5/31/2011

பாடசாலை


View Opening.jpg in slide showView Pre-Sc Op...jpg in slide show 

2005.01.11 ம் திகதி மர நிழலில் ஆரம்பிக்கப்பட்ட நூருல் ஜன்னாஹ் பாலர் பாடசாலை பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் தனது வெற்றிப்பயனத்தை மேற்கொண்டு இன்று (29.05.2011) ஞாயிற்றுக் கிழமை நிரந்தர புதிய கட்டிடத்திற்குச் சென்றது. முஸ்லிம் எய்ட் நிதியுதவியில் கிராமியப் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பு (றெக்டோ) யினால் நிர்மாணிக்கப்பட்ட மேற்படி பாலர் பாடசாலை இன்று வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டு மக்ககளிடம் கையளிக்கப்ட்டது. இந்நிகழ்விற்கு முஸ்லிம் எய்ட் அமைப்பின் பணிப்பாளர்- பைசர்கான தம்பலாகமப் பிரதேச செயலாளர்- தென்னக்கோன் தம்பலாகமப் பிரதேச சபைத் தவிசாளர் சுபியான் அவர்களோடு கிராமியப் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பின் தலைவர் அஸார் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின் போது ஞாபகார்த்தமாக மரக்கன்றுகளும் நடப்பட்டது. இங்கு உரையாற்றிய முஸ்லிம் எய்ட் அமைப்பின் பணிப்பாளர்- பைசர்கான் எமது எதிர்பார்ப்பபு இம்முன்பள்ளியிலிருந்து வெளியாக்கின்ற மாணவர்கள் முழு ஆற்றல் மிக்கவர்களாக வெளியாக வேண்டும் என்பதே எமது எதிர் பார்ப்பாகும். இன்னும் இப்படசாலையின் குறைபாடுகள் முடியுமானவரை நிவர்த்தி செய்யப்படும் எனக் கூறினார். உரையாற்றிய தம்பலாகமப் பிரதேச செயலாளர்- தென்னக்கோன் சுமார் மூன்று மாதங்களுக்கு முன் இதே போன்ற ஒரு விடுமுறை தினத்தில் இதற்கான அடிக்கல் என்னால் இடப்பட்டது அப்போது நான் கூறினேன் விரைவாக இதனைப்பூர்த்தி செய்து மாணவர்களுக்கு வழங்குமாறு அன்று நான் நினைத்ததை விட வேகமாகவும் சிறப்பாகவும் பூர்த்தி வழங்கியமை எனக்கு மிகுந்த சந்தோசத்தை அளிக்கின்றது. இன்னும் இதுபோன்ற இன்னும் பல செயற்றிட்டங்களை வழங்குமாறு முஸ்லிம் எய்ட் அமைப்பின் பணிப்பாளர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
M.J.அன்வர் அலி 
S.M.அவ்பான்
»»  (மேலும்)

பாசிக்குடா 'மாலு மாலு' ஹோட்டல் பசில் ராஜபக்ஷ திறந்துவைப்பு

மட்டக்களப்பு பாசிக்குடாவில் அமைக்கப்பட்ட 'மாலு மாலு' எனப்பெயரிடப்பட்டுள்ள உல்லாசப் பிரயாண ஹோட்டலை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று திறந்துவைத்தார்.

மூன்று மில்லியன் டொலர்கள் செலவில் கிழக்கு மாகாணத்தின் கடற்கரைப் பிரதேசத்தில் முதலில் அமைக்கப்பட்ட நவீன உல்லாசப் பயண ஹோட்டல் இதுவாகும். 
»»  (மேலும்)

பாதிக்கப்பட்டோருக்கு நல்லிணக்க ஆணைக்குழு மூலம் நியாயமான தீர்வு கிடைக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க உரை

