4/01/2013

| |

புலம்பெயர் தமிழர்களின் நிதி ஒதுக்கீட்டு ஆலோசனைக் கூட்டம்

கிழக்கு மாகாணத்தில் இருந்து புலம் பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழும் சமுக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய உதயம் அமைப்பின் 2013/2014 வருடத்திற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் புதிய செயற்றிட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் உதயம் தலைவர் சுதாகரன் தலைமையில் வேண் இல்; (24.03.2013ம் திகதி) நடைபெற்றது. செயலாளர் குணசீலன் திட்ட அறிக்கைகளை முன் மொழிந்ததுடன் பொருளாளர் துரைநாயகத்தினால் நிதி அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.
சுவிஸ் உதயம் அமைப்பின் மூலம் அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் அளப்பரிய சேவைகள் முன்னெடுக்கப்ட்டுவருகின்றது.
யுத்தத்தின் கொடூரத்தினால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்த பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் மாணவ மாணவியர்களின் கல்வி அபிவிருத்தி, சுய தொழில் ஊக்குவிப்பு, வலது குறைந்தோருக்கான உதவித்திட்டங்கள் எல்லைக் கிராமங்களின் அபிவிருத்தி பணிகள் என பல திட்டங்கள் 2013ஃ2014 ம் வருடங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தீர்மாணிக்கப்பட்டுள்ளது.