8/30/2012

| |

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது


எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளனர். நேற்று புதன்கிழமை (29.08.2012) மாலை களுதாவளையில் இடம் பெற்ற மாபெரும் பிரச்சாரக் கூட்டத்திலேயே இவ் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவரும், முதலமைச்சர் வேட்பாளருமாகிய சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) விஞ்ஞாபனத்தின் முதலாவது பிரதியை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியல் ஆலோசகர் சின்னா மாஸ்டரிடம் (ஸ்ராலின்) வழங்கி வைத்து வைபவ ரீதியாக அதனை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து களுதாவளைப் பிரதேசத்தின் விளையாட்டுக் கழகங்கள், அபிவிருத்திச் சங்கங்கள், மீனவர் சங்கங்கள், விவசாயிகள் சங்கம், மாதர் அமைப்புக்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் என்று பலதரப்பட்ட நிறுவனங்களின் சார்பில் கட்சித் தலைவர் சந்திரகாந்தனிடம் விஞ்ஞாபனத்தின் பிரதிகளைப் பலரும் பெற்றுக் கொண்டனர்.
சுமார் இரண்டாயிரம் பொதுமக்கள் திரண்டு வந்து இப் பிரச்சாரத்தில் பங்கேற்றிருந்தனர். இந் நிகழ்வில் முதலமைச்சர் சந்திரகாந்தனுடன் இணைந்து வேட்பாளர்களான பூ.பிரசாந்தன், சிறிதரன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பினர் மணிவண்ணன் (ஆசிரியர்), செயற்குழு உறுப்பினர்கள் சந்துரு, தமயேந்தி (முன்னாள் அதிபர்), கட்சியின் உபசெயலாளர் ஜெ.ஜெயராஜ் போன்ற பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இக் கூட்டத்தில் உரையாற்றிய சின்னா மாஸ்டர் “நேற்று இந்த மைதானத்தில் பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளது, கூட்டமைப்பினர் இளைஞர்களைத் தூண்டிவிட்டு வன்முறைக்குத் தூபமிடுகின்றனர்” என்று குற்றம் சாட்டினார், அத்தோடு “கூட்டமைப்பினரின் இச் செயற்பாடுகள் கடந்த நான்கு வருடமாக நாங்கள் கிழக்கு மாகாணத்தில் கட்டியெழுப்பிய அமைதியையும், ஜனநாயகத்தின் மீள்வரவையும் சீர்குலைப்பதோடு மீண்டும், மீண்டும் கைதுகளையும், விசாரணைகளையும், சோதனைச் சாவடிகளையுமே எமது மக்களுக்குப் பரிசளிக்கும்” எனத் தெரிவித்தார்.
»»  (மேலும்)

| |

களுதாவளையில் மீண்டும் வன்முறை

நேற்று (29.08.2012) புதன்கிழமை இரவு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கட்சிக் காரியாலயம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திறிஸ்டார் கும்பலினால் சேதமாக்கப்பட்டுள்ளது. இவ் வன்முறையில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள் அன்றிரவே களுவாஞ்சிக்குடிப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான களுதாவளையை சேர்ந்த குணம் என்பவருடைய மருமகன் ஆவார். இவர்களது வாக்குமூலங்களின் அடிப்படையில் இம்மூவரும் திறிஸ்டார் ‘ஜனா’ கும்பலினால் தயார் செய்யப்பட்டு பணம் கொடுத்து வன்முறையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகின்றது. கலாநந்தன்,செல்வராஜா நவாகரன்,சோமசுந்தரம் பிரியதர்சன் எனும் பெயர் குறிப்பிடப்பட்ட நபர்களே பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.


»»  (மேலும்)

| |

யாழ் மேலாதிக்கவாதிகளின் அத்தனை சதிகளையும் முறியடித்து முன்னேற கிழக்கு மக்கள் எனக்கு வல்லமை தருவார்கள்


கடந்த செவ்வாய்கிழமை (28.08.2012) இரவு தேற்றாத்தீவுக் கிராமத்தில் இடம் பெற்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளர் சந்திரகாந்தன் கலந்துகொண்டு உரையாற்றினார். அங்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில்..!
இத் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து எம்மீதான சேறுபூசல்கள் மீண்டும் ஆரம்பித்துவிட்டன,வரலாற்றில் ஒருபோதும் இல்லாத ஒற்றுமைவேசம் போட்டுக் கொள்ளும் தமிழ்த் தலைமைகள் அனைத்தும் எனது மண்ணுக்கு வந்து என்னை வீழ்த்த எனது மக்களிடமே ஆணைகோரும் இறுமாப்பினை முறியடித்து முன்னேறுவேன்.
1977ம் ஆண்டு சொல்லின் செல்வர் இராஜதுரைக்கு எதிரானசதியில் எப்படி வீட்டுச் சின்னம் முன்னிறுத்தப்பட்டதோ? அதேபோன்று இம்முறையும் வீட்டுச் சின்னம் சதியின் சின்னமாக வந்திருக்கின்றது. முதலாவது கிழக்குமாகாணசபை உருவாகியபோது எங்களைத் துரோகி என்றவர்கள்,நாங்கள் உருவாக்கிய மாகாணசபையில் வந்து துளியளவும் வெட்கமின்றி பங்கு கேட்டு நிற்கின்றனர். ஒவ்வொரு வரலாற்று நிகழ்வுகளிலும் இடம் பெறுவது போல அனைத்து ஊடகங்களும் யாழ் மேலாதிக்கத்திற்கு துதிபாடி,சாமரம் வீசி நிற்கின்றன.
எமது செய்திகள் அனைத்தும் இருட்டடிப்புச்  செய்யப்படுகின்றது. “இந்ததேற்றாத்தீவு மண்ணில் வைத்து கூறுகிறேன்,
  யாழ் மேலாதிக்கவாதிகளின் அத்தனை சதிகளையும் முறியடித்துமுன்னேற"
கிழக்குமக்கள் எனக்கு வல்லமை தருவார்கள் எனத் தெரிவித்தார்.

»»  (மேலும்)

| |

இனவாத கட்சிகளுக்கு கிழக்கில் இடமில்லை

தமிழ்,முஸ்லிம் இனவாத கட்சி களுக்கு கிழக்கு மாகாணத்தில் இடமில்லை. தமிழ், முஸ்லிம் மக்கள் ஐ. ம. சு. மு.வையே ஆதரிக்கின்றனர். கிழக்கில் ஐ. ம. சு. மு. தனியாக ஆட்சி அமைக்குமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவுத் தலைவரும் பிரதி அமைச்சருமான பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

ஐ. ம. சு. மு. ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய அவர் கிழக்கு மாகாணத்தில் இருந்து பயங்கரவாதம் முழுமையாக தோற் கடிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி அங்கு பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளார்.

தற்போது நல்லிணக்கத்துடன் எதிர்கால பயணத்தை ஒற்றுமையாக மேற்கொள்ள முடியும். தமிழ் தேசிய கூட்டமைப்பு ஈழ கனவுடனும் சில முஸ்லிம் கட்சிகள் இனவாதம் பேசியும் மக்களின் வாக்குகளை பெற முயல்கின்றன. ஆனால் கிழக்கு மக்கள் புத்திசாலிகள். நிரந்தர சமாதானம்,பாரிய அபிவிருத்தி என்பவற்றினூடாக கிழக்கு மக்கள் வாழ்வில் பாரிய மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இனவாதத்தை மக்கள் நிராகரிக்கின்றனர்.

ஜனாதிபதி முஸ்லிம்களுக்கும் பெருமளவு சேவையாற்றியுள்ளார். பல முஸ்லிம் நாடுகள் ஜனாதிபதியுடன் நற்புறவு பேணி வருகின்றன. பல முஸ்லிம் கட்சிகள் ஐ.ம.சு.மு. வில் போட்டியிடுகின்றன. அவர் நிற்கும் கிழக்கில் அதிக வாக்குகள் கிடைக்கும். தமிழ்இ முஸ்லிம் இனவாத கட்சிகளுக்கு கிழக்கில் இடமில்லை. கிழக்கு மக்கள் ஐ.ம.சு.மு.வுடனே உள்ளன.

புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து த.தே. கூட்டமைப்பு முன்னெடுக்கும் இனவாத பிரசாரத்தை மக்கள் பகிஷ்கரிக்கின்றனர். சிறுபான்மை மக்களுக்கு இது மிக முக்கியமான தேர்தலாகும்.

இனவாதம் பேசும் கட்சிகளை கிழக்கு மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். தமிழ்இ முஸ்லிம் மக்கள் எம்முடனே உள்ளனர். முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்து வரும் குற்றச்சாட்டுகளை நாம் ஏற்கவில்லை. இனவாதத்தை தூண்டி மக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தி வாக்கு பெற முயல்கிறது.

கிழக்கில் தனித்துப் போட்டியிடும் மு. கா. அநுராதபுரதத்தில் ஐ.ம.சு.மு.வுடன் இணைந்து போட்டியிடுகிறது. மு.க.வுக்கு கிழக்கில் ஐ.ம.சு.மு. தேவையில்லை. ஆனால் அதற்கு அநுராதபுரத்தில் ஐ.ம.சு.மு. தேவை. கிழக்கில் ஐ.ம.சு.மு. தனித்து வெற்றியீட்டும்.
»»  (மேலும்)

| |

கிழக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் யார்?கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் களம் மிகவும் பரபரப்பாக சூடு பிடித்துள்ளது. திருகோணமலை,மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்களிலிருந்து முறையே 10,11,14 உறுப்பினர்கள் அடங்கலாக மேலும் 02 போனஸ் ஆசனங்களையும் இணைத்து 37 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட இருக்கிறார்கள். தனித்த கிழக்கு மாகாணத்தில் இது இரண்டாவது சபைக்கான தேர்தலாகும்.

கிழக்கு மாகாணத்தின் இனப்பரம்பலும்,வரலாற்றுப் பின்னணிகளும் இத் தேர்தலுக்கு பல்வகை முக்கியத்துவங்களை வழங்கி இருக்கின்றன. ஆங்கிலேயரின் வருகையின் போது இலங்கையிலிருந்த கண்டி இராச்சியத்தின் ஓர் அங்கமாகவே கிழக்கு மாகாணம் இருந்தது. கண்டி இராச்சியத்தின் கீழ் இருந்த போதும் கிழக்கு மாகாணத்திற்கென தனித்துவமான சிற்றரசுகள் தமிழ் மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. 1815ம் ஆண்டு ஆங்கிலேயரால் முழு இலங்கையும் கைப்பற்றப்பட்ட போது இக் கிழக்கு மாகாண சிற்றரசுகளும் ஆங்கிலேயர் வசமாயின. எனினும் 1818ம் ஆண்டு ஆங்கிலேயருக்கு எதிராக உருவாகிய கண்டிக் கலகம் கண்டி இராச்சிய மக்களுடைய சுதேச உணர்வுகளைக் கூறு போட வேண்டிய தேவையை ஆங்கிலேயருக்கு உணர்த்தியது. இதன் அடிப்படையிலேயே கண்டி இராச்சியத்தில் கிழக்குக் கரையோரத்தில் அமைந்திருந்த தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்த பிரதேசங்களைத் தனியாகப் பிரித்து கிழக்கு மாகாணம் எனும் ஓர் தனியான அலகினை உருவாக்கினர். அதனடிப்படையில் 1832ம் ஆண்டு இலங்கையில் உருவாக்கப்பட்ட 09 மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டே இன்றைய மாகாண சபைகள் செயற்பட்டு வருகின்றன.

தமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட தனி நாட்டிற்கான கோரிக்கைகள் சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் உருவாகிய போது இலங்கைத் தமிழ் தலைவர்களால் வடக்கு,கிழக்கு ஆகிய இரு மாகாணங்களை இணைப்பதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. வட-கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயகம் என்றும் அதனடிப்படையில் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டுமென்றும் வட-கிழக்குப் பிரதேசங்களை இணைத்ததே தமிழீழம் என்றும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஆயுதப் போராட்டப் பாதையில் இடம் பெற்ற முதலாவது பேச்சு வார்த்தையாக திம்பு பேச்சுவார்த்தை (1985) இடம் பெற்றது. இப் பேச்சுவார்த்தைகளில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுள் முக்கியமானதொன்றாக வடக்கு-கிழக்கு மாகாணங்களின் இணைப்பு காணப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் பிரதி நிதிகளாக இருந்த மிதவாத மற்றும் தீவிரவாதத் தலைவர்கள் இப் பேச்சுக்களில் பங்கெடுத்தனர்.அதனைத் தொடர்ந்து 1987 களில் செய்து கொள்ளப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தங்களில்
வடக்கு-கிழக்கு மாகாணங்களின் இணைப்பிற்கான தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டது.

எனினும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டதிற்கமைய ஒரு வருட பூர்த்தியில் கிழக்கு மாகாண மக்களின் சர்வஜன அங்கீகாரம் கோரப்பட முடியாத நிலையில் அவ்விணைப்பு நீக்கப்படவோ,நிரந்தரமாக்கப்படவோ இல்லை. ஆனாலும் நாட்டில் தொடர்ந்த யுத்தம் தற்காலிக இணைப்பினை சுமார் 20 வருடங்களுக்கு நீடிக்க வாய்ப்பினை ஏற்படுத்தியது.

2005 உயர் நீதிமன்ற தீர்ப்பொன்றின் அடிப்படையில் மேற்படி தற்காலிக இணைப்பு ரத்துச் செய்யப்பட்டது. எனினும் 20 வருடங்களுக்குப் பின்னர் ஏற்பட்ட சமூகஇ பொருளாதார மற்றும் நீண்டகாலப் போர்ச்சூழல் ஏற்படுத்திய பின் விளைவுகளினால் மக்களின் அரசியல் அபிலாசைகளும் வேறு பாதைக்குத்திரும்பின. எனவே இத்தீர்ப்பினை ஒட்டிய எந்தவொரு எதிர்ப்புணர்வுகளும் கிழக்கு மாகாண மக்களிடம் இருந்து வெளிப்படவில்லை. பழைய காலாவதியாகிப் போன அரசியல் தலைமைகள் தொடர்ந்து வடகிழக்கு இணைப்பினை வலியுறுத்திய போதும் கிழக்கிலிருந்து புதிதாக உருவாகிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் கிழக்கு மாகாணம் தனி நிர்வாக அலகாக உருவாக்கப்பட்டதனை பலமாக வரவேற்றனர்.

