2/28/2011

தமிழில் தேசிய கீதம் பாடி மட்டக்களப்பு புதிய பேருந்து நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது

 முதலமைச்சரின் பணிப்பின் பேரில் மட்டக்களப்பில் அமைக்கப்ட்டு வந்த பேருந்து நிலையம் இன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் பிரதி அமைச்சர் முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
dsc07825
dsc07832
dsc07843
dsc07873
»»  (மேலும்)

புலிகளின் பாணியில் பேச்சுவார்த்தை விபரங்களை வெளியிடதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுப்பு
  அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின் போது எதைப்பற்றி பேசுகின்றோம். என்ன கோரிக்கையை வலியுறுத்துகின்றோம் என்று ஏதும் கூற முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சந்திப்பு நடக்கும் அதுபற்றி எதுவும் கூற இயலாது என அரச தரப்பும் கூறுகின்றன.

அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தை தொடர்பான விபரங்களைத் தெரிவிக்குமாறு கேசரி வார இதழின் சார்பில் கேட்டபொழுதே இரு தரப்பினரும் இவ்வாறு பதில் அளித்தனர்..

தமிழ் மக்களுடைய பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காக இருதரப்பினராலும் பேசப்படவுள்ள விடயங்கள் குறித்து தமிழ் மக்களுக்கே அறிந்துகொள்ள முடியாத அளவுக்கு இந்தப் பேச்சுவார்த்தைகள் வெளிப்படையாக இல்லை என்பதே முக்கியமான விடயமாகும்..

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. இந்தச் சந்திப்பானது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமையவே இடம்பெற்று வருவதுடன் அரசாங்க தரப்பில் முன்னாள் பிரதமரான ரட்ணசிறி விக்ரமநாயக்க தலைமையில் அமைச்சர்களான ஜீ.எல். பீரிஸ், மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் அடங்குகின்றனர்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அதன் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரன் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகளுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பேச்சுவார்த்தைக்கு சமாந்திரமாக புலம்பெயர்ந்த தமிழர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதுடன் வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்வது குறித்தும் கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்படவுள்ளதாக அறியவருகிறது. _
»»  (மேலும்)

வெல்லாவெளி நீலப்பனிக்கன் குள திருத்த வேலைகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது

பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரால் இன்று வெல்லாவெளி நீலப்பனிக்கன் குள திருத்த வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
dsc07925
dsc07922
dsc07914
»»  (மேலும்)

தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் சேவை இன்று ஆரம்பம்

கொழும்பு துறைமுகத்திற்கும் தென் இந்தியாவின் தூத்துக்குடி துறைமுகத் திற்கும் இடையிலான முதலாவது பயணிகள் கப்பல் சேவை இன்று திங்கட்கிழமை தூத்துக்குடியில் இருந்து ஆரம்பமாகின்றது. 500 பயணிகளை அவர்களின் பொதிகளுடன் மிகவும் சிறந்த முறையில் ஏற்றிச் செல்லக் கூடிய வசதிகளைக் கொண்ட இந்த கப்பலை இந்தியாவில் தனியார் நிறுவனம் ஒன்று நிர்வகித்து வருகின்றது.
தூத்துக்குடி துறைமுகத்திலுள்ள பாரிய களஞ்சிய சாலையொன்றை பயணிகளின் தங்குமிடமாக மாற்றியமைத்துள்ளார்கள். இங்கு பொதிகளை சோதனையிடல், சுங்க பரிசோதனைகள், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கரும பீடங்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இப்போதைக்கு கொழும்புக்கும் தூத்துக்குடிக்குமிடையில் நடைபெறும் கப்பல் சேவை விரைவில் இராமேஸ்வரத்துக்கும் தலைமன்னாருக்கும் 2 வது கப்பல் சேவையாக விஸ்தரிக்கப்படும். பல்லாண்டு காலமாக இராமேஸ்வரத்துக்கும் தலை மன்னாருக்கும் இடையில் நடைபெற்று வந்த பயணிகள் கப்பல் சேவை 80 ஆம் ஆண்டு தசாப்தத்தின் ஆரம்பத்தில் பயணிகள் அச்சுறுத்தல் காரணமாக கைவிடப்பட்டது.
கொழும்பு துறைமுகத்திற்கும் தூத்துக்குடிக்கும் இடையிலான இடைவெளி 282 கிலோ மீற்றர் ஆகும். இது 152 கடல் மைல்களாகும். கொழும்பிலிருந்து தூத்துக்குடி செல்ல 10 முதல் 12 மணித்தியாலங்கள் எடுக்கும். ஆரம்ப கட்டத்தில் இரு தேசங்களுக்கும் இடையில் வாரத்திற்கு 2 கப்பல் சேவைகள் இடம்பெறும். பின்னர் வாரத்திற்கு 3 ஆக அதிகரிக்கப்படும்
இலங்கை கப்பல் போக்குவரத்து கூட்டுத்தாபனம் 500 முதல் 600 வரையிலான பயணிகளையும் பயணிகள் ஒவ்வொருவரின் 100 கிலோகிராம் பொதிகளையும் உடன் எடுத்துச் செல்வதற்கான வசதிகளையும் கொண்ட கப்பல்களை வாங்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
பயணிகள் போக்குவரத்திற்கான கப்பல் கட்டணங்கள் விமான கட்டணங்களை விட கணிசமான அளவு குறைவாகயிருப்பது குறிப்பிடத்தக்கது.

