5/04/2013

| |

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 121ஆவது சிரார்த்த தினம்

உலகின் மூத்த தமிழ் பேராசிரியரான முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 121ஆவது சிரார்த்த தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. பிரதான நிகழ்வு மட்டக்களப்பு கல்லடியில் விபுலானந்தர் வாளகத்தில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்தரின் சமாதியில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு ஸ்ரீஇராம கிருஷ்ண மிசன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி கபாலீஸானந்தாவின் தலைமையில் இடம் பெற்ற நினைவு தின வைபவத்தில் பாடசாலைகளின் அதிபர்கள் கல்விமான்கள் பல்கலைகழக பேராசிரியர்கள் உட்பட பெருமளவிலான மாணவர்களும் பங்கேற்றனர்.
சுவாமி விபுலானந்தரின் சமாதியில் மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் விஷேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.