9/24/2013

| |

சிவில் பாதுகாப்புக் குழுக்களின் மீளாய்வுக் கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள சிவில் பாதுகாப்புக் குழுக்களின் மீளாய்வுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர், பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க, மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேவன் சில்வா, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன, பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள சிவில் பாதுகாப்புக்;குழுக்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது சிவில் பாதுகாப்புக் குழுக்களின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், சிவில் பாதுகாப்புக் குழுக்களின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.