»»  (மேலும்)

2/26/2011

வாகனேரி மக்களுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சரால் இன்று நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது

கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெள்ளத்தினால் பாதிக்க்கப்பட்ட வாகனேரி மக்களுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் இன்று நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கிரான்  பிரதேச செயலாளர் மற்றும் கோரளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
dsc07720
dsc07708
»»  (மேலும்)

லிபியாவில் தொடரும் போராட்டம்: உள்நாட்டுப் போர் மூளும் அபாயம்

லிபியாவில் தொடரும் போராட்டம்: உள்நாட்டுப் போர் மூளும் அபாயம்டுனீசியா, எகிப்துக்கு அடுத்தபடி யாக லிபியாவில் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து போரா ட்டங்கள் இடம்பெற்று வருகி ன்றன. ஜனாதிபதி முஅம்மர் கடாபி யின் 41 ஆண்டு கால ஆட்சி ஆட்டம் கண்டுள்ளது.
லிபிய நாட்டின் கிழக்குப் பகுதி எதிர்ப்பாளர்கள் வசமாகிவிட்டது. இராணுவத் தளபதிகளே கடாபியின் ஆட்சி பிடிக்காமல் மக்களோடு சேர்ந்துகொண்டு விட்டனர். லிபி யாவின் தூதரக அதிகாரிகள் ஒவ் வொருவராக பதவி விலக ஆரம் பித்துவிட்டனர்.
முஅம்மர் கடாபியின் ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்து விட்டது என்று அமெரிக்கா, பிரித் தானியா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளி ட்ட மேற்கத்திய நாடுகள் முடிவு செய்துவிட்டன. அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான்கி மூனும் அறிவித்துவிட்டார்.
முதல் கட்டமாக லிபியா மீது இராணுவ பொருளாதாரத் தடை கள் விதிக்கப்படும் என்றும், அதன் பின்னரும் நிலைமை சீரடைய வில்லை என்றால் பன்னாட்டுப் படைகள் மூலம் லிபிய ஆட்சி யாளர்கள் விரட்டப்படுவார்கள் என்றும் தெரிகிறது.
கடாபிக்கு விசுவாசமாக இருக் கும் இராணுவத்தினரும் கூலிப்ப டையினரும் தலைநகர் திரிபோலி யில் மக்களைக் கொடூரமாக அட க்கி ஒடுக்குகின்றனர்.
ஜனாதிபதி கடாபிக்கு எதிரான கலகம் லிபிய நாட்டின் மேற்குப் பகுதிக்கும் பரவியது. மக்களுக்கு ஆதரவாகக் களத்தில் இருந்து செயல்படுவோம். கடாபி கட் டளை இட்டாலும் மக்களைச் சுடமாட்டோம் என்று இராணுவ அதிகாரிகள் அறிவித்தனர்.
அதே சமயம் திரிபோலிக்கு 210 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மிசுராடா என்ற ஊரில் கடாபிக்கு விசுவாசமாக இருக்கும் இராணு வத்தினர் கண்மூடித்தனமாகச் சுட்ட தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர் என்று பி.பி.சி. தெரிவிக்கிறது.
தலைநகர் திரிபோலியில் கடாபிக்கு விசுவாசமான இரா ணுவ வீரர்களும் கூலிப்படை யினரும் அச்சமூட்டும் வகையில் நகரில் ரோந்து சுற்றி வருகின்றனர். எவராவது வீதியில் என்ன நடக்கிறது என்று வீட்டிலிருந்தபடி எட்டிப்பார்த்தால்கூட அழைத்துச் செல்கின்றனர். வீட்டில் இருப்ப வர்கள் கெஞ்சினாலும், அடித்து இழுத்துச் செல்கின்றனர். நீ அதிப ருக்கு விசுவாசியா, துரோகியா என்று கேட்கின்றனர் என்று அங்கி ருக்கும் ஊடகங்கள் தெரிவி க்கின்றன.
லிபிய மக்கள் வெளிநாடுகளில் உள்ள தங்களுடைய உறவினர்க ளுடன் கூட பேச முடியாதபடிக்கு தகவல் தொடர்பு துண்டிக் கப்பட்டிருக்கிறது. தொலைபேசி, கைபேசி, இணையத்தளம் உள் ளிட்ட அனைத்து தகவல் தொடர்பு களும் துண்டிக்கப்பட்டு விட்டன. இதனால் லிபியாவில் இருக்கும் தங்களுடைய உறவினர்களும் நண்பர்களும் என்ன ஆனார்கள் என்றுகூட தெரியாமல் மற்றவர்கள் பரிதவிக்கும் நிலைமை ஏற்பட்டி ருக்கிறது.
நிலைமை மேலும் மோசமாவ தற்குள் லிபியாவைவிட்டு வெளி யேறிவிட வேண்டும் என்று ஆயிர க்கணக்கான வெளிநாட்டவர்கள் ஒரே சமயத்தில் புறப்பட்டுவிட் டனர். இதனால் விமான நிலை யங்களில் விமானங்கள் வருவதும் புறப்படுவதுமாகவே இருக்கின் றன. ஏராளமான நாடுகள் தங்கள் நாட்டவரை அழைத்துவர விமான ங்களையும் கப்பல்களையும் ஒரே சமயத்தில் பயன்படுத்த ஆரம்பித் துள்ளன.
ரஷியா, பிரான்ஸ், பிரித்தானியா ஆகியவை தங்கள் நாட்டவர்களை வெளியேற்றத் தொடங்கிவிட்டன. இந்தியாவும் சீனாவும் பெரிய அளவில் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. ஐரோப்பிய யூனியன், தென் கொரியா, அமெரிக்கா ஆகியவையும் இதைத் தொடங்கி விட்டன.
கடந்த 10 நாட்களாக நடை பெற்றுவரும் கிளர்ச்சியில் 300 பேர் இறந்திருப்பதாக லிபிய உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது. ஆனால் ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் கொல்லப்பட்டுவிட்டனர் என்று இத்தாலி நாட்டு வெளி யுறவு அமைச்சர் பிராங்கோ பிரித் தானியாவில் கூறுகிறார்.
கடாபியை எதிர்ப்பவர்களின் கிளர்ச்சி பெங்காசி நகரில்தான் முதலில் தீவிரமாகத் தொடங்கி யது. இப்போது அது அதைவிட தீவிரமாக பிற ஊர்களுக்கும் பரவி வருகிறது.
தொலைபேசி, கைபேசி, இணைய த்தள தொடர்புகள் அற்றுப்போயி ருந்தாலும், அரசை எதிர்ப்பவர்கள் தங்களுக்குள் தொடர்புகளை ஏற் படுத்திக்கொண்டு ஊர் ஊராகச் சென்று மக்களை அரசுக்கு எதி ராகப் போரிடுமாறு அறைகூவல் விடுக்கின்றனர்.
பெங்காசி, டொப்ருக் நகரங்க ளில் அரசு எதிர்ப்பாளர்கள் கடாபி க்கு கடைசி காலம் வந்துவிட்டது என்று கூறி பட்டாசு வெடித்து தேசியக் கொடிகளைக் கையில் வைத்துக்கொண்டு உற்சாகக் கூத் தாடுகின்றனர். பாட்டுப்பாடி நட னம் ஆடுகின்றனர்.
இதனிடையே கடாபி தானாகப் பதவி விலகட்டும் என்று காத்தி ராமல், ஆயிரக்கணக்கான உயிர்ப் பலிகளைத் தடுத்து நிறுத்துவது சர்வதேசக் கடமை என்று கருது கிறார் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா. இது தொடர்பாக முத லில் அமெரிக்க அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகி றார். பிரித்தானியா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஐரோப்பிய யூனியன் போன்ற தோழமை நாடு களின் தலைவர்களுடைய கருத்து க்களையும் அவர் கேட்டு வருகிறார்.
கடாபியின் அடக்குமுறை ஆட்சியை வன்மையாகக் கண்டித்துள்ள அவர், சுமுகமாக ஆட்சி மாற்றம் நடை பெற உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால், விளைவுகள் கடுமையாக இருக்கும் என்றும் எச்சரித்திருக்கிறார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் வரும் திங்கட்கிழமை ஜெனீவா நகருக்குச் செல்கிறார். அங்கு மனித உரிமைகள் கவுன்சில் கூட்ட த்தில் பங்கேற்க பல்வேறு வெளி நாடுகளின் அமைச்சர்கள் வருகின் றனர். அங்கு லிபிய நிலைமை குறித்துத்தான் முக்கியமாக விவாதி க்கப்படும் என்று தெரிகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சி திட்டப் பிரிவின் நல்லெ ண்ணத் தூதராக கடாபியின் மகள் ஆயிஷா அல் கடாபி நியமிக்கப் பட்டிருந்தார். சமீபத்திய நடவடிக் கைகளுக்குப் பின்னர் அவரை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டது ஐ.நா. சபை.

