4/02/2013

| |

தமிழர் ஒற்றுமையும் தேசியமும் பேசும் கூட்டமைப்புக்குள் குழப்பம் முற்றுகிறது விரைவில் பிளவு

செப்டம்பரில் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படும் வட மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள் பிளவுபடும் அளவிற்கு கருத்து வேறுபாடுகள் அதிகரித்திருப்பதாக டெய்லிமிரருக்கு கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப், டொலோ, புளோட் மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி ஆகிய ஐந்து கட்சிகள் சேர்ந்து உருவாக்கப்பட்டதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பாகும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தனியொரு அரசியல் கட்சியாக பதிவு செய்வது தொடர்பாக இந்த கூட்டிலுள்ள கட்சிகள் பேசி வந்துள்ளன. எனினும் புதிய கட்சியின் பதவிகளை பகிர்வது தொடர்பாக இரா. சம்பந்தன் மற்றும் ஏனைய கட்சித் தலைவர்களிடையே கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றன. தற்போது கருத்து முரண்பாடுகள் அதிகரித்துள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. ஏனைய கட்சிகள் தமிழரசுக் கட்சியை புறந்தள்ளிவிட்டு தமக்குள் ஒரு தேர்தல் ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள எண்ணுவதாக கூறப்படுகின்றது. வட மாகாண தேர்தலை கருத்திற்கொண்டு கட்சி பிளவுபடுவதை தவிர்ப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு இரா. சம்பந்தனிடம் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கேட்டிருப்பதாக அறியப்படுகின்றது.