7/31/2010

190 மில்லியன் ருபாய் செலவில் மாவடி ஓடை அணைக்கட்டு.


190 மில்லியன் ருபாய் செலவில் மாவடி ஓடை அணைக்கட்டு.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் நிமல் சிறி பாலடி சில்வா இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு விவசாயப் பிரதேசங்களுக்கு சென்று பார்வையிட்டார். அந்த வகையில் மட்டக்களப்பு  மாவட்ட விவசாயிகள் பல் நெடுங்காலமாக எதிர் நோக்கி வந்த ஒரு பிரச்சினைக்கு இன்று தீர்வு காணப்பட்டது. அதாவது மாவடி ஓடை அணைக்கட்டினை நிரந்தரமாகக் கட்டுவதன் முலம் பல்லாயிரம் ஏக்கர் விவசாயக் காணிகள் செய்கை பண்ணக் கூடியதாக அமைந்திருக்கும். அதனடிப்படையில் இன்று விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சர், கிழக்கு மாகாண முதலமைச்சர், மீள் குடியேற்றப் பிரதி அமைச்சர் முரளிதரன் ஆகியோர் அவ் வணைக்கட்டிற்கான அடிக் கல்லிiனை நட்டு வைத்தார்கள். இது சுமார் 190 மில்லியன் ருபுhய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்து குறிப்பிடத்தக்கது. இதற்கான முதற்கட்ட நிதியாக 100 மில்லியன் ருபாய் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கிpழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாணம் அனைத்து விதமான வழங்களையும் கொண்டமைந்த ஓர் விசேட மாகாணமாகும். விவசாயமும் மீன்பிடியுமே அதிகளவாகக் காப்படுகின்ற இவ் மட்டக்களப்பு மாவட்டத்தமில் நீர் வளம் தமிகவும் அதிகதாகக் காணப்படுகின்றது. ஆனால் இதனை சரியாக நாம் வடிவமைக்கவில்லை ஆதலால் பல்வேறு பிரச்சினைகளை எமது விவசாயப் பெரு மக்கள் எதிர் கொள்கின்றார்கள். அதற்கு அப் போதைய போர்ச் சூழலும் ஓர் காராணமாக அமைந்திருந்தது. ஆனால் தற்போது கிழக்கு மாகாணம் பல்வேறு துறைகளிலும் பல அபிவிருத்திகளைக் கண்டு வரகின்றது. அந்த வகையில் விவசாயத்திலும் பாரிய வளர்ச்pயின எமது மாவட்ம் அடைய வேண்டும் அதற்கு அரசியல் வாதிகள் அதிகாரிகள் அமைனைவருமெ ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.எனவும் குறிப்பிட்டடர்.
அத்தேபாடு விவசாயிகளுக்கான மானியங்கள் உரிய முறையில் வழங்கப்பட வேண்டும் அவர்களுகப்கான நியா வலைத் தன்மை பேணப்பட வேண்டும. அத்தேடு விவசாயிகள் செல் உற்பத்தியின மாத்திரம் கவனத்திற் கொள்ளாது பிற பொருட்களையும் அதாவது தானியங்கள் பழவகைகளையும் உற்பத்தி செய்ய முன்வ ரவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

»»  (மேலும்)

ஆரயம்பதி பொது மக்களின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.

img_2230-copy
மட்டக்களப்பு ஆரையம்பதி மக்கள் இன்று காலைமுதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
காத்தான்குடி நகரசபை தங்களது எல்லைக்குரிய நிலங்களை ஆக்கிமிப்புச்செய்து வருவதைக் கண்டித்தே இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாக உண்ணாவிரதமிருப்போர் தெரிவிக்கின்றனர்.
காத்தான்குடி நகரசபை தமது பிரதேசஇ செயலக எல்லையை நிர்ணயம் செய்து தமது பகுதிக்குரி;ய சவ நிலங்களை ஒப்படைக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று சுமார் 5மணியளவில் உண்ணாவிரதம் நடைபெற்ற இடத்திற்குச் சென்ற கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், நடைபெற்றுக் கொண்டிருந்த ஆர்பாட்டத்தினை முடிவுக்குக் கொண்டுவந்தார். அதாவது ஆரையம்பதி பரதேச சபைத் தவிசாளர் திருமதி மேரி கிருஜ்ணா தலைமையில் இடம் பெற்ற மேற்படி உண்ணாவிரதப் போராட்டத்தில்  முதலமைச்சர் பேசி ஓர் முடிவிற்கு வந்ததனையடுத்து அப் போராட்டம் கைவிடப்பட்டது. முதலமைச்சர் அவர்களே நீராகாரம் வழங்கி அதனை நிறைவு செய்து வைத்தார். இதன் போது முதலமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தன் ஆகியோரிடம் மகஜர் ஒன்றும் கையளித்தார்கள். அம் மகஜரில் பின்வருகின்ற விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.
01. மண்முனை பிரதேச சபைக்குரிய வடக்கு எல்லையினுள் காத்தான்குடி நகர சபை அத்து மீறி நிருவாகம் செய்வது உடன் நிறுத்தப்பட வேண்டும்.
02. மண்முனைப்பற்று பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பகுதியியில் நீதி மன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டதன்படி அரச காணிகளிலுள்ள காத்தான்குடி முஸ்லிம்களும் வேறு பிரதேச முஸ்லிம்களும் உடன் வெளியேற்றப்படவேண்டும். மேலும் இவ்வாறான குடிNயுற்றங்கள் இனிமேலும் இடம்பெறக்கூடாது.
03. கோயில்குளம் பகுதியில் நீர் வினியோகத்திட்டம் அமுல்படுத்தப்படுவதால் பிரதேசத்தில் நீர் வற்றும் நிலை ஏற்படும் இதனால் எமது ஜீவனோபாயமான பயிர்ச்செய்கை அழிவுறும் என்பதால் இச் செயற்றிட்டம் உடனே நிறுத்தப்படவேண்டும்.
04. காங்கேயன் ஓடை வீட்டுத்திட்டம் காங்கேயனோடை மக்களுக்கு அவரவர் வளவினுள்ளேயே கட்டிக்கொடுக்க வேண்டும். பள்ளிவாயல் காணி என்ற பேரில் மாவிலங்குதுறையில் இடம்பெறும் குடிNயுற்றம் உடன் நிறுத்தப்படவேண்டும்.
05. திண்மக்கழிவு சேகரிப்பு இடம் ஒன்று காத்தான்குடி நகரசபையால் எமது பிரதேசத்தில் ஆரம்பிக்க ஏற்பாடாகி வருகின்றது அது உடன் நிறுத்தப்படவேண்டும்.
06. மாவிலங்குதுறையில் பள்ளிவாயல் காணி என்ற பேரில் பரம்பரையாக வாழ்ந்து வரும் தமிழ் மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.
07. தமிழர்களின் பூர்வீக பிரதேசமான ஆரையம்பதியில் கடற்கரைப்பிரதேசத்தினுள் ஆட்சி உறுதிகளையும் போலியான ஆவணங்களையும் வைத்து குடியிருப்புக்களை ஏற்படுத்துவது நிறுத்தப்படவேண்டும்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் இது தொடர்பில் விரைவாக ஓர் குழு அமைத்து வருகின்ற 10நாட்களுக்குள் தீர்வு பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தார். அதன் பின்பே போராட்ம் முடிவுக்கு வந்தது. இது தொடர்பான விசேட கூட்டம் ஒன்று நாளை 3மணியளவில் முதலமைச்சரின் மட்டக்களப்பு வாசஸ்த்தலத்தில் இடம்பெறும் எனவும் அவரது ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. இதில் விடேமான காத்தான்குயினைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற அரசியல் பிரமுகார்கள் மற்றும் முக்கியஸ்த்தார்கள் அதேபோல் ஆரையம்பாதி பரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் ஊர் முக்கியஸ்த்தர்கள் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.


»»  (மேலும்)

பாதுகாப்பு அச்சுறுத்தல் இலங்கையில் இல்லை தனது பிரசைகளுக்கான பிரயாணக் கட்டுப்பாட்டை பிரிட்டன் நீக்கியது

இலங்கையின் வட மாகாணத்தின் நான்கு மாவட்டங்களுக்குச் செல்வ தற்காக பிரிட்டிஷ் பிரஜைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு களை பிரிட்டிஷ் அரசாங்கம் நீக்கியு ள்ளது.
வடக்கில் முல்லைத்தீவு, கிளி நொச்சி, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கு செல்லுவதற்கு பிரிட்டிஷ் தூதரகம் கட்டுப்பாடு களை விதித்திருந்தது.
என்றாலும் வடக்கில் இப்போது பாதுகாப்பான நிலை ஏற்பட்டுள்ளத னால், தனது பிரஜைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுக ளை அகற்றுவதாக பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகரகம் நேற்று அறிவித்தது.
நிலைமைகளை ஆராய்வதற்காக பிரதி பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் மார்க் கூடிங் தலைமையிலான குழு வொன்று அண்மையில் வட பகுதிக்கு விஜயம் செய்திருந்தது. இந்தக் குழுவின் சிபாரிசுக்கமை யவே மேற்படி முடிவு எடுக்கப்ப ட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகக் கருத்துத் தெரி வித்த பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் டொக்டர் பீட்டர் ஹெய்ஸ்;
“இலங்கையின் எந்தப்பகுதிக்கும் செல்ல முடியும். என்றாலும் எஞ்சி யிருக்கும் சில பகுதிகளில் கண்ணி வெடிகள் மற்றும் வெடிபொரு ட்களின் அச்சுறுத்தல்கள் இருக்கி ன்றன. இது குறித்து பிரிட்டிஷ் பிரஜைகள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
எங்கு செல்வதென்றாலும் பாது காப்பு அமைச்சின் அனுமதி பெற வேண்டும்” என்றார்.
ஏற்கனவே, 2009 ஆம் ஆண்டு ஜுலை முதல் கிழக்கு மாகாணம் செல்வதற்கான கட்டுப்பாடுகளை பிரிட்டன் நீக்கியிருந்ததென்பது குறி ப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

7/29/2010

குருவிகள் கூடு கட்டி குரங்கை விருந்துக்கு அழைத்த கதை

             ஒன்பது தமிழ் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் அரங்கம் நேற்று புளொட் அலுவலகத்தில் கூடி ஆராய்ந்தது.தமிழ் தேசியக் கூட்டமைப் பினையும் தமிழ் கட்சிகள் அரங்கத்தில் இணைத்துக் கொள்வதற்காக ஒன்பது கட்சிகளினதும் பிரதிநிதிகள் கையெழுத்திட்ட கடிதமொன்றை கூட்டமைப்புக்கு அனுப்பி வைப்பது குறித்து இச்சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டதாக முன்னாள் எம். பி. சிவாஜிலிங்கம் தெரி வித்தார்.
புளொட் அலுவலகத்தில் நேற்று நண்பகல் ஒரு மணியளவில் ஆரம்பமான இச்சந்திப்பு சுமார் மூன்று மணித்தியாலங்கள் வரை நீடித்தது. உத்தியோக பூர்வமாக கடிதம் அனுப்பி வைப்பது மாத்திரமன்றி கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எம். பி. நாடு திரும்பியதும் தமிழ் கட்சிகள் அரங்கத்தின் முக்கிய பிரதிநிதிகள் அவரை நேரில் சந்தித்து கடிதத்தின் பிரதியொன்றை அவரிடம் நேரடியாக கையளிப்பதற்கு முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.
தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் சிவாஜிலிங்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் ஸ்ரீதரன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சந்திரகாந்தன், ஈழ  ஏதிலிகள்  மறு வாழ்வுக் கழகத்தின் தலைவர் செ. சந்திரஹாசன், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வி. ஆனந்தசங்கரி, ஈ. பி. டி. பி. அமைப்பின் தலைவர் டக்ளஸ் தேவாநந்தா, புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், டெலோ அமைப்பின் தலைவர் உதயராசா ஆகியோர் ஒன்பது பேரும் கையொப்பமிட்ட உத்தியோகபூர்வ கடிதமே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அனுப்பி வைக்கப்பட விருப்பதாகவும் அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் வடக்கு, கிழக்கில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு பொதுவான தீர்வு எடுப்பது குறித்து ஆராயப்பட்டிருப்பதுடன் அடுத்த கூட்டத்தை எதிர்வரும் 14ஆம் திகதி மட்டக்களப்பில் காலை 10 மணிக்கு நடத்துவதெனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது               .நன்றி *மகாவலி
»»  (மேலும்)

7/28/2010

டில்லியில் பர்மிய சர்வாதிகாரி

 
கயாவில் பர்மியத் தலைவர்
கயாவில் பர்மியத் தலைவர்
பர்மாவின் ராணுவ ஆட்சியின் தலைவர் ஜெனரல் ஷ்வே அவர்களுக்கு செவ்வாயன்று இந்தியக் குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு பாரம்பரிய முறைப்படி சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஐந்கு நாள் அரசுமுறைப் பயணமாக வந்துள்ள ஜெனரல் ஷ்வே அவர்கள்
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாக இருந்ததாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனரல் ஷ்வே, மிகச்சில வெளிநாடுகளுக்கே சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், இரண்டாவது முறையாக இந்தியாவு்க்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே 1600 கிலோ மீட்டர் தொலைவு எல்லை உள்ள நிலையில், இந்தியாவின் வடகிழக்கு மாநில எல்லைகளும் பர்மாவை ஒட்டியே உள்ளன.
பர்மாவை மையமாகக் கொண்டு வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை ஒடுக்குவதற்கு பர்மா அரசாங்கம் இந்தியாவுக்கு பெரிய அளவில் ஒத்துழைப்புக் கொடுத்து வருகிறது. அதற்கு ஈடாக, இந்தியாவும் பர்மாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதுடன், பொருளாதார ரீதியாகவும் குறிப்பிடத்தக்க உதவிகளைச் செய்து வருகிறது.
டில்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, பயங்கரவாத அச்சுறுத்தல்களை சமாளிக்க, இருநாட்டுப் பாதுகாப்புப் படையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு உடனடி முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்றும் இரு தலைவர்களும் வலியுறுத்தியதாக கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளிலும் இன்னொரு நாட்டுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை எந்த வகையிலும் அனுமதிப்பதில்லை என்றும் உறுதியளிக்கப்பட்டது.
பொருளாதார ஒத்துழைப்பை தொடர்ந்து முன்னெடுக்கும் வகையில், பர்மாவில் மேம்பாட்டு உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கும் என்று இந்திப் பிரதமர் உறுதியளித்துள்ளார்.
மேலும், தகவல் தொழில்நுட்பம் உள்பட பல்வேறு துறைகளில் இந்தியாவின் ஒத்துழைப்பைக் கோரினார் ஜெனரல் ஷ்வே.
இந்தச் சந்திப்பின்போது, குற்றவியல் நடவடிக்கைகள் தொடர்பில், இரு தரப்பும் பரஸ்பரம் உதவும் வகையிலான ஒப்பந்தம், அறிவியல், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின
»»  (மேலும்)

இலங்கைக்கு சிறப்பு தூதுவரை அனுப்ப மன்மோகன் சிங் முடிவு _

  _    
 
  இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைப்பட்டுள்ள மக்களின் நிலையை நேரில் அறிந்துக்கொள்வதற்காக வெளிவிவகாரத்துறையின் சிரேஷ்ட அதிகாரியொருவரை இலங்கைக்கு அனுப்பவுள்ளதாக இந்திய பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன.

இலங்கை தமிழர் நலன் தொடர்பாக கடந்த 17ஆம் திகதி பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்அமைச்சர் கலைஞர் கருணாநிதி ஒரு கடிதம் எழுதி இருந்தார்.

இந்தக் கடிதத்தில்உண்மையை நிலையைக் கண்டறிவதற்காக விசேட தூதுவர் ஒருவரை அனுப்புமாறு இந்தியப் பிரதமரை தமிழக முதல்வர் கருணாநிதி கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கான பதில் கடிதத்தில் "இலங்கை விவகாரத்தில் இந்திய அரசு காட்டி வரும் ஈடுபாட்டின் தொடர்ச்சியாகவும், இதில் இந்தியா காட்டி வரும் ஆர்வத்தின் காரணமாகவும், இலங்கைக்கு இந்திய வெளிவிவகாரத் துறையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரை அனுப்ப முடிவு செய்துள்ளேன்.

