத்தான் போய்கொண்டிருந்தது.

இதன் பின்பு சராசரி இலங்கை அரசுத் தலைவர் போல் புலிகளை அடித்து பலவீனப்படுத்துவது, பின்பு பேசுவது, ஆசுவாசப்படுத்திக் கொள்வது, பின்பு அடிபடுவது என்ற புலிகளுடனான விளையாட்டை நீங்களும் செய்ய முற்பட்டீர்கள். பிள்ளைக்கு விளையாட்டு (தமிழ் பேசும் மக்கள்)சுண்டெலிக்கு உயிர் போன கதையாய் விளையாடினீர்கள் நீங்கள் இருவரும். என்னதான் புலிகளை அடித்தாலும் இறுதியில் அவர்களுடன்தான் பேசவேண்டும் என்ற சராசரி அரசுத் தலைவருக்குரிய அணுகு முறையை மேற்கொண்டீர்கள். ஏமாற்றம் அடைந்தோம். இதன் தொடர்சியாக கருணா அம்மான் புலிகளில் இருந்து பிரிந்து கிழக்கு மாகாணத்தில் தனது அரசியல் செயற்பாட்டை முன்னெடுத்தார். பிரபாகரனின் ‘வன்னிப் புலிகள்’ அவரையும், அவருடன் கூட நின்ற சகாக்களையும் கொன்றொபழிப்பதற்காக வாகரையில் மட்டக்களப்பை நோக்கி பெரும் படையுடன் முன்னேற முற்பட்டபோது, இராணுவத்தை பாராமுகமாக நிற்கச் (சொல்லி)செய்து கிழக்கின் பல நூறு இளைஞர்களின் மரணத்திற்கு மறைமுகமாக காரணமாகி நின்றீர்கள்.

இதற்கு பிரதி உபகாரமாக பாராளுமன்றத்தில் உள்ள தங்கள் சிறுபான்மை அரசின் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் வெற்றி பெற புலிகளின் தமிழ் தேசியக் கூட்டைமைப்பை ஆதரவாக வாக்களிக்கச் செய்வதாக புலிகளுடன் செய்து கொண்ட இரகசிய ஒப்பந்தம் மூலம் மாபெரும் தவற்றை செய்த போது நாம் வெதும்பி நின்றோம். இறுதியில் வழமைபோல் புலிகள் உங்களை ஏமாற்றியது மட்டும் அல்லாது கொழும்பில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் தற்கொலைத் தாக்குதல் மூலம் உங்கள் உயிரைப்பறிக்க முற்பட்டனர். அதில் உங்கள் ஒரு கண்ணைப் பறி கொடுத்து உங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொண்டீர்கள். நாங்கள் அப்போதும் உங்களுக்காக அனுதாபப்பட்டு நின்றோம்.

நீங்களும் ‘கண் கெட்ட பின்பு’ புலிகளை புரிந்து கொண்டீர்கள். ஆனால் காலங் கடந்த ஞானம். எல்லாம் உங்கள் கைகளை நழுவிப் போய்விட்ட நிலமை. நீங்களும் உங்கள் அரசாட்சிக் காலத்தை முடித்துக் கொண்டீர்கள். உங்கள் குடும்பத்தில் பலமான வாரிசு அற்ற நிலையில், மகிந்தா ‘வாரிசு’ அரசிலை எதிர்த்து லாவகமா ஆட்சியைப் பிடித்துக் கொண்டார். உங்களை தவிர்த்தும் வந்தார். பண்டாரநாயக்கா மண்டபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் நீங்கள் உட்கார கதிரை ஒதுக்காமல் இருந்ததைக் கேள்விப்பட்டு மனம் புழுங்கினோம். ஆனாலும் தொடர்ந்தது உங்கள் மௌனம். உங்கள் மீதான மரியாதை சற்று கூடிக் கொண்டே வந்தது எங்களுக்குள்.

உங்கள் தந்தையின் கொலைக்கு காரணமானவர்கள், உங்கள் வாழ்கைத் துணைவரின் கொலைக்கு காரணமானவர்களின் பொது வேட்பாளர் முன்னாள் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாக நீங்கள் வெளியி;ட்டுள்ள பத்திரிகை செய்தி மூலம் எல்வாவற்றையும் தவிடு பொடியாக்கி விட்டீர்களே!. நாம் தற்போது இடிந்தே போனோம். நீங்களுமா என்று? உங்கள் பட்டப்படிப்பை முடித்த ஐரோப்பிய நாடுகளில் உங்களுக்கு கிடைத்த ‘இடதுசாரி’ தாக்கம் உங்களின் எகாதிபத்திய ஒத்துழையாமை தொடர்ந்தும் பேணி வரும் என்ற நம்பினோம். உங்கள் தந்தையின் சுதேசிய சிந்தனையும், வாழ்க்கைத் துணைவரின் இடதுசாரிச் செயற்பாடுகளும் உங்களைத் தொடர்ந்தும் வழி நடத்தும் என்று நம்பினோம். ஏமாற்றி விட்டீர்களே! இது அநியாயம் அல்லவா? வரலாற்று துரோகம் அல்லவா?

ஏதிரியை பலமடையச் செய்யும் தவறான உங்கள் முடிவிற்கு மகிந்தவின் அணுகுமுறையால் ஏற்பட்ட மன உழைசை;சல் ஒரு காரணம் என்று நீங்கள் வாதிடலாம். இதில் சில உண்மைகளும் இல்லாமல் இல்லை. ஆனால் நீங்கள் தனி மனிதர் அல்ல. இலங்கை இனப் பிரச்னைக்காக தன் உயிர் கொடுத்த பண்டாரநாக்காவின் மகள், அதே காரணத்திற்காக உயிரைப் பறிகொடுத்த விஜய குமாரரணதுங்காவின் துணைவியார். இவற்றிற்கு அப்பாலும் இலங்கைத் தமிழர் பிரச்சனைத் தீர்க்க உண்மையாக? புறப்பட்ட முன்னாள் ஜனாதிபதியும் கூட. எனவே தனிப்பட்ட ஆசாபாசங்களுக்கு இடம் கொடாது செயற்பட்டிருக்க வேண்டும். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக குறைந்த பட்சம் மௌனம் காத்திருக்க வேண்டும். அப்படி செய்திருப்பீர்களாயின் எங்கள் இதயங்களில் மேலும் உயர்ந்து பூஜிக்கப்பட்டிருப்பீர்கள். மீண்டும் ஒரு கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் உங்களுக்கு ஏற்படப் போகின்றது என்ற ஆதங்கம் எங்களுக்குள் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. ம்… மீண்டும் சந்திப்போம்.

(சாகரன்) (தை 25, 2010)


»»  (மேலும்)

1/25/2010

கொம்மாதுறை புதிய பலநோக்கு கட்டிடத்திறப்பு விழா- முதல்வர் பங்கேற்பு.


நேற்று செங்கலடி கொம்மாதுறையில் புதிய பலநோக்கு கட்டிட திறப்பு விழா இடம்பெற்றது, இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் த.ம.வி.பு கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் மற்றும் ஏறாவூர்பற்று பிரதேச சபை தவிசாளர் ஜீவரங்கன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வின்போது கொம்மாறை பிரதேசத்தின் சமூகசேவையாளர்களின் கௌரவிப்பு நிகழ்வும், விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

img_6400

img_6417»»  (மேலும்)

1/24/2010

மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்க வேண்டியது இலங்கை குடிமக்கள் ஒவ்வொருவரதும் தேசிய கடமையாகும் .*** ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி-

