8/31/2011

தீக்குளித்து இறந்த சிறுவனை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டு டிராங்ட்ரூவிற்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக திபெத் சிறுவன் ஒருவனை தற்கொலை செய்ய தூண்டியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் சக திபெத் துறவி ஒருவருக்கு சீனாவில் திபெத் பகுதி உள்ளூர் நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
சீனாவின் சுயாட்சி மாகாணமாக திபெத் இருந்து வருகிறது. திபெத்தின் விடுதலைக்காக திபெத் பெளத்த துறவிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் திபெத்தின் பூங்ஸ்டோங் மாகாணத்தில் சீனாவிற்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது 16 வயது திபெத் சிறுவன் ஒருவன் தீக்குளித்து இறந்தார்.
இது தற்கொலை என கூறப்பட்டு சீன அரசு எடுத்த நடவடிக்கையின் பேரில், சிறுவனை தற்கொலைக்கு தூண்டியதாக திபெத்தின் அபா மாகாணத்தைச் சேர்ந்த கீர்டி பெளத்த மட துறவி டிராங்ட்ரூ (46) என்பவரை கைது செய்தது. இவர் மீது திபெத்தின் தென்மேற்கு மாகாணமான சிச்சூவாங் நகர நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்க சிறுவனை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டு டிராங்ட்ரூவிற்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சொரின்டென்சிங், டெங்சூம் ஆகிய இருவர் மீது இன்று விசாரணை நடக்கிறது. திபெத் வரலாற்றில் முதல் முறையாக பெளத்த துறவிக்கு சீனா சிறை தண்டனை விதித்துள்ளதாக பி. டி. ஐ. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து டிராங்கட்ரூ கூறுகையில், நான் குற்றவாளி தான், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விரும்பவில்லை என்றார்.
»»  (மேலும்)

முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்குத் தண்டனை இடைநிறுத்தம் ஆயுள் தண்டனையாக குறைக்க தமிழக சட்ட சபையில் ஏகமனதான தீர்மானம்

முன்னாள் இந்திய பிரதமர் ரஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை 8 வாரங்களுக்கு இடைநிறுத்தி வைக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதேவேளை இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று தமிழகச் சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரை எட்டு வாரங்களுக்குத் தூக்கிலிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், தூக்குத் தண்டனையை 8 வாரங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர். மேலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆணை அனுப்பி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டனர்.
டெல்லியிலிருந்து பிரபல வக்கீல்கள் ராம்ஜேத்மலானி, மோஹித் செளத்ரி, காலின் கோன்சாலின் ஆகியோர் வழக்கில் ஆஜராகினர்.
மூவரின் வக்கீல்களான துரைசாமி, சந்திரசேகர் ஆகியோரும் அவர்களுடன் ஆஜராகின்றனர். ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வைகோ, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வக்கீல்கள் ஆஜராகினர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் குழு அதை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்து 8 வார இடைக்காலத் தடையை அறிவித்தது. உற்சாக வெள்ளத்தில் ஸ்தம்பித்தது உயர் நீதிமன்றம்.
இதைக் கேட்டதும் வக்கீல்கள் உற்சாகக் குரல் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் உயர் நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்த வரலாறு காணாத மிகப் பெரிய வக்கீல்கள் குழு, தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் கூட்டமும் பூரிப்பில் மூழ்கியது. அனைவரும் பரஸ்பரம் மகிழ்ச்சி தெரிவித்து முழக்கமிட்டதால் உயர் நீதிமன்றமே ஸ்தம்பித்துப்போனது.
தமிழகம் முழுவதும் கொண்டாட்டம் தூக்குத் தண்டனை 8 வாரங்களுககு நிறுத்தி வைக்கப்பட்டமை தமிழகம் முழுவதும் காட்டுத் தீ போல பரவியது. இதையடுத்து ஆங்காங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சி முழக்கமிட்டும் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
பொதுமக்களுக்கும் இந்த உத்தரவு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. 21 வருடமாக சிறையில் கிட்டத்தட்ட ஆயுள் தண்டனையை அனுபவித்தவர்களுக்கு தூக்குத் தண்டனை என்பது இரண்டு தண்டனை கொடுப்பதற்குச் சமம்.
இது நியாயமற்றது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். இதேவேளை ரஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதா நேற்று தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக ஆமோதித்து நிறைவேற்றினர்.
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா நேற்று காலை சட்ட சபை கூடியதும் இந்தத் தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். பின்னர் அவர் பேசுகையில், மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படவுள்ளமை தமிழக மக்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. மக்கள், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புக்கள் இந்தத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
எனவே, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு குடியரசுத் தலைவரை இந்த சபை கேட்டுக் கொள்கிறது என்றார்.
இதையடுத்து அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் ஒருமித்த குரலில் தீர்மானத்தை ஆதரித்து அதை நிறைவேற்றினர்.
இந்தத் தீர்மானத்தை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் இந்த தீர்மானத்தை ஏற்றால் 3 பேரின் தூக்குத் தண்டனையும் இரத்தாகும் வாய்ப்புள்ளது.
முன்னதாக நேற்று முன்தினம் சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, மூவரையும் காப்பாற்றும் அதிகாரம் தனக்கு இல்லை என்று கூறியிருந்தார். மேலும் குடியரசுத் தலைவர்தான் அவர்களைக் காப்பாற்ற முடியும் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில், தற்போது அதிரடியாக அவர் நிறைவேற்றியுள்ள தீர்மானம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மூவரின் விடுதலைக்காக கடுமையாக போராடி வருவோருக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
»»  (மேலும்)

8/30/2011

பெருநாளை கொண்டாடும் அனைத்து சகோதரர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.கி.மா முதலமைச்சர் சந்திரகாந்தன்

  30நாட்கள் உடலையும் ஆண்மாவையும் தூய்மைப்படுத்தும் புனித நோன்பு நோற்ற பின் கொண்டாடப்படும் இப்பண்டிகையானது பல சிறப்பு மிக்கதும் மானிட ஒழுக்கவியலுக்கான தத்துவத்தை தாங்கிய ஓர் சிறப்பு மிக்க பண்டிகையாகும். இப்பண்டிகையானது எடுத்தியங்கும் வாழ்வியல் நெறிக்கான தத்துவங்கள் இஸ்லாமிய சகோதரர்களுக்கு மாத்திரமின்றி உலகின் அனைத்து மாந்தரும் ஒழுக வேண்டிய தத்துவத்தை தாங்கி நிற்கின்றது.
நோன்பு எனும் புனிதமான கடமை மனிதனின் இச்சைகள் தவறான எண்ணங்கள் போன்றவற்றில் இருந்து மனித ஆண்மைவை பாதுகாப்பதுடன் மனிதர்களை மனிதன் சமமாக மதிக்கும் இறைவன்முன் அனைவரும் சமமே என்ற அரும் தத்துவத்தை சொல்கின்றது. அதே நேரம் தான் சம்பாதிக்கும் செல்வத்தையும் தூய்மைப்படுத்தி குறிப்பிட்ட அளவு பிறருக்கு தானம் செய்து சமூகரீதியான ஏற்றத்தாழ்வையும் அழிக்கின்றது.
இவ்வாறான அரும் தத்துவம் தாங்கிய நோன்பும் அதனுடன் இனைந்த பண்டிகையும் அது இயம்பும் வழிகாட்டலும் தத்துவமும் ஏனைய 11மாதங்களிலும் நடைமுறைப்படுத்தப்படுமானால் ஏற்றத்தாழ்வற்ற, குரோதமற்ற, பிறரின் உரிமை, பொருள்களை மதிக்கின்ற ஓர் உன்னத சமூகத்தை பெறலாம். எமது நாட்டின் நெருக்கடியான காலகட்டம் மறைந்து சகோதரத்துவம் இறுக்கமடையும் காலப்பகுதியில் அச்சமற்ற சூழ்நிலையில் கொண்டாடப்படும் இப் பெருநாள் பண்டிகையானது அதன் தத்துவங்களுக்கும் நீதிகளுக்கும் ஏற்ப அனுஸ்டிக்கப்படுமானால் இஸ்லாமிய சமூகம் மாத்திரமின்றி முழு நாடும் அன்பும் சமாதானமும் நிறைந்த தேசமாக மாறும் என்பதில் ஐயமில்லை. மீண்டும் இச்சிறப்பு மிக்க தினத்தில் இப் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.
»»  (மேலும்)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தலமையில் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

  திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (29.08.2011) பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தலமையில் திருகோணமலை கச்சேரியில் இடம் பெற்றது. இக் கூட்டத்திற்கு கிழக்கு மாகாண முதலமைச்சசர் சிவநேசதுரை சந்திரகாந்தன்,  பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே மற்றும் குணவர்த்தன மற்றும்  , கிழக்கு மாகாண ஆளுனர் மொகான் விஜேவிக்கிரம, கிழக்கு மாகாணசபை அமைச்சர்கள், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் திணைக்கள தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு பொறுப்பதிகாரிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

»»  (மேலும்)

8/29/2011

ஹசாரேயின் 12 நாள் போராட்டத்திற்கு வெற்றி: பாராளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றியது அரசு