»»  (மேலும்)

வடக்கை அபிவிருத்தி செய்வதில் அரசு அர்ப்பணிப்புடன் செயற்பாடு ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் பாராட்டு

 மோதல்கள் இடம்பெற்ற வடபகுதியில் உட்கட்டமைப்புக்களை அபிவிருத்தி செய்வதில் இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் தெற்காசியாவுக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.
ஐந்து நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு நேற்றைய தினம் கொழும்பு சினமன்ட் கிரான்ட் ஹோட்டலில் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தியிருந்தது. முன்னாள் மோதல் பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளைக் கண்டறிந்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களையும் நேரடியாகச் சந்தித்து அவர்களின் நிலைப்பாடுகளைக் கேட்டறிந்துகொண்டதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் தலைவர் ஜீன் லம்பெர்ட் கூறினார்.
வடபகுதியில் பாடசாலைகள், வீதிகள், நீர்விநியோகம், மின்விநியோகம், உள்ளிட்ட உட்கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமது இலங்கை விஜயத்தின்போது இலங்கை சபாநாயகர், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், வடபகுதி அரசாங்க அதிபர்கள் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந் ததாகவும் அவர் தெரிவித்தார். வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் அபிவிருத்திப் பணிகளின் எதிர்காலத் திட்டங்களை உரிய தரப்பினரிடம் கேட்டறிந்து கொண்டதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டிருக்கும் அபிவிருத்திப் பணிகளைப் பார்வையிட்டதாகவும் அவர் கூறினார்.
அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், அரசாங்கத்திற்கும் இடையில் ஆரம்பித்திருக்கும் பேச்சுவார்த்தைகளைத் தாம் வரவேற்பதாகவும், இப்பேச்சுவார்த்தைகள் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வொன்று எட்டப்படவேண்டுமென்றும் ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் தலைவர் ஜீன் லம்பெர்ட் மேலும் கூறினார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவரும் கலந்துகொண்டிருந்தார்
»»  (மேலும்)

2/25/2011

லிபியாவிலுள்ள இலங்கையரை திருப்பி அழைக்க விசேட ஏற்பாடு

லிபியாவில் பணியாற்றும் இலங்கையர் களை நாட்டுக்கு அழைத்துவர கப்பலொன்று அனுப்பிவைக்கப்பட்டி ருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

தனியான விமானத்தில் அழைத்து வர
அரசாங்கம்
நடவடிக்க

லிபியா மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் ஏற்பட்டிருக்கும் குழப்பமான சூழ்நிலையால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்குத் தேவையான கப்பலொன்று அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் இந்த விடயம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் டிலான் பெரேரா தொடர்ந்தும் வெளிநாட்டுத் தூதரகங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
லிபியாவிலுள்ள இலங்கையர்கள் அந்நாட்டு அரசாங்கத்தின் ஊடாக இத்தாலிய எல்லையில் வைத்துக் கையளிக்கப்படுவார்கள் என்றும் அவர்களை அழைத்து வருவதற்கும், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கும் அரசாங்கம் தயாராகவுள்ளது. அங்குள்ள நிலைமைகளை அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருகிறது என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூறினார்.
பாராளுமன்றில் அமைச்சர் டிலான்

திரிபோலியைத் தவிர சகல விமான நிலையங்கள் பூட்டு; மோல்டாவுக்கு கப்பல் அனுப்ப தீர்மானம்

