10/31/2010

வேகம் பெற்று வரும் அறுகம்பே வளர்ச்சித் திட்டங்கள்

கிழக்கிலங்கையின் பிரசித்திபெற்ற உல்லா சக் கடற்கரையான அறுகம்பேயை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் புதிய திட்டங்கள் நடை முறைப்படுத்தப்படவுள்ளன. ஏற்கனவே நடை முறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் திட் டங்கள் குறித்து விளக்கம் அறிந்த அறுகம்பே உல்லாசத்துறை சங்கத் தலைவர் ரஹீம்,
தற்போது நிலவும் சமாதானச் சூழ்நிலையில் அறுகம்பேயின் உல்லாசத்துறை கடந்த வரு டத்திலும் பார்க்க தற்போது முன்னேற்றம் கண்டுள்ளது என்றும் ஹோட்டல்களில் உல்லா சப் பயணிகளின் எண்ணிக்கை 2009ல் 100 சதவீதமாகக் காணப்பட்டதோடு முதலீடுகளுக் கான பாதுகாப்பு மற்றும் பயன்தரக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுக் கரையோரங்களில் வெளிநாட்டு முதலீடுகளையும் புதிய சூழல் கவர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அறுகம்பேயின் தனித்தன்மையையும் இயற்கை அழகினையும் பாதுகாப்பதற்கேற்ற அபிவிருத் தியை திட்டமிட்ட ஒரு கட்டமைப்பிலான முறையில் மேற்கொள்வதனை உறுதி செய் வதற்காக உணர்வுபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என ரஹீம் வலி யுறுத்திக் கூறினார். உதாரணமாக, உள்ளூர் மூலப் பொருட்களையும் வளங்களையும் பாவித்து, தாவரங்களையும் விலங்குகளையும் பாதுகாத்து,
சுத்தம் மற்றும் சுகாதார சூழ்நிலையைக் கண்காணித்து அறுகம்பேயின் இயற்கை மற்றும் சுற்றாடலுக்கு ஏற்ப புதிய உட்கட்ட மைப்புத் திட்டங்களும் கட்டடங்களும் திட்டமிடப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
உல்லாசப் பயணிகளுக்கு உயர்ந்த சேவையை வழங்குவதற்காக பல்வேறு கருத்திட்டங்கள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. முதலாவது உல்லாசப் பயணிகள் மத்திய நிலையம், பொத்துவில் பிரதேசத்தில் புதிய கிழக்குக் கரையோர சமூக அவிவிருத்தி திட் டத்தினால் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் ஹோட்டல் உரிமையாளர்களுக்காக ஸிஷிதியிளி நிறுவனத்தினால் ஒரு சிறந்த விழிப்புணர்வூட் டும் நிகழ்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்பட்ட தோடு உல்லாசத்துறை மற்றும் சமூகமட்ட உல் லாசத்துறையில் விசேடத்துவமுடைய இலங்கை உல்லாசத்துறையினால் வழிகாட்டிகளுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டன. இந்தச் சங்கம் உள்ளூர் அதிகாரிகள். அரச உத்தியோகத் தர்கள் மற்றும் திஷிணிரிஹி, யிவிரியி லிvலீrsலீas, ஸினிளிஜி போன்ற நிறுவனங்களுடன் அறு கம்பே உல்லாசத்துறைச் சங்கம் நெருக்கமாக இணைந்து பணியாற்றி வருகிறது.
பாரிய சமூக பங்களிப்பினை உறுதிப்படுத் திக்கொண்டு பல்லினக் குழுக்களையும், வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் மற்றும் கரையோர பாதுகாப்புத் திணைக்களம், முச் சக்கர வண்டிச் சங்கம், மீன்பிடிக் கைத்தொழில் சங்கம், விவசாயிகள் அமைப்பு, மகளிர் அபிவிருத்திச் சங்கம், முன்பள்ளிச் சங்கங்கள் மற்றும் கால்நடை அபிவிருத்திச் சங்கம் உட்பட அறுகம்பேயிலுள்ள அனைத்து மக்க ளுடனும் நெருக்கமாகக் கைகோர்த்துக் கொண்டு அறுகம்பே உல்லாசத்துறை சங்கம் தனது பணியை செய்து வருவதாகவும் இவர் மேலும் தெரிவித்துள்ளார்.
»»  (மேலும்)

கிழக்கு மாகாண மக்கள் அரசியல் அரங்கில் இருந்த நிலையிலிருந்து உயர்வான ஒரு கட்டத்துக்கு வந்திருக்கின்றார்கள்.பதின்மூன்றாவது அரசிய லமைப்புத் திருத்தத்தை ஏற்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடித்துக் கூறுவது இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் பிரதான தடைக்கல்லாக இருக்கின்றது.
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்க் கட்சிகள் மத்தியில் எண்ணிக்கையில் கூடுதலான பிரதிநிதிகளைக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்வு நடைமுறையில் பிரதான பங்காளியாக இருக்க வேண்டிய அவசியத்தைக் கூட்டமைப்புத் தலைமை உணர்ந்து செயற்படுகின்றதா என்ற கேள்வி இங்கு எழுகின்றது.
அரசியல் தீர்வை அடைவதற்குத் தமிழ்க் கட்சிகளுக்கிடையே ஐக்கியம் ஏற்பட வேண்டும் என்று ஜனாதிபதி அண்மையில் கூறியதில் அர்த்தம் உண்டு. தீர்வு முயற்சியை முன் னெடுப்பதற்குத் தடையாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருப்பதை மனதில் வைத்தே ஜனாதிபதி அவ்வாறு கூறியிருக்க வேண்டும்.
மறுபுறத்தில் தாங்கள் தீர்வுக்குத் தடையாகச் செயற்படவில்லை என்றும் பதின்மூன்றாவது திருத்தம் பல குறைபாடுகளைக் கொண்டதாக இருப்பதாலேயே அதை எதிர்ப்பதாகவும் கூட்டமைப்புத் தலைவர்கள் கூறுகின்றார்கள்.
பதின்மூன்றாவது திருத்தத்தில் குறை பாடுகள் உள்ளன என்பதை மறுப்ப தற்கில்லை. மாகாண சபைக்குரிய விடயங்கள் தொடர்பாகப் பாராளுமன் றம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையு டன் சட்டம் இயற்றுவதற்கான ஏற் பாடு, மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட விடயங்களில் எவற்றையாவது தேசியக் கொள்கைக்கு உட்பட்டதெனப் பிரகடனப் படுத்துவதன் மூலம் அவற்றை மத்திய அரசாங்க பட்டி யலுக்குள் கொண்டு வரக்கூடிய ஏற்பாடு, பொலிஸ் அதிகாரங்கள் வழ ங்கப்படாமை என்பன மாகாண சபை அமைப்பிலுள்ள பிரதான குறைபாடுகள். இக்குறைபாடுகள் உள்ளன என்பதற்காக மாகாண சபையை இன்றைய கட்டத்தில் நிராகரிக்க முடியுமா? நிராகரிப்பதால் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை உண்டா? இவை விடை காண வேண்டிய வினாக்கள்.
இனப் பிரச்சினைக்கு முழுமையானது எனக் கருதக் கூடிய தீர்வை உட னடியாகப் பெறுவது சாத்தியமில்லை. டொனமூர் அரசியலமைப்பு, சோல்பரி அரசியலமைப்பு, குடியரசு அரசிய லமைப்பு எனக் கட்டங்கட்டமாக இல ங்கை அதன் சுதந்திரத்தை உறுதிப் படுத்தியது போலவே இனப் பிரச் சினைக்கான இறுதித் தீர்வையும் கட்டங்கட்டமாக அடைய வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம். அவ்வாறான கட்டங்களுள் ஒன்றாகவே இப்போது பதின்மூன்றாவது திருத்தம் இருக்கின்றது.
பதின்மூன்றாவது திருத்தத்தை நிரா கரிப்பதானால் அதனிலும் பார்க்கக் கூடுதலான ஒரு கட்டத் தீர்வுக்குச் செல்லக்கூடிய சாத்தியக்கூறு இருத்தல் வேண்டும். அவ்வாறான சாத்தியம் இப்போது இல்லை.
மாகாண சபையிலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர்வு நிச்சயமாக அரசியலமைப்புத் திருத் தத்துக்கூடாகவே நடைமுறைக்கு வர முடியும். சர்வசன வாக்கெடுப்பும் தவிர்க்க முடியாதது. சர்வசன வாக் கெடுப்பு அகில இலங்கை மட்டத்தில் நடைபெறுவதென்பதால் அரசியல் தீர்வை அங்கீகரிப்பதற்குச் சிங்கள மக்களின் ஆதரவு அத்தியாவ சியமானது. அதாவது நியாயமான அரசியல் தீர்வை அடைய வேண் டுமானால் சிங்கள மக்களில் கணிசமானோரின் ஆதரவு அவசியம். இந்த ஆதரவு இப்போது இல்லை என்ற கசப்பான உண்மையை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.
தமிழ் அரசியலை வழி நடத்தியவர்கள் சிங்கள மக்களுக்கும் தமிழ் மக் களுக்குமிடையே இடைவெளியொ ன்று வளர்ந்து வரும் வகையிலேயே செயற்பட்டிருக்கின்றார்கள். இச் செயற்பாடு அவர்களின் அரசியல் அந்தஸ்தைத் தக்க வைக்க உதவியதேயொழிய இனப் பிரச் சினைக்கான தீர்வை வெகுதூரம் பின்னுக்குத் தள்ளிவிட்டது. இதைப் பற்றி இப்போது அதிகம் பேசுவதால் எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதிலேயே இப்போது கவனம் தேவை.
அரசியல் தீர்வுக் கோரிக்கையைச் சிங்கள மக்கள் பிரிவினைக்கான முஸ்தீபாகப் பார்க்கும் நிலை புதிய ஒரு வளர்ச்சிப்போக்காகும். குறிப்பிட்டுக் கூறுவதானால், பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வு முயற்சி தோல்வி அடைந்ததற்குப் பிந்திய வளர்ச்சிப்போக்கு. அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு தெரிவித்து வந்த தமிழ்த் தலைவர்கள் இறுதி நேரத்தில் அதை எதிர்த்ததோடு நிற்காமல் புலிகளின் தனிநாட்டு அரசியலுக்குள் சங்கமமாகியதன் விளைவாகவே அரசியல் தீர்வுக் கோரிக்கையைச் சிங்கள மக்கள் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலை தோன்றியது.
இப்போது காரணகாரியம் பேசிக் கொண்டிராமல் சிங்கள மக்களை அரசியல் தீர்வின் பக்கம் வென்றெ டுப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழ்த் தலைவர்கள் இறங்க வேண் டும். இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இது முக்கியமான முன்தேவை. முதலாவதாகத் தமிழ் மக்களின் அரசியல் தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும். தென்னிலங்கை அரசியல் அரங்கில் நட்பு சக்திகளை இனங்கண்டு அவர்களுடன் தேசிய மட்டத்தில் இணைந்து செயற்படுவதன் மூலம் சிங்கள மக்களை வென்றெடுப்பது சாத்தியமாகும். இது ஒரு நீண்டகால நடைமுறை. உடனடிப் பலனை எதிர்பார்க்க முடியாது.
நியாயமான அரசியல் தீர்வை அடைவதற்குச் சிங்கள மக்களின் ஆதரவு அத்தியாவசியமானது என்பதையும் அம்மக்களை அரசியல் தீர்வின் பக்கம் வென்றெடுப்பது நீண்ட கால நடைமுறைக்கூடாகவே சாத்தியமாகும் என்பதையும் கவனத்தில் எடுத்துப் பார்க்கையில், பதின்மூன்றாவது திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களைக் கொண்ட தீர்வு உடனடியாகச் சாத்தியமில்லை என்பது புரியும். இந்த நிலையில் பதின்மூன்றாவது திருத்தத்தை நிராகரிப்பது புத்திசாலித்தனமான தல்ல.
குறைபாடுகளுடைய தீர்வை ஏற் றுக்கொள்வதா என்ற கேள்வி அடு த்து எழலாம். குறைபாடுகள் உள்ள போதிலும் மாகாண சபைகளினால் மக்கள் நன்மை அடைகின்றார்கள் என்பதை அனுபவத்தில் காண்கிறோம். மாகாண சபை முறை மக்கள் எதிர் பார்க்கும் எல்லா உரிமைகளையும் தராத போதிலும் இழப்புகள் எதுவும் இடம் பெறுவதில்லை. இழப்புகள் எதுவும் இல்லாததும் சில உரிமைகளை வழங்குவதுமான மாகாண சபைகளை ஏற்றுக்கொள்வதில் ஒரு தவறும் இல்லை. மாகாண சபைகளை ஏற்றுச் செயற்படுத்துகின்ற அதேவேளை குறைபாடுகளை நிவர்த்திப்பதற்கான பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளலாம். நிதானமாக மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தை மூலம் குறைபாடுகளுக்குத் தீர்வு காண்பது சிரமமானதாக இருக்காது.
அரசியல் தலைவர்கள் எப்போதும் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் நலனில் அக்கறை உடை யவர்களாக இருக்க வேண்டும். பதின்மூன்றாவது திருத்தம் போதுமான தல்ல எனக் கூறி நிராகரிக்கும் போது அடுத்த கட்ட நகர்வுக்கான சாத்தியம் உண்டா என்பது பற்றியும் நிராகரிப்புக்குப் பின் மக்களுக்கு ஏதா வது நன்மை கிடைக்குமா அல்லது அவர்களின் துன்பம் தொடருமா என்பது பற்றியும் நிதானமாகச் சிந்தித்தே முடிவுக்கு வர வேண்டும்.
பதின்மூன்றாவது திருத்தத்துக்கு அடுத்த கட்ட நகர்வு உடனடியாகச் சாத் தியமில்லை என்பதை மேலே பார்த்தோம். அடுத்த கட்ட நகர்வு சாத்தியமில்லை என்பதன் அர்த்தம் வேறொரு தீர்வு சாத்தியமில்லை என் பதாகும்.
பதின்மூன்றாவது திருத்தத்தை ஒட்டுமொத்தமாக நிராகரித்தால் மக்கள் இப்போது அனுபவிக்கும் துன்பம் தொடர்கதையாகவே முடியும். படிப்படியாக அரசியல் தீர்வை அடைவது என்ற கோட்பாடு மக்க ளின் நாளாந்த வாழ்க்கையிலும் படிப்படியான முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதுடன் இணைந்தது.
கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்கள் மாகாண சபை மூலம் அனுபவிக்கும் நன்மைகள் இன்று வட மாகாண மக்களுக்கு மறுக்கப்பட்டிருக்கின்றன. கிழக்கு மாகாண மக்கள் இருந்த நிலையிலிருந்து உயர்வான ஒரு கட்டத்துக்கு வந்திருக்கின்றார்கள். வட மாகாண மக்களும் அந்தக் கட் டத்தை அடைவதற்குத் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு வழிவிட வேண்டும்.
கடந்த காலத் தவறுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு தீர்வும் முன்வைக்கப்பட்ட வேளைக ளில் அவற்றிலும் பார்க்க மேலான தீர்வே தேவை எனக் கூறித் தமிழ்த் தலைவர்கள் நிராகரித்திருக்கின்றார்கள். அதன் விளைவு தமிழ் மக்களுக்கு வேதனையும் விரக்தியுமாகவே மிஞ்சியிருக்கின்றது. தீர்வு முயற்சியும் வெகுவாகப் பின்தள்ளப்பட்டுவிட்டது.
இப்போதாவது சரியான முடிவை நம் தலைவர்கள் எடுப்பார்களென நம்பலாமா?
»»  (மேலும்)

துருக்கி அரசாங்கத்தின் ஜனநாயக நகர்வுக்கு இராணுவம் குழிபறிக்குமா?

