6/30/2012

| |

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள கிரேக்கம்

அமைதி, செழிப்பு, ஒற்றுமை ஆகியவற்றுக்காகப் பாடுபடுவோம் என்று உறுதி கூறி கைகோர்த்த ஐரோப்பிய யூனியன் நாடுகள், இப்போது மக்களின் மன அமைதியைப் பறித்து செழிப்பையும் தொலைத்துவிட்டது. ஒற்றுமை என்பது விரைவில் கேள்விக்குறியாகும் நிலையில் உள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஐரோப்பிய யூனியன் நாடுகளில் ஒன்றான கிரேக்கத்தில் நாடாளுமன் றத்துக்கு முன்பு முதியவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். மீள முடியாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அந்நாட்டில் வரவு செலவுத் திட்ட சீர்த்திருத்தங்களால் ஓய்வூதியத்தை இழந்து வாழ வழியில்லாமல் விரக்தி அடைந்து அவர் எடுத்த சோக முடிவு அது. இது ஓர் உதாரணம் தான். வேலையின்மை, முன்னெப் போதும் எதிர்கொண்டிராத பொரு ளாதார நெருக்கடி ஆகியவற்றால் ஐரோப்பிய நாடுகளில் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலைநாடுகள் என்றாலே செல்வச் செழிப்பு மிக்கவை என்று நம்மவர்களுக்கு ஏற்படும் பிம்பம் மெதுவாக மறைந்து வருகிறது.
கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள கிரேக்கத்துக்கு நிதியுதவி செய்யும் ஐரோப்பிய யூனியன், ஐரோப்பிய மத்திய வங்கி, சர்வதேச செலாவணி நிதியம் ஆகியவை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கடுமையான சிக்கன நடவடிக்கையால் அந்நாட்டில் சமூக நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது முற்றிலும் குறைந்து விட்டது. வேலையின்மை விகிதம் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு 21 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ஓய்வூதியம் வழங்குவது 40 சதவிகிதம் அளவுக்குக் குறைந்துவிட்டது.
இவ்வாறு எதிர்கால நம்பிக்கையைத் தொலைத்து வாழ்க்கைதரம் அழிந்து மக்கள் நிற்பது கிரேக்கத்துடன் நின்றுவிடவில்லை. இத்தாலி, ஸ்பெயின், பெல்ஜியம், அயர்லாந்து, ஸ்லோவேனியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளும் பொருளாதார மந்த நிலையின் தொடர் விளைவுகளைச் சந்தித்து வருகின்றன.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் மேலும் பல புதிய நெருக்கடியை உருவாக்கி மக்கள் மீது மேலும் துன்பங்களைத் திணித்துள்ளன.
இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் சாத்தியமல்ல என்பது தெளிவாகத் தெரியத் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் அதற்கு மாற்று என்ன என்பதைச் சந்திக்க முடியாத சூழ்நிலைதான் உள்ளது.
ஏற்கெனவே ஐரோப்பிய நாடுகளில் கொன்று புதைக்கப்பட்டுவிட்ட சோஷலிசக் கொள்கைகளுக்கு அவர்களே நினைத்தாலும் மீண்டும் உயிர்கொடுக்க முடியாது.
இத்தகைய இக்கட்டான சூழ்நிலை க்கு மத்தியில் கிரேக்கத்தில் தேர்தல் முடிந்துள்ளது. உலகமே பெரிதும் எதிர் பார்த்த இத்தேர்தலில் ஐரோப்பிய யூனியன் தரும் கடன் மீட்சிக்கான உடன்படிக்கையை ஆதரிக்கும் புதிய ஜனநாயகக் கட்சிக்கும், அதனை எதி ர்க்கும் சைரிஸா கட்சிக்கும் இடையே தான் முக்கியப் போட்டியிருந்தது.
கடன் மீட்சி உடன்படிக்கையை எதிர்க்கும் சைரிஸா கட்சி வென்றால் ஐரோப்பிய யூனியனில் இருந்து கிரேக்கம் வெளியேறும். அதன் தொடர் விளைவாக ஐரோப்பிய யூனியனே கலகலத்துவிடும் சூழல் இருந்தது.
ஆனால் கடும் போட்டிக்கு நடுவே சிறிய வித்தியாசத்தில் புதிய ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. தங்கள் கொள்கைகளுக்கு கிரேக்கத்தில் முதல் அடி கிடைத்துவிடுமோ என்ற அச்சத்தில் இருந்த முதலாளித்துவத்தின் முதலாளிகளான அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை தேர்தல் முடிவை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளன.
கிரேக்கம் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அது விலகும் சூழ்நிலை ஏற்பட்டால் அந்த பாதிப்பு மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவும் என்ற அச்சம் இருந்தது. இதனால் சர்வதேச பொருளாதாரமும் நெருக்கடியில் சிக்கும் என்ற கவலையும் இருந்தது. கிரேக்கத்தின் இப்போதைய தேர்தல் முடிவால் சர்வதேச சமூகத்துக்கு ஏற்படயிருந்த பிரச்சினைகள் தற்காலிகமாக தள்ளிச் சென்றுள்ளனவே அன்றி நிரந்தரத் தீர்வு ஏற்படவில்லை.
கிரேக்கத்தின் புதிய அத்தியாயம் தொடங்கிவிட்டதென தேர்தலில் வென்றுள்ள புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஆண்டனிஸ் சமராஸ் தெரிவித்துள்ளார். எனினும் ஆட்சியாளர் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்ற நிலைதான் கிரேக்கத்தில் தொடரவுள்ளது.
முதலாளித்துவம் ஊட்டும் கடன் மீட்பு நடவடிக்கை எனும் கசப்பு மரு ந்து மேலும் பல மோசமான விளை வுகளை ஏற்படுத்தக் காத்திருக்கிறது.
கொள்ளை லாபம் ஈட்டவும் மூலதனத்தைத் திரட்டவும், மக்களை அதீத நுகர்வு கலாசாரத்துக்குள் அழைத்துச் செல்லும் கொள்ளையுடை யது முதலாளித்துவ பொருளாதார அமைப்பு மக்களிடையே வாங்கும் சக்தி குறைந்தபோது, எளிதாகக் கடன் வழங்கி மக்களை மேலும் கட னில் மூழ்கச் செய்தன முதலாளித்துவ அரசுகள். பொருளாதார மந்த நிலை யால் கடனைத் திரும்பச் செலுத்த முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப் பட்டனர்.
இப்போது நெருக்கடியைச் சமாளிக்க சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரில் சமூக நலத் திட்டச் செயலவுகளைக் குறைப்பது, ஊதியத்தை நிறுத்தி வைப்பது ஓய்வூதியங்களைக் குறைப்பது என மக்களை நோக்கி சாட்டையைச் சுழற்றுகிறது ஐரோப்பிய அரசுகள்.
»»  (மேலும்)

| |

இந்தியா - ரஷ்யா கூட்டு தயாரிப்பில் உருவாகும் ஒலியின் வேகத்தை மிஞ்சும் பிரமோஸ் ஏவுகணை

இந்திய மற்றும் ரஷ்ய கூட்டு தயாரிப்பில் உலகின் மிக அதிவேக பிரமோஸ் ஏவுகணையினை வருகிற 2017ம் ஆண்டிற்குள் சோதனை செய்திட திட்டமிட்டுள்ளது.
இந்த ஏவுகணை ஒலியை போன்று 5 முதல் 7 மடங்கு வேகத்தில் செல்லும் திறன் பெற்றது என்று தலைமை செயல் அதிகாரி சிவதாணு பிள்ளை தெரிவித்தார்.
கடந்த வருடம் ஒலியை போன்று 5 மடங்கு விரைவாக செல்லும் ஏவுகணையை அமெரிக்கா சோதனை செய்தது.
தற்போது, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகியவற்றின் தயாரிப்பான பிரமோஸ் அந்த சாதனையை நெருங்கும் என கூறப்படுகிறது.
தரையிலிருந்து வான்வெளியிலிருந்து மற்றும் கடலிலிருந்து என 3 வழிகளில் செலுத்தும் வகையில் தயாராகும் இந்த ஏவுகணை உலகின் எந்த இலக்கையும் ஒரு மணி நேரத்தில் சென்று தாக்க கூடிய அளவிற்கு சக்தி வாய்ந்தது.
மேலும் இதனை இந்தியா மற்றும் ரஷ்யா தவிர வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
»»  (மேலும்)

| |

கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக கொக்கரிக்கும் கூட்டங்கள்

கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டிருக்கின்றது. வேட்புமணுத்தாக்கல்
செய்வதற்கான திகதியும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. எதிர்வரும்
செப்டெம்பர் மாதம் எட்டாம் திகதி தேர்தல் இடம்பெறலாம் என பரவலாக
பேசப்படுகின்ற நிலையில் அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துக்களை
தெரிவித்து வருகின்றன.

