4/01/2013

| |

சித்தாண்டி மாவடிவேம்பு நலன்புரி அமைப்பின் மாதாந்த ஒன்றுகூடல்

சித்தாண்டி -மாவடிவேம்பு நலன்புரி அமைப்பின் மாதாந்த ஒன்று சகூடல் இன்று (31.03.2013) அமைப்பின் தலைவர் ஆ.தேவராஜா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. சித்தாண்டி 01 முதியோர் சங்கக் கட்டத்தில் இடம்பெற்ற இ;த ஒன்றுகூடலில் சித்தாண்டி 01, மாவடிவேம்பு 02 கிராம உத்தியோகத்தர் பூ. அருள்நாதன்அவர்களும் அமைப்பிடைய நிருவாக உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
 
நிகழ்வில் பிரதேசத்தின் கல்வி, சமூக மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றி ஆராயப்பட்டதுடன், சித்தாண்டி 01, மாவடிவேம்பு 02 ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியுள்ள இந்த அமைப்பானது எதிர்காலத்தில் சித்தாண்டி மாவடிவேம்பு ஆகிய இரண்டு கிராமங்களையும் உள்ளடக்கி தமது நடவடிக்கைகளை மேற்கொள்வதன் அவசியம் பற்றியும் ஆராயப்பட்டது