9/30/2011

நெடியவனின் அமைப்பான ரிசிசியின் ஏற்பாட்டில் தமிழ்க்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு

பிரான்ஸ் ஸ்ரார்ஸ்பேர்க் நகரில்  பிரான்சில் செயற்படும் நெடியவனின் அமைப்பான ரிசிசியின் ஏற்பாட்டில்  தமிழ்க்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு நடைபெற்றதாக சுவிசைத் தளமாகக் கொண்டியங்கும் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் பிரான்சில் நடைபெற்ற உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 11 வது சர்வதேச மாநாட்டில் பங்கு கொள்வதற்காக பிரான்சிற்கு விஜயம் செய்திருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோருடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்ரீகாந்தாவையும் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இணைத்துக் கொள்வதற்கான ஆரம்ப சந்திப்பாக இந்த சந்திப்பு பிரான்ஸ் ஸ்ராஸ்பேர்க் நகரில் கடந்த திங்கட்கிழமை இரவு நடைபெற்றது.
திரு.கஜேந்திரகுமாரும் உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 11 வது சர்வதேச மாநாட்டில் பங்கு கொள்வதற்காக பிரான்சிற்கு விஜயம் செய்திருந்தபோதும் இறுதியில் இந்த மாநாடு கே பி குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டமையால் தான் கலந்து கொள்ளவில்லை என்று குறிப்பிட்டு இணையத்தளம் ஒன்றிற்கு செய்தி வழங்கிருந்தார். இந்தச் சந்திப்பில்; நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், சீனித்தம்பி யோகேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிகாந்தா ஆகியோருடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், உலகத்தமிழ் பேரவையின் தலைவரான அருட்திரு இம்மானுவேல் அடிகளார், சுவிஸ், பிரான்ஸ், நோர்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த நெடியவன் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது இவ்வாறு நடைபெற்ற சந்திப்பில் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் சிவஞானம் சிறிதரன், சீனித்தம்பி யோகேஸ்வரன், சிறிகாந்தா ஆகியோரை இணைத்துக்கொள்வது தொடர்பாக இணக்கம் காணப்பட்ட நிலையில் சிறிதரன், சிறிகாந்தா, ஆகியோர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இணைந்து கொள்வதற்கு  சம்மதம் தெரிவித்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி *சலசலப்பு 
»»  (மேலும்)

9/29/2011

முனைப்பின் கதம்பமாலை 2011


இலங்கையின் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை
மேம்படுத்தும் நோக்கில் சுவிஸ்ட்ஸர்லாந்தில் இயங்கிவரும் முனைப்பு
நிறுவனத்தின் முனைப்பின் கதம்பமாலை 2011 நிகழ்வு எதிர்வரும் 09.10.2011
அன்று பிற்பகல் 14.30மணிக்கு சூரிச் நகரில்
Gemeinschaftzentrum,Bodenacker25,8046 Affolten,Zürich எனுமிடத்தில்
நடைபெறவுள்ளது.இதில் பல் வேறு கலைநிகழ்வுகளுடன் மக்களின்
வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்களும்
அன்றைய தினம் முன்னெடுக்கபடவுள்ளதாக முனைப்பு அமைப்பினர் தெரிவித்தனர்.


»»  (மேலும்)

இலங்கை கரையில் இறந்த டால்பின்கள்

இலங்கையின் கிழக்கு மகாணம் கல்முனை கடலோரத்தில் இயல்புக்கு மாறாக டால்பின்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்குவதாக உள்ளூர் மீனவர்கள் கூறுகிறார்கள்.
கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட டால்பின்கள் உயிரிழந்த நிலையில், கரையொதுங்கியுள்ளதாக கல்முனைப் பகுதி மீனவர்களும், மீனவ அமைப்புகளும் தமிழோசையிடம் தெரிவித்தனர்.
ஆழ் கடலில் பயன்படுத்தப்படும் தூண்டில்கள் மற்றும் நைலான் வலைகளிலும் சிக்கியே இந்த டால்பின்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக   தெரிவித்தார் அம்ப்பாறை மாவட்ட ஆழ் கடல் மீனவர்கள் சங்கத்தின் தலைவர் எம் எஸ் நசீர்.
ஆழ் கடலில் தங்கியிருந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள வெளி மாவட்ட மீனவர்கள் பயன்படுத்தும் மீன்பிடி உபகரணங்கள் காரணமாகவும் இந்த டால்பின்கள் உயிரிழந்திருக்கக் கூடும் எனவும் அவர் மேலும் கூறுகிறார்.
இறந்த நிலையில் கரையொதுங்கும் இந்த டால்பின்களில் காயங்கள் எதுவும் இல்லை என்றும், நைலான் வலைகளிலும், தூண்டில்களிலும் சிக்கிய நிலையில் மீண்டும் கடலில் வீசப்பட்டதற்கான தடயங்களே அதிகம் காணப்படுவதாகவும் நசீர் கூறுகிறார்.
இறந்த டால்பின் ஒன்று
இந்த ஆண்டு கூடுதல் இறப்புகள்
இந்தக் காலப்பகுதியில் வழக்கமாக அந்தக் கடலோரப் பகுதியில் டால்பின்கள் கரையொதுங்வது இயல்புதான் என்றாலும், இந்த ஆண்டு இறந்து கரையொதுங்கிய டால்பின்களின் எண்ணிக்கை மிக அதிகம் என அப்பகுதி கரவலை மீனவர்கள் சங்கத்தின் தலைவரான மொஹமத் அபுபக்கர் தெரிவிக்கிறார்.
கடலில் மீன்கள் அதிகரித்து இருப்பது போல டால்பின்களின் நடமாட்டமும் அதிகமாக இருப்பதாகக் கூறும் அபுபக்கர், உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் டால்பின்களின் துர்நாற்றம் காரணமாக அவை உள்ளூர் மீனவர்களினால் குழி வெட்டி புதைக்கப்படுகின்றன அல்லது கடலுக்குள் மீண்டும் தள்ளப்படுகின்றன எனவும் கூறுகிறார்.
உயிரிழந்த நிலையில் டால்பின்கள் கரையொதுங்வது தொடர்பில், மீனவர்கள் அல்லது மீனவர் அமைப்புகளிடமிருந்தோ இதுவரை தமக்கு அறிவிக்கப்படவில்லை என்று கடற்தொழில் மற்றும் நீரியல் துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
இலங்கையில் டால்பின்களை பிடிப்பதோ அல்லது வைத்திருப்பதோ சட்டவிரோதம் என்பது குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