தாங்கள் ஆடசியை அமைப்போம், தங்களுக்குத்தான் முதலமைச்சர் பதவி
கிடைக்கும் என்றெல்லாம் ஒவ்வொரு கட்சியும் சொல்லிக்
கொண்டிருக்கின்றனர். யார் முதலமைச்சர் என்பதனை மக்கள்
தீர்மானிப்பார்கள். யார் கிழக்கு மக்களுக்காக சேவை செய்யக்கூடியவர்கள்,
சந்தர்ப்பவாத அரசியலை நடாத்துபவர்கள் யார் என்பதனை கிழக்கு மக்கள் நன்கு
உணர்ந்திருக்கின்றனர். அரசியல் கட்சிகளோ அல்லது அரசியல்வாதிகளோ
பொய்ப்பிரச்சாரங்கள் மூலமாக மீண்டும் கிழக்கு மக்களை ஏமாற்றலாம் என்று
நினைப்பார்களானால் அது அவர்களின் முட்டாள்தனமாகும். இன்று கிழக்கு மக்கள்
உண்மைகளையும் , யதார்த்தங்களையும் நன்கு உணர்ந்திருக்கின்றனர்.

யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு கிழக்கிலே ஜனநாயகக் கதவுகள்
திறக்கப்பட்டிருக்கின்ற இன்றைய நிலையில். நடைபெற இருக்கின்ற மாகாணசபைத்
தேர்தலிலே போட்டியிடுவதற்கு பலரும் முண்டியடித்துக்
கொண்டிருக்கின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் நடைபெற இருக்கின்ற
கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலே களமிறங்க இருக்கின்றனர். இவர்கள் இத்
தேர்தலில் களமிறங்குவதன் மூலமாக சாதிக்கப் போவது என்ன? இவர்கள் இத்
தேர்தலில் போட்டியிடுவதன் நோக்கம் என்ன?

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் கொள்கைகள் என்ன என்பதனையே நான் அடிக்கடி
கேட்டுக்கொண்டு வருகின்றேன். இதுவரை யாரும் பதில் சொன்னதாகத்
தெரியவில்லை. அடிக்கடி கொள்கைகள் மாற்றப்படுவதாகவே நான் உணர்கின்றேன்.
தமிழீழமே இறுதி மூச்சு, புலிகளே எமது ஏக பிரதிநிதிகள், வடக்கு, கிழக்கு
இணைந்ததே எமது தாயகம் என்ற கொள்கைகளும் கோசங்களும் எங்கே போனது?

இன்று கிழக்கு மாகாணத்தில் தனித்த கிழக்கு மாகாணசபையில் போட்டியிட
தீர்மானித்திருக்கும் கூட்டமைப்பினர் வடக்கு கிழக்கு பிரிந்திருப்பதனை
விரும்புகின்றனரா? தமது கொள்கைகளை கைவிட்டனரா? அப்படியானால் நீங்கள்
அரசியல் சுயலாபம் தேடுவதற்காகவா வீரவசனங்களைப் பேசி எமது மக்களை சூடேற்றி
போராட்டத்திற்கு அனுப்பி பலிக்கடாவாக்கினீர்கள். இன்று நீங்கள்
எடுத்திருக்கும் முடிவுகளை அன்று எடுத்திருந்தால் இத்தனை இலட்சக்கணக்கான
தமிழ் உறவுகளின் உயிர்களை பலி கொடுத்திருக்க வேண்டிய அவசியம்
இருந்திருக்காதே.

தமிழர்களுக்காக குரல் கொடுக்கின்றோம் என்று கூறும் கூட்டமைப்பினர்
இதுவரை தமிழர்களுக்காக என்ன செய்தனர்? தாயக மீட்பு போராட்டம் எனும்
போர்வையில் நீங்கள் அரங்கேற்றிய நாடகங்களில் எந்த ஒரு கூட்டமைப்பு
அரசியல்வாதியின் குடும்பம் பங்கெடுத்திருக்கின்றதா? எந்த கூட்டமைப்பு
அரசியல்வாதியாவது தலை நிமிர்ந்து சொல்லட்டும் பார்க்கலாம்.

அது போகட்டும் முள்ளிவாய்க்கால் படுகொலை என்று இன்று கொக்கரிக்கின்ற
கூட்டமைப்பின் ஒரு பாராளுமன்ற ஒறுப்பினராவது முள்ளிவாய்க்காலில் உக்கிர
மோதல் நடைபெற்றபோது வாய் திறந்தார்களா? யாராவது ஒருவர் குரல்
கொடுத்தாரா? சின்னச்சின்ன விடயங்களுக்கெல்லாம் அறிக்கைவிடும் அறிக்கை
மன்னர்கள் அன்று மெளனம் சாதித்தது ஏன்?

தொடரும்.....
»»  (மேலும்)

6/29/2012

| |

அதிகாரத்தை விட்டுக்கொடுக்காமல் முடிந்தவரையில் அபிவிருத்தியையும் செய்து எங்கள் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தியுள்ளோம் - முன்னாள் முதலமைச்சர்


கிழக்கு மாகாணசபை தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நிச்சயமாக நடைபெறும் என தெரிவித்த கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்,அடுத்த முதலமைச்சராக மட்டக்களப்பு அல்லது அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த ஒருவரே வருவார் என தான் நம்புவதாகம் தெரிவித்தார்.
 
மட்டக்களப்பு நகரில் கோவிந்தன் வீதியை சுமார் நான்கரை கோடி ரூபா செலவில் புனரமைக்கும் பணியை ஆரம்பித்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 
 
நான் முதலமைச்சராக இருக்கின்றபோது வீதிகளை ஆரம்பிப்பது பற்றி மிக நீண்ட பட்டியல் ஒன்று இருந்தது. நான் ஒரு கிழமைக்கு முன்னர் தேர்தலை நோக்கிய நகர்வொன்றை மேற்கொள்ளலாம் என்று கடிதம் கொடுத்திருந்தேன். இந்த மாதத்திற்குள் மாகாணசபை கலைக்கப்படும் என்பது எனக்கு முன்பே தெரியும். 
 
வீதிப் புணரமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பது உங்களுக்குத் தெரியும். கடந்த காலங்களில் பரவலாக அனைத்து இடங்களிலும் வேலை செய்யும் வாய்ப்பிருந்தது. புளியந்தீவிலும் பல குறைபாடுகள் இருந்தன. 
 
தற்போது புளியந்தீவில் பல வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன இன்னும் நடக்கவிருக்கின்றன. நாங்கள் நீண்டகாலமாக யுத்தம் செய்ததன் காரணமாக பல அபிவிருத்திகள் தடைப்பட்டிருந்ததே இதற்கு அடிப்படைக்காரணமாக இருந்தது. தேர்தலுக்கு முன்னர் இங்கிருக்கின்ற பிரதான வீதிகளை கார்ப்பெட் இடுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. 
 
தேர்தல் ஆரம்பித்தாலும் மூன்று மாதங்களுக்குள் இந்தப் பணிகள் முடிந்துவிடும். நிச்சயமாக புளியந்தீவு ஒரு அழகான இடமாக மாறும். 
மட்டக்களப்பு வரைபடத்தை கருதும்போது புளியந்தீவு தான் அழகிய இடமாக காணப்படுகின்றது. முடிந்தவரை கடந்த நான்கு வருடத்திற்குள் நாங்கள் பல வேலைகளை செய்திருக்கின்றோம். அபிவிருத்தியில் நான்கு வருடம் என்பது ஒரு சிறிய காலப்பகுதியாகும். நிறைய விடயங்களை செய்ய முடியாது. 
 