* ஒரு நாட்டின் செயற்பாட்டை அரசுடன் இணைந்தே ஐ.நா சபை ஆராய்வது அவசியம்
* புலம் பெயர்ந்த தமிழர்களை வடக்கு, கிழக்கு அபிவிருத்தியில் முதலீடு செய்ய அரசு அழைப்பு
* உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதில் அரசாங்கம் முன்னுரிமை
யுத்தம் முடிவடைந்த பின்னர் அரசாங்கம் சுமார் இரண்டு இலட்சத்து 90 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கே முன்னுரிமை வழங்கி துரிதமாக செயற்பட்டது.
இந்த மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, இருப்பிடம், வாழ்வாதார உதவிகளை பெற்றுக் கொடுத்தல் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் அரசாங்கம் துரிதமாகச் செயற்பட்டது. இடம்பெயர்ந்தோரில் 95 வீதத்தினர் மீள்குடியேற்றப்பட்டு ள்ளார்கள். எஞ்சியோர் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதும் மீள்குடியேற்றப்படுவார்களென அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அரசாங்கம் முழு மூச்சுடன் செயற்பட்டு வரும் இந்த நேரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயர் அதிகாரிகள் பக்கச் சார்பாகச் செயற்படுவது ஐ.நா சபைக்கே பெரும் கண்டனம் ஏற்படுவதற்கான வாய்ப்பாக அமையலாம் எனவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க சுட்டிக் காட்டினார்.
ஐ.நா. 17 வது மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் நேற்று ஜெனீவாவிலுள்ள ஐ.நா. தலைமையகக் கட்டடத்தில் ஆரம்பமானது. இதில் கலந்து கொண்டு இலங்கையின் சார்பில் உரை யாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, 2009ம் ஆண்டு மே மாதத்தில் பயங்கரவாதி களின் பிடியிலிருந்து எங்கள் மக்களை நாம் விடுவித்ததை யடுத்து, அரசாங்கம் எதிர்நோக்கிய பலதரப்பட்ட சவால்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அவர்களின் அரசாங்கம் சிறந்த முறையில் முகம் கொடுத்து, மீள்குடியேற்றம், புனர் வாழ்வளித்தல், பொருளாதார அபிவிருத்தி, கட்டட நிர்மாணம், நல்லிணக்கப்பாடு ஆகியவற்றை சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தி 30 ஆண்டுகால யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளியைப் பிரகாசிக்க வைத்தார்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் அரசாங்கம் சுமார் 2லட்சத்து 90ஆயிரம் உள்ளூரில் இடம் பயர்ந்த மக்களை மீள் குடியேற்றுவதற்கே முன்னுரிமை வழங்கி, துரிதவேகமாக மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த மக்களுக்கு வசதியான இருப்பிடங்களை பெற்றுக் கொடுத்தல், உணவு, பாதுகாப்பு, வாழ்வாதார உதவி களை பெற்றுக்கொடுத்தல் ஆகிய வற்றிலும் அரசாங்கம் பின்நிற்கவில்லை.
இன்று, 95 சதவீதமான இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடி யமர்த்தப்பட்டுள்ளார்கள். வடபகுதி எங்கும் புதையுண்டுள்ள தரைக் கண்ணி வெடிகள் முற்றாக அகற்றப்பட்டவுடன் எஞ்சிய மக்கள் அனைவரும் மீள் குடியமர்த்தப்படுவார்கள்.
புனர்வாழ்வு செயற்பாடுகளை பொறுத்தமட்டில் முன்னாள் சிறுவர் போராளிகளுக்கு நாம் புனர்வாழ்வை அளித்து, அவர்களுக்கு கல்வி அறிவைப் பெற் றுக் கொள்வ தற்கான நிகழ்ச்சிகளை ஆரம் பித்திருப்பதுடன் தொழிற் பயிற்சியையும் அளித்து வருகின் றோம்.
அரச படைகளிடம் சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட 11,644 முன்னாள் போராளிகளில் 6,530 பேருக்கு ஏற்கனவே முழு மையான புனர்வாழ்வை அளித்து அவர்களை சமூக நீரோட்டத்தில் சங்கமிக்க வைத்த சாதனையையும் அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறுவதற்கான கல்வித் தகைமை களையும் பெற்றுள்ளார்கள்.
அரசாங்கம் தற்போது புனர் வாழ்வை பெற்றுவரும் எஞ்சிய முன்னாள் போராளிகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்விதம் விடுவிக்கப் படுபவர்கள் மீண்டும் பயங்கரவாத நடவடிக்கை யில் ஈடுபடாத வகை யில் அவர்களுக்கு புனர்வாழ்வும், வாழ்க்கையில் உண்மையான தாற்பரியத்தையும் புரிந்து கொள் வதில் நாம் வெற்றி கண் டுள்ளோம்.
நல்லிணக்கப்பாட்டையும் மக்களிடையே நல்லெண்ணத்தையும், ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னினுரிமை அளித்து செயற்பட்டு வருகின்றது. இதனால் ஏற்கனவே எமது நாட்டு மக்கள் சமாதானத்தின் பலாபலனை அனுபவித்து வரு கிறார்கள். இந்த செயற்பாட்டினை நாம் வலுப்படுத்தி அதனை ஒரு விருட்சமாக உருவாக்குவது அவசியமாகும். சமூகப் பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளை பயங்கரவாதத்தினால் முன்னர் பாதிக்கப்பட்டிருந்த பிரதேசங்களை அரசாங்கம் நாட்டில் அரசியல் சாசனத்தின் மூலமும், சட்டரீதியாகவும், ஜனநாயக அடிப்படையிலும் சீர்திருத்தங்களை மேற்கொள்வது பற்றி தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகின்றது. வெளிநாடுகளில் புலம்பெயர்ந்துள்ள தமிழர்களையும், இலங்கையில் மேம்பாட்டுக்காக தங்கள் வளங்களை இங்கு கொண்டுவந்து முதலீடு செய்ய வேண்டுமென்றும் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்வதற்கு தங்கள் பங்களிப்பை வழங்க முடியும்.
இந்த சவால்களுக்கு சிறந்த முறையில் முகம் கொடுக்கும் எண்ணத்துடன் 2010ம் ஆண்டு மே மாதத்திலிருந்து எங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்படுத்தினார். அதன் மூலம் நீதி, நியாயத்தை நிலைநாட்டி கடந்த காலத்தில் இந்த அழிவுகளுக்கு பொறுப்பாளி கள் யார் என்பதிலும் அரசாங்கம் ஆர்வம் காட்டி வருகின்றது. இந்த ஆணைக்குழுவின் பணிகள் நியமிக்கப்பட்ட திகதியில் இருந்து 3 மாதங்களில் ஆரம்பமாகும். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் தமக்கு ஆலோசனை தெரிவிக்கும் குழுவை ஆரம்பிக்கும் முன்னரே அரசாங்கம் இத்தகைய செயற்பாடுகளை மேற்கொண்டிருப்பது இங்கு குறிப்பிடுவது அவசியமாகும். உண்மை, நீதி, இளைத்த தவறுகளை சரிசெய்தல் ஆகிய மூன்று முக்கிய செயற்பாடுகளின் கீழ் நல்லிணக்கப்பாட்டை மேற்கொண்டு வருகின்றோம். கடந்த காலத்தில் யுத்தத்தினாலும் வேறு செயற்பாடுகளினாலும் பாதிக்கப்பட்ட மக்கள் இந்த ஆணைக்குழுவின் முன்வந்து தங்கள் வேதனைகளையும் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைப் பற்றியும் சாட்சி யமளித்தார்கள். இவற்றை நன்கு ஆராயும் இந்த ஆணைக்குழு அந்த மக்கள் உரிய நிவாரணத்தை பெற்றுக் கொடுப்பதற்கு தவறாது என்பதையும், நான் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்.
30 ஆண்டு கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நியாயபூர்வமான தீர்வொன்றை ஏற்படுத்தி தொடர்ந்தும் வன் முறைகள் ஏற்படுவதை தவிர்ப்பதே இந்த ஆணைக்குழுவின் நோக்கமாகும்.
இவ்வாணைக்குழு தன்னுடைய விசாரணை நடவடிக்கைகளை 2010 ஓகஸ்ட் மாதத்தில் ஆரம்பித்து தொடர்ந்தும் தனது பணியை சிறப்பாக நிறைவேற்றிக் கொண்டி ருக்கிறது.
இந்த ஆணைக்குழுவின் மூலம் இலங்கையில் யுத்தத்தினால் ஏற்பட்ட நிகழ்வினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயபூர்வமான தீர்வு கிடைக்குமென்ற அசையாத நம்பிக்கை கொண்டுள்ளோம். இந்த ஆணைக்குழு இந்த மாதத் தில் பூர்த்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கும் இவ்வேளையில், அதற்கு அதன் அதிகார காலம் மேலும் 6 மாதகாலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல தகவல்களை பெறுவதற்காகவே இந்த கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.  எனவே, இந்த மனித உரிமைகள் பேரவை அவசரப்படாமல் இலங்கை அரசாங்கத்திற்கு தனது புனர்வாழ்வு பணிகளை சிறப்பாக நிறை வேற்றுவதற்கு சிறிது கால அவகாசம் வழங்கவேண்டுமென்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.
இந்த ஆணைக்குழுவின் சில யோசனைகளை அரசாங்கம் ஏற்கனவே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.  அதி உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல், ஓமந்தை தடுப்பு காவல் முகாமை மூடுதல், முன்னாள் போராளிகளில் பெரும் பாலானோரை விடுவித்தல், காணித்தகராறுகளுக்கு கூடிய விரைவில் தீர்வை ஏற்படுத்து வதுடன் சட்டவிரோதமாக வைத் துள்ள ஆயுதங்களை அனை வரும் கையளித்த பின்னர் எந்தவொரு குழுவும் ஆயுதங்களை கையிரு ப்பில் வைத்திருக்க கூடாது என்ற விதியை அரசாங்கம் கண்டிப்பாக கடைப்பிடித்து வருகிறது.
மனித உரிமைகளை பேணிப் பாதுகாப்பது என்ற அரசாங் கத்தின் தேசிய நடவடிக்கைத் திட்டம் இப்போது சிறப்பாக கையாளப்பட்டு வருகிறது.  சிவில் சமுதாயத்தின் பல்வேறு அமைப்புகள் உட்பட அரசாங் கத்துறையினர் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி, இந்த நடவடிக்கைகளை நடைமுறைப் படுத்துகிறார்கள்.
இந்த குழுக்களின் நடவடிக்கை திட்டம் இலங்கை அமைச்சரவை யில் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் எங்கள் நாட்டின் அரசியல் சாசனத்திற்கான 18ஆவது திருத்தச் சட்டமூலம் நிறை வேற்றப்பட்டது.
இதன் மூலம் சுயாதீன ஆணைக் குழுக்களை அரசாங்கம் இப்போது நியமித்துள்ளது. இவற்றில் பிரதானமானதாக லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான நிரந்தர ஆணைக்குழு, அரசாங்க சேவை ஆணைக்குழு மற்றும் நீதி ஆணைக்குழு ஆகியனவாகும்.
2011ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மீண்டும் ஏற்படுத்தப்பட்டு இப்போது சிறப்பாக இயங்கி வருகின்றது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மனித உரிமை மீறல் விசாரணைகளை இந்தக் குழு ஆரம்பித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் கீழ் நிறைவேற் றப்பட்டுள்ள மனித உரிமைகள் சாசனத்தை இலங்கை நெறியான முறையில் கடைப் பிடிக்கும் கடப்பாட்டினை கொண்டி ருக்கிறது. இலங்கை அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகள் பற்றி நாம் காலத்துக்கு காலம் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கும் அதன் கிளைகளுக்கும் அறிவிக்கத் தவறவில்லை. நாம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரி களுடனும் அங்கத்துவ நாடுகளுடன் நட்புறவுடன் உண்மையான தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கு என்றுமே தயக்கம் காட்டியதும் இல்லை. இலங்கை அரசாங்கம் இத்தகைய செயற்பாடுகளின் மூலம் நாட்டு மக்களிடையே நல்லிணக்கப்பாட்டை ஏற்படுத்து வதற்கு முயற்சி செய்து வருகிறது. ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கு இலங்கை விவகாரம் பற்றி ஆலோசனை தெரிவிக்கும் எண்ணத்துடன் மாத்திரமே இந்த மூன்று அங்கத் தவர்களைக் கொண்ட குழு ஆரம்பிக் கப்பட்டதென்று இங்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
எனினும் இந்த குழுவின் அறிக்கையை பெரிதுபடுத்தி, சிலர் இலங்கை மீது குற்றம் கண்டுபிடிக்க எத்தணிப்பது நல்லதல்ல. நடைமுறையிலுள்ள அரசாங்கத்தின் ஊடாக செயற் பாடுகளுக்கு அப்பால் சென்று, இந்தக் குழுவினர் தகவல்களை திரட்டி இவ்வறிக்கையை தயாரித்திருக்கிறார்கள்.
எனவே, இவ் வறிக்கை குறித்து அவதானமாக இருக்க வேண்டியது அவசியமாகும். எனவே இனிமேலாவது தவாறான நடைமுறைகளை ஊக்குவிக்காத வகையில் இந்த ஆணைக்குழுவின் அங்கத்துவ நாடுகள் செயற்பட வேண்டுமென நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். இந்தக் குழுவினர் தங்களுக்கு அளித்த அதிகார எல்லையை மீறி இவ் வறிக்கையை தயாரித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
இலங்கை அரசாங்கத்தின் உள்ளூர் செயற்பாடுகள் குறித்து ஏற்கனவே தாங்களே முடிவெடுத் ததற்கு அமைய இந்த அறிக் கையை இக்குழு தயாரித்திருப்பது கண்டனத்திற்குரிய அம்சமாகும்.
இலங்கை அரசாங்கம் மேற் கொண்ட மனிதாபிமான நட வடிக்கையினால் 2லட்சத்து 90 ஆயிரம் அப்பாவி பொது மக்களை பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்டெடுத்தது முக்கியத்துவம் பெறுகின்றது. இலங்கையில் பயங்கரவாதத்தை அடக்கும் மனிதாபிமான நடவடிக்கையும் இந்நாட்டு மக்களின் இறைமையை பாது காப்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட நற்பணி என்று உலகம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இலங்கை மக்களை பயங்கர வாதிகளிடமிருந்து மீட்டெடுக்க எமது ஆயுதப்படையினர் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை தரக் குறைவாக மதிப்பீடு செய்தது உண்மையிலேயே வேதனை யளிக்கிறது.
இலங்கையில் பயங் கரவாத நடவடிக்கையினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிர் துறந்தார்கள். இந்த புள்ளி விபரங்கள் இக்குழுவின் அறிக் கையில் வெளியிடப்படவில்லை. இக்குழு ஊர்ஜிதம் செய்யப் படாத விடயங்களை சேர்த்துக் கொண் டுள்ளது. ஐக்கிய நாடுகள் சாசனத்திற்கு அமைய இலங்கை யையும், மற்ற நாடுகளைப் போன்று சரிசமமான முறையில் பாதுகாத்து வழிநடத்துவது இவ்வமைப்பின் அசைக்க முடியாத ஒரு கடமை யாகும். ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயர் அதிகாரிகள் பக்கசார்பற்ற முறையிலும் சுதந்திரமாகவும், ஒளிவுமறைவற்ற முறையிலும் செயற்படுவது மிகவும் அவசியம். இந்த அடிப்படைத் தத்துவங்களை அவர்கள் கடைப்பிடிக்காமல் இருந்தால் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கே பெரும் கண்டனம் எழுவதற்கான வாய்ப்பும் உருவாகலாம்.
எனவே, கூடியவரையில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் அரசாங்கத்துடன் இணைந்தே ஒரு நாட்டின் செயற்பாடுகள் குறித்து ஆராய்வது அவசியமென்ற கருத்தை நாம் வலியுறுத்த விரும்புகிறோம். இத்தகைய அசாதாரணமான நடைமுறைகள் இந்தப் பேரவையின் மனித உரிமைகள் பேரவையில் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதில் அசையாத நம்பிக்கை &8!qனி{‘மி!u.
இறுதியாக பரஸ்பர கெளரவம், ஒத்துழைப்பு, ஒருவர் கருத்தை மற்றவர் புரிந்து கொள்ளல் ஆகிய நற்பண்புகளுடன் மனித உரிமை ஆணைக்குழுவின் செயற்பாடு களுடனும் ஐக்கியநாடுகள் அமைப்புடனும் அதன் சர்வதேச கிளை நிறுவனங்களுடனும் நாம் எதிர்காலத்திலும் ஒற்றுமையாக இருக்க விரும்புகிறோம் என்பதை சுட்டிக்காட்டுவது எனது கடமையாகும்.
»»  (மேலும்)

கதிர்காம பாதயாத்திரை வெருகலிலிருந்து ஆரம்பம்


கதிர்காமத்திற்கான பாதயாத்திரை நேற்று வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகியது. காரைதீவு வேல்சாமியின் தலைமையில் இந்த யாத்திரை நேற்று ஆரம்பமாகியுள்ளது.
நேற்று ஆரம்பமான பாதயாத்திரை ஒருமாதம் தொடர்ச்சியாக இடம்பெற்று ஜுலை முதலாம் திகதி கதிர்காமக் கொடியேற்றத்தன்று அங்கு சென்றடையுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
கலந்துகொள்வோர் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை விதிகள் பற்றி விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதயாத்திரையில் பங்குகொள்வோர் ஆண்களாயின் காவி வேட்டியும், பெண்களாயின் காவிச் சேலையும் அணிதல் வேண்டும். பாடசாலை மாணவர்கள் கலந்து கொள்ள முடியாது. தேசிய அடையாள அட்டை மற்றும் பயணச் செலவும் உடன் கொண்டு வரல் வேண்டும். சரித்திரப் பிரசித்திபெற்ற கதிர்காம உற்சவத்தின் கொடியேற்றம் ஜுலை 01ம் திகதியாகும். தீர்த்தோற்சவம் ஜுலை 17ம் திகதி இடம்பெறும்.
வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் ஆரம்பிக்கும் பாதயாத்திரை இன்று 31ம் திகதி பால்ச் சேனையைக் கடந்து ஜூன் 01 இல் வாகரை சென்று மாங்கேணி, கறுவாக்கேணி, கிண்ணையடி வழியாக ஜூன் 4ம் திகதி சித்தாண்டி சித்திர வோலாயுத சுவாமி ஆலயத்தை வந்தடையும்.
ன்பு வந்தாறுமூலை, கொம்மாதுறை, மாமாங்கம், கல்லடி, ஆரையம்பதியூடாக ஜூன் 08ம்திகதி கொக்கட்டிச்சோலை தான்தோன்aஸ்வரர் ஆலயத்தையடைந்து பழுகாமம், பெரிய போரதீவு, மண்டூர், பெரியகல்லாறு, பாண்டிருப்பு ஊடாக ஜூன் 12ம் திகதி காரைதீவை வந்தடையும்.
ஜூன் 13ம்திகதி அக்கரைப்பற்றினூடாக கோளாவில், தம்பிலுவில் திருக்கோவில் விநாயகபுரம் அடைந்து ஜூன் 15ம் திகதி சங்குமண்கண்டி பிள்ளையார் ஆலயத்தை சென்றடையும்.
ஜூன் 16ம் திகதி கோமாரியிலிருந்து ஊறணி இன்ஸ்பெக்டர் ஏற்றம், பொத்துவில், நாவலாறு, பாணமை வழியாக ஜூன் 22ம் திகதி உகந்தை மலை முருகன் ஆலயத்தைச் சென்றடையும். உகந்தைமலை முருகன் ஆலயத்தில் இருநாள் ஓய்வு.
ஜூன் 24ம் திகதி வாகூரவட்டை, குழுக்கன், நாவலடிமடு, யால, வள்ளியம்மன் ஆறு, கட்டகாமம் வீரச்சோலை ஊடாக ஜுலை 1ம் திகதி காலை கதிர்காமத்தைச் சென்றடைவர்.
உகந்தையிலிருந்து கதிர்காமம் வரையிலான யால காட்டுக்குள் 08 தினங்கள் பயணிக்கும் பாதயாத்திரைக் குழுவினர் ஜுலை 1ம் திகதி கதிர்காமக் கொடியேற்றத்தைக் காணச் செல்வர்.
»»  (மேலும்)