2010 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும். சுமார் முப்பது ஆண்டுகால உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் நடைபெறுகின்ற தேர்தல் இதுவாகும். இதுவரைகால யுத்தகெடுபிடிகளுக்குள் எமது தேசத்து மக்கள் எல்லோரும் தேர்தல்களில் சுதந்திரமாக பங்கெடுக்க முடியவில்லை. குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களுக்கு அந்தவாய்ப்புக்கள் பகிஸ்கரிப்புக்கள் எனும் பெயரில் மறுக்கப்பட்டு வந்தது. அதிலும் புலி பயங்கரவாதிகளின் கட்டுபாட்டு பிரதேசங்களான வன்னி, வாகரை, மற்றும் படுவான்கரை மக்கள் துப்பாக்கி முனையிலேயே வாழ்ந்துவந்தனர். இத்தகைய நிலைமைகள் அனைத்தும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டபின்னர் நடைபெறவிருக்கின்ற தேர்தலாக இந்த ஜனாதிபதி தேர்தல் அமைந்திருக்கின்றது. இலங்கையின் எந்த ஒரு மூலையிலும் வாழுகின்ற மக்கள் அனைவரும் தமது ஜனநாயக உரிமையான வாக்குரிமையை பயன்படுத்தும் வாய்ப்பு பல தசாப்தங்களுக்கு பின்னர் ஏற்பட்டுள்ளது. இதுவரைகாலமும் வடக்கு, கிழக்கு மக்கள் இத்தகைய வாய்ப்பின்றி வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். அதன் காரணமாக பலவித இழப்புகள் எமது மக்கள் எதிர்கொள்ள நேர்ந்தது. அபிவிருத்தி, வேலைவாய்ப்புகள் ...... போன்ற பலவித வசதி வாய்ப்புகளை பெற்றுகொள்ள முடியாத நிலை தொடர்ந்தது. ஆனல் இந்த ஜனாதிபதி தேர்தலினூடாக தமது “அரசியல் உரிமை” யையும் “தேர்வுச் சுதந்திர” த்தையும் உறுதிசெய்துகொள்ளும் சூழநிலை உருவாகியுள்ளது. எனவே இத்தேர்தலில் எமது நாட்டு மக்கள் அனைவருக்கும் முழுமையாக பங்கெடுக்கும் கடப்பாடு உண்டு என்பதை எமது முன்னணி வலியுத்தவிரும்புகிறது.
இத்தகைய மாற்றங்களுக்கு வழிவகுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே இந்தேர்தலின் முன்னணி வேட்பாளர்களில் ஒருவராகவுள்ளார். அவருக்கு போட்டியாக எதிரணிகள் சார்பில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா போட்டியிடுகின்றார். ஐ.தே.கட்சியே இவரை வழிநடாத்துகின்றது. இந்த ஐக்கிய தேசியக் கட்சியே இனவாத அரசியலின் பிறப்பிடமாகும். ஒரு லட்சம் மலையக மக்களின் வாக்குப் பறிப்பில் இருந்து யாழ் நூலக எரிப்பு வரையில் ஐ.தே.கட்சியினாலேயே நடத்தப்பட்டது. ஒவ்வொரு இனக்கலவரங்களும் இனப்படுகொலைகளும் ஐ.தே.கட்சி ஆட்சிக்காலத்திலேயே நடந்தேறின. தமிழ் பிரிவினைவாதமும், ஐ.தே.கட்சியின் இனவாத ஆட்சியும் ஒன்றில் ஒன்று தங்கிவாழ்ந்தவை. இதன்காரணமாகவே இன்று இந்த ஐ.தே.கட்சி முன்மொழிந்த வேட்பாளரான சரத் பொன்சேகாவை தமிழ் கூட்டமைப்பும் ஆதரிக்க முன்வந்துள்ளது. கடந்த ஐம்பது வருடகாலமாக தமிழ் பேசும் மக்களின் அரசியல் தலைவிதியை நிர்ணயித்து வந்த தமிழரசுக் கட்சியின் வாரிசுகளான கூட்டமைப்பினரே தமிழ் மக்களின் கடந்தகால துன்பங்களுக்கு காரணமானவர்களாகும். இன்னும் இன்னும் தமிழ் மக்களுக்கு வழிகாட்ட இவர்களுக்கு எந்தவித அருகதையும் கிடையாது. கூட்டமைப்பினரின் வேண்டுகோளை தமிழ் மக்கள் மிகக் கடுமையாக நிராகரிக்க வேண்டும். இன்று ஏற்பட்டுள்ள மாகாண ஆட்சிமுறை ஒன்றை வடமாகாணத்துக்கும் உருவாக்குவதற்கு ஜனாதிபதி ராஜபக்சவின் மீள்வரவு அவசியமானதொன்றாகும். எமது மக்களின் அமைதியான வாழ்வும், அபிவிருத்திகளும் தொடரவேண்டியது இன்றியமையாததாகும். சரத்பொன்சேகா ஆட்சிக்கு வந்தால் மீண்டும் இனவாத ஆட்சிமுறையும், அதற்கெதிரான தமிழ் பயங்கரவாதமும் தலைதூக்குவது நிட்சயம். இன ஐக்கியம் மீண்டும் சீர்குலைக்கப்பட்டு இலங்கையின் ஸ்திரமற்ற ஆட்சியொன்றை ஏற்படுத்துவதே ஏகாதிபத்தியங்களின் இன்றைய தேவையாக உள்ளது. அதற்காக தீPட்டப்பட்டுள்ள சர்வதேச சதி பற்றி நாம் கவனம் கொள்ளவேண்டியுள்ளது. எமது நாட்டின் ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான தேர்தலில் இன, பிராந்திய அணுமுறைகளுக்கப்பால் நாம் ஒவ்வொருவரும் இலங்கையர்கள் என்கின்ற யதார்த்ததை ஒருபோதும் புறக்கணித்துவிட முடியாது. எனவே கருத்து வேறுபாடுகள், கட்சி வேறுபாடுகள் அனைத்தையும் தாண்டி எமது தேசத்தின் நலனுக்காக ஒன்றுபட வேண்டிய தருணமாக நாம் இந்த ஜனாதிபதித் தேர்தலைக் கருதுகின்றோம். அரசியல் பாரம்பரியமற்ற ஒரு இராணுவத்தலைமையை இலங்கையின் ஐனாதிபதியாக்கி. சர்வதேச ஆயுத வியாபாரிகள் மீண்டும் இலங்கைத் தீவை ஆயுத மயமாக்கலுக்கு உட்படுத்த நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே எமது தேசத்தின் அமைதியை விரும்புகின்ற, எமது நாட்டு மக்களின் இன ஒற்றுமையை விரும்புகின்ற, இ;றைமையை காக்க விரும்புகின்ற ஒவ்வொருவரும் ஜனாதிபதி ராஜபக்கவை ஆதரித்தே ஆகவேண்டும். எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களித்து மீண்டும் அவரை ஐனாதிபதி ஆக்க வேண்டியது எமது தேசத்து குடிமக்கள் ஒவ்வொருவரினதும் தேசிய கடமையாகும் என ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணியினராகிய நாம் கருதுகின்றோம்.

ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணி
23-01-2010
kilakku@hotmail.com

»»  (மேலும்)

கிழக்கு மாகாண முதலமைச்சர், மத்திய அமைச்சர் அமீர் அலி, மாகாண அமைச்சர் எம்.எல்.எ.எம். ஹிஸ்புல்லா ஆகியோர் இணைந்து தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்

தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்.(பட இணைப்பு)

copy-of-img_5764வரும் ஜனவரி 26ல் இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து மட்டக்களப்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மத்திய அமைச்சர் அமீர் அலி, மாகாண அமைச்சர் எம்.எல்.எ.எம். ஹிஸ்புல்லா, மாகாண சபை உறுப்பினர் எ.கிருஸ்ணாணந்தராஜா ஆகியோர் இணைந்து தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்றினை நேற்று (22.01.2010) மட்டக்களப்பில் மேற்கொண்டிரந்தனர். மட்டக்களப்பு நகரின் மக்கள் நிறைந்த பகுதிகளான பொதுச்சந்தை, வீதியோரக்கடைகள் போன்ற பகுதிகளில் தங்களது விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு தேர்தல் தொடர்பான விளக்கங்களை கொடுப்பதை படங்களில் காணலாம்.

img_5657

img_5721

img_5749

img_5764
»»  (மேலும்)