9/28/2011

உலக ஒழுங்கு மாறுகின்றதா?*************** M.M.M. ஹன்ஸீர்

  பனிப்போர் காலத்தின் பின்னர் உலகம் மாறுபட்ட பல நெருக்கடிகளை சந்தித்திருக்கின்றது. உலகலாவிய பயங்கரவாத அச்சுறுத்தல், பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான யுத்தம் என்பன பனிப்போரின் பின்னரான முக்கிய நெருக்கடிகளாக இருந்தாலும், இன்றைய உலகம்; பலதரப்பட்ட நெருக்கடிகளை ஒரே நேரத்தில் சந்திக்கின்றது.. என்றும் இல்லாதவாறான அமெரிக்க, ஐரோப்பிய நிதி நெருக்கடி, மத்திய கிழக்கில் டியுசீனியாவில் தொடங்கி எகிப்து, சிரியா, யெமன் என தொடரும் மக்கள் போராட்டங்களும் என உலகம் பலதரப்பட்ட நெருக்கடிகள் அச்சுறுத்தல்களையும் சந்தித்து வருகின்றது.
2ம் உலக மகா யுத்தத்தின் பின்னர் யுத்தங்கள், புரட்சிகள், நெருக்கடிகள் என்பன அமெரிக்க, ஐரோப்பிய கண்டங்களில் கவனமாக தவிர்க்கப்பட்டு அவை ஆசிய, ஆபிரிக்க நாடுகளுக்கு திட்டமிட்ட வகையில் திருப்பி விடப்பட்டன. அமெரிக்க, சோவியற் பனிப்போர் காலத்தில் கூட இரு நாடுகளும் நேரடியளாக மோதாமல் தமது மோதல்களுக்கு பரீட்சாத்த களமாக ஆசியாவையும், ஆபிரிக்காவையும் பயன்படுத்தின. 1962ம் ஆண்டு கியுபாவில் சோவியத்தின் ஏவுகணை தளம் தொடர்பாக அமெரிக்க, சோவியற் இடையிலான உச்சகட்ட நெருக்கடி இரு நாடுகளுக்கிடையிலான அணு ஆயுத யுத்தமாக மூழுமோ என உலகம் அச்சப்பட்ட வேளையில் அது மிக கவனமாக தவிர்க்கப்பட்டது. கொரிய யுத்தம் வியட்நாம் போர் ஆப்கானிஸ்த்தான் ஆக்கிரமிப்பு, ஆபிரிக்க புரட்சிகள் என 2ம் உலக மகா யுத்தத்தின் பின்னான பாரிய இரத்தக்களரிகளும் யுத்தங்களும் அமெரிக்க சோவியற் போட்டியின் பயனாக ஆசிய ஆபிரிக்க மண்ணில் இடம்பெற்றன.
1ம், 2ம் உலக மகா யுத்தங்களின் படிப்பினையானது ‘பேச்சுவார்த்தை’ ‘சமரசம்’, ‘யுத்த தந்திரோபாயம்’ எனும் அரசியல் யுத்தியை முதலாளித்துவவாத, ஏகாதிபத்திய அரசுகள் தம்மிடையே மேற்கொண்டு நிதி மூலதன வளர்ச்சியை தம்மிடையே ஏற்படுத்தி பங்குபோட்டு கொண்டமை மாத்திரமின்றி, இவர்களுக்கிடையிலான யுத்தங்களை வேறு பகுதிகளுக்கு திருப்பி விட்டதுடன், நேட்டோ, வோர்சோ அணிகளுக்கிடையிலான நேரடி யுத்தங்களும் இல்லாமல் செய்யப்பட்டது. 2ம் உலகமகா யுத்தத்தின் மையமான யூதர்களின் பிரச்சினை ஐரோப்பாவில் வெடித்ததாயினும் அது ஆசியாவின் எண்ணெய் வளம் கொளிக்கும் மத்திய கிழக்கில் விதைக்கப்பட்டது. அதனை பலஸ்தீன,அரபு, ஸ்ரேல் பிரச்சினையாக்கி ஏகாதிபத்தியம் அதனை தனது பொருளாதார தீப்பந்தமாகவும் நிதி மூலதன சுரங்கத்திற்கான வழியாகவும் ஆக்கி கொண்டது. அங்கு தொடங்கிய இரத்தக்களரி 3ம் உலக நாடுகளான கொரியா, வியட்நாம், ஈரான், ஆப்கானிஸ்த்தான், ஈராக் என்று ஆசியாவுக்குள்ளேயே மையம் கொண்டது. இவ் யுத்தங்கள் அமெரிக்கா, சோவியற், ஐரோப்பிய ஏகாதிபத்திய வல்லரசின் நேரடி பங்குபற்றுதல், முழுமையான ஆதரவுடன் இடம்பெற்ற போதிலும் அமெரிக்க ஐயேராப்பிய நாடுகளுக்கிடையில் நேரடியாக இடம்பெறாததால் பனிப்போர் என அழைக்கப்பட்டது.
1990ம் ஆண்டு சோவியற் யூனியனை சிதறடித்து அமெரிக்கா 2ம் உலக போரின் பின் அது வரை இருந்து வந்த இரு முகாம் கோட்பாட்டை உடைத்து தனது தலைமையில் ஒரே முகாம் கோட்பாட்டை நிலை நிறுத்தி உலக ஒழுங்கை ( World Order)  தனது தலைமையில் மாற்றி கொண்டது. அது வரையிலான பனிப்போர் (Cold  War World) உலகு முடிவுக்கு வந்து பனிப்போரின் பின்னான (Post War World) உலகிற்கு அமெரிக்கா ஏக தலைவனாக முடிசூடி அமர அரிய வாய்ப்பை 1990ம் ஆண்டு குவைத் ஆக்கிரமிப்பு எனும் ரூபத்தில் முன்னால் ஈராக் அதிபர் சதாம் உசைன் ஏற்படுத்தி கொடுத்தார்.
21ம் நூற்றாண்டின் உலக ஒழுங்கின் போக்கை மாற்றியமைக்க காரண கர்த்தாக்களாக இருந்தவர்களில் மூவர் குறிப்பிடத்தக்கவர்கள். உலக ஒழுங்கு மாற்றம் என்பது சடுதியாக இடம்பெறும் ஒரு விடயம் அல்ல, அது  பல ஆண்டுகளாக திட்மிடப்பட்டு, உறுதியான வெளியுறவு தந்திரோபாயம், பலமான இராணுவக்கட்டமைப்பு மூலம் நிகழ்கின்றபோதிலும் குறிப்பிடப்படும் மூவர் அதனை உடனடி காரணிகளாக மாற்றுவதற்கு காரணமாய் இருந்தனர். ஒருவர் சோவியற் யூனியனின் கடைசி அதிபரான மிசைல் கொப்பர்சோ, அடுத்தவர் ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசைன், இறுதியானவர் அல்கெய்தா தலைவர் ஒசாமா பில் லாடன். முதலாமவர் பனிப்போரை முடிவுக்கு கொண்டு வந்து பனிப்போர் உலகை பனிப்போரின் பின்னான உலகாக மாற்றியமைக்க பெரிதும் காரணமானார்.
இரண்டாமவர் பனிப்Nhரின் பினான உலகிற்கு அமெரிக்காதான் ஏக தலைவன் என முடி சூட களம் அமைத்துக் கொடுத்தார். இறுதியானவர் பனிப்போரின் பின்னான உலகை பனிப்போரின் பின் பின்னான உலகாக ( Post-Post cold war world)மாற்றியமைக்க காரணமாக இருந்ததுடன் உலகளாவிய அமெரிக்கா தலைமையிலான பயங்கரவாத எதிர்ப்பு போர் (?) எனும் பரந்து பட்ட யுத்தத்திற்கு தளம் அமைத்துக்கொடுத்தார்.
2001ம் ஆண்டு செபரம்பர் மாத அமெரிக்கா மீதான தாக்குதல் மீண்டும் ஒரு முறை உலக ஒழுங்கை அமெரிக்கா தலைமையில் வலுவாக அமைய கால்கோலியது. ஆயினும் இந்நிகழ்வு தற்செயலானது அல்ல இவ்வாறான மாற்றத்தை நோக்கி பல ஆண்டுகளாக  உலகம் செயற்பட்டு கொண்டிருந்த வேளையில் அதனை உடனடி விளைவாக்கியது மட்டுமே 9ஃ11 தாக்குதல். சோவியத்தின் வீழ்ச்சியின் பின்னர் தனது தலைமையின் கீழ் உலக ஒழுங்கை நிர்ணயித்த அமெரிக்கா 9ஃ11 தாக்குதலின் பின் அதனை இன்னும் வலுப்படுத்தி தனது எதிரிகளை முற்றிலுமாக முறியடிக்கும் சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்திக் கொண்டது. சோவியத்தின் வீழ்ச்சிக்கு பின் அமெரிக்காவின் உடனடி எதிரியாக மாறியது உலகளாவிய இஸ்லாமிய வாதம். ஆசிய ஐரோப்பா எங்கும் பரந்திருந்த இஸ்லாமிய வாத கிளர்ச்சி,புரட்சி சிந்தனைகளை முற்றாக முறியடித்து அச்சிந்தனைகளுக்கு ஆதரவான அரசுகளை கவிழ்த்து தனக்காதரவான அரசுகளை உருவாக்கவும் இஸ்லாமிய தீவிரவாதத்திற்குமான மரண அடி கொடுக்கவும் அமெரிக்காவிற்கு சிறந்த சந்தர்ப்பம் ஒன்று கிட்டியது.
2002ம் ஆண்டு அமெரிக்கா கொள்கை வகுப்பு தந்திரோபான நிலை இயக்குனர் றிச்சட் என் காஸ் (Richard N Haas)  தனது நாட்டின் நிலைப்பாட்டை இவ்வாறு கூறினார். “உலகில் ஒரு வெளியுறவு கொள்கைதான் இருக்க வேண்டுமே தவிர பல கொள்கைகள் அல்ல. நான் இங்கு வெளியுறவு கொள்கை என்ற பதத்தை பயன்படுத்தினேனே தவிர வெளியுறவுக் கொள்கைகள் என்ற பதத்தை அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.(ஒரு விரிவுரையின் போது) உலகலாவிய ரீதியிலான பயங்கரவாதத்திற்கு(?) எதிரான போரை பிரகடன படுத்திய அன்றைய அமெரிக்க அதிபர் ஜோர்ச் டபுள்யு புஷ் உலகை பார்த்து இவ்வாறு எச்சரித்தார் “ ஒன்றில் நீங்கள் எமது பக்கம் அல்லது அவர்களின்; பக்கம், உங்கள் நிலை எது என்பதை நீங்கள் தெரிவு செய்யுங்கள்”. பனிப்போர் காலத்தில் சோவியற் முகாமையும், அமெரிக்க தலைமையிலான முதாளித்துவ முகாமையும் சமாளிக்க நேரு, டிட்டோ, நாசர் போன்ற தலைவர்களால் உருவாக்கப்பட்ட அணிசேரா கொள்கையை காலில் போட்டு மிதித்தபடியே ஜோர்ச் புஷ் இவ் எச்சரிக்கையை உலகிற்கு விடுத்தார். அதனை தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு எதிரான போர்(?) இஸ்லாமிய எழுச்சியின் மையங்களாக கருதப்பட்ட ஆப்கானிஸ்த்தான் ஈராக் போன்றவற்றில் கடுமையாக நிகழ்த்தப்பட்டதுடன் ஈரானுக்கும் பாகிஸ்த்தனுக்கும் கடும் தொனியிலான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஈரான் எல்லையிலும் ஏனைய மூன்று நாடுகளிலும் அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படைகள் அந்நாடுகளின் காவலனாக(?) அமர்ந்து கொண்டன. அதன் பின் டியுசீனியா, எகிப்தில் ஏற்பட்ட மக்கள் புரட்சி ஆண்டாண்டு காலமாக இருந்து வந்த சர்வாதிகார, இராணுவ அரசுகளை வீட்டுக்கு அனுப்ப இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தி மேற்குலகம் தமக்கு வேண்டாத மத்திய கிழக்கு அரசுகளை மனித உரிமை மீறல், சொந்த மக்கள் மீதான படுகொலை என்ற கோசங்களுடன் விரட்டியடிக்க தனது உளவு பிரிவுகளை முடிக்கு விட்டன. லிபியாவில் கடாபியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இ;ப்போது ஆட்சி கவிழ்ப்பு படலம் சிரிய ஜனாதிபதி அஷாத்தை நோக்கி நகர்கிறது.
அண்மையில் லிபியாவில் கைப்பற்றப்பட்ட இரகசிய ஆவணங்கள் கடாபியுடன் அமெரிக்காவின் CIA பிரித்தானியாவின் M16 போன்ற உளவு அமைப்புக்கள் நெருக்கமாக இருந்ததாக சான்று பகர்கிறது. ஆக மத்திய கிழக்கின் சர்வாதிகார இராணுவ அரசுகளுக்கு அமெரிக்கா காவலாக இருந்து காத்திருக்கிறது. இப்போது அவைகளை விரட்டி அடித்து கொண்டிருக்கின்றது. உலக ஒழுங்கின் இராணுவ ரீதியிலாhன நெருக்கடிகள் இவ்வாறு இருக்க என்றும் இல்லாதவாறு ஏற்பட்ட அமெரிக்க பொருளாதார நெருக்கடி, ஐரோப்பிய மண்டல கடன் சுமை என்பன காரணமாக அமெரிக்க தலைமையிலான உலக ஒழுங்கில் மாற்றம் வந்து விடுமோ என்ற ஆர்வம் சில ஆய்வாரள்களிடம் தோற்றம் பெற்று இது தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளும் வெளிவர தொடங்கியுள்ளன. அமெரிக்க, ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி மிக அபாயகரமானது. இதனை சீர்  செய்யாவிட்டால் முழு உலகமும் பாரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும் என சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி என்பன எச்சரிக்கின்றன. அமெரிக்க டொலரின் சரிவு, அமெரிக்க கடன் போன்றன அமெரிக்க எதிர்ப்பாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் இம்மகிழ்ச்சி தற்காலிகமானதே. இந்நெருக்கடிகள் அமெரிக்hக தலைமையிலான உலக ஒழுங்கை இன்னும் வலுப்படுத்துமே தவிர தளர்த்ப்போவதில்லை. 3ம் உலக நாடுகள் தமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வாழ்வாதார உற்பத்தி, உட்கட்டமைப்பு வசதி போன்றவற்றை அபிவிருத்தி செய்ய 40 வீதத்திற்கும் அதிகமான உதவிகளை IMF, Worldbank போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களிடமே தங்கியுள்ளன. IMF / Worldbank இன் முக்கிய நிதி பங்குதாரர்கள் அமெரிக்காவும் ஐரோப்பாவும்தான். தமது பொருளாதார நெருக்கடியினால் IMF அல்லது Worldbank அளிக்கும் நிதியை அமெரிக்க ஐரோப்பா குறைக்குமானால் 3ம் உல நாடுகள் மிக பாரிய நெருக்கடியை எதிர் கொள்ள நேரிடும். இதனால் பாரிய மக்கள் புரட்சியும் போராட்டங்களும் வெடிக்கலாம் இதனை பயன்படுத்தி அமெரிக்க ஏகாதிபத்தியம் 3ம் உலக நாடுகளின் ஊடாக தன்னை வலுப்படுத்தி தமது இருப்பை இன்னும் தளமமைத்து கொள்ளும்.
அமெரிக்க ஏகாதிபத்திய, முதலாளித்துவத்தின் நெருங்கிய நண்பனான பிரான்சின் எதிர்கால ஜனாதிபதியாவார் என கருதப்பட்ட IMF இன் முன்னாள் தலைவர் ஸ்ரொஸ் கான் நியுயோர்க் விமான நிலையத்தில் வைத்து பாலியல் குற்றசாட்டொன்றில் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் தனது பதவியை துறந்ததுடன் பலதரப்பட்ட நெருக்கடிக்கு உள்ளதுடன் அவரின் எதிர்கால பிரான்சின் ஜனாதிபதியாகும் கனவும் கலைந்தது. ஆனால் இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதியான ஆதாரம் இல்லாதவை என கூறி அமெரிக்க நீதிமன்றமே அவரை விடுதலை செய்தது. மேற்குலக கலாச்சார பார்வையில் வலுவில்லாத உறுதியற்ற தகவல்களுடனான குற்றச்சாட்டில் ஸ்ரொஸ் கான் அமெரிக்காவில் ஏன்  கைது செய்யப்பட்டார். அமெரிக்க பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது IMF இனால் 3ம் உலக நாடுகளுக்கு வழங்கும் கடன் உதவிகள் டொலரில் அல்லாமல் மாற்று நாணயங்களில் வழங்குவதற்கான திட்டமொன்று குறித்து ஸ்ரொஸ் கான் தனது ஆலோசகர்களிடம் தீவிரமாக பரிசீலித்து கொண்டிருந்தார் என்பதும் அதனை தொடர்ந்து அவருக்கு ஏற்பட்ட அவமானங்கள் பதவி இழப்புக்களும் தனது உலக ஒழுங்கை மாற்றியமைக்க நினைப்பவர் தனது நண்பராயினும் விட்டு வைக்க போவதில்லை எனும் செய்தியையே அமெரிக்கா உலகிற்கு சொல்ல முற்படுகின்றது.
»»  (மேலும்)