பலமான லோக்பால் மசோதா வேண்டும் என வலியுறுத்தி, தொடர்ந்து 12 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த அன்னா ஹசாரேக்கு, வெற்றி கிடைத்துள்ளது. லோக்பால் மசோதா தொடர்பான அவரது கோரிக்கைகள் நேற்று முன்தினம் பாராளுமன்றின் இரு சபைகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து ஹசாரே நேற்று காலை தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
பலமான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கும் அன்னா ஹசாரே, மத்திய அரசுக்கு மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார். இது குறித்து நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிக்கை அளித்தபின் விவாதம் நடத்துவது என, மத்திய அரசு முடிவெடுத்தது.
இதை, பா.ஜ. ஏற்றுக் கொண்டதையடுத்து பாராளுமன்றத்தின் சபைகளிலும், பலமான லோக்பால் விவகாரம் குறித்து, நேற்று அனல் பறக்கும் விவாதம் நடந்தது. பெரும்பாலான கட்சிகள், பலமான லோக்பால் மசோதா, பாராளுமன்றில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தின. ஹசாரேயின் கோரிக்கைகளுக்கும் ஆதரவு தெரிவித்தன.
மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பா.ஜ.மூத்த தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான அருண் ஜெட்லியுடன் நேற்று முன்தினம் அவசர ஆலோசனை நடத்தினார். பார்லிமென்டில் நடைபெறும் விவாதத்தின் இறுதியில் தீர்மானம் நிறைவேற்றுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. இது குறித்த தகவல், ஹசாரே தரப்புக்கும் தெரிவிக்கப்பட்டது.
தீர்மானத்தை வாசித்த, நிதி அமைச்சர் பிரணாப் பேசியதாவது: ஹசாரேயின் மூன்று கோரிக்கைகளை இந்த சபை ஏற்கிறது. பலமான சட்ட நடைமுறைகளை கொண்டு வந்தாலும், ஊழலை அடியோடு ஒழிக்க முடியாது. 40 ஆண்டுகளாக, லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.
இதில் அரசுக்கும் பொறுப்பு உள்ளது. தற்போதைய நடைமுறையில் மாற்றம் தேவைப்படுகிறது. தற்போது நிறைவேற்றப்படும் இந்த தீர்மானம், அடுத்த கட்டமாக பாராளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.
இதைத் தொடர்ந்து ஹசாரேயின் மூன்று அம்ச கோரிக்கைகளை ஏற்பது குறித்த தீர்மானம் இரு சபைகளிலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. குரல் வாக்கெடுப்பு இல்லாமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது உறுப்பினர்கள் மேசையைத் தட்டி ஆரவாரம் செய்தனர். இந்த தீர்மானம் குறித்த விவரம், லோக்சபா சபாநாயகர் மீரா குமார் மூலம், அன்னா ஹசாரேயிடம் தெரிவிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
பலமான லோக்பால் மசோதாவுக்காக தொடர்ந்து 12 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த ஹசாரேயின் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்தது. மசோதா தொடர்பாக அவர் முன்வைத்த கோரிக்கைகள் பாராளுமன்றில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டதன் மூலம் ஊழலுக்கு எதிரான அவரது போராட்டத்திற்கு பலன் கிடைத்துள்ளது.

»»  (மேலும்)

ஆட்சி மாற்றத்திற்கு கடாபி தயார்; சிர்த் நகரை நோக்கி கிளர்ச்சிப்படை மிக மோசமான நிலையில் திரிபோலி

ஆட்சி மாற்றம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த லிபிய ஜனாதிபதி முஅம்மர் கடாபி தயாராக உள்ளதாக அவரது பேச்சாளர் ஒருவர் அறிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க கடாபியின் மகன் சாதி தயாராக உள்ளதாகவும் அந்த பேச்சாளர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
லிபியாவின் பெரும்பகுதியை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ள நிலையில் முஅம்மர் கடாபி தொடர்ந்து லிபியாவிலேயே உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் முஅம்மர் கடாபி தொடர்ந்து லிபியாவிலேயே இருப்பதகாவும், அவர் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் கடாபி அரசின் பேச்சாளர் மூஸா இப்ராஹிம் ஏ.பி. செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை லிபிய தலைநகர் திரிபோலியில் அமைதி திரும்பியுள்ள நிலையில் நகரின் நிலவரம் மிகவும் மோசமாக உள்ளது. குடிநீர், மின்சாரம், உணவு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.
நகரின் பல பகுதிகளிலும், மருத்துவமனைகளிலும் பிணங்கள் குவிந்து கிடப்பதால் சுகாதாரம் பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளது.
கடாபியின் மமகள் ஆயிஷா, மகன்கள் சாடி மற்றும் ஹானிபல் ஆகியோரின் வீடுகளை எதிர்ப்பாளர்கள் கைப்பற்றினர். கடாபியின் குடியிருப்பு வளாகமான பாப் அல் அசீசியாவில் இருந்த சுரங்கப் பாதை ஒன்றின் மூலம் திரிபோலிக்கு அடியில் பல திசைகளுக்குச் செல்லும் ரகசிய சுரங்கப் பாதைகளை எதிர்ப்பாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இரண்டு பேர் செல்லக் கூடிய அகலம் உடைய இந்த சுங்கப் பாதைகளில் கோல்ப் மைதானத்தில் பயன்படுத்தப்படும் கார்கள் இயக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் அந்தக் கார்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. கடாபி ஆதரவாளர்கள் வசம் இருந்த லிபியா, துனிஷியா எல்லை அருகில் உள்ள பகுதி ஒன்றை எதிர்ப்பார்ப்பாளர்கள் நேற்று முன்தினம் கைப்பற்றினர். அதேநேரம், தலைநகர் திரிபோலியின் தென்பகுதியில் உள்ள புறநகர்ப் பகுதியிலும், அவர்கள் கடாபி ஆதரவாளர்களை முறியடித்தனர்.
திரிபோலியில் சண்டை ஓய்ந்து விட்டதால், பெங்காசியில் இயங்கி வரும், லிபியாவின் தேசிய இடைக்கால கவுன்சில் தனது நிர்வாகத்தை திரிபோலிக்கு மாற்ற முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. ஆனால் திரிபோலியின் பெரும்பாலான பகுதிகளில், நிலவரம் மிக மோசமாக உள்ளது.
டாக்டர்களும், தாதிகளும் பல மருத்துவமனைகளைக் கைவிட்டு விட்டுப் போய்விட்டதால், அவற்றில் உள்ள பிணங்கள் அழுகி, துர்நாற்றம் வீசத் துவங்கியுள்ளது. அதேபோல் நகரில் இரு தரப்பினருக்கும் சண்டை நடந்த பகுதிகளில் பல பிணங்கள் கிடக்கின்றன. அவை இன்னும் அகற்றப்படாததால் நகரில் சுகாதாரம் மோசமாகியுள்ளது.
குடிநீர், உணவு, மின்சாரம், எரிபொருள், எரிவாயு, மருந்துப் பொருட்கள் ஆகிய அத்தியாவசியத் தேவைகளுக்குப் பெரும் பற்றாக்குறை நிலவுகிறது. தேசிய மாற்று கவுன்சில் செய்தித் தொடர்பாளர், மமூத் ஷம்மாம் கூறுகையில், ‘விரைவில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் மக்களுக்குக் கிடைக்க, வழிவகை செய்யப்படும் என்றார்.
திரிபோலி மக்களுக்கு பல்வேறு வகைகளிலும் உலக நாடுகள் உதவ முன்வர வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடாபி எங்கிருக்கிறார் என்பது இன்னும் தெரியவராத நிலையில், அவரைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ‘எங்களைப் பொறுத்தவரை அவர் கதை முடிந்து விட்டது. அவர் ஒவ்வொரு இடமாக ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார். அவரைப் பின் தொடர்ந்து பிடித்துவிடுவோம் என்றாலும், அவர் மற்றும் அவரது மகன்களின் கைது வரை, எல்லாக் காரியங் களையும் தள்ளிப் போட முடியாது’ என ஷம்மாம் தெரிவித்தார்.
திரிபோலி தற்போது அமைதிக்குத் திரும்பியுள்ள நிலையில், கடாபியின் சொந்த ஊரான சிசாத் நகரில், கடாபி ஆதரவாளர்களுடன் எதிர்ப்பாளர்கள் கடும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்காக இடைக்கால அரசின் சார்பில் சிசாத் நகரின் பழங்குடியினத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் அவை தோல்வி அடைந்தன.
இந்நிலையில் லிபிய - துனிசியா எல்லையில் ரஸ்ஜிடீர் என்ற இடத்திலுள்ள சோதனைச் சாவடியை கைப்பற்றிவிட்டதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இதை துனிசிய அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். கிளர்ச்சியாளர்கள் 100 க்கும் மேற்பட்டோர் சோதனைச்சாவடிக்கு கொடிகளுடன் வந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே கிளர்ச்சியாளர்கள் கையில் லிபியா வீழ்ந்துவிடும் என்பதை அறிந்து கடாபியும் அவரது மகன்களும் 6 கவச வாகனங்களில் அல்ஜீரியாவை நோக்கிச் சென்றதாக எகிப்து செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கடாபியும் அவரது மகன்களும் சென்ற வாகனங்களை அரசு ஆதரவுப்படை பாதுகாப்பாக அழைத்துச் சென்றதாகவும் கிளர்ச்சியாளர்கள் இந்தத் தகவலைத் தெரிவித்ததாகவும் அந்தச் செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால் இதை அல்ஜீரியா உறுதி செய்யவி ல்லை. இது குறித்து அல்ஜிரிய அதிகாரிகள் கூறுகையில், லிபியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானதில் இருந்து அந்த நாட்டு விவகாரத்தில் நாங்கள் தலையிடவில்லை. நடுநிலை வகித்து வருகிறோம் என தெரிவித் துள்ளனர்.
லிபிய தலைநகர் திரிபோலியை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய பின்னர் அல்ஜீரியாவில் இருந்து இப்போது தான் முதன் முதலாக கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

»»  (மேலும்)

