3/08/2013

| |

மகிளவட்டவான் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி

மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் அமைந்துள்ள மகிளவட்டவான் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியானது நேற்றைய தினம் (06.03.2012) அன்று வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.சந்திரகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரும், மாகாணசபை உறுப்பினரும், ஜனாதிபதியின் விசேட ஆலோசகருமான சிவனேசதுரை – சந்திகாந்தன் அவர்கள் கலந்த சிறப்பித்தார். நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலய வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், மட்டக்களப்பு கச்சேரியின் திட்டமிடல் பணிப்பாளர் இ.நெடுஞ்செழியன் , வவுனிதீவு பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் ஜெ.ஜெயராஜ்  மற்றும்  பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.