இராமலிங்கம் நூலகத்திறப்பு விழாவும், 2010ம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழாவும்

செங்கலடி மட்/பங்குடாவெளி றொ.க.த.க பாடசாலையின் இராமலிங்கம் நூலகத்திறப்பு விழாவும், 2010ம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழாவும் இன்று அப் பாடசாலையின் அதிபர் தலமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களும் மற்றும் அதிதிகளாக செங்கலடி பதில் பிரதேச செயலாளர் மற்றும் மண்முனை மேற்கு வலயக்கல்வி அதிகாரி பாஸ்க்கரன்,
கோட்டக்கல்வி அதிகாரிகள் மற்றும் கிராமசேவை உத்தியோகஸ்த்தர், ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

»»  (மேலும்)

9/27/2011

சிறுவர் போராளிகள் சமூகத்தில் இணைப்பு: பிரான்ஸ் மனித உரிமை அமைப்பு பாராட்டு

எல். ரி. ரி. ஈ. இயக்கத்தின் முன்னாள் சிறுவர் போராளிகளுக்கு புனர்வாழ்வு கொடுத்து, அவர்களை மீண்டும் சமுதாயத்தில் சாதாரண சிறுவர்களாக இலங்கை அரசாங்கம் இணைத்திருப்பது ஒரு பாராட்டக்கூடிய விடயமென்று பிரான்ஸ் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் பிரன்சுவா சிமேரே தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு பிள்ளைக்கும் தன்னுடைய இளம் பராயத்தை சுதந்திரமாக அனுபவிப்பதற்கான உரிமை இருக்கின்றது என்று தெரிவித்த அவர், அவர்களுக்கு கூடிய வகையில் இந்த உரிமையை அனுபவிப்பதற்கு வசதிகள் செய்து கொடுத்தல் அவசியமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவ நடவடிக்கைகளுக்காக சிறுவர்களை இராணுவ சேவையில் சேர்த்துக் கொள்வது ஒரு இராணுவக் குற்றமாக கருதப்பட்டு சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க வேண்டுமென்றும் பிரான்சின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் பிரன்சுவா சிமேரே கூறினார்.
2007 ஆம் ஆண்டில் பாரிஸ் நகரில் நடந்த மகாநாட்டில் சிறுவர்களை போராளிகளாக பயன்படுத்துவது ஒரு தண்டனைக்குரிய குற்றமென்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. சிறுவர்களை போராளிகளாக சேர்த்துக் கொள்வதற்கான தடையை மீறி செயற்படும் அரசாங்கங்களுக்கும், ஆயுதக்குழுக்களுக்கு எதிராகவும் கடுமையான பொருளாதார தடைகளை விதிப்பது அவசியமென்றும் அவர் தெரிவித்தார்.
பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சு, பெருமளவு பணத்தை சிறுவர் போராளிகளை விடுவித்து அவர்களை சாதாரண வாழ்க் கையை ஆரம்பிப்பதற்கு உதவக்கூடிய வகையில் பல்வேறு நலன்புரித் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
இது தொடர்பாக உகண்டாவில் தமது அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி நல்ல வெற்றி அளித்திருக்கிறதென்று தெரிவித்த பிரன்சுவா சிமேரே, அங்கு யுத்த முனை யில் போராடிக் கொண்டிருந்த சிறுவர்களை இப்போது தங்களால் போர் முனையில் இருந்து விடுவித்து சாதாரண வாழ்க்கைக்கு மீட்டெடுக்க முடிந்ததாக தெரிவித்தார்.
மியன்மார், கொலம்பியா, இலங்கை அல்லது கொங்கோ ஆகிய நாடுகளில் நாங்கள் மாற்று வழிகளை கையாண்டு சிறுவர் போராளிகளை சமூகத்தில் ஒன்றி ணைப்பதில் வெற்றி கண்டுள்ளதாகவும் அவர் கூறினார். இன்று உலக நாடுகளில் சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் சிறுவர் போராளிகள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் செய்துள்ள மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
»»  (மேலும்)

81வது பாடசாலையாக மட்/ களுவங்கேனி நெடியமடு அ.த.க பாடசாலை கிழக்கு முதல்வரினால் திறந்துவைப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்திலே கல்குடா கல்வி வலையத்திலே மொத்தமாக ஏற்கனவே 80பாடசாலைகள் இருக்கின்றன. இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்ட மட்/களுவங்கேனி நெடியமடு அரசினர் கலவன் பாடசாலையுடன் கல்குடா கல்வி வலையத்லே மொத்தமாக 81பாடசாலை அமையப் பெற்றிருக்கின்றன.
இதிலே புதிதாக முதலமைச்சர் அவர்களினால் 4பாடசாலைகள் திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கல்வியிலே மிகவும் பின்தங்கிய கிராமமாகவும் அதே நேரம் யுத்தத்தினாலும் ஏனைய வன்செயல்களாலும் வெகுவாக பாதிக்கப்பட்ட ஓர் கிராமமான களுவன்கேனி கிராமத்திலே இப் பாடசாலையினை முதலமைச்சர் அவர்கள் அமைந்திருப்பதானது அவர் மிகவும் கஸ்ட்ட பட்ட பிரதேசங்களிலே கல்வி வளர்த்தெடுக்கப்பட வேண்டு;ம்  என்பதற்கு சிறந்த எடுத்ததுக்காட்டாகும். இன்று புதிய பாடசாகை;கான விசேட அம்சமாகும்.
இந் நிகழ்வு ஏறாவூர் கோட்டக்கல்வி அதிகாரி அ.சுகமாரன், தலமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி ஏறாவூர் பற்று உதவி பிரதேச செயலாளர் கே.சித்திரவேல் , பிரதிகல்வி பணிப்பாளர் எஸ்.ஞானலாசா   புதிய பாடசாலையின் அதிபர் காலநிலை ஆ. குவேனி  மற்றும்   ஏனைய உத்தியோகஸ்த்தர்கள்       ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
»»  (மேலும்)

தேசிய நீர்ப்பாசன இரட்டை வாரம்.

இலங்கை பூராகவும் கொண்டாடப்படும் தேசிய நீர்ப்பாசன இரட்டைவாரம் இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலே உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று இடம் பெற்றது. மேற்படி நிகழ்வு இன்று (26.09.2011) மட்டக்களப்பு மரப்பாலம் விவசாயக் கிராமத்தில் மாவட்டச்செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தலமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா    அபேவர்த்தன மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மற்றும் பிரதேச செயலாளர், மற்றும் உத்தியோகஸ்த்தர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.

»»  (மேலும்)

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு சார்பாக கிழக்கு முதல்வர் பிரச்சாரம்.

             திர் வருகின்ற 8ம் திகதி நடைபெற இருக்கின்ற உள்ளுராட்சிமன்ற தேர்தலிலே கல்முனை மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் பிறையன் அவிட்ஸ் கோண் என்பவரை ஆதரித்து இன்று பாண்டிருப்பில் நடைபெறுகின்ற அரசியல் கூட்டத்தில் கிழக்கு முதல்வர் சி.சந்திரகாந்தன் அவர்கள் உரையாற்றினார்..அவர் பேசுகையில் மாநகரசபைத் தேர்தலிலே நிச்சயமாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்துதான் செயற்பட வேண்டும். ஆளும் கட்சியாக இருக்கின்ற கட்சிதான் ஏதாவது அபிவிருத்திகளை செய்யும், ஆகவே நாம் அனைவரும் ஒன்றினைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு ஆதரவளிக்கவேண்டுமென தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கின் முதல்வருமான சி.சந்திரகாந்தன் அவர்கள் கேட்டுக்கொண்டார். இந் நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர் சோ.புஸ்பராஜா, மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆகியோர்கள் உரையாற்றினார்.
»»  (மேலும்)

9/26/2011

பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் 6 தலித்கள் பலி: உண்மை அறியும் குழு அறிக்கை

Anthonisamy Marx    பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் 6 தலித்கள் பலி:
உண்மை அறியும் குழு அறிக்கை

21.09.2011
மதுரை

கடந்த செப்டம்பர் 11, 2011 அன்று பரமக்குடி ஐந்து முக்குச்சாலையில் தமிழக காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 6 தலித்கள் கொல்லப்பட்டும், சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றும் உள்ளதை பல்வேறு அரசியல் கட்சிகளும், மனித உரிமை அமைப்பினரும் கண்டித்துள்ளனர். இதுதொடர்பாக பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் கொண்ட உண்மை அறியும் குழு  ஒன்று கீழ்க்கண்டவாறு அமைக்கப்பட்டது.

உறுப்பினர்கள்

1. பேரா.அ.மார்க்ஸ் - மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை.
2. கோ.சுகுமாரன் - மக்கள் உரிமை கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி
3. வழக்குரைஞர் ஏ. முஹம்மது யூசுப், NCHRO – தமிழ்நாடு
4.வழக்குரைஞர் ரஜினி, PUHR, மதுரை
5. பேரா. ஜி.கே.ராமசாமி  மக்கள் ஜனநாயக மன்றம் (PDF), கர்நாடகா
6. வழக்குரைஞர் கார்த்திக் நவயான் - தேசிய தலித் முன்னணி  (NDF), ஆந்திர மாநிலம்
7. ரெனி அய்லின்,  தேசிய ஒருங்கிணைப்பாளர், NCHRO,
கேரளம்
8. பேரா.பிரபா.கல்விமணி - மக்கள் கல்வி இயக்கம், திண்டிவனம்
9. பி.எஸ்.ஹமீது - SDPI, தமிழ்நாடு
10. பேரா.சே.கோச்சடை - மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), காரைக்குடி
11. ஏ. சையது ஹாலித் - பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, இராமநாதபுரம்
12. மு.சிவகுருநாதன் - PUHR, திருவாரூர்
13. கவிஞர் குட்டி ரேவதி - ஆவணப்பட இயக்குநர், சென்னை
14. முனைவர் தி.பரமேஸ்வரி - கவிஞர், காஞ்சிபுரம்
15. கு.பழனிச்சாமி – PUHR, மதுரை
16. வழக்குரைஞர் முஹம்மது சுஹைப் செரீஃப் – NCHRO,கர்நாடகம்
17. வழக்குரைஞர் தய்.கந்தசாமி – தலித் பண்பாட்டுப் பேரவை,  திருத்துறைப்பூண்டி
18. தகட்டூர் ரவி - PUHR, கல்பாக்கம்

