4/05/2013

| |

கிழக்கு மாகாண கீதத்தினை அமுல்படுத்த பிரேரணை

கிழக்கு மாகாண கீதத்தினை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என தெரிவித்து பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த பிரேரணை எதிர்வரும் ஏப்ரல் 9ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை அமர்வில் முன்னாள் முதலமைச்சர் சிவேனசதுரை சந்திரகாந்தனினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் கீதமொன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் சிவேனசதுரை சந்திரகாந்தன் முதலமைச்சராக செயற்ப்பட்ட காலத்தில் கிழக்கு மாகாண சபையினால் முன்னெடுக்கப்பட்டது.
இதற்காக குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. இந்த குழுவினர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டு தமிழ் மொழியிலான கிழக்கு மாகாண கீதமொன்றை இயற்றியுள்ளனர். இந்த கீதத்தினை வெளியிடும் காலப் பகுதியில் கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்கனவே இயற்றப்பட்டுள்ள கீதத்தினை உத்தியோகபூர்வமான கீதமாக வெளியிடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறே இந்;த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டவுள்ளது.