3/29/2013

| |

“வரலாறு யாரையும் விடுதலை செய்ததில்லை. (வாசிப்பு மன நிலை விவாதம்–5)

 நன்றி "தூ" இணையத்தளம்

மனோ: ஜீவமுரளி 89-90 களில் பிரான்சில் இருந்தவர் அவர் இங்கு இருந்தகாலத்திலே எனக்கு தெரிந்த வரையில் தீவிர இலக்கிய, அரசியல்,செயல்பாட்டாளராக இருந்தவர். ஜீவமுரளியின் இவ்வகையான எழுத்தும் ஆற்றலும் ஆச்சரியமாகவே எனக்கு தோன்றுகிறது. ஜீவமுரளி ஆரம்பகாலத்தில் அதிகம் பேசமாட்டார். தில்லையும், சுகனும் நின்றால் இவர் அவர்களுக்கிடையில் மிக அமைதியாக இருப்பார். இருந்தாலும் இலக்கிய கூட்டங்களில் இறுதிவரை பலம் சேர்க்கும் ஒருவராக அவரை நான்  கண்டிருக்கிறேன். இவ்வாறு ஜீவமுரளி அவர்கள் பல்வேறு தள நகர்வுகளுடன் இன்று இவ்வாறான ஒரு நூலை வெளியிட்டிருக்கின்றார். இந்த நூலை வெளியிடுவதற்கு இவருக்கு ஒருவித தயக்கம் இருந்ததாக பானுபாரதி குறிப்பிட்டிருக்கின்றார். இது குறித்து மேலதிகமாக நான் எதுவும் பேசாது எம்.ஆர்.ஸ்டாலின் இந்த நூல் குறித்து பேச இருக்கின்றார். இந்த புத்தகத்தை கூட நாங்கள் ஞானத்தை மையப்படுத்திய விடயமாக கொள்ளாது  பரவலாக கதைக்கலாம். அது சரி இந்த புத்தகத்தை எத்தனை பேர் படிச்சநீங்கள், எத்தனைபேர் படிக்கேல்ல.
புஸ்பராணி: அப்ப நான் பின் வாங்கிலில் இருக்கிறன்.
மனோ: மூன்று பேர்தான் படிக்கேல்ல பரவாயில்ல. மற்றது இந்த புத்தகம் படிக்கிறதுக்கு கஸ்டமாக இருந்ததென்று யாரும் சொல்ல ஏலாது.
அசுரா: இதிலுள்ள கட்டுரைகள்  முன்பே வெளிவந்தது அதனால் அதிகமானோர் முன்பே வாசித்திருக்க முடியும்.
மனோ: முதலில நாதன் நீங்கள் படிக்கும்போது உங்களது மனநிலை எப்படி இருந்தது. விரிவாக சொல்லவேண்டியதில்லை கொஞ்சம், கொஞ்சமாக கதைக்கலாம்.
அசுரா: இந்த நூல் வந்து வாசிப்புக்கு வந்து சுவையாக அமைந்திருக்கின்றது அதாவது ஒரு கட்டுரை என்ற வடிவத்திற்குள் இல்லாது, இலக்கிய வாசிப்பிற்கு உகந்ததாக அமைந்திருக்கிறது. நாவல்,சிறுகதைகளுக்கான மொழி நடையில் எழுதப்பட்டிருப்பதால் வாசிப்பிற்கு சுவையாக இருந்தது. இதிலுள்ள கருத்தியல் அம்சங்கள் என்ற வகையில் சில முரண்பாடுகள் எனக்கு இருக்கின்றது. இதில் வந்து அனைத்தும் விமர்சனத்திற்குள்ளாக்கப்படுகின்றது.  எங்களது அறிவுத்துறையில் வந்து பொதுவாக இருப்பது விமர்சனம்,ஆய்வு, அரசியல் போன்ற பகுதிகள் தான் இருக்கின்றது. இப்ப நடைமுறைச் செயற்பாடு குறித்த பார்வையுடனான விமர்சனங்கள்,அல்லது அதற்கான முனைப்புகளைக் கொண்ட வழிகாட்டலுக்கான விமர்சனங்கள் எம்மத்தியில் இல்லை. ஒரு பக்கச்சார்பான விமர்சனம் என்பதும், அனைத்தையும் விமர்சிக்கின்ற போக்காகவுமே எங்களது விமர்சனத்துறை அமைந்திருக்கின்றது. நடைமுறை விசயங்களை ஆய்வுக்குட்படுத்தும் விமர்சனம் எங்கள் மத்தியில் இல்லை. எங்கள் மத்தியில் அக்கெடமிக்கல் ஆய்வாளர்கள் எல்லாம் அதிகமாக இருக்கின்றார்கள்.
மனோ: நாதன் ஒருக்கா குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். என்னென்றால் நாதன் நீங்க கதைச்சுக்கொண்டு போகும்போது ஒரு மேடைப்பேச்சு மாதிரியும் எல்லோரும் சைலன்ராக போகின்ற நிலையும் வரப்பாக்குது.
எம்.ஆர்.ஸ்டாலின்: எல்லாரும் கேட்கிறார்கள் தானே.
மனோ: இண்டைக்கு என்னை நீங்க தடுக்கேலாது.
தேவதாசன்: இப்படி ஒரு சர்வாதிகாரிய நான் காணேல்ல.
மனோ: இல்ல நான் என்ன சொல்ல வாறனென்றால் உங்களுக்கும் கஸ்டமாக இருக்கும்.
அசுரா: அப்ப எப்படி கதைக்கிறது.
மனோ: சிம்பிளா கதைக்கலாம்.
எம்.ஆர்.ஸ்டாலின்: அது அவற்ர பிரச்சனை எப்படியும் கதைக்கட்டும்.
மனோ: நீங்க வந்து கொஞ்சம் முதிர்ந்த ஆக்களாக இருக்கலாம். நான் வந்து ஒரு சராசரி மனிதன் என்ற நிலையில் இருந்து ஒரு விசயத்தை சொல்லுறன். நாங்கள் கன வாத்தி மாரிட்ட இருந்து படிச்சு வந்த நாங்கள்.
அசுரா: இப்பவும் ஒரு வாத்தியாருக்கு முன்னால தான் இருக்கிறம்.
மனோ: பொறுங்க.. பொறுங்க. இப்ப நான் அண்மையில்vaasippu-5-2 copyஇலங்கைக்கு போனபோதும் பார்த்தேன்.வாத்திமார் படிப்பிப்பது றோட்டில் போறவர்களுக்கே கேட்கும். அந்த குறுக்காலபோன வாத்தி பக்கத்தில உள்ள பிள்ளையைக் கூட யோசிக்க மாட்டார். அப்படி கத்திப் படிப்பிப்பார். நான் அங்குள்ள அந்த பாடசாலையின் பிறின்சிப்பலிடம் கேட்டேன் இவர் இப்படி கத்தி படிப்பிப்பது பிள்ளைகளுக்கு மிகவும் கஸ்டத்தை கொடுக்காதா என்று. இப்ப நான் எனக்குப் படிப்பித்த வாத்திமாராப்பற்றி யோசிக்கும்போதும்  ஒரு விசயம் புரியுது என்னென்றால் அவர்கள் இவ்வாறு சத்தம்போட்டு தொடர்ந்து படிப்பிக்கும்போது நாங்க அதக்கேட்டுக், கேட்டு ஒரு கனவுலகத்திற்குள் போய்விடுவோம். இப்படியான நிலைதான் வாத்தியாருக்கும் எங்களுக்குமான நெருக்கம் இல்லாமல் போவதற்கு காரணமாக அமைகின்றது. அவரது மொழியும், சத்தமும் வந்து மாணவர்களை அந்நியப்படுத்தி விடுகின்றது. மாணவர்களை ஊடுருவிப் படிப்பிப்பதென்பது வேற. இலங்கையில் நிலாந்தன் ஒரு கூட்டத்தில் பேசியது சம்பந்தமாகவும் நான் அவரிடம் கதைத்தனான். நிலாந்தன் நீங்கள் இப்படி பேசிக்கொண்டிருந்தபோது உங்கள் கையில் ஒரு சோக்கட்டியும்,பின்னுக்கு கரும்பலகையும் இருப்பதாக எனக்கு மனதில் விரிந்ததென்று. நிலாந்தன் வந்து இப்படித்தான் உரத்துப்பேசிக்கொண்டுபோவார். உரத்துப்பேசுகின்றபோது சராசரி மனிதர்களை அந்நியப்படுத்திவிடும் என்றபோக்கு இருப்பதையும் இங்கு நான் சுட்டிக்காட்டுறன்.
தில்லைநடேசன்: சரி நாதன் நீங்க சொல்ல வநத விசயத்தை சொல்லுங்கோ
அசுரா: எல்லாம் போச்சு, இப்ப நான் கதைக்க நினைத்ததெல்லாம் மறந்து போச்சு.
தர்மினி: அவர் ஒரு உத்வேகமாக செய்யுறார் அவரை நீங்க வெருட்டாதேங்க.
மனோ: இண்டைக்கு வந்து நீங்க நான் சொல்லுறதை கேட்கத்தான் வேண்டும்.
தேவதாசன்: மனோ இப்படிப்போனா அடுத்த கூட்டத்திற்கு ஒருத்தரும் வரமாட்டார்கள். உங்கட விவாதம் படுமோசமான விவாதம் மனோ. ஏனெண்டால் ஒரு மனிதனுக்கு தன்னெழுச்சியாக பேசுவதற்கு எந்த மொழி வசதியோ அந்த மொழியூடாகத்தான் அவரால் உரையாடமுடியும். உங்களுக்கு பேச்சுத் தமிழில்தான் முடியுமென்றால் அதை யாரும் தடுக்க முடியாது. அதேபோல ஒருத்தர் தான் இவ்வாறு பேசுவதானூடாகவே தனது கருத்தை சொல்ல முடியும் என கருதும் பட்சத்ததில் அவர் அப்படித்தான் பேசவேண்டும்.
மனோ: தேவதாஸ் நான் அதை மறுக்கேல்ல. இப்ப எனக்கு கேட்பதற்கு கஸ்டமாக இருப்பதால்தான் அப்படிச்சொன்னேன். இல்ல உங்களுக்கு கேட்பதற்கு வசதியாக இருந்தால் நான் அதை மறுக்கேல்ல. இது எனது தாழ்மையான அபிப்பிராயமும், அதோட எனக்குரிய வீட்டோ அதிகாரத்தையும் பயன்படுத்திக் கொள்கின்றேன். சரி தொடங்குங்க.
அசுரா: இப்ப வந்து நடைமுறைச் செயல்பாட்டு  நிகழ்வுகளை அணுகுவதும், அவைகள் மீதான அக்கறையும், விமர்சனமும் எங்கள் மத்தியில் முற்றாக இல்லை. சமூக ஆய்வாளர்கள், விமர்சகர்கள் என்பவர்கள் நடைமுறை விசயங்களில் மிகவும் அக்கறை உள்ளவர்களாக இருக்கவேண்டும். அதற்கான ஒரு உதாரணத்தை பிரான்சில் இருக்கும் ஆய்வாளர்களுடன் ஒப்பிட்டு சொல்லலாம் என்று நினைக்கிறன். தெரிதா என்பவரை பலர் அறிந்திருப்பார்கள். மற்றும் தற்போது இருப்பவர்களில் எட்கார் மொறன் என்பவர். இவர்கள் எவ்வாறு அரசியல் சமூக நடைமுறை அம்சங்களை அணுகினார்கள் என்று பார்த்தால். தெரிதா அவர்கள் பிரான்சின் மறைந்த முன்னாள் ஜனாதிபதியாக இருந்த பிரான்சுவா மித்திரன் என்பரை தேர்தல் காலத்தில் வெளிப்படையாக ஒரு சமயம் ஆதரித்தார். மிக நட்பாகவும் இருந்தார். இருந்தபோதும் பிரான்சுவா மித்திரனின் மந்திரிசபையில் தெரிதாவிற்கு இடம் ஒதுக்கப்பட்டபோது அவர் அதை ஏற்கமறுத்தார். அதேபோல் தற்போதுள்ள சிறந்த அரசியல்-சமூக சிந்தனையாளரும் விமர்சகருமான எட்கார் மொறன் என்பவர் கடந்த ஜனாதிபதித்தேர்தலில் சோசலிசக்கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரான்சுவா ஹொலண்ட் அவர்களை ஆதரித்து பேசினார். ஆனால் தற்போது அவ்வரசு மீதான விமர்சனங்களையும் செய்து வருகின்றார். எட்கார் மொறன் அவர்கள்  அரசு என்பதை ஒரு தனியான civilization (நாகரீகம்) ஆகவும் சமூகத்தை ஒரு தனியான நாகரீகமாகவும் பிரித்துப் பார்க்கின்றார். ஒரு மனிதனே இரண்டாகவும் இருக்கின்றார். சமூக உடலாக இருப்பவர் சமூக அபிலாசைகளான  பல்வேறு அம்சங்களாலும், (காதல், விருப்பு, வெறுப்பு, பொறாமை, சமூக அந்தஸ் etc..etc;)  பாதிக்கப்பட்டவராகவே இருப்பார். அரசியல் உடலாக இருக்கும் ஒருவர் தான் சார்ந்த கட்சி, அதன் இலட்சியம்-அதிகாரம், பதவிபோன்ற விருப்பு உறவுகளோடு இருப்பார். ஒரு சமூக உடலை தனித் தனி நாகரீகமாக பார்க்கின்றபோதும் ஒரு சமூக உடலானது இரண்டு நாகரீகங்களாலும் (சமூக-அரசியல்) பாதிப்பிற்குள்ளானதாகவே இயங்கி வருகின்றது என்கிறார். இவ்வாறான ஆய்வாளர்கள்தான் சமகால சிக்கலை கடந்து செல்வதற்கான நடைமுறை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். இவ்வாறான ஆய்வும் விமர்சனமும் எங்கள் மத்தியில் முற்றாகவே இல்லை.
இந்த நூலிலுள்ள ‘வாழ்க தோழர் சங்கமித்தை’ எனும் கட்டுரையில் சில முரண்பாடுகளை பார்க்கலாம். ஒரு இடத்தில்”தேவதாசன் முயற்சியால் சிறுபான்மை மக்கள் மகாசபையும் மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது தலித்துக்கள் அமைப்பாவதன் முக்கியத்துவம் பற்றி விவாதிக்கப்பட்டிருக்கின்றது” என சாதக நிலை குறித்து பதியப்பட்டிருக்கின்றது. பின்பு “…..இந்த முயற்சியில் முன்பு சாதி எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கு பற்றிய தோழர்களும், எனது தமிழாசிரியர்களில் ஒருவருமான தெணியான் அவர்களும் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவது இன்னும் இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. அந்த மகிழ்ச்சி தலித் மேம்பாட்டு முன்னணியினர் மக்களை உப்புக்கண்டம் போடும் மகிந்தாவின் அரசை புகழ்பாடுவதை நினைத்தால் அடுத்த கணமே காணாமல் போய்விடுகிறது.” எனவும் விமர்சிக்கின்றார்.( முரண்பாடு என குறிப்பிடப்பட்டதே தவிர இநத பகுதி முழுமையாக கூட்டத்தில் வாசிக்கப்படவில்லை) தலித் சமூக மேம்பாட்டு முன்னணி யுத்தம் நிறுத்தப்பட்ட செயலுக்காகவே ராஜபக்சவிற்கு பகிரங்கமாக நன்றி தெரிவித்தது. யுத்தம் நிறத்தப்படாதிருந்தால் மகாசபை தேர்தலில் நிற்பதற்கான வாய்ப்புகள் எப்படி நிகழ்ந்திருக்கும். புலிகள்-அரசு என்ற நிலையை நாங்கள் பார்த்தமென்றால் அரசு ஒரு மோசமான அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  அதை யாரும் மறுப்பதற்கில்லை. சிறீலங்கா சுதந்திரக்கட்சி என்ற அடையாளமே இன்றைய அரசிற்கு இல்லை. அது ஒரு குடும்ப ஆட்சியைக்கொண்ட அரசு எனவே இவ்வரசு அகற்றப்பட வேண்டியதென்பதில் மாற்றுக் கருத்தில்லை. இருப்பினும் இந்த அரசிற்குள் இருக்கும் மிக,மிக குறைந்தளவிலான  ஜனநாயகம் இருக்கின்றது என்று சொன்னால் அதுதான் தேர்தல், இதைக்கூட  சரியான வகையில் பயன்படுத்தக்கூடிய ஆற்றல் எம்மிடம் இல்லை. புலிகள் ஆட்சியின் காலம் எமக்கு எவ்வாறு பயனைத் தந்தது. அவர்கள் காலத்தில் ஜனநாயகத்திற்கான  வாசல்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. இன்றைக்கு இருக்கூடிய முன்னால் புலிகளும், புலி  ஆதரவாளர்களுமான கருணாகரன்,யோகர்ணன், சயந்தன் போன்றவர்களின் எழுத்தக்களில் (கட்டுரை) வந்து புலித் தலைமையை வழிபடுபவர்களாகவே  தெரிகின்றது. அது எங்களுக்கு பிரச்சனையே இல்லை அவர்களோடு நண்பர்களாக பழகக்கூடியதாக இருக்கின்றது, எங்களை பேச அனுமதிக்கின்றார்கள், எங்களை சுடவும் மாட்டார்கள் என்கின்ற நம்பிக்கையும் எங்களுக்கேற்பட்டிருக்கின்றது.