இக்குழு செப்டம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் பரமக்குடி, சுற்றுவட்ட கிராமங்கள், இராமநாதபுரம், மதுரை ஆகிய பகுதிகளுக்குச் சென்று சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களையும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பவர்களையும், அரசு அதிகாரிகளையும், பொதுமக்களையும் சந்தித்து, விரிவாக அவர்களிடம் பேசி அவற்றை ஒலி - ஒலி நாடாக்களில் பதிவு செய்து கொண்டது. முதல் தகவல் அறிக்கைகள், காவலில் வைக்கப்பட்டோருடைய விவரங்கள் ஆகியவற்றையும் தொகுத்துக் கொண்டது.
பின்னணி
பரமக்குடி, கமுதி, இராமநாதபுரம் முதலானவை சாதி முரண்பாடுகள் கூர்மையடைந்துள்ள பகுதிகள். கடந்த 50 ஆண்டுகளாகவே இங்கு பல கலவரங்கள் நடைபெற்று வருகின்றன. 1957ல் நடைபெற்ற முதுகுளத்தூர் கலவரம் அனைவரும் அறிந்த ஒன்று. அப்போது கொலை செய்யப்பட்ட இம்மானுவேல் சேகரன் அப்பகுதி தேவேந்திரகுல வேளாளர்களின் வணக்கத்திற்குரிய பெருந்தலைவராக (icon) உருப்பெற்றுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் எப்படி தேவர்கள் மத்தியில் ஒரு திருஉருவாக உருப்பெற்றுள்ளாரோ அதே வடிவில் தேவேந்திரர்களுக்கு இம்மானுவேல் சேகரன் உருவாகியுள்ளார்.
முத்துராமலிங்கத் தேவருடைய குருபூஜை அவர்களது சமூகத்தவர்களால் அவரது பிறந்த நாளன்று பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. ‘தெய்வத்திருமகனார்’ என அவர் வழிபடப்படுகிறார்.

இப்பகுதியில்  குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில்   தேவேந்திரர்கள் வசிக்கின்றனர்.  கல்வி முதலிய வளர்ச்சிகளின் விளைவாக இம்மானுவேல் சேகரனின் காலம் தொடங்கி அமைப்பு ரீதியாக  ஒருங்கு திரளும் போக்கு இவர்கள் மத்தியில்  உருவாகியுள்ளது. ஒடுக்குமுறையை ஏற்காத மனநிலையும், அடையாளத்தை உறுதி செய்துகொள்ளும் சுயமரியாதைப் போக்கும், அதற்குரிய வகையில் வரலாற்று உருவாக்கமும்  நடைபெற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனை இதுகாறும் ஆதிக்கம் செய்து வந்த சாதியினரும், அரசு எந்திரமும் சகித்துக்கொள்ளாத நிலையின் விளைவாக சமூக முரண்கள் கூர்மையடைகின்றன.

கல்வி மற்றும் ஜனநாயக உணர்வுகள் வளர்வதன் ஊடாக மேலெழும் அடித்தள மக்களின் அடையாள உறுதிப்பாட்டை ஆதிக்க சமூகமும், ஆதிக்க சமூகத்தின் மனநிலையைப் பிரதிபலிக்கும் அரசும் ஏற்காததன் உச்சகட்ட வெளிப்படையாகவே இன்று இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.

1987 முதல் பூ. சந்திரபோஸ் அவர்களின் தலைமையிலான ‘தியாகி இம்மானுவேல் பேரவை’ என்கிற அமைப்பு இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை (செப்டம்பர் 11) கொண்டாடத் தொடங்குகிறது. ஆண்டுக்காண்டு கூடுகின்ற கூட்டத்தின் அளவும் அதிகரிக்கிறது. 1995 - 97ல் தென்மாவட்ட சாதிக்கலவரங்கள் ஏற்படுகின்றன. ‘புதிய தமிழகம்’ கட்சியும் இங்கே வேர் பதித்துச் செயல்படத் தொடங்குகிறது. இப்பகுதியில் தேவேந்திரர்களின் முக்கியத் தலைவர்களாக ஜான்பாண்டியன் முதலானோர் உருப்பெறுகின்றனர்.

இதே காலகட்டத்தில் தேவர் குருபூஜை, அரசே பங்கேற்று நடத்தக்கூடிய விழாவாக மாறுகிறது. 2007ல் தேவருடைய மறைவின் 50வது நினைவு நாளை ஒட்டி அவரது நினைவிடத்திற்கு அருகில் வசித்துக் கொண்டிருந்த சுமார் 100 தேவேந்திரர்களின் குடும்பங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன. அரசே முன்னின்று இதைச் செய்தது.

இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளும் இதேபோல பெரிய அளவில் கொண்டாடப்படுவதை ஆதிக்க மனங்கள் ஏற்க மறுத்தன. தங்களைப் போலவே தேவேந்திர குலத்தினரும் இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை  ‘குருபூஜை’ என அழைப்பதையும் அவர்கள் ஏற்கவில்லை. 2007 தொடங்கி ஆகஸ்ட் - செப்டம்பர் - அக்டோபர் ஆகிய மாதங்களில் ஏதேனும் ஒரு வன்முறையை தேவேந்திரர்கள் மீது ஏவும் போக்கு இருந்துள்ளது. 2007ல் வின்சென்ட் என்பவரும் 2009ல் அறிவழகன் என்பவரும், சென்ற ஆண்டு (2010 ஆகஸ்ட் 30 ) “குருபூஜைக்கு அணி திரள்வீர்” என சுவரெழுத்துக்கள் எழுதிய கொந்தகை அரிகிருஷ்ணனும் ஆதிக்கச் சாதியினரால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தேவேந்திரர்களின் அரசியல் கட்சியாக அடையாளம் காணப்பட்டுள்ள புதிய தமிழகத்தைச் சேர்ந்த இருவர் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நீண்ட நாள் சிறையிலிருந்த ஜான்பாண்டியனும் விடுதலையடைந்தார். இவையெல்லாம் தேவேந்திரர்கள் மத்தியில் ஒரு எழுச்சியை வேறெப்போதைக் காட்டிலும் அதிகமாக ஏற்படுத்தியுள்ளது. சென்ற ஆண்டு (2010) இம்மானுவேல் சேகரனின் குரு பூஜையில் பங்கேற்ற அ.இ.அ.தி.மு.க தலைவர் நயினார் நாகேந்திரன் தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவாக நடத்துவோம் என அறிவித்ததும், 2010 அக்டோபர் 9 அன்று இம்மானுவேல் சேகரனின் உருவம் பொறித்த தபால் தலை வெளியிடப்பட்டதும் தேவேந்திரர்கள் மத்தியில் மிகுந்த எழுச்சியையும் நிறைந்த எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியிருந்தது. ஆதிக்க சாதியினர் இதை மிகவும் வெறுப்புடன் பார்த்து வந்தனர். ஆப்ப நாடு மறவர்  சங்கம் வெளியிட்டுள்ள ஒரு சுற்றறிக்கையில் இவ்வாறு இம்மானுவேல் சேகரனின் குருபூஜை முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜைக்குச் சமமாக மேலெழுந்து வருவதைத் தடுக்க வேண்டுமென கூறப்பட்டது  குறிப்பிடத்தக்கது.

பூலித்தேவனுக்குச் சமமான மன்னராக ஒண்டி வீரனை அருந்ததியர்கள் முன்னிறுத்துவதை நடராஜன் (சசிகலா) முதலானோர் கண்டித்து வருவது இத்துடன் ஒப்பு நோக்கத்தக்கது.

இந்தப் பின்னணியில் தான் செப்டம்பர் 9ம் தேதியன்று கமுதிக்கு அருகில் உள்ள மண்டல மாணிக்கம் கிராமத்தை ஒட்டிய பள்ளப்பச்சேரி எனும் தலித் கிராமத்தைச் சேர்ந்த பழனிக்குமார் என்கிற 16 வயது தேவேந்திரர் குலச் சிறுவன் கொடுமையாக வெட்டிக் கொல்லப்பட்டான். இது தொடர்பாக தேவர் சாதியைச்  சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டனர். கொல்லப்பட்ட சிறுவனுக்கு அஞ்சலி செலுத்த வந்த ஜான்பாண்டியன் தடுக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டார்.

இதே நேரத்தில் (செப்டம்பர் 7 ) அரசுப் போக்குவரத்து கழக பட்டியல் சாதித் தொழிற்சங்கத்தினர் “தேசியத் தலைவர் தெய்வத் திருமகனார்” என இம்மானுவேல் சேகரனை விளித்து, பிளக்ஸ் போர்டு ஒன்றை பரமக்குடி நகரத்தில் வைத்தனர். உடனடியாக இதனை எதிர்த்து ‘மறத்தமிழர் சேனை’ என்கிற அமைப்பும் தேவர் சாதியைச் சேர்ந்த வழக்குரைஞர்களும்  களம் இறங்கினர். காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினருக்கு அழுத்தம் கொடுத்தனர்.தெய்வத்திருமகனார் என்கிற அடைமொழியைத் தேவருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இம்மானுவேல் சேகரனுக்குப் பயன்படுத்தக்கூடாது என்று அவர்கள் புகார் செய்தனர்.

இது பட்டியல் சாதியினரின் சட்டப்பூர்வமான உரிமை என்று கூறி பாதுகாப்பளித்திருக்க வேண்டிய ரெவின்யூ நிர்வாகமும், காவல் துறையும் பட்டியல் சாதி அமைப்பினரை வரவழைத்து, அந்த ஃப்ளக்ஸ் போர்டிலுள்ள  இவ்வார்த்தைகளை நீக்க வேண்டுமென வற்புறுத்தின. அவர்களும் பணிந்து அச்சொற்களை நீக்கினர். இது தேவேந்திரர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தவே தெய்வத் திருமகனார் என இம்மானுவேல் சேகரனை விளித்து பல பிளக்ஸ் போர்டுகளை ஆங்காங்கு அடுத்தடுத்த நாட்களில் அவர்கள் நிறுவினர். இதைக் கண்டு இப்போது ஆதிக்க சாதியினர் மட்டுமல்ல, காவல் துறையும் அரசு நிர்வாகமும் சேர்ந்து ஆத்திரமடைந்தது.  பரமக்குடியிலுள்ள எந்த ஃப்ளக்ஸ் போர்டு அச்சகமும் இதுபோன்ற ஃப்ளக்ஸ் போர்டுகளை அச்சிடக் கூடாதென  காவல்துறை மிரட்டியது.

இந்தப் பின்னணியில் தான் செப்டம்பர் 11 அன்று இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் அவரது சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்த மக்களுக்கும் காவல் துறைக்கும் இடையில் முரண்பாடு எழுந்து, துப்பாக்கிச் சூட்டில் 6 அப்பாவி உயிர்கள் பலியாகவும், ஏராளமானோர் படுகாயமடையவும் நேரிட்டது.