லிபியாவில் உள்ள 344 இலங்கை பணியாட்களை நாட்டுக்கு திருப்பி அழைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் டிலான் பெரேரா கூறினார். இவர்கள் இன்று அல்லது நாளை விமானம் மூலம் இலங்கையை வந்தடைய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் அவசரகால சட்டம் தொடர்பில் இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதத்தில், உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது :-
லிபியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையையடுத்து பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களை திருப்பி அழைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். 37 பணியாட்கள் கிரீஸ் நாட்டுக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படுவர். லிபியா தூதரகத்தில் 200 பேர் தஞ்சமடைந்துள்ளனர்.
அவர்களை விமானம் மூலம் நாட்டுக்கு திருப்பி அழைத்து வர உள்ளோம். விமானம் கிடைக்காவிட்டால் தனியான விமானம் ஒதுக்கி அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளோம்.
திரிப்போலி விமான நிலையம் தவிர ஏனைய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், கப்பல் மூலம் மோல்ட்டா அல்லது லிபியாவை அண்டிய நாட்டுக்கு அவர்களை அழைத்து வந்து அங்கிருந்து நாட்டுக்கு கொண்டுவர உள்ளோம். 107 பேர் எம்முடன் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களை லிபிய தூதரகத்திற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவர்களையும் இரண்டு தினங்களுக்குள் நாட்டுக்கு அழைத்து வருவோம். லிபியாவில் உள்ள பணியாட்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்குத் தேவையான விமான டிக்கெட்டுகளுக்கான நிதி தூதரகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. லிபியாவில் 1200 இலங்கை பணியாட்கள் உள்ளனர். அனைவரும் அரசியல் நெருக்கடியினால் பாதிக்கப்படவில்லை. நாடு திரும்ப விருப்பமானவர்கள் மீள அழைத்து வரப்படுவர்.
அங்குள்ள இலங்கையரை பாதுகாக்கவும் நாட்டுக்கு அழைத்து வரவும் சகல ஒழுங்குகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அரசியல் நெருக்கடியினால் பாதிக்கப்பட்டு ள்ள இலங்கையர் குறித்து ஆராய 24 மணி நேரமும் இயங்கக் கூடிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
»»  (மேலும்)

2/24/2011

ஐரோப்பிய ஒன்றியம்: பயங்கரவாதிகள் பட்டியலில் மீண்டும் புலிகள்

ஐரோப்பிய ஒன்றியம்:

பயங்கரவாதிகள் பட்டியலில் மீண்டும் புலிகள் உள்ளடக்கம்


ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டிருக்கும் பயங்கரவாதிகளின் பட்டியலில் புலிகள் இயக்கத்தின் பெயர் மீண்டும் உள்ளடக்கப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் திகதி உருவாக்கிய பயங்கரவாத அமைப்புக்களைத் தடைசெய்யும் சட்டத்திற்கமைய புலிகள் இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடைசெய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் புலிகள் இயக்கமும் உள்ளடக்கப் பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட 26 அமைப்புக்களின் பட்டியலில் புலிகள் இயக்கமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் தாம் தடைசெய்யப்பட்டமைக்கான காரணங்களைக் கோர முடியுமென்று 2010 ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருந்த போதும் எந்தவொரு அமைப்பும் அதற்கான கோரிக்கையை விடுக்க வில்லையென்றும் ஐரோப்பிய ஒன்றியத் தின் சஞ்சிகையில் மேலும் குறிப்பி ட்டுள்ளது
»»  (மேலும்)

தமிழக சட்டசபை தேர்தலில் துணை இராணுவத்தை பயன்படுத்தத் திட்டம்

தமிழக சட்டசபைத் தேர்தலில் துணை இராணுவத்தை பயன்படுத்துவது குறித்து பரிசீலனை செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து அதிமுக வழக்கறிஞர் ஆர். பாலசுப்பிரமணியம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் மே மாத தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சியும், மாநிலத்தில் ஆட்சியில் உள்ள திமுகவும் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
கடந்த மாநகராட்சி, நகராட்சி தேர்தலில் காங்கிரஸ் - திமுக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அப்போது ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் அரசு எந்திரத்தையும் அந்த கட்சிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தின.
மேலும், சமூக விரோதிகளையும், ரவுடிகளையும் பயன்படுத்தி வாக்குச் சாவடிகளில் கத்தி முனையில் தேர்தல் அதிகாரிகளை மிரட்டி தேர்தலை சாதகமாகக்கிக் கொண்டனர். தமிழக டி.ஜி.பி. உட்பட யாரும் இதை தட்டிக் கேட்கவில்லை.
கடந்த சட்டசபை தேர்தலில் திருமங்கலம், வந்தவாசி, பென்னாகரம், திருச்செந்தூர் போன்ற தொகுதிகளில் வாக்காளர்களுக்கு மது, பிரியாணி, பணம் கொடுத்து ஓட்டுகளை வாங்கி வெற்றி பெற்றனர்.
இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தேர்தலை நேர்மையுடன் நடத்த தமிழக அரசு அதிகாரிகள், ஊழியர்கள், காவல்துறையினர் ஆகியோர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படக் கூடாது. ஒட்டு மொத்த தேர்தல் மற்றும் ஓட்டு எண்ணிக்கை ஆகியவற்றை துணை இராணுவத்தைக் கொண்டு நடத்த முன்வர வேண்டும். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு மனு கொடுத்துள்ளேன்.
எனவே, இதற்கான நடவடிக்கையில் ஈடுபட தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஓய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், தேர்தலை எவ்வாறு நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையமே முடிவு செய்யும்.
எனவே, தமிழகத்தில் நேர்மையான முறையில் தேர்தல் நடத்துவது, தேர்த்தல் ஆணையத்தின் பொறுப்பு.
மனுவில் கூறப்பட்டுள்ள குறைபாடுகளை ஆதாரங்கள் இன்றி நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. குறைபாடுகள் இருப்பின் அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுதாரர் கூறி நிவாரணம் பெறலாம்.
எனவே, மனுதாரர் மனு மீது தேர்தல் ஆணையம், சட்டத்தின் அடிப்படையில் பரிசீலனை செய்து நடடிவக்கை எடுக்கலாம் என்று கூறியுள்ளனர்.
»»  (மேலும்)