இவை இவ்வாறு இருக்க நடைமுறை பிரச்சனைகளை நாம் கையாள்வதில் கிடைக்கக்கூடிய சிக்கலுக்கான உதாரணமாக  அண்மையில் நடைபெற்ற  உடுப்பிட்டிச் சம்பத்தைக் கூறலாம். அங்குள்ள மகளிர் கல்லூரியில் தலித் சமூகத்தை சேர்ந்த தகுதியுள்ள ஒருவருக்கான  அதிபர் பதவி மறுக்கப்பட்டதற்கான பின்னணி என்ன? இதை நடைமுறைரீதியாக செயற்பாட்டாளர்கள் எப்படி அணுகுவது. இந்த யாழ்ப்பாண மேலாதிக்கம் கல்வித்துறையை தனது செல்வாக்கிற்குள் வைத்திருக்கும்போது இதை அகற்றுவதற்கான நடைமுறைச் சாத்தியம் எங்கிருக்கின்றது. எல்லை மீறிப்போனபோது மகாசபையின் இணைச்செயலாளரான தமிழ் அழகன் அவர்கள் இந்த விசயத்தை ஆளுனரிடம் எடுத்துக்கூறி நியாயம் கேட்டார். ஆனால் எமது விமர்சனப் பாரம்பரியம் அவரையும் துரோகியா பார்த்தது. யாழ்ப்பாண மேலாதிக்கமானது சட்ட அமுலாக்க விசயங்களையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்போது நடைமுறைரீதியாக இவ்விசயத்தை அணுகுவதற்கு யாரிடம் போவது.
இந்தவிசயத்தில் தான் விமர்சகர்கள் என்பவர்களது முக்கியத்துவம் தேவைப்படுகின்றது. முரளியின் விமர்சனம், மற்றும் கற்கைநெறி ஆய்வாளர்களில் ஒருவரான  தங்கேஸ் என்பவரின் “சாதிஒழிப்பா சாதிமறைப்பா” போன்ற நூல்கள் எல்லாம் செயற்பபாட்டாளர்களுக்கு மிக அவசியமானதுதான், ஆனால் இவ்வாறான விமர்சகர்கள் செயல்பாட்டாளர்களை ஊக்கப்படுத்துகிறார்களா என்றால் சீரோ. கிணற்றுத் தவளை  கத்துவது போன்றதாகவே இவர்களது விமர்சனங்கள் இருக்கின்றது. ஜீவமுரளி வந்து அழகாக எழுதுகின்றார் பலதையும் விமர்சிக்கின்றார். ஆனால் இப்படியான விமர்சனம் அக்ரிவிஸ்டுகளுக்கு எந்த வகையில் பயன்படுகின்றது என்பதுதான் எனது கேள்வி.
சோபாசக்தி: நாதன் கதைத்ததையொட்டி நான் ஒரு கருத்துச் சொல்லலாமா? நாதன் சொன்னார் தெரிதா வந்து மித்திரனை ஆதரித்தார், இன்னொருவர் வந்து பிரான்சுவா ஹாலண்ட் யை ஆதரித்தார் என்று உண்மை, உண்மை. ஆளும் தரப்பு அல்லது ஆளும் கட்சிஅதோட ஒத்துழைக்கும் இரண்டு உதாரணங்களை சொன்னார். ஆனால் உண்மை என்னெவென்றால் உலகமுழுவதுமுள்ள பெரும்பான்மை வந்து ஆளும் தரப்பிற்கு எதிராக நிற்கும் நிலைதான் வழமையான பண்பாடு. நாதன் குறிப்பிட்டதற்கும் 10 வருசத்திற்கு முன்பு இதே பிரான்சில ஜோன் போல் சார்த் காலம் முளுக்க அரசியில விமர்சித்தவர். இண்டைக்கு நோம் சாம்கி அமெரிக்க அரசை எதிர்த்துக் கொண்டுதான் இருக்கின்றார். இந்தியாவை பார்த்தீங்களென்றால்  அருந்ததிராய் மற்றும் றோமிலார் தர்ப்பார் போன்ற மிகப்பெரிய அறிவுஜீவிகள் அவர்கள். இந்திய அரசாங்கத்தை காலம் முழுக்க எதிர்த்துக்கொண்டே இருக்கின்றார்கள். ஆகவே ஒரு பக்கம் மட்டுமல்ல வேறொரு பக்கமும் இருக்கின்றது. அதையும் நாங்கள் பார்க்கவேண்டும். இரண்டாவது வந்து ஜீவமுரளியின் கட்டுரையில் வந்து தலித் முன்னணி வந்து ராஜபக்சவிற்கு யுத்தத்தை நிறுத்தியதற்கு நன்றி செலுத்திய விடயம் குறித்த விமர்சனம். ராஜபக்ச யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு ஏதாவது செய்திருந்தால் தலித் முன்னணி நன்றி சொன்னதற்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் ராஜபக்ச ஒரு யுத்தத்தை நடத்தி முடித்திருக்கிறார். இதற்கும் அப்பால யு.என்.ஓ, கற்றுக்கொண்ட பாடங்களும் நல்இணக்கத்திற்கான  அறிக்கைகள்  எல்லாம் பல்வேறு ஆதாரங்களை முன்வைத்திருக்கின்றது. அவர்களது சாட்சியங்களுக்கூடாக அண்ணளவாக நாப்பதிநாயிரம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவைகள் வந்து பலவிதமாகவும் ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த இடத்தில் தலித் முன்னணி நன்றி சொல்வதுதான் பிரச்சனை. இதில் புலிகள் கொல்லபட்டதில் யாருக்கும் எந்தக் கவலையும் இல்லை. ஆனால் யுத்தத்தில் சம்பந்தப்படாத  நாப்பதிநாயிரம் மக்கள் கொல்லப்பட்டதையும் கவனத்தில் கொண்டிருந்தால் நன்றி சொல்ல வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது என்பது எனது கருத்து.
தில்லைநடேசன்: முரளி வந்து எப்போதும் எழுத்தைவிட செயற்பாட்டில்தான் அதிக அக்கறை கொண்டவர். உதாரணத்திற்கு இந்த இடத்திலிருந்து ஒரு விசயத்தை இணைந்து செய்வதிற்கு திட்டமிட்டால் அதில் முதலாவது ஆளாக முரளி இருப்பார் என்பதை எதிர்பார்க்கலாம். 89இல் இருந்து 92-93 வரை இங்கு நடக்கும் முக்கியமான கூட்டங்களிலெல்லாம் கலந்து கொண்டிருக்கிறார். அவர் கதைப்பது குறைவாக இருக்கும். ஆனால் செயல்பாடு கூடுதலாக இருக்கும். மற்றது அவரது எழுத்துத் திறமையை வந்து மனோ வியப்படைந்தது மாதிரி நான் வியப்படயவில்லை. அவரது அந்த ஆற்றல்பற்றி எனக்கு தெரியும் அவர் எழுதுறதில்லையே தவிர ஆனால் அதற்குரிய ஆற்றல் இருந்தது. அவர் எந்த விசயத்தை நாலு பேருக்கு முன்னால் கதைக்கிறாரோ, நாப்பது பேருக்கு முன்னாலும் அதையே கதைப்பார். தனது கருத்திலிருந்து ஒரு கூர்மையான விமர்சனத்தை முன்வைப்பதும், அதற்கான செயல்பாட்டிலும் பின்நிற்காது செயல்படுபவர்.vaasippu-5-5
றமேஸ்: இந்த புத்தகம் வாசிக்காத ஆக்கள மாஸ்டர் பின்னுக்கு இருத்தியிருக்கலாம். அவர்கள் இரண்டு மூன்று கதைகளை வாசித்திருப்பார்கள்.
மனோ: கொஞ்சம் என்னை விளங்கிக் கொள்ளுங்கோ இங்க நான் வந்து எந்த மாற்றமும், புரட்சியும் செய்யேல்ல. இந்த உரையாடலை இலகுவாக்க வேணும் என்பதுதான் என்ர நோக்கம். இந்த முறை நன்றாக இருக்கும் என்று தான் நம்புகின்றேன்.
தர்மினி: இல்ல உண்மையில் நன்றாக இருக்கு.
மனோ: மற்றது ஞானமும், தர்மினியும் மட்டும் கதைக்கும்போது எதோ அவர்களிடம் மட்டும் பொறுப்பை கொடுத்து விட்டு மற்றவர்கள் பொறுப்பில்லாமல் இருப்பதாக இருக்கக்கூடாது. சக பயணியாக மற்றவர்களும் இணைய வேண்டும் என்றுதான் நான் பார்க்கின்றேன். ஞானம் நீங்க தொடர்ந்து கதைக்கவேணும் என்றில்லை விட்டு,விட்டு கதைக்கலாம். அது நீங்கள் கதைக்காத விசயத்தை தொட்டு மற்றவர்கள் கதைப்பதற்கு உதவியாக இருக்கும். நீங்களே கேள்வி கேட்டுக்கொண்டும் பேசலாம்.
எம்.ஆர்.ஸ்டாலின்: இங்கு முரளியை பலருக்கும் தெரிந்திருக்கும். எனக்கும் 92 இல் இருந்து அறிமுகமானவர்.இந்த “வரலாறு யாரையும் வடுதலை செய்ததில்லை” என்கின்ற தலைப்போடு சில  அரசியல் குறிப்புகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.ஒரு கட்டுரை, கதை என்பதான சட்டகத்திற்குள் வைத்து எழுதப்படாமல் கதைபோன்றும், கிண்டலாகவும் அரசியல் அநியாயங்களை ஒரு அரசியல் குறிப்புகளாக எழுதியிருக்கிறார். பானுபாரதி, தமயந்தி அவர்களின் உயிர்மெய் எனும் பதிப்பகத்தால் இந்த தொகுப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது. இதற்காக முதலில் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்தக் கட்டுரைத் தொகுப்பின் முதுலாவது கட்டுரையான SAM_7145‘வரலாறு யாரையும் விடுதலை செய்ததில்லை யாரையும் விட்டுவைத்ததில்லை’ எனும் கட்டுரையானது அவரது அரசியல் பின்புலத்தில் வைத்தே எழுதப்படடிருக்கின்றது. ஆயுதப்போராட்ட ஆரம்பத்தில் தான் அதில் இணைந்ததும், அதனது அனுபவங்களையும் இந்தக் கட்டுரையில் பதிவு செய்திருக்கின்றார். அடுத்ததாக ‘கலாநிதி சி.சிவசேகரத்துடன் ஒரு உரையாடல்’ என்ற தலைப்பில் எழுதப்பட்டிருக்கின்றது. இந்த தலைப்பில் கற்பனையான உரையாடலாக அதாவது சிவசேகரத்தின் கட்டுரை ஒன்றை படித்ததன் மூலமாக அதன் மீழ் வாசிப்பு எவ்வாறு நிகழ்ந்தது, அல்லது சிவசேகரத்தின் கட்டுரையை படிக்கும்போது தனக்குள் எழுந்த விமர்சனம் என்பதை ஒரு கற்பனையான நேர்காணலாகவும் முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரையாக பார்க்கலாம்.அடுத்தது ‘மண் மீட்பு போரும் ரைக்ரர் மகேந்திரண்ணையும்’. நான் இதை முதலில் டைரக்ரர் மகேந்திரண்ணை என்று கருத்துப்பட வாசித்துக் கொண்டு போய் பிற்பாடுதான் ரைக்ரர் மகேந்திரண்ணை என்பதை புரிந்து கொண்டேன்.
றமேஸ்: அந்த சம்பவம் எனக்கு நன்கு தெரியும்.
எம்.ஆர்.ஸ்டாலின்:  சாதாரணமான சமூக பிரஜை ஒருவர் எவ்வாறு இந்த ஆயுதப்போராட்ட நிகழ்வில் பழிவாங்கப் பட்டிருக்கிறார் என்பதும், ‘மண் மீட்பு  போர்’ என்பதன் விளைவுகளையும் இந்தக் கட்டுரை விபரிக்கின்றது. மற்றது ‘உத்தப்புரம் இரண்டாம் பாகம் நெடுங்குருதி மூன்றாம் பாகம்’என்ற கட்டுரை. அடுத்ததாக  ‘கடவுளே ஏன் என்னைக் கைவிட்டீர்? இது வந்து  ஈ.பி.டி.பிக்கு முன்பாக மகேஸ்வரி அவர்களின் அரசியல் சமூக பணிகள் எவ்வாறு இருந்ததென்றும். பின்பு ‘மகேஸ்வரி வேல்-ஆயுதம் ஈ.பி.டி.பிக்கு பின்’என்ற தலைப்பில் மகேஸ்வரி அவர்களது அரசியல் பணிகளும் அவர் மீதான படுகொலையைத் தொடர்ந்து அந்த பிரதேசத்தில் பழிவாங்கல்கள் எப்படி நிகழ்ந்ததென்பதையும், அதற்குள் தலித்-வேளாள அரசியல் பின்புலங்களையும் விபரிக்கும் கட்டுரை. அடுத்ததாக ‘வாழ்க தோழர் சங்கமித்தை’ என்ற கட்டுரை இதில் இன்றைய அரசியலின் பொது விமர்சனத்தை முன்வைத்திருக்கின்றார். இந்தியாவின் உளவுத் துறையான ‘றோவின் ராசதந்திரமும், பரமார்த்த குரு சீடர்களும்’என்ற கட்டுரை. ஜே.வி.பி.சந்திரசேகரன் அவர்கள் இலண்டன் வந்திருந்தபோது அவர் கொடுத்த நேர்காணலுக்கான விமர்சனமாக இந்தக் கட்டுரை அமைந்திருக்கின்றது. அடுத்ததாக ‘பின் ஊட்டல் அரசியல்’ என்ற தலைப்பில் சரவணன் அவர்கள் நோர்வேயில் புலி ஆதரவாளரான சேது அவர்களால் தாக்கப்பட்டதும் அது குறித்து வெளிவந்த விமர்சனங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டிருக்கின்றது.
சோபாசக்தி: சேதுவா அடித்தது? இல்லையே அது ஒரு கலியாண வீட்டில் நடந்த சம்பவம் என்பதாகவல்லோ பேசப்பட்டது.
எம்.ஆர்.ஸ்டாலின்: கலியாண வீட்டில்தான் சேதுதான் அடித்தது. ஏதோ அப்படியென்றுதான் தகவல். சிலவேளை பிழையாக இருக்கலாம். மற்றது. ‘ஒலிகளின் அரசியல்’ இது வந்து இந்த தொகுப்பில் இணைக்கப்பட்டிருக்க வேண்டியதில்லை என்று நான் கருதுகின்றேன். இந்த புத்தகத்தின் தலைப்பும் அதற்குள் அடங்கியுள்ள பிற கட்டுரைகள் யாவும் ஒரே விதமான அரசியலை பேசுகின்றபோது அதற்கு இந்தக் கட்டுரை சம்பந்தமில்லாததுபோல் தோன்றுகின்றது. இந்த ‘ஒலிகளின் அரசியல்’ எனும் கட்டுரை வேறு விசயமாக உள்ளது. சத்தம் பற்றியதானது. சத்தமாக நாம் றெயிலுக்குள் பேசுவது, தொலைக்காட்சிகளை சத்தமாக கேட்பது, அணுகுண்டு போடப்படுவதன் சத்தம் இவ்வாறான சத்தங்களுக்குள் இருக்கக்கூடிய அரசியல்.
