4/16/2013

| |

வெனிசுலா தேர்தலில் நிகோலஸ் மதுரோ மூன்று லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் ஜனாதியாக இருந்த ஹ்யூகோ சாவேஸ்(58) புற்றுநோயால் மரணம் அடைந்ததை தொடர்ந்து புதிய ஜனாதிபதி தேர்தல் நேற்று நடைபெற்றது.
இத்தேர்தலில் சாவேசின் ஆதரவாளர் நிகோலஸ் மதுரோ(50), எதிர்க்கட்சி தலைவர் ஹென்ரிகியூ காப்ரிலேஸ்(40) ஆகியோர் போட்டியிட்டனர். நேற்று ஓட்டு பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் நிகோலஸ் மதுரோ அபார வெற்றி பெற்றார்.
அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஹென்ரிகியூ காப்ரிலேசை விட மூன்று லட்சம் ஓட்டுகள் கூடுதலாக பெற்றார். இவர் 50.8 சதவீதம் ஓட்டுகள் பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஹென்ரி கியூவுக்கு 49.1 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளது. இத்தகவலை தேசிய தேர்தல் கவுன்சில் தலைவர் திபிசே லுசேனா அறிவித்தார்.
சாவேஸ் ஜனாதிபதியாக இருந்தபோதே நிகோலஸ் மதுரோ துணை ஜனாதிபதியாக இருந்தார். அவர் சிகிச்சைக்காக கியூபா சென்றியிருந்தபோது ஜனாதிபதி பொறுப்பை கவனிக்க இவரையே சாவேஸ் நியமித்து இருந்தார்.
அதுமட்டுமின்றி சாவேஸ் மறைவுக்கு பின்னர் இடைக்கால ஜனாதிபதியாகவும் இவர் நியமிக்கப்பட்டிருந்தார். சாவேசின் சமூக புரட்சி கொள்கையை தாமும் தொடர்ந்து கடைபிடிப்பதாக நிகோலஸ் உறுதி அளித்துள்ளார்.