இதனடிப்படையில் 2008ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் இருந்து புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டதன் பின்னர் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலை அரசு அறிவித்தது. இவ் வேளையில் கிழக்கின் தனித்துவமா? அல்லது வடகிழக்கு இணைப்பா? என்கின்ற இரு போக்குகளில் தமிழ்க் கட்சிகள் பிரிந்து நின்றன. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினைத் தவிர ஏனைய அனைத்துக் கட்சிகளும் கிழக்கின் தனித்துவத்தினை ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பங்கெடுக்க மறுத்தனர். தனித்துவமான கிழக்கில் போட்டியிடுவது தமது கொள்கைகளுக்கும்இ இலட்சியத்திற்கும் முரண்பாடானது என அறிவித்துக் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை பகிஸ்கரித்தனர். அதுமட்டுமன்றி தமிழ் மக்களின் அரசியல் தீர்வாக இம் மாகாணசபை முறைமையினை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை என அறிக்கை விட்டனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டினர். அதனூடாக சிவநேசதுரை சந்திரகாந்தன் முதலமைச்சராகினார். அது மட்டுமல்ல இம் மாகாணசபை உருவாக்கத்தின் பலனாக 20 வருடங்கள் கைவிடப்பட்டிருந்த 13வது திருத்தச் சட்டத்திற்கு புத்துயிரளிக்கப்பட்டது.

இலங்கை அரசியல் தீர்வு முயற்சிகளில் முதல் முறையாக “யாழ்ப்பாணத்து மூளைகள்” இன்றிய ஒரு தீர்வாக கிழக்கு மாகாணசபையின் உருவாக்கம் நிகழ்ந்தது. ஆனாலும் இன்றைய நிலையில் 30 வருடப் போராட்டங்களின் விளைவாகத் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்குக் கிடைத்திருக்கின்ற ஒரேயொரு அதிகாரப் பரவலாக்கல் முறை இக்கிழக்கு மாகாண சபையின் உருவாக்கத்தினாலேயே நிலை கொண்டிருக்கின்றதுஇ என்பதனை யாரும் மறுக்க முடியாது. இந்த சாதனைக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளே முழு உரித்துடையவர்கள்.

இத்தகைய வரலாற்றுப் பின்புலங்களோடு தான் இன்றைய கிழக்கு மாகாண சபைக்கான இரண்டாவது தேர்தல் சூடு பிடித்திருக்கின்றது,நிச்சயமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். இத் தேர்தல் களத்தில் இறங்கியிருப்பதானது கிழக்கு மாகாண சபையின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரித்திருக்கின்றது.

அது மட்டுமல்ல கிழக்கு மாகாண சபைக்குரிய அடுத்த ஆட்சியை யார் கைப்பற்றுவது? என்ற போட்டியின் பின்னணியில் இந்தியாவும்,நோர்வேயும்,அமெரிக்காவும் கூட இருந்து செயற்படுகின்றன. என்பதை இலங்கையில் இடம் பெறுகின்ற தூதுவராலயங்களின் இராஜதந்திர நகர்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்குரிய ஆதரவுத் தளம் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்குத் தமிழ்த் தேசியவாத அரசியலால் காலா,காலமாக கட்டியமைக்கப்பட்டு வந்த அரசு மீதான எதிர்ப்புணர்வும் ஓர் முக்கிய காரணமாகும். அதே போல இறுதி யுத்தம் பற்றிய மனித உரிமை மீறல் பிரச்சாரங்களும் அரசியல் தீர்வு,அரசியல் பகிர்வு போன்ற விடயங்களில் அரசினது இழுத்தடிப்பும்,அரச அதிருப்தி வாக்குகளாக கூட்டமைப்பையே சென்றடையும். இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் வாக்கு வங்கிக்கு மேலும் பலமூட்டும் என்பது வெளிப்படை எனினும் கிழக்கு மாகாணத்தின் 03 மாவட்டங்களிலும் இவ்வாதரவுத்தளம் ஒரே மாதிரியாகச் செயற்படும் என்பதற்கில்லை. அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் ஒரு மாதிரியாகவும்,மட்டக்களப்பு மாவட்டத்தில் வேறு மாதிரியாகவும் அது இயங்கும்.

அம்பாறை,திருகோணமலை மாவட்டங்களில் பெரும்பான்மை அற்றுக் காணப்படும் தமிழர்களிடத்தில் மேற்படி காரணிகள் கூடிய தாக்கம் செலுத்துமென எதிர்பார்க்கலாம். இம் மாவட்டங்களில் காணப்படும் தமிழர்களின் வாக்களிப்பினைத் தீர்மானிப்பதில் தமிழ்த் தேசியவாத அலைக்கு கூடிய பங்கு உண்டு. ஆனால் இம் மாவட்டங்களில் காணப்படும் தமிழ் வாக்காளர்களின் விகிதாசாரம் ஒரு சில உறுப்பினர்களையே வென்றெடுக்கும் வாய்ப்பினைக் கொண்டுள்ளது.

உதாரணமாக திருமலை வாக்காளர்களின் எண்ணிக்கை 246000ஆக இருக்கும் போது அங்குள்ள தமிழ் வாக்காளர்களின் எண்ணிக்கை 63000ஆகும். இது திருமலை மாவட்ட மொத்த வாக்காளர்களின் 25வீதம் மட்டுமே ஆகும். கடந்த மாகாணசபைத் தேர்தலில் திருகோணமலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டி போடாத நிலையிலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளால் அங்கு ஓர் பிரதிநிதியைக் கூட வென்றெடுக்க முடியவில்லை. அதே வேளை ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு தமிழ்ப் பிரதி நிதிகளை வென்றெடுத்தது. இதற்கு அரச எதிர்ப்பு வாக்குக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ஐக்கிய தேசியக் கட்சிக்கான மானசீகமான ஆதரவும் காரணங்களாக அமைந்தன. இந்த வாக்கு வங்கியானது ஐக்கிய தேசியக் கட்சிக்கு நிரந்தரமானதல்ல. அந்த வகையில் இம்முறை திருமலை மாவட்டத்தில்  ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடுகின்ற தமிழ் வேட்பாளர்கள் வெல்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை.

அதே வேளை திருமலை மாவட்டத்தில் விகிதாசாரத்திற்கமைய ஒரு சில தமிழ்ப் பிரதிநிதிகள் மட்டும் தெரிவு செய்யப்படக் கூடிய நிலைமை இருக்கின்றது. அதிலும் தமிழ் வாக்குகள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்இ தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என பிளவுபடப் போகின்றன. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் போட்டியிடுகின்ற மூவரும் ஆயுதப் போராட்ட கால விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் ஆகும் இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ஆயுதக்குழு எதிர்ப் பிரச்சாரங்களை வலுவிழக்கச் செய்யும் உத்தியாகும். ஆசிரியர் நளினகாந்தன்,கிழக்குப் பல்கலைக்கழக மாணவன் செந்தூரன்,முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் நவரெட்ணராஜா இதில் குறிப்பாக முன்னாள் அமைச்சர் நவரெட்ணராஜா கடந்த மாகாண சபை ஆட்சிக்கால அபிவிருத்திப் பணிகளை முன்வைத்து பிரச்சாரத்தினை முன்னெடுத்து வருகின்றார். சமூகத்தின் சிவில் சமூகப் பிரதிநிதிகளாகக் களமிறங்கியுள்ள இவர்களது சொந்த செல்வாக்குகளும்,
கடந்த மாகாண சபை அபிவிருத்திகளும் பிரச்சாரத்திற்கு வலுச்சேர்க்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதனை நோக்கியே கடந்த முறை அம்பாறை மாவட்டத்திலிருந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சார்பில் தெரிவாகி மாகாண அமைச்சராக இருந்த நவரெட்ணராஜா இம்முறை திருமலையில் களமிறக்கப்பட்டுள்ளார்.

அதே வேளை மாகாண சபையின் நிர்வாக மையம் திருகோணமலையில் அமைந்திருந்தமையும் திருகோணமலை மக்களை முன்னாள் ஆட்சியாளர்களான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் மீது கொண்டுள்ள ஈடுபாட்டினை அதிகரித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பொறுத்த வரையில் திருகோணமலை மாவட்டம் சம்பந்தன் அவர்களது தொகுதி என்பதனால் வலுவான அடித்தளம் கூட்டமைப்பினருக்கு இருக்கின்றது. அது மட்டுமல்ல யாழ்ப்பாணப் பரம்பரையினரின் வாக்குகளை வடகிழக்கு இணைப்பை முன்னிறுத்திக் கூட்டமைப்பு ஈர்த்துக் கொள்ளும். அதே வேளை கூட்டமைப்பின் சார்பில் தலைமை வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள தண்டாயுதபாணி ஒரு கல்வியாளராகவும்,தொழிற் சங்கவாதியாகவும் அறியப்பட்டவர். அவரை நோக்கி “விசயமானவர்” என்கின்ற ஒரு தோற்றப்பாடு மக்களிடையே பரப்பப்படுகின்றது. இது கூட்டமைப்பினருக்கு பெரும் சாதகமாகும். ஆனால் இப்பொழுது கிளம்பியுள்ள அவுஸ்திரேலிய ஆட்கடத்தல் விவகாரத்தில் கூட்டமைப்பு வேட்பாளர் சுரேஸ் மாட்டிக் கொண்டுள்ளமை இத் தேர்தலில் முக்கியமான ஒரு திருப்பமாகும். விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட அகிம்சைவாத தமிழரசுக் கட்சியின்வாரிசுகள் என்கின்ற “மிஸ்டர் கிளீன்” மாயையை சுக்குநூறாக்கியுள்ளது. இதனை தமக்குக் கிடைத்த பிரச்சார உக்திக்கான துருப்புச் சீட்டாக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கையில் எடுத்துள்ளனர்.

இவையனைத்திற்கும் மத்தியில் தான் திருமலை மாவட்டத் தமிழ் வாக்குகள் சிதறடிக்கப்படப் போகின்றன. ஏதோ ஒரு கட்சி ஒரு சில பிரதிநிதிகளை மட்டும் அல்லது இரு கட்சிகள் தலா ஒரு பிரதிநிதிகளை வென்றெடுக்கும் வாய்ப்பினை இப் போட்டி நிலைமை ஏற்படுத்தியுள்ளது.

அம்பாறை மாவட்டம் 436000 வாக்காளர்களைக் கொண்டுள்ள போதும் தமிழ் வாக்காளர்களின் எண்ணிக்கை 80000 ஆகும். இது மொத்த வாக்காளர்களில் 18சதவீதமாகும். இந்த வாக்குப் பலத்தினை மிகவும் கட்டுக் கோப்பாகக் கடந்த முறை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பயன்படுத்தியமையின் காரணமாக 03 தமிழ்ப் பிரதிநிதிகள் கடந்த முறை அம்பாறையில் தெரிவு செய்யப்பட்டது. ஆனால் இம்முறை இந் நிலைமை கேள்விகுரியதாகும். ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இருக்கக் கூடிய ஆதரவுத் தளம் அம்பாறை மாவட்டத்தில் அப்படியே காணப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அங்கு போட்டியிடுகின்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சங்கர் போன்றவர்கள் மக்களிடையே தமக்கான தனிச் செல்வாக்கினைக் கொண்டிருக்கின்றார்கள். புலிகள் கோலோச்சிய காலத்தில் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் துரோகிப் பட்டங்களையும் தாண்டி நுPனுP சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டும் அளவுக்குத் தனிப்பட்ட செல்வாக்கினைக் கொண்டிருந்தவர். இம்முறை அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவதால் தமிழ்த் தேசிய முகமூடி அணிந்து மேலும் வாக்குகளைக் கவர்ந்து கொள்ளும் சந்தர்ப்பங்களும் உண்டு.

ஆனால் அவையெல்லாம் பழங்கதைகள் 15 வருடங்கள் சுவிஸ் நாட்டில் வாழ்ந்து விட்டு வந்திருப்பவரை பாதி சமூகம் மறந்து விட்டிருக்கின்றதுஇ என்கின்ற விமர்சனங்களையும் ஒதுக்கி விடுவதற்கில்லை. இதே போல் கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த இராஜேஸ்வரன் தொழிலதிபர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுபவர்களில் முக்கியமானவர். இவரது பணபலமும் அதனையொட்டிய தொடர்பாடல்களும் கூடிய வாக்குகளைப் பெறக் கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அம்பாறை வாழ் தமிழர்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வந்த தமிழர் மாகாண சபையின் தலைமைக் குழுவில் இருக்கின்ற செங்கதிரோன் கோபாலகிருஷ்ணன் மற்றும் முன்னாள் கல்விப் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான சகாதேவராஜா போன்றோரும் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் அவரது அபிவிருத்திப் பணி தொடர்பில் மிகவும் ஆகர்சிக்கப்பட்டவர்கள். இவர்கள் எடுக்கப் போகின்ற சார்புநிலையும் அம்பாறை மாவட்ட தேர்தல் களத்தில் குறிப்பிடத்தக்க பாதிப்பை செலுத்தும்.

ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்த வரையில் பலமானதொரு தமிழ் முகம் அம்பாறை மாவட்டத்தில் கடந்த முறை போல் இம்முறையும் கிடையாது என்பதனால் ஐக்கிய தேசியக் கட்சித் தமிழ் வாக்குகளை பெறுவது சாத்தியமில்லை.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வெற்றிலை சின்னத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் உட்பட மூவர் இம்முறை போட்டியிடுகின்றனர். இதில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களிடையே செல்வராஜாவை விட புஸ்பராஜாவுக்கான ஆதரவுத்தளம் சற்றுப் பலமானதாகும். நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளராக செயற்பட்ட அனுபவங்களுடன் மாகாணசபை உறுப்பினராகிய இவர் ஒரு நல்ல செயற்பாட்டாளராக பார்க்கப்படுகிறார்.

அடுத்ததாக புஸ்பகுமார் (இனியபாரதி) தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினர் என்பதற்கப்பால் ஜனாதிபதியின் இணைப்பாளராகக் கடந்த சில ஆண்டுகளாகச் செயற்பட்டு வருபவர். இதனடிப்படையில் பல சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் இறுக்கமான தொடர்புகளைக் கொண்டவர். இத்தொடர்புகள் அவருக்கு பெரும்பான்மையான மக்களுடைய செல்வாக்குகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்குள் இருந்து தெரிவு செய்யப்படக் கூடியவர்களில் பாரதி முதன்மையாக உள்ளார் எனக் கருதப்படுகின்றது. இதனடிப்படையில் அம்பாறை மாவட்டத்திலும்,
கிடைக்கக் கூடிய ஓரிரு தமிழ்ப் பிரதிநிதித்துவங்களுக்கான போட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகியவற்றிற்கிடையே கடுமையாக உள்ளது.

தொடரும்…………………….!