 
நான் 2013ஆம் ஆண்டு தான் தேர்தலை எதிர்பார்த்தேன். நான் புளியந்தீவில் ஒரு நூலகம் அமைப்பதற்கான அத்திவாரமிட்டேன். இந்த வருடத்திற்குள் அதற்கான பணிகளை முடித்துவிட்டு அதை ஒரு முதற்தர நூலகமாக அமைத்துவிட்டு தேர்தலை எதிர்கொள்ளலாம் என்ற எதிர்பார்த்தேன். 
 
 
அது முடியாமல் போய்விட்டது. எங்களுக்கும் சில் கற்பனைகள் இருக்கின்றது. அதற்கு வடிவம் கொடுப்பவர்கள் மக்கள் தான். செப்டம்பர் மாதம்  நிச்சயமாக தேர்தல் ஒன்று நடைபெறவுள்ளது. அதில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எவ்வாறு பங்களிக்கப்போகின்றீர்கள் என்பது முக்கியமான விடயமாகும். 
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தமிழ் முதலமைச்சர்  என்பது உங்களுக்கு தெரிந்த விடயமாகும்.
 
 முதலமைச்சர் பதவி திருகோணமலைக்கு செல்வதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. மட்டக்களப்பு முதலமைச்சர் பதவியை தக்கவைத்துக்கொள்வது மட்டக்களப்பு மக்களின் பொறுப்பாகும். 
 
 
யாழ்குடாவை விட இங்கு சிறந்த ஜனநாயகம் உள்ளது.அங்கு நடைபெறும் கொடுமைகள் போன்று இங்கு எதுவும் இடம்பெறுவதில்லை.அங்கு இன்னும் காசு பறிக்கப்படுகின்றது.ஆகக்கூடுதலான கற்பழிப்புக்கள் இடம்பெறுகின்றன.சிறுவர் துஸ்பிரயோகங்கள் இடம்பெறுகின்றன.இவ்வாறு பல பிரச்சினைகள் அங்குள்ளன. 
 
 
ஆனால் மட்டக்களப்பு மாவட்டம் மிகவும் நிம்மதியாகவுள்ளது.உங்களுக்கு எதுவித தொல்லைகளும் இன்றி அரசியல் தலைமைகளும் தங்களின் வேலைப்பாடுகளை மேற்கொண்டுசெல்கின்றனர்.இந்த சந்தோசங்கள் எல்லாம் நாங்கள் எடுத்த முடிவுகளாலேயே ஏற்பட்டது.2008ஆம் ஆண்டு நாங்கள் மாகாணசபையையாவது காப்பாற்றுவோம் என்று சென்றோம்.ஓரளவு காப்பாற்றியுமுள்ளோம். 
 
இலங்கை வரலாற்றில் கிழக்கு மாகாணசபையில் நான்குவருடம் முதலமைச்சராக இருந்து சாதனைபடைத்துள்ளேன்.அந்த பெருமை மட்டக்களப்பு மக்களுக்கு உள்ளது.அந்த அடிப்படையில் கிழக்கு மாகாணசபையில் இளம் வயதினராக இருந்து முஸ்லிம்,சிங்கள தலைவர்களையும் வைத்துக்கொண்டு நாங்கள் ஆட்சிசெய்தோம். 
 
இன்றுவரையில் முஸ்லிம் மக்களை புறக்கணித்தார் முதலமைச்சர்,சிங்கள மக்களை புறக்கணித்தார் என்று கூறவில்லை.அனைவரையும் சமமாக நடத்தியுள்ளதுடன் அரசாங்கத்தையும் திருப்பதிப்படுத்தியுள்ளோம். 
 
அதனைவிட அரசாங்கம் மாகாணசபைகளை பலமிழக்கச்செய்வதற்கான பல சட்டமூலங்களை கொண்டுவந்தபோது அவற்றினை திருப்பியனுப்பியுள்ளோம். 
 
இறுதியாக நேற்று முன்தினமும் மாகாணசபை கலைக்கும் விடயத் தெரிந்தபிறகும் காணி திருத்தச்சட்டமூலம் ஒன்று கொண்டுவரப்பட்டது அதனையும் நிறுத்தினோம். 
 
நாங்கள் அதிகாரத்தை விட்டுக்கொடுக்காமல் முடிந்தவரையில் அபிவிருத்தியையும் செய்து எங்கள் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தியுள்ளோம். இங்கு யாரும் ஜனநாயகவாதிகளல்லர். நாங்கள் துப்பாக்கி தூக்குவதற்கு வட்டுக்கோட்டையில் தீர்மானம் எடுத்தவர்களே காரணம். 
 
 
தற்போதைய நிலையில் மாகாணசபையினூடாக தேசியரீதியாக ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா அல்லது வடக்கு கிழக்கை இணைக்கமுடியுமா அல்லது ஆட்சியை தீர்மானிக்கக்கூடியளவில் தமிழர்களின் வாக்குப்பலம் இங்கிருக்கின்றதா? ஒன்றுமேயில்லை. 
 
முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் இந்த மாகாணத்தில் மூன்று கட்சி இருப்பதாகவும் அதில் தமிழரசுக் கட்சி அரசாங்கத்துடன் இணையாது எனவும் நாங்கள் சேர்ந்து முதலமைச்சர் ஆகுவோம் என்று குறிப்பிட்டிருந்தார். 
 
தமிழர்களும் முஸ்லிம்களும் சேர்ந்து ஆட்சியமைப்போம் தமிழர்கள் எதிர்க்கட்சியில் இருங்கள் என்பதே அதன் கருத்தாகும். இவற்றையெல்லாம் சிந்திக்காமல் கிழக்கு மாகாணம் எப்படி அழிந்தாலும் பரவாயில்லை பிள்ளையான் அடுத்த முதலமைச்சராக வரக்கூடாது என்பதே சிலரின் தீராத அவாவாகும். 
 
அவர்களுக்கு நாங்கள் எதையாவது தன்னிச்சையாக சிந்தித்தால் அல்லது நியாயமாக இருக்கின்ற விடயங்கள் எல்லாம் அவர்களுக்கு அரசியல் ரீதியாக பிழையாக இருந்தால் நாங்கள் துரோகிகள் என்பார்கள். நாங்கள் களமறிந்து எங்கள் மக்களுடைய மனநிலையறிந்து கடந்தகால அழிவுகளையும் இழப்புகளையும் ஏற்படுத்திய தலைவர்களை உணர்ந்து புறந்தள்ளிவிட்டு பணி செய்கின்றோம். 
 
நீண்ட வரலாற்றிலே இப்பொழுது தான் புதிய தலைவர்கள் கிழக்கிலிருந்து உதயமாகியிருக்கின்றார்கள். இப்பொழுது தான் வரலாற்றில் கிழக்கு மாகாணத்திற்கென்று ஒரு கட்சி பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. 
 
இவையெல்லாம் நல்ல விடயங்களாகும். நல்ல விடயங்களை நல்ல விடயங்களாக பேசுகின்ற மனப்பக்குவம் மாநகரத்திலிருந்து உருவாகும்பொழுது நிச்சயமாக மீண்டும் கிழக்கு மாகாண முதலமைச்சராக மட்டக்களப்பை சேர்ந்த ஒருவர் வரும் வாய்ப்பை உருவாக்கிக்கொள்ள முடியும். 
 
