4/24/2013

| |

மட் செங்கலடி மத்திய கல்லூரி வழமைக்கு திரும்பியது

கடந்த 07ந் திகதி  செங்கலடியில் இடம் பெற்ற இரட்டைக் கொலைச்சம்பவத்துடன் செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள் தொடர்புபட்டிருந்தார்கள். இதனால் பாடசாலை நிருவாகம் முற்றாக சீர்குலைந்திருந்தது. அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், மற்றும் நலன் விரும்பிகள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தன. அதிபர் மற்றும் சில குறிப்பிட்ட ஆசிரியர்களை இடமாற்றம் செய்யவேண்டும் என ஓர் சாராரும் அவ்வாறு இடம்பெறக்கூடாது என இன்னொரு சாராரும் வாதப் பிரதிவாதங்களை செய்து கொண்டிருந்தார்கள். இதன் வெளிப்பாடாக ஒரு சில துண்டுப் பிரசுரங்களும் வெளிவந்தன.
மேற்குறித்த நிலைமைகளை ஆராய்ந்த முன்னால் முதலமைச்சரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், ஜனாதிபதி ஆலோசகரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான திரு.சிவநேசதுரை சந்திரகாந்தன் உடனடியாக இன்று 23.04.2013 கல்குடா வலயக்கல்வி பணிப்பாளர், வித்தியாலயத்தின் அதிபர், ஆசிரியர்கள், மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரிடம் விசேட கலந்துரையாடல் மேற்கொண்டிருந்தார். அக்கலந்துரையாடலானது மூன்று கட்டங்களாக இடம்பெற்றது.
முதலாவது அதிபர், ஆசிரியர்களுக்கும், இரண்டாவது கூட்டம்; 10,11,12,13ம், தரமாணவர்களுக்கும், மூன்றாவது கூட்டமாக பெற்றுறோர்களுக்கும் இடம்பெற்றது. இவ் விசேட கூட்டத்திற்க்கு சுமார் 2000 பெற்றோர்கள் வருகை தந்நிருந்தார்கள். இவர்கள் மத்தியில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன்,
உண்மையில் நடந்நிருக்கின்ற கொலைச்சம்பவமானது ஜீரணிக்க முடியாது ஒன்று. அதேவேளை இதில் செங்கலடி மகாவித்தியாலயத்தின் மாணவர்கள் ஈடுபட்டிருப்பதென்பது மிகவும் அதிர்ச்சியளிக்கின்றது. அதேவேளை இவ்வாறான ஓர் சம்பவம் இடம் பெற்றிருக்கிறது என்பதற்காக முழுமையாக பாடசாலை நிருவாகத்தை குற்றம் கூறுவது சாத்தியமான ஓர் விடயம் அல்ல.
எனவே தவறு நடந்திருப்பது உண்மை. எனவே கல்குடா வலயத்திலேயே அதிகப்படியான பெறுபேறுகளை தந்திருக்கின்ற இப்பாடசாலைக்கு இப்படியொரு நிலமை ஏற்பட்டிருப்பது உண்மையில் கவலைக்குரிய விடயமாகும். எனவே தொடர்ந்து நாங்கள் கல்வியிலே வளர்ச்சி காணவேண்டும். அதற்கு இது போன்ற சம்பவம் ஓர் தடைக்கல்லாக அமைந்து விடக்கூடாது. இன்றிலிருந்து நாம் அனைவரும் இப்பாடசாலையின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படாத வண்ணம் செயற்படுவதற்;கு திடசங்கர்ப்பம் பூணவேண்டும்.
அதேவேளை தொடர்ந்து வருகின்ற காலங்களில் இந்தப் பாடசாலை ஏனைய பாடசாலைகளுக்கு ஓர் முன்னுதாரணமான பாடசாலையாகவும், நல்ல பெறுபேறுகளை எங்களது மாவட்டத்திற்க்கு வழங்கி நற்பெயருடன் திகழ பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்விமான்கள், பாடசாலை மாணவர்கள் , ஏனையோர்கள் அனைவரும் செயல்படவேண்டும். அதற்கு எனது பூரண ஒத்துழைப்பு என்றும் உண்டு என்பதனைக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கல்குடா வலயக்கல்வி பணிப்பாளர் சிறி கிருஸ்ணானந்தராஜா, அதிபர் மு.சிறிதரன் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர், ஏறாவூர் பொலிஸ் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி விக்கிரமநாயக்க உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.