5/01/2013

| |

இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்தின் வருடார்ந்த இல்ல விளையாட்டுப் போட்டி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்தின் வருடார்ந்த இல்ல விளையாட்டுப் போட்டி இன்று வித்தியாலயத்தின் அதிபர் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்pரகாந்தன் கலந்து சிறப்பித்தார். மேலும் வலயக் கல்வி பணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் கல்வி திணைக்களத்தின் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தார்கள்.