8/10/2013

| |

இனமத உறவுகள் வலுப்பெற வேண்டும்' றம்லான் வாழ்த்துச் செய்தியில் முன்னாள் முதல்வர்

 இன்று உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் இன்று றம்லான் பெருநாளை மிகவும் சிறப்பாகக் கொண்டாடும் இந்நன்நாளில் எனது இதயம் கனிந்த றம்லான் பெருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதில் பேருவகை அடைகின்றேன்.
உலகில் மனிதனை நற்குணமுள்ளவனாகவும், பண்பாளனாகவும் மாற்றியதில் மதங்களுக்கு பங்குண்டு. அந்தவகையில் இஸ்லாம் மதத்தை பின்பற்றுவர்களை நெறிப்படுத்தியதில் இஸ்லாம் மதத்தின் பங்கு அளப்பரியது.
இலங்கைத்தீவில் முஸ்லிம்கள் தமிழர்களுடனும் சகோதர சிங்கள இனத்தவர்ளுடனும்  ஒரு தாய் குழந்தைகள் போல் வாழ்ந்த வருகின்றனர். இந்த நிலையில் மூவின மக்களும் இத்தகைய சகோதரப் பிணைப்புடன் தொடாந்தும் இணைந்த வாழ்வதுடன், உட்பூசல்களைக் களைந்து ஒருவருக்கொருவர் பரஸ்பர உதவி செய்யும் மனப்பான்மையுடயவர்களாக வாழவேண்டும்.
எனவே இந்த நோன்புப் பெருநாளில் இனமத உறவுகள் வலுப்பெறவேண்டும் என்று வேண்டிக்கொண்டு எனது றம்லான் பெருநாள் வாழ்த்தினை நிறைவு செய்கின்றேன்.

-சிவனேசதுரை - சந்திரகாந்தன் -
(முன்னாள் முதல்வர்,  ஜனாதிபதியின் ஆலோசகர், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர்)