14 சிவிலியன்கள் கொலை அமெரிக்க படைக்கு ஆப்கான் ஜனாதிபதி இறுதி எச்சரிக்கை

அமெரிக்க படைக்கு கடைசி எச்சரிக்கை விடுப்பதாக ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்சாயி அறிவித்துள்ளார்.
அமெரிக்கப் படையின் வான்தாக்குதலில் இரண்டு பெண்கள், 14 ஆப்கான் சிறுவர்கள் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து ஆப்கான் ஜனாதிபதி வெளியிட்ட கண்டன அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“அமெரிக்க, நேட்டோ படைகளுக்கு மீண்டும் மீண்டும் கூறுகிறேன், உங்கள் தேவையற்ற தாக்குதலால் ஆப்கான் பொது மக்களே கொல்லப்படுகிறார்கள். இது மிகப்பெரிய தவறாகும். இந்தத் தாக்குதல்களால் மனித விழுமியங்களே மீறப்படுகிறது” என்று ஆப்கான் ஜனாதிபதியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு நேட்டோ படை தமது அனுதாபத்தைத் தெரிவித்துள்ளதோட மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த வவிகாரம் குறித்து விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும் அது கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் நவ்சாத் மாவட்டத்தில் அமெரிக்க படை நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலிலேயே இந்த சிவிலியன்கள் கொல்லப்பட்டனர். இதன் போது அமெரிக்க ஹெலிகொப்டர்கள் ஆப்கான் குடியிருப்பு பகுதியிலேயே தாக்குதல் நடத்தியதாக பின்னர் தெரியவந்தது.
ஆப்கானில் யுத்தம் காரணமாக கடந்த ஆண்டில் மாத்திரம் 2,777 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ. நா. அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
»»  (மேலும்)

5/30/2011

திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வு

திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வு இன்று அம்பாரையில் உள்ள மொனிற்றி விடுதியில் இடம் பெற்றது. கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்கள் தோறும் மேற்படி திண்மக் கழிவு முகாமைத்துவத்தின் ஊடாக குப்பைகளை சேகரித்து அதனை சேதனைப் பசளையாக மாற்றுகின்ற படிமுறைகளை ஐரோப்பிய ஒன்றியம் செயற்படுத்தி வருகின்றது. அதன் முதற்கட்டமாக அம்பாரை மாவட்டத்தில் உள்ள முக்கிய மூன்று பிரதேச சபைகளை முதற்கட்டமாக தேர்ந்து எடுத்து செயற்படுத்தி வருகின்றது. இதில் முழுமையான வெற்றியும் காணப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் குறிப்பிடுகின்றார்.
இம் மாதம் 31ந் திகதியுடன் முதற்கட்ட செயற்றிட்டம் முடிவடைவதாகவும் அவர் குறிப்பிட்டார். முதற் கட்ட செயற்றிட்டத்தின் மூலம் மேற் கொள்ளப்பட்ட செயற்பாடுகள் மற்றும் தொடர்ந்து ஏனைய இரு மாவட்டங்களிலும் எதிர் காலத்தில் மேறற்கொள்ள இருக்கின்ற செயற்பாடுகள் குறித்தும் கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு இன்று விளக்கமளிக்கப்பட்டது. இச் செயலமர்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி. சந்திரகாந்தன், மாகாண சபையின் தவிசாளர் எச.; எம். எம.; பாயிஸ், கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயகக் மற்றும் விவசாய அமைச்சர் து நவரெட்ணராஜா ஆகியோர் கலந்து கொண்டார்கள் .
மேற்படி திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பாக ஒரு நியதிச் சட்டம் உருவாக்கப்பட்டு அது கிழக்கு மாகாண சபையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கபடவுள்ளதாகவும் ஐரோப்பி ஒன்றிய திண்மக் கழிவு முகாமைத்துவ செயற்றிட்டத்தின் முகாமையாளர் தெரிவித்தார். அம்பாரை , காரைதீவு மற்றும் அட்டாளச்சேளை போன்ற பிரதேச சபைகளிலே மேற்படி செயற்றிட்டம் நடைமுறையிலிருப்பதும் குறிப்பிடத்தக்கது. குறிதத் மூன்று இடங்களுக்கும் இன்று நேரடியாகச் சென்று முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பார்வையிட்டார்கள். எதிர் காலத்தில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையிலும் இத் திட்டம் விஸ்த்தரிக்கபடும் எவனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
»»  (மேலும்)

ஓட்டமாவடி சிராஜியா அரபுக்கல்லூரி மாணவர்கள் இருவரும் மேற்பார்வையாளர் ஒருவரும் நீரில் மூழ்கி பலி.


ஓட்டமாவடி சிராஜியா அரபுக்கல்லூரி மாணவர்கள் இருவரும் மேற்பார்வையாளர் ஒருவரும் நீரில் மூழ்கி பலி.
பொலநனறுவை கட்டுவம்புல்ல பகுதிக்கு சுற்றுலா பயணம் ஒன்றை மேற்கொண்டு அங்குள்ள குளம் ஒன்றில் குளித்துக் கொண்டிருக்கும் போதே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. மாணவர் விடுதி மேற்பார்வையாளர் மௌலவி அன்வர் மாணவர்களான ரிஜாஸ்(15) மாணவர் நௌசாத் (16) ஆகியோரே பலியாகி உள்ளனர்ääஇவர்களது உடல்களும் மீட்கப்பட்டு பொலநறுவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
»»  (மேலும்)

ஐ.நா. மனித உரிமை கவுன்சில் 17வது அமர்வு இன்று ஆரம்பம் அமைச்சர் சமரசிங்க இன்று உரை


 ஜெனீவாவில் இன்று ஆரம்பமா கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலின் 17வது அமர்வில் பெருந்தோட்டத்துறை மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று உரையாற்றுகிறார்.
இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான உயர்மட்டக் குழு நேற்று முன்தினம் ஜெனீவா புறப்பட்டுச் சென்றி ருந்தது.
இலங்கையின் தற் போதைய புதிய நிலவர ங்கள் தொடர்பில் ஐ. நா. பிரதிநிதிகள் மற்றும் ஏனைய வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கவிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். இலங்கை நேரப்படி மாலை 6 மணிக்கு அமைச்சர் மஹிந்த சமரசிங்க மனித உரிமைகள் கவுன்சிலில் உரையாற்றவுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலின் 17வது அமர்வு இன்று 30 ஆம் திகதி முதல் ஜூன் 17 ஆம் திகதி வரை நடை பெறவுள்ளது. இதில் இலங்கை சார் பில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, நீர்ப்பாசனத் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இதன் பின்னர் ஐ. நா.வின் மனித உரி மைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை யும் அமைச்சர் தலைமையிலான குழுவும் சந்திக்கவுள்ளது. அத்துடன், ஐ. நா.வின் ஆசிய பிராந்தியப் பிரதிநிதிகள், ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்த உண்மைத் தன்மையை விளக்கமளிக்கவிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மனிதநேய நடவடிக்கையை அரசாங்கம் எவ்வாறு முன்னெடுத்தது, மீள்குடியேற்ற நடவடிக்கைகள், முன்னாள் புலி உறுப் பினர்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகள், நாட்டில் பாரியளவில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகள், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் நடவடிக்கைகள் குறித்து வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்க எதிர்பார்த்திருப்பதாக அவர் தெரிவித்தர்.
இலங்கையின் தற்போதைய நிலை மைகளை வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு விளக்கிக் கூறி, புலி ஆதரவாளர்களால் இலங்கை தொடர்பாக முன்னெடுக்கப்படும் போலிப் பிரசாரங்களில் எந்தவிதமான உண்மைத் தன்மையும் இல்லை என்பதை விளக்கவிருப்பதாகவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேலும் கூறினார்.
»»  (மேலும்)

5/29/2011

புலியை பிடித்து கூண்டிலடைத்து போற்றிப் புகழ்கிற உலகம் !!எஸ்.எம்.எம்.பஷீர்

  
“நூறு ஆண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
நீர்க்குள் பாசிபோல் வேர் கொள்ளாதே” (அதிவீரராம பாண்டியர்)