துருக்கியில் செப்ரெம்பர் 12ம் திகதி நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பு நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் (A.K. கட்சி) அரசாங்கத்துக்குப் புதிய பலத்தைக் கொடுத்திருக்கின்றது. வாக்கெடுப்பில் பங்குபற்றிய 80 வீதம் வாக்காளர்களில் 58 வீதமானோர் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். அரசியலமைப்பில் 26 திருத்தங்களைச் செய்வதற்கு அரசாங்கம் மக்களின் அங்கீகாரத்தைக் கோரியிருந்தது.
ஜெனரல் கெனான் எவ்றென் (Kenan Evren) என்பவரின் தலைமையில் 1980ம் ஆண்டு சதிப் புரட்சியை நடத்திய அதிகாரிகளே தற்போதைய அரசியலமைப்பைத் தயாரித்தார்கள். அது 1982ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இச் சதிப் புரட்சியின் போது ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் இடது சாரிகள். ஏராளமானோர் சிறைகளில் சித்திரவதை செய்யப்பட்டனர்.
பலர் காணாமல் போயினர். சர்வசன வாக்கெடுப்பு நடைபெற்றதற்கு ஐந்து நாட்களுக்கு முன், செப்ரெம்பர் 7ம் திகதி ‘வெட்கத்தின் காட்சியகம்’ (Museum of shame) என்ற பெயரில் ஒரு கண்காட்சி இடம்பெற்றது. சதிப் புரட்சியின் போது கொல்லப்பட்டவர்களின் படங்களும் சித்திரவதைக்குப் பயன்படுத்தப்பட்ட கருவிகளும் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டன.
இராணுவத்தினால் தயாரிக்கப்பட்ட தற்போதைய அரசியலமைப்பில் அரசியல் மற்றும் நீதித்துறை உட்படச் சகல துறைகளிலும் இராணுவத்தின் மேலாண்மையை உறுதிப்படுத்தும் பல சரத்துகள் உள்ளடக்கப்பட்டன. அரசியலமைப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதிகளை நியமிப்பதில் இராணுவம் ஏகபோக பாத்திரம் வகிப்பதற்கு வகை செய்யும் ஏற்பாட்டையும் 1980ம் ஆண்டின் சதிப் புரட்சியில் பங்கு பற்றிய இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுப்பதைத் தடை செய்யும் 15வது சரத்தையும் விசேடமாகக் குறிப்பிடலாம். இச் சரத்தை முழுமையாக நீக்குவதும் அரசாங்கம் முன்வைத்த 26 திருத்தங்களுள் ஒன்றாகும். ஜெனரல் கெனான் எவ்றென் துருக்கியிலேயே இருக்கிறார். விரைவில் அவர் நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்படுவார் என எதிர்பார்க்கப்படு கின்றது.
இராணுவத்தினது ஆலோசனையின் பேரில் அரசியலமைப்பு நீதிமன்றம் நான்கு தடவைகள் குர்திஷ் அரசியல் கட்சிகளைத் தடை செய்திருக்கின்றது. இராணுவம் செல்வாக்குச் செலுத்த முடியாதவாறு அரசியலமைப்பு நீதிமன்றம் சீரமைக்கப்படவுள்ளது. அரசியலிலும் சிவிலியன் விடயங்களிலும் இராணுவத்தின் மேலாண்மையை இல்லாதொழிப்பதே அரசாங்கம் செய்யவுள்ள திருத்தங்களின் பிரதான நோக்கம்.
இதுவரை காலமும் ஜனநாயகம் நடைமுறையில் இல்லாதிருந்த துருக்கியில் ஜனநாயகத்துக்கான அத்திவாரத்தை அரசாங்கம் முன்வைத்துள்ள அரசியலமைப்புத் திருத்தங்கள் இடவிருக்கின்றன என்று சில அரசியல் நோக்கர்கள் கூறுவதை நிராகரிக்க முடியாது. கெமால் அதாதுர்க் (Kemal Ataturk) 1923ம் ஆண்டு துருக்கி அரசை அமைத்த நாளிலிருந்து சகல துறைகளிலும் இராணுவத்தின் செயலாணையே செல்லுபடியானதாக இருந்தது. தற்போதைய எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சி (CHP) தொடர்ச்சியாக இராணுவத்தின் சகபாடியாகவே செயற்பட்டு வந்தது. இப்போதும் அவ்வாறே செயற்படுகின்றது.
குடியரசு மக்கள் கட்சியிலிருந்து வெளியேறியவர்களால் ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கட்சி 1950ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அந்த அரசாங்கம் சில சீர்த்திருத்தங்களைச் செய்ய முற்பட்டதும் குடியரசு மக்கள் கட்சியின் ஆதரவுடன் இராணுவம் சதிப் புரட்சி மூலம் அரசாங்கத்தைக் கவிழ்த்ததுடன் பிரதமரையும் இரண்டு அமைச்சர்களையும் தூக்கிலிட்டது.
சர்வசன வாக்கெடுப்பில் அரசாங்கத்துக்குக் கிடைத்த வெற்றி துருக்கியின் மதசார் பின்மைக்குச் சாவுமணி என்றும் AK கட்சியின் மதவாத சர்வாதிகாரத்துக்கு வழி வகுத்துள்ளது என்றும் குடியரசு மக்கள் கட்சியின் தலைவர் கெமால் கிலிக்தரோக்லு (Kemal Kilicdaroglu) கூறுகின்றார். அரசியலமைப்புச் சீர்த்திருத்தங்கள் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் வெகுவாகப் பாதிக்கப்படவுள்ள இராணுவத்தினர் மத்தியில் ஆட்சிக் கவிழ்ப்புச் சிந்தனையைத் தூண்டும் வகையில் இவரது கூற்று அமைந்திருந்தது. ஆளுங் கட்சியான AK கட்சி முன்னர் ஒரு மதவாத அமைப்பாக இருந்ததையே CHP தலைவர் நினைவு படுத்துகின்றார்.
அரசியலமைப்புச் சீர்த்திருத்தங்கள் துருக்கியில் ஜனநாயகம் மலர்வதற்கு வழிவகுப்பது அரசாங்கத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது. அதாவது இராணு வத்திடமிருந்து வரக்கூடிய அச்சுறுத்தலைத் தவிர்ப்பதற்கான ஏற்பாடுகளில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். இந்த ஏற்பாடுகளில் மதசார்பின்மை, ஜனநாயகம் ஆகியவற்றைப் பேணுவதற்கான நடவடிக்கைகள் முக்கியமானவை. குர்திஷ் மக்களின் கோரிக்கைகளையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சர்வசன வாக்கெடுப்பில் குர்திஷ் மக்கள் பங்கு பற்றியிருந்தால் அரசாங்கத்துக்குச் சார்பான முடிவு மேலும் பலமானதாக இருந்திருக்கும். சர்வசன வாக்கெடுப்பைப் பகிஷ்கரிக்குமாறு குர்திஷ் அரசியல் கட்சிகளும் சிறையிலுள்ள குர்திஷ் தலைவர் அப்துல்லா ஒகலனும் விடுத்த வேண்டுகோள் காரணமாகக் குர்ஷித் பிரதேசங்களில் வாக்குப் பதிவு மிகவும் குறைவாகவே இருந்தது. முன்வைக்கப்பட்ட அரசியல் சீர்த்திருத்தங்களுக்குக் குர்திஷ் மக்கள் எதிரானவர்களல்ல. தங்கள் கோரிக்கைகள் அரசாங்கத்தினால் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பதே அவர்களின் குற்றச்சாட்டு. அரசியல் கட்சிகள் பாராளுமன்றத்தில் உறுப்புரிமை பெறுவதற்குக் குறைந்த பட்சம் பத்து வீதம் வாக்குகளைப் பெற வேண்டும் என்ற நிபந்தனையை நீக்குவது, சிறையிலுள்ள குர்திஷ் தலைவர்களை விடுதலை செய்வது, குர்திஷ் பிரதேசங்களில் இராணுவ நடவடிக்கையை நிறுத்துவது என்பனவே குர்திஷ் மக்களின் பிரதான கோரிக்கைகள். துருக்கியின் மொத்த சனத்தொகையில் குர்திஷ் மக்கள் 20 வீதமளவில் இருக்கின்றனர்.
»»  (மேலும்)

மட்டக்களப்பில் இன்று ஆக்கத்திறன் கண்காட்சி ஆரம்பம்

batticaloa-exibitionமட்டக்களப்பு இந்துக்கல்லூரி மண்டபத்தில் நடைபெறும் மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களின் ஆக்கத்திறன் கண்காட்சி இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன்றும் நாளையும் நடைபெறும் இக்கண்காட்சியை மட்டக்களப்பு மாவட்ட முன் பள்ளி ஆசிரியர்களின் அபிவிருத்தி வலயமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இன்று ஆரம்பிக்கப்பட்ட இக்கண்காட்சி நாளை மாலையுடன் நிறைவு பெறவுள்ளது.
இக்கண்காட்சியில் மட்டு. மாவட்டத்திலுள்ள மட்டக்களப்பு, கல்குடா, பட்டிருப்பு ஆகிய மூன்று வலயங்களிலுமுள்ள 500 முன்பள்ளிகளிலிருந்து 1500ஆசிரியைகள் பங்குபற்றியுள்ளனர்.
முன்பள்ளி ஆசிரியைகளை கௌரவிக்கும் நிகழ்வும் இதன் போது இடம்பெற்றது.
»»  (மேலும்)

10/30/2010

தேசிய மட்ட விளையாட்டு விழா; காத்தான்குடி மாணவன் மஸி கெளரவிப்பு

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையில் திருகோணமலையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் முப்பாய்ச்சல் போட்டியில் கலந்துகொண்டு முதலாமிடம்பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவான காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலை மாணவன் எம். யூ. எச். மஸி காத்தான்குடியில் நடைபெற்ற சாதனையாளர் பாராட்டு விழாவில் விருது சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன கல்வி அபிவிருத்திச்சபை நடாத்திய “சாதனையாளர் பாராட்டு விழா 2010” அண்மையில் (23.10.2010) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் பிரதித் தலைவர் சட்டத்தரணி ஏ. எல். அப்துல் ஜவாத் தலைமையில் நடைபெற்றது.
இச்சாதனையாளர் பாராட்டு விழாவின் போது பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் மாகாண மட்டத்தில் தெரிவான மாணவன் எம். யூ. எச். மஸிக்கு விருது சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
இவ்விழாவில் கெளரவ அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம். ரி. எம். நிஸாம், சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் யூ. எல். எம். ஜெயினுதீன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், உலமாக்கள், பெரியோர்கள், பெற்றோர்கள், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், சம்மேளன உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்
»»  (மேலும்)

பொதுத் தேர்தலுக்குப் பின் ஆங்சாங் சூகி விடுதலை

இராணுவ ஆட்சி நடைபெற்று வரும் மியன்மாரில் எதிர்க்கட்சித் தலைவி ஆங்சான் சூகி, பல ஆண்டுகளாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அந்நாட்டில் நவம்பர் 7ம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்தல் முடிந்த பின்னர் ஆங்சான் சூகி விடுதலை செய்யப்படுவார் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் நியான் வின் கூறியுள்ளார்.
வியட்நாம் நாட்டில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.
»»  (மேலும்)

யுத்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்ட எமது கிழக்கு மாகாணத்தின் இன்றுள்ள எமது ஒரே நம்பிக்கை கல்வி வளர்ச்சிதான் ***வாகரைபரிசளிப்பு விழா நிகழ்வில் முதலமைச்சர்

img_2493
இன்று (29.10.2010) வாகரை கோட்டக்கல்வி அதிகாரி திரு குணலிங்கம் தலைமையில் கோட்ட மட்டத்திலான பரிசளிப்பு விழா நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்
கல்வியின் எழுச்சியானது கிராமப்புறங்களில் இருந்து தோன்றும் போதுதான் நாடும் மக்களும் முன்னேற்றமடைவார்கள் - இது மகாத்மாகாந்தியின் அற்புத வாக்கு.
  இன்று கிழக்கு மாகாணமானது மாகாணசபை மக்கள் பிரதிநிதிகளால் பொறுப்பேற்கப்பட்ட பின்பு கல்வியில் பாரிய வளர்ச்சி கண்டு வருகின்றது. குறிப்பாக 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை சாதாரணதர பரீட்சைகளில் கிழக்கு மாகாணம் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத பாரிய முன்னேற்றத்தைக்கண்டு வருகின்றது. இது எமது சமுகத்தில் உயர்தகு வளர்ச்சியின் நல்லதொரு அறிகுறியாகும். இக்கல்வி வளர்ச்சியானது பின்தங்கிய கிராமப்புற மாணவர்களிடம் இருந்து வெளிப்படுவது இன்னும் சிறப்பான அம்சமாகும்.
யுத்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்ட எமது கிழக்கு மாகாணத்தின் இன்றுள்ள எமது ஒரே நம்பிக்கை கல்வி வளர்ச்சிதான், இக்கல்வி வளர்ச்சியின் ஊடாகவே சிதைவடைந்த எமது சமுதாயத்தை மீள கட்டியெழுப்புவதுடன் நாம் எதிர்பார்க்கின்ற சமூக அரசியல் இலக்குகளையும் எய்தமுடியும் அவ்வகையில் கிழக்கு மாகாணத்தில் பின்தங்கிய பகுதியில் இருந்து ஏற்பட்டுவரும் கல்வி மறுமலர்ச்சியில் ஒரு சிறப்பம்சம் இருக்கின்றது.
பின்தங்கிய கிராமப்புற மாணவர்கள் யுத்தத்தின் வடுக்களையும் சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகளையும் நேரடியாக உணர்ந்தவர்கள், அவ்வலியை அனுபவித்தவர்கள், எனவே இவர்களினுடாக ஏற்படும் கல்வி மறுமர்ச்சியானது சமுதாயம் சார்ந்ததாக சமுக நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக அமையும் என்பதில் ஐயமில்லை.
அவ்வகையில் யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட, யுத்த்தின் இடர்பாடுகளை நேரடியாக உணர்ந்த, இப்பிரதேச மாணவர்களிடம் இருந்து வெளிப்படும் திறமையானது மிக முக்கியத்துவம் கொடுத்தே பேணிப்பாதுகாத்து ஊக்கிவிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பின்தங்கிய பகுதிகளிலும் கல்வி ரீதியான மறுமலர்ச்சி ஏற்பட முதலமைச்சர் என்ற தோரணையிலும் அதனை தாண்டியும் ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்க திடசங்கர்ப்பம் பூண்டுள்ளேன். அவ்வகையில் இந்நிகழ்வை மனதார வாழ்த்துவதுடன் இதில் பங்கெடுப்பதிலும் மகிழ்ச்சி அடைகின்றேன். என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்..
img_2509
img_2511
img_2588
»»  (மேலும்)

10/29/2010

நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையை அமுலாக்க ஆலோசனைக்குழு

நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் பரிந்துரைக்கப் பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்து வதற்கு ஏதுவாக ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் நடை பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரி யர் ஜீ.எல். பீரிஸ் முன்வைத்த ஆலோசனைப்படி இந்த ஆலோச னைக் குழுவுக்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியதாக அமைச் சரவையின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு (ழிழிஞிவி) அதன் இடைக்கால அறிக்கையை 2010.09.13 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளித்தது. 2010 ஓகஸ்ட் 11 ஆம் திகதி முதல் மேற்படி ஆணைக்குழு பொதுமக்களிடமிருந்து சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது.
இந்த இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில சிபாரிசுகளை அரசு ஏற்கனவே படிப்படியாக நிறைவேற்றி வருகிறது.
அதிஉயர் பாதுகாப்பு வலயம் மற்றும் அதன் பரப்பளவை படிப்படியாக அரசு குறைத்துக் கொண்டு வருகிறது. இப்பகுதியிலுள்ள காணிகள் அந்தந்த உரிமையாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டும் வருகின்றன. உரிமையாளர்கள் இல்லாத காணிகள் சமூக அபிவிருத்தி பணிகளுக்காக பயன்படுத்தப்படும்.
2009 மே மாதமளவில் புலிகளுடன் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது 11,696 புலிகள் படையினரிடம் சரணடைந்தனர். இவர்களில் 5120 பேர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட் டுள்ளனர். இந்த ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட சிபார்சுகளில் ஏற்கனவே நடைமுறைப் படுத்தப்பட்டு வருவனவற்றையும் மக்களின் மொழி உரிமையை உறுதிப் படுத்துதல் உட்பட மற்றைய சிபார்சுகளையும் தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்துகின்றது. இதற்கு ஏதுவாகவே இவ்வாலோசனைக் குழுவை நியமிப்பதென அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
»»  (மேலும்)

சிறுவர் உரிமைகளை மதித்து அதனை மேம்படுத்த வேண்டும். – கிழக்கு மாகாண முதலமைச்சர்.

 

childசிறுவர் உலகு ஒளிபெற அனைவரும் சக்தி கொடுங்கள் என்ற தொனிப் பொருளின் அடிப்படையில் கிழக்கு மாகாண சிறுவர் நன்நடத்தைப் பிரிவின் ஏற்பாட்டில் கொண்டாhப்பட்ட சிறுவர் தின நிகழ்வானது இன்று(27.10.2010) மட்டக்களப்பு தன்னாமுனை மியானி நகரில் இடம்பெற்றது.
இந் நிகழவில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி. சந்திரகாந்தன், நாட்டிலுள்ள அனைத்துச் சிறுவர்களினதும் சிறுவர் உரிமைகளை மதித்து அதனை மேம்படுத்த வேண்டும். அதேபோல் சிறுவர் துஸ்ப்பிரயோகத்திலிருந்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும். சிறுவர் உரிமைகளை மதிக்க வேண்டும் என்கின்ற போது சிறுவர்களுக்கு கருத்துக்களை சொல்ல உரிமையுண்டு அதற்கு அனுமதி வழங்க வேண்டும். அதேபோல் சிறுவர்களுக்;கு கல்வி கற்கின்ற உரிமை இருக்கின்றது. அதற்கு நாம் துணை புரிய வேண்டும். சிறுவர்களுக்கு பாதுகாப்பான குடும்ப சூழல் மிகவும் அவசியம். அதுவும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது எமது கடமை. இதே போன்று அவர்களை துஸ்ப்பிரயோகங்களிலிருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் பெரியவர்களான எம்மைச் சார்ந்தது. பாலியல் துன்பறுத்தலில் இருந்து பிள்ளைகளைப் பாதுகாத்தல், எமது பிள்ளைகள் இடத்தரகர்கள் வாயிலாக விற்கப்படுவதைத் தடுத்தல், வன்முறையற்ற சூழலில் வாழும் பிள்ளைகளுக்கு இடமளித்தல், ஒவ்வொரு பிள்ளைகளையும் உழைப்புச் சுரண்டலில் இருந்து பாதகாத்தல் போன்ற முக்கிய விடயங்களில் நாம் சிறவர்கள் தொடர்பில் அதீத அக்கறை கொள்ள வேண்டும்.

விசேடமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள பிள்ளைகள் கடந்த காலங்களிலே பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வந்திருந்தார்கன். அவர்களது முக்கிய சில உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தன. ஆனால் இன்றைய காலகட்டத்தில் அவ்வாறான சூழல் இல்லை. எனவே எமது மாகாணத்தின் எமது பிள்ளைகளை சகல வழிகளிலும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம்மைச் சார்ந்தது. இச் சிறுவர்களைப் பாதுகாப்பதற்கென்று கிழக்கு மாகாணத்தில் விசேட ஓர் அமைச்சு செயற்படுகின்றது. அதிலும் விசேடமாக சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களம் ஒன்று உள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலே சுமார் 78 பதிவு செய்யப்பட் சிறுவர் பாதுகாப்பு இல்லங்கள் இரக்கின்றன. ஒருசில அதிகாரமற்ற முறையில் செயற்படுகின்றதாக தகவல்கள் உள்ளன. அவ்வாறிருப்பின் அதை வழிநடத்துகின்றவர்களுக்கு சட்ட நடமவடிக்கை மேற்கொள்ளபடும் எனவும் அவர் குறிப்பிட்டார். Nஅமுலம் கிழக்கு மாகாண சிறுவர்களழன் மேம்பாட்டிற்காக கிழக்கு மாகாண அமைச்சு வருடார்ந்தம் 40மில்லியன் ரூபாய் நிதியினைச் செலவிடுகின்றது.  எது எவ்வாறாயினும் எமது சிறுவர்களுக்கான அடிப்படை உரிமை கல்வி சீராக போதிக்கப்பட வேண்டும். அதனோடு இணைந்த வகையில் அவர்களுக்கான பாதுகாப்பும் உறுதி செய்ய வேண்டும். இதனூடாக அவர்கள் எதிர் நோக்குகின்ற வன்முறைகளைக் குறைகட்க முடியும் என தான் நம்புவதாகவும் அவர் தனதுரையில் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் மொகான் விஜய விக்ரம, கிழக்கு மாகாண அமைச்சர்களான எம்.எஸ். உதுமாவெல்வே, எம்.எஸ். சுபைர் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பூ, பிரசாந்தன் , பரீட, மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான யுனிசெப் அமைப்பின் தலைமை அதிகாரி ரஹ்மான் ஆகியோரும் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தார்கள். சிறுவர்கள் பல்வேறு கலைநிகழ்வுகளையும் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. கலைநிகழ்வுகளையும் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.child1
child2
child4
child6
child5
 
»»  (மேலும்)

10/28/2010

பெனாசீர்பூட்டோவை தலிபான்களே கொலை செய்தனர்: புலனாய்வுக் குழு

நீண்ட காலமாக வெளிநாட்டில் தங்கி இருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர், கடந்த 2007ம் ஆண்டு பாகிஸ்தான் திரும்பினார். அதே ஆண்டு டிசம்பர் 27ம் திகதி அவர் ராவல்பிண்டி நகரில் திறந்தவேனில் நின்றபடி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, அவரை ஒரு மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார். அதைத் தொடர்ந்து மனித வெடிகுண்டு தாக்குதலும் நடந்தது. இதில் பெனாசீர் பலியானார். மேலும் 24 பேரும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் பற்றி காலித் முகம்மது என்பவர் தலைமையில் பாகிஸ்தான் தேசிய புலனாய்வு குழு விசாரணை நடத்தி வந்தது. கொலையில் சம்பந்தப்பட்ட அப்துர் ரகுமான், சதாம், பைஸ் முகம்மது ஆகியோர் தலைமறைவாக இருந்ததால், விசாரணையில் தாமதம் ஏற்பட்டது. இவர்கள் சமீபத்தில் இராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
இந்த விசாரணை தொடர்பாக, பாகிஸ்தான் உள்துறை மந்திரிக்கு கேள்விப்பட்டியலை அனுப்பி பதில் பெற முதலில் தீர்மானிக்கப்பட்டது. பிறகு, அம்முடிவு கைவிடப்பட்டது.
இந்நிலையில், தேசிய புலனாய்வு குழுவின் விசாரணை முடிவடைந்தது. பெனாசீரை, தெரிக்-இ-தலீபான் தீவிரவாத இயக்கம்தான் கொலை செய்ததாக, தேசிய புலனாய்வுக் குழு கண்டுபிடித்துள் ளது. அந்த அமைப்பின் தலைவரான, மறைந்த பைதுல்லா மெகத்தான், இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகவும் தேசிய புலனாய்வுக்குழு கூறியுள்ளது.
அக்குழுவின் விசாரணை அறிக்கை தீவிரவாத வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வரும் 30ம் திகதி தாக்கல் செய்யப்படுகிறது.
கொலை தொடர்பாக, தலிபான் அமைப்பை சேர்ந்த ரபாகத், உசைன், ஷெர் சமான், அத்சாஸ் ஷா, அப்துல் ரஷித் ஆகிய 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். கொலையில் அவர்களின் தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
»»  (மேலும்)

கொழும்பு - மட்டு ரயில் சேவை வழமைக்கு திரும்பியது!

கொழும்பு - மட்டக்களப்பு இடையிலான ரயில் சேவை நேற்று முதல் வழமைக்குத் திரும்பியதாக ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது.
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த ரயில் நேற்று முன்தினம் வெலிகந்தையில் வைத்து தடம்புரண்டது.
மேற்படி புகையிரதம் தடம் புரண்டதையடுத்து கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த இரவு கடுகதி புகையிரதம் அதிகாலை 4.15 மணிக்கு வந்தடைய வேண்டிய நிலையில் நண்பகல் 11.45 மணிக்கே மட்டக்களப்பை வந்தடைந்ததாக மட்டு. புகையிரத நிலைய அதிகாரி கூறினார்.
கொழும்பு - மட்டக்களப்பு இரவு புகையிரத சேவை உட்பட அனைத்து சேவைகளும் வழமைபோன்று இடம் பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


»»  (மேலும்)

கடந்த 30 வருடங்களாக தமிழ் மக்கள் பட்ட கஷ்டங்கள் மேலும் தொடரக் கூடாது

   

திருகோணமலைக்கு விஜயம் செய்த பிரதமர் தி.மு. ஜயரட்ன அம்மாவட்டத்திலுள்ள இந்துக்கோயில்களின் புனரமைப்புக்கென சுமார் 231 இலட்ச ரூபாவை வழங்கினார். 231 ஆலயங்களுக்கும் தலா ஒரு இலட்ச ரூபா வீதம் வழங்கினார். திருகோணமலை அரச அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது பிரதமர் காசோலையை வழங்குவதையும், பிரதியமைச்சர் எம். கே. டி. எஸ். குணவர்தன, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், திருமலை அரச அதிபர் ஆகியோரையும் படத்தில் காண்க      எல்லா இனத்தவர்களும் இந்த நாட்டில் சகோதரர்கள் போல வாழ வேண்டும் என்பதுதான் எமது ஜனாதிபதியின் சிந்தனை யாகும். இதனை பலப்படுத்து வதற்கு நாட்டு மக்கள் அனைவரும் செயல்பட வேண்டும். எந்த ஒரு காரணத்திற்காகவோ அரசியல் வாதிகளின் சூழ்ச்சிகளில் மயங்கி விடவேண்டாம். கடந்த 30 வருடகாலமாக தமிழ் மக்கள் பட்ட கஷ்டங்களின் சின்னமாக விதவைகளும், அனாதைகளான சிறுவர்களும், வசதியாக குடியிந்த வர்கள் வீடுகள் இல்லாத நாடோடிகள் போன்று கூடாரங் களில் வாழும் நிலைமையை முற்றதாக மாற்றி வட, கிழக்கை செழிப்புறச் செய்வதற்கான பல திட்டங்கள் அமுல் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு கடந்த வியாழக் கிழமை பகல் அம்பாறை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய மண்டபத்தில் கல்லோயா இந்து பரிபாலன சபையின் தலைவரும், ஆலயத்தின் தலைவருமான மாகாண சபையின் பிரதம பொறி யியலாளர் வ. கருணநாதன் தலை மையில் அம்பாறை மாவட்டத்தில் அழிந்து போன இந்து ஆலயங் களை புனரமைப்புச் செய்வதற்கு முதல் கட்டட நிதி உதவிக்கான காசோலை வழங்கும் வைபவத்தில் பிரதம மந்திரி தி. மு. ஜயரட்ன குறிப்பிட்டார்.
பிரதமரின் குழுவினரை ஆலய வளாகத்தின் முன்னால் ஆலயத் தலைவர் வ. கருணநாதன் மலர்மாலை அணிந்து வரவேற்று ஆலய நிர்வாகிகள் புடைசூழ மேடைக்கு அழைத்துவரப் பட்டார். மேடையில் வைத்து ஆலயத்தின் செயலாளர் கவிமணி என். மணிவாசகன் பிரதமர் ஜயரட்னாவுக்கு பொன்னாடை போர்த்திக் கெளரவித்தார். யுத்தம், இயற்கை அனர்த்தங்களினால் சேதமடைந்த இந்து ஆலயங்களை புனரமைப்புச் செய்வது தொடர் பாக இந்து கலாசார அமைச்சின் அம்பாறை மாவட்ட கலாசார அதிகாரி எஸ்.
 குணநாயகம் சமர்ப்பித்த அறிக்கையில் முதல் கட்டமாக 41 ஆலயங்கள் புனரமைப்புச் செய்வதற்கு தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான காசோலைகளை பிரதமர் ஜயரட்ன சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கி வைத்தார். இந்த வைபவத்தில் அமைச்சர் பி. தயாரத்தினா பேசுகையில் அம்பாறை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் வரலாற்றுப்புகழ்பெற்ற ஆலயம் நாட்டில் ஏற்பட்ட கலவரத்தின் போது இப்பகுதியில் உள்ள சில விசமிகளின் இந்த ஆலயம் சேதமாக்கப்பட்டது. கல்லோயா இந்து பரிபாலன சபையினரின் முயற்சியால் புனரமைப்புச் செய்யப்பட்ட போதிலும் அவை முழுமையானது அல்ல இதனை சிறந்த முறையில் புனரமைப்புச் செய்ய வேண்டுமென்றார்.
பிரதமர் ஜயரட்ன மேலும் பேசுகையில் நான் கம்பளைப் பகுதியைச் சேர்ந்தவன் அங்கும் அம்பாறை போன்று மூவினமக்களும் குடியிருக்கிறார்கள். அங்குள்ள மதவழிபாட்டுத் தலங்களுக்கும் உதவியுள்ளேன். அங்குள்ள இந்து ஆலயங்களுக்கு நான் சென்று வழிபடுவது எனது வழக்கமாக இருந்துவருகிறது என்றார்.
இந்த நாட்டிலுள்ள சிங்கள மக்கள் தமிழ் மொழியையும், தமிழ் பேசும் மக்கள் சிங்கள மொழியையும் கற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு ஏற்றவாறு அரச ஊழியர்களுக்கான வகுப்புகள் மாவட்ட மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிங்கள மொழிப்பாடசாலை மாணவர்கள் தமிழ் மொழியைக் கற்றுக்கொள் வதற்கும், தமிழ் மொழிப் பாடசாலைகளில் சிங்களத்தைக் கற்றுக் கொள்வதற்கும் தற்போது ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். இலங்கை ஒரு சிறிய நாடு இதனை எந்தக்காரணத்தைக் கொண்டு கூறுபோடமுடியாது. எல்லா இனத்தவர்களும் சகோதர்கள் போல் வாழ வேண்டுமென்று சுட்டிக்காட்டினார். பிரதமரின் பேச்சை அப்படியே ஏ. எச். எம். அஷ்வர் எம். பி. தமிழ் மொழியில் மொழிபெயர்த்துப் பேசினார்.
இந்த வைபவத்தில் மாகாண சபை அமைச்சர் எம். உதுமாலெவ்வை, உறுப்பினர் எஸ். செல்வராஜா, ஆகியோரும் கலந்துகொண்டார்கள். பிரதமர் அம்பாறை பள்ளிவாசல், பெளத்த விகாரை ஆகியவைகளுக்கும் விஜயம் செய்து அங்குள்ள பிரமுகர்களுடனும் கலந்துரையாடினார்.
»»  (மேலும்)

10/27/2010

பிரபாகரன்,பொட்டு அம்மான் பெயர்கள் நீக்கம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முதன்மை குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், மற்றும் அவ்வமைப்பின் உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான ஆகியோர் இருவரும் குற்றவாளிகள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அவர்கள் இருவரும் மரணமடைந்துவிட்டதால் அவர்களது பெயர்கள் நீக்கப்படலாம் என்ற மத்தியப் புலனாய்வுத்துறை (சி.பி,ஐயின்) எம்.டி.எம்.ஏ எனும் கண்காணிப்புக்குழுவின் பரிந்துரையின் பேரில், பெயர் நீக்க உத்தரவை பயங்கரவாதக் குற்றங்களை விசாரிக்கவென அமைக்கப்பட்டிருக்கும் தடா நீதிமன்ற நீதிபதி தட்சிணாமூர்த்தி பிறப்பித்திருக்கிறார்.
இதனையடுத்து முதன்மைக் குற்றவாளி பிரபாகரன், இரண்டாவது குற்றவாளி பொட்டு அம்மான் என்கிற சண்முகநாதன் சிவசங்கரன் ஆகியோர் ராஜீவ் கொலை வழக்கிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் கைவிடப்படுகின்றன என்று நீதிபதி தட்சிணாமூர்த்தி கூறியுள்ளார்.
அதே நேரம் எம்.டி.எம்.ஏ பிரிவு தொடர்ந்து புலனாய்வு செய்து அவ்வப்போது தனது அறிக்கைகளை நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கும் எனவும் நீதிபதி கூறியிருக்கிறார்.
சி.பி.ஐ இடமிருந்து கருத்து இல்லை
அண்மைக் காலம் வரை பிரபாகரன் மரணம் குறித்து அதிகார பூர்வமாக கருத்தெதுவும் தெரிவிக்காத இந்திய அரசு இப்போது பிரபாகரன், மற்றும் பொட்டு அம்மான் ஆகியோர் மரணமடைந்து விட்டதால் அவர்கள் மீதான வழக்கு முடித்துக் கொள்ளப்படலாம் என்று அறிவிக்க வேண்டிய அவசியமென்ன என்று பலரும் வியக்கிறார்கள்.
சி.பி.ஐ வட்டாரங்கள் இத்திருப்பம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன.
ராஜீவ் கொலை வழக்கின் போது நளினி மற்றும் முருகன்
ராஜீவ் கொலை வழக்கின் போது நளினி மற்றும் முருகன்
ஆறு மாதங்களுக்கு முன்பு, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் கொலை வழக்கிலும், முதல் இரு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்த பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் இருவரும் இறந்துவிட்டதால், அவர்கள் மீதான வழக்கை முடித்துவிடலாம் என்று கொழும்பு போலீசார் கூறியிருந்தனர்.
இதன் பின்னணியில் தான் சிபிஐயும் சென்னை தடா நீதிமன்றத்திடம் அவ்வாறு மனுச் செய்ததாகவும், ஆனால் அப்போது பிரபாகரனின் மரணச் சான்றிதழ் அல்லது வேறு ஏதாவது ஆதாரம் வேண்டும் என்ற தடா நீதிமன்றம், தற்போது அத்தகைய ஆவணங்கள் ஏதுமில்லாமல், பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் தொடர்பாக கடந்த மாதம் சி.பி.ஐ சமர்ப்பித்த வேறு ஒரு மனுவை ஏற்று இந்த உத்தரவை பிறப்பித்திருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.
1991 ஆம் ஆண்டு மே 21ஆம் நாள் ஸ்ரீ பெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் 16 பேர் கொலையுண்டது தொடர்பான வழக்கில் 26 பேர் மீது குற்றஞ் சாட்டப்பட்டது.
தடா நீதிமன்றம் அவர்கள் அனைவருக்கும் தூக்குத் தண்டனை விதித்தது. ஆனால் இந்திய உச்சநீதிமன்றம் 1999 ஆம் ஆண்டில் நளினி உட்பட நால்வருக்கு தூக்கு தண்டனை விதித்தும் மற்றவர்களுக்கு பல்வேறு கால அளவுகளில் சிறைத் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தது.
பின்னர் நளினியின் தூக்கு தண்டனை மட்டும் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது, மற்ற மூவரின் கருணை மனுக்கள் மீதான குடியரசுத் தலைவரின் முடிவு என்ன என்பது இதுவரை தெரியவில்லை.
 
»»  (மேலும்)

யுரேனியம் செறிவூட்டலை ஈரான் ஆரம்பித்தது

ஈரான் யுரேனியம் செறிவூட்டும் வேலைகளை நேற்று உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து ரஷ்யாவின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட ஆயிரம் மெகாவோல்ட் அணு உலைகளில் இந்த யுரேனியம் செறி வூட்டப்பட்டது.
மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யவே இந்த அணு உலை ரஷ்யாவால் நிர்மாணித்துக் கொடுக் கப்பட்டது.
உயர் ரக பெற்றோலை 20 வீதம் செறிவூட்டினால் மின்சாரமும் 80 வீதத்துக்கு மேல் செறிவூட்டினால் அணு ஆயுதத்தை தயாரிப்பதற்கான மூலப் பொருளையும் பெற முடியும்.
ஆனால் நேற்று 20 வீதம் செறி வூட்டி ஆயிரம் மெகா வோல்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வேலைகளே ஆரம்பிக்கப்பட்டன. இது தொடர்பாக அமெரிக்கா உட்பட ஏனைய நாடுகள் மேற் கொண்ட பிரசாரங்கள் அனைத்தும் பொய்யாகிவிட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.
நான்காவது முறையாகவும் ஐ. நா. ஈரான் மீது கடுமையான பொரு ளாதாரத் தடைகளை விதித்த போதும் தனது நிலைப்பாட்டி லிருந்து ஈரான் மாறவில்லை. உள்ளூர் தேவைக்காக மின்சாரத்தை உற்பத்தி செய்யவே யுரேனியத்தை செறிவூட்டுவதாக ஈரான் கூறி வந்தமை தெரிந்ததே. புஷர் என்ற இடத்தில் இந்த அணு உலை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.  

