9/11/2013

| |

தடை செய்யப்பட்ட 60 தொலைபேசிகள் மீட்பு

தடை செய்யப்பட்ட 60 தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன.  இலங்கையில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ள அதி நவீன 1800 அதிர்வலை கொண்ட தொலைபேசிகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களிலிருந்து இந்த தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸாரும், தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழு அதிகாரிகளும் கூட்டாக இணைந்து தேடுதல் வேட்டை ஒன்றை நடத்தியுள்ளனர்.
வீடுகள் மற்றும் கடைகள் காரியாலயங்களில் இவ்வாறு தடை செய்யப்பட்ட தொலைபேசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அனுமதியின்றி இந்த தொலைபேசிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுவதிலும் 600க்கும் மேற்பட்ட தொலைபேசிகள் இவ்வாறு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனால் ஏனைய தொலைபேசி வலையமைப்புக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக அறிவிக்கப்படுகிறது.