கிழக்கு மாகாண கல்விச் சமூகத்தின் வளச்சிக்காக வகுக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தையும் சீர்குலைக்க எதிர்கட்சிகளுடன் சில தமிழ் கட்சிகளும் இணைந்து சதி


img_4995மட்டக்களப்பு மட். செங்கலடி மத்திய கல்லூரியில் கடந்த ஜனவரி 19ம் திகதி இடம்பெற்ற ஆசிரியர்கள் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த 30 வருடங்களாக நமது சமூகத்திற்கு எந்த தமிழ் அரசியல்வாதிகளும் செய்யமுடியாதவற்றை கடந்த 20 மாதங்களில் கிழக்கு மாகாண சபை மூலம் செய்யமுடிந்த வரலாற்றுப் பெருமை எனக்கு இருப்பதை இட்டு பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். அத்தோடு எதிர்கால கிழக்கு மாகாண கல்விச் சமூகத்தின் வளச்சிக்காக வகுக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தையும் சிர்குலைக்க எதிர்கட்சிகளுடன் இணைந்து கொள்கையற்ற சில தமிழ் கட்சிகளும் சதி செய்வது மனவேதனைக்குரிய விடயமாகும், எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை வெற்றியடையச் செய்து மாகாண சபையில் உள்ள நிருவாகப் பிரச்சினைகள் அனைத்தையும் சீர் செய்து ஒரு பலமான மாகாண சபையை உருவாக்கி எமது கல்வி சமூகத்தை ஓர் சிறந்த முதன்மையான சமூகமாக மாற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.»»  (மேலும்)

பிரசாரம் நேற்று நள்ளிரவுடன் முடிவு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு 69,000 பொலிஸார், முப்படைகள் கடமையில்ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவுடன் முடிவுற்ற நிலையில் நாடுமுழுவதிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார் இதற்கமைய இம்முறை தேர்தல் பாதுகாப்பு கடமையில் 68,800 பொலிஸாரும், பொலிஸாருக்கு உதவியாக முப்படையின ரும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று மாலை பொலிஸ் தலை மையகத்தில் நடைபெற்றது. தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன, குற்றப் புலனாய்வு பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சிசிர மென்டிஸ், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எம். கருணாரட்ன கலந்து கொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிடுகை யில்:- அமைதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்குத் தேவையான சகல பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பொலிஸ் திணைக்களம் திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுத்துள்ளது. 27 வருடங்களுக்கு பின்னர் நாடு முழு வதிலும் ஒரே நாளில் தேர்தல் இடம்பெறு வது இதுவே முதற்தடவையாகும். இம்முறை நாடு முழுவதிலும் 11 ஆயிரத்து 155 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு கடமையில் 68,800 பொலிஸாரும், முப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் 413 பொலிஸ் நிலையங்களும், 40 பொலிஸ் பிரிவுகளும் தயார் நிலையில் வைக்கப்ப ட்டுள்ளன. வடக்கு, கிழக்கு உட்பட நாடுமுழு வதிலும் 2,523 நடமாடும் பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த ஒவ்வொரு பொலிஸ் குழுவிலும் பொலிஸ் அதிகாரி ஒருவர், இரண்டு பொலிஸார், முப்படை வீரர்கள் இருவர் என்ற அடிப்படையில் ஐவர் இருப்பர். ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திற்கும் இரண்டு அல்லது மூன்று பொலிஸார் ஆயுதங்களுடன் கடமையில் ஈடுபடுவார்கள். வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலும் தெற்கின் சில பிரதேசங்களிலும் தேவைப் படும் சில வாக்களிப்பு நிலையங்களிலும் பொலிஸாருடன், முப்படையினருடனான பாதுகாப்பு அதிகரிக்கப்படும். கிளிநொச்சி, முல்லைத்தீவு, பூநகரி ஆகிய பிரதேசங்களிலேயே இம்முறை முதற் தடவையாக தேர்தல் நடத்தப்படுகின்றது. வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள வீதிகளின் வீதிச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது என்றார். இதேவேளை இம்முறை தேர்தல் முடிவுற்ற பிறகும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதா கவும் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார். ஏதாவது வன்முறைச் சம்பவங்கள் ஒரு பிரதேசத்தில் இடம்பெறும் பட்சத்தில் 119 என்ற அவசர இலக்கத்திற்கு பொது மக்கள் உடனடியாகத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொண்ட பொலிஸ் மா அதிபர், அவ்வாறு அறிவிக்கும் பட்சத்தில் அந்தப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரினதும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரினதும் வழிகாட்டலில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இதேவேளை சில பிரதேசங்களில் அடையாள அட்டைகள் பலாத்காரமாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்று உறுதியான தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்த பொலிஸ் மா அதிபர், இந்தக் காலகட்டத்தில் பொது மக்கள் எக்காரணத் தைக் கொண்டும் அடையாள அட்டைகளை எவருக்கும் கொடுக்க வேண்டாம் என்றும் தங்களது அடையாள அட்டைகளை தாங்கள் பாதுகாத்து தங்களது வாக்குரி மைகளை பாதுகாத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எவர் செயற்பட்டாலும் கட்சி பேதமின்றி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

»»  (மேலும்)

மீட்பு நடவடிக்கைகள் முடிவடைந்துவிட்டன - ஹெய்ட்டி அரசு


ஹெய்ட்டியில் தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் யாவும் முடிவடைந்துவிட்டதாக அந்நாட்டு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

சுமார் இரண்டு லட்சம் மக்களின் உயிர்களை காவு கொண்ட ஹெய்ட்டி பூகம்பம் நிகழ்ந்து 11 நாட்கள் கடந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிபுணர்களின் கருத்துக்களைக் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஐ.நா பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

கடந்த மூன்று தினங்களில் எவரும் மீட்கப்பட்டமைக்கான அறிகுறிகள் இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து இதுவரை 132 பேர் உயிருடன் காப்பாற்றப்பட்டுள்ளதாக ஐ.நா பேச்சாளர் தெரிவித்தார்.

இறுதியாக இருவர் வெள்ளிகிழமையன்று மீட்கப்பட்டனர்.

அநேகமான தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள் ஹெய்ட்டியிலிருந்து வெளியேறிவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
»»  (மேலும்)