கிழக்குப் பல்கலை வேந்தராக பேராசிரியை யோகா நியமனம்

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வேந்தராக பேராசிரியை யோகா இராசநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார். உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை பல்கலைக்கழக வரலாற்றில் மிகவும் மதிப்பு மிக்க உயர் பதவிகளில் ஒன்றாக கருதப்படும் வேந்தர் பதவியினைப் பெறுகின்ற முதல் தமிழ் பெண்மணி இவர் ஆவார்.
நீண்ட காலம் பல்கலைக் கழக உயர் கல்விப் பணியில் ஈடுபட்டுவரும் இவர் கொழும்பு பல்கலைக் கழகத்தில் கலைத் துறை பீடாதிபதியாகவும் பதில் உபவேந்தராகவும் பல தடவை பணியாற்றியு ள்ளார்.
இங்கிலாந்தின் கேம்பிறிஜ் பல்கலைக் கழகத்தில் கலாநிதிப் பட்டத் தைப் பெற்றுக்கொண்ட இவர், உள்நாட்டி லும், வெளிநாட்டிலும் பிரபலமான விருதுகள் பலவற்றைப் பெற்றுக்கொண்டவர்.
இவை தவிர தேசிய சர்வதேச ரீதியில் செயற்படும் அமைப்புக்களில் அங்கத்தவராக செயற்பட்டுள்ளார். இவர் உயர் கல்விப் பணியில் அடைந்த அளவிடமுடியாத வெற்றிகளைக் கெளரவித்து கொழும்புப் பல்கலைக் கழகம் 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இவருக்கு இலக்கிய கலாநிதிப் பட்டமளித்து கெளரவித்தது.
கொழும்பிலுள்ள சொண்டா (Zonta) அமைப்பானது கல்வித்துறை மேம்பாட் டுக்காக இவர் ஆற்றிய பணியினைக் கெளரவித்து “சொண்டா பெண்கள் சாதனையாளர் விருதினை” 2004ம் ஆண்டு வழங்கி கெளரவித்தமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை விடுவிக்க சட்ட நடவடிக்கை சாதாரண சட்டத்தின் கீழ் விசாரிக்கலாம் - அமைச்சர் வாசுதேவ சட்டமா அதிபருடன் பேசத் தீர்மானம் - நீதி அமைச்சின் செயலர்

அவசரகாலச் சட்டம் முற்றாக நீக்கப்பட்டிருக்கிறது. இந் நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் நிலை என்ன? இது தொடர்பாக அமைச்சர்கள், சட்ட வல்லுனர்களுடன் நாம் கலந்துரையாடினோம்.
அவர்களுடைய கருத்துக்கள் வருமாறு: அவசரகால விதிமுறைகள் அகற்றப்பட்ட போதிலும் பயங்கரவாத செயற்பாடுகளின் கீழ் கைது செய்யப் பட்டுள்ள சந்தேக நபர்கள் விடுதலையா வதற்கு சட்டத்தில் இடமில்லை என்று சட்ட அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் முறையான சான்றுகளுடன் கைது செய் யப்பட்டவர்களும், கிரிமினல் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களும் சாதாரண சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படும் சாத்தியம் இருப்பதாக பெரும்பாலான சட்ட அறி ஞர்கள் கருதுகின்றனர்.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் (ஜிஹிதி) கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் தடுப்புக் காவலிலேயே வைக் கப்படுவார்கள். அவர்கள் மீது தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா கூறு கிறார்.
அவசரகால சட்டத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக அரசாங்கம் புதிய சட்ட விதியொன்றை கொண்டு வருமா என்று கேட்டபோது அவ்வாறான ஒரு நடவடிக்கை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று அமைச்சர் பதிலளித்தார்.
அவசரகால சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட மாட்டாது என்பதை வரவேற்ற அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இந்த நடவடிக்கை ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.
அவசர கால சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலையில் அந்த சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று தான் கருதுவதாகவும் அவர் மேலும் கூறினார்.
எனினும் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் சாதாரண சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.
அதேவேளை அரசியலமைப்பு விற்பன்ன ரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஜயதிஸ்ஸ டி கொஸ்தா கருத்துக் கூறுகை யில்; அவசர கால சட்டம் பல்வேறு வழி களில் பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு உதவியுள்ளது. தற்போது பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதால் அதனை நீக்கியது சரியான வழியில் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை எனக் குறிப்பிடுகிறார்.
கிரிமினல் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு நாட்டின் சாதாரண சட்டம் போதுமானதாகும் என்று கூறினார்.
விடுதலைப் புலிகள் இயக்கம் தற்போது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு நிதி உதவி வழங்குபவர்களும் உதவுபவர்களும் சாதாரண சட்டத்தின் கீழேயே விசாரிக்கப்படலாம் என்று அவர் மேலும் கூறினார்.
அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தொடர்பாக சட்ட மா அதிபருடன் பேசப்போவதாக நீதிமன்றம் சட்ட சீர்திருத்த அமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் கூறியுள்ளார்.
சட்டமா அதிபருடன் இவ் விடயம் தொடர்பாக கலந்தாலோசித்த பின்னர் தமது கருத்தை தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
»»  (மேலும்)

விசேட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம், இன்று மட்டக்களப்பில்

கடந்த ஒரு சில வாரங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் காரணமாக மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் அமைதியின்மை காணப்பட்டது.
இது தொடர்பில் மக்கள் மத்தியில் ஓர் தெளிவுபடுத்தலை ஏற்படுத்தும் முகமாக விசேட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று 28.08.2011 மட்டக்களப்பு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த முதலமைச்சர் சந்திரகாந்தன், கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் இயல்பு நிலை பாதிக்கப்பட வேண்டும் என்கின்ற எண்ணம் அரசிடம் ஒருபோதும் இல்லை. ஆனால் வெளிநாடுகளில் இருந்து கொண்டு உண்மைக்கு புறம்பாக செய்திகளை மக்களுக்கு இணையத்தளங்களின் ஊடாக வெளியிடுகின்ற ஒருசில மேலாதிக்கம் கொண்ட அவ்வகுப்பினருக்கு தொடர்ந்தும் கிழக்கு மாகாணத்தின் இயல்பு நிலை, கிழக்கு மக்களின் அரசியல் தலைமைத்துவம், மாகாணத்தின் அபிவிருத்தி என்பன சீர்குலைந்து பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே அவர்களது எதிர்பார்ப்பு. அப்போதுதான் அவர்கள் அங்கிருந்துகொண்டே தங்களது மாறுபட்ட அரசியல் வியாபாரங்களை அரங்கேற்ற முடியும்.
அதே நேரம் இவ்வாறான ஒரு சில சம்பவங்கள் இடம்பெற்றிருப்பது என்பதனை மறுப்பதற்கில்லை. இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்டவர்களையும், இதற்கான மூல கர்த்தாக்களையும் அடையாளம் கண்டு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய பொறுப்பு பொலிசாரையே சார்ந்தது. மாறாக உத்தியோக பூர்வமற்ற இணையத்தளங்கள் இளைஞர்களை மீண்டும் ஒரு முறை உசுப்பேற்றி அவர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு தொடர்ந்தும் கொலைக்களம் அனுப்புவதற்கான ஆயத்தங்களை அவர்கள் மேற்கொண்டு விடுவார்களோ? என்ற அச்சம் எம் மத்தியில் நிலவுகின்றது.
இது தொடர்பில் குறிப்பாக கிழக்கு வாழ் இளைஞர் யுவதிகள் மற்றும் பொது மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். கடந்த முப்பது ஆண்டு காலமாக இழந்த இழப்புக்கள் அனைத்தையும் ஈடு செய்ய வேண்டிய பொறுப்பு எம்மிடமே இருக்கின்றது. எனவே இது தொடர்பில் ஆழ்ந்து சிந்தித்து எமது மாகாணத்தின் ஒட்டு மொத்த இருப்பையும் பேண வேண்டிய பொறுப்பு எம்மையே சார்ந்தது. ஆதலால் எங்கள் முன் எழுகின்ற ஒரு சில சவால்களை சிந்தித்து நிதானமாக கையாள வேண்டிய பொறுப்பும் எமக்கே உரியது. வன்முறைகள் அற்ற நியாயமான எங்களது எதிர்பார்ப்புக்களின் ஊடாக எமது மாகாணம் அடைய வேண்டிய இல்க்குகளை எட்டுவதற்கு மேற்குறித்த ஒரு சில கசப்பான சம்பவங்களை தடைக்கற்களாக நாங்கள் மாற்றி விடாமல் அவற்றையெல்லாம் சட்ட வரையறைக்குள் நின்று நிதானமான தூரநோக்கு சிந்தனையுடன் கையாண்டு எதிர்வரும் காலங்களில் எமது மாகாணத்தை கட்டியெழுப்ப நாம் முன்னின்று செயற்பட வேண்டும்.
தொடர்ந்தும் இனி வரும் காலங்களில் இது போன்ற அசம்பாவிதங்கள் இடம்பெறா வண்ணம் சமூக மட்டத் தலைவர்கள், பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் விழிப்பாக இருப்பதுடன் இது தொடர்பான பூர்வாங்க சட்ட நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு தொடர்ந்தும் கிழக்கு மாகாணத்தின் ஜனநாயகமும் அமைதியுடன் கூடிய இயல்பு வாழ்வும் தொடர்ந்தும்  மிளிர்வதற்கு அனைவரும் இச்சந்தர்ப்பத்தில் திடசங்கர்ப்பம் பூண வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
இவ் விசேட கூட்டத்தில் கிழக்கு மாகாண சிரேஸ்ட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜகத் அபே குணவர்த்தன, பாராளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மதப் பெரியார்கள், இராணுவ பாதுகாப்பு உயர் அதிகாரிகள், பொது அமைப்புக்கள் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.


»»  (மேலும்)

8/28/2011

யாழ்ப்பாண கூத்து டில்லியில் கலைந்த கதை.