அந்தப் பணியில் நீங்கள் பங்கேற்க வேண்டும். மட்டக்களப்பில் தான் மிக மோசமான வாக்களிப்புவீதமும் காணப்படுகின்றது. இது ஜனநாயகரீதியான ஒரு பின்னடைவாக இருக்கின்றது. இதைப்பற்றி நீங்கள் சிந்தித்து செயற்பட வேண்டும்.
»»  (மேலும்)

6/28/2012

| |

கிழக்கு மாகாண சபை இன்று நல்லிரவுடன் கலைக்கப்படும் - முதலமைச்சர் சந்திரகாந்தன்

கிழக்கு மாகாண சபையின் முதலாவது ஆட்சி காலம் இன்று(27.06.2012) நல்லிரவுடன் முடிவுக்கு வருகிறது என கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். அந்த வகையில் இன்று நல்லிரவுடன் கிழக்கு மாகாண சபை கலைக்கபட்டு உடனடியாக தேர்தல் நடாத்தபட இருப்பததாகவும் அவர் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையின் கலைப்பு தொடர்பில் தாம் உரிய ஆவணங்களில் கைச்சாத்திட்டு ஆளுனருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனோடு இணைந்த வகையில் சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளும் கலைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு, சப்ரகமுவ, வட மத்திய மாகாண சபைகள் கலைப்பு

* வேட்புமனுத் திகதி ஒருவாரத்துள் அறிவிப்பு
* 114 ஆசனங்களுக்கு செப்டெம்பரில் தேர்தல்
மூன்று மாகாண சபைகளையும் கலைப்பதற்கான உத்தியோபூர்வ வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளி யிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த மாகாண சபைகள் கலைக் கப்படுவது தொடர்பில் மூன்று மாகா ணங்களினதும் முதலமைச்சர்கள் அந் தந்த மாகாண ஆளுனர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறி வித்துள்ளதையடுத்து உரிய வர்த்தமானி அறிவித்தல்களில் சம்பந்தப்பட்ட ஆளுனர்கள் கையொ ப்பமிட்டுள்ளனர்.
வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக அந்த மாகாண சபைகளைக் கலைப்பது தொடர்பில் சந்தேகங்கள் நிலவின. எனினும் நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் மாகாண சபை முதலமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட நிகழ்வில் இதற்கான இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மாகாண சபைகள் சட்டங்களுக்கிணங்க மாகாண சபைகள் கலைக்கப்பட்டு ஒருவாரங்கள் நிறைவடைந்ததும் தேர்தல் கள் ஆணையாளர் அடுத்த தேர்தலுக்கான வேட்பு மனு திகதியை அறிவிப்பார். இதற்கிணங்க ஒரு வார காலத்திற்குள் இத்தீர்மானம் அறிவிக்கப்படும்.
எனினும் இதற்கான திகதி இன்னும் உறுதிப் படுத்தப்படவில்லையென தேர்தல் செயலகம் நேற்று அறிவித்தது. இதே வேளை பெரும்பாலும் செப்டம்பர் முதற் பகுதியில் கலைக்கப்பட்ட மேற்படி மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல் நடைபெறுமென தெரிய வருகிறது.
போனஸ் ஆசனங்கள் உட்பட மூன்று மாகாண சபைகளுக்கும் 114 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதன்படி கிழக்கு மாகாண சபைக்கு 37 உறுப்பினர்களும் வட மத்திய மாகாண சபைக்கு 33 உறுப்பினர்களும் சப்ரகமுவ மாகாண சபைக்கு 44 உறுப் பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
கலைக்கப்பட்ட மாகாண சபைகளில் கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 20 பேரும் ஐக்கிய தேசியக் கட்சியில் 15 பேரும் மக்கள் விடுதலை முன்னணியில் ஒருவரும் தமிழ் ஜனநாயக தேசிய முன்னணியில் ஒருவருமென மொத்தம்37 உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தனர்.
வட மத்திய மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 20 பேரும் ஐக்கிய தேசியக் கட்சியில் 12 பேரும் ஜே. வி.பி. யில் ஒருவருமென மொத்தம் 33 உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தனர்.
சப்ரகமுவ மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 25 பேர், ஐக்கிய தேசியக் கட்சியில் 17 பேர், மக்கள் விடுதலை முன்னணியில் 2 பேர், என மொத்தம் 44 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டி ருந்தனர். நேற்றைய தினம் மாகாண சபைகள் மூன்றும் கலைக்கப்பட்டதை யடுத்து வரும் தேர்தலை சந்திப்பதற்கு அரசியல் கட்சிகள் உடனடியாகவே தமது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதை அறிய முடிந்தது.
»»  (மேலும்)

6/27/2012

| |

நீர்ப்பாசன குளம் மற்றும் அணைக்கட்டை நேரில் சென்று பார்வையிடும் கிழக்கு முதல்வர்


 


கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விவசாய சிறிய நீர்பாசன குளங்கள் மற்றும் அணைக்கட்டுக்களை நேரில் சென்று பார்வையிட்டார்.ஈச்சையடி குளம் மற்றும் விக்டர் அணைக்கட்டு என்பவற்றை முதல்வர் சந்திரகாந்தன் நேரில் சென்று பார்வையிடுவதனை படத்தில் காணலாம்.
 
»»  (மேலும்)

6/26/2012

| |

பாலர் பாடசாலை மாணவர்களின் நன்மைகருதி கிழக்கில் பாலர் கல்வி பணியகம் திறப்பு

கிழக்கு மாகாணத்தில் கல்வி பயிலும் 61 ஆயிரம் பாலர் பாடசாலை மாணவர்களின் நலன்களைக் கவனிக்கவென கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் வழிகாட்டலில் முதன்முறையாக கிழக்கு மாகாண பாலர் பாடசாலைகள் பணியகம் இன்று காலை மட்டக்களப்பு நகரில் திறந்து வைக்கப்பட்டது.
மண்முனை வடக்கு பிரதேச செயலக மேல்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள இப்பணியகத்தை கிழக்கு  மாகாண சபை உறுப்பினர் பி.பிரசாந்தன் திறந்துவைத்தார்.
கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் தலைவர் பொன். செல்வநாயகம் தலைமையில் இடம் பெற்ற வைபவத்தில்கலாநிதி கே.விக்னேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாணத்திலுள்ள 61,500 பாலர் பாடசாலை மாணவர்களினதும் 1,800 பாலர் பாடசாலைகளினதும் 3,500 ஆசிரியர்களினதும் நலன்களை இவ்அலுவலகம் கவனிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

| |

லிபிய முன்னாள் பிரதமர் துனீஷியாவிலிருந்து நாடுகடத்தல்

லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபி அரசில் பிரதமராக இருந்த அல் பக்தாதி அல் மஹ்மூதி துனீஷியாவில் இருந்து லிபியாவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.
முஅம்மர் கடாபி அரசு கவிழ்க்கப்பட்டபோது லிபியாவிலிருந்து தப்பிச்சென்ற அல் மஹ்மூதி கடந்த செப்டெம்பர் மாதம் துனீஷியாவில் கைது செய்யப்பட்டார். சட்டவிரோதமாக நாட்டுக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டில் துனீஷிய சிறையில் இருந்த அல் மஹ்மூதி லிபியாவுக்கு நாடு கடத்தப்பட்டதாக துனீஷிய ஜனாதிபதி மொன்கால் மர்சூகி குறிப்பிட்டுள்ளார்.
விசேட ஹெலிகொப்டர் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அல் மஹ்மூதி லிபிய தலைநகர் திரிபோலிக்கு அழைத்துவரப்பட்டதாக லிபிய இடைக்கால அரசு குறிப்பிட்டுள்ளது.
இராஜதந்திர முயற்சியாக அல் மஹ்மூதியை நாட்டுக்கு கொண்டுவர முடிந்ததாக லிபிய இடைக்கால அரசின் பிரதமர் அப்தல் ரஹீம் அல்கிப் தெரிவித்தார்.
இந்நிலையில் எமது மத அடிப்படையிலும் சர்வதேச மனித உரிமைகளை மதித்தும் லிபிய அரசு குற்றவாளியான அல் மஹ்மூதியை நல்லவகையில் நடத்துவதாக பிரதமர் அல்கிப் உறுதி அளித்துள்ளார்.
எனினும் இந்த நாடு கடத்தலை தொடர்ந்து துனீஷிய அரசுக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. துனீஷிய ஜனாதிபதி தம்மிடம் ஆலோசிக்காமல் இந்த முடிவை எடுத்துள்ளதாக இஸ்லாமிய கட்சியை சேர்ந்த பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
»»  (மேலும்)

| |

த.ம.வி.புலிகள்; கட்சியின் கொள்கை விளக்கக் கூட்டம் சந்தி வெளியில்

 


மிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கொள்கை விளக்கக் கூட்டம் இன்று (24.06.2012) பிற்பகல் 4 மணிக்கு கோறளைப் பற்று பிரதேச சபையின் தவிசாளரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயற்குழு உறுப்பினருமான தா.உதயஜீவதாஸ் தலைமையில் இடம் பெற்றது. சந்தி வெளி சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் இடம் பெற்ற மேற்படி கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் , கொள்கை பரப்பு செயலாளர் ஆஸாத் மௌலானா பொருளாளர் தேவராஜா பிரதித்; தலைவர் யோகவேள் பிரதேச மக்கள் மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்களான ஞானமுத்து, நடராஜா உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மட்டக்களப்பு மாவட்த்தின் சகல கிராம சேவையாளர் பரிவுகளிலும் கட்சியின் கிராம மட்ட அமைப்பாளர்களினால் இதுபோன்ற பல  கூட்டங்கள் ஏறபாடு செய்யப்பட்டு கடசியின் கொள்கை எதிர் கால முன்னெடுப்பக்கள் பற்றி மக்களுக்கு தெளிவான விளக்கங்கள் அளிக்கபட்டு வருகின்றன. 
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது தனது கட்சியினையும் அதன் கொள்கைகளையும் மக்கள் மயப்படுத்தி வருவதன் வெளிப்பாடே இது போன்ற கூட்டங்களாகும். இவ்வாறான தெளிவான விளக்கங்களின் ஊடாக பல புத்திஜீவகள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பற்றாளர்கள் , இளைஞர் யுவதிகள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இணைந்து வருவது வெளிப்படையே.
»»  (மேலும்)

| |

த.ம.வி.புலிகள் கட்சியின் கொள்கை விளக்கப் பிரச்சாரம்


கிழக்கு மாகாணத்தின் தனிப்பெருங் தமிழ் பேசும் மக்களின் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் பலிகள் கட்சியானது தனது கொள்கை விளக்க பிரச்சாரக் கூட்டடங்களை மாவட்டம் பூராக நடாத்தி வருகின்றது. அதனொரு அங்கமாக  இன்று (24.06.2012) செங்கலடியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஒருங்கிணைந்த நிறுவனங்களின் பணிப்பாளரும் செங்கலடி வர்த்தக சங்கத்தின் தலைவருமான க.மோகன் தலைமையில் இடம் பெற்றது.
இக் கூட்டத்தில் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம சேவை உத்தியோகஸ்த்தர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட த.ம.வி.புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன், உப தலைவர் யோகவேள் , கொள்கை பரப்புச் செயலாளர் ஆஸாத் மௌலானா மற்றும் கட்சியின் முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். கொள்கை பரப்புச் செயலாளர் ஆஸாத் மௌலானா மற்றும் தலைவர் சந்திரகாந்தன் கட்சியின் கொள்கை மற்றும் எதிர் காலத்திட்டங்கள் தொடர்பாக விளக்கமளித்தார்கள்.
»»  (மேலும்)

| |

விவசாயப் பெருமக்களுடன் முதல்வர் சந்திரகாந்தன் முக்கிய சந்திப்பு


கோறளைப் பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தடானை, பள்ளத்துசேனை, பேரில்லாவெளி ஆகிய பிரதேச விவசாயப் பெருமக்களுடன் கிழக்கு முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முக்கிய சந்திப்பு ஒன்றை தடானை குமாரர் ஆலய முன்றலில் ஏற்படுத்தி இருந்தார்.
குறித்த பிரதேச விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் அடிப்படைத் தேவைகள் குறித்த கலந்துரையாடலாகவே இது அமைந்திருந்தது. விவசாய அமைப்புக்களின் தலைவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்படி கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்; கட்சியின் உப தலைவர் யோகவேள், பொருளாளர் தேவராஜா, முன்னாள் பொருளாhளர் அருண், சித்தாண்டி பிரதேச இணைப்hளர் தியாகராஜா, செயற்குழு உறுப்பினர் நந்தகுமார் மற்றும் கிராம சேவையாளர், வட்டவிதானைமார் உட்பட விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டர்கள்.
குறிப்பாக இப் பிரதேச விவசாயிகள் எதிர் நோக்ககின்ற முக்கிய பிரச்சினைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டவரபட்டு, அதற்கான உடனடித் தீர்வகளும் மேற்கொள்ளப்பட்டன. அதாவது முள்ளிப் பொத்தானை கண்ட விவசாயிகளுக்கான உரமானியம் இதவைரை காலமும் வழங்கப்படாமல் இருந்தது. இது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இதற்கான உடனடி நடவடிக்iகியினை முதலமைச்சர் மேற்கொண்டார்.
அடுத்து விக்டர் அணைக்கட்டானது தங்களது வயலுக்கு நீர் பாய்ச்சுவதற்கான பொருத்தப்பாடாக அமையவில்லை. இதனை நேரடியாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்து அதனை முதல்வர் பார்வையிட்டு எதிர்வரும் போக காலத்தில் குறித்த அணைக்கட்டை நிரந்தரமாக்கி அதனூடாக விவசாயக் காணிகளுக்கு நீர்ப்பாய்ச்சவதற்கான ஏற்பாடுகளை தாம் மேற்கொள்வதாகவும் அவர் தெரிவிதர்தார்.
மேலும் மிகவும் காட்டுப் பிரதேசங்களாக இப் பிரதேசங்கள் காணப்படுவதனால் வரட்சி காலங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்படுகிறது. இதற்காக நிரந்தர விவசாயக் கிணறுகள் மற்றும் மின்சாரம் விவசாய வீதி அபிவிருத்தி ஆலய புணரமைப்பு என்பன தொடர்பில் கவனம் செலுத்தி எதிர்வரும் ஆண்டில் அதனையும் பூர்த்தி செய்து தருவதாகவும் முதலமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்தார்.
»»  (மேலும்)

6/25/2012

| |

தியாகிகள் தினம்

தியாகிகள் தினம் 

naba-france
»»  (மேலும்)

| |

மாங்கேணியில் மகப்பேற்று சிகிச்சை நிலையம் திறப்பு


கமநெகும வேலைத்திட்டத்தின் கீழ்; மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மாங்கேணி கிராமத்தில் அமைக்கப்பட்ட மகப்பேற்று சிகிச்சை நிலையம் நேற்று பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஐந்து மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இவ் மகப்பேற்று சிகிச்சை நிலையம் அமையப்பெற்றது.
வாகரை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திஸாநாயக்கா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக வாகரை பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி, மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ்.சதுர்முகம், வாகரை பிரதேச சபை தவிசாளர் கண்ணப்பன் கணேசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
»»  (மேலும்)

6/24/2012

| |

ஏ.ஜி.எம். ஸதக்கா: எழுத்தின் புன்னகை நூல் வெளியீட்டு விழா

எதிர்வரும் 29.6.2012 ஆம் திகதி ஏ.ஜி.எம். ஸதக்கா அவர்களின் பன்முகப் படைப்புக்கள் அடங்கிய முழுத் தொகுப்பு நூல் வெளியீடு ஓட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் மாலை 4.00 மணியளவில் மிக விமர்சையாக நடைபெற உள்ளது.
கவிஞர் ஏ.ஜி.எம். ஸதக்கா (1.5.1970 – 20.8.2011), கடந்த வருடம் வீதி விபத்து ஒன்றின் மூலம் மரணமடைந்தார். பதின்மூன்று வயதிலிருந்தே எழுத ஆரம்பித்த இவர் ‘இமைக்குள் ஓர் இதயம்’ (1987) ‘போர்க்காலப்பாடல்’ (1998) ஆகிய இரு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டார். சுதந்திர இலக்கிய விழாவில் சிறந்த கவிதை நூலுக்கான விருதையும் ‘போர்க்காலப் பாடல்’ பெற்றுக் கொண்டது. இளந்தளிர், தபோஸ்ட் ஆகிய இதழ்களையும் எண்பதுகளில் வெளியிட்ட இவர் மின்னல், பசுமை, அந்நஜா, இலக்கு, கோஷம், புதிய தொனி ஆகிய பிராந்திய இதழ்களுடன் இணைந்தும் இயங்கினார். யாத்ரா கவிதை இதழின் இணையாசிரியராகவும் செயற்பட்டார். நண்பர் இலக்கியக் குழு, இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம், கல்குடா முஸ்லிம் படைப்பாளர் பேரவை போன்ற அமைப்புகளிலும் இணைந்து பணியாற்றியுள்ளார்.
இவ்வெளியீட்டு விழாவில் ‘ஏ.ஜி.எம். ஸதக்கா: எழுத்தின் புன்னகை’ என்ற பெயரில் அவரின் பன்முகப் பரிமாணங்களையும் வெளிக்கொணரும் வகையில் அவரது எழுத்துக்கள் ஏ.பி.எம். இத்ரீஸால் முழுமையாகத் தொகுக்கப்பட்டு செம்பதிப்பாக காகம் பதிப்பகம் வெளியிடுகின்றது. ஒரு படைப்பாளி, ஆய்வாளன் என்பவற்றுக்கும் மேலாக ஒரு சமூகத்தின் எழுத்தியக்கப் போராளியாக இயங்கிய ஏ.ஜி.எம். ஸதக்கா எழுதிய 109 கவிதைகள், 12 சிறுகதைகள், இலக்கியம், அரசியல், சமயம், கல்வி, பண்பாடு குறித்த 58 கட்டுரைகள், அவர் எழுதிய கடிதங்கள், அரிதான அவர் இடம்பெறும் புகைப்படங்கள், அவரைப்பற்றிய மற்றவர்களின் மதிப்பீடுகளும் நினைவுக்குறிப்புகளும் 615 பக்கங்களில் முழுமையாக இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
»»  (மேலும்)