அரசியல் தீர்வுக்கான கொள்கை கூட்டமைப்பிடம் இல்லை


தமிழ் மக்கள் தங்கள் எதிர்காலம் தொடர்பாகத் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வரவேண்டிய கட்டம் இப்போது ஏற்பட்டிருக்கின்றது. காலங்கலமாகத் தலைமை வகித்தவர்களின் தவறான செயற்பாடுகள் காரணமாகத் தமிழ் மக்கள் தொடர்ச்சியாகப் பல இன்னல்களை அனுபவித்து வந்தார்கள். புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போது ஏற்பட்ட இழப்புகளும் அதற்குப் பிந்திய அகதி வாழ்க்கையும் தமிழ் மக்கள் அனுபவித்த இன்னல்களின் உச்ச கட்டம் எனலாம் இந்த உச்சகட்டப் பாதிப்புக்கு உள்ளான மக்கள் இப்போது இயல்பு வாழ்க்கைக்கு மாறிக்கொண்டிருக்கின்றார்கள். அரசாங்கம் அளித்துவரும் பல்வேறு உதவிகளால் பழைய வாழ்க்கைக்கு அவர்கள் திரும்புகின்றார்கள். மக்கள் உச்ச கட்ட இன்னல்களை அனுபவித்த காலத்தில் இந்தியாவிலும் வேறு நாடுகளிலும் தங்கியிருந்து ‘வாய்ப்பேச்சுப் போராட்டம்’ நடத்தியவர்கள் இப்போது இலங்கை திரும்பி வந்து தாங்களே தமிழ் மக்களின் தலைவர்கள் என்று மீண்டும் உரிமை கோருகின்றார்கள். தமிழ்த் தேசியக் கட்டமைப்பு 2001 பொதுத் தேர்தலுக்காக உருவாக்கம் பெற்றதெனினும் அதைப் புதிய அரசியல் கட்சியாகக் கருத முடியாது. இது புதிய பானையில் பழையபானம். தமிழ்க் காங்கிரஸ் கட்சி, தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பனவற்றின் தொடர்ச்சியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் தமிழரசுக் கட்சியின் சின்னத்திலேயே தேர்தல்களில் போட்டியிட்டதை இங்கு குறிப்பாகக் கூறலாம். எனவே கூட்டமைப்புத் தலைவர்களுக்கு அறுபது வருட அரசியல் பாரம்பரியம் உண்டு. இந்தத் தலைமையே அறுபது வருட காலமாகத் தமிழ் மக்கள் சார்பில் இனப் பிரச்சினையைக் கையாண்டிருக்கின்றது. அறுபது வருட காலமாக இவர்கள் நடத்திய ‘போராட்டங்கள்’ இனப் பிரச்சினையை நாளுக்கு நாள் வளர்த்திருக்கின்றனவேயொழியத் தீர்க்கவில்லை. தீர்வை விடுவோம். பிரச்சினையின் பரிமாணத்தையாவது குறைக்க முடியவில்லை. இத்தனைக்கும் இக்காலப் பகுதியில் இராணி அப்புக்காத்துகளும் மெத்தப் படித்தவர்களுமே தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்கினார்கள். எனவே பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாமைக்கு இவர்களின் வல்லமைக் குறைவு காரணம் எனக் கூற முடியாது. எத்தனையோ சிக்கலான வழக்குகளில் இத் தலைவர்கள் தங்கள் திறமையைக் காட்டியிருக்கின்றார்கள். இவர்கள் சரியான கொள்கையைக் கொண்டிராததும் பிழையான அணுகுமுறையைப் பின்பற்றியதுமே பிரச்சினையைத் தீர்க்க முடியாததற்கான காரணம். தமிழ்த் தலைவர்கள் நிலையான ஒரு கொள்கையைப் பின்பற்றவில்லை. காலத்துக்குக் காலம் கொள்கையை மாற்றினார்கள். இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தக்கொள்கையும் இல்லாமல் வந்து நிற்கின்றது. தமிழ் மக்களுக்குத் தலைமை வகிப்பதாக உரிமை கோரும் கட்சியிடம் இனப் பிரச்சினையின் தீர்வுக்கு எந்தக் கொள்கையும் இல்லாதிருப்பதை என்னவென்று சொல்வது? அரசியல் தீர்வை அடைவதற்குத் தென்னிலங்கை மக்களின் ஆதரவைப் பெறும் விதத்திலும் இத் தலைவர்கள் நடந்துகொள்ளவில்லை. தமிழ் மக்களின் நலன்களுக்கு விரோதமாகச் செயற்படுகின்ற ஐக்கிய தேசியக் கட்சியுடன் சமரசம் செய்த காலங்களைத் தவிர மற்றைய காலங்களில் சிங்கள மக்களுக்கு எதிரான உணர்வலையைத் தமிழ் மக்களிடம் வளர்ப்பதிலேயே இவர்கள் கவனம் செலுத்தினார்கள். இனப் பிரச்சினையின் தீர்வு சிக்கலாகியதற்கு இதுவும் ஒரு காரணம். இவர்களின் இப்போதைய நிலைப்பாடும் ஐக்கிய தேசியக் கட்சியுடனான வர்க்க சமரசமேயொழிய, தமிழ் மக்களின் நலன் சார்ந்ததல்ல

»»  (மேலும்)

இலங்கை முஸ்லிம்கள் மட்டுமல்ல கிழக்கிலங்கை முஸ்லிம்களும் இந்த ஜனாதிபதித் தேர்தலில் எடுக்கும் முடிவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும் "

கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணி
கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணி சென்ற நான்கு வருடங்களாக இலங்கையில் சமாதானம் மனித உரிமை சக சீவியத்திற்காக குரல் கொடுத்து வருவதுடன் , கிழக்கிலங்கை முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம் குறித்து தீர்க்கமானதும் தெளிவானதுமான நிலைப்பாட்டினை முஸ்லிம்களின் நீண்ட கால அரசியல் நலனை அடிப்படையாகக் கொண்டு எடுத்து வந்திருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளுக்கும் தற்காலிக வளம்படுத்தலுக்கும் அப்பால் நீண்ட காலத்தில் முஸ்லிம்கள் சக இனங்களுடன் பிரிவினை தவிர்த்து ஐக்கியமாக சம உரிமையுடன் வாழ்வதற்கு தகுந்த உபாயங்களை வகுத்து செயற்படுவதுடன் கிழக்கினை மூவினமும் ஒன்றுபட்டு புரிந்துணர்வுடன் வாழும் சமூகச்சூழலை ஏற்படுத்த பல வேலைத்திட்டங்களையும் முன்வைத்து வருகிறது. அந்த வகையில் சர்வ கட்சி கூட்டத்தில் சமூக அக்கறையுள்ள புத்தி ஜீவிகள் சிவில் நடவடிக்கை செயற்பாட்டாளர்கள் என்ற அருகதையுடன் ஒரு முன்னுதாரணமாக கிழக்கு மாகாணத்தை கொள்ள வேண்டும் என்றும் ; மாகான அடிப்படையில் தீர்வுகள் எட்டப்பட வேண்டும் என்றும் , அது குறித்து தீர்வுப் பிரேரணை ஒன்றினையும் சர்வ கட்சி மாநாட்டின் தலைவரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண அவர்களிடம் கையளித்ததுடன் , எமது சார்பில் எமது பிரதிநிதி பேராசிரியர் திஸ்ஸ விதாரண அவர்களையும் நேரில் சந்தித்து கலந்துரையாடி இருந்தார். இச்சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததுடன் இன்றைய ஜனாதிபதி இலங்கை சகலருக்கும் சொந்தமான நாடு என்ற உணர்வினை ஏற்படுத்தக் கூடியவர் என்ற நம்பிக்கை முளைவிடத்தொடங்கிய வேலையில் தான் மீண்டும் இனவாத பிரிவினைச்சக்திகள் இந்தத்தேர்தலில் மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக களத்தில் இறங்கி உள்ளனர். முஸ்லிம்கள் , குறிப்பாக வடக்கு கிழக்குவாழும் முஸ்லிம்கள், தமிழர்கள் இன்று உள்ள நிலைமையை தொடர்ந்தும் பேன , இன ரீதியில் பிரிவினைக்கிட்டுச்செல்லும் சக்திகளுக்கும் பிரிவினைகெதிரான சக்திகளுக்குமான தேர்தலாக இந்த ஜனாதிபதித் தேர்தலை அடையாளங்கண்டு வாக்களிக்க வேண்டும் என்பதே எமது பணிவான வேண்டுகோளாகும். மலையக மக்கள் வடக்கு கிழக்கு மாகான தமிழ் மக்கள் என இலங்கையின் பல சிறுபான்மை சாகியங்களில் பெரும்பான்மையானோர் இன்று தேசிய நீண்ட கால நலனை அடிப்படையாகக்கொண்டு இணைந்திருக்கும் இந்த தேர்தலில் நாமும் எமது ஒற்றுமையை காட்டி நமது உரிமைகளை நட்புடனும் உரிமையுடனும் வென்றெடுப்போம். மீண்டும் ஈம்து நாட்டை இரானுவச்சூழலுக்குள் தள்ளுவதிலிருந்து பாதுகாப்போம்; ஓன்று பட்டால் உண்டு வாழ்வு எனபது யாருடன் ஒன்றுபடுவதைப் பொறுத்தது என்பதை உணர்ந்து செயற்படுவோம். முஸ்லிகளுக்கு எதிராக ஜனாதிபதி செயற்படுகிறார் என்ற வதந்தி மிகைத்திருக்கும் சூழலில் "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் மெய்பொருள் காண்பதரிது " என்ற பொய்யா மொழிககிணங்க பொய்களை கேட்டு ஏமாறாமல் உண்மை நிலை பகுத்தறிந்து இந்தத் தேர்தல் இலங்கையில் குழப்பம் விளைவிக்கும் சக்திகளுக்கு எதிரான தேர்தலாகும் என்பதை உணர்ந்து செயற்படுமாறு வேண்டிக்கொள்கிறோம். நன்றி

இவ்வண்ணம்
யு . முகமது
செய்தி பிரிவு செயலாளர்
கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணி


»»  (மேலும்)

இலங்கையில் ‘இராணுவ’ ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம், துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம் (சாகரன்)

