4/16/2013

| |

தொப்பிகலையில்நினைவுத்தூபியை கோட்டாபய திறக்கின்றார்

பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எதிர்வரும் 18ஆம் திகதி விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அந்த விஜயத்தின் போது தொப்பிகலையில் நிர்மாணிக்கப்பட்ட நினைவுத்தூபியை அவர் திறந்து வைப்பார்.
தொப்பிகலைப் பிரதேசம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திடமிருந்து  மீட்டெடுக்கப்பட்டதன் நினைவாக அங்கு நினைவுத்தூபியொன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவுத்தூபியையே பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ திறந்துவைக்கவுள்ளதாக தொப்பிகலை பிரிகேட் படையினர் கூறினர்.
தமிழ் சிங்கள புத்தாண்டின்; பின்னர் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ முதல் தடவையாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.