தில்லைநடேசன்: ஒலிகளுக்குள்ளாலும் அரசியல் விளைவுகள் இருக்கு.
SAM_7143எம்.ஆர்.ஸ்டாலின் : நான் இதற்குள் அரசியல் இல்லை என்று சொல்ல வரவில்லை. நேரடியாக இலங்கை அரசியலோடு தொடர்புடைய மற்றைய கட்டுரைகளோடு ஒப்பிடும்போது இதில் ஒரு தனிவகையான ஒலி அரசியல் இருப்பதைத்தான் நான் சுட்டிக்காட்டுகின்றேன். மற்றது ‘தீண்டாமைக் கொடுமைகளும் தீமூண்ட நாட்களும்’என்ற தோழர்.யோகரட்ணத்தின் நூல் தொடர்பான அறிமுகத்தை பிரான்சில் நடந்த 38வது இலக்கியச் சந்திப்பில் முரளி அவர்கள் செய்தவர். அந்தக் குறிப்பையும் இத்தொகுப்பில் இணைத்திருக்கின்றார். இறுதியாக ‘கனவுக்கும் கடவுளுக்கும் நடுவே சூரியனுக்கு சற்றருகே’ என்ற கட்டுரை இதை ஒரு சிறுகதை என்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.  இவ்வாறான அனைத்துக் கட்டுரைகளுடாகவும் நான் சுருக்கமாக கண்டு கொண்டதென்னவென்றால். தன்னுடைய வாழ்க்கை சார்ந்து,தன்னுடைய அரசியல் வாழ்வு சார்ந்து முரளி அவர்கள் 1983 களிலிருந்து, ஆண்டு குறிப்பிடபடாதிருப்பினும் இந்தியாவிற்கு அவர் ஆயுதப் பயிற்சிக்குப்போவதும்.அங்கிருந்த அனுபவத்திலான அரசியல் வாழ்வு சார்ந்த குறிப்புகளையும், பொதுவாக இலங்கை அரசயலில் என்ன நடந்து வந்துள்ளதென்பதையும் முரளி எழுதிக்கொண்டு வாறார். அவரது முதலாவது கட்டுரையான ‘வரலாறு யாரையும் விடுதலை செய்ததில்லை’என்ற கட்டுரையில் அவர் இந்தியாவிற்கு பயிற்சிக்கு சென்றது ஒரு எதேர்ச்சையான நிகழ்வு என்பதாக, அதாவது தனக்கு எந்தவித அரசியல் ஞானமும் இல்லாதபோது பெற்றோருடன் கோபித்துக் கொண்டு சென்றதான ஒரு செய்தியை பதிவு செய்திருக்கின்றார். 1983இற்கு பிற்பாடு 80வீதமான இளைஞர்களின் நிலை இவ்வாறான நிலையாகத்தான் இருந்தது. அதாவது வீட்டில் ஒரு பிரச்சனையென்றால் இயக்கத்திற்கு ஓடுவது.லவ் பிரச்சனை என்றால் இயக்கத்திற்கு ஓடுவது, ஆயுத மோகத்தில் ஓடுவது  என்பதாக நிகழ்திருக்கின்றதே தவிர அரசியல் ரீதியாக யாரும் முதிர்ந்தவர்களாகவோ, இயக்கங்களின் தகுதியின் அடிப்படையிலோ அதிகமானவர்கள் இயக்கங்களில் இணைந்ததில்லை என்பதும் எனது அனுபவம் சார்ந்து நான் சொல்லக்கூடியது. இவ்வாறு தனது அனுபவம் சார்ந்து முரளி சொல்லிவருகின்றபோதுதான் இந்திய உளவுத் துறையானது எவ்வாறு இந்த ஆயுத இயக்கங்களை ஊக்கிவித்தது அதே நேரம் மறைமுகமாக இந்திய உளவுத்துறை தமது கண்காணிப்பில் வைத்திருந்தது போன்ற தகவல்களையெல்லாம் பதிவு செய்திருக்கின்றார். அந்த நேரம் கார்த்திகேசு எனும் இந்திய உளவுத்துறை அதிகாரி என்று நினைக்கின்றேன். அவர் வந்து மூன்று நாளைக்கு ஒருக்கா அனைத்து இயக்கத்தின் தலைமைச் செயலகத்திற்கும்  சென்று தகவல்களை அறிந்து கொள்வார். முதலில் அவரை ஒரு சாதாரணமானவராகத்தான் தெரிந்தது. பின்புதான் அவர் ஒரு இந்திய உளவுத்துறை அதிகாரி எனத் தெரிய வந்தது. அதேபோன்று இந்திராகாந்தி எவ்வாறு இயக்கங்களுக்கு பயிற்சிகொடுத்தது என்பதையும் விரிவாக எழுதியிருக்கின்றார். ஆகவே வந்து இதனூடாக புரியவைக்கிறார் எப்படியென்றால் நாங்களெல்லாம் இயல்பாக சொந்தமாக இயங்க முடியாமல் இந்தியாவால் ஊதிப்பெருப்பிக்க வைத்ததும், தனது அரசியல் தேவைகளுக்காக இயக்கங்களை பயன்படுத்தி வந்ததென்பதையும் தனது சொந்த வாக்கு மூலமாகவே பதிவு செய்வதென்பது எதிர்கால வரலாற்றிற்கு மிக முக்கியமான விசயமாகும் என்றே நான் கருதுகின்றேன். அதேபோன்று அந்தநேரத்தில் அரசியல் ரீதியாக தமிழர்களுக்கென்றொரு நாடு வேண்டும் என்று கருதிய புத்திஜீவிகளின் சிந்தனை எப்படியெல்லாம் இருந்ததென்பதை இவ்வாறான வரலாற்றுத்தவல்கள் ஊடாக தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். என்னும் 20வருசத்திற்கு பிற்பாடு உள்ள எமது சமூகத்திற்கு இவ்வாறான குறிப்புகளெல்லாம் மிக அவசியமானதென்றே நான் கருதுகின்றேன். முரளி ஓரிடத்தில் குறிப்பிடுகின்றார். தோழர் எஸ்.வி.ஆர்,வி.பி.பொன்னம்பலம்,பெரியார் தாசன் போன்ற நிறைய புத்திஜீவிகளெல்லாம் தமக்கு (ரெலோ இயக்கத்திற்கு) அரசியல் வகுப்பு எடுத்தாகவும் பதிவு செய்திருக்கின்றார். அதேபோன்று இயக்கங்களுக்குள் வரும் மோதல்கள் அதன் விளைவுகளால் தாம் இயக்கத்தை விட்டு விலகுவது போன்ற விசயங்களையெல்லாம் சுருக்கமாக பதிவு செய்திருக்கின்றார்.
தர்மினி: எம்.ஜி.ஆர் காசு கொடுக்கும் சம்பவம்.
எம்.ஆர்.ஸ்டாலின்: ஓம் இது வந்து உளவு நிறுவனத்தின் செயல்பாடுகள்பற்றியது. ஏனென்றால் எனக்கும் அந்த அனுபவம் இருக்கு.அந்தநேரத்தில இயக்கத்தையெல்லாம்விட்டு ஒதுங்கிய பிற்பாடு அலைஞ்சு,திரிஞ்சு  ஒரிடமும் போகேலாது, சாப்பாட்டிற்கும் வழியில்ல. வெளிநாட்டில மாமன் மச்சான் உறவினர்கள் உள்ளவர்கள் எப்படியோ சென்றுவிடுவார்கள்.அப்படி வசதியில்லாதவர்கள் பாடுதான் பெரிய திண்டாட்டமாக இருந்தது. அந்தநேரத்திலதான் டேவிற் ஐயா,உசா அக்கா, போன்றவர்கள் இவ்வாறான நிற்கதிக்குள்ளான இளைஞர்களுக்கு உதவி செய்தவர்கள். அதுல வந்து மகேஸ்வரியும் ஒருவர். அவர் தமிழர் தகவல்நடுவர் மையம் என்ற உதவி நிறுவனத்தை நடத்தி வந்தவர். அவர் வந்து எந்தவித இயக்க சார்புமின்றி இலங்கைத் தமிழர் பற்றிய பிரச்சாரக்கூட்டங்களை நடத்தி வந்தவர். பொதுவாக எல்லா இயக்கங்களுக்கும்  பண உதவிசெய்து வந்தவர். இவ்வாறு பல்வேறு நடைமுறைச் சம்பங்கள் எல்லாம் விபரிக்பட்டிருக்கினறது. அடுத்ததாக இதில் முக்கியிமான அம்சமாக தலித் அரசியல்பற்றிய ஒரு பார்வை. அவர் ஒரு தலித் போராளியாக இருக்கிற காரணத்தால், தலித் அரசியல் பற்றிய தெளிவான பார்வையை கொண்டிருப்பதாகவும் கூறுகிறார். குறிப்பாக தோழர் யோகரட்ணத்தின் நூல் அறிமுகக் கட்டுரையில் இப்படி கூறுகிறர். எமது வரலாற்றில் எந்த தலைவர்களை பார்த்தாலும் அமிர்தலிங்கம்,செல்வநாயகம்,பிரபாகரன் போன்ற பெயர்களைத்தான் குறிப்பிட்டு வருகிறார்கள். ஆனால் தலித் சமூகத்திற்காக போராடிய தலைவர்கள் குறித்த செய்திகளை யாரும் எழுதுவதில்லை. தமிழர்களின் வரலாறென்றால் அது வேளாளர்களின் வரலாறாகவே பதிவு செய்யப்படுகின்றது. தமிழர்களின் அரசியல் வரலாறென்றால் அது வேளாளர்களின் அரசியல் வரலாறாகவே பதிவுசெய்யப்படுகின்றது. போன்ற விசயத்தில் எந்தவித குழப்பமும் இல்லாது இருக்கின்றார். என்னுடைய பார்வையும் அதுதான். முரளியும் அந்த விசயத்தில் மிகத்தெளிவாகவே இருக்கின்றார். ஒரு இடத்தில் “எல்லாளன், சங்கிலியன் என்ற தமிழ் கதாநாயகர்களில் தொடங்கிஆறுமுகநாவலர்,செல்வநாயகம்,அமிர்தலிங்கம்,
ஜீ.ஜீ.பொன்னம்பலம்,சிவசிதம்பரம்,ஆனந்தசங்கரி,
சம்பந்தன்ஈறாகசந்திரகாசன்,குட்டிமணி,தங்கத்துரை,
பாலகுமார்,பத்மநாபா,சபாரத்தினம்
,உமாமகேஸ்வரன்,பிரபாகரன்என்று நீளுகின்ற தமிழ்த் தேசிய அரசியற் கதாநாயகர்களின் காவியங்கள் தமிழில் திரும்பத் திரும்ப இன்னமும் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றனமேற்குறிப்பிட்ட பெயர்களின் அரசியற் தலைமைகளின் தொடர்ச்சி இதை வலுவாக உறுதிசெய்கின்றது. இவை ஒன்றும் தமிழ்த் தேசிய வரலாற்றில் தற்செயலான நிகழ்வுகள் அல்ல. இந்தத் தலைமைகள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஆதிக்க சாதி அரசியலின் தொடர்ச்சி என மீண்டும் நான் உங்களுக்கு அழுத்திச் சொல்கின்றேன். இந்தத் தலைமைகள் ஒன்றும் தற்செயலானவை அல்ல. இந்த ஆதிக்க சாதியின்  கதாநாயக சாதி அரசியலின் பிறழ்வாகவும், எதிர்வினையாகவும் தோழர் யோகரட்ணத்தின் நூல் அமைகிறது”. என்று   தோழர் யோகரட்ணத்தின் நூல் சம்பந்தமாக கூறுகின்றார். அதாவது மிகத் தெளிவாக யாழ்ப்பாண மேட்டுக்குடி அரசியலானது தமிழ்த் தேசியவாவத்தை வளர்த்து சீரழித்திருக்கின்றதென்பதில் முரளிக்கு தெளிவான பார்வை இருந்திருக்கின்றதென்பது அவரது கட்டுரைகளில் தெரிகின்றது. அதே நேரத்தில புலிகள் பற்றிய பார்வையில் தொடர்ச்சியாக 20வருடத்திற்கு மேலாக தமது சொந்த கட்டுப்பாட்டிற்குள்ளேயே வைத்திருந்த புலிகளின் அரசியல் என்பது அழிக்கப்படவேண்டிய அரசியல் அது ஒரு பாசிச அரசியல், அது எந்தவொரு ஜனநாயக விழுமியங்களையும் பாதுகாக்கவில்லை அதற்கான எந்தவழியையும் மேற்கொள்ளாது தமிழ்சமூகத்தை சீரழித்திருக்கின்றது. என்பதிலும் மிக உறுதியாக இருக்கின்றார். இதில வந்து இரண்டுவகையான பிரச்சனை வருகிறது என்னென்றால் நடைமுறை சார்ந்த இந்த விடயங்களை  சொல்வதூடாக, குறிப்பாக புலிகள் பற்றிய பாசிச நடைமுறை. ஆனால் என்னொரு வகையில் இதே தமிழத்தேசிய வாத அரசியல் கட்டி அமைத்த ஒரு இனவாதப் பார்வையூடாகவே அனைத்தையும் அணுகுவது. இலங்கையில் இருக்கக்கூடிய சமூக பொருளாதார விசயங்களை ஒருபுறம் வைத்துக்கொண்டு இனவாதப் பார்வையூடாகவே இலங்கை அரசாங்கத்தை அணுகுவது, இலங்கை அரசு ஒரு பாசிச அரசாங்கம். இந்த இடத்தில்தான் முரளி தமிழ்த் தேசிய வாதிகளுடன் இணைகின்ற நிலை வருகின்றது. இங்கே ஒரு விசயத்தை மிக கவனமாக கவனிக்க வேண்டும். பாசிச அரசு என்றால், பாசிச அரசோடு யாரும் பேச முடியாது. பாசிச அரசோடு யாரும் உரையாட முடியாது. பாசிச அரசு யாருக்கும் பொறுப்பு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பாசிச புலிகள் திட்டமிட்ட இனமேலாதிக்க கொலைகளை செய்தவர்கள். இந்த வேறுபாட்டிற்கும் அரசு என்பதற்கும் ஒரு வேறுபாடு இருக்கின்றது என்னைப் பொறுத்தவரைக்கும். இந்த அரசானது ஐந்து வருடத்திற்கு ஒரு முறை மக்களிடம் செல்லவேண்டிய பொறுப்பிருக்கின்றது. சோபாசக்தி சொன்னமாதிரி முள்ளிவாய்க்காலில் நாப்பதாயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு ஒரு வருடம் தப்பினால்,அடுத்த வருடம், தப்பினால் அடுத்த வருடம் என்று பதில் சொல்ல வேண்டிய நிற்பந்தம் இருக்கின்றது. ஜெனிவாக் கூட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றது. அரசு மீதான குற்றத்தை சுமத்துவதற்கு வாய்ப்புகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். எனவே அரசிற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு இருக்கின்றது. அரசு தப்பித்துக் கொள்ளலாம் என்பது வேறு. ஆனால் என்றோ ஒரு நாள் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும்,கடப்பாடும் அரசிற்கு இருக்கின்றது. ஆனால் பாசிசத்திற்கு இவை எதுவும் அவசியம் இல்லை. பாசிசம் செய்யும் கொலைகளுக்கு யாரிடமும் நீதி கேட்க முடியாது. இப்ப எல்லோரும் சொல்லுகிறார்கள் புலிகளிலிருந்து நான் விலகிவிட்டேன். அதற்கு நான் பொறுப்பில்லை என்று கருணாகரன் சொல்லலாம். கே.பியும் சொல்லலாம் நான் வெளியிலிருந்துதான் உதவி செய்தனான் எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று. நிலாந்தன் சொல்லாம் ஐயோ நான் கவிதைதான் பாடினனான் வேற ஒன்றும் செய்யேல்ல என்று. இவ்வாறு பாசிச தலைமையை யாரும் கண்டுபிடிக்க முடியாதிருக்கின்றது. அதை யாரும் கேள்விகேட்கவும் முடியாது. இதற்கும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்திற்கும் வேறுபாடு இருக்கின்றது. அரசுமீது விமர்சனங்கள் ஆயிரம் இருக்கு. இதனால் அரசு மக்களுக்குபதில் சொல்ல வேண்டிய நிற்பந்தம் இருக்கு. இதனால் நாம் அனுபவித்த பாசிசத்தையும் இலங்கை அரசையும் நேர்கோட்டில் எப்படி முன்வைப்பது என்பதுதான் எனக்குள்ள கேள்வியாக உள்ளது.  பாசிசப் புலிகள் அழிக்கப்பட வேண்டியதொன்றென்றால் அதை அரசாங்கம்தான் செய்கின்றது.