இலங்கை அரசின் தகவல்களின் அடிப்படியிலே நெதர்லாந்தில் புலிப் பயங்கரவாதிகளின் முக்கியஸ்தர்கள் சிலர் தொடராக கைது செய்யப்பட்டுவருவதனை செய்திகள் வாயிலாக அறிய முடிகிறது. ஆனால் இந்த பயங்கரவாதிகள் மீண்டும் புலிகளின் பயங்கரவாதத்தை இலங்கையில் கட்டியெழுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டவர்கள் என்றும் இவர்கள் மீது நெதர்லாந்து தமிழ் மக்கள் வழங்கிய புகார்களை அடிப்படையாகக் கொண்டே இவர்களை கைது செய்யப்பட்டதாகவும் முதலில் செய்திகள் வந்தன. என்றாலும் இவர்களின் கைதுகள் நெதர்லாந்து நாட்டின் பயங்கரவாத தடை சட்டப்படி நடை பெற்றதாக குறிப்பிடப்படுகிறது.
அண்மையில் நோர்வேயில் கைதுசெய்யப்பட்ட நெடியன் நெதர்லாதில் கைது செய்யப்பட்ட பலர் குற்றவியல் சட்ட விசாரணைகளுக்கு உட்பட்டிருக்கிறார்கள் என்பதுடன் , அவர்கள் தொடர்பான கடிதுகளின் மூலம் தெரியவரும் தகவல்களை கொண்டு நோர்வே நாடும் ஐரோப்பிய ஒன்றிய நாடு என்ற வகையில் புலிகளை பயங்கரவாதிகளாக பிரகடனப்படுத்திய தமது கடப்பாட்டில் எவாறு இறுக்கமாக நடக்கப்போகிறது என்பதும் நோர்வே அரசு நெடியனை கையளிக்குமாறு கோரும் இலக்கை அரசின் கோரிக்கைக்கு என்ன சொல்ல போகிறார்கள் என்ற கேள்விகள் நிச்சயமாக எதிர்மறையான விடைகளையே வழங்கப்போகிறது. ஏனெனில் பயங்கரவாதம் என்பதும் நாடுகடத்தல் என்பதும் அமெரிக்காவின் வரைவிலக்கணத்துக்குட்பட்டு நடப்பதாகும் என்பதுவே இன்றைய உலகின் நியமங்களாக உறுதிசெய்யப்பட்டு வருகின்றன.
நோர்வேயில் சின்னம் சிறுசுகளுடன், சிறுவர்களை தற்கொலை குண்டுதாரிகளாக்கி அழித்த நெடியவன் போலீஸ் பரிசோதனைகளை தாண்டி எவாறு பணியில் அமர்த்தப்பட்டார் என்ற கேள்விக்கப்பால் , உலகின் சிறுவர்களை இயக்கத்தில் சேர்த்து அழித்தொழித்த மாபெரும் மனித கொடுமையினை செய்த நெடியவன் போன்றோர் எவ்வித தண்டனையுமில்லாது மேற்குலகில் மீண்டும் சிறுவர்களுடன் சம்பந்தப்பட்ட பணியில் நோர்வே நெடியவனை அமர்த்தியது என்பது நோர்வே என்ன புலிகளை போஷிக்க புதிய உபாயங்களை கண்டுபிடுத்துள்ளார்களா என்ற கேள்வியையும் எழுப்புகிறது
நெடியவன் கைது ஒருபுறம் விசாரணைகளின் பின்னர் சாதாரண குற்றவியல் சட்டத்தின் பின்னர் அவர் விடுவிக்கப்படலாம் என்ற கருத்து வெகுவாக நிலவுகிறது, இதனையே குணரத்த கூட குறிப்பிடுகிறார். நோர்வே தொடர்புகள் மூலம் உறுதிப்படுத்தமுடியாத தகவல்களின் படி அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது. புலிப் பயங்கரவாத ஆதரவாளரும் புகிகளுக்கு ஆயுதங்கள் வாங்க துணை புரிந்தார் என்று கூறப்பட்ட சாந்தன் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடந்த போது, அவரை விடுவிக்க புலிகள் தமது ஜனநாயக் கவசங்களுடன் பல முயற்சிகளை செய்த்தனர், அதில் ஒன்று உலக சமாதான ஆதரவுக் குழு , ஐக்கிய இராச்சியம் என்று ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட பிரச்சார வேலைத்திட்டத்தின் மூலம் சாந்தன் ஜெனீவாவில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டாரென்றும் அந்த பேச்சுவார்த்தைகளை பிரித்தானிய அரசு நடத்த உதவியதென்றும் அதனால் சாந்தன் பிரித்தானிய அரசுக்கு பயங்கரவாத குற்றசாட்டு தொடர்பில் பதில் கூற தேவை இல்லை என்று கூட அவரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கூறினார்.
எவாறேனினும் சாந்தன் ஆயுதங்கள் வாங்க முயன்ற ஆதாரங்கள் அவருக்கு எதிராக சான்றாய் அமைந்தன. எனவே இறுதியில் சிறை செல்ல நேரிட்டது. ஆனால் ஒன்று நிச்சயமாக சிறை மீண்டது இவர் ” சிறை மீண்ட செம்மலாக” வரவேற்கப்படுவார் என்பதும் மீண்டும் தமது தனி நாட்டு கனவுக்கு அர்பணிப்புடன் செயற்படுவார் என்பதும் , திருந்தாத உள்ளங்களில் பலர் இன்னமும் இருந்து கொண்டிருப்பதை கொண்டு எதிர்வு கூறக்கூடியதாக உள்ளது. மேற்குலகின் பாரபட்ச ஜனநாயக நடைமுறைகள் அதற்கு வாய்ப்பளிக்கும்.
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இராக் பேரழிவு ஆயுதங்கள் பற்றிய தனது சிறப்பு தொழில்சார் உயிரியல் விஞ்ஞான தகைமையின் அடிப்படையில் அபிப்பிராயத்தினை முன்வைத்ததுடன் டோனி பிளயரின் முந்திய தொழிற்கட்சி அரசு இடைச்செருகல் செய்த மிகையூட்டிய தகவல்கள் பற்றி வெளிப்படையாக குறிப்பீட்டு சர்ச்சையை ஏற்படுத்திய கலாநிதி டேவிட் கெல்லி என்பவரின் மரணம் குறித்து பல சூழ்ச்சி கோட்பாடுகள் டோனி பிளயரின் அரசுக் கெதிராக உலாவந்தன . அத்துடன் தொழிற் கட்சி நியமித்த பிரபு ஹட்டன் தலைமையிலான விசாரணைக் குழுவும் கலாநிதி டேவிட் கெல்லியின் சந்தேகத்துக்கிடமான மரணம் குறித்து முக்கிய சாட்சிகளை தவிர்த்தே அம்மரணம் குறித்த முடிவுகளை மேற்கொண்டு அம்மரணம் தற்கொலை என முடிவி செய்ததது என்பதும் அப்போது எதிர்கட்சியான மரபுவாதக்கட்சி ஒரு பூரண மரண அத்தாட்சி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது.
டேவிட் கமரூனும் அதனை வலியுறுத்தி வந்தார். இப்போது திடீரென்று அதற்கு அவசியமில்லை என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளார். அதிலும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் கமரூன் கூட்டமைத்துள்ள லிபரல் கட்சியின் அமைச்சர்களில் ஒருவரான நோர்மன் பெக்கர் கெல்லி கொலை செய்யப்பட்டார் என்று ஒரு புத்தகமே எழுதியவர் , ஆனால் இப்போது மவுனமாகி விட்டார். இப்படித்தான் இருக்கிறது மேற்குலகின் வெள்ளைக்காரனின் நீதி முறையும் நியாயங்களும். இந்த இலட்சணத்தில் இன்னுமொரு சம்பவமாக ஜனவரி இரண்டாயிரம் ஆண்டில் இருந்து ஆப்கானிஸ்தான் தொடங்கி உலகின் பல பாகங்களிலிருந்தும் பயங்கரவாத சந்தேக நபர்கள் என கைது செய்யப்பட்ட பலர் எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாமல் பல வருடங்களாக குவாண்டனாமோ சிறையில் அமெரிக்காவால் அடைத்து வைக்கப்பட்டிருப்பதுடன் , இதுவரை அங்கு எட்டு பேர் இறந்துள்ளனர்,
மே மாதத்தில் குவாண்டனாமோவில் இறந்து போன ஆப்கானிய சந்தேக நபரான இனாயத்துல்லா எவ்வாறு மரணமானார் என்பதனை கூட வழக்கம் போல் அமெரிக்கா சொல்லமுடியாமல் மறைத்திருக்கிறது. இந்த இலட்சணத்தில் மேற்குலக நாடுகள் இலங்கையில் புலிப்பயங்கரவாதிகளின் சர்வதேச பரிமாணத்தை திட்டமிட்டு ஒருபுறம் அடிப்படை உரிமை விவகாரமாகஅனுமதித்துள்ளன.
அமெரிக்காவின் ஜனநாயகம் பயங்கரவாத எதிர் நடவடிக்கை குறித்த இரட்டை நியமங்கள் (Double standard) பற்றி பார்க்கும் போது லூயிஸ் பொசாடா காரிலோஸ் (Luis Posada Carriles) எனும் நபர் பற்றி குறிப்பிடாமலிருக்க முடியாது. கியுபாவின் தேசிய விமானமான கியூபன் ஏர்லைன்ஸ் விமானத்தில் (Cuban airlines) 1976 இல் குண்டு வைத்து அதில் பிரயாணம் செய்த எழுபத்தி மூன்று பிரயாணிகளையும் பார்போடாசில் விமானம் வெடித்து கொல்லபபட காரணமாயிருந்த லூயிஸ் பொசாடாவை அவர் அப்போது வாழ்ந்து கொண்டிருந்த வெனிசுவேலாவில் கைது செய்து சிறையில் வழக்கு விசாரணைக்காக வைந்திருந்த பொழுது , அவர் அங்கிருந்து தப்பி ஐக்கிய அமெரிக்காவிற்கு சென்று தன்னை பாதுகாத்து கொண்டார்.
அவரை மீண்டும் விசாரணைக்காக தம்மிடம் ஒப்படைக்கும்படி வெனிசுவேலாவும், அக்குற்றம் இழைக்கப்பட்ட நாட்டு மக்களின் சார்பில் கியுபாவும் கேட்டபோது புஷ் அரசாங்கம் அக்கோரிக்கையினை நிராகரித்துவிட்டனர். “தென் அமெரிக்காவின் பின் லேடன்” என்று அவரின் எதிரிகளால் அழைக்கப்பட்ட பயங்கரவாதியான லூயிசை விசாரணைக்காக (அமெரிக்காபோல் எங்கும் எப்படியும் புகுந்து விசாரணையின்றி கொல்லாமல் ) கையளிக்க கோரியதற்கும் மறுத்த அமெரிக்காவின் ஜனநாயகம் , நீதி என்ன என்பதை உலகின் சிறுபான்மையினரான நீதி நெறியாளர்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். மேற்குலக ஊடகங்களும் இவ்வாறான சம்பவங்களை ஒரு சிறு செய்தியாக சவ்கரியமாக மறந்து மூன்றாம் உலக நாடுகளிற்கு ஜனநாயகமும் நீதியும் போதிக்க சர்வதேச மனித உரிமை நிறுவனங்களின் அனுசரணையுடன் தங்களின் மனித உரிமை மீறல்களை காணாமல் செய்ய பண்ணிவிடுகிறார்கள்.
நெதர்லாந்தில் பிடிபட்டு வழக்கு விசாரணைகளில் சிக்கியிருக்கும் சிலர் புலிகளின் புலம் பெயர் அமைப்புக்களுடன் தொடர்புகளை கொண்டவர்கள் என்பது அவர்கள் மீது சுமத்தப் பட்ட குற்றச்சாட்டுக்களிலிருந்து தெரியவந்துள்ள போதும் அவர்களில் முக்கிய இருவருக்காக வாதாடும் சட்டத்தரணிகள் இருவர் அவர்களின் காசு சேர்த்தல் , சட்ட முறையற்ற காசு பரிமாற்றங்களை (Money Laundering) எல்லாம் தள்ளி வைத்துவிட்டு அவர்களின் செயற்பாடுகள் சுதந்திர போராட்டமாகும் என்று நியாயப்படுத்துவதும் மேற்குலகின் நீதி குறித்த பாரபட்சமான பார்வையை ஏற்படுத்த நீதித் துறையும் துணை போகிறது.
இந்த கட்டுரை எழுதி முடித்த பின்னர் தான் நெடியவன் நான் எதிர்பார்த்தது போல் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தியை அறியமுடிந்தது. மேற்குலகின் இரட்டைத்தன்மை புலத்தில் வாழும் பயங்கரவாதிகளுக்கும் பலமாகவே இருக்கிறது.!! ஆனால் தர்மம் என்றும் வெல்லும் என்று நாம் நம்புவோம்!!

»»  (மேலும்)