-நன்றி தேனீ.
»»  (மேலும்)

8/29/2012

| |

திறீஸ்டாரின் அட்டகாசங்கள் தொடர்கின்றன

மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளைப் பிரதேசத்தில் முதலமைச்சரின் பிரச்சாரக் கூட்டம் இடம் பெறவிருந்த மைதானத்தில் நேற்றிரவு பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளது. பட்டிருப்புத் தொகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வருகின்ற ஆதரவுத் தளத்தினை சீர்குலைக்கவும்,கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ளாமலிருக்க உளவியல் ரீதியான அச்சுறுத்தலை மேற்கொள்ளும் விதமாகவுமே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதேசவாசி ஒருவர் கருத்துத் தெரிவித்திருந்தார். இத் தாக்குதல் சம்பவத்தில் முன்னாள் திறீஸ்டார் ஆயுதக் குழுவின் பொறுப்பாளர் ஜனா மற்றும் கூட்டமைப்பு வேட்பாளர் குணம் ஆகியோருக்கும் சம்பந்தமிருப்பதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றமை சுட்டிக் காட்டத்தக்கது. 
»»  (மேலும்)

8/27/2012

| |

இந்த தேர்தலின் மூலம் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கிழக்கில் மாபெரும் சக்தியாக வியாபிப்பர்


சர்வதேச அரசுகளின் கைக்கூலியாகச் செயற்பட்டு இராணுவத் தளபதியினை சர்வதேச நியதிச் சட்டங்களில் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்க உதவி செய்து தமிழர்களின் வாக்குரிமையினைத் தாரை வார்த்து தமிழினத்திற்கு மிகப் பெரும் துரோகம் செய்தவர் தான் இந்த சம்பந்தர். இன்று எங்களைப் பார்த்து கைக்கூலி என்கின்றார். யார் கைக்கூலிகளென்று மக்களுக்குத் தெரியும்.
மண்டை காய்ந்து போன இந்த மனிதர் டொலர் நோட்டுக்களுக்காக எமது மக்களின் தலைவிதியினை,எமது மக்களின் நியாயத்தினை விலைபேசி விற்றார். நீங்கள் பொன்சேகாவுக்கு அளித்த ஒவ்வொரு வாக்குகளுக்கும் தரகுப் பணத்தினைப் பெட்டிகளாக  எண்ணிப் பார்த்து கணக்கு முடித்திருப்பார் இந்த சம்பந்தர். எமது மக்கள் வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்திடுவது போன்ற இந்தக் காரியத்தைச் செய்தது யாரை நம்பி???
ஈழத் தமிழர்களின் ஏகபிரதிநிதியும்,ஒப்பற்ற அரசியல் தலைவனுமாகத் தன்னைச் சித்தரித்து அரசியல் நடத்தி வரும் இந்த சம்பந்தனை நம்பித் தானே???

பாவம் எமது மக்கள் வழிநடாத்த யாருமற்ற நிலையில் திருடர் கூட்டம் என்று தெரிந்தும் தமது தலைவிதிகளை அடகு வைத்தனர். என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
 கடந்த சனிக்கிழமை (25.08.2012) அன்று செட்டி பாளையத்தில் இடம் பெற்ற அரசியல் பிரச்சாரக் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் 62 வருடகால அரசியல் வரலாற்றில் தேசிய அரசியல்,சர்வதேச அரசியல் ஆகியவற்றைச் சரிவரப் புரிந்து கொள்ளாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அரசியல் செய்கின்றதா? அல்லது இவையனைத்தும் தெட்டத் தெளிவாகத் தெரிந்தும் மக்கள் நலன் சார்ந்து சிந்திக்காது தமது கட்சியின் ஸ்திரத்தன்மை மற்றும் தமது சொந்த நலன்களை மாத்திரம் கருத்திலெடுத்து அரசியல் செய்கின்றதா கூட்டமைப்பு?
எது எப்படியிருப்பினும் கூட்டமைப்பின் அரசியல் மூலம் படுபாதாளத்தில் வீழ்ந்தது தமிழ் மக்கள் தான். அந்த வகையில் நாம் சரிவரச் சிந்திக்க வேண்டும்
இந்த தேர்தலின் மூலம் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கிழக்கில் மாபெரும் சக்தியாக வியாபிப்பர் என்று கூறினார்.
இக் கூட்டத்தின் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியல் ஆலோசகர் சின்னா மாஸ்டர் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் என முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கூட்டத்தில் அறுநூறுக்கும் அதிகமான எண்ணிக்கையில் பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர். கூட்டம் முடிந்து இரவு ஒன்பது மணியளவில் வீடு திரும்பிகொண்டிருந்த தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் இரு ஆதரவாளர்கள் மீது கூட்டமைப்பு வேட்பாளர் ஜனாவின் அடியாட்கள்  பிரசுரங்களை பறித்து தாக்கிவிட்டு தப்பிச்சென்றமை குறிப்பிடத்தக்கது.

»»  (மேலும்)

| |

நமது சொந்த வழிமுறைகளின் மூலம், நமது சொந்த அர்ப்பணிப்பின் மூலம் நமது வரலாற்றிற்குத் திரும்ப விரும்புகின்றோம்

பிஸோ-கினிய மக்களுடைய அன்புக்குரிய தலைவரும், கினிய மற்றும் கேப்வெர்டே விடுதலைக்கான ஆபிரிக்கக் கட்சியின் பொதுச் செயலாளருமான அமீல்கர் கப்ரால் அவர்களது வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையொன்று எனக்கு ஞாபகத்திற்கு வருகின்றது. நம்மிடம் பெரிய தொழிற்சாலைகள் இல்லை, பிற மக்களின் குழந்தைகளிடம் இருக்கும் பொம்மைகள் கூட நம்முடைய குழந்தைகளிடம் இல்லை, ஆனால் நமக்கே சொந்தமான இதயங்களும்;, மூளையும் இன்னும் நம்மிடம் தான் இருக்கின்றன. நமக்கே உரிய வரலாறும் நம்மிடம் இருக்கின்றது. இந்த வரலாற்றினைத் தான் காலணி ஆதிக்கவாதிகள் நம்மிடமிருந்து பறித்து விட்டார்கள். நம்மை வரலாற்றிற்கு அழைத்து வந்தது தாங்கள் தான் என்று அவர்கள் வழக்கமாகவே கூறுகின்றார்கள்.


ஆனால் அது உண்மையல்ல என்று நாம் இன்று காட்டுவோம். நமது வரலாற்றிலிருந்து நம்மை வெளியேற்றிய அவர்கள் தங்களுக்குப் பின்னாலேயே வர வேண்டும் என்றும், தங்களையே பின்பற்ற வேண்டும் என்றும் எம்மை மாற்றியிருக்கிறார்கள்.    
நம்மை நாமே விடுவித்துக் கொள்ள எமது சொந்தக் கால்களில் நிற்பதன் மூலம், நமது சொந்த வழிமுறைகளின் மூலம், நமது சொந்த அர்ப்பணிப்பின் மூலம் நமது வரலாற்றிற்குத் திரும்ப விரும்புகின்றோம் என்று அமீல்கர் கப்ரால் கூறியிருந்தார்;. இதே போன்றுதான் இந்த யாழ் மேலாதிக்கமானது தாங்கள் தான் எம்மை வரலாற்றிற்கு அழைத்து வந்ததாகவும், தங்களையே பின்பற்றி தமக்குப் பின்னாலேயே கிழக்கு சமூகம் தொடர்ந்தும் செல்ல வேண்டும் என்றும் பறைசாற்றி வருகின்றது. எமது சமூகத்தினை அதற்கேற்றாற் போல் மாற்றியும் வைத்திருக்கிறது. தனித்துவமான வரலாற்றினைக் கொண்ட நாம் துன்பங்களையும், இழப்புக்களையும் ஏற்றுக் கொண்டு யாழ் ஏகாதிபத்தியத்தினைத் தொடர்ந்தும் பின்பற்ற முடியாது. அவர்களை இன்னும் பின்பற்றிச் செல்ல நாம் ஒன்றும் சிந்திக்கத் தெரியாதவர்கள் அல்ல, அடி மடையர்களும் அல்ல. அடிமாடாய் வாழ்ந்த அகராதியை மாற்றி எழுதவென்றே நாம் புறப்பட்டோம் என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை (26.08.2012) மாலை கோவில்போரதீவில் இடம் பெற்ற அரசியல் பிரச்சாரக் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
யாரோ ஒருவருடைய கருத்துக்களுக்காக, யாரோ ஒருவருடைய மூளையிலுள்ள விடயங்களுக்காக மக்கள் போராடுவதில்லை. என்பதை எப்போதும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும். பொருளாதார நன்மைகளைப்  பெறுவதற்காகவும், அமைதியாகவும் மேன்மையாகவும் வாழ்வதற்காகவும் தங்களது வாழ்வின் முன்னேற்றத்திற்காகவும் தங்களது குழந்தைகளின் எதிர்காலத்தை உத்தரவாதப்படுத்துவதற்குமாகவே     அவர்கள் போராடுகின்றார்கள். அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்து வருவது போல் எமது மக்களின் எதிர்பார்ப்புக்களை ஏமாற்றங்களாக மாற்றும் படுபாதாள அரசியலை எப்போதுமே எம்மால் செய்ய முடியாது. எம் மக்களை எரித்து குளிர்காயும் அளவிற்கு மனச்சாட்சி அற்றவர்கள் அல்ல நாம். உலகிலுள்ள எல்லா மக்கள் கூட்டத்தைப் போலவும் எமது மக்களும் முன்னேற்றமடைந்த சமூகமாக அறிவியல் பூர்வமாக வெற்றியடைந்த சமூகமாக வாழ வேண்டும். எமது குழந்தைகளின் முகங்களில் புன்னகை ஒன்று மட்டுமே குடியிருக்க வேண்டும். கொடிய யுத்தத்தினைக் கொண்டு வந்து அந்தக் குழந்தைகளின் புன்னகையினைப் பறித்து அநாதை வாழ்வினைப் பரிசளிப்பவர்கள் யாராக இருந்தாலும் நாம் மன்னிக்க மாட்டோம். கிழக்கின் அமைதியினை நிலைக்க விடுங்கள், கிழக்கினைக் கிழக்காக இருக்க விடுங்கள், உங்கள் அரசியலுக்காக வேறு எதையாவது பயன்படுத்திக் கொள்ளுங்கள். எமது மக்களின் வாழ்க்கையில் கை வைக்காதீர்கள் என்று கூறினார். இத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் திரு.சி.சந்திரகாந்தன் அவர்களோடு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியல் ஆலோசகர் திரு. சின்னா மாஸ்டர் மற்றும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபையின் வேட்பாளருமான பூ.பிரசாந்தன்,மற்றும் வேட்பாளர் ஸ்ரீதரன்,தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதிச் செயலாளர் ஜெ.ஜெயராஜ் என முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

| |

வேதனையை விலைப்பட்டியலாக்கும் கூட்டமைப்பினை இனங் கண்டு கொள்ளா விட்டால் இன்னும் எத்தனை யுகங்கள் கடந்தாலும், எத்தனை பிள்ளையான் வந்தாலும் எம் மக்களைக் காப்பாற்ற முடியாது.


இன்னும் எத்தனை நாட்கள் எமது மக்கள் குடிசைகளிலும் தகரக் கொட்டில்களிலும் வாழ்வது? ஒரு சிலர் சொகுசு மாளிகையில் வாழ வேண்டும் என்பதற்காக எமது மக்கள் இன்னும் ஓலைக் குடிசைகளில் வாழும் அவலம். எம்மால் இவற்றை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. எமது மக்களின் துன்பங்களைக் காட்டி தொடர்ந்தும் அவர்களைக் கஸ்டங்களின் மத்தியிலேயே வாழ வைத்து பிரச்சினைகளை விளம்பரப் பொருளாக்கி அரசியல் ஆதாயம் தேடிப் பிழைப்பதானது அழகான ஓர் கைக் குழந்தைக்கு ஆகாரம் எதுவும் கொடுக்காது பசியில் அழவிட்டு அதனைக் காட்டிப் பிச்சையெடுத்துப் பிழைக்கும்
என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளருமான திரு. சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். நேற்று மாலை (26.08.2012) பெரியபோரதீவு பத்திரகாளி அம்பாள் ஆலய முன்றலில் இடம் பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்
இறக்கும் வரை எமது மக்கள் எதிர்பார்ப்புக்களை மட்டுமே சுமந்து கொண்டு வாழ்க்கை நடத்துகின்றனர். சலித்துப் போன இந்த வாழ்க்கையை வாழவும் வழியின்றி நகரவும் முடியாமல் பொருளாதாரம்,கல்வி,கலாசாரம் என்று அனைத்தையும் இழந்து ஏக்கப் பெருமூச்சோடு நிற்கும் ஒரு சமூகம்.
இருளுக்கு மத்தியில் ஓர் ஒளிப்புள்ளியை நோக்கி நகரும் போது அந்த வெளிச்சத்தையும் நிரந்தரமாக அணைத்து விட்டு கண்ணிருந்தும் குருடர்களாக எம் மக்களைத் தொடர்ந்தும் இருளிலேயே வாழவிட்டு வேடிக்கை பார்ப்பதென்பது எவ்வளவு துன்பகரமானது.
எமது கிழக்கு மாகாண சபையினை சீர்குலைத்து எமது மக்களின் உரிமைகளைத் தாரைவார்த்து அடிமை விலங்கு பூட்டி ஆளலாம் என்ற எண்ணங் கொண்ட மனித மிருகக் கூட்டமொன்று எம் மண்ணில் உலா வருகின்றது. மக்களின் காவலர்களாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு வெள்ளைச் சட்டைகளுடன் வலம் வருகிறார்கள் இந்தக் கறைபடிந்த கைகளுக்குச் சொந்தக்காரர்கள். அவர்கள் மனச்சாட்சி அற்றவர்கள் வேதனையை விலைப்பட்டியலாக்கும் கூட்டமைப்பினை இனங் கண்டு கொள்ளா விட்டால் இன்னும் எத்தனை யுகங்கள் கடந்தாலும் எத்தனை பிள்ளையான் வந்தாலும் எம் மக்களைக் காப்பாற்ற முடியாது.
இந்தப் பூச்சாண்டி வித்தை காட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எமது மக்கள் அடிக்கப் போகின்ற சாட்டையடி தான் எமது மக்களை மாயையிலிருந்து விடுபடச் செய்யப் போகும் மரண அடியாக விழப் போகின்றது. எமது மக்கள் நிச்சயம் வெல்வார்கள். மக்கள் சக்தி வெல்லும் போது நாமும் வெற்றியடைவது உறுதி.
“எவ்வளவு தான் சூடாக இருந்தாலும் கிணற்று நீரால் ஒரு பிடி அரிசியைக் கூட வேக வைக்க முடியாது”
அந்த வகையில் அரசியல் எந்திரத்தில் பொறிமுறைகள் தான் மிக அவசியம். ஒவ்வொரு தருணங்களிலும் ஒவ்வொரு விதமான அணுகு முறைகள் வேண்டும். ஒரே அணுகு முறையைத் தொடர்ச்சியாகக் கடைப்பிடிப்பதானது தற்கொலைக்குச் சமனானது.
எனவே நாம் விழிப்படைய வேண்டும் நன்றாகத் தெளிவடைய வேண்டும் அரசியல் ஞானம் கொண்டவர்களாக மாற வேண்டும். “எமக்கு யாரும் எதையும் தர மாட்டார்கள் எமக்குத் தேவையானதை நாம் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
இந்த அரசியல் பிரச்சாரக் கூட்டத்தின் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் வேட்பாளர்கள்ஸ்ரீதரன்,பிரஷாந்தன் மற்றும் முக்கியஸ்தர்கள் பெருந் திரளான பொது மக்களும் கலந்து கொண்டனர்.
»»  (மேலும்)

| |

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம்களுக்காக பரிந்து பேச முன்வந்துள்ளது. இவ்வாறுதான் விடுதலைப் புலிகளும் கூறி வந்தனர்.