இன்னும் 5 நாட்களே ஜனாதிபதித் தேர்தலுக்கு இருக்கும் நிலையில், இலங்கையில் இராணுவ ஆட்சி வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்ற நிலைமைகளை நோக்கி இலங்கை அதிபர் தேர்தல் நகர்ந்து கொண்டு இருக்கின்றது. சரத் பொன்சேகா போன்ற இராணுவத் தளபதியை இலங்கையில் ஆட்சியில் அமர்த்தி தென்கிழக்கு ஆசியாவில் இராணுவ ஆட்சியில் இதுவரையில் உள்படாத ஒரு நாட்டை அதற்குள் வீழ்த்தி தனது வர்க்க நலன்களை பூர்த்தி செய்ய துடிக்கின்றன மேற்குலக நாடுகள். அதற்கு கண்டு பிடிக்கப்பட்ட நபர்தான் சரத் பொன்சேகா. ஐக்கிய தேசியக் கட்சியினால் தமது விருப்பங்களை நிறைவேற்ற முடியாத மேற்குலகம் ஜேஆர் ஜெயவரத்தனவிற்கு பிறகு தனக்கு ஒரு பலமான தங்களது சக்தியின் பிரதிநிதி இலங்கையில் இல்லாமல் போனதால் மீண்டும் இந்தத் தேர்தலில் விட்ட இடத்தை பிடிக் கங்கணம் கட்டி நிற்கின்றன. இதற்கு தமிழர் தரப்பில் இவர்களுக்கு எல்லாவகையிலும் உற்ற தோழனாக இருப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சம்மந்தர் அணி இவருக்கு எல்லாவகையிலும் தோளோடு தோள் கொடுக்கும் சுரேஷ் பிரேமசந்திரன்.

உலக அரங்கில் எப்போதும் மற்றய எல்லோரையும் விட அமெரிக்காவையும் அவர் தம் கூட்டாளிகளையும் நம்பும் (புலம் பெயர்) புலிகள் தமது தமிழ் தேசியம் என்ற சுலோகத்திற்காய் தற்போது பெற்றெடுத்த முடமான பிள்ளைதான் ‘நாடுகடந்த தமிழ்ஈழம்’. இப் பிள்ளையிற்க சொத்து சேர்க்க தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமது இலங்கைப் பிரநிதிகளாக வரிந்து கட்டி சரத் பொன்சேகாவிற்கு தமது ஆதரவுக்கரத்தை நீண்டி நிற்கின்றனர். ஒரு காலத்தில் தற்கொலைக் குண்டு மூலம் கொல்ல முயன்று தோற்றப் போன புலிகளும், அவர்களின் இலக்கு சரத் பொன்சேகாவும் தற்போது ஒரு கூட்டமைப்பில். புலிகளும், அவர்களின் தலையாட்டித் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் தமது (இலங்கை) தேசியத் தலைவராக பொன்சேகாவை ஏற்றக் கொண்டுள்ளனர். இதனை தமிழ் மக்களும் எற்றக் கொள்ள வேண்டும் என்று பிரச்சாரம் செய்கின்றனர்.

இலங்கையில் ஈராக், பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மார், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ளது போன்ற இராணுவ மேலாதிக்க ஆட்சியொன்றை நிறுவி தமது சமாதானப்படைகள் மூலம் தமது வியாபாரத்தையும், மேலாதிக்கத்தையும் நிலைநிறுத்த எடுத்து வரும் ஒரு பலப் பரீட்சையின் உச்சக்கட்ட நிலையில் இலங்கையின் தேர்தல் களம் தற்போது பயணித்துக் கொண்டு வருகின்றது. இதில் சரத் பொன்சேகா வெற்றி பெறுவார் ஆகின் தெற்காசிய நாடுகள் சிலவற்றில் நிலவி வரும் ஒருவகை இராணுவத் தன்மையுடைய ஆட்சியினை ஜனநாகத் தேர்தலில் வென்றவர் என்ற பட்டத்துடன் இலங்கையில் அமைத்திட முயலும் சதிச் செயற்பாடுகள் நடைபெற்றக் கொண்டு இருக்கின்றன.

ஏகாதிபத்தியம் நிமித்த முடியாமல் சரிந்து வரும் தனது பொருளாதார வீழ்ச்சியை திசை திருப்பி மீண்டும் பழைய பாணியில் ஒரு யுத்தத்தை அங்கங்கே ஆரம்பித்து தமது ஆயுத வியாபாரத்தையும், மேலாதிக்கத்தையும், சுரண்டலையும் நிலைநாட்டும் முயற்சிக்கு இலங்கை மக்கள் முற்றப் புள்ளி வைத்தாக வேண்டும். அன்றேல் இன்று பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும், மியான்மாரிலும், ஈராக் போன்ற நாடுகளில் நடைபெறும் வெடிகுண்டுச் சத்தங்களும், மரண ஓலங்களும் புதிய வடிவில் இன்னும் அகோரமாக இலங்கையில் மீண்டும் உருவெடுக்கும் சாத்தியக்கூறுகளை மறுப்பதற்கு இல்லை. குட்டையை குழப்பி மீன்பிடிக்கும் வன்செயலை மேற்குலகம் வேண்டி நிற்கின்றது.

25 வருட காலத்திற்கு பின்பு வெடிகொழுத்தி கொண்டாடி முடிந்த தைப் பொங்கலை கடைசியான சந்தோஷத் தைப்பொங்கலாகவும் முடிக்கும் நிலமைகளை ஏற்படுத்தும் நோக்கோடு இலங்கையில் ஆட்சி மாற்றம் கோரி நிற்கின்றனர் சிலர். இலங்கை மீதும், இந்து சமுத்திரப் பிராந்தியம் மீதும் மேலாதிக்கம் செலுத்த விரும்பும் சக்திகளின் விருப்பு அதுவே. இலங்கை நாடு தற்போது கொண்டுள்ள உறவு நாடுகளில் எரிசல் அடைந்து இவற்றை செய்ய முயல்கின்றன. சீனா, ஈரான், வியட்நாம், இந்தியா, ரஷ்சியா போன்ற நாடுகளுடனான இலங்கையின் தற்போதைய உறவு இவர்களால் ஏற்றக் கொள்ள முடியவில்லை.

இதற்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதே அவர்களின் விரும்பமாகும். இதற்கு அவர்களுக்கு தேவை இலங்கையில் ஒர் இராணுவ ஆட்சித்தன்மையுடைய நபர். அவர்தான் சரத் பொன்சேகா. இவரைத் தமது திறவு கோலாகக் கொண்டு இலங்கைக்குள் புகுந்து விடத்துணியும் ஏகாதிபத்தியம் தற்செயலாக சரத்தின் வெற்றி மூலம் புகுந்து விட்டால் கடந்த 30 வருடகாலமாக நாம் அனுபவித்து வந்த போர் கொடுமைகளை ஒருவருடத்தில் மொத்தமாக அனுபவிக்க வேண்டிய பயங்கர நிலைமைகளுக்கு உள்ளாக வேண்டிய அபாய நிலமைகளை மக்களால் தடுக்க முடியாமல் போய்விடும்.

மாற்றம் வேண்டும் என்பது அவர்கள் பாஷையில் சொல்வதாயின் ஒரளவிற்கு ஜனநாயகத்தன்மையுடன் உள்ள தற்போதைய நிலமைகளை இல்லாமல் செய்து இராணுவ ஆட்சிக்கு ஒத்த ஆட்சியொன்றை இலங்கையில் நிறுவுவதே.

இப்படியான ஒரு பயங்கரமான நிலமைகளை இலங்கை மக்கள் ஆகிய நாங்கள் அனுமதிக்கப் போகின்றோமா? அல்லது இதனை முளையிலேயே கிள்ளி எறியப் போகின்றோமா? என்பதே தற்போதுள்ள பிரதான கேள்வி. இவற்றை ஏற்படுத்த எல்லாவகையிலும் உதவி ஒத்தாசையாக இருக்கும் சம்மந்தர் - தமிழ் தேசியக் கூட்;டமைப்பை தமிழ் மக்கள் இனம் கண்டு தூக்கி கடாச வேண்டும். 60 வருடகால தமிழ் பிற்போக்குத் தலைமைகளின் காட்டிக் கொடுப்பின் உச்சக்கட்டமாக தற்போது சம்மந்தன் கோஷ்டி வரிந்த கட்டிக் கொண்டுநிற்கும் இராணுவ ஆட்சிக்கான முஸ்தீபுக்களை இல்லாமல் செய்ய வேண்டும்.