அந்த விசயத்தில் பாசிசத்தை அழித்ததற்காக தலித் மேம்பாட்டு SAM_7151முன்னணி நன்றி சொன்னது முரளிக்கு எப்படி தவறாகத் தெரிகின்றது. ஆனால் முரளி தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினது அனைத்து சமூக நடவடிக்கைகளுக்கும் கைகோர்த்து நிற்பவர். தலித் சமூக மேம்பாட்டு முன்ணி நன்றி சொன்னது தவறென்பதை தமிழ்த் தேசிய வாதிகள்தான் சொல்ல முடியும். தமிழ்த் தேசியவாதிகளுக்குத்தான் புலிகள் அழிந்து போனதற்காக பழிவாங்கவேண்டிய அவசியமும் தேவையும் இருக்கின்றது. தலைவர் இல்லாமல் போய்விட்டார் என்ற ஆதங்கம் இருக்கின்றது. இவர்கள் பாசிச அரசு என அரசாங்கத்தை திட்டிக் கொண்டிருக்கலாம். ஆனால் மாறாக எம்மை பொறுத்தவரையில் பாசிசப் புலிகளை அழித்தது இந்த அரசாங்கம் தான் என்பதால் நன்றிசொல்ல வேண்டிய கடமை நிச்சயமாக எமக்கிருக்கின்றது. காரணம் எமக்கு முன்பு இல்லாத இடைவெளி தற்போது கிடைத்திருக்கின்றது. இண்டைக்கு தில்லையும் போகலாம்.நானும் போகலாம்,அரவிந்தும் போகலாம்,மனோவும் போகலாம், என்ற சூழல் ஏற்பட்டிருக்கின்றது முப்பது வருடமாக நாங்கள் போக முடியாத சூழல் இருந்தது. ஒரு முறை இந்த மண்டபத்தில்தான் என்று நினைக்கின்றேன் மட்டக்களப்பு எம்.பி ஜெயானந்தா அவர்கள் மட்டக்களப்பு மக்களை சந்திக்கவிருப்பம் தெரிவித்தபோது அச்சந்திப்பில் நானும் கலந்து கொண்டேன. அப்போது புலிகளின் சர்வதேச பரப்புரை பொறுப்பாளர் மேத்தா அவர்களும் கலந்துகொண்டார். அதில் நான் தொடர்ந்து கதைக்கும்போது மேத்தாவிற்கு ஒரு விடயத்தை குறிப்பிட்டேன் நீங்கள் தலைவரிடம் இந்த விசயங்களை சொல்லுங்கோ என்று. அப்போ அவர் சொன்னார் நீங்களும் வாங்கோ இணைந்து வேலைசெய்வோம் என்று. நான் சொன்னேன் ரூ லேற் நீங்கள்தான் தனித்து நின்று தமிழ்ஈழம் எடுத்து தாறதென்று எல்லாரையும் அடித்து துரத்திநீங்கள் நீங்கள்தான் எடுத்து தரவேணும் தமிழ் ஈழம் என்று.
நாங்கள் போகவேணும் இலங்கைக்கு முதலில்  வட-கிழக்கில் எல்லா இயக்கங்களும் வேலை செய்வதற்கு வழிவிடுங்க என்றும்.
SAM_7152இப்படி ஒரு இருபது வருட இடைவெளி இல்லாதிருந்த இடத்தில் இந்த அரசாங்கம்தான் அதற்கான வாய்ப்பை வழங்கி இருக்கிறது என்கின்றபோது அது நன்றி செலுத்தப்பட வேண்டிய விடயம்தான்.இன்று எத்தனையோ மக்கள் நிம்மதியாக மூச்சுவிடுகின்றார்கள். அது நிச்சயமாக நன்றிக்குரிய விசயம்தான். அதைச்சொன்னதற்காக தலித் சமூக மேம்பாட்டு முன்னணியானது தலித் சமூகத்தின் ஏகப்பிரதிநிதி அல்ல நாங்கள் வேறானவர்கள் என்று முரளி தலித் சமூக மேம்பாட்டு முன்னணியை மறுதலித்து தான் தப்பித்துக் கொள்கின்றார். அதேபோன்றுதான் சரவணனும் பிரகடனப்படுத்தியுள்ளார். விசயம் இங்கதான் இருக்கு. இந்த நன்றி என்ற வார்த்தையை சொன்னதற்காக தலித் சமூக மேம்பாட்டு முன்னணியானது அரசின் அனைத்துவித அராஜகத்திற்கும் ஆதரவான போக்குடையது என காட்டுவது எழுதுபவர்களுக்கு மிக இலகுவானது. ஆனால் நாதன் சொன்னதுபோல் செயல்பாடு என்பது அப்படியல்ல. செயல்பாடு என்கின்றபோது அரசோடு இணைந்துதான் செய்யவேண்டும் என்ற தேவை ஏற்படும்போது  அது தவிர்க்கமுடியாதது. அதற்காக அரசின் நடவடிக்கைகள் எல்லாம் நியாயமானது என சொல்கிறார்கள் என்றில்லை. இப்படி நன்றி சொல்வதால் அரசு ஆதரவுக் குழுக்கல் என்று சொல்பவர்கள் தமிழீழத் தேசிய வாதிகளும், புலிகளுமாகத்தான் இருக்க முடியும். மக்களுக்கு எதிரான வன்முறை வேண்டாம்  என்றால் நீ துரோகி. உள்ளகப் போராட்டத்தினால் மக்களை அழிக்கிறீர்கள் என்று ஒரு புத்திஜீவி சொன்னால் அவர் துரோகி.
தேவதாசன்: இதில ஒரு விசயம் இருக்கு என்னென்றால் துரையப்பா எவ்வாறு புலிகளால் துரோகி ஆக்கப்பட்டாரோ அவ்வாறான ஒரு அணுகுமுறைதான் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி மீது சுமத்தப்படும் துரோகிகள் எனும் அடையாளமும் ஆகும். இந்த இரண்டு விடயத்திலும் நிறையவே ஒற்றுமை இருப்பதை நீங்கள் பார்க்கலாம். இந்த அரசிற்கு நன்றி சொன்ன விசயம் வந்து மகாசபைக்கும் தெரியும். மகாசபையில வந்து இன்று பல்வேறு தரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவாளர்கள், ஈ.பி.டி.பி ஆதரவாளர்கள்,சிறீலங்காசுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள், அதேநேரம் தமிழ்த் தேசியத்தை ஏற்றுக்கொள்பவர்கள்  என பலதரப்பட்ட ஆதரவாளர்கள் இருக்கின்றார்கள். நான் மாகாசபைக் கூட்டத்தில் இதுபற்றி கதைத்தபோது, அவர்கள் இதற்கு மறுப்பாக எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை. இந்த அரசிற்கு நன்றி சொன்னதென்பதன் விசயம் வந்து பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட ஒரு சம்பவம்.  இது குறித்து நான் என்ன நினைக்கிறேன் என்றால் அதுவும் ஈழத்திலிருக்க்கூடிய தலித்துக்களின் மன உணர்வு பற்றிசொல்வதானால் இந்தப்போராட்டமானது தலித்துக்களுக்கு திணிக்கப்பட்டதொன்று. அத்தோடு இந்தப் போராட்டத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்களும் தலித்துக்கள்தான். வடக்கிலிருந்து வன்னிக்கு குடிபெயர்ந்தவர்களில் அதிகமானவர்களும் தலித்துக்கள்தான். காரணம் வடக்கில் அவர்களுக்கு காணியில்லாததும் வன்னியில் அதற்கான வாய்ப்பு கிடைத்தபோது அவர்கள் அங்கு சென்றார்கள். அதுபோன்றுதான் மலையக மக்களின் வன்னி நோக்கிய குடியேற்றமும் நிகழ்ந்தது. ஆகவே அங்கும் கொல்லப்பட்டவர்கள் வந்து அதிகமானவர்கள் தலித்துக்களாக இருந்தார்கள். இந்தப்போராட்டம் வந்து மேற்தட்டுமக்களின் நலனுக்காக முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் கூட இதில் பாதிக்கப்பட்டு கொல்லப்பட்டவர்கள் அதிகமானவர்கள் தலித்துக்களாகத்தான் இருந்துள்ளார்கள். இன்றும் கூட இங்கிருந்து கொண்டு போராடுங்கள், போராடுங்கள் எனக்கோரிக்கை வைக்கப்படுவது யாரிடம் எனப்பார்த்தால் அதுகும் தலித்துக்கள் மீதுதான் திணிக்கப்படுகின்றது. அவர்களிடம்தான் கூறப்படுகின்றது நீங்கள் அரசிற்கு எதிராக போராடுங்கள் என்று. இங்கிருக்கும் கொம்யூனிசம்,லெனினிசம் பேசும் இடது சாரிகள் கூட தமிழ்த் தேசியவாதிகளாகத்தான் இருக்கிறார்கள். இவர்களுக்கு பிரச்சனையாக இருந்தது விடுதலைப் புலிகள். தற்போது வந்து அவர்கள் தங்களை தமிழ்த் தேசிய வாதிகளாகவே அடையாளப் படுத்தி வருகின்றார்கள். இவர்களது சிறுபான்மை இனங்கள் ஒன்றுபட வேண்டும் என்கின்ற கோரிக்கை நிறைவேற்றப்பட முடியாததொன்று. ஒன்றிணைவு என்பது பல விட்டுக்கொடுப்பகளுடாகவே  சாத்தியமாகும். முஸ்லிம் மக்களுக்கான விட்டுக்கொடுப்புகள், கிழக்கு மாகாண மக்களுக்கான விட்டுக்கொடுப்புகள் அதேபோன்று தலித் மக்களுக்கான விட்டுக்கொடுப்புகள். இவைகளெல்லாம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். ஆனால் இந்த யாழ்ப்பாண மேலாதிக்கமானது இதற்கெல்லாம் இணங்கப்போவதில்லை. சிறுபான்மை இனங்களும் இணைந்து போராட வேண்டும் எனறு சொல்லுபவர்கள் யாழ்ப்பாண மையவாதத்தை தலைமையாக கருதிக்கொண்டு சொல்லுகிறார்கள். மற்றது அரசாங்கத்தை எதிர்க்கவேண்டும் என்ற மனநிலைகூட யாழ்மேலாதிக்க மனநிலையிருந்துதான் கூறப்படுகின்றது. அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் தலித்துக்களின் மனநிலையிலிருந்து அரசிற்கு எதிரான போராட்டம் எனும் கோரிக்கை எளவில்லை. இதை எப்படி எங்களால் ஏற்றுக்கொள்ள முடியும். இந்த அரசுக்கு எதிரான கோரிக்கை என்பது அங்குள்ள மக்களிடமிருந்து வரவேண்டும். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்தவர்களாக இருக்கட்டும், யுத்தகாலத்திற்குள்ளும் நாட்டைவிட்டு வெளியேறாமல் வாழ்ந்து வரும் வட-கிழக்கு வாழ் மக்களாகட்டும் அவர்களிடமிருந்து வரவேண்டும் அரசுக்கு எதிரான போராட்டம் என்ற கோரிக்கை. ஆனால் அங்கிருக்கக்கூடிய மக்களின் மனநிலையோ இந்த யுத்தம் நின்றுபோனது மிகப்பெரிய மனநிறைவை ஏற்படுத்தியிருக்கின்றது.  அங்கிருப்பவர்கள்தான் பல்வேறு இன்னல்களையும் அனுபவித்தவர்கள், இங்கிருக்கும் நாங்களல்ல. இங்கிருக்கும் தமிழ்த் தேசியம் பேசியவர்களுக்கு யுத்தம் நின்றுபோனது மிகப்பெரிய ‘நஸ்டத்தை’ ஏற்படுத்தியிருக்கின்றது. தலித் சமூக மேம்பாட்டு முன்னணி சொல்லவில்லை மகிந்த ராஜபக்ச இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பார் என்று. அவர் தீர்க்கமாட்டார் அவருக்கு அதுகுறித்து எந்த அக்கறையும் இல்லை. இதை நாங்கள் பல இடங்களில் பதிவு செய்திருக்கின்றோம். அவர் பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவோடு பதவியில் இருப்பவர் இனவாத இரத்தம்தான் அவரது உடலிலும் ஊறியிருக்கின்றது. காரணம் இனவாதம் பேசாது ஆட்சி அமைக்கும் சூழல் அங்கில்லை. இந்த அரசில் இருக்கக்கூடிய இடதுசாரிகளான வாசுதேவநாணயக்காரா போன்றவர்கள் மூச்சுவிடுவதற்கான அதிகாரமும் அவர்களுக்கில்லாது இருக்கின்ற நிலைமையையும் நாம் பார்க்கின்றோம். சிறு துரும்பையாவது அசைக்கமுடியுமா என்ற ஏக்கத்துடன்தான் அவர்கள் இந்த அரசுடன் இணைந்து இருக்கின்றார்கள். இவ்வாறான சூழல்தான் இலங்கை நிலவரமாக இருக்கும்போது யுத்தம் தொடருமானால் அதனது விளைவுகளை சந்திக்கப்போகும் மக்கள் தலித்துக்களாகவே உள்ளனர். எனவே தொடர்ச்சியாக நடந்துவந்த கொடிய யுத்தம் நின்று போனதும் அதற்கு காரணமாக இருந்த அரசிற்கும் நன்றி சொல்ல வேண்டியது மனிதநேயம் உள்ள ஒருவருக்கு இருக்க்கூடிய தார்மீக கடமையாக நாங்கள் கருதினோம்.
சோபாசக்தி: முரளி எழுதிய தலித் முன்னணி நன்றி சொன்ன விசயததை நாம் பார்க்கின்றபோது. இப்ப முரளியோ சரி அல்லது ஞானம் குறிப்பிட்ட சரவணனோ சரி அவர்களை வெளியில வைத்து பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் வெள்ளாளர்கள் கிடையாது. அவர்கள் எங்களது நண்பர்கள். சொல்லப்போனால் எங்களுக்கு முன்பே தலித்தியம் என்ற பெயரில் சரவணன் எழுதத் தொடங்கியவர். தலித்தியம் என்ற சொல் எங்களுக்கு தெரிய வருவதற்கு முன்பே சரிநிகரில் சரவணன் எழுதி வந்தவர். அவர்களை யாழ்ப்பாண தேலாதிக்கப் பார்வை என்றெல்லாம் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் சொன்னதுபோல் யுத்தம் நிறுத்தப்பட்டதென்பது மிகப்பெரிய பிழை. யுத்தம் வந்து இடையில் நிறுத்தப்படவில்லை.
யுத்தம் வந்த பூரணமாக நடத்தப்பட்டு புலிகள் அழிக்கப்பட்டார்கள். இதுதான் நடந்த விசயம். இது இருக்க புலிகளது அரசியலும்,புலிகளது தலைமைகளும் இல்லாமல் அரசியல் தளத்திலிருந்து அகற்றப்படவேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அவர்கள் இருக்குமட்டும் எதையும் செய்ய விட்டிருக்க மாட்டார்கள் என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. அந்த வகையில் தலித் முன்னணி நன்றி சொன்னதில் எனக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் என்ன செய்திருக்க வேண்டுமென்றால் தலித் முன்னணிவந்து ஒரு அமைப்பு.ஒரு கட்சி.
தேவதாசன்: கட்சியல்ல.
சோபாசக்தி: சரி எலெக்சன் கேட்கிறவரை போட்டீங்களே.
தேவதாசன்: நாங்கள் எலக்சன் கேட்கவில்லை. நாங்கள் ஒரு சமூக அமைப்பு.