அவர், இலங்கையில் உள்ள இந்திய தூதர் மற்றும் இலங்கை அதிகாரிகளை சந்தித்து இப்பிரச்சினை பற்றி விவாதிப்பார். மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனர்வாழ்வுப் பணிகளையும் நேரில் பார்வையிட்டு திரும்புவார்."

என பிரதமர் மன்மோகன்சிங் இக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. _
»»  (மேலும்)

ஐரோப்பிய யூனியனில் துருக்கியை சேர்ப்பதிலுள்ள தடைகளைக் களைவோம் பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரோன்

துருக்கியை ஐரோப்பிய யூனியனில் சேர்ப்பதிலுள்ள தடைகளை களைய பிரிட்டன் கடுமையாகப் போராடும் என பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரோன் உறுதியளித்தார். துருக்கிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட பிரதமர் டேவிட் கெமரோன் அந்நாட்டு ஜனாதிபதி தையிப் எடோர்கன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களைச் சந்தித்தார்.
மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் துருக்கியின் பொருளாதாரச் செல்வாக்கு காஸா இஸ்ரேல் முரண்பாடுகளைக் களைவதில் துருக்கிக்கு உள்ள அக்கறைகளையும் டேவிட் கெமரோன் பாராட்டினார். ஐரோப்பிய யூனியனில் 27 நாடுகள் உள்ளன. இதில் 28வது நாடாக துருக்கியைச் சேர்த்துகொள்ள பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இறுதியில் அவை தோல்வியில் முடிந்தன.
இதனால் இவ்விடயத்தில் துருக்கி மெதுவான போக்கைக் கடைப்பிடிக்கின்றது. பிரான்ஸ் துருக்கியை ஐரோப்பிய யூனியனில் இணைப்பதை எதிர்க்கின்றது. இவ்வாறான நிலையிலே பிரிட்டன் பிரதமர் இக்கருத்தை வெளியிட்டார். அரசியல் பொருளாதார ரீதியாக துருக்கி ஐரோப்பிய யூனியனுக்கு உதவ முடியும்.
அன்காராவிலிருந்து புருஸெஸ்வரை உறவுப் பாதையை ஏற்படுத்த வேண்டும் இதற்காக பிரிட்டன் இடையறாது பாடுபடும் என்றும் பிரதமர் டேவிட் கெமரோன் குறிப்பிட்டார். ஐரோப்பா நேட்டோ படைகளின் பாதுகாப்புக்கு துருக்கி எதைச் செய்தது? எங்களை விடுத்து (ஐ.யூனியன்) ஆப்கானிஸ்தானில் துருக்கி என்ன செய்கின்றது? இவற்றை எண்ணினால் என்னை ஆத்திரம் கொள்ள வைக்கின்றது. இந்நிலைப்பாட்டில் துருக்கி ஐரோப்பிய யூனியனில் இணைந்தால் அது ஆபத்தை ஏற்படுத்துமென்றார் கெமரோன்.


»»  (மேலும்)

வடக்கு, கிழக்கு புத்திஜீவிகளும் ஆய்வுகளில் ஈடுபடும் சூழல் பயங்கரவாத ஒழிப்பே காரணம் - ஜனாதிபதி

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டிருப்பதன் பயனாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வாழும் புத்திஜீவிகளும் சுதந்திரமாக ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய சூழல் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.
விஞ்ஞான ஆராய்ச்சிக்கான ஜனாதிபதி விருது வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொழில் நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சின் கீழுள்ள தேசிய ஆராய்ச்சி சபை அலரி மாளிகையில் ஒழுங்கு செய்திருந்த இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், விஞ்ஞான ஆராய்ச்சிக்கான ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வுக்கு இந்நாட்டில் உயர்ந்த மதிப்புள்ளது. இதனை யாவரும் அறிவர்.
குறிப்பாக வெளிநாடுகளில் இருந்த இலங்கை ஆராய்ச்சியாளர்களும் இவ்வைபவத்தின் நிமித்தம் இங்கு வருகை தந்திருப்பதாக அறிகிறேன். இது இவ்வைபவத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றது. தாயகத்தின் மீது இவ்வாறு பற்றுக் கொண்டிருப்பவர்களை நாம் பாராட்டியாக வேண்டும். அதேநேரம் ஆய்வுகளை மேற்கொண்டு இன்று கெளரவம் பெறும் சகலருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பாரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். இது அரசியல், பொருளாதாரம், சமூகம் ஆகிய துறைகளில் பாரிய பரிசோதனை என்றால் மிகையாகாது. முதலாவது பரிசோதனையில் நாம் வெற்றி பெற்றுள்ளோம்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வெளிநாட்டிலிருந்து இங்கு வருகை தந்த கல்வியியலாளர் ஒருவர், இப்போது நாட்டின் உண்மையான சுதந்திரம் ஏற்பட்டிருப்பதாகக் கூறினார். இது எமக்கு ஒரு வகையில் பெருமையாகும்.
அறிவை தடைசெய்யவோ, மூழ்கடிக்கவோ முடியாது. இதனை நாமறிவோம். சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை சிறந்த முறையில் உணர்ந்தவர்கள் ஆராய்ச்சியாளர்கள் தான் என நான் நம்புகிறேன். அறிவுத்துறையின் மேம்பாட்டுக்காக ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் அவற்றை சுதந்திரமாக வெளியிடுவதற்கும் உரிமை இருப்பது அவசியம் எனக் கருதுகின்றேன். இதற்கு இப்போது எமக்கு சுதந்திர சூழல் கிடைக்கப் பெற்றிருக்கின்றது.
சுதந்திர இலங்கை மீது நாம் பாரிய எதிர்பார்ப்பை வைத்திருக்கின்றோம். அதனை நிறைவேற்ற வேண்டியது பெரும் பொறுப்பாகும். சுதந்திர இலங்கையைக் கட்டியெழுப்பிய பின்னர் இந்நாட்டில் பிறக்கும் விஞ்ஞானிகளுக்கு பாரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.
சில ஆராய்ச்சிகளை நடத்துவதற்காக இருந்த நிறுவனங்கள் இப்போது ஆஸ்பத்திரிகளுக்கு அறிக்கைகள் வழங்கும் நிறுவனங்களாக மாறியுள்ளன. இருப்பினும் அந்நிறுவனங்கள் பாரிய எதிர்பார்ப்புக்களுடனேயே ஆரம்பிக்கப்பட்டன. இந்நிலைமை குறித்து நாம் மீள் பரிசீலனை செய்ய வேண்டியவர்களாக உள்ளோம் என்றார்.
இந்நிகழ்வில் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பிரதியமைச்சர் லலித் திஸாநாயக்க, தேசிய ஆராய்ச்சி சபைத் தலைவர் பேராசிரியர் எரிக்கருநாயக்கா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.


»»  (மேலும்)

வடக்கு மீள் குடியேற்ற நிலவரங்களை கண்டறிதல்: இந்திய பிரதிநிதிகளின் வருகைக்கு இலங்கை அரசாங்கம் வரவேற்பு

வடக்கில் மக்களின் மீள் குடியேற்ற நிலவரங்களைக் கண்டறிந்துகொள்வதற்காக இந்தியப் பிரதிநிதிகள் இலங்கை வருவதை அரசாங்கம் வரவேற்றுள்ளது.
இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் பிரதிநிதியொருவரை அனுப்பி வைத்தால், அது நல்லதொரு விடயமாகுமென்று பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் அமைச்சரவை பேச்சாளரான தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
‘‘இலங்கை விடயத்தில் இந்தியா நிதானமாகவே செயற்படும். பருப்பை போடுவதைப்போல் பலவந்தமாக செயற்படாது. இரு நாடுகளுக்குமான உறவு அந்தளவுக்குச் சிறப்பாக உள்ளது” என்றும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று (27) காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் கூறினார்.
இந்திய மத்திய அமைச்சின் அதிகாரி யொருவரை இலங்கைக்கு அனுப்பி வைப்பதாகத் தமிழக முதல்வருக்குப் பிரதமர் மன்மோகன் அறிவித்திருக் கிறாரென்றும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதியைச் சந்தித்துள்ளமை பற்றியும் அரசின் கருத்து யாதென செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதில் அளித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் இந்தியா சென்றிருந்தபோது அந்தக் குழுவில் நானும் இடம்பெற்றிருந்தேன். ஆளுங்கட்சி, எதிர்க் கட்சி உறுப்பினர்களையும் சந்தித்தோம். அப்போது தமிழ் நாட்டைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரையும் சந்தித்தோம். அவர்களை, இலங்கைக்கு வந்து நிலைமைகளை நேரில் கண்டறியுமாறு ஜனாதிபதி பகிரங்க அழைப்பு விடுத்தார். அதில் அரசியல் நோக்கம் கிடையாது. ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் விடுத்த அழைப்பு அரசியல் நோக்கம் கொண்டது” என்றார்.
»»  (மேலும்)

7/27/2010

முதலமைச்சர் தலைமையில் வாகரைப்பிரதேசத்தில் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.

ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்டத்திலே இடம்பெற்று வருகின்றது.
இன்று (26.07.2010) கோரளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் மேற்படி பிரதேசத்திற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் விசேடமாக இங்கு ஏற்பட்டிருக்கின்ற அபிவிருத்தி திட்டங்கள் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கின்ற அமைப்புக்கள் மற்றும் மாகாண சபையில் எவ்வாறான அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது. அரசினால் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படுகின்ற திட்டங்கள் அத்தோடு எதிர்வரும் ஆண்டில் வாகரைப்பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட இருக்கின்ற அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
img_1609
img_1617
img_1621
»»  (மேலும்)

வாகரைப்பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை இருந்த இடத்தினை முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பார்வையிட்டார்

நேற்று வாகரைப்பிரதேசத்தில் மிகப் பழமைவாய்ந்த புராதன காலத்து அம்மன் சிலை ஒன்று மலையடிவாரத்தில் கண்டெடுக்கப்பட்டது. அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு இன்று நேரில் சென்ற கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவ்விடத்தினை நேரில் சென்று பார்வையிட்டார்.
வாகரைப்பரதேசத்தில் கண்டு பிடிக்கப்பட்ட அம்மன் சிலை வாகரை பொலிசார் திங்கட்கிழமை (26.7.2010) வாழைச்சேனை நீதிமன்றத்தில் நீதிபதியின் தீர்ப்புக்காக ஒப்படைத்துள்ளனர். வாகரைப்பிரதேசத்திலுள்ள கதிரவெளி எனுமிடத்திலிருந்து 4கிலோ மீற்றர் தொலைவிலுள்ள மலைபயடி வாரத்தில் அம்மன் சிலை ஒன்று இருப்பதை கண்ட நபரொருவர் பொது மக்களுக்கு அறிவித்துள்ளார்.
இதையடுத்து வாகரைப்பிரதேச செயலாளாருக்கு இது தொடர்பாக அறிவிக்கப்பட்டதையடுத்து வாகரை பிரதேச செயலாளர் செல்வி எஸ்.ராகுலநாயகி மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் பொலி;ஸ் அதிகாரிகள் இந்த இடத்திற்கு ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்துள்ளனர். இங்கு இவர்கள் சென்று பார்த்த போது இங்கு ஒரு அடி நீளமான பித்தாளயிளான அம்மன் சிலை ஒன்று இருப்பதை கண்டுள்ளனர்..
இந்த அம்மன் சிலை தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் தொல் பொருள் ஆய்வுக்குட்படுத்த வேண்டுமெனவும் இதை தொல் பொருள் பாதுகாக்கப்பட்ட பிரதேச மாக அறிவிக்க வேண்டு மெனவும் தெரிவித்த போது பொது மக்களுக்கும் தொல் பொருள் ஆராய்ச்சி அதிகாரிகளுக்கும் இழு பறி நிலை ஏற்ப்பட்டது..
இதையடுத்து நீதிமன்ற நடவடிக்கை;காக பொலிசாரிடம் இந்த அம்மன் சிலையை வாழைச்சேனை நீதிமன்றத்தில் பொலிசார் உப்படைத்தனர். இந்துக்களுக்கு சொந்தமான இந்த அம்மன் சிலை காணப்பட்டபிரதேசம் வணக்க வழிபாட்டு பிரதேச மாக அறிவிக்க வேண்டு மெனவும் இதை பொது மக்களிடம் ஒப்படைக்க வேண்டு மெனவும் அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.
img_1655
img_1658
img_1659
»»  (மேலும்)

வெனிசூலா மீதான அச்சுறுத்தல் தொடர்ந்தால் அமெரிக்காவுக்கான எண்ணெய் விநியோகம் துண்டிக்கப்படும் - ஜனாதிபதி சாவெஸ்

வெனிசூலாவை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டால் அமெரிக்காவுக்கான எண்ணெய் விநியோகத்தை துண்டிப்போம். இதனால் நாங்கள் கல்லைச்சாப்பிடக் கூடிய நிலையேற்பட்டாலும் அதை எதிர்கொள்ளத்தயாரென வெனிசூலா ஜனாதிபதி ஹுசோ சாவெஸ் தெரிவித்தார். கொலம்பியாவுடனான இராஜதந்திர உறவுகளை கடந்த வாரம் துண்டித்துக் கொண்ட பின்னர் சாவெஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை இதை அறிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு எச்சரிக்கையை அமெரிக்காவுக்கெதிராக வெனிசூலா ஒருபோதும் விடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொலம்பியாவின் பதவி விலகிச் செல்லும் ஜனாதிபதி அல்வரோயுரைப் அண்மையில் வெனிசூலாவைக் கடுமையாகக் குற்றம் சாட்டினார். கொலம்பியாவின் பார்க் போராளிகளை வெனிசூலா வளர்ப்பதாகவும் கொலம்பியாவுக்கெதிராக வன்முறைகளைத் தூண்டுவதாகவும் அல்வரோயுரைப் குற்றம் சாட்டினார்.
இதை நிராகரித்த வெனிசூலா ஜனாதிபதி சாவெஸ், அமெரிக்காவே இவ்வாறான வீண் சந்தேகங்களை பிராந்திய நாடுகளுக்கிடையில் உண்டு பண்ணுகின்றது. வெனிசூலாவு க்கெதிரான தாக்குதல்கள், சமூகப் புரட்சிகள்.
கொலம்பியாவிலோ அல்லது உலகின் எந்த மூலையிலுமோ நடந்தாலும் அமெரிக்காவுக்கான எண்ணெய் விநியோகம் துண்டிக்கப்படுமென்றும் வெனிசூலா ஜனாதிபதி சொன்னார்.
»»  (மேலும்)

கி.மா விளையாட்டு போட்டி: திருகோணமலை முதலிடம்

-கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் 176 புள்ளிகளைப்பெற்று 54தங்கப்பதக்கம்,39வெள்ளிப்பதக்கம் 30வெங்கலப்பதக்கங்களுடன் திருகோணமலை மாவட்டம்முதலாமிடத்தினை பெற்றுள்ளது.

இரண்டாமிடத்தினை 167புள்ளிகளைப்பெற்று 38 தங்கப்பதக்கம் 39வெள்ளி 20வெங்கலப்பதக்கங்களுடன் மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாமிடத்தினையும் அம்பாறை மாவட்டம் 72புள்ளிகளைப்பெற்று 28தங்கம்36வெள்ளி37வெங்கலப்பதக்கங்களுடன் மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டது.