ஐதேக இன் ஏகாதிபத்திய சார்பு நிலை இன்று இராணுவ ஆட்சிக்கு வழி வகுத்து தன்னையே அழித்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளி அவர்களை வங்குரோத்து நிலைக்கு கொண்டு வந்திருக்கின்றது. தமது அமைப்பின் உடைவுக்கு காரணம் மகிந்தாவே என்று பழிவாங்கும் நோக்குடன் செயற்படும் ஜேவிபி தமது தற்போதைய ஏகாதிபத்திய சார்ப்பு நிலைப்பாட்டின் தவற்றிற்காக எதிர் காலத்தில்; வருந்தக்கூடிய வாய்பே இல்லாமல் காணாமல் போய்விடும் வாய்பக்கள் நிறையவே உள்ளன. ஜேவிபின் தற்போதைய கூட்டாளி ரணில் விக்ரமசிங்க இன் அமைச்சர் அவைதான் ஜேவிபி இயக்கத்தின் தலைவர், சக தோழர்களை சுட்டு அழித்ததைக் கூட மறந்து, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து மகிந்தாவை பழிவாங்கத் துடிப்பது இலங்கையில் ஒரு இராணுவ ஆட்சிக்கு வழிவகுத்து விட உதவலாம் என்ற கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் போல் பின்பு உணரப்பட்டால் அன்று ஜேவிபியை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.

இலங்கை மக்களே! (தனித்து தமிழ் பேசும் மக்களையோ அல்லது சிங்களம் பேசும் மக்களையோ விழித்துக் கூப்பிட விரும்பவில்லை) நாம் ஒரு மிகவும் இக்கட்டான அபாயகரமான பொறிக்குள் சிக்க வைப்பதற்கான நிகழ்வுப் போக்குகள் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் என்ற போர்வையில் நிறைவேற்றிட ஏகாதிபத்தியம் கங்கணம் கட்டி நிற்கின்றது. அது சரத் பொன்சேகா என்ற இராணுவத்தளபதி மூலம் ஒரு இராணுவ ஆட்சியை இலங்கையில் நிறுவ முயலும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதில் தமிழ் மக்கள் தரப்பில் சம்மந்தன் - தமிழ் தேசியக் கூட்டைப்பும், முஸ்லீம் மக்கள் தரப்பில் முஸ்லீம் காங்கிரசும், சிங்கள் மக்கள் மத்தியில் ஐதேக என்ற ஏகாதிபத்திய நண்பனும் மாற்றம் வேண்டி நிற்கும் ஜேவிபி யும் உள்ளன. உதிரிகளாக மனோ கணேசன், மங்கள் சமரவீர, இன்னும் சில மலையக பெருந்தோட்ட முதலாளிமார்கள், கொழும்பு முதலாளிமார்கள் அடங்குவர்.

மகிந்தாவுடன் உங்களுக்கு பிரச்னை என்றால் அதற்காக இராணுவத்தன்மை ஆட்சியை இலங்கையில் ஏகாதிபத்தியங்களின் விருப்பிற்கு ஏற்ப அமைத்து ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நடைபெறும் தினம் தினம் குண்டு வெடிப்புக்களுடன் கூடிய கொலையாட்சிகளை அமைதிப்படை என்ற பெயரில் எற்பட வாய்பளிகாதீர்கள். இது உங்களை எப்போதுமே மீள முடியாமல் படுகொலைக் குழிக்குள் தள்ளவிடும். இது வந்த பின்பு பார்ப்போம் முதலில் மகிந்தாவை அகற்றுவோம் என்ற சிறுபிள்ளைத்தனமான விளையாட்டும் அல்ல.

எமது நாட்டில் யுத்தம் நடைபெற்றது உண்மைதான். அரசு படைகள் தமிழ் பேசும், சிங்களம் பேசும் மக்களை கொலை செய்ததும் உண்மைதான். புலிகளும், ஜேவிபி யும் மாற்றக் கருத்தாளர்களையும், விடுதலை இயக்கங்களையும், பொது மக்களையும் கொலை செய்ததும் உண்மைதான். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஏனையவிடுதலை அமைப்பக்கள் நடைமுறைத் தவறுகள் செய்ததும் உண்மைதான். ஆனால் எமது நாட்டில் இது வரையில் ஒரு இராணுவ ஆட்சி நடைபெறிவல்லை. புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் தமிழ் பேசும் மக்கள், மாற்றக் கருத்தாளர்கள், புத்திஜீவிகள், மாற்று விடுதலை அமைப்பு உறுப்பினர்கள், புலிகளின் கட்டாய ஆள்ச்சேர்பிற்கு மறுத்தவர்கள் என நபர்களாக கொல்லப்பட்டதும் உண்மைதான். முஸ்லீம் மக்கள், சிங்கள மக்கள் கிராமங்களாக இங்கொன்றும் அங்கொன்றமாக கொலை செய்யப்பட்டதும் உண்மைதான். இந்திய இராணுவம் தாக்குதல் செய்ததும் உண்மைதான். இதற்காக வலிந்த தாக்குதலை புலிகள் மேற்கொண்டு தாக்குதலுக்கான காரணங்களைத் தேடிக்க கொடுத்ததும் உண்மைதான்.

ஆனால் இராணுவ ஆட்சியாளர்கள் , கிட்லர், முசோலினி, பொல்பொட் செய்தது போல் பொதுப்படையாக வகை தொகையில்லாமல் மிகவும் திட்டமிட்டு தொடர்சியாக படு கொலைகள் நிகழ்த்தப்படவில்லை இலங்கையில். தினம் தினம் தெடர்சியாக நூற்றுக்கணக்கான உயிர்களை பயங்கரவாதிகள் என்று கூறிக்கொண்டு கொலைகள் நிகழ்த்தப்படவில்லை. இனக்கலவரங்கள், கைதுகள் வதை முகாங்கள் என்ற நிலமைகள் இருந்த நிலமையிலும் ஒரு இராணுவ ஆட்சிக்குரிய பரிணாமத்தை இலங்கை இதுவரை கொண்டிருக்கவில்லை. ஆபிக்க நாடகளின் நடைபெற்றது போல் இலட்சம் மக்கள் சிலதினங்களுக்கள் கொன்று குவிக்கப்படவில்லை. மாற்ற மொழி பேசும் மக்கள் என்பதற்காக அறைக்குள் பூட்டி நச்சு வாயு செலுத்தி ஒரு சில மணி நேரத்தில் பல ஆயிரம் மக்களை திட்டமிட்டு கொல்லவில்லை. ஏன் முன்னாள் புலி உறுப்பினர்களையும்(சரணடைந்த) அவ்வாறு யாரும் செய்யவில்லை. கந்தன் கருணை, வெலிக்கடை, சூரியகந்த(அன்கும்புற), காத்தான்குடி, பொலநறுவ, அனுராதபுரம் போன்ற இடங்களில் ஒரு நாளில் நடைபெற்ற கொலைகளைத் தவிர. இவற்றில் இலங்கை அரசு, தமிழீழ விடுதலைப்புலிகள் கைகள் இருந்தன.

இவ்வளவிற்கு மத்தியலும் ஏதோ சில, பல ஜனநாய நிலைமைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து கொண்டுதான் இருந்தது. ஜனநாகபூர்வமான தேர்தல்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருந்தன. புலிகளின் கட்டுப்பாட்டு தமிழ் பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகளில் பல கட்சி ஜனநாகம் இருந்து கொண்டுதான் இருந்தது. இவ்வாறான நிலமையை இல்லாமல் செய்யும் ஒரு மோசமான இராணுவ மேலாதிக்க ஆட்சி வேண்டாம் எமக்கு. இவற்றை நாம் எமது நாட்டிற்குள் குறுகிய சிந்தனையின் அடிப்படையில் அனுமதிப்போமானால் இதனை எம் நாட்டில் இருந்து விரட்ட முடியாது. இதனை விரட்ட நாம் பெரும் மனித இழப்புக்களை சந்திக்க வேண்டிவரும். எனவே வரு முன் காப்போனாக ஏகாதிபத்திய நலன்களின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிடும் சரத் பொன்சேகாவை தவிர்த்தே வையுங்கள். மேற்குலக நாடுகளுக்கு எமது ஒற்றுமையை வேற்றுமையிலும் ஒற்றுமை என்ற நடைமுறையினூடாக காட்டுங்கள்.