செப்டம்பர் 11 துப்பாக்கிச் சூடு குறித்து நாங்கள் அறிந்த உண்மைகள்

1. துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தி துப்பாக்கிச் சூட்டை விடவும் கொடுமையான மொழியில் சட்டமன்றத்தில் உரையாற்றிய முதல்வர் ஜெயலலிதா இரண்டு தவறான தகவல்களைக் கூறியுள்ளார். அவை:
(அ) முத்துராமலிங்கத் தேவரை இழிவு செய்து மண்டல மாணிக்கம் கிராமச் சுவற்றில் எழுதியதாலேயே பழனிக்குமார் கொல்லப்பட்டான் என்றது. இது உண்மையல்ல. மண்டல மாணிக்கம் தேவர் சாதி ஆதிக்கம் உச்சமாக உள்ள ஒரு ஊர். இதன் காரணமகவே  இந்த கிராமத்தில் உள்ள  அரசுப் பள்ளியில் பயில்கிற தேவேந்திரர் குலப் பிள்ளைகள்  மாற்றுச் சான்றிதழ் பெற்றுக்கொண்டு வேறு ஊர்களில் உள்ள பள்ளிகளில் சேர்கின்றனர். 2010-11 கல்வியாண்டில் மண்டல மாணிக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்ற 28 தலித் பிள்ளைகளில் இவ்வாண்டு 23 பேர்  இவ்வாறு டி.சி. பெற்றுச் சென்றுள்ளனர். இக்கிராமத்திற்குள் தலித் மக்கள் அச்சமின்றி சுதந்திரமாக  உலவக்கூட முடியாத நிலையில் வேற்றூரில் படிக்கக்கூடிய 16 வயது சிறுவன் பழனிக்குமார் அங்கு சென்று ஏழரை அடி உயரமுள்ள ஒரு சுவற்றில் தேவரை இழிவு செய்து எழுதினான் என்று சொல்வதை யாரும் ஏற்க இயலாது.
(ஆ) ஜான் பாண்டியன் இந்த கிராமத்திற்கு படை திரட்டிச் சென்றதால் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டி வந்தது என்பது முதல்வர் சொன்ன  இரண்டாவது பொய். ஜான் பாண்டியனைப் பொருத்தமட்டில் அன்று தூத்துகுடியில் நடைபெற்ற ஒரு பூப்பு நீராட்டு விழாவிற்கு வருகிறார்.  இம்மானுவேல் சேகரன் நினைவு நாளுக்கு அவர் செல்லக்கூடாதென இராமநாதபுரம் ஆட்சியர் தடையுத்தரவு இட்டதை அறிந்து அவர் திரும்பவும் திருநெல்வேலி செல்கிறார். அப்போது அவர் கைது செய்யப்பட்டு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள துப்பாக்கி சுடும் பயிற்சிப் பள்ளியில் வைக்கப்படுகிறார். எவ்வகையிலும் நிர்வாகம் மற்றும் காவல் துறையின் உத்தரவுகளை மீறுவது என்கிற முனைப்பு ஜான்பாண்டியனிடம்  இருக்கவில்லை என்பதே உண்மை. தடையை மீறி அவர் படைதிரட்டிச் சென்றதாக முதல்வர் கூறியுள்ளது, அதிகாரிகளின் கூற்றை அவர் அப்படியே ஏற்றுக் கொண்டதையே காட்டுகிறது.

2. செப்டம்பர் 11 அன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூடு முழுக்க முழுக்கக் காவல் துறையின் திட்டமிட்ட செயலாகத் தெரிகிறது. தேவேந்திரர்களின் ஓர் அடையாளத் திருவிழாவாக மாறிப்போன ஒரு நாளில், அஞ்சலி செலுத்த வந்த அவ்வினத் தலைவர் ஒருவரைத் தடுத்தது ஒரு முட்டாள்தனமான செயல் மட்டுமல்ல; கலவரத்தைத் தூண்டக்கூடிய செயலும் கூட. தவிரவும், தடுத்தவுடன் பணிந்து திருப்பியவரைக் கைது செய்து, இது குறித்த செய்தி அஞ்சலி செலுத்த வந்த மக்கள் மத்தியில் பரவக் காரணமாக இருந்தது இன்னொரு மிகப்பெரிய வன்முறையைத் தூண்டும் செயலாக அன்று அமைந்துள்ளது.

3. டி.ஐ.ஜி சந்தீப் மிட்டல், ஐந்து முக்கில் பொறுப்பாக நிறுத்தி வைக்கப்பட்ட சென்னை அடையாறு காவல் துறை ஆணையர் செந்தில்வேலன், பரமக்குடி நகர காவல் ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் அன்று தேவேந்திரர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் பாடம் புகட்டியே தீரவேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் வந்து நின்றதாகவே தெரிகிறது. தியாகி இம்மானுவேல் சேகரன் பேரவைத் தலைவர் பூ.சந்திரபோஸ் அவர்கள் மிகுந்த நல்லெண்ணத்துடன் அதிகாரிகளை அணுகி  ஜான் பாண்டியனை அன்று கைது செய்தது நல்லதல்ல எனவும், அவரை விடுதலை செய்து சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டும் எனவும் கோரிய போது, “சட்டம் ஒழுங்கு பற்றி நீங்கள் பேச வேண்டாம்; முதலில் அவர்களைக் கலைந்து போகச் சொல்லுங்கள்” என சந்தீப் மிட்டல் கூறி எந்தவித சமாதானத்திற்கும் வாய்ப்பளிக்காமல் நடந்துள்ளார்.

4. , ஐந்து முக்கில் அன்று குவிக்கப்பட்டிருந்த காவல் துறையினரின் எண்ணிக்கை சுமார் 2000 என நேரில் பார்த்த பலரும் எங்களிடம் கூறினர். சாலை மறியலுக்கு அமர்ந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 50 தொடங்கி அதிகபட்சமாக 200 அல்லது 300 என்ற அளவிலேயே இருந்துள்ளது. கூட்டம் அதிகமாக வரும் என எதிர்பார்த்து அவ்வழியே போக்குவரத்து முன்னதாகவே தடை செய்யப்பட்டது என்பதை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அருண் ராயே எங்களிடம் ஒத்துக்கொண்டார். தவிரவும் அவ்வழியே இதர மக்கள் சென்று அஞ்சலி செலுத்தி வரவும் அவ்வழியே வந்த வாகனங்கள் சென்று வரவும் சாலை மறியலால் எவ்விதத் தடையும் ஏற்பட்டிருக்கவில்லை. இந்நிலையில் 2000 ஆயுதம் தாங்கிய காவல் துறையினர் கூடியிருந்த 200 மக்களை, அவர்கள் உண்மையிலேயே கல்லெறிந்து வன்முறையில் ஈடுபட்டிருந்தால் கூட இலேசான தடியடி அல்லது கண்ணீர்ப்புகையைப் பிரயோகித்துக் கலைத்திருக்க முடியும். ஆனால் எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி துப்பாக்கிச்சூட்டை நடத்தி 6 பேரைக் கொன்றுள்ளனர் சந்தீப் மிட்டல், செந்தில்வேலன், சிவக்குமார் ஆகியோர் தலைமையில் இருந்த காவல் துறையினர்.

5. செந்தில் வேலன் ஐ.பி.எஸ் ஏற்கனவே இதே பகுதியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்தவர். அவர் இங்கு பணியாற்றியபோது இதேபோல இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களை நியாயமற்ற முறையில் கைது செய்து (2008 செப்டம்பர் 11) தலித் விரோத அதிகாரி என்கிற பெயரை ஈட்டியவர். இவரை அடையாறில் இருந்து  இங்கு கொண்டு வந்து அன்றைய தினத்தில் ஐந்து முக்கில் நிறுத்தியதும் உள்நோக்கத்துடன் செய்யப்பட்ட செயலாகவே தெரிகிறது.

6. காவல் துறையின் ‘வஜ்ரா’ வாகனத்தைக் கலவரக்காரர்கள் எரித்தனர் என்று சொல்வதையும் நம்ப இயலவில்லை. ஐந்து முக்கில் சாலை மறியல் செய்து கொண்டிருந்தவர்களைக் கலைப்பதற்குக் கொண்டு வந்து நிறுத்தப்பட்ட காவல் துறையினர் மதுரை- இராமநாதபுரம் சாலையில் நீளவாக்கில் நின்றிருந்தனர். தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டவுடன் மக்கள் எதிரே உள்ள முதுகுளத்தூர் சாலையில் ஓடுவது மட்டுமே அன்று சாத்தியமாக இருந்தது. இந்நிலையில் காவல் துறை அணிவகுப்பிற்குப் பின்னால் வந்து நின்ற வஜ்ரா வாகனத்தை கலவரக்காரர்கள் எரித்தனர் என்று சொல்வது ஏற்கத்தக்கதாக இல்லை.

7. துப்பாக்கிச் சூட்டின்போது அங்கு நின்று நெற்றிப்பொட்டில் குண்டடிபட்டு, இன்று மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணிக்கம், குண்டடிபட்டு இறந்த ஒருவரை தூக்கிச் சென்று காப்பாற்ற முயன்ற மணிநகர் அம்பேத்கர் இளைஞர் மன்றச் செயலாளர் சுரேஷ், கடுமையாக அடிக்கப்பட்டு இன்று இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்  வெள்ளைச்சாமி உள்ளிட்ட பலரும் எம்மிடம் நேரில் கூறியதிலிருந்து, அன்று எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி தண்ணீர் பீய்ச்சியடித்தல், கண்ணீர்ப்புகை பிரயோகம் முதலிய முன் நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளாமல் திடீரென்று துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர். அதே நாளில் மதுரை சிந்தாமணி அருகே  நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து இன்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் திரு.வைகோ அவர்களால் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 19 வயதான டி.ஜெயபிரசாந்தும் அவ்வாறே கூறினார். துப்பாக்கிச்சூடு நடந்து ரொம்ப நேரத்திற்கு பிறகு உள்துறை அமைச்சகத்திடமிருந்து வந்த செய்தி மூலமாகவே தான் அதைத் தெரிந்து கொண்டதாக மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.சகாயம் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பல நிமிடங்கள் கழித்தே தானும் தெரிந்து கொண்டதாகத்தான் இராமநாதபுர மாவட்ட ஆட்சியரும் எங்களிடம் தெரிவித்தார்.

 8. துப்பாக்கிச் சூட்டையும் தடியடியையும் மேற்கொண்ட காவல் துறையினரும் அதிகாரிகளும் கடும் தலித் விரோதப் போக்குடன் இருந்துள்ளனர். சாதியைச் சொல்லி இழிவாகப் பேசிய வண்ணமே அவர்களை அடித்தும் சுட்டும் வீழ்த்தியுள்ளது பற்றி எம்மிடம் பலரும் முறையிட்டனர். இது அரசு நிர்வாகத்தின் மேல்சாதி ஆதரவு மனப்பான்மை, தலித் விரோதப் போக்கு, தலித்கள் என்றாலே கலவரம் செய்யக்கூடியவர்கள் என்கிற எண்ணத்துடன் அவர்கள் செயல்படுவது ஆகியவற்றிற்குச் சான்றாக உள்ளது.

9. துப்பாக்கிச் சூட்டில்  பல்லவராயனேந்தல் கணேசன் ( 55),  வீராம்பலைச் சேர்ந்த பன்னீர் செல்வம் ( 50),  மஞ்சூரைச் சேர்ந்த ஜெயபால் ( 19),  கீழ்க்கொடுமாநல்லூர் தீர்ப்புக்கனி ( 25),  காட்டுப் பரமக்குடியைச் சேர்ந்த முத்துகுமார் ( 25),  காக்கனேந்தல் வெள்ளைச்சாமி ( 55) ஆகிய ஆறு பேர்கள்  கொல்லப்பட்டுள்ளனர். கணேசன், வெள்ளைச்சாமி, ஜெயபால் ஆகிய மூவரின் இல்லங்களுக்கும் சென்று அவர்களது உறவினர்களைச் சந்தித்தோம். இவர்கள் அனைவருமே அந்த நேரத்தில் அங்கு வந்து சிக்கிக் கொண்டவர்களே அன்றி, அஞ்சலி செலுத்தும் நோக்குடன் வந்தவர்களோ ஜான் பாண்டியனின் அமைப்பைச் சேர்ந்தவர்களோ அல்ல. கணேசன் தன் மகளின் திருமண அழைப்பிதழை விநியோகிக்கச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களைக் கலகம் செய்ய வந்தவர்கள் என காவல் துறை கூறுவதை ஏற்க இயலாது. பெரும்பாலான துப்பாக்கிச் சூடு இடுப்புக்கு மேலேயே நடத்தப்பட்டுள்ளது. மாணிக்கம் நெற்றிப்பொட்டில் சுடப்பட்டுள்ளார்.  