கிழக்கு மாகாண விளையாட்டு விழா மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் சனிக்கிழமை (24.7.2010)ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை (25.7.2010) மாலை நிறைவு பெற்றது.இவ்விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாண ஆளுனர் உட்பட மாகாண அமைச்சர்கள் மற்றும் அதிதிகள் கலந்து கொண்டனர்.
,

»»  (மேலும்)

மட்டக்களப்பில் கடும் காற்று: மீன்வர்கள் தொழிலுக்கு செல்வது சிரமம்

 
 
  மட்டக்களப்பு மாவட்டத்தில் இரவு பகல் நேரங்களில் கடுமையான காற்று வீசி வருவதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச்செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

இதன்காரணமாக மட்டக்களப்பு சந்தைகளில் மீனின் விலை மிகவும் உயர்வடைந்து காணப்படுகின்றது.அதிகமான படகுகளும் தோணிகளும் கடலுக்குச்செல்லாமையால் கடற்கரை ஓரங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதை அவதானிக்கமுடிகின்றது. ___
»»  (மேலும்)

கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் தலைமையில் சஞ்சிகை வெளியீடு

  கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களினால் வெளிடப்படும் 'மூச்சு" சஞ்சிகை பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ். பிரேம்குமார் தலைமையில் நேற்று மாலை வெளியிடப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சபா மண்டபத்தில் நடைபெற்ற இவ் வைபவத்தில் சஞ்சிகை வெளியீட்டு வைக்கப்பட்டதுடன் விமர்சன உரையும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவத்துறை பீடாதிபதி டாக்டர் கே.கருணாகரன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர். கே.முருகானந்தம், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். __
»»  (மேலும்)

வாகரையில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை நீதிமன்றத்தில் ஒப்படைப்புவாகரைப்  பிரதேசத்தில் கண்டு பிடிக்கப்பட்ட அம்மன் சிலையை வாகரை பொலிசார் திங்கட்கிழமை (26.7.2010) வாழைச்சேனை நீதிமன்றத்தில் நீதிபதியின் தீர்ப்புக்காக ஒப்படைத்துள்ளனர். வாகரைப்பிரதேசத்திலுள்ள கதிரவெளி எனுமிடத்திலிருந்து 4கிலோ மீற்றர் தொலைவிலுள்ள மலைபயடி வாரத்தில் அம்மன் சிலை ஒன்று இருப்பதை கண்ட நபரொருவர் பொது மக்களுக்கு அறிவித்துள்ளார்.

இதையடுத்து வாகரைப்பிரதேச செயலாளாருக்கு இது தொடர்பாக அறிவிக்கப்பட்டதையடுத்து வாகரை பிரதேச செயலாளர் செல்வி எஸ்.ராகுலநாயகி மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் பொலி;ஸ் அதிகாரிகள் இந்த இடத்திற்கு ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்துள்ளனர். இங்கு இவர்கள் சென்று பார்த்த போது இங்கு ஒரு அடி நீளமான பித்தாளயிளான அம்மன் சிலை ஒன்று இருப்பதை கண்டுள்ளனர்..

இந்த அம்மன் சிலை தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் தொல் பொருள் ஆய்வுக்குட்படுத்த வேண்டுமெனவும் இதை தொல் பொருள் பாதுகாக்கப்பட்ட பிரதேச மாக அறிவிக்க வேண்டு மெனவும் தெரிவித்த போது பொது மக்களுக்கும் தொல் பொருள் ஆராய்ச்சி அதிகாரிகளுக்கும் இழு பறி நிலை ஏற்ப்பட்டது..

இதையடுத்து நீதிமன்ற நடவடிக்கை;காக பொலிசாரிடம் இந்த அம்மன் சிலையை வாழைச்சேனை நீதிமன்றத்தில் பொலிசார் உப்படைத்தனர். இந்துக்களுக்கு சொந்தமான இந்த அம்மன் சிலை காணப்பட்டபிரதேசம் வணக்க வழிபாட்டு பிரதேச மாக அறிவிக்க வேண்டு மெனவும் இதை பொது மக்களிடம் ஒப்படைக்க வேண்டு மெனவும் அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.


___ E-mail to a friend 
»»  (மேலும்)

7/26/2010

தாந்தா முருகன் ஆலயத்தின் அன்னதான நிகழ்வினை முதலமைச்சர் சந்திரகாந்தன் ஆரம்பித்து வைத்தார்.

 
img_1362
கிழக்கிலங்கையில் மிகப் பிரசித்தி பெற்ற  தாந்தா முருகன் ஆலயத்தின் உற்சபம்  தற்போது நடை பெற்று வருகின்றது. இன்று இவ் ஆலயத்திற்குச்  சென்ற கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அங்கு நடைபெற்ற அன்னதான நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.  அன்னதான நிகழ்வில் கலந்து சிறப்பித்ததோடு, ஆலயத்தின் தீர்த்தக் கேணி புணர்நிர்மாணம் தொடர்பாகவும் ஆலயப் பரிபாலன சபையோடு கலந்துரையாடினார். அது மாத்திரமன்றி குடிநீர்ப் பரச்சினை தொடர்பாகவும் ஆராயப்பட்டது. எதிர்வருகின்ற உற்சப காலங்களில் முற்று முழுதாக இப் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் முதலமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்தார்.

»»  (மேலும்)

கிழக்கு மாகாண விளையாட்டு விழா நேற்று நிறைவு

கிழக்கு மாகாண விளையாட்டு விழா நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் ஆரம்பமாகி நேற்று ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது.
கிழக்கு மாகாண சுகாதார விளையாட்டுத் துறை அமைச்சர் எம். எஸ். சுபைர் விளையாட்டு விழாவை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, மாகாண சுகாதார விளையாட்டுத் துறை அமைச்சின் செயலளார் யு. எல். ஏ. அkஸ், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. விமலநாதன், மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான யு. எல். எம். என் முபீன் பூ. பிரசாந்தன், மாகாண விளையாட்டுத் திணைக்கள பணிப் பாளர் ஜஸ்ட்டின் பெரேரா, மற்றும் விளையாட்டுத் திணைக்கள அதிகாரிகள் இதன் ஆரம்ப வைபவத்தில் கலந்துகொண்டனர்
»»  (மேலும்)

வடக்கில் கைவிடப்பட்ட நிலங்களில் நெற்செய்கை: அடுத்த மாதம் ஏர்பூட்டு விழா

வடக்கில் கைவிடப்பட்ட வயல் நிலங்களில் நெற்பயிர்ச் செய்கையினை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கான ஏர்பூட்டு விழா அடுத்த மாதம் நடுப்பகுதியளவில் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தலைமையில் நடைபெறவுள்ளது.
முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் பெரும் வயல் நிலங்கள் நீண்டகாலமாக பயிர்ச் செய்கைக்கு உட்படுத்தப்படாமல் கைவிடப்பட்ட நிலையிலேயே உள்ளன. இந்நிலங்களில் மீண்டும் நெல் விளைச்சலை ஆரம்பிக்க வேண்டுமென்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
புதர்களாக காட்சியளிக்கும் மேற்படி வயல் நிலங்களை சுத்திகரித்து பயிர்ச் செய்கைக்கு ஏற்ற விதத்தில் தயார்படுத்து வதற்கு பெரும் எண்ணிக்கையான ட்ரக்டர் வண்டிகள் தேவைப்படு கின்றன.
தற்போது தேவையான ட்ரக்டர் வண்டிகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக எருதுக ளின் உதவியுடன் ஏர் பூட்டும் பழைமை யான முறையினை பின்பற்றி அவற்றை விளைச்சலுக்கு உகந்த நிலங்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதென ஆளுநர் கூறினார்.
»»  (மேலும்)

1983 இற்குப் பின்னர் இந்த முறைதான் ஆடிவேல் விழா முழுமையான ஓர் அமைதிச் சூழலில்

ஆடிவேல் ஓர் ஐக்கிய விழர் இன ஐக்கியத்துக்கு புதுத்தெம்பு'

தமிழ்ப் புத்திஜீவிகள், அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள், மதப்பெரியார்கள் கருத்து


கொழும்பில் ஆடிவேல் விழாவை சுதந்திரமாக நடத்தக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளமையானது, இனப்பிரச்சினைக்கு நியாயமான ஓர் அரசியல் தீர்வைக் காண முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளதாக தமிழ் புத்திஜீவிகள், கல்விமான்கள் மற்றும் மதப்பெரியார்கள் கருத்துத் தெரிவித்தனர்.
ஆடிவேல் விழாவை ஓர் ஐக்கியமான விழாவாக அனைவரும் ஏற்றுக்கொண்டு ள்ளமை இனங்களுக்கிடையே புதுத்தெம்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் சாதாரண மக்கள் இந்தச் சூழலை வரவேற்பதாகவும் அவர் கூறினார்.
இந்தச் சாதகமான சூழலைக் கட்டியெழுப் புவதற்கு அனைவரும் முன்வர வேண்டுமென்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்து கலாசார முன்னாள் அமைச்சரான பீ.பீ. தேவராஜ் கருத்துத் தெரிவிக்கையில், “ஆடிவேல் விழாவை இயல்பாகவே ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
முன்பு நான் அமைச்சராக இருந்தபோது அதிகாரிகளிடம் அனுமதி பெறுவதற்காக அலைக்கழிந்திருக்கிறேன். இன்று அவ்வாறு இல்லாமல் அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைத்திருக்கிறார்கள்.
நாட்டில் சுதந்திரமான ஒருசூழல் ஏற்பட்டுள்ளதென்பதையும், இனப்பிரச்சினைக்கா¡ன தீர்வொன்றைக் கண்டுவிடலாம் என்ற நம்பிக்கையும் தோன்றியிருக்கிறது. இதனை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.
யுத்தம் நிலவிய காலப் பகுதியில் அதன் தாக்கமும் பதற்றமும் கொழும்பு மற்றும் மலையகப் பகுதிகளில் நிலவுவது வழக்கம். அந்தச் சூழல் இல்லாது போயுள்ளமை ஆரோக்கியமானது” என்றும் குறிப்பிட்டார்.
கு. கணபதிப்பிள்ளை - கல்வியாளர்
“இந்து, பெளத்த மக்களின் ஐக்கிய விழாவினை சுதந்திரமாக நடத்தக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் சுமுகமான நிலை உருவாகிவிட்டது என்பதை ஆடிவேல் விழா பறைசாற்றியிருக்கிறது. பாதுகாப்பு கெடுபிடிகள் இல்லாமல் ஆலய நிர்வாகத்தினரே சுதந்திரமாகச் செய்ய முடிந்துள்ளமை 1983 இற்கு முன்னைய காலகட்டத்தை நினைவுகூர்ந்துள்ளது.
ஆடிவேல் ரதத்தின் முன் கலை, கலாசார கோலங்களுடன் மக்கள் மகிழ்ச்சிப் பரவசத்துடன் செல்வது நாட்டில் இனி நிம்மதிப் பெருமூச்சு விடலாம் என்பதை வெளிப்படுத்தியி ருக்கிறது. கதிர்காம உற்சவ காலம் மூவினங்களையும் இணைக்கும் ஓர் எழுச்சிக் காலம். வடக்கு, கிழக்கு மக்கள் கால்நடையாக யாத்திரை செல்வார்கள். ஆனால் கடந்த 25 வருடகாலமாக காட்டு வழியாக நடந்து செல்வதைத் தவிர்த்திருந்தார்கள்.
நேற்றைய கதிர்காம உற்சவத்தில் இலட்சக்கணக்கான தமிழர்கள் வடக்கு, கிழக்குப் பகுதிகளிலிருந்து கலந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இது ஓர் உண்மையான அமைதிச் சூழலையே புலப்படுத்துகிறது.
வீ.ஏ. திருஞானசுந்தரம் - மூத்த ஒலிபரப்பாளர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஆலோசகர்,
“1983 இற்குப் பின்னர் இந்த முறைதான் ஆடிவேல் விழா முழுமையான ஓர் அமைதிச் சூழலில் நடைபெறுகிறது. சிங்கள மக்கள் பக்திச் சிந்தனை உடையவர்கள். ஆனால் நாட்டில் நிலவிய பயங்கரவாதப் பிரச்சினையால், எதிர்க் கட்சிகளும், விஷமிகளும் சீர்குலைப்புச் செயல்களில் ஈடுபடலாம் என்ற ஒரு சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் நிலவியது. அதனால்தான் 1983 இற்குப் பின்னர் ஆடிவேல் விழா அவ்வளவாக சோபிக்கவில்லை. இப்போது அந்தச் சந்தேகம் நீங்கிவிட்டது. பயங்கரவாதத்தை வெற்றிகொண்டதன் விளைவாகத்தான் இது சாத்தியமாகியிருக்கிறது.
இவ்வாறு இதுபோன்ற விழாக்களை மக்களாகவே செய்து கொண்டு செல்வதற்கான நிலை இருக்குமானால் நாடு முழுவதும் தொடர்ந்தும் பேணப்படுமானால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெற்ற வெற்றிக்கு ஓர் அளவுகோலாக அமையும். பத்திரிகைகள் என்னதான் விமர்சனங்களை முன்வைத்தாலும் யதார்த்த நிலை நின்று நோக்குமிடத்து நாட்டில் நிரந்தர அமைதிக்கான அடித்தளம் உறுதியாகி விட்டது என்பதை உணர முடியும்.”
ஆளுநர் அலவி மெளலானா
இந்த ஆடிவேல் விழாவில் கலந்து கொள்ளுமாறு எனக்கு அழைப்பு விடுக்க வந்திருந்த கொழும்பு, சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய அறங்காவலர்கள், மீண்டும் 16 வருடங்களுக்குப்பின் சீராகவும் சிறப்பாகவும் இந்த வருடம் ஆடிவேல் விழா நடக்கவிருப்பதாகவும் இதில் தவறாது கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்தனர்.
நானும் அஸ்வர் எம்.பீயும் ஜனாதிபதியுடன் அலரி மாளிகையில் இருந்து இந்த விழாவில் கலந்து கொண்டோம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை வெற்றி கொண்ட போது இந்த நாட்டில் இனி சிறுபான்மையினர் என்று யாரும் இல்லை. அனைவரும் “இலங்கையர்” என்று குறிப்பிட்டார்.
இந்தத் தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட போதும் ஜனாதிபதி இந்தக் கூற்றை நினைவு கூர்ந்து கூறியது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி அன்று கூறியது போல் சிறுபான்மையினர் என்று வேறுபாடில்லாமல் இதில் கலந்து கொண்டு வழிபாடு செய்தது சிறப்பிற்குரியது.
சர்வதேச இந்துமத பீடச் செயலாளரும் ஜனாதிபதியின் இந்து மத விவகார ஆலோசகருமான பிரம்ம ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா.
கதிர்காம கந்தப் பெருமானின் வருடாந்த உற்சவத்தையொட்டி கொழும்பில் வருடாந்தம் மிகவும் பக்திபூர்வமாக ஆடிவேல் விழா நடத்தப்படுவது வழக்கமாகும்.
கடந்த 30 வருடங்களாக நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக இந்த ஆடிவேல் விழாவை சீராகவும் சிறப்பாகவும் நடத்த முடியாத சூழ்நிலை இருந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட தீவிர முயற்சியின் காரணமாக தலைநகரில் இந்த வருடம் இந்த விழாவை நடத்தக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ தம்பதியினர் அலரி மாளிகையில் நிறைகுடம், கும்பம் வைத்து எம்பெருமானை பக்தி பூர்வமாக வரவேற்று ஆசிபெற்றதை காணக்கூடியதாக இருந்தது.
ஆலய கிரியைகள், சடங்குகள் அனைத்தும் நாடு வளம் பெறவும் அமைதி பெறவும் நடத்தப்படுவதால், இந்த ஆடிவேல் விழா நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த வழிவகுக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
இவ்வாறான விழாக்களை நடத்தும் போது போக்குவரத்து கெடுபிடிகள் போன்ற சிற்சில இடையூறுகள் ஏற்படலாம். இவற்றை சகித்துக் கொண்டு சிறப்பாக நடத்தினால் பொருளாதார ரீதியிலும் நாடு வளம் பெறுவது உறுதியாகும்.