புதுடில்லிக்க பேசச்சென்ற தமிழ் கட்சிகள் இனப்பிரச்சனைக்கான ஒருமித்த ஒரு தீர்வினை கையளிக்க முடியாமல் நாடு திரும்பியுள்ளன. சுத்துமாத்துக்கள், குழிபறிப்புக்கள், மட்டுமன்றி அடிதடிகள் வரை டில்லி மாநாடு அல்லோல கல்லோலப்பட்டுள்ளது. வழமைபோல தமிழ் தலைமைகளின் பதவிவெறியிலும் விட்டுக்கொடுப்பின்மையினாலும் இன்னுமொரு முறை தமிழ் மக்களின் வாழ்வில் மண் அள்ளி போடப்பட்டுள்ளது.
கடந்த தேர்தல்களில் தமது தோல்விகளை மறைக்கவும் ஆசனங்களைக் காப்பாற்றிக்கொள்ளவும் ஒற்றுமைவேசம் போட்ட த.வி.கூட்டணி, புளட் போன்றவை என்றுமே திருந்தாத தமிழ் கூட்டமைப்புடன் கைகோர்த்து கொண்டன. இதற்கு தமிழர் ஒற்றுமை, மக்கள் நலம் போன்ற முலாம்களும் ப+சப்பட்டன. பரஷ்பர முதுகுசொறிதலுடன் சங்கரி, சித்தார்தன் போன்றவர்கள் புலிக்கூட்டமைப்புக்குள் குந்திக்கொண்டனர்.
முன்னொரு காலத்தில் தந்தை செல்வாவின் கீழ் அணிதிரண்டது போல் மீண்டும் தமிழர்கள் ஓரணி திரளவேண்டும் என்று உள்ளுராட்சிசபை தேர்தல்களில் முழங்கினார் ஆனந்தசங்கரி. இந்த வேசங்கள் எல்லாம் தமிழ் தலைமைகளின் போலி வேசங்கள் என்று புரிந்துகொள்ளாத மக்கள் இவர்கள் எல்லாம் ஒன்றாகி ஏதோ ஒரு அற்புத வாழ்வை மீட்டுத்தருவார்கள் என்று அப்பாவித்தனமாக நம்பியிருந்தனர். போதாகுறைக்கு இது தேர்தல் கூட்டு அல்ல தமிழர்களின் விடியலுக்கான அத்திவாரம் என்று ப+ச்சூடினார் சித்தார்த்தன். ஆனால் உள்ளுராட்சி தேர்தல் முடிந்து சூடு ஆறமுன்னமே சுடுபாடு இல்லாத குறையாக டில்லி மாநாடு அடிதடியுடன் முடிவுற்றது.
ஜனாதிபதி ராஜபக்ச மட்டுமல்ல இந்திய மத்திய அரசு கூட எல்லா தமிழ் கட்சிகளும் ஒற்றுமையாக ஒரு தீர்வை முன்வையுங்கள் என்று யுத்தம் முடிந்த கையோடு விட்ட அறிக்கைகளை காற்றோடு கலந்ததுதான் மிச்சம். சுவிஷ் மாநாடு, தமிழரங்கம் என்று காலமும் வீணாகியது. இந்தியாவும் “எங்களால் ஏதும் செய்யமுடியாது நீங்கள் எல்லா தமிழ் கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து ஒருமித்த முடிவுக்கு வாருங்கள். என்ன வேண்டும் என்பதை ஒரே குரலில் அறிவியுங்கள் அதை வைத்து கொண்டுதான் நாமும் இலங்கையரசிடம் பேசமுடியும். அதைத்தவிர இந்தியாவில் ஏதும் செய்ய முடியாது” என்பதை தெட்டத் தெளிவாக பலமுறை நிருபாமாராவ் ஊடாக தெரிவித்து விட்டது.
இருந்தாலும் தமிழ் நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றமும் ஜெயலலிதாவின் இலங்கைமீதான பொருளாதாரத் தடை போன்ற தடாலடி அறிக்கைகளும் இந்தியாவை மீண்டும் தளராத வேதாளமாய் டில்லிமநாட்டை கூட்டச்செய்தது.
23, 24 ம் திகதிகளில் இடம்பெற்ற  மாநாட்டில் முதல்நாள் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் உடனடி வாழ்வாதார பிரச்சனைகள் குறித்து சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அகதியின் மீள்குடியேற்றம், இராணுவ முகாம்களை அகற்றுதல் என்பதாக வழமையான தீhமானங்கள் எடுக்கப்பட்டு ஊடகங்களுக்கும் அறிவிக்கப்பட்டது.
இரண்டாம் நாள்தான் வந்தது சோதனை டில்லிக்கு. அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்களுக்கென  இரண்டாம் நாள் ஒதுக்கப்பட்டதுதான் அதற்கு காரணம். தமது கொள்கை என்ன? கோட்பாடுகள் என்ன? என்பது பற்றி என்றுமே அக்கறைப்படாத தமிழ் தலைமைகள் எப்படி அரசியல் தீர்வு பற்றி ஒருமித்து முடிவு எடுக்கமுடியும். தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழரசுக்கட்சி, தமிழ் காங்கிரஷ், ஈ.பிஆர்.எல்.எவ் நாபா அணி, சுரேஷ் அணி, ரெலோ (செல்வம்அணி), ஈரோஷ், இவ்வளவும் போதாதென்று ஈ.என்.டி.எல்.எவ். இவர்கள் எல்லோரும் சேர்ந்து அரசியல் தீர்வில் ஒருமிப்பது என்பது ஒப்பேறுகின்ற காரியமா இது?
பலபத்து மாநிலங்களையும், கோடானுகோடி மாந்தர்களையும் கட்டியாளும் டில்லியால் இந்த தமிழ் தலைவர்களை ஒன்றாக்க முடியவில்லை என்பதையிட்டு ஒவ்வொரு யாழ்ப்பாணத்தானும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.
இரண்டாம் நாள் அரங்கு தொடங்கியது. மாநாட்டில் உள்ளவர்களிடம் பேசுவதைவிட ரெலிபோன்களுடனேயே பலரும் கிசுகிசுத்துக்கெதாண்டிருந்தது. ஒற்றையாட்சி,  சம~;டி, ஐச்கிய இலங்கை, தன்னாட்சி அதிகாரம், வட-கிழக்கு இணைந்த தாயகம், சுயநிர்ணயம், தேசியம்................ என்று வெற்று வி~யங்களிலும், விதண்டாவாதங்களிலும் பொழுது கழிந்தது. மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் நாச்சியப்பனே நம்பிக்கையை இழந்துவிட்டார்.
எப்படியாவது ஒரு கூட்டு அறிக்கையை அன்றைய பொழுதுக்குள் வெளியிட்டுவிட வேண்டும் என்கின்ற அவரின் ஆசைபற்றி யாருக்கு கவலை. கஜேந்திர குமார் பொன்னம்பலம் தன்னாட்சி அதிகாரம் கொண்ட தாயகம் என்று ஒற்றைக்காலில் நின்றார். சங்கரியோ இந்திய மாநில சம~;டி ஒன்றே சாத்தியமானதும் பொருத்தமானதும் என்று விடாப்பிடியாக நின்றபோது விவாதம் சூடேறியது. வெளிநாட்டு ரெலிபோன் தொடர்புகளுக்காக கூட்டமைப்பு முக்கியஷ்தர்கள் அடிக்கடி மாநாட்டு மண்டபத்துக்கு வெளியே சென்று வருவதற்காக விவாதங்கள் இடைநிறுத்தவும்பட்டன. இறுதியாக கஜேந்திரகுமாருக்கு வந்த வெளிநாட்டு ரெலிபோன்  “நீங்கள் தமிழீழத்தை கைவிட்டு விட வில்லையென்பதை வெளிநாட்டுத் தமிழர்கள் நம்பவேண்டும் என்றால் தன்னாட்சி அதிகாரம் கொண்ட தாயகம் என்கின்ற வார்த்தைகளை அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டேயாக வேண்டும்” என்பதை அழுத்தம் திருத்தமாக சொன்னது.  இப்படிக்கோருவது எல்லாநிலைமைகளையும் சீர்குலைத்துவிடும் என்றும் எம்மீதான இலங்கை இந்திய அரசுகளின்  சகலவிதமான நம்பிக்கைகளையும்  பாழடித்துவிடும் என்றும் விளக்கமாக சொல்ல முயன்றார் சங்கரி. ஆத்திரமுற்ற கஜேந்திரன் வெளிநாட்டில் இருந்துவந்த ரெலிபோன் கோளை சமாளிக்க முடியாமல் சுமந்திரனிடம் ரெலிபோனைக் கொடுத்தார். ரெலிபோனுடன் வெளியில் சென்ற சுமந்திரன் சில நிமிடங்கள் கழித்து உள்ளே வந்தார். வந்ததும் வராததுமாக சங்கரியினதும் மற்றய தலைமைகளினதும் கருத்துக்களை முற்றாக நிராகரித்து தன்னாட்சி அதிகாரம் கொண்ட தாயகம் எனும் வார்த்தையை விட்டுக்கொடுக்க முடியாது என்று முடிவாக அறிவித்தார். இதனால் கோபம்கொண்ட சங்கரி “வெளிநாட்டுத் தமிழர்களின் ஆட்டுக்கு ஆடுகின்ற நீயெல்லாம் ஒரு அப்புக்காத்தா” என்று பொரிந்து தள்ளினார். இதனால் கோபமுற்ற சுமந்திரன் கதிரை மேசையை ஒதுக்கித்தள்ளிவிட்டு சங்கரியை தாக்க முயன்றார். ஈ.என்.டி.எல்.எவ் ராஜன் தடுக்காவிட்டால் சங்கரியின் நிலைமை பரிதாபகரமாகவே முடிந்திருக்கும். விவாதமுறை, வார்த்தைப்பிரயோகம், பொறுமை, சகிப்புத்தன்மை...  போன்றவற்றில் எமது தலைமைகள் இன்னும் நிறையவே கற்றுக்கொள்ளவேண்டியுள்ளது. ஒற்றுமை ஒற்றுமை என்று சதா புலம்பிக்கொண்டிருக்கம் இவர்கள் எப்போதுதான் திருந்தப் போகிறார்கள்.?  இலங்கைவாழ் தமிழ் மக்களுக்காக ஒரு உருப்படியான தீர்வை முன்வைக்க முதுகெலும்பற்றவர்களுக்கு எமது மக்களை வழிநடத்த என்ன யோக்கியதை இருக்கிறது.?
கு.சாமித்தம்பி          
»»  (மேலும்)

8/27/2011

ராஜீவ் கொலை வழக்கு: தூக்கு தண்டனை தேதி குறிப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி தூக்கு தண்டனை விதிக்கப்படும் என்று வேலூர் மத்திய சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் அறிவுடைநம்பி தமிழோசையிடம் உறுதிப்படுத்தினார்.

