9/18/2013

| |

கிரான் சித்தி விநாயகர் ஆலயத்தின் இராஜ கோபுரத்திற்க்கான அடிக்கல் நாட்டும் விழா

View karan4.JPG in slide showமட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கிரான் சித்தி விநாயகர் ஆலயத்தின் இராஜ கோபுரத்திற்க்கான அடிக்கல் நாட்டும் விழா  ஞாயிற்றுக்கிழமை ஆலயத் தலைவர் ந.சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் வினாயகமூர்தி முரளிதரன், அரசாங் அதிபர்  பீ.எஸ்.எம்.சாள்ஸ், மாவட்டதிட்டமிடல் பணிப்பாளர் இரா. நெடுஞ்செழியன். ஆகியோர்கள் அதிகளாக கலந்து கொண்டு சங்கஸ்தானம் செய்து வைத்தனர்.இவ் இராஜ கோபுரமானது நவ (9) தளங்களையும் 108 அடி உயரத்தினையும் கொண்டு அனைத்து அம்சங்களும் அமையப்பெற்று ஓர் முழுமையான இராஜகோபுரமாகவும் இலங்கைத்திருநாட்டில் 3ஆவது நவ தளங்களைக் கொண்ட கோபுரமாகவும் திகழவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.