10. சுடப்பட்டவர்களில் சிலர் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் காப்பாற்றப்பட்டிருக்கலாம். இன்று இறந்து போயுள்ள தீர்ப்புக்கனி உயிரிருக்கும் போதே பிணவறையில் கொண்டுவந்து போடப்பட்டுள்ளார். பிணவறையில் உயிருடன் ஆட்கள் இருப்பதை அறிந்து புகார் செய்தபின் உயிருடன் இருந்த குமார் என்பவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.  அதற்குள் தீர்ப்புக்கனி இறந்துள்ளார். தவிரவும் கொல்லப்பட்டவர்களில் குறைந்தபட்சம் இரண்டு பேரேனும் காவல் துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டுப்  பின்னர் சுடப்பட்டுள்ளனர் என்ற ஐயம் பலருக்கும் உள்ளது. வெள்ளைச்சாமியின் உடலைக் கொண்டு வந்த காவல் துறையினர் அவரின் உடலை விரைவாக எரிக்கச் சொல்லி உறவினர்களைக் கட்டாயப்படுத்தியுள்ளனர். அவர்களும் அச்சத்தில் அவ்வாறே செய்துள்ளனர். அவரின் உடலில் குண்டுக்காயம் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை எனவும் அவருடைய உறவினர்கள் எம்மிடம் தெரிவித்தனர். இறந்துபோன ஜெயபாலின் காலிலும் கூட துப்பாக்கிக் கட்டையால் அடித்து உடைத்தது போன்ற காயம் இருந்ததாக அவரது மாமியார் குறிப்பிட்டார். இவையெல்லாம் மக்களின் சந்தேகத்தில் உண்மை இருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன.

11. குண்டடிபட்டு இறந்துபோன ஜெயபால் மற்றும் அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுவரும் ஜெயபிரசாந்த் ஆகியோருக்கு குண்டுகாயம் முதுகுப்புறத்திலிருந்தே தொடங்குகிறது. அவர்கள் தப்பி ஓடும்போது காவல் துறையினர் சுட்டிருக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரியவருகிறது.

12. காயம்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. நெற்றியில் குண்டடிபட்ட மாணிக்கம், ஜெயபிரசாந்த் ஆகியோர் இதை எம்மிடம் கூறினார். ஸ்கேன் எடுப்பது முதலான ஒவ்வொன்றிற்கும்  ஜெயபிரசாந்த்திடம் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. “வைகோ அய்யா தான் என் மகனின் உயிரைக் காப்பாற்றினார்” என்று அவரது பெற்றோரக்ள் எம்மிடம் புலம்பினர். நீதிமன்றத்தை அணுகி இன்று மாணிக்கம், கார்த்திக் ராஜா ஆகிய இருவரும் மதுரை அப்பல்லோவில் சிகிச்சை பெற வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்...

1. சுமார் 10 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. யாரை வேண்டுமானாலும் கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யத்தக்கதாக இந்த முதல் தகவல் அறிக்கைகள் எழுதப்பட்டுள்ளன. 1500 பேருக்கு மேல் கைது செய்ய இருப்பதாக காவல் துறை திட்டமிட்டுச் செய்திகளை ஊடகங்களில் பரப்பி மக்கள் மத்தியில் பீதியை ஊட்டுகிறது. தவிரவும், அவ்வப்போது கிராமங்களுக்குச் சென்று பேருந்து முதலிய பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டிற்காக கைது செய்ய ஆட்களைக் கொடுங்கள் எனவும் காவல் துறையினர் மிரட்டுகின்றனர். பரளை என்ற கிராமத்திலிருந்து வந்த நாகவல்லி, ரேணுகாதேவி உள்ளிட்ட பெண்கள் செப்டம்பர் 18ம் தேதியன்று ஒரு போலிஸ் வேனில் வந்த காவல் துறையினர் இவ்வாறு மிரட்டியதை எம்மிடம் குறிப்பிட்டனர். தவிரவும், சாதாரண உடையில் வந்த போலிசார் சீருடையில் இருந்த போலிசாரை நோக்கிக் கற்களை வீசித்தாக்குவது போல பாவனை செய்து வீடியோ படம் எடுத்ததாகவும் எம்மிடம் குறிப்பிட்டனர். நயினார்கோயில், பரமக்குடி, முதுகுளத்தூர், இராமநாதபுரம் ஆகியவற்றைச் சுற்றியுள்ள சுமார் 50 கிராமங்களில் இரவில் ஆண்கள் பயந்து வீட்டில் தங்காத நிலை இன்று உள்ளது. எஸ்.காவனூர் என்கிற ஊரில் இருந்த அடிப்பட்ட ஒருவரைக் காண இரவு 8 மணி வாக்கில் நாங்கள் வாகனங்களில் சென்றதைக் கண்ட அக்கிராமத்திலுள்ள அத்தனை ஆண்களும், வருவது காவல்துறையோ என அஞ்சி ஓடியதை நாங்கள் நேரில் கண்டோம்.

2. தொடக்கத்தில் இரவு நேரத்தில் இவ்வாறு கிராமங்களுக்குச் சென்று மிரட்டினோம் எனவும், பின்னர் அதை நிறுத்திக் கொண்டதாகவும் எம்மிடம் விரிவாகப் பேசிய இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அருண்ராய் கூறினார். ஆனால் மறுபடியும் பேருந்துகள்மீது கல்வீச்சுகள் நடந்ததால் அப்படிச் செய்ய வேண்டி இருந்தது எனவும், இனி அப்படி நடக்காது எனவும் அவர் எங்களிடம் குறிப்பிட்டார்.

3. 21 பேர் இன்று ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். வேறு யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் பலர் பிடித்துச் செல்லப்பட்டு, அடித்துப் பின்னர் விடப்பட்டுள்ளனர். மற்றபடி நகர்ப்புறங்களில் 144 தடை உத்தரவு  இருந்த போதிலும் பெரிய கெடுபிடிகள் இல்லை. எங்கள் குழு சென்று வருவதற்கும், மக்களைச் சந்திப்பதற்கும் பெரிய தடை எதுவும் இருக்கவில்லை. எனினும், பெரிய அளவில் பரமக்குடி பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டிருப்பது, வருவோர் போவோர் அனைவரும் வீடியோவில் பதிவு செய்யப்படுவது முதலான நிகழ்வுகள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை தொடர்ந்து ஏற்படுத்தியுள்ளது.

4. இறந்துபோனவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 இலட்சம் மட்டும் அரசால் வழங்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு ரூ. 15,000 கொடுக்கப்பட்டுள்ளது. பலர், அந்தத் தொகை இன்னும் தங்களுக்கு வந்து சேரவில்லை என எங்களிடம் குறிப்பிட்டனர். இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு தி.மு.க சார்பாக 1 இலட்சமும், காங்கிரஸ் கட்சி  சார்பாக ரூ. 50,000மும் கொடுக்கப்பட்டுள்ளது.

கோரிக்கைகள்

1.  சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்திப்  பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கடும் தலித் விரோதப்போக்குடனும், உயர்சாதி ஆதிக்க ஆதரவுப் போக்குடனும் அது வெளிப்பட்டுள்ளது.  இது தலித் மக்கள் மத்தியில் தமக்கு எந்தவிதமான நீதியும் கிடைக்காது  என அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது. முதல்வர் தம் பேச்சிற்கு வருத்தம் தெரிவித்து, அதைத் திரும்பப் பெற வேண்டும். பாதிக்கப் பட்டவர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்த இது உதவும்.

2. துப்பாக்கிச் சூடு குறித்து அரசு நியமித்துள்ள ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி விசாரணை வெறும் கண்துடைப்பே. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நீதியும் கிடைக்காது. பணியில் உள்ள நீதிபதி ஒருவரின் தலைமையில்  விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.

3. தாக்குதல் நடத்திய போலிஸ் அதிகாரிகளிடமே புலன் விசாரணையை அளித்திருப்பது கேலிக்குரியது. சி.பி.ஐ விசாரணை ஒன்று உயர்நீதிமன்ற மேற்பார்வையின்கீழ் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

4. சந்தீப் மிட்டல், செந்தில் வேலன், சிவக்குமார் ஆகிய காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் மீது வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் வழக்கு தொடரப்பட வேண்டும்.

5. இறந்தவர்களின் குடும்பத்திற்கு அளிக்கப்பட்டுள்ள வெறும் 1 இலட்சம் ரூபாய் இழப்பீடு கேலிக்கூத்தாக உள்ளதை அரசியல் தலைவர்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த இழப்பீட்டுத் தொகையை 10 இலட்ச ரூபாயாக உயர்த்த வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும். அது, சத்துணவு உதவியாளர் என்பது போன்ற வேலைகளாக அல்லாமல் வேறு உயர்ந்த வேலைகள் அளிக்கப்பட வேண்டும்.

6. காயமடைந்தவர்களுக்கு அவர்களது காயத்திற்குத் தகுந்தாற்போல, குறைந்தபட்சம் 1 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

7. தலித் கிராமங்கள் பலவும் கடுமையாக அரசால் புறக்கணிக்கப்பட்டுள்ள  நிலையை நாங்கள் நேரில் கண்டோம். எடுத்துக்காட்டாக,  கொல்லப்பட்ட பழனிகுமாரின் பள்ளப்பச்சேரி கிராமத்தில் குடிநீர் வசதி, சாலை வசதி ஏதுமில்லை. சாதி இறுக்கம் மிகுந்த மண்டல மாணிக்கம் ஊரின் வழியாகவே வெளியூர் செல்லக்கூடிய நிலை மாற்றப்பட்டு புறவழிச்சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்பது அவர்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. அரசு இவற்றில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

8. மண்டல மாணிக்கம் போன்ற கிராமங்களில் உள்ள பள்ளிகளில் தலித் குழந்தைகள் மாற்றுச் சான்றிதழ் பெற்று வெளியேறுவது மிகவும் கவலையளிக்கக்கூடியதாக உள்ளது. இது குறித்த விசாரணை ஒன்றை மாவட்டக் கல்வி அலுவலரும், ஆதி திராவிட நலத்துறையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

9. பரமக்குடி, இராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை, வருவாய்த்துறை, உளவுத்துறை ஆகியவற்றிலுள்ள அதிகாரிகளில் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு பேர், தலித்கள் எவ்வளவு பேர்  என்ற விவரத்தை அரசு வெளியிட வேண்டும். இந்தத் துறைகள் ஒவ்வொன்றிலும் போதிய அளவில் இப்பகுதிகளில் தலித் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.

10. இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அல்லது பிறந்த நாளை அரசு அங்கீகரித்து விழா எடுக்க வேண்டும். இம்மானுவேல் சேகரனின் நினைவிடம் உள்ள சாலை அகலப்படுத்தித் தூய்மை செய்யப்பட வேண்டும்.

