5/03/2013

| |

சௌக்கிய விஞ்ஞான பராமரிப்புப் பீடத்திற்கான புதிய மாணவர்கள் வரவேற்பு

கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய விஞ்ஞான பராமரிப்புப் பீடத்திற்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
2011ஆம்  2012ஆம் ஆண்டுகளுக்கான சௌக்கிய விஞ்ஞான பீடத்திற்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு கிழக்கு பல்கலைக்கழகத்தின்  சௌக்கிய விஞ்ஞான பராமரிப்பு பீடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பதிவாளர் எம்.மகேசன், பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் எல்.ஆர்.டி.திஸாநாயக்க, சௌக்கிய பராமரி;ப்பு விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி டாக்டர் திருமதி வினோபவா, விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி டாக்டர்.எம்.கருணாகரன், கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய விஞ்ஞான பராமரிப்பு  பீடத்திற்கான உதவிப் பதிவாளர் எப்.எம்.மர்சூக் உட்பட  பலர் கலந்துகொண்டனர்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய விஞ்ஞான பராமரிப்புப்  பீடத்தில் 80 மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கும் 42 மாணவர்கள் தாதியர் பட்டப்படிப்புக்கும் அனுமதிக்கப்பட்டு பதிவு செய்துள்ளதாக கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய விஞ்ஞான பராமரிப்புப் பீடத்திற்கான உதவிப் பதிவாளர் எப்.எம்.மர்சூக் தெரிவித்தார்.
தென்னிலங்கை உட்பட நாட்டின் பல பாகங்களிலிருந்தும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மாணவர்கள் இந்தப் பீடத்திற்கு இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.