| |

கிழக்கு மாகாண விளையாட்டு விழா ஆரம்பம்


கிழக்கு மாகாண விளையாட்டு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட 38ஆவது கிழக்கு மாகாண விளையாட்டு விழா இன்று சனிக்கிழமை காலை அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த மைதானத்தில் மிகவும் கோலாகலமாக ஆரம்பமாகியது.
கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் றியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரம பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இன்றைய விழாவின் வரவேற்பு உரையினை கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.சுபைர் நிகழ்தினார்.
இவ்விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 500 வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
விழாவின் ஆரம்ப நிகழ்வாக 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் வெற்றியீட்டிய வீரர்களுக்கான பதக்கங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இன்றைய விழாவில் அமைச்சர் பி.தயாரட்ன, கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல்.எம். நசீர், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா மற்றும் விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
நாளை ஞாயிற்றுக்கிழமை மேற்படி கிழக்கு மாகாண விளையாட்டு விழா நிறைவடைகிறது.
»»  (மேலும்)

6/23/2012

| |

தமிழினிக்கு புனர்வாழ்வு'விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறை தலைவியாக இருந்த தமிழினியை புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்துமாறு இலங்கை நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.
சுப்ரமணியம் சிவகாமி என்ற இயற்பெயரிலான தமிழினி, கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் படையினரிடம் சரணடைந்ததை அடுத்தே கைது செய்யப்படதாக கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றத்திடம் அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.
தமிழினிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதை தவிர்த்து அவரை புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்த சட்டமா அதிபர் பரிந்துரைத்ததாக பொலிஸார் தரப்பில் இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதாக தமிழினியின் சட்டத்தரணி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தமிழினியும் அதற்கு உடன்படுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதனையடுத்து அவரை வவுனியாவில் உள்ள பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
»»  (மேலும்)

6/22/2012

| |

ஆஸி. செல்ல முயன்ற அகதிகள் படகு கவிழ்ந்துள்ளது

ஆஸ்திரேலியாவில் அகதித் தஞ்சம் கோரும் நோக்கில் சுமார் 200 பேரை ஏற்றிச் சென்ற ஒரு படகு, இந்தோனேஷியத் தீவான ஜாவாவுக்கு தெற்கே கடலில் கவிழ்ந்துள்ளது.
அந்தப் படகில் இருந்தவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான கிறிஸ்துமஸ் தீவை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக கருதப்படுகிறது. விபத்து நடந்த இடத்துக்கு இருநாட்டு கடற்படை மற்றும் மீட்புக் கப்பல்கள் விரைந்துள்ளன. மீட்பு நடவடிக்கையும் இடம்பெற்று வருகிறது.
கிறிஸ்துமஸ் தீவுக்கு வடக்கே சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில், இந்தப் படகில் பயணித்து, கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை தாங்கள் கண்டதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தின் காரணமாக பலர் நீரில் மூழ்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது என ஆஸ்திரேலிய அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இந்தப் படகு இலங்கையிலிருந்து வந்ததாக இந்தோனேஷிய அரசின் மீட்புக் குழுவின் பேச்சாளர் காஹா பிரகாசோ பிபிசியின் இந்தோனேஷிய சேவையிடம் தெரிவித்தார்
இதனிடையே இந்தோனேஷியா மற்றும் ஆஸ்திரேலிய நாட்டிலுள்ள தமது தூதரகத்துடன் இலங்கை வெளியுறவு அமைச்சகம் தொடர்பில் இருப்பதாகவும், தற்போதைய நிலையில் இந்தப் படகில் இருந்தவர்கள் இலங்கையர்களா, அல்லது அப்படகு இலங்கையிலிருந்து பயணமானதா என்பதை உறுதி செய்யமுடியாமல் உள்ளது என்று வெளியுறவு அமைச்சகப் பேச்சாளர் சந்தேஷ்யவிடம் தெரிவித்துள்ளார்.

110 பேர் மீட்பு-மற்றவர்கள் நிலை என்ன?

விபத்துக்குள்ளான இந்தப் படகில் இருந்து 110 பேரை தமது நாட்டு கடற்படை மற்றும் பயணிகள் கப்பல்கள் மீட்டுள்ளதாக ஆஸ்திரேலிய நாட்டு கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தின் பேச்சாளர் ஜோ மீஹான் தமிழோசையிடம் தெரிவித்தார்
எனினும் அந்தப் படகில் பயணம் செய்தவர்கள் குறித்தோ, படகு எங்கு செல்லவிருந்தது என்பது குறித்தோ எந்தத் தகவலும் தன்னிடம் இல்லை எனவும் அவர்கள் கிறிஸ்துமஸ் தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் அவர் கூறுகிறார்.படகு கவிழ்ந்தது இந்தோனேஷியக் கடற்பரப்பு என்றாலும், இந்த மீட்பு நடவடிக்கையில் ஆஸ்திரேலிய நாட்டு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டதன் காரணமாகவும், படகில் பயணித்தவர்கள் தங்களை ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லும்படியும் வேண்டுகோள் விடுத்ததன் காரணமாகவுமே அவர்கள் கிறிஸ்துமஸ் தீவுப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள் எனவும் ஆஸ்திரேலிய அரசின் பேச்சாளர் கூறுகிறார்.
இது தொடர்பில் வேறு எந்த மேலதிகத் தகவல்களையும் என்னால் இப்போது தர இயலாது எனவும் ஆஸ்திரேலிய கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தின் பேச்சார் ஜோ மீஹான் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் நோக்கில், இந்த ஆண்டு ஆசிய நாடுகளிலிருந்து செல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் இந்தோனேஷியவை அதற்கான பாதையாக பயன்படுத்தி, அங்கு சென்று அங்கிருந்து படகு மூலம் ஆஸ்திரேலியா பயணமாக முயற்ச்சிகிறார்கள்.
»»  (மேலும்)

| |

மட்டக்களப்பில் சீபிளேன் விமான சேவை விரைவில்! பரீட்சார்த்தம் பார்க்க மட்டு வாவியில் இன்று இறங்கிய சீபிளேன்

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய சிவில் விமான சேவைகள் அமைச்சின் அங்கீகாரத்தில் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வரை (சீபிளேன்) கடல் விமான சேவையை நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதன் பொருட்டு கொழும்பு சீதுவைப் பிரதேசத்திலுள்ள தண்டன் ஓயா வாவியிலிருந்து இந்தப் பரீட்சார்த்த விமானம் புறப்பட்டு இன்று மட்டக்களப்பு வாவியில் வந்து தரையிறக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட தகவல் ஊடக அதிகாரி பி.ரீ.அப்துல் லத்தீப் தெரிவித்தார்.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வாவியில் வந்திறங்கிய இவ்விமானத்தில் வந்த சிவில் விமான சேவை அதிகார சபை மற்றும் ஸ்ரீலங்கா விமான சேவை அதிகாரிகளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் வரவேற்றார்.
»»  (மேலும்)

6/20/2012

| |

கிழக்கு மாகாண சபை கலைப்பு தொடர்பான இடைக்கால தடை உத்தரவுகோரும் மனு மீதான விவாதம் மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று

மனு யூலை 11ந் திகதிக்கு ஒத்திவைப்பு.
 