  

நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் வாழைச்சேனையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம்களுக்காக பரிந்து பேச முன்வந்துள்ளது. முஸ்லிம் தரப்பின் தேவைகளை அவர்களிடம் முன்வைத்தால் எங்களுக்காக அவற்றைப் பெற்றுத்தர அவர்களால் முடியும் என்கிறார்கள். இவ்வாறுதான் விடுதலைப் புலிகளும் கூறி வந்தனர்.
முஸ்லிம்கள் தனித்துவ அடையாளங்களைக் கொண்ட ஒரு தேசிய இனம். அதன் உரிமைகளைச் சொந்தக் கால்களில் நின்று பெற்றுக் கொள்ளும் திராணி எங்களுக்கு உள்ளது என்பதை சகல தரப்பினர்களுக்கும் உறுதியாகக் கூறிவைக்க விரும்புகின்றேன் என அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர், மாகாண சபை வேட்பாளர்களான ஹாபிஸ் நசீர் அஹமத், சவாஹிர் சாலி, சட்டத்தரணி ராசிக் ஆகியோரும் உரையாற்றினர்.
 
»»  (மேலும்)

8/26/2012

| |

ஆயர் ராயப்பு நிரூபித்தால் அமைச்சர் பதவியை துறப்பு! ரிசாத் பதியுதீன் மன்னார் ஆயருக்கு சவால்


மன்னார் ஆயர் மரியாதைக்குரிய ராயப்பு ஜோசப் அவர்கள் நான் 650 அரசாங்கத் தொழில் வாய்ப்புக்களை முஸ்லிம்களுக்கு மட்டும் வழங்கியுள்ளேன் என்று மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகிறார். அது முற்று முழுதான அப்பட்டமான பொய். 650 அல்ல ஆறு முஸ்லிம்களுக்கு கூட எந்த நியமனங்களையும் நான் புதிதாக வழங்கவில்லை என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். தொலைக்காட்சி ஒன்றில் இடம் பெற்ற நேரடி நிகழ்ச்சியொன்றின் போது எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதி லளிக்கும் போதே மேற்கண்டவாறு கூறிய அமைச்சர் றிசாத் நான் அப்படியான நியம னங்களை வழங்கியுள்ளேன் என்று நிரூ பித்தால் அமைச்சு பதவியை இராஜினாமா செய்வதுடன் அரசியலில் இருந்தும் ஒதுங்கிவிடுவேன் என்று குறிப்பிட்டார்.
அந்த 650 அரசாங்கத் தொழில் வாய்ப்பு சந்தர்ப்பங்களில் 19 தமிழர்களுக்கும், இரண்டு சிங்களவர்களுக்கும் தொழில் வாய்ப்பு அளிக்கப்பட்டதாகவும் ஏனைய அனைத்து சந்தர்ப்பங்களும் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டதாகவும் மன்னார் ஆயர் குறிப்பிட்டிருந்தார்.
ஒரு மதத் தலைவர் அதுவும் முக்கியமான ஒருவர் இவ்வாறு ஏன் உண்மைக்கு புறம்பானதொன்றை கூறுகின்றார். என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இவ்வாறான பிழையான புள்ளி விபரங் களை அவருக்கு வழங்குபவர்கள் எப்படி யானவர்களாக இருக்க முடியும். எனக்கும் ஆயர் அவர்களுக்கும் தனிப்பட்ட ரீதியில் எந்த வித பிரச்சினைகளும் இருந்ததில்லை. எப்போது வடக்கிலிருந்து இடம் பெய ர்ந்த முஸ்லிம்களை அவர்களது சொந்த மண்ணில் மீள்குடியேற்ற ஆரம்பித்தேனோ அன்று தான் இந்த பிரச்சினை தோற்றம் பெற்றுள்ளது. இதனது பின்னணியில் பல சக்திகள் இருப்பதாக அறிந்து கொள்ள முடிகின்றது. நான் ஒரு முஸ்லிம் என்ற படியாலும், வடக்கில் உள்ள தமிழ் மக்கள் என்னோடு இருக்கின்றார்கள் என்ற படி யாலும் இந்த அரசாங்கத்தில் ஓர் அமைச் சராக இருக்கின்றவன் என்றபடியாலும் என்னை பழிவாங்கும் ஒரு செயலாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது.
»»  (மேலும்)

| |

முஸ்லிம்களுக்கு துரோகமிழைத்த புலிசார்பு TNA யுடன் கூட்டு வைப்பதா?பிரதியமைச்சரும் SLFP முஸ்லிம் பிரிவின் பொறுப்பாளருமான பைஸர் முஸ்தபா செவ்வி
* அரசை விமர்சித்துக் கொண்டு அரசில் ஒட்டியிருப்பது ஏன்?
* பல்டி அரசியல் நடத்துவதில் மு.காவை விஞ்ச எவருமில்லை!
* அமைதியாக வாழும் முஸ்லிம்களின் வாழ்வை சீர்குலைக்கும் மு.கா!
* மர்ஹ{ம் அஷ்ரப் வளர்த்தெடுத்த மு.கா இன்று அழிவுப் பாதையில்!
* சமூக நலன் துளியளவும் இல்லாத மு.கா சுயநல அரசியலில்!
* முஸ்லிம்களுக்கு தீங்கு எனில் முதலில் குரல் கொடுப்பவன் நானே!
அரசியலுக்காக சமூகத்தை விற்றுப் பிழைப்பு நடத்தும் முஸ்லிம் காங்கிரஸின் தற்கால செயற்பாடுகளைத் தான் வன்மையாக எதிர்ப்பதாக பிரதியமைச்சரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவின் பொறுப்பாளருமான பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபைத் தேர் தலில் வாக்குகளைப் பெறுவதற் காக முஸ்லிம் காங்கிரஸ் படாதபாடு பட்டுவருகிறது. இதற்காக இனத்துவேசமான கருத்துக்களை மேடைகளில் முன்வைத்து வருகிறது. அரசாங்கம் பள்ளிவாசல்களை உடைப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது. பள்ளிவாசல் என்பது மரியாதைக்குரிய வணக்கஸ்தலம். இறைவனின் இருப்பிடம். அத்தகைய புனிதமான இறை இல்லத்தை அரசியலுக்காக சிறுபிள்ளைத்தனமாக மு.கா பயன்படுத்தி வருவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
எனவே பள்ளிவாசல் சம்பவங்களை ஒரு போதும் அரசியலாக்கித் தமது சொந்த அரசியலுக்கு பயன்படுத்தாது நாம் ஒற்றுமையாக அவற்றின் புனிதத் தன்மைக்குப் பங்கம் ஏற்படாது பாதுகாக்க வேண்டும். முஸ்லிம்களுக்கோ அல்லது பள்ளிவாசல்களுக்கோ கெடுதல் இடம்பெறுகிறது என்றால் அங்கு நானே முதல் ஆளாக நின்று தட்டிக் கேட்பேன். குறிப்பாக தெஹிவளைச் சம்பவத்தின்போது அங்கு முதலாவதாகச் சென்று பெரிதாக எழவிருந்த மோதலைச் சமாதானமாகத் தீர்த்து வைத்தேன். அவ்வாறு நாம் நிதானமாகவும், புத்திசாலித் தனமாகவும் செயற்பட வேண்டுமே தவிர மு.கா போன்று எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செயற்பட்டால் பாரிய இன மோதலுக்கே அது வழிவகுக்கும்.
கிழக்கு மாகாணசபையின் ஆட்சியைக் கைப்பற்ற தமிழ்க் கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் மறைமுகமான இரகசிய உடன்பாடு ஒன்றைச் செய்துள்ளதாக அறிய முடிகிறது. மு.கா அவ்வாறு செய்வது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத் திற்கும் செய்யும் பாரிய துரோகமாகும். இதனை எந்தவொரு முஸ்லிம் மகனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். விடுதலைப் புலிகளின் காலத்தில் புலிகளால் வடக்கு கிழக்கில் முஸ்லிம்கள் சொல்லொணா துயரங்களை அனுபவித்தனர்.
அன்று காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 108 முஸ்லிம் கள் பள்ளியினுள் வைத்தே படுகொலை செய்யப்பட்டனர். வடக்கில் ஒரு லட்சம் முஸ்லிம்கள் உடுத்த உடுப்புக்களுடன் இரு மணி நேரத்தினுள் தமது பூர்வீக மண்ணிலிருந்து பலவந்தமாக வெளி யேற்றப்பட்டனர். இதையெல்லாம் அன்று புலிகளுடன் ஒட்டி உறவாடி அவர்களது குரலாக இருந்த, இன்றும் இருந்து வரும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள் மெளனமாக இருந்து வேடிக்கை பார்த்தனர். இத்தகையவர்களுடன் முஸ்லிம்களுக்கு ஒருபோதும் கூட்டுவைக்க முடியாது. அப்படி சிந்திப்பதே சமூகத்திற்குச் செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். ஆனால் மு.கா இன்று தனது அரசியல் இருப்பிற்காக இச்செயலில் ஈடுபடத் துணிந்து சமூகத்தை அடகு வைக்கத் தீர்மானித்து விட்டது என்றும் பைஸர் முஸ்தபா கவலை தெரிவித்தார்.
அன்று புலிகள் முஸ்லிம்களைக் குறிவைத்துத் தாக்கியபோது எமக்காக தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒரு சிறு குரலாவது கொடுத்தார்களா? இல்லை. மாறாக இன்று மு.காவுடன் கூட்டுவைக்க அவர்களும் முன்வந்துள்ளனர். அவர்களைக் குறை கூறுவதை விடுத்து எம்மவர்களைப் பற்றிச் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் சமூக சிந்தனையுடன் இக்கட்சியை ஆரம்பித்து, தானிருக்கும் வரை திறம்பட நடத்தினார். தனது காலத்தில் துறைமுகம் பாடசாலைகள், வைத்தியசாலைகள் அமைத்து கிழக்கை அபிவிருத்தி செய்து இளைஞர் யுவதிகளுக்கு பல்வேறு தொழில்வாய்ப்புக்களையும் ஏற்படுத்தினார். அவரது மறைவின் பின்னர் வந்த மு.கா தலைமை இன்றுவரை சமூகத்திற்காக என்ன செய்தது என்று செய்த ஒன்றையாவது கூற முடியுமா? கட்சியை கூறுபோட்டு, பழையவர்களை பழிவாங்கி இன்று ஏனைய சமூகங்களுடன் விரிசலை ஏற்படுத்தி வருவதே இன்றைய தலைமையின் சாதனைகளாகும் என்றும் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
கடந்த ஆட்சியின்போது கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கூட தக்கவைக்க முடியாது ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தாரை வார்த்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இம்முறை முதலமைச்சர் பதவிக்காக நீலிக் கண்ணீர் வடிப்பது வேடிக்கையாக உள்ளது.
கிழக்கு மாகாணசபை ஆட்சியை மு.காவுடன் இணைந்து அமைக்க வேண்டுமென்ற எந்தத் தேவைப்பாடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குக் கிடையாது. அதனைக் கடந்த மாகாண சபைத் தேர்தலில் நிரூபித்துள்ளோம். மு.கா ஐ.தே.க வுடன் இணைந்து கடந்த தேர்தலில் போட்டியிட்ட போதும் அக்கட்சியினால் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது போய் விட்டது.
அத்துடன் மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கூட தமது சுயநலத் துக்காக மு.கா தலைவர்கள் ஐ.தே.க விற்குத் தாரை வார்த்து விட்டு கொழும்புக்கு ஓடினர். கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற போதும் வாக்களித்த மக்க ளைக் கைவிட்டு விட்டு எம்.பி பதவிக்காக கொழும்புக்கு ஓடினர். இதுதானா முஸ் லிம் சமூகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள பற்று என்றும் பைஸர் முஸ்தபா கேள்வி எழுப்பினார்.
இன்று அரசாங்கதைப் பற்றி மேடைகளில் மிக மோசமாக விமர்சித்துவரும் மு.கா தலைவர்கள் தொடர்ந்தும் அரசில் ஒட்டிக் கொண்டிருப்பதன் அர்த்தம் தான் என்ன? நமது நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு பிரச்சினைகள் பலவுள்ளன என்பதை நாம் மறுக்க முடியாது. அவைகள் பேச்சு வார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும். எந்தவொரு நாட்டிலும் இவ்வாறான பிரச்சினைகள் எழுவது இயல்பு. அவற்றை நமது நாட்டுக்குள் பேச்சுவார்த்தை மூலம் புரிந்துணர்வு அடிப்படையில் தீர்த்துக் கொள்வதே புத்திசாலித்தனமானது. அதை விடுத்து மக்களின் உணர்வுகளை தூண்டி வாக்கு வேட்டைக்காக மேடைகளில் கொக்கரிப்பது இன நல்லுறவை மேலும் விரிவடையச் செய்யும்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மேடைகளில் இனவாதப் பிரச்சாரத்தை உடனடியாகக் கைவிட வேண்டும். யதார்த்த நிலைமைகளைப் புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டும். வாக்குகளைப் பெறுவதற்காக மனச்சாட்சிக்கு விரோதமான செயற்பாடுகளில் மு.கா ஈடுபடக்கூடாது.
மக்களே எஜமானர்கள். கிழக்கு மாகாண மக்கள் புத்திசாலிகள். எனவே அவர்கள் சரி எது, பிழை எது என நன் கறிவர். மு.காவைப் பொறுத்தவரையில் தமது பிரசாரங்கள் மூலம் இனங்களுக் கிடையே காழ்ப்புணர்வை வளர்ப்பதைக் கைவிட வேண்டுமென்பதே எமது கோரிக்கையாகும்.
மர்ஹும் பதியுதீன் முஹம்மத், மர்ஹும் அஷ்ரப் ஆகியோரே எனது அரசியல் குருமார். அவர்கள் தாம் சாணக்கியம் மிக்க தலைவர்கள் என்பதைப் பல சந்தர்ப்பங்களில் உணர்த்தியுள்ளனர். அஷ்ரப் அவர்கள் தனது கட்சி மூலமாக சமுகத்திற்குச் சக்தியளித்து, கட்சியை வளர்த்தெடுத்து அதேசமயம் அரசாங்கத்திற்கும் சக்தியாக, பக்கபலமாக இருந்துவந்தார். ஆனால் இன்றோ கட்சிக்கும், சமூகத்திற்கும், அரசாங்கத்திற்கும் எவ்விதமான பிரயோசனமும் இல்லாத நிலையிலேயே மு.காவும் அதன் தலைமைகளும் செயற்படுகின்றன. அதனால் எனது தந்தையின் நெருங்கிய நண்பர், எனது அரசியல் குரு மர்ஹும் அஷ்ரப் அவர் களால் எமது இல்லத்தில் வைத்து ஆரம் பிக்கப்பட்ட மு.காவின் ஸ்தாபகத் தலை வரது சிறந்த கொள்கைகளை பின்பற்றுமாறு தான் மு.கா தலைமையைக் கேட்பதாகவும் பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா தெரி வித்தார். அரசியலில் தமது சுயலாபத்திற்காக பல்டி அடிப்பதில் மு.காவை விஞ்ச எவராலும் முடியாது எனும் அளவிற்கு 2005 ஆம் ஆண்டிலிருந்து இவர்கள் நடத்திவரும் நாடகங்கள் அரங்கேறி வருகின்றன. ரணில் விக்கிரமசிங்கதான் சிறந்த தலைவர் எனக் கூறி அவருடன் இருந்துவிட்டு பின்னர் சரத் பொன்சேகா விற்கு ஆதரவு தெரிவித்தனர். அவர் தோற்றதும் பல்டி அடித்து அரசின் பக்கம் தாவி சலுகைகளைப் பெற்றனர். இன்று சலுகைகளைப் பெற்றுக்கொண்டே அரசை விமர்சிக்கின்றனர். இவர்களுக்கு சமூக நலன் என்பது துளியளவும் கிடையாது. தமது குறுகிய நன்மைக்காக எதனையுமே செய்வர் என்பதே மக்களது கணிப்பாக உள்ளது.
மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் நல்லவர். அவருடன் எனக்கு எவ்விதமான தனிப்பட்ட குரோதமும் கிடையாது. நான் எனது சமூகத்திற்காகவே குரல் கொடுக்கிறேன். இந்நாட்டில் வாழும் சிங்கள, தமிழ் சகோதரர்களுடன் ஒற்றுமையாகவும் சகோதரத்துவத்துடனும் வாழ்வதே முஸ்லிம்களது கடப்பாடாகும். அதனை தலைவர்கள் உறுதிசெய்ய வேண்டுமே தவிர உருக்குலைக்கக் கூடாது என்றும் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
இந்நாட்டில் கிழக்கில் மட்டும் முஸ்லிம்கள் வாழவில்லை. மூன்றில் இரண்டு பகுதியான முஸ்லிம்கள் வடக்கு கிழக்கிற்கு வெளியேயும் வாழ்கின்றனர். கிழக்கில் வாக்குகளைப் பெறுவதற்காக இனத்துவேசம் பேசி நாட்டின் ஏனைய பகுதிகளில் அமைதியாக வாழும் முஸ்லிம்களின் வாழ்வைச் சீர்குலைத்துவிடக் கூடாது என்றும் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
»»  (மேலும்)