1991 ஆம் ஆண்டு மே மாதம் ராஜிவ் காந்தி சென்னையை அடுத்த ஸ்ரீபெரம்பதூரில் விடுதலைப் புலி தற்கொலை குண்டுதாரியால் கொல்லப்பட்டார்.
இது குறித்த அதிகாரபூர்வ தகவல் தமக்கு அளிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதன் பின்னர், மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் கைதான முருகன், பேரறிவாளன், சாந்தன் மற்றும் நளினி ஆகிய நால்வருக்கும் இந்திய உச்சநீதிமன்றம் 1999 ஆம் ஆண்டு தூக்கு தண்டனையை உறுதி செய்தது.
பின்னர், காங்கிரஸ் தலைவரான ராஜிவ் காந்தியின் மனைவி சோனியாகாந்தியின் பரிந்துரையின் பேரில் நளினியின் கருணை மனு ஏற்கப்பட்டு அவரின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

20 ஆண்டுகளுக்கும் அதிக காலம் சிறையில்

நளினி மற்றும் முருகன் ஆகியோர் விசாரணையின் போது
நளினி மற்றும் முருகன் ஆகியோர் விசாரணையின் போது
20 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தை சிறையில் கழித்த இந்த மூவரையும் தூக்கிலிடக் கூடாது என்று மனித உரிமை அமைப்புக்களும், சில அரசியல் தலைவர்களும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இவர்களை தூக்கிலிட தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் கொலை வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டவர்கள் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் புகழேந்தி, இந்த விடயத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு தூக்கு தண்டனையை நிறுத்துவார் என்று அந்த மூவரும் நம்பியிருந்ததாகத் தெரிவித்தார்.
வெள்ளிக் கிழமையன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் நாள் குறித்து அந்த மூவருக்கும் முறைப்படி தெரிவிக்கப்பட்டதாகவும், அதன் பிறகு தான் அவர்களை சந்தித்த போது அம் மூவரும் நம்பிக்கையுடன் காணப்பட்டதாகவும் புகழேந்தி தமிழோசையிடம் தெரிவித்தார்.
அதேநேரம் தமிழக சட்டசபையில் இது தொடர்பாக ஒரு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வர புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எடுத்த முயற்சிகளுக்கும் பயன்கிட்டவில்லை. இது குறித்து டாக்டர் கிருஷ்ணசாமி சட்டசபையில் கூறிய கருத்துக்களும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்டது.
பிறகு தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி, இந்தப் விடயத்தை முதல்வர் ஜெயலலிதா அவையில் இருந்த சமயத்தில் மூன்று முறை தான் எழுப்ப முயன்றதாகவும், ஆனால் தனக்கு ஆதரவாக எந்த ஒரு உறுப்பினரும் குரல் கொடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
»»  (மேலும்)

உலக நாடுகள் பாராட்டு

அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டிருப்பதை அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா, பிரித்தானியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகள் வரவேற்றுள் ளன. இலங்கை அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம் சிறந்ததொரு தீர்மானம் என அந்த நாடுகள் தெரிவித்துள்ளன.
பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியடைந்திரு க்கும் நிலையில் அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டிருப்பதை அமெரிக்கா வரவேற்கிறது. இலங்கை மக்களின் வாழ்க்கை நிலையை சாதாரண நிலைக்குக் கொண்டுவருவதற்கான சிறந்த படிக்கல்லாக இது அமைந்துள்ளது என அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற நீண்டகால யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கும் நிலையில் அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டிருப்பதானது, அந்நாட்டு மக்களின் சாதாரண வாழ்க்கையை உறுதிப்படுத்துவதற்கும், தேசிய நல்லிணக்கத்துக்கும் முக்கியமானதாக அமையும் என அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது.
இந்த செயற்பாடானது இலங்கையின் ஜனநாயகத்தின் வெளிப்பாடாக அமைந்திருப்பதுடன், சிறந்த எதிர்காலத்துக்கான ஆரம்பமாக அமைந்துள்ளது என்றும் அமெரிக்க உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், இலங்கையில் அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டிருப்பதை வரவேற்றிருக்கும் மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நiட், இலங்கை அரசாங்கத்தின் இத்தீர்மானமானது உறுதியான, நேர்மையான தீர்மானம் என்று தெரிவித்துள்ளார்.
»»  (மேலும்)

மாணிக்கப்பிள்ளையார் ஆலய பூஜை வழிபாட்டில் முதல்வர் சந்திரகாந்தன்.

அம்பாறை மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் இன்று (26.08.2011) இடம்பெற்ற பூஜை வழிபாட்டில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டார்.
»»  (மேலும்)

மின்குமிழ்கள் பொருத்தும் வேலைகள் ஆரம்பம்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் வேண்டுகோளுக்கு அமைய மட்டக்களப்பு நகரின் பிரதான வீதியினை அழகு படுத்தும் செயற்த்திட்டத்தின் கீழ் தெரு மின்விளக்குகள் பொருத்தும் வேலை தற்போது ஆரம்பிக்கப்பட்டு நகரம் அழகாக காட்சி தருகின்றது.
வருகின்ற நாடகள் பண்டிகைக் காலங்களாக இருப்பதனால் மக்கள் கூட்டம் தெருக்களில் அமைதியாக காணப்படுவதன் காரணமாக தெருக்கள் இருள்சூழ்ந்து காணப்படுமாயின் மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கக்கூடும். எனவே இதனை கருத்திற் கொண்டு முதலமைச்சர் சந்திரகாந்தனின் வேண்டுதலின் பேரில் தற்போது மட்டக்களப்பிலிருந்து ஆரையம்பதி வரையுமான பிரதான வீதிகளில் மேற்படி தெருமின்சார விளக்குகள் பொருத்தும்பணி இடம் பெற்று வருகின்றது.

»»  (மேலும்)

8/26/2011

அவசரகால சட்டம் நீக்கம் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி அறிவிப்பு

 அவசரகாலச் சட்டம் நேற்று முழுமையாக நீக்கப்பட்டது. உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இதற்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இதற்கான அறிவிப்பை நேற்று பாராளுமன்றத்தில் விடுத்தார்.