11. அரசு மற்றும் காவல் துறை அதிகாரிகள் மத்தியில் தலித் விரோத மன நிலையும், ஆதிக்கச் சாதி ஆதரவுப் போக்கும் உள்ள நிலைக்கு எதிராக அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். திருமதி. சிவகாமி ஐ.ஏ.எஸ். ஆதிதிராவிட நலத்துறைச் செயலாளராக இருந்தபோது, அரசு மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு தலித் பிரச்சனைகளில் உணர்வூட்டுதல் என்ற பயிற்சியைத் தொடங்கினார். எனினும், அது விரைவில் நிறுத்தப்பட்டு விட்டது. அரசு இதைத் தொடர வேண்டும். அருண்ராய் போன்ற இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடமே தலித் தலைவர்கள் என்றால் ரவுடிகள் என்பது போன்ற ஒரு பார்வையும், ஆதிக்கச் சாதிக்குச் சமமாக அடித்தள மக்கள் உரிமை கோரும்போது, அது சட்டப்பூர்வமானதாக இருப்பினும் பொறுப்பற்ற செயல் என்பதாகக் கருதும் போக்கும் இருப்பது கவலையளிக்கிறது.

12. துப்பாக்கிச் சூட்டை அரசியல் கட்சிகள் பலவும் கண்டித்துள்ளன. சாதிக் கட்சிகள், குறிப்பாக முக்குலத்தோர் சார்ந்த சாதிக் கட்சிகள் கண்டிக்காதது வருந்தத்தக்கது. துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்துள்ள அரசியல் கட்சிகள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்த அழுத்தத்தைத் தொடர்ந்து அரசுக்கு அளிக்க வேண்டும்.

13. பாதிக்கப்பட்டோருக்காக நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடிவரும் வழக்கறிஞர்கள் பொ.இரத்தினம், பசுமலை, ரஜினி ஆகியோரை இக்குழு பாராட்டுகின்றது.

தொடர்பு முகவரி:
பேரா. அ.மார்க்ஸ்
3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர்
அடையாறு, சென்னை - 600 020. செல்: 94441 20582

வழக்கறிஞர் ஏ.முஹம்மது யூசுப்
142, வடக்கு வெளி வீதி, 2வது மாடி, யானைக்கல்
மதுரை - 625 001. செல்: 94898 71185

»»  (மேலும்)

கொழும்பு தேடுதல்களில் 199 பேர் கைது

கொழும்பு, கொழும்பு மத்தி மற்றும் கொழும்பு வடக்கு ஆகிய பொலிஸ் பிரிவுகளில் நடத்தப்பட்ட பாரிய தேடுதல் நடவடிக்கையில் சந்தேகத்திற் கிடமான 199 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மெக்சி புரொக்டர் தெரிவித்தார்.
கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய இப்பாரிய வேட்டையில் 220 பொலிஸார் தேடுதல் நடத்தியிருந்தனர்.
இதில் பாரிய திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர், கஞ்சா, கசிப்பு, ஹெரோயின் வைத்திருந்த 59 பேர், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 16 பேர் உள்ளிட்ட பல்வேறு கொலைக்குற்றங்களுடன் தொடர்புடை யவர்கள் கைது செய்யப்பட்டுள் ளனர்.
அதேவேளை வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்ட பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 21 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் மெக்ஸி புரொக்டர் தெரிவித்தார்.

»»  (மேலும்)

மட்டக்களப்பு நாவற்கேனி கிராமத்திற்கு கிழக்கு முதல்வர் திடீர் விஜயம்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் மட்டக்களப்பு  நாவற்கேணி ஸ்ரீகண்ணகி வித்தியாலயத்தில் மக்கள் கலந்துரையாடல்  ஒன்றினை மேற்கொண்டு பின்பு அக்கிராமத்தையும் பார்வையிட்டு,  அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்ததுடன் அக்கிராமத்திற்கு அத்தியாவசிய தேவையான மின்சாரம் மற்றும் வீதிகளை புணரமைத்துத் தருவதாகவும் உறுதியளித்து கொண்டார்.
»»  (மேலும்)

தமிழர் விடுதலைக் கூட்டணியின் வருடாந்த மகாநாடு** தீர்மானங்கள்.

  தமிழர் விடுதலைக் கூட்டணியின் வருடாந்திர மகாநாடு 2011-09-25 அன்று இடம்பெற்ற போது அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
 

1.                  தமிழரசுக் கட்சியின் வீட்டுச்சின்னத்தில் அண்மையில் நடைபெற்ற உள்ளுராட்;சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி நிபந்தனை அற்ற ஆதரவினை கொடுத்தது. எமது ஒற்றுமையினை நிலைநாட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து பல்வேறு உளளுராட்;சி மன்றங்களில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் சில வேட்பாளர்களை, தமிழ்மக்களின் விருப்பத்திற்கு அமைய கொடுத்து உதவினோம். உதயசூரியன் சின்னத்தில் இரு உளளுராட்;சி மன்றங்களில் போட்டியிட்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு வெற்றிகளையும் ஈட்டிக்கொடுத்தோம். தமிழர் விடுதலைக்கூட்டணி தமிழர் தேசிய கூட்டமைப்போடு உள்ள உறவினை மீண்டும் வலியறுத்தி பொது மக்களின் நன்மைக்காக ஒன்றுசேர்ந்து செயற்படுவதோடு ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படாதவகையில் செயற்படும்.
2.                  தமிழர் விடுதலைக் கூட்டணி தமது அகிம்சை கொள்கையை மீண்டும் வலியுறுத்தி சிறுபான்மை மக்கள் எதிர்நோக்கும் சகல பிரச்சினைகளையும் பேச்சு வார்த்தை மூலம் இசைய வைத்து  சமாதான முறையில் நியாயமான தீர்வை வென்றெடுக்கும்.3.                  தமிழர் விடுதலை கூட்டணி சிங்;களவர், இஸ்லாமியர், மலாயர், பறங்கியர், ஆகியோருடனும் மற்றும் இன மத மக்களுடனும் நல்லுறவைப் பேண திடசங்கற்பம் பூண்டுள்ளது. அதேவேளை அரசு இலங்கை வாழ் மக்கள் அனைவரையும் சமமாக நடத்தி அவர்களுடைய மறுக்கமுடியாத ஜனநாயக மனிதாபிமான உரிமைகளுடன் ஏனைய உரிமைகளையும் அனுபவிக்க உத்தரவாதம் அளிக்கவேண்டும்.4.                  30 ஆண்டிற்கு மேலாக வடகிழக்கு வாழ் மக்கள் அனுபவித்த தாங்க முடியாத துன்பங்களை குறிப்பாக யுத்தம் உச்சக்கட்டம் அடைந்த போது மேலோங்கி நின்ற வன்முறையை வேறு எந்த துன்ப சம்பவத்துடனும் ஒப்பிட முடியாது. சுனாமி போன்ற தேசிய இயற்கை அழிவினை நாட்டில் உள்ள அனைவரினதும் குறிப்பாக தமது சமய நம்பிக்கை கோட்பாடு ஆகியவற்றில் நம்பிக்கை வைத்திருக்கும் சிங்கள கிராம வாசிகளில் மூத்தோரின் உள்ளத்தினை தொட்டுள்ளது என்றால் தழிழ் மக்களுக்கு எற்பட்ட அழிவுகள் ;எவ்வளவு தூரம் அவர்களை பாதித்திருக்கும் என்பதை கற்பனை கூட பண்ணிப்பார்க்க முடியாது. சுனாமியின் பின், ஒர் சிங்கள மூதாட்டி தன் தலை மீது பல உணவு பொட்டலங்களை சுமந்து, சீரற்ற பாதையினால் வெகுதூரம் நடந்து சென்று, தனக்கு முன் பின் தெரியாத தமிழ்;;;, இஸ்லாமிய சகோதரர்களின் பசியினை தீர்த்து வைத்தார் என கூறும் பொழுது எனக்கு கொஞ்சம் பெருமையாக தான் இருக்கின்றது. இதேபோன்று ஒரு சிங்களவர் கூட இல்லாத தமிழ் இஸ்லாமிய அகதிகளுக்கு ஒர் பௌத்த மத குரு அகதி முகாம் அமைத்து அளப்பரிய சேவை செய்தார். தமிழர்களோ, இஸ்லாமியர்களோ, சிங்களவர்களோ கிராமவாசிகளின் மன போக்கு இவ்வாறு தான் எங்கும் இருக்கின்றது. எனவே ஒர் பிரச்சினையை அனுதாபத்தோடு அணுகக்கூடிய சாதாரணமான மக்களிடம் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணும் பொறுப்பினை ஜனாதிபதி கையளிக்க வேண்டும். கிராமவாசிகள் நியாயமாக சிந்திப்பர், நியாயமாகவும் நடப்பர். இதனை சர்வதேச வாக்கெடுப்பு மூலம் மக்களின் தீர்ப்புக்கு விடவதே சிறந்தது என தமிழர் விடுதலைக் கூட்டணி நம்புகின்றது.5.                  யுத்தம் முடிவுற்று 2 வருடங்களின் பின்பும் மீள குடியேற்றப்பட்ட ஒரு தொகுதி மக்கள் மீளக்குடியேறி ஒருவருடம் ஆகியும் முறையாக தமது வாழ்வினை ஆரம்பிக்கவில்லை. அநேகருக்கு தமது வாழ்க்கையினைக் கொண்டு நடத்துவதற்குரிய போதிய வழிவகை இல்லை. அநேகர் வீட்டுத்தலைவன்  கணவன், மனைவி, பிள்ளைகள் என இழந்துள்ளனர். அநேகமாக எல்லா மக்களும் தமது உடைமைகள் அனைத்தையுமஇ; வீடுகளினையும் இழந்து உள்ளனர். ஆகவே தமிழர் விடுதலைக் கூட்டணி ஓர் பொருத்தமான வழிமுறையில் உளளுர் மக்களின் பங்களிப்போடு மீளக்குடியேற்றம் புனர்நிர்மானம் ஆகியவற்றை நீதியான முறையில் அமுல்படுத்த வேண்டும்.6.                  நாடு ப+ராக மக்களிற்;கு ப+ரண சமாதானமும் குறிப்பாக யுத்தத்தால் அழிவடைந்த வடகிழக்கு பகுதிகளில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் என தமிழர் விடுதலை கூட்டணி வேண்டுகின்றது. மனத்திருப்தி அற்ற சமுதாயத்தால் சமாதானத்தினை அடைய முடியாது. வட கிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்கள் இடம் பெயராது இருக்கவில்லை. சிலர் 18 தடவைகளுக்கு மேல் இடம் பெயர்ந்துள்ளனர். அத்தகைய நடை முறையின் போது அவர்கள் தமது சொத்துக்கள் அனைத்தையும். இழந்து தம்வாழ்கையினை கொண்டு நடத்த  முடியாத அளவிற்கு ஒட்டாண்டி ஆகிவிட்டனர். இந்த பரிதாபகரமான நிலையில் இவர்களின் முக்கியமான பிரச்சினை காணி சம்பந்தப்பட்டதே. தங்களுடைய காணிகளையும் தாங்கள் வாரிசாக பெற்ற காணிகளையும் இன்னும் அநேகர் அடையாளம் காணவில்லை. அநேகமான காணி சொந்தக்காரர்கள் பிறநாட்டில் வாழ்கின்றனர். அவர்களில் சிலர் பராயம் அடையாதவர்கள். அநேகர் தமது காணி உறுதிப்பத்திரங்களை இழந்துள்ளனர். இத்தகைய பல  பிரச்சினைகள் மத்தியில் மக்களை தமது காணிகளை பதியுமாறு கேட்பது அவசியம் தானா? தாம் ஆண்டு அனுபவிக்கும் காணிகளையும் பதியுமாறு கேட்பதை தமிழர் விடுதலைக்கூட்டணி தமது கடும் ஆட்சேபனையை அரசிற்கு தெரிவித்துக் கொள்கின்றது. அரசு காணி கொடுக்க விரும்பின் காணிப் பிரச்சனை தீரும் வரை பொறுத்திருக்க வேண்டும். இத்திட்டத்தினை நாடு ப+ராகவும் அமுல்படுத்துவதாக இருப்பின் அரசு அப்பணியினை இடம் பெயராது வாழ்கின்ற மாவட்டங்களில் ஆரம்பிக்கலாம் நில சொந்தக்காரர்களிடம் இருந்து அவர்களின் காணி விபரங்களினை பெறுவதனை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என தமிழர் விடுதலைகூட்டணி வன்மையாக வற்புறுத்தி வேண்டுகின்றது. மேலும் மரணம் அடைந்த பலரது காணிகள் இக்கட்டத்தில் இன்னும் கண்டறியவோ அடையாளம் காணவோ முடியவில்லை.7.                  விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் என்னும் சந்தேகத்தில் பல இளைஞர், யுவதிகள் இன்று தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் அநேகர் குற்றமற்றவர்கள் விடுதலைப்புலிகளின் தீவிர போக்காளர்கள்; தமது தலைமைக்கு துரோகம் செய்துவிட்டு இன்று இராணுவத்தின் புலனாய்வு பிரிவில் இணைந்து செயலாற்றும் போது, பலாத்காரமாக சேர்க்கப்பட்ட சிறுசிறு வேலைகள் செய்வதற்கும் உணவு வழங்கியதாகவும் சந்தேகப்பட்டு அப்பாவிகளினை பிடித்து வைத்திருப்பது நியாயமற்ற செயலாகும். அத்தகையோரை உடன் விடுதலை செய்யும்மாறு அரசினை தமிழர் விடுதலை கூட்டணி வேண்டுகின்றது. மேலதிகாரிகளின் ஆதரவினை பெறுவதற்காக அப்பாவி இளைஞர்கள் பற்றி பொய்யான தகவல்களை முன்னாள் விடுதலைப்புலிப்போராளிகள் இன்று இராணுவ புலனாய்வுப்பிரிவில் இணைந்து கூறிவருகின்றனர். இத்தகையோரின் அறிக்கைகள் மூலமாக அப்பாவிகள் தண்டிக்கப்படுவது துரதிஷ்டமே8.                  யுத்தம் மக்களுக்கும், உடைமைகளுக்கும் பல நஷ்டத்தினை ஏற்படுத்திக்கொடுத்ததுடன் மனஉளச்சலையும் ஏற்படுத்தி உள்ளது. பெண்கள் ஆயுதங்களைக் கண்டதும் பைத்தியம் பிடித்தது போல் காணப்படுகின்றனர். கிறிஸ்ப+தங்களின் பிரசன்னமும் நடவடிக்கைகளும் நிலைமையினை மிகவும் மோசம் அடைய வைத்துள்ளது. பொழுது சாயும் நேரம் தொடக்கம் பொழுது புலரும் வரை பெண்கள் வீட்டின் வெளியே வருவதில்லை குறிப்பாக வயது முதிர்ந்த பெண் பிள்ளைகள் பாடசாலை செல்வதினை நிறுத்தியுள்ளனர். ஆண்கள் பெண்களிற்கு பாதுகாப்பிற்காக இரவு பகலாக விழித்திருப்பதால் தம் வேலைகளினை சரிவர செய்யாது வருமானத்தில் பெருமளவினை இழக்கின்றனர். இவ்விடயத்தில் அரசு கடும் நடவடிக்கை எடுக்கத்தவரின் விளைவுகள் படுமோசமாகும். ஆகவே தமிழர் விடுதலைக்கூட்டணி ஒரு ஐனாதிபதி ஆணைக்குழுவையோ அன்றில் உயர் சக்தி படைத்த ஒரு குழுவினையோ நியமித்து ப+ரண விசாரனை நடாத்த வேண்டும் என தமிழர் விடுதலைக்கூட்டணி ஐனாதிபதியினை வற்புறுத்துகின்றது.

