8/23/2013

| |

ஏறாவூரில் கிணற்றிலிருந்து கைக்குண்டு மீட்பு

மட்டக்களப்பு ஏறாவூர் எல்லை வீதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று இன்று முற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
கிணற்றினுள் பொலிசாரும் இராணுவத்தினரும் இணைந்து சோதனையிட்டபோது கைக் குண்டு ஒன்றும் மாட்டு எழும்பு எச்சங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட இக் குடி நீர்க் கிணறு அமைந்துள்ள காணியில் தற்போது உரிமையாளர்கள் மீளக்; குடியமர்ந்துள்ளனர்.
இதன்போது கிணற்றினை துப்புரவு செய்தவேளையிலேயே மேற்படிக் கைக்குண்டு காணப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிசார் சென்று மேலதிக நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மீட்க்கப்பட்ட குண்டானது குண்டு செயலிழக்கும் இராணுவப்பிரிவினரினால் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது என்று பொலிசார் மேலும் தெரிவித்தனர்.