| |

திறி ஸ்டார் கொலை குழுக்கள் வெறியாட்டம்

 இன்று (25.08.2012) தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரச்சார நடவடிக்கைகள் களுவாஞ்சிக்குடிசெட்டிபாளையத்தில்  பிரதேசத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்தவேளை கடந்த காலங்களில் பலதரப்பட்ட  மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புபட்டு தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஜனா என்பவர் தலைமையிலான காடையர் கும்பல் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினரின் பிரச்சார நடவடிக்கையினை தடுக்கும் வகையில் குளப்பங்களை ஏற்படுத்தியதுடன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் சார்பில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொது மகன் ஒருவரை கடுமையான ஆயுதங்கள் கொண்டு தாக்கியதன் காரணமாக வினோதன் என அழைக்கப்படும் குறித்த பொது மகன் களுவாஞ்சிக்குடி பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், தாக்குதலை நடத்திய ஜனா தலைமையிலான கும்பல் இனங்காணப்பட்டு வாகனங்களின் இலக்கங்களும் அடையாளம் காணப்பட்டு பொலிசார் தேடுதல் நடத்துவதுடன் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
                                                                                                                                                                                      களுவாஞ்சிக்குடி நிருபர்.
»»  (மேலும்)

8/25/2012

| |

மட்டக்களப்பு விமான நிலைய புனரமைப்புப் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பம்

கடந்த காலத்தில் யுத்த சூழ்நிலைகளினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உல்லாசப்பிரயாணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் இந்த அபிவிருத்திப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து விமானசேவைகள் பொறியியல்துறை இந்த விமான நிலையப் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவுள்ளது.
மட்டக்களப்பு விமான நிலைய புனரமைப்புக்கென 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் புனரமைப்புப் பணிகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 03ஆம் திகதி ஆரம்பித்துவைக்கவுள்ளார்.
இது தொடர்பில் ஆராயும் கூட்டம் நேற்று மட்டக்களப்பு விமானத் தளத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரட்ண, சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அத்துடன் விமானசேவைகள் நிலையப் பிரதிப்பணிப்பாளர் கமல் ரத்வத்தை, சிவில் விமானசேவைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபேரூ, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எம்.சார்ள்ஸ் உட்பட நகர அபிவிருத்தி அதிகாரசபை,  விமானசேவைகள் பொறியியல்துறை, மட்டக்களப்பு விமானப்படைத்தள இணைப்பாளர், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது விமானப்படைத்தளத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டதுடன் அமைச்சர்களும் பார்வையிட்டனர்.
இந்தப் புனரமைப்புப் பணிகள் நிறைவுபெறும் பட்சத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நேரடியாக மட்டக்களப்புக்கு வரக்கூடிய வசதிகள் ஏற்படும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
இதனால் மட்டக்களப்பு மாவட்டம் சுற்றுலாத்துறையில் மட்டுமன்றி அனைத்துத் துறைகளிலும் பாரிய வெற்றியடையவுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சிந்தனையில் உருவான இந்தத் திட்டம் மூலம் தமிழ் மக்கள் சிறந்த பயனை அடையமுடியும் என்பதுடன் அவருக்கு அனைவரும் நன்றிக்கடன் உள்ள மக்களாக இருக்கவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்
»»  (மேலும்)

| |

PMGGயின் மூன்றாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம்

PMGGயின் மூன்றாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம்
எதிர்வரும் கிழக்கு மாகாணசபை தேர்தலில் சுயேட்சைக்குழு 08ல் இரட்டைக்கொடி சின்னத்தில் போட்டியிடும் காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மூன்றாவது தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் புதிய காத்தான்குடி பதுரியா ஜும்ஆ பள்ளி முன்றலில் சூறாசபை உறுப்பினர் சனூன் தலைமையில்இடம் பெற்றது.

இந்நிகழ்வில் சூறாசபை உறுப்பினர்களான பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் சபீல் நளீமி, பிர்தௌஸ் நளீமி பளுலுல் ஹக், முன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஹாறூன் மற்றும் சூறாசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் உட்பட பெருந்திரளான பொது மக்களும் கலந்து கொண்டனர்.

»»  (மேலும்)

| |

கிழக்கு தேர்தலில் அனைத்து கட்சிகளும் ஒரே மேடையில்-நீதிக்கும் சமாதானத்திற்குமான முன்னணி ஏற்பாடு


2012 கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் களமிறங்கியுள்ள பிரதான கட்சிகளின் பிரதிநிதிகள் ஒரே மேடையில் தத்தமது கட்சிகளின் கொள்கைகள் வேலைத்திட்டங்கள் என்பவற்றை பொதுமக்களுக்கு விளக்குமுகமாக நீதிக்கும் சமாதானத்திற்குமான முன்னணி (FJP) பொதுக்கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது.
மேற்படி பொதுக்கூட்டம் இன்று 24ம் திகதி ஆகஸ்ட் மாதம் 2012 வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணிக்கு அம்பாறை மாவட்டத்தில் மருதமுனை கடற்கரை வெளியில் இடம்பெற உள்ளது. இக்கூட்டத்தில் UPFA, SLMC, UNP, TNA, TMVP, JVP, PMGG ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறான இன்னுமோர் நிகழ்வு 26ம் திகதி ஆகஸ்ட் மாதம் 2012 ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனையிலும் இடம்பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
இன ரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் பிரிந்து மேற்கொள்ளப்படும் தேர்தல் பிரசார நடைமுறையை இல்லாமல் செய்வதுடன் எந்தவொரு கட்சியும் எந்தவொரு வேட்பாளரும் மாகாணத்தில் எந்தவொரு பிரதேசத்திற்கும் சென்று தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என்ற ஜனநாயக சூழலை ஏற்படுத்தும் நோக்கிலும், ஜனநாயக அரசியலில் கட்சிகளுக்கிடையிலான முரண்பாடு என்பது கொள்கைகள், கருத்துகள், வேலைத்திட்டங்கள் என்பவற்றை மாத்திரமே அடிப்படையாக கொண்டிருக்க முடியும். மாறாக மதம், மொழி, பிரதேசம் என்ற அடிப்படையில் அமையக்கூடாது என்பதை நடைமுறையில் காட்டும் ஒரு முன்மாதிரி நிகழ்வாகவே நாம் இதனை ஏற்பாடு செய்துள்ளோம் என FJP யின் தலைவர் Shiehk M. Naja Mohammed குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மக்களிடையே நீதியை நிலைநிறுத்துவதன் மூலம் சமூகங்களுக்கிடையே சமாதானத்தை கட்டியெழுப்ப முடியும் என்பது FJPயின் நம்பிக்கையாகும்
»»  (மேலும்)

| |

இத் தேர்தலில் பிள்ளையானுக்கே எங்களது குடும்பவாக்குள் - யோகேஜ்வரன் எம்.பி. குடும்பம் உறுதி


நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நிச்சயம் முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன்(பிள்ளளையான் அவர்களுக்கே எமது குடும்பம் வாக்களிக்கும். பாராளுமன்ற தேர்தல் என்றால் நாங்கள் நிச்சயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கே வாக்களிப்போம். ஆனால் நிச்சயம் பிள்ளையான்தான் முதலமைச்சராக வரவேண்டும். அவரே வருவார். ஆகையால்தான் நாங்கள் எங்களது குடும்ப வாக்குகளை அவருக்கே செலுதத் உள்ளோம் என யோகேஸ்வரன் எம் பியின் குடும்பத்தினர் தெரிவித்தார்கள்.தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் வாழைச்சேனை புதுக்குடியிருப்புப் பகுதியில் வீடு,வீடாகச் சென்றுதேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆதன் போது எம்.பி யோகேஸ்வரனின் வீட்டாருடன் உரையாடியபோதே மேற்கண்டவாறு அவர்கள் தெரிவித்தார்கள்.
நேற்றுசெவ்வாய்கிழமை (21.08.2012) குறித்தபிரதேசத்தில் ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது புதுக்குடியிருப்பில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அவர்களது இல்லத்திற்கு விஜயம் செய்து பாராளுமன்ற உறுப்பினரது தாயார் மற்றும் சகோதரி ஆகியோரையும் சந்தித்துக் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

| |

யார் இந்தப் பிள்ளையான்?

  தேர்தல் பிரசுரங்கள் -இல -1  
யார் இந்தப் பிள்ளையான்? பிள்ளையான் களுதாவளைக்கு என்ன செய்தார்?
நடைபெற இருக்கின்ற மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
கட்சியின் தேசியத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான பிள்ளையான் அவர்கள்
முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுகின்றார்.
பிள்ளையான் அவர்கள் கடந்த மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டபோது நாம்
வாக்களித்தோமா? இல்லையா? என்பதற்கு அப்பால் எமது களுதாவளைக்
கிராமத்திற்கு இதுவரை காலமும் எந்த ஒரு அரசியல்வாதியும் செய்யாத பாரிய
அபிவிருத்தியை பிள்ளையான் அவர்கள செய்திருக்கின்றார்.
அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் மாத்திரம் வாக்குக்கேட்டு வருவார்கள்
ஆனால் எமது வாக்குகளைப் பெற்று அரசியலுக்கு வந்தால் எமது கிராமத்தினை
திரும்பிக்கூட பார்க்கமாட்டார்கள். ஆனாலும் பிள்ளையான் அவர்கள் கடந்த
மாகாணசபை தேர்தலிலே எங்களிடம் வாக்குக்கேட்டு வரவில்லை. முதலமைச்சர் பதவி
கிடைத்ததும் எமது கிராமத்திற்கு பல தடவைகள் வந்து எமது பிரச்சினைகளை
கேட்டறிந்து உடனுக்குடன் தீர்வுகளைப் பெற்றுத் தந்ததுடன் பாரிய
அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுத்தவர்.