பொலிவிய ஜனாதிபதி ஈரான் விஜயம்

  
பொலிவிய ஜனாதிபதி ஈவோ மொரல்ஸ் மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு ஈரான் போய்ச் சேர்ந்தார்.
தெஹ்ரான் விமான நிலையத்தில் ஈரான் கைத்தொழில் எரிசக்தி அமை ச்சர் மெஹ்ராபி பொலிவிய ஜனாதி பதியை வரவேற்றார். ஈரான் ஜனா திபதி அஹ்மெதி நெஜாத் மற்றும் அந்நாட்டின் முக்கிய அரசியல் வாதிகளைச் சந்திக்கவுள்ளார். 287 மில்லியன் டொலர் செலவில் பொலிவியாவில் முதலீடுகளைச் செய்தல் உள்ளிட்ட முக்கிய உடன் படிக்கைகள் இதன் போது கைச் சாத்தாகவுள்ளன.
பொலிவிய ஜனாதிபதி ஈவோமொரல்ஸ் லாபாஸ் விமான நிலையத்தில் வைத்து ஈரான் விஜயம் குறித்து விளக்கிய தாவது, இருநாட்டு உறவுகளையும் விஸ்தரிக்கும் பொருட்டு ஈரான் செல்கின்றேன் முதலீடுகளை ஊக்கு வித்தல், கைத்தொழில் துறையை மேம்படுத்தல் இன்னும் பல துறைகளில் இருநாடுகளதும் உறவு களை விஸ்தரிக்கும் நோக்கம் எனது விஜயத்திலுள்ளது எனத் தெரிவி த்தார்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் பொலிவியாவுக்கான வர்த்தக உறவு களை 287 மில்லியன் டொலராக அஹ்மெதி நெஜாத் விஸ்தரித்தார்.
இதை அடிப்படையாகக் கொண்டு நிலக்கரி வெடிமருந்துகள் கைத் தொழில் பொருட்களை ஈரான் பொலிவியாவுக்கு ஏற்றுமதி செய்ய வுள்ளது.
உணவு உற்பத்தி கைத்தொழில் சாதனங்கள் மற்றும் சிமெந்து உற்பத்திகளை ஆரம்பிக்கும் புதிய உடன்படிக்கையில் கைச்சாத்திடவும் இரு நாடுகளும் எதிர்பார்க்கின்றன. இரண்டு வருடங்களுக்குள் பொலி விய ஜனாதிபதி ஈரானுக்கு மேற் கொள்ளும் இரண்டாவது விஜயம் இதுவாகும். வெனிசுலாவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணும் பொலிவியா தனது எரிபொருள் கைத்தொழில் தேவைகளுக்காக ஈரானுடனும் உறவாகவுள்ளது.
                                         
»»  (மேலும்)

சோமாலியாவின் கடல் எல்லையில் ஜேர்மன் கப்பல் கடத்தப்பட்டது

சோமாலியாவின் கடற் பிராந்தியத்தில் ஜேர்மன் கப்பலொன்றை கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். சனிக்கிழமை கடத்தப்பட்ட இந்தக் கப்பலில் எத்தனை பேர் இருந்தனர், என்ன பொருட்களை ஏற்றிச் சென்றது, தற்போது இக்கப்பல் எங்கே உள்ளது போன்ற தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்து சமுத்திரத்தின் யேடன்குடா முனையில் இக்கப்பல் கடத்தப்பட்டது.
இரண்டு வாரங்களுக்கு முன் இவ்வாறு இன்னுமொரு கப்பல் கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஜேர்மன் கப்பல் கம்பனிக்குச் சொந்தமான பெலுகா என்ற இக்கப்பல் சிங்கப்பூர் கொடியுடன் சென்றுகொண்டிருந்த போது கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. சோமாலியாவில் பலமான அரசாங்கம் இல்லை.
இதனால் சட்டம், ஒழுங்கு என்பன அந்நாட்டில் சீர்குலைந்துள்ளன. கொள்ளையர்களின் அட்டகாசம் சோமாலியாவை அண்மித்துள்ள கடற் பிரதேசங்களில் தலைவிரித்தாடுகின்றது. இப்பிராந்தியத்தினூடான சர்வதேச கப்பல் போக்குவரத்துகளும் பாரிய அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றது.
»»  (மேலும்)

கல்வியினை சீராக கற்பதற்கு சூழல் மிகவும் முக்கியமானதாகும்.-கிழக்கு மாகாண முதலமைச்சர்

திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் மாணவர் விடுதி இன்று கிழக்கு மாகாண முதலமைச்சரும்,  தமிழ் மக்கள் வீடுதலைப் புலிகளின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலையின் அதிபர் ஏ.செல்வநாயகம் தலமையில் இடம் பெற்ற மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய முதலமைச்சர் சந்திரகாந்தன்,
இவ் உலகில் எதனையும் எம்மால் சாதிக்க முடியும் அதற்கு மிகவும் முக்கியமாது கல்வி ஆகும். எனவே கல்வி என்கின்ற பலம் எம்மிடம் இருக்குமானால் நாம் எதனை வேண்டுமானாலும் சாதிக்கலாம். இவ்வாறான அளவற்ற கொடையான கல்வியினை கற்கவேண்டுமானால் சூழல் மிகவும் முக்கியமாக அமைய வேண்டும். சூழல் என்கின்ற போது கற்பதற்கான வசதிகள் செவ்வனே ஏற்பட்டிருக்க வேண்டும். அதில் ஓர் அங்கம் தான் இவ் விடுதியும் கூட,
 எனவே இன்று திறந்து வைக்கப்பட்ட மாணவர் விடுதியினை சரியாக மாணவர்கள் பயன்படுத்தி நல்லதோர் கல்வி நிலையினை எட்டுவதற்கு இதனை சரியாகப் பயன்படுத்த வேண்டும் இதற்கு முதலமைச்சர் என்ற வகையில் என்னாலான அனைத்து உதவிகளையும் புரிவேன் அத்தோடு பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் நலன் விரும்பிகள் ஊர்ப்பெரியார்கள் என அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில்  வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி ஆனந்தராஜா பிரதம பொறியியலாளர், மற்றும் உயர் கல்வி அதிகாரிகள் ஏனைய பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் பழைய மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
img_2036
img_2040
img_2046
img_2047
»»  (மேலும்)

10/26/2010

தமிழ் இலக்கிய விழா 2010-

img_1860கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், காணி , காணி அபிவிருத்தி, போக்குவரத்து அமைச்சின் ஏற்பாட்டில் 2010ம் ஆண்டிற்கான தமிழ் இலக்கிய விழா திருகோணமலையில் இரண்டு நாட்கள் இடம்பெற்றது. 2ம் நாளான இன்று (24.10.2010) கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளர் சி.தண்டாயுதபாணி தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
தமிழ் இலக்கிய விழாவில் பல சாதனையாளர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். 2009ம் ஆண்டில் வெளியிடப்பட்ட இலக்கிய நூல்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன. அதே போன்று கிழக்கு மாகாணத்தில் கலை இலக்கியத்துக்கு சேவையாற்றியோர்களின் சேவை நலநன பாராட்டி கிழக்கு மாகாண முதலமைச்சர் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கௌரவ முதலமைச்சர் விருது பெறுவோர் விபரம்.
திரு.தம்பு சிவசுப்பிரமணியம்.
திரு. நாகமுத்து நவநாயகமூர்த்தி.
ஜனாப். உதுமாலெப்பை அலியார்.
ஜனாப். உதுமாலெப்பை ஸெயின்.
திரு. பொன் சிவநாதன்.
ஜனாப்.முகம்மது அபூபக்கர் அப்துல் றஸ்ஸாக்.
ஜனாப்.எம்.ஈ.எச்.எம். தௌபீக்.
திரு. மூத்த தம்பி அருளம்பலம் (ஆரையூர் அருள்)
திரு.சி.கோபாலசிங்கம் (வெல்லாவூர் கோபால்)
திரு.வீரன் தருமலிங்கம் (ஓவிய தர்மா)
ஜனாப். தம்பிலெப்பை மீராலெப்பை.
திரு. ச. அரியரெத்தினம்.
திரு.செல்வராசா விபுணசேகரம்.
ஜனாப். எம். எஸ். அமானுல்லா.
திரு. கனக. மகேந்திரா.
img_1826
img_1827
img_1829
img_1844img_1867
img_1874
img_1880
img_1881
img_1886
img_1943
img_1961
img_1969
img_1989
img_2018
»»  (மேலும்)

முல்லைத்தீவு மீள்குடியேற்றப் பணிகள் டிசம்பர் 31க்குள் பூர்த்தி 450 பேர் இன்று மீள் குடியேற்றம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 75 வீதமான மீள்குடியேற்றப்பணிகள் பூர்த்தியடைந்துள்ளதோடு திட்டமிட்டபடி டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன் மீள்குடி யேற்றங்களை நிறைவு செய்ய உள்ளதாக முல்லைத்தீவு அரச அதிபர் என். வேதநாயகம் நேற்றுக் கூறினார்.
இதேவேளை, ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 6 கிராம சேவகர் பிரிவுகளில் 120 குடும்பங்களைச் சேர்ந்த 450 பேர் இன்று (26) மீள் குடியேற்றப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
30 கிராம சேவகர் பிரிவுகளில் மட்டுமே மக்களை மீள்குடியேற்ற வேண்டியுள் ளதாகவும், கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு துரிதமாக மக்களை மீள்குடியேற்றி வருவதாகவும் அரச அதிபர் கூறினார்.
ஒட்டுசுட்டானில் மேலும் ஒரு கிராம சேவகர் பிரிவிலும் புதுக்குடியிருப்பில் 14 கிராமசேவகர் பிரிவுகளிலும் கரைதுரைப்பற்றில் 16 கிராம சேவகர் பிரிவுகளிலும் மீள் குடியேற்றம் செய்ய வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்துபுரம், திருமுருகண்டி மேற்கு, பனிச்சங்குளம், மாங்குளம், ஒலுமடு மற்றும் அம்பகாமம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் இன்று மீள்குடியேற்றம் நடைபெறுகிறது.
வவுனியா மற்றும் யாழ். ஆகிய பிரதேசங்களில் தமது உற வினர் நண்பர்களின் வீடுகளில் உள்ளவர்களே இவ்வாறு மீள்குடியேற்றப்படுகின்றனர்.
இதே வேளை, அண்மையில் முல் லைத்தீவு மாவட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மிதிவெடிகளை அகற்றும் பணிகளை துரிதப்படுத்துமாறும் முழுமையான மீள்குடியேற்றங்களை மேற்கொள்ளுமாறும் வடமாகாண ஆளுநர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணித் துள்ளார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்களில் சுமார் 18,799 பேரே மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ள தாகவும் இவர்களில் 17,641 பேர் வவுனி யாவிலும் 1,158 பேர் யாழ்ப்பாணத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு கூறியது.
»»  (மேலும்)

தமிழ் இலக்கியம் உள்ளவரை அதன் வளர்ச்சிக்கு தொண்டாற்றியவர்கள் என்றும் நினைவு கூறப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை.-கிழக்கு மாகாண முதலமைச்சர்.

கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் காணி, காணி அபிவிருத்தி, போக்குவரத்து அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழ் இலக்கிய விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்,
கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் தமிழ் இலக்கிய விழாவில் உரை நிகழ்த்துவதில் உளம் புளகாங்கிதம் அடைகின்றேன்.
கிழக்கு மாகாண சபை தோற்றுவிக்கப்பட்டதன் பின்பு விமர்சையாக கொண்டாடப்படும் நான்காவது இலக்கி விழா என்பது இன்னும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
இலக்கியம் என்பது ஒரு அற்புதமான விடயமாகும் ஒரு மொழியின் வளர்ச்சியில் ஒரு சமூகத்தின் காலாச்சார பாரம்பரியத்தில் இலக்கியம் முக்கிய பங்காற்றுகின்றது. ஒரு இலக்கியத்தின் சுவை அதன் தத்துவார்த்தங்கள் அதன் உள்ளடக்கங்கள்தான் ஒரு மொழியின் பாரிய வீச்சுக்கும் உறுதிப்பாட்டிற்கும் துணைபுரிகின்றது. தமிழ் இலக்கிமானது பாரம்பரிய தொன்மை மிக்க ஓர் இலக்கியமாகும் இதற்கு பல சிறப்பம்சங்களும், விசேட இயல்புகளும் காணப்படுகின்றமை தமிழ் மொழியின் மேன்மையை சுட்டிக்காட்டுகின்றது.
ஆதி மொழியான தமிழ் மொழி இன்றும் அதன் சிறப்பு கெடாமல் அதன் தொன்மையோடு விளங்குகின்றது என்றால் அதற்கு தமிழ் இலக்கியம் பாரிய பங்காற்றுகின்றது. தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியில் பல சான்றோர்கள் புலவர்கள் இலக்கியப்பற்றாளர்கள் பாரிய பங்காற்றியிருக்கின்றார்கள். தமிழ் இலக்கியம் உள்ளவரை அதன் வளர்ச்சிக்கு தொண்டாற்றியவர்கள் என்றும் நினைவு கூறப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை.
துரதிஸ்ட்டவசமாக இன்று மாணவர் சமூகத்திடமும் இளைய தலைமுறையிடமும். இலக்கியம் பற்றிய ஆர்வம் மங்கி வருகின்றது. பிற மொழிகளில் காட்டும் ஆர்வம் தாய் மொழியான தமிழ் மொழி இலக்கியத்தில் காட்டப்படாமை வேதனைக்குரிய விடையமே. இருந்த போதிலும் இவ்வாறான இலக்கிய நிகழ்வுகள் மூலம் இலக்கியத்தின் தொன்மை அதன் பாரம்பரியம் அதன் மேன்மை இளைய சமூகத்திடமும் தாவிச் செல்கின்றது இது பாராட்டப்படவேண்டிய வளர்க்க வேண்டிய ஒரு விடயம்.
இலக்கிய சங்கங்கள் இலக்கிய நிகழ்வுகள் பாடசாலைகள் தோறும் நடாத்தப்பட வேண்டும். மாணவர்களுக்கு இலக்கியத்தின்பால் ஆர்வத்தினையும் அதன் மகத்துவத்தினையும் உணர்த்த வேண்டும், இதற்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சும், மாகாண கல்வித் திணைக்களமும் காத்திரமான பங்காற்றுகின்றது என்பதை நான் நன்கு அறிவேன். இதற்கான முழுமையான ஒத்துளைப்பினையும் உதவியினையும் முதலமைச்சர் என்ற வகையில் என்னால் வழங்கப்படும் என்பதை உறுதிப்படுத்துகின்றேன்.
“வாழ்க தமிழ் மொழி,
வளர்க தமிழ் இலக்கியம்,
ஓங்குக அதன் புகழ் அகிலமெல்லாம்”
»»  (மேலும்)

10/25/2010

திரு சிவஞானசுந்தரம் கிருபானந்தன்(வை.சி) ஈமக்கிரியைகள்kirupa
20.10.2010, 21.10.2010, 22.10.2010 புதன்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் மாலை 15:00 மணியிலிருந்து 20:00 மணிவரைக்கும், 23.10.2010, 24.10.2010 சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் காலை 10:00 மணிமுதல் இரவு 20:00 மணிவரைக்கும் Friedhof Huttwil, Friedhofweg 37A, 4950 Huttwil என்னும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு, ஈமக்கிரியைகள் 25-10.2010 திங்கட்கிழமை அன்று மதியம் 13:00 மணிமுதல் 15:00 மணிவரை Krematorium, Geissbergweg 29, 4900 Langenthal BE என்னும் முகவரியில் நடைபெறும்
»»  (மேலும்)

இராணுவ அணியைத் தோற்கடித்து மட்டக்களப்பு புனித மிக்கேல் அணி சாம்பியனானது.