2/23/2011

பிரத்தியேக வகுப்புக்களை நெறிப்படுத்துவதுடன் மார்க்கக்கல்விகளுக்கும் முன்னுரிமை -கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்

கிழக்கு மாகாணத்தின் பாடசாலைக்கல்விக்கு அப்பால் பிரத்தியேக வகுப்புக்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது. நவீன கல்வி மயப்படுத்தப்பட்ட போட்டி மிக்க உலக வாழ்க்கைக்கு பித்தியேக வகுப்புக்கள் அவசியமானதாக அமைந்தாலும் அது சமூகத்திற்கும், கல்வித்திட்டங்களுக்கும், பாடசாலைக் கல்விகளுக்கும் பெரும் சவாலாக அமைந்து வருகின்றது. இதனை மாகாண சபை மூலம் விசேடமாக ஒருங்கிணைந்து நெறிப்படுத்துவதற்கும்.
1. பிரத்தியேக வகுப்பு உரிமையைப் பதிவு செய்தல்
2. பிரத்தியேக வகுப்பிற்கு ஆசிரியர் அங்கிகாரம் வழங்குதல்
3. பாடசாலை கல்வித் திட்டத்துடன் ஒப்புரவையையும், நெறிப்படுத்தலையும் மேற்கொள்ளல்.
4. கட்டணம், நேரசூழல் ஒழுங்குகளைத் தீர்மானித்தல் உள்ளிட்ட பிரத்தியேக வகுப்புக்கள் தொடர்பான செயற்பாடுகளுக்கு ஆலோசனைக்குழு அமைத்தல். சமூகத்தில் ஏற்பட்டுவரும் சமூகப்பற்றற்ற நிலையினை மாற்றி சமூக உணர்வுகள் மக்கள் முன் னொண்டுவருவதற்கு மார்க்கக்கல்வி இன்றியமையாததாக உள்ளது என சுட்டிக்காட்டிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் ஞயிறு தினங்களிலும் வெள்ளிக்கிழமை பிற்பகலிலும் மார்க்கக் கல்விகளை மாணவர்கள் மத்தியில் புகட்டுவதற்காக எந்த பிரத்தியேக வகுப்புக்களையோ நிகழ்வுகளையோ தவிர்த்துக் கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டியதுடன் மாணவ்ர்களின் கல்வியில் அதிக அக்கறை காட்டிவரும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் சிந்தனைக்கு உரம் சேர்க்கும் வகையிலும் இலங்கையில் உள்ள மாகாண சபைகளில் அதிக தேவையுடைய கிழக்கு மாகாண சபை முன்னோடியாக செயற்படுவதற்கும் பிரத்தியேக வகுப்புக்களை நெறிப்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது என சுட்டிக்காட்டியதுடன்
போன்ற முன்மொழிவுகளுடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் அவர்களால் கிழக்கு மாகாண சபையில்  பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. இதற்காக மாகாண கல்வி அமைச்சர் தலைமையிலான கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் உட்பட கிழக்கு மாகாண சபையின் ஏழு பேர்கொண்ட விசேட குழு அமைக்கப்பட்டு மாகாண ரீதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது. இப்பிரேரணையினை அனைத்து மாகாண சபை உறுப்பினர்களும் ஏகமனதாக வரவேற்றனர்
»»  (மேலும்)

மேலும் 8 உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் ஒத்திவைப்

மேலும் எட்டு உள்ளூராட்சி சபைகளின் தேர்தல்களை தேர்தல் திணைக்களம் ஒத்திவைத்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
திருகோணமலை நகரசபை, குளியாபிட்டி பிரதேச சபை, ருவன்வெல்ல பிரதேச சபை, கிரிபாவ பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை, திருக்கோயில் பிரதேச சபை, காரைதீவு பிரதேச சபை, மெரிடைம்பற்று பிரதேச சபை என்பவற்றுக்கான தேர்தல்களையே தேர்தல் திணைக்களம் ஒத்திவைத்துள்ளது. ஏற்கனவே தேர்தல் திணைக்களம் 59 உள்ளூராட்சி சபை தேர்தல் களை ஒத்திவைத்திருந்தது. 
»»  (மேலும்)

திருமாவளவன் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார் பாதுகாப்பை கருத்தில்கொண்டு அரசு நடவடிக்கை

புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளின் இறுதிக்கிரியை களில் கலந்து கொள்ளும் பொருட்டு இலங்கையிடம் எந்தவித முன்னறிவித்தலும் விடுக்காமல் இலங்கை வந்த தமிழ் நாடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமான நிலையத்தில் வைத்தே நேற்று திருப்பியனுப்பப்பட்டுள்ளார்.
நேற்று அதிகாலை 2 மணியளவில் கட்டு நாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்த திருமாவளவனும் அவருடன் வந்த அவ ரது சகாக்கள் இருவரும் குடிவரவு, குடி யகல்வு அதிகாரிகளால் இவ்வாறு திரு ப்பியனுப்பப்பட்டுள்ளதாக வெளிவிவகார பிரதியமைச்சர் நியோமல் பெரேரா தெரி வித்தார்.
வெளிநாட்டு எம்.பியொருவர் இலங்கைக்கு வரும்போது அவருக்கான பாதுகாப்பு உள்ளிட்ட சகல விடயங்களையும் அரசாங்கம் கவனிக்க வேண்டியுள்ளது. திருமாவளவன் இலங்கை அரசாங்கத்துக்கு எவ்வித முன்னறிவித்தலும் விடுக்கவில்லை.
அத்துடன் கடந்த சில தினங்களாக இரு நாடுகளிலும் மீனவர்கள் சம்பந்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களும் பிரச்சினைகளும் இட ம்பெறுகின்றபோது அவரது பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லாமற் போகலாம்.
அதன் காரணமாகவே திருமாவளவனும் அவரது சகாக்களும் திருப்பியனுப் பப்பட்டனர் எனவும் பிரதியமைச்சர் தெரிவித்தார். நேற்று தமிழ் நாடு திரும் பிய திருமாவளவன் சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் தமது சகாக்களோடு எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்ட போது கைதுசெய்யப்பட்டு ள்ளார். அவருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவரது சகாக்கள் 300 பேரும் கைது செய்யப்பட்டதாக இந்திய தக வல்கள் தெரிவிக்கின்றன.
»»  (மேலும்)