இவ்வாறு பிள்ளையானால் எமது களுதாவளைக் கிராமத்திற்கு செய்யப்பட்ட சேவைகள்
பல அவற்றுள் சில…
1.      எமது கிராமம,; விவசாயக் கிராமம் விவசாயப் பிரதேசங்களில் மின்சாரம்
வழங்கப் படாமல் எமது விவசாயிகள் பல பிரச்சினைகளை எதிர் நோக்கியதோடு பல
அரசியல்வாதிகளிடம் மின்சாரத்திற்காக கையேந்தியும் எவரும் எமது விவசாயிகளை
கணக்கில் எடுக்கவில்லை. ஆனால் பிள்ளையான் முதலமைச்சராக வந்தவுடன் நாம்
அவரிடம் மின்சாரம் கேட்டு செல்லாமலே எமது விவசாயிகளின் மின்சாரம் இல்லாத
பிரச்சினையை அறிந்து தாமாகவே முன்வந்து மின்சாரம் வழங்கினார்.
மின்சாரம் வழங்கப்பட்ட இடங்கள் பல அவற்றுள் சில…
. விச்சுக்காலை பிரதேசத்தில் விவசாய மற்றும் குடியிருப்பு பிரதேசங்கள்
        அனைத்திற்கும் பல மில்லியன் ரூபா செலவில் மின்சாரம் வழங்கியமை.
. கடற்கரை வீதி பிரதேச விவசாய மற்றும் குடியிருப்பு பிரதேசங்கள்
அனைத்திற்கும் பல மில்லியன் ரூபா செலவில் மின்சாரம் வழங்கியமை.
. சாந்திபுர பிரதேச விவசாய மற்றும் குடியிருப்பு பிரதேசங்கள்
அனைத்திற்கும் பல   மில்லியன் ரூபா செலவில் மின்சாரம் வழங்கியமை.
. 10க்கு மேற்பட்ட உள் வீதிகளுக்கு மின்சாரம் வழங்கியமை
களுதாவளையில் இதுவரை மின்சாரம் வழங்கப்படாமல் இருக்கும் பிரதேசங்களுக்கு
மின்சாரம் விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமை.
2.      களுதாவளை மகா வித்தியாலயம் 1000 பாடசாலைகள் திட்டத்தில் 700 இலட்சம்
ரூபா செலவில் அபிவிருத்தி செய்ய தெரிவு செய்யப்பட்டபோது. பாராளுமன்ற
உறுப்பினர் பொன் செல்வராஜா அவர்கள் களுதாவளை மகா வித்தியாலயத்தை அத்
திட்டத்தில் இருந்து நீக்கி தனது கிராம பாடசாலைக்கு இத் திட்டத்தை கொண்டு
சென்றார். இவ் விடயத்தில் பிள்ளையான் அவர்கள் மீண்டும் தலையிட்டு எமது
மகா வித்தியாலயத்தை மீண்டும் அத் திட்டத்தில் இணைத்துக் கொண்டார்.

3.      மகா வித்தியாலயத்திற்கு கணணி தொகுதியும் பிறின்ரரும் வழங்கியமை

4.      மகா வித்தியாலயத்திற்கு பல காலமாக அதிபர் நியமிக்கப்படாமல் பல
பிரச்சினைகள் எதிர் நோக்கியபோது கிராம மக்களின் வேண்டுகோளுக்கிணங்க
சிறந்த அதிபரை நியமித்ததுடன்; தகுதியான ஆசிரியர்களை நியமித்தமையும்.

5.      களுதாவளை வீதிகள் அனைத்தும் கொங்கிறிற் மற்றும் கிறவல் இடுவதற்குரிய
நிதியினை ஒதுக்கியமை.

6.      பாரிய நூலகக் கட்டிடம் அமைப்பதற்கான திட்டம் ஒன்று வந்தபோது களுதாவளை
பொது நூலகத்திற்கு கட்டிடம் அமைப்பதற்கு சிபார்சு செய்தமை.

7.      களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய ஒன்று கூடல் மண்டப நிர்மாண
வேலைகளுக்கு 20 இலட்சம் ரூபா வழங்கியமை.

8.      வெற்றிலைச் செய்கையாளர்களின் அலம்பல் பிரச்சினை தொடர்பாக உரிய உயர்
அதிகாரிகளுடன் பேசி அலம்பல் வெட்டுவதற்குரிய கட்டுப்பாடுகள்
தளர்த்தப்பட்டு விவசாயிகள் இலகுவாக அலம்பல் வெட்டுவதற்கு அனுமதி
வழங்கப்பட்டமை.

9.      களுதாவளை பொது விளையாட்டு மைதானத்தில் சகல வசதிகளும் கொண்ட பாரிய
விளையாட்டரங்கு அமைப்பதற்கு சிபார்சு செய்தமை.

10.     களுதாவளை முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு ஒரு இலட்சம் ரூபா வழங்கியமை.

11.     நுனுளு கல்வி நிலையத்திற்கு பொட்டோ கொப்பி இயந்திரம் மற்றும்
கதிரைகள், கற்பித்தல் உபகரணங்கள் வழங்கியமை.

12.     களுதாவளை முத்துமாரி அம்மன் கோவிலுக்கு மின்சார மேளம் வழங்கியமை.

13.     களுதாவளை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஒலிபெருக்கி வழங்கியமை.

14.     களுதாவளை சிறி முருகன் கோவிலுக்கு மரத்தளபாடங்கள் வழங்கியமை

15.     முருகன்கோவில் வீதிக்கும் கடற்கரை வீதிக்கும் இடைப்பட்ட
பிரதேசத்திலுள்ள வீதிகளுக்கு 71ஃ2 இலட்சம் ரூபா செலவில் கிறவல் இட்டமை.

16.     கடற்கரை வீதி கொங்கிறீற் இடுவதற்கு 3 மில்லியன் ஒதுக்கியமை
பிள்ளையான் அவர்களால் எமது கிராமத்திற்கு செய்யப்பட்ட அபிவிருத்திகளை
அடுக்கிக்கொண்டே போகலாம். இவ்வாறு பல அபிவிருத்தித் திட்டங்களை எமது
கிராமத்திற்கு செய்த பிள்ளையான் அவர்கள் மீண்டும் முதலமைச்சராக வருவது
உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் இவ் வேளையில் பிள்ளையான் அவர்களுக்கு
வாக்களித்து அவரின் கரங்களை பலப்படுத்தவோமாக இருந்தால் எமது கிராமத்தை
இன்னும் பல அபிவிருத்தி நோக்கி கொண்டு செல்ல முடியும்.
அனைவரும் ஒன்று படுவோம் யுத்தத்தால் சின்னாபின்னமாக்கப்பட்ட கிழக்கை
துரித கதியில் கட்டியெழுப்பிய மட்டக்களப்பின் மைந்தன் பிள்ளையானின்
கரங்களை பலப்படுத்துவோம்.

களுதாவளை வாலிபர் ஒன்றியம்
»»  (மேலும்)

8/23/2012

| |

மட்டக்களப்பில் மாற்றம் ஏற்பட்டு விட்டது எமதுமக்கள் தெளிவடைந்து விட்டார்கள்

எனது அப்பா,அப்பப்பா என எல்லோருமே தமிழரசுக் கட்சியினையே ஆதரித்தனர். நீங்களும் அப்படித்தான் கடந்த காலங்களில் வாக்களித்திருப்பீர்கள். நம்பி வாக்களித்த எமக்கு எந்த நன்மையையாவது செய்தால் தானே எமக்கும் எந்தவொரு கட்சிமீதும் நம்பிக்கைவரும். எனதுஅப்பா,அப்பப்பா செய்ததவறினை நான் செய்யப் போவது கிடையாது. எமது மக்களுக்கு மாற்றுத் தெரிவில்லாத காரணத்தினால் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு வாக்களித்து வந்தனர். அதற்குத் தமிழர்கள் என்ற ஒரே ஒரு காரணம் தான் இருந்தது. மக்களுக்குச் சேவையாற்றக் கூடியவனா? உதவுகின்ற மனப்பாங்கு இருக்கின்றவனா? என்று யாரும் யாரையும் கேள்விகேட்பதுகிடையாது. தமிழரசுக் கட்சி கொண்டு வந்து யாரைக் காட்டினாலும் எமது மக்கள் வாக்களிப்பார்கள். வாக்குகளைப் பெற்றுக் கொண்டவர்களும் மக்களை மறந்தவர்களாக தமது சொந்த விருப்பு,வெறுப்புக்களை மாத்திரம் கவனித்துக் கொண்டு மௌனமாகி விடுவார்கள். எல்லாம் தெரிந்தும் எமது மக்கள் எதனையும் கண்டு கொள்வதில்லை. ஆனால் இன்று இந்தக் கயவர் கூட்டத்திற்கு இங்கே இடம் கிடையாது. எமதுமக்கள் தெளிவடைந்துவிட்டார்கள்.இந்தத் தெளிவினைப் பெறும் வரைக்கும் அவர்கள் இழந்தவை எல்லாம் மிகஅதிகம். 
எமக்கு இழப்பிலிருந்துமீண்டெழுவதற்கான தேவைகளும் மிகஅதிகமாகும். தேவைநிறைந்த ஓர் சமூகம் மீண்டும் அழிவுக்குள் செல்ல அனுமதிக்க நாம் தயாரில்லை. எமது மாகாணத்தை நிர்வகித்து எம் மக்களைக் கட்டியாள எம்மால் முடியும். ஆதனை நிரூபித்துக் காட்டியிருக்கின்றோம். அந்தவகையில் எம் மக்கள் எம்மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். எம்மை வெற்றி பெறச் செய்யப் போவதும் அவர்கள் தான் என்று சி.சந்திரகாந்தன் தெரிவித்தார். முதலைக்குடா விநாயகர் ஆலய முன்றலில் இடம் பெற்ற தேர்தல் பிரச்சாரக்  கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இக் கலந்துரையாடலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின  வேட்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
»»  (மேலும்)

| |

தமிழ் தேசியம் பேசுவதற்கு அருகதையற்றவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்;


கி.மா.ச.வேட்பாளர் பூ.பிரசாந்தன்

தமிழ் தேசியம்இ மனித உரிமை மீறல்இ சர்வதேசத்தின் பார்வை என்றவாறு பிதற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபை தேர்தல் வேட்பாளர்கள் எவருக்கும் எந்த அருகதையும் இல்லை. அப்பாவி இளைஞர்களை கொலைக்களம் அனுப்பியவர்கள்இ தமிழ் தேசியத்திற்கு எதிராக மக்களைக் கொன்று குவித்தவர்கள் தமிழ் தேசியம் பேசுவதா? சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது த.தே.கூ. வேட்பாளர்களின் நடத்தை. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆயுதமேந்தவும்இ இலட்சக்கணக்கான அப்பாவி பொது மக்கள் கொல்லப்படவும் அதற்குக் காரணமாக இருந்தவர்கள் இன்று அந்த காரணங்களுக்கு நியாயம் தேடுவது இவர்களால் கொல்லப்பட்ட அப்பாவி உயிர்களை மீட்டுத்தருமா? புத்திஜீவிகளையும்இ கல்விமான்களையும் நாட்டைவிட்டுத் துரத்திவிட்டு இன்று முதலைக் கண்ணீர் வடிப்பது வேடிக்கையாக உள்ளது. தங்கள் மீதும்இ தமிழ் மக்கள் மீதும் நம்பிக்கை இல்லாது இன்றொரு கட்சிஇ நாளை ஒரு கட்சி என்று தாவித்திரியும் வேட்பாளர்களா தேசியவாதிகள்? இம் முறை த.தே.கூ.அதிதீவிர ஆதரவாளர்கள் கூட த.தே.கூட்டமைப்பை ஓரங்கட்டுவார்கள்.
ஆனால் தொடர்ந்தும் மக்களால் ஓரங்கட்டப்பட்டுவரும் த.தே.கூ.வேட்பாளர்கள் மக்களால் நிரந்தரமாக அரசியலில் இருந்து துரத்தப்படுவார்கள்
அடிக்கடி பெய்கின்ற மழைக்கு முளைக்கின்ற காளான் போல் தேர்தல் காலங்களில் மாத்திரம் மக்களை சந்தித்து தேசியம் பேசி பின்பு வாக்குப் பெற்றவுடன் மக்களை மறக்கும் த.தே.கூ.அரசியல்வாதிகளுக்குள் இம் முறை போட்டியிடும் வேட்பாளர்கள் மக்களைப் பார்த்து தேசியம் பேசுவதற்கு முன்பு தங்களது மறு பக்கத்தினை ஒருமுறை திரும்பிப் பார்ப்பார்களேயானால் அவர்களின் மனச்சாட்சி கூட குறித்த வேட்பாளருக்கு வாக்களிக்காது. பின்பு எப்படி உண்மைத் தமிழர்கள் இவர்களுக்கு வாக்களிக்கப்போகின்றார்கள்? என கிழக்கு மாகாண சபை வேட்பாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
கிரான்குளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
»»  (மேலும்)

| |

எமது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. எட்டுத்திக்கும் மதயானைகளாக சூழ்ந்து நிற்கும் கயவர்கள் அனைவரையும் வீழ்த்தி வெல்வோம்இந்தமக்களுக்குப் பணியாற்றவென்றே நாம் புறப்பட்டோம். நாம் தலைநிமிர்ந்து நிற்கின்றோம் ஆனால் சம்மந்தர் மிகவும் பயந்த ஒரு கோழை நான் ஏன் இப்படிக் கூறுகிறேன் என்றால் சந்திரி;கா கொண்டு வந்த தீர்வுப் பொதியில் தமிழர்களுக்கு மிகவும் வலுவானதும் நியாயமானதுமான பல்வேறுபட்டஅதிகாரங்கள் மலிந்துகாணப்பட்டன. என்றுசம்மந்தர் மிகஅண்மையில் ஓர் கருத்தினை வெளியிட்டிருந்தார். இப்போது கடந்துவிட்ட காலம் பற்றி கருத்துக் கூறும் இவர் எம் மக்களுக்கு உண்மையிலேயே அதிகாரங்களைப் பெற்றுக் கொடுக்கும் எண்ணம் கொண்ட மனிதராக இருந்திருந்தால் ஏன் அன்று சந்திரிகாவின் தீர்வுப் பொதியினை துணிந்து ஏற்கவில்லை? அது ஒரு நல்லதீர்வு என்று கூறுபவர் அன்றே இதனைப் பொறுப்பேற்றிருக்கலாம் தானே?

ஆனால் இவர் அன்று என்ன செய்தார்?
ஐக்கியதேசியக்கட்சியும் ஆனந்தசங்கரியும் இணைந்து தீர்வுதிட்ட ஆவணங்களை பாராளுமன்றத்தில் தீயிட்டுஎரித்தபோது வாயேதிறக்காமல் அமர்ந்திருந்தார். இன்று விடுதலைப் புலிகள் மடிந்த பின்னர் சந்திரிகாவின் தீர்வுப் பொதி அதிகாரம் மிகுந்ததாக இருந்ததாம்.