9.                  தம்வீடுகளிலிருந்து விரட்டப்பட்ட இஸ்லாமிய மக்கள் அவர்களின் வீடுகளில் மீள்குடியேற்றப்படவில்லை தம் உடைமைகள் அனைத்தையும் கைவிட்டு சொற்ப பணத்துடனேயே சென்றனர். அவர்களுக்கு முறைப்படி நஷ்டஈடு கொடுத்து அரசே வீடுகள் அமைத்து கொடுக்க வேண்டும் என்றும் அதே நேரத்தில் 1983ம் ஆண்டு ய+லைக்கலவரத்தில் நாடு தழுவி வாழ்ந்த தமிழர்கள் தம் சொத்துக்கள் அனைத்தையும் இழந்து நாட்டைவிட்டு வெளியேறி தமிழ்நாட்டில் குடியேறினர். எனவே போதியளவு நஷ்டஈடு வழங்குவதன் மூலம் அவர்கள் மீளக்குடியேறுவதற்கு தூண்டுதலாக அது அமையும். அவர்கள் இழந்த அசைவற்ற ஆதனங்களை பிடித்து வைத்திருப்பவர்களிடமிருந்து மீட்;டுக்கொடுக்க வேண்டும். அத்துடன் இடம் பெயர்ந்த மக்கள் இழந்த சொத்துக்களிற்கு நஷ்டஈடு வழங்குவதாக ஜனாதிபதி கூறியதினை நினைவ+ட்டி சொத்துக்களை இழந்தவர்களுக்கு அரசு நஷ்டஈட்டினை வழங்குவதோடு தம் நிலங்களை இழந்து தெற்கே சென்ற மக்களுக்கு அவர்களின் காணிகளை பெற்றுக்கொடுக்க வேண்டும்.10.              இராணுவத்தினரால் யுத்தத்தின் போது கைப்பற்றப்பட்ட தங்கம் மக்களுக்கு சொந்தமானது. சிலர் விடுதலை புலிகளிடம் தமது நகைகளை ஈடு வைத்துள்ளனர். இது தவிர ஒவ்வொரு வீட்டுக்காரரும் குறிப்பிட்ட அளவு தங்கத்தை விடுதலைப் புலிகளின் மண்ணைக் காக்கும் நிதிக்கு செலுத்தி பற்றுச்சீட்டும் பெற்றுள்ளனர். இத்தங்கத்தை சட்டப்படியும் தார்மீக அடிப்படையிலும் மக்களுக்கே சொந்தமாகையினால் அரசு மக்களுக்கே மீள கையளிக்க வேண்டும் என்பதை தமிழர் விடுதலைக் கூட்டணி வலியுறுத்துகின்றது.11.   மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள மக்கள் முன்னொருபோதுமில்லாத வகையில் பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர். போத்துவிலிலுள்ள அறுகம்பை தொடக்கம் யாழ்ப்பாணத்திலுள்ள மயிலிட்டி வரை இத் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் சொல்லொணா கஸ்டங்களை அனுபவிக்கின்றனர். மீன் பிடிப்பதற்கு மீனவர்கள் எவரிடமும் அனுமதிப்பத்திரம் பெறவேண்டிய அவசியம் இல்லை. உள்ளுர் மீனவர்களுக்கு இத்தகைய இடைய+றுகளை கொடுப்பதை வன்மையாக கண்டித்து 30 ஆண்டுகளுக்கு முன் எவ்வாறு சுதந்திரமாக தொழிலில் ஈடுபட்டார்களோ அவ்வாறே அவர்களை விட்டுவிடும்படி தமிழர் விடுதலைக் கூட்டணி அரசை வற்புறுத்துகின்றது.12.   படையினரால் குறிப்பாக பெண் படையினர் மனிதநேய சேவையை இயற்கை அனர்த்தங்களின்போதும் அகதி முகாம்களிலும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆற்றிவந்த தொண்டை தமிழர் விடுதலைக் கூட்டணி அங்கீகரித்து பாராட்டையும் தெரிவிக்கின்றது. சுpல சந்தர்ப்பங்களில் இராணுவத்தினரின் கொடூரமான நடவடிக்கைகள் பற்றி மக்கள் அறிந்துள்ளனர். ஆண்மையில் நாவாந்துறையில் மிருகத்தனமாக ஆண்களும் பெண்களும் இராணுவத்தினரால் தாக்கப்பட்டமை இதற்கு சான்றாகும். 1970ம் ஆண்டு பிற்பகுதியிலும் 1980க்களின் முற்பகுதியிலும் இராணுவத்தினரது கொடூர நடவடிக்கைகள் இளைஞர்களை தலைமறைவாகச் செய்யவும் ஆயுதங்களை ஏந்தவும் வழிவகுத்தது. முன்பிருந்து இயங்கிவந்த இராணுவ முகாம்களை இயங்க வைக்க மிக சிறு இராணுவத்தினரை ஈடுபடுத்திக்கொண்டு ஏனைய புதிதாக அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களையும் இராணுவத்தினரையும் அகற்றும்படியும் தமிழர் விடுதலைக் கூட்டணி அரசை வற்புறுத்துகிறது. கடந்த காலத்து மகிழ்சிகரமான வாழ்க்கைக்கு திரும்பிவிட்டோம் என மக்கள் எண்ண வேண்டுமேயொழிய வேறு சிலரின் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு விட்டோம் என்றல்ல. நாட்டிற்கு சுமூக வாழ்வை மீள கொண்டுவர அரசுக்குள்ள ஒரேயொரு வழி இது மட்டுமே. 200000க்கும் மேற்பட்ட மக்களின் உயிர்களையும் பல கோடிகள் பெறுமதியான சொத்துக்களையும் இழந்தும் இனப்பிரச்சனை தீர்வுக்கு அவசியமற்ற காலவிரயத்தை ஏற்படுத்துவதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி தனது அதிருப்தியை தெரிவிக்கின்றது. அவசியமேற்படின் பொருத்தமான சில மாற்றங்களுடன் இந்திய அரசியல் சாசனத்தை ஒத்த தீர்வை அரசு முன்வைக்க வேண்டுமென நாம் அரசை வற்புறுத்துகின்றோம்.
13.  இந்திய முறையிலான ஆட்சிக்கு இலங்கை வாழ் மக்களில் பெரும்பான்மையினர் உடன்பாடானவர்கள் என்பது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தீர்க்கமான அபிப்பிராயமாகும்.14.  இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு ஒற்றையாட்சி முறையில் அமையுமானால் சமாதானமோ அல்லது நிரந்தர தீர்வோ ஒருபோதும் ஏற்படாது என்பது தமிழர் விடுதலைக் கூட்டணியின் திடமான எண்ணக்கருவாகும்.15.   மக்கள் தம் உறவுகளை எண்ணி துயருடனும், தாமே இன்னும் முறையாக வாழ்வை ஆரம்பிக்காத நிலையிலும் பிறரை அவர்கள் மத்தியில் குடியிருக்க வைப்பது எதிர்பார்ப்புக்கு முரணாக அமையும் என்ற பாடத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி அரசுக்கு புகுத்துகின்றது.

»»  (மேலும்)