நாட்டின் பாதுகாப்பு திருப்திகரமானதாக உள்ளதால் நாட்டை ஆட்சிசெய்வதற்கு அவசரகால சட்டம் அவசியமற்றது என்ற தீர்மானத்திற்கமையவே அவசரகால சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கான பிரேரணையை சபையில் முன்வைப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். பாராளுமன்றத்துக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவசரகால சட்டத்தை முற்றாக நீக்குவதற்கான பிரேரணையைச் சபையில் முன்வைத்து உரை நிகழ்த்தினார்.
ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும் பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டைப் பாதுகாத்து அபிவிருத்தியில் கட்டியெழுப் பவும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் இயல்பு வாழ்க்கையை உறுதி செய்வதற்கு அவசரகால சட்டம் மிகவும் பலமாக அமைந்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வரலாற்று முக்கியத்துவம் மிக்க தீர்மானமொன்றை வெளியிடுவதற்காக பாராளுமன்றத்திற்கு நேற்று வருகை தந்த ஜனாதிபதியை ஆளுங்கட்சியினர் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
ஜனாதிபதி சபையில் பிரவேசித்த போதும் சபையை விட்டு வெளியேறும் போதும் ஆளுங் கட்சியினர் தமது கரங்களைத் தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பாராளுமன்றம் நேற்று பிற்பகல் 1.00 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் கூடியது. சபை நடவடிக்கைகள் ஆரம்பமானதும் ஜனாதிபதி சபைக்கு வருகை தந்தார்.
அவசரகால சட்டத்தை முற்றாக நீக்குவது தொடர்பான பிரேரணையை சபையில் முன்வைத்து ஜனாதிபதி 20 நிமிடங்கள் உரையாற்றினார்.
ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்று கையில் :- பாராளுமன்றத்துக்கும் ஜனாதிபதிக்கும் உள்ள உறவை வலுப்படுத்துவதற்காகவே நான் அடிக்கடி பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்கிறேன். அந்த வகையில் அதிக தடவை பாராளுமன்றத்துக்கு வருகை தந்த தலைவர் என்ற பெருமை எனக்குண்டு.
வரவு செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பிப்பதற்காக நான் தொடர்ந்தும் பாராளுமன்றத்திற்கு வருகை தந்ததுடன், பாராளுமன்ற ஆலோசனைச் சபை கூட்டங்களிலும் பங்குபற்றியுள்ளேன்.
நிறைவேற்று அதிகாரத்துக்கும் அரசியலமைப்புக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரம், ஜனநாயக மேம்பாட்டுக்கு இது மிக முக்கியமானதாகும். 1983 ஆம் ஆண்டில் கறுப்பு ஜுலையில் அன்றிருந்த உக்கிரமான நிலையையடுத்து அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டது.
அதன் பின்னரான சமாதான ஒப்பந்த காலத்தில் அது மீண்டும் நீக்கப்பட்டு, சமாதான பேச்சுவார்த்தையை புலிகள் முறியடித்ததையடுத்து மீண்டும் அவசரகால சட்டம் நடைமுறைக்கு வந்தது.
வன்முறை, படுகொலைகளுடனான உக்கிர நிலையின் உச்சமாக வெளி விவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலை இடம்பெற்றது. இதுபோன்ற சூழலொன்றிலேயே 2005 ஆம் ஆண்டு நம் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றோம்.
நாம் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம். அக்காலகட்டத்திலேயே கெப்பித்திக்கொல்லாவ படுகொலைகள், மாவிலாறு அணை மூடப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றன.
இதனையடுத்து வடக்கு, கிழக்கை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. வடக்கு, கிழக்கு மக்களை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாத்து அரசாங்கம் அவர்களுக்கு இயல்பு வாழ்க்கையைப் பெற்றுக்கொடுத்துள்ளது.
மனிதாபிமான நடவடிக்கை, பாதுகாப்பு, மக்களுக்கான நிவாரணம், அம் மக்களின் மீள் குடியேற்றம் போன்ற நடவடிக்கைகளுக்கு அவசரகால சட்டம் பெரும் உறுதுணையாக அமைந்தது.
எமது ஆட்சிக் காலத்தில் எந்த ஊடகங்களின் செயற்பாட்டுக்கும் நாம் தடை விதிக்கவில்லை. தணிக்கை செய்யவுமில்லை. ஆனால் சில ஊடகங்கள் இச் சுதந்திரத்தைப் பயன்படுத்தி அரசுக்கு எதிராகச் சேறுபூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதைக் குறிப்பிட வேண்டும்.
நாம் மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொண்ட போது அதனை சில ஊடகங்கள் அபகீர்த்திக்குள்ளாக்கும் வகையில் செயற்பட்டன. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
2006 ஜூன் மாதத்திலிருந்து 2009 மே மாதம் வரையிலான காலகட்டத்தில் எமது மனிதாபிமான நடவடிக்கையின் மூலமாக பயங்கரவாதத்தை நாட்டிலிருந்தே ஒழிக்க எம்மால் முடிந்தது.
அதனைத் தொடர்ந்து வடக்கு, கிழக்கில் இயல்பு வாழ்க்கையைத் தோற்றுவிக்கும் வகையில் மிதிவெடிகளை அகற்றவும் அடிப்படை உட்கட்டமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றவும் நடவடிக்கை எடுத்தோம். இவற்றை எமது பிரதான பொறுப்பாகக் கொண்டோம்.
இடம்பெயர்ந்த 3 இலட்சம் பேரில் 8,000 பேரே தற்போது மீள்குடியேற்றத்திற்காக எஞ்சியுள்ளனர். இது எமது வெற்றிகரமான நடவடிக்கையின் பிரதிபலனாகும்.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் பாடசாலை சுகாதாரம், நிர்வாக வசதிகள் அனைத்தும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக அப்பிரதேசங்களின் அபிவிருத்திக்காக மாத்திரம் அரசாங்கம் 2,000 மில்லியன் டொலர் நிதியை செலவிட்டுள்ளது.
இந்த நிதியானது நீண்ட மற்றும் குறுகிய கால கடனாக மற்றும் உதவி நிதியாக பல்வேறு நாடுகளிலிருந்தும் பெறப்பட்டன.
இதனடிப்படையில் எதிர்வரும் இரண்டு வருடங்களில் அப்பிரதேசங்கள் முழுமையான அபிவிருத்திக்குள்ளாக்கப்படுவது உறுதி.
பயங்கரவாத பாதிப்புகளுக்கு உள்ளான பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்புவதோடு, குறுகிய காலகட்டமொன்றில் அங்கு உள்ளூராட்சித் தேர்தலை நடத்தி அங்கு ஜனநாயக நிர்வாக முறையை பலப்படுத்த முடிந்துள்ளது.
அடுத்த வருடத்தில் வடக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்தவும் நாம் எதிர்பார்த்துள்ளோம். இதன் மூலம் பிரதேச, மாகாண ரீதியிலும் பாராளுமன்றத்திலும் ஜனாதிபதியைத் தெரிவு செய்வதிலும் ஏனைய பகுதி மக்களைப் போன்றே வடக்கு மக்களுக்கும் சமவாய்ப்பை நாம் பெற்றுக் கொடுத்துள்ளோம்.
2009 மே மாதம் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டிய பின்னர் கிaஸ் பூதத்தை தவிர நாட்டில் எந்தவொரு பயங்கரவாத செயலும் பதிவாகவில்லை. ஜனநாயக ரீதியில் பல தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன. இவை நீதியான தேர்தல்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளன.
இதனால்தான் கடந்த காலங்களில் அவசரகால சட்டத்தில் பல நிபந்தனைகளை நீக்கியுள்ளோம். இதன் மூலம் எமது சமூகத்தை சாதாரண நிர்வாக முறைமையின் கீழ் கொண்டுவர முடிந்துள்ளது.
இலங்கையில் பயங்கரவாதத்தை சக்திப்படுத்தும் அவர்களுக்கிடையிலான நிதி, பொருள் பரிமாற்றங்கள் போதைவஸ்து வர்த்தகம் மற்றும் நிதி, வங்கி செயற்பாடுகள் தொடர்பில் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்ட திட்டங்கள் எம்மால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் அதேவேளை, இந்த சட்ட திட்டங்கள் மூலம் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காமலிருப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டுள் ளோம். நாட்டின் சட்ட திட்டங்கள் மூலம் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட எம்மால் முடிந்துள்ளது என்பதை பெருமையுடன் கூற முடியும்.
எனவே பல வருடங்களின் பின்னர் பெற்றுக்கொள்ளப்பட்ட ஜனநாயக சுதந்திரத்தைப் பாதுகாப்பது எமது பொறுப்பாகும். பல வருடங்களாக இந்த பாராளுமன்றத்தில் பிரதி மாதமும் அவசரகால சட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. சிலர் அதற்கு எதிராக வாக்களித்தனர். வேறு பலர் வாக்களிக்பைத் தவிர்த்தனர்.
இந்தப் பாராளுமன்றம் பல கட்சிகளைக் கொண்டுள்ளது. இதன் பிரதிநிதித்துவமானது பல்வேறு கருத்துகளை ஒன்றிணைத்த பெறுமதியான சொத்தாகிறது. இந்த வகையில் சபாநாயகர் உள்ளிட்ட 225 உறுப்பினர்களும் பெரும் சொத்துக்களாவர்.
முதற் தடவையாக பயங்கரவாத அழுத்தங்களின்றி வெளிப்படையாகவும் ஜனநாயக ரீதியாகவும் எமது நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதனால் இந்த பாராளுமன்றத்தின் மூலம் அதற்கான சந்தர்ப்பத்தை இந்த நாட்டிற்குப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென நாட்டு மக்கள் சார்பில் நான் இந்த பாராளுமன்றத்தில் கேட்டுக்கொள்ளுகின்றேன்.
ஜனநாயக நாட்டில் எதிர்கால நடவடிக்கைகளை சாதாரண சட்டங்களின் கீழ் முன்னெடுக்க முடியும் என்பதால் அவசரகால சட்டத்தை நீக்கும் ஆலோசனையை நான் இந்த பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்றேன்.
நாட்டின் நிர்வாக நடவடிக்கைகளில் அவசரகால சட்டம் அவசியமில்லை என்பதால் நான் இந்த ஆலோசனையை முன்வைக்கிறேன் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
»»  (மேலும்)

8/25/2011

‘இருப்பிட மாற்றம் என்பது தந்திரோபாய நகர்வு’ வெற்றி அல்லது மரணம் ஏற்படும் வரை போரிடுவேன் கடாபி ஆவேசம்

‘இருப்பிட மாற்றம் என்பது தந்திரோபாய நகர்வு’