அமெரிக்காவுக்கெதிராக பலஸ்தீனில் ஆர்ப்பாட்டம்

அமெரிக்கா தான்தோறித்தனமான முடிவுகளை எதிர்த்து பலஸ்தீனின் மேற்குக்கரையில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். இஸ்ரேலின் திட்டமிட்ட யூதக் குடியேற்றங்களைக் கண்டித்து ஐ. நா. பாதுகாப்புச் சபை நிறைவேற்றிய கண்டனத் தீர்மானம் அமெரிக்காவின் வீட்டோ அதிகாரத்தால் ரத்துச் செய்யப்பட்டது.
இதைக் கண்டித்தே மேற்குக் கரையில் பலஸ்தீனர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பதா அமைப்பினர் இதை ஏற்பாடு செய்தனர். அமெரிக்காவின் உண்மையான நிலைப்பாடு தெரிந்துவிட்டது. மத்திய கிழக்கில் சமாதானத்தை கொண்டு வரும் எண்ணம் அமெரிக்காவிடம் இல்லையென ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கோஷமிட்டனர்.
இஸ்ரேலின் யூத விஸ்தரிப்புக் கொள்கையை ஐ. நா. பாதுகாப்புச் சபையிலுள்ள 15 நாடுகளில் 14 நாடுகள் எதிர்த்தன. சீனா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், பிரேஸில், பொஸ்னியா, கொலம்பியா, காபொன், ஜேர்மன், இந்தியா, லெபனான், நைஜீரியா, போர்த்துக்கல், தென்னாபிரிக்கா என்பன இஸ்ரேலுக்கெதிராக வாக்களித்து கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத் தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தில் செல்லுபடியற்ற தாக்கியது. இஸ்ரேலின் அநீதியான செயற்பாடுகளை அமெரிக்கா ஆதரிப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.

»»  (மேலும்)

2/22/2011

தமிழக எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் அதிர்ச்சி பின்னணி

தமிழக எம்.பி.க்களில் 11 பேர் மீதும் எம்.எல்.ஏ.க்களில் 76 பேர் மீதும் குற்ற வழக்குகள் உள்ளன. இதில் ஏழு எம்.பி.க்கள் 25 ஏம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகள் கொலை, கொலை முயற்சி ஆள் கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட கடுமையான குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்டவை. மேலும் 36 எம்.பி.க்கள், 54 எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்கள்.
நெஷனல் எலக்ஷன் வட்ச் மற்றும் அசோசியேஷன் ஆப்டெமாகிரடிக் ரிபார்ம்ஸ் ஆகிய அமைப்புக்கள், தமிழக எம்.பிக்கள், எல்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகள் மற்றும் சொத்து விவரங்களை தொகுத்து வெளியிட்டுள்ளது. அவை பல அதிர்ச்சியளிக்கும் உண்மைகளை வெளிப்படுத்துபவையாக உள்ளன.
தமிழகத்தைச் சேர்ந்த 39 லோக்சபா எம்.பி.க்களில் 10 பேர் மீது குற்ற வழக்கு கள் (ஆறு எம்.பி.க்கள்) மீது கடுமையான வழக்குகள் உள்ளன. தி.மு.க. எம்.பி.க்கள் 18 பேரில் நான்கு பேர் மீது குற்ற வழக்கும், ஒருவர் மீது கடுமையான வழக்கும், அ.தி.மு. க. எம்.பி.க்கள் ஒன்பது பேரில் நான்கு பேர் மீது கடுமையான குற்ற வழக்கும், ம.தி.மு.க. வின் ஒரு எம்.பி.யின் மீது குற்ற வழக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒரு எம்.பி. மீது கடுமையான குற்ற வழக்கும் உள்ளன.
தமிழகத்தைச் சேர்ந்த 18 ராஜ்யசபா எம்.பி.க்களின் தி.மு.க. வின் செல்வகணபதி மீது மட்டும் கடுமையான குற்ற வழக்கு உள்ளது. தமிழக எம்.எல்.ஏ.க்களில் 76 பேர் மீது குற்ற வழக்கும் 25 பேர் மீது கடுமை யான குற்ற வழக்கும் உள்ளன. விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள கேரளா, தமி ழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் தமிழகத்தில் தான் அதிக எம்.எல். ஏ.க்கள் மீது குற்ற வழக்கு உள்ளது.

»»  (மேலும்)