»»  (மேலும்)

7/25/2010

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய மது விற்பனை நிலையங்களுக்கு தடை -

img_1242
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நேற்று இடம்பெற்றது. இவ் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின்போது பல்வேறு முடிவுகள் அபிவிருத்திக்குழு சார்பாக ஏற்படுத்தப்பட்டது. பலநேக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் ஊடாக அரசியின் விலை குறைப்பு மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய மது விற்பனை நிலையங்களுக்கான அனுமதிப்பத்திர மறுப்பு போன்ற முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது. இவ் அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதிதுத்துவப்படுத்துகின்ற அரசியல்வாதிகள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
img_1222
»»  (மேலும்)

கிழக்கு மாகாண விளையாட்டு: அக்கரைப்பற்று வலயத்திற்கு 41 பதக்கம்

கிழக்கு மாகாண பாடசாலைகளுக் கிடையிலான விளையாட்டுப் போட்டியில் அக்கரைப்பற்று கல்வி வலயம் 41 பதக்கங்களை பெற்றுள்ளது என அக்கரைப்பற்று கல்விப் பணிப்பாளர் யூ. எல். எம். ஹாkம் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை முஸ்லிம் மகா வித்தியாலயம் 26 தங்கம், 06 வெள்ளி, 04 வெண்கலப் பதக்கங்களையும், பொத்துவில் மத்திய மகா வித்தியாலயம் 02 தங்கம், 01 வெள்ளி, அல்-கலாம் வித் 01 வெண்கலம், அக்கரைப்பற்று முஸ்லிம் ம.வி. 01 வெண்கலப் பதக்கங்களையும் பெற்று அக்கரைப்பற்று வலயத்திற்கு பெருமை சேர்த்துள்ளன.
இவ்வலயத்தைச் சேர்ந்த ஒலுவில் அல்- ஹம்றா ம.வ. பாலமுனை மின்ஹாஜ் ம.வி. மாணவர்கள் தேசிய மட்டப் போட்டிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
»»  (மேலும்)

7/23/2010

தமிழ் செம் மொழி விழாவில் விபுலானந்த அடிகளாரின் சிறப்பையும் தமிழ்மொழியின் மேன்மையையும்விட தமிழ், முஸ் லிம் இன ஐக்கியமே மேலோங்கியிருந்தது.


மனவடுக்களை போக்கும் மனமாற்றம்


‘அனைத்தையும் மாற்றும் வல்லமை படைத்தது காலம்’ என்ற கூற்றில் உண்மையுண்டு.
காட்சிகளை மட்டுமன்றி மனங்களையும் மாற்றக் கூடியது காலம். எமது நாட்டில் மூன்று தசாப்த காலத்துக்கு மேலாகத் தொடர்ந்து வந்த கொடிய யுத்தத்தினால் உண்டான மனவடுக்களையும் மாற்றக் கூடிய வல்லமை கொண்டது காலம்.
கொடிய யுத்தமானது இங்குள்ள பல்வேறு இன மக்கள் மனங்களிலும் பதித்திருந்த காயங்கள் படிப்படியாக ஆறி வருவதை இப்போது நாம் உணரத் தொடங்கியுள்ளோம்.
ழக்கிலும் வடக்கிலும் தமிழ், முஸ்லிம் மக்களிடையே மீண்டும் துளிர் விடத் தொடங்கியுள்ள ஐக்கியமும் தென்பகுதியில் தமிழ், சிங்கள மக்களிடையே மீண்டும் உருவாகியுள்ள நட்புறவும் மனவடுக்கள் குணமடைந்து வருவதற்கான அடையாளங்களாகும்.
இரு இனங்கள் ஒன்று சேர்ந்து நடத்துகின்ற விழாக்களின் போது நாம் இன ஐக்கியத்தைக் காண்கிறோம். காரைதீவில் சில தினங்களுக்கு முன்னர் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து கோலாகலமாக நடத்திய தமிழ் செம் மொழி விழாவில் விபுலானந்த அடிகளாரின் சிறப்பையும் தமிழ்மொழியின் மேன்மையையும்விட தமிழ், முஸ் லிம் இன ஐக்கியமே மேலோங்கியிருந்ததெனலாம்.
இது போன்று கதிர்காமம் உற்சவத்துக்காக இம்முறை யாத்திரை சென்ற பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பக்தர்களை தென்னிலங்கையிலுள்ள சிங்கள மக்கள் உபசரித்துப் போஷித்த விதமும் இன ஐக்கியம் மேம் பட்டு வருவதற்கான அடையாளமாகவே தெரிகிறது. நயினாதீவு நாக பூஷணியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்துக்காக தென்னிலங்கை யிலிருந்து இம்முறை பெருமளவில் சென்ற சிங்கள மக்களும் அங் குள்ள தமிழ் மக்களால் இவ்வாறே உபசரிக்கப்பட்டனர்.
வேற்றுமையினால் விளையும் நன்மை எதுவுமேயில்லையென்ற யதா ர்த்தத்தை நீண்ட கால யுத்தம் எமது மக்களுக்கு நிதர்சனமாகப் புரிய வைத்துள்ளது. கொடிய யுத்தமானது இலங்கையில் தனியொரு தர ப்பு மக்களை மாத்திரமே பாதித்துள்ளதென்று ஒரு போதும் கூற முடியாது.
யுத்தப் பாதிப்பின் தழும்புகள் எமது நாட்டில் ஒவ்வொரு இனத்தின் மீதும் பதிந்துள்ளன. முப்பது வருடத்துக்கு மேலாக நாம் அனைவரும் அனுபவித்த அவலத்தை கருத்தில் கொள்ளும் போது, எவரையும் நோவதால் இனிமேல் கிடைக்கப் போகும் நன்மை எதுவுமேயில்லை என்பதே நிஜம்.
யுத்தம் ஓய்ந்து போன ஒரு வருட காலப் பகுதியில் நம்மவர்கள் மத் தியில் ஏற்பட்டுள்ள மனமாற்றமானது உண்மையிலேயே மகிழ்ச்சி தருகிறது. இத்தகைய மனமாற்றம் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளதென்பதே ஆறுதல் தருகின்ற விடயம்.
ஐரோப்பிய நாடுகளில் வாழ்கின்ற புலம்பெயர் இலங்கைத் தமிழர்க ளைப் புறந்தள்ளி வைத்து விட்டு எமது நாட்டின் கடந்த கால யுத் தத்தின் பின்புலத்தை ஆராய்ந்து பார்ப்பது பொருத்தமானதல்ல... அதேசமயம் இலங்கையில் ஐக்கியமும் அமைதியும் நிலவுவதன் மூலமே இங்குள்ள சகல இன மக்களும் நிம்மதியுடன் வாழலாமெ ன்ற மனமாற்றம் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் தோன்றியிருக் கும் இத்தருணத்தில் யுத்தத்தின் பின்புலக் காரணிகளை அலசி ஆராய்வது ஆரோக்கியமானதுமல்ல.
மனமாற்றத்தின் மூலம் மனவடுக்கள் நீங்குவதே இலங்கையின் ஐக்கிய த்துக்கான அடிப்படை அம்சமென்பதை அனைவரும் உணருவதே இங்கு முக்கியமாகும். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக் குப் பொறுப்பான உதவி ராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் கூறியிருந்த விடயமொன்றும் எமது கருத்துக்கு இசைவான தாகவே உள்ளது.
புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் தற்போது மனமாற்றம் ஏற் பட்டுள்ளதாக ரொபேர்ட் ஓ பிளேக் கூறுகிறார். இலங்கையில் தற் போது இடம்பெற்று வரும் பொருளாதார அபிவிருத்தி, மீள்கட்ட மைப்பு மற்றும் மீள் இணக்க நடவடிக்கைகளில் பங்கேற்க புலம்பெ யர் தமிழர்கள் விரும்புவதாகவும் ரொபேர்ட் ஓ பிளேக் தெரிவித் திருக்கிறார்.
மனமாற்றத்தின் வெளிப்பாடாகவே இதனைக் கொள்ள வேண்டும். புல ம்பெயர் தமிழர்களின் இம்மனமாற்றத்தின் வெளிப்பாடானது இலங் கையின் அபிவிருத்திக்குப் பங்களிப்பு வழங்குமாக இருந்தால் அதனை வரப்பிரசாதமென்றே கருத வேண்டும். வடக்கு, கிழக்கு உட்பட நாடெங்கும் பொருளாதார அபிவிருத்திக்கான முதலீடுகள் அதிகளவில் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்பதே அரசாங்கத்தின் விருப்பமாகும். யுத்தத்தின் விளைவினால் பொருளாதாரப் பின்ன டைவு காணப்பட்ட எமது நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தொழில் முயற்சிக்கான முதலீடுகளே அவசியமாகின்றன.
புலம்பெயர் தமிழர்களைப் பொறுத்தவரை இதுவொரு வாய்ப்பான சூழ் நிலையாகும். அவர்களது முதலீடுகள் தனிமனித நலனுக்கான முய ற்சியாக மட்டும் இருக்கப் போவதில்லை. எமது நாட்டின் பொரு ளாதாரத்தையும் ஐக்கியத்தையும் கட்டியெழுப்ப உதவுமென்பதிலும் சந்தேகமில்லை            .thnakaran
»»  (மேலும்)

ஆப்கானிலுள்ள நேட்டோப் படைகளை நான்கு வருடங்களுக்குள் வாபஸ் பெற தீர்மானம் மக்கள் மத்தியில் தலீபான்கள் செல்வாக்கை மழுங்கடிக்கவும் மாநாட்டில் யோசனை

ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு இருக்கும் சர்வதேச இராணுவம் 2014ம் ஆண்டு வெளியேறும் என்றும், அதன் பிறகு அந்த நாட்டின் பாதுகாப்பை அந்த நாட்டு அரசாங்கமே ஏற்றுக்கொள்வது என்றும் காபூல் நகரில் நடந்த உலகத் தலைவர்கள் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருந்த பின்லேடனை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அமெரிக்கா கேட்டது. இதற்கு அந்த நாட்டில் ஆட்சி நடத்தி வந்த தலீபான் தலைவர் முல்லா முகமது ஒமர் சம்மதிக்கவில்லை. இதைத் தொடர்ந்து பின்லேடனை பிடிக்கவும், அவரை ஆதரிக்கும் தலீபான்களை ஒடுக்கவும் அந்த நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது
»»  (மேலும்)

பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட குழு: அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை; சவால்களை எதிர்கொள்வோம்

ஐ.நா. செயலாளர் நியமித்துள்ள குழு தொடர்பில் எமது நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது. உரிய வகையில் எமது எதிர்ப்பை நாம் தெரி வித்துள்ளோம். எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களை முகம்கொடுக்க தயாராக இருப்பதாக அமை ச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக் வெல்ல கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஆலோசனைக் குழுவுக்கு உதவியாக 8 பேர் கொண்ட மற்றொரு குழுவை ஐ.நா. செயலாளர் நியமித்திருப்பது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது;
ஐ.நா. செயலாளரின் குழு தொடர்பில் எமது நிலைப்பாட்டை தெளிவாக வெளியிட்டுள்ளோம். இந்தக் குழு சட்டபூர்வமற்றது என ஐ.நா. வில் உள்ள பல நாடுகள் தெரிவித்துள்ளன. பாதுகாப்பு சபையினதோ மனித உரிமை ஆணையத்தினதோ அனுமதி இன்றி இத்தகைய குழுவொன்றை அமைக்க அவருக்கு உரிமை கிடையாது என அந்த நாடுகள் அறிவித்துள்ளன.
கடந்த வருடம் இலங்கைக்கு எதிராக ஐ.நா. வில் பிரேரணை முன்வைக்கப்பட்டபோது ஏனைய நாடுகளின் உதவியுடன் அதனைத் தோற்கடித்தோம். மீண்டும் அத்தகைய நிலை ஏற்பட்டால் அந்த சவாலுக்கும் முகம்கொடுப்போம். எல்லை தாண்டாது எமது எதிர்ப்பை காட்டியுள்ளோம். இதே போன்று வேறு நாடுகளுக்கு எதிராகவும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. அடுத்து என்ன நடக்கிறது என நாம் காத்திருக்கிறோம் என்றார்.
ஐ.நா. செயலாளர் நியமித்துள்ள குழு தொடர்பாக ஏனைய நாடுகளுடன் பேச்சு நடத்தி வருகிறோம். ஐ.நா. செயலாளர் தீர்க்கமான நடவடிக்கைகள் எடுத்தால் நாமும் அதற்கேற்ப செயற்படுவோம்.

»»  (மேலும்)

கொழும்பில் பதியும் நடைமுறை தமிழர்களுக்கு மட்டுமானதல்ல சகலரதும் பாதுகாப்புக்கும் முக்கியம் - பொலிஸ் மா அதிபர்

கொழும்பில் தங்கியிருப்பவர்கள் தம்மை பொலிஸில் பதிவு செய்து கொள்வது அவர்களது சொந்தப் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானதாகும். எனவே, இவ்விடயம் தொடர்பாக சட்டத்தை அமுலாக்கும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:-
கொழும்பில் குடியிருப்பாளர்கள் தம்மை பொலிஸில் பதிவு செய்து கொள்ளும் நடைமுறை தமிழ் மக்களுக்கு மட்டுமேயான பாரபட்ச செயற்பாடு என காட்டுவதற்கு சில சுயநல அக்கறை கொண்ட தரப்பினர் முயற்சித்து வருவது தெரிய வந்துள்ளது.
இது உண்மைக்கு மாறுபட்ட எந்த அடிப்படையும் அற்ற கூற்றாகும். அத்துடன் பாதுகாப்பு படையினர் இன விரோத நோக்குடன் அநீதியாகவும், கொழும்பில் வாழும் தமிழ் சமூகத்துக்கு பாரபட்சமாகவும் நடந்து கொள்வதாக உலகத்துக்கு காட்ட முயற்சிக்கும் வகையிலானதாகும்.
இதற்கு மாறுபட்ட வகையில் பொலிஸ் கட்டளைக்கோவையின் கீழ் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் அவ்வாறான ஆட் பதிவினை அதிக பட்ச சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், பொறுப்புடைமை மற்றும் அனைத்து மக்களினதும் இன பாகுபாடு பாராமலும் இவ்வாறான பதிவு நடவடிக்கையை மேற்கொள்ளுகின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக குறிப்பிடப்படும் வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் பெரும்பான்மையாக தமிழ் மக்கள் மட்டுமன்றி அப்பிரதேசத்தில் உள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்பதை இங்கு குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது.
எனவே தமது சொந்த பாதுகாப்புக்கு மிகவும் முக்கியத்துவம் பெறும் இந்த பதிவு நடைமுறையை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு பொது மக்கள் சட்டத்தை அமுலாக்கும் அதிகாரிகளுக்கு தமது ஒத்துழைப்பை வழங்குமாறு பொலிஸார் அறிவுறுத்துகின்றனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

»»  (மேலும்)

7/22/2010

போட்டானே ஒரு போடு *இது சீமான் அல்ல சேரன் *திங்கட்கிழமை (08-03-2010) தமிழ் ஸ்டார் வானொலியில் இடம்பெற்ற செவ்வியிலேயே அவர் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார்.

kavingar-cheran
நாடு கடந்த வாழ்க்கை என்பது தமிழருக்குப் புதிதான ஒன்றல்ல என்றும் அதிலிருந்து தான் இந்த நாடு கடந்த அரசு என்ற எண்ணக்கரு தோற்றம் பெற்றது என்றும் தெரிவித்த சேரன் இது வரை காலமும் புலம் பெயர்ந்து வாழுகின்ற எந்த ஒரு தேசிய இனமும் தங்களுக்கென்றொரு நாடு கடந்த அரசு குறித்து முன் மொழியாத நிலையில் தமிழ் தேசிய இனம் இத்தகைய ஒரு எண்ணக்கருவை முன்வைத்துள்ளது எனவும் தெரிவித்தார். தேசிய விடுதலைப் போராட்டம் ஒடுக்கப்பட்டதில் சர்வதேச நாடுகளுக்கு ஒரு முக்கிய பங்கிருக்கிறது. சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் எமது தேசிய விடுதலைப் போராட்டத்தினுடைய இராணுவ முனைப்புகள் நசுக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் எங்களுடைய தமிழீழம் என்ற இலட்சியத்தையும் கருதுகோளைiயும் புதிய தளங்களிலும் புதிய அரசியல் நிலைப்பாடுகளிலும் முன்னெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதனுடைய விளைவாகத் தான் நாடு கடந்த தமிழீழ அரசு முன்மொழியப்பட்டுள்ளது எனவும் சேரன் குறிப்பிட்டார்.