மட்டக்களப்பு 234 வது இராணுவ தலைமையகம் முதல் முறையாக ஏற்பாடு செய்திருந்த கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியில் மோதிய இராணுவ அணியைத் தோற்கடித்து மட்டக்களப்பு புனித மிக்கேல் அணி சாம்பியனானது.
மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி பிரிகேடியர் மகிந்த முதலிகே தலைமையில் நடைபெற்ற கூடைப்பந்தாட்ட முகாமின் இறுதியில் இச் சுற்றுப்போட்டி நடைபெற்றது. இதில் இராணுவ அணிகளும், 4 விளையாட்டு கழகங்களும் பங்குகொண்டிருந்தன.
புனித மிக்கேல் கல்லூரி கூடைப்பந்தாட்ட மைதானத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் 50 – 42 என்ற புள்ளி அடிப்படையில் புனித மிக்கேல் அணி வெற்றிபெற்றது.
இதில் படை அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
»»  (மேலும்)

கினியில் அரசியல் வன்முறைகள்: ஜனாதிபதி தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு

கினியில் நேற்று நடைபெறவிருந்த ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டன. அங்கு இடம்பெற்ற வன்முறைகளையடுத்து தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல்கள் அலுவலகம் அறிவித்தது.
கினியில் இரண்டாவது தடவையாக ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இவ்வருடம் ஜூன் 27ல் ஜனாதிபதித் தேர்தல் நடந்தது. இதில் 43 வீத வாக்குகளை முன்னாள் பிரதமர் டாலியன் டயலோ பெற்றிருந்தார். எதிர்க் கட்சித் தலைவர் அல்பா கொண்டி 18 வீத வாக்குகளைப் பெற்றிருந்தார். எவரும் பெரும்பான்மையை பெறவில்லை. வாக்கு மோசடிகள் பயமுறுத்தல்கள் நடந்ததாக இரண்டு கட்சியினரும் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து பெரும் பதற்றம் எழுந்தது. இதனால் நேற்று 24 ஞாயிற்றுக் கிழமை தேர்தலை நடத்த ஏற்பாடானது. வெள்ளிக்கிழமை முதல் கினியாவில் அரசி யல் மோதல்கள், வன்முறைகள் வெடித்துள்ளதால் தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலையேற்பட்டுள்ளது. இதையடுத்து வேறு ஒரு தினத்தில் தேர்தல் நடத்தப்படுமென தேர்தல் அலுவலகம் அறிவித்தது. அரசியல்வாதிகள் அனைவரிடமும் ஆலோசனை பெறப்பட்ட பின்னரே ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
»»  (மேலும்)

அமெரிக்க ஜனாதிபதியின் இந்திய விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு தீவிரம்

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகை க்காக மும்பையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ஒட்டுமொத்த தாஜ்மகால் ஹோட்டலும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக ஒபாமா, கடந்த ஆண்டு ஜனவரி 20ந் திகதி பதவி ஏற்ற பின்னர் முதன் முதலாக இந்திய சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மன்மோகன் சிங்குடன் அவர் நெருக்கமான நல்லுறவு வைத்திருப்பதால் அவரது இந்திய பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய சுற்றுப்பயணத்தின்போது நிதித் தலைநகரமான மும்பைக்கும் அதிபர் ஒபாமா வருகிறார். வரும் 6ந் திகதி (சனிக்கிழமை) மும்பைக்கு வரும் ஒபாமாவுக்காக பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. இது தொடர்பாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
அமெரிக்க அதிபர் ஒபாமா, ஏர் போர்ஸ் ஒன் விமானம் மூலம் மும்பை வந்திறங்குகிறார். அந்த விமானத்துக்கு இருபுறமும் இரு விமானங்கள் பாதுகா ப்புக்காக வருகின்றன.
மும்பை விமான நிலையத்தில் இறங்குகிற அதிபர் ஒபாமா, குண்டு துளைக்காத வகையில் நான்கரை அங்குல தகடுகளால் மூடப்பட்டுள்ள லிங்கன் கான்டினென்டல் காரில் சரித்திரப்பிரசித்தி பெற்ற தாஜ்மகால் ஹோட்டலுக்கு வருகிறார். இதற்காக ஒட்டுமொத்த தாஜ்மகால் ஹோட்டலும் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே விமான நிலையத்திலிருந்து இந்த ஹோட்டல் வரையிலான வழி முழுவதும் பலத்த பாதுகாப்பு வலயத்தின் கீழ் கொண்டு வரப்படும்.
அந்த நேரத்தில் மேற்கு அதிவிரைவு சாலையில் பிற வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படும்.
ஒபாமாவின் தனிப்பட்ட பாதுகாப்பு படையே மிகப் பெரியதாகும். இந்தப்படை ஏற்கனவே மும்பையில் தனது பாதுகாப்பு பணிகளை தொடங்கிவிட்டது.
இரகசிய ஒற்றர் படைப் பிரிவும் இதற்கென விசேடமாக அமைக்கப்பட்டு ள்ளது. இந்தியாவரும் அமெரிக்க ஜனாதிபதி ஐந்து நாட்கள் இங்கு தங்கியிருப்பார் என்றும் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.


»»  (மேலும்)

10/24/2010

இன்னும் இரண்டாண்டுகளில் கிழக்கைப்போன்று வடக்கும் அபிவிருத்தி காணும்

தேர்தல் முறை மாற்றம், உள்ளூராட்சி மன்றத்தேர்தல்கள் மற்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மீள்குடியேற்ற அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக பிரதியமைச்சர் முரளிதரனிடம் வினவியபோது, அவர் தெரிவித்த கருத்துக்கள் இங்கு தொகுத்து தரப்பட்டுள்ளன. 
30 வருடங்களுக்குப் பின்னர் சகல இன மக்களும் ஒன்றிணைந்து வாழும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. வடபகுதி மக்கள் எவ்வித பிரச்சினைகளும் இன்றி நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சுதந்திரமாக சென்று வருகிறார்கள். பாடசாலை மாணவர்கள் சகல பகுதிகளுக்கும் சுற்றுலா செல்கிறார்கள். சிங்கள மக்களும், யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு என பல இட ங்களுக்கும் எதுவித பிரச்சினை களும் இல்லாமல் சென்று வருகிறார்கள்.

மீள்குடியேற்ற பிரதியமைச்சராக இருக்கிaர்கள். மீள்குடியேற்ற நடவடிக்கைகள் எப்படியிருக்கின்றன?
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் மீள்குடியேற்றப் பணிகள் முடிவடைந்துள்ளன. மூதூர் பகுதியில் 1200 குடும்பங்கள் குடியமர்த்தப்படவுள்ளன. உண்மையில் அது மீள்குடி யேற்றமல்ல, இடமாற்றம் rலீloணீation என்றே கூறவேண்டும். சம்பூர் பகுதியிலுள்ள 4 கிராம சேவையாளர் பிரிவுகள் அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக எடுக்கப்பட்டிருக்கிறது. அப்பகுதி மக்களை வேறு ஒரு இடத்தில் குடியமர்த்துவதற்கான வேலைகள் நடந்து கெண்டிருக்கின்றது. வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் பூர்த்தியடையும் நிலையில் இருக்கின்றன. அது தவிர கிழக்கு மாகாணத்தில் எதுவித பிரச்சினைகளும் இல்லை.
வட மாகாணத்தில் மெனிக் பாம் முகாமில் 24 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். 1 இலட்சத்து 60 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். மீள்குடியேற்றம் என்று சொல் லும்போது, 64 ஆயிரம் மக்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கிறார்கள். உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து 20 வருட காலமாக வெளி யேறியவர்களே இவர்கள். புத்தளத்தில் 67 ஆயிரம் முஸ்லிம் மக்கள் இருக்கிறார்கள். அவர்களும் வெளியேறி 20 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருபவர்கள். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த 24 ஆயிரம் மக்கள் இன் னும் நான்கு மாத காலப்பகுதிக்குள் மீளக்குடியமர்த்தப்பட்டு விடுவார்கள். புதுக்குடியிருப்பு பகுதிகளில் நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து மேற் கொள்ளப்பட்டு வருவதால், மக்களை மீளக்குடியமர்த்தும் பணி படிப்படியாக முன்னெ டுக்கப்படுகிறது.
இந்திய அரசாங்கம் 50,000 வீடுகளை நிர்மாணித்து கொடுக்க வுள்ளது. கிளிநொச்சியில் நேர்ப் திட்டத்தின் உதவியுடன் 5000 வீடுகள் கட்டப்பட்டு வரு கின்றன. அவர்களின் வாழ் வாதாரத் திற்கான ஆரம்ப உதவிகள், சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அப்பகுதிகளிலுள்ள வளங் களைப் பயன்படுத்தி மக்கள் தமது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான உதவிகள் செய்யப்படுகின்றன.
வளங்களை பெற்றுக்கொடு ப்பதை விட தடைகளை எடுத்து விட் டால் மக்கள் தானாகவே வாழ்க்கையில் முன்னேறி விடுவார்கள். ஒருநாள் இரவு வேளை முல்லைத்தீவு பகுதிக்குச் சென்றிருந்தோம். கடல் பகுதியில் மீனவர் படகுகளில் ஒளிவிளக்குகள் எரிந்து கொண் டிருந்ததை பார்த்தோம். மீனவர்கள் கடல் தொழில் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் என நினைத்துக் கொண்டே அங்கிருந்த மக்களிடம் பேச்சுக் கொடுத்தபோது, அவர்கள் இதெல்லாம் எங்கள் படகுகள் இல்லை. திருகோணமலையிலிருந்து இங்கு வந்து மீன்பிடிக்கிறார்கள் என்றனர். அப்போதே மீன்பிடித்துறை அமைச்சு, கடற்படை அதி காரிகளுடன் தொடர்பு கொண்டு முல்லைத்தீவு பகுதி மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவர்கள் தற்போது மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் தொழில் புரிகிறார்கள்.
மீனவர்கள் தங்கள் தொழிலைச் செய்ய இரவு பகல் எந்நேரத்திலும் அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. சுதந்திரமாக தங்கள் தொழிலைச் செய்து வருகின்றனர். எந்தவொரு தடையும் இல்லை. படையினரும் இவ்விடயத்தில் நன்கு ஒத்து ழைக்கின்றனர்.
எவரும் குற்றங்களையும், குறைகளையும் சொல்லலாம். நாட்டில் 30 வருடங்களாக நிலவிய பிரச்சினையை ஒரே இரவில் தீர்த்துவிட முடியாது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் இருந்த மட்டக்களப்பை இப்போது பார்க்க முடியாது. அன்றிருந்த நிலைமைகள் இன்றில்லை. அப்போது வீதிகள் குண்டும் குழியுமாக காணப்பட்டன. இப்போது வீதிகள் செப்பனிடப்பட்டு அழகாக காட்சி தருகின்றன. பொருளாதார ரீதியிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. எனவே மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும். குறை கூறும் அரசியல்வாதிகளை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். வன்னியைப் பொறுத்த வரையில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் பாரிய மாற்றம் ஏற்படும். வாழ்க்கையில் நினைத்துக்கூட பார்க்க முடியாதிருந்த கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதி மக்களுக்கு தற்போது மின் இணைப்பு கிடைத்திருக்கிறது.

தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக தற்போது பேசப்பட்டு வருகிறது. இவ்விடயத்தில் உங்களது கருத்தென்ன?
உத்தேச தேர்தல் முறை மாற் றத்தில் விகிதாசார வட்டார முறை யிலான தேர்தல்கள் அறிமுகப் படுத்தப்படவிருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் இவை இரண்டும் நல்லதாகவே தெரிகிறது.
விகிதாசாரத்தில் சிறுபான்மை மக்களுக்கு வாய்ப்பிருக்கிறது. சிறுபான்மை என்பதை விட சிறு கட்சிகளுக்கு வாய்ப்பிருக்கிறது. இதனால் நிறைய கட்சிகள் போட்டியிடலாம். ஆனால் அதில் ஒரு பிரயோசனமும் இருக்காது. தொகுதிவாரி என வரும்போது தொகுதிக்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப் படுவார். விகிதாசார தேர்தலில் விருப்பு வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக பெருந்தொகைப் பணத்தை செலவிடுவது, வேட் பாளரிடையே வாக்கு வேட்டை யின்போது ஏற்படும் மோதல்கள், மக்கள் ஏமாற்றமடையமாட்டார்கள், பெருந்தொகை பணம் விரயமாவதை கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

இந்த தேர்தல் முறைகளால் சிறுபான்மை மக்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறதா?.
சிறுபான்மை மக்களுக்கு எந்தவித பாதிப்பும் வராது. சிறு கட்சிகளுக்கே பாதிப்பு ஏற்படும். அம்பாறை மாவட்டத்தை எடுத்துக்கொண்டால், (த.தே.கூ.) கட்சி ரீதியில் ஒருவர் போட்டியிட்டதால் சிறு தொகை வாக்குகளைப் பெற்றிருப்பினும், தேர்தலில் வெற்றி பெறுகிறார். ஆனால் அதனை விட பெரும் எண்ணிக்கையான வாக்குகளைப் பெற்ற இன்னொரு கட்சியைச் சேர்ந்தவர் தோற்று விடுகிறார். இரண்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு கட்சியைச் சேர்ந்த மூவர் தெரிவாகி விடுகின்றனர். தொகுதியும் வட்டாரமும் வரும் என்றால் ஒரு பிரச்சினையும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.

உங்களது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் பற்றி கூறுவீர்களா?
கிழக்கு மாகாண மக்களை எடுத்துக்கொண்டால் இரண்டு வருடங்களுக்கு முன் இந்த அரசாங்கத்தின் மீது ஒரு சந்தேகம் இருந்தது. எதிர்காலத்திட்டங்கள் தொடர்பாக தெளிவாகக் கூறியபோதிலும் மக்கள் வாக்களிக்கவில்லை. உன்னிச்சைக்குளத்து நீரை குடிநீருக்கு உகந்ததாக மாற்றி வழங்கும் திட்டம்பற்றி நாம் மக்களிடம் எடுத்துக்கூறியபோது, அப்போது அதனை அவர்கள் நம்பவில்லை. 10 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் அத்திட்டம் தற்போது நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. இப்போதுதான் அந்த மக்களுக்கு புரிகிறது. தற்போது ஜனாதிபதி மீது மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அவரால் எதையும் செய்ய முடியும் என நம்புகிறார்கள். இதுபோன்று வடபகுதி மக்களும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இனிவரும் எமது சமூகம் நன்றாக இருக்க வேண்டும்.
கிழக்கு மாகாணம் எவ்வாறு இன்று அபிவிருத்தி கண்டு கொண்டிருக்கிறதோ, அதேபோன்று வடக்கில் வன்னிப் பகுதியும் அபிவிருத்தியைக் காணும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை
தினகரன் வாரமஞ்சரி
»»  (மேலும்)

10/23/2010

வரதராஜபெருமாள் ஐரோப்பா பயணம்

முன்னாள் வட-கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜபெருமாள் ஐரோப்பா பயணமாகியுள்ளார் . பிரான்சில் நடைபெறுகின்ற ஈழ   மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் புகலிட மகாநாட்டில் கலந்து கொள்ளும் இவர் ஐரோப்பிய அரசியல் தலைவர்கள் மற்றும் இராஜதந்திரிகளையும் சந்தித்து இலங்கையின் அதிகார பகிர்வு தொடர்பான உரையாடல்களையும்நடத்தவுள்ளார் என தெரியவருகின்றது .அத்தோடு எதிர்வரும் ஞாயிறு பி.ப 2 மணிக்கு( SALLE LOUIS PASTEUR, 9,RUE LOUIS CHOIX, )95140 - GARGES-LES-கோநேச்சே எனுமிடத்தில் பகிரங்க கூட்டமொன்றிலும ..உரையாற்றவுள்ளார் 
»»  (மேலும்)

பணிக்கனும் பணத்தாளும் : ஒரு சுவையான தகவல்

எஸ்.எம்.எம்.பஷீர் 
Rs.1000 SL note“ஆவினங்கள் வாழ அறமுயர்ந்து சாவி எழப்
பாவானர் பாடப் பல்லுரெல்லாம் வாழ்க!
மாத்தில் மூன்று மழை மட்டுநகர் பெய்துவர
என்றார் பணிக்கர் குலத்திப னேந்திடம்
கண்டறிந்து மாயவன் கருணைதனை யுண்மை யென்று
'விமலதரு மனென்' னும் வேந்தனாக மகிழ்ந்து
கமல விழிக் கண்ணன் கருணை தங்குமிப்பதிக்கு
வேண்டும் வயல் நிலமும் வெள்ளிக் களஞ்சியமும்
தூண்டு திகிழி தந்தம் சோதியெழ யீந்து மன்னன்
'கண்டி நகர்' சென்றான் காசினியோர் தாமறியப்
பண்டு முற்ற என்றென்றுர் காசினியோர் தாமறியப்
பண்டு முற்ற என்றென்றுர் பார்”.
                                 ( தாதன் கல்வெட்டு )

