3/20/2013

| |

வெலிக்காகண்டி மக்களின் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது

DSC03797மட்டக்களப்பு மாவட்த்திலுள்ள எல்லைக்கிராமமான வெலிக்காகண்டி மக்கள் புதன்கிழமை(20.3.2013) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன் நடாத்திய சத்தியக்கிரக ஆர்ப்பாட்டம் கிழக்;கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பிருமான சிவநேசதுரை சந்திர காந்தன் வழங்கிய உறுதிமொழியையடுத்து முடிவுக்க கொண்டுவரப்பட்டது.
வெலிக்காகண்டி கிராம மக்களை யானைகளின் தாக்கத்திலிருந்து பாதுகாக்குமாறு கோரியும் இந்த கிரமாத்திற்கான வீட்டு வசதி மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறும் கேட்டு 57 குடும்பங்களை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் புதன்கிழமையன்று அமர்ந்திருந்து சத்தியக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாலை ஆர்ப்பாட்ட இடத்திற்கு விஜயம் செய்த கிழக்;கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பிருமான சிவநேசதுரை சந்திர காந்தன் அங்கிருந்த அக் கிராம மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து கொண்டதுடன் அவர்களது கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றித்தருவதாக உறுதி மொழி வழங்கினார். இதையடுத்து இவர்களின் ஆர்ப்பாட்டம் நிறைவுக்கு வந்தது.
இக்கிராமத்திற்குள் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்வதை தடுக்கும் நடவடிக்கையுடன் இக்கிரமா மக்களுக்கான வீட்டுத்திட்ட வசதி மற்றும் வீதி போக்குவரத்து என்பனவும் செய்து தரப்படுமென இதன் போது சந்திரகாந்தன் உறுதி மொழி வழங்கினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மட்டக்களப்பின் மிகவும் பின் தங்கிய எல்லைக்கிராமமான வெலிக்காகண்டி கிராமம் கடந்த யுத்த அனர்தத்தினால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு இங்கிருந்து மக்கள் இடம் பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்பட்ட ஒரு கிராம மாகும்.
இக்கிராமத்தில் 57 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்திற்குள் யானைகள் நாளர்ந்தம் புகுந்து அட்டகாசம் செய்து வருவதுடன் இந்த கிராமத்தில் இது வரைக்கும் 5 பேர் யானைகளின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளனர். அத்தோடு பல வீடுகள் இங்கு சேதப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.