கிழக்கு மாகாண சபையை கலைப்பது தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சராகிய சிவநேசதுரை சந்திரகாந்தன், ஆளுனருக்கு ஆலோசனை வழங்குவதற்கு எதிராக இடைக்கால தடை உத்தரவனைக் கோரும் மனுவானது,இன்று(19.06.2012) மேன் முறையீட்டு நீதி மன்றில் நீதிபதிகள் சிகந்தராஜா மற்றும் திபாலி விஜயசுந்தர மன்னிலையில் விசாரணணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
 
இதன்போது முதலமைச்சர் சார்பில் ஆஜரான சிரேஸ்ட சட்டத்தரணி பாயிஸ முஸ்தபா இம் மனுவானது சட்டவலுவற்றது என்பதுடன் அரசியல் அமைப்பில் முதலமைச்சருக்கு குறித்தொகுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை கேள்விக்கு உட்படுத்துவதாகவும் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதுடன் இது சட்டரீதியல் எதுவித அடிப்படை உண்மையும் அற்றது என வாதிட்டார்.
 
இவ் வாதத்தினை ஏற்றுக் கொண்ட மேன்முறையீட்டு நீதி மன்றம் மனுமீதான இடைக்கால தடை உத்தரவோ ,பிரதிவாதிகளுக்கு அழைப்பாணையோ(நோட்டீஸ்) விடுக்காமல் மேலதிக ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக இவ் வழக்கினை எதிர்வரும் யூலை 11ந் திகதிக்கு ஒத்தி வைத்தியுள்ளது.
 
கிழக்கு மாகாண சபை கலைப்பது தொடர்பிலான இடைக்கால தடை உத்தரவினைக் கோரும் மேற்படி மனுதாரர் சார்பில்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் எம்.பி.சுமந்திரனனின் நெறிப்படுத்தலில் மொஹான் பாலேந்திரா ஆஜராகி இருந்தார். உண்மையில் இவ் வழக்கினை தொடுத்தவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் என்பது தௌ;ளத் தெளிவாக புலப்படுகிறது.
 
இவர்களுக்கு கிழக்கு மாகாண சபை தேர்தல்  நடந்தால் நிச்சயம் அரசாங்கம் ஆட்சி அமைக்கும் அதன்போது தமிழ் தேசயிக் கூட்டமைப்பும் போட்டியிட்டு படுதோல்வியை அடையும் அதன் பின்னர் கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அஸ்த்தமனமாகி விடும் என்ற பயத்திலே இது போன்ற பல செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவது வெளிப்படையே.
»»  (மேலும்)

| |

நிந்தவூர் வைத்தியசாலைக்கு கிழக்கு முதல்வர் திடீர் விஜயம்

பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் அவர்களது வேண்டுகோளின் பிரகாரம் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று( 17.06.2012) நிந்தவூர் மாவட்ட வைத்;திய சாலைக்கு நேரில் சென்று வைத்திய சாலையினை பார்வையிட்டதோடு அங்கு சிகிச்சை பெற்று வருகிழன்ற நோயாளிகளுடன் கலந்துரையாடியதுடன் வைத்தியாலையின் தேவைகள் மற்றும் குறைபாடுகள் குறித்து வைத்தியர்களுடன் கலந்துரையாடல் ஒன்றினையும் மேற்கொண்டிருந்தார். இதில் பாராளுமன்ற உறுபபினர் பைசல் காசிம் , முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ஆஸாத் மௌலான உட்பட பல பிரமுகர்களுதம் கலந்து கொண்டார்கள். 
»»  (மேலும்)

| |

இம்ரான் பிறீமியர் லீக் போட்டி இறுதி நாள் நிக்ழ்விற்கு பிரதம அதிதி. கிழக்கு மாகாண முதலமைச்சர்

     நிந்தவூர் இம்ரான் விளையாட்டு கழகத்த்pன் ஏற்பாட்டில் சுமார் ஒரு மாத காலமாக இடம்;பெற்ற இம்ரான் பிறீமியர் லீக் கடினபந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு நி;தவூர் இம்ரான் விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு கழகத்தின் தலைவர்  நஸார் தலைமையில் இன்று (17.06.2012)இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவருமான  சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து சிறப்பித்தார்.
இந் நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்;களான  வை.எல். சுலமாலெவ்வே எஸ்.எம்.ஐ.றியாஸ், கிழக்கு மாகாண முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ஆஸாத் மௌலானா ஒரேஞ் தேயிலை கம்பனியின் இயக்குணர் நஸார்  மற்றும் விளையாட்டு கழக உறுப்பினர்கள் உடபட பலர் கலந்து கொண்டார்கள்.நிந்தவூர் இம்ரான் அணியே வெற்றி ஈட்டியமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

6/18/2012

| |

களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய திருவிழா

 கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாகவும் முச்சிறப்புக்களும் ஒருங்கே அமையப் பெற்ற மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் 17.06.2012 ஆரம்பமாகி 26.06.2012 காலை 09.00 மணிக்கு ஆனி உத்தர நட்சத்திரத்தில் தீர்த்தோற்சவத்துடன் இனிது நிறைவுபெற இருக்கின்றது. 
»»  (மேலும்)

| |

விவசாயம் தொடர்பிலான 6 நூல்கள் வெளியீடு


கிழக்கு பல்கலைக்கழக விவசாய பீடத்தினால் விவசாயத்தில் பேண்தகு நடவடிக்கைகள் தொடர்பிலான ஆறு நூல்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளிட்டுவைக்கப்பட்டன.
மட்டக்களப்பு, மகாஜன கல்லூரியின் ஒன்றுகூடல் மண்டபத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் விவசாய பீட பீடாதிபதி கலாநிதி சோமசுந்தரம் சுதர்சன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன், கௌரவ அதிதிகளாக சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி கே.பிரேம்குமார், கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் க.மகேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக கிழக்குப் பல்லைக்கழகத்தின் பீடாதிபதிகளான பேராசிரியர் மா.செல்வராஜா, கலாநிதி திருமதி மு.வினோவா, கலாநிதி க.எ.கருணாகரன் ஆகியோரும் மட்டக்களப்பு மாவட்ட கமநலசேவைகள் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் ஆர்.ருசாந்தன், கிழக்குப் பல்கலைக்கழக நூலகர் ஜெ.ஜெயராஜ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகளும் அவற்றுக்கான வளமாக்கியை பெறும்வழிகள் குறித்து ஆராயப்பட்டு தீர்வுகள் அடங்கியதாக இந்த புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அத்துடன் சூழல் பாதுகாப்பு, காலநிலையும் விவசாயமும் சேதன வளமாக்கிகள், தாவர பீடைநாசினிகள், மனித ஆரோக்கியம் ஆகியவற்றையும் இந்த இதழ்கள் தாங்கியுள்ளன.
»»  (மேலும்)

| |

ஈழத்து திருக்கேதீஸ்வரர் ஆலயத்திற்கு சீமேந்து பக்கட் அன்பளிப்பு

மட்டக்களப்பு நகரை அண்டிய கிராமமான திராய்மடு கிராமத்தில் அமைந்துள்ள ஈழத்து திருக்கேதீஸ்வரர் ஆலயத்திற்கு இன்று கிழக்கு மாகாண முதலமைச்சரினால் சீமெந்து பக்கட்டுகள் அன்பளிப்பு செய்யப்பட்டன. இதனை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உதவிச் செயலாளாரும் வவுணதீவு பிரதேச சபையின் உப தவிசாளருமான ஜெ.ஜெயராஜ் வழங்கி வைத்தார்.
»»  (மேலும்)

| |

முதலமைச்சரின் நிதி ஒதுக்கீடடில் புணரமைக்கப்படும் முனைக்காடு பொது விளையாட்டு மைதானம்

  முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் நிதி ஒதுக்கீட்டில் புணரமைக்கபட்டு வருகின்ற முனைக்காடு பொது விளையாட்டு மைதானத்தின் வேலைகளை முதலமைச்சர் உத்தியோகபூர்வமாக இன்று(16.06.2012) ஆரம்பித்து வைத்தார். சுமார் 10 இல்சம் ரூபாய் முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புணரமைக்கபட்டுவருகின்ற விளையாட்டு மைதானத்திலே முனைக்காடு இராம கிருஸ்ணா விளையாட்டுக் கழக உறுப்பினர்களுடன் மதல்வர்  கலந்துரையாடுவதனைப் படத்தில் காணலாம். இந் நிகழ்வில் பட்டிப்பளை பிரதேச சபையின் தவிசாளர் பேரின்பராஜாவும் இணைந்து கொண்டார்.
»»  (மேலும்)

6/17/2012

| |

பர்மாவின் துன்பங்களை உலகம் மறக்கவில்லை' - ஆங் சான் சூ சி

991 இல் தனக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டமை, பர்மாவின் துன்பங்கள் உலகத்தால் மறக்கப்படவில்லை என்ற நம்பிக்கையை தனக்கு கொடுத்ததாக பர்மாவின் ஜனநாயக ஆதரவுத் தலைவியான ஆங் சான் சூ சி கூறியுள்ளார்.
அப்போது அந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டபோது அதனை வந்து பெறமுடியாத நிலையில் இருந்த ஆங்சான் சூசி அவர்கள், தற்போது நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோ சென்று அங்கு உரையாற்றியுள்ளார்.