ஆயிரம் ரூபாய் நாணயத்தாளின் பின்னாலுள்ள ஆச்சரியகரமான விஷயம் என்ற தலைப்போடு ஒரு செய்தி பெப்ரவரி மாதம் இலங்கை தொடர்பான இணையத்தளமொன்றில் பிரசுரமாகியிருந்தது. ஆனால் அதற்கு முன்னரே ஏறாவூர் வரலாறு பற்றி  எழுதப்பட்ட நூலொன்றில் (2005) இது பற்றி விரிவாகவே எழுதப்பட்டுள்ளது என்பதுடன் ஆங்கிலத்தில் வெளியான செய்திகுறிப்பும் அன்னூலில் வெளியான தமிழ் குறிப்பின் ஆங்கில மொழியாக்கமாகவே காணப்பட்டது. ஆங்கிலத்தில் வெளியான அக்குறிப்புரையை இங்கு மொழிபெயர்த்து உங்களின் வாசிப்புக்கு விட்டுவிட்டு அது பற்றிய சில செய்திகளையும் பார்ப்போம்.
Rs.1000 SL note
“எங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ஆயிரம் (இலங்கை)  ரூபாய் நாணயத்தாளில் பிரசுரிக்கப்பட்டுள்ள யானையுடன் பக்கத்தில் தொப்பி அணிந்து காணப்படுபவருக்கு பின்னால் ஒரு ஆச்சரியமான கதை உண்டென்று யாருக்காவது கற்பனை பண்ணமுடியுமா அந்த யானையும் அதனருகே தொப்பி அணிந்து நிற்கும் மனிதனும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்றும் அந்த மனிதன் ஒரு முஸ்லிம் என்றும்  ஆம் அந்த கொம்பன் யானையும் மனிதனும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்களே. அந்த மனிதர் மாட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஏறாவூர் என்ற இடத்தை சேர்ந்த உமறு லெப்பை பணிக்கர்; அந்த நாணயத்தாளிலுள்ள கொம்பன் யானை 1925ம் ஆண்டு ஏறாவூர் காட்டுபகுதியில் பிடிக்கப்பட்டு வளர்க்கப்பட்டதாகும்.
உமர் லெப்பை பணிக்கர் இந்த கொம்பன் யானையை தலதா மாளிகாவுக்கு அன்பளிப்பாக கொடுத்தார். சிறிது காலத்திற்குள் அந்த யானை அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் அது அங்கிருந்து ஏறாவூருக்கு அவரை (உமர் லெப்பை பனிக்கரை) தேடிச் சென்றதாக சொல்லப்படுகிறது. அந்த யானையை மீண்டும் அங்கிருந்து அவர் மீண்டும் தலதா மாளிகாவுக்கு கொண்டு வந்து கொடுத்தார்.
ஜனாதிபதி ஜே .ஆர். ஜெயவர்த்தனா அந்த கொம்பன் யானையின் நீண்ட கால சேவைக்காக அதனை கவுரவிக்கும் முகமாக யானையை தேசிய சொத்தாக பிரகடணப்படுத்தினார்.ராஜா என்று பெயரிடப்பட்ட இந்த கொம்பன் யானை கண்டியில் எசல பெரஹர பவனிகளின் போது அலங்கரித்தமைக்காக தேசிய பிரபலம் பெற்றதுடன் தேசிய ரீதியிலும் கவுரவிக்கப்பட்டது,  
தலதா மாளிகாவையில் சேவையாற்றிய கொம்பன் யானை ராஜா தனக்கு மட்டுமல்ல தன்னை அன்பளிப்பு செய்த நபருக்கும் அவரது கிராமாமான ஏறாவூருக்கும்  பிரபலத்தையும் கவுரவத்தையும் கொண்டு வந்து  ஐம்பது வருடங்களுக்கு மாளிகாவையில் சேவையாற்றி  15 ஜூலை 1988ல்   இறந்துபோனது.
அதன்பிறகு ஆட்சியிலுள்ள அரசு தலதா மாளிகாவுக்கு அந்த கொம்பன் யானையை தலதா மாளிகை பெற்றுக்கொள்ள காரன‌மான  நபரை கவுரவிக்கவேண்டும் என்று தீர்மானித்தார்கள் , அதற்காக அந்த கொம்பன் யானையையும் அதற்கருகில் உமர் லெப்பை பணிக்கரையும் ஆயிரம் ரூபாய் தாளில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இதன் மூலம் ஏறாவூர் கிராமமும் கவுரமும் பெற்றது. இப்போதும் இவ்வாயிரம் ரூபாய் புழக்கத்தில் இருந்து வருகிற‌து.
காடுகளில் யானையை பிடித்து வளர்த்து பாரமான பொருட்கள் மூலப்பொருட்கள் என்பவற்றை எடுத்துச்செல்லும் அல்லது இடம் பெயரச் செய்யும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்கு விற்கின்றவர்களே பணிக்கர் எனப்படுகின்றனர் என்று சொல்லப்படுகிறது. அவர்களின் சந்ததியினர்  இன்றும் “பணிக்கர் தத்தி” அல்லது “பணிக்கர் கத்தற”  (பணிக்கர் குடும்பத்தினர் அல்லது பரம்பரை) என்று ஏறாவூரில்  அடையாளப்படுத்தப்படுகின்றனர். ஏறாவூரில் அவர்களின் பெயரால் பணிக்கர் வீதி என்று   ஒரு வீதி ஏறாவூரில் உள்ளது
இந்த யானை பன்னிரெண்டு வயதில் உமர் லெப்பை பணிக்கரால் பிடிக்கப்பட்டதென்றும்  முறையாக அதனை விற்பனை செய்யும் சட்ட விற்பனைக்கான ஆவணம் மூலம் ஒரு குறிப்பிட்ட தொகை பணத்துக்காக அந்த கொம்பன் யானை ஆனால் அதை வாங்கிய நீதி திறை நிர்வாகியான கண்டி யட்டினுவர திஸ்ஸாவ  டிக்கிரி பன்டா மாம்பிட்டிய என்பவர் 1937ம் ஆண்டு ஆகஸ்து மாதம் 22ம் திகதி அதனை தலதா மாளிகாவையின் பொறுப்பாளரான தியவதன நிலமேயிடம் சம்பிரதாயபூர்வமாக  அன்பளிப்பு செய்தார். இந்த யானயை கேகால்ல வரை கொண்டு செல்ல அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருப்பதனை அறியமுடிகிற‌து.  உமர் லெப்பை பணிக்கர் விற்ற இன்னுமொரு யானையான கன்டா எனப் பெயரிடப்பட்ட யானையும் அதே காலப்பகுதியில் டிக்கிரி பன்டா வாங்கியிருந்தார் என்பதுடன் அந்த யானையையும் அவர்  அந்த நிகழ்விலே தலதா மாளிகாவுக்கு அன்பளிப்பு செய்துள்ளார் என்ற குறிப்பு ஆங்கில பிரயான எழுத்தாளர் ஒருவரின் குறிப்புரையில் காணப்படுகிறது  மேலும் இவ்யானைகள் புகையிரதம் மூலமே  கடுகண்ணாவைக்கு  கொன்டுவரப்பட்டன என்றும் சில குறிப்புகள் உள்ளன. எது எப்படி இருப்பினும் இந்த யானை தப்பி ஓடி உமர் லெப்பை பணிக்கரை தேடி ஏறாவூர் சென்ற கதை குறித்து ஆதாரபூர்வமான தகவல்கள் இல்லை ஆனால் நான் விசாரித்தறிந்த தகவலின்படி யானை பிடித்த சில நாட்களிள் காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டதாகவும் அதனால் உமர் லெப்பை பனிக்கரின் தந்தையார் சினம் கொன்டு தந்து மகன் உமர்லெப்பை பணிக்கரை மீன்டும் அதனை எப்படியாயினும் பிடித்துவர வேன்டும் என்று வற்புறுத்தியதாகவும் யானை தப்பி ஓடிய உடனேயே காட்டிற்குள் தேடிச்சென்று பிடித்து வந்ததாகவும் ஒரு கதை உண்டு.
இலங்கையில் சிவில் யுத்தம் முடிந்து பயங்கரவாத புலிகள் அழிக்கப்பட்டபின் யுத்த வெற்றியை முன்னிட்டு அரச அதிபர் மகிந்த ராஜபக்ச ஒரு பக்கத்தில் தனது உருவமும் மறு புறத்தில் இராணுவ வீரர்கள் கொடி நாட்டுவதுமான படத்துடன் கூடிய ஆயிரம் ரூபாய் நானயத்தாள் வெளியிட்டார்.
கண்டி ஆட்சி நிர்வாகத்தின் கீழேயே திருகோணமலை மட்டக்களப்பு உட்பட்ட கிழக்கு கரையோரப் பிரதேச பகுதிகள் இருந்துவந்துள்ளன.மட்டக்களப்புக்கு மாருத சேனனுடைய புத்திரன் எதிர்மன்னசிங்கம் சிற்றரசனாக இருந்த காலத்தில் பட்டிருப்பு திரெளபதை அம்மன் ஆலயத்தை பற்றிய இன்னுமொரு கல்வெட்டுக் குறிப்பும் காண‌ப்படுகிறது. அதன்படி எதிர்மன்னசிங்கம் ஒரு பணிக்கன் என்பதையும் அவனின் ஆட்சி காலத்தில் கி.பி 1500 பிற்பகுதிகளில் கண்டிய அரசனாகவிருந்த விமலதர்மசூரியன் 1 ( கோனப்பு பன்டார , டொன் ஜுஆன் எனவும் இவன் கண்டி அரசனாக முடிசூட முன்னர் அறியப்பட்டவன்) இவனே பட்டிருப்பு ஆலயத்திற்கும் காணி மற்றும்  பல நண்கொடைகளை வழங்கியிருந்தான் என தாதன் கல்வெட்டுப்பாடல் ஒன்றை திரெளபதை அம்மன் இணையத்தளம் குறிப்பிடுகிறது.
எனவே இங்கு சொல்லப்படும் பணிக்கர் குல அரசன் யுத்த பயிற்சியாளனாகவோ அல்லது யானையை பிடிக்கும் தொழில் செய்பவர்களில் ஒருவனாகவிருக்கலாம். ஆனால் மட்டக்களப்பில்  பணிக்கனாகுடி, பணிக்கனர்குலம் என்பன சாதி அடிப்படியிலான சமூகப்பிரிவாகவிருந்தன என்பதையே அவதானிக்க முடிகிறது , ஆயினும் அவை யானை பிடிக்கும் தொழில் செய்பவரின் சமூக பிரிவினரைக் குறித்து சொல்லும் சொல்லாக பாவிக்கப்படவில்லை.
பொன்னியின் செல்வன் என்ற கல்கியின் நாவலில் பொன்னியின் செல்வன் ( இளவரசன் ) யானைப்பாகனாக மாறு வேடமிட்டு இருப்பதை அவனது இரு உதவியாளர்களில் ஒருவர் அடையாளம் கண்டவுடன் இளவரசனை பாகன் என்று அழைப்பதை மரியாதைக்குறைவாக கருதி அதன் படைப்பாளி கல்கி "பாகர்" என்று ஆள் பார்த்து தகுதி பார்த்து மரியாதைப்படுத்தி குறிப்பிட்டுள்ளார் போல் தோன்றுகிறது. பணிக்கன் என்றும் பணிக்கர் என்றும்  என்று குறிப்பிடப்பட்டுள்ளதற்கும் பனிக்கர் குலத்தில் அரசர்கள் இருந்ததும் ஒரு காரனமாக இருந்திருக்கலாம்.  என்பது ஒருபுறம் இருக்கட்டும். பாகன் என்பவன் யானையை தன் சொற்படி கேட்டு நடக்கப் பழக்கிவைத்திருப்பவர் மட்டுமே குறிக்கும். ஆனால் பணிக்கன் யானையை சாதுரியமாக பிடிப்பவன் , பிடித்து அதனை மனித உபயோகத்திற்கு பயிற்றுவிப்பவன் வர்மம் எனும் தற்காப்பு கலையில் (Martial Art) தேர்ச்சி பெற்றவனையும் பயிற்றுவோனையும் ஆசானையும் (Trainer)  யுத்த பயிற்சி அளிக்கும் பயிற்றுனரையும் கூட பணிக்கர்  அல்லது பணிக்கன் என்று சொல்லப்படுவதுன்டு.  . ஏனெனில் வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் ( வடக்கிலும் கிழக்கிலும்)  யானை பிடித்து பராமரித்தவர்கள் பணிக்கன் என்ற குலமாக  அழைக்கப்பட்டதற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன. ஆனால் யானை பிடித்த சமூகத்தினர் தமிழர்களோ முஸ்லிம்களோ பொதுவாக பணிக்கர் என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற ஒரு முடிவுக்கு வரவேண்டி உள்ளது
தென்பாண்டி நாட்டில் மாநாடு என்ற பகுதியை கி.பி எட்டாம் நூற்றாண்டளவில் ஆண்ட செண்பக பெருமாள் எனும் குறுநில மன்னன் வர்மக்கலையில் தேர்ச்சி பெற்றவன் என்றும் அதனால் பணிக்கன் எனவும் அழைக்கப்பட்டுள்ளான். இவனுடைய காலத்தில் பராக்கிரமவாகு சபையிலிருந்த மலையாளப் பணிக்கன் ஒருவனின் மகனாகிய யுத்தவீரன் செண்பகப்பெருமாள் சிங்களப் படையுடன் யாழ்ப்பாணத்தை வென்று கனகசூரியனைத் துரத்தினான். இவன் யாழ்ப்பாணத்திற் 17 வருடங்கள் ஆட்சி செய்தான். இவனே நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைக் கட்டுவித்தான். பல வருடங்களின் பின்னர் கனகசூரியன் யாழ்ப்பாணத்தை கைபற்றியதாகவும் (ராகவன்)கதை உண்டு. எனவே இது வெறுமனே குலம் மதம் மொழிசார் நிலம்  என்ற வர்த்தமானங்களுக்கு அப்பால் பணிக்கர் என்ற சொல் பாவிக்கப்பட்டிருக்கிறது என்பதை புலப்படுத்துகிறது.. அந்த வகையில் கொம்பன் யானை (ராஜாவை) பிடித்து அது தலதா மாளிகாவையில் பணியாற்ற வழி சமைத்த பணிக்கரும் இலங்கையின்  நாணானயத்தாளில் மிடுக்குடன் நின்று வரலாறு படைத்துள்ளார்.
 (22 10.2010)
sbazeer@yahoo.co.uk
»»  (மேலும்)

கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தின் செயலமர்வு.

கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் கிராமிய அபிவிருத்தி அதிகாரிகள் மற்றும் தொழிநுட்ப உத்தியோகஸ்த்தர்களுக்கான செயலமர்வு இன்று சத்துருக் கொண்டானில் உள்ள சர்வோதயத்தில் இடம்பெற்று வருகின்றது. கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்று வருகின்ற இச் செயலமர்விற்கு இன்று கிழக்கு மாகாண முதலமைச்சரும் மாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சருமான சி.சந்திரகாந்தன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.rda
»»  (மேலும்)

வரி அறவீடு தொடர்பான செயலமர்வு.

அம்பாரை மாவட்ட வரி மதிப்பீட்டு பிராந்திய அலுவலகத்தின் வரி செலுத்துதல் தொடர்பான செயலமர்வு சாய்ந்தமருது பரடஸ் விடுதியில் இன்று(21.10.2010) இடம்பெற்றது. இச் செலமர்விற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். விசேடமாக கிழக்கு மாகாண சபையினால் மேற்கொள்ப்பட்டு வருகின்ற வரி அறவீடு அம்பாரை மாவட்டத்திலே மிகவும் பின்தங்கிக் காணப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது.அது தொடர்பில் ஆராய்ந்த முதலமைச்சர், அம்பாரை மாவட்ட வர்த்தகர்களுக்கு வரி செலுத்துதல் தொடர்பான விளக்கங்கள் இன்மையே இதற்கு பிரதான காரணம் எனக் கண்டறிந்தார். எனவேதான் அவ் வர்த்தகர்களுக்கு வரி தொடர்பான விசேட கருத்தரங்கொன்றை ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டிருந்தார். அதனடிப்படையிலே இச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. அதில் பெரும் தொகையான வர்த்தகப் பெருமக்கள் கடந்து கொண்டிருந்தார்கள்.அவர்களுகப்கு வரி தொடர்பான பூரண விளக்கங்கள் அதிகாரிகளினால் அளிக்கப்பட்டது. அத்தோடு வரி செலுத்துதலின் முக்கியத்துவத்தினை கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் வெளிவுபடுத்தினார். tax-seminar121
»»  (மேலும்)

மன்னார் தமிழ் செம்மொழி விழா இன்று ஆரம்பம்மன்னார் தமிழ் செம்மொழி விழாவின் மூன்றுநாள் இலக்கிய ஆய்வரங்கு இன்று சனிக்கிழமை ஆரம்பமாகிறது-
இதில் கலந்துகொள்ளும் தமிழ் பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியில் கூடுகின்றனர்.
இன்றைய தினம் ‘தமிழின் இலக்கியப் பாரம்பரியம்’ என்ற தலைப்பில் நடைபெறும் ஆய்வரங்குக்குப் பேராசிரியர் அ. சண்முகதாஸ் தலைமை தாங்கு கின்றார்.
»»  (மேலும்)

நிவாரண கிராமங்களின் சிறந்த பராமரிப்பு துரித மீள் குடியேற்றப் பணிகள் அரசின் செயற்பாடுகளுக்கு பொதுநலவாய பிரதிநிதிகள் பாராட்டு

மோதல்கள் காரணமாக லட்சக் கணக்காக இடம்பெயர்ந்த மக்களை ஒரே மாவட்டத்தில் முகாம்களில் சகல வசதிகளுடனும் தங்க வைத்ததுடன் மட்டுமல்லாமல் படிப்படியாக அவர்களை மீளக் குடியமர்த்துவதற்கும் இலங்கை அரசு மேற்கொண்ட பணியை பொது நலவாய பிரதிநிதிகள் பாராட்டியுள்ளனர்.
உலக நாடுகளில் எங்கும் இல்லாதவாறு மூன்றாம் உலக நாடான இலங்கை ஒரு சிரமமான பணியை மிகச் சிறப்பாக செய்து முடித்துக் கொண்டிருக்கிறது என பொதுநலவாய பிரதிநிதிகள் இலங்கை அரசாங்கத்துக்கு பாராட்டுக்களை தெரிவித்ததாக வவுனியா அரச அதிபர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.
அத்துடன் மீளக்குடியமரும் மக்களுக்கு பொதுநலவாய நாடுகளின் உதவி அவசியம் என்பது பற்றியும் அரச அதிபர்
திருமதி சார்ள்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு சாதகமான பதிலை தமது அரசுகளுடன் கலந்து பேசிய பின்னர் அறிவிப்பதாகவும் பொதுநலவாய பிரதிநிதிகள் தெரிவித்ததாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.
இலங்கை வந்துள்ள பொதுநலவாய பிரதிநிதிகள் குழுவினர் செட்டிக்குளம் பகுதிக்கு விஜயம் செய்த போதே இலங்கை அரசின் பணி தொடர்பாக தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
செட்டிக்குளம், மனிக்பாம் முகாம்களுக்கு விஜயம் செய்த பொதுநலவாய பிரதிநிதிகளுக்கு அரச அதிகாரிகள் படைத்தரப்பினர் மக்களுக்கு வழங்கப்பட்ட வசதிகள், நிவாரணங்கள் குறித்தும் விளக்கமளித்தனர்.
»»  (மேலும்)