2/21/2011

மக்கள் போராட்டத்தால் அரபு நாடுகளில் தொடர்ந்து பதற்றம்

லிபியாவில் பலியானோர் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்தது


லிபிய ஜனாதிபதி

லிபியா, பஹ்ரைன், ஜோர்டான், யெமன் உள்ளிட்ட நாடுகளில் ஜனநாயக ஆட்சி முறை கோரி மக்கள் போராட்டம் நடத்துவதால், அரபு நாடுகளில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. லிபியாவில் இராணுவம் தாக்கியதில் 84 பேர் பலியாகி உள்ளனர்.
துனிசியா, எகிப்து ஆகிய நாடுகளில் நீண்ட காலமாக நடந்து வந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த இரண்டு நாடுகளிலும் ஜனாதிபதிகள் பதவி விலகி ஜனநாயக ஆட்சிக்கு வழி விட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், மற்ற அரபு நாடுகளிலும் இந்த கிளர்ச்சி பரவி உள்ளது.
அல்ஜீரியா, பஹ்ரைன், லிபியா, ஜோர்டான், யெமன் ஆகிய நாடுகளில் ஆயிரக் கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். குறிப்பாக லிபியாவில் மிகத் தீவிரமாக போராட்டம் நடைபெறுகிறது.
அங்கு ஜனாதிபதியாக இருக்கும் முவம்மர் கடாபி கடந்த 42 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறார். தற்போது 68 வயதாகும் அவர் கடந்த 1969ம் ஆண்டு முதல் லிபிய ஜனாதிபதியாக இருந்துவருகிறார்.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தீவிரமாகி உள்ள போராட்டம் மேற்கு பகுதிகளிலும் பரவி உள்ளன. லிபியா தலைநகர் திரிபொலியில் கடந்த சனிக்கிழமை இரவில் ஏராளமான மக்கள் வீதிகளில் இறங்கி போராடினார்கள்.
ஆனால் போராட்டத்தை அடக்க இராணுவத்தை கடாபி ஏவி விட்டுள்ளார். மேலும், பல்வேறு இடங்களில் அரசு ஆதரவு போராட்டத்தையும் ஊக்குவித்து வருகிறார். கடாபிக்கு உதவியாக அவருடைய மகனும் கால்பந்து வீரருமான அல்-சாதி களம் இறங்கியுள்ளார்.
இதனால் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. போராட்டம் பரவாமல் தடுப்பதற்காக நேற்று அதிகாலை 2 மணி முதல் இணையதள சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டது.

பஹ்ரைன் மன்னன்

தலைநகரில் போராட்டம் நடத்திய சட்டத்தரணிகள், நீதிபதிகள் ஆகியோர் தாக்கப்பட்டனர். கடந்த மூன்று நாட்களில் நடந்த போராட்டத்தில் இதுவரை 84 பேர் வரை பலியாகி இருப்பதாக அமெரிக்க மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இதுபோல பஹ்ரைன் நாட்டில் மன்னர் ஹமாத்துக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. தெருக்களில் இராணுவமும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே மன்னர் ஹமாத்திடம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தொலைபேசியில் பேசினார். அப்போது அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்துமாறு மன்னரை ஒபாமா கேட்டுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து போராட்டக்காரர்க ளுடன் பேச்சு நடத்த ஹமாத் முன்வந்தார். அதற்காக தனது மகனும் இராணுவ துணை தலைமை தளபதியுமான சல்மான ஹமாத்தை அனுப்பினார். ஆனால் பேச்சுவார்த்தைக்கு வர ஷியா பிரிவு எம்.பி.க்கள் மறுத்துவிட்டனர்.
தெருக்களில் இராணுவத்தை குவித்து வைத்துக்கொண்டு பேச்சு வார்த்தை நடத்துவதில் அர்த்தம் இல்லை என தெரிவித்துள்ளனர். இதனால் பஹ்ரைனில் போராட்டம் தொடருகிறது.
ஷியா முஸ்லிம்கள் அதிகமாக உள்ள தலைநகர் பனாமாவில் போராட்டம் தீவிரமாகி உள்ளது. சுன்னி பிரிவைச் சேர்ந்த மன்னர் ஹமாத்தை பதவி விலகச் செய்வதில் உறுதியாக இருக்கின்றனர். இது போன்று மற்றொரு அரபு நாடான ஜோர்டானிலும் போராட்டம் நடைபெறுகிறது.

யெமன் ஜனாதிபதி

ஜனநாயக ஆட்சியை வலியுறுத்தி தலைநகர் அம்மானில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்ற அமைதிப் பேரணி நடந்தது. அப்போது அரசு ஆதரவாளர் கும்பல் ஆயுதங்களுடன் வந்து பேரணியில் சென்றவர்களை சரமாரியாக தாக்கியது.
இதனால் ஏராளமானோர் காயமடைந்தனர். ஏற்கனவே ஜோர்டான் அமைச்சர் சபையை மன்னர் அப்துல்லா கலைத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
யெமன் நாட்டிலும் மக்கள் புரட்சி வெடித்துள்ளது. தலைநகர் சானாவில் நேற்று முன்தினம் நடந்த பேரணி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் ஒருவர் பலியானார். 5 பேர் காயமடைந்தனர்.
துறைமுக நகரான ஏடன் நகரில் இரண்டு அரசு கட்டடங்கள், ஒரு பொலிஸ் நிலையம் ஆகியவற்றை 7 ஆயிரம் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு தீ வைத்தனர்.
அல்ஜீரியா உள்ளிட்ட நாடுகளிலும் ஜனநாயக ஆட்சியை வலியுறுத்தி மக்கள் போராடுவதால், அரபு நாடுகளில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

»»  (மேலும்)