தாயகத்தில் போராட்டம் நடைபெற்ற காலப்பகுதியில குறிப்பாக 2006ம் ஆண்டு பேச்சுவார்த்தை முறிவடைந்த காலப்பகுதியில் இத்தகைய ஒரு எண்ணக்கரு ஏன் முன்வைக்கப்படவில்லை என்ற கேள்விக்குப் பதிலளித்த சேரன் அந்தக் காலகட்டத்தில் தாயகத்தில் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்படாத ஒரு அரசு தாயகத்தில் இயங்கிக் கொண்டிருந்தது என்றும் அந்த அரசிற்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுக்கும் முயற்சியே நடந்து கொண்டிருந்தது என்றும் அந்த நேரத்தில் நாடு கடந்த தமிழீழ அரசிற்கான தேவை இருக்கவில்லை என்றும் அதே போல புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் தாயக அரசுடன் சார்ந்து தாம் வாழ்கின்ற நாடுகளில் இயங்கிக் கொண்டிருந்தனர் என்றும் பதிலளித்தார்.

2002ம் ஆண்டிற்கும் 2006ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் தாயகத்தில் இயங்கிய அங்கீகரிக்கப்படாத தமிழீழ அரசிற்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்கான சர்வதேச றாஜதந்திர நகர்வுகள் மற்றும் அரசியல் முன்னெடுப்புகளில் தீவிரமான கவனத்தைச் செலுத்தத் தவறிவிட்டோம் எனக் குறிப்பிட்ட சேரன் 2009ம் ஆண்டிற்குப் பின்னர் புலம்பெயர் நாடுகளில் இருந்ததைப் போன்ற எழுச்சியும் போராட்டங்களும் 2006ம் ஆண்டு காலப்பகுதியிலேயே இருந்திருந்தால் அப்போதே தமிழீழத்தை அமைத்திருக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

இலங்கை விவகாரத்தைக் கையாண்ட விதம் குறித்து சர்வதேத்திடம் ஒரு குற்ற உணர்வு இருக்கிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த சேரன், அப்படித் தான் எண்ணவில்லை என்றும் சர்வதேச நாடுகளுக்கு குற்ற உணர்வென்பது கிடையாது என்றும் அரசியலில் தமது நிரந்தரமான நலன்களை அடிப்படையாகக் கொண்டே அவை செயற்படுகின்றன என்பதுடன் இரட்டைத்தன்மையுடனும் இயங்குகின்றன எனப் பதிலளித்தார்.

நாம் எவ்வளவு பலமாகவும திறமையாகவும் நாடு கடந்த தமிழீழ அரசைக் கட்டி எழுப்பப் போகிறோம் என்பதைப் பொறுத்து சர்வதேச அரங்கில் எமது கருத்துக்களை நாங்கள் தெளிவாக முன்வைக்க முடியும் எனக் குறிப்பிட்ட சேரன் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட உலகத் தமிழர் பேரவை தன்னுடைய முதலாவது மாநாட்டின் மூலம் உலக அரங்கில் ஒரு றாஜதந்திரத் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதையும் சுட்டிக் காட்டினார்.

நாடு கடந்த தமிழீழ அரசு இரண்டு முகங்களைக் கொண்டு செயல்பட இருப்பதாகவும் அதன் ஒரு முகம் புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் அரசியலைப் பேணுவதையும் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டது என்றும் அடுத்த முகம் தாயகத்திலே உருவாகும் தமிழீழத்திற்கான தார்மீக ஆதரவையும் பிற ஆதரவுகளையும் வழங்குவதாகும் எனவும் சேரன் குறிப்பிட்டார்.
»»  (மேலும்)

கிரான் பிதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம் இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில்

கிரான் பிதேச அபிவிருத்திக்குழுக்கூட்டம் இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் கிரான் பிரதேச செயலகக் கட்டிடத்தில் இடம்பெற்றது. அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களால் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் சார்ந்த ஆய்வுகள் முதலமைச்சரால் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
img_1098
img_1102
img_1118
img_1127
»»  (மேலும்)

ராகுல் சாங்கிருத்யாயன்

ராகுல் சாங்கிருத்யாயன்


ராகுல் சாங்கிருத்யாயன் என்பது தான் ராகுல் ஜியின் முழுப் பெயர். இந்திய நாட்டின் தலை சிறந்த சிந்தனையாளர்களில் மிக உயர்ந்த இடத்தை வகிப்பவர்.
பலமொழிகள் தெரிந்தவர். சிறுகதை, நாவல், வரலாற்று ஆய்வுகள் எழுது வது எனப் பலதுறைகளில் சிறந்து விளங்கினார். இந்திய நாட்டின் விடுதலை வரலாற்றில் அழியா இடம்பெற்றவர், அறிவுக்கடல், தத்துவஞானி.
இவர் உத்தரப் பிரதேசத்தில் 1893ம் ஆண்டு ஏப்ரல் 9ம் திகதி பிறந்தார். தந்தையார் பெயர் கோவர்தன் பாண்டே.
பன்னிரண்டாவது வயதில் அவருக்குத் திருமணம் நடந்தது. குடும்பத்தில் வசதி இல்லை. எனவே வேலை தேடி கல்கத்தாவுக்குச் சென்றார். அங்கே வங்க மொழி, சமஸ்கிருத மொழி போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற் றார். பிறகு தமிழகத்திற்கு வந்து, திரு மழிசை, மதுராந்தகம், ஸ்ரீபெரும்புதூர் போன்ற ஊர்களில் வாழ்ந்த வைணவப் பெரியார்களைச் சந்தித்து வைணவ மதச் சித்தாந்தத்தைப் பற்றித் தெரிந்து கொண்டார்.
அதன் பிறகு ரஷ்யாவில் நடைபெற்ற அக்டோபர் சோசலிஸ்டுப் புரட்சி பற்றிய தகவல்களையும் தெரி ந்து கொண்டார். இந்திய நாடு ஆங்கில ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை பெறவேண்டும் என்று எண் ணம் கொண்டார். எனவே காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
ஒத்துழை யாமை இயக்கத்தில் சேர்ந்து போரா டியதால் 1922ம் ஆண்டு ஆங்கில அரசு இவரைக் கைது செய்து 6 மாதம் சிறையில் அடைத்தது. விடுதலை அடைந்து வெளியே வந்ததும் சுப்ரா மாவட்ட காங்கிரஸ் தலைவரானார். அதன் பிறகு பல போராட்டங்களில் ஈடுபட்டதால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார்.
2 ஆண்டுகள் சிறைத் தண் டனை முடிந்து வெளியே வந்த தும் பெளத்த மதம் பற்றி நிறைய தெரிந்துகொள்ள வேண் டும் என்ற ஆவலில் இலங்கைக்கு வந்தார். இதற்கிடையில் மார்க்ஸ் எங்கெல்ஸ் இருவரும் சேர்ந்து தயாரித்த கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை இந்தியில் மொழி பெயர்த்தார். இலங்கையில் இருந்த பெளத்த சமயத்தைச் சேர்ந்த சான்றோர்கள் அவரது பேரறிவைப் பார்த்து சாங்கிருத் தியன் என்னும் விருதை வழங் கினார்கள். இந்தப் பெயரே இன்றும் நிலைத்து நிற்கிறது.
இலங்கையிலிருந்து இந்தியா திரும்பிய பின் பெளத்தம் சம்பந்தமான நூல்களைச் சேகரிக்க நேபாளம், திபெத் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். பெளத்தம் இந்தியாவில் தான் பிறந்தது. ஆனால் அங்கு காணக் கிடைக்காத அரிய பெளத்த சமய இலக்கியங்கள் பல திபெத் மொழியிலும், சமஸ் கிருதத்திலும் இருப்பதைக் கண்டார்.
1930ம் ஆண்டு அந்த மூலச் சுவடி களை எல்லாம் பல மூட்டைகளாகக் கட்டி அவற்றை 22 மட்டக் குதிரைகளின் மீது ஏற்றி இந்தியாவிற்கு கொண்டு வந்தார். இவ்வாறு ராகுல் ஜி கொண்டு வந்த சுவடிகளில் பல சுவடிகள் மிகவும் புகழ்பெற்றவை.
இதனால் பெளத்தம், பற்றியும் புத்தரைப் பற்றியும் ஆராய்ச்சி செய்வதற்கு அந்த மூலச் சுவடிகள் பயன்பட்டன. இந்திய நாகரிகத்துக்கு பெளத்தம், ஆற்றிய பெரிய தொண்டு பற்றிய ஆராய்ச்சிகள் இங்கிருந்துதான் தொடங்குகின்றன.
பெளத்த சமயப் பேரரசர்களின் தர்க்க விவாதங்களைப் புத்தக வடிவில் கொண்டு வந்தார். புத்தர் வாழ்க்கை வரலாற்றையும் எழுதினார். பாரசீகம், திபெத்தியம், உருது ஆகிய மொழிகளில் வல்லவரானார்.
இலக்கியங்களைத் தேடி மஞ்சூரியா, கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் சென்றார். கண்ட உண்மைகளை அறிஞர்களுக்கு எடுத்துச் சொல்ல மேலை நாடுகளுக்குச் சென்று ஆங்கிலத்திலும், பிரஞ்சு மொழியிலும் சொற்பொழிவுகளை ஆற்றினார். லண்டனில் தங்கியிருந்தபோது கார்ல் மார்க்ஸ் கல்லறைக்குச் சென்று மரியாதை செலுத்தினார். 1935ம் ஆண்டு ராகுல்ஜி சோவியத் நாடு சென்றார். அவருக்கு தத்துவஞானப் பயிற்சியும் விடுதலை வேட்கையும் இருந்ததால் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரானார்.
பல ஆண்டுகள் சிறையில் இருந்ததால் பல நூல்களை எழுதினார். அதில் முக்கியமான நூல் நமக்கெல்லாம் அதிகமாகத் தெரிந்த ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூல். இந்த நூல் 14 மொழிகளில் வெளிவந்துள்ளது. உலகப் புகழ்பெற்ற இந்நூல் மனித சமூக வரலாற்றை விஞ்ஞான வழியில் தொகுத்துக் கூறுகிறது.
லெனின் கிராடு பல்கலைக் கழகம் இவர் புலமையைத் தெரிந்துகொண்டு 1945ம் ஆண்டில் சமஸ்கிருத பேராசிரியராக நியமித்தது. அங்கு இரண்டரை ஆண்டுகாலம் அந்தப் பதவியில் இருந்தார். ராகுல் ஜிக்குப் பல மொழிகள் தெரிந்திருந்தும் தாய்மொழியான இந்தியிலேயே பெரும்பாலான நூல்களை எழுதினார்.
ராகுல் முதல் திருமணம் இளம் பருவத்தில் நடைபெற்றது. அது அவருக்கு ஒத்துவரவில்லை. எனவே அது தோல்வியில் முடிந்தது. சோவியத் நாட்டில் அவர் இருந்தபோது, லோலா என்னும் ரஷ்யப் பெண்ணைத் திருமணம் முடித்தார். அதன் பிறகு தமது செயலாளராக அதிக காலம் வேலை செய்த கமலா பரியார் என்னும் பெண்ணை மனைவியாக ஏற்றார். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் பிறந்தனர்.
சாகித்ய அக்கட பரிசும், பத்மபூஷன் விருதும் பெற்றவர். காசி பண்டிதசபை மகா பண்டிதர் என்னும் பட்டமும் அவருக்கு வழங்கியது. ராகுல்ஜி 1962ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் திகதி நோய்வாய்ப்பட்டார். 05 மாதங்கள் சோவியத் நாட்டில் சிகிச்சை பெற்று வந்தார். பிறகு 1963 இல் ஏப்ரல் 9ம் திகதி நாடு திரும்பினார். நாட்கள் கழிந்து 14ம் திகதி அன்று மரணமடைந்தார்.
உலகமெலாம் சுற்றித் திரிந்தவர் தன் சொந்த நாட்டுக்கு வந்தபின்பே உயிரிழந்தார். வொல்காவிலிருந்து கங்கைக்கு வந்த பின்பே அவருடைய உயிர் பிரிந்தது என்பதே அவருடைய நூலுக்கும் வாழ்வுக்கும் சிறப்பு சேர்க்கும் சுவை முரண்.


»»  (மேலும்)

முல்லைத்தீவில் 198 குடும்பங்கள் சொந்த இடங்களில் நாளை குடியேற்றம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த 198 குடும்பங்களைச் சேர்ந்த 602 பேர் நாளை சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட உள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட திட்டப் பணிப்பாளர் எஸ். ஸ்ரீரங்கன் கூறினார்.
இடம்பெயர்ந்து வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் தங்கியுள்ள இவர்கள் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 22 கிராமசேவகர் பிரிவுகளில் மீள் குடியேற்றப்பட உள்ளனர். ஏற் கெனவே 22 கிராமசேவகர் பிரிவு களிலும் மீள்குடியேற்றங்கள் இடம் பெற்றதோடு இதுவரை மீள்குடியேற்றப்படாதவர்களே நாளை மீள்குடியேற்றப்படு கின்றனர்.
கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 23 கிராமசேவகர் பிரிவுகளில் இதுவரை மீள்குடி யேற்றம் இடம் பெறவில்லை எனவும் அறிவிக்கப்படுகிறது.
»»  (மேலும்)

அமைச்சர் தயாரத்ன வாழைச்சேனை கடதாசி ஆலை விஜயம்

அமைச்சர் பி. தயாரத்ன ஆகஸ்ட் 2ஆம் திகதி வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு விஜயம் செய்யவுள்ளார். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம். எஸ். சுபைர் நேற்று அமைச்சர் தயாரத்னவை சந்தித்து விடுத்த வேண்டுகோளுக்கமைய இவ் விஜயத்தை மேற்கொள்ள வுள்ளார்.
வாழைச்சேனை கடதாசி ஆலையின் அபிவிருத்தி, அங்குள்ள குறைபாடு கடதாசி உற்பத்தி அதிகரிப்பு தொடர்பில் கிழக்கு மாகாண அமைச்சர் சுபைர் அமைச்சர் தயாரத்னவிடம் விரிவாக எடுத்துக் கூறியதுடன் அது தொடர்பில் கலந்துரையாடியுமுள்ளார்.
»»  (மேலும்)

7/21/2010

தமிழ் தேசியக் கூட்டமைப்பு போலியான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றது- மு.கா _

 
   
 
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போலியான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்களை மீள இணைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் ஒருமித்த கருத்து நிலவுவதாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு தமது கட்சி பூரண ஆதரவளித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலம்பெயர் மக்களிடம் பிரச்சாரம் செய்து வருவதாக முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரிஸ் தெரிவித்துள்ளார்.
»»  (மேலும்)

வியட்நாமில் ஏசியான் மாநாடு

ஏசியன் வெளிநாட்டு அமைச்சர்கள் நேற்று முன்தினம் வியட்நாம் தலைநகர் ஹனோயில் ஒன்றுகூடினர். இந்த அமைப்பிலுள்ள 10 நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்கள் பிராந்திய நலன்கள் குறித்துப் பேசும் வகையில் இம் மாநாடு கூட்டப்பட்டது.
1967ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இந்த ஏசியன் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது. புருனை, கம்போடியா, இந்தோனேஷியா, லாஓஸ், மலேஷியா, மியன்மார், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் என்பன இந்த அமைப்பில் அங்கத்துவம் பெற்றுள்ளன.
இவை 4.5 மில்லியன் சதுர கி.மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளதுடன் 570 மில்லியன் மக்கள் இந்நாடுகளில் வாழ்கின்றனர். நேற்று முன்தினம் நடந்த இந்த மாநாட்டில் ஏசியன் நாடுகளிடையேயான உறவுகளை மேம்படுத்தல் பொதுவாகச் செயற்பட்டு பிராந்தியம் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளித்தல் போன்ற முக்கிய விடயங்கள் பேசப்பட்டன.
 