உள்ளுராட்சி சபைகள் திருத்தச் சட்டமூலம் மீதான முதலமைச்சரின் உரை

img_7216 உள்ளுராட்சி சபைகள் திருத்தச் சட்டமூலம் கிழக்கு மாகாண சபையின் அபிப்பிராயத்தைப் பெற்று அங்கீகரிப்பதற்காக  முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் போது முதலமைச்சர் ஆற்றிய உரையின் முழுப்பகுதி. 
கௌரவ தவிசாளர் அவர்களே! ஏனைய உறுப்பினர்களே! பாராளுமன்றத்தினால் அனுப்பப்பட்டு அங்கீகாரம் கேட்டு நிற்கின்ற  உள்ளுராட்சிமன்ற தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம், உள்ளுராட்சி அதிகார சபைகள் விசேட ஏற்பாடுகள் சட்மூலம்  என்ற இரண்டு சட்டமூலங்களுக்கு அங்கீகாரம் கேட்டு நிற்கின்றோம.; இந்த விடயத்திலே கடந்த ஆண்டு; உள்ளுராட்சி சபைகள் திருத்த சட்டமூலம் எமக்கு அனுப்பப்பட்டு அங்கிகாரத்திற்காக வந்திருந்தது. அதில் பெரும் வாத பிரதிவாதங்கள்; இடம்பெற்று, பல ஆலோசனைகளுடன் திருப்பி அனுப்பப்பட்டு இன்று மீண்டும் அச்சட்டமூலம் அங்கீகாரத்திற்றகாக அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த அடிப்படையில் பார்க்கின்ற போது நாங்கள் கடந்த ஆண்டு முன்வைத்த விடயம,; இலங்கையிலே வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்கு விகிதாசார அடிப்படையில் பிரதிநிதித்துவங்கள் வழங்கப்பட வேண்டும். அதில் வடக்கு கிழக்கு அல்லது தமிழர்கள் அல்லது ஏனைய சிறுபான்மையினர் செறிவாக வாழ்கின்ற இடங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு பிறமுறைகளில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டால் பரவாயில்லை  என நாங்கள் பெரும்பாலானவர்கள் குறிப்பிட்டிருந்தோம.; அவ் அடிப்படையில் அந்த திருத்தத்தை அரசு செய்திருக்கின்றது, அதைவிட 70 வீத வட்டார முறையினையும் 30 வீத விகிதாசார தெரிவு முறையினையும் கொண்டிருக்கின்றது. அதில் இனங்கள் பிணைந்து வாழ்கின்ற இடங்களில் நேரடியாக எங்களால் கொடுக்கக்கூடடிய ஏற்பாட்டினை எமக்கு செய்து கொடுக்கப்பட்டிருக்கின்றது. அது போன்று நல்ல விடயமாக தேர்தலில் போடடியிடுகின்றவர்களில் பெண்களும் இனைஞர்களும் 25 சதவீதத்திற்கு குறைவில்லாமல் கட்டாயம் இடம்பெற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
அது போன்று இவ் உள்ளுராட்சி வட்டார முறையில் தேர்தலில் போட்டியிடுகின்ற நபர்கள் தாங்கள் வேட்புமனு தாக்கல் செய்து 3 மாத காலத்திற்குள் தங்களது சொத்து விபரம் அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்கின்ற மிக நல்ல விடயமும் இங்கு குறிப்பிடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.; மேலும் ஏதேனும் அரசியல் கட்சியோ அல்லது சுயேற்சைக்குழுக்களோ தாம் வட்டார முறையில் கட்டுப்பணங்களை செலுத்துகின்ற போது ஒரு அரசியல் கட்சி ஒவ்வொரு வட்டாரத்திற்குமான கட்டுப்பணமாக ரூபா 5000ம் செலுத்தப்படவேண்டும். அதே வேளை சுயேற்சைக்குழுவாக போட்டியிடுகின்றவர்கள் தமிழில் வருகின்றபோது 10000 ரூபா என்றும் சிங்கள மொழியில் வருகின்ற போது 20000ரூபா எனவும் மாற்றப்பட்டிருக்கின்றது. நான் நினைக்கின்றேன் சிங்கள மொழிதான் இதற்கான மூலம். எனவே அப்பணம் நிச்சயமாக 20000ரூபாவாகத்தான் இருக்கும். இந்த விடயமும் மிக வரவேற்கத்தக்கது. ஏனெனில் கடந்த தேர்தலிலே அதிகளவிலான சுயேற்சைக்குழுக்கள் போட்டியிட்டதன் காரணமாக பிரதான கட்சியின் வாக்குகள் பிரிவடைந்தமை குறிப்பிடத்தக்கது. பலதரப்பிட்ட பிரச்சினைகளை நாம் சந்தித்திருக்கின்றோம். அது இம்முறை மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றமை வட்டார முறையிலான தேர்தலிலே  மக்களுக்கு குழப்பமில்லாமல் வாக்களிக்கக்கூடிய முறையில் தேர்தல் முறையினை கொண்டிருப்பதனால் நாம் அதனை வரவேற்கவேண்டும். வட்டாரத்திலே 5 வீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெறுகின்றவர்கள் கட்டுப்பணத்தினை இழக்கின்ற நிலை உள்ளதால் இருபதாயிரம் ரூபா கட்டுப்பணத்தினை செலுத்தி கட்டுப்பணித்தினை இழக்க விரும்பாமல் கடந்த காலங்களை போல மக்களை குழப்புகின்ற வகையில் பலதரப்பட் சின்னங்கள் சீப்பு. அப்பிள், போத்தல், துவிச்சக்கரவண்டி  போன்ற பல சின்னங்கள் இடம்பெறுவது குறைவடையும் என்பதால் மக்கள் குழப்பம் இல்லாத முறையில் வாக்களிக்கூடிய நிலை காணப்படும்..
அதே போன்று கடந்த காலங்களை போன்று ஒரு வட்டாரத்திலே ஒரு அரசியல் கட்சி அல்லது ஒரு சுயேற்சைகுழு வெற்றி பெற்றால் கடந்த காலத்தை போல அங்கு வெற்றிடங்கள் ஏற்படுகின்ற போது அவ்விடத்திற்கு வேறொரு நபரை நியமிக்கும் அதிகாரம் அரசியல் கட்சிக்கும் சுயேற்சைக் குழு தலைவருக்குத்தான் அளிக்கப்பட்டிருக்கின்றமையும் ஓர் நல்ல விடயமாகும். ஆகையால் கடந்த காலங்களில்  திருத்தங்களை செய்து தாருங்கள் என்று கேட்டிருந்த போது அதை ஏற்றுக்கொண்டு பல திருத்தங்களை செய்து கொடுத்திருந்தோம். மீண்டும் அதனைத் திருத்தி எமது மாகாணத்தின் அங்கீகாரத்திற்காக அனுப்பியிருக்கின்றார்கள். ஆகையால் இத்திருத்த சட்டமூலத்திற்கு நாம் அனைவரும் அங்கீகாரம் வழங்க வேண்டும் என நான் இவ்விடத்தில் கேட்டுக்கொள்கின்றேன்.
அது மாத்திரமல்ல நம் அனைவருக்கும் தெரியும். ஒரு நாட்டின் தேர்தல் முறையினை மாற்றுகின்ற விடயத்தில் உண்மையிலேயே மாகாண சபைக்கு சட்ட ரீதியான அதிகாரம் வழங்கப்படவில்லை. ஆனால் மாகாண சபைகள் இந்த நாட்டிலே ஏற்படுததப்பட்டிருந்த பொழுது மிகக் குறைந்த அதிகார பகிர்வு முறையில் தான் வழங்கப்பட்டிருக்கின்றது. அது உண்மையில்  அனைவருக்கும் தெரிந்த விடயம். வடக்கு கிழக்கிற்கு வழங்கப்படடிருக்கின்றது. ஏனைய மாகாணத்திற்கும் வழங்கப்படிருக்கின்றது. நாம் நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் பெற்றுக்கொண்டவர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் அனைவரும் பேசுகினற விடயம் ஆழும் கட்சி, எதிர் கட்சி என்ற வேறுபாடுகள் இல்லாமல் கிழக்கு மாகாண சபை வலுவாக்கப்பட்ட ஒரு அதிகாரமுள்ள சபையாக்க வேண்டும.; அதை பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றோம். இருந்தும் மாகாண சபைக்கு 100 வீதம் வழங்கப்பட்டிருக்கின்ற உள்ளுராட்சி அதிகாரங்களை சட்ட திருத்தத்தின் ஊடாக மீள பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் நாம் இன்று உள்ளோம். அதில் மிக முக்கியமான விடயம் அனைவருக்கும் தெரிந்த விடயம் எமது மாகாணத்தில் மூன்று இனத்தினரும் மிக சந்தோசமாக வாழ்கின்றோம். இன்று மாகாணத்தில் இரண்டு மொழிகளை பேசுகின்றார்கள் அச்சமற்ற சூழ்நிலையில் வாழ்கின்றார்கள். ஆனால் திட்டமிட்டு தூரநோக்கு அடிப்படையில் மாகாண சபை முறைமை இல்லாதொழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் சில விடயங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. அதனை மறுப்பதற்கில்லை. அப்படி பார்க்கின் போது கடந்த நாடாளுமன்ற தேர்தலிலே பலதரப்பட்ட  இறக்குமதி செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உருவாகியிருக்கின்றார்கள். இவர்களுக்கு எப்போதுமே கிழக்கு மாகாண சபையில் இருப்பதற்கோ? அல்லது மாகாண சபைகள் முறைமையோ? அல்லது அதிகார பகிர்வுகள்; உண்மையிலேயே அவர்களுக்கு தேவையில்லை. அம்பாறையிலே திருகோணமலையிலேயே இருப்பதை அனைவரும் காண்பீர்கள்.
அந்த அடிப்படையில் பார்க்கின்ற போது இதே மாதிரியான பிரச்சினை எதிர்காலத்திலே எங்களது மாகாணத்திலே இந்த வட்டார முறைமைகள் வருகின்ற போது நடைபெறக்கூடாது என்பதில் கிழக்கு மாகண சபை மிக விழிப்பாக இருக்கவேண்டும.; இதை மத்திய அரசிற்கும் பாராளுமன்றத்திற்கும் தெரிவிக்க வேண்டும். முதலமைச்சர் என்ற அடிப்படையிலும் ஒரு பொறுப்புமிக்க கட்சியை வைத்து வழி நடாத்துகின்றவன் என்ற அடிப்படையிலும் எங்களுக்கு பொறுப்புடைய விடயமாக நான் இதனை பார்க்கின்றேன். அந்த அடிப்படையில் வட்டார முறைமையிலே தேசிய எல்லை நிர்ணயக் குழு என்கின்றபோது அதை அமைச்சர் அவர்கள்தான் உருவாக்குவதாக இருக்கின்றது. தேசிய மட்டத்திலான நிர்ணயக்குழு அந்த குழுவில் ஐந்து பேர் அங்கம்; வகிக்கின்ற போது அதில் பிரதிநிதித்துவம் சிறுபான்மை மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும.; என்பதை நாங்கள் வலியுறுத்த வேண்டும.; ஏனென்றால் அது ஒரு விசேட ஆணைக்குழுவென்றால் ஜனாதிபதியினால் நேரடியாக நிர்ணயிக்கப்படும.; ஆனால் இது குழு நியமனம் என்ற அடிப்படையில் அமைச்சரினால் நிர்ணயிக்கப்படுவதனால் அதில் எங்களது அக்கறையும் பார்வையும் செலுத்தப்பட வேண்டியதாக இருக்கின்றது.
அNது போன்று மாவட்ட எல்லை நிர்ணயக் குழுக்களாக பார்க்கின்போது மாவட்ட அரச அதிபர், தேர்தல் திணைக்கள பிரதிநிதி, நில அளவையாளர் பிரதிநிதி, புள்ளிவிபரத் திணைக்கள பிரதிநிதி, மத்திய அரசினால் நியமிக்கப்படும் பொது சேவையாளர் ஒருவர், மாகாண சபையில் உள்ளுராட்சி சபைக்கு ஒருவர் இவர்கள்தான் மாவட்ட எல்லை நிர்ணயங்களை செய்யக்கூடியவர்கள். இதில் நாம் கவனமாக இருக்க வேண்டிய விடயம் என்னவென்றால், மத்திய அரசினால் ஒரு குழு நியமிக்கப்படுகின்ற போது மாகாண மட்டத்திலும் இரண்டுபேரும் ஒருமுகப்படுத்தப்பட தீர்மானங்களை மேற்கொண்டால் மாகாணத்தில் இருக்கின்ற அரசியல்வாதிகளோ ஏனையவர்களோ தலையிட முடியாத நிலை ஏற்படும். இங்கு நாம் இன ரீதியாக பேசாவிட்டாலும் கடந்த காலங்களில் கற்றுக் கொண்ட அனுபவங்களை மனதில்இட்டு கடந்த காலங்களில் எப்படி வழங்கப்பட்ட அதிகாரங்கள் எமக்குத் தெரியாமல் திட்டமிட்டு பறிக்கப்பட்டு, அதற்கு எதிராக பேசிய தலைவர்கள் இன்று எத்தனை பேர் இருக்கின்றார்கள். எத்தனை தலைவர்கள் இல்லாமல் இருக்கின்றார்கள். என்ற விடயங்கள் நம் அனுபவத்தின் ஊடாக பார்க்கின்றபோது, தற்போது நாம் அம்பாறை மாவட்டத்தினை எடுத்துப்பார்த்தால், மாவட்ட அரச அதிபர், தேர்தல் திணைக்கள பிரதிநிதி, நில அளவையாளர் பிரதிநிதி, புள்ளிவிபர திணைக்கள பிரதிநிதி, மத்திய அரசினால் நியமிக்கப்படும் மத்திய பயனடை சேவையாளர் ஒருவர், மாகாண சபையில் பிரதிநிதியாக இருக்கின்ற ஒருவர் மட்டும்தான் அங்கு இருக்கின்ற சிறுபான்மை மக்களை திருப்தி படுத்துபவர்களாக இருக்கின்றது. ஆகவே இந் விடயத்தில்தான் நாம் வழங்குகின்ற ஆலோசனைகள் திருத்தமாக மேற்கொள்கின்ற விடயமாக நிச்சமாக மாகாண மட்டத்திலாவது இவ் மத்திய அரசினால் நியமிக்கப்படுகின்ற பொது சேவை ஆணையார் மாகாண சபையினால் நியமிக்கப்படுகின்ற பொது சேவை ஆணையாளராக குறிக்கப்பட்டிருக்கின்ற இடங்களை பிரதிநிதித்துவபடுத்துகின்றவர்கள் நியமிக்கப்படுகின்றபோது அதில் கிழக்கு மாகாணத்திற்கும் கூடுதல் பங்கும் இருக்கும் என்றுநான் நம்புகின்றேன்.
இச்சட்டத்தின் மிக முக்கியமான விடயம் இச்சட்டத்தின் மிக முக்கியமான ஏதேனும் ஒரு உள்ளுராட்சிமன்றத்தின் முதல் தடவையாக பாதீடு அல்லது குறை நிரப்பு பாதீடு தோற்கடிக்கப்பட்டால், அம்மன்றத்தின் தலைவர் பதவி இரத்துச் செய்யப்படுவதாக கருதப்படுகின்றது. அத்தலைவரானவர் இரண்டு முறை தோற்கின்ற போது இயல்பாகவே அச்சபைக்கு விசேட ஆணையாளரை நியமிக்கின்ற அதிகாரம்  அமைச்சருக்கே வழங்கப்படுகின்றமை குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இவ்வியடம் உங்கள் அனைவருக்கும் தெரியும்.  உள்ளுராட்சி மன்ற சட்ட மூலத்திலே சில உள்ளுராட்சிமன்றங்கள் விடுகின்ற தவறுகளை விசாரிக்கின்ற அதிகாரம் மாகாண சபைக்கு அதை இல்லாமல்செய்கின்ற அல்லது விசாரிக்கிக்ன்ற தன்மை இருந்தது. தற்போது இருக்கின்ற சூழலிலே அது தொடர்பான முழு அதிகாரமும் மத்திய அமைச்சருக்கே உரியது. அது மாத்திரமல்ல மத்தியில் இருந்து அமைச்சர் இந்த விடயத்திற்கு கட்டளையிடுகின்ற போது அங்கிருந்து நியமிக்கப்படுகின்றவர் யார்? எத்தகையவர்? என்ற பிரச்சினையினை தோற்றுவிக்கும். அவ் அடிப்படையிலே மாகாண உள்ளுராட்சி அமைச்சர் என்கின்ற ஒரு திருத்தம் கொண்டுவரப்படுகின்போது இங்கு இருக்கின்ற ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள மாகாண அதிகாரங்காரத்தை நாங்கள் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
