5/02/2013

| |

அதிகாரப் பகிர்வினூடாக மாகாண சபையைப் பலப்படுத்துவோம் - தலைவர்-த.ம.வி.புலிகள்

இன, மத, மொழி பேதங்களுக்கப்பால் அதிகாரப் பகிர்வினூடாக மாகாண சபையைப் பலப்படுத்தி அதன் மூலம் சிறுபான்;மையினத்தவரின் அரசியல் அதிகாரங்களும் கிடைக்க வழிஏற்படுத்தப்படவேண்டும் என்று இன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் பிரமாண்டமான முறையில் அனுஸ்டிக்கப்பட்ட மேதின நிகழ்வின்போது சிறப்புரையாற்றும்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சி. சுந்திரகாந்தன் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கிழக்கு வாழ் தமிழ் மக்களின் தனித்துவமான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது தொழிலாளர்களை கௌரவிக்கும் இந்நிக்ழவினை மக்களோடு மக்களாக ஒன்றுசேர்ந்து அனுஸ்டித்துவருகின்றது. அந்தவகையில்  கிழக்கில் அபிவிருத்திப் பணிகளுக்காக அரசுடன் ஒன்று சேர்ந்திருந்தபோதிலும், கிழக்குவாழ் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அதிகாரங்களுக்காக  தொடர்ந்தும் குரல்கொடுக்கும்  கட்சி என்பதை நாம் நிரூபித்து வருகின்றோம்.
இலங்கைத் தேசத்தின் ஒற்றுமைக்கு தடையாக இருப்பவையாக இன, மத வேறுபாடு காணப்படுகின்றது. ஆனால் அவற்றையெல்லாம் கழைந்து எல்லா இனங்களும் , சமூகங்களும் தமது அதிகாரங்களை சரியான முறையில் பெற்றுக்கொள்கின்றபோதே 'நாம் இலங்கையர்' என்ற தேசிய உணர்வு எல்லோர் மனத்திலும் ஆழமாகப் பதியும்.
அந்தவைகயில் இலங்கையில் 13 ஆவது திருத்தத்தினூடாக தோற்றம்பெற்ற மாகாண சபை முறையமையானது சிறுபான்;மை சமூகத்தினரின் அரசியல் அதிகாரத்தினை ஓரளவிற்காவது வழங்குகின்ற ஒரு அம்சமாகக் காணப்படுகின்றது. இந்த மாகாண சபை முறைமையானது அதிகாரப் பரவலாகத்தினூடாக வலுப்படுத்தப்படவேண்டும். இலங்கையிலுள்ள சிறுபான்மை மக்கள் திருப்தியடையக் அதிகூடிய குறைந்தபட்ச தீர்வு என்றால் அதிகாரப் பகிர்வு முறைமையின் வாயிலான 13ம் திருத்தத்தின் ஊடான மாகாண சபை முறைமையே தவிர வேறொன்றும் இல்லை. இதனைத்தான் எமது கட்சி இன்று வலுயுறுத்தி நிற்கின்றது.
அத்துடன் இலங்கையின் சில பேரினவாத சிந்தனை கொண்ட கட்சிகள் இன்று தமது அரசியல் சுயலாபத்திற்காக இனாவத்ததையோ அல்லது மதவாதத்தையோ கக்குகின்ற நிலையினை அவதானிக்க முடிகின்றது. அதுமட்டுமன்றி குறைந்த பட்ச அதிகாரத்தையாவது வழங்கும் மாகாண சபை முறைமைக்கு வித்திட்ட 13 ஆவது அரசியல் சீர்திருத்தத்தினை இல்லாதொழிப்பதற்குரிய கோசங்களை எழுப்பி வருகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் அரசு ஜனநாயக முறையில் அணுகுவதுடன், இலங்கையின் சிறுபான்மையினங்களின் அரசியல் அதிகாரங்கள் தொடர்பில் இத்தகைய பேரினவாத சக்திகளின் செயற்பாடுகளுக்கு இடமளிக்கக்கூடாது எனவும் அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.