சோபாசக்தி: சரி ஒரு அமைப்பு, ஒரு இயக்கம் எண்டு வைத்துக்கொள்வோம் அந்த இயக்கம் எடுத்தடி மடக்கில வந்து சேட்டிபிக்கட்  கொடுத்துவிட்டு போக ஏலாது. இது நல்லம், ராங்க்ஸ் என்று. ஒரு விசயத்தை பேசும்போது இரண்டு பக்கத்தையும் கவனத்தில் எடுத்து பேசவேணும். வெறுமனே புலிகள் மட்டும் இந்த யுத்தத்தில் அழிக்கப்படவில்லை. நாப்பதிநாயிரம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். செத்தவர்களில் யார் அதிகமானவர்கள் அதிலும் தலித்துக்கள் தான். காரணம் வெள்ளாளன் எல்லாரும் ஓடி வந்திட்டாங்கள். அங்கிருந்தவர்களில் அதிகமானோர் ஒடுக்கப்பட்டமக்கள் தான். இந்த யுத்தத்திற்கு பிறகு வகைதொகையின்றி கைது செய்யப்பட்டார்கள். புலிகளில் கட்டாயமாக இணைக்கப்பட்ட எமக்கு தெரிந்த அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டார்கள. நேற்றும் நீங்கள் அறிந்திருக்கக்கூடும் கோத்தபாயாவின் ஸ்டேட்மெண்டில் கைதுசெய்யப்பட்டவர்கள் யாரும் காணாமல் போகவில்லை என்று. ஆனால் வாசுதேவ நாணயக்காரா அதை மறுத்திருக்கின்றார். அப்படியல்ல காணாமல் போயிருக்கிறார்கள் இதற்கு பொறுப்புகூறவேண்டும் அரசாங்கம் என்று.  இப்படி பலகொடுமைகள் நடந்திருக்கு எங்கட கண்முன்னால ஆக அதையும் சேர்த்து பேசியிருக்கவேண்டும் அந்த விடயத்தில் தலித் முன்னணி பேசியதாக எனக்குத் தெரியவில்லை. அதுதான் இவ்வாறான விமர்சனங்களுக்கு காரணமாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன்.
அசுரா: இப்ப சோபாசக்தி சொன்ன விசயத்தை கவனிப்பம். இடதுசாரி அரசியலில்  நாங்கள் கற்றுக்கொண்ட ஒரு விசயம் இருக்கு சர்வாதிகாரத்தை எவ்வாறு அகற்றமுடியும் என்பது. சர்வதாகாரத்திற்கு எதிராக பட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிறுவப்படவேண்டும் என்பது.
எம்.ஆர்.ஸ்டாலின்: அதுதான் அடிப்படைக் கோட்பாடு.
அசுரா: அதுதான் கோட்பாடு, சர்வாதிகாரத்திற்கு எதிரான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது. இதில் ஓர் இடத்தில் அதை ஜீவமுரளி குறிப்பிடுகின்றார் ஒரு பாசிசத்தை வேறொரு பாசிசம் அழித்திருக்கென்று. எனவே அப்படித்தான் முடியும்.அதற்காக மக்கள் கொல்லப்பட்டது நியாம் என்றும், மகிழ்ச்சிகொள்கிறம் என்பதல்ல. புலிகளை இல்லாமல் செய்வதற்கு யாரால் முடிந்திருக்கும் சோபாசக்தி.
சோபாசக்தி: அதைத்தானே நானும் சொன்னனான். புலிகள்மட்டும் அழிக்கப்படவில்லை. அதையும் விளங்கிக்கொள்ள வேணும். இதற்குள் மிகப்பெரிய அழிவு நடந்துமிருக்கு, சர்வதேச யுத்த மீறல்நடந்திருக்கு நீங்கள் பேசும்போது அதையும் சேர்த்து பேசியிருக்கவேண்டும் என்பதன் குறைபாடுதான்  இந்த விமர்சனம் வந்ததற்கு காரணம்.
மனோ: பொறுங்கோ, பொறுங்கோ
சோபாசக்தி: என்ன தலைவர் நீங்க சொக்கிப்போய் பேசாமல் இருக்கிறீங்க.
மனோ: நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறன். இல்ல இந்த புத்தகத்தையொட்டிய விவாதம் என்றதால்தான் சும்மா பார்த்துக் கொண்டு இருக்கிறன். நான் ‘மிதிச்ச புல்லும் சாகாமல்’ ஒன்றைச் சொல்லுறன்.
சோபாசக்தி: ஆ…அப்படிவாங்க..
மனோ: என்னென்றால் தம்பி சொல்லுறதும் சரி, அண்ண சொல்லுறதும் சரி. பிரச்சனை வந்து என்னவென்றால் முரளி இதில் தனதுகருத்தை வைத்திருக்கிறார் இது அவரது சொந்த அபிப்பிராயம். இன்று காலையில் நொவெல் நடேசன்  குறிப்பிட்ட ஒரு விசயத்தை படிச்சன். எங்களுக்கு பிடித்த,குளிர்தரும் வியத்தை மட்டுமே நாங்கள் கேட்கத் தயாராக இருக்கின்றம் என்ற அவரது கூற்றில் எனக்கு நிறைய உடன்பாடு இருக்கின்றது. இதை யாரும் அக்ஸப்பண்ணிறதில்ல. தவறு விடாதவர்கள் மனிதர்களும் அல்ல. அதே மாதிரி அண்ண சொன்னதிலும் பிழையில்லை.தம்பி சொன்னதிலும் பிழையில்ல. அவர் என்ன சொல்லுறார். நீங்கள் சொன்னதெல்லாம் சரி அதோட மற்றதையும் சேர்த்துச் சொல்லுங்கோ என்றதுதான்.
சோபாசக்தி: எல்லாம் றெக்கோட் ஆகுது ஆ..
எல்லோரும்: ஹா..ஹா..ஹா..
தர்மினி: இப்பதான் அது அவருக்கு ஞாபகம் வருது.
மனோ: ஆக மிஞ்சினால் நான் போகேக்க தூக்கிக் கொண்டுபோடுவன்.
எல்லோரும்: ஹா..ஹா..ஹா..
மனோ: ஓகே ஞானம் நீங்கள் தொடருங்க.
எம்.ஆர்.ஸ்டாலின்: பிரச்சனை என்னென்றால் அரசாங்கத்துடன் இணைந்து சில காரியங்களை செய்யத்தான் வேண்டும் என்று தலித் சமூகமேம்பாட்டு முன்னணி மட்டும் நம்பிக்கை வைத்திருக்கின்றதென்றில்லை. இன்று இலங்கையில் இருக்க்கூடிய கிட்டத்தட்ட அனைத்து  அமைப்புகளும் அவ்வாறு செயல்படுகின்றன. ஒரு அரசாங்கத்தை அனுசரித்துச் சென்றுதான் சில வேலைகளை செய்யவேண்டியிருக்கின்றது. நமக்கிருக்க்கூடிய பிரச்சனை என்னவென்றால். இந்த விமர்சனம் கடுமையாக கருணகடூரமாக வந்து தலித் சமூக மேம்பாட்டு முன்னணி நன்றி சொன்னதுதான் பலருக்கு சிக்கலாக இருக்கு. அதுதான் சொல்லவாற அரசியல். இதில முரளி பலியாகலாம்,சரவணன் பலியாகலாம் ஆனால் இவ்வாறான அரசியல் பார்வை குறித்துத்தான் நாம் கேள்வி எழுப்பவேண்டியுள்ளது. எவ்வளவோ செயல்பாடுகள் அதன்பிற்பாடு நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அதையெல்லாம் விட்டு இந்த நன்றி சொன்ன விடயம் மட்டும்தான் பலருக்கு உறுத்தலாக இருக்கின்றது. இது ஒரு மறைமுகமான மேட்டுக்குடி அரசியலாகத்தான் பார்க்கவேண்டியுள்ளது. இதில இருக்கும் யாருமே படுகொலைகளுக்கு ஆதரவானவர்கள் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த யுத்தமும் படுகொலைகளும் நிறுத்தப்படவேண்டும் என்று கடந்த 20 வருடங்களுக்கு மேலாக கத்திக் கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவனாகத்தான் இருக்கிறன். இந்தமக்கள் ஒரே நேரத்தில் அழிந்து கொண்டிருந்தவர்களுமல்ல. நாளாந்தம் ஐத்பது நூறு என மக்கள் இறந்து கொண்டுதான் இருந்தவர்கள். சோபாசக்தி சொன்னது மாதிரி அரசாங்கம் யுத்தத்தை செய்து முடித்திருக்கின்றது என்று சொன்னாலும். அந்த முடிவு தொடர்ந்து நாளாந்த மரணங்கள் நிகழாத சூழலை ஏற்படுத்தியிருக்கிறது என்பதையும் நாங்கள் பார்க்கவேண்டும். இநதக்கொலைகளுக்கு ராஜபக்ச மட்டுமென்பதல்ல, தலைவரையும் எழுப்பிக் கேக்கிறதுக்கு ஆக்களில்ல. ஏனென்றால் சனங்களை பிடிச்சு வைச்சிருந்தது யார். யுத்தமென்றாலே கொலைதானே அதில என்ன மனிதாபிமானத்தைத் தேடுறது. இந்த யுத்தம் நிறுத்தப்ட்டதற்கு நன்றி சொன்ன நாங்கள். பலகாலமாக யுத்தம் நிறுத்தப்டவேண்டும் எனக் கூறிக்கொண்டிருந்தவர்கள். புகலிடத்திலுள்ள புலி ஆதரவாளர்கள் எல்லாம் தலைவா யுத்தத்தை நடத்து என்று காசுசேர்த்து அனுப்பிக்கொண்டிருந்தவர்கள் அவர்கள்தான் இன்று யுத்தத்தால் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என ராஜபக்சமீதும், அரசுமீதும் குற்றம் கூறிக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் அழிக்கப்பட்தென்பது நாங்கள் விரும்பாத ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நிகழ்வுதான். ஆனால் இதற்கு ராஜபக்ச மீது மட்டும் பொறுப்பேற்க வெண்டுமென்பது என்ன நியாயம். பிரபாகரனுக்கு துதிபாடி யுத்தத்தை நடத்த காரணமானவர்களெல்லாம் இன்று மனிதாபிமானம் பற்றியும் மக்களின் படுகொலைகளுக்கும் நியாயம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ராஜபக்சவிடம் மட்டும் நியாயம் கேட்கமுடியாது. மக்களை வெளியேறமுடியாத வாறு தடுத்து வைத்ததற்கான ஆதாரங்கள் நிறையவே வெளிவந்திருக்கின்றது. தற்போது மக்களின் தொடர்ச்சியான அழிவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இதற்காகத்தான் நாம் மகிழ்ச்சியடைவதும் அதற்காக நன்றி சொன்னதென்பதும்.
சோபாசக்தி: அதே நேரம் அரசாங்கம் செய்த  யுத்த மீறல்கள் அப்பாவி மக்களுக்கெதிரான தாக்குதலையும் கண்டிக்கிறம்.
எம்.ஆர்.ஸ்டாலின்: நிச்சயமாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம்தானே. இப்ப மனோ ஒரு விசயத்திற்கு எதிரா மறுப்பு தெரிவிக்காமல் இருக்கிறார் என்றால் அதை அவர் ஆதரிக்கிறார் என்பது அர்த்தமல்ல.
சோபாசக்தி: அது சரி விளங்குது.
தில்லைநடேசன்: ஒரு அமைப்பாக நீங்கள் செயல்படுவதற்கும் தனி ஒரு மனோவின் செயல்பாடும் ஒன்றல்ல. அமைப்பு ரீதியாக செயல்படுபவர்கள் தெளிவாக விசயங்களை முன்வைக்கவேண்டும்.
எம்.ஆர்.ஸ்டாலின்: சரி ஓகே.. இதில அடுத்த விசயம் வந்து இன்றைய அரசியல் நிலைப்பாடுகள் குறித்து எடுக்கப்படும் முடிவுகள், செயல்பாடுகள் குறித்த சிக்கல் வந்து முரளிக்கும் இருக்கிறது. இண்டைக்கு அதிகமானவர்கள்  இலங்கையில தமிழ் ஈழம் தீர்வல்ல என்ற நிலைப்பாட்டிற்கு வந்திருக்கிறார்கள். சிலர் உருத்திர குமாரின் பேச்சைக் கேட்டு நம்பிக்கொண்டு இருப்பவர்கள் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். யுத்தம் என்பதை எம்மால் தாங்க முடியாது என்பதில் இலங்கையில் வாழும் நூறுவிதமான மக்களும் கருதுகின்றார்கள். அதைவிட்டு மக்கள் மீண்டும் எழுவார்கள் போராடுவாகள் என்று சேரன் மாதிரி கவிதை எழுதேலாது நாங்கள். ஆகவே இந்த யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் அரசியல் தீர்வு பற்றியதான உரையாடல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இதல விசயம் என்னவென்றால் புலிகள் இல்லாத இந்த நிலையில் தமிழ் மக்கள் அரசியல் சார்ந்து  என்ன வேலைகளை செய்யலாம், எதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் எனும் நிலை வருகின்றது. புலிகளின் காலத்தில் புலியா,அரசாங்கமா,துரோகியா,துரோகியில்லையா,மாவீரர்களா என்ற அடையாளப்படுத்தல்களோட இருந்தது. இன்று கருணா,பிள்ளையான்,டக்ளஸ் தேவாநந்தா போன்றவர்கள் அரசோடு அனுசரித்து ஒரு அரசியலை செய்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக அபிவிரித்துக்கான அரசியல், தமிழ் மக்களின் ஜீவாதாரத்திற்கான அரசியல் என்று நாம் அதைக் குறிப்பிடலாம். அதற்காக இவர்கள் யாரும் நிரந்தர அரசியல் தீர்வு தேவையற்றது என்றும் கூறவில்லை. அதற்காக மக்கள் வாழவேண்டிய தேவை இருக்கின்றது எனும் அடிப்படையில் அபிவிரித்துக்கான முக்கியத்துவத்தை உணாந்து செயல்பட்டு வருகிறார்கள். இதே நேரம் தமிழ் ஈழம்தான் முடிந்த முடிவு எனக் கூறும் உருத்திரகுமார்,நெடியவன் போன்றவர்களும் இருக்கிறார்கள். மாற்றுக் கருத்து பேசிவந்த 90வீதமானவர்கள் இந்த தமிழ் ஈழக்கோரிக்கையையோ,நாடுகடந்த தமிழ் ஈழத்தையோ ஆதரிக்கப்போவதில்லை. ஆனால் நாங்கள் என்ன செய்யப்போகின்றோம் என்ற கேள்வி வரும்போது.
சோபாசக்தி: ஞானம் புதுசா ஒரு கேள்வி இவரிடமிருந்து வருகிறது.
ஜினேஸ்: இது பேர்சனல் கருத்தா.
எம்.ஆர்.ஸ்டாலின்: இல்ல இந்த நூலில் சொல்ல வாற விசயம்தான். இந்த எழுத்தாளர் அபிவிரித்திக்கான அரசியலை நக்கல் பண்ணுகிறார்.
ஜினேஸ்: அதை கிறிட்டிக் பண்ணுறமா?
எம்.ஆர்.ஸ்டாலின்: எழுத்தாளர் என்ன சொல்லுறாரென்றால் இந்த அபிவிருத்தி அரசியல் செய்பவர்களைநோக்கி இது ஒரு தேவையில்லாத அரசியல் என்று.
சோபாசக்தி: துரோக அரசியல் என்று சொல்லுறார்.
