4/23/2013

| |

கிழக்கு மாகாணத்திற்கான ஆட்பதிவு திணைக்களத்தின் அலுவலகம் திறக்க ஏற்பாடு

இலங்கை ஆட்பதிவு திணைக்களத்தின் கிழக்கு மாகாண அலுவலகம் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் திறக்கப்படவுள்ளதாக பிரதேச செயலாளர் கே.கிரிதரன் தெரிவித்தார்.
அடுத்த மாத இறுதியளவில் இந்த அலுவலகம் திறக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். 
பிரதேச செயலக கட்டிடத்  தொகுதியில் இதற்கென ஒருபிரிவு ஏற்படுத்தப்பட்ட நிலையில், இந்த அலுவலகத்திற்கான நிர்மாணப்பணிகள் யாவும் பூர்த்தியடைந்துள்ளதாகவும் பிரதேச செயலாளர் கே.கிரிதரன் தெரிவித்தார்.