5/28/2011

நயவஞ்சகமான, அதிகார நலன்களையே பிரதான நோக்கமாகக் கொண்ட UN panel report ***வன்மையாக கண்டிக்கின்றோம். *“மனித இனமானது புகழ்மிக்க மேம்பாடுடைய வரலாற்றை படைத்திருக்கின்றது. அது மேலும் மேலும் வளர்ச்சிகொண்ட ஓர் மனித இனமாக தன்னை அடையாளப்படுத்தி  முன்நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கின்றது.ஆகவே மனிதனே வரலாற்றை படைக்கும் சக்திவாய்ந்தவன்“ என மனிதனின் வரலாற்றுச் (!!!) சாதனை  குறித்து சந்தேகத்திற்கிடமின்றி அதீத நம்பிக்கை கொண்டிருந்தார்  புகழ்மிக்க தத்துவாதியான தோழர் கார்ல் மார்க்ஸ் அவர்கள்.
இவ்வாறான மேற்படி கார்ல் மார்க்ஸ் அவர்களின் கருத்தியல் சூத்திரத்திலிருந்தே (formula)  ‘‘இயற்கை வரலாற்றை எவ்வாறு மானிட வரலாறு நிர்ணயிக்கும் ,அதேபோல் மானிடவரலாறு எவ்வாறு இயற்கை வரலாற்றை நிர்ணயிக்கும்   (பிரபஞ்ச அதிர்வுகளை)‘‘ என்பதான கேள்வியும் எழுகின்றது. ‘மானிட மேம்பாடு‘ குறித்த மார்க்சிய கதையாடல் (story) என்பது  வெறும் ஊகங்கள் தான் என்பதை இன்று எமது சர்வதேச அதிகார சக்திகள்  நரூபித்துக்கொண்டிருக்கிறது.
மனித இருப்பானது இயற்கையாகவே கலாசார தன்மையுள்ளதாகவும் அதேநேரம் காலாசார ரீதியாகவே மனித இருப்பானது இயற்கை அம்சமாகவுமே நிலைபெற்று வருகின்றது. இவ்வாறிருக்க மானிட ‘அரசியல் அதிகார வரலாறானது‘ வேறு ஓர் திசையில் எம்மை அலைக்கழித்தவாறும், தமக்குள்ளேயே வேற்றுமைகளையும், பகமைகளையும்,  வஞ்சக உணர்வுகளையும் பேணியவாறும் நகர்ந்து செல்கின்றது.
இவ்வாறான நயவஞ்சகமான, அதிகார நலன்களையே பிரதான நோக்கமாகக் கொண்ட ஓர் நடவடிக்கையாகவே UN panel report  என வெளிவந்துள்ள அறிக்கை குறித்த எமது அபிப்பிராயம் ஆகும்.
மேற்படி அறிக்கை குறித்து  மேற்குலக நாடுகளின்  தரவுகளையோ, அறிக்கையூடாக  மேற்குலக ஆளுமைகள், அதனது ஏகாதிபத்திய நலன்கள், அதற்கான பின்னணிகள் என்ன என்பது குறித்தோ நாம் விரிவாக பேசப்போவதில்லை. அல்லது இலங்கை அரசின் சர்வதேச ஆதரவு நாடுகளும் அதனது எதிர்பார்ப்புகளும் என்ன என்பது போன்ற அறிவியல் தர்க்க முற்போக்கு நியாயங்களையும் நாம் பேசப்பேவதில்லை.
இந்த மேற்குலகத்திடம் யுத்தங்களினால் ஏற்படும் உயிர் இழப்புகளுக்கு நியாயம் கேட்பதென்பது ஓர் கேலிக்குரிய விடயம்  என்பதாகவே நாம் கருதுகின்றோம்.
முதலாவது உலக யுத்தமும் அதனால் ஏற்பட்ட உயிர் இழப்புக்களையும்,பொருள் இழப்புக்களையும் கவனத்தில் கொண்ட ஓர் மனிதாபமான நடவடிக்கையாக தோற்றம் பெற்றது தான் UNO எனப்படும் ஐக்கிய நாடுகள் சபை என்பது. சேர்பிய மாணாக்கனான கேப்ரியல் பிரின்செப் என்பவன் ஆஸ்திரிய தேசத்து இளவரசனான பெர்டினாந் என்பவனை கொன்றதன் விளைவாகவே முதலாவது யுத்தம் ஆரம்பமானது என வரலாறு கூறப்பட்டது.
மேற்குலக நாடுகள் ஜேர்மனிக்குச் சொந்தமான குடியேற்ற நாடுகளை அபகரிப்பதற்கும் அவற்றை தமக்குள் பங்குபோட்டுக் கொள்வதற்குமாகவே முதலாவது உலக யுத்தம் நீடிக்கப்பட்டது. பிரித்தானியா, பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற நாடுகள் ஆபிரிக்க கண்டத்திலுள்ள நாடுகளை தாம் அபகரிப்பதற்காக முதலாவது உலக யுத்தத்தை பயன்படுத்திக் கொண்டவர்கள். அதன் பிற்பாடு யுத்த விசாரணை செய்வதற்காக “நியாயத்தையும் தர்மத்தையும் அடிப்படையாகக்  கொண்டு எல்லா நாடுகளிலும் ஒற்றுமை உணர்வுடன்,  மீண்டும் யுத்தம் வராமல் தடுக்க வேண்டும். இதில் அங்கத்தினர்களாகச் சேர்ந்துள்ள நாடுகள் ஒன்றுக் கொன்று விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும், பிரச்சனைகள் தோன்றும் பட்சத்தில் சமாதான முறையில் அவற்றிற்கு தீர்வு காண முயலவேண்டும். அதனையும் மீறி ஒரு நாடு பிற நாட்டுடன் யுத்தம் செய்ய முனையுமானால் மற்ற நாடுகள் யுத்தத்தை தொடங்கிய நாட்டிற்கு எவ்வித உதவியும் செய்யக் கூடாது.“ எனும் வரயறைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் ஐக்கிய நாடுகள் சபை என்பது.
பொருள் இழப்புகளுக்காக ஜேர்மனியிடமிருந்து நஸ்ட ஈடாக பல கோடிகளை அபகரித்துப் பங்குபோட்டவர்கள் இந்த சர்வதேச மனிதாபிமானிகள். ஆனால் யுத்தத்தால் கொல்லப்பட்டவர்களுக்கு என்ன செய்தது இந்த சர்வதேச மனிதாபிமானம்? அதன்பிற்பாடும் என்ன நடந்தது? ஐக்கியநாடுகளின் அங்கத்துவ நாடுகள் அனைத்துமே எந்த நாட்டில் யுத்தம் நிகழ்ந்தாலும் அதை தூண்டி விடுவதிலும் அதனூடாக தமது நலன்களை பேணுவதுமாகவே செயல்பட்டு வந்துள்ளன. யுத்தத்தின் விளைவுகளை கருத்தில் கொண்டு 1927இல் ஸ்தாபிக்கப்பட்ட  ‘சற்றம் இல்ல விதிமுறை‘ (chatham house rule)யின் கதியும் அதே நிலைதான். எனவே இதுபோன்ற மேற்குலக நாடுகளின் மனிதாபிமானச் செயல்பாடுகள், மனிதாபிமான நியாயங்கள் அனைத்தையும் விளிம்பின் ஓரத்திற்கு ஒதுக்கிவிட்டு ,  UN panel report  குறித்து தமிழ் தரப்பிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் நியாயங்களை கிளறுவதும், அவ் அறிக்கை குறித்த எமது பார்வை என்ன என்பதுவுமே இக்கட்டுரையின்  நோக்கம்.
UN panel report யை ஆதரித்தும், அதன்படி இலங்கை அரசிற்கு தண்டனை வழங்கவேண்டும் என அபிப்பிராயங்களும் கட்டுரைகளும் எழுதிவரும்  தமிழ் தரப்பினரை பல வகையில் பிரித்து ‘மேயலாம்.‘ புலிகள் தோற்றுவிட்டனரே என்ற அவமானத்தாலும், அதனூடாக தமது சொந்த-சமூக-பொருளாதார ஆளுமைகள் சிதைந்து போனதன் இயலாமையினாலும்  இவ்வறிக்கையை பலமாக ஆதரிக்கும் ஒருவகையினர் உள்ளனர்.
இவர்களே முன்பு தொடர்ந்து யுத்தத்தை ஆதரிப்பவர்களாகவும், யுத்தத்தால் ஏற்படும் மரணங்கள் தவிர்க்க முடியாதவை, இழப்பில்லாமல் சுதந்திரம் பெறமுடியாதென்றும் இறுதிவரை கூறிக்கொண்டு யுத்தத்தை தூண்டிவிடுபவர்களாக  இருந்தவர்கள்.
அடுத்ததாக தொடர்ந்து புலியையும் எதிர்த்து, தொடர்ந்து அரசையும் எதிர்த்து வருபவர்கள். இவர்களில் பல  வகையுண்டு. அதில் ஒருவகையினர் புலி அரசியல் எதிர்ப்புடன்  ‘மக்கள் நலனுடன்‘ கூடிய தமிழ்த் தேசிய இன விடுதலை குறித்துப் பேசியும் வருபவர்கள் . இவர்கள் என்றுமே மாற்றத்திற்கு உள்ளாகாத ஓர் சிந்தனையின் வெளிச்சத்தின் ஊடாக அனைத்தையும் பார்ப்பவர்கள். அதனூடாக மானிட இருப்புகளின் அனைத்து செயல்பாடுகளுக்குமான தீர்வுகளை முன்கூட்டியே அறிந்து கொண்ட ‘ஞானிகள்.‘
இவ்வாறாக தமிழ் புத்திஜீவிகள் எனப்படுவோர் UN panel report யை ஆதரிப்பவர்களாகவும், இலங்கை அரசை சர்வதேச நீதி மன்றத்தில் ஏற்றி தண்டனை வாங்கிக் கொடுக்கவேண்டும் என்பதிலும் மிக ஆர்வமாக இருந்து வருகின்றார்கள்.
“ஒரு சமூக பாதுகாப்பிற்காக ஸ்தாபிக்கப்பட்ட பொலிஸ் நிர்வாகம் என்பது எவ்வளவோ அநீதிகளை செய்து வருகின்றபோதும் எமது வீட்டில் களவு போனால் நாம் பொலிசிடம் சென்றுதான் முறைப்பாடு செய்யவேண்டியுள்ளது அதேபோன்று சர்வதேசம் என்னதான் மோசமாக இருந்தாலும் அதனிடம் தான் நீதி கேட்கவேண்டியுள்ளது.“என ஒரு நியாயம் கூறப்பட்டு, இலங்கை அரசாங்கத்தை சர்வதேச நீதிபதிகளிடம் ஒப்படைக்கவும் அலோசனைகள் வழங்கப்படுகின்றது.
முன்பொருகாலத்தில்  அனைத்துத் தமிழ் பேசும் மக்களின்  உரிமை மறுக்கப்படடதெனக் கூறி  உரிமை தர மறுத்த அரசிடம் நியாயம் கேட்டது தமிழ்த் தேசியத் தலைமை. அது தரவில்லை. எனவே தமிழ்த் தேசியம் சர்வதேசத்திடம் நியாம் கேட்டது. அந்த சர்வதேசமோ   ஆயுதத்தை தந்து போராடு என தள்ளிவிட்டது.  தமிழ்த் தேசியமும் போராடியது,  கொன்றது, சுட்டது, சுட்டவனைச் சுட்டது, சுடக்கண்டவனைச் சுட்டது, சும்மா இருந்தவனை  சுட்டது, அது, இது என நியாயம்கூறி கண்டமேனிக்கும் சுட்டுத்தள்ளியது. இறுதியில் மிஞ்சியதுதான் என்ன? என்ன கிடைத்தது எமக்கு!  கிடைத்தது  நியாயமா? தோல்வியா…?  அல்லது கற்றுக் கொள்ளவேண்டிய நல்ல அனுபவமா?
எம்மை யுத்தம் செய்ய தூண்டியவர்களே இன்று யுத்தக் குற்றத்தை விசாரிக்கும் நீதிபதிகளாக எமக்கு காட்சி தருகின்றார்கள். அதைவேறு நாம் நியாயப்படுத்தி பேசுகின்றோம். “பத்து நாட்கள் யுத்தம் செய்வதைவிட, பத்து வருடங்கள் பேச்சுவார்த்தை நடத்துவதே சிறந்தது” என்பது உண்மையில் மனிதநேயம் கமளும்  வார்த்தைகள் தான். கேட்கவே வாய் ஊறுகின்றது. சமாதானத்திற்காகவும்,யுத்தங்களை தவிர்ப்பதற்காகவும் தொடர்ந்து பேசுவதென்பது ஆரோக்கியமானதே. ஆனால்  மேலாதிக்க நலன்களும் ஆதிக்க-அதிகார பலமும் இவற்றை அலட்சியப்படுத்தியே தமக்கான நியாயங்களை கற்பித்து வருகின்றது. இதற்கான போதுமான ஆதாரங்கள் எம்மிடம் இல்லையா?புலிகளுடன் பேசுவதற்கு நாம் எத்தனை வருடங்கள் காத்திருக்க முடியும்? அதற்கான  எந்த நம்பிக்கையை புலிகள் ஏற்படுத்தியிருக்கின்றார்கள்? புலிகளும் அனுமதித்ததில்லையே பேசுவதற்கு. அவர்களுக்கு தெரிந்த மொழி என்பது கொல்வதுதானே. புலிகளின் பாசிசப் பரிமாணத்தின் எல்லைகள் குறித்து சர்வதேசமே வியப்பில் ஆழ்ந்து, புருவங்களை உயர்த்தியதே!  25 வருடத்திற்கு மேலாக பேசுவதற்கே  அனுமதி மறுத்த புலிகளை எந்த வகையில் எம்மால் வெற்றி கொள்ள முடிந்திருக்கும்.
இலங்கை அரசால்  புலிகள் அழிக்கப்பட்டபோது நாம் அதை பகிரங்கமாக வரவேற்றோம். அதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு தலித் சமூகம் சார்ந்த நன்றியையும் தெரிவித்தோம். எம்மால் செய்ய வேண்டிய காரியமானது  செய்யமுடியாதபோது அக்காரியம் பிறர்ஊடாக நிறைவேற்றப்படும் பட்சத்தில்   அதற்காக நாம் நன்றி சொல்வதில்லையா? அதுதானே உயர்ந்த மனிதப் பண்பு. அவ்வாறானா ஓர் மனிதநேயப் பண்பாகத்தான் புலிகள் அழிக்கப்பட்டபோது நாம் இலங்கை அரசிற்கு கொடுத்த மதிப்பும், ஆதரவென்பதும். அப்படியானால் அரசாங்கம் மக்களை கொல்லவில்லையா என எங்களைப் பார்த்து கேட்பவர்களுக்கு நாம் ஓர் விடயத்தை கூறிக்கொள்கின்றோம்.
தற்போதைய இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி அங்கத்தவர்களாகிய நாம் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்ட காலத்திலிருந்தும், புலிகள் மாற்று இயக்கத்தை கொலை செய்ய முற்பட்ட காலத்திலிருந்தும், ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தும் தொடர்ச்சியாக யுத்தத்தை எதிர்த்தும் கொலைகளை கண்டித்தும் வந்தவர்கள். யுத்தத்திற்கு எதிராகவும்,மக்களின் மரணங்களுக்கு எதிராகவும் 2009 ஆண்டு மே மாதத்திலிருந்து குரல் கொடுத்தவர்களல்ல நாம். அல்லது புலிகளின் தமிழ் மக்கள் மீதான கொலைகளை மட்டும் விமர்சித்துக்கொண்டு புலிகளால் இரணுவம் கொல்லப்படும்போது மனதிற்குள் குதூகலித்த முற்போக்கு மார்க்சிய இடதுசாரிகளும் அல்ல நாம்.