எம்.ஆர்.ஸ்டாலின்: ஓம் இதை துரோக அரசியல் என்று சொல்லுறார். இதே பாசையைத்தான் தமிழ் ஈழம் கேட்பவனும் பேசுகின்றான். உருத்திரகுமாரும் இதைத்தான் சொல்லப்போறார், ஒரே பாசைதான். கருணா அரசோடு இணைந்து வேலை செய்தால் துரோகம்,பிள்ளையான் முதலமைச்சராக இருந்தால் துரோகம்,டக்ளஸ் அமைச்சராக இருந்து யாழ்ப்பாணத்தில் சோறு போட்டால் துரோகம். இதனது மறுதலை என்னவென்றால் நீங்கள் சாப்பிடாமல் இருங்கோ அபிவிருத்தி வேண்டாம் உங்களுக்கென்று. சோறல்ல சுதந்திரம்தான் எங்களுக்கு தேவை உருத்திரகுமார் சொல்வது இததான். சோத்துக்காக சோரம் போகவேண்டாம் சுதந்திரம் தான் தேவையென்று சொல்லுபவர்களுக்கு சுலபம். போராட்டம் நடக்கின்றபோது ஏதோ பிடிச்சுடுவாங்கள் என்று சனங்கள் வயிற்றை பொத்தியபடி நம்பிக்கொண்டிருந்தார்கள். இண்டைக்கு அதுவும் கனவாகப் போச்சு. அனால் இந்த வெளிநாட்டில் வாழ்பவர்களின் பேச்சை நம்பி நீங்கள் அபிவிருத்திகளை நம்பாதீர்கள்,ஏற்காதீர்கள் என்றால் அந்த மக்களது நிலையென்ன. இதற்கு முரளி போன்றவர்களிடம் எந்த பதிலும் இல்லை. றோட்டுப்போடுறதால எதுவும் நடக்காது என்று தெளிவாக எழுதுகின்றார்.
தில்லைநடேசன்: இல்ல அதற்குள்ள வேற விசயமும் இருக்கு.
எம்.ஆர்.ஸ்டாலின்: இல்ல இவ்வாறான அரசியல் வந்து துரோக அரசியல் என்றுதான் சொல்லுறார். இதற்கு நீங்கள் வேற என்ன அர்த்தம் காண்கிறீர்கள்.
தில்லைநடேசன்: எப்படியென்றால் மக்களின் அடிப்படை விடயங்களில் அக்கறை கொள்ளாது றோட்டுப்போடுறது மட்டும் அபிவிருத்தி என்று சொல்ல முடியாதென்பதுதான். இதில் சர்வதேச அரசியல், சர்வதேசபின்புலங்களையெல்லாம் பார்க்கவேண்டும் வெறும் உள்ளுர் அரசியல் சம்பந்தப்பட்டதாக பார்க்கக்கூடாது. அரசாங்கம், இயக்கங்கள் என்பதும் ஒரு சர்வதேச பின்புலங்களை கொண்டதுதான்
எம்.ஆர்.ஸ்டாலின்: நான் அதை வாசித்துக் காட்டுறன். உள்ளுரிலை சந்தைப்படுத்திற மீனைவிட மீதியையும் கெட்டுப்போகாமல் சந்தைப்படுத்த வேணும்.உதாரணத்திற்கு கொழும்புக்கு மீன்அனுப்பி சந்தைப்படுத்துறதெண்டால் ஐஸ் வேணும் வடக்கில ஒரு ஐஸ் செய்யிற தொற்சாலைகளும் இல்லை.
தேவதாசன்: வேலணையில் ஐஸ் தொழிற்சாலை வந்து மூன்று நாலு வருசமாச்சு.
எம்.ஆர்.ஸ்டாலின்: முரளி எழுதியதன் தொடச்சிய பாருங்க “மீனைப் பதப்படுத்தி சந்தைப்படுத்த இன்னொரு வழிதான் கருவாடு போடுறது.கருவாடுபோடுவதற்கு உப்பு வேணும்அங்க சமைப்பதற்கே உப்புக் காணாது.” இதன் மூலம் இவர் சொல்ல வாறதென்னெவென்றால் மக்களின் அடிப்படைத் தேவையான உப்பே அங்கு இல்லை.
தேவதாசன்: உப்பே இல்லையாம் றோட்டா போடுறது என்பதுதான் அவரின் கேள்வி.
எம்.ஆர்.ஸ்டாலின்: உப்பே இல்லையாம் றோட்டா என்பது இரண்டும் ஒரு விசயம்தானே.
தில்லைநடேசன்: இப்ப வந்து நீங்க முரளிய வந்து தமிழ்த்தேசியம் சார்ந்த ஆளாக பாக்கேலாது.
எம்.ஆர்.ஸ்டாலின்: அவரது எழுத்துகளுடாக அவ்வாறுதான் தோன்றுகின்றது.
தில்லைநடேசன்: இல்லை அனைத்து ஒடுக்குமுறைக்குமான விமர்சனமாகத்தான் பார்க்கவேணும்.
தேவதாசன்:  முரளியை தமிழ்த் தேசியவாதி என்று யார் சொன்னது.
தில்லைநடேசன்: அவ்வாறான தொனியைத்தான் கொடுக்கின்றது.
அசுரா: அவ்வாறான பார்வைக்கு துணைபோகின்ற எழுத்துக்கள் என்பதுதான்.
எம்.ஆர்.ஸ்டாலின்:  அந்த நிலைதான் எனக்கு அச்சமாக இருக்கு என்று சொல்லுறன்.
தில்லைநடேசன்:  அப்படி சொல்லுங்க அச்சமாக இருக்கிறது என்று சொல்லலாம்.
எம்.ஆர்.ஸ்டாலின்: பைக்ரறி போடவேணும், உப்பு இல்லை என்பதன் அர்த்தமென்ன?
தில்லைநடேசன்: மக்களின் அடிப்டைத்தேகைள்  பூர்த்திசெய்யப்படவேணும் என்பது.
எம்.ஆர்.ஸ்டாலின்: அவைகளில் ஒன்றுதான் றோட்டுப் போடுறதும் ஆனால் முரளி றோட்டுப் போடுறத கிண்டல் பண்ணுறார்.
றமேஸ்: இல்ல றோட்டுப்போடுறதில இன்னொரு விசயம் இருக்கு. இது அரசியல் வாதிகள் பயனடையக் கூடிய ஒரு விடயமாகவும் இருக்கு என்பதால இவ்வாறான சம்பவங்கள் மக்கள் சார்ந்த பணியாக இல்லை என்பதாக அவர் கருதுவதாக எனக்குத் தெரியுது.
எம்.ஆர்.ஸ்டாலின்: அப்படியென்றால் துரோகப் பட்டியலில் கருணா, டக்ளஸ் போன்றவர்களை எப்படி இணைக்க முடியும். ஒரு பக்கத்தில இந்த அரச அனுசரையுடன் செய்யும் காரியங்களை கிண்டல் பண்ணுகின்றார். இதெல்லாம் தேறாதவிசயம், பிலிம் காட்டுறார்கள் என்று சொல்ல வாறார்.அதே நேரம் மக்களுக்கு இவ்வாறான பிரச்சனைகளெல்லாம் இருக்கு என்றும் சொல்லுறார். அப்ப யார் செய்யுறது? அதுதான் எனக்கு விளங்கேல்ல. அப்ப நாங்கள் கனடாவிலிருந்து கப்பலில் அனுப்பப்போறமா!! எனக்கு விளங்கேல்ல இதை அரசாங்கம்தானே செய்ய வேணும். மக்களிடம் வரிவாங்கும் அரசாங்கம் இவைகளை செய்யத்தானே வேணும். அதைக்கேட்டு வாங்கிறதுக்கு ஆக்கள் வேணுமென்றால் அதில டக்ளசும் ஒருவர்தானே. தனிப்பட்ட ரீதியில் டக்ளசோ, பிள்ளையானோ லஞ்சம் வாகினார்கள் என்றால் அது அவர்களது தனிப்பட்ட வகையிலான அரசியல் சம்பவம். நான் சொல்லவாறது கோட்பாட்டு வகையான விசயம்.
சோபாசக்தி: சிஸ்ரம்.
எம்.ஆர்.ஸ்டாலின்: சிஸ்ரம் அதுதான். தனி நபர் ரீதியான சில விசயங்கள் தவறு என்பதற்காக இந்த முறைமை தேவையற்றது என்று நாங்கள் எப்படிக் கூறமுடியும். முறைமைகளை மேற்கொள்வதில் நல்லவனும் இருப்பான் கெட்டவனும் இருப்பான். இப்ப புலிகளுக்குள்ளேயும் நல்லவர்களும் இருந்திருப்பார்கள், தவறானவர்களும் இருந்திருப்பார்கள்தானே. அதுக்குள்ள எத்தனை ஆயிரம் நல்லபெடியல் இருந்திருப்பார்கள்.
றூபன்: எல்லாரும் நல்லவங்கதான். (பகிடியாக)
தர்மினி: இருந்தவங்க….. (பகிடியாக)
எம்.ஆர்.ஸ்டாலின்: அது ஒன்றும் பிரச்சனையில்லையே! ஒன்றை வழிநடத்தும் பொறிமுறை மீதுதான் எமக்கு பிரச்சனை. எனவே இவ்வாறான அனுசரனை அரசியல் நடவடிக்கைகளுக்கான தேவை அங்கு இருக்கின்றது. இதை நாங்கள் துரோக அரசியலாக கிண்டல் பண்ணினா டெவெலப் அரசியல்எண்டால் என்ன மச்சான் எண்டு கிண்டல் செய்து எழுதுவதென்றால் இதைத்தான் நாடு கடந்த தமிழீழக் கனவு காண்பவர்களும் சொல்லுகிறார்கள். இந்த அம்சத்துக்குள்ளதான் முரளியும் வாறார். அது எமக்கு சிக்கலாக இருக்கு.  இப்ப முரளியை வந்து நாங்க மேட்டுக்குடி தேசியவாத சிந்தனை உள்ளவரென்று சொல்ல முடியாது.
சோபாசக்தி: சொல்லக் கூடாது.
எம்.ஆர்.ஸ்டாலின்: ஓம் சொல்லக் கூடாது.
தில்லைநடேசன்: ஒரு ஞாபகம் ஒன்று 89 ஆம் ஆண்டென்று நினைக்கிறேன் நானும் முரளியும் முக்கியமான பத்திரிகை வட்டத்திலுள்ள ஒருவரை சந்திக்கசென்றோம். அவர் சாதியடையாளம் கண்டு கொள்ளும் வழமையான கேள்வியைக் கேட்டுக்கொண்டிருந்தார். எந்த ஊர், அங்க எந்த இடம்,எவர் வீட்டுக்குப்பத்திலை என்று கேட்டுக்கொண்டிருக்க முரளி எழும்பி அந்தாளுக்கு அடிச்சுப்போட்டான். இப்ப என்ன வேணும் உமக்கு  நானும் உங்கட அந்த ஆக்கள்தான் அதுக்கு இப்ப என்ன என்று. அதற்கு பிறகு இல்லை தம்பி நான்அதுபற்றி ஒண்டும் கதைக்கேல்ல என்று சமாளிச்சார்.
றமேஸ்: அது வந்து இப்ப சாதி அடையாளத்தைக் காண்பதற்காகத்தான் என்று இல்லை வெளிநாட்டில வாழும்போது எந்த ஊர் நமக்கு தெரிந்தவரா என்று அறிதலுக்காக கேட்கப்படும் கேள்வியாகவும் இருக்கும்.
எம்.ஆர்.ஸ்டாலின்: இப்ப நாங்க வந்து இங்கே முரளியின் கடந்த கால முற்போக்குப் பங்களிப்புகளை குறைத்து மதிப்படுவதாக நீங்கள் கருதத் தேவையில்லை. அதை யாரும் மறுப்பதற்கில்லை.
சோபாசக்தி: அப்ப சரவணனில சந்தேகம் இருக்கென்று சொல்லுறீங்களோ.
எம்.ஆர்.ஸ்டாலின்: அது உடனடியாக முடிவு சொல்ல ஏலாது. எதைக் கதைச்சாலும் இவன் எழுதியும் போடுவான் அதுவும் பயமாயிருக்கு.
தேவதாசன்: பொறுப்பில்லாமல் பதில் சொல்ல ஏலாது.
எம்.ஆர்.ஸ்டாலின்:  அப்படியெண்டில்ல சரவணனின் அரசியல் வாழ்க்கை எங்களுக்கு பாதிதான் தெரியும்,முழுதா தெரியாதுதானே.
சோபாசக்தி: அவர் வந்து மிக விரைவில ஏதோ அம்பலப்படுத்தப்போறன் என்டு சொல்லி இண்டைக்கு ஆறு மாதம் ஆச்சு ஒண்டையும் காணேல்ல. ஆகவே சரவணன் சொன்ன விடயத்தை செய்து முடிக்கவேண்டுமென்று இந்த சபை ஏகமனதாக கேட்டுக் கொள்கின்றது அப்படித்தானே.
எம்.ஆர்.ஸ்டாலின்: சிலவேளை முரளிக்கு இப்படி ஒரு குழப்பம் வருகுதோ என்றும் யோசிக்கிறன். இவ்வளவு காலமும் துரோகப்பட்டம் கேட்டவர்கள் தொடர்ந்தும் துரோகப் பட்டம் கேட்க வேணுமோ என்ற கருத்தில் எழுதியுள்ளாரோ தெரியேல்ல. ஏனென்றால் எது சரி, எது பிழை என்று எழுதத் தயங்குகிறார் சில விசயங்களில். குறிப்பாக இந்த அபிவிரித்தி அரசியலை கிண்டல் பண்ணுகின்ற விசயததில்.
றமேஸ்: அது வந்து மக்களுக்கு ஒண்டும் செய்யேல்ல  றோட்டுப்போடுகிறார்கள் என்ற ஆதங்கத்தில் எழுதியிருக்கிறார் என்றுதான் நான் நினைக்கின்றேன்.
எம்.ஆர்.ஸ்டாலின்: அப்படியில்ல தெளிவாக இந்த அபிவிரித்தி செய்யும் அரசியலை நிராகரிக்கின்றார்.
தேவதாசன்: இதில நீங்க கவனமாகப் பார்த்தீங்களென்றால் அவர் நான் கனவு கண்கின்றேன் என்பதை கன இடங்களில் பதிவ செய்து வாறார். அதை நான் தவறென்று சொல்லவில்லை. அது அவரது கனவுதான்.
சோபாசக்தி: இந்த இடதுசாரிப்போக்கும் இப்படியான சில சிக்கலை ஏற்படுத்துறதுதான்.
றமேஸ்: இப்ப இவரது முதல் விசயங்களை படிச்சுக்கொண்டுபோகும்போது தெரியாத விசயங்கள் எல்லாம் வருகின்றபோது மிக ஆவலாக இருந்தது. ஆனால் ரைக்ரர் மகேந்திரண்ணையின் கதை வரும்போது அதிலுள்ள சில விசயங்கள் தவறானது. அதில வந்து சொல்லுறார் ரைக்ரர் மகேந்திரன் இப்படி கதைச்சது, இப்படி செய்தது,அதாலதான சுடப்பட்டவர் ரைக்ரர் மகேந்திரத்தை சுட்ட மூன்று பேரையும் அடுத்த நாள் ஆமிக்காரர் சுட்டது என்று. ஆனால் அப்படி நடக்கேல்ல ரைக்ரர் மகேந்திரம் வந்து தலித் சமூகத்தை சேர்ந்தவர். சம்பவத்திற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முதல் பாவான்,ஹரி என்ற இரண்டு இயக்கப்பெடியல் புட்டளையிலுள்ள ஒரு வீட்டில் இருந்தவர்கள். அவர்கள் இருண்டுபேரும் எனர கிளாஸ்மெட் அவர்கள் இருந்த வீட்டில் ஒரு தாயும் கைக் குழந்தையும் இருந்தவர்கள். தாய் வந்து பொலிசாக இருந்து வெட்டிக்கொல்லப்பட்ட இரத்தினசிங்கத்தின் மகள். அந்த இயக்கப்பெடியல் இரண்டுபேரும் அந்த வீட்டுக்குள் இருந்தபோது இந்தியன் ஆமி அந்த வீட்டை சுற்றி வளைச்சிட்டுது. இவர்கள் தப்பியோடவும் இல்லை சுட்டோ சண்டைபிச்சோ எதுவும் செய்யேல்ல.  காரணம் தாயும் பிள்ளைகளும் இருக்கினம் என்றதால. புகைக் கூட்டுக்குள்ள சைனெட் அடிச்சு செத்துப்போட்டாங்கள். இந்தியன் ஆமி அவர்களை இழுத்து றோட்டில போட்டு சுட்டுப்போட்டு தூக்கிக்கொண்டு போட்டாங்கள்.
தேவதாசன்:  அதை உங்களுக்கு உங்கள் கட்சித் தலைவர் சொன்னவரா?