»»  (மேலும்)

மெக்ஸிக்கோ எல்லையை நோக்கி அமெரிக்க இராணுவம்

மெக்ஸிகோ எல்லையை நோக்கி அமெரிக்கா இராணுவத்தை அனு ப்பவுள்ளது. இந்த எல்லையில் அதி கரித்துவரும் போதைவஸ்துக் கடத் தல், ஆயுத விற்பனை, சட்ட விரோதக் குடியேற்றம் போன்ற குற்றச் செயல்களை ஒழிக்கும் நோக் குடன் இப்படைகள் ஓகஸ்ட் 01 ல் அனுப்பப்படவுள்ளன. இதுதவிர முன்னூறு சுங்க அதிகாரிகள், எல் லைத்தடுப்பு முகவர்களும் மெக் ஸிகோ எல்லைக்கு அனுப்பப்ப டுவர்.
மேலதிகமாக இராணுவ ஹெலி கொப்டர்கள் மற்றும் முக்கிய தள பாடங்களும் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மெக்ஸிகோவின் எல்லையிலுள்ள அமெரிக்க மாநிலமான அரிசோனா இவ்வாறான குற்றச் செயல்களால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மெக்ஸிகோவில் இடம்பெறும் போதைக் கடத்தல், ஆயுத விற் பனை அரிஸோனா மாநிலத்தைப் பெரிதும் பாதித்துள்ளதுடன் இங்கி ருந்து ஆயிரக் கணக்கான சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களும் அமெரிக்காவுக்குள் நுழைகின்றனர். இதைக் கட்டுப்படுத்த அரிசோனா மாநிலம் கடுமையான சட்டங்களை அமுல் செய்த போதும் அவை வெற்றியளிகக்வில்லை.
இதற்கு முன்னர் 524 விசேட இராணுவ வீரர்களும் அனுப்பி வைக்கப்பட் டனர் அதிகரிதுள்ள சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வேலைகளை கூட்டாகச் செய்ய வேண்டும். மத்திய அரசும் இதில் பங்கேற்க வேண்டுமென சட்ட வல்லுநர் குறிப்பிட்டார். இம்முறை எவ்வாறாயினும் இக்குற்றச் செயல் களைக் கட்டுப்படுத்துவோம். இதற் கென அறுநூறு மில்லியன் டொலர் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நெருங்கிய அதி காரி கூறினார்.
மெக்ஸிகோ எல்லையில் அதிகரி த்துள்ள குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் இராணுவ நடவடிக் கைகளில் இணைந்து கொள்ள 09 தென்னமெரிக்க நாடுகளும் முன் வந்துள்ளன. ஆளில்லாத விமானம், இராணுவ வாகனங்கள் இரவு பகலாக இவ்வெல்லையில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதா கவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ் வளவு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு ள்ளதை வரவேற்றுள்ள அரிசோனா மாநில முதல்வர் இவ்வேற்பாடுகள் குற்றச் செயல்களை ஒழிப்பதற்குப் போதுமானதாக இருக்கும் எனத் தான் எதிர்பார்க்கவில்லை எனவும் தெரிவித்தார். நேற்று முன்தினம் கூட பிறந்த நாள் வைபவ மொன்றிலீடுபட்டிருந்த மக்கள் மீது இனந்தெரியாதோர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் 17 பேர் பலியாகியமை குறிப்பிடத் தக்கது.
சட்ட விரோதக் குடியேற்றக்காரர் களை விசாரிக்க குடிவரவு திணைக் களத்தின் அனுமதி தேவை என்ற சட்டத்தை நீக்க ஒபாமா நிர்வாகம் வழக்காடவுள்ளது.
»»  (மேலும்)

ரொபட் ஓ பிளேக் இன்று இலங்கை வருகை

ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்க ளுக்குப் பொறுப்பான உதவி ராஜா ங்க செயலாளர் ரொபட் ஓ பிளேக் இன்று இலங்கைக்கு வருகை தர விருக்கின்றார்.
ரொபட் ஓ பிளேக் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸை இன்று சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்துவார் என அமை ச்சின் அதிகாரியொருவர் தெரிவித் தார்.
அத்தோடு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும், வர்த்தக தலைவர் களையும் அவர் சந்திக்கவிருப்பதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரக வட்டாரங்கள் கூறின. இவர் நாளை 22ம் திகதி மாலைதீவுக்கு விஜயம் செய்யவிருப்பதாகவும் அவ்வட்டா ரங்கள் குறிப்பிட்டன.
»»  (மேலும்)

சுவாமி விபுலானந்தர் பிறந்த கிழக்கு மண்ணிலே நாமும் வாழ்கின்றோம் என்பதைவிட வேறென்ன பெருமை வேண்டும் நமக்கு.- முதலமைச்சர்

img_0793

img_0557

 

முத்தமிழ் வித்தகர் சுவாமிவிபுலானந்த அடிகளாரின் நினைவாக கொண்டாடப்படுகின்ற தமிழ் செம்மொழி விழாவிலே கலந்து கொள்வதையிட்டு பெருமகிழ்ச்சி அடைகின்றேன். ஒரு வித்தக மாமுனியின் நினைவு தினத்தில் தமிழ் அறிஞர்கள் வீற்றிருக்கும் அவையில் சிறப்புரை ஆற்ற வாய்ப்பு கிடைத்தமையை என் வாழ்நாள் பாக்கியமாகவே என்ணுகின்றேன்.
இவ்வாறானதொரு பெறுமதிமிக்க காலத்தின் தேவை உணர்ந்த நிகழ்வொன்றினை அரங்கேற்றம் செய்திருக்கின்ற கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்திற்கும், ஏற்பாட்டு குழுவினருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் உரித்தாகட்டும். முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் நினைவு நிகழ்வினை தமிழ் செம்மொழி எனும் பெயரில் அவர் பிறந்த மண்ணில் நடாத்துவது சாலப் பொருத்தமானதொன்றாகும்.
உலகில் தோன்றிய ஒவ்வொரு கலாச்சாரங்களும் ஒவ்வொரு நாகரிகமும் அது சார்ந்த மொழியை அடிப்படையாக கொண்டே தோற்றம் பெற்றிருக்கின்றன. ஒரு சமூகத்தின் அடையாள கட்டுமானங்களாக திகழ்கின்ற கலை, கலாச்சார பண்பாடுகள், சமூகவியல் நடவடிக்கைகள் என்பன அக்கலாச்சாரத்திற்குரிய மொழியை அடிப்படையாக கொண்டே தோற்றம் பெறுகின்றன. எனவேதான் மொழி என்பது ஒரு சமூகத்தின் உயிர் நாடியாக போற்றப்படுகின்றது. எனவேதான் உலகில் தோன்றிய பல நாகரீகங்களில் மொழியை பாதுகாப்பதற்காக பல போராட்டங்கள,; பல தியாகங்கள், பல அற்பணிப்புகள் அரங்கேறின. அவ்வகையில் உலகில் தோன்றிய மொழிகளில் தமிழ் மொழிக்கு தனித்துவமான தனியான  இடமுண்டு.
உலகில் முதலில் தோன்றியதாக நிருபிக்கப்பட்டிருக்கின்ற குமரிக் கண்டத்தில்; வாழ்ந்த ஆரியர்களிடமிருந்து தமிழ் மொழி உதயம் பெற்றதென்பது சான்றோர்களினால் நிருபிக்கப்பட்டிருக்கின்றது. ஏனைய மொழிகளைவிட தமிழ் மொழி மிக நீண்ட காலம் செழிப்புடன் வாழ்வதற்கு அதன் பல தனித்தவமான இயல்புகள் காரணமாக இருந்திருக்கின்றன. தமிழ் மொழி ஏனைய நாகரீகங்களின் தாக்கத்தினால் சவால்களை எதிர்கொண்ட சமயங்களில் தமிழ் மொழியின் தனித்துவத்தினையும் அதன் மகத்துவத்தினையும் உலகெங்கும் எடுத்துச்சென்று தமிழ் மொழியை தலைநிமிரச் செய்வதில் சுவாமி விபுலானந்தரின் பங்கு இமயம்போன்றது.
தமிழ் மொழி, வாழ்வியல் மேம்பாடு குறித்த குறிக்கோளையே மையமாக கொண்டு மக்களை ஒருமுகப்படுத்தும் செழுமையான இலக்கண இலக்கியங்களையும் 2000 அண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே தன்னகத்தே கொண்டு விழங்குகின்றது. இவ்வழியில் பண்டைத்தமிழ் இலக்கியங்களையும், தமிழின் வாழ்வியல் பண்பாட்டினையும் ஆராய்ந்து நூல் வடிவாக்கியோர் பலர் உளர். அவ்வகையில் இயல,; இசை, நாடகம் என்ற முத்தமிழையும் ஆராய்ந்து அவ் ஆய்வினை தமிழர் வாழ்விலும், பண்பாட்டிலும் மேலோங்கச் செய்வதில் சுவாமி விபுலாநந்தரின் பங்களிப்பு அளப்பெரியது. அன்னார் பிறந்த கிழக்கு மண்ணிலே நாமும் வாழ்கின்றோம் என்பதைவிட வேறென்ன பெருமை வேண்டும் நமக்கு.
அன்பார்ந்த அவையோர்களே! சுவாமி விபுலானந்தர் தான் சார்ந்த சமயத்திற்கு மாத்திரமின்றி மொழிக்கும் தன்னையே அற்பணித்த ஓர் உத்தமர். அவரது வாழ்வியல் போதனைகள் ஒரு சமயத்திற்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதன்று. உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது என்பதன் மூலம் எல்லா சமயங்களும் எதிர்பார்க்கின்ற உள்ளத்தில் இருந்து பிறக்கின்ற பக்கிதான்  ஈடேற்றத்திற்கான வழி என்பதை அருமையாக கூறிச் சென்றுள்ளார். அது மாத்திரமன்றி சுமார் அரை நூற்றாண்டுகளுக்கு முன்பே இன்றைய சமூகத்தின் எதிர்காலத்தினை எதிர்வு கூறிய தீர்க்கதரிசி அவர். உங்களுக்குள் பிரிவுபட்டால் நீங்கள் அடிமைப்படுவீர்கள் என்பதனை அன்றே அவர் கூறுயிருந்தார்.
இன்று எமது நாட்டில் தமிழ் மொழியும் தமிழ் பேசும் மக்களும் பல்வேறுபட்ட சவால்களை சந்திக்கின்ற வேளையில், சுவாமி விபுலானந்தரின் அருள் உரைகளும் அவற்றின் உட்பொருளும் முழுமையாக புரிந்து கொண்டு செயலுருவம் பெறுமாக இருந்தால் அதுவே இச்சவால்களை வெல்வதற்கான சிறந்த உபாயமாக இருப்பது என்பதில் எந்தவொரு ஐயமும் இல்லை.
கல்தோன்றி மண் தோன்றா காலத்தில் தோன்றிய மூத்த மொழி தமிழ் என்றும், தாய்த்தமிழ் மொழி என்றும், கன்னித்தமிழ் என்றும,; தித்திக்கும் முத்தமிழ் என்றும் பற்பல பெயர்களால் போற்றப்படுகின்ற தமிழ் மொழியானது உலக மொழிகளிலேயே மூத்தமொழியாக கருதப்படுகின்றது. தமிழ் மொழியின் பாதிப்பும் தாக்கமும் பல்வேறு மொழிக்குடும்பங்களில் காணப்படகின்றமை அதன் தொன்மையையும் பழமையும் பறைசாற்றுகின்றது. இருந்தபோதிலும், நாகரீகங்களின் வளர்ச்சி என்ற போர்வையில் வேற்று மொழிகளின் ஆதிக்கமானது தொன்மையான தமிழ் மொழிக்கும் பெரும் சவாலாக அமைந்துவிடுவதை நாம் நிராகரிக்க முடியாது.
தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் அதிகமாக உள்ள இந்நியாவில் 2004ம் ஆண்டுதான் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்த்து கிடைத்தது. அதனைத்தொடர்ந்து அண்மையில் தமிழ் நாட்டின் கோவை மாநகரில் தமிழ் செம்மொழி மாநாடு தமிழ் மொழியின் சிறப்பையும் வீரியத்தையும் இன்னும் உலகறியச் செய்திருக்கின்றது. அதன் தொடர்தேற்சியாக நாமும் தமிழ் மொழியின் காவலராக விளங்கிய கிழக்கின் மகன் சுவாமி விபுலானந்தரின் நினைவு தினத்தினை தமிழ் செம்மொழியாக கொண்டாடுவது சிறப்புமிக்க ஒன்று. தொன்மை மிக்க வரலாற்று பாரம்பரியம்மிக்க தமிழ் மொழியினை இன்றைய நவீன கலாச்சார நாகரீக சவால்களுக்கு முகம் கொடுத்து பேணிப்பாதுகாக்க வேண்டிய கடப்பாடு தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்ட அனைவருக்கும் உண்டு. இப்பணியில் மத குல பேதம் தடையாக இருக்க முடியாது. சமயங்களால் பிரிந்திருப்பினும் தாய் மொழியால் ஒன்றுபட்டவர்கள் நாங்கள் எனவே அந்த தாய் மொழியை காக்க  வேண்டிய பொறுப்பு அனைவரக்கும் உண்டு.
அவ்வகையில் தமிழ் மொழியின் சிறப்பு குறித்தும், அதன் பாரம்பரியங்கள் குறித்தும், அதற்காக பாடுபடும் தமிழ் அறிஞர்கள் குறித்தும் ஆவணங்கள் நூலுருவில் எமது இன்றைய சமூகத்திற்கு கிடைக்கச் செய்யவேண்டும். அதற்காக மேற்கொள்ளப்படுகின்ற அனைத்த முயற்சிக்கும் கிழக்கு மாகாண சபை பக்கபலமாக இருக்கும் என்பதை நான் பெருமையுடன் கூறிக்கொள்கின்றேன். அதே போன்று இவ்வாறான முத்தமிழ் விழாக்கள் கிழக்கு மண்ணில் தொடர்;சியாக இடம்பெறுவதற்கு மாகாண கல்வி திணைக்களத்தை ஊக்கப்படுத்தவதோடு. இவ் அரிய விழாவில் கலந்து கொண்டுள்ள அறிஞர்கள்,கல்வி மான்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகின்றேன்.  என நன்றி கூறி நிறைவு செய்தார்.
img_0590
»»  (மேலும்)

7/20/2010

அ.இ. காங்கிரஸ் தலைவராக மீண்டும் சோனியா காந்தி _

 
 
  அகில இந்திய காங்கிரஸ் தலைவராக மீண்டும் சோனியா காந்தியே தேர்ந்தெடுக்கப்படவிருப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் இந்த ஆண்டு இறுதியில் மும்பையில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அச்சமயம், காங்கிரஸ் கட்சி தொடங்கி 125 ஆண்டு நிறைவு கொண்டாட்டமும் இடம்பெறவுள்ளது.

அதன்போது, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலும் நடத்தப்பட இருக்கிறது. அதில் சோனியாகாந்தி மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட இருக்கிறார்.

இதன் மூலம் சோனியா காங்கிரஸ் கட்சியில் அதிக காலம் தலைவராக இருந்தவர் என்ற சாதனையையும் படைப்பார்.

சோனியா 1998ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவரானார். அதிலிருந்து 12 ஆண்டுகளாகத் தொடர்ந்து பதவியில் இருந்து வருகிறார்.