இங்கு குறிப்பட்டுள்ள அமைச்சர் என்கின்ற விடயத்தினை மாகாணஅமைச்சர் என்கின்ற ஒரு மாற்றத்தை நாங்கள் கோர வேண்டித்தான் இருக்கின்றது.
ஆகையால் இந்த சட்ட மூலத்தினை ஏனைய மாகாணங்கள் எல்லாம் உடனடியாக ஆதரித்து அனுப்பியிருக்கின்றது. ஏனென்றால் நாட்டில் அனைத்து மாகாணங்களிலும் பிரச்சினையில்லை அம்மாகாணங்களில் இருக்கினற் பிரதான எதிர்காட்சியான ஐக்கிய தேசிய கட்சி கூட ஆதரித்து இருக்கின்றது. ஆகையால் எமது மாகாணத்திற்குதான் அதிகார பகிர்வினை பாதுகாக்கின்ற பொறுப்பினை இயற்கை ஒப்படைத்திருக்கின்றது. அவ்வடிப்படையில் நாம் பலதரப்பட்ட விவாதங்களோடு மத்திய அரசிற்கு இதனை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு இருக்கின்றது. அவ் அடிப்படையில் உங்களது ஆலோசனைகளை மிக தெளிவாகவும் உங்களது ஆலோசனையுடன் சேர்த்து இச்சட்மூலத்தை ஆதரிக்க வேண்டிய பொறுப்பும் ஏற்பட்டிருக்கின்றது. அதிலும் ஓர் விசேட பிரச்சினையாக நாம் கருதும் விடயம் என்னவென்றால், கட்சிகளை சார்ந்த பிரதிநிதிகள் பாராளுமன்றத்திலும் இருக்கின்றார்கள். எங்களது கட்சியினை தவிர்ந்த ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள் பாராளுமன்னறத்தில் பிரதிநிதித்துவம் இருக்கின்றது. அந்த பிரதிநிதித்துவம் உள்ளவர்கள் பாராளுமன்றத்தில்தான் இச்சட்டமூலத்தை அமுலாக்குகின்ற பொழுது மூன்றாவது வாசிப்பின்போது நாங்கள் இங்கு பேசுகின்ற விடயங்களை அப்பாராளுமன்றத்திலும் கட்சி உறுப்பினர்களிடம் எடுத்து கூறி நாம் இங்கு பேசுகின்ற விடயங்களை கட்சி கூட்டதிலே எடுத்துக்கூறி  இதனை கட்டாயமாக பேசுவதற்கான ஒரு வாய்ப்பினையும் அன்பான உறுப்பினர்கள் இதனை சேர்த்து கொள்வார்கள் என்று நம்புகின்றேன். இ;சட்டமூலத்திலே மிக நல்ல விடயங்களும் இருக்கின்றது. எங்களது மாகாணத்தில் இருந்து சில அதிகாரங்களை பறிக்கின்ற விடயங்களும் இருக்கின்றது. ஆகையால் இதை நாங்கள் மிக கவனமாக பார்க்க வேண்டியதாகவும் கடந்த காலங்களில் எதிர்த்தவர்களாக பலதரப்பட்ட பிரச்சினைகள் என்கின்றபோது ஒரு கட்சிக்குள் கூட்டாக கூட்டுப்பொறுப்பு இல்லாமல் இயங்கினோம் என்கின்ற பிரச்சினைகள் வந்திருந்தது. ஆகவே நாங்கள் இம்மாகணத்தை கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால் இயல்பு வாழ்கையினை தொடர்ந்து நீடிக்க வேண்டுமாக இருந்தால், மக்கள் எதிர்பார்க்கின்ற அபிவிருத்தியினை செய்து கொண்டு செல்ல வேண்டும். மக்களுக்கு அல்லது எதிர்கால சந்ததியினருக்கு இந்த மாகாண முறையினை பாதுகாத்து கொடுக்க வேண்டிய இரண்டுபட்ட ஒரு சிக்கலான கட்டத்தில் இருக்கின்றோம். அந்த அடிப்பiயில் எமது பிரச்சினைகளை சொல்லி இந்த எமது கௌரவ உறுப்பினர்கள் அனைவரும் இதற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் எனவும் கேட்டுகொள்கின்றேன்.
அது மாத்திரமல்ல ஏனைய மாகாணங்கள் இதனை ஆதரிப்பதற்கு எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லை அதுமாத்திரம் அல்ல கவலையான விடயம் இன்னுமொரு சட்டமூலத்தை கொண்டுவந்து மாகாண சபை முறைமை தேவையில்லை என்று சொன்னால் கூட அதனை ஏற்றுக்கொண்டு அதற்கு 100 வீதம் அனுமதி கொடுக்கக்கூடிய சூழல்தான் ஏனைய ஏழு மாகாணங்களுக்கும் இருக்கின்றது. இந்த மாகாணத்தில் மாத்திரம்தான்; இச்சட்டமூலங்களை பரிசீலனை செய்து ஆதரிப்பதா? திருத்த வேண்டுமா? அல்லது நிராகரிக்க வேண்டுமா? என்கின் முடிவினை எடுக்க வேண்டிய நிலை இருக்கின்றது. ஆகையால் இம்மாகாணசபைக்கு இருக்கின்ற சந்தர்ப்பத்தை வெறுமனே நாம் ஏளனம்  செய்ய முடியாது. அத்தோடு நாம் இன்று ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கின்றோம். அதை விட இங்கு உறுப்பினர்கள் பேசியது போல கடந்த ஆண்டு நாம் இதே போன்றுதான் மிக விரைவாக திருத்தங்களை கோரியபோது அதை ஏற்றுக்கொண்டு திருத்தினார்கள். இவ் ஏற்பாடுகளை எழுதியவர்கள் எங்களது மாகாணத்திலே அரசியல் சம்மந்தமாக பேசுகிறபோது அல்லது சட்டமூலமாக வர்த்தமானி மூலம் அறிவித்தல் விடுவதற்கு மன்னர் இது தொடர்பில் பேசி இருக்க வேண்டும். அவ்வாறு முன் கூட்டியே தெளிவுபடுத்தியிருந்தால் எமக்கு பல சந்தேகங்கள் தீர்க்கப்பட்டிருக்கும் . இன்று பல சந்தேகங்கள் இருக்கின்றது. விளங்கமுடியாத விடயங்கள் இருக்கின்றது. தெளிவில்லாத விடயங்கள் இருக்கின்றது. ஆகவே இது ஒரு ஜனநாயக நாட்டிலே திடீரென்று எடுக்கப்படுகின்ற ஒரு வித்தியாசமான வன்முறையாக கூடத்தான் இதனை நான் கருதுகின்றேன் . ஆகையால் இது ஒரு நாட்டிலே இருக்கக்கூடாத விடயங்கள். ஒரு தேர்தல் முறையினை மாற்றம் செய்வதுதான் உண்iயிலேயே பிரச்சினை, ஆகையால் மறைமுகமாக அதிகாரங்கள் எடுக்கப்படுகின்ற விடயங்களை நாங்கள் அலசி ஆராய வேண்டும், எமது மக்களுக்கு பதில் கூறவேண்டும், எமது பகுதிகளில் இருக்கின்ற தலைவர்களுக்கு பதில் கூறக்கூடிய வகையில் எமக்கு விளக்கங்கள் வழங்கப்படவேண்டும். எந்தவொரு விளக்கமும் இல்லாமல் அவசர அவசரமாக செய்கின்ற விடயங்களை உண்மையிலேயே நான் ஒரு கட்சியினை வழிநடத்துகின்றவன் என்ற  அடிப்படையில் உண்மையிலேயே நான் வெறுக்கின்றேன். இது உண்மையிலேயே ஜனநாக பண்பில்லாமல் அவசர அவசரமாக கொண்டு வரப்பட்ட வீசிவிட்டு செல்கின்ற வேலைகள் இடம்பெறுமாக இருந்தால் இந்த நாட்டிலே இன்னும் சரியான ஜனநாக முறை நடைமுறையில் இல்லை என்பதைத்தான் இது காட்டுகின்றது. ஆகையால் இதில் பாராளுமன்றத்தில் இருக்கின்ற அங்கத்தவர்கள் நன்றாக சிந்திக்க வேண்டும். இது மோசமாக அவசரமாக செய்கின்ற விடயம் அல்ல. ஒரு பாமர மக்கள் கூட இதனை புரிந்து கொள்ளக்கூடிய வகையில் இது அமைய வேண்டும். எதிர்காலத்திலே வட்டார முறையிலே போட்டியிடுகின்ற ஒருகுடி மகன் சாதாரண விவசாயியாக அல்லது வர்த்கனாக கூட இருப்பான. அவன் அடிப்படை சட்டம் தெரியாமல் மோத முடியாது. ஆகையால் 3ம் நிலையில் இருக்கின்ற உள்ளுராட்சிமன்றங்கள் இரண்டாம் நிலையில் இருக்கின்ற மாகாண சபைகள் இதனை விளங்கிக் கொள்வதே கடினமாக இருக்கின்றமையினை முதலாம் நிலையில் இருக்கின்ற பாராளுமன்ற பிரதிநிதிகள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டிலே பிரச்சினைகளை குறைப்பதற்கான வழிகளை ஏற்படுத்த வேண்டும். மாறாக இன்னமும் பேதங்கள் கட்சிகளுக்கு பின்னால் இழுபட்டு செல்கின்ற அல்லது அவர்களுக்கு பின்னால் செல்கின்ற அல்லது அவர்களது நிலைமைகளுக்கு ஏற்றாற்போல் போகின்ற வழிகளை இன்னமும் இந்ந நாட்டிலே செய்து கொண்டிருந்தால் இந்த நாட்டிலே  முன்னேற்றகரமான செயல்களை இன்னமும் செய்ய முடியாது. அவர்கள் தங்களுக்கு தேவையான விடயங்களை மாத்திரம் செய்து கொண்டு தாங்கள் மட்டும் சந்தோசமாக இருந்தால் மாத்திரம்  போதும் என்கின்ற அடிப்படையில் இலங்கையினுடைய ஒரு கட்சியாகவும் நோயாகவும்  மாறிவிடுவார்கள். இதனை நாம் ஏன் இவ்வளவு விளக்கமாக கூறவேண்டுமென்றால் உங்களு;களுக்கு தெரியும் இந்த மாகாண சபையினை உருவாக்குவதற்காக மிக மோசமான கடுமையான யுத்தம் செய்து, பாரிய உயிரிழப்புக்களை கொடுத்து, இராணுவ உயிரிழப்புக்களை கொடுத்து, மக்கள் கணிசமாக அழிந்து அதே போன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்று பிரதிநிதித்துவப் படுத்துகின்ற  நாங்கள் எங்களது உயிர்களை கூட 207 போராளிகளை பறிகொடுத்துள்ளோம். இதனையிட்டு எமது மக்களிடம் நாங்கள் வேண்டிநின்றது நாங்கள் உங்களுக்கு கடந்த காலங்களிலே நீங்கள் தனிநாடு கோரியிருந்தீர்கள். அது இந்த நாட்டிலே சாத்தியமற்றது. அதிகாரப்பகிர்வை பெற்றுத்தருவோம். அழிந்திருக்கின்ற நாட்டை கட்டித்தருவோம் என்றுதான் இந்த ஆட்சிக்கு வந்தோம். வந்திருக்கின்றபோது நாங்கள் செய்கின்ற விடயம் எல்லாவற்றையும் தாரைவார்த்து கொடுத்துவிட்டு சென்றால் மக்கள் எவ்வாறு எங்களைப் பற்றிப் பேசுவார்கள்?  பதில் சொல்வதற்கு இந்த மாகாண சபைதான் சாட்சியாக இருக்கும், அந்த அடிப்படையில் நாங்கள் இதை விரும்பிச் செய்யவில்லை 100 வீதம் விரும்பி செய்யவில்லை விரும்பாமலும் ஒட்டுமொத்த ஆட்சி இருக்க வேண்டும் இந்த மாகாணத்தை பாதுகாக்க வேண்டும் என்கின்ற விடயத்தை எங்களால் முடியாமல் இருக்கின்ற விடயத்தை தெரிந்தும் நாங்கள் ஆதரிக்கின்றோம் என்கின்ற விடயத்தை எதிர்கால சந்ததியினர் விளங்கிக்கொள்ள வேண்டும.; என்பதற்காக வேண்டித்தான்; எமது கட்சிகள் இன்று இதனை ஆதரிப்பதற்கான முடிவினை எடுத்திருக்கின்றது. சில வேளைகளில் நாங்கள் இதனை ஆதரிக்காமல் திருப்பி அனுப்பினால்கூட அரசின் பெருமபான்மைப் பலத்தினால் இயல்பாகவே பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கிகாரம் பெற்று விடும். இவைகளையெல்லாம் நன்கு தெரிந்தவர்களாகவும் காலத்தின் கட்டாயத்தினாலும் கொள்கையளவில் இதனை நாம் ஆதரித்தே தீர வேண்டும் என்கின்ற கட்டாயத்தில் இருக்கின்றோம். அதனாலே ஆதரித்தோம். ஆகவே அன்பான உறுப்பினர்களே! நாம் அனைவரும் இதனை விரும்பியோ விரும்பாமலோ இதனை ஆதரிக்க வேண்டும் என்பதைத்தான் எமது கௌரவ உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
அது மாத்திரமல்ல இது எதற்கு ஒப்பான விடயம் என்றால் கௌரவ தவிசாளர் அவர்களே! நாங்கள் திருமணம் முடித்து ஒரு அழகான குழந்தையை பெற்றுக்கொண்டால். அந்த குழந்தை ஒரு விபத்தில் சிக்கியபோது இரத்தப்பெருக்கு ஏற்படுகின்றது. அந்த குழந்தைக்கு இரண்டு பொயின்ற் இரத்தம் கொடுத்தால் மாத்திரமே குழந்தை பிளைக்குமாக இருந்தால். தந்தையினதும் குழந்தையினதும் இரத்தம் ஓ பிளசாக இருக்கின்ற பட்சத்தில், தந்தையின் இரத்தைத்தை செலுத்திகூட அந்த குழந்தையை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டு அக்குழந்தை மரணித்தால் என்ன இடம்பெறும் என்கின்ற ஒரு தகப்பனின் நிலைகூட எனக்கு இங்கு ஏற்பட்டிருக்கின்றது. ஆகவே இது ஒரு கவலையான விடயமுமாகும். இதில் உண்மையிலேயே இந்த நாட்டிலே இருக்கின்ற தலைவர்கள், பாராளுமன்ற பிரதிநிதிகள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். அவர்களது தனிப்பட்ட தேவைகளுக்காகவும் தங்களது ஆசைகளுக்காக மாத்திரம் அல்ல. உண்மையிலேயே இங்கு இருக்கின்ற சிறுபான்மை மக்களின் சந்தேகங்களை போக்குகின்ற அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். வெறுமனே தங்களுக்கு தேவையான விடயங்களை திருத்திவிட்டு, தங்களுக்கு தேவையான விடயங்களை செய்து கொடுக்க வேண்டும். ஆகையால் எமது நாட்டின் கடந்த கால விடயங்களை அனுபவங்களை நாங்கள் மாறக்காமல் இன்னமும் பிரச்சினைகளை உருவாக்காமல் சிறுபான்மை எதிர்கட்சியாக இருக்கக்கூடாது என்கின்ற விடயங்களை எல்லாம் கருத்திற்கொண்டு, இந்த விடயத்தை பெரிதாக பேசிப் பேசி எமது கூட்டை உடைத்து அழிப்பதைவிட அது மாத்திரமல்ல, எமது நாடடில் இருக்கின்ற அநியாயம் என்னவென்றால் எமது கட்சிக்கு பின்னால் முன்னால் எங்கோ செல்ல வேண்டும் என்கின்ற பல பிரச்சினைகளை எல்லாம் சிந்தித்து தொடர்ந்தும் மத்திய அரசோடு ஓர் புரிந்துணர்வுடண் இணைந்து செயற்பட வேண்டும் என்கின்ற பலதரப்பட் விடயங்களை கருத்திற்கொண்டுதான் நாங்கள் எமது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஆதரவு வழங்க முன்வந்துள்ளது. ஆகையால் இதனை எமது மக்கள் ஒட்டுமொத்தமாக விளங்கிக்கொள்ளவேண்டும் என்கின்ற அடிப்படையில் நான் இதனை பேசியிருந்தேன். அந்த அடிப்படையில் இந்த விடயத்தில் பல நல்ல விடயங்களும் இருக்கின்றது. நாங்கள் இங்கு சுட்டிக்காட்டியிருக்கின்ற விடயங்கள் அதனோடு ஏனைய கௌரவ உறுப்பினர்களின் பார்வையில் இருக்கின்ற விடயங்களும் எதிர்காலத்தில் திருத்திக் கொள்ளப்பட வேண்டும். இருந்தும் இதனை திருத்தினாலும் சரி திருத்தாவிட்டாலும் சரி கவலையோடு நாங்கள் ஆதரித்தே அனுப்புகின்றோம் என்று கூறி எனது உரையை முடிக்கின்றேன்.  நன்றி வணக்கம்.
»»  (மேலும்)