எனவே இலங்கை மக்கள் நன்கு சிந்தித்து எமக்கு இராணுவ ஆட்சி தேவையில்லை. மேற்குலக நாடுகள் மனித உரிமை, போர் குற்றங்கள், நிவாரணங்கள், நியாமான தேர்தல் என்ற கோதாவில் எமது நாட்டிற்குள் நுழைய அனுமதியாதீர்கள். அப்படியான ஒரு வரலாற்றத் தவற்றை நீங்கள் செய்யமாட்டீர்கள் என்ற நம்பிக்கை இருந்தாலும் எச்சரிக்கை உணர்வுடன் இதனை மீண்டும் வலியுறுத்தி நிற்கின்றோம்.

இராணுவ மேலாதிக்க ஆட்சி ஏற்பட்டாலும் தமது படோபகரமான வாழ்வை உறதிப்படுத்தப்படும் என்பதினால் தனிநபர் சரத் பொன்சேகா, சம்மந்தர் - தமிழ் தேசியக் கூட்டமைப்புக் குழு, ஐதேக, முஸ்லீம் காங்கிரஸ், மனோகணேசன், மங்கள் சமரவீர, ஜேவிபி சோமவன்ச அமரசிங்க போன்றவர்கள் இருக்கின்றனர். எனவே அவர்களைப்பற்றி கவலை அடையாதீர்கள். மக்களே நீங்கள் விரும்பாத இராணுவ மேலாதிக்க ஆட்சி அமைவதை தடுத்து நிறுத்துங்கள். இது தமிழ் மக்களுக்கும் நல்லது, இலங்கைக்கும் நல்லது, இந்த சமுத்திர பிராந்தியத்திற்கும் நல்லது, ஏன் உலகிற்கும் நல்லது. மனித குலத்திற்கும் நல்லதே. வருமுன் காப்போனாக செயற்படுவோம்.

(சாகரன்) (தை 20, 2010)

»»  (மேலும்)

1/23/2010

மட்டக்களப்பில் பெருகிவரும் ராஜபக்ச ஆதரவும், அரசியல் அநாதையாகபோகும் மேயர் சிவகீதாவின் பின்னணியும்.

கு.சாமித்தம்பி (மட்டக்களப்பு)


மட்டக்களப்பு மேயர் சிவகீதாவின் கட்சிமாறும் படலம் ஐக்கிய தேசியக் கட்சியில் வந்து நிற்கின்றது. ஐக்கியதேசிய கட்சிக்கு ஆதரவு கோரி நடாத்தப்படுகின்ற அவரது செயற்பாடுகளை மட்டக்களப்பு மாநகர மக்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. மட்டக்களப்பு எங்கும் பெருகிவருகின்ற ஜனாதிபதி ராஜபக்சவுக்கான ஆதரவு அலையையிட்டு மேயர் பெரும் கவலை கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
முதலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளில் இருந்து சி.ல.சு. கட்சிக்கு தாவிய சிவகீதா இப்போது சி.ல.சு.கட்சியில் இருந்து ஐ.தே.கட்சிக்கு தாவி தனது கட்சி மாறும் படலத்தின் இரண்டாம் காண்டத்தை நிறைவேற்றியுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் இவரது இந்த திடீர் முடிவின் பின்னணியில் அரசியல் நியாயங்கள் இருக்க முடியாது. அவர் கட்சிமாறிய செய்தியை சிறிகோத்தாவில் வெளியிடும் போது அவர் கூறிய விளக்கங்கள் அதனை தெளிவாக வெளிப்படுத்தின. சுயலாப கணக்கு வழக்குகளோடு இடம்பெற்ற கட்சி மாறலையிட்டு மட்டக்களப்பு வாழ் மக்கள் கடும் கோபம் கொண்டுள்ளதோடு இவருக்கு வழங்கிவந்த ஆதரவையும் விலக்கிக் கொண்டுள்ளனர். பல புத்திஜீவிகள் மேயரது அரசியல் நடவடிக்கையை நகைப்புக்கிடமாகப் பார்க்கும் அளவிற்கு இவர் தள்ளப்பட்டுள்ளார்.
ஒரு காலத்தில் மட்டக்களப்பில் ஐ.தே.கட்சிக்காக உழைத்த இவரது தந்தை சத்தியமூர்த்தி அவர்கள் இறுதியில் அந்தக் கட்சியை விட்டு வெளியேறினார். இனப்பிரச்சனை உக்கிரமடைந்திருந்த காலத்தில் தமிழ் மக்களை ஐ.தே.கட்சி நடாத்தியவிதம் அவரை அந்த முடிவுக்கு தள்ளியது. அந்த பெருமனிதனான தனது தந்தையாரே விட்டு வீசி எறிந்த ஐக்கிய தேசியக் கட்சியை தேடி அடைக்கலம் புகுந்திருக்கிறார் சிவகீதா. அதனூடாக தனது தந்தையாரின் ஆத்மாவுக்கே துரோகம் இ;ழைத்திருக்கின்றார் இந்த பெண்மணி என்று மக்கள் பரவலாக பேசிக்கொள்கிறார்கள்.
ஐ.தே.கட்சியை நிராகரித்து வெளியேறிய சத்தியமூர்த்தி அவர்கள் தமிழ் பேசும் மக்களுக்காகவும் கிழக்கு மாகாண மக்களின் தனித்துவத்துக்காகவும் தனது உயிரையே விலையாகக் கொடுத்தவர். அந்தப் பின்னணியில் இருந்துதான் சிவகீதாவின் அரசியல் வாழ்வு ஆரம்பித்தது. புலிகள் சத்தியமூர்த்தி அவர்களை சுட்டு வீசியது மட்டும் அன்றி, அவரது புதைத்த உடலையும் தோண்டியெடுத்து சின்னாபின்னப்படுத்தினர். அப்போதெல்லாம் கள்ளமௌனம் காத்து கொலைகாறப் பிரபாகரனை தேசியத் தலைவன் என ப+சித்த சம்பந்தனுடனும் இன்று கைகோர்த்து பொன்சேகாவின் பின்னால் அணிசேர்ந்திருக்கிறார் இந்த சிவகீதா என்றால் அதனை மட்டக்களப்ப மட்டக்களப்பு மக்கள் ஏற்றுக்கொள்ளப்பேவதில்லை.
சத்தியமூர்த்தியின் படுகொலையின் பின்னர், அவரது மகளான சிவகீதாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளித்து இவரை அரசியல்வாதியாக்கியது த.ம.வி. புலிகளேயாகும். கிழக்கு மாகாணத்தில் இருந்து பெண் தலைமைத்துவங்களும் பெண்களுக்கான பிரநிதித்துவமும் வளர்த்து எடுக்கப்பட வேண்டும் என்கின்ற த.ம. வி. புலிகளின் கொள்;கை காரணமாக இவருக்கு கட்சிக்குள் முன்னுரிமையும் வாய்ப்புகளும் வளங்கப்பட்டது. த.ம.வி. புலிகளின் வளர்சிக்கட்டத்தில் உயிரையே துச்சமென மதித்துக் களமாடிய எத்தனையோ மூத்த உறுப்பினர்களை விட இவருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதினாலேயே இவரால் மட்டக்களப்பு மாநாகர மேயராக முடிந்தது. ஆனால் இவர் இன்று மேயரானதும் ஏறிவிட்ட பின்னர் ஏணியை எட்டி உதைப்பதுபோல் கட்சிமாறுவதையே தொழிலாகக் கொண்டுள்ளார். முதலில் த.ம.வி. புலிகளில் இருந்து சி.ல.சு.கட்சிக்கு தாவினார். தாமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடம் கொண்டிருந்த ஐனநாயகம் மீதான பற்றுறுதியும் மாற்றுக்கருத்துக்களை மதிக்கின்ற பக்குவமும் அவரை சுதந்திரமாக கட்சியை விட்டு வெளியேற வாய்ப்பளித்தது. அப்போது அவர் சொன்ன காரணங்கள் கருணா அம்மான் கட்சி மாறிவிட்டு தனக்கும் நெருக்கடி தருகிறார், பாதுகாப்பு நெருக்கடி என்பதால் தன்னால் ஏதும் செய்யமுடியவில்லை என்பதேயாகும். அப்படியே அது உண்மையாக இருந்துவிட்டுப் போனாலும் இப்போது சி.ல.சு.கட்சியில் இருந்து யு.என்.பிக்கு மாறுவதற்கு அவருக்கு யார் நெருக்கடி கொடுத்தது. என்கின்ற கேள்விக்கு இவரால் பதிலிறுக்க முடியுமா? பி.பி.சி. பேட்டியில் சிவகீதா தனது கட்சித் தாவலுக்கு சொன்ன காரணம் சிறுபிள்ளைத்தனமானது. மக்களின் தனிநபர் வருமானத்தை உயர்த்துவதற்காக பொன்சேகா ஐனாதிபதியாகப் போகிறாராம். அதற்காக இவர் பொன்சேகாவை ஆதரிக்கின்றாராம். பொன்சேகவிற்கே ஒரு பொருளாதாரத்திட்டம் கிடையாது. யு..என்.பி.யின் வலதுசாரி ஏகாதிபத்திய விசுவாச திறந்த பொருளாதாரக் கொள்கைதான் தனது கொள்கையென வாக்குமூலம் அளித்தவர் பொன்சேகா. இந்த திறந்த பொருளாதாரக் கொள்கையினால் நாட்டு மக்களின் தனிநபர் வருமானம் அல்ல பசியால் வாடும் ஏழைகளின் எண்ணிக்கையே கூடும். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உருவாக்கமும், அதனது ஆட்சிக்காலங்களும் இலங்கை மக்களின் சுய பொருளாதார வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்புகள் ஏராளம். தேசிய பொருளாதாரத்திற்கும், விவசாயிகளின் மேமம்பாட்டுக்கும் சி.ல.சு.கட்சி ஆற்றிவரும் பங்களிப்புகளுக்கு மகிந்த சிந்தனை வேலைத்திட்டங்களே நிகழ்கால சாட்சியமாகும். மகிந்த சிந்தனையின் ஊடாக ஆயிரக்காணக்கான குளங்களும், வாய்க்கால்களும், நீர்த்தேக்கங்களும் அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதை சிவகீதா அறியமாட்டாரா? இவரது வாயாலேயே மகிந்த சிந்தனை, மகிந்த சிந்தனை என்று எத்தனை ஆயிரம் தடவை உச்சாடனம் பண்ணியிருப்பார். அப்படியென்றால் இதுவரை காலமும் இவர் பேசியதெல்லாம் இவரது போலி அரசியலில் ஒரு படலம்தானா? இப்போது பொருளாதரத்தில் மட்டும் அல்ல அரசியலில் அரிச்சுவடியே அறியாத பொன்சேகாவை வைத்துக்கொண்டு தனிநபர் வருமானத்தை இவர் கூட்டப்பேகின்றாராம். தனது சொந்தவருமானத்தை வேண்டுமென்றால் உயர்த்திக்கொள்ள பொன்சேகா மேயருக்கு வழிவகுத்திருக்கலாம். மேயர் சிவகீதா நினைத்தபோதெல்லாம் இவரின் பின்னால் நடைபயில மட்டக்களப்பு மாநகர மக்கள் மடையர்கள் அல்ல என்பதை இன்னும் சிலநாட்களில் மகிந்தவின் வெற்றி அறிவிக்கும். அப்போது அரசியல் அனாதையாக சிவகீதா ஓரங்கட்டப்பட்டிருப்பார்.»»  (மேலும்)