வெற்றி அல்லது மரணம் ஏற்படும் வரை போரிடுவேன் கடாபி ஆவேசம்


யுத்த தந்திரமாக பாப் அல் அஸிஸியா வளாகத்தில் இருந்து பின்வாங்கியதாக லிபிய ஜனாதிபதி முஅம்மர் கடாபி குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கிளர்ச்சிப் படைக்கு எதிராக வெற்றி அல்லது மரணம் வரும் வரை போராடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
முஅம்மர் கடாபி ஆட்சியின் மையமாக கருதப்பட்ட பாப் அல் அஸிஸியா வளாகத்தை கிளர்ச்சிப் படை கைப்பற்றியதைத் தொடர்ந்து கடாபி ஒலிநாடா ஊடாக இந்த செய்தியை வெளியிட்டுள்ளார். லிபிய செய்மதி தொலைக்காட்சி ஊடாக முஅம்மர் கடாபியின் உரை ஒளிபரப்பப்பட்டது. எனினும் இதனூடே அவர் எங்கு இருக்கிறார் என்ற எந்த தகவலும் வெளிவரவில்லை.
நேட்டோ படை 64 தடவைகள் தாக்குதல் நடத்திய பாப் அல் அஸிஸியா வளாகத்தில் இருந்து யுத்த தந்திரமாக தாம் பின்வாங்கியதாக குறிப்பிட்டுள்ள கடாபி, திரிபோலி மக்களிடம் இருந்து சிறிது காலம் மறைந்து இருப்பதாகவும் எனினும் திரிபோலி ஆபத்தான நிலையில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
‘ஆண்கள், பெண்கள், கோத்திரத்தினர் என அனைவரும் இணைந்து திரிபோலியில் இருந்து நயவஞ்சகர்களை வெளியேற்ற போராடுங்கள். அவர்கள் வீடுகளிலும் குடும்பங்களுடனும் ஒளிந்து கொண்டு எம் மீது போர் தொடுக்கிறார்கள். இவ்வாறு ஒளிந்து கொண்டிருப்பவர்களை காட்டிக்கொடுப்பது மக்களின் கடமையாகும்” என்று கடாபி தனது உரையில் குறிப்பிட் டுள்ளார்.
கடாபியின் குடியிருப்பு பகுதியான பாப் அல் அஸிஸியா வளாகத்தை கிளர்ச்சிப் படை நேற்று முன்தினம் கைப்பற்றியது. திரிபோலியின் புறநகரில் உள்ள இந்த வளாகம் மிகவும் பாதுகாப்பானது. இந்த வளாகத்தைச் சுற்றி கோட்டை போன்ற மதில் அமைக்கப்பட்டுள்ளது.
அதனை இடித்து தரைமட்டமாக்கி கிளர்ச்சியாளர்கள் உள்ளே புகுந்தனர். இதன்போது கடாபி ஆதரவுப் படையுடன் மோதல் ஏற்பட்டபோதும் கிளர்ச்சியாளர்கள் பெரிய அளவில் எதிர்ப்பு இல்லாமல் இந்த பகுதியை கைப்பற்றியுள்ளனர்.
இந்த வளாகத்தில் இருந்த கடாபி ஆதரவுப் படை வீரர்கள் சிலரையும் கிளர்ச்சி யாளர்களையும் கைது செய்துள்ளனர். எனினும் இங்கு முஅம்மர் கடாபியோ, அவரது குடும்பத்தினரோ அல்லது அந்த அரசின் முக்கிய பிரமுகர்கள் எவரும் சிக்கவில்லை. இந் நிலையில் இந்த வளாகத்துக்குள் கிளர்ச்சிப் படை தொடர்ந்தும் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
»»  (மேலும்)

வேட்புமனு ஏற்பு இன்றுடன் பூர்த்தி : முக்கிய கட்சிகள் இன்று தாக்கல்; 124 சுயேச்சைகள் கட்டுப்பணம்

23 உள்ளூராட்சி சபைகளின் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகல் 12.00 மணியுடன் பூர்த்தியடைகிறது. ஐ. ம. சு. மு, ஐ. தே. க. ஆகிய பிரதான கட்சிகள் நேற்று சில உள்ளூராட்சி சபைகளுக்கு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தன.
எஞ்சிய சபைகளுக்கு இன்று தாக்கல் செய்யப்படுமென கட்சி வட்டாரங்கள் கூறின. நேற்று நண்பகல் வரை 143 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
வேட்பு மனுத்தாக்கலை முன்னிட்டு தேர்தல் நடைபெறும் பிரதேச மாவட்ட செயலகங்களுக்கு அருகில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் கூறியது. கூட்டுக் கட்சிகள் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் தெரிவில் ஏற்பட்ட இழுபறி நிலையால் வேட்பு மனு தயாரிப்பதில் சில கட்சிகளிடையே இறுதி நேரம் வரை பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக அறிய வருகிறது. வேட்புமனுத் தாக்கல் கடந்த 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதோடு நேற்றும் சில கட்சிகள் வேட்பு மனுத்தாக்கல் செய்தன. ஐ. ம. சு. மு. ல் உள்ள கூட்டுக் கட்சிகளான முஸ்லிம் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பன சில உள்ளூராட்சி சபைகளுக்குத் தனித்துப் போட்டியிடுகின்றன. இதன்படி, இரத்தினபுரி மாநகர சபைக்கு இ. தொ. கா. நேற்று வேட்பு மனுத் தாக்கல் செய்தது. கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் வேட்பு மனுவை கையளித்தார். பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் இராஜதுரை எம்.பி. உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இதேவேளை முஸ்லிம் காங்கிரஸ் காலி மாநகர சபைக்கு தனித்துப் போட்டியிடுகிறது. முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஆர். ஹக்கீம் தலைமையிலான குழு இங்கு போட்டியிட உள்ளதோடு வேட்பு மனுவை மு. கா. பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். அஸ்லம் தலைமையிலான குழு கையளித்தது.
கல்முனை மாநகர சபை
கல்முனை மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடவென நேற்று புதன்கிழமை (24) மூன்று அரசியற் கட்சிகளும், மூன்று சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தன. இதுதவிர 12 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எம். எம். எஸ். கே. பண்டாரமாப்பா தெரிவித்தார்.
குஞ்சித் தம்பி ஏகாம்பரம் தலைமை வேட்பாளராக கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியும், காத்தமுத்து கணேஷ் தலைமை வேட்பாளராகக் கொண்ட ஈழவர் ஜனநாயக முன்னணியும், எஸ். பிரேம ராணியை தலைமை வேட்பாளராகக் கொண்ட ஜனசெத்த பெரமுனவும் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.
அலியார் இஸ்மாயில் பீ. மஹ்ரிப், முஸ்தபா லெவ்வை, பெளஸால், மீராமுகைதீன் முகம்மது நெளஸர் ஆகியவர்களை தலைமை வேட்பாளராகக் கொண்ட மூன்று சுயேச்சைக் குழுக்களும் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் இரு தமிழர்களும், மூன்று முஸ்லிம்களும் வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
»»  (மேலும்)

மர்ம மனிதன் தொடர்பான உண்மைத்தன்மையினை பொலிஸார் உறுதிப்படுத்த வேண்டும் – ரி.எம்.வி.பிகிழக்கு மாகாணத்தில் கடந்த ஓரிரு வாரங்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற மர்ம மனிதன் தொடர்பான மிக குழப்பகரமான நிலையினை ஓர் பொறுப்புமிக்க அரசியல் கட்சி என்ற வகையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது ஆழ்ந்து உற்று நோக்கி வருகின்றது. கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற இம் மர்ம மனிதன் தொடர்பான ஓர் அச்சமான சூழ்நிலை மக்களை குழப்பத்திலும், பீதியிலும் ஆழ்த்தியுள்ளது. இதனால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை மிகவும் பாதித்துள்ளதுடன் மக்களுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்குமான உறவினையும் சீர்குலைத்துள்ளது, இதனால் பல பகுதிகளில் இளைஞர்கள் வன்முறைகளை நாடவும் பாதுகாப்புதரப்பினருக்கு எதிராகவும் செயற்படவும் களம் அமைக்கப்பட்டுள்ளது.
இம் மர்ம மனிதன் தொடர்பில் வதந்திகள் பரவுகின்ற போதிலும் இது முழுக்க முழுக்க வதந்தி, கட்டுக்கதை என்று ஒதுக்க முடியாதபடி சில உண்மைச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் இம் மர்ம மனிதன் எனப்படுபவரால் சில பெண்கள் தாக்கப்பட்டுள்ளனர். எனவே இம் மர்ம மனிதன் தொடர்பான மக்களின் அச்ச உணர்வு தேவையற்றது என முற்றிலும் ஒதுக்கிவிட முடியாது. ஆனால் சிலரின் திட்டமிட்ட வகையில் மக்களை குழப்பத்திலும், அச்சஉணர்விலும் ஆழ்த்துகின்ற வகையில் வதந்திகள் பரப்பப்படுவதையும் நிராகரிக்கமுடியாது.
எனவே இன்று கிழக்கு மாகாணத்தின் இயல்பு வாழ்க்கை முற்றாக சீர்குலைக்கும் வகையில் விஸ்வரூபம் எடுத்திருக்கின்ற இம்மர்மமனிதன் பிரச்சினை தொடர்பில் விசாரனை நடாத்தி  அதன் உண்மைத்தன்மையை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டியது பாதுகாப்பு தரப்பினரின் முக்கியமான கடமையாகும். இக்காலப்பகுதியானது முஸ்லிம் மக்களின் நோன்பு காலமாகவும், தமிழ் மற்றும் கிறிஸ்த்தவ மக்களின் திருவிழாக்காலமாகவும் மாணவர்களின் பரீட்சைகாலமாகவும் இருப்பதனால் இப்பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண்பது இன்றியமையாததாகும். இதற்காக வேண்டி மக்கள் நம்பிக்கை கொள்ளும் வகையில் பாதுகாப்பு தரப்பினர் செயற்பாடு நம்பகத்தன்மை உடையதாகவும் வெளிப்படைத்தன்மை உடையதாகவும் அமைதல் வேண்டும். இதற்கென கிராமங்கள் தோறும் ஊர்பிரமுகர்கள், மதபெரியார்கள், பெண்கள் பிரதிநிதிகள், கிராம சேவையாளர்கள், சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பு தரப்பினரை உள்ளடக்கி விழிப்புக்குழு, நடவடிக்கைக்குழு ஏற்படுத்தல் வேண்டும். இக்குழுக்களின் ஊடாக இவர்களின் முன்னிலையிலே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். அதே நேரத்தில் இளைஞர்கள் சட்டத்தை கையில் எடுக்காமல் கட்டத்தை மதித்து வன்முறையை நாடாமல் இப்பிரச்சனைக்கு தீர்வுகான முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அரசியல் பேதங்களுக்கு அப்பால் மக்களின் முக்கிய பிரச்சினையாக  இதனைக்கருதி  இணைந்து செயற்பட அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும். இது தொடர்பில் கட்சித் தலைவரும் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சரும் என்ற வகையில் நான்; பாதுகாப்புத்தரப்பு உயர்மட்டத்துடனும், மக்கள் பிரதிநிதிகளுடனும் தொடர்ந்து கலந்துரையாடி உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றேன். அதே நேரம் எமது கட்சியின் முக்கியஸ்த்தர்களும் கட்சியின் பிரதிநிதிகளும் மக்களுடன் களத்தில் நின்று பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்து வருகின்றனர்.
30வருடங்களாக கடுமையான யுத்தத்தில் அனைத்தையும் இழந்து உயிர்களை மட்டுமே காப்பாற்றிக் கொண்ட இம் மக்களுக்கு மலர்ந்து வருகின்ற சமாதான சூழ்நிலையில் மீண்டுமொரு  அச்சத்தையும் அவலத்தையும் ஏற்படுத்துவதையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அனுமதிக்காது.
சி.சந்திரகாந்தன்,
தலைவர்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி.
»»  (மேலும்)

