7/04/2013

| |

உறவுகளின் நினைவுகளை மீட்டும் உதைபந்தாட்ட போட்டி

முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகத்திலிருந்து உயிர் நீர்த்த உறவுககளின் நினைவுகளால் நடாத்தப்பட்ட மாபெரும் உதைபந்தாட்ட சற்று போட்டி நிகழ்வு மிகவும் சிறப்பாக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் புணரமைக்கப்பட்ட முனைக்காடு பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
 
முனைக்காடு இராம கிருஸ்ணா விளையாட்டு கழகத்தின் தலைவர் எம்.சத்தியநாயகம் தலைமையில் இடம்பெற்ற விளையாட்டு விழாவிற்கு பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
 
இவ் உதைபந்தாட்ட சுற்று போட்டியில் பட்டிப்பளை,வவுணதீவு,போரதீவு மற்றும் மட்டக்களப்பு போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து அணிகள் பங்கு பற்றின. இரண்டு நாட்கள் இடம் பெற்ற போட்டிகளில் சம்பியனாக மட்டக்களப்பு புன்னச்சோலை உதயசூரியன் அணி தேர்வு செய்யப்பட்டது.
 
விளையாட்டுக் கழகத்தின் மூத்த உறுப்பினர்கள் ,தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன், விளையாட்டு கழகத்தின் உறுப்பினர்கள், ஆலய பரிபாலன சபையினர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும்; கிராம சேவையாளர் ஊர் பொது மக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தார்கள.;