இதேபோன்றுதான் 2008இல் பிரிக்கப்பட்டகிழக்கில் போட்டியிடுவது தமிழர்களுக்குத் செய்யும் வரலாற்றுத் துரோகம் என்று சொல்லிவிட்டு இன்று புலித்தலைமை மடிந்த பின்னர் என்ன கூறுகிறார்?
அதிகாரம் மிக்கமுதலமைச்சரையும் கிழக்குமாகாணசபையையும் உருவாக்க காலத்தின் கட்டாயம் கருதி கிழக்குமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுகின்றார்களாம்..!
அப்படிஎன்றால் 2008ல்  எம் மக்களுக்கு அதிகாரங்களும் தீர்வுகளும் தேவையான விடயங்களாக இருக்கவில்லையா?
இவர் கூறும் காலத்தின் கட்டாயம்அப்போது எங்கேபோனது? விடுதலைப் புலிகள் இருக்கும் போது ஒருபேச்சு இறந்தபின்னர் ஒருபேச்சு. நிலையான கொள்கைகள் இல்லை,பற்றுறுதி இல்லை. அதற்குள் விடுதலைப் புலிகள் இருக்கும் போது எம்மை சுயமாக சிந்திக்கவிடவில்லை என்றும் சொல்கிறீர்கள்.
சுயமாக சிந்திக்கத் தெரியாதவர்கள்,முடியாதவர்கள் எல்லாம் ஏன் ஐயா மக்களுக்காக அரசியல் செய்யவருகிறீர்கள்?

நாம் முதுகுக்கு பின்னால் பேசுபவர்கள் அல்ல கோழைகளும் அல்ல. எம் மக்களின் அழிவுகளை ஏற்றுக் கொள்ள முடியாமலேயே சாவினைத் துச்சமென்றெண்ணி தலைமையினை ஏற்றோம். இன்னோர் சமூகத்தின் கரங்களில் பறிபோகவிருந்த மாகாணசபையினையும் கைப்பற்றினோம் கிழக்குமண்ணின் இருப்பினைத் தக்கவைத்துக் கொண்டோம்.

என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் தெரிவித்தார். நேற்றுமாலை இருதயபுரத்தில் இடம் பெற்றதேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறினார்?

மேலும் அவர் தொடர்ந்துஉரையாற்றுகையில்...
நாம் போராளிகளாக இருந்தபோது மின்மாற்றிகளைத் தகர்த்தால் தம்பி இன்னுமொரு மின்மாற்றியிருக்கிறது அதையும் உடைத்துவிடுங்கள் எமக்கு எதற்கு மின்சாரம் என்று கூறிய மக்கள் இன்று எமது கிராமத்திற்கு மின்சாரம் வழங்கினால்தான் வாக்குபோடுவோம். என்கின்றனர். அந்தளவிற்கு மக்கள் தெளிவடைந்திருக்கின்றனர். அவர்களையாராலும் எமாற்றிவிடமுடியாது.
எமது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. எட்டுத்திக்கும் மதயானைகளாக சூழ்ந்து நிற்கும் கயவர்கள் அனைவரையும் வீழ்த்திவெல்வோம் என்று கூறினார்.
இக்கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

»»  (மேலும்)

8/22/2012

| |

ஒரு வாக்கினை கூட வீட்டுச் சின்னத்திற்கு வழங்க மாட்டோம் முனைக்காட்டு மக்கள் சபதம்.

முனைக்காட்டு கிராமத்தின் அனைத்து விளையாட்டு கழகங்களும் சமூக நிறுவனங்களும் இணைந்து ஒரு வாக்கினை கூட வீட்டுச் சின்னத்திற்கு வழங்க மாட்டோம் என்று சபதம் எடுத்தனர். கிராம தலைவரும் ஆலய வண்ணக்கரும் ஆகிய மானாப்போடி தலைமையில் பிரச்சார கூட்டம் இடம் பெற்றது அங்கு முதலமைச்சர் வேட்பாளர் சந்திரகாந்தன் உரையாற்றுகையில்...
தமிழீழம் பெற்றுத் தருகின்றோம் சர்வதேசத்தின் தீர்வு காத்திருக்கிறது,காலம் கனிந்து விட்டது வாருங்கள்! வாருங்கள்! அணிதிரள்வோம். என்றழைத்து வாக்குகளைக் கபளீகரம் செய்துவிட்டு இருந்த இடத்திற்கும் பதில் சொல்லாமல் ஓடிவிடுவார்கள் இந்தக் கூட்டமைப்பினர். நாயாவது குரைத்துவிட்டுச் செல்லும் நன்றிகெட்டவர்கள் இவர்கள். கிழக்கு மண் மீதும் மக்கள் மீதும் அளப்பரிய பற்றுக் கொண்டவன் நான். எனது மக்களை வைத்து ஏய்த்துப் பிழைக்கும் கயவர்களுக்குச் சரியான பதிலடி கொடுப்போம்.

நம்பி வாக்களித்த மக்களைக் கடைசி வரையும் கைவிடாமல் துன்பங்களை மக்களுக்காய்த் தானேற்று இறக்கும் வரை பயணிப்பவனே நல்ல தலைவன். தான் பெற்ற மக்களை மட்டும் பாதுகாத்துக் கொண்டு வாழ்வதென்றால்,அர்ப்பணிப்பு சிறிதேனும் இல்லையென்றால் அரசியல் தலைவர்களாக ஏன் ஐயா! மக்களுக்கு போலி வித்தை காட்டி உலா வருகின்றீர்கள்? ஆடம்பரப் பங்களாவில் நீங்கள் குடியிருக்கவும் அரச சலுகைகளைப் பெற்றுக் கொண்டு சுகபோகமாய் வாழவும் எம் மக்கள் உதவி என்று வந்து கேட்டால் “நாங்கள் கூட்டமைப்பு அரசுக்கு எதிரானவர்கள் எம்மிடம் போதியளவு நிதியில்லை” என்று பஞ்சம் கூறிக் கைவிரிக்கவும் தானா? எம் மக்கள் இவ்வளவு நாளும் நம்பி உங்களுக்கு வாக்களித்தார்கள்? மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லவேண்டும.; இந்தக் கூட்டமைப்பினர் எம் மக்களுக்கு இந்தநீண்டநெடியஅரசியல் வரலாற்றில் ஏதாவது நன்மைகளைப் பெற்றுத் தந்திருக்கிறார்களா? அடியும் உதையும் பசியும் பட்டினியும் சாவும்தானே இத்தனை வருடகாலமும் எம் மக்களை அரவணைத்து முத்தமிட்டது.இவைகள் தானே எம் மக்களுக்காய் நீங்கள் பெற்றுக் கொடுத்தது.
மண்முனை ஆற்றிற்குக் குறுக்காகப் பாலம் அமைக்கப்படப் போகின்றது. இதற்கு ஜப்பான் அரசு உதவி செய்கின்றது. நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள்.
இவ்வளவு பெரிய பாலத்தை மண்முனையில் கட்டித்தர வேண்டுமென ஜப்பான்காரனுக்கு என்ன தலைவிதியா? மண்முனை மக்களுக்குத் தேவை இருக்கின்றது என்று ஜப்பான்காரன் நேரடியாக வந்து எமக்குப் பாலம் போடுவானா?
ஜனாதிபதி நினைத்திருந்தால் ஜப்பானின் இந்த  உதவியினை அம்பாந்தோட்டையில் செய்யுங்கள் என்று கூறிவிடமுடியும் அல்லது தென்னிலங்கையின் எங்கோ ஓர் பகுதியில் அந்த அபிவிருத்தி நிச்சயம் நடக்கும். ஆனால் எமது பிரதேசத்திற்குத் தேவை இருக்கின்றது எங்கள் மண்முனையாற்றுக்குப் பாலம் வேண்டும் என்று வலியுறுத்தி சண்டைபிடித்து எமது பிரதேசத்திற்குக் கொண்டு வந்து சேர்ப்பதுயார்? இது யாருடைய பொறுப்பு? இதையெல்லாம் விட்டு,விட்டு அபிவிருத்தி தானாய் நடக்குமாம் என்று சிறுபிள்ளைத் தனமாய்க் கூறுகிறது இந்தக் கூட்டமைப்பு.
ஓர் பொறுப்புள்ள அரசியல் கட்சி கூறுகின்ற பதிலா  இது? எம் மக்கள் எப்படிப் போனாலும் பரவாயில்லை தங்களது கதிரைகள் மட்டும் காப்பாற்றப்படவேண்டும் என நினைக்கின்றார்கள்.
துன்பங்களை மலைகளாகத் தூக்கிச் சுமந்தவர்கள் எமது மக்கள மீண்டும் ஓர் இருண்ட யுகத்திற்குள் எம் மக்களைத் தள்ளி விட்டு வேடிக்கை பார்ப்பதற்கு நாம் தயாராகவும் இல்லை,துணை நிற்கப் போவதும் இல்லை. அந்தவகையில் நாம் தெளிவாக இருக்கின்றோம். எமது கிழக்குமாகாணம் வெளித்துவிட்டது  மெல்ல,மெல்ல இருள் அகன்று வருகின்றது. எமது விடியலை யாரும் தடுக்க முடியாது,எம்மையும் எமதுமக்களையும் வீழ்த்தவும் முடியாது என்று தெரிவித்தார்.
இத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வேட்பாளர்களான பூ.பிரசாந்தன் (முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர்)
சி.சிறிதரன் (வெல்லாவெளிப் பிரதேச சபை தவிசாளர்)மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
தேர்தல் பிரச்சாரம் இடம் பெற்ற முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டு மைதானத்தினை 02 மில்லியன் செலவில் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களே அமைத்துக் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

| |

தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் பிரச்சார மேடைகளில் தொடர்ச்சியாக இணைந்து வரும் தமிழரசு கட்சி முக்கியஸ்தர்கள்

 கிழக்கில் உதித்தால் தான் வெளிச்சம். இங்கே இருள் சூழ்ந்தால் நிலைமை என்னவாகும்? நாம்  அதற்கு அனுமதிக்கலாமா? திரிசங்கு நிலையில் இன்று தமிழ் வாக்காளர்கள் சிலர் இருக்கின்றனர். அவர்களும் தெளிவடைய வேண்டும் என்றுதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முந்நாள் தீவிரஆதரவாளரும் கூட்டமைப்பிற்காகப் பல்வேறு துன்பங்களையும் அனுபவித்து உழைத்தவர்களில் ஒருவருமானஅருள் ஐயா அவர்கள் தெரிவித்தார்.
ஐயங்கேணி பிரதேசத்தில் நேற்று (18.08.2012) தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் ஏற்பாடுசெய்யப்பட்ட அரசியல் கூட்டமொன்றிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற ஜமைக்கா நாட்டு ஓட்டப் பந்தயவீரர் “உசைன் போல்ட்”. ஆனால் அவரைவிடவும் வேகமாக ஓடக் கூடியவர்கள் எமது ஐயங்கேணியில் இருக்கின்றார்கள். எப்படி என்று கேட்கிறீர்களா? “சுற்றிவளைப்பு” கொழும்பிலே குண்டு வெடித்தாலும் ஐயங்கேணியில் சுற்றிவளைப்பு நடக்கும். இந்த சுற்றிவளைப்புக்களில் பிடிபடாமல் ஓட வேண்டும் அல்லவா? அப்படித்தான் எமது பிரதேசத்தவர்கள் ஓட்டப் பந்தய வீரர்களானார்கள்.
இந்த இருண்டயுகம் எமக்கு வேண்டுமா?
ஐயங்கேணி இன்றுஎப்படி இருக்கின்றது? இப்போது சுற்றிவளைப்புக்கள் இல்லவே இல்லை. அமைதி பிறந்திருக்கிறது. விடியும் வரைக்கும் வீதியில் துணிந்து நடமாடுகின்றோம். இவற்றினை எமக்கு ஏற்படுத்திக் கொடுத்தது யார்? இன்றுநான் இந்த ஐயங்கேணிப் பகுதியில் நடக்கும் கூட்டத்தில் மின்சாரவெளிச்சத்தில் நின்று பேசுகின்றேன் என்றால் அதற்கும் காரணம் எமது சந்திரகாந்தன் ஒருவர் தான். எனவேநாம் எமக்கு நிம்மதியைத் தேடித் தந்தவரை ஆதரிக்கப் போகின்றோமா? அல்லதுஅழிவுகளை ஏற்படுத்தித் தரும் கும்பலை ஆதரிக்கப் போகின்றோமா? நீங்களே முடிவு செய்யுங்கள் என்றார்.
ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் திரு.க.மோகன் அவர்களால் ஏற்பாடுசெய்யப்பட்ட இக் கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அரசியல் ஆலோசகர் திரு.சின்னாமாஸ்டர் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அண்மைக் காலமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரச்சாரப் பயணங்களின் போது தமிழரசுக் கட்சிக்காய் முன்னின்று உழைத்த முக்கியஸ்தர்கள் பலரும் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இணைந்து வருகின்றமை சுட்டிக் காட்டத்தக்கது.
»»  (மேலும்)

8/21/2012

| |

கிழக்கில் தேர்தலை பாதிக்கும் பாரிய வன்முறைகள் இல்லை

தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே கூறுகிறது
கிழக்கு மாகாணத்தில் ஒருசில தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளபோதும், தேர்தல் செயற்பாடுகளைப் பாதிக்கு மளவிற்கு எதுவித பாரிய வன்முறைச் சம்பவங்களும் அங்கு இதுவரை இடம்பெறவில்லையென தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை இரண்டு வன்முறைச் சம்பவங்களே பதிவாகியிருப்பதாக கபே அமைப்பின் தலைவர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பணிகளை அமைதியாக நடத்தக்கூடிய சூழ்நிலையே தற்பொழுது அங்கு காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலை விட இம்முறை கிழக்கு மாகாணத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படுகிறது. ஆங்காங்கே ஒருசில வன்முறைச் சம்ப வங்கள் பதிவாகியுள்ளபோதும், பாரதூரமான வன்முறைச் சம்பவங்கள் எதுவும் அங்கு இடம்பெறவில்லையென கீர்த்தி தென் னக்கோன் தெரிவித்தார்.
அதேநேரம், கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமான தேர்தல் சுவரொட்டிகள், கட்டவுட்டுக்கள் என்பன 99 வீதம் அகற்றப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயத்தில் பொலிஸார் சிறப் பாகச் செயற்பட்டு வருகின்றனர். எனினும், அம்பாறை மாவட்டத்தில் சிங்கள மக்கள் செறிந்துவாழும் பிரதேசங்களில் இன்னமும் தேர்தல் சுவரொட்டிகள் மற்றும் கட்ட வுட்டுக்கள் அகற்றப்படாமலிருப்பதாக கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.
வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணசபைத் தேர்தல்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி நடை பெறவிருக்கும் நிலையில், தேர்தல்கள் நடைபெறவிருக்கு 7 மாவட்டங்களிலிருந்து இதுவரை 126 தேர்தல் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் பெரும்பாலா னவை சட்டவிரோதமான தேர்தல் பிரசாரங்கள் பற்றியவை என்றும் கபே அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
»»  (மேலும்)

| |

கிழக்கில் மக்கள் ஆதரவை இழந்துவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் காலடி எடுத்து வைத்த நாளிலிருந்து இருந்து இன்று வரை பல இடங்களில் அடிமேல் அடி வாங்கிய தொடர்  கதையாக மக்கள் ஆதரவை இழந்துவருகின்றது. அண்மையில் சித்தாண்டிப் பிரதேசத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தை அடிப்படையாக வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் ஆதரவு இழப்பு எந்த நிலையில் உள்ளது என்பதனை இகக்கட்டுரை ஆராய்கின்றது.
 