8/24/2011

கடாபி தொடர்ந்தும் லிபியாவில்;; திரிப்போலியில் நேற்றும் மோதல்

லிபிய ஜனாதிபதி முஅம்மர் கடாபி தொடர்ந்தும் அந்த நாட்டுக்குள்தான் இருக்கிறார் என்று நம்புவதாக அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
முஅம்மன் கடாபி வெளிநாட்டுக்கு தப்பியோடியதாக பல தரப்புகளில் இருந்து செய்தி வெளியானதைத் தொடர்ந்தே பென்டகன் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கடாபி லிபியாவில் தான் இருக்கிறார் என நம்புகிறோம். அவர் நாட்டை விட்டு சென்றதாக தகவல் ஏதும் இல்லை என பென்டகன் செய்தித் தொடர்பாளர் கலோனல் தேவ் லபான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த தகவலை முஅம்மர் கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாமும் உறுதி செய்துள்ளார். கிளர்ச்சியாளர்களால் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்ட சைபல் இஸ்லாம் கடாபி ஆதரவுப் படையுடன் நேற்று திரிபோலியில் தமது ஆதரவாளர்களை சந்தித்தார். இதன் போது முஅம்மர் கடாபி திரிபோலியில் சுகமாக உள்ளார் என சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்தார். எனினும் கடாபி இருக்கும் இடம் குறித்து அவர் எந்த தகவலும் வெளியிடவில்லை.
முஅம்மர் கடாபி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பொது நிகழ்வுகளில் அல்லது தொலைக்காட்சியில் தோன்றவில்லை. எனினும் அவர் கடந்த ஒரு வாரமாக அந்நாட்டு அரச தொலைக்காட்சியில் ஒலிநாடா ஊடாக பொதுமக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
இந்நிலையில் அவர் தமது குடியிருப்பு பகுதியான பாப் அல் அசிசியாவிலேயே இருக்கிறார் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு நேற்றைய தினத்திலும் கடாபி ஆதரவுப் படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் கடுமையான துப்பாக்கிச் சமர் நீடித்தமை குறிப்பிடத்தக்கது-
இதேவேளை கடாபி தஜுரா இருதய ஆஸ்பத்திரியில் பதுங்கி இருக்கிறார் பாப் அல் அசிசியாவில் தனது மாளிகையில் உள்ள பதுங்கு குழிகளில் தங்கியுள்ளார் என செய்திகள் வெளியாகின. ஆனால் அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டதாக மற்றுமொரு தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று முன்தினம் தென்னாபிரிக்கா லிபியாவுக்கு 2 விமானங்களை அனுப்பியது. அதில் கடாபியும் அவரது குடும்பத்தினரும் தப்பி இருக்கலாம் என கருதப்பட்டது.
அதை தென்னாபிரிக்கா வெளியுறவு அமைச்சர் மைட் சோனா மாசாபென் மறுத்துள்ளார். லிபியாவில் இருந்து தனது தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை அழைத்து வரவே அரசு விமானங்களை அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.
அதற்கு முன்னதாகவே கடாபி வெனிசுலா தப்பி சென்று அங்கு தஞ்சம் புகுந்ததாக தகவல் வெளியானது. அதுவும் பொய் என்று பின்னர் நிரூபணமானது. அங்கோலா, கினியா, சிம்பாப்வே, துனிசியா ஆகிய நாடுகளில் ஏதாவது ஒன்றுக்கு அவர் தப்பி சென்றிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
இதற்கிடையே அவர் லிபியாவில் பங்கியிருக்கிறாரா? என்று புரட்சிப் படை தீவிரமாக தேடி வருகிறது. கடாபி எங்கு இருந்தாலும் அவர் சரண் அடைய வேண்டும் என உலக நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கடாபியின் ஆட்சி வீழ்ந்ததை தொடர்ந்து லிபியாவுக்கு புதிய தலைமை தேவைப்படுகிறது. எனவே புதிய தலைவரை தேர்ந் தெடுக்கும் நடவடிக்கையில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன.
லிபியாவின் சொத்துக்களை இங்கிலாந்து அரசு முடக்கி வைத்திருந்தது. கடாபி ஆட்சி வீழ்ந்ததை தொடர்ந்து அவற்றை மீண்டும் புரட்சி படையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டத்தை கூட்டி விவாதித்து அடுத்த கட்ட திட்டத்தை அறிவிக்க பிரான்ஸ் முடிவெடுத்துள்ளது. பெங்காசிக்கு ஒரு நிபுணர் குழுவை அனுப்ப இத்தாலி முடிவு செய்துள்ளது.
போரின் போது சீரழிந்த எண்ணை மற்றும் இயற்கை வாயு தயாரிப்பு நிறுவனங்களை புனரமைக்க உதவி செய்ய முடிவெடுத்துள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூனுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
மேலும், பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி, கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் மற்றும் கட்டார் அரபு ஐக்கிய நாடுகளின் தலைவர்களுடன் பேசினார்.
எண்ணை வள நாடுகளில் லிபியாவும் ஒன்றாக திகழ்கிறது. போருக்கு முன்பு நாள் ஒன்றுக்கு இங்கிருந்து 1 கோடியே 60 இலட்சம் பேரல்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. போருக்கு பின் அது 1 கோடி பேரலாக குறைந்து விட்டது. இதனால் எண்ணை விலை பெரல் ஒன்றுக்கு 106 அமெரிக்க டொலராக உயர்ந்தது. போர் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து எண்ணை விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
»»  (மேலும்)

தெற்கு சூடான் மோதலில் 600 பேர் பலி; பேச்சுவார்த்தைக்கு ஐ.நா.

தெற்கு சூடான் நாடு தற்போது புதியதாக உருவாகியுள்ளது. இங்கு நடந்த மோதலில் 600 பேர் கொல்லப்பட்டனர். 26 ஆயிரம் கால்நடைகளும் திருடப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் சிறப்பு பிரதிநிதி ஹில்டே எப். ஜோன்சன் முர்லே மற்றும் லோ நுயர் சமூகத்தினர் ஜோங்ளய் மாநிலத்தில் மோதிக் கொள்வதை நிறுத்த வேண்டும் என நேற்று வேண்டுகோள் விடுத்தார்.
அந்த மாநிலத்தில் நடந்த வன்முறை மோதலில் 600 பேர் கொல்லப்பட்டதுடன் 750 பேர்காயம் அடைந்தனர். கடந்த வியாழக்கிழமை காலை முதல் ஏற்பட்ட மோதல் நாள் முழுவதும் நீடித்தது என்று தெற்கு சூடான் தெரிவித்தது.
இரு பகுதி மோதல்களில் ஏற்பட்ட விளைவு குறித்து மதிப்பீடு செய்ய ஐ.நா. கடந்த வெள்ளிக்கிழமை ஒரு குழுவை அனுப்பியது. முர்லே பழங்குடியினர் லோ நுயர் கிராம மக்களை தாக்கிய போது மோதல் வெடித்தது.
கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் 2011 வரை 2400 பேர் 330 மோதல்களில் தெற்கு சூடானில் உயிரிழந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. தெற்கு சூடானில் உள்ள பசுக்கள் அந்த பகுதியின் சொத்து வளத்தை காட்டுவதாக உள்ளது. அவை திருமணத்தின் போது வரதட்சணையாக தரப்படுகின்றன.
»»  (மேலும்)

8/23/2011

கண்டியனாறு அடைச்சகல்குள புணரமைப்பிற்கான கலந்துரையாடல்.

இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் பாவற்கொடிச்சேனை மக்களைச்சந்தித்து கலந்துரையாடிபோது அக்கிராம மக்களுக்கு மிக முக்கிய தேவைப்பாடான கண்டியனாறு அடைச்சகல் குளத்தினை புணரமைத்து தருமாறு அப்பிரதேச மக்கள் கோரியதற்கு அமைய கிழக்கு முதல்வர் அக்குளத்தினை புணர்நிர்மானம் செய்வதற்காக கிழக்கு மாகாண நீர்பாசன அமைச்சின் மாகாண பணிப்பாளருடன் குளம் தொடர்பான ஆய்வுகளை உடனடியாக மேற்கொண்டார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எட்வின் சில்வா கிருஸ்னானந்தராஜா மற்றும் கிழக்கு மாகாண நீர்பாசன திணைக்களத்தின் உத்தியோகஸ்த்தர்களும் கலந்து கொண்டார்கள்.

»»  (மேலும்)

8/21/2011

தமிழீழப் புரட்டு நூல் வெளியீட்டு விழா


எம்.ஆர்.ஸ்ராலினின் “தமிழீழப் புரட்டு” எனும் நூல் மற்றும் நவாஸ் சௌபியின் “எனது நிலத்தின் பயங்கரம்” எனும் கவிதை வெளியீடும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அப்துல் றஸாக் தலமையில் சாய்ந்தமருது கமு/மழ்ஹறுஸ் ஸம்ஸ் மகாவித்தியாலயத்தில் நேற்று (19.08.2011)  இடம் பெற்றது. இவ் நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்து கொண்டார். அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எல்.துல்கர் நஹீம் மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழக பிரதிப்பதிவாளர் ஜனாப்.மன்சூர்.ஏ.காதர் மற்றும் பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஜனாப்.ஏ.எல்.எம்.முக்தர் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

»»  (மேலும்)