60 உள்@ராட்சி சபைகளுக்கான தேர்தல் ஒத்திவைப்பு - தேர்தல் ஆணையாளர்

வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு ஆட்சேபனை தெரிவித்து நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்படிருப்பதால் அறுபது (60) உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை ஒத்தி வைப்பதற்குத் தேர்தல் ஆணையாளர் தீர்மானித்துள்ளார்.
இதற்கேற்ப எதிர்வரும் மார்ச் மாதம் 17ம் திகதி 241 உள்ளூராட்சி மன்றங்களு க்குத் தேர்தல் நடாத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த 60 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் எதிர்வரும் 17ம் திகதி தேர்தலை நடாத்துவதற்கான நடவடிக் கைகளை இடைநிறுத்துமாறும் தேர்தல் ஆணையாளர் மாவட்ட மட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்களுககு ஆலோசனை வழங்கியுள்ளார் என்று பிரதி தேர்தல் ஆணையாளர் மஹிந்த பாலசூரிய கூறியுள்ளார்.
இந்த 60 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் நீதிமன்ற விசாரணைகள் நிறைவுற்று தீர்ப்பு வெளியான பின்னரே தேர்தலை நடாத்துவதற்கு திகதி நிர்ணயிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இவ் உள்ளூராட்சி மன்றங்களில் தபால் மூல வாக்களிப்பு க்கான வாக்களிப்பு பத்திரங்களை வழங்குவது, வாக்காளர் அட்டை விநியோகம் உட்பட தேர்தலோடு தொடர்புடைய சகல நடவடிக்கைகளும் இடைநிறுத்த ப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டில் 336 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன. அவற்றில் 301 உள்ளூ ராட்சி மன்றங்களுக்கு மார்ச் 17ம் திகதி தேர் தலை நடா த்துவதற்கு ஏற்கனவே தேர்தல் ஆணையாளர் தீர்மானித்தருந்தார். இருப்பினும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு ஆட்சேபனை தெரிவித்து நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் 60 உள்ளூராட்சி மக்கறங்களுக்கு மார்ச் 17ம் திகதி தேர்தலை நடாத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால் 35 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலைப் பின்னர் நடாத்துவதற்கும் தேர்தல் ஆணையாளர் ஏற்கனவே தீர்மானித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக் காளர் அட்டைகள் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் விநியோகிக்கப்படும் என்று தேர்தல் ஆணையாளர் அலுவலகம் அறிவித்து ள்ளது.
எதிர்வரும் மார்ச் 14 ஆம் திகதி வரை அவற்றை விநியோகிக்க தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருப்ப தாகவும் தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வாக்காளர் அட்டைகள் விநியோகம் முடிவடையும் திகதி வரை அவற்றை பத்திரமாக வைத்திருப்பதற்கு தபால் நிலையங்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

»»  (மேலும்)

கொக்கட்டிச்சோலை பிரதேச மக்களுக்கு முதலமைச்சரால் நிவாரணம் கையளிப்பு

கொக்கட்டிச்சோலை பிரதேச மக்களுக்கு நேற்று(19.02.2011) கொக்கட்டிச்சோலை பிரதேச செயலகத்தில் வைத்து கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்ட்டன.(படங்கள் இணைப்பு)
dsc07445
dsc07451
dsc07455
»»  (மேலும்)

2/20/2011

லிபியா-பஹ்ரேன் போராட்டங்களில் 50 பேர் பலி

  லிபியா மற்றும் பஹ்ரேனில் அந்நாட்டு அரசாங்கங்களுக்கெதிராக நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களில் இதுவரை 50 பேர் பலியாகியுள்ளனர்.

எகிப்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் அரசாங்கங்களுக்கெதிரான போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன.

லிபியாவில் அந்நாட்டு ஜனாதிபதி கடாபிக்கு எதிராகவும் பஹ்ரேனில் மன்னர் அல் கலீபாக்கு எதிராகவும் மக்கள் வீதிகளில் திரண்டுள்ளனர்.

மேற்படி நாடுகளில் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக அரசாங்கங்கள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டுவதற்காக பொலிஸார் தாக்குதல் நடத்தி வருவதாலேயே உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது ___  
»»  (மேலும்)

2/19/2011

கிழக்கு மாகாண சபை உறுப்பினரால் நிவாரப் பொருட்கள் கையளிப்பு

dsc07229தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் களுவாஞ்கிக்குடி பிரதேச செயலாளர் பிரில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்தார். கிழக்கு மாகாண சபையின் விசேட வெள்ள நிவாரண நிதி ஒதுக்கீட்டில் மேற்படி நிவாரணப் பொருட்கள் கையளிக்கப்பட்டன. இந் நிகழ்வில் பிரதேச சபைத் தவிசாளர் சிவகுணம் அவர்களும் பிரதேச செயலாளரும் இணைந்து கொண்டார்கள்.
dsc07227
dsc07221
»»  (மேலும்)

சந்திரகாந்தன் விளையாட்டரங்கு அங்குரார்ப்பணம்

dsc072591dsc07280dsc07270dsc07263dsc07261dsc07260dsc07259மட்/ கதிரவெளி விக்கினேஸ்வரா வித்தியாலயத்தின் வகுப்பறைக் கட்டிடம் மற்றும் விளையாட்டு அரங்கு என்பன இன்று (18.02.2011)கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. மேற்படி திறந்து வைக்கப்பட்ட விளையாட்டரங்கிற்கு அப்பாடசாலை சமுகம் மற்றும் பிரதேச மக்களது வேண்டுகோளின் படி முதலமைச்சரினது பெயர் சூட்டப்பட்டமை விசேட அம்சமாகும். முதலமைச்சரினது விசேட கிராம அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டது. மேற்படி நிகழ்வானது வித்தியாலயத்தின் அதிபர் சந்திரலிங்கம் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உப தலைவருமான நா. திரவியம் மற்றும் கல்குடா கல்வி வலயப் பணிப்பாளர் சுபாசக்கரவர்த்தி, உதவிக் கல்விப் பணிப்பாளர் , கோட்டக்கல்விப் பணிப்பாளர் மற்றும் கல்வி அதிகாரிகள் சகோதரப் பாடசாலையின் அதிபர்களும் கலந்து கொண்டார்கள்.
dsc07236
dsc072831


  dsc072831
»»  (மேலும்)

இரண்டுநாள் அரசியற் பயிற்சிப் பாசறை

dsc071381தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியற் பயிற்சிப் பாசறை இரண்டு நாட்கள் நடந்தது. நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலே தனித்துப் போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது தமது வேட்பாளர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில்மேற்படி இரண்டுநாள் செயலமர்வினை ஏற்பாடு செய்திருந்தது. அச் செயலமர்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற சகல வேட்பாளர்களும் கலந்து கொண்டார்கள்.அதனை உத்தியோகபூர்வமாக கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆரம்பித்து வைத்தார்.இன்று(18.02.2011) இரவுடன் இப் பாசறை நிறைவு பெற்றது.
dsc07171
dsc07118
»»  (மேலும்)