இலங்கையில் உரிமை மறுக்கப்பட்ட சிறுபான்மை இனங்களின் மேம்பாட்டில் (கோட்பாட்டளவேனும்) அக்கறையுடைய அரசியல் கட்சியாக செயல்பட்டுவந்த அரசியல் கட்சி எதுவாக இருந்ததென்பதையும், மேற்குலக ஏகாதிபத்திய நலன்களை பிரதிபலிக்கும் வகையில் செயல்பட்டு வந்த இலங்கையின் அரசியல் கட்சிகள் எதுவாக இருந்ததென்பதையும் தொடர்ச்சியான இலங்கை அரசியல் வரலாறு அறிந்தவர்களால் இனங்காணக்கூடியதாக இருக்கும்.
மேற்படி இரண்டு பிரிவான அரசியல் கட்சிகளைவிட ‘பேசப்படும் தமிழ்பேசும் மக்களின் இனப்பிரச்சனைகளை’ தீர்ப்பதற்கு நம்பிக்கைக்குரிய வேறு ஏதாவது கட்சிகள் எமது புலனுக்கு தென்படுகின்றதா? அப்படி தென்படுமாயின் அது எது? அல்லது காலங் காலமாக இலங்கையில் ஆட்சிசெய்து வந்த மேற்படி சுட்டிக்காட்டப்பட்ட இரண்டு கட்சிகளில் எக்கட்சி ஓரளவிற்கேனும் நம்பிக்கைக்குரிய கட்சியாக இருக்கின்றது?
“பத்து நாட்கள் யுத்தம் செய்வதைவிட, பத்து வருடங்கள் பேச்சுவார்த்தை நடத்துவதே சிறந்தது” என்ற தீர்மானத்திற்கு நாம் வந்து விட்டோம். அகவே எந்தக்கட்சியுடன் நாம் பேசுவது? எந்தக்கட்சியில் நம்பிக்கை கொள்வதென்பதே எம்முன்னால் எழும் கேள்வியாகும். இலங்கையில் வாழும் இனங்கள் தமது தேவைகளையும், தமக்கு மறுக்குப்பட்ட உரிமைகளையும் பெற்றுக்கொள்வது எவ்வாறு? மீண்டும் ஆயுதப்போராட்டமா? அல்லது ஜனநாயகப் போராட்ட வழிமுறைகள் ஊடாகவா? எது சாத்தியமானது?
புலிகளை இல்லாதொழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தில் அப்பாவி மக்களின் உயிர் இழப்புக்கள் என்பது எதனாலும் ஈடுசெய்யமுடியாத இழப்புகளாகும். யுத்தத்தில் பாதிக்கப்பட்ட உறவுகளின் துன்பங்களையும் துயரங்களையும்,  அவர்களின் மறுவாழ்விற்கான அனைத்து தேவைகளையும் இலங்கை அரசாங்கத்திடமிருந்துதான் நாம் பெற்றுக்கொள்ளவேண்டியுள்ளது. ஏன் புலிகளை ‘தீனி‘ போட்டு வளர்த்து அதனை ஒரு பாசிச இயக்கமாக நடமாடவிட்ட அனைவருக்கும், குறிப்பாக பெரும்பான்மையான தமிழ் சமூகத்திற்கு யுத்தத்தின் விளைவுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய எந்தப் பொறுப்பும் இல்லையா? ஆனால் அதையெல்லாம் மூடிமறைத்துக் கொண்டும், கள்ள மெளனம் சாதித்தவாறும் இலங்கை அரசுதான் யுத்தக்கொலைகளுக்கு பிரதான காரணம் எனக் கூறிக்கொண்டு சர்வதேச நீதி மன்றத்தில் ஏற்றி விசாரணை செய்ய துடிக்கிறது தமிழ் முற்போக்கு முகம் காட்டும் ஒரு கூட்டம்.
உலகத்திலே நிகழ்ந்த யுத்த வரலாறுகளை கொஞ்சம் திரும்பிப் பாருங்கள். யுத்தங்களால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு சர்வதேசம் செய்த பரிகாரங்களை எவராலும் பட்டியலிட முடியுமா? எந்த யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு நியாம் கிடைத்திருக்கின்றது.
புலிகளிடம் இருந்தோ,புலிகளின் கோடீஸ்வரப் பினாமிகளிடமிருந்தோ யுத்தக் கொலைகளுக்கான நியாயங்கள் கிடைக்கப்போவதில்லை. நாம் அரசாங்கத்திடம் தான் நியாயத்தை எதிர்பார்க்க வேண்டியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களையும் அரசாங்கத்திடமிருந்துதான் நாம் பெறவேண்டியுள்ளது. மிக முக்கியமாக அதற்கான அழுத்தத்தை கொடுக்கவேண்டியவர்கள்  இலங்கையில் செயல்பட்டுவரும் அரசியல் சக்திகளும், இலங்கை வாழ் மக்களுமேயாகும்.
சர்வதேச அதிகார சக்திகளிடம் நியாயம் கேட்கும் தமிழ் முற்போக்கு நியாயவாதிகளின் செயல்பாடுகளானது தம்மை நடுநிலையாளர்கள், புத்திஜீவிகள், சிந்தனை மேதைகள் என வெளிப்படுத்தவதற்கு மட்டுமே தகுதியுடையதாக அமையும். எமது சமூகத்தை குறிப்பாக தமிழ்பேசும் சமூகத்தை ஜனநாகபூர்வமான அரசியில் செயல்பாட்டின் தன்மைகளையும், அதனது அவசியத்தை பேணும் ஓர் சமூகமாக மாற்றுவதற்கும் தடையாக இந்த Un panel report ஆதரவாளர்கள்  செயல்படுகின்றார்கள் என்பதுதான் உண்மை. மேலும் மேலும் இலங்கையில் வாழும் சமூகங்களுக்கிடையே பிரிவனைகளையும் நம்பிக்கையீனங்களையும் தக்கவைக்கும் செயல்பாடுகளாகவே இது அமையும்.
யாழ்மேலாதிக்க மனநிலையும் தமிழ்த் தேசியக் கருத்தியலும் கைகோர்த்து புலிகளையும், மக்களையும் முள்ளிவாய்க்கால் வரை இழுத்துச்சென்று கொல்லக்குடுத்த சம்பவம் எம் கண்முன்னால் நிகழ்ந்தது. இதற்கு நிகரான ஒரு செயல்பாடாகவே UN panel report யை வரவேற்கும் தமிழ்த் தரப்பினரின் செயலையும் நாம் அவதானிக்கின்றோம். தமது அறிவியல் திமிர் நிலையில் இருந்துதான் இவர்களது சமூகம் குறித்த பார்வையும், மக்கள் குறித்த அக்கறை என்பதும். எமது சமூகமானது அரசியல் என்பதன் அர்த்தம் தெரியாதவர்களாகவும், அரசியலின் பலம், பலவீனங்களை புரியாதவர்களாகவும் இருந்து வருகின்றார்கள். இவ்வளவு அவலங்கள் நிகழ்ந்ததன் பிற்பாடும்  தமிழ் அரசியல் வாதிகளாலும்,தமிழ் ஊடகங்களாலும்  பிரிவினைவாதமும், இனவாதமுமே  போதிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தமிழ் புத்திஜீவிகள் எனப்படுபவர்களும் அதே காரியத்தைத்தான் செய்து வருகின்றார்கள். தமது அறிவியல் திமிர் நிலையில் இருந்து அனைத்தையும் தீர்மானிக்கும்  இவர்களது செயல்பாடு மிக ஆபத்தானது. பல்வேறு  வேற்றுமைகளோடும், மாறுபட்ட சிந்தனைகளோடும் வாழும் மக்கள் மீதான உறவு என்பது இவர்களுக்கு சாத்தியமே இல்லை. சமூகத்தின் நிலையிலிருந்து சிந்திக்கவும், பார்க்கவும் ஒருபோதும் வழி விடாது  இவர்களது அறிவியல் செருக்கு
சர்வதேசத்திடம் எந்தவகையில் மனித உரிமை  நியாயம் கேட்கின்றார்கள் இவர்கள்.சர்வதேச விசாரணையூடாக ராஜபக்சவை தூக்கில ஏற்றுவதாலும், அல்லது கைது செய்து ‘சுட்டுப்போட்டு கடலில்‘ எறிந்துவிடுவதாலும்  மட்டும் அவை மனித உரிமை நியாயங்களாகிவிடுமா? இவ்வாறுதானே  இந்த சர்வதே அதிகார மையங்கள்  பிறநாட்டு விவகாரங்களில் தலையிட்டு நியாயம் வழங்கி  வருகின்றது. பிறநாட்டு விவகாரங்களில் தலையிட்டு இவ்வாறான தீர்ப்புகளை வழங்குவதும், வளர்ச்சியடைந்து வரும் நாட்டு மக்களும் அவ்வாறான தீர்ப்புகளையே ஆதரித்தும் வருவதானது சுயமான அரசியல் சிந்தனை ஆளுமைக்கு தடையாகவே இருக்கும். இவ்வாறான அணுகுமுறையானது அதிகார மையங்களை நோக்கி உண்மையை பேசுவதற்கு மாறாக, அதிகார மையங்கள் முன்னால் தலை கவிழ்ந்து நிற்கும் நிலைக்கு ஒப்பானதாகும். தொடர்ந்தும்  ஜனநாயக நடைமுறைகளுக்கும், அதைப்பயன்படுத்தும் வழிகளுக்கும் இடையூறாகவே அமையும்.
இயற்கையாகவே இந்துத்துவ பண்பாட்டை பேணுகின்ற எமது சமூகமானது சாதியப் பாகுபாடுகளுடன் கூடிய பாசிச உணர்வுகளோடும் ஊடாடும்  ஓர் சமூகம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இலங்கையில்   ஜனநாயக அரசியல் நடைமுறைகளை பேணவும், விரும்பாத ஆட்சியை தேர்தல் ஜனநாயகப் பலத்தால் மாற்றும் வல்லமை கொண்ட சமூகமாக மாற்றுவதற்கான செயல்பாடுகளாக  எமது  செயல்பாடுகள் அமையவேண்டும்.
ஜனநாயகம் என்பது கூட கேள்விக்குரிய ஒன்றாக இருப்பினும். தேர்தல் ஜனநாயகம் என்பது ஆட்சியாளர்களை அச்சுறுத்தும் ஓர் சாதனமாகவே உள்ளது. அது குறித்து நாம் அதிக விளக்கம் சொல்லத்தேவையில்லை. குடும்ப அரசியலுக்கும், அதிகார மமதைக்கும், பொருளாதார சூறையாடலுக்கும் எதிராக தமிழ் நாட்டு மக்கள் அளித்த தீர்ப்பு எவ்வாறு அமைந்ததென்பதை நாம் கண்டிருக்கின்றோம்.
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் பல்வேறு சர்வதேச எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் புலிகளை இல்லாதொழித்த இலங்கை அரசிற்கு ‘பேசப்படும் இலங்கை இனப்பிரச்சனைக்கு’ இதுவரை தீர்வு முன்வைப்பதற்கு தடையாக உள்ளதென்ன? அது மட்டுமல்ல புலிகளுக்கு ஆதரவாக இயங்கிய சிங்கள புத்திஜீவிகள் மட்டுமல்லாது, நியாயமாக விமர்சனங்களை முன்வைத்த இடதுசாரி சிந்தனைகொண்ட பல சிங்கள பத்திரிகைகளும், பத்திரிகையாளர்களும் இலங்கை அரசினால் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருவதை நாம் அறியக் கூடியதாக உள்ளது.  குடும்ப அரசியல் தலையீடு எல்லைமீறிப் போகின்றது. இவ்வாறான குறைபாடுகளையும், விமர்சனங்களையும் கொண்ட அரசாக தொடர்ந்து செயல்பட அனுமதிக்க முடியாது.
இவ்வாறு ராஜபக்ச அரசு தொடர்ந்து செயல்படுமானால் தேர்தல் ஜனநாயக சக்தியூடாக அவ்வரசை  அம்மக்கள் நிராகரிப்பதற்கான வேலைகளை நாம் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டும். ஓர் நாட்டில் குறைந்தபட்சமான தேர்தல் ஜனநாக உரிமை உள்ளபோது  சர்வதேசத் தலையீடுகள் அவசியமற்றவை. இந்த சர்வதேச அதிகாரமானது யுத்தங்களை தவிர்ப்பதற்கான எந்த முயற்சிகளையும் மேற்கொள்வதில்லை.
சர்வதேசப்படைகள் லிபிய நாட்டின் மீது மேற்கொள்ளும் யுத்தத்திற்கு அவர்கள் கூறும் காரணம் என்ன? கடாபிக்கெதிரான லிபிய நாட்டுப் போராளிகளுக்கு இராணுவ உதவி செய்வது மிக அத்தியாவசியமான செயல்பாடா என லண்டன் பிரதமர் ஜேம்ஸ் கமரோனிடம் கேட்கப்பட்டபோது. அது தவிர்க்க முடியாதது. இதுவரையில்  போராளிகளுக்கான எமது உதவிகள் என்பது ஐ நா சபையினால் 1973இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில்தான் மேற்கொள்ளப்பட்டது. அது மக்களை பாதுகாப்பதையே நோக்கமாககொண்டது. : (“I wouldn’t rule that out, but what we have done so far is we’ve helped the rebels, in line with the UN resolution 1973, to protect civilian life by giving them better communications equipment.” )  என லண்டன் பிரதமர் கூறுகின்றார். இந்த சர்வதேச ‘மனிதாபிமானிகளுக்கு‘ அங்கு யுத்தத்தை தவிர்த்து பேசித்தீர்ப்பதற்கு தடையாக இருப்பதென்ன?   (லண்டன் பிரதமரின் உபதேசத்தை மேலதிகமாக தெரிந்துகொள்ள ) இந்த மேலாதிக்க அதிகாரங்களை நோக்கி உண்மைகளைப் பேசுவதற்காகவே இவர்களது அறிக்கையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
எனவே UN panel report ஆதரவு நிலைப்பாடும் அவற்றை அங்கீகரிக்கும் போக்கானது எமது நாட்டு மக்களின் ஜனநாயக அரசியல் செயல்பாட்டின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள தடையாகவும், தேர்தல் ஜனநாயகத்தின் பலத்தை மதிப்பிடவும் தடையாக அமையும் என்பது எமது தெளிவான முடிவாக உள்ளது.

இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி (பிரான்ஸ்)

»»  (மேலும்)

ஓமந்தை ரயில் நிலையம் திறப்பு

இருபத்தியொரு வருடங்களின் பின்னர் வடபகுதிக்கான ரயில் பாதையில் ஓமந்தை வரையில் ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் சேவை தற்போது வவுனியா நகரின் புறநகர்ப்பகுதியில் உள்ள தாண்டிக்குளம் வரையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் இருந்த வடக்காக சுமார் 14 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஓமந்தை சிறுநகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் நிலையத்தை போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம வெள்ளியன்று திறந்து வைத்தார்.
கொழும்பில் இருந்து சென்ற யாழ்தேவி ரயிலில் ஓமந்தையில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் நிலையத்தைச் சென்றடைந்த அமைச்சர், அடுத்த 3 வருடங்களில் இநத ரயில் சேவை யாழ்ப்பாணம் வரையில் நீடிக்கப்படும் என தெரிவித்தார்.
இந்திய அரசின் கடன் அடிப்படையிலான நிதியுதவியுடன், இந்திய ரயில்வே நிபுணர்களினால் ஓமந்தையில் இருந்து யாழ்ப்பாணம் வரையிலான ரயில் பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேபோன்று மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரையிலான ரயில் பாதையும் அமைக்கப்பட்டு வருகின்றது.
»»  (மேலும்)

வடக்கு கிழக்கு மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த பின்னிற்கப் போவதில்லை *

நாட்டு மக்களின் அனுமதியின்றி வெளிநாட்டு சக்திகளின் தலையீடுகளுக்கு இடமில்லை.
* பிரிவினைவாதிகள், இனவாதிகள் கேட்கின்றவற்றை பெற்றுக்கொடுக்க நாம் தயாராக இல்லை.
வடக்கு, கிழக்கு மக்களின் ஜனநாயக உரிமைகளையும், மனித உரிமைகளையும் உறுதிப்படுத்த ஒரு நிமிடம் கூட தயங்கமாட்டோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

