4/30/2013

| |

புல்லுமலை புதிய சந்தைக்கட்டிடத்தை அமெரிக்கத்தூதுவர் இன்று திறந்துவைத்தார்

மட்டக்களப்பு புல்லுமலை பிரதேசத்தில் யு.எஸ்.எயிட் நிறுவனத்தால் நிர்மானிக்கப்பட்ட சந்தைக்கட்டிடம்,மற்றும் பஸ்தரிப்பு நிலையத்தினை இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் இன்று திறந்துவைத்தார்.
கிழக்கு வடக்கு மாகாணங்களின் மீளிணக்கம் மற்றும் ஸ்திரத்தன்மை அடைதல் எனும் திட்டத்தின் கீழ் செங்கலடி - பதுளை வீதியில் மீள்குடியேற்றப்பட்ட எல்லைக் கிராமமான பெரிய புல்லுமலையில் 50 மில்லியன் ரூபாய் செலவில் யூ.எஸ்.எயிட் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத் தொகுதி.சந்தைக்கட்டிடம  இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் மிச்சேல் ஜே. சிசன் இன்று இன்று திறந்துவைத்தார்..
இன்று (29.04.2013) காலை 10.30மணியளவில் நடைபெற்ற இன்நிகழ்வில்
யூ.எஸ்.எயிட் நிறுவனத்தின் பிராந்திய நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் ஆஷா ஹரிஸன், இலங்கைக்கான பிரதிநிதி டம்மி ஹரிஸன்,சர்வோதய அமைப்பின் கிழக்கு மாகாண பணிப்பாளர் ஈ.எல்.ஏ.கரீம்,  செங்கலடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.வினோத் மற்றும் மூவினத்தைம் சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டனர்.