8/14/2013

| |

67வது சுதந்திர தினம், நாளை

"சுதந்திர தினத்தன்று, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்' என, மத்திய உளவுத் துறை எச்சரித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும், போலீசார், உஷார் படுத்தப்பட்டு உள்ளனர். அசம்பாவிதம் நடந்து விடாமல் தடுக்க, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசார், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

நாட்டின், 67வது சுதந்திர தினம், நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தன்று, முக்கிய நகரங்களில், பயங்கரவாத அமைப்புகள் தொடர் தாக்குதல் நடத்தி, அமைதியைச் சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளதாக, மத்திய உளவுத் துறைக்கு, ரகசியத் தகவல் கிடைத்தது.இந்தத் தகவல், மத்திய உள்துறை வாயிலாக, அனைத்து மாநிலங்களுக்கும் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கி உள்ளன.தமிழகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, தலைநகர் சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள கொத்தளத்தில், முதல்வர் ஜெயலலிதா, காலை, 9:00 மணிக்கு, தேசியக் கொடியேற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்று, சிறப்புரையாற்றுகிறார். விழாவிற்கான, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.