நேற்றையதினம் காலிமுகத் திடலில் நடைபெற்ற படைவீரர்களின் வெற்றிவிழா வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதமர் டி.எம்.ஜயரட்ண, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, சிரேஷ்ட அமைச்சர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற் றுகையில், உலகத்தில் மிகக்கொடூரமான பயங்கரவாதிகளைத் தோல்வியுறச் செய்து, தாய்நாட்டை ஐக்கியப்படுத்தியதன் பின்னர் இன்று பெருமிதத்துடன் எம்மால் தேசிய கொடியை ஏற்றிவைப்பதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது.
தமிழ், முஸ்லிம், சிங்கள அனைத்து இனங்களுக்கும் உயிர்வாழ்வதற்கு இருக்கின்ற உரிமையை உறுதிப்படுத்துகின்ற வெற்றிவிழாவை இன்று நாம் கொண்டாடுகின்றோம். அதேபோன்று பணயக் கைதிகளாக அடைபட்டுக்கிடந்த இலட்சக்கணக்கான வடபகுதி மக்களை விடுவித்து அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு வழிவகுத்த மாபெரும் வெற்றியாகும்.
அரசியலமைப்பில் மனித உரிமைகளைச் சேர்த்து அதை அங்கீகரித்து உலக மக்களுக்கு பறைசாற்றுவதன் மூலம் இந்த நாட்டில் மனித உரிமை மக்களுக்குக் கிடைத்துவிடமாட்டாது. வாழ்வதற்கு இருக்கும் உரிமையை எவரேனும் பறித்துக்கொள்வாராக இருந்தால் அதைத் தடுப்பதன்மூலமும், அதிலிருந்து மக்களை விடுவிப்பதன் மூலமும் மாத்திரமேதான் மனித உரிமைகளைப் பாதுகாக்க முடியும். அதனால் நாட்டு மக்கள் அச்சமும் சந்தேகமும் இன்றி வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்தியதை முன்னிட்டே இந்த வெற்றிவிழாவை நாம் கொண்டாடுகின்றோம்.
நாங்கள் பயங்கரவாதத்திலிருந்து விடுதலை பெற்று கடந்துபோன இரண்டு ஆண்டுகளை நாம் திருப்தியுடனும், பெருமிதத்துடனும் திரும்பிப் பார்க்க முடியும்.
நாம் புதிய இலங்கை வரைபடமொன்றை உருவாக்கும் அளவுக்கு அபிவிருத்திப் புரட்சியொன்றை இந்நாட்டில் மேற்கொண்டுள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். படைவீரர்கள் விடுவித்த வடக்கும், கிழக்கும் கஸ்டமான வாழ்க்கைக்குப் பதிலாக ஆடம்பரவாழ்வை அனுபவித்துக்கொண்டிருக்கின்றன.
எல்லைக் கிராமங்களை இலங்கை வரைபடத்திலிருந்து எடுத்து எறிந்த நாம், இப்போது அகதிகள், இடம்பெயர்ந்தவர்கள் ஆகியவர்களைப் பற்றி எமது அகராதிகளிலிருந்து அகற்றிக்கொண்டிருக்கும் யுகமாகும்.
இலட்சக்கணக்கில் இடம்பெயர்ந்திருந்த மக்களை, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைப் பெற்றுக் கொடுத்துத்தான் மீளக்குடியம ர்த்தியிருக்கிறோம். இவ்வாறு வடக்கு, கிழக்கை மீண்டும் கட்டியெழுப்பியமை வரலாற்றில் மேற்கொண்ட பாரிய அபிவிருத்திப் பணியென்றுதான் நான் நம்புகின்றேன்.
சுதந்திரத்தின் ஒளிக்கீற்று படரத் தொடங்கியவுடன் அந்த ஒளிக்கீற்று வடக்கு, கிழக்கு மக்களுக்குக் கிடைத்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். நாம் இவ்வாறு துரிதகதியில் கட்டியெழுப்புவதை பயங்கரவாதிகளினால் அழிக்கப்பட்ட பொதுமக்களின் சொத்து என்பதை குறிப்பிடவேண்டும். பயங்கரவாதிகளால் அழிக்கப்பட்ட வடக்கையும், கிழக்கையும் கட்டியெழுப்புகின்றபோது வெளிநாடுகளிலிருந்து பயங்கரவாதிகள் கடந்த இரண்டு ஆண்டுகளிலும் என்னசெய்தார்கள் என்பதை உலக மக்கள் அறிவார்கள்.
முள்ளிவாய்க்காலில் கடைசிப் பயங்கரவாதத் தலைவன் இறந்ததையடுத்து மே மாதம் 19ஆம் திகதி இந்த நாடு ஐக்கியப்பட்ட நேரத்திலிருந்து வெளிநாடுகளிலிருக்கின்ற இவர்கள் மீண்டும் தாய்நாட்டுக்கு எதிராக ஒன்று சேர்ந்தனர். நன்கொ டைகளை சேகரிப்பதையும், கடத்தல் வேலைகளை செய்வதையும் பயங் கரவாதிகள் நிறுத்தவில்லை.
யுத்தம் நடைபெற்ற யுகத்தில் ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்கு, கப்பல்களை கொள்வனவு செய்வதற்கு செலவுசெய்த பணம் அவர்களிடம் குவிந்து கிடந்தது. குவிந்து கிடந்த பணத்தைக்கொண்டு இலங்கைக்கு எதிராக பாரிய அளவில் பொய்ப் பிரசார இயக்கங்களை, சதி செயல்களை இன்னும் தொடர்ச்சியாக மேற்கொள்கின்றனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். இலங்கையில் பயங்கரவாதம் முடிவடைந்தாலும் வெளிநாடுகளில் குடியேறியிருக்கின்ற பயங்கரவாதிகளும், அவர்களுடைய நண்பர்களும் இன்னும் நமது நாட்டை அழிக்க நடவடிக்கை எடுக்கிறார்கள்.
வெளிநாடுகளில் இருக்கின்ற அவர்கள் அந்நாடுகளில் இருக்கின்ற ஜனநாயக ரீதியிலான சுதந்திரத்தையும், கிடைத்துள்ள வாக்குரிமையையும் பயன்படுத்தி அந்நாடுகளில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது இரகசியம் அல்ல.
ஒரு நாட்டில் முதலில் சத்தியத்தை சுட்டுக்கொன்றுவிட்டுத்தான் பயங்கரவாதம் ஆரம்பமாகின்றது. யுத்தத்தின் பின்னரும் புலிகள் சத்தியத்தை சுட்டுக்கொல்லத் தொடங்கினர். அதன் விளைவாக எமது படைவீரர்களுக்கு எதிராக, நாட்டுக்கு எதிராக பொய்யான அறிக்கைகளை எழுதுவதற்கு தேவையான சதி செயல்களை ஆரம்பித்தனர்.
எமது படையினர் ஒரு கையில் படைக்கலங்களையும் மற்றக்கையில் மனித உரிமை சாசனத்தையும், தோளில் நிர்க்கதியானவர்களுக்குக் கொடுக்கின்ற உணவுப் பக்கற்றையும், இதயத்தில் பிள்ளைப் பாசத்தையும் சுமந்துகொண்டு போராடினார்கள்.
பயங்கரவாதத் தலைவன் முள்ளிவாய்க்காலில் இறந்ததன் பின்னர் அவருடைய தாயும் தந்தையும் தொடர்ச்சியாக எங்களுடைய பாதுகாப்பைப் பெற்றனர். அவர்களை துப்பாக்கித் தோட்டக்களிலிருந்து காப்பாற்றி தூக்கிக்கொண்டுவரும் அளவுக்கு படைவீரர்களது இதயம் இழகியிருந்தது என்பதை நாம் அறிவோம். இன்னும் கூட எங்களிடம் சரணடைந்து இருக்கின்ற பயங்கரவாத தலைவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எமது பாதுகாப்பைப் பெறுகின்றனர்.
எங்களுக்கு எதிராகப் போராடிய பயங்கரவாதிகளுக்கும் தேவையான உணவு, மருந்து ஆகியவற்றை அனுப்புக்கொண்டு போராடிய ஒரே இனம், ஒரே நாடு நாம்தான். வேறுநாடுகளில் மோதல்கள் இடம்பெறும் தன்மையைப் பார்க்கின்றபோது நமது மனிதாபிமான நடவடிக்கையிலிருந்து ஆழமான மனித நேயத்தை எண்ணி பெருமை கொள்கின்றோம்.
படைவீரர்களே! போர்க்களத்தில் உங்களுடன் எங்கள் இதயங்கள் இருந்தன. முழு நாடுமே உங்களோடு இருந்தது. இன்றும் அப்படித்தான். உலகத்தின் முன்னால் உங்களைக் காட்டிக்கொடுக்க எவருக்கும் இடமளிக்கமாட்டோம் என்பதை இந்த நேரத்தில் ஞாபகப்படுத்தவேண்டும். மனிதாபிமான நடவடிக்கை முடிவடைந்ததன் பின்னர் உங்களை பாசறைக்குள் வரையறுத்து வைக்கவில்லை. எமது நாட்டை கட்டியெழுப்புகின்ற பாரிய பணியில் உங்களையும் பங்காளிகளாக்கிக் கொண்டிருக்கின்றோம்.
வெளிவிவகார சேவையிலிருந்து கொழும்பை அழகான நகரமாகக் கட்டியெழுப்பும் பணிவரைக்கும் பல விடயங்களில் படைவீரர்கள் பங்களிப்புச் செய்தனர் என்பதை நாம் அறிவோம். அன்று யுத்த களத்திலே இரத்தம் சிந்திய நீங்கள் இன்று நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்தளத்திலே வியர்வை சிந்துகிaர்கள். அதுமாத்திரமல்ல உங்களிடம் இருக்கின்ற ஒழுக்கம் அர்ப்பணிப்பு, துணிச்சல் என்பவற்றையும் தாய்நாட்டின் பல்வேறு துறைகளுக்கும் கேட்கின்றனர்.
நாம் உலகத்துக்குக் காட்டவேண்டிய உண்மை இருக்கின்றது. நாம் உருவாக்கியிருப்பது நாடுகளை முற்றுகையிடுகின்ற முப்படையல்ல, நாட்டைக் கட்டியெழுப்புகின்ற மக்களுக்காகத் தம்மை அர்ப்பணித்துக்கொண்டிருக்கின்ற ஒரு முப்படையாகும்.
நண்பர்ளே! தாய்நாட்டின் சுதந்திரத்தில் பாதம் பதிக்கின்ற ஒவ்வொரு நிமிடத்திலும் நமக்காகத் தமது உயிரைத் தியாகம் செய்த மாபெரும் வீரர்கள் இம்மண்ணில் உறங்குகின்றனர் என்பதை நாங்கள் கெளரவாக நினைவுகூரவேண்டும். கண்களை, உடலின் பாகங்களை, இரத்தத்தை நாட்டுக்காகத் தியாகம்செய்த வீரர்கள் நம்மத்தியில் இருக்கின்றனர் என்பதை கெளரவமாக நினைவுகூருகின்றோம். படைவீரர்களே நீங்கள் செய்த உன்னதமான தியாகத்தை அர்த்தமுள்ளதாக்க வேண்டுமானால் தேசிய ஒற்றுமையுடன் உன்னதமான எதிர்காலத்தை இவ்வனைத்து மக்களுக்கும் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.
நாம் வடக்கு, கிழக்கு மக்களின் ஜனநாயக உரிமைகளை மனிதாபிமான உரிமைகளை உறுதிப்படுத்தி ஒரு நிமிடம் கூட தயங்க மாட்டோம். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழு பெற்றுக் கொடுத்த இடைக்கால பரிந்துரைகளை ஏற்கனவே நாம் நடைமுறைப்படுத்தியிருக்கின்றோம். அதன் இறுதி அறிக்கை தொடர்பாக இந்நாட்டு மக்களும் எமது அரசாங்கமும் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றோம்.
ஆனால் பிரிவினைவாதிகள் அல்லது இனவாத குழுக்கள் கேட்கின்றவற்றை பெற்றுக் கொடுக்க நாம் தயாராக இல்லை. இந்நாட்டு மக்களுடைய அங்கீகாரம் இல்லாததால் வெளிநாடுகளைக் கொண்டு நிர்ப்பந்தித்து தமது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொள்ள இவர்கள் குறி பார்க்கின்றனர் என்பது இரகசியம் அல்ல.
ஆயினும் எந்தவொரு அதிகாரமுடையவருக்கும் இந்நாட்டு மக்களின் சம்மதமும் அங்கீகாரமும் இன்று எதையும் பெற்றுக் கொடுக்க முடியாது என்பதை நான் தெரிவிக்கின்றேன். நமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்ள வேண்டுமே ஒழிய அவற்றை மற்றவர்கள் தீர்க்க முடியாது. எம்மால் அதை செய்ய முடியும் என்பதை உலகத்திற்கு நாம் காட்டி இருக்கின்றோம்.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் மக்களுக்கு கிடைத்த நிவாரணம் என்ன என்று கேட்கின்றவர்களுக்கு வடக்கைப் போன்று முழு நாட்டையும் கை நீட்டி சுட்டிக்காட்ட முடியும். இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி நூற்றுக்கு 6.8 வீதமாகும். ஆனால் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் பொருளாதார வளர்ச்சி நூற்றுக்கு 8 வீதமாகும். வடக்கில் அபிவிருத்தி வேகம் நூற்றுக்கு 14.2 வீதமாகும். அதே போன்று தொழில் இல்லா தன்மையையும் குறைத்துக் கொள்ள முடிந்தது. டொலரின் பெறுமதியை நிலையாக வைத்துக் கொள்ள முடிந்துள்ளது.
எமது எதிர்கால சவாலை வெற்றிக் கொள்வதற்கு இருக்கின்ற சிறந்த வழி நாட்டில் தேசிய ஒற்றுமையை உறுதிப்படுத்துவதாகும். எமது நாட்டு மக்களிடையே உன்னதமான தேசிய ஒற்றுமை இருக்கின்றது. இனங்களுக்கிடையே மோதிக் கொள்கின்ற தன்மை தற்பொழுது எந்த இடத்திலும் இல்லை. இற்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் மாபெரும் வெற்றிவிழா எந்த இனத்திற்கும் மன வேதனையை ஏற்படுத்தாத விதத்தில் கொண்டாடப்பட்டது.
ஆடிவேல் விழா நடைபெறுகின்ற போது சிங்கள மக்கள் பெரும் விருப்பத்துடன் அதில் கலந்து கொண்டனர். சிங்கள பெளத்த மக்கள் சம்புத்த ஜயந்தியை கொண்டாடுகின்ற போது வடக்கு வாழ் மக்களும் அதில் கலந்து கொள்கின்றனர். அனைத்து இன மக்களும் வாழ்கின்ற கொழும்பில் வெசாக் பண்டிகையை கொண்டாடுகின்ற போது சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் எவ்வித வேறுபாடுகளுமின்றி அதில் கலந்து கொண்டனர்.
மக்கள் அந்தந்த இனங்களிடையே ஏற்படுத்திக்கொண்டிருக்கின்ற இந்த பிணைப்பை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவருடைய பொறுப்புமாகும்.
அப்படியின்றி பழைய புண்ணைக் கிளறிக்கொண்டு, கடந்த கால நினைவுகளை மீண்டும் மீண்டும் தோண்டிக் கிளறி இனங்களுக்கிடையே ஆத்திரத்தை ஏற்படுத்துவதனால் எந்தப் பயனும் கிட்டாது என்பதை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நான் தெரிவிக்கின்றேன். வாழ்கின்றபோது இனங்களுக்கிடையே ஏற்படுத்திக்கொண்டிருக்கின்ற அந்த உன்னதமான பிணைப்பை பாதுகாப்பது நாட்டின் சுதந்திரத்தையும் இந்த மாபெரும் வெற்றியையும் பாதுகாத்துக்கொள்வதற்கு இருக்கின்ற ஒரே வழியாகும்.
படைவீரர்களே மாலை நேரங்களில் குழந்தை குட்டிகளைத் தூக்கிக்கொண்டு காடுகளுக்குள் சென்று மரங்களுக்கடியில் மரணபயத்துடன் வாழ்ந்த மக்கள் இன்று தங்களுடைய சொந்த வீட்டில் சிரித்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்வதைப் பார்க்கும்போது எம் மனதில் மகிழ்ச்சி தோன்றுகிறது.
தற்கொலை, கடற்புலி படகுகள் சென்ற சமுத்திரத்தில் மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்கின்றபோது நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் பயிர்செய்கின்றபோது பயங்கரவாதிகள் அழித்த பாலங்கள், மதகுகள், புகையிரதப் பாதைகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் என்பவற்றை மீளக்கட்டியெழுப்புகின்றபோது கால்வாய்கள், வாய்க்கால்கள், குளங்கள், வாவிகள், அணைகள் என்பவை கட்டியெழுப்பப்படுகின்றபோது விகாரைகள், தேவாலயங்கள், கோவில்கள் கட்டப்பட்டு கீதங்கள், தேவாரங்கள், பிரார்த்தனை ஒலிகள் காதுகளுக்குக் கேட்கின்றபோது உங்களுடைய தியாகம் வீணாகவில்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள்.
சயனைட் வில்லையை கழுத்தில் கட்டிக்கொண்டு ரி-56 ரகத் துப்பாக்கியை ஏந்திக்கொண்டு இருந்த பிள்ளைகள் வெள்ளைச் சீருடையணிந்து பாடசாலைகளுக்குச் செல்கின்ற காட்சியைப் பார்க்கின்றபோது நீங்கள் செய்த தியாகம் வீணாகவில்லையென்பதை உங்களுடைய இதயத்திலிருந்து வருகின்ற வெற்றி உணர்வுகளினால் நிறைவடையும்.
தாய் நாட்டை சுதந்திரத்தின் மகிழ்ச்சியில் உயர்த்திவைப்பதற்கு தம்மை அர்ப்பணித்துக்கொண்ட அனைவருக்கும் இந்த நாட்டு மக்கள் அனைவருடைய பாராட்டும் உரித்தாகும். உங்களுடைய அர்ப்பணிப்பை எந்த சந்ததியும் இதய பூர்வமாக மறந்துவிடாது என்பதையும், நீங்கள் என்றும் எம் நினைவில் நிலைத்து நிற்பீர்கள் என்பதையும் நான் ஞாபகப்படுத்துகின்றேன் என்றும் ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்தார்.
»»  (மேலும்)