3/16/2013

| |

தேசிய நல்லிணக்கத்துக்கான இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் பாராட்டு

* அபிவிருத்திக்காக 43.8 பில்லியன் யென் உதவி
* தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க இணக்கம்
இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக ஜப்பானிய அரசாங்கம் 43.8 பில்லியன் யென் நிதியுதவி வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபேவுக்குமிடையிலான பேச்சுவார்த்தையின் போதே மேற்படி இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.
இரு நாட்டுத் தலைவர்களுக்குமிடை யிலான பேச்சுவார்த்தையையடுத்து கூட்டறிக்கையொன்று வெளியிடப்பட்டு ள்ளதுடன் இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவியில் 41.1 பில்லியன் யென் கடனுதவியாகவும் மேலும் 2.7 பில்லியன் யென் நன்கொடையாகவும் வழங்கப்ப டவுள்ளது.
இந்நிதியினை இலங்கையானது உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கும் உபயோகப்படுத்தவுள்ளது.
இலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு குறிப்பிடத்தக்களவில் வருடக் கணக்கில் பங்களிப்புச் செய்து வருகின்ற ஜப்பானின் ஒத்துழைப்புக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இதன் போது தமது பாராட்டைத் தெரிவித்துள்ளார்.
1982ம் ஆண்டு பாராளுமன்றக் கட்டிடத் தொகுதி நிர்மாணத்திற்கு ஜப்பானிய நிதிநிறுவனம் பங்களிப்புச் செய்ததை இதன்போது நினைவு கூர்ந்துள்ள ஜனாதிபதி; பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியின் வரலாற்றுப் பெறுமதியையும் தனித்துவத்தையும் பாதுகாக்கும் வகையில் அதன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக அதேபோன்ற பங்களிப்பொன்றை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதன்போது ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபே இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சமாதான சூழல் மற்றும் இன ஐக்கியத்தின் முக்கியத்துவம் சம்பந்தமாக கருத்துக்களைப் பரிமாறிக்கொண்ட இருநாட்டுத் தலைவர்களும் புலிகள் அமைப்புக்கு எதிரான நடவடிக்கை நிறைவு பெற்றுள்ள நிலையில் நாட்டில் அமைதியை மற்றும் சுபீட்சத்திற்கான முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ள ஜப்பானியப் பிரதமர், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் தொடர்பான நகல் சட்ட வரைவு, தொடர்பிலும் வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அதற்கான நிதியொக்கியுள்ளமை தொடர்பிலும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேசிய நல்லிணக்கத்தை ஏற் படுத்துவதில் அரசாங்கத்தின் பிரயத்தனத்தை பாராட்டியுள்ளார். அவர் இந்த நடவடிக் கைகளுக்கு யுனிசெப் மற்றும் ‘ஹெபிடாட்’ சர்வதேச அமைப்புகள் மூலம் உதவிகளைப் பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.