றமேஸ்: பக்கத்தில நான் நிக்கிறன். அந்த வீட்டிலயும் நாங்க முதல் இருந்த நாங்கள்.
தேவதாசன்: ஏனென்றால் ஆமி சுட்டு செத்த தென்றும் சொல்லக் கூடாது ஏனென்றால் சைனெட் அடிச்சு செத்ததென்றால்தான் நீங்களும் நாளைக்கு சைனெட் அடிச்சு சாவீங்கள் என்று உங்கட தலைமைக்கு தெரிந்திருக்கும்.
றமேஸ்: இல்ல நாங்க  பக்த்தில நின்றனாங்கள். நாங்க பக்கத்து வீடு. இது நடந்ததன் பிற்பாடு இயக்கத்திற்கு அங்கே உள்ள யாரையாவது பிடிச்சு டப்டப் எண்டு போடவேணும்  என்றபோது வாச்சது ரைக்ரர் மகேந்திரம். இவரது எழுத்தில் அந்த மூன்று பேரும் சுடப்பட்டு விட்டார்கள் என்று வருகிறது. அந்த மூன்று பேரில் ஒருவன் இங்க பிரான்சில் கனகாலம் இருந்தவன். இப்ப ஆள் உயிரோட இல்ல. இந்த விசயத்தை பார்த்ததும் எனக்கு பிடித்த முந்தைய சம்பவங்களிலும் இப்டித்தான் தவறுகள் இருக்குமோ என்ற சந்தேகமும் வந்தது. இவ்வாறான தவல் பிழைகள் மகேஸ்வரியின் கதைகளிலும் இருக்குமோ என்றசந்தேகம் வருகுது.
தேவதாசன்: நீங்கள் சொல்வதும் தவல் பிழையாக இருக்கலாம். எப்படியோ நிறையக் கொலைகாரர் இங்க தான் இருக்கிறாங்க. தகவல் பழைகள் வருவது இயல்பு அது பெரிய விசயம் இல்லை. முரளி கன இடத்தில கனவு காண்கிறேன் கனவு காண்கிறேன் என்று எழுதியிருக்கிறார். நான் நினைக்கிறன் மகிந்தா இல்லாத ஒரு நாடு, டக்ளஸ் இல்லாத ஒரு நாடு, சாதியில்லாத ஒரு நாடு,சுரண்டலுகள் இல்லாத போலி மார்க்சிஸ்டுக்கள் இல்லாத நாடு இப்படி ஒரு நாடு உருவாக வேணும் என்ற கனவுதான் அனைத்துக் கட்டுரைகளின் வெளிப்பாடாக உள்ளது. இதன் காரணமாகவே தலித் சமூக மேம்பாட்டு முன்னணியும் விமர்சனத்திற்கு உள்ளாகுது என்றுதான்  நான் நினைக்கின்றேன்.
சோகபாசக்தி: அப்ப அவர் கனவு மனநிலையில் இருந்து எழுதுறாரா?
தேவதாசன்: ஓம் அது அவரது கனவுதான். அவரே சொல்லுறாரே நான் கனவு காண்கிறேன்,கனவுகாண்கிறேன் என்று.
மனோ: கொஞ்சம் பொறுங்கோ.. முக்கியமான விசயம் வந்து அடுத்த கலந்துரையாடலில் இன்ரேவல் இல்லை. இன்ரேவல் இருந்தாலும் எழும்பிப் போக ஏலாது.
சோபாசக்தி: போனாலும் பொருள் இல்ல (!!!)
அசுரா: அடுத்த  முறையும்  நீங்கதான் வாத்தியார்.
மனோ: முரளியின் புத்தகத்தையும் நாங்கள் வடிவாக செய்யவில்லை என்றுதான் பார்க்கிறன். இது ஒரு அறிமுக நிகழ்வாகவே நான் பார்க்கிறன் ஏனென்றால் சங்கமித்தையின்  கட்டுரையோட மட்டுமே பிரச்சனை பார்க்கப்படுகின்றது. அதற்காக நடந்த விவாதங்கள் பிழை என்பதல்ல. ஞானம் பல கட்டுரைகளின் விசயங்களையும் தொட்டுச் சென்றிருக்க வேணும்  என்று பார்க்கிறன். மற்றது இதை ஞானத்திட்டை மட்டும் கொடுத்து விட்டு மற்றவர்கள் நித்திரை கொள்ள ஏலாது. ஞானத்திற்கு இருக்கும் பொறுப்பு மற்றவர்களுக்கும் இருக்கு. நாதனும் கதைச்ச நீங்கள்தான் இல்லை என்று சொல்லேல்ல, நான்தான் விடேல்ல. நான் முதல் சொன்துபோல கலந்துரையாடிலின் பலன் வந்து எங்களில்தான் தங்கியிருக்கின்றது. பானையில் உள்ளதுதான் அகப்பையில் வரும். அதுதான் தொடர்ந்து பேசி டெவெலப் ஆகவேணும்.
எம்.ஆர்.ஸ்டாலின்: இதில் அபிவிருத்தி அரசியலை கிண்டல் செய்யிறதுக்கும் அப்பால அரசியல்தீர்வு பற்றித்தான் இண்டைக்கு எல்லாத் தரப்பினரும் பேசிக்கொண்டிருக்கும் விசயம். இந்த விசயத்தில் முரளியின்பார்வை எப்படி இருக்குதென்றால். இவருடைய எழுத்திலிருந்து நான் பர்ப்பது. மனோரஞ்சன் போன்றவர்கள் சந்திரிகா காலகட்டத்தில் வைக்கப்பட்ட தீர்வுப் பொதிகள் சம்பந்தமாக  அதை ஆதரித்து சர்வதேச ரீதியாக பிரச்சாரம் செய்து வந்தவர்கள். அந்த நேரத்தில வாசுதேவ நாணயக்காராவும்  அதற்கான ஆதரவாக செயல்பட்டுவந்தவர். அந்த விசயத்தையும் முரளி கிண்டலடித்துத்தான எழுதுகின்றார். மனோரஞ்சன் சந்திரிகாவின் தீர்வுப்பொதிவிடயமாக பிரச்சாரம் செய்த வகையில். நான் என்ன யோசிக்கிறன் என்றால். ஒரு முறை வரதாரஜப் பொருமாள் இங்கு வந்தபோது  உரையாடியதில் இதுவைர காலமும் முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்வுகளில் சந்திரிகாவின் தீர்வித்திட்டம்தான் மிகச் சிறந்தது என்று கூறியிருக்கிறார். அதேபோல கிழக்கு மாகாண முதலமைச்சரோட நான் சேர்ந்து வேலை செய்த அனுபவத்தில் தற்போது மாகாணசபையூடாக தீர்க்கப்படாத விசயங்களை சந்திரிகாவின் தீர்வுத்திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் மிக இலகுவாக இருந்திருக்கும் என்று. ஏனென்றால் அதிகாரம் சம்பந்தமாக சிக்கல்களை சந்தித்தபோதுதான் இந்த அனுபவம் கிடைத்தது. வரதராஜப்பெருமாளின் சேக்ரட்டியாக இருந்த விக்கினேஸ்வரன் கூட அடிக்ககடி சொல்லுவார் சந்திரிகாவை புலிகளும் தமிழ்த் தலைமைகளும் ஆதரித்திருந்தால் எவ்வளவோ பிரச்சனை தீர்ந்திருக்குமென்று.
எனவே அவர்கள்  நாங்கள் அரசாங்கத்தோட சேர்ந்து செய்யுறம் அதற்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்கவேண்டும் என்று சொல்லுகின்ற விசயத்தை பொறுப்போட அணுகிறத விட்டுட்டு, அதையும் கிண்டலடிக்கிற பாணி முரளியிடம் இருக்கு. இதை புலிகள் கிண்டலடித்தார்கள் சந்திரிகாவின் பொதியைக் கொண்டு திரியும் மனோரஞ்சன் துரோகி என்று அவர்கள் சொல்லுறதுக்கும் இதுக்கும் வித்தியாசம் இல்லை. பாசிஸ்டுக்களும்,மேட்டுக்குடி அதிகார வர்க்கமும் இதை நிராகரிக்கிறது ஒரு பக்கம் இருக்க மாற்றுக் கருத்தியல் பேசும் தரப்பிலிருக்க்கூடிய முரளி போன்றவர்கள் ஏன் இந்தவிசயத்தை யோசிப்பதில்லை. இண்டைக்கு சம்பந்தன் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் எவ்வளவுதான் பயணம் செய்தாலும் இலங்கை அரசாங்காத்துடன் பேசித்தான் தீர்வைக் காணவேண்டும். சம்பந்தனும் அதைத்தானே செய்கிறார்? இவர்கள் அரசுடன் பேசும்போது அதை யாரும் துரோகச் செயல் என்று கூறுவதில்லை. சம்பந்தர் பின்வழியாலும்,முன்வழியாலும் பேசிக் கொண்டு திரிவதை யாரும் துரோகம் என்று சொல்லுறேல்லையே. ஆனால் இதே விடயத்தை மனோரஞ்சனோ, டக்ளசோ பேசினால் உடனடியாக இது துரோகத்தனம் விலைபோகின்றார்கள் என்கின்றனர். இதுதான் எனக்கு விளங்குதில்லை. என்னதான் பேசுவதென்றாலும் அரசாங்கத்துடன்தானே பேசவேண்டியிருக்கின்றது. நாங்க தனிநாடு கேட்டு பிரிக்கப்போறம் என்றால் அது வேற விசயம். அதில்லாமல் மாகாணசபையோ எதுவோ கதைப்பெதென்றாலும் அரசோடுதானே பேசவேண்டும் சங்கரியும் தொடர்ந்து ராஜபச்சவிற்கு கடிதம் எழுதிக்கொண்டுதானே இருக்கிறார். அதையெல்லாம் துரோகம் என்று யாரும சொல்லுறேல்லையே. இதில என்ன சிக்கலெண்டா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற அமைப்புக்களை, அதாவது பழைய புலிகளின் புகலிட ஆதரவாளர்களின் தேசியவாத மைய நீரோட்ட அரசியலை ஆதரிக்கிற போக்குதான் எல்லோரிடமும் இருக்கே தவிர அதற்கு மாற்றுக்குரலாக வரக்கூடிய விளிம்பு நிலை அரசியலை யாரும் ஆதரிப்பதில்லை. ஏதோ மனோரஞ்சன் வரலாற்றுக் குற்றம் செய்துவிட்டார் என்ற பாணியில் விமர்சனம்  முன் வைக்கப்பட்டிருக்கிறது.  உண்மையில் போராட்ட வரலாற்றுடன் அனுபவம் உள்ளவர்களின் பணி மிக அவசியமானது. இவைகளை எப்படி துரோகத்தனம் என்று பார்ப்பது. மனோரஞ்சன் அரசாங்கத்தோடு சேர்ந்து கோடிஸ்வரனானார் என்று நீங்கள் எழுதினால் அது வேற விசயம். அது ஒரு துரோகத் தனம். ஆரசியல் தீர்விற்காக பிரச்சாரம் செய்வதை ஒரு துரோகத்தனம் என்று சொன்னால் இது புலிகளின் பாசைதான்.
தர்மினி: அந்த நோக்கத்தில சந்தேகம் வரக்கூயது மாதிரி இருக்கு.
எம்.ஆர்.ஸ்டாலின்: அது எங்கேயிருந்து வருது என்றதுதானே கேள்வியாக இருக்கு.
தேவதாசன்: அந்த நூறு யூறோ வில இருந்து வந்ததோ.
எம்.ஆர்.ஸ்டாலின்: அதுகூட எனக்கு விளங்கேல்ல நான் குடுத்த நூறு யூறோ என்று அடிக்கடி எழுதப்பட்டிருக்கிறது. இப்ப யாரோடயாவது பேசித்தாதான் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் இங்கிருப்பவர்களுக்கு மாற்றுக் கருத்தேதும் இருக்கா? அது பற்றி நீங்க கதையுங்க.
மனோ: யாரோட கதைக்கிறது.
எம்.ஆர்.ஸ்டாலின்: இல்ல  அரசியல் தீர்வென்றால் அரசாங்காத்தோடதானே கதைக்க வேணும்.
மனோ: இதை நான் எப்படி பார்க்கிறேன் என்றால் முரளி இந்த புத்தகத்தை எழுதியிருக்கு. முரளி தலித் முன்னணியின் ஆதரவாளர்  என்ற உரிமையில நீங்கள் கதைக்கலாம் என்றதும் ஒரு விசயம். இண்டைக்கு வந்து எவ்வளவோ புத்தகங்கள் வந்து கொண்டிருக்கு. எழுதப்படுகின்ற புத்தகம் எல்லாம் பேவெக்ட் ஆனதென்றில்லை. ஒன்டு வந்து இந்த புத்தகத்திலும் எங்களுக்கு உடன்பாடானதும் உடன்பாடில்லாததுமான விசயங்கள் இருக்கு. இதற்கும் அப்பால நாங்க போகவேண்டிய அவசியமில்லை. இரண்டாவது இதில உள்ள இரண்டொரு அரசியல் கட்டுரை சம்பந்தமாக மட்டுமே  நீங்கள் பேசுவதைப்பார்த்தால் அது உங்களுடைய பிரச்சாரத் தொனியாகவும் இருக்கு. அதுவும் பிழை எண்டில்லை. இங்க ஒரு விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் இருந்தால் அவர் அதற்கான பிரச்சாரத்தை செய்யத்தான் பார்ப்பார். அதனால இந்தப்புத்தகத்தின் மீதான விமர்சனம் என்பதற்கு அப்பால ஒரு பிரச்சாரப் பார்வையாகவே எனக்கு தோன்றுகிறது. அது சரிபிழை என்பது வேற, பிழையாக இருந்தால் அதை கவனத்தில கொள்ளுங்கோ.
தில்லைநடேசன்: அது என்ன பார்வை?
மனோ: தலித் முன்னணியுடைய பிரச்சாரப் பார்வை. அவ்வாறான தொனிதான் இதில இருக்கு. அதற்காகத்தான் இந்தப் புத்தகம் எடுக்கப்பட்டதோ என்ற சந்தேகமும் எனக்கிருக்கு.
அசுரா: இல்ல..இல்ல
மனோ: எனக்கு அந்த சந்தேகம் வருது. அது இயற்கைதானே.
தர்மினி: அதற்காகத்தான் இவரையும் கதைக்க விட்டிருக்கோ என்ற சந்தேகமும் வருது. ( பகிடியாக)
மனோ: அனைத்தையும் ஐயுறு என்று படிச்சிரிக்கிறம் தானே.
எம்.ஆர்.ஸ்டாலின்: நான் தலித் முன்னணியில்லயடாப்பா. என்னை விலத்திப் போட்டாங்கள். அது கனகாலம்.
தேவதாசன்: இந்த புத்தகத்தைப் பற்றிக் கதைக்க எடுத்தது சோபாசக்தி.
மனோ: அவர் எடுத்தவரல்லோ. அவர் இதைப்பற்றி கதைக்க வேணும்.
சோபாசக்தி: நான் கதைச்சனான் தானே.
தேவதாசன்: இந்த புத்தகத்தில பிடிச்ச விசயம் என்னென்றால் மொழி. இதில் ஒரு நாவலுக்குரிய எழுத்து முறை இருக்கு. நான் முரளிக்கு சொன்னனான் டேய் நீ இதுகள விட்டுட்டு ஒரு நாவலை எழுது என்று. அதுக்கு அவர் சொன்னார். நான் எழுதிக் கொண்டுதான் இருக்கிறன் மச்சான் கெதியில முடிஞ்சுடு மெண்டு.
சோபாசக்தி: கொஞ்சம் அரைட்டை அரங்கப் பாணியில போற மாதிரியிருக்கு.
தேவதாசன்: சிவசேகரத்துடன் ஒரு உடையாடல் என்ற கட்டுரை வந்து சுவையான வாசிப்பு அனுபவம். மார்க்ஸ்,லெனின்,அம்பெத்கர் போன்றவர்களோடு கற்பனையான உரையாடல் ஒன்றை செய்திருக்கிறார். இதில வந்து அவருடைய ஆதங்கம் தெரியுது. எங்களுடைய தேசத்தில் ஒரு அம்பெத்கர் தோன்றவில்லையே என்பதான ஆதங்கமாக அது தெரிகிறது.அந்த உரையாடல் கட்டுரை மிக நன்றாக இருந்தது.