இந்திய உயர்த்தானிகரின் மட்டக்களப்பு விஜயம்


நேற்று (21.01.2010)இந்திய உயர்த்தானிகர் ஹி சிறி அசோக் ஹே காந்தா மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டார், உயர்தானிகரை கிழக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் வரவேற்று பல நிகழ்வுகளில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது, அத்தோடு இந்திய அரசின் நிதியுதவியுடன் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் “நனசல” செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக கல்லடியில் கணணி கல்வி நிலையமும் திறந்து வைக்கப்பட்டது.

img_5079»»  (மேலும்)

ஜனாதிபதியின் அமோக வெற்றி உறுதி பால்சோறு, பலகாரங்களுடன் அமைதியாக கொண்டாடுங்கள் - அமைச்சர் மைத்திரி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தத் தேர்தலில் அமோக வெற்றிபெறுவது உறுதி என்றும் எதிர்வரும் 27ம் திகதி இந்த நாட்டிலுள்ள சகல இன மக்களும் பாற் சோறு, பலகாரங்களை செய்து இந்த வெற்றியைக் கொண்டாடுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர், அமைச்சர் மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்தார்.

இந்த வெற்றிக் கொண்டாட்டத்தை எதிர் அணி ஆதரவாளர்களுக்கு எந்தவித பாதிப்புக்கள் ஏற்படுத்தாத வகையிலும் வன்முறைகளை ஏற்படுத்தாத வகையி லும் முன்னெடுக் குமாறு அவர் சகல ரையும் கேட்டுக் கொண்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி யின் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்றது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர்களான அமைச்சர் டலஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச எம்.பி. ஆகியோர் கலந்து கொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மைத்திரிபால மேலும் உரையாற்றுகையில்,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அமோக வெற்றிக்காக இந்த நாட்டிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் நாங்கள் எதிர்பார்ப்பதைவிட பாரிய ஒத்துழைப்புக் களை வழங்கியுள்ளதுடன் வாக்குகளை வழங்கவும் தயாராகவுள்ளனர்.

உள்நாட்டு, வெளிநாட்டு அமைப்புக்கள் நடத்திய சகல கருத்துக் கணிப்புகளிலும் ஜனாதிபதி முன்னணியில் இருக்கின்றார்.

ரணில் - சரத் பொன்சேகா - சம்பந்தன் ஒப்பந்தம் தொடர்பாக மக்கள் மத்தியில் பெறும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டில் தற்பொழுது காணப்படுகின்ற சமாதானத்தை மீண்டும் பலிகொடுக்க எந்த இன மக்களும் தயாராக இல்லை.

ஈழ நீதிமன்றத்திற்கு ஈழப் பொலிசுக்கு மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சட்ட விரோத வரிக்கு, பிள்ளைகளை பலாத்காரமாக பிடித்து, ஆயுதப் பயிற்சி வழங்கி, சிறு வர் படைக்கு சேர்க்கும் யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

எனவே, வடக்கு, கிழக்கு மக்களும் இந்நாட்டில் மீண்டும் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் ஆதரவு வழங்கப் போவதில்லை. எனவே 70 வீதமான மக்கள் ஜனாதிபதிக்கு வாக்களிக்க தீர்மானித்து விட்டனர் என்றார். தேர்தல் சட்ட விதிமுறைகள் மீறும் நடவடிக்கைகளும், பாரிய

வன்முறைகளும் இந்த ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெறுகின்றது என்பதை சர்வதேச சமூகத்திற்கு காண்பிக்க எதிர்க்கட்சிகள் முனைகின்றனர். ஜனாதிபதி வெற்றி பெறுவது உறுதி என்பதை தெரிந்தே எதிர்க்கட்சிகள் இது போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர். எனவே, 2005ம் ஆண்டு தேர்தலை அமை தியாக நடத்த முடிந்தது போன்று இந்த தேர்தலையும் அமைதியாக நடத்தி முடிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் கோரினார்.

பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட போது இந்த நாட்டு மக்கள் ஜாதி, மத பேதங்களுக்கு அப்பால் கொண்டாடியது போன்று 27ம் திகதி ஜனாதிபதியின் அமோக வெற்றியையும் அமைதியாகவும், சந்தோஷத்துடனும் கொண்டாடுமாறும் தெரிவித்தார்.

»»  (மேலும்)