அங்கு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு பேசியிருக்கிறார்.

''நோபல் பரிசுக் குழு சமாதானத்துக்கான பரிசை எனக்கு வழங்கியதன் மூலம், அடக்குமுறைக்கு உள்ளான, தனிமைப்படுத்தப்பட்ட பர்மாவும் உலகின் ஒரு பகுதி என்பதை அதன் மூலம் அங்கீகரித்திருக்கிறார்கள். எல்லா மனிதர்களும் ஒன்றுதான் என்ற கொள்கையை அவர்கள் அங்கீகரித்திருக்கிறார்கள். ஆகவே என்னைப்பொறுத்தவரை, ஒரு நோபல் பரிசை பெறுவது என்பது, ஜனநாயகத்த்தின் மீதான மற்றும் மனித உரிமைகள் மீதான எனது கரிசனைகளை நாடுகளின் எல்லைகளைக் கடந்து விஸ்தரிப்பது என்று பொருளாகும். எனது இதயத்தில் இந்த நோபல் பரிசு ஒரு வாசலைத் திறந்திருக்கிறது'' என்றார் ஆங்சான் சூ சி.
1988 ஆம் ஆண்டுக்கு பின்னர் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படாத ஆங் சான் சூச் சி ஆர்கள், தற்போதுதான் தனது வெளிநாட்டுப் பயணங்களை மீண்டும் ஆரம்பித்திருக்கிறார். ஐநாவின் சர்வதேச தொழிலாளர் அமைப்பில், ஜெனிவாவில் ஆரம்பித்த அவரது ஐரோப்பிய விஜயத்தின் ஒரு பகுதியாகத்தான அவரது இந்த நோர்வே விஜயமும் அமைந்திருந்தது.
ஒஸ்லோவில் இது குறித்து நடந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய நோபல் பரிசுக்குழுவின் தலைவரான தோர்ப்ஜோர்ண் ஜாக்லாண்ட் அவர்கள், ஆங் சான் சூ சி உலகுக்கு கிடைத்த மிகவும் அற்புதமான பரிசு என்று வர்ணித்தார்.
''அன்புக்குரிய ஆங் சான் சூ சி, மிகவும் நீண்ட காலமாக நாங்கள் உங்களுக்காக காத்திருக்கிறோம். எப்படியிருந்த போதிலும் எங்களுக்கு ஒரு விசயம் நன்றாகத் தெரியும், அதாவது உங்களுடைய காத்திருப்பு என்பது ஒரு முடிவில்லாத சோதனையாக உங்களை தொடர்ந்தது என்பதை நாங்கள் அறிவோம். உங்களுடைய காத்திருப்பு என்பது எங்களுடையதில் இருந்து முற்றிலும் வேறுபட்ட தன்மை வாய்ந்தது என்பதையும் நாங்கள் அறிவோம். ஆனால், உங்களின் தனிமைப்படுத்தலின் மூலம் முழு உலகின் தார்மீக குரலாக நீங்கள் உருவெடுத்திருக்கிறீர்கள்'' என்றார் நோபல் பரிசுக் குழுவின் தலைவர்.
அங்கு மேலும் உரையாற்றிய ஆங் சான் சூ சி அவர்கள், பர்மாவில் அண்மையில் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்களை வரவேற்ற போதிலும், அதன் மீது கண்மூடித்தனமாக நம்பிக்கை வைக்க முடியாது என்று எச்சரித்தார்.
அதேவேளை தேசிய நல்லிணக்கத்துக்கு தானும் தனது அமைப்பும் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்றும் அவர் கூறினார்.
மனச்சாட்சிப்படி நடந்ததற்காக ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டால் கூட, அது மோசமான நிலைமைதான் என்று கூறிய அவர், அனைத்து அரசியல் கைதிகளும், நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் கோரினார்.
பர்மாவின் இனப்பிரச்சினை குறித்தும் தனது உரையில் குறிப்பிட்ட ஆங் சான் சூ சி அவர்கள், நோபல் பரிசானது, சமாதானத்துக்காக உழைக்கும் தனது நம்பிக்கையை பலப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
சர்வதேச சமூகம் பர்மாவில் சுமூக நிலைமை ஏற்பட கடுமையாக உழைப்பதாக கூறிய அவர், பர்மா இது தொடர்பில் உரிய பதில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் குறித்தும் வலியுறுத்தினார்.
பர்மிய சுதந்திரப் போராட்ட வீரரான ஆங் சானின் மகள்தான் ஆங் சான் சூ சி. அவரது தந்தை 1947 இல் படுகொலை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

| |

முதலமைச்சர் மாறி மாறி நியமிக்கப்பட்டால் தமிழ் – முஸ்லிம் உறவு காத்திரமாகும்

கிழக்கு மாகாணத்துக்கு முஸ்லிம் ஒருவர் முதலமைச் சராக வரவேண்டுமென அந்த மாகாண முஸ்லிம்கள் கோரிக்கை விடுப்பதில் என்ன தவறிருக்கின்றதென்று மாகாண அமைச்சர் எம்.எஸ். சுபைர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களும் சனத்தொகையில் சுமார் அரைவாசிப் பங்கினராக இருக்கின்றனர். எனவே முதலமைச்சர் நியமனம் மாறி மாறி வருவதே தமிழ், முஸ்லிம் உறவுக்கு காத்திரமாக அமையுமெனச் சுட்டிக்காட்டிய அவர் இனப்பிரச்சினைத் தீர்வில் சிறுபான்மை மக்கள் ஒட்டு மொத்தமாக குரல் எழுப்ப இது அடித்தளமாக அமையுமெனவும் அவர் தெரிவித்தார்.
தமிழ் – முஸ்லிம் சமூகங்களின் இன ஐக்கியத்துக்காக குரலெழுப்பும் தமிழ்த் தலைமைகள் இதையுணர்ந்து செயற்படுவதன் மூலம் இனப்பிரச்சினைத் தீர்வை இலகுவாகப் பெற்றுக்கொள்ள வழிவகையேற்படுமென அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியைக் கைப்பற்றுவதற்கும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் முதலமைச்சராவதற்கும் முஸ்லிம்களின் கணிசமான வாக்குகளே உதவியுள்ளன. முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராகும் வாய்ப்புகள் உச்சளவில் இருந்தும் ஜனாதிபதியின் காலத்துக்குப் பொருத்தமான முடிவை முஸ்லிம்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்.
எனவே, இம்முறை முஸ்லிம் ஒருவருக்கு முதலமைச்சர் பதவி வழங்குவதற்கு ஆளுங்கூட்டணியிலுள்ள தமிழ்த் தலைமைகள் தடையாக இருக்கக் கூடாதென்பதே எமது கோரிக்கையாகும்.
முஸ்லிம்களின் பிரதானமான கட்சிகளான ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் ஆகியன அரசாங்கத்தின் முக்கிய பங்காளிக் கட்சிகள். வடக்கு – கிழக்கில் கணிசமான வாக்குகளைக் கொண்ட கட்சிகள் கிழக்கில் ஒரு மாகாண சபைத் தேர்தலொன்று நடத்தப்படுவதற்கு வழிகோலிய பிரதான கட்சிகள். எனவே எமது நியாயமான கோரிக்கைகள் உள்வாங்கப்பட வேண்டும் என அமைச்சர் சுபைர் தெரிவித்தார்.
»»  (மேலும்)