கிழக்கு மாகாணத்திலே சித்தாண்டி பிரதேசம் என்றாலே பல சிறப்புக்களைக் கொண்ட ஒரு பிரதேசமாகத் திகழ்கின்றது. உரிமைப்போராட்ட காலத்திலே மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள போராளிகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை பரிமாற்றம் செய்கின்ற ஒரு மையமாகவும், எந்தவொரு எட்டப்பனும் இல்லாத ஓர் போராட்ட ஆதரவு கிராமமாகவும், உரிமைப்போராட்டத்தில் பலரை ஈந்தளித்த நிலமாகவும் இது சிறப்புப்பெற்றது. தமிழன் என்ற சிந்தனை, தமிழனின் உரிமை போன்ற பல விடயங்களில் ஏனைய தமிழ்ப்பற்றுள்ள கிராமங்களுக்கு நாங்கள் சற்றும் சழைத்தவர்கள் இல்லை என்பதனை நிரூபிக்குமளவிற்கு தமிழின பற்றுள்ள சமூகமே இங்கு வாழ்கின்றது. இத்தகைய தமிழனப் பற்றே காலம் காலமாக அரசியல் ரீதியாகவும், தமிழனுக்கு நன்மை கிடைக்கக்கூடிய  அரசியல் கட்சிகளின் பின்னால் அணிதிரளவும் வழிவகுத்தது. 
 
அந்த வகையில் விடுதலைப்புலிகள் இலங்கையில் இருந்த காலப்பகுதியில் அவர்களின் விருப்பு எதுவோ? அதற்கமைவாகவே தமது அரசியல் ரீதியான ஆதரவை கட்சிகளுக்கு வழங்கி வந்தார்கள். குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கiயில் இருந்த காலப்பகுதியில் அவர்களின் கட்டளைக்கு ஏற்ப நடந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பின்னால் அனைத்து மக்களும் அணிதிரண்டார்கள். ஆனால் சித்தாண்டி பிரதேச மக்களின் தமிழ்உணர்வோ அல்லது தமிழ்பற்றோ இன்றும்  மாறிவிடவில்லை. மாறாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பின்னால் நின்றால்  கிழக்கு மாகாணத்திற்கு ஒரு தமிழ் முதலமைச்சரை பெறமுடியாத நிலை ஏற்படும். என்ற தெளிவு ஏற்பட்டு அவர்கள் இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பின்னால்  இருந்து ஒதுங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.  அதாவது கிழக்கு மண்ணை ஆட்சி செய்யக்;கூடிய தகுதியும், செல்வாக்கும் உடைய ஒரே ஒரு தமிழனான பிள்ளையான் அவர்களை தோற்கடித்து, முஸ்லிம் ஒருவனை முதல்வவராக்கும் சதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதை அறிந்தே மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை விட்டு விலகியிருக்கின்றார்கள். 
 
கடந்த 14.08.2012 அன்று சித்தாண்டியின் முருகன் ஆலய முன்றலில் பெரும் எடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம்; ஒன்று ஒழங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், தமிழர்விடுதலைக் கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் சித்தார்த்தன, செல்வம் அடைக்கலநாதன்,சுரேஸபிரேம சந்திரன, மாவை சேனாதி உள்ளிட்ட பெருமளவிலான வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பிரசாரத்திற்கென வந்திறங்கியிருந்தார்கள். குறிப்பாக 17 சொகுசு வாகனங்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் வெளிமாவட்டஙகளிலிருந்து வந்திறங்கினர். தலா ஒவ்வொரு வாகனங்களுக்குள்ளும் 12 பேர் சகிதம் மொத்தமாக 204 பேர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரால் வெளிமாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்டனர். ஆனால் அங்கு சித்தாண்டி பிரதேசத்தில் தேர்தலுக்காக ஒன்று கூடிய மக்கள் என்றால் மிகமிகக் குறைவு. அதாவது சுமார் 20 இற்கும் குறைந்த மக்களே அவர்களுடைய பிரசாரத்தில் சித்தாண்டி பிரசேத வாசிகள் என்று சொல்பவர்கள் அமர்ந்திருந்தார்கள. இவர்கள் கூட மறுநாள் இடம்பெற இருக்கும் ஆலயத்தின் கொடியேற்ற நிகழ்வகளுக்காக வந்தவர்களும், மாலைப்பொழுதில் மரங்களின் கீழ் உட்கார்ந்து கதைத்துக்கொண்டிருக்கும் வயோதிபர்களுமேயாகும். இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலங்களில் மிகவும் அதிக செல்வாக்கைப் பெற்றிருந்த சித்தாண்டி பிரதேசத்தில் தமது செல்வாக்கை முற்றாகவே இழந்ததை எடுத்துக் காட்டுகின்றது. உண்மையில் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை வெறுப்பதற்கு காரணமே கிழக்கு வாழ் தமிழர்களின் தமிழ் தலைமைத்துவத்தை அகற்றி முஸ்லிம் தலைமைத்துவதற்கு வழிவகுப்பதற்கு போடப்பட்டுள்ள சதிகளை அறிந்ததேயாகும். 
 
இவற்றை விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு இத்தேர்தலில் பிரசாரத்தில் மக்கள் கலந்து கொள்ளமாட்டார்கள் என்ற காரணத்தினாலேயே தமது வாகனங்களில் ஆதரவாளர்களை வெளிமாவட்டங்களில் இருந்தெல்லாம் சுமார் 200 பேர் வரையிலான ஆதரவாளர்களை அழைத்து வந்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இங்குள்ள மக்கள் தம்மீது நம்பிக்கை இழந்து விட்டர்கள் . சிலவேளைகளில் தமது பிரசாரங்களிலே குழப்பங்களை ஏற்படுத்துவார்கள் என்ற பீதியின் காரணமாகவே முன்கூட்டியே பாதுகாப்புக்கூட அரசதரப்பிலிருந்து பெற்றிருந்தார்கள். குறிப்பாக 300 இற்கும் மேற்பட்ட காவல்துறையினர், 50 இற்கும் மேற்பட்ட புலனாய்வு அதிகாரிகள், கலகம் அடங்கும் பிரிவு மற்றும் தீயணைப்ப படை போன்ற பல பாதுகாப்பு ஏற்பாடுகள் அங்கு காணக்கூடியதாகவிருந்தது. உண்மையில் தமிழர்கள் தமது கட்சியை நேசிக்கின்றார்கள், தமக்கு ஆதரவு இருக்கிறது என்றால் ஏன் இத்தனை பாதுகாப்புக்கள் போடவேண்டும். தமது மக்கள் தம்மீது அதிருப்தியுற்றுள்ளார்கள் சிலவேளைகளில் தமக்கு அவர்களால் ஆபத்து நிகழலாம் என்ற தோரணையிலேயே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமது பிரசாரக்கூட்டத்திற்கு இத்தகைய முன்பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தமை  தெட்டத்ததெளிவாகப் புலப்படுகின்றது.
 
அரசியல் பிரசாரத்திற்காகவும், மக்களிடத்தில் அனுதாபம் தேடுவதற்காகவும் தமது வாகனங்களையும். தமது அலுவலகங்களையும் தாமே சேதமாக்கிவிட்டு பொலிசில் முறைப்படுவதும் மேடைகளில் உளரித்திரிவதையும் அண்மை;காலத்தில் செய்து வருகின்றார்கள். 
சித்தாணடிபிரதேசத்திலே இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மற்றும் பாரிய குழுவினர் வருகை தந்திருந்தும் மக்கள் அதனைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சதிச்செயலை மக்கள் அறிந்து தெளிவுபெபற்றுள்ளார்கள் என்பதைத் தெளிவுபடுத்துவதுடன், கிழக்கு மண்ணில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மண்ணைக் கவ்வ இருப்பதையும் எடுத்து விளக்குகின்றது.
 
- ஆராவாணன் -
»»  (மேலும்)

8/19/2012

| |

தமிழரசுக் கட்சியினர் ஒன்றும் மகான்களல்ல
 
தமிழரசுக் கட்சியினர் ஒன்றும் மகான்களல்ல. மகான்களின் பெயர்களை விளம்பரப் பலகைகளாக்கி வியாபாரம் செய்யும் மிகக் கேவலமான அரசியல்வாதிகள் கூட்டமே அவர்கள் என்று சி.சந்திரகாந்தன் தெரிவித்தார்.
 
நாவிதன் வெளியில் இடம் பெற்ற அரசியல் கூட்டமொன்றின் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
 
எம் மக்களை ஏமாற்றுவது எப்படி என்கின்ற வித்தையினை மாத்திரம் நன்கு பயின்றுள்ள கூட்டமைப்பு தொடர்ந்தும் அவற்றினை எம் மக்கள் மீது பிரயோகித்து வருகின்றது. அந்த வகையில், எமது அம்பாறை மக்களது வாக்குகளையும் வீணடித்து கிடைக்கின்ற சந்தர்ப்பத்தினைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தலை மறைவாகி விடுவதே அவர்களது நோக்கம். தம்மால் எதனையும் சாதிக்க இயலாது என்று தெரிந்தும் விதண்டா வாதத்திற்கே அவர்கள் இத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். 
 
பிள்ளையானை வீழ்த்தப் போகின்றோம் எனக் கூறி ஒட்டு மொத்தக் கிழக்குத் தமிழரது வாழ்விலும் விசப் பரீட்சை வைத்து விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும் எமது மக்களும், நாமும் நிச்சயமாகத் தோற்கப் போவது கிடையாது. மேலாதிக்க சிந்தனையாளர்களான இவர்களது சுயரூபத்தினை நாம் உணந்து கொண்டது போல, எம் மக்களும் இன்று உணர்ந்திருக்கின்றனர். 
 
அரசியல் ரீதியான தெளிவு நிலை இப்போது தான் மெல்ல மெல்ல வெளிச்சமடைந்து வருகின்றது. எமது சமூகத்தினைச் சுற்றியுள்ள மாய வேலியினை நிச்சயம் நாம் உடைத்தெறிவோம் என்று கூறினார்.
 
கடந்த வியாழக்கிழமை  நாவிதன் வெளியில் இடம் பெற்ற இக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான திரு.புஸ்பராசா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாவிதன் வெளி பிரதேச சபைத் தவிசாளர், உபதவிசாளர் ஆகியோரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.  
 
  
 
»»  (மேலும்)

| |

தமிழர் பூர்வீக வரலாற்றுத் தடயங்கள் பாதுகாக்கபட வேண்டும் - சி.சந்திரகாந்தன்களுவாஞ்சிக்குடி பட்டிப்பளை பிரதேசத்தில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் கல்வெட்டு ஒன்றினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் திரு.சி.சந்திரகாந்தன் அவர்கள் பார்வையிட்டார்.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பட்டிப்பளைக்கு விஜயம் செய்த அவர் குறித்த கல்வெட்டினைப் பார்வை செய்ததுடன், இது தொடர்பில் எடுக்க வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடினார்.
நிறைகும்பக் கலசமொன்றின் இலட்சினையுடன் காணப்படும் இக் கல்வெட்டானது 1919களில் தமிழ் மொழியில் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
»»  (மேலும்)

| |

தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கிழக்கு ஆட்சியை பிடிக்க முடியுமா? முடிந்தால் கூறட்டும். எம் தமிழ் மக்களுக்காய் நாம் ஒதுங்கவும் தயார்


கி.மா.ச.உ.பூ.பிரசாந்தன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கிழக்கு மாகாணத்தின் ஆட்சியைப் பிடிக்க முடியுமா? முதலமைச்சராக முடியுமா? முடிந்தால் கூறட்டும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஒதுங்கி மக்களுக்காக தியாகம் செய்யத் தயாராக உள்ளது. தமக்கென்று எந்தவிதமான கொள்கையோ, தூரநோக்கோ இல்லாது விடுதலைப் புலிகள் இருக்கும் வரை தமிழீழம், வடகிழக்கு இணைப்பு, சர்வதேசத்திற்குக் காட்டுவதற்கு வாக்களியுங்கள் என்கின்றனரே சர்வதேசத்திற்கு 62 வருடங்களாக காட்டிக் காட்டி என்ன நடந்தது? இலங்கையில் அதி உச்சமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஊடாக 22 நாடாளுமன்ற உறுப்பினர்களையும், பாராளுமன்றத்திற்கு அனுப்பிக் காட்டினோம். சர்வதேசம் என்ன செய்தது? அதிகூடிய போர் தளங்கள் மூலம் சர்வதேசமே உற்றுப்பார்த்த ஆயுதக் குழுவை வைத்திருந்த போது சர்வதேசம் பார்க்கவில்லை. என்ன நடந்தது அழிவு மாத்திரம் தான்.ஆக்கிரமிப்பு ,கொலைகள், கொள்ளைகள், அவலங்கள் நடந்தது. அப்போது என்ன செய்தீர்கள்? இன்று கிழக்கு மாகாணம் சுடர்விட்டு அபிவிருத்தியில் பிரகாசிக்கும் போது மீண்டும் அதனைக் குழப்ப கங்கணம் கட்டிக்கொண்டு வருகின்றீர்களே இது எந்தவிதத்தில் நியாயமானது என கிழக்கு மாகாண சபை வேட்பாளர் பூ.பிரசாந்தன் கேள்வி எழுப்பினார்.
 
 கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியைப் பிடிக்குமா? இல்லை என்பது வெளிப்படை. இப்படியிருக்கையில், தமிழரிடம் இருக்கும் முதலமைச்சுப் பதவியை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு எடுத்துக்கொடுக்கவா அல்லது ஐக்கிய தேசிய கட்சிக்கு எடுத்துக்கொடுக்கவா பார்க்கிறது? இது எப்படி சாத்தியமாகும் என எந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளராவது விளக்குவாரா? கிழக்கில் ஆட்சியமைக்கப் போவது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பது வெளிப்படையாகத் தெரிந்த போதிலும் அதில் தமிழ் பிரதிநிதித்துவம் அதிகரிக்கக்கூடாது என்ற நோக்கோடு செயற்படும் தமிழர்கள் பிரதிநிதிகள் என்று 62 வருடங்களாக ஏமாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கிழக்கு மக்கள் நல்லதொரு படிப்பினை கொடுப்பார்கள் எனவும் பூ.பிரசாந்தன் குறிப்பிட்டார்.
 
மண்முனை தாழங்குடாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திpல் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
»»  (மேலும்)