சோனியா தலைவரான பிறகு காங்கிரஸ் மீண்டும் எழுச்சி பெற்று மத்தியில் ஆட்சியை பிடித்தது. பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது.
»»  (மேலும்)

ஹுருளு வனாந்தரத்தில் பாரிய தீ; 2500 ஏக்கர் நாசம்

ஹபரண ஹுருளு வனாந்தரப் பகுதியில் நேற்று ஏற்பட்ட திடீர் தீயினால் சுமார் 2,500 ஏக்கர் காடு சாம்பலாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது திட்டமிட்ட காடு எரிப்பாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.
இந்தப் பிரதேசத்தில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்காக சீகிரியாவிலுள்ள விமானப்படையினரின் உதவி பெறப் பட்டது.
இதனையடுத்து விமானப்படையின் இரண்டு ஹெலிகொப்டர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
என்றாலும், நேற்று இரவு வரை தீ முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வரவில்லையென வன பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். விமானப்படையினருக்கு உதவியாக பொலிஸாரும் பணியில் ஈடுபட்டனர்.
»»  (மேலும்)

வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும்

ஆசிய வலய வறுமை ஒழிப்பு மாநாட்டில் பிரதமர்

வடக்கு, கிழக்கு அபிவிருத்தித் திட் டங்களை வெற்றிகரமாக முன்னெ டுப்பதற்கு அனைத்து நாடுகளும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பிரதமர் டி. எம். ஜயரத்ன ஆகிய வலய வறுமை ஒழிப்பு மாநாட்டில் தெரிவித் துள்ளார்.
சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரதமர் டி. எம். ஜயரத்ன சீன குமீமின் நகரில் நடைபெறும் ஆசிய வலய வறுமை ஒழிப்புக்கான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.
இதன் போது மேலும் தெரிவித்த பிரதமர், இலங்கையில் வறுமை ஒழிப்புக் கான வலுவான வேலைத் திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகிறது. அத்துடன் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து அரசாங்கம் வடக்கிலும் கிழக்கிலும் துரித அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதற்கு அனைத்து நாடுகளும் ஒத்து ழைப்பு வழங்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
ஆசிய வலய வறுமை ஒழிப்பு மாநாட் டிற்கு ஆசிய வலய நாடுகளின் அனைத்து தலைவர்கள் மற்றும் உயர் மட்டப் பிரதி நிதிகளும் வருகை தந்திருந்தனர்.
சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத் தினை மேற்கொண்டிருந்த பிரதமர் டி. எம். ஜயரத்னவை ரூமிமின் விமான நிலை யத்தில் சீனாவின் துணைப் பிரதமர் ஹைலியான்கியூ வரவேற்றுள்ளார்.
»»  (மேலும்)

7/19/2010

நெல்சன் மண்டேலா பிறந்தநாள்

நெல்சன் மண்டேலா இன்று ஞாயிற்றுகிழமை தனது 92வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இந்த தினத்தை முதன்முறையாக நெல்சன் மண்டேலா சர்வதேச தினம் என்று உலகம் முழுவதும் கொண்டாடியுள்ளனர்.
நெல்சன் மண்டேலா
நெல்சன் மண்டேலா
அமைதி மற்றும் சுதந்திரத்திற்கு நெல்சன் மண்டேலா செய்த பங்களிப்புக்கு மரியாதை செய்யும் விதமாக இந்த தினம் நெல்சன் மண்டேலா சர்வதேச தினம் என்று அழைக்கப்பட்டுள்ளது.
இத்தினத்தை முன்னிட்டு மக்கள் சமுதாய பணிகளில் ஈடுபடுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு செய்வதன் மூலம் தங்களுக்குள் சிறிதளவாவது மண்டேலா இருக்கிறார் என்பதை ஒவ்வொருவரும் காண்பிக்க முடியும் என மண்டேலாவின் மனைவி கிராக்கா மச்சேல் கூறியுள்ளார்.
 
»»  (மேலும்)

கல்வியினால் உலகில் எதனையும் சாதிக்க முடியும் - கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்


  வாழைச்சேனை பட்டமுன்படிப்பு வர்த்தக மாணவர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட மாணவர் பாராட்டு கௌரவிப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மாணவர்கள் தற்போதைய சூழ்நிலையில் பாடசாலையின் நேர வரையறைக்குள் கற்கின்ற பாடங்கள் மாத்திரம் வைத்துக்கொண்டு பரீட்சைக்கு தயாராக முடியாது. முழுமையாக ஒரு பரீட்சைக்கு தோற்ற வேண்டுமானால் குறித்த பாடங்கள் தொடர்பான தேடல்கள் அவனுக்கு அவசியமாகின்றது. அத்தோடு மேலதிகமாகவும் மிளக்கற்பதற்காகவும் தனியார் கல்வி நிலையங்களை நாடவேண்டிய நிலை ஏற்படுகின்றது. குறிப்பிட்ட ஒரு சில தனியார் கல்வி நிலையங்கள்  சமுகத்தின் தேவை உணர்ந்தும் கல்வியின் சிறப்பினை உணர்ந்தும் தரமாக சில சேவைகளை ஆற்றி வருகின்றது. இவ்வாறான கல்வி நிலையங்கள் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றிருப்பதனை நாம் கண்கூடாக காணமுடிகின்றது. அதற்கு சிறந்த உதாரணம் இன்று நடைபெறுகின்ற இந்நிகழ்வாகும்.
மாணவர்கள் மீளக் கற்றல் செயற்பாடகளுக்கு பெற்றோர்களின் பங்களிப்பு மிக மிக அவசியம். அதாவது எந்த ஒரு மனிதனும் தாம் கற்கின்ற  அனைத்து விடயங்களை மீளக்கற்பதன் ஊடாக அதில் ஓர் தன்னிறைவினை அடைகின்றான் குறிப்பாக மாணவர்கள் மீளக் கற்றல் செயற்பாடுகளுக்கு பெற்றோர்கள் பங்களிப்பானது மிக மிக அவசியமாகின்றது. பாடசாலையில் தாம் கற்ற பாடங்களைவ வீட்டிற்கு வந்தபோது மீளக்கற்பதன் ஊடாக தாம் அப்பாடம் சார்ந்த அறிவினை அதிகம் நிலை நிறுத்திக் கொள்வதற்கான வாய்ப்பினை பெறுகின்றான் எனவும் குறிப்பிட்டார்.
நிலையற்ற பொருட்களிடையே வாழ்கின்ற எமக்கு என்றும் அழியாத ஆழ்ந்த உண்மையை எடுத்துரைப்பது கல்வி என முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் அவர்கள் தமது பொன்மொழியில் குறிப்பிடுகின்றார். இதே போன்று பல்வேறு அறிஞர்கள் ஞனிகள் சித்தர்கள் உலகிலே தோன்றி மறைந்த அனைத்து பெரியவர்களும் கல்வியின் மகத்துவத்தினன பாறைசாற்றியிருக்கின்றார்கள் எனவே அனைவருக்கும் கல்வி என்பது அவசியமான ஒரு தேவைப்பாடாக இருக்கின்றது என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.
எமது கிழக்கு மாகாணத்தை பொறுத்தவகையில்  கல்வி பொருளாதாரம் இவை இரண்டுமே பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. எனவே கல்வியோடு இணைந்தவகையில் பொருளாதாரத்தினையும் ஈட்டுபவதற்கான வழிவகையினை நாம் ஈட்டவேண்டும்.
கல்வியினை நாம் சரியான முறையில் கற்கின்றபோது நாம் எதிர்பார்க்கின்ற ஏனைய அனைத்து துறைகளிலும் குறித்தளவிலான அபிவிருத்தியினை எட்டமுடியும் ஆகவே கல்வி என்பது எமது வாழ்வில் நிறைந்திருக்க வேண்டிய ஒரு சொத்தாகும் ஒரு மாணவனுக்கு பாராட்டு, கௌரவிப்பு என்பது தனது துறையில் தான் மேல்நோக்கி செல்வதற்கு பக்க பலமாக அமையும். ஆகவே திறமையான மாணவர்கள் பாராட்டப்படுகின்ற பட்சத்தில் ஏனைய மாணவர்களும் பாராட்டுகளை பெறுவதற்கு உந்தப்படுகின்றார்கள் இதனூடாக ஆரோக்கியமான ஓர் கல்விச் சமூகம் உருவாக வாய்ப்பு ஏறங்படுகின்றது என தமது உரையில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிகழ்வில் திறமை மிக்க மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதோடு. அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களும் இங்கு கௌரவிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.
பேத்தாழை குகநேசன் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்விற்கு வலையக்கல்வி பணிப்பாள் திருமதி சுபாச்சக்கரவர்த்தி, கோரளைப்பற்று கோட்டக்கல்வி அதிகாரி திரு எல்.தங்கராஜா, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், புத்தியீவிகள், கல்விமான்கள், ஆசிரியர்கள் பெற்றோர், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
»»  (மேலும்)

ஆப்கானுக்கு உதவி வழங்கும் மாநாடு நாளை:” எழுபது நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பர்

ஹிலாரி கிளிண்டன், பான் கி மூன் வருகை : காபுல் முழுவதும் படை குவிப்பு


ஆப்கானிஸ்தானில் நாளை (20) நடைபெறவுள்ள சர்வதேச உதவி வழங்கும் மாநாட்டை முன்னிட்டு தலைநகர் காபுலில் கடுமையான பாதுகாப்பு நடை முறைகள் அமுலுக்கு வந்துள்ளன. ஆயிரத் துக்கும் அதிகமான மேலதிக இராணுவம் காபுலுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவை யுத்தம் நடைபெறும் மாகாணங்களில் நேரடிச் சமரில் ஈடுபட்ட துருப்புக்களாகும்.
இன்னும் மேலதிக பொலிஸார், உளவுப் படை அதிகாரிகளும் காபுலுக்கு வந்துள்ளனர். நாட்டின் ஏனைய மாகாணங்களிலிருந்த விசேட இராணுவ வாகனங்கள், ஹெலிகொப்டர்களும் காபுலைச் சுற்றி வலம் வருவதுடன் மாநாடு நடைபெறும் பகுதிகளிலுள்ள வீதிகளில் படையினர் 24 மணி நேர ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.
மாநாட்டை இணைக்கும் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன் மிக நவீன கெமராக்களும் முக்கிய சந்திகளில் பொருத்தப்பட்டுள்ளன. காபுல் பொலிஸ் அலுவலகத்தில் ஏற்கனவே பதிவுசெய்ய ப்பட்டுள்ள இலக்கங்களையுடைய வாகனங்களே மாநாட்டு வளாகத்துக்குள் அனுமதிக்கப்படவுள்ளதாகப் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஜூன் மாதம் காபுலில் நடந்த ஜிர்கா மாநாடு (பழங் குடியினர்) மீது தலிபான்கள் இரண்டு ரொக்கட் தாக்குதல்களை நடத்தினர். ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் நாளைய மாநாட்டில் இடம்பெற வாய்ப்பில்லையென இராணுவ பேச்சாளர் தெரிவித்தார். பாதுகாப்புக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துள்ளோம்.
எனினும் நூறு வீத உத்தரவாதத்தை வழங்குவதென்பது கடினமாக காரியம் என்றும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். நாளை 20ம் திகதி நடைபெறவுள்ள மாநாட்டில் எழுபது நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இவற்றில் 40 பேர் வெளிநாட்டமைச்சர் களாவர். ஐ.நா. செயலாளர் பான் கி மூன், அமெ ரிக்க வெளிநாட்டமைச்சர் ஹிலாரி கிளிண் டனும் காபுல் வரவுள்ளனர். ஊழலை ஒழித்தமை, அதிகார துஷ் பிரயோகத்தை ஒழித்தமை, முன்னர் வழங்கிய வெளிநாட்டு உதவிகளைக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட வேலைகள் தொடர்பான அறிக்கைகளை ஆப்கான் அரசாங்கம் நாளைய மாநாட்டில் சமர்ப் பிக்க வேண்டும்.
இதன் பின்னரே புதிய உதவிகளைப் பெறக்கூடியதாக இருக்குமென அவதானிகள் தெரிவித்துள் ளனர். இம்முறை 13 பில்லியன் டொலர் உதவியை ஆப்கான் அரசாங்கம் வெளிநாடுகளிலிருந்து நன்கொடையாக எதிர்பார்க்கின்றது. ஆனால் எவ்வளவு தொகை வழங்கப்படுமென்பது தெரியாமலுள்ளது.
»»  (மேலும்)

7/18/2010

அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் நேற்று அம்பாறையில்(17.07.2010)-படங்கள் இணைப்பு

முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் உள்ளுராட்சிகள் மாகாண சபைகள் அமைச்சர் அதாவுல்லா ஆகியோர் பங்கேற்பு


img_0009
img_0035
img_0055
»»  (மேலும்)

மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகளுக்கு நூலகம் திறந்து வைப்பு

முதன் முறையாக மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக்கைதிகளின் தகவல் தொழில் நுட்ப அறிவையும், வாசிப்புத்திறனையும் அதிகரிக்க இன்று தகவல் தொழில் நுட்ப பிரிவும், நூலகமும் திறந்து வைக்கப்பட்டது.

வேல்ட் விசன் நிறுவனம் வழங்கிய கணணிகள், மற்றும் நூல்களைக் கொண்டு இந்நிலையம் திறக்கப்பட்டதாக சிறைச்சாலை அத்தியட்சகர் கித்சிறி பண்டார தெரிவித்தார். வேல்ட் விசன் நிறுவன மாவட்ட முகாமையாளர் எஸ்.பிரேமச்சந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்நிலையத்தை திறந்து வைத்தார். _
»»  (மேலும்)

கிழக்கு தமிழ் மொழி தின போட்டிகள் இன்று கல்முனையில் ஆரம்பம் காரைதீவில் நாளை தமிழ் செம்மொழி விழா

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் 2010 ஆம் ஆண்டுக்கான மாகாண தமிழ் மொழித்தினப் போட்டிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை கல்முனையில் நடைபெறவுள்ளது.
திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த போட்டியாளர்கள் இம் மாகாண மட்டப் போட்டியில் கலந்துகொள்வரென மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ. நிஸாம் தெரிவித்தார்.
திருமலை, மட்டு மாவட்டப் போட்டியாளர்கள் நேற்று கல்முனை வந்து சேர்ந்தனர். அவர்களும், நடுவர்களும், மாகாண கல்வி அலுவலக ஊழியர்களும் கல்முனைப் பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இன்று 36 போட்டிகள் கல்முனை உவெஸ்லி கல்லூரியிலும் பற்றிமா கல்லூரியிலும் நடாத்தப்படும். 26 தனி நிகழ்ச்சிகளும் 10 குழு நிகழ்ச்சிகளும் இதிலடங்கும்.
வடமோடி, தென்மோடி, சிந்து நடை போட்டிகளும் நடாத்தப் படுமென இணைப்பாளரும், ஆசிரிய ஆலோசகருமான கன. வரதராஜன் தெரிவித்தார். இன்று ஞாயிற்றுக் கிழமை முழு நாளும் 36 தமிழ் போட்டிகளும் நடாத்தப்பட்டு முடியும். ஏலவே 14 தமிழ் எழுத்தாக்கப் போட்டிகள் நடாத்தப்பட்டு முடிவு களும் வெளியிடப்பட்டுள்ளன.

