3/11/2013

| |

முனைப்பினால் குடும்பத்துக்கு தலைமைதாங்கும் பெண்களுக்கு சுயதொழில்

View 7.3_munaippu_a.jpg in slide showவறுமைக்கோட்டின்கீழ் வாழும் குடும்பத்துக்கு தலைமை தாங்கும் பெண்களின் மாதாந்த வருமானத்தை அதிகரித்து வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில்  சுவிஸ்ட்ஸர்லாந்தில இயங்கும்;முனைப்பு நிறுவனத்தினால் குடும்பத்தலைவிகளுக்கு சுயதொழில் திட்டங்கள் அறிமுகப்படுத்தியுள்ளதாக நிறுவனத்தின் செயலாளர் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி முதல் அமுல்படுத்தப்படும் இத்திட்டத்தில் மாதம் ஒரு குடும்பத்தலைவிக்கு சுயதொழில் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்திட்டத்தின் கீழ் முறக்கொட்டான்சேனை, வாழைச்சேனை,வாகரைஊறியன்கட்டு,மியான்குளம் போன்ற பிரதேசங்களில் சிற்றுண்டிச்சாலை,சில்லறைக்கடை,ஆடுவளர்ப்புத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அங்கவீனர்களை சமுகத்துடன் இணைக்கும் திட்டத்தின் கீழ் கரடியனாற்றுப்பிரதேசத்தில் குடும்பம் ஒன்றுக்கு சில்லறைக்கடையொன்று அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இத்திட்டங்களின் மூலம் தங்களால் நாளாந்த வருமானம் பெறப்படுவதுடன்,குழந்தைகளின் கல்விச்செலவினை ஈடுசெய்வது மட்டுமல்லாமல் சிறுதொகைப்பணத்தையும் மாதாந்தம் சேமித்துவருவதாக பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை முனைப்பு நிறுவனம் 2010 முதல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதாந்த புலமைப்பரிசில் திட்டத்தினை அமுல்படுத்திவருவதுடன்,பல்வேறு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் கல்விநடவடிக்கைகளுக்கும் மாதாந்த கொடுப்பனவுகளை வழங்கிவருவதாக அமைப்பின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.