மனோ: இதில வந்துள்ள கட்டுரைகள் பலவும் உயிர்மெய் சஞ்சிகைக்காக எழுதப்பட்ட கட்டுரைகள். உயிர்மைய் இல்லாது போனால் இதிலுள்ள பல கட்டுரைகள்  எழுதப்பட்டிருக்காது. சஞ்சிகைகள் இல்லாதுபோனால் கட்டுரையாளர்களே இல்லை.
எம்.ஆர்.ஸ்டாலின்: நீங்க சோபாசக்தியை பார்த்து அப்படி சொல்லக்டாது.
மனோ: சஞ்சிகைக்காரரின் நெருக்கத்தினால் தான் கட்டுரைகள் வருகின்றது. சஞ்சிகையில் வெளிவருவதும் தொகுப்பில் வெளிவருவதும் ஒன்றல்ல. அதனால் இதில பல பொருத்தப்பாடில்லா கட்டுரைகள் இருப்பதாக எனக்கு படுகிறது. நீங்க கூறியது மாதிரி சிவகேரத்துடன் ஒரு உiயாடல் என்று கட்டுரை எனக்கு பெரிய உடன்பாடில்லை. அது ஆரம்ப மார்க்சியர்களுக்கு படிப்பிக்கின்ற குழந்தப்பிள்ளைக் கட்டுரையாகத்தான் எனக்கு படுகிறது.
தேவதாசன்: நான் சொன்னது நாவல் எழுதக்கூடிய தகுதிக்கான மொழி அதில் இருந்ததென்பதுதான்.
மனோ: இதில நாவலென்றத நான் எப்படி பார்த்தனென்றால். இப்ப புலிகளின் இயக்க வரலாறு, புளொட்டின் இயக்க வரலாறு,ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் இயக்க வரலாறுகள் எல்லாம்  வெளிவந்திருக்கின்றது. ஆனால் ரெலோவின் இயக்க வரலாறு வெளிவந்ததில்லை. அதை வந்து முரளியின் இந்த தொகுப்பில்தான் கொஞ்சமென்றாலும் பார்க்கக் கூடியதாக உள்ளது. இதனாலதான் முரளி இதையே நாவலாக்கியிருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது.  ரெலோவைப் பற்றிய தகவல் என்னும் அதிகமாக வந்திருந்தால் அது ஒரு முழுமையான ரெலோ பற்றிய படைப்பாக வந்திருக்கும். அடுத்தது இந்த தொகுப்பில எனக்கு மிக பிடிச்ச கட்டுரை மகேஸ்வரி பற்றிய கட்டுரை இன்றைக்கு ஈ.பி.டி.பி யின் உறுப்பினர் மகேஸ்வரி துரோகி எனக் கொல்லப்பட்டடார் என்பதுதான் அனேகமே அனைவருக்கும் தெரிந்த விடயம். ஆனால் இந்தக் கட்டுரை மகேஸ்வரி என்பவர் யார் அவ எப்படி வந்தவ அவவின் கடந்தகலாம் என்ன, அவருக்கும் இயக்கங்களுக்கும் இடையிலான தொடர்புகள் போன்ற பல விசயங்கள், அவ வந்து புலிகளோட கூட வேலை செய்திருப்பா ஆனா அவவின் நோக்கம் வேற. இந்த விசயத்தில் மகேஸ்வரியை முரளியைத் தவிர சரியான வகையில் யாரும் அடையாளம் காட்டியதில்லை. அந்த வகையில் அந்த இரண்டு கட்டுரையும் மிகமுக்கியமானது. மற்றது சத்தம்பற்றிய கட்டுரை ஞானம் இதில சம்பந்தம் இல்லாத கட்டுரை என்று சொன்னது. சத்தம் பற்றிய கட்டுரை என்பது மிக ஆளமான கட்டுரை. இந்தக்கட்டுரைக்குள் மருத்துவம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் இருக்கு. சத்தம் என்பது ஒரு அலர்ஜிக் வருத்தம் என்பது எனது மருத்துவரின் கேள்விகளிலிருந்துதான் ஒரு முறை தெரிந்து கொண்டேன். என்னிடம் டாக்டர் அந்த அலர்ஜிக் இருக்கா, இந்த அலர்ஜிக் இருக்கா என்று கேட்டுவிட்டு சத்த அலர்ஜிக் இருக்கா என்று ஒரு முறை கேட்டார் அப்போது எனக்கு சிரிப்பாக இருந்தது. ஆனால் இப்ப விளங்து அதுவும் ஒருவகை அலர்ஜிக் வருத்தத்திற்கு காரணமாகிறது என்று. இந்த விசயத்தை வந்து முரளி மேலால தொட்டுச் செல்லுகிறார். இவ்வாறான கட்டுரைகள் ஒரு சஞ்சிகைகளில் வரும்போது ஓகே. ஆனால் இது ஒரு தொகுப்பில் வரும்போது இவ்வாறான கட்டுரை அதிகம் மெருகூட்டப்படவேண்டும். என்பது என்னுடைய…..
சோபாசக்தி: தீர்ப்பு
மனோ: தீர்ப்பில்ல என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம். என்ன இருந்தாலும் இந்த இடத்தில் மெலிஞ்சிமுத்தனுக்கும், முரளிக்கும் நாம்  நன்றி சொல்ல வேண்டும். இப்படி ஒரு நூல் வந்ததற்கு
சோபாசக்தி: தமயெந்திக்குத்தான் நன்றி சொல்லவேணும்.
மனோ: அதோட பானுபாரதி, உயிர்மெயக்கும் நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றோம்.
யோகரட்ணம்: நான் முரளிக்கு சின்ன அட்வைஸ் ஒண்டை சொல்லலாம் என்று நினைக்கிறன்
அசுரா: அட பார்ரா..
யோகரட்ணம்: எல்லாரும் கதைச்சிட்டீங்க. தம்பி சோபாசக்தியும் என்னைப் பார்த்துக்  கேக்கிறார் சிங்கம் ஏன் சீறாமல் இருக்குதென்று. எனவே நான் சீறாமல் இருக்கிறது நல்லதுக்கில்ல. முரளியின் அப்படியா என்ற இணையத்திலும் அவரது கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். அதோட புத்தகத்திலும் இரண்டு மூன்று தடவை வாசித்திருக்கிறன். அவர் பருத்தித்துறையில் இருந்து இயக்கத்திற்கு போனது போன்ற கதைகளையெல்லாம் இதில நீங்களும் பார்த்திருப்பீர்கள். ஆனால் கடந்த கால அரசியல் குறித்த எந்த அனுபவமும் முரளியிடம் இல்லை. அதாவது இப்ப துரோகிகள் என்ற பட்டியலில் இருக்கக்கூடியவர்களை விட 83க்கு முன்னமும் துரோகிப்பட்டியலில்  பலர் சேர்க்கப்பட்டவர்கள். இண்டைக்குப் பார்த்தீங்களென்றால், யாழ்ப்பாணத்திலுள்ள விளையாட்டரங்கு,யாழ்ப்பாண நூல் நிலயம்,யாழ்ப்பாண கல்யாண  மண்டபம்,யாழ்ப்பாணத்திலிருக்ககூடிய இரட்டை வழி,ஒற்றை வழிப்பாதைகள், யாழ்ப்பாண பஸ் நிலையம் என்பன. அக்காக்குத் தெரியும் (புஸ்பராணி) அப்போது யாழ்ப்பாண பஸ் நிலையம் எந்தவகையில இருந்ததென்று.
சோபாசக்தி: இப்பதான் அக்காவின் ஏரியாவுக்கு வாறீங்க.
யோகரட்ணம்: இல்ல யாழ்ப்பாண நூல் நிலையம் எரிக்கப்படதை கண்டித்தவர்கள் இந்த நூல் நிலையத்தை ஆரம்பித்தவரை துரோகி என்றுதான் சொன்னார்கள்.
சோபாசக்தி: புதிதாக அமைத்திருக்கலாம் அதன் ஆரம்பம் வெள்ளக் காரரான  லோங் பாதர் என்பதுதான்.
யோகரட்ணம்: துரையப்பாதான் ஆரம்பித்தது.
உதயகுமார்: இல்லை தவறு,அது முன்னமே இருந்தது.
தர்மினி: பாதர் ஒருவர்தான அதை ஆரம்பிச்சது.
றமேஸ்: துரையப்பா புதிதாக கல்லை கில்லை போட்டு புதுப்பித்திருக்கலாம் ஆனால் அது முன்னமே இருந்தது.
புஸ்பராணி: புதுக்கட்டிடாமாக திறந்து வைத்ததுதான் துரையப்பா.
யோகரட்ணம்: நீங்கள் சந்தேகம் இருந்தால் யாழ்ப்பாண மேயரிடம் தொடர்பு கொண்டு இதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். நீங்க அப்படிச் சொல்லுறீங்க எனக்கு தெரிந்தது அதுதான்.
எம்.ஆர்.ஸ்டாலின்: லைபிரறியை விட்டு மற்ற விசயத்திற்கு வாங்க.
யோகரட்ணம்: யாழ்ப்பாணத்திலுள்ள 75வீதமான அபிவிருத்திகளெல்லாம் துரோகி ஆக்கப்பட்ட துரையப்பாவினால் மேற்கொள்ளப்பட்டதுதான். அதேபோன்றுதான் டெவெலப் என்பதை ஜீவமுரளி நையாண்டிதான் செய்கிறார். 30வருட அழிவுகளுக்குப் பிற்பாடு அங்குள்ள சீரழிந்து போன வீதிகளை புனரமைப்பதென்பது சாதாரணமான வேலையில்லை. அத்தோடு ஒரு நாட்டின் போக்கு வரத்து என்பது மிக முக்கியமானது. அது தரைவழிப் பாதையாக இருக்கலாம், கடல் வழிப்பாதையாக இருக்கலாம், ஆகாய வழிப்பாதையாக இருக்கலாம். இவைகள் சீராக இருந்தால்தான் பொருளாதார அபிவிரித்தி சாத்தியமாகும். உப்பு கொண்டு வாறதற்கு றோட்டு சீராக இருக்கவேண்டும். வண்டில் மாட்டில உப்பைக் கொண்டுவந்தால் உப்பு கரைஞ்சுபோடும்.
றமேஸ்: அவர் உப்பை வந்து ஒரு உதாரணத்துக்குத்தான் கூறியிருக்கிறார்.
யோகரட்ணம்: இல்ல தம்பி உப்பு இல்லாத இடத்தில றோட்டு அவசியமா என்றுதான் அவர் கேட்கிறார். நான் சொல்லுறன் றோட்டுப் போட்டால்தான் உப்பு விரைவாக வரும் என்று.
சோபாசக்தி: உப்பு பெறாத கதைகளை விட்டுட்டு வேற கதையை கதையுங்கோ.
யோகரட்ணம்: என்ர கேள்வி என்னென்றால் உப்பில்லாத இடத்திற்கு வீதி வேணுமா இல்லையா என்றதுதான்.
மனோ: வெள்ளக்காரன் தேயிலையை கொண்டு வாறதுக்குத்தான் றோட்டுப்போட்டவன்.
யோகரட்ணம்: எல்லாம் வியாபாரம்தான். பல்வேறு அபிவிரித்திகள்  இன்று உலகம் முழுவதும் நிகழ்ந்து கொண்டிருக்க எங்களது தேசத்தில்மட்டும் ஏன் அது நிகழக்கூடாது.
றமேஸ்: அவர் றோட்டு போடக்கூடாது எண்டு சொல்லேல்லையே
யோகரட்ணம்: இல்லை நையாண்டி பண்ணுகிறார். தம்பி நீங்க அந்தக் கட்டுரைய நன்றாக வாசியுங்கோ அப்பதான் தெரியும் உங்களுக்கு அந்த நையாண்டித் தனம். வேண்டாம் என்பது வேற, நையாண்டி என்பது வேற. அதை நீங்க புரிஞ்சு கொள்ளவேணும். மற்றது அரசியல் தீர்வு பற்றியது. அது பற்றி ஞானம் அதிகம் பேசியிருக்கிறார். நாங்கள் இங்கிருந்து கொண்டு அரசியல் தீர்வு வேணும் எண்டால். அவ்வாறு அந்த தீர்வு சம்பந்தமாக அங்கு சென்று பேசுவது யார். தீர்வு சம்பந்தமாக அரசாங்கத்துடன் பேசவதற்கு ஒருவர் தேவையா இல்லையா? மற்றது நாங்கள் நன்றி கூறிய விசம் வந்து அந்த நாப்பதிநாயிரம் மக்களுடன் நின்று விட்டதே என்பதன் சந்தோசம்தான். யுத்தம் தொடர்ந்திருக்குமாயின்  நாப்பது இலட்சத்தையும் எட்டியிருக்கலாம். இன்று பள்ளிக் கூடம் போனவர்கள் ஒழுங்கா வீட்டை வருகிறார்கள். வேலைக்குப் போனவர்கள் உயிரோட வீடு திரும்புகிறார்கள். கடதெருவுக்கு ஒழுங்கா போய் வருகிறார்கள்.
பலரின் கேள்வி: எப்ப
யோகரட்ணம்: யுத்தத்திற்கு பிறகு.
றமேஸ: அதுதான் அண்ண இப்ப செய்தி, செய்தியாக கனக்க வருகுதே.
யோகரட்ணம்: அது சும்பா எங்களப்போல கொஞ்சப்பேர் இருந்து கொண்டு இணையத்தில எழுதிற விசயம்.
றமேஸ்: இது சப்ஜெக்ற்ரை விட்டு கதைக்கிற மாதிரி இருக்கு.
யோகரட்ணம்: இல்ல முரளியின் சம்பவத்தோடுதான் நான் கதைக்கிறன் வேற விசயம் கதைக்கேல்ல. அவர் செய்கிற நையாண்டித்தனம் வட-கிழக்கில் வாழும் மக்களுக்கு எந்த வகையிலும் உதவாது. காரணம் அவர் இருக்கிறது ஒரு மேற்குலக நாட்டில. நானும் அப்படித்தான். அங்கு நடக்கும் விசயங்களை கவனிக்காமல்,நோக்காமல் விதாண்டாவாதக் கதைகள் பேசக்கூடாது.
சோபாசக்தி: என்னண்ணை நீங்க முரளி வந்து தொடர்ந்து 30வருசாமா தீவிரமாக இயங்கிக் கொண்டும், எழுதிக்கொண்டும் செயல்பட்டுக் கொண்டும் இருக்கிறார்.
யோகரட்ணம்: நீங்களும் தொடந்து எழுதிக் கொண்டும், செயல்பட்டுக்கொண்டும்தான் இருக்கிறீங்கள் ஆனால் நீங்களும் ஒரு பக்கமாகத் தான ஓடுறீங்கள். உங்கட வண்டில் சவாரியும் ஒரு பக்கமாகத்தான் ஓடுது. இரண்டு பக்கமும் சவாரி செய்வதாகத் தெரியவில்லை.
புஸ்பராணி: எனக்கு அங்கு ஒரு அண்ணா, தங்கச்சி இருக்கினம் அவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது இப்பவும் அவர்கள் அச்சத்துடன்தான் வாழுகிறார்கள். பிள்ளைகள் வேலைக்குப் போய் திரும்பும்வரை பயத்துடன் தான் இருக்கிறார்கள். அது இப்பவும் நடந்து கொண்டுதான் இருக்கு.
தேவதாசன்: பயம் இல்லாமல் வாழுகிறார்கள் என்றில்லை.
யோகரட்ணம்: 30 வருசமாக தன்ர குழந்தையை கோழிக்குஞ்சு போல பொத்தி வளர்த்த பிள்கைளை பிச்சு எடுத்துக்கொண்டு போன கதைகள், பலவந்தமாக பிடிச்சு சாக்கொண்ட விசயங்களும் இருக்கு அந்தப் பய உணர்வு இப்பவும் சிலவேளை இருக்கத்தான் செய்யும்.
சோபாசக்தி: முந்தினது போல் இல்லை என்பதை நாம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். செல்லடி இல்லை. குண்டு வீச்சில்லை.
யோகரட்ணம்:என்னைப் பொறுத்தவரை வரலாறு முரளியையும் விடுதலை செய்யவில்லை என்பதுதான் எனது கருத்து.