நாளை பேரூர்வலம் விழா

நாளை 19ம் திகதி மாகாண தமிழ் செம்மொழி விழா நடைபெறும். அதனையொட்டி நாளை காலை 8.00 மணிக்கு பெரிய நீலாவணை முதல் காரைதீவு வரை பாரிய ஊர்திகளின் ஊர்வலம் நடைபெறும். இதில் கிழக்கிலுள்ள 09 தமிழ்க்கல்வி வலயங்களின் 15க்கும் மேற்பட்ட ஊர்திகள் கலந்துகொள்ளும்.
காலை 9.30 மணிக்கு காரைதீவு வட எல்லையில் மாளிகைக்காட்டுச் சந்தியிலிருந்து பேரூர்வலம் ஆரம்பமாகும். தமிழ் பாரம்பரிய கலைவடிவங்கள், பாண்ட் வாத்திய அணிகள், காவடி,கரகாட்டம், கோலாட்டம் சகிதம் கண்ணகை அம்மன் ஆலயத்தை அடைந்து அங்கிருந்து விழா அதிதிகள் பேராளர்கள் சகிதம் ஊருக்குள் ஊர்வலமாக அழைத்து வரப்படுவார்கள். இவ் ஊர்வலம் விபுலானந்தா மத்திய கல்லூரியைச் சென்றடையும்.
இதற்கென காரைதீவு விபுலா னந்த ஞாபகார்த்த பணிமன்றத்துடன் இணைந்து ஏனைய பொதுநல அமைப்புகள் காரைதீவை விழாக் கோலம் பூணச் செய்துள்ளன. மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் தலைமையில் நாளை திங்கள் 19ம் திகதி காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் தமிழ் செம்மொழி விழா நடை பெறவுள்ளது. முதன்மை விருந்தி னராக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திர காந்தனும், கெளரவ விருந்தினராக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவும் அழைக் கப்பட்டுள்ளனர்.
விஷேட விருந்தினர்களாக இந்தியா பாண்டிச்சேரி, புதுவைப் பல்கலைக்கழக சுப்பிரமணிய பாரதி தமிழியற் புலத் தலைவர் பேராசிரியர் ஏ. அறிவுநம்பி, சிங்கப்பூர் முனைவர் இ. வெங்கடேசன், கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் முனைவர் கே. பிரேம்குமார், தென்கிழக்கு பல்கலை உபவேந்தர், முனைவர் எஸ். எம். இஸ்மாயில் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
சிறப்பு விருந்தினர்களாக கிழக்கு மாகாண பிரதம செயலாளர் வ. பொ. பாலசிங்கம், கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் எச். கே. யூ. கே. வீரவர்தன, கிழக்கு மாகாண பிரதி கல்விச் செயலாளர் எஸ். தண்டாயுதபாணி ஆகியோர் கலந்து சிறப்பிப்பார்கள்.

 

பேராளர்கள்

கெளரவத்திற்குரிய பேராளர்களாக இலங்கைப் பல்கலைக்கழகங்களின் தமிழ்ப் பேராசிரியர்களான எஸ். தில்லைநாதன், அ. சண்முகதாஸ், கா. சிவத்தம்பி, எம்.ஏ. நுஃமான், சி. சிவலிங்கராஜா, எஸ். மெளனகுரு, சித்ரலேகா மெளனகுரு, க. அருணாசலம் ஆகியோர் வருகை தரவுள்ளனர்.
விழாவில் கிழக்கிலங்கையின் தமிழ்ப் படைப்பாளிகள் அழைக் கப்பட்டுள்ளனர். இருநூல்கள் வெளி யிடப்படுகின்றன. சுவாமி விபுலா னந்தரின் மருமகள் திருமதி. கோ. மேதகவல்லி செல்லத்துரை (இ.அதிபர்) கெளரவ பேராளராக அழைக்கப்படுகிறார். மாகாண கல்வித் திணைக்களம் கல்முனைக்கு வருகை தந்து போட்டிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது. பொறுப்பாளர் எஸ். முருகுப் பிள்ளை விழா ஒழுங்குகளைக் கவனித்து வருகிறார். காரைதீவின் பொதுநல அமைப்புகளும் உஷாராக பணியிலீடுபட்டு வருகின்றன.
»»  (மேலும்)

வடக்கு, கிழக்கு இணைப்பை இப்போது வலியுறுத்துவது தீர்வுக்கு எதிரான செயல்


வடக்கு, கிழக்கு இணைப்புக்கு எதிரான குரல் கிழக்கிலிருந்து எழுகின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இணைப்புக்கு எதிராகப் பாராளுமன்றத்தில் பேசியிருக்கின்றார். அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளர் இணைப்பை நிராகரித்து அறிக்கை வெளியிட்டிருக்கின்றார். வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தற்காலிகமாக இணைத்தது சட்ட விரோதமானது என்றும் இரண்டு மாகாணங்களும் தனித்தனியாகவே இயங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிக் கிட்டத்தட்ட நான்கு வருடங்களாகி விட்டன. ஏறக்குறைய அடங்கிய நிலையிலிருந்த இப்பிரச்சினை இப்போது மீண்டும் தலைதூக்குகின்றது.
இந்தியத் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையே இதற்குக் காரணம். வடக்கும் கிழக்கும் இணைந்ததாகவே தீர்வு அமைய வேண்டும் என்று இந்தியத் தலைவர்களிடம் கூறியதாக ஊடகங்களுக்கு இவர்கள் தெரிவித்தார்கள். இதன் பிரதிபலிப்பாகவே இணைப்புக்கு எதிரான கருத்துகள் இப்போது வெளிவருகின்றன.
இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாகவே வட மாகாணமும் கிழக்கு மாகாணமும் தற்காலிகமாக இணைக்கப்பட்டன. இந்த இணைப்பு நிரந்தரமானதாக இருக்க வேண்டுமா இல்லையா என்பதைக் கிழக்கு மாகாணத்தில் சர்வசன வாக்கெடுப்பு நடத்தித் தீர்மானிக்க வேண்டும் என்பது ஏற்பாடு. வட மாகாணத்தில் பெரும்பான்மையான மக்கள் இணைப்புக்கு ஆதரவாக இருந்ததாலும் கிழக்கு மாகாணத்தில் அந்த நிலை இல்லாததாலுமே கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் சர்வசன வாக்கெடுப்பு நடத்துவதென முடிவாகியது.
இரண்டு மாகாணங்களும் இணைந்ததாக அமைந்த மாகாண சபை கிழக்கு மாகாணத்தில் வாழும் சகல மக்களினதும் நன்மதிப்பைப் பெறும் வகையில் செயற்பட்டிருந்தால் இணைப்பை நிரந்தரமாக்குவதற்குச் சாதகமான சூழ்நிலை ஒருவேளை உருவாகியிருக்கலாம். ஆனால் அந்த மாகாண சபை தொடர்ந்து செயற்படவில்லை. பிரேமதாசவும் புலிகளும் சேர்ந்து வடக்கு, கிழக்கு மாகாண சபை செயற்பட முடியாத நிலையைத் தோற்றுவித்தனர். இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களும் உடன்பாடாகவே இருந்தனர். பிந்திய காலங்களில் மாகாண சபையைச் செயற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட எல்லா முயற்சிகளையும் கூட்டமைப்புத் தலைவர்கள் வன்மையாக எதிர்த்தனர்.
இந்த நிலையிலேயே இணைப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இணைப்பு சட்ட விரோதமானது என்றும் இரண்டு மாகாணங்களும் தனித்தனியாக இயங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வடக்கு, கிழக்கு மாகாண சபை செயற்படுவதற்காகவே இரண்டு மாகாணங்களும் இணைக்கப்பட்டன. கிட்டத்தட்ட இருபது வருடங்களாக மாகாண சபை செயற்படாத நிலையிலேயே இணைப்புக்கு எதிரான தீர்ப்பு வந்தது. மாகாண சபை தொடர்ந்து இயங்கியிருந்தால் நிலைமை வேறானதாக இருந்திருக்கக் கூடும். இம்மாகாண சபை தொடர்ந்து இயங்க முடியாத நிலையை ஏற்படுத்தியவர்களும் அதற்கு உடந்தையாக இருந்தவர்களும் இணைப்பு நீக்கப்பட்டதற்கான தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது.
இரண்டு மாகாணங்களும் இணைந்த மாகாண சபை தொடர்ந்து செயற்பட வேண்டும் என்பதில் எவ்வித அக்கறையும் இல்லாதிருந்த போதிலும், இரு மாகாணங்களினதும் இணைப்பைத் தொடர்ந்து வலியுறுத்த வேண்டிய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். இரண்டு மாகாணங்களும் இணைக்கப்பட வேண்டும் என்று பிந்திய காலத்தில் இத்தலைவர்கள் தொடர்ச்சியாகச் செய்த பிரசாரத்தினால் பெரும்பாலான தமிழ் மக்களிடம் அக்கருத்து நிலைத்து விட்டது. இப்போது அக்கோரிக்கையை வலியுறுத்த்தாமல் விட்டால் அம்மக்கள் தங்களைக் கைவிட்டு விடுவார்கள் என்று கூட்டமைப்புத் தலைவர்கள் அஞ்சுவதில் நியாயம் உண்டு. அதே போல, ‘தேசியம்’ பேசும் மற்றைய கட்சிகளின் விமர்சனத்துக்கு உள்ளாக நேரிடும் என்ற பயமும் இவர்களுக்கு இருக்கின்றது.

மக்களின் நலன்
தமிழ் மக்கள் கட்சியைக் கைவிட்டுவிடக் கூடாது என்பதற்காகக் கொள்கைகளையும் கோரிக்கைகளையும் தீர்மானிப்பது கட்சி நலன் சார்ந்த செயல். இதனால் கட்சிக்கு மட்டுமே நன்மை. ஆனால், மக்களின் நன்மையைச் சிந்தித்துச் செயற்படுபவர்களே உண்மையான தலைவர்கள்.
மக்களின் பிரதான இலக்கு அரசியல் தீர்வு. அவர்களின் உடனடித் தேவை நிம்மதியான வாழ்க்கை. இவையிரண்டையும் பெற்றுக் கொடுக்கத்தக்க அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டுமேயொழிய இரண்டுமே சாத்தியப்படாத அணுகுமுறையைப் பின்பற்றுவது தலைமைப் பண்பாகாது.
வடக்கு, கிழக்கு இணைப்பு பற்றிய இன்றைய யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நீதிமன்றத் தீர்ப்புக்கமைய இரண்டு மாகாணங்களும் இப்போது பிரிந்திருக்கின்றன. இத்தீர்ப்பு இனிமேல் எல்லாக் காலங்களிலும் முன்னுதாரணமாக இருக்கும் என்பதால் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி மீண்டும் இணைப்பை ஏற்படுத்துவது சாத்தியமில்லை. எனவே, அரசியலமைப்புத் திருத்தத்துக்கூடாகவே இணைப்பை ஏற்படுத்த முடியும். அதற்குச் சாதகமான சூழ்நிலை இப்போது இல்லை என்ற உண்மையை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும்.
இரண்டு மாகாணங்களினதும் இணைப்பு உள்ளடங்கிய அரசியலமைப்புத் திருத்தம் சர்வசன வாக்கெடுப்பில் மக்களின் அங்கீகாரத்தைப் பெற்ற பின்னரே நடைமுறைக்கு வர முடியும். சிங்கள மக்களில் பெரும்பான்மையினரின் ஆதரவு அதற்கு அவசியம். தமிழ்த் தலைவர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பிரிவினையின் முதல்படியாகப் பார்க்கின்ற மனோபாவத்தைச் சிங்கள மக்களிடம் தமிழ்த் தலைவர்களே வளர்த்து விட்டிருக் கின்ற நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்குச் சர்வசன வாக்கெடுப்பில் இப்போது அங்கீகாரம் கிடைப்பது சாத்தியமானதாக இல்லை.
ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வு என்ற நிலைப்பாட்டைப் பகிரங்கமாக வெளிப்படுத்திய தமிழ்த் தலைவர்கள் அத்தகைய தீர்வு முன்வைக்கப்பட்ட வேளையில் அதை நிராகரித்துப் பிரிவினைவாதிகளுடன் சேர்ந்து செயற்பட்டதால் தமிழர் தரப்புக் கோரிக்கைகளைப் பிரிவினை முயற்சியாகப் பார்க்கும் மனோபாவம் கணிசமான சிங்கள மக்களிடம் வளர்ந்து விட்டது. இந்த மனோபாவத்தை மாற்றும் வகையில் செயற்பட வேண்டிய கடப்பாடு தமிழ்த் தலைவர்களுக்கு உண்டு.
இரண்டு மாகாணங்களையும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை இன்றைய நிலையில் நடைமுறைச் சாத்தியமற்றது. ஒவ்வொரு காலகட்டத்திலும் அன்றைய யதார்தத்துக்கு முரணான கோரிக்கைகளை வலியுறுத்தியதால் எந்தத் தீர்வும் கிடைக்காமற் போன அனுபவம் தமிழ்த் தலைவர்களுக்கு உண்டு. அதாவது ஏதாவதொரு தீர்வு கிடைக்கக் கூடிய சூழ்நிலையில் அதனிலும் பார்க்கக் கூடுதலான தீர்வை வலியுறுத்தியதால், கிடைக்கவிருந்த தீர்வும் இல்லாது போயுள்ளது. இதனால் தமிழ் மக்களின் வாழ்க்கை மென்மேலும் துயர நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கிடைக்கும் தீர்வை ஏற்றுக் கொண்டு மேலதிக அதிகாரங்களுக்காகத் தொடர்ந்து முயற்சிக்கும் அணுகுமுறையைத் தலைவர்கள் பின்பற்றியிருந்தால் பல அழிவுகளையும் இழப்புகளையும் தவிர்த்திருக்கலாம்.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது பிடிவாதமாக இருப்பது தமிழ்மக்களின் நலன் சார்ந்த செயற்பாடாகாது. மற்றைய எல்லா மாகாணங்களிலும் மாகாண சபைகள் செயற்படும் போது வட மாகாணத்தில் மாத்திரம் துரைத்தன நிர்வாகம் நடக்கின்றது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் நிர்வாகம் இல்லை.
கிழக்கு மாகாணத்தில் மாகாண சபை செயற்படுவதால் மக்கள் பல நன்மைகளை அனுபவிக்கின்றனர். வட மாகாண மக்கள் பின்தங்கியிருக்கும் நிலைக்குத் தமிழ்த் தேசிய கூட்டமைப்புத் தலைவர்கள் காரணமாகுவது நியாயமானதல்ல.
வடக்கிலும் மாகாண சபைத் தேர்தல் நடைபெற வேண்டும். இரண்டு மாகாணங்களிலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபைகள் செயற்படுகின்ற அதேவேளை முழுமையான தீர்வை அடைவதற்கான முயற்சியை முன்னெடுக்க முடியும். அந்த முயற்சியை முன்னெடுக்கின்ற அதே வேளை முழுமையான அரசியல் தீர்வுக்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கும் வகையிலும் தமிழ்த் தலைமை செயற்பட வேண்டும். மக்களின் நலனைப் பேணுவதற்கு இதுதான் வழி.

முன்னைய நிலைப்பாடு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தாய்வீடான தமிழரசுக் கட்சி முன்னர் வெளிப்படுத்திய நிலைப்பாட்டையும் பின்பற்றிய அணுகுமுறையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் கவனத்தில் எடுத்துச் செயற்படுவார்களேயானால் அரசியல் தீர்வுக்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்க முடியும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முஸ்லிம்களினதும் வரலாற்று ரீதியான வாழ்புலம் என்ற அடிப்படையிலேயே தமிழரசுக் கட்சி அதன் கோரிக்கைகளை முன்வைத்தது. “தமிழ் மாநிலம் மாத்திரமன்றி முஸ்லிம்களுக்காக முஸ்லிம் மாநிலமொன்றையும் நாம் கோருவோம்” என்று 1956 ஆம் ஆண்டுத் தேர்தலுக்கான விஞ்ஞாபனத்தில் தமிழரசுக் கட்சி கூறியிருந்தது. மானிப்பாய் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வி. தர்மலிங்கம் 1971 ஆம் ஆண்டு அரசியலமைப்பு நிர்ணய சபையில் உரையாற்றுகையில், தமிழருக்கு ஒன்றும் முஸ்லிம்களுக்கு ஒன்றுமாகச் சிறுபான்மையினருக்கு இரண்டு மாநிலங்களைக் கோருவதெனக் கட்சி உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்று கூறினார்.
பண்டார - செல்வா ஒப்பந்தப் பேச்சு வார்த்தையில் இரண்டு மாகாணங்களை யும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழரசுக் கட்சி வலியுறுத்தவில்லை. வடக்குக்கு ஒரு பிராந்திய சபையும் கிழக்கு மாகாணத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிராந்திய சபைகளும் என்பதைத் தமிழரசுக் கட்சி ஏற்றுக் கொண்டது. பக்கம் பக்கமாக உள்ள இரண்டு பிராந்திய சபைகள் சுயவிருப்பத்தின் பேரில் இணையலாம் என்ற ஏற்பாடும் அந்த ஒப்பந்தத்தில் இருந்தது. மக்கள் சுயமாகத் தீர்மானித்து இணைவதையே தமிழரசுக் கட்சி அப்போது விரும்பியது
»»  (மேலும்)