4/09/2013

| |

செங்கலடியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தை முன்னாள் முதல்வர் பார்வையிட்டார்.மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேசத்தில் தம்பதிகள் இருவர் நள்ளிரவில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செங்கலடி விப்ரா பென்சி கோணர் உரிமையாளரும் அவரது மனைவியுமாகிய சிவகுரு ரகு, ரகு விப்ரா ஆகிய இருவருமே இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இக் கொலைச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் பதுளை வீதியில் அமைந்துள்ள அவர்களது வீட்டிற்கு வருகைதந்த இனம் தெரியாத நபர்கள் இவர்களை தலையில் தாக்கியுள்ளதுடன் கழுத்தில் கத்தியால் வெட்டியும் உள்ளனர்.
இதனால் சம்பவ இடத்திலேயே இருவரின் உயிர் பிரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செங்கலடி மக்கள் மத்தியில் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள இக் கொலைச் சம்பவம், குறித்த மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கலடியில் இடம்பெற்ற கொடிய இரட்டைக்கொலைச் சம்பவமானது, பிரதேசத்திலுள்ள மக்களை உலுக்கி எடுத்துள்ளது. இந்த நிலையில் குறிப்பிட்ட கொலைச் சம்பவத்தினை இன்றைய தினம் (08.04.2013) முன்னாள் முதல்வரும், மாகாண சபை உறுப்பினரும், ஜனாதிபதியின் விசேட ஆலோசகருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டதுடன், குறிப்பிட்ட காவல்துறை உத்தியோகஸ்தர்களிடம் விசாரணைகளை விரைந்து எடுக்கும்படியும் வேண்டிக்கொண்டார்.