4/05/2013

| |

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கருத்தரங்கு

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான 3 நாள் வதிவிடப் பயிற்சிக் கருத்தருங்கு ஒன்று ஹபரணையில் நடைபெற்று வருகிறது.
அமெரிக்க உதவி யூ.எஸ்.எயிட் அனுசரணையில் நடைபெறும் வதிவிடப் பயிற்சிக் கருத்தருங்கில் கிழக்கு மாகாண சபை தவிசாளர், மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
நாளை நிறைவடையவுள்ள இக்கருத்தரங்கில் சட்டவாக்கம் மற்றும் மாகாணசபை அதிகாரம், செயற்பாடுகள் என்பன குறித்து விளக்கமளிக்கப்படவுள்ளன.