6/05/2013

| |

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அடங்கிய குழு இந்தியாவிற்கு விஜயம் 4 June, 2013 - 22:26

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று நேற்று திங்கட்கிழமை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
இந்தியா – கேரளா மாநிலத்தில் பஞ்சாயத்து சபையின் நடைபெறுகின்ற உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளின்; சட்ட விடயம் தொடர்பிலான செயலமர்வில் கலந்துகொள்வதற்காக இக்குழு இந்தியாவிற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளது.
இக்குழுவில், கிழக்கு மாகாண சபை தவிசாளர் திருமதி ஆரியவதி கலப்பதி, கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர்; எம்.எஸ